Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Kaadhalin Litmus paritchai - Story

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
மதுவின் வீட்டில் ஜான்வியின் கைபேசியில் எப்போதும் போல ஷான், பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜஸ்டின் பீபர் என அனைவரும் வருகை தந்திருந்தார்கள். ப்ளூடூத் உதவியுடன் ஸ்பீக்கர்கள் பேய் அலறலாய் அலற மதுவும் ஜான்வியும் மேற்கத்திய பாடல்களை பாடியபடியே தத்தமது வேலைகளைச் செய்தனர்.

மதுவின் பாட்டுக்கச்சேரியை இடைபுகுந்து கலைத்தது அவளது கைபேசியின் வாட்ஸ் அப் செய்தி ஒன்று. தெரியாத எண்ணில் இருந்து செய்தி வந்திருப்பதை பார்த்து சந்தேகமாய் கைபேசியைக் கையில் எடுத்தாள் மது. அந்த எண் அனுப்பிய செய்திக்குள் உள் நுழைந்தாள்.

“Hi...- பெயர் தெரியாத வாட்ஸ்சப் எண்.

செய்தியைப் பார்த்ததும், யாருன்னு பார்ப்போமே... என்று நினைத்த மது கைபேசியில் பதில் அனுப்பினாள்.

Who Is This?- மது.

Guess...- பெயர் தெரியாத வாட்ஸ்சப் எண்.

Sorry... I am Blocking You...

Arya...

Arya??? How Did You Get My Number?

I Got It From The Peacock Dance Girls...

OH... OK

I Just Wanted To Say Hi..

OH... OK

We Shall Be In Touch.Save My Number

Yeah.. Sure I Will Save Yours...

* * *

முன்தினம் ஆர்யா தன்னை கலட்டிவிட்டு மாயக்கண்ணனாய் மறைந்த விஷயத்தை மறந்த மானம் கெட்ட, சொரணைக்கெட்ட விவேக்தான் தனது ஆவலை மறைக்க முடியாமல் பேச்சை முதலில் ஆரம்பித்தான்,

டேய் மதுகூட பேசுனியா?- விவேக்.

ஆர்யா சிரித்தான்.

டேய், இப்ப உன்னை சிரின்னா சொன்னேன்? சிரிக்கிற?- விவேக்.

போடா.- தலைகுனிந்து புத்தகத்தைப் புரட்டுவது போல சிரித்துக்கொண்டே ஆர்யா.

என்னடா வெட்கப்பட்டுட்டே சிரிக்கிற... ரொம்ப பிடிச்சிருக்கா இந்த ஃபீல்?

ம்... அடுத்த காம்ப்படிஷன் எப்ப வரும்னு இருக்கு டா. லோட்டஸ் இன்டர்ஸ்கூல் மீட் எப்ப வரும்? எப்பதான் அவளை அடுத்து நேர்ல பார்க்கப்போறேனோ...

லவ்?

நோ... டெஃபனிட்லி நோ... ஒரு கிரஷ் விவேக். ரொம்ப ரொம்ப சீரியஸான கிரஷ்.

அப்பாடா... இன்னும் ஃப்ளஸ் ஒன்னே முடிக்கல.. அதுக்குள்ள ரெஜிஸ்டர் ஆஃபீஸ் கூப்பிட்டிருவியோன்னு பயந்துட்டேன்.

எரும... என்று கணித புத்தகத்தை எடுத்து விவேக்கின் தோளில் அடித்தான் ஆர்யா.

ஆர்யாவிடம் செல்லமாய் அடிவாங்கிய விவேக், ஆர்யா உனக்கு ஒரு ஃப்ரண்டா ஒரு அட்வைஸ் பண்றேன், கவனமா கேட்டுக்கோ. ரொம்ப வாட்ஸ் ஆப்ல பேசாத டா, பொண்ணுங்க சீப்பா நினைச்சிடுவாங்க. ஐ ஆம் வார்னிங் யூ ஆர்யா... குட் மார்னிங். ஹாப்பி சன்டே, ஹாப்பி நியூ யியர், ஹாப்பி தீபாவளி, இப்படி மட்டும் மெசேஜ் பண்ணு... வி ஆர் பாய்ஸ் யு நோ... நமக்குப் பிடிச்சிருக்குன்னு காட்டிக்கவே கூடாது. என்றான் அக்கறையாய்.

ஹாப்பி மாட்டுப்பொங்கல். அதை விட்டுட்ட...

என்னடா?? ஐ ஆம் டெட் சீரியஸ்.

அப்புறம் என்னடா? விட்டா ஹாப்பி ரக்ஷாபந்தன் கூடச் சொல்லச் சொல்வ போலயே?

சரி அதைவிடு நேத்து என்ன ஆச்சு??

சும்மா ஒரு டைம் பாஸ் டா. நல்ல பொண்ணு அவ.

இப்ப மதுவோட கான்டெக்ட் (conduct) சர்டிஃபிகேட் கேட்டேனா? மது வாட்ஸ் ஆப்ல என்ன டெக்ஸ்ட் பண்ணா?

What’s your hobbyன்னு கேட்டா டா. FootBall, Tennis, Chessன்னு பதில் சொன்னேன்.

சரி சரி... என்று சொன்னவனின் சரி சரியேயில்லாமல் பல அர்த்தங்களில் ஒலித்தது. விவேக்கை சந்தேகமாய்ப் பார்த்தபடி ஆர்யா கேட்டான்,

என்ன சரி சரி? வேற என்னமோ உன் மனசுல நினைச்ச, அதைச் சொல்லு விவேக்.

இன்னொரு நாள் சொல்றேன். இப்ப ஹோம் வொர்க்கை காப்பியடிப்போமா? அடுத்த பீரியட் மேக்ஸ்.

பத்து கணித கணக்குகளை ஈ அடித்தான் காப்பியடிப்பதில் நேரம் பறந்தோட அந்த நாள் முடியும் வரை விவேக் அந்த சரி க்கு விளக்கமே தரவில்லை. ஆனால் மீண்டும் ஒரு முறை இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தபோது வேறு வழியின்றி அந்த சரி க்கு சரியான விளக்கத்தை தந்தான் ஆர்யாவிடம்.

* * *
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
9

ஒரு மாதம் கடந்திருந்தது...


மதுவும் ஆர்யாவும் வாட்ஸ் ஆப் நண்பர்களாக மாறி ஒரு மாதம் ஆகிவிட்டது. அடிக்கடி செல்பேசித் திரையைப் பார்த்தவண்ணம் இருந்தான் ஆர்யா. ஆனால் மதுவும் ஜான்வியும் ஒரே கைபேசியை பகிர்ந்து கொள்வதால் மது கைபேசியை அடிக்கடி எடுத்துப்பார்க்கும் பழக்கத்தை பழகவில்லை.

ஜான்வி என்னும் கண்காணிப்பு கேமரா இருபத்திநாலு மணி நேரமும் அவளுடன் இருப்பதால் ஆர்யாவுடன் வாட்ஸ் அப் செய்வதிலும் அளவோடு இருந்தாள்.

ஒரு நாள் பள்ளியில் ஆர்யாவும் விவேக்கும் வேதியல் ஆய்வுக்கூடத்தில் சில பரிசோதனைகள் செய்து கொண்டிருந்தனர். காப்பர் சல்ஃபைட் டெஸ்ட் செய்து கொண்டிருந்தனர். பள்ளியில் கைபேசிக்கு அனுமதி கிடையாது. ஆர்யாவின் பள்ளியிலும் அதே விதிமுறைதான். மாணவிகள் அனைவரும் அந்த விதிமுறையை சரியாகக் கடைபிடித்தனர். ஆனால் மாணவர்கள்???

ஆர்யா முன்பெல்லாம் பள்ளிக்கு கைபேசியை எடுத்துவருதில்லை. மதுவுடன் வாட்ஸ் ஆப்பில் பேச ஆரம்பித்தப் பிறகு கைபேசி இல்லாமல் எங்குமே செல்வதில்லை அவன். பள்ளி முடிந்து வேனில் வரும்போது மதுவிடமிருந்து வரும் ஒரு குட்டி மெசேஜுக்காக அவன் நாள் முழுதும் கைபேசியை கையில் வைத்திருந்தான். அதில் ஒரு கிக்... அந்த கிக் ஆர்யாவிற்கு மிகவும் பிடித்திருந்தது.

மதுகூட அடிக்கடி சாட் பண்ற போலயே? சொல்லவே இல்ல? என்ன பேசுறா மது? என்று ஆர்யாவின் கைபேசி காட்டிக்கொடுத்த மதுவின் வாட்ஸ் அப் மெசேஜ்களைப் பார்த்தபடியே கேட்டான்.

வி ஆர் ஜஸ்ட் சாட்டிங். அன்ட் தட்ஸ் இட். என்று கடுப்பாக பதில் தந்த ஆர்யா கைபேசியை விவேக் கையில் இருந்து பிடுங்கி ஆசிரியருக்குத் தெரியாமல் இருக்க பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்துக்கொண்டான்.

மெசேஜ் பார்க்கலாமா? என்று சிரித்துக்கொண்டே கேட்க,

என்னது? மது மெசேஜ் பார்க்கப்போறியா?? மெசேஜ்குள்ளப் போன செத்த... அடுத்தவன் மெசேஜ் பார்க்கிறது இன்டீசென்ட்னு தெரியுமா தெரியாதா?

சரி, இனி அதைப் பத்தியே பேச மாட்டேன். எதுவும் கேட்கவும் மாட்டேன். - விவேக்.

உடனே முகத்தைத் தூக்கி வச்சிக்குவியே.. குட் மார்னிங், குட் டே, ஹாப்பி மன்டேன்னு வாட்ஸ் அப் மட்டும்தான்டா பண்ணுவா. பேசலாம் மாட்டா.

ஓ.. வாட்ஸ் அப் பண்ண ஆரம்பிச்சி ஒரு மாசம் ஆச்சே? இவ்வளவுதனா? நீ பொய் சொல்லமாட்டன்னு தெரியும்... ஆனாலும் நம்புற மாதிரி இல்லயே... போன மாசம் உன்னோட பொழுதுபோக்கு பற்றிக் கேட்டா, அதற்குப் பின்ன கடைசியா என்ன கேட்டா உன்கிட்ட?

Give Me Your Insta Detailsன்னு சொன்னா.

நீ என்ன பதில் தந்த?

இன்னும் ஆரம்பிக்கல. ஆரம்பிச்சிட்டு தர்றேன்னு சொன்னேன். அவ்வளவுதான்டா டெக்ஸ்ட் பண்னோம்.

ஓ.

ஆமா.. அதுக்கு மேல ஒரு வார்த்தைகூட அவ பேசலைடா.

நீ எப்படி டைப் பண்ண? தமிழ்லயா?

Innum Aarambikkala.... Aarambichittu tharaen... அப்படின்னு தமிழையே இங்கிலிஷ்ல டைப் பண்ணேன். இப்பத் தெளிவா சொல்லிட்டேனா?

அவ தமிழ்ல மெசேஜ் பண்ண மாட்டாளா?

இல்ல. இங்கிலிஷ்லதான். நல்லா இங்கிலிஷ் தெரியிதுடா அவளுக்கு..

ஓ.. நீ?

நான் ரெண்டுலயும் மெசேஜ் பண்ணுவேன். தங்கிலிஷ்தான் முக்கால்வாசி.

ஓ... ஓஹோ.

அன்றைக்கு சரி என்று சொன்ன அதே விசித்திர ஒலியில் இன்றும் ஓ.. ஓஹோ. என விவேக் சொன்னதும் ஆர்யாவின் கோபம் எல்லையைக் கடந்துவிட்டது.

கோபத்தில், ப்ராக்டிக்கல் பண்ணலாமா? என்னோட பிப்பட் புயூரட் எடுக்கப்போறேன்... நீ கெமிஸ்டிரி ப்ராக்டிகல் பண்ணப்போறியா இல்ல இப்படியே வெட்டி அரட்டை அடிக்கப்போறியா? உன்னோட பிப்பட் பியூரட் எடுத்துக்கொடுக்க உன் தாத்தாவா வருவாங்க? என்றான் ஆர்யா.

சரி... சரி வா வா செய்யலாம். என்ற விவேக் தனது புயூரட்டை எடுத்துக்கொண்டு ஆர்யா அருகிலேயே போய் நின்றான்.

ஆனால் சில மணி நேரங்களிலேயே ஆர்யாவிற்கு அந்த சரி, ஓஹோ பற்றி முழுதாகத் தெரியவில்லை என்றால் தலையே வெடித்துவிடும் போல இருக்க அந்த நாளின் கடைசி பாடவேளையின்போது,

அப்ப நாம பேசும்போது ஓஹோன்னு ஏன் சொன்ன? என்று விவேக்கிடம் தன்மானத்தை உதறிவிட்டுக் கேட்டே விட்டான்.

சொன்னா நீ கோபப்படுவ. என்னை நம்ப மாட்ட.- ஆர்யாவிடம் அடி வாங்குவதற்கு முன் உஷாராக விவேக்.

இல்ல நீ சொல்லு. நான் கோபப்பட மாட்டேன்.

மது உன்கூட இதுக்கு மேல பேச மாட்டா ஆர்யா. அதாவது குட் மார்னிங், குட் நைட், குட் டே... சுருக்கமா சொன்னா நீ ஒரு குட் மார்னிங் ஃப்ரண்ட் அவளுக்கு.

என்னது குட் மார்னிங் ஃப்ரண்டா?

ஆமா எல்லா மெசேஜ்ஜும் குட்ல தான் ஆரம்பிக்கும்.

நோ நோ நோ..

மிஞ்சி மிஞ்சிப் போனா... ஹாப்பி நியு யியர். சொல்லலாம். தட்ஸ் ஆல்...

நோ நோ நோ..

யெஸ் யெஸ் யெஸ். ப்ளஸ் ஒன் படிக்கிறேன் இதுகூடத் தெரியாம இருப்பேனா?

நீ மட்டுமா ப்ளஸ் ஒன்? நானும் தான ப்ளஸ் ஒன் படிக்கிறேன்? விட்டா என்னை நீயே L.K.Gல கொண்டு போய் சேர்த்துடுவ போலயே?

ஆர்யா பொண்ணுங்க விஷயத்துல நீ L.K.Gதான்னு நீயே ஒத்துக்கணும்.

விவேக்க்க்..

கோபப்படாத இப்ப நான் தெளிவா சொல்றேன் கேளு. அவ சுத்தமான இங்கிலிஷ்ல டைப் பண்றா, ஆனா நீ தங்லிஷ்ல டைப் பண்ற... உனக்குப் புரியலையா? இங்கிலிஷ்ல பேசும் போது பெர்சனலா அட்டாச் ஆக மாட்டோம். தமிழ்ல பேசும் போது பெர்சனலா அட்டாச் ஆவோம்ப்பா.. நீ அவகூட ஒட்டுற.. அவ உன்னை கட் பண்றாடா. ஒரு மாசம் வாட்ஸ்சப் பண்ணிருக்க... கண்டிப்பா அவ தமிழ்ல பேச ஆரம்பிச்சிருக்கணும். இது ரொம்ப நாள் நீடிக்காது ஆர்யா. ஷி வில் இக்னோர் யூ. நீ லிமிட் கிராஸ் பண்ணா உன்னை இக்னோர் பண்ண ஆரம்பிச்சிடுவா.

விவேக் சொன்னதை சிறிது நேரம் யோசனையில் வைத்த ஆர்யா அதன்பிறகு விவேக் பக்கமாகத் திரும்பாமல் தனது புயூரட்டுடன் மட்டும் கெமிஸ்டிரியில் பேசினான். ஆனால் புத்தி, மூளை, அறிவு எல்லாம் விவேக் சொன்னதைத்தான் மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தன.

அக்கணத்திலிருந்து அவன் ஆங்கிலத்தில் வெறுத்த வார்த்தை குட் மார்னிங்...

* * *
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
இப்படியே மேலும் ஒரு மாதம் ஆர்யாவும் மதுமிதாவும் வாட்ஸ் ஆப் நண்பர்களாக இருந்தனர். ஆர்யா அந்த குட் மார்னிங் எல்லை தாண்டி ஹாப்பி நியு இயர், ஹாப்பி சன்டே தகுதி நிலைக்கு வந்திருந்தான். மது ஆர்யாவை கைபேசியில் அழைத்துப் பேசுவதில்லை, ஆர்யாவையும் பேச அனுமதித்ததில்லை.

ஆர்யாவும் மதுவின் எல்லைக் கோட்டை மீறவில்லை. அதனால் மதுவும் ஆர்யாவும் வாட்ஸ் ஆப் நண்பர்களாக நீடித்தார்கள்.

விவேக் தீர்க்கதரிசி தானே?

* * *

விவேக்கின் எச்சரிக்கைக்குப் பிறகு ஆர்யா தனது வாட்ஸ் ஆப் பேச்சுவார்த்தைகளை அளவாகவே வைத்துக்கொண்டான். அவளுடன் பேச உள்ளத்தில் ஆழம்வரை ஆவல் கொண்டிருந்தபோதும் அதனை அவளிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அளவான வார்த்தைகளால் தினமும் அழகாகப் பேசினான். ஒரு முறை மது அவனுக்கு ஒரு ஹாய் செய்தி அனுப்பியிருந்தாள். மது அவனுக்கு முதலில் வாட்ஸ் ஆப் செய்தி அனுப்புவது இதுவே முதல் முறை. ஆகாயக் கோட்டையில் அழகாய் அரண்மனை கட்டியது அவனது மனது. கெமிஸ்டிரியையும் கணிதத்தையும் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தவனிடம் கடவுளாகப் பார்த்து ஒரு ஜில்லென்ற கரும்புச்சாரை நீட்டுவது போல இருந்தது மதுவின் ஹாய் என்னும் வாட்ஸ் ஆப் செய்தி.

“Hi.- மது.

“Hi.. - ஆகாய அரண்மனையில் இருந்தபடியே மதுவிற்கு பதில் அனுப்பினான் ஆர்யா.

“What are you doing?”

padichittu irukkaen- ஆர்யா.

I need cs guide. Author should be balagurusamy

irrukaanu Friendskitta kaetkuraen

Ok.. thanks.. bye

call panava?”- ஆர்யா.

no... no... dont call me pls

ஆர்யா அவளது பதிலை கருத்தில் கொள்ளாமல் மதுவை தனது கைபேசியில் அழைத்தான். தான் சொன்னபிறகும் கேட்காமல் அழைத்துவிட்ட ஆர்யாவை மனதில் வைதுகொண்டே கைபேசித் திரையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மது. மதுவின் செயலைக் கண்ட ஜான்வி நடப்பதை ஓரளவுக்குப் புரிந்துகொண்டாள்.

மது ஃபோன் அடிக்கிது பாரு.- ஜான்வி.

ஷ்ஷ்.. எதுக்கு கத்துற? எனக்குத் தெரியும்.. நீ பேசாம இரு. அது பாட்டுக்கு அடிக்கட்டும்.

அம்மா வந்து ஃபோனை எடுக்கலையான்னு கேட்கணுமா? ஒண்ணு ஸைலன்ட்ல போடு, இல்ல அட்டென்ட் பண்ணு.- ஜான்வி.

கைபேசி விடாமல் அடிக்கவும் அன்னைக்கு பயந்து மது வேறுவழியின்றி அழைப்பை ஏற்றாள்.

ஆர்யா...- கைபேசியில் ஆர்யாவிடம் மது.

மது ஏன் ஃபோனை எடுக்கல? சாரல் காம்ப்படிஷன் பற்றிப் பேசலாம்னு கூப்பிட்டேன்.

படிச்சிட்டு இருக்கேன்... அப்புறம் பேசறேன்... அம்மா வீட்டுல இருக்காங்க. இனி கால் பண்ணாத. பை.- மது.

ஆர்யா பதிலுக்கு ஓகே பை. என்று சொல்லும் முன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

ஆர்யா பேசி முடிக்கும்வரை உள்ளுக்குள் இருந்த படபடப்பை வெறுக்கவும் செய்தாள் ரசிக்கவும் செய்தாள் மது. இரவு பன்னிரெண்டு மணிக்கு சாப்பிடும் திருட்டு குல்ஃபி போல சுவையாகவும் இருந்தது, சளி பிடித்து காய்ச்சல் வந்துவிடுமோ என்று பயமாகவும் இருந்தது.

ஆர்யாவுடன் பேசுவது சரியா தவறா என்று ஒத்தையா இரட்டையா போட்டுப் பார்த்தாள் மது.

* * *

இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை ஆர்யா மதுவை கைபேசியில் அழைத்தான். அவள் கைபேசி எண்ணை தனது கான்டாக்ஸ் லிஸ்டில் பார்க்கும் போதெல்லாம் கை பரபரவென்று இருந்தது அவனுக்கு. உடனே ஆர்வக்கோளாறில் அழைத்துவிட்டான். முதல் முறை தானே எந்தவொரு காரியமும் எல்லோருக்கும் கடினமாக இருக்கிறது? இரண்டாவது முறை ஒரு காரியத்தை செய்யும் போது மனம் தனக்குத் தானே தைரியம் என்னும் சோடாவை குடித்து ஏப்பம் விட்டுக்கொண்டு படுகெத்தாய் செயல்பட ஆரம்பித்து விடுகிறது.

ஹாய் மது... சும்மாதான் கால் பண்னேன். என்ன பண்ற? என்று படு உற்சாகமாய் ஆரம்பித்தான் ஆர்யா.

ஆர்யாவின் குரலைக் கேட்டதும் உள்ளத்தின் படபடப்பு கூடியது மதுவிற்கு. படபடப்பை மிஞ்சிய பயமும் வந்தது. அந்த பயம் தந்த பீதியில் அவளுக்கு எதுவும் புரியவில்லை. இது சரியா தவறா என்று மனம் அலைபாய ஆரம்பித்தது.

எதுக்கு கூப்பிட்ட ஆர்யா? என்றாள் மெல்ல,

எதுக்கு கூப்பிட்டேன்... எதுக்கு கூப்பிட்டேன்னே மறந்து போச்சு... ஹா ஹா. என்று கூறி ஆர்யா சிரித்த நிமிடம் அம்மா சில நாட்களுக்கு முன் சொன்ன ரெண்டும் கெட்டான் என்னும் வார்த்தை ஞாபகம் வந்தது அவளுக்கு. அடுத்து அவள் பேச வேண்டிய வார்த்தையை அவள் யோசிக்கவேயில்லை. பேசவேண்டிய வார்த்தைகளை மூளை கடகடவென பேச வைத்தது.

சாரி... ஆர்யா... எனக்கு இனி கால் பண்ணாத. சாரி... திஸ் இஸ் நாட் குட். என்றாள் மது.

ஏன்? எனக்குப் புரியல.

காரணம் இல்லாமல் சாட் பண்றது எனக்குப் பிடிக்கல.

மது, முகத்தில் அறையாத குறையாகப் பேசியது 1லிலி வாட்ஸ் பல்ப்பை இலவசமாக பெற்றுக்கொண்டது போல இருந்தது அவனுக்கு. அவனுக்கு உடனே கோபம் உச்சிக்கு ஏறியது.

ஆனாலும் கோபத்தை மறைத்து, நான் இப்ப கால்லை கட் பண்ணிடுறேன்... ஆனா வைக்கிறதுக்கு முன்னே ஒண்ணு சொல்லணும்... இது தப்பா எனக்குத் தெரியல... டூ மினிட்ஸ் பேசுறது வெட்டியான சாட் இல்ல மது. என்றான் சிறுபிள்ளையிடம் விவாதிப்பது போல.

இது தப்புதான் ஆர்யா. உனக்கு எது தப்பு எது சரின்னுகூடத் தெரியல பாரு... ஒரு தெளிவே இல்லாம இருக்க... வெட்டியா நீ என்னோட சாட் பண்ற மாதிரி ஃபீல் பண்றேன். என்னோட அம்மா அந்த மாதிரி ஃப்ரண்ட்ஷிப்பை என்கரேஜ் பண்ணமாட்டாங்க.

ஆர்யா அழைப்பை மறுபேச்சின்றி துண்டித்தான்.

* * *

என்னடா லன்ச்லயும் சரியா யார்கூடயும் பேசல.. இப்ப லைப்ரரியில என்றைக்கும் இல்லாத திருநாளா புக் வாசிக்கிற? நாம லைப்ரரியில் எப்போதும் புக் கிரிக்கெட் தான விளையாடுவோம்?- விவேக்.

ப்ச்...- ஆர்யா.

என்ன? மது உன் நம்பரை ப்ளாக் பண்ணிட்டாளா?

ம்... ஆமாடா ப்ளாக் பண்ணிட்டா. கால் பண்ணிப் பேசுனேன்... அதனால ப்ளாக் பண்ணிட்டா..

ஹா... ஹா... நான் அப்பவே சொன்னேன்ல??- விவேக்.

ஆர்யா பலமாக முறைக்கவும்,

சாரி டா. நீ மேலச் சொல்லு. என்றான் விவேக்.

நானும் ப்ளாக் பண்ணிட்டேன். அவ மட்டும்தான் ப்ளாக் பண்ணுவாளா? அவளுக்கு மட்டும்தான் தெரியுமா? எனக்கும் ப்ளாக் பண்ணத் தெரியும்னு அவ தெரிஞ்சிக்கட்டும். என்னைக்காவது எனக்கு கால் பண்ணிப் பார்ப்பால... அப்ப தெரிஞ்சிக்கட்டும் நானும் அவளை ப்ளாக் பண்ணிட்டேன்னு.

ஹா... ஹா...

ஏன்டா சிரிக்கிற?

நீ ப்ளாக் பண்ணது அவளுக்கு தெரியவே தெரியாது டா. அவ தான் உன்னை கால் பண்ணப்போறதே இல்லையே. பின்ன எப்படி அவளுக்குத் தெரியும்?

போடா அங்குட்டு. எப்பப் பாரு மது, மதூன்னு பேசிட்டே இருக்க... என்ற ஆர்யா அடுத்த இருபது நிமிடங்களுக்கு மௌனவிரதம் இருந்தான்.

என்னடா... இன்னும் உம்முன்னு இருக்க?- விவேக்.

First crush மச்சி. மது இஸ் மை first crush மச்சி. எல்லாம் நல்லாதான் டா போய்க்கிட்டு இருந்திச்சு.

அதான் புட்டுக்கிச்சுல. விடு. என்றான் விவேக் அசால்ட்டாய்.

உன்கிட்டப்போய் சொன்னேன் பாரு.

ஹா... ஹா... வா இரண்டுபேரும் அட்டைக்கத்தி படத்துல காதல்ல பல்ப் வாங்குனதும் ஹீரோ வடை வாங்கி சாப்பிடுவான்ல அது மாதிரி கேன்டீன்ல போய் கட்லட் வாங்கிச் சாப்பிடுவோம்.

விவேக்கை முறைத்த ஆர்யா இரண்டே நொடியில் கோபம் மறந்து சிரித்தான்.

பயங்கர உஷார்டா அந்த மது. நீ சொன்ன மாதிரி நான் பெர்சனலா அட்டாச் ஆகிற மாதிரி ஆனதும் கட் பண்ணிட்டா டா...

நான் எத்தனை பேரைப் பார்த்திருக்கேன்... நீயாவது முப்பது நாள் குப்பை கொட்டிருக்க... முப்பது செகன்ட் தாக்குப்பிடிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத்தான் தெரியும். என்னோட சோகக்கதைய கேட்ட... அழுதுடுவ. உனக்கு இளகுன மனசுடா, அதான் நான் இதுவரை உன்கிட்டக்கூட என்னோட சோகக் கதையை சொன்னது இல்ல, இந்த மேட்டரை விடு.. வா கேன்டீனுக்குப் போவோம்.

ஏன்டா விவேக்... எது சரி எது தப்புன்னு கர்ல்ஸுக்குத் தான் தெரியுமா?

ஏன்டா கேட்குற?

என்னைப் பார்த்து, உனக்கு எது சரி எது தப்புன்னு தெரியலன்னு சொல்றா... அப்படின்னா என்ன விவேக்? எனக்கு சரியாப் புரியல. என் அம்மாவுக்கு இந்த மாதிரி வெட்டியா சாட் பண்ற ஃப்ரண்ட்ஷிப் பிடிக்காது ன்னு சொல்லிட்டா தெரியுமா? ரொம்ப எம்பாரஸிங்கா இருந்திச்சு தெரியுமா?

அவ என்ன சொல்ல வர்றான்னு புரியலையா?

சரியா தெளிவா புரியலைடா.

லவ் பண்ணக்கூடாதுன்னு, பசங்ககூட எப்பவும் எதிரியாகத்தான் இருக்கணும்னு மறைமுகமா சொல்லிக் கொடுத்துருக்காங்க டா.

அப்படிங்கிற?

மதுவோட அம்மா செம்மையா கெமிஸ்டிரி கிளாஸ் எடுப்பாங்களாம். என்னோட டியூஷனுக்கு வரும் அந்த ஸ்கூல் பசங்க பேசிக்கிட்டாங்க. அப்படிப்பட்ட டீச்சர் எந்த டாப்பிக்கானாலும் அடிச்சி தூள் கிளப்பிட மாட்டாங்களா? பசங்ககூட எங்க எப்படிப் பழகுறதுன்னு மதுவுக்கு பத்து நாள் கிளாஸ் எடுத்திருப்பாங்க.

அப்படித்தான் டா இருக்கும். அம்மாக்கு பயந்த பொண்ணு மாதிரிதான் தெரியுது...

அம்மாக்கு பயந்த பொண்ணே தான். டவுட்டே இல்ல. உனக்கு கொடுத்த பல்ப் தான் அதுக்கு சாட்சி. உன் கையில எவ்வளவு பெரிய பல்ப் கொடுத்திருக்கா? அதுக்கப்புறமும் டவுட்டா இழுக்குற? என்று கூறிய விவேக் திரும்பவும் நகைக்கவும் அவனின் தலைமுடியைப் பிடித்து ஆட்டினான் ஆர்யா.

முடியை விடுடா ஆர்யா... அவளோட பதிலுக்கு அதுதான் டா அர்த்தம். அப்புறம் இன்னொரு விஷயம் கேட்டியே அது என்ன?

என்னைப் பார்த்து எது சரி எது தப்புன்னு தெரியாத பையன்னு சொன்னா டா.

ஓ... என்று சிறிது நேரம் மனதுக்குள் ஆய்வு நடத்திய விவேக், எது சரி எது தப்புன்னு தெரியலைன்னா இரண்டும் கெட்டான் மனநிலையில இருக்கிறதா அர்த்தம் ஆர்யா. என்றான் உறுதியாக.

அப்படிங்கிற? நல்லாத் தெரியுமா? அதுதான் அர்த்தமா? ரொம்ப எம்பாரஸிங்கா இருக்கு. அப்பவும் இப்பவும்.

நல்லாத் தெரியும். என்னோட அம்மாதான் தினமும் இதே டயலாக்கைச் சொல்லிச் சொல்லி என்னையும் என்னோட அண்ணனையும் திட்டுறாங்கல... ரெண்டும்கெட்டான் என்னும் தமிழ் வெர்டுக்கு நல்லாவே அர்த்தம் தெரியும். ரெண்டும்கெட்டான் என்றால் எது சரி எது தப்புன்னு தெளிவா பிரிச்சிப் பார்க்கத்தெரியாத ஆளுன்னு அர்த்தம். இங்குட்டும் இருக்க முடியாம, அங்குட்டும் இருக்க முடியாம அந்தரத்தில் மிதிப்பவன்னு அர்த்தம்.

சே சே... நான் அப்படியெல்லாம் இல்ல டா விவேக்.

சரி நான் இப்ப வரிசையா கேள்வி கேட்பேன். டக் டக்குன்னு பதில் சொல்லணும்.

கேளு.

மதுவைப் பிடிச்சிருக்கா?

ம். பிடிச்சிருக்கு.

அடுத்து வரப்போகும் ஜனவரி மாதமும் மதுவைப் பிடிக்குமா?

பிடிக்கும். நோ டவுட்.

அடுத்த ஜுன்னில்??

ஜுன்லயா? இன்னும் ஆறு மாசம் இருக்குடா...

ஆமா/ இல்ல, ரெண்டுல ஒண்ணு பட்டுன்னு சொல்லு ஆர்யா.

இல்ல.. ஆமா.. இல்ல.. ஆமா, ஆமா.. ஃபைனலா ஆமா தான் சொல்லுவேன்டா.

பார்த்தியா பார்த்தியா... எத்தனை ஆமா இல்ல சொல்லிட்ட? யெஸ்ஸா நோவான்னு சட்டுன்னு சொல்லத் தெரியல.. இதுக்கு பேர்தான் இரண்டும்கெட்டான். ஆனா மதுகிட்ட உனக்கு ஆர்யா பிடிக்குமா பிடிக்காதான்னு கேட்டா பளிச்சுன்னு, வி ஆர் ஃப்ரண்ட்ஸ்-ன்னு சொல்வா தெரியுமா. பிடிச்சாலும் பிடிக்காட்டியும் ஃப்ரண்ட் ஃப்ரண்டு தான? கர்ல்ஸ் ஆர் வெரி பிரில்லியன்ட் டா. safe zone-ல தான் இருப்பாங்க. நாம தான் Danger Zone பக்கத்துலயே நின்னுகிட்டு ஸ்நாக்ஸ் சாப்பிடுவோம் டா. மது மட்டும் இல்ல... எந்தப் பொண்ணை அப்ரோச் பண்ணாலும் வாட்ஸ் ஆப்ல கடலை வறுக்கும் பசங்களுக்கு இதுதான் அவர்களின் பதிலாக இருக்கும். நாம எங்கேயும் எப்போதும் அவுங்களுக்கு ஃப்ரண்ட் தான். ஃப்ரண்ட் மட்டும் தான். அதை மீற நினைச்சா ப்ளாக் பண்ணிடுவாங்க.

நிரந்திரமா.

ஆமா நிரந்திரமா.

சரிடா... இனி இந்தப் பேச்சே நாம பேசக்கூடாது. நமக்கு இருக்கு ஆயிரம் பிரச்சனை. என்னோட ஃப்ர்ஸ்ட் கிரஷ் பற்றி இனி நான் பேசவே மாட்டேன் விவேக். நீயும் என்கிட்டக் பேசக்கூடாது.

ஆமா ஆமா... நமக்கு இருக்கு ஆயிரம் பிரச்சனை. பிப்பட்ல உறிஞ்சிடும் போது சொலூஷனைக் குடிக்காமல் உறிஞ்சிடணும்... மேக்ஸ்ல இருபத்திமூனு சாப்டர்ஸ் இருக்கு. ஃபிசிக்ஸ் கெமிஸ்டிரில எத்தனை சாப்டர்ஸ் இருக்குன்னுகூடத் தெரியல, எண்ணுறதுக்கே பயமா இருக்கு. இந்த தீபாவளிக்கு நாலு படம் ரிலீஸ் ஆகுது. அடுத்த வருஷம் ப்ளஸ்டூகிறதால இந்த வருஷமே நாலு படமும் பார்க்கலாம்னு பார்த்தா, பாக்கெட் மணி இருக்கிற பாக்கெட்டுல ஹல்க் (hulk) சைஸ்ல பெரிய ஓட்டையிருக்கு. இப்படி ஆயிரம் பிரச்சனை எனக்கும் உனக்கும் இருக்கும்போது மற்றக் கண்றாவியெல்லாம் நமக்கு எதுக்கு? என்று தத்துவமழை பொழிந்தான் விவேக்.

ஹா... ஹா... நீ 20ம் நூற்றாண்டின் ஷேக்ஸ்பியரா பொறக்க வேண்டியவன்டா.. தப்பிப்போய் விவேக்கா பொறந்திட்ட.

என்னை ஷேக்ஸ்பியர்ன்னு சொல்லாத... இங்கிலிஷ் நைட்டோட நைட்டா தற்கொலை பண்ணிக்கிடும். வருங்கால C.M விவேக்ன்னு சொல்லு.

....

என்னடா அப்படிப் பார்க்குற? நாம் பேசுற விஷயத்திற்கு சம்பந்தமே இல்லாமல் அரசியல் பேசுறேன்னா? சம்பந்தமே இல்லாமல் பேசுறதுதான அரசியல்?? அதனால வருங்கால C.M விவேக்ன்னு சொல்லு லாஜிக் இடிக்காது.- விவேக்.

ஹா.. ஹா..

* * *
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
மது - ஜான்வி இல்லத்தில் (A.B):

A.B
என்றால் after blocking என்று இங்கு அர்த்தம் கொள்ளப்படவேண்டும்.

ஏய்.. மது.. - ஜான்வி.

என்ன?- மது.

என்ன இப்பயெல்லாம் வாட்ஸ் ஆப் பண்றதே இல்ல?

சும்மாதான். இட்ஸ் போரிங்.

ஏய்... சும்மாதான சொல்ற? யாரோ ஒரு பையன் டிஸ்டர்ப் பண்ணதும் வாட்ஸ் ஆப் பண்றதை விட்டுட்ட.

தெரியிதுல?? பின்ன எதுக்கு தெரியாத மாதிரி கேட்குற? மணி பன்னிரண்டு ஆயிடுச்சு. நீ இன்னும் படுக்கல? போய்ப் படு.

மது...

...

மதூ...

இப்ப என்ன ஜானு? ப்ளீஸ் லீவ் மீ அலோன். நான் படிக்கிறது கண்ணுக்குத் தெரியல?

மது... You are really great... You have a lot of self control you know?? I am very proud of you.. எனக்கு உன்னை அப்படியே ஹக் பண்ணிக்கணும் போல இருக்கு. அந்தப் பையன் ஆர்யாதான? அவனையே நீ ப்ளாக் பண்ணிட்ட... சான்ஸ்லெஸ் தெரியுமா? அம்மா சொன்னதால தான? அன்றைக்கு அம்மா நிறைய பேசியதை வச்சித்தான இந்த மாதிரி பசங்க விஷயத்துல இருந்து நீ ஒதுங்கியே இருக்க?

யெஸ் ஜானு.

ஏய்ய் ஏய்ய் உன்னை அப்படியே ஒரு ஹக் பண்ணிக்கட்டுமாப்பா??

ஹா... ஹா...

ஏய்ய்... என்னப்பா சிரிக்கிற?

தாங்க்ஸ் ஜானு... அவன் நல்ல பையன் தான்.. ஆனா Flirt பண்றானோன்னு தோணுச்சு... முதல் தடவை போன்ல அழைச்சபோது அமைதியா இருந்திட்டேன். ஆனா இரண்டாவது தடவையும் வெட்டிப்பேச்சு பேச அவன் அழைத்தபோது கண்டிப்பா Flirt தான் பண்றான்னு நான் வைத்த டெஸ்ட்ல தெரிஞ்சிடுச்சு. அதான் கட் பண்ணிட்டேன். வேற ஏதாவது பேசேன். இப்பதான் மைன்ட் லேசாகி இருக்கு.

சரிப்பா... இனிமேல் ஆர்யா பற்றிப் பேசலை. அலியா பட் படம் சோனில போடுறான். டூ ஸ்டேட்ஸ். பழைய படம்தான்... ஆனா ரொமான்டிக் மூவி. பார்க்கலாம் வர்றியா?

அம்மா??

பெர்மிஷன் வாங்கிட்டேன்.

எப்படி?

என்னோட மூளையோட 200 ஜுல்ஸ் எனர்ஜிய மேக்ஸ்க்கு தானம் செய்திருக்கேன்ப்பா... சன்டே முழுதும் அம்மாகிட்ட மேக்ஸ்ல இருபது சாப்டர்ஸ் செய்து காண்பிச்சிருக்கேன். அலியா பட் படம் பார்த்தா மூளை செலவழிச்ச 200 ஜுல்ஸும் அதுக்குத் திரும்ப கிடைச்சிடும்னு சொன்னேன், அம்மா சிரிச்சிட்டாங்க.. அப்பாவும் எனக்காக சப்போர்ட் பண்ணிப் பேசினாரா உடனே சிரிச்சிட்டே சரின்னு சொல்லிட்டாங்க. ஒரு மணி நேரம் தான் பெர்மிஷன் கொடுத்திருக்காங்க வா.. சீக்கிரம்.

இதோ வர்றேன். என்ற மது தனது கைபேசியை கட்டிலின் மெத்தையில் போட்டுவிட்டு வரவேற்பறைக்கு ஓடினாள். மெத்தையில் சுகமாகப் படுத்துக்கொண்டது மதுவின் கைபேசி.

இப்படித்தான் மதுவின் லிட்மஸ் பரீட்சையில் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட விடலைத்தனம் நிரம்பிய ஆர்யா தோற்றுப்போனான்.

அவள் வைத்த சோதனையில் லிட்மஸ் தாள்ளின் சாயம் வெளுத்துப்போனது.

முதல் முறை தேவையில்லாமல் கைபேசியில் அழைத்தபோது அமைதியாக இருந்த மதுமிதா, இரண்டாம் முறையும் ஆர்யா தேவையில்லாமல் வெட்டி அரட்டையடிக்க அழைத்தபோது அவனது தோழமை தேவையேயில்லை என்று நட்பை முறித்துக் கொண்டாள்.

ஆனால் இரண்டே ஆண்டுகளில் அடுத்த சத்திய சோதனை வந்தபோது இதே உறுதி மதுவிடம் இருந்ததா? தனது தந்தைக்கு செய்து கொடுத்திருந்த சத்தியத்திற்கு மீண்டும் இதே ஆர்யா ரூபத்தில் சிக்கல் வந்தபோது அதே உறுதி மதுவிடம் இருந்ததா?

பெண்களின் கண்களுக்குள் அடங்க மறுக்கும் ஆண்மையின் அழகுடன் அவன் அவள் எதிரே வந்து நிற்கும்போது அவனை மறுக்கும் உறுதி மதுவிற்கு இருந்ததா?

எனக்கு உன்கூட நிறையப் பேசணும். என்று பார்க்கும் போதெல்லாம் அவன் விழிகள் அவளிடம் ரகசியமாய் பேசும்போது, என்கூட நீ ஒண்ணும் பேச வேணாம். என்று சொல்லிடும் துணிவு வந்துவிடுமா?

போதை தரும் சிரிப்பை கோடி கோடியாய் அவன் இதழ்கள் கொட்டும்போது இதே துணிவு மதுவிடம் இருந்ததா?

அவனது விடலைத்தனம் பிடிக்காமல் இன்று அவனை உதறியவள் அவளது விடலைத்தனம் தலைதூக்கும் போது என்ன செய்வாள்?

மதுவின் உள்ளத்து உறுதியின் ஆழம் நீளம் என்ன?

* * *



இன்று...

மீண்டும் பெங்களூர் டோல் கேட்...

சார்.. நான் வந்திட்டேன் சார். என்று சுங்கச் சாவடிக்கு வந்துவிட்டதை காவல்துறை அதிகாரி சங்கருக்கு கைபேசியில் தெரியப்படுத்தினான் விவேக்.

உடனே விவேக் நின்ற இடத்திற்கு வந்துசேர்ந்தார் காவல் துறை அதிகாரி.

விவேக்கிடம் ஃபைன்? என்று கேள்வியாய் பேச்சை ஆரம்பித்தார் சங்கர்.

கொண்டுவந்திருக்கேன் சார். இந்தாங்க சார். என்ற விவேக் பத்தாயிரத்தைக் கொடுத்ததும், பைக் எங்க சார்? என்றான்.

பத்தடி தூரத்துல ஒரு ஹோட்டல் தெரியிதுல? அந்த ஹோட்டல் கார் பார்க்கிங்ல இருக்கு.

ரொம்ப தாங்க்ஸ் சார்.

ஓகே... அப்புறம் உங்க ஃப்ரண்ட் ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் பார்த்தப்போ...

அன்னிக்கி அவனைப் பிடிச்சிட்டுப்போனப்ப ப்ளட் டெஸ்ட் எடுத்தீங்களா சார்?

ஆமா. அதுதான் ரூல்ஸ்ப்பா. அந்த டெஸ்ட்ல...

அந்த டெஸ்ட்ல?

அல்கஹால் மட்டும் இல்ல தம்பி... கேதினோன்ன்னு ஒரு டிரக்கும் இருந்திச்சு.

சார்... உங்ககிட்ட நான் ஒண்ணு சொல்லாம மறச்சிட்டேன் சார். நாங்க பப்புக்கு போனப்ப நாலு மெடிக்கல் காலேஜ் பசங்க எங்களுக்கு அறிமுகம் ஆனாங்க. அவுங்கதான் சார் எங்களுக்கு ஃபிரீ ஷாட்ஸ் ஸ்பான்ஸர் பண்ணாங்க. என்னமோ டிரீட்டாம்...

அதனால ஓசியில கிடைச்சதும் வாங்கி வாயில ஊத்திக்கிட்டீங்க... அறிவிருக்காப்பா உனக்கு?

சார்... ரொம்ப சிநேகமா பேசினாங்க சார். பிரேக்-அப் டிரீட்டாம் சார். எங்க ஆர்யா மதுவின் ஞாபகத்துல...

ஓ... அவரும் மது அமெரிக்காதான் வேணும். நீ வேணாம்னு சொன்னதால மனசு உடைஞ்சி மெடிக்கல் காலேஜ் பசங்க குடிக்கச் சொன்னதைக் குடிச்சிட்டார். அப்படித்தான?

மது அமெரிக்கா போறது உங்களுக்கு எப்படி சார் தெரியும்?

அந்தப் பையன் தான் நேத்து ஸ்டேஷன்ல ஆயிரம் தடவை சொன்னானே...

ஆமால... சரி சரி. சார், ஆர்யாவோட ஃபோன்...

மறந்தே போனேனே... இந்தாப்பா. அப்புறம் மதுவோட நம்பர் எடுத்து வச்சிருக்கேன். அந்தப் பொண்ணுகூட டைம் கிடைக்கும் போது பேசுறேன்.

ஃபோன் லாக் எப்படி எடுத்தீங்க சார்? மது நம்பர் எதுக்கு சார்? என்று அலறினான் விவேக்.

சைபர் கிரைம் ஆளுங்க லாக் எடுத்துக் கொடுத்தாங்க. நீ எதுக்கு மது பேரைச் சொன்னதும் பயப்படுற?

மதுகூட நீங்க பேசவே வேணாம் சார்... அது ஒரு கெட்ட கனவு சார்... பிரச்சனையே...

பிரச்சனையை நான் சரி பண்றேன். நீ வேணும்னா மதுவை கெட்ட கனவா நினைச்சு மறப்ப, ஆனா உன்னோட ஃப்ரண்ட் மறக்க மாட்டான். திரும்ப தண்ணியடிப்பான். போன வாரம் இதே மாதிரி கேஸ் ஒண்ணு வந்துச்சு. பையன் தண்ணியடிச்சி என்கிட்ட தான் மாட்டுனான். இதே மாதிரி லாவண்யா லாவண்னு புலம்புனான். பையன்கிட்ட 5000 ஃபைன் வாங்கிட்டு அனுப்பிட்டேன். ஆனா இரண்டே நாள்ல பையனை ரெயில்வே லைன்ல...

சார்... சொல்லாதீங்க சார். மனசுக்கு கஷ்டமாயிருக்கு.

அந்தப் பையன் வீட்டுல இன்ஃபார்ம் பண்ணிருந்தேன்னா அந்தக் கெட்ட சம்பவம் நடந்திருக்காது. கொஞ்சம் அசால்டா இருந்திட்டேன். அதான் உன் ஃப்ரண்ட் விஷயத்துல மதுகிட்டப் பேசலாம்னு நினைச்சேன். எனக்கும் ஒரு விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கணும் விவேக்.

என்ன சார் நீங்க தெரிஞ்சிக்கணும்?

மது ஏன் ஆர்யா மூக்கு மேல கைவச்சான்னு தெரிஞ்சிக்கணும், எதுக்கு ஆர்யா வேணாம், அமெரிக்கா தான் வேணும்னு சொன்னான்னு தெரிஞ்சிக்கணும்...

ஓ...

சொல்லு விவேக்... என்ன ஆச்சு? மது ஏன் ஆர்யா மூக்கு மேல...

சார்... நீங்களுமா? வேணாம் சார், ஆர்யாக்கு இன்னும் போதை தெளியல சார், இப்ப பத்து நிமிஷம் முன்னாடி வரை அந்த வசனத்தைக் கேட்டுட்டு தான் சார் வர்றேன்... நான் உங்ககிட்ட எல்லாத்தையும் ஒண்ணுவிடாம சொல்லிடுறேன் சார்.



மது - ஆர்யா கல்லூரிக்காலம்...
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
மது - ஆர்யா கல்லூரிக்காலம்...



லிட்மஸ் பரீட்சை முடிந்த அன்றைய தினத்தில், டூ ஸ்டேட்ஸ். படம் படத்தை மது மனப்பாடமாய் பார்த்த அந்த தினத்தில்... மதுவின் மெத்தையில் சுகமாகப் படுத்துக்கொண்ட கைபேசி அதன்பிறகு மதுமிதாவைத் தொந்தரவே செய்யவில்லை.

அவள் கல்லூரிக்குச் செல்லும் வரையில் மதுமிதா பாடப்புத்தகங்களில் கவனம் செலுத்த, அந்த கைபேசி மந்தமாகவே எப்போதும் தூங்கிக்கொண்டே தான் இருந்தது. ஜான்வியின் பாப் பாடல்களை பாடும் நேரம் தவிர அந்த கைபேசி சோம்பேறித்தனமாய் தூங்கிக் கொண்டேதான் இருந்தது.

கல்லூரியின் இரண்டாம் நாள் வரும்வரை சமர்த்துப்பையனாக இருந்த மதுவின் கைபேசி தப்புத் தப்பாக தப்பாட்டம் ஆடத்துவங்கியது மீண்டும் ஆர்யாவின் ஏண் Hi Madhu மெசேஜ் வந்த ஷணத்தில் இருந்து...



* * *

மதுவைப் பார்த்தேன்டா விவேக்.- ஆர்யா.

யாரு??- விவேக்.

குட்ஷெப்பர்ட் ஸ்கூல் மது.

ஓ... அந்த அட்டக்கத்தி மதுவா?

ஹா... ஹா... நீ அதை விடவேமாட்டியா?

மாட்டேன். அப்புறம். உன்கிட்ட வந்து பேசுனாளா?

அவ என்னைப் பார்க்கல. நான்தான்டா அவளைப் பார்த்தேன். அண்ணா யுனிவர்சிட்டியில B.E கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்திருக்கா. நான் E.E.E டா.

ஓ... நீயும் அவளும் ஒரே காலேஜ்ஜா? மதுவைக் கண்டுக்காத மச்சி. கெத்தா இரு.

எனக்கு என்னமோ அவகூடப் பேசணும்னு தோணுச்சு டா.

ஏன்டா? அவ உன்னை ப்ளாக் பண்ணது எல்லாம் மறந்து போச்சா?

நானும் தான் அவளை ப்ளாக் பண்னேன். அதெல்லாம் ஸ்கூல்ல மெச்சூரிட்டியே இல்லாம சண்டை போட்டது. அதை எல்லாம் இப்ப நினைச்சிட்டு இருக்க முடியுமா?

நினைக்கணும் மச்சி. கண்டிப்பா நினைக்கணும். பையனாகப் பொறந்தா பொண்ணுங்க பண்ண அட்ராசிட்டீஸ் எல்லாம் மறக்கக்கூடாது. திமிருத்தனத்தை மறக்கவே கூடாது மச்சி.

அவ நம்பரை ப்ளாக் லிஸ்ட்ல இருந்து தூக்கிட்டேன் விவேக்.

வாட்? Unblock பண்ணிட்டியா? யூ டிடின்ட். (You Didn’t)

யெஸ் ஐ டிட் இட். (Yes... I did it)

Holy Mary...- விவேக்.

இப்பதான் அவளுக்கு ஒரு மெசேஜ் வாட்ஸ் ஆப் பண்ணிருக்கேன்.

Holy Mary mother of christ...- விவேக்.

ஒரு பெரியார், ஒரு காமராஜர், ஒரு அண்ணா, ஒரு கலைவாணர், ஒரு அட்டக்கத்தி படம் கூடப் போதவில்லை இன்றைய இளைஞர்கள் திருந்தி நல் வழியில் வாழ்வதற்கு.

* * *



மது - ஜான்வி இல்லத்தில்...

அலியா பட்டுக்கு கல்யாணமாமே? அப்படியா? ஜஸ்டின் பீபர் புது கேர்ள்ஃப்ரண்ட் யாருப்பா? நேத்து இன்ஸ்டாவுல நிறைய ஃபோட்டோஸ் வந்தது பார்த்தியா? - தனது வீட்டில் தனது அறையில் ஜான்வியிடம் மது.

பார்த்தாச்சு பார்த்தாச்சு. எப்படி இருந்திச்சு ஃப்ர்ஸ்ட் டே காலேஜ்? அதைச் சொல்லு முதல்ல.- ஜான்வி.

சூப்பரா இருந்திச்சு ஜானு.. அப்பாகூட என்கிட்டக் கேட்டுட்டே இருந்தார். காலேஜ் பிடிச்சிருக்கா பிடிச்சிருக்கான்னு.. அண்ணா யுனிவர்சிட்டியில மெரிட்ல சீட் கிடைச்சது அவருக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தெரியுமா.. நீயும் இங்கயே வந்திடு.

ம்.. நானா மாட்டேன்னு சொல்லப்போறேன்? மார்க் வந்திட்டா உன்கூடயே வந்திடப்போறேன். ஐ மிஸ் யூ பேட்லி அட் ஸ்கூல் மது. நீ இல்லாம ஸ்கூல் வேன்ல போறதுகூட பிடிக்கலை... என்று செல்லம் கொஞ்சினாள் ஜான்வி.

அடுத்த வருஷம் நீ ப்ளஸ் டூ ஜானு. நல்லா படி ஜானு... விளையாடிட்டே இருக்க. என்று மது அறிவுரை கூறிய போது டி.வி முன் உட்கார்ந்திருந்த அர்ஜுன் மதூ என்று அழைத்தார்.

வர்றேன்ப்பா. என்று கூறியபடியே விரித்துக்கிடந்த கூந்தலை ஒன்றாய் சேர்த்து ஒரு பாண்டினால் இறுகக் கட்டிக்கொண்டே வரவேற்பறைக்கு விரைந்தாள் மதுமிதா.

காலேஜ் பிடிச்சிருக்கா மது? - ஆர்வமாய் அர்ஜுன்.

யெஸ்ப்பா. இன்னிக்கு தான ஃப்ர்ஸ்ட் டே... நிறைய ஸ்கூல் மேட்ஸ் இருக்காங்க இங்க. ஹரினிகூட இங்கதான் சிவில் இன்ஜினியரிங் சேர்ந்திருக்கா.

குட்... நாளைக்கு அப்பாகூட காலேஜ்க்கு வந்திடுறியா? உன்னை நானே கூட்டிட்டுப் போறேனே?

இல்லப்பா. என்னோட ஸ்கூட்டியிலயே போயிடுறேன்னே. சாயங்காலம் ஃப்ரண்ட்ஸோட வெளியே போயிட்டு வருவேன். அதான்...

இப்போதும் ஹரினியின் நட்பே அப்பாவிடம் மறுத்துப்பேச வைத்தது. பள்ளிக்காலத்தில் மல்லிச்செடியாய் இருந்த ஹரினி-மதுவின் நட்பு கல்லூரிக்காலத்தில் ஆலமர விருட்சிகமாய் வளர்ந்து நின்றது. ஹரினிக்கு அண்ணா யுனிவர்சிட்டியில் சிவில் பொறியியல் பிரிவில் இடம் கிடைத்ததும், மது சந்தோஷத்தில் வானம் தொடும் வரை உயரமாய் குதித்து குதூகலித்தாள்.

பள்ளிக் காலத்தில் சைவ விஷயங்கள் பேசியபோதே ஹரினியுடன் அரட்டையடிப்பது மதுவிற்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போது கல்லூரிக் காலத்தில் அசைவ சங்கதிகள் பேசும் உரிமையை இறைவனாய் கொடுத்தப்பிறகு... இருவரையும் ஒரே கல்லூரியில் சேர வைத்து அந்த உரிமையை இயற்கையே அவர்கள் கையில் திணித்துவிட்டப் பிறகு... ஹரினியுடன் அரட்டையடிப்பதையே பெரிதும் விரும்பினாள் மது. அதனால் தான் தந்தை கேட்டதும் உடனே மறுத்தும்விட்டாள்.

ஓகே... மது பீ கேர்ஃபுல். சீக்கிரமா வீட்டுக்கு வந்திடணும். என்று அவளது மறுப்பை ஏற்று அப்பா அறிவுரை சொன்னதும் தாமதிக்காமல்,

யெஸ்ப்பா. என்றாள்.

உட்காரு மது. அம்மா என்கூட சேர்ந்து உன்னையும் சாப்பிடச் சொன்னாடா..

சரிப்பா. என்று அவர் அருகே சோபாவில் உட்கார்ந்தவளின் கைபேசி சிணுங்கியது.

கையில் இருந்த கைபேசியை அப்பாவிடம் பேசிக்கொண்டே பார்த்தவள் புதியதொரு எண்ணில் இருந்து வாட்ஸ்ஆப் செய்தி வந்ததும் அப்பாவின் அருகேயே சற்று இடைவெளிவிட்டு உட்கார்ந்தபடி அந்தச் செய்திக்குள் நுழைந்தாள்.

டி.பியில விராட் கோலி ஃபோட்டோவா? யாராக இருக்கும்? என்று மனதில் நினைத்துக்கொண்டே திரையில் கண் பதித்தவளின் இதயம் ஒரு நிமிடம் ஃபூட்பால் போல விலா எலும்புகளுக்குள் எம்பிக் குதித்து அடங்கியது.

மெல்ல தலையைத் திருப்பி தந்தையைப் பார்த்தவள் அவர் தனது கைபேசியில் மூழ்கியிருப்பதைப் பார்த்து நிம்மதியடைந்து, ஒரு நிமிஷம்ப்பா லாப்டாப்பை ஷட் டவுன் பண்ணிட்டு வந்திடுறேன். என்றபடியே அவசரப்படாமல் எழுந்து தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அறைக்குள் செல்லும் போதே அந்தச் செய்தியை மீண்டும் ஒரு முறை வாசித்திருந்தாள் மது,

Hi... Madhu. This is Arya. Do you Remember me? Y.M.J school Arya... Are You placed at Anna Unniversity? Me Too.. I Saw You today... We shall meet tomorrow. Bye..

* * *




மறுநாள் எழுந்த நொடியில் இருந்து மதுவின் கண்களுக்கு எல்லாமே Me Too... வாகத்தான் தெரிந்தது. அம்மா கையில் காபி கப்பைக் கொடுத்தபோது அதில் இருந்த நுரைகளுக்கு ஊடே “Me Too...” என்ற வாசகம் இருந்தது. முகத்தில் பவுடர் போட்டபோது தனது சுடிதாரில் தெறித்திருந்த பவுடரைத் தட்டிவிட்டுக்கொண்ட போதும் அதில் “Me Too...” வாசகம் மங்கலாகத் தெரிந்தது. இப்படி எங்கும் எதிலும் Me Too... தான்.

ஆர்யாவா? Y.M.J ஸ்கூல் ஆர்யாவா.. இல்ல வேற யாரும்மா? ஹரினிதான் கலாய்க்கிறாளா.. ச்ச ச்ச இவ்வளவு சீரியஸ் விஷயத்துலயெல்லாம் அவ விளையாட மாட்டாளே... என்று மனதிற்குள் ஆயிரம் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்க மனதை ஒரு வழியாக சமன்செய்துவிட்டு ஸ்கூட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் நோக்கிச் சென்றாள். அவள் உலகத்தில் சுனாமியை கட்டவிழ்த்திருந்த கைபேசியை தனது கட்டிலில் கிடத்திவிட்டு கல்லூரிக்குள் நுழைந்தாள் மதுமிதா.

* * *

கல்லூரியில் பதினோரு மணிக்கு ஆரம்பித்த முதல் இடைவேளை நேரம் வரை மதுமிதாவிற்கு ஆர்யா பற்றி யோசிக்கக்கூட நேரமில்லை. இடைவேளையிற்குப் பிறகு வகுப்பில் அனைத்து டிபார்ட்மென்ட் மாணவர்களும் ஒரே செமினார் அரங்கத்திற்குச் சென்றனர்.

ரோபோடிக்ஸ் பற்றிய செமினார் நடந்தபோது ஆர்யா அவள் அருகே வந்து அமர்ந்து ஆர்வமாய் மந்தகாசமாய் சிரித்தபடி, ஹாய் மது. என்று சொன்ன பிறகு மதுவிற்கு ஆர்யா தவிர வேறு எதைப் பற்றியும் யோசிக்க நேரமில்லை.

* * *

11

இந்தப் பசங்களுக்கு ஒரு மோசமான ஞாபக மறதி நோய் இருக்கு தெரியுமா?- விவேக்.

நீ எதைப் பற்றி பேசுறன்னு தெரியும். ஆனா நோ கமென்ட்ஸ்.- ஆர்யா.

என்னது நோ கமென்ட்ஸா? அறிவிருக்காடா உனக்கு? ப்ளஸ் ஒன்ல அடிச்சி விரட்டாத குறையா பேசாம விரட்டுன பொண்ணுகிட்ட இளிச்சிகிட்டு பேசிட்டு வந்திருக்க... அதையும் பெருமையா வந்து என்கிட்டச் சொல்ற பாரு... என்னோட ஃப்ரண்ட்டுன்னு வெளியே சொல்லாத. மானம் போயிடும்.

ஏய்... ஸ்கூல் படிக்கிறப்ப பண்ணதையெல்லாம் இப்பவும் ஞாபகம் வச்சிக்கிட்டு மூஞ்சத் தூக்கி வச்சிக்கச் சொல்றியாடா? போடா... போ. அப்படியெல்லாம் என்னால இருக்க முடியாது. சும்மா ஒரு ஹாய் ஹலோ சொன்னேன். அதுக்குப்போய் லபோ திபோன்னு குதிச்சிட்டு இருக்க?

அவ ஃபோன் நம்பர் அன்ப்ளாக் பண்ணி வாட்ஸ் அப் பண்ணிருக்க, வழியப்போய் பல்லக்காட்டிட்டு ஹாய் சொல்லிருக்க, அரை மணி நேரம் கழிச்சு அந்தப் பொண்ணே, மேக்ஸ் ப்ரொபர்சர் பார்க்குறார், அப்புறம் பேசலாம் ன்னு எச்சரிச்ச பிறகு கம்முன்னு இருந்திருக்க... இதையெல்லாம் நீ சொன்னபோது எனக்கு எப்படி இருக்குத் தெரியுமா? உன்னை... என்று ஆர்யாவின் கழுத்தை நெறித்தான் விவேக்.

யேய் கழுத்த நெறிக்காதடா...

இப்படியே பண்ணிட்டு இருந்தன்னு வை அம்மாக்கு பயப்படும் அந்தப்பொண்ணு நாலு நாள்ல அண்ணான்னு கூப்பிட ஆரம்பிச்சுடும் சொல்லிட்டேன்.

அண்ணாவா?

ஆமா... அ-ண்-ணா. எங்க சொல்லு பார்ப்போம், அண்ணா... ண் சொல்லும்போது நடு அண்ணத்துல நாக்கு தொடணும்.

விவேக்க்க்.

விவேக் இல்லப்பா... அண்ணா, அண்ணா, டிரை பண்ணு, வரும்டா. என்று அஞ்சலிப் பாப்பாவுக்கு நாலு பசங்க சொல்லிக்கொடுத்த மாதிரி விவேக் ஆர்யாவிற்கு செல்லிக்கொடுக்க,

உன்னை... என்று அவனிடம் பாய்ந்திருந்தான் ஆர்யா.

* * *
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
ஹரினி, எவ்வளவு நேரமா கால் பண்றேன். செகன்ட் கால் பார்த்துட்டு எடுக்க மாட்டியா?- கைபேசியில் படபடப்பாய் மது ஹரினியிடம்.

சாரி சாரி மது. நான் ராம்சரண்கூட பேசிட்டு இருந்தேன்ப்பா.- ஹரினி.

உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதான் டிரை பண்ணிட்டே இருந்தேன். நீ எடுக்கவே இல்ல. என்னத்த தான் மணிக்கணக்கா பேசுவியோ தெரியல. எனக்கு சுத்தமா இந்த ராம்சரண் விஷயம் புரியவே இல்லப்பா.

ராம்சரண் புரியணும்னா நீ ஹரினியா இருக்கணும். அவன் என்னோட குட் ஃப்ரண்ட். சரி, அதை விடு. நீ சொல்ல வந்த மேட்டரைச் சொல்லு.

நான் ஆர்யாவை இன்னிக்கு காலேஜ்ல பார்த்தேன் ஹரினி.

ஆர்யாவா? யாரு அது?

Y.M.J ஆர்யா.

சரி, Y.M.J ஆர்யாவைப் பார்த்த அப்புறம்??

காலேஜ்விட்டு நான் வீட்டுக்கு வந்த பிறகு பத்து மெசேஜ் அனுப்பிட்டான். அதுக்கு ரிப்ளை பண்ணவே பயமா இருக்குப்பா. காலேஜ்லகூட பேசிட்டே இருந்தான்ப்பா.

அவனை நீ ப்ளாக் பண்ணிட்டேன்னு சொன்னியே?

ஆமாம்ப்பா... புது நம்பர் மாத்திட்டான் போல. ரெண்டு வருஷம் கழிச்சி திரும்ப என்னை கான்டாக்ட் பண்ணுவான்னு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்? வீட்டுக்கு வந்து வாட்ஸ் ஆப் பார்த்தா... பத்து மெசேஜ் அனுப்பிருக்கான். இப்ப நான் என்ன பண்ண?

பத்து அனுப்பினா இரண்டுக்கு பதில் அனுப்பு. அப்புறம் ஆஃப்லைன் போயிடு. சிம்பிள்.

ஓகே... ஓகே. வேற அட்வைஸ்?

மற்றபடி நீ ஃபாலோ பண்ணும் வழிதான்.

நான் ஃபாலோ பண்ற வழியா? எதுப்பா?

நீ தான் பசங்ககூட தமிழ்லயே சாட் பண்ண மாட்டியே? இங்கிலிஷ்ல மட்டும் தான சாட் பண்ணுவ? தமிழ்ல சாட் பண்ணா இட் சவுன்ட்ஸ் வெரி பெர்சனல்னு சொல்லுவியே??

அது ஸ்கூல் டேஸ்ல ஹரினி, ரொம்ப பழக்கம் இல்லாத பாய்ஸ்கூட இங்கிலிஷ்ல மட்டும் தான் சாட் பண்ணுவேன். என்னோட ஃப்ரண்ட் லிஸ்ட்ல நம்ம கிளாஸ் பசங்க எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா? அவுங்ககூட எல்லாம் தமிழ்ல சாட் பண்ணுவேனே. எத்தனை தடவை செல்வாகிட்ட தமிழ்ல மேக்ஸ் டவுட்ஸ் கேட்டுருக்கேன்.

எனக்கும் அதைப் பற்றியெல்லாம் தெரியும்பா, உன்னோட சாட் மெசேஜ் எல்லாம் நானும் பார்த்திருக்கேனே? தமிழ்ல தான் மேக்ஸ்ல டவுட்ஸ் கேட்ப... ஆனா அந்தத் தமிழ், தமிழ் மாதிரி இருக்காது மேக்ஸ் மாதிரி இருக்கும். நீ பசங்ககூட ஃபிசிக்ஸ்ல கூட பேசுவ இல்ல...

வாட்?

ஆமாப்பா... ஃபிசிக்ஸ்ல டவுட் கேட்கும்போது ஃபிசிக்ஸ்ல பேசுவ. அப்புறம் கெமிஸ்டிரி பற்றி ஏதாவது சந்தேகம் வந்தா கெமிஸ்டிரில பேசுவ, எனக்குத் தெரியாதா நீ எப்படிப் பேசுவன்னு? நான் உன்கூட ப்ளஸ் டூ வரை ஒண்ணா படிச்சிருக்கேன் மது. உன்னைப் பத்தி தெரிஞ்சிக்கணும்னா என்கிட்டக் கேளு. நான்தான் உன்னோட கூகுள், பிங், விக்கிபீடியாப்பா. நான் உன்னோட பெஸ்டின்னு நானே உனக்கு ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு. ஆமா, நீ ஏன் அந்த ஆர்யாவைப் பார்த்து பயந்து நடுங்குற?

அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல. திடீர்னு தெரியாத பையன் வாட்ஸ் அப் பண்ணதும் டென்ஷனாகிடுச்சு. உன்கிட்டப்போய் அட்வைஸ் கேட்டேன் பாரு. என்னை நீ ரொம்ப டேமேஜ் பண்ற. நான் ஃபோனை வச்சிடுறேன்.

மது... ஐ ஆம் சீரியஸ். ஆர்யாகூட பேசுறதை குறைச்சிக்கோ.

ஏன்?

ஏன்னா ஆர்யா ராம்சரண் மாதிரி தமிழ்ல பேச ஆசைப்படுற தமிழ்ப்பையன்னு நினைக்கிறேன்.

ஏய்ய்... நாளைக்கு காலேஜ் வருவீல? அப்ப வச்சிக்கிறேன் உன்னை. எனக்கு நீ அட்வைஸ் பண்ண மாதிரி நானும் உனக்கு ஒரு அட்வைஸ் பண்றேன். அந்த ராம்கூட நீயும் பேச்சைக் குறைச்சுக்கோ. எப்பப் பாரு அவன்கூட அரட்டையடிச்சிக்கிட்டு.

ராம் என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட். நான் அவனோட பெஸ்ட்டிப்பா.

ரக்ஷக் தருண்? அவனோட ஸ்டேடஸ் என்னங்க மேடம்.

ஹி இஸ் மை பப்பி கிரஷ் மது. உனக்கு அது நல்லாவே தெரியும். ஸ்கூல் டைம்ல சும்மா ஸைட் அடிச்சேன். அது தப்பா? ஆமா... இப்ப எதுக்கு நீ ரக்ஷக் தருணை இழுத்த?

சரி... நமக்குள்ள சண்டை வேணாம். இப்ப ஆர்யா மெசேஜ்க்கு ரிப்ளை பண்ண வேணாம்னு சொல்ற அவ்வளவுதான?

ம்... அவ்வளவுதான். ஆர்யாகூட ரொம்பப் பேசாதப்பா. தெரியாத பசங்ககூட எதுக்கு பேசணும்? நம்ம குட்ஷெப்பர்ட் ஸ்கூல் பாய்ஸ் பற்றியே ராம் நிறைய சொல்றான். அவன் சொல்றதைப் பார்த்தா ஒரு பையன் பத்து பொண்ணுங்களை ஸைட் அடிப்பான் போல. அவன் லூஸ் டாக் விட்டதையெல்லாம் உன்கிட்ட சொன்னால் உன்னோட லிட்டில் ஹார்ட் தாங்காது மச்சி. தெரிஞ்ச பிசாசுகளே ஆயிரம் தப்பு பண்ணும் போது தெரியாத பேய்யிடம் எதுக்குப்பா பேசணும்? எட்டி நிற்குறதுதான் பெட்டர் மச்சி.

நீ இமோஷனல் ஆனா மச்சின்னு கூப்பிட ஆரம்பிச்சிடுவியே... மச்சின்னு கூப்பிடாதப்பா... என் தங்கச்சி ரொம்ப கேலி பண்றா... நீ சொல்ற மாதிரி பண்றேன். அப்புறம் ஹரினி...

மது ராம் செகன்ட் லைன்ல வர்றான்ப்பா.

வச்சிடுறேன் தாயே. என்ன விஷயம்? பையன் கால் பண்ணிட்டே இருக்கான்?

அவன் ஒரு ப்ராஜெக்ட் விஷயமா ஜெர்மன் போறானாம். என்னோட மாமா ஜெர்மன்ல இருக்காருன்னு தெரியும்ல? அவர் வேலை பார்க்கிற கம்பனி டீடெய்ல்ஸ் எல்லாம் கேட்டுட்டு இருந்தான். அப்பதான் நீ கால் பண்ண... அவன் மூனு வருஷம் கழிச்சிதான் வருவான்ப்பா...

சரி ஹரினி. அவன்கூட ஜெர்மனி பற்றி மட்டும் பேசு.

மது... ராம் இஸ் மை ஃப்ரண்ட் மச்சி...

கசம் சே? (ஹிந்தியில் உண்மையாக என்று அர்த்தம்)

கசம் சே...

ஓகே பை தென். நாளைக்கு காலேஜ்ல பார்ப்போம்.

சரிப்பா. பை மது. ஞாபகம் வச்சிக்கோ, இரண்டே இரண்டு மெசேஜ்க்கு மட்டும் பதில் போடு. அப்புறம்...

ஆஃப்லைன்... போயிடுறேன்.

யெஸ். என்னை மாதிரி இன்டலிஜென்ட்டா பசங்களை ஹான்டில் பண்ண உனக்குத் தெரியாது. அதனால பாய்ஸ்கிட்ட நீ எப்போதும் எட்டி நில்லு. ஸ்வீட் டிரீம்ஸ்.

ஏய்ய் போடி... ஸ்வீட் டிரீம்ஸ் பேப்.- மது.

ஹரினி சொல்லியாச்சுல... தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயுமாம். இங்கு ஹரினி எட்டடியில் எட்டி நிற்கச் சொன்னதால் மது பதினாறு அடிகள் எட்டியே நின்றாள் ஆர்யா விஷயத்தில். ஹரினி சொல்லியது போல தெரிஞ்ச பிசாசுகளே ஆயிரம் தப்பு பண்ணும் போது தெரியாத பேயிடம் எதுக்குப் பேசணும் என்ற கருத்தை மதுவும் ஆமோதித்தாள்.

ஆனால் மது பதினாறு அடி தாவிய விஷயம் புரியாமல் ஆர்யா மதுவை தனது அருகில் வைத்து, இல்லை இல்லை அருகில் வைத்து இல்லை... தனது மடியில் வைத்து அழகு பார்க்க ஆசைபட்டான். சத்தியமாக நிச்சயமாக இது காதல் இல்லை. காதலுக்கு பத்து படிக்கட்டுகள் கீழே ஒரு நிலை. இது காமமும் இல்லை, காமத்திற்கும் பத்து படிக்கட்டுகள் கீழே ஒரு நிலை. இது விடலைத்தனம். பக்கா விடலைத்தனம்.

* * *

விவேக்கும் ஆர்யாவும் மெரினா கடற்கரையின் மணலில் அமர்ந்தபடியே கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு சிறிய பீச் கடையில் வாங்கிய ஸ்வீட் கார்னுடன் அந்தக் கடையின் அருகேயே மணலில் அமர்ந்துவிட்டனர்.

டேய் தாகமா இருக்கு. ஒரு தண்ணி பாட்டில் வாங்கு டா. என்று ஆர்யா விவேக்கிடம் சொல்லவும் அவன் ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கி வந்தான்.

தண்ணீர் பாட்டிலுடன் விவேக் பீச் மணலில் அமர்ந்த சில நிமிடங்களில் இருவருக்குள்ளும் மதுவின் பேச்சு வந்தது. எப்போதும் போல விவேக் தனது ஆலோசனைகளை வழங்க ஆரம்பித்துவிட்டான்.

மது உன்னை அண்ணான்னு கூப்பிடக் கூடாதுன்னா நீ என்ன பண்ணணும்னு சொல்றேன் கேளு, ரூல் நம்பர் ஒன் 1) மதுவை எப்ப, எங்க பார்த்தாலும் ஒரு சின்ன ஸ்மைல், சிரிக்கிறியா இல்லையான்னு தெரியாம சிரிக்கணும். வாட்டர் ஃபாள்ஸ் திறந்துவிட்ட மாதிரி சிரிச்சி வச்சிடுடாத. முதல் நாள் அப்படித்தான் சிரிச்சிருப்ப. இனி அப்படிச் செய்யாத.- ஆர்யாவிற்கு டியூஷன் எடுத்துக்கொண்டிருந்தான் விவேக்.

போடா லூசு... - கடுப்பாக ஆர்யா.

எனக்குப் புரியிது மச்சி, மது உன்னோட ஃப்ர்ஸ்ட் கிரஷ் அதனால உன்னோட மனசுல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு. அது புரியிது... ஆனா பதட்டத்துல தப்பு பண்ணிடாத மச்சி. அதான் திரும்பத்திரும்ப சொல்றேன்.

நீ ஏதாவது உளறு. நான் நீ பேசுறதை கவனிக்கவேயில்ல. மது இப்பவும் என்னோட ஃப்ர்ஸ்ட் கிரஷ். அவ்வளவு தான். அதுக்கு மேல ஒண்ணும்மில்ல விவேக். அண்ணா யுனிவெர்சிட்டிக்கு நான் படிக்க மட்டும்தான் வந்திருக்கேன். பொண்ணுங்க பின்னாடி அலையிறதுக்கு எல்லாம் எனக்கும் என்னோட B.E எலக்ட்ரானிக்ஸுக்கும் டைமே இல்ல.

ரூல் நம்பர் டூ அன்ட் திரி. ரெண்டு விதிமுறைகளும் ஒண்ணுதான். என்று விவேக் அசால்ட்டாகச் சொன்னபோது ஆர்யா குபீரென சிரித்துவிட்டான்.

ஹா... ஹா... ரூல் 2ம்,3ம் ஒரே விஷயமா? அப்புறம் அதுக்கு ஏன் டா மூனுன்னு பெயர் வச்சிருக்க? என்று சிரித்தபடியே கேள்வி கேட்டான் விவேக்கிடம்.

ஆமா மச்சி... ரூல் 2ம், 3ம் ஒரே விஷயம் தான். அப்பதான் மச்சி அதோட முக்கியத்துவம் உனக்குத் தெரியும். அதான் 2ம் 3ம் ஒண்ணுன்னு சொன்னேன். இப்ப அது என்னன்னு சொல்றேன். நல்லா கவனிச்சுக்கோ. ரூல் நம்பர் 2) & 3 ) நீயாக முதல்ல கால் பண்ணவே பண்ணாத. அவளுக்கு உன்கூடப்பேசப் பிடிச்சா அவளே உன்னைக் கால் பண்ணுவா.

இப்பவும் சொல்றேன். நீ சொல்றது எதுவுமே என் புத்திக்குள்ள ஏறலை. மது என்னோட ஃபர்ஸ்ட் கிரஷ். அவளை திரும்பவும் இரண்டு வருஷம் கழிச்சிப் பார்த்ததும் ஒரு ஹாய் சொல்லிக்கிட்டேன். அவ்வளவு தான். அவ்வளவே தான். அதுக்கு மேல ஒண்ணுமே இல்ல. நீ சொன்ன ரூல்ஸை என் காது கேட்கவே இல்ல. தள்ளு கையெல்லாம் மிளாகாப் பொடியாக இருக்கு. இவ்வளவு காரமாகவா ஸ்வீட் கார்ன் வாங்குவ? என்று கேட்டபடி ஆர்யா மணலில் இருந்த தண்ணீர் பானையின் அருகே சென்றான்.

நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் மது என்கூட பேச மாட்டிக்கிறான்னு என்கிட்ட அழுதுட்டு வந்து நிற்கக்கூடாது. திரும்பவும் உன்னை அட்டக்கத்தி படத்துக்கு என்னால கூட்டிட்டுப் போக முடியாது ஆர்யா. அந்தப் படத்தை நீ பத்து தடவை பார்க்க ரெடியாக இருக்கலாம். ஆனா என்னால அது முடியாது. அதனால நான் சொன்னதை மனசுக்குள்ள பத்து தடவை யோசிச்சிப் பாரு. - ஆர்யாவிடம் விவேக்.

ஸ்கூல் லைஃப்ல மதுகிட்ட விழுந்த மாதிரி நான் இன்னும் பத்து பேர்கிட்ட தடுக்கி விழுந்து அட்டக்கத்தி படத்தை பத்து தடவை பார்க்கணும்... அப்படித்தான சொல்ல வர்ற...- விவேக்கிடம் ஆர்யா.

ச்ச... ச்ச அப்படி நான் சொல்வேனா டா? என்று கண்ணீர் வடிய சிரிக்க முடியாமல் சிரித்துக்கொண்டே விவேக் சொன்னதும், ஆர்யா மிளகாய்ப் பொடியின் சாரில் நனைந்திருந்த தனது உள்ளங்கையைப் பார்த்தான். சற்றுமுன் தண்ணீர் கொண்டு கைகளை கழுவ நினைத்தவன் அந்த எண்ணத்தை நொடிப்பொழுதில் மாற்றிக்கொண்டு விவேக்கின் முகத்தில் பரபரவென கைகளைத் தேய்க்க ஆரம்பித்தான்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
பீச்சில் மிளகாய்ப் பொடி பவுடர் பூசிக்கொண்ட பிறகு விவேக் மதுவைப் பற்றி அதிகம் வாய் திறப்பதே இல்லை.

ஆர்யாவின் கைபேசியில் ஒரு வீடியோ கேம்மை தரவிறக்கம் செய்து விளையாடிக் கொண்டிருந்தான் விவேக்.

ஆனால், மதுவுக்கு கால் பண்ணணும். கொடு என்னோட ஃபோனை. என்று ஆர்யா மறுநாளே அவனிடம் கேட்ட போது அவனுக்குள் ஒளிந்து கொண்டிருந்த காதல் ப்ரொபர்சர் விழித்துக் கொண்டார்.

நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? நீயா வழியப் போய் பேசாதன்னு சொன்னேனா இல்லையா?- கோபமாக விவேக்.

இல்ல விவேக். அவளோட லாப்டாப்ல சின்ன பிரச்சனையாம், என்னோட லாப்டாப்ல ப்ராஜெக்ட் பண்ணிட்டு ஒரு மணி நேரத்துல தந்திடுறேன்னு கேட்டா. என்னோட லாப்டாப் கொடுத்தேன். அவ வேலை முடிந்ததும் கொடுத்துட்டா. பைக்ல வந்தப்ப கால் பண்ணாடா. டிராஃபிக்ல எடுக்க முடியல. மிஸ்ட் கால் ஆயிடுச்சு. அதான், இப்ப பேசப்போறேன். போனைக் கொடு மச்சி.

ஆர்யாவின் விளக்கத்திற்குப் பிறகு ஓரளவு சமாதானம் அடைந்த விவேக் தனது கையில் வைத்திருந்த ஆர்யாவின் கைபேசியைப் பார்த்தபடியே,

இரு மச்சி... மிஸ்ட் கால் டியுரேஷன் பார்த்திட்டு தர்றேன். என்றான்.

என்னது??

ஆர்யாவின் கைபேசியில் மதுவின் தவறவிட்ட அழைப்பின் காலநேரம் இரண்டு நொடிகள் (Ringed two seconds) எனக் காட்டவும்,

லூசாடா நீ? இரண்டே செகன்ட் தான் டிரை பண்ணிருக்கா... இதுக்கு பெயர் மிஸ்ட் கால்லாடா? இதெல்லாம் கால் லிஸ்ட்ல சேரவே சேராது தெரியுமா? என்று பொங்கிவிட்டான் விவேக்.

அப்படின்னு சொல்ற?

ஆமா ஆர்யா. தயவு செய்து கூப்பிட்டுத் தொலைச்சிடாத. கெத்தை மெயின்டேன் பண்ணு மச்சி. நீ பத்தடி தள்ளி நிள்ளு மச்சி, மேங்நெட் மாதிரி இழுக்கப்பட்டு பொண்ணுங்க பத்தடி முன்னே வந்து நிற்பாங்க.

என்னமோ சொல்லிட்டுப்போ. எனக்கு நீயும் வேணாம் மதுவும் வேணாம். நான் என்னோட ப்ராஜெக்ட்க்கு ரிசர்ச் பண்ணப்போறேன். கொடு ஃபோனை. என்று தனது கைபேசியை விவேக்கிடம் இருந்து வாங்கிய ஆர்யா தனது பாடவேலையை மட்டுமே செய்தான். ஆனால் மது விஷயத்தில் அவனது புத்தி புத்திசாலியாய் விவேக் கூறியதை ஆமோதித்து அமைதி காத்தது.

பொண்ணுங்க வேணாம்ன்னு சொன்னா வேணும்னு அர்த்தமாம், இதைத்தானே காலம் காலமாய் பழமொழியாய் தலைமுறை தலைமுறையாய் சொல்லிவருகின்றனர்? அதே தானுங்க பசங்களுக்கும். பசங்க வேணாம்னு சொன்னா வேணும்னு அர்த்தம். ஆர்யா தான் அதற்குத் தகுந்த உதாரணம். விவேக்கிடம் மது வேண்டாம் என்று கூறினான். ஆனால் உண்மை அதுவல்ல.

அவனுக்கு மதுவின் நட்பு வேண்டாம் என்ற எண்ணம் துளியும் இல்லை. மதுவின் நட்பு வேண்டும். அவளுடன் அரட்டையடிப்பது வேண்டும். பள்ளிக் காலத்தில் ஏற்பட்ட அந்த கிரஷ் மீண்டும் அவள் மீது ஏற்பட்டாலும் ஆர்யாவிற்கு நோ அப்ஜெக்ஷன், ஆட்சேபனையே இல்லை.

பள்ளிப் பருவத்தில் ஆர்வக்கோளாறில் தனது முதல் கிரஷ்ஷை அவனது முந்திரிக்கொட்டைத் தனத்தால் நசுக்கிவிட்டதுபோல (கிரஷ் செய்துவிட்டதுபோல) இப்போது செய்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தான்.

வெட்டி அரட்டையடிக்கும் ஆண்களை புத்திசாலிப்பெண்கள் ஒதுக்கிவிடுவார்கள் என்பதை அனுபவம் அவனுக்குச் சொல்லிக்கொடுத்திருந்ததும் ஒரு காரணம்.

மறுநாள் மதுவை அவன் நேரில் காணும் வரை அவன் அவளிடம் பேச முயற்சிக்கவே இல்லை. அதனால் தானோ என்னவோ ஆர்யாவின் மீது ஒரு நல்லெண்ணம் வந்தது மதுவிற்கு. தனது ஸ்கூட்டியை ஸைட் ஸ்டான்ட் போட்டு பார்க்கிங்கில் நிறுத்தியபோது ஆர்யாவை தற்செயலாகப் பார்த்தாள் மது. ஆர்யா இன்ப அதிர்ச்சியாய் அவளைப் பார்க்க அவனைப் பார்த்து முதலில் புன்னகைத்தது மது தான்.

அந்தப் புன்னகையில் அவள் சிக்கனமாய் இருக்கவில்லை. ஆயிரம் சூரியனின் வெளிச்சத்தை நிரைத்திருந்தாள் தனது புன்னகையில். தன்னை நோக்கி நடந்து வரும் தனது முதல் கிரஷ்ஷை பேராவலுடன் பார்த்தான் ஆர்யா.

பத்தடி தள்ளி நின்றால் காந்தமாய் பெண்கள் இழுக்கப்படுவார்கள் என்ற விவேக்கின் ஆராய்ச்சி வெற்றி பெற்றதை நினைத்து ஆர்யாவும் தனது முன்னே வந்துவிட்ட மதுவைப் பார்த்து சிரித்தான்.

விவேக் வாழ்க... - (இதைச் சொன்னது நானில்லைங்க... யாரப்பா அது?? நான் அசந்த நேரம் பார்த்து எனக்குப் பதிலாக டயலாக் எழுதுறது???)

* * *



ஹாய்... ஆர்யா. நேத்து கால் பண்ணேன். நீ எடுக்கல.- மது.

ஓ... அப்படியா? கவனிக்கல மது. கொஞ்சம் ப்ராஜெக்ட் வேலையா இருந்தேன். எதுக்கு கால் பண்ண? (அடப்பாவி... பயபுள்ள என்னமா கப்சா விடுது??)

தாங்க்ஸ் சொல்லத்தான் கால் பண்னேன். இரண்டு ரிங் மட்டும் கொடுத்துட்டு வச்சிட்டேன். நீ கூப்பிடுவேன்னு நினைச்சேன். நீ உன்னோட ப்ராஜெக்ட் பண்ணிட்டு இருந்திருக்க... நல்லவேளை உன்னை டிஸ்டர்ப் பண்ணலை.

கெத்தை மெயின்டேன் பண்ணு டா. உடனே வழிஞ்சிடாத... என்று அந்த இடத்தில் விவேக் இல்லையென்றாலும் விவேக்கின் ஆவி ஆர்யாவைச் சுற்றிச் சுற்றி காற்றில் வந்து பேசுவதுபோல ஆர்யா உணர்ந்தான்.

ஆமா... கொஞ்சம் ரொம்ப பிஸியா இருந்தேன்.- ஆர்யா.

என்ன டா சொல்ற? கொஞ்சம் பிஸியா இருந்தேன்னு சொல்லு, இல்ல... ரொம்ப பிஸியா இருந்தேன்னு சொல்லு ஏன்டா ரெண்டையும் சொல்லி சொதப்புற? என்று விவேக்கின் ஆவி மீண்டும் ஆர்யாவின் காதில் கத்திவிட்டுப்போனது.

உடனே தான் சொதப்புவது புரிந்து, விவேக் இந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வான் என்று யோசித்தவன், சரி... அப்புறம் பார்க்கலாமா? என்று பேசியபடியே தனது கைக்கடிகாரத்தை பார்த்தபடி நின்றான்.

உடனே அவனிடம் ஓ.. கிளாஸுக்கு டைம் ஆச்சுல? பை. சீ யூ சூன். என்றாள் மது.

பை... என்றான் ஆர்யா மேற்கொண்டு பேச்சை இழுக்காமல்.

இரண்டு எட்டுகள் நகர்ந்தபிறகு ஆர்யா. என்று அவனது பெயரைச் சொல்லி அழைத்தாள் மது.

என்ன மது?

நீ ஃப்ரீயா இருந்தா எனக்கு கால் பண்ணு. வீட்டுக்குப் போனதும் ஸ்கூல்ல அந்த பேச்சுப்போட்டியில நீயும் நானும் ஜெயிச்சப்ப போடியம்ல எடுத்தப் ஃபோட்டோ வச்சிருக்கேன். அதை ஷேர் செய்யறேன்.

ஷுயர்.

ஆண்மகனாய் தனது தன்மானத்தைக் காத்து கெத்து குறையாமல் மதுவிடம் பேசிய விதத்தை நினைத்து மனதில் மெச்சிக்கொண்டான் ஆர்யா.

* * *
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
ஆர்யா உன்னோட கிளாஸ்ல பொண்ணுங்க எத்தனை பேர் மச்சி?- விவேக்.

கர்ல்ஸ்தான் அதிகம் மச்சி. இருபது பேர் இருப்பாங்க. எதுக்குக் கேட்குற?

இருபதா? இருபதை விட்டுட்டு தான் அந்த கம்ப்யூடர் சயின்ஸ் டிபார்ட்மென்ட் மதுமிதாவைப் பார்த்து வழிஞ்சிட்டு இருக்கியா?

யேய்... நாலு வார்த்தை கூடப் பேசிட்டா வழியிறதா அர்த்தமா?

இல்ல மற்ற பொண்ணுங்ககிட்ட இரண்டு வார்த்தைகூட பேச மாட்டிக்கிறியே... அதனால கேட்டேன்.

மதுவும் மற்றப்பொண்ணுங்களும் ஒண்ணா?

அதான... மது உன்னோட மாஜி கிரஷ் ஆச்சே?

என்கூடப் படிக்கிற பொண்ணுங்க கூடலாம் பேசவே பிடிக்கல மச்சி.

நம்மக்கூட படிக்கிற கிளாஸ் பொண்ணுங்கதான் நம்மளை மதிக்கவே மதிக்காதுங்களே? ஸ்கூல் பொண்ணுங்களே ஐன்ஸ்டீன் பேத்திக மாதிரி நடந்துக்கிடும் போது அண்ணா யூனிவர்சிட்டி பொண்ணுங்களைக் கேட்க வேணுமா? அந்த மாதிரிப் பொண்ணுங்ககூட நீ எப்படிப் பேசுவ? என்னோட காலேஜ்லகூடக் அப்படித்தான். என் கிளாஸ் ஷாலினி என்னைத் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டிக்கிறா டா. ஒரு பொண்ணுக்கூடப் பழகி லவ் பண்ணி வச்சிக்கிட்டா எதிர்காலத்துல கல்யாணம் பண்ண நினைக்கும்போது உபயோகமா இருக்கும்னு நினைச்சா, ஒண்ணும் அமையமாட்டிக்குதே மச்சி. நீ மதுவைப் பார்த்த மாதிரி நானும் ஏதாவது மாஜி கிரஷ்ஷைப் பார்த்தாதான் வேலைக்காகும் போல.

ஏய்ய்ய் சும்மா இருடா. மாஜி கிரஷ் மாஜி கிரஷ்னு அதையே திரும்பத் திரும்ப சொல்லிட்டு. என்று சொல்லிக்கொண்டு விவேக் தலையில் ஆர்யா அடித்தபோது ஆர்யாவின் கைபேசி ஒலித்தது.

அழைத்த எண்ணைப்பார்த்ததும் தடால் எனத் தாவி சோபாவில் இருந்த தனது கைபேசியை எடுத்தான் ஆர்யா. தாவியபோது விவேக்கின் காலை மதித்தபோதோ, அவனது குட்டித்தொப்பையில் கைவைத்து தாண்டியபோதோ ஆர்யா இங்கிதம் கருதிக்கூட சாரி என்று கேட்கவில்லை. அவனுக்கு அத்தனை அவசரம். பச்சைப் பொத்தானை அழுத்தும்வரை அவனுக்கு அத்தனை அவசரம்.

ஹாய் மது.- ஆர்யா.

ஹாய் ஆர்யா. உன்னோட வாட்ஸ் அப்க்கு அந்த காம்பட்டிஷன் ஃபோட்டோ அனுப்பிருக்கேன். பாரு. அதைச் சொல்லத்தான் கால் பண்ணேன். வச்சிடவா?- மது.

ம்... பை. அன்ட் தாங்க்ஸ் மது.- ஆர்யா.

என்ன டா அந்திமழை, ஆலங்கட்டி மழை எல்லாம் ஆகஸ்ட் மாதம் சென்னையில பொழியிது?- ஆர்யா.

ஏதோ பழைய ஃபோட்டோ அனுப்பிருக்காளாம் மச்சி. என்றபடியே அந்தப் புகைப்படதைப் பார்த்தவனின் கண்கள் பழைய நிழற்படத்தில் லயித்து நின்றது. விவேக்கும் தனது கண்களை ஆர்யாவின் கைபேசியில் மேயவிட்டான்.

அந்தப் புகைப்படத்தில் மது, ஆர்யா மற்றும் விநோத் (மதுவின் பள்ளி மாணவன்) முதல் மூன்று பரிசுகளுக்காக வரிசையாக நின்றுகொண்டிருக்க பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார் சிறப்பு விருந்தினர். அவர் அருகே சிவப்பிரகாசம் நின்று கொண்டிருந்தார்.

அன்றைய தினத்தில் சிவப்பிரகாசம் அவர்களை பீதியில் ஆழ்த்தியதை இன்று நினைக்கும் போதும்கூட இருவருக்கும் மெல்லிய சிரிப்பு வந்தது. சிவப்பிரகாசத்திற்கு உருகாதார் எதற்கும் உருகார். (அந்தத் தலைமை ஆசிரியரை நினைவிருக்கிறதா?) அந்தப் புகைப்படத்தில் அவரது உருவத்தைப் பார்த்ததும் இருவருமே அவரின் கரிஸ்மாவில், தேஜஸில் உருகித்தான் போயினர்.

தாங்க்ஸ், குட் நைட். என்று மதுவுக்கு பதில் அனுப்பவா மச்சி?- ஆர்யா.

தாங்க்ஸ் மட்டும் போதும்.- கறாராய் விவேக்.

குட் நைட் போட்டா என்ன?

இட்ஸ் டூ பெர்சனல் மச்சி... ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் தில் டா. குட் மார்னிங் ஸ்டேடஸ்க்கு திரும்ப வம்படியாக நீயே வழியப்போய் மாட்டிக்கணும்னு ஆசைப்படுறியே? அதைச்சொன்னேன். குட் டே, குட் மார்னிங், குட்நைட் மட்டும் தான் இனி அவகிட்டயிருந்து பதிலா வரும். பரவாயில்லையா?

சரி, குட் என்ற வார்த்தையே வேணாம். தாங்க்ஸ் மட்டும் அனுப்புறேன்.

ஆர்யா கைபேசியில் தாங்க்ஸ் என்று தட்டச்சு பண்ணும்போதே அவளும் அவனுக்கு தட்டச்சு செய்வதாகச் புரளி பேசியது கைபேசி.

டைப்பிங்ன்னு வருது மச்சி.- ஆர்யா.

ரொம்பத் துள்ளாத... காத்திரு. என்ன வருதுன்னு நான் பார்க்கணும்.

ஆர்யா தாங்க்ஸ் என்று மட்டும் அனுப்பினான்.

தாங்க்ஸ்.- ஆர்யா.

ஓ... ஓகே.- மது

மச்சி ஓகேன்னு தமிழ்ல மெசேஜ் பண்ணிட்டா டா... முதல் நாளே தமிழ்ல பண்றாடா.

அட இது என்ன சின்னப்புள்ளத் தனமா இருக்கு? ஸ்கூல்ல படிச்ச மேக்ஸை இப்பயும் படிக்க முடியுமா? முடியாதுல? அதுமாதிரி தமிழ்ல டைப்பண்றது எல்லாம் ஓல்டு சிலபஸ். நியு சிலபஸ் பற்றிச் சொல்றேன், கேளு. நீ டைப் பண்ணி அனுப்பின உடனே பதில் வந்திடுச்சு. அப்படி உடனுக்குடன் பதில் வரக்கூடாது. டைப்பிங் டைப்பிங்ன்னு பத்து தடவை வரணும். ஆனா மெசேஜ்ஜே வரக்கூடாது. அழிச்சி அழிச்சி எழுதிக்கிட்டே இருக்கணும். இப்படி சட்டுன்னு பதில் எழுதக்கூடாது. அப்பதான் அவ தடுமாறுகிறான்னு அர்த்தம்.

இப்ப?

மது இஸ் வெரி வெரி ஸ்டெடின்னு அர்த்தம். என்றவன் ஆர்யாவின் வாட்ஸ் ஆப் திரையைப் பார்த்தபடியே ஷிட். என்று சொன்னான்.

என்னடா மச்சி? என்ன ஆச்சு? என்று கேட்ட ஆர்யாவும் தனது வாட்ஸ் ஆப் திரையைப் பார்த்தான்.

பாரு ஆஃப்லைன் போயிட்டா. தேவைன்னா மட்டும் பேசிட்டு மீதி நேரம் ஆஃப்லைன்ல இருக்கிற பொண்ணுங்க ரொம்ப ரொம்ப ஸ்டெடி மச்சி. நீ என்ன வேணும்னாலும் டெக்ஸ்ட் பண்ணு... நான் எல்லாத்துக்கும் ரிப்ளை பண்ண மாட்டேன். நீ பத்து அனுப்புனா என்ன இருபது அனுப்புனா எனக்கென்ன? கடைசி நாலுக்கு மட்டும் தான் ரிப்ளை பண்ணுவேன். என்பதுதான் அதுக்கு அர்த்தம் டா.- விவேக்.

இது தான்டா எனக்கு அவகிட்டப் பிடிச்ச விஷயம். இவ்வளவு பெர்ஸ்னாலிட்டி உள்ள பையன் ஒரு காலத்துல நம்மைப் பார்த்து ச்ப்ண்ழ்ற் பண்ணான்னு தெரிஞ்சப் பிறகும் இப்பவும் என்கூடப் பேசும்போது ஸ்டெடியாக இருக்கா பாரேன்... திரும்பவும் மனசு அவமேல கிரஷ்யாகிடும்போல மச்சி.

மறந்துகூட லவ் என்ற வார்த்தையைச் சொல்ல மாட்டியே?

யெஸ்.

ஏன் டா அப்படி?

மச்சி, பொண்ணுங்க விஷயத்துல எவ்வளவு அறிவா பேசுற? ஆனா இந்தச் சின்ன விஷயம்கூட உனக்குத் தெரியல பார்த்தியா? நான் விலாவரியாக சொல்லித்தரவா?

என் நேரம் டா. சொல்லு. தெரிஞ்சிக்கிறேன்.

லவ் எப்ப வரும் தெரியுமா? ஒருத்தரைப் பார்த்து பிரமிச்சுப் போயிடணும். அந்த ஆளு மேல கண்மூடித்தனமான பிடித்தம் இருக்கணும். விலகவே முடியாதுன்னு தோணணும். வெட்டியா அரட்டையடிக்கணும், அவுங்க பேசாம இருந்தா கிறுக்கு பிடிக்கணும். இவ்வளவு ஏன் அவுங்க நம்மை முந்திக்கிட்டு செத்துப்போயிட்டா... நாமளும் அந்த ஒரு நிமிஷம் அவுங்களைப் பார்க்க சொர்க்கத்துக்குப் போயிட்டு வந்திடணும். அதாவது நாமளும் செத்துப் பிழைக்கணும்.

அப்படின்னு கூகுள் சொல்லுச்சா உன்கிட்ட?

அப்படின்னு என்னோட அக்கா சொன்னா, அவளுக்கு யார் சொன்னான்னு தெரியாது, ஆனா அவ சொன்னது 100 பெர்சென்ட் கரெக்ட் மச்சி. இத்தனை தகுதிகள் இருக்கிற ஒருத்தர் மேலத்தான் லவ் வரும் மச்சி. அந்த மாதிரி ஆளை இன்னும் நான் பார்க்கலை. அப்படி ஒரு பொண்ணைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசைதான். என்னோட அம்மாவும் அப்பாவும் லவ் மேரேஜ்தான், என்னோட அக்காவும் லவ் மேரேஜ். எனக்கும் லவ் பண்ண இஷ்டம் தான். ஆனா பார்த்ததும் லவ் பத்திக்கிடுற மாதிரி எந்தப் பொண்ணையும் இன்னும் பார்க்கலையே? என்ன பண்றது? அதான் கடவுளாகப் பார்த்துக்கொடுத்த கிரஷ்ஷை வச்சிக்கிட்டு திருப்தி அடைஞ்சிக்கிறேன். கிரஷ் என்பது லேசான போதை மச்சி. அந்தப் போதை அனுபவிச்சாதான் தெரியும். அந்தப் போதை ஊசி கொடுக்கிற கிக் இருக்கே... அது தனிதான்.

எங்களுக்கும் கிரஷ்னா என்னன்னு தெரியும் டா. நான்லாம் பத்துக்கு மேல அந்தப் போதை ஊசி போட்டிருக்கேன். என்கிட்டயேவா டெமோ காண்பிக்கிற? லவ்வைப் பற்றி மட்டும் சொல்லுங்க பாஸ்.

ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா சொல்லணும்னா அவுங்களுக்காக நாம நம்ம வெட்கத்தைவிட்டு என்ன வேணும்னாலும் பண்ணுவோம். லவ்வுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை எல்லாம் கிடையவே கிடையாது மச்சி. என்று காதலைப் பற்றி தனது எண்ணத்தை சொற்களாக்கி விவேக்கிடம் எடுத்துக்கூறினான் ஆர்யா.

அப்ப எனக்கு அது செட் ஆகாது. எனக்கு நாலு கிரஷ்ஷே போதும். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு லவ்வல்லாம் பத்தவே பத்தாது.

ஹா... ஹா... என்று ஆர்யா சிரித்தபோதே அவனின் கைபேசி மது காலிங் என்று கத்தியது.

எப்படா இவன் ரிங் டோன் மாத்தினான்? என்று விவேக் யோசிக்கும் போதே ஆர்யா மதுவுடன் பேச ஆரம்பித்திருந்தான். பேசி முடிக்கும்வரை பொறுமையாக ஆர்யாவின் வீட்டிலேயே சுற்றி வந்த விவேக், ஆர்யா பேசி முடித்ததும் அவன் முன்னே சென்று அவனது முகத்தை தன் கையால் திருப்பி தனது கண்களை பார்க்கச் செய்தான்.

என்ன?- ஆர்யா.

அதை நான் கேட்கணும் மச்சி. என்ன பேசினா மது.- விவேக்.

இரண்டு கைகளையும் நீட்டி சோபாவின் பின்புறம் படரவிட்டு கால் மேல் கால் போட்டபடியே மந்தகாசமாய் சிரித்த ஆர்யா விவேக்கிடம் சொன்னான்,

மது நம்மை மாதிரியே போதைப் பழக்கத்துக்கு அடிமையாகுறா மச்சி.

என்னடா சொல்ற?

மது is having a crush on me man..

What Really?

அனுபவம் பொய் சொல்லுமா?

ஹும், ஹும்.

அப்ப நான் சொன்னது தான் கரெக்ட். என்கூட பேசி பத்து நிமிஷம்கூட முழுசா முடியல, ஆனா திரும்ப கால் பண்ணிருக்கா. கிரஷ் வந்திட்டா ஃபோன் நம்பரை கையில வச்சிக்கிட்டு கால் பண்ணாம இருக்க முடியாது மச்சி. அதான் உறுதியா சொல்றேன்ப்பா மது is having a crush on me man.”

சரி... நீ? உன்னோட ஸ்டேடஸ் என்ன? Crush?ஆ no crushஆ?

இல்லைன்னு சொல்ல முடியாது. கொஞ்சோண்டி கிரஷ்னு வச்சிக்கலாம். அவ என்னை ப்ளாக் பண்ணதை நான் இன்னும் முழுசா மன்னிக்கலை மச்சி. அதனால கொஞ்சோண்டி கிரஷ் தான் இருக்கு.

அப்படின்னா? அது என்ன கொஞ்சோண்டி??

தோடா தோடா மச்சி. very little very little crush...

இனிமே என்னை ஷேக்ஸ்பியர்னு கூப்பிடாத மச்சி. உன்னோட டயலாக் பக்கத்துல என்னோட டயலாக் எல்லாம் செத்தே போயிடுச்சு. என்று ஆர்யாவிடம் விவேக் சொன்னதும் சிரித்துவிட்டான்.

ஆர்யாவும் அவனுடன் சிரிப்பில் கலந்து கொண்டான். ஆனால் அவர்களை வேடிக்கைப் பார்த்த மிஸ்டர் விதி மட்டும் சிரிக்கவே மாட்டேன் என்று அடம் செய்தார்.

நம்ம ஆர்யாவின் மீது மதுவிற்கு மட்டுமல்ல இந்த விதிக்கும் தான் கிரஷ்ஷோ கிரஷ்ஷு. இல்லையென்றால் அவனை வேவு பார்த்துக்கொண்டே இருப்பாரா?

இத்தனை நாட்களும் ஆர்யாவையும் மதுவையும் வேவு பார்த்த மிஸ்டர் விதிக்கு வேறு ஒரு முக்கியமான வேலை வந்துவிட்டது. அதனால் தனது காரியதரசியான மிஸ்டர் லவ் குருவை அழைத்தார். அவரிடம் ஆர்யாவை வேவு பார்க்கும் வேலையை ஒப்படைத்தார்.

ஆக 10.10.2019 முதல் மிஸ்டர் விதி சாரால் ஆர்யாவைத் தொடர ஒரு வேதாளம் நியமிக்கப்பட்டது.

யாரு அந்த லவ் குரு?

லவ் குரு என்பவர் கலகமூட்டும் ஆசாமி. இளைஞர்கள் சந்தோஷமாக இருந்தால் அதைப் பொறுத்துக்கொள்ளவே முடியாத ஆசாமி. சுருக்கமாகச் சொல்லப்போனால் சிங்கிளாகத் திரியும் சிங்கங்களின் எதிரி.



* * *
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
12

ஒரு ஞாயிறு அன்று ஆர்யா விவேக்கின் பான்ட் பாக்கெட்டில் இருந்து வாலட்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, வா பார்பிக்குயூ போகலாம். என்றான்.

அய்யா சாமி புகாரிக்கு பிரியாணி சாப்பிடப் போலாம் டா. பார்பிக்குயூ போற அளவுக்கு என் அப்பாகிட்ட வசதியெல்லாம் இல்ல மச்சி. நீயும் நானும் சம்பாதிச்சு பெத்தவங்களுக்கு சோறு போட்டப் பிறகு பார்பிக்குயூ பக்கம் எட்டிப்பார்க்கலாம் மச்சி.

சரி, சரி ஷேக்ஸ்பியரா மாறாத.

ஆமா... அதென்ன என்கிட்டக் கேட்காமலே, என்னோட பர்மிஷன் இல்லாமலே என் பர்ஸை எடுக்குற?

மறுக்கமாட்டன்னு உறுதியா தெரியும். அதான் எடுத்தேன். பெர்மிஷன்லாம் கேட்க முடியாது. உன் பைக்கா என் பைக்கா? எதுல போறோம் பிரியாணி சாப்பிட?

உன் பைக்லதான் டா. நம்ம பைக்குன்னு சொல்லு மச்சி. உன் பைக்குன்னு எதுக்குப் பிரிச்சிப் பேசணும்? அது உன்னோடது இல்ல மச்சி, ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணி மாலை போட்டு பூஜை போட்டப்பவே அது நம்ம பைக் ஆகிடுச்சு.

எரும... போதும் நிறுத்து. இந்தா என் பைக் சாவி. நீ எடுக்கிறியா? நான் எடுக்கவா?

நீயே வண்டி ஓட்டு மச்சி. அப்பதான் பெட்ரோல் போடும்போது பைசா கொடுக்க உனக்கு வசதியா இருக்கும். இந்தக் கையில பெட்ரோல் டாங்க் மூடி. அந்தக் கையில ரூபாய் நோட்டுன்னு இரண்டு கையையும் நீ நீட்டிட்டு பைக்ல உட்கார்ந்திருக்கிறதப் பார்க்கும்போது இரு கைகளையும் விரித்து வரங்களை அள்ளித் தரும் அந்தப் பரந்தாமனே நேர்ல வந்த மாதிரி இருக்கும் மச்சி.

ஷேக்ஸ்பியர் எப்படிச் செத்தார்ன்னு தெரியுமா மச்சி? நான் ஷேக்ஸ்பியர் மாதிரி டிசைன் அப்படின்னு சொல்லிட்டுத் திரியும் ஒரு ஆளைப் போட்டுத் தள்ளணும்.

இனி நான் கடி ஜோக் பேசுனா அட மானங்கெட்டவனேன்னு திட்டு. சரியா? என்ற விவேக் பூகாரி பிரியாணி கடைக்குள் நுழையும் வரை ஜோக்குகள் பேசவேயில்லை.

அவர்களது டேபிளின் அருகே மதுவையும் ஜான்வியையும் பார்த்ததும் அந்தக் கடையின் அடுக்களையில் இருக்கும் அகலமான பிரியாணி டேக்சாவைப் போல ஆர்யாவைப் பார்த்து உதடுகளை அகலமாக்கிச் சிரித்தான் விவேக்.

டேய் மச்சி அது மதுதான?- விவேக்.

ம்... கத்தாத மச்சி. ப்ளீஸ்.

ஒரு குஸ்காவே குஸ்கா பிரியாணிச் சாப்பிடுகிறதே... ஹா... ஹா... ஆச்சிரியக்குறி. - விவேக்.

ஆர்யா விவேக்கைப் பார்த்து முறைத்தான்.

அட மானங்கெட்டவனே.- (யாருப்பா அது கடி ஜோக் சொன்ன எங்க விவேக்கைத் திட்டுனது? நீங்களா? இல்ல அந்த ஆர்யா பயலா? கவிதையே சொல்ல விடமாட்டீங்களே?)



* * *

ஆர்யாவும் மதுவும் தங்களது இரு சக்கர வாகனங்களை பார்க் செய்திருந்த இடத்தில் இருந்து நகர்த்தியபடியே பேசிக்கொண்டு வந்தனர். சென்னை வெயிலை உச்சந்தலை உணர்ந்தபோதும் இருவருக்கும் வேகமாக வண்டிகளை நகர்த்தும் எண்ணமே இல்லை.

வேளச்சேரியிலதான் உன் வீடா? இந்த புகாரி பிரியாணி கடைப் பக்கத்துல அடிக்கடி உன்னைப் பார்க்குறேனே? என்னோட வண்டியில வீட்டுக்குப் போகும்போதெல்லாம் உன்னை இங்க பார்த்திருக்கேன்...- மது

ஆமா மது. வாயேன் என் வீட்டுக்கு. அம்மா அப்பா வீட்டுலதான் இருக்காங்க. அக்காகூட இங்கதான் இருக்கா...

இருக்கட்டும். இன்னொரு நாள் வர்றேன்ப்பா. தங்கச்சிக்கூட வந்திருக்கேன்ல. என்னோட சிஸ்டர் தெரியும்ல?

ஓ... தெரியுமே. நல்லாவே ஞாபகம் இருக்கு மது.

எப்படிப்போகுது காலேஜ்? எலக்டிரானிக்ஸ் டிபார்ட்மென்ட் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்னு சொன்னாங்க.

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. ஆனா கொஞ்சம் படிக்கணும். அண்ணா யுனிவர்சிட்டி பற்றித்தான் தெரியும்ல? படிக்கலைன்னா மற்ற பசங்க ஆளையே காலி பண்ணிடுவாங்க. நம்மை தூக்கிச் சாப்பிட்டுட்டு போயிட்டே இருப்பாங்க. அப்புறம் அவுங்க பின்னாடி ஓடுறது ரொம்பக் கஷ்டமாயிடும்.

கரெக்ட். என் கிளாஸ்லகூட எல்லோருமே அவுங்க அவுங்க ஸ்கூல் டாப்பர்ஸ்தான். ஒவ்வொருத்தனும் அவென்ஜர்ஸ் ஹீரோஸ் ரேன்ஜுக்கு அவுங்க அவுங்க ஸ்கூல்ல பாப்புலரா இருக்காங்க... கண்ணக் கட்டுது. கொஞ்சம் நெர்வர்ஸா இருக்கு. அப்பாவும் என் மார்க்ஸை வாட்ச் பண்ணுவார். அதான் கொஞ்சம் டென்ஷன்.

உன்னோட அப்பா உன் மார்க்கை வாட்ச் பண்ணுவாங்களா?

ஆமா ஆர்யா.

ஏன்? என்னோட பேரன்ட்ஸ் அந்த ஏரியா பக்கமே வர மாட்டாங்க. அதெல்லாம் ஸ்கூல்லோட முடிந்தது.

ஏன்னா... என்று மது ஆர்யாவிடம் காரணத்தைச் சொல்ல வந்த போது ஜான்வி, மதூ... லேட்டாச்சு வா... என்று அவள் நின்ற இடத்தில் இருந்துக் கத்தவும் தனது பதிலை சொல்லாமலேயே கிளம்பிச் சென்று விட்டாள்.

அதன்பின்னர் பேசுவதற்கு அவகாசம் இல்லாமல் இருவரும் கிளம்பினார்கள்.

மது அப்பாவிடம் பயப்படுகிறாளா? இருக்காதே. இருவரும் ஃப்ரண்ட்ஸ் ஆச்சே, ஸ்கூல்ல படிக்கும்போது வாட்ஸ் ஆப் பண்ணப்ப அப்படித்தான சொல்வா மது? என்று ஆர்யா தனக்குள் பேசி சந்தேகப்படும்போதே ஒரு பலத்த சிரிப்பு சப்தம் அந்த இடத்தை ஆக்கிரமித்தது.

ஹா... ஹா... என்று பேய் அலறலாய் சிரித்தார் மிஸ்டர் லவ் குரு.

மதுவின் அப்பா கண்டிப்பாக மது வாங்கும் மதிப்பெண்கள் மீது குறியாக இருப்பார் ஆர்யா. ஏன்னா... அது ஏன்னா... என்று கரகரக் குரலில் சிரித்தபடி லவ் குரு பேச ஆரம்பித்து பாதியிலேயே நிறுத்திக்கொண்டார்.

அது ஏன் என்ற காரணத்தைச் சொல்ல ஆரம்பித்த லவ் குரு காரணத்தைச் சொல்லாமலே மாயமாய் காற்றில் மறைந்துவிட்டார். அவர் எவ்வளவு சத்தமாகப் பேசினாலும் அது மனிதர்களின் காதுகளுக்குக் கேட்கவே கேட்காது.

லவ் குரு அலறலாய் சிரித்ததையும் அவன் புலம்பலுக்கு பதில் பேசியதையும் உணராத ஆர்யா மனதில் தனது சந்தேத்தை யோசித்தபடியே தனது வண்டியில் விவேக்கை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டான்.

* * *



ஆர்யா இப்பயெல்லாம் ரொம்ப மெச்சூர்டாக நடந்துக்கிறான்ல ஜானு?- மது.

அப்படியா?- ஜான்வி.

ஆமாப்பா. நேத்து பேசினப்ப ரொம்ப ரொம்ப டீசென்டா பேசினான் தெரியுமா? முன்ன மாதிரி தேவையில்லாம எல்லாம் பேசவேயில்ல ஜானு.

அப்படியா?

நல்ல பையனாகத்தான் இருக்கான்.

அப்படியா?

ஆமா ஜானு. ரொம்ப ரொம்ப நல்ல பையனாகத் தான் இருக்கான்.

அப்படியா?

ஏய்ய்... என்னை டீஸ் பண்றியா ஜானு?

நான் பண்றதை விட்டுத் தள்ளு. நீ என்ன பண்றன்னு நான் சொல்லவா?

ஒண்ணும் வேணாம். போ போ. தள்ளிப்போ. என்று ஜான்வியின் தோளைத்தட்டி நகர்த்திய மதுவிடம் ஜானு சொன்னாள்,

ஐய்யய்யோ ரகசியங்களை மண்டைக்குள் வச்சிக்கக்கூடாதாம் மது. யாராவது ஒருத்தர் கிட்டயாவது சொல்லிடணுமாம். இல்லைன்னா தலை வெடிச்சிடுமாம். அப்படித்தான் அம்மா நெட்ஃப்ளிக்ஸ்ல போட்ட ஒரு பழைய படத்துல காட்டினான்ப்பா. (அந்தோ பரிதாபம்... நெட்ஃப்ளிக்ஸ் கொடுமைகள் இன்னும் தொடர்கின்றன மதுவின் வீட்டில்.)

ரகசியத்தைச் சொன்னாதான் தலைவெடிக்கும் ஜானு. யார்கிட்ட பீலா விடுற? போடி அங்குட்டு.

நோ வே. நான் கண்டுபிடிச்ச ரகசியத்தை சொல்லியே ஆகணும். நீ ஆர்யாவை நல்லா ஜொல்லு விடுற மது. நல்லா ஸைட் அடிக்கிற.

ஓ மை காட். வெளியே அப்பட்டமா தெரிஞ்சிச்சா?

பொண்ணு எனக்கே தெரியும் போது, அதுவும் உன்னைவிட ஆர்யாவை விட சின்னப் பொண்ணு எனக்கே தெரியும் போது, புரியும்போது... பையன் அவனுக்குப் புரியாதா?

ஓ... மை காட்... ஹரினியும் இதையே தான் சொன்னா, அவ கண்டுபிடிச்சது பெரிய விஷயம் இல்ல. ஆனா நீகூட கண்டுபிடிச்சிட்ட பார்த்தியா... அது தான் பெரிய விஷயம். I Should control myself...

ஓ மை காட் சொல்லாத. ஓ மை குட்நெஸ்ன்னு சொல்லு.

ஓ மை குட்நெஸ்ஸா? எதுக்கு?

நீயும் ஆர்யாவும் வேற வேற கிளாஸ்ல இருக்கிறதால ஓ மை குட்நெஸ்ன்னு சொல்லு. ஒரே கிளாஸ்ல இருந்திருந்தா உன்னோட ப்ரொபர்சர்ஸ் எல்லோருக்கும் தெரிஞ்சிடும்... அவுங்களுக்கு தெரிஞ்சா...

மேல சொல்லாத ஜானு. மயக்கமே வருது...

மயக்கமா? ஏன்? எதற்கு? எப்படி? லவ்குரு சார் தான் திட்டம் போட்டு வச்சிருக்காரே, அவர் திட்டப்படி எல்லாம் நன்றாகவே நடந்திருக்கிறது, நடக்கிறது, நடக்கும்.

* * *

ஆர்யாவின் அரட்டைகள் மூச்சு முட்டினாலும் அவை இம்சிக்கும் சுகமாகத்தான் இருந்தன. ஆனால் இந்தச் சுகமான இம்சையை முதல் செமஸ்டர் மற்றும் இரண்டாம் செமஸ்டர் பரீட்சைகளும் ரசிக்கவே விடவில்லை. ஆர்யாவிடம் அரட்டையடிக்கச் சொல்லி நச்சரிக்கும் மனது செமஸ்டர் பரீட்சைகளை எதிர்கொள்ளும் நாட்களில் அரட்டையடித்து வீணாகிப்போன நிமிடங்களுக்காக வருந்திடத்தான் செய்தது.

அந்நியனாய் மாறி மாறி யோசிக்கும் டீன் ஏஜ் மனதிடம் மதுவின் புத்தியின் வாதங்கள் எடுபடவேயில்லை. சரியான ஆர்யாவின் ஜொல்லு தாசனாக மாறிப்போன மனதிடம் ஸ்டாப் இட். என்று சொல்லும் துணிவு மதுவின் புத்திக்கு இல்லை.

பள்ளிக்காலத்தில் கட்டுப்பாடுகள் இருந்தன, இத்தனை சுதந்திரம் அவளுக்கு இல்லை. இப்போது அவள் வீட்டிற்கு வருவதும் வீட்டிலிருந்து கிளம்புவதற்கும் நேரம் காலம் வரையறைக்கப் படவில்லை. கேட்பார் அற்ற சுதந்திர வாழ்க்கையாக கல்லூரி வாழ்க்கை மாறிப் போனது. அளவுக்கு அதிகமான சுதந்திரம் திடீரெனக் கிடைக்கவும் மது என்னும் மான் துள்ளித் திரிய ஆரம்பித்தது.

தன்னை மீறி நடக்கும் பதின்பருவ உணர்வுகளை வெல்லவே முடியாமல் போக, பாடத்தில் கவனமே வைக்க முடியவில்லை அவளால். ஒரு கட்டத்தில் மதிப்பெண்கள் குறையக் குறைய தனது கைபேசியை உடைத்துவிடும் வேகம் வந்தது மதுவிற்கு.

ஆர்யாவின் உதடுகள் சிரித்தபோது அந்த இதழ்களைத் தொட்டுப்பார்க்கச் சொல்லும் மனதிடம் விவாதித்து விவாதித்து சோர்ந்தாள் மது. அன்னையின் போதனைகள் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் அவள் ஆர்யாவின் இதழ்களிடம் உறவாடிருப்பாள்.

ஆர்யாவின் மார்பில் படுத்துக்கொள்ளவா? என்று ஒரு முறை தனது கன்னங்கள் அவளிடம் கேட்டபோது அரண்டே போனாள் மது. அக்கணம் உடனே ஆர்யாவினிடமிருந்து தனது பார்வையைத் திருப்பி, காக்க காக்க கனவேல் காக்க என்று மனதை அடக்கிட ஸ்லோகம் சொல்லவும் ஆர்யாவே, என்ன மது திடீர்ன்னு ஸ்லோகம் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்ட? என்று நகைத்தபடி விசாரித்தான்.

ஆம்புலன்ஸ்... என்று வாய்க்கு வந்ததை உளறினாள் மது அக்கணம்.

என்ன ஆம்புலன்ஸ்?

அம்புலன்ஸ் போகுதுல... ஆம்புலன்ஸ் போனா நான் கந்த ஷஷ்டி ஸ்லோகம் சொல்ல ஆரம்பிச்சிடுவேன்.- மது.

தனது உடலின் ஹார்மோன்கள் அனைத்தும் தாருமாறாக வேலை செய்ய மது விழிப்பிதுங்கி நின்றாள்.

பள்ளிக்காலத்தில் அரும்பு மீசையுடன் தன்னிடம் வம்பு பேசிய ஆர்யாவை அவளால் எளிதில் கடந்து சென்றிட முடிந்தது. நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பங்கள் கடவுளும் கொடுக்காத காரணத்தால் அவளால் எளிதில் கடந்துவிட முடிந்தது. மனதை சிறைப்படுத்த முடிந்தது. ஆனால் இப்போது?

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற ரீதியில் ஆய்வுக்கூடத்தில், வகுப்பறையின் முன்னே நீண்டுகொண்டே போகும் வராந்தாவில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் என எங்கும் எதிலும் ஆர்யாவைப் பார்த்தபோது அவளால்...

இளமையின் புதையலாக, ஆண்மையின் செழித்த உருவமாக இருந்த கல்லூரி ஆர்யாவை அவளால் எளிதில் கடந்திட முடியவில்லை. அவனது சிரிப்பை மனம் ரசித்தது. குரலை உடல் முழுதும் ரசித்தது.

கைபேசியின் அடிமையாகிப் போவதை அவளது அறிவுக்கண்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தன.

யாராவது ஒரு டஜன் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து அந்தக் போனை தூங்க வச்சிடுங்கப்பா.. உங்களுக்கு கோடி புண்ணியம். என்று மதுவின் புத்தி, அறிவு, மூளை அலறின.

மதுவின் மனதின் தடுமாற்றத்தை உன்னிப்பாக கவனித்தார் லவ் குரு.

தான் விளையாட ஆரம்பித்த சதுரங்க ஆட்டத்தில் முதல் காய்யை மெல்ல நகர்த்தினார் மிஸ்டர் லவ் குரு.

முன்னால் நின்ற சிப்பாய்களைத் தாண்டி நாலு கால் பாய்ச்சலில் குதிரைப்படையை நகர்த்தியிருந்தார் லவ் குரு.

அவரின் முதல் காய் நகர்த்தல் இனி மது- ஆர்யாவின் உறவில் என்ன மாற்றம் செய்யும்?



* * *
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
பெங்களூர் டோல் கேட்...

விவேக்கும் அந்த காவல் துறை அதிகாரியும் டோல் கேட் அருகே இருந்த ஹோட்டலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். விவேக் மது-ஆர்யாவின் பள்ளிக்காலத்தை அப்போது தான் சொல்லி முடித்து கல்லூரியின் இரண்டாம் வருடம் வரும் வரை நிறுத்தியிருந்தான்.

ஹா... ஹா... ஸ்கூல்ல ஆர்யாகூட மது பழகமாட்டேன்னு சொல்லிட்டாளா? ஹா... ஹா... - காவல் துறை அதிகாரி சங்கர்.

சார்... நாமயெல்லாம் ஒரே டீம்னு நினைச்சேன். மது செய்ததை தப்புன்னு சொல்வீங்கன்னு நினைச்சேன் சார்.- விவேக்.

ம்க்கும்... என்று தொண்டையை செருமிக்கொண்டு காவல்துறை அதிகாரி சொன்னார், ஆமா... டவுட்டே வேணாம். நான் உன்னோட டீம் தான். அந்த மது பொண்ணு ரொம்ப தான் பிகு பண்ணிக்குது... ஒரு பையன் கூட பழகுறதுல என்ன ஆகப்போகுது? நீ மேல சொல்லு.

சொல்லவா சார்? நீங்க மது பக்கம் சாய்ஞ்சிட மாட்டீங்களே?

ச்ச.. ச்ச... சந்தேகமே வேணாம். நாமயெல்லாம் ஒரே டீம்.

அப்ப சரி சார்... காலேஜ் இரண்டாவது வருஷம் ஆர்யா வந்தப்ப...

* * *

ஆர்யா- மதுவின் இரண்டாம் வருடம் கல்லூரிக்காலம்...


முதல் வருடம் தள்ளி நின்றபடியே ஆர்யாவை ரசித்தாள் மது. கெட்டிக்காரத்தனமாய் அவனுக்கு துளியும் சந்தேகம் வராமல் பார்த்துக்கெண்டாள். அண்ணாயுனிவர்சிட்டி மூளையை எதற்குப் பயன்படுத்தினாளோ இல்லையோ ஆர்யா விஷயத்தில் நன்றாகவே பயன்படுத்தினாள். பெண்களின் இந்த திறமையைக் கண்டு பல இளைஞர்கள் காண்டாகிப் போவது உண்டு.

ஹேமா என்னைப் பார்க்குறாளா பார்க்கலையா?- அழகான இளைஞன் ஒருவன்.

டேய் ஷைலு என்னைப் பார்த்தாடா. பார்த்தா தானே?- நிஜமாகவே அழகான இளைஞன்.

மச்சி, ப்ரியா கன்ஃபார்மா என்னை ஸைட் அடிச்சா மச்சி. நோ டவுட். நான் சொல்றது சரிதான மச்சி?- அக்மார்க் தமிழ்ப்பையன்.

என் ஆளு என்னை பார்த்தமாதிரிதான் மச்சி இருந்திச்சு. ஆனா பார்க்காத மாதிரியும் இருந்திச்சி மச்சி. - இதுவும் ஒரு அக்மார்க் தமிழ்ப்பையன்.

100 பெர்சன்ட அந்த ஃபிகர் என்னை லுக் விடுது மச்சி... இல்ல 80 பெர்சன்ட ஷுயர் டா.. இல்ல ஒரு 70 பெர்சென்ட் வச்சிக்கோ.- சுத்தமான அக்கிரகாரத்தில் வளர்ந்த சிவந்த கன்னங்கள் கொண்ட பிராமணப் பையன்.

ஏன்டா இந்தப் பொண்ணுங்க இப்படி சந்திரமுகியாக இருக்குதுங்க? நாமயெல்லாம் ஸைட் அடிச்சா எப்படி பப்ளிக்கா ஸைட் அடிக்கிறோம். இதுங்க மட்டும் ஏன்டா நம்மளை கெஸ்லயே அலைய விடுதுங்க? முடியல மச்சி. அவளை ரிசர்ச் பண்ணிப் பண்ணியே பியர் பியரா குடிச்சி தொப்பை வச்சதுதான் மிச்சம்.- அறிவாளிப் பெண்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி இளைஞன்.

பல நேரங்களில் பெண்கள் ஏமாந்த சோனகிரியாக இருப்பதால்தான் இந்த எச்சரிக்கை உணர்வும் ஆண்களிடம் இல்லாத புதுவித ஹார்மோனாக பெண்களிடத்தில் உற்பத்தியாகிவிடுகிறது. ஏமாந்து விடக்கூடாது என்பதாலேயே அலைபாயும் மனதை மறைத்து ஒளித்து வைத்துக்கொள்கின்றனர் பெண்கள்.

மதுவும் பெண்களின் அனைத்து ஹார்மோன்களுடனும் ஒட்டிப்பிணைந்திருந்த அந்த எச்சரிக்கை உணர்வினால் தான் ஆர்யாவிடம் தனக்கு இருந்த ஆர்வத்தை அவனிடமோ, மற்றத் தோழிகளிடமோ வெளிச்சம் போட்டுக்காட்டவில்லை.

கல்லூரியின் முதல் வருடம் இப்படித்தான் கொஞ்சம் ஸைட், கொஞ்சம் ஆட்டம், கொஞ்சமே கொஞ்சம் படிப்பு என்று சென்றுவிட்டது. ஆனால் இரண்டாம் வருடத்தில் மது என்னும் துள்ளித் திரிந்த மானுக்கு கால்கள் மட்டும் போதவில்லை. அதனால் இரண்டாம் வருடத்தில் இறக்கைகளும் முளைத்துக் கொண்டன அந்த மான்குட்டிக்கு.

காமம் என்னும் மாயமான்...

காமம் என்னும் உண்மையான பொன் மாயமான்... ஆபத்தா? பேராபத்தா?

சளி பிடித்தால் தும்மல் எடுப்பதுபோல் பதின் வயதில் அந்த வயதுடன் இலவச இணைப்பாக எதிர்பாலரிடம் காமமும் ஆர்வமும் வருவது ஆபத்தா? பேராபத்தா?

மிஸ்டர் லவ் குரு மதுவின் எண்ணங்களை கண்காணித்தபடி காத்திருந்தார். அவர் நகர்த்தியிருந்த குதிரைப்படை நேரம் பார்த்துக் காத்திருந்தது. பாய்ச்சலை ஆரம்பிக்கும் நேரம் பார்த்துக் காத்திருந்தது.

* * *



யேய் மது உன்னோட வண்டிச் சாவி தாயேன். என்னோட பைக் ரிப்பேர் ஆகிடுச்சு. என்றபடி பார்க்கிங்கில் தனது வண்டியை நிறுத்திக்கொண்டிருந்த மதுவின் அருகே வந்து நின்றான் ஆர்யா.

எங்க போகப்போற? வண்டியில பெட்ரோல் கம்மியா இருக்குப்பா. ரொம்ப தூரம் போக முடியாது. சாயங்காலம் காலேஜ் முடியும்போது பெட்ரோல் போடலாம்னு நினைச்சேன்.

ஷிட்...

என்ன?

சரி உன்கிட்ட எவ்வளவு ரூபா இருக்கு?

500 இருக்கும்.

குடு மது. நாளைக்கு கொடுத்திடுறேன். என்னோட வாலட்டை வீட்டுல மறந்து வச்சிட்டு வந்திட்டேன். கார்ட்ஸ் எல்லாம் அதுலதான் இருக்கு. கையில 200 தான் இருக்கு. நீ 500குடு, திருப்பித் தந்திடுறேன்.

அஃப்கோர்ஸ் தர்றேன். என்றவள் தனது ஹேன்ட் பாக்கில் இருந்து 500 ரூபாய்த்தாளை எடுத்து அவன் முன்னே நீட்டினாள்.

வண்டிச் சாவி?

வண்டி கண்டிப்பா வேணுமா? என்று கேட்டுக்கொண்டே வண்டிச்சாவியை அவன் உள்ளங்கைகளில் அவள் வைக்க...

ஆமா மது வண்டி கண்டிப்பா வேணும். ஒரு எமர்ஜென்சி. என்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் இன்டர்ஷிப்க்கு போறதால் வண்டி தரமாட்டிக்கிறாங்க. மணி பத்தாயிடுச்சு. பை கிளம்பறேன் மது.

கிளாஸ்?

என்ன கேள்வி இது? பங்க் பண்றேன் மது. பை... என்றபடி மதுவின் வண்டியை ஸ்டார்ட் செய்தான் ஆர்யா.

என்ன எமர்ஜென்சி? எனக்கு சாயங்காலத்துக்குள்ள வண்டி வேணும்... அம்மா திட்டுவாங்க... என்று கத்தியபடி மது கேட்க,

வந்து சொல்றேன். நாலு மணிக்கு வண்டி வந்திடும் மது. என்று பார்க்கிங்கில் நிற்கும் மதுவிற்குக் கேட்கும்படி சத்தமாகக் கூறியவன் சில கணங்களில் அந்தக் கல்லூரி வளாகத்தையே கடந்துவிட்டிருந்தான்.

சரியாக 4.10க்கு மது ஆர்யாவிடம் கோபமாக, என்ன ஆர்யா, ஃபோன் பண்ணேன் ஃபோனை எடுக்கவே இல்ல? மணி நாலு ஆகி பத்து நிமிஷம் ஆச்சு. காலேஜ் முடிஞ்சி இரண்டு மணிநேரம் ஆச்சு... இனி நான் ஹரினியோட வீட்டுக்குப் போய் என்னோட அஸென்மென்ட் பண்ணிட்டு பேசிட்டுக் கிளம்ப மணி ஏழு ஆகிடும். ஆறு மணிக்கு வீட்டுக்குப் போனாகூட அம்மா கேள்வியே கேட்க மாட்டாங்க. ஏழு மணிக்கு மேல வீட்டுக்குப் போனா கால்லை உடைச்சி பார்சல் கட்டிக் கையிலக் கொடுத்திடுவாங்க என்னோட அம்மா. எவ்வளவு நேரம் இந்த பார்க்கிங் இடத்துல உனக்காக வெயிட் பண்ணேன் தெரியுமா? நான் E2 பேப்பருக்கு படிக்கணும், மேக்ஸ் பேப்பருக்கு படிக்கணும், காலையில பத்து மணிக்கு போன... 4 மணிக்கு வந்திருக்க ஆர்யா. என்று சண்டையிட்டாள்.

சாரி மது.

அந்த ஒரு சாரியில் மதுவின் கோபம் போயே போயிந்தி.

தலையில என்ன?- மது.

ப்ளாஸ்டிக் கவர்ப்பா. திடீர்ன்னு லேசா வானம் தூர ஆரம்பிச்சிடுச்சு. ஒரு டீக்கடையில் ப்ளாஸ்டிக் கவர் வாங்கி தலையில போட்டுக்கிட்டு வந்தேன். இந்தக் கவர் வேணுமா? கேட்டாக் கொடுத்துடப்போறேன், அதுக்குப்போய் கோபப்பட்டுக்கிட்டு... இந்தா கவரை வச்சிக்கோ. என்று சிரித்துக்கொண்டே அவளின் கைகளில் கவரைத் திணித்தான் ஆர்யா.

எனக்கு எதுக்கு அந்தக் கவர்? நீயே வச்சிக்கோ... எதுக்கு வண்டிய வாங்கின? அந்த காரணத்தைச் சொல்லு முதல்ல. அப்படி என்ன எமர்ஜென்சி? என்று தனது E2 பேப்பரை மறந்து நிறுத்தியிருந்த தனது வண்டியின் சீட்டில் நன்றாக உட்கார்ந்தபடியே கேட்டாள் மது.

இன்னிக்கு என்னோட அப்பாவோட பர்த்டே மது. என்னோட அம்மாவை கோயிலுக்கு கூட்டிட்டுப் போறேன்னு நைட் ப்ராமிஸ் பண்ணேன். மறந்தே போச்சு. நைட் அப்பாவும் அம்மாவும் வெளியே எங்கயாவது ஷாப்பிங் போவாங்க... அதான் கோயில் நடை சாத்துறதுக்குள்ள பகல்லயே அம்மாவை அழைச்சிட்டுப் போணும்னு முடிவு பண்ணி கூட்டிட்டுப் போயிட்டு வந்தேன்.

அட... கோயிலுக்கு எல்லாம் சார் போவீங்களா?

போவேன். ஆனா கடவுள் நம்பிக்கை கிடையாது மது.

இது ஒரு ஃபேஷன் ஆகிப்போச்சுல? கடவுள் இல்லைன்னு சொன்னாதான் எல்லோரும் நம்மைத் திரும்பிப் பார்ப்பாங்கல? கமல் கடவுள் இல்லைன்னு சொல்ல ஆரம்பிச்சப்பிறகுதான் அவரை சினிமா இன்டஸ்டிரியில எல்லோரும் திரும்பிப் பார்த்தாங்க. அவர் கடவுள் இல்லைன்னு சொன்னபிறகு தான் எதிர்த்த வீடு பக்கத்து வீடு ஆளுங்க எல்லாம் கடவுள் இல்லைன்னு சொல்ல ஆரம்பிச்சாங்களாம். என்னோட அம்மா சொல்லிருக்காங்க. பெரியார், அண்ணா கடவுள் இல்லைன்னு சொன்னப்ப அரசியல்வாதிகள் மேதைகள் மட்டும் தான் அந்தக் கருத்தோட ஒத்துப்போனாங்களாம். ஆனா கமல் சொல்ல ஆரம்பிச்சப் பிறகுதான் எதிர்த்தவீட்டு மாமாகூட There is no God you know... என்று தத்துவம் பேச ஆரம்பிச்சாராம் ஆர்யா.

மது, எனக்கு கமல் பற்றித் தெரியவே தெரியாது.

நிஜமா?

நிஜமாப்பா. நான் குணா படம்கூட இன்னும் பார்த்ததில்லை. நாயகன் படம்கூட பாதிதான் பார்த்தேன். மைக்கேல் மதன காம ராஜன்னு ஒரு படத்துல பின்னி பெடல் எடுத்திருப்பாருன்னு என்னோட பாட்டி சொல்லும்... ஆனா நான் பார்த்ததில்லை... அதனால எனக்கு...

ஹா... ஹா... உனக்கு கமல் பத்தி தெரியலைன்னு சொன்னதை ஒத்துக்குறேன். ஆனா உன்னோட பாட்டி வயசுக்கு கமல்ஜியைக் கம்பேர் பண்றது ரொம்ப ரொம்ப ஓவர். அதனால குணா படம் பார்க்காத உன்னை தமிழ்நாட்டுல இருந்து நாடுகடத்திடலாம்ப்பா...

ஹா... ஹா...

நாயகன் படம் பார்க்கலைன்னு சொன்னதால உன்னை இந்தியாவை விட்டுத் துரத்தலாம்ப்பா...

ஹா... ஹா...

மைக்கேல் மதன காம ராஜன் படம் பார்க்கலைன்னு சொன்னதால உன்னை உலகத்தைவிட்டே துரத்தலாம்ப்பா...

ஹா... ஹா... என்று சிரித்த ஆர்யா அவளிடம் மீண்டும் தனது கையில் இருந்த ப்ளாஸ்டிக் கவரைக் கொடுத்து, நான் இந்த உலகத்தைவிட்டுப் போறது இருக்கட்டும் இந்த கவரை உன்னோட பேக்ல வச்சிக்கோ. உன்னோட அம்மா உன் கால்லை உடைச்சி உன் கையில கொடுக்கிறப்போ இந்தக் கவர் உபயோகமா இருக்கும் மது.

அச்சோ மணி ஐஞ்சு இருபது.

யெப். என்று தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே சொன்னான் ஆர்யா.

மேக்ஸ் படிக்கணும்...

யெப். என்று சிரித்துக்கொண்டே சொன்னான் ஆர்யா.

அஸைன்மென்ட் பண்ணணும்...

யெப். அப்படித்தான் சொன்ன மது.

வீட்டுக்குப் போனதும் அம்மா கால்லை உடைச்சிடுவாங்க.

யெப். கரெக்ட். நீ எதையும் மறக்கல. சரியா ஞாபகம் வச்சிருக்க மது.

உன்கூட அரட்டையடிச்சதாலதான் இது எல்லாம் நடக்கப்போகுது. நேரம் போனதே தெரியல.

யெப். என்று சொன்ன ஆர்யா படபடவென சிரித்தான். மது அவனது சிரிப்பை அசட்டை செய்துவிட்டு தள்ளு... தள்ளு. என்றபடி தனது வண்டியை அவனைத்தாண்டி கிளப்பிக்கொண்டுச் சென்றாள்.

ஆனால் போகும் வழியாவும் அவளைக் கடந்து சென்ற பேருந்துகளின் ஹார்ன் ஒலியுடன் ஆர்யாவின் யெப் சத்தம் இதமாய் அவளது காதுகளில் கேட்டுக்கொண்டே இருந்தது.

லவ் குரு மதுவின் தடுமாற்றத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். அவளது காதுகளில் கேட்ட யெப் சத்தம் அவருக்கும் கேட்டது. சதுரங்க ஆட்டதை முழுவீச்சில் தொடர ஆயத்தமானார்.



தான் தேர்ந்தெடுத்தக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து வலுவாக இழுத்து ஒரே பாய்ச்சலில் அதில் ஏறி அமர்ந்தார் மிஸ்டர் லவ் குரு.

பாய்ச்சலுக்கான நேரம் நெருங்கிவிட்டது...



* * *
 
Top Bottom