பழி வாங்கவா? உனை வாங்கவா?
சிவானி செல்வம்
இந்த எழுத்தாளரின் இதுவரையில் உள்ள அனைத்து படைப்புகளையும் வாசித்திருக்கிறேன். ஆனால் இது அனைத்திலும் மாறுபட்ட கதையம்சம் உடைய தொடர்கதை. ஒரு சில இடங்களில் குழப்பம், சிற் சில இடங்களில் தடுமாற்றம், இவையெல்லாம் படித்தவர்களுக்கு மட்டுமே புரியுமோ? அல்லது தொடர் அத்தியாயங்களாக வாசித்திருந்தால் தெளிந்திருக்குமோ தெரியவில்லை. என்றாலும் புது முயற்சியாக வேற்று கிரக வாசிகளை வைத்து தொடர்கதையை அழகாக எழுதி முடித்தமைக்கு என்னுடைய பாராட்டுகள்
இனி கதைப் பற்றி :
சத்யமூர்த்தி:
கல்லூரி ஆசிரியரான இவர் காதல் திருமணம் செய்து கொண்டு, அவளது அண்ணன் மீதான கோபத்தில், பிறந்த இரட்டையர்களை கொண்டு சென்று விடுகிறார். பிரிந்த கணவன் மனைவி மறுபடியும் சந்திப்பது மகனின் திருமணத்தில் தான் …
எதனால் பிரிந்தார்கள், மீண்டும் இணைகிறார்களா? அவர்களது இரட்டை வாரிசுகள் வாழ்க்கை எப்படி செல்கிறது. அவர்களது துணை என்று கதையோட்டம் நகர்கிறது.
இரட்டையர்களான தம்பியும் அண்ணணும் மாறி மாறி பெயரை சொல்லி கலாய்த்து மண்டையை காய விட்டு விடுகிறார்கள் சில இடங்களில், அவர்களிடம் மாட்டிக்கொண்டு விழித்தது நான் மட்டுமல்ல, ருத்ரா, சஞ்சனா, விசாலும் தான்
. பாவம் ஆனாலும் இப்படியெல்லாம் வச்சி செய்யக் கூடாது ரைட்டர் ஜி
.
விசாலின் காட்சிகள் அனைத்தும் மனதில் நின்றவை. மனையாளை தவறாக நினைத்து காய்வதும், பிறகு விசயத்தை தெரிந்து கொண்டு வருந்துவதும் அழகாக இருந்தது. குழந்தை நிலவை நோக்கி பறப்பதும், துடித்துக்கொண்டு ஓடி மீட்க நினைப்பதும் வாசிக்க அருமையாக இருந்தன. அவனது இணை அழகு.
இம்வாலா, புரோட்டியஸ், சிதம்பரம் காட்சிகள் நன்றாக இருந்தன. அவரிடமிருந்த மறைக்கப்பட்ட ரகசியம் நம்ப முடியவில்லை. ஷாக்கிங்
ஆல்பா கிரக வாசிகளுக்கும், பூமி கிரகத்துக்கும் என்ன சம்மந்தம்? யாரை யார் தாக்க நினைக்கிறார்கள்? அழிவது யார்? வெற்றி பெறுவது யார்? பழி வாங்குவது யாரை? எதற்காக? என்று பல கேள்விகளை எழுத்தாளர் முன் வைத்திருக்கிறார்.
முடிவில் பல டுவிஸ்ட் ஓப்பன் பண்ணியிருக்காங்க பாவம் என் மண்டை ரொம்ப யோசிக்குது
. நமக்கெல்லாம் லவ் & பேமிலி ஸ்டோரி தான் செட்டாகும் போல
. ஏம்மா சிவானி சீக்கிரமே ஒரு லவ் ஸ்டோரி கொடுத்து அதை சரியாக்கி விடுங்க … இதற்கான ஆசிரியரின் பதில் என்னவோ??
மாறுபட்ட கதையம்சத்தை வாசிக்க விரும்புவர்கள் நம்பி வாசிக்கலாம்.
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட மனமார்ந்த வாழ்த்துகள்