Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Kaadhalin Litmus paritchai - Story

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
13

இது மதுவின் கல்லூரிக்காலத்தின் இரண்டாம் வருட இறுதி நேரம். முதல் வருடம் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்ட விருந்தாளி போல கண்மூடித்திறப்பதற்குள் வேகமாகச் சென்று விட்டாலும் இரண்டாம் வருடம் சொல்லிக்கொண்டே வரும் ராகு-கேது திசை போலத்தான் வந்து நின்றது. பாடங்கள் கடினமாக இருந்தன. வகுப்பறையில் ஆசிரியர்கள் மாணவர்களின் மதிப்பெண்களைப் பார்த்து அலறினார்கள். மாணவர்கள் காதல், கசமுசா, பப், கப்போச்சினோ, பீச், சினிமா என அனைத்து பூலோக ரம்பைகளுக்கு மத்தியிலும் படிக்கவும் செய்தார்கள்.

மது எப்போதும்போல பல நேரங்களில் ஆர்யாவை ஸைட் அடித்தாலும் அதை சிதம்பர ரகசியமாய் வைத்திருந்தாள். வருடத்தின் கடைசி பரீட்சை முடிவுகள் வந்துகொண்டிருந்தன. இன்டர்னல்ஸ் (மாதாந்திரத் தேர்வு) மதிப்பெண்கள் ஒவ்வொரு பாடமாக வந்து கொண்டிருந்த நேரம் அது.

மது பாத்ரூம் வர்ற மாதிரி இருக்கு.- வகுப்பறையில் மதுவின் கல்லூரித் தோழி ஜென்சி.

இப்பதான அப்ளைய்ட் ஃபிசிக்ஸ் ஹவர்ல ரெண்டு பேரும் போயிட்டு வந்தோம்.- மது.

அது அப்ளைய்ட் ஃபிசிக்ஸ் பேப்பர் கொடுத்தப்ப போனோம். இப்ப M1 மேக்ஸ் பேப்பர் கொடுக்கப் போறாங்களே? அதான் இப்ப திரும்ப வந்திடுச்சு.

ஜென்சி...

ப்ளீஸ்ப்பா.

சரி வா. ப்ரொபர்சர் வருவதற்கு முன்னே போயிடுவோம்.

மெல்ல வகுப்பறையிலிருந்து நழுவி இருவரும் கழிப்பறைக்குச் சென்றால் அங்கே நீண்ட வரிசை இருந்தது.

ஏய்... ஐஞ்சு நிமிஷம் ஆகும் போலயே? நீளமான க்யூ நிற்குதே...- மது.

பரவாயில்லப்பா எல்லோரும் நம்மள மாதிரிதான் போல, பேப்பர் கொடுக்கிறாங்கன்னதும் எல்லோருக்கும் பாத்ரூம் வந்திடுச்சு பாரேன். எல்லா டிபார்ட்மென்ட் பசங்களும் பேபருக்கு பயந்து இங்கதான் இருக்காங்க. இங்க ஐஞ்சு நிமிஷம் கடத்துவோம். கிளாஸ் ரூமுக்குள்ளப் போனா நெஞ்சு வலி வர்ற மாதிரியிருக்கு. என்னோட ஸ்கூல்ல நான்தான் எல்லாத்துலயும் ஃபர்ஸ்ட்டா இருப்பேன் தெரியுமா? ஆனா இந்த அண்ணாயுனிவர்சிட்டிக்குள்ள வந்ததில் இருந்து அறுபது மார்க் தாண்டினாலே பெரிய விஷயமாகிடுது. வா அந்தக் காரிடர் பக்கமா நிற்கலாம். என்று கூறியபடி ஜென்சி மதுவை அந்த நீள நெடிய வராந்தா பக்கமாக இழுத்துக்கொண்டு சென்றாள். வராந்தாவின் சுவரில் சாய்ந்தபடியே இருவரும் இயற்கை பொங்கி வழியும் கல்லூரியின் மாபெரும் திடலை வேடிக்கைப் பார்த்தனர்.

மது?? என்று ஆர்யாவின் குரலைக் கேட்டதும் மதுவிற்கு தூக்கிவாரிப்போட்டது.

ஹாய்... - மது ஆர்யாவிடம்.

என்ன இந்த நேரத்துல இங்க?

ரெஸ்ட்ரூம்...

ஓ... என்று மதுவிடம் சொன்னவன் ஜென்சியிடம் ஐ ஆம் ஆர்யா. என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

இரண்டு நிமிடங்கள் பொதுவாகப் பேசிவிட்டு ஓகே.. பை தென். என்று விலகப்போனவன் மறந்து போன ஏதோ ஒரு விஷயம் திடீரென்று ஞாபகம் வந்தது போல திரும்பவும் மதுவிடம் வந்து, அந்த ஆத்தர் புக் கிடைக்கல மது. கிடைச்சா டெக்ஸ்ட் பண்றேன். என்றான்.

இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு ஆர்யா விலகியதும் ஜென்சி மதுவிடம்,

யாருப்பா இந்த டாம் குரூஸ்? என்று கேட்டாள்.

ஸ்கூல்ல இருந்து தெரியும். ஃப்ரண்ட்ஸ்.

ஃப்ரண்ட்ஸ்?

யெஸ். என்று கண்களை உருட்டிய மதுவிடம் ஜென்சி சொன்னாள், நீ தப்பா எடுத்துக்கலைன்னா உன்கிட்ட ஒண்ணு சொல்லவா?

சொல்லு.

ஃபேஸ்புக் ஓனர் மார்க் ஸுக்கர்பெர்க்கும் அவரோட லவ்வரும் ரெஸ்ட்ரூம் வாசல்லதான் சந்திச்சாங்களாம்.

ஹா... ஹா...

நான் காமெடி பண்ணலப்பா. இதே மாதிரி ஒரு நீளமான வரிசையில தான் மீட் பண்ணாங்களாம்ப்பா. ஐ ஆம் நாட் ஜோக்கிங்.

இதுதான் 2020யோட சிறந்த ஹாஸியமான மேட்டர் பா. இப்ப நீயும் தான என்கூட ரெஸ்ட் ரூம் வாசல்ல இருக்க? அப்படின்னா நீயும் தான ஆர்யாவின் காதலி லிஸ்ட்டுல வரணும்? எதுக்கு என்னை மட்டும் சம்பந்தப்படுத்திப் பேசுற? என்று மது ஜென்சியிடம் சிரித்துக்கொண்டே சொன்னாலும் அந்த ஹாஸியமான மேட்டரைத்தான் மதுவின் இளமை மனம் ரசித்தது.

தோழி கொடுத்த உதாரணம் அவளது வாலிப மனதை ஊஞ்சலில் வைத்து ஆட்டிவிட்டது. மதுவின் மனதும் ஊஞ்சலின் அசைவை நொடிக்கு நொடி ரசித்தது.

நண்பர்கள் இப்படி ஏத்திவிடவில்லை என்றால் காதலிப்பவர்களின் ஜனத்தொகை கூடியிருக்க வாய்ப்பே இல்லை. தானாகக் காதலிக்கும் கூட்டத்தைவிட, நீ அவனை லவ் பண்றல? எனக்குத் தெரியும்ப்பா. என்று நண்பர்கள் ஏத்திவிட்டுக் காதலிக்கும் கூட்டமே அதிகம்.

அதன்பிறகு வரிசையில் நின்ற இருவரும் வந்தவேலையை முடித்துக்கொண்டு அடித்துப் பிடித்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தனர்.

பேயைப் பார்த்ததுபோல வகுப்பறைக்குள் இருந்த ஆசிரியரைப் பார்த்து உறைந்து நின்றாள் நம் மது. சரித்திரம் திரும்புது, சரித்திரம் திரும்புது என்று சொல்வது இதுதானோ?

லவ் குரு நிழலாய் மதுவையும் ஆர்யாவையும் தொடர்ந்துகொண்டே இருந்தார். சதுரங்கக் குதிரையின் மேல் அமர்ந்திருந்தவர் மதுவையும் ஆர்யாவையும் வேவு பார்த்தபடியேதான் இருந்தார்.



மிஸ்டர் விதியின் கட்டளைப்படி மது-ஆர்யாவுடன் விளையாடும் சதுரங்க ஆட்டத்தில் மிஸ்டர் லவ் குருவின் குதிரை சீறிப் பாய்ந்து செக்மேட். என்று சொல்லி மது-ஆர்யாவின் சதுரங்க ராஜாவின் முன்னே நின்றது.

* * *



அறுபது மாணவர்கள் கூடியிருந்த மதுவின் வகுப்பறையில் நடு நாயகமாக நின்றுகொண்டு குட் மார்னிங் என தனது அறிவாளித்தனமான குரலில் சொன்னார் மதுவின் தந்தை அர்ஜுன்.

ஏன்ப்பா, அர்ஜுன் சார் இப்ப இங்க என்ன பண்றார்? அவர் திர்ட் இயருக்குதான அப்ளைடு ஃபிசிக்ஸ் எடுக்கிறார்? நம்ம ப்ரொபர்சர் பாலகுருசாமி ஏன் இன்னிக்கு வரல? என்று அறை முழுதும் நிரம்பி வழிந்த மாணவர்களின் கேள்விக்கு பேராசிரியர் அர்ஜுன்னே பதில் தந்தார்.

மிஸ்டர் பாலகுருசாமி டெல்லிக்கு ஒரு செமினாருக்குப் போயிருக்கார். அவர் இடத்தைதான் நான் ஃபில் பண்ணிருக்கேன். ஐ ஹோப் யு வில் என்ஜாய் மை பிரசன்ஸ். என்று கையில் மாணவர்களின் மதிப்பெண்கள் குவிந்துக்கிடந்த விடைத்தாள்களை அசைத்தபடியே மதுவைப் பார்த்தபடி அவர் சிரித்துக்கொண்டே சொல்ல மது அரண்டுபோய் உட்கார்ந்திருந்தாள்.

அடுத்த பத்துநிமிடத்தில் மது என்று அழைத்து 55 என்று மதுவின் மதிப்பெண்களைச் சொல்லி பேராசிரியர் அர்ஜுன் அழைத்தபோது இருவரின் இதயமும் இமயமலைக்குப் போய்விட்டு வந்திருந்தது.

லவ் குரு நிழலாய் மதுவையும் ஆர்யாவையும் தொடர்ந்துகொண்டே இருந்தார். சதுரங்கக் குதிரையின் மேல் அமர்ந்திருந்தவர் மதுவையும் ஆர்யாவையும் வேவு பார்த்தபடியேதான் இருந்தார்.



செக்மேட். என்று சொல்லி இன்னும் சத்தமாக நகைத்தார் மிஸ்டர் லவ் குரு.



* * *

தனது ஸ்கூட்டியில் ஜான்வியை அழைத்துக்கொண்டு மது ஜான்வியின் டியூஷன் சென்டருக்குச் சென்றாள்.

என்ன மது காலேஜ்ல எதுவும் பிரச்சனையா?

இல்லயே...

ஏய் சும்மா சொல்லு. நான் ஒண்ணும் அம்மாகிட்ட வத்தி வைக்க மாட்டேன். உன் முகமே சரயில்ல.

உடன்பிறந்தவர்களை பல நேரங்களில் நம்பவேகூடாது. உடன்பிறந்தவர்களிடம் கர்ணன்னாய் பல நேரங்களில் இருந்தாலும் எட்டப்பனாய் எப்போது வேண்டும் என்றாலும் மாறுவார்கள்.

பெற்றோர்களிடம் எந்த விஷயத்தைச் சொல்லக்கூடாது என்று சொல்லி வைக்கிறோமோ, அந்த விஷயத்தை பெற்றோர்களிடம் வார்த்தை மாறாமல் முடிந்தால் கூடுதலாக இரண்டு வார்த்தைகள் சேர்த்து ஒப்பித்து விடுவார்கள்.

இந்த உண்மையை பல முறை அனுபவத்தால் அறிந்ததால் சுதாரித்த மது, அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. என்று பேச்சை முடித்துக் கொண்டாள்.

ஜான்வியை டியூஷன் சென்டரில் விட்டுவிட்டு மது தனது ஸ்கூட்டியை கிளப்பியபோது அவளது கைபேசி அழைத்தது.

தந்தையின் பெயரை திரையில் பார்த்ததும் திகைத்தாள் மது. மதிப்பெண்களை தந்தையின் கையால் வாங்கியப் பின்னே கல்லூரி முடிந்தவுடன் அவசரம் அவசரமாக வீட்டிற்கு கிளம்பிய மது இந்நிமிடம் வரை தந்தையைச் சந்திக்காமல் தவிர்த்தபடியே இருந்தாள். இப்போது கைபேசியில் அவர் எதற்காக அழைக்கிறார் என்பதை யூகித்து தைரியத்தை வரவழைத்தபடி கைபேசியின் அழைப்பை ஏற்றாள் மது.

அப்பா, சொல்லுங்க.- மது.

எங்க மது இருக்க?

பெசன்ட் நகர். ஜான்வியின் டியூஷன் சென்டர்லப்பா. ஜான்வியை விட வந்தேன்.

ஓ... சரி சும்மாதான் கேட்டேன். பாத்து கவனமா வண்டியோட்டு.

சரிப்பா.

ம். வச்சிடுறேன்.

சரிப்பா.

ஒண்ணுமே சொல்லலையே... ஒரு வார்த்தைகூடக் கேட்கலையே? என்று மதுவின் மனம் நினைத்தபோதும் அமைதியாக வண்டியைக் கிளப்பிக்கொண்டு வீட்டிற்கு வந்தாள். வீட்டில் வரவேற்பறையில் இருந்த குஷன் சோபாவில் அவளது தந்தை அமர்ந்தபடி ஃபுட்பால் மேட்ச் பார்த்துகொண்டிருந்ததைப் பார்த்தாள். அப்போது மதுவின் மனசாட்சி ஃபுட்பால் போல உள்ளுக்குள் அவளிடமே உதையும் மிதியும் வாங்கிக்கொண்டிருந்தது.

மது நேரே அப்பாவின் எதிரே சென்று நின்றாள். வீட்டில் அன்னையில்லாதது கொஞ்சம் தைரியத்தை வரவழைத்தது.

அப்பா...

என்ன மது?

இந்த தடவை மார்க் கொஞ்சம் கம்மியாகிடுச்சு.

ஸோ வாட்? அடுத்த தடவை நல்ல மார்க் வாங்கிடு. இட் ஹாப்பன்ஸ் மது. அடுத்து கவனமா இருந்திட்டாப் போச்சு... அவ்வளவுதான்.

இரண்டு திட்டு திட்டியிருந்தால்கூட மனது சமாதானம் அடைந்திருக்கும். ஆனால் தந்தை தட்டிக்கொடுத்துப் பேசியதும் உள்ளுக்குள் மனம் அழத்தொடங்கியது. மனதையும் முகத்தையும் தந்தையிடம் மறைத்தபடியே அடுக்களைக்குச் சென்று தண்ணீரை மொண்டிக் குடித்தாள் மது.

சிலருக்கு தான் அழுவதை வெளியே காட்டிக்கொள்ளப் பிடிக்கவே பிடிக்காது. சிலருக்கு தான் அழுவதைப் பார்த்து ஆயிரம் பேர் துக்கம் விசாரிக்க வேண்டும். மது இதில் முதல் ரகம்.

தனது அறைக்குள் நுழையும் முன் தந்தையைக் கடக்கையில் மீண்டும் மனதின், முகத்தின் வாட்டத்தை அவருக்குத் தெரியப்படுத்தாமல் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள் மது.

கட்டிலில் படுத்தவள் போர்வையை தலைவரை இழுத்து மூடிக்கொண்டாள். அன்னை வித்யா வந்தபோதும் தூங்குவது போலவே பாசாங்கு செய்துகொண்டு அறைக்குள் முடங்கிக்கொண்டாள்.

ஜான்விக்கும் மதுவிற்கும் ஒரே அறைதான் படிப்பதற்கும் படுப்பதற்கும். இருவரும் ஒரே அறையைத் தான் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். ஜான்வி அவர்களின் அறைக்குள் நுழைந்துபோது அன்னை வித்யா அவளை ஜானு என்று அழைத்து,

மது சாப்பிட்டாளான்னு கேளு. என்று சொன்னார்.

கேட்குறேன்மா. என்று அடுக்களையில் இருக்கும் அன்னைக்கு பதில் தந்துவிட்டு மதுவை எழுப்பினாள் ஜான்வி.

ஏய்... மது... அம்மா சாப்பிட்டியான்னு கேட்கிறாங்க.- ஜான்வி மதுவிடம்.

ஏய்...- மீண்டும் ஜான்வி மதுவிடம்.

அம்மா மது தூங்கிட்டா. எழுந்திரிக்கல.- ஜான்வி அன்னையிடம்.

சரி... நீ வா சாப்பிட. என்று அன்னை வித்யா ஜான்வியை அழைத்ததும்,

இதோ வந்திட்டேன். என்ற ஜானு வேகமாக உடைமாற்றி சாப்பாட்டு மேஜைக்கு விரைந்தாள். மெதுவாக இரவு உணவை முடித்துவிட்டு தனது பால் டம்பளருடன் அறைக்குள் நுழைந்தாள். மதுவின் அருகேயே கட்டிலில் அமர்ந்தபடி சிறிது நேரம் கணிதம் பயின்றாள். சிறிது நேரம் தமிழ் பாடங்களை எழுதிப்பார்த்தாள். ஒரு மணி நேரத்திற்கு மேல் பறந்துவிட்டது. மணியைப் பார்த்தாள். மணி இரவு ஒன்று நாற்பது என்றுக் காட்டியது. அடுக்களைக்குச் சென்று பால்லை சூடு பண்ணினாள். அறைக்கு வந்ததும் தனது போர்வையை எடுத்து போர்த்தியபடியே மதுவின் அருகே படுத்த ஜான்வி மெல்லிய குரலில் சொன்னாள்,

மது எல்லோரும் தூங்கிட்டாங்க, இப்ப எழுந்து பாலை மட்டும் குடிக்கிறியா?

மதுவிடம் அசைவேயில்லை.

ஏய்... நீ முழிச்சிட்டுதான் இருக்கன்னு தெரியும். எழுந்திரிப்பா.

மது மெல்ல தனது போர்வையை விலக்கினாள். கண்கள் ஊட்டியின் சிவப்பு ரோஜா நிறத்தில் சிவந்து இருந்தன.

என்னப்பா இப்படி அழுதிருக்க?- ஜான்வி.

இந்த செம்ல...

இந்த செம்ல??

மார்க் ரொம்ப கம்மி ஜானு.

ஃபெயில் ஆகிட்டியா?

இல்ல இல்ல ஆனா 55 தான் வாங்கிருக்கேன். அண்ணா யுனிவர்சிட்டியில அது கிட்டத்தட்ட ஃபெயில் மார்க்தான்.

ஆமா... அந்த காலேஜ்ல இது ஃபெயில் மார்க் போலத்தான். சரி, இப்ப என்ன ஆச்சு?அடுத்த முறை நல்ல மார்க் வாங்கு.

என்னோட மார்க்கை டிஸ்டிரிபியூட் பண்ணதே அப்பாதான் ஜானு.

ஷிட்... ஓ மை காட். அப்பாவா?

ஆமா...

ரொம்ப எம்பாரஸிங்கா இருந்திச்சா?

ம்... ரொம்ப ரொம்ப.

அப்பா திட்டிட்டாரா? அதான் ஹர்ட் ஆகிடுச்சா?

இல்ல. திட்டல. என்னை அவர் திட்டவேயில்ல அதான் ஹர்ட் ஆகிடுச்சு ஜானு. என்று கூறிய மது ஜான்வியைக் கட்டிக்கொண்டு சத்தமாக அழுதாள்.

ஏய் மது... என்னப்பா இது? நான் உன்னை கிரேட் வாரியர்ன்னு நினைச்சிட்டு இருந்தேன். நீ என்னடான்னா சின்ன விஷயத்துக்கு அழுகுற?

சின்ன விஷயமா இது? அப்பா கையால 55 மார்க் வாங்குனது சின்ன விஷயமா?

சரி... பெரிய விஷயம் தான். அதுக்கு என்னப் பண்ணப்போற?

ஆர்யாவை ப்ளாக் பண்ணப்போறேன்.

வாட்???

ஆமா ஜானு... ஹி இஸ் டிஸ்டர்பிங் மீ... என்னால படிக்கிறதுல முழுசா கவனம் செலுத்த முடியாததுக்கு ஆர்யாதான் காரணம். அவனோட சார்ம், கரிஸ்மா, பேச்சு எல்லாமே ரொம்ப டெம்ட் பண்ணுது ஜானு. உனக்குப் புரியாது. அவன் பக்கத்துல வந்து நின்னாவே வேற உலகத்துக்குள்ள நான் இருக்கிற மாதிரி இருக்கு. அவன் என்னை மட்டும் அறிவாளின்னு சொல்லணும், என்கூட மட்டும் பேசணும், அவனோட...

அவனோட??

அவனோட கையைப் பிடிச்சி கிஸ் பண்ணணும்னுகூடத் தோணுதுப்பா... நான் ரொம்ப கெட்டப் பொண்ணு ஆகிட்டேன்ல?

...

சொல்லு ஜானு... நான் ரொம்பக் கெட்டப் பொண்ணு ஆகிட்டேன்ல?? அதனாலதான இது மாதிரித் தோணுது எனக்கு?

நீ கெட்டப் பொண்ணு ஆகலப்பா... 2019, 2020ஆக மாறிடுச்சு. அதனாலதான் உனக்கு இப்படியெல்லாம் தோணுதுப்பா. அதனால இது உன்னோட மிஸ்டேக் இல்லப்பா. இந்த பூமியோட சுழற்சியோட மிஸ்டேக்.

ஜானு...

ஆமாப்பா... 2019, 2020 ஆனதால நீ பதினெட்டு வயசுல இருந்து 19 வயதுக்கு வந்திட்ட... அந்த வயசுக்கு ஏத்தமாதிரி உன்னோட ஹார்மோன்ஸ் சேட்டை செய்யிது. அவ்வளவு தான். நீ கெட்டப் பொண்ணு இல்லப்பா... என்று ஜானு சொன்னதுதான் தாமதம் மது வேகமாக எழுந்து ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்தாள்.

இப்பவே எதுக்கு ஃபோனை ஆஃப் பண்ற?

எனக்கு இந்த ஹார்மோன்ஸ் பண்ணும் சேட்டை பிடிக்கலப்பா ஜானு. If not now then when jaanu? இப்பதான் தப்பு செஞ்சுட்டோமோன்னு லேசா மனசு ஒத்துக்க ஆரம்பிச்சிருக்கு. அதான் இப்பவே ஃபோனை ஆஃப் பண்ணேன். நாளையில் இருந்து நாலு நாள் காலேஜ் லீவ் ஜானு. பொங்கல் ஹாலிடேஸ் ஆரம்பிக்குது. நாளைக்கு சன்டே ஆர்யா கண்டிப்பா கூப்பிடுவான். அதான் ஆஃப் பண்ணிட்டேன். இனி இந்த நம்பரை ஆன் பண்ணவே மாட்டேன். என்னோட ஃபோன்ல ஜியோ சிம்மை ஆக்டிவேட் பண்ணிடு மது.

ஜானு அமைதியாக மதுவின் முகத்தையே பார்த்தபடி இருக்கவும், ப்ளீஸ்... சீக்கிரம்ப்பா ஜானு. என்றாள் அழுது சோர்ந்த விழிகளுடன் மது.

இரவு ஒருவழியாகக் கழிந்து மறுநாள் தொடங்கியது. அந்த ஞாயிற்றுக்கிழமை நல்ல படியாகத்தான் தொடங்கியது. ஆனால் முடிந்த போது மோசமான ஞாயிறாக முடிந்தது.

மதுவின் வாழ்வில் அதுதான் மிக மிக மோசமான ஞாயிறு.

* * *

அந்த மோசமான ஞாயிறன்று...
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
அந்த மோசமான ஞாயிறன்று...

மது உன்னோட ஜியோ நம்பர் அடிச்சிட்டே இருக்குப்பா. நீ குளிச்சிட்டு வர்றதுக்குள்ள பத்து மிஸ்ட் கால். யாரு? யாரோட நம்பர் இது? ஆர்யாவா?

கைபேசியின் தவறவிட்ட அழைப்புகள் காட்டிய எண்ணைப் பார்த்தாள் மது. பார்த்து முடித்ததும் மேலும் கீழும் தலையை ஆட்டினாள்.

சைலன்ட்ல போடு. அப்புறம் பார்த்துக்கலாம். என்றாள் ஜான்வி.

சரி. என்ற மது கைபேசியை ஸைலன்டில் போட்டுவிட்டு தனது மென்பொருள் பாடப்புத்தகங்களை எடுத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.

ஆமா... ஜியோ நம்பர் எப்படி ஆர்யாவுக்குத் தெரியும்?- ஜான்வி.

ஜானு... எனக்கு ஏற்கனவே தலைவலிக்குது. இப்ப அந்த ஆராய்ச்சியும் பண்ணி இன்னும் தலைவலியைக் கூட்டப் பிடிக்கல. இப்ப இந்த நம்பர் ஆர்யாவுக்கு தெரிஞ்சா என்ன? தெரியலைன்னா என்ன? நான் ஃபோனை எடுக்கப்போறது இல்ல. அதனால நாம படிக்கிற வேலையைப் பார்ப்போமா?

அதான... ஆர்யாவுக்கு இந்த நம்பர் தெரிஞ்சதால என்ன ஆகப்போகுது? நீ தான் பேசப்போறதே இல்லையே? பின்ன எதுக்கு கவலைப்படணும். அப்படித்தான சொல்ற?? இனி ஆர்யாகூட பேச மாட்டில?

ஜானு... ப்ளீஸ். லீவ் மி அலோன்.

சரிப்பா, சரி. நானும் படிக்க தான் போறேன். என்று ஜான்வி சொன்னபோது ஸைலென்ட்டில் இருந்த மதுவின் கைபேசி யாரோ அழைக்கிறார்கள் என்று கூறி மின்னி மின்னி அணைந்தது. அது ஸைலென்ட் மோட்டில் இருப்பதால் கைபேசியில் இருந்து ஒலி வரவில்லை ஒளிதான் வந்தது. மது தனது தோளைக் குலுக்கியவாறு தனது வேலைக்குள் மூழ்கிவிட்டாள்.

அரை மணி நேரம் கடந்தபிறகு அவர்களது கவனத்தில் இருந்த அந்தக் கைபேசியை அவர்களது பாடங்கள் மறக்கடித்தன. ஒரு மென்பொருள் ப்ரோகிராமை எழுதிக் கொண்டிருந்த மதுவின் கவனத்தை தந்தையின் மது. என்னும் குரல் கலைத்தது.

மது... என்று அழைத்தவாரே அர்ஜுன் அவர்களின் அறைக்குள் நுழைந்தார். ஜான்வி அவளது ப்ளஸ் டூ பாடத்தில் மூழ்கி இருந்தாள். தந்தை மதுவை அழைத்ததைக்கூட கவனிக்காமல் தனது பாடத்தை தன்னிடமே ஒப்புவித்துக்கொண்டிருந்தாள்.

மது...- அர்ஜுன்.

என்னப்பா? என்று கேட்டவாரே தனது வெள்ளை நிற திவான் மெத்தையில் இருந்து எழ, அர்ஜுன் அவளருகே வந்து நின்றார்.

எனக்கு உன்னோட சார்ஜர் வேணும் மது.

இதோ தர்றேன்ப்பா. என்று தந்தையிடம் பதில் தந்தவள் உடனே அந்த சார்ஜரைத் தேட ஆரம்பித்தாள். இங்க தான் வச்சிருந்தேன். ஜானு, சார்ஜர் பார்த்த? என்று ஜானுவிடம் கேட்டபோது, அங்கதான் இருக்கும் மது, நல்லா பாரு. என்று பதில் தந்துவிட்டு தனது பாடப்புத்தகத்தில் கவனத்தை ஒருமுகப்படுத்தினாள்.

எங்க போச்சுன்னு தெரியலையே டாடி... என்று கூறியபடியே மது அப்பாவிடம் திரும்ப... அவர் கைகளில் இருந்தது அவளது ஜியோ எண் ஆக்டிவேட் செய்யப்பட்ட அவளது கைபேசி. அர்ஜுனின் கையில் இருந்த போதுகூட கைபேசியில் வெளிச்சம் வந்தது. 8889097890 அழைக்கிறது என்று சொன்னது கைபேசி திரையின் வெளிச்சம். கைபேசி சில நொடிகள் மின்னி மின்னி அணைந்தது.

மதுவின் இதயம் -30 டிகிரி செல்சியஸில் உறைந்துபோன ஐஸ்கட்டியாய் மாறியது.

செக்மேட் என்று இன்னும் சத்தமாகச் சொன்ன மிஸ்டர் லவ் குருவின் முன்னே மது-ஆர்யாவின் சதுரங்க ராஜாவின் தலை உருண்டு விழுந்தது.



* * *

மது... இருபது மிஸ்ட் கால்ஸ் இருக்கே? இருபதும் ஒரே நம்பர்ல இருந்து வந்திருக்கு...- மதுவின் தந்தை அர்ஜுன்.

...

பாய் ஃப்ரண்டா மது?- அர்ஜுன்.

இல்ல டாடி. அப்படியெல்லாம் யாரும் எனக்கு இல்ல டாடி. அந்தப் பையன் வெறும் ஃப்ரண்ட் மட்டும் தான் டாடி.

எதுக்கு ஃபோனை ஸைலன்ட்ல போட்டிருக்க?

அந்தப் பையன் கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணுவான்னு...

Then switch off the damm phone or block his number

I blocked him daddy

I cant believe you are doing this madhu.. I cant believe this...

I blocked his number daddy... really..

ஆனால் மதுவின் சமாதானங்களை அதற்குமேல் கேட்காமல் மதுவின் தந்தை அர்ஜுன் அறைக்கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறினார்.

யார்கிட்டலாம் ஜியோ நம்பரைக் கொடுத்துத் தொலைச்ச? என்று நடந்து முடிந்த பூகம்பத்தை நேரில் கண்ட ஜான்வி மதுவிடம் கேட்டாள்.

யார்கிட்டயும் கொடுத்ததே இல்ல ஜானு. ஆர்யா கைக்கு இந்த நம்பர் எப்படிப் போச்சுன்னே தெரியலப்பா... என்று மது சொல்லிக் கொண்டிருந்தபோதே, மது என்று அழைத்தவாறே ஹரினி அவளது அறைக்குள் வந்து நின்றாள்.

ஹரினியின் குரலைக் கேட்டதும் கீழே விழுந்த ஏதா ஒரு பொருளை எடுப்பதுபோல குனிந்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள் மது. நிமிர்ந்த மதுவின் முகத்தைப் பார்த்த ஹரினி,

என்ன? பேயைப்பார்த்த மாதிரி பார்க்குற? எத்தனை தடவை காலிங் பெல் அடிக்கிறது? உன்னோட அப்பாவும் இப்படித்தான் என்னைப் பார்த்தாரு... நீயும் அதே மாதிரிதான் பார்க்குற... ஃபாதர்ஸ் டாட்டர்ன்னு சொல்றது சரிதான் போல. என்று நடந்து கொண்டிருக்கும் களேபரங்கள் தெரியாமல் நான்ஸ்டாப்பாக பேசி முடித்தாள். அவள் பேசி முடித்ததும் மது தனது திவான் மெத்தையில் அமர்ந்துகொண்டு, வா ஹரினி உட்காரு. என்ன திடீர்ன்னு வந்திருக்க? என்று விசாரித்தாள்.

என்னோட ஸைன்டிஃபிக் கால்குலேட்டர் உன்கிட்டதான் இருக்கு தெரியுமா?

ஆமால... மறந்திடுச்சு. சாரி...

எத்தனை தடவை நேத்து நைட்ல இருந்து இதுக்காக கூப்பிட்டேன் தெரியுமா? எதுக்கு ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்க? அந்த ஆர்யா என்னோட வீட்டுக்கே வந்து உன்னை கான்டாக்ட் பண்ண உன்னோட லான்ட்லைன் நம்பர் கேட்டான்ப்பா. நான் எவ்வளவு உஷாரான ஆளு... லான்ட்லைன் நம்பர் கொடுப்பேனா? அதான்... உன்னோட ஜியோ நம்பரைக் கொடுத்தேன்ப்பா. என்றாள் சிரித்துக்கொண்டே ஹரினி.

ஆனால் மதுவின் முகத்தில் கோபம் மட்டுமே இருந்தது. அவளது கோபத்தின் காரணம் புரியாமல் திகைத்து நின்ற ஹரினியைப் பார்த்து,

துரோகி... என்றாள் மது.

வாட்??- ஹரினி.

மது வேணாம்... கோபப்படாத... ஹரினிக்கா ஓடி வந்திடுங்க. என் பின்னாடி ஒளிஞ்சிக்கோங்க. என்று ஜான்வி சொல்லிக் கொண்டிருந்தபோதே,

பச்சத் துரோகி. என்று கத்திய மது ஹரினியின் மேல் பாய்ந்திருந்தாள் அடுத்தக் கணம்.

* * *



ஏய் சும்மா சும்மா என்னைத் திட்டாதப்பா. நாம காலேஜ்ல இருந்து கிளம்பும்போது மார்க் கம்மியாகிடுச்சுன்னு அழுத. எனக்கு அவ்வளவு தான் தெரியும். எனக்கு இப்படி ஒரு பிரச்சனை நடக்குதுன்னு தெரியாதுல?- ஹரினி.

உன்ன யாரு என்கிட்டக் கேட்காம ஜியோ நம்பரைக் கொடுக்கச் சொன்னது?- மது.

அதான் பிரச்சனை வரும்னு நான் நினைக்கலையே மது...

இப்ப ரெண்டு பேரும் சண்டை போடுறதை நிறுத்துறீங்களா இல்ல மொட்டை மாடிக்குப்போறீங்களா? நான் படிக்கணும். திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைப் பேசிக்கிட்டே இருக்கீங்க... எரிச்சலா இருக்கு. நாளைக்கு எனக்கு ரிவிஷன் எக்ஸாம். என்று ஜான்வி பொறுமையாவும் இழந்து கேட்கவும், வா மொட்டை மாடிக்கு என்று ஹரினியின் கைகளை பிடித்து இழுத்தபடி மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

உன்னோட தங்கச்சிகிட்ட மட்டும் சொல்லிருக்க பார்த்தியா? என்றாள் சிறியகோபத்துடன் ஹரினி.

என்ன சொல்லிருக்கேன்?

ஆர்யா மேல உனக்கு இருந்த ஃபீலிங்ஸ் பற்றி என்கிட்ட சொன்னியா? ஆனா ஜானுகிட்ட விளக்கமா சொல்லிருக்க...

ஹரினி ஃபீலிங்ஸும் இல்ல மண்ணாங்கட்டியும் இல்லை. ஆர்யா நல்ல பையன் தான் இல்லைன்னு சொல்லலை. அம்மாவுக்காக கோயிலுக்குப் போற பையன் நல்ல பையனாகத் தான் இருப்பான். ஆனா, எனக்கு அவன் மேல வந்தது வந்தது வந்தது... ம், வார்த்தை கிடைச்சிருச்சு... ஈர்ப்பு. அது ஒரு ஈர்ப்பு ஹரினி. அவ்வளவுதான். செக்ஸுவல் அட்ராக்ஷன். என்னால அதைத்தாண்டி வர முடியும்னு தோணுச்சு. வந்திட்டேன். இந்த மாதிரி ஏதாவது பெரிய பிரச்சனை வந்துதான் நான் மாறணும்னு இருந்திருக்கு போல... மாறிட்டேன். அவ்வளவுதான். என்ன ஒண்ணு... ஆர்யாகூட மணிக்கணக்கா பேசினப்பா எல்லாம் வீட்டுல மாட்டிக்காம ஃபோனை ஸைலன்ட்ல போட்டப் பிறகு அப்பாகிட்ட மாட்டிக்கிட்டதுதான் என் நேரம்ங்கிறது.

அது உலக நியதி மது. திருடன் திருடும்போது மாட்டிக்க மாட்டான். டிக்கடையில் தம்மடிக்கும்போது தண்ணியடிக்கும் போது தான் திருட்டு முழி முழிச்சி போலிஸ்கிட்ட மாட்டிப்பான். என்னோட அண்ணனோட புதுப் பேன்ட்டை போடும்போதுகூட அவன்கிட்ட நான் மாட்டிக்க மாட்டேன், அவனே எனக்கு வாங்கிக் கொடுத்த சட்டையைப் போடும்போது தான் மாட்டிக்குவேன். நீ தான்டா எனக்கு இதை வாங்கிக்கொடுத்த, இது உன்னோட சட்டையில்லடான்னு சத்தியம் பண்ணாலும் நம்ப மாட்டான். அது அவனோட சட்டைதான்னு சாதிப்பான் மது.

ஹரினியின் இலகுவான பேச்சில் மனம் லேசாகிவிட கோபம் விடுத்து, நீ சத்தியம் பண்ணா நானே நம்ப மாட்டேன். என்றாள் அமைதியான குரலில் மது.

என்ன மச்சி இப்படி சொல்லிட்ட? இதுயெல்லாம் நல்லாவேயில்ல மச்சி.

ஹரினி மச்சி என்றதும் சிரிப்பே வந்துவிட்டது மதுவிற்கு.

அம்மா தாயே மச்சின்னு கூப்பிடாத. என் தங்கச்சி காதுல கேட்டது அவ்வளவுதான்... நீ சத்தியம் பண்ணாமல் சொன்னாக்கூட உன்னை நம்பித் தொலைக்கிறேன்.

அது... அந்த பயம் இருக்கணும்.

ஹா... ஹா... என்று மது சிரித்ததைப் பார்த்ததும் மிஸ்டர் லவ் குருவின் மூக்கில் வியர்த்துவிட்டது.

காலென்டரைப் பார்த்தார் மிஸ்டர் லவ் குரு. மறுநாள் திங்கட் கிழமை என்று சொன்னது அந்த நாட்காட்டி.

ஹா... ஹா... என்று சிரித்தார் லவ் குரு. அவருக்கு மதுவின் மிக மிக மோசமான திங்கட்கிழமை ஞாபகம் வந்தது. அதை மறுநாள் மிஞ்சிவிடுமோ? என்று தனக்குள் யோசித்தபோதும் ஹா... ஹா... என்று சிரிப்பே வந்தது அவருக்கு. லவ் குரு தாமாக தனியாகச் சிரித்துக் கொண்டிருக்க,

மது... என்று மாடிப்படிகளின் முதல் படிக்கட்டில் நின்றபடி அவளை சத்தமாக கண்டிப்பு நிறைந்த குரலில் அழைத்தார் அர்ஜுன்.

மீண்டும் மறுபடியும் மது என்று அழைத்த அர்ஜுனின் குரலில் லேசான கண்டிப்பு இருந்தது. அலறி அடித்துக்கொண்டு தந்தையின் முன் சென்று நின்றாள் மது.

* * *
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
என்னடா மது கால் அட்டென்ட் பண்ண மாட்டிக்கிறா? இரண்டு நாள் ஆச்சு டா என்கூட அவ பேசி. ஒரு நம்பர் ஸ்விட்ச் ஆஃப். இன்னொரு நம்பர்ல ரிங் போயிட்டே இருக்கு.- ஆர்யா விவேக்கிடம்.

பொங்கல் ஹாலிடேஸ்ல வெளியூருக்குப் போயிருப்பா. விடு மச்சி. பார்த்துட்டு கூப்பிடுவா. டோன்ட் சவுன்ட் டெஸ்பரேட் மச்சி. ஃப்ரண்டோ, லவ்வர்ரோ, கிரஷ்ஷோ எதுவாக இருந்தாலும் இரண்டே இரண்டு மிஸ்ட் கால் தான் கொடுக்கணும். அவுங்ககூட பேசுறதுக்கு துடிச்சிட்டு இருக்கிற மாதிரி காட்டக்கூடாது மச்சி.

இரண்டா? நான் இதுவரை இருபது தடவை கூப்பிட்டுப் பார்த்துட்டேன் மச்சி. அவ திரும்பக் கூப்பிடவே இல்ல.

ஆர்யா எப்போது இருபது என்று சொன்னானோ அப்போதே விவேக்கின் மனது இருபது முறை இருபது யானைகளின் பொற்பாதங்களால் நசுக்கப்பட்டிருந்தது. அந்த வலியையும் மென்று விழுங்கி ஆர்யாவிடம் கேட்டான், நெஜமாவே இருபதா? இல்ல ஒரு பேச்சுக்கு இருபதுன்னு சொன்னியா?

ஒரு பேச்சுக்கு தான்டா இருபதுன்னு சொன்னேன்.

அப்பாடா.

ஆனா நெஜமா ஒரு இருபத்தியஞ்சு தடவை அழைச்சிருப்பேன்.

அடப்பாவி.

எதுக்கு டென்ஷன் ஆகுற?

கொசுவ நசுக்கிற மாதிரி மதுவோட ஃப்ரண்ட்ஷிப்பை நசுக்கிப்புட்டியே மச்சி.

என்ன உளறுற? அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீ சொன்ன மாதிரி பொங்கல் ஹாலிடேஸ்க்கு டூர் போயிருப்பா.

உன்னோட ஃப்ரண்ட்ஷிப்புக்கு நீயே பொங்கல் வச்சிட்டியே மச்சி?

பேசாம இரு விவேக். என்றவன் இருபத்திஆறாவது முறையாக மதுவிற்கு அழைத்தான். திமிரு பிடிச்சவ ஃபோனை எடுக்கிறாளான்னு பாரு. இவளை முதல்ல என்னோட ஃப்ரண்ட் லிஸ்டல இருந்து தூக்கணும். என்று மனதுக்குள் திட்டினான் மதுவை.

தம்பி அதெல்லாம் எப்போவோ உன்னை மதுக்கண்ணு தூக்கிடுச்சுப்பா. - ஒருத்தரின் மைன்ட் வாய்ஸ்.

யாரோட மைன்ட் வாய்ஸ்? வேறு யாரு? மிஸ்டர் லவ் குருவேதான்.

* * *

14



தவறு செய்யும்போது யாரும் கையும் களவுமாக பிடிபடுவதில்லை. அதற்கு அடுத்தக் காலக்கட்டத்தில், அதாவது தவறிழைத்துவிட்டு சரியான பாதையில் செல்லும்போதுதான் முக்கால்வாசி திருடர்கள் பிடிபடுகிறார்கள். இதற்கு மதுவும் விதிவிலக்கல்ல என்பது போல் ஆர்யாவின் தொடர்புகளை துண்டித்தபிறகு தந்தையிடம் மாட்டிக்கொண்டாள்.

நாம் செய்யும் தவறுகள் மீண்டும் நடந்து விடுவதற்கு ஒரே ஒரு காரணம் மட்டும் தான் இருக்க முடியும். அது என்னவென்றால் நாம் கையும்களவுமாக மாட்டிக்கொள்ளாமல் இருந்துவிட்டால் அந்த தவறு மீண்டும் நிச்சயம் நடந்துவிடும். கேட்பாறற்ற நிலையே தவறுகள் தொடர்வதற்கு முழுக்காரணம். குறைந்த பட்சம் பிடிபட்டுவிடுவோம் என்ற பயமேனும் இருந்தால்கூடப் போதுமானது. ஆனால் நானே ராஜா நானே மந்திரி என்ற நிலையில் தவறான பாதையில் சென்ற மனதுக்கு ஆட்டம் போட ஒரு மேடை கிடைத்துவிட்டால், பாதை கிடைத்துவிட்டால் என்ன நடக்கும்?

தன்னை நோட்டம்விட அறிந்தவர் தெரிந்தவர் யாரும் இல்லையே என்ற மமதையில் மேடையில் குத்தாட்டம் ஆடத்துவங்கிவிடும் மனம் என்னும் குரங்கு. ஆடி சோர்ந்து மூச்சிரைக்க, மிடியல இது போதும்டா சாமி என்று மனமே உணர்ந்தால் தான் உடலுக்கு விமோச்சனம்.

திருட்டுத்தனமாய் மேடையில் தரிகெட்டு ஆடும் மனது கல்லடிகள் பட்டு மேடையைவிட்டு இறங்கி ஓடுவதும் சில நேரங்களில் நடக்கும். மதுவும் அப்படித்தான் கல்லடிபட்டாள். மதிப்பெண்கள் ரூபத்தில் முதல் கல்லடி விழுந்தது. அடுத்த கல்லடி தந்தை அர்ஜுனின் கோபம்.

சிறுவயது முதல் கோபத்தின் சாயலைக்கூட தந்தையின் முகத்தில் காணாதவள், அவரது கோபத்தை முதல் முறையாகக் கண்டாள் ஆர்யாவின் மிஸ்ட்டு கால்களை அவர் பார்த்தபோது.

அப்போது தான் அவர் அவளை கோபமாக மொட்டை மாடியின் கடைசி படிக்கட்டுகளில் நின்றபடி அழைத்தது.

மது கீழே வா...- அர்ஜுன்.

ஹரினியுடன் பேசிக்கொண்டிருந்த மது அவளையும் இழுத்துக்கொண்டு அடித்துப்பிடித்துக் கொண்டு மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.

* * *



மதுவுடன் மொட்டைமாடியில் இருந்து ஹரினியும் சேர்ந்து இறங்கி வந்தாள். இரு குமரிகளையும் பார்த்து கஷ்டப்பட்டு புன்னகைத்தவர் ஹரினியிடம் ஹலோ ஹரினி, அம்மா அப்பா நல்லா இருக்காங்களா?

யெஸ் அங்கிள்.

வண்டியிலயா வந்த?

இல்ல அங்கிள். ஷேர் ஆட்டோவில் வந்தேன்.

ஓ... வாம்மா உன்னை உன் வீட்டுல டிராப் பண்ணிடுறேன்.

அர்ஜுனின் பேச்சில் தெரிந்த உள்ளர்த்தம் இரண்டு குமரிகளுக்குமே புரிந்தது.

சற்றும் யோசிக்காமல், ஓகே அங்கிள். நான் ரெடி. மதுகிட்ட கால்குலேட்டர் வாங்க வந்தேன். வாங்கிட்டேன். இனி கிளம்ப வேண்டியது தான். போலாமா அங்கிள். பை மது.. என்றாள் ஹரினி.

பை ஹரினி.

மதுவின் தந்தை ஹரினியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். ஆனால் அவர் மறைமுகமாக, நோ சாட்டிங் வித் ஃப்ரண்ட்ஸ். படிப்பில் கவனம் வை மது. என்று மதுவிற்கு கொடுத்த எச்சரிக்கை மதுவிற்கு நன்றாகவே புரிந்தது. ஹரினியை வலுக்காடாயமாக அவளது வீட்டிற்கு அழைத்துச் சென்றதன் மூலம் மதுவின் போக்கிரிதனத்திற்கு தந்தை கொடுக்கும் நெருக்கடி புரிந்தது.

லேசாக ஜாடையாகப் புரிந்ததை அவளின் தந்தை மறுநாளே தெளிவான வார்த்தைகளால் நன்றாக புத்திக்குள் ஏறும்படி புரியவைத்தார்.

மறுநாள் திங்கட்கிழமை.

மதுவின் இரண்டாவது மோசமான திங்கட்கிழமை.

* * *



இரண்டாவது மோசமான திங்கட்கிழமை...

மது இன்னிக்கு என்கூட காலேஜ்க்கு வா.- மதுவின் தந்தை.

இது அவரது வழக்கமான பேச்சு இல்லை. வரியா என்று கேட்பார்களே ஒழிய, வா என்று அவர் கட்டளையிட்டது இல்லை இந்நாள் வரை.

தந்தையிடம் இப்போது மறுக்கும் துணிவு அவளுக்கு இல்லை.

கல்லூரி வளாகத்திற்குள் அவள் நுழைந்ததும் ஆர்யாவைப் பற்றிப் பேசாமல் அவரது வகுப்பிற்குச் சென்றுவிடுவார் என்று நினைத்திருந்த மதுவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரும் அவளுடன் வளாகத்திற்குள் நடந்து வந்தார். அப்படியே கல்லூரி கேன்டீனுக்கு அழைத்துச்சென்றார். இருவருக்கும் ஒரு காஃபி ஆர்டர் செய்தார்.

மதுவிற்கு இப்போது ஒரு காஃபி அத்தியாவசியத் தேவையாக இருந்தது. காப்பி குடிக்கவில்லை என்றால் அவள் தலைக்குள் இருக்கும் மூளை வெடித்தே விடும். ஏன் என்றால் தந்தையுடன் காரில் கிளம்பிய நேரத்தில் இருந்து தந்தையின் கோபமான இறுகிய முகத்தைப் பார்த்து பேய்த்தலைவலி வந்துவிட்டது.

இந்த செமஸ்டர்ல ரொம்ப கம்மியா ஸ்கோர் பண்ணிருக்க மது..- ஒரு மிடறு காப்பியை குடித்தபடி அர்ஜுன்.

ம்.. யெஸ் டாடி...- ஒரு முழு கப் காப்பியை முழுதாய் ஒரே மடக்கில் குடித்து முடித்தபின் மது.

You are talking too much with boys madhu... முன்பே ஒரு நாள் உன்னை கேன்டீன்ல ஒரு பையன்கூடப் பார்த்தேன்.. அந்தப் பையன் முகத்தைக்கூட நான் பார்க்கல.. எனக்கு அவன் யாரு என்னங்கிற விஷயம் தேவையில்ல மது. பட் உன்னோட லைஃப்ல முக்கியமான கட்டத்துல இருக்க.. இந்த காலேஜ் கேம்பஸ்க்குள்ள நுழைய முடியலையேன்னு எத்தனை பேர் அழுது இருக்காங்க தெரியுமா? எனக்குத் தெரியும். ஏன்னா நான் அழுதுருக்கேன். அண்ணா யுனிவர்சிட்டில சீட் கிடைக்கலைன்னு அழுதிருக்கேன். அந்த வெறியிலதான் நல்லா படிச்சி சீட் கொடுக்காத காலேஜ்ல ப்ரொபர்ஸரா வேலையில சேர்ந்தேன்.

காலியாகிப் போன காபி கப்பையே உற்றுப் பார்த்தபடி மது. கண்களில் அருவிகளைச் சுமந்தபடி அமைதியாக மது அமர்ந்திருந்தாள்.

அப்பா என்ன சொல்றேன்னு புரியிதா மது?

புரியிது டாடி. இனி ஃப்ரண்ட்ஸ்கூட ரொம்ப பேசி அரட்டையடிக்க மாட்டேன் டாடி.

ஃப்ரண்ட்ஸ்? என்று சொன்னவர் புருவம் வளைத்து சைகையில் கேள்விகேட்கவும்,

பாய்ஃப்ரண்ட்ஸ்கூட ரொம்ப பேச்சு வச்சிக்க மாட்டேன் டாடி.

குட். என்றார் அர்ஜுன்.

மதுவின் கண்களிலிருந்த அருவிகள் வெள்ளமாய் விழத் தொடங்கின.

வெரி குட். என்றார் மிஸ்டர் லவ் குரு.

இரண்டாவது மோசமான திங்கட்கிழமை இனிதே முடிந்தது.

* * *
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
ஹரினி, மது, ஆர்யா, ஆர்யாவின் நண்பர்கள் மற்றும் ஆர்யாவின் இரண்டு வகுப்புத் தோழிகள் என அனைவரும் ஒன்றாக காலேஜ் கேன்டீனில் கட்லட்டுடையும் கோல்டு காஃபியையும் ருசித்துக்கொண்டிருந்தார்கள்.

மற்றவர்கள் சுவாரசியமாக எதையோ பேசியபோது அனைவருக்கும் நன்றாக கேட்கும்படியாகவே மது ஆர்யாவிடம், ஆர்யா, நேத்து கொஞ்சம் பிஸியா இருந்தேன்ப்பா. அதான் கால் அட்டென்ட் பண்ண முடியல. சாரி. என்று சொன்னாள்.

உடனே ஆர்யாவும் மற்றவர்களுக்கு கேட்கும்படியாகவே, இட்ஸ் ஓகே என்று தான் அவளிடம் சொன்னான்.

ஆனால் அவனது மனது, திஸ் இஸ் நாட் அட் ஆல் ஓகே. இருபது மிஸ்ட் காலுக்கு ஒரே ஒரு சாரி... அதுவும் கூட்டத்தோட கோவிந்தா மாதிரி. நாலு பேர் முன்னாடி அஃபீஸியலா ஒரு சாரி... திஸ் இஸ் நாட் அட் ஆல் ஓகே மது. என்று கோபமாய் உள்ளுக்குள்ளே பேசியது.

மிகவும் சகஜமான உரையாடலாகவே இருவரும் அதை வைத்துக்கொண்டனர். அதன்பிறகு ஹரினியும் மதுவும் இரண்டு நிமிடங்கள் மட்டும் அனைவருடனும் அரட்டையடித்துவிட்டு பில்லிற்குரிய பணத்தில் தங்களது பங்கை கொடுத்துவிட்டு அவரவர் வகுப்புகளுக்கு விரைந்தனர்.

ஒரு வாரம் கடந்தது. அந்த ஒரு வாரமும் மது-ஆர்யா வாட்ஸ் ஆப் செய்திகளின் போக்குவரத்து டிராஃபிக் ஜாம் ஆகிப்போய் நின்று விட்டது. இருவரும் செய்திகள் பகிரவில்லை.

ஆனால் மதுவினால் தவிர்க்கவே முடியாத கான்டீன் சந்திப்புகள் மட்டும் தொடர்ந்தது. மற்ற நண்பர்கள் அழைக்கும்போது வரவில்லை என்று மறுத்துச் சொல்ல முடியவில்லை. சிறிது சிறிதாக ஆண் நண்பர்கள் வட்டத்தைக் குறைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தாள் மது.

ஹரினி தான் அவளிடம், கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிக்கலாம் மது. இரண்டு வருஷமா ஒண்ணா கேன்டீன்ல லன்ச் சாப்பிடுறோம். இப்ப திடீர்னு நிறுத்தினா நல்லாயிருக்காது.

அப்பா திரும்ப கேன்டீன்ல வச்சிப் பார்த்தாருன்னா...

முன்னே மாதிரி சாப்பிட்டப்பிறகு அரட்டையடிக்காமல் கிளம்பிடுவோம். அப்படியே அவர் பார்த்தாலும் தப்பா எடுத்துக்க மாட்டார். என்று ஹரினி சொன்ன பதிலில் சமாதானம் அடைந்தாள் மது.

ஒரு வழியாக பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டவள் ஆர்யாவை அதன்பிறகு எப்போது பார்த்தாலும் சிரித்தபடியே நழுவிக்கொண்டாள். பேச்சுகளை வளர்க்காமல் சிரித்தபடியே, ஒரு ஹலோ, ஒரு குட் மார்னிங்குடன் நிறுத்திக்கொண்டாள்.

ஒரு சில நாட்களிலேயே ஆர்யாவிற்கு மது தன்னிடம் இருந்து தொலைதூரம் விலகிவிட்டாள் என்று புரிந்துபோனது. ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட்டில் தன்னை வைத்திருந்தவள் ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட்டில் தன்னை சேர்த்துவிட்டாள் என்று புரிந்து போனது.

ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்... அப்படின்னா என்ன?

ஃப்ரண்ட் தான் ஆனா ஃப்ரண்ட் மாதிரி...

* * *




மது சரியாவே பேச மாட்டிக்கிறா விவேக். ஃபோன்லயும் பேச மாட்டிக்கிறா. நானாக கால் பண்ணால் அட்டென்ட் பண்றதே இல்ல, ஏன்னு கேட்டா என்னோட தங்கச்சி ப்ளஸ் டூ படிக்கிறதால என்னோட ஃபோனும் அவளோட ஃபோனும் ப்ளாக் பண்ணிருக்காங்க என்னோட பேரன்ட்ஸ்ன்னு சொல்றா. நேர்ல பார்க்கிங் ஏரியாலக்கூட பேசாம சிரிச்சிட்டுப் போயிடுறா மச்சி. அவ என்னை அவாய்ட் பண்றது நல்லாவே புரியிது மச்சி... ஆனா கோபமா வருதுடா... Just Friends மாதிரி என்னை டிரீட் பண்றா மச்சி. ஏன் சரியா பேச மாட்டிகிறன்னு நேருக்கு நேர் கேட்டுடவா?

(“Just friends” அப்படின்னா என்ன? ஃப்ரண்ட் தான் ஆனா ஃப்ரண்ட் மாதிரி...)

என்னது? நேருக்கு நேரா கேட்கப்போறியா? எதுக்கு மச்சி உன் மானத்தை நீயே ஃப்ளைட் பிடிச்சி அமெரிக்காவுக்கு ஏத்திவிடுற? இந்த ஒரு மாசமா என்ன நடந்திச்சு? மிஸ்ட் கால் மேட்டருக்கு பிறகு என்ன நடந்திச்சுன்னு தெளிவா சொல்லு.

ஆர்யா தனது இருபது, சாரி... சாரி இருபத்தாறு அழைப்புகளை மது ஏற்காமல் போனதற்கு அவள் சொன்ன சாரி என்ற பதிலைக் கேட்டதும் விவேக் மனதில் கமென்ட்கள் கோடிக்கணக்கில் உலா வந்தன.

‘மச்சி... சீன் முடிஞ்சது டா. மது ஸ்கிரீனை கிழிச்சி ரொம்ப நேரம் ஆச்சு டா.’

‘மச்சி... இது வேலைக்கு ஆகாது.’

‘மச்சி... அண்ணான்னு கூப்பிடலைன்ன சந்தோஷப்படு.’

‘மச்சி... இனி உனக்கு நான் எனக்கு நீ. மதுன்னு ஒரு கேரக்டரை நீ சந்திச்சதை மறந்திடு.’

‘மச்சி... ஹா... ஹா... சிரிப்பா வருதுடா. என்ன பண்ணலாம்?’


இப்படித்தான் விவேக்கின் மனதில் பல கமென்ட்டுகள் விமர்சனங்கள் உலா வந்தன. எதையும் ஆர்யாவிடம் சொல்லவில்லை அவன். ஜிம் பாடியிடம் வம்பிழுக்க அவனது ஸ்லிம் பாடிக்கு இஷ்டமில்லை.

ஒருவழியாக மனதில் விமர்சனங்களை ஒதுக்கி மறைத்துவிட்டு ஆர்யாவிடம், ஓகே... இப்ப நீ என்ன கேட்கப்போற மதுகிட்ட? என்று கேட்டான் விவேக்.

என்கூட ஏன் முன்ன மாதிரி பேசமாட்டிக்கிறன்னு அவகிட்ட நேருக்கு நேரா அவ கண்ணைப் பார்த்துக் கேட்பேன் டா.

நீ கேட்டா என்ன சொல்வா? நிறைய படிக்க இருக்கு அதான் பேச முடியலைன்னு சொல்வா. அவளோட அப்பா உங்க காலேஜ் ப்ரொபர்சர்ன்னு நீ சொன்னப்பவே நினைச்சேன்... பட்சி சீக்கிரம் பறந்து போயிடும்னு. அவுங்க அப்பா தான் இப்பயெல்லாம் அவளை பிக் அப், டிராப் பண்றாங்கன்னு நீ சொன்னபோது சீன் முடிஞ்சதுன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு. உனக்குப் புரியலையாடா? ஆர்யா... ஸ்கூல் படிக்கும்போது அம்மாக்குப் பிடிக்கலைன்னு சொன்னா, இப்ப அப்பாக்கு பிடிக்கலைன்னு மறைமுகமா விலகுறா... ஆனா ரெண்டு தடவையும் நடந்த ஒரே ஒற்றுமையான விஷயம் என்ன தெரியுமா?

ஆர்யா பதில் பேசாமல் விவேக்கைப் பார்த்தபோது,

இரண்டு தடவையும் உன்னை ப்ளாக் பண்ணிட்டா மச்சி.

இப்ப ஒண்ணும் ப்ளாக் பண்ணல. அவ கையில ஃபோன் இல்ல. அவ்வளவு தான். அவளும் அவ தங்கச்சியும் ஒரே ஃபோனை ஷேர் பண்றாங்களாம். அதனால அவளாக நேரம் கிடைக்கும் போது மட்டும் கூப்பிடுவாளாம்.

இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு?- கேள்வியாய் விவேக்.

இல்லதான? என்று தன்னிடமே கேட்டுக்கொண்ட ஆர்யா,

நீ சொன்ன மாதிரி இரண்டுக்கும் வித்தியாசம் இல்லையில? அவளாக இன்னைக்கு வரை என்னை கூப்பிடலடா... நேத்து ரொம்ப நாளுக்குப் பிறகு ஒரு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பினா டா. ஆசையா திறந்து பார்த்தேன் டா. ஆனா படு கடுப்பாகிருச்சு. என்று ஆதங்கமாய் முடித்தான்.

என்ன அனுப்பினா? குட் மார்னிங் ஆர்யா ப்ரோன்னு அனுப்பிட்டாளா? Brotherன்னு கூப்பிட்டாளா?

ப்ச்... இல்ல டா. செமெஸ்டர் எக்ஸாம் டைம் டேபிள் அனுப்பினா டா... ரொம்ப கடுப்பாகிடுச்சு...

சிரிக்கத் துடித்த உதடுகளை அரும்பாடுபட்டு அடக்கினான் விவேக்.

பரீட்சை வருதுன்னு எனக்குத் தெரியாதா? இந்த மேடம் சொல்லித்தான் எனக்குத் தெரியுமா? இப்பவரை அவ எனக்கு கால் பண்ணவே இல்ல மச்சி. - கோபமாய் ஆர்யா.

இனியும் கூப்பிட மாட்டா. உன்னை அவ விர்ச்சுவலா (Virtual) ப்ளாக் பண்ணிட்டா மச்சி.

விவேக் சிரித்துக்கொண்டே விஷயத்தை தீவிரமாகச் சொல்லாமல் லேசாகச் சொன்னான். ஆனால் ஆர்யாவினால் இதை ஹாசியமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவனது கோபம் உச்சிக்கு ஏறியது.

நானும் அவளை ப்ளாக் பண்ணப்போறேன் மச்சி. நல்லா பாரு... உன் முன்னாடியே ப்ளாக் பண்றேன். இதோ, செலக்ட் பண்ணிட்டேன். இதோ ப்ளாக் ஆகிடுச்சு. அவளுக்கு மட்டும் தான் ப்ளாக் பண்ணத் தெரியுமா? எனக்கும் ப்ளாக் பண்ணத் தெரியும்னு அவளுக்குத் தெரியட்டும். டூவீலர் பார்க்கிங்ல பார்த்து சிரிச்சா நானும் சின்னதா சிரிப்பேன். அவ்வளவுதான். அதுக்கு மேல நோ ரிலேஷன்ஷிப்.

ஹா...ஹா...

எதுக்குடா சிரிக்கிற.

என்னமோ ஷிப் பற்றிப்பேசுனியே... அதை நினைச்சேன் சிரிச்சேன். என்றைக்கு டா உங்களுக்குள்ள அந்த ரிலேஷன்ஷிப் இருந்திச்சு? அதை நீ கட் பண்றதுக்கு?

சும்மா இருடா... ஆனா ஒண்ணு, அவளாக என்கிட்ட வந்து, எதுக்கு என்னை ப்ளாக் பண்ணிட்ட?ன்னு கேட்டாக்கூட அப்படியா? ன்னு கேட்டுட்டுப் போயிடுவேன் மச்சி. என்னோட பிடிவாதம் உனக்குத் தெரியும்ல? நான் பொண்ணுங்க பின்னாடி அலையிற டைப்பும் கிடையாது. மது பின்னாடி என்னைக்குமே அலைஞ்சதும் கிடையாது. நான் பெட் வைக்கிறேன், அவளாக என்கிட்ட வந்து என்கூடப் பேசுவா டா. எதுக்கு என்கூடப் பேசாம இருக்க? ஏன் என்னை ப்ளாக் பண்ணன்னு அவளாக கெஞ்சிக் கேட்கட்டும்... அப்ப பேசிக்கிறேன் அவகிட்ட.

இன்னும் சின்னப்புள்ளையாகவே யோசிக்கிறியே மச்சி... நீ ப்ளாக் பண்ண விஷயம் அவளுக்குத் தெரியவே தெரியாது மச்சி. அவதான் உன்னைக் கூப்பிடப்போறதே இல்லையே? பின்ன எப்படி அவளுக்குத் தெரியும்?அதுலயும் கெஞ்சிக் கேட்கணும்னு நீ சொல்றது டூ டூ டூ மச் மச்சி...

ப்ச்..

நான் ஒண்ணு சொல்லவா?

என்ன?

இந்த அம்மா பேச்சு அப்பா பேச்சை தட்டாம நடந்துக்குற பொண்ணுங்க எல்லாமே ரொம்ப ரொம்ப டேன்ஜரஸ். நல்லா பழகி லவ் பண்ணித் தொலைச்சிட்டு அப்பா அம்மாக்குப் பிடிக்கலைன்னா நாளைக்கு நம்மளயே வேணாம்னு தூக்கி போட்டுருவாங்க. உன் விஷயத்துல ஆரம்பத்துலயே இந்த விஷயம் தெரிஞ்சிக்கிட்டது நல்லதாப்போச்சு.

ஆரம்பத்துலனா??

உன்னோட ஃப்ரண்ட்ஷிப் ஆரம்பத்துல என்று மீன் பண்ணேன் டா. என்ன ஃப்ரண்ட்ஷிப் தான? இல்ல வேற எதுவும் ஆசையை உன் மனசுல வச்சிருந்தியா?

ஃப்ரண்ட்ஷிப் தான்டா... ஃப்ரண்ட்ஷிப் தான்டா. 200 பெர்சன்ட் ஃப்ரன்ட்ஷிப் தான். அம்மா மேல ப்ராமிஸ்ஸா ஃப்ரன்ட்ஷிப் தான் விவேக். நல்ல வேளை மதுவை அந்த லவ் கிவ் பண்ணித்தொலைக்கல.

மது விஷயத்துல நான் சொல்ற அட்வைஸ் இதுதான் மச்சி, இன்னும் ரெண்டே வருஷம் தான். காலென்டர் பேப்பர் மாதிரிப் பறந்தே போயிடும். கடைசி வருஷம் காம்பஸ் வரும். அவ அமெரிக்கா போயிடுவா, நீ லன்டன் போயிடுவ. மேட்டர் சால்வ்டு. காம்பஸ்ல நல்ல கம்பனியா பார்த்து செலக்ட் ஆகுற வழியப்பாரு மச்சி. ஆரக்கிள் கம்பனி நல்ல கம்பெனியாமே அப்படியா?

ஆமா விவேக், ஆரக்கிள் நல்ல கம்பெனிதான். நான்கூட அதுக்கு தான் ஏய்ம் பண்றேன்.- ஆர்யா.

குட்.

விவேக்...

என்ன?

மது நல்ல பொண்ணுடா.

என்னது??

ஷி இஸ் மை பெஸ்ட் கிரஷ் மச்சி.

அதென்ன பெஸ்ட் கிரஷ்??

மறக்கவே முடியாத கிரஷ்ன்னு அர்த்தம். என்னோட ஃப்ர்ஸ்ட் கிரஷும் அவதான். செகன்ட் கிரஷும் அவதான் மச்சி. மதுவுக்கும் அந்த மாதிரி ஃபீலிங்ஸ் இருக்கும்ல?

கண்டிப்பா. உன்கூட ஒரு வருஷம் பழகிருக்கா, பிடிக்காமலா பழகுனா? பொண்ணுங்களுக்குப் பிடிக்கலைன்னா ஒரு சிரிப்புகூட இலவசமா அவுங்ககிட்டயிருந்து கிடைக்காது மச்சி. அனுபவஸ்தன் சொல்றேன், நம்பு. ஆனா... மதுப்பொண்ணு பயங்கர உஷார் மச்சி. கமிட் ஆகிடுவோம்னு பயந்து, இப்ப படிப்புதான் முக்கியம்னு தெரிஞ்சிக்கிட்டு ஒதுங்கிடுச்சு.

அதான்டா... அதான்டா எனக்கு அவளை இப்பவும் பிடிச்சிருக்கு. என்னை எவ்வளவு இக்னோர் பண்ணாலும் பிடிக்கிது.

மச்சி. நான் சின்சியரா ஒரு அட்வைஸ் பண்றேன். கேட்டுக்கிறியா?

சொல்லு. வேற வழி?

உனக்கு பென் டிரைவ்ல பத்து படம் ஏத்திக்கொடுக்கிறேன். அதில் இருக்கும் படத்தை தினம் தினம் பார்த்தீனா... மதுவோட நினைப்பே வராது...

இந்தா என்கிட்ட ரெண்டு பென்டிரைவ் இருக்கு. இதுலயே ஏத்திக்கொடு. என்று விவேக் கையில் இரண்டு பெண் டிரைவ்களைக் கொடுத்தான் ஆர்யா.

என்னடா? ரெண்டு பென் டிரைவ் கொடுக்கிற? ஒரு பென்டிரைவ்ல ப்ளூகலர் மூடி போட்டிருக்கு... இன்னொரு பென் டிரைவ்ல ரெட் கலர் மூடி போட்டிருக்கு? - விவேக்.

ப்ளூ கலர் மூடி போட்டதுல ப்ளூ கலர் படம் இருக்கும் மச்சி. ரெட் கலர் மூடி போட்டதுல...

சின்னப்புள்ளங்க பார்க்குற படம் இருக்குமா? பொம்மைகள் நடிச்ச கிராஃபிக்ஸ் படமா இருக்குமா?

கரெக்ட்... எப்படிடா கண்டுபிடிச்ச?

ஆர்யா, நீ ரெண்டு கலர்ல தான பென் டிரைவ் வச்சிருக்க? நான் பத்து கலர்ல பத்துவிதமான சினிமா கேட்டகிரில அதாவது... பத்து பிரிவில் படங்கள் சேர்த்துருக்கேன்... பேய் படம், கிரைம் படம், காமெடி படம், கசமுசா படம், கிராஃபிக்ஸ் படம், ஹிஸ்டிரி படம், சயின்ஸ் படம், காதல் படம், பக்திப் படம், ஜாக்கி சான் படம், ஜேம்ஸ் பான்ட் படம்... அப்படின்னு பத்து கேட்டகிரில படம் சேர்த்து வச்சிருக்கேன் டா. போன மாசம் தான் சேர்த்தேன். மொத்தமா சேர்த்த பிறகு உன்கிட்ட காட்டலாம்னு நினைச்சேன்...

ஹா... ஹா...

நான் தர்ற படத்தையெல்லாம் பார்த்தபிறகு அடுத்ததாக நீ என்ன செய்யணும்னா.. எய்த் ஸ்டான்டர்ல ஸ்கூல் வாட்ஸ் ஆப் குரூப்ல நம்ம டீச்சர்ஸ், கீதா சான்டிங்கை பேரன்ட்ஸ்க்கு அனுப்பி வச்சி மனப்பாடம் செய்ய வச்சாங்கல? அந்தக் கீதாச்சாரம் மாதிரி ஆரக்கிள், ஆரக்கிள்ன்னு சொல்லணும்... புரியிதா? எப்படிச் சொல்லணும்? சொல்லு பார்ப்போம்...- விவேக்.

ஹா... ஹா... சரி... இனி கொஞ்ச நாள் ஆரக்கிள் ஆரக்கிள்ன்னு சொல்றேன். - ஆர்யா.

ஹா... ஹா... ஆரக்கிள். ஆரக்கிள்.- மிஸ்டர் லவ் குரு.

ஆர்யா ஆரக்கிள் என்று சொன்னதில் அர்த்தம் இருக்கு. ஆனா லவ் குரு எதுக்குங்க ஆரக்கிள் பெயரைச் சொன்னார்? மனுஷன் எதுக்குங்க இன்னும் மது பின்னாடியும் ஆர்யா பின்னாடியும் சுத்திட்டே இருக்கார்?
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
இன்று...

பெங்களூர் டோல் கேட்...

ஹா... ஹா... அப்படின்னா காலேஜ்லயும் மாட்டேன்னு சொல்லிடுச்சா அந்தப் பொண்ணு... பயங்கர கெட்டிக்கார பொண்ணா இருக்கேப்பா. படிக்கிற வயசுல ஆர்யாவுக்கு இதெல்லாம் தேவையா? என்று கேட்டபடி சிரித்த காவல் துறை அதிகாரி சங்கரை விவேக் சற்று லேசாகக் கோபமாகப் பார்க்க,

ம்க்கும் என்று தொண்டையை செருமிக்கொண்டு காவல்துறை அதிகாரி அவசரப்பட்டு பேசிய வார்த்தைகளை உடனடியாக அவரே சரி செய்தார்.

இல்ல... நல்ல பையன்னா, பழகுறதுல தப்பில்ல தான். நீ சொல்றதை வச்சிப் பார்க்கும்போது ஆர்யா ரொம்ப ரொம்ப நல்ல பையனாகத்தான் தெரியிறான். அந்த மது பொண்ணுக்கு கொஞ்சம் திமிரு ஜாஸ்தி தான். நீ மேல சொல்லு. அப்புறம் என்ன ஆச்சு.

சார்...

என்னப்பா??

நீங்க எங்க டீம்மா, மது டீம்மா? நீங்க ஆர்யா ஆர்மியா இல்ல, மது ஆர்மியா?

என்னப்பா இது... நீயும் நானும் ஒரே டீம் தம்பி. நீ மேல கதையைச் சொல்லு.

அப்புறம் ஒரு வழியா காலேஜ் லைஃப் முடிந்தது சார்...

* * *



இரண்டு வருடங்கள் கழித்து ஆர்யாவின் கல்லூரிக்காலம் முடிந்த நேரம்...

அடுத்த இரண்டு வருடங்கள் எப்படிப் போனது என்றே யாருக்கும் தெரியவில்லை. நூல் அறுந்த காத்தாடி போல, கையிலிருந்து பறந்துபோன பலூன்போல நொடிப்பொழுதில் பறந்தே விட்டது. நான்கு ஆண்டுகள் அண்ணாயுனிவர்சிட்டியில் வெற்றிகரமாய் பொறியியல் பயின்று முடித்தார்கள் ஆர்யாவும் அவனுடன் பயின்ற சக மாணவர்களும். அனைவரும் கையில் வேலை வைத்திருந்தனர். குறைந்த பட்சமாய் இன்ஃபோசிஸ் அதிக பட்சமாய் ஐ.ஐ.டியில் இடம் கிடைத்திருந்து அனைத்து மாணவர்களுக்கும்.

ஏய்... என்ன டா ஆரக்கிள்ல வேலை கிடைச்சிருச்சு போலயே?- விவேக்.

ஆமாடா மச்சி. இன்னிக்கி டிரீட் இருக்கு... வீட்டுக்கு வந்திடு.- ஆர்யா.

அய்ய்ய்... டிரீட்டு. என்று யாருக்கும் கேட்காமல் கத்தினார் மிஸ்டர் லவ் குரு.

இப்ப என்ன சார் ஆகப்போகுது? உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்?

* * *



ஆர்யாவும் விவேக்கும் புகாரி பிரியாணிக் கடையில் ஆர்யாவிற்கு வேலைகிடைத்ததை கொண்டாடிக் கொண்டிருந்தபோது இருவரும் கீச்சென்று அந்த ஏ.சி அறையின் கதவு திறக்கும் சப்தம்கேட்டு திரும்பிப் பார்த்தனர். உள்ளே நுழைந்த உருவத்தைப் பார்த்ததும் அறையின் ஏ.சி குளிர் ஆர்யாவின் இதயம் வரை சென்றது.

பல மாதங்கள் கழித்து மதுவை இப்போதுதான் பார்க்கின்றான் ஆர்யா. இன்டர்ஷிப் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாத காலத்திற்குப்பிறகு இப்போதுதான் மதுவைப் பார்க்கும் சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைத்தது. பழைய ஊடல் மறந்து உள்ளுக்குள் வெட்கம் கெட்டுச் சிரித்தது அவனது மனம். ஆனால் வெளியே எதையும் காட்டிக்கொள்ளாமல் கண்டும் காணாததுபோல தனது பிரியாணியிடம் கவனத்தை திசை திருப்பினான் ஆர்யா.

ஏய்ய்... உன்னோட ஃப்ர்ஸ்ட் & செகன்ட் கிரஷ் நாம சாப்பிடுற அதே பிரியாணியைச் சாப்பிட வருது மச்சி.- விவேக்.

சும்மா இருடா. குனி. குனியல, கொன்றுவேன்.- ஆர்யா.

விவேக் சட்டென்று குனிந்து பிரியாணியில் மட்டனை கரண்டியால் தேடினான். ஆர்யாவும் தனது தட்டில் இருந்து ஸ்பூனினால் ஒரு துண்டு மட்டனை எடுத்து வாய்க்குள் திணித்துக்கொண்டான். மட்டனைத் திணித்துவிட்டு நிமிர்ந்தவன் விழிகளின் லென்சுகள் முதலில் படம் பிடித்தது மதுவின் முகத்தைத்தான். அதே போல அவளது விழிகளின் லென்சுகளுக்குள்ளும் ஆர்யா தான். இருவரும் நேருக்கு நேர் பார்த்தபிறகு சம்பிரதாயமாய் சிரித்தான் ஆர்யா.

இரண்டு ஸ்பூன் பிரியாணியை ஒரே ஸ்பூனில் அள்ளி வாய்க்குள் திணித்துக்கொண்டான். அதிகம் வழிந்திடாமல் அளவாய் சிரிக்க அவனுக்கு உதவியது அவனது வாய்க்குள் திணித்திருந்த இரண்டு ஸ்பூன் பிரியாணி. அவன் எதிர்பார்த்தது போலவே அவனை நோக்கியே நடந்து வந்தாள் மது.

ஏய்.. ஆர்யா. வாட் எ சர்ப்ரைஸ். ரொம்ப நாள் ஆச்சு பார்த்து, காம்பஸ் இன்டர்வியுவில நான் ஆரக்கிள் செலக்ட் ஆகிருக்கேன். நீ? என்றாள் ஆர்யாவின் அருகே வந்து சிரித்தபடி நின்ற மது.

இப்ப லவ் குரு சார் ஆரக்கிள் ஆரக்கிள் என்று கத்தியதுக்கும் அய்ய்ய் டிரீட்டு. என்று சிரிச்சதுக்கும் காரணம் லேசாக புரிய ஆரம்பிக்குதுல?

செத்து செத்து விளையாடலாம் வா என்று சினிமா படங்களில் வரும் சிரிப்புப் பேய்கள் விளையாடுவது போல, இந்த லவ் குருவும் மது-ஆர்யா இருவரையும் சேர்த்து பிறகு பிரித்து, மீண்டும் சேர்த்து மீண்டும் பிரித்து விளையாடினார்.

எக்ஸ்குயூஸ் மீ பாஸ்... இந்த ஆரக்கிள் கம்பெனிக்கு கொஞ்சம் வழி சொல்லுங்களேன் ப்ளீஸ்... என்று மிஸ்டர் லவ் குரு ஒரு ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவரிடம் வழிகேட்டுக் கொண்டிருந்தார்.

* * *



இப்ப எதுக்கு என்னையே உத்து உத்து பார்த்திட்டுயிருக்க? அவ பாட்டுக்கு வந்தா, ஆரக்கிள்ல வேலை கிடைச்சிருக்குன்னு சொன்னா. அப்புறம் கிளம்பிட்டா. இதுல என்ன பெரிசா மேட்டர் நடந்திருச்சு? நீ நினைக்கிற மாதிரி ஒண்ணும் நடக்கலை மச்சி.- ஆர்யா.

இல்ல... அவ ஆரக்கிள்ன்னு சொன்னபிறகு உன் முகத்துல பல்ப் எரிஞ்ச மாதிரி இருந்தது. அதான்...- விவேக்.

இதுக்கு தாங்க, இதுக்குதான் அரை கிளாஸ்ல இருந்து ஒரே ஃப்ரண்ட்டை ஃப்ரண்ட்டா வச்சிக்கக் கூடாது. நம்ம மூளை எப்படி டிசைன் டிசைன்னா யோசிக்கும்னு தெரிஞ்சு வச்சிருப்பானுங்க எமகாதனுங்க...

ஆமாடா... இப்படியே ஏத்திவிட்டு ஏத்திவிட்டு நல்ல பசங்களை எல்லாம் ரோமியோவாக சுத்த விட்டுருங்க.- ஆர்யா.

ஹா... ஹா... அப்ப நீ மதுவை லவ் பண்ணவே மாட்ட?

மது மாதிரி டிசைன்ல இருக்கும் எந்தப் பொண்ணயும் நான் லவ் பண்ண மாட்டேன் மச்சி. மது ஒரு புக் வெர்ம்டா மச்சி.

அந்த புக் வெர்ம்தான் நீயாக சொந்தமாக, மை ஃப்ர்ஸ்ட் & பெஸ்ட் கிரஷ். என்ற தலைப்பில் சேத்தன் பகத் மாதிரி புக் எழுதுற அளவுக்கு உனக்கு அனுபவங்கள் கொடுத்திருக்கு மச்சி. அந்த நன்றியுணர்ச்சி உனக்கு கொஞ்சம் கூட இல்லையே?- விவேக்.

ஹா... ஹா... சேத்தன் பகத் புக்கை ராத்திரி முழிச்சிருந்து படிச்சிப் படிச்சி வசனம் பேசுறியா? போடா அங்குட்டு. பிரியாணி தண்ணிட்டியா? கிளம்பலாமா?

இரு மச்சி. பொறுமையா சாப்பிட்டு கிளம்பலாம். ஒரு ஃப்லூடா சொல்லு.

ஆர்யா முறைக்கவும்,

நீயா காசு கட்டப்போற? உன்னோட கிரேடிட் கார்ட்டைத்தான இழுக்கப்போற? கனரா பேங்க்தான காசைக் கட்டப்போகுது? பின்ன எதுக்கு அலுத்துக்கிற? ஃப்லூடாவில ப்ளாக் ஃபாரஸ்ட் இருக்கு? அதை ஆர்டர் பண்ணு.

என்னது?? ப்லூடாவில ப்ளாக் ஃபாரஸ்ட்டா? செத்தாகூட ப்ளாக் ஃபாராஸ்ட் போலாம் மச்சி. நரகம் கருப்பா தான் இருக்குமாம். போறியா?

ஹி... ஹி வரவர உனக்கு ஹுமர் சென்ஸ் கூடிப்போச்சு மச்சி.

நோப்.

இல்லையா? அப்ப நீ காமெடி பண்ணலயா?

நோப்.

பப்புக்கு கூட்டிட்டுப் போன ஃப்ரண்ட்கிட்ட நோப்ன்னு சொல்லாத மச்சி. அப்புறம் நரகத்துக்குதான் போவ. போப் ஆண்டவர்கூட அவரோட நண்பர்கிட்ட நோப்ன்னு சொல்ல மாட்டார் டா.

எதுக்கு டா அவரை இப்ப இழுத்த?

ரைம்மிங் கிடைக்குதுல, தப்பில்ல மச்சி. பப், நோப் போப்ன்னு ரைம்மிங்கா வந்ததுல? நாலு வார்த்தை ரைம்மிங்கா பேச நாலு பேரை யூஸ் பண்றதுள்ள தப்பில்ல மச்சி.

விவேக் மிடியல டா. உன்னோட மூளை யோசிக்கிறதை எல்லாம் உன் நாக்கும் அச்சுப்பிரளாம பேசுறதைப் பார்த்தா... புல்லரிக்குது மச்சி. என்னா ஒரு கனெக்ஷன் அந்த ரெண்டுக்கும்? என்று சொன்ன ஆர்யாவின் உதடுகள் சிரித்தன. ஆனால் மனம் எப்போதோ மதுவை மீண்டும் பார்த்து கிரஷ்ஷாக தயாராகிக் கொண்டிருந்தது.

ஆர்யா ஆரக்கிள் நோக்கி பெங்களூருக்கு பயணப்பட்டான். அவன் பின்னாடியே வால்பிடித்துக் கொண்டு சென்றார் நம்ம... நம்ம... லவ் குருவும்.

சார் உங்களுக்கு வேற வேலையே இல்லையா?- லவ்குருவிடம் நான்.

இல்லையே...- மிஸ்டர் லவ் குரு என்னிடம்.



* * *

மதுவும் ஆர்யாவும் பணியில் சேர்ந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. கிட்டத்தட்ட தொண்ணூறு நாட்கள்...

தொண்ணூற்றி ஓராம் நாளும் இனிமையாய் விடிந்தது...

என்ன?? முகத்துல ஆயிரம் வாட்ஸ் லைட் எரியிது? என்று இருட்டில் பற்றிக்கொண்ட கம்பி மத்தாப்பாய் ஜொலித்த மதுவின் முகத்தைப் பார்த்துக் கேட்டான் ஆர்யா.

ஆன்சைட்ல அமெரிக்கா போறேன் ஆர்யா... இப்பதான் மெயில் வந்தது. என்றாள் அவளும் பெருமையாக.

மதுவின் வெளிநாட்டு மோகத்தை நினைத்து லேசாகச் சிரித்தவன் சம்பிரதாயமாய்,

ஓ... கங்ராட்ஸ் மது. உனக்குத்தான் அமெரிக்கான்னா இஷ்டம் போலயே. என்ஜாய். என்றான்.

தாங்க்ஸ் ஆர்யா. என்ற மதுவிடம் மரியாதை நிமித்தமாய் கைகுலுக்கிவிட்டு தனது கேபினுக்கு சென்றுவிட்டான் ஆர்யா.

ஆனால் மனமோ தனது முதல் கிரஷ் அமெரிக்கா நோக்கிப் பயணப்படுவதை நினைத்து 'போகுதே போகுதே' என்று விளையாட்டாய் கேலியாய் பாடிடத்தான் செய்தது. 'அடச்சீ கம்முன்னு கிட.' என்று அதனை அடக்கினான் ஆர்யா.

மதுவின் மனதில் ஆர்யாவிடம் கல்லூரிக்காலத்தில் இருந்த சபலம் துளியும் இல்லை. ஆர்யாவின் தேஜஸ்ஸோடு ஒத்துப்போகும் பல இளைஞர்களை கடைசி இரண்டு ஆண்டு கல்லூரிக் காலத்தில் அவள் பார்த்து விட்டதால் இப்போது அவனது இளமை அவளது இளமையை பாதிக்கவில்லை.

இளமை ததும்பி நின்ற ஆர்யாவின் மேல் கல்லூரிக்காலத்தில் பற்றிய மோகத் தீ அணைந்து போய் வெகு நாட்கள் ஆகிப்போனது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல அறிவாளி ஆண்களை அவள் சந்திக்க நேர்ந்து அவர்களுடன் நட்பாக மட்டுமே இருக்கப் பழகிக்கொண்டதால் இப்போதும் ஆர்யாவிடம் நட்பு மட்டுமே பாராட்டுவதில் அவளுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, தயக்கமும் இல்லை.

அவளது இளமைக்கும் தயக்கம் இல்லை அவளது புத்திக்கும் தயக்கம் இல்லை.

ஆண் நண்பர்களின் கைபேசி அழைப்புகளை இன்றும் விரும்பாத மது இப்போது ஆர்யாவுடன் பேசுவதை முந்தைய காலத்தில் தவிர்த்ததைப் போல இப்போது தவிர்க்கவில்லை. அவன் நாலு வார்த்தையுடன் நறுக்கென்று நகர்ந்துவிட்டபோதும் மதுவால் விலக முடியவில்லை.

சொற்ப நிமிடங்களிலேயே ஆர்யாவின் கேபினுக்குள் வந்து நின்று, 'ஆர்யா' என்று அவனது பெயரைச் சொல்லி அழைத்திருந்தாள் மது.

ஆர்யா. - மது.

மது அழைத்ததும் சட்டென்று திரும்பி என்ன மது? என்றான்.

கிளம்பிட்டியா? - மது.

யெஸ். நீ? கிளம்பலையா?

இனிதான். கம்பெனி கேப்ல போகணும்.

என்றவனுடன் அவளும் சேர்ந்தே நடந்தாள். பத்து நிமிடங்கள் அவளுடன் நட்பாய் பலவிஷயங்கள் பகிர்ந்து கொண்டான். விவேக் பற்றிக்கூட பேசினான்.

பத்து நிமிடங்களுக்கு மேல் நட்பு பாராட்ட மனம் வரவில்லை. பவித்திரமான மதுவின் பவித்திர பார்கடலில் தொபுகடீர் என்று கவிழ்ந்து விழுந்து மீண்டும் அவளிடம் பல்ப் வாங்கிடவும் அவனுக்குஇஷ்டம் இல்லை.

சரி... பை மது. நீ கிளம்பல? கேப் இப்ப இருக்குமா? என்று கேட்டபடி தனது ஹெல்மெட்டின் பெல்ட்டை லூசாக்கினான் ஆர்யா.

கிளம்பிட்டியா? டைம் என்னச்சு? என்று தனது கைபேசியில் மணியைப் பார்த்தவளோ அரண்டு போய், அச்சோ... மணி ஒன்பது. உன்கிட்டப் பேசிட்டே டைம் பார்க்கல... இனி கம்பெனி கேப் பிடிக்க முடியாது. நைட் ஷிஃப்ட் ஆளுங்களை பிக் அப் பண்ணப் போயிருக்குமே... ஓலா தான் புக் பண்ணணும். ஆர்யா டூ மினிட்ஸ், ஓலா மட்டும் புக் பண்ணிடுறேன். வெயிட் ப்ளீஸ். ஓலா வரும் வரை பேசலாமே. One sec ப்ளீஸ்... என்றவள் தனது கைபேசியில் டாக்சியை புக் செய்ய ஆரம்பித்தாள்.

என்னதான் ஒதுங்கிப்போக நினைத்தாலும் இரவு ஒன்பது மணிக்கு மதுவை தனியாக அனுப்ப மனம் வரவில்லை. தான் அவளுக்கு உதவுவதை விட வேறு உருப்படியான வழியே இல்லை என்றான பிறகு,

எதுக்கு ஓலா? என்கூட வா. மெட்ரோ ஸ்டேஷனுக்குதான? பக்கத்துலதான இருக்கு? 40 minutes டிரைவ் தான? வா டிராப் பண்ணிடுறேன். என்றான் ஆர்யா.

உன் கூடயா?

ஆமா. என்கூடத்தான்.

நீ பைக்ல தான போவ?

ஆமா... இது என்ன கேள்வி மது?

இல்ல... கார்னா வசதியா இருக்கும். உன்கிட்ட கார் இல்லயா ஆர்யா?

'அட பவித்ரமான பெண்ணே...' என்று மனம் மீண்டும் மதுவிற்கே சபாஷ் சொன்னது.

சற்றுமுன் அவளுக்காக இளகிய மனது தூய மேரி ஆலயத்தின் பிரார்த்தனை மெழுகுவர்த்தியாய் இன்னும் இளகிப்போனது. 'அடச்சீ கம்முன்னு கிட.' என்று எப்போதும் போல மனதை அடக்கிய ஆர்யா, மதுவிடம், கார் தான? இனி தான் வாங்கணும். ஆனா... எனக்கு பைக்தான் பிடிக்கும். என்றான்.

ஓ...

ஏய்... என்ன அசையாம நின்னுட்டு இருக்க? வா மது. என்கூட நீ பைக்ல வந்ததை யார் பார்க்கப்போறா? இது பெங்களூர்ப்பா, சென்னை இல்லை. உன்னோட டீச்சர் அம்மாவிடமும் ப்ரொபர்சர் அப்பாவிடமும் வத்திவைக்க ஆள் இல்லை, பயப்படாம வா.

அது...

என்ன மது? டோன்ட் பி சில்லி. வா. என்று முன்னே நடக்க ஆரம்பித்தான்.

அவன் சொன்னதை ஆமோதித்தபடியே கொஞ்சம் திருட்டுத்தனம் செய்யத் துடித்த மதுவின் டீன்ஏஜ் மனதும் ஆர்யாவுடன் பைக்கில் செல்ல ஒப்புதல் அளித்தது.

பைக்கில் ஒரு பையனுடன் சென்றால் மனது 'மென்ட்டல் மனதில்...' பாடலை இசைக்க ஆரம்பித்து விடுமா? இல்லை இறக்கை முளைத்து விடுமா? பலமுறை பைக் பயணத்தை மற்ற பெண்கள் ரசித்துப்பேசியபோது வேடிக்கையாகப் பரிதாபமாகப் பார்த்திருக்கிறாள். ஆனால் இப்போது தனக்குள் துள்ளிக் குதிக்கும் மனதை சமன்படுத்திவிட்டு ஆர்யாவின் பைக் அருகே அமைதியாகவே நின்றாள் மது.

மது... வண்டியை ஸ்டார்ட் பண்ணிட்டேன். ஏறு.

சரி. என்றவள் ஒரு பக்கமாக கால்களைப் போட்டுக்கொண்டு ஆர்யாவின் பைக்கில் உட்கார்ந்தாள்.

இரண்டு பக்கம் கால் போட்டு நல்லா உட்காரு மது. 40 மினிட்ஸ் டிரைவ்... ஒரு பக்கம் கால்போட்டு உட்கார்ந்து வந்தா கால் கடுக்கும்.

பரவாயில்ல ஆர்யா. இப்படியே உட்கார்ந்துக்கிறேன். நீ கிளம்பு.

'பைக்ல இரண்டு கால் போட்டு உட்கார மாட்டியா? ஒத்தக்கால் போட்டுத்தான் உட்காருவியா? டச்சிங் டச்சிங் பிடிக்காதா?அடப் பவித்திரத்தின் சிகரமே... எனக்கும் இப்ப அந்த டச்சிங் டச்சிங் வேணாம். என் வீட்டுல ஏற்கனவே பத்து பன்னிரெண்டு பல்ப் இருக்கும்மா. உன்கிட்டயும் பல்ப் வாங்கிட எனக்கு இஷ்டமில்ல. நல்ல நல்ல பொண்ணுங்களுக்கு மட்டும் தான் டச்சிங் டச்சிங் பிடிக்காதா? நல்ல நல்ல பசங்களுக்கும் தான் அந்த டச்சிங் டச்சிங் பிடிக்காது மது.' என்று சொன்னது ஆர்யாவின் மனது.

ஆனால் பைக்கில் சென்றபோது எந்தவொரு ஷணத்திலும் அவள் நகம்கூட அவன் மேல் படவில்லை. அவனது ஆண்மையை சோதிக்காத மதுவை, 'பவித்திரத்தின் பவித்திரமே, பவித்திரத்தின் சிகரமே...' என்று வாழ்த்துப் பாடல் பாடியது அவனது மனம்.

மனதின் கேலி கிண்டலை வழக்கம் போல், 'அடச்சீ கம்முன்னு கிட.' என்று அடக்கவில்லை ஆர்யா. ஏன்னென்றால் அவனது உடலின் லட்சோப லட்சம் செல்களும் மனதின் அக்கருத்தை ஆமோதித்தன.

மதுவின் நிழல்கூட ஆர்யாவைத் தொடவில்லை. அவளின் மூச்சுக்காற்றுகூட அவனது கழுத்தில் உராயவில்லை. சுருக்கமாகச் சொன்னால் ஒரு பெண்ணை ஏற்றிக்கொண்டு போகிறோம் என்று உணர்வு கூட ஆர்யாவிற்கு வரவில்லை. அவனது முதுகுக்கு பின்னால் இருக்கும் வண்டியின் பின்டயரைப் போல அவளும் வண்டியின் பாகமாக மாறிவிட்டிருந்தாள்.

மெட்ரோ வரும்வரை அவளுடன் பேசிக் கொண்டே இருந்த போதும் அதிகப்படியாக உரிமை எடுத்துக்கொள்ளாத ஆர்யாவின் 'ஜென்டில்மேன்'தனம் மதுவிற்கு மிகவும் பிடித்தது.

ஆர்யாவின் பைக் வேகமெடுத்த முதல் நான்கு நிமிடங்களில் ஆர்யாவின் இளமை அவளை திமிங்கலமாய் விழுங்கத் தொடங்கியது.

அந்த நான்கு நிமிடங்கள் மட்டுமே அவளது இளமையின் சபலத்திற்கான கோட்டா. அதற்குப் பிறகு எந்த ஒரு நிமிடத்தையும் மது தன் இளமைக்கு விட்டுத்தரவில்லை. ஒரு ஆண்ணின் நெருக்கத்தில் உண்டான சபலம் இது என்று புரிந்த பிறகு கிறுக்கு மனதை இருட்டு அறையில் ஒரு சிறு இரும்புப் பெட்டிக்குள் வைத்து பூட்டிவிட்டாள். இருட்டு இரும்புப் பெட்டியில் அடைக்கப்பட்ட மதுவின் கிறுக்கு மனம் மயங்கி மூர்ச்சையாகிட... நிம்மதியாய் ஆர்யாவுடன் பைக்கில் மதுவின் உடல் பயணப்பட்டது.

அந்த பைக் பயணத்தின்போது அவளை தனது பைக்கின் பின்டயராய் ஆர்யா பாவித்திருந்தாலும் வீடு வந்தபிறகு இரவெல்லாம் மதுமிதாதான். அவனது முதலாவது மற்றும் இரண்டாவது கிரஷ்ஷாக இருந்த 'மதுமிதா அர்ஜ÷ன்' அவனது மூன்றாவது கிரஷ்ஷாகவும் மாறி அவனை அன்று முதல் இம்சிக்கத் தொடங்கினாள்.

* * *
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
யாரை பைக்கின் பின் டயர் என்று பாவித்து புத்திக்குள் ஏற்றாமல் இருந்தானோ அவள் தான் அவனது புத்தியின் அனைத்து செல்களையும் தன் வசமாக்கியிருந்தாள்.

நிழலான கனவுகளில் ஆட்டம் கண்டது அவனது மனஉறுதி. ஆனால் நிஜமான பகலில் அசோகா பில்லரைப்போல ஓங்கி ஒய்யாரமாய் உறுதியாய் நின்றது அதே மனஉறுதி. கொத்தாய் அவனது கனவுகளை அவள் சூரையாடியிருந்தாலும் கெத்தாய் வலம் வந்தான் மது முன்னே.

அவளுடன் இருக்கும் போதெல்லாம் அவளின் செல்களின் கதிர்வீச்சு அவனுக்குள் ஊடுருவிக் கொண்டே இருந்தது. இன்ப வயாகரா... தப்பு தப்பு சாமி சரணம்... இன்ப நயாகரா அவனை நனைத்துக்கொண்டே இருந்தது.

இத்தனை நாளும் மது என்னும் பவித்திர பார்கடலில் விழாமல் தப்பித்துக்கொண்டே இருந்தவன் எப்போது எக்கணம் விழுந்து நீச்சல் அடிக்க ஆரம்பித்தான் என்பது அவனுக்கே இக்கணம் வரை புரியாத புதிராகத் தான் இருக்கின்றது.

அவளுடன் கழித்த தொண்ணூறு நாட்களில் இருந்த 5000 நிமிடங்களில் ஏதோ ஒரு நிமிடம் தான் அவன் மதுவின் பவித்திர பார்கடலுக்குள் விழுந்திருக்க வேண்டும் என்று சரியாக கணித்தவன் மதுவுடன் தனிமையில் இருப்பதை தவிர்த்துக்கொண்டே வந்தான். இத்தனை நாளும் அவளது முகத்தைப் பார்த்துப் பேசியவனால் தனிமையில் அவளது முகத்தை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை.

முகத்துக்குள் அழகாய் ஜொலிக்கும் உதடுகளை 30 டிகிரி, 40 டிகிரி, 60 டிகிரி என அத்தனை கோணத்திலும் பார்க்க பரபரத்தது அவனது ஆண்மை.

உதடுகளை மட்டுமா அவனது ஜாமென்டிரி கண்கண் நோட்டம்விட்டன?? இல்லை.

அவளது பொன்மேனியை வைத்து அங்குலம் அங்குலமாக பயாலஜி படித்துக்கொண்டிந்த தனது ஜாமென்டிரி கண்களுக்கு தனிமையில் மதுவை நோட்டம்விட அனுமதிக்கக் கூடாது என்று முடிவு எடுத்திருந்தான் அந்த பைக் பயணத்திற்குப் பிறகு.

அவர்களின் பைக் பயணத்தை பெங்களூர் சாலையில் பானி பூரி விற்றுக்கொண்டிருந்தவன், கோன் ஐஸ் விற்றுக்கொண்டிருந்தவன், கம்பிளிப் போர்வை விற்றுக் கொண்டிருந்தவன் என அனைவரும் ஏக்கமாகப் பார்க்க... ஒரே ஒரு ஜோடிக் கண்கள் மட்டும் கோபமாகப் பார்த்தது.

அந்த ஒரு ஜோடிக் கண்களின் சொந்தக்காரர் மிஸ்டர்... மிஸ்டர்...



* * *

15

அந்த பைக் பயணத்திற்குப் பிறகு மதுவும் ஆர்யாவும் நேரில் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு ஆர்யா சென்னை சென்றிருந்தான்.

மது அந்த பைக் பயணத்தை மறந்துவிட இந்த இடைப்பட்ட ஒரு வார கால அவகாசம் போதுமானதாக இருந்தது. அந்த முதல் நான்கு நிமிடங்கள் முழுதாக மனதைவிட்டு அகலாவிட்டாலும் அதன் தாக்கம் பெருமளவில் குறைந்து போனது. சகஜமாய் தனது வேலைகளை அந்த கருப்பு பைக்கை நினைக்காமல் அவளால் செய்ய முடிந்தது.

ஒரு அலுவலக விழாவில் பஃபேயில் இருந்த புஃல்காவோடு பன்னீர் பட்டர் மசாலாவையும் எடுத்துக்கொண்டு, வெள்ளை சாட்டின் ஆடை அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கபட்ட நாற்காலியில் அமர்ந்துகொண்டாள் மது. அப்போது தான் பத்து நாட்களுக்குப் பிறகு அந்த அரங்கத்தில் ஆர்யாவைப் பார்த்தாள் மது. ஆர்யா தனியாக அந்த அரங்கத்திற்குள் சுற்றி வருவதைப் பார்த்தாள்.

தனதருகே அதேபோல உடையணிந்திருந்த நாற்காலியை பக்கத்தில் இழுத்து வைத்துக்கொண்டு சாலட்டை தனது தட்டில் அடுக்கிக்கொண்டிருந்த ஆர்யாவை, 'ஏய் ஆர்யா' எனச் சத்தமாக அழைத்தாள். தான் சிறை பிடித்து வைத்திருந்த நாற்காலியைச் சுட்டிக்காட்டி, உனக்கு தான் ரிசர்வ் பண்ணிருக்கேன். கம் ஃபாஸ்ட். என்றாள்.

ஆர்யா அருகே வந்ததும், என்ன ஊருக்குப்போய் பத்து நாள் டேரா போட்டுட்ட? என்று கேலியாய் வினவினாள் மது.

சித்தப்பா பையன் கல்யாணம் மது. டெல்லியில் நடந்தது. அதான் பத்து நாள் லீவு தேவையாகிடுச்சு.

ஓ...

இன்னும் நாலு மசாத்துல அமெரிக்கா போறேன் ஆர்யா. விசா வந்திடுச்சு.

ஓ...

ஆர்யா உனக்கு அமெரிக்கா லைஃப் பற்றி ஏதாவது தெரிஞ்சா சொல்லு... என்னோட ஃப்ரண்ட்ஸ் அமெரிக்கா பற்றி நிறைய சொல்றாங்க... அந்த நாட்டுக்குள்ள கால் எடுத்து வைச்சதும் முதல் நாலு நாள்ல நமக்கு கழுத்து சுழுக்கிடுமாம். மேலே நிமிர்ந்து நிமிர்ந்து எல்லா கட்டிடத்தின் உயரத்தையும் பார்த்து கழுத்து வலியே வந்திடுமாம் ஆர்யா. பத்து மாடி பில்டிங்ல 150 அப்பார்ட்மென்ட் வீடுகள் வரை இருக்குமாம் ஆர்யா. ஒரு முறை 2003 ஆம் வருஷம் நான்கு நாட்கள் கரன்ட் கட் ஆச்சாம். அப்போ யாரும் வீட்டுக்குப் போக முடியாம தெருவில் படுத்துக் கிட்டாங்களாம். பத்தாவது மாடியில குடியிருந்தவர்கள் எல்லோரும் கரன்ட் இல்லாமல் லிஃப்ட்ல போக முடியாதுன்னு தெருவிலேயே படுத்துக் கிட்டாங்களாம் ஆர்யா.

ஓ... மது அவன்ஜர்ஸ் படம் பார்க்கணும்னு சொன்னீல? இந்தா பென் டிரைவ்.. என்று தனது பென் டிரைவ் கொடுத்து அவளது பேச்சை திசை திருப்பப் பார்த்தான் ஆர்யா.

ஆனால் ஆர்யாவின் பென்டிரைவ்வை வாங்கி தனது பேக்கில் போட்டுக்கொண்டவள் மீண்டும் அமெரிக்காவைப் பற்றியே புரளி பேசினாள்.

'நான் பத்து நாள் முன்னே இவளைத்தான் என்னோட பைக்ல கூட்டிட்டுப் போனேனா, இல்ல... வேற பொண்ணை பைக்ல கூட்டிட்டுப் போனேனா? இவ பேசுறதைப் பார்த்தா என் கூட பைக்ல வந்த மாதிரி சிம்டம்ஸே காட்டலயே... ஆம்பளப் பிள்ளை எனக்கே பல சமாச்சாரங்கள் தோணும்போது இந்தப்பிள்ளைக்கு ஏன் எதுவுமே தோணல? யாக்கர் பவுள் பண்ணாக்கூட உன்னோட ஸ்டெம்ப் மண்ணைக் கவ்விட்டு ஸ்டெடியா நிற்குதே மது. நீ உண்மையிலேயே கிரேட்தான். பசங்களோட கரிஷ்மா, தேஜஸ் தாக்காம இருக்க ஏதாவது ஸ்ஹஸ்ரீஸ்ரீண்ய்ங் போடுறாளோ? அமெரிக்காகாரன் கரண்ட் இல்லாம ரோட்டுல படுத்தா எனக்கென்ன? அவன் பெட்டுல படுத்தா எனக்கென்ன?' என்று தீவிரமான யோசனையில் இருந்தவனிடம்,

'கால் வலிச்சா கால்ல ஜன்டூ பாம் போட்டுக்கலாம். காது வலிச்சா... காதுல ஜன்டூ பாம்மா போட்டுக்க முடியும்? மதுவை நிறுத்துச்சொல்லு ஆர்யா. ஒரு ஓரத்துல உட்கார்ந்து இந்த சாலட்ல இருக்கிற நாலு காரெட், நாலு வெள்ளிரிப்பிஞ்சை சத்தமில்லாம சாப்பிட்டுட்டுப் போயிடலாம் வாடா ஆர்யா.' என்று மேலும் இம்சித்தது அவனின் மனது.

மனதையும் சமாளித்து தன்னையும் சமாளித்து தேவையானபோது ஒரு மட்டும் மதுவிடம் பதிலாகச் சொல்லிக்கொண்டே இருந்தான் ஆர்யா.

ஓ...- ஆர்யா.

அமெரிக்காவின் அந்த நியு யியர் பால், அந்த கவுன்ட் டவுன் எல்லாம் நான் இந்த வருஷம் பார்க்கப்போறேன்னு நினைச்சா எனக்கு நம்பவே முடியல ஆர்யா. என்று விழாவில் இருந்து கிளம்பும் போதும் மது மட்டுமே பேசிக் கொண்டே இருக்க... ஆர்யாவும் மதுவும் லிஃப்ட் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் கிளம்பிய நேரம் இரவு எட்டு மணி.

இப்போது இருவரும் அலுவலகத்திற்கு நைட் ஷிஃப்ட் வேலைக்குச் செல்ல வேண்டும். கீழ் தளத்தில் விழா நடந்தது, மற்றவர்கள் இன்னும் ஜுஸ் டான்ஸ் என்று லயித்து இருந்தபோது மதுவும் ஆர்யாவும் மேல் தளத்தில் இருக்கும் அலுவலகம் செல்ல லிஃப்ட் நோக்கி நடந்தனர்.

லிஃப்ட்டை நெருங்க நெருங்க பதட்டம் அடைந்தான் ஆர்யா. அவனது விழிகள் தான் அவளுடன் பேச ஆரம்பித்த கணத்தில் இருந்து அவளிடம் பயாலஜி பாடத்தை படிக்க ஆரம்பித்து விட்டதே... அதனால் வந்த பதட்டம். விழிகளில் ஆரம்பித்த பாடம் உதடு, கன்னம், தாடை என்று படிபடிப்பாக கீழ்நோக்கி நகர ஆரம்பிக்க ஜன்னியே வந்துவிட்டது அவனுக்கு. பதட்டம் கூடியது...

அவனது கெட்ட நேரம் லிஃப்ட்டின் எதிரே அவர்கள் இருவரும் சென்று நின்ற நொடி அது உடனே திறந்து கொண்டது.

அவனது கெட்ட நேரத்தின் கெட்ட நேரம் லிஃப்டிற்குள் யாருமே இல்லை.

அவனது கெட்ட நேரத்தின் கெட்ட நேரத்தின் கெட்ட நேரம் லிஃப்ட்டிற்குள் நுழைந்ததும் மது அவனது உதடுகளுக்கு வெகு அருகில் இருந்தாள்.

* * *

லிஃப்ட்டின் கதவுகளை மூடும் பொத்தானை மது தொட்டுவிட்டு நான் 4வது மாடி... நீ மீட்டிங் ஹால் தான போற? அது ஆறாவது மாடி... என்று அவனுடன் பேசியபோது தான் அவனது உதடும் அவளது கன்னமும் அருகருகே இருந்தன.

அடுத்த நொடி அவள் அவனது உதடுகளிமிருந்து பாதுகாப்பான இடத்திற்கு நகர்ந்து விட்டாள். லிஃப்ட் நகர ஆரம்பித்ததும் அமைதியாக தனது கைபேசியில் மூழ்கிய மதுவின் உதடுகளைப் பார்த்து தடைபட்ட பயாலஜி பாடத்தை மீண்டும் படிக்கும் தீர்மானத்துடன், என்ன பண்ற மது? அமிஞ்சிக்கரை பற்றி கூகுள் பண்றியா? என்று வம்பு வளர்த்தான் ஆர்யா.

வாட்?

அமெரிக்கா பற்றி கூகுள் பண்றியான்னு கேட்டேன்...

ஏய் என்னைக் கிண்டல் பண்றியா? என்று மது கேட்டதற்கு பதிலே தராமல் சிரித்தவனிடம், நீங்க கூகிள் பண்ணவே மாட்டீங்களோ?? கடைசியா நீங்க எதை கூகுள் பண்ணீங்க சார்? என்று எடக்காகக் கேட்டாள்.

ரீசென்ட்டா திருமலைநாயக்கர் மஹால் பற்றி பார்த்துட்டு இருக்கேன்... உன்னோட அமெரிக்கா இது பக்கத்துலயே வர முடியாது தெரியுமா? என்றவன் மஹாலின் புகைப்படத்தை அவளுக்கு தனது கைபேசியில் காட்டினான்.

இந்த பில்டிங் எனக்குத் தெரியும் ஆர்யா... ஐஸ்வர்யா ராயும் அபிஷேக்கும் குரு படத்துல இந்த பில்டிங்ல டான்ஸ் ஆடிருப்பாங்க...

என்னது பில்டிங்கா? சத்தமா சொல்லாத மது... திருமலைநாயக்கர் மன்னர் நைட் கனவுல வந்து உன்னைக் கசமுசா பண்ணிடுவார்.

வாட்?? என்று அதிர்ச்சியாய் விழித்தவளிடம்,

இது ஒரு அரண்மனை மது. அரண்மனையை பில்டிங்ன்னு சொன்னா மன்னர் கோச்சிக்க மாட்டாரா?

ஹா... ஹா... உன்னோட அம்மிஞ்சிக்கரை உண்மையிலேயே அமெரிக்காவை விட நல்லாதான் இருக்கு. என்று அவனிடம் தனது விரல்களில் தம்ப்ஸ் அப் காட்டியபடியே சொன்னாள் மது.

தம்ப்ஸ் அப் என்று காட்டிய விரல்களை விடுத்து தம்ப்ஸ் அப் என்று சொன்ன உதடுகளைப் படித்தான் ஆர்யா. எத்தனை முறை அதைப் படித்தாலும் அதைப்பற்றி... அவளது உதடுகளைப் பற்றிக் கண்ணா பிண்ணாவென்று சந்தேகம் எழுந்துகொண்டே தான் இருந்தது அவனுக்கு.

உதடுகள் பற்றிய சப்ஜெக்டில் நீயும் அவளும் குரூப் ஸ்டடி பண்ணா டவுட் வராதுன்னு நினைக்கிறேன்... என்று அவனிடம் எடுக்கு பேசியது அவனது ஆண்மை.

பிடிச்ச பொண்ணா இருந்தாலும் அவ பெர்மிஷன் இல்லாம அவ உதடு, கண்ணு அப்புறம் Etc, Etc எல்லாம் பார்க்கிறது தப்புப்பா ஆர்யா. என்று நல்லவிதமாய் புத்திமதி சொன்ன மனதிடம், மண்ணாங்கட்டி என்று திமிராய் பதில் தந்தான் ஆர்யா.

லிஃப்ட் நின்றது. மது நான்காம் தளத்தில் இறங்கிக்கொண்டாள். ஆர்யா ஆறாவது பொத்தானை அழுத்தினான்.

அப்பாடா... இன்னும் ரெண்டு ஃப்ளோர் இருந்தது... இந்நேரம் பெரிய கசமுசாவே இந்த லிஃப்டில் நடந்திருக்கும்ல ஆர்யா? உலக மகா லவ் சீன் இப்ப இந்த லிஃப்டல தான் நடந்திருக்கும் இல்ல ஆர்யா? என்று அவள் சென்ற பிறகு அவனது மனது அவனிடமே சந்தேகம் கேட்க, ஆம் என்று சொல்லி ஆமோதிப்பதா, இல்லை... நான் மதுவைவிட ஸ்டாராங் மச்சி. என்று சொல்லி மறுப்பதா என்று தெரியாமல் லிஃப்டிற்குள் குழம்பி நின்றான் ஆர்யா.

யெஸ் ஆர் நோ...(yes or no) - மீன்டும் நச்சரித்தது ஆர்யாவின் மனது.

லிஃப்ட்டிற்குள் இருந்த சில்வர் நிறத்தில் ஜொலித்த ஸ்டீல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு ஆர்யா அமைதியாக நின்றான்.

யெஸ் ஆர் நோ...(yes or no) - மீன்டும் நச்சரித்தது ஆர்யாவின் மனது.

ஆர்யா மனதிடம் பிடிவாதமாய் பதில் பேசாமல் அமைதி காத்தான்.

இன்னும் இரண்டு மாடி இருந்திருந்தா, இப்ப இந்த லிஃப்டுக்குள்ள தப்பு நடந்திருக்குமா இல்லையா? யெஸ் ஆர் நோ... (yes or no)- மீன்டும் மீன்டும் நச்சரித்தது ஆர்யாவின் மனது.

யெஸ் யெஸ் யெஸ். என்று கண்மூடித்தனமாய் தனது பதிலை மனதிடம் கத்தினான் ஆர்யா. அதே நேரம் ஐந்தாம் தளத்தில் லிஃப்ட் கதவுகள் திறந்தன. அவன் எதிரே மது நின்று கொண்டிருந்தாள்.

எனக்கும் மீட்டிங் ஹால்தானாம்... நானும் ஆறாவது ஃப்ளோர் ஆர்யா. என்று கூறிச் சிரித்தாள் மது.

உடலின் ஹார்மோன்களின் கஷ்டம் புரியாத ஈவுஇரக்கமற்ற மனது, இன்னும் ஒரு மாடி அவகூட லிஃப்ட்ல தனியாகப் போகப் போற... இப்ப யெஸ் ஆர் நோ சொல்லு ஆர்யா. கசமுசா நடக்குமா நடக்காதா? யெஸ் ஆர் நோ? என்று சற்றுமுன் தன்னிடம் கோபப்பட்டவனிடம் படு கெத்தாய்க் கேட்டது.

சற்று முன் தன்னிடம் மண்ணாங்கட்டி என்று கூறி எறிச்சல் அடைந்தவனிடம் நக்கலாய் அக் கேள்வியைக் கேட்டது அவனது மனது.



* * *

ஏய் நான் பெங்களூர் வந்து பத்து நாளாச்சு. இன்னும் இங்க வானிலை எப்படின்னு நீ ரிப்போர்ட்டே வாசிக்கலையே மச்சி?- விவேக்.

டேய்... ஒரு மேட்டரும் இல்ல டா. நம்பு.

ஒண்ணுமில்ல?

ஒண்ணுமில்லயே...

டேய், புழுகாதடா. கடைசி காலத்துல பிட்ஸா கிடைக்காம அலைவ. மது உன்னோட பிரான்ச் தான?

ஆமா. நாங்க ஒரே ஃப்ளோர்தான். இரண்டு கேபினுக்கு தள்ளிதான் இருக்கா. இப்ப அதுக்கு என்ன?

எப்படி பேசுறா? உன்கூட எப்படி பேசுறா?

ப்ச். அடிச்சிடுவேன்டா... மது பத்திக் கேட்காத...

என்ன மச்சி ரொம்ப டென்ஷனாகுற? வானிலை அவ்வளவு மோசமாவா இருக்கு?

மச்சி... நமக்குத் தெரிஞ்ச பொண்ணை நாலு பேர் ஸைட் அடிக்கிறதைப் பார்க்கும்போது எப்படி இருக்கும்னு உனக்குத் தெரியுமாடா விவேக்?

என்னடா இப்படி சட்டுன்னு கேட்டுட்ட? என்கிட்ட கேட்காமலே எனக்கு அதுல நிறைய அனுபவம் இருக்குன்னு உனக்கும் தெரிஞ்சிருக்கும். இருந்தாலும் சம்பிரதாயமா கேட்டிருக்க. அப்படித்தான?

டேய்...

சரி... பேச்சை கொறச்சிக்கிறேன். அதுல எனக்கு நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு மச்சி. 100 டிகிரியில ஒரு மூனு மணி நேரம் டைம் செட் பண்ணி நம்ம ஹார்ட்டை மைக்கிரோவேவ் ஓவன்ல வச்ச மாதிரி இருக்கும் அந்த ஃபீல். நீ மேல சொல்லு.

எதிர்த்த கேபின், பக்கத்து கேபின்னு எல்லா கேபின்ல இருப்பவனும் மதுவை ஸைட் அடிக்கிறானுங்க மச்சி.

பயப்படாத. மது எல்லோருக்கும் டாட்டா காட்டிடுவா.

ஒருத்தனும் உருப்படியில்ல மச்சி. இங்கயிருக்கிற பசங்க எல்லோரும் பீரையும் ரம்மையும் பூஸ்ட், ஹார்லிக்ஸ் மாதிரி குடிக்கிறாங்க டா. ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடுவேன்கிற மாதிரி அப்படியே ராவாக ரம்மை அடிக்கிறானுங்க மச்சி. பார்க்கப் பார்க்க உமட்டுது. மது மாதிரி பவித்ரமான பொண்ணு இந்த மாதிரி கேஸுங்ககிட்ட மாட்டிக்குமோன்னு பயம் வருது மச்சி. அவ டேஸ்ட் எனக்குத் தெரியாதுல...

பயப்படவே பயப்படாத. அதுக்கு வாய்ப்பே இல்ல.

நிஜமாகவா டா விவேக்?

ஆர்யா நீ அக்மார்க் கன்னிப்பையன் டா...

என்னது??

சரி கன்னிப் பையன் இல்லதான் ஒத்துக்குறேன், ஆனா நீ ஒரு அக்மார்க் தமிழ்ப் பையன் டா.

டேய் துணி துவைக்கிற அக்கா வாஷிங்மிஷின்ல துணியைப் போட்டுட்டு இருக்காங்க டா, மானத்தை வாங்காதடா விவேக். சத்தமா பேசாத... என்ன டா சொல்ல வர்ற?

நான் நேரா விஷயத்துக்கு வர்றேன். நீ ஒரு அக்மார்க் தமிழ்ப்பையன். உனக்கே டாட்டா காட்டினவடா அவ. மத்தவங்களுக்கு காட்ட மாட்டாளா? நீ பயப்படவே பயப்படாத. மது நோ என்று சொன்னால் நோ தான் டா. அது எப்பவுமே யெஸ்ஸாக மாறாது. மது அவுங்க அப்பா அம்மா சொன்ன பையனைத்தான் கட்டிக்கும் மச்சி. ஆமா எனக்கு ஒரு டவுட் மச்சி...

என்னடா?

நீ மதுவை லவ் பண்ண ஆசைப்படுற மாதிரி இருக்கே... போர் அடிக்கிதேன்னு “கார்ஸ்” படம் பார்க்க உன்னோட ரெட் கலர் பென் டிரைவ் கேட்டா... மதுகிட்டக் கொடுத்திருக்கேன்னு சொல்ற. லாப்டாப் குடுன்னு கேட்டா... அதுவும் மதுகிட்ட இருக்குன்னு சொல்ற... பென்டிரைவ், லாப்டாப் என்று பண்டம் மாற்றம் எல்லாம் பலமா இருக்கே...

நான் மதுவை லவ் பண்றேன் மச்சி.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
நான் மதுவை லவ் பண்றேன் மச்சி.

ஓ... இதுதான் மேட்டரா? அர்ஜுன் சார் நம்பர் வாங்கித்தரவா? மதுகிட்டப் உன் லவ் பற்றிப் பேசாத. அவர்கிட்ட நேராப் பேசு, அப்பா யெஸ் சொன்னா மதுவும் யெஸ் சொல்லிடுவா... முக்கியமா மதுகிட்ட ஃபோன்ல இதைப்பற்றி பேசவே பேசாத... இன்னும் எல்லா ஃபோன்லயும் ப்ளாக் பண்ற ஆப்ஷன் இருக்கு மச்சி. சாம்சங்காரன் கடைசியா லான்ச் பண்ண ஃபோன்லக்கூட ப்ளாக் ஆப்ஷன் இருக்கு.

ப்ளாக் பண்ணி விளையாட நாங்க இன்னும் சின்னப் பசங்களாடா? மனசுல இருக்கிறதை பளிச்சுன்னு முகத்துக்கு நேரா சொல்ற வயசு வந்திருச்சு ரெண்டு பேருக்கும். எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, ஐ லவ் யூன்னு சொல்றது சப்ப மேட்டர். 'Hello Good Morning, I am fine, How Are You?' என்று கேட்குறது மாதிரிதான் 'I Love You' சொல்றதும் விவேக். சப்ப மேட்டர்.

ஓ... நீ சொல்லிட்டியா? நீ மதுகிட்ட “அந்த” குட்மார்னிங் சொல்லிட்டியா? என்று விவேக் கேட்டபோது ஆர்யா முகத்தை திருப்பிக்கொண்டான்.

என்னடா? பதிலே சொல்ல மாட்டிக்குற? நீ தானப்பா சொன்ன அந்த குட் மார்னிங் சொல்றது சப்ப மேட்டர்னு... அந்த சப்பை மேட்டரைச் சொன்னியா இல்லையா?

ப்ச்...

என்னடா?

சொதப்பிட்டேன் மச்சி.

அது தெரியும்.

??

அதான் உன் மூஞ்சிலயே எழுதி ஒட்டியிருக்கே. சொதப்பிட்டன்னு புரியிது. எங்க எப்படின்னு சொல்லு. ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுதான்னு பார்க்குறேன். என்று நண்பனாய் பொறுப்பாய் விவேக் கேட்டபோது அவனது கைபேசி அவனை அழைத்தது.

மதர் காலிங் என்று திரையில் தோன்றியதும் அழைப்பை ஏற்று,

அம்மா சொல்லுங்க. என்றான் விவேக்.

மறுமுனையில் விவேக்கின் அன்னை அவனிடம் ஏதோ பேசினார்.

இன்னும் ஒரு வருஷம் போகட்டும்மா. 24 தான ஆகுது...

நம்ம ஜோசியர் சொன்னார்ப்பா. 25க்குள்ள முடிக்கணுமாம். இப்ப இருந்து பார்க்க ஆரம்பிச்சா சரியா இருக்கும்ல?- வவிவேக்கின் அன்னை.

என்ன? 25க்குள்ள கல்யாணம் முடிக்கணுமா? அது சைல்டு மேரேஜ்மா. கவர்மென்ட்டே 25ல கல்யாணம் செய்தா ரேஷன் கார்ட்கூடக் கொடுக்காது. ஆதார் கார்ட்டே கேன்சல் ஆகிடும். - விவேக்.

அப்படியா டா?- விவேக்கின் அப்பாவி அன்னை.

இதைப்பற்றி அப்புறம் பேசலாம்மா. இனி பொண்ணு பார்க்கிற வேலையை மறந்திடுங்க. சரியா? என்று அம்மாவிடம் பேசிவிட்டு கைபேசியை அணைத்தான் விவேக்.

மீண்டும் ஆர்யாவிடம் பேச்சைத் தொடர்ந்தான் விவேக்.

பொண்ணு பார்க்கப்போறாங்களாம் டா. 25 வயசுக்குள்ள கல்யாணம் முடிக்கணுமாம். அது சைல்டு மேரேஜ்னு என் அம்மாவுக்கு புரிய வைக்கணும். 25 வயசுல கல்யாணம் பண்ணி உடனே ஃப்ர்ஸ்ட் நைட் கொண்டாடி என்ன பண்ணப்போறேன் சொல்லு? என்றான் சலிப்பாக ஆர்யாவிடம்.

இங்க ஒருத்தன் ஒரு கிஸ் பண்ணிட்டு மது என்னைப் பற்றி தப்பா நினைச்சுடுவாளோன்னு பயந்துட்டு இருக்கேன். நீ ஃப்ர்ஸ்ட் நைட் பத்திப் பேசுற? - கோபமாக ஆர்யா.

ஏஏப் என்று சட்டென்று புரையேறியது விவேக்கிற்கு.

தண்ணீரைக் குடித்து தொண்டையை சரிசெய்தவன், எப்படா? எப்படா மேட்டர் முடிச்ச?

நீ வேற... மேட்டர்னு சொல்லி வெறுப்பேத்தாத. சின்ன கிஸ்தான் பண்னேன்... நேத்து ஃப்ங்ஷன் முடிந்தபோது... நைட் ஷிஃப்ட்க்கு போன போதுதான் சொன்னேன்.

நேற்று நீயும் மதுவும் நைட் ஷிஃப்ட் போனப்பயா?

ம்.

நைட்டையே அசிங்கப்படுத்திட்ட மச்சி. நைட்ல என்ன பண்ணுவாங்கன்னு தெரியுமா?

டேய் டேய்...

சரி டென்ஷன் ஆகாத. ஆஃப்பீஸுல வச்சா கிஸ் பண்ண?

லிஃப்டல வச்சி. கைக்கெட்டுற தூரத்துல மதுவோட கை இருந்ததா... அவ கையைப் பிடிச்சி ஹான்ட்ஷேக் பண்ணி ஐ லவ் யூ சொன்னேன் டா. அப்புறம் என்னோட உதட்டுக்கு எட்டுற தூரத்துல அவ உதடும் இருந்ததா...

உடனே உதட்டால அவ உதடுகூட ஹான்ட்ஷேக் பண்ணிட்ட? அப்படித்தான?

ம்...

சரி, கொடுக்கிறது கொடுத்த, நாலு மூலையிலும் நாலு கேமரா இருக்கும் லிஃப்ட்டுக்குள்ளயா வச்சிக் கொடுப்ப? அதான் பொண்ணு கோச்சிக்கிச்சு. அதான் பெங்களூரில தடுக்கி விழுந்தா ஃப்ளேம் ஆஃப் த பாரஸ்ட் மரம் இருக்குல? அந்த மரத்துக்கடியில வச்சிக் கொடுத்திருக்கலாம்ல? சரி இப்ப என்ன தான் சொல்றா மது?

கிஸ் பண்ணதும் ஒரே அழுகை மச்சி... அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சிதான் சமாதானம் ஆனா... இப்ப ஒரு மாசம் டைம் கேட்குறா மச்சி.

எதுக்கு ஒரு மாசம் கேட்குறா? அநியாயமாத் தெரியல...

அதான மச்சி. எவ்வளவு பெரிய அநியாயம்... இதுலாம் டூ மச்சா இல்ல?

ஒரு மாசம் கழிச்சி நோன்னு சொல்றதை ஒரு நிமிஷத்துல சொல்லலாம்ல... இதுலாம் டூ மச் தான் டா.

என்னது? நோ சொல்வாளா?

200 பெர்சென்ட். நோ தான் டா சொல்வா. ஸ்கூல்ல அம்மா வேணாம்னு சொன்னாங்க, காலேஜ்ல அப்பா வேணாம்னு சொன்னாங்க, இப்ப அமெரிக்கா உன்னை வேணாம்னு சொல்லப்போகுது... ஹா... ஹா...

போடா அங்குட்டு. நீ ஒண்ணும் அட்வைஸ் பண்ண வேண்டாம். நானே பார்த்துக்குறேன்.

சரி... சரி கோவிக்காத மச்சி. பொண்ணுங்க குறைஞ்சது பத்து நாள் டைம் கேட்குறாங்க டா. நானும் நிறைய பசங்க சொல்லி கேள்விபட்டிருக்கேன். மதுவுக்கு எதுக்காம் ஒரு மாசம் டைம் வேணும்? எனக்கும் இந்த லாஜிக் புரியல மச்சி... ஏன் பொண்ணுங்க எல்லாரும் லவ் பண்றதுக்கு ஓகே சொல்லவே இத்தனை நாள் டைம் எடுத்துக்கிறாங்க?

நானும் இதையே தான் கேட்டேன் டா, 'அது பொண்ணுங்க சமாச்சாரம் ஆர்யா உனக்குப் புரியாது' ன்னு சொல்றா டா.

ஹி... ஹி... காமெடியா இல்ல... நமக்குத் தெரியாத பொண்ணுங்க சமாச்சாரமா? எத்தனை படத்துல எத்தனை பொண்ணுங்க பார்த்திருப்போம்...

எனக்கு எதிரியே வேணாம்டா... இப்படி நீ அவகிட்டப் பேசினாப் போதும். ஒரே நாள்ல பதிலைச் சொல்லிடுவா... நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க சார். நான் என்னோட வேலையை பார்த்துக்குறேன்...

கோசிக்காத மச்சி... மது சும்மா சொல்றா டா. பொண்ணுங்களுக்கு பசங்களை பயமுறுத்துறதுல பயங்கர கிக் மச்சி. They play games with our hearts machi... பசங்களை நாள் கணக்கா சுத்தவிடுறதுல அவுங்களுக்கெல்லாம் ஒரு சந்தோஷம். - நகத்தைக் கடித்துக்கொண்டே படுதீவிரமாக விவேக்.

இல்லப்பா... பொண்ணுங்க மனசுக்குள்ள சில டெஸ்ட் வச்சிப்பார்ப்பாங்களாம் டா. இந்த பையன் நல்லவனா, இவன் நம்மள நல்லா வச்சிப்பானா, இவன் கேரக்டர் என்ன? அப்படின்னு...

ஓ...

மதுவும் நாங்க ஸ்கூல்ல மீட் பண்ணதுல இருந்து காலேஜ் வரை என்னைப் பத்தின விஷயங்களை யோசிச்சிப் பார்த்து டெஸ்ட் வச்சிட்டுத்தான் சொல்வாளாம் டா. எல்லாத்துலயும் நான் பாஸ்ஸாகணுமாம் டா.

ஓ...

கண்ணும் கண்ணும் காதலிச்சா பத்தாது, மூளையும் காதலிக்கணும். 8 கிராம் கண்ணை நம்புற மாதிரி 3000 கிராம் மூளையையும் நம்பணும். கண்ணால ஸைட் அடிச்சா பத்தாது. மூளையாலும் ஸைட் அடிக்கணும்னு மது சொல்றா டா. அவ அதுக்கு ஒரு நல்ல பேர் சொன்னாளே... ம்... ஞாபகம் வந்திடுச்சு... லிட்மஸ் டெஸ்ட், இது தான் மது அந்த டெஸ்ட்டுக்கு வச்சிருக்கும் பேரு மச்சி. லிட்மஸ் பேப்பரின் சாயம் வெளுப்பதுபோல மனுஷங்க குணம் வெளுக்குதா இல்லையான்னு அவ சோதிச்சிப் பார்க்கணுமாம்.

விவேக் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டான்.

விவேக்... என்னடா தலையில கைவச்சி ஏதோ கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்திருக்க?- ஆர்யா.

நீ சொன்ன விஷயம் அப்படி மச்சி.

நான் என்ன சொன்னேன்? பொண்ணுங்க எல்லாரும் லவ் பண்றதுக்கு முன்னே பசங்க கேரக்டர் பத்தி மனசுக்குள்ள டெஸ்ட் வப்பாங்கன்னு மது சொன்னா. அதைத்தானடா நான் உன்கிட்ட சொன்னேன்? எனக்கு நீ உதவி செய்வன்னு பார்த்தா... நீயே இப்படி உட்கார்ந்திருக்க...

அங்கதான மச்சி இடிக்குது? இரு வர்றேன். என்றவன் வேகமாக தனது கைபேசியை எடுத்து தனது அன்னைக்கு அழைத்தான்.

அம்மா, விவேக் பேசுறேன். 25க்குள்ள கல்யாணம் முடிக்கணும்னு சொன்னீங்கல?- விவேக் தனது அன்னையிடம் கைபேசியில்.

ஆமா. நீ அதை சைல்டு மேரேஜ்னு சொன்னியே விவேக்? கவர்மென்ட்டே ஒத்துக்காதுன்னு சொன்னியே டா?- விவேக்கின் அப்பாவி அன்னை.

அப்படியா சொன்னேன்? ஞாபகம் இல்லையே... தப்பா உங்க காதுல விழுந்திருக்கும்.

25 வயசுல்ல கல்யாணம் பண்ணா ஆதார் கார்ட் கேன்சல் பண்ணிடுவாங்கன்னு சொன்னியேப்பா...

ஐயோ... நேரம் காலம் தெரியாம இவுங்கவேற சாவடிக்கிறாங்களே? என்று மனதுக்குள் வெதும்பினாலும் மிகவும் அமைதியாய் பேசினான் விவேக்.

ஆமால... சாரிம்மா தப்பா சொல்லிட்டேன். கவர்மென்ட் 25ல கல்யாணம் பண்ணா ஒத்துக்குமாம். ஆதார் கார்ட் கேன்சல் ஆகாதாம். வாட்ஸ் ஆப் பார்க்கல நீங்க? நேத்து தலைப்புச் செய்தியே இதுதான்.- விவேக் தனது அன்னையிடம்.

என்னமோ சொல்ற... சரிடா, ஜாதகம் பார்த்ததும் ஃபோட்டோ அனுப்புறேன்.- விவேக்கின் அன்னை.

சரிம்மா. வச்சிடவா?

ம்.

அன்னையுடன் பேசிவிட்டு வந்தவன் அவன் பேசியதைக் கேட்டுக்கொண்டேயிருந்த ஆர்யாவிடம்,

பொண்ணு பார்க்கச் சொல்லிட்டேன் மச்சி, இத்தனை நாள் என்னை ஏன் எந்தப் பொண்ணும் லவ் பண்ணலங்கிற விஷயம் கிரிஸ்டல் கிளியரா தெரிஞ்ச பிறகும் வெயிட் பண்றது பெரிய மிஸ்டேக் மச்சி. எந்தப் பொண்ணும் எவ்வளவு ஈசியா டெஸ்ட் வச்சாலும் நான் பாஸ் பண்ணப் போறது இல்ல.

டேய்... என்று குபீர்ரென்று சிரித்துக்கொண்டே சொன்ன ஆர்யாவிடம்,

நிஜமா டா ஆர்யா. எந்த ஒரு பொண்ணும் எவ்வளவு ஈசியா குவஸ்டின் பேப்பர் செட் பண்ணாலும் நான் அதை பாஸ் பண்ணப்போறதில்ல... பொண்ணுங்க என்னோட கேரக்டருக்கு லிட்மஸ் டெஸ்ட் வச்சா... லிட்மஸ் பேபர்ரே கிழிஞ்சிடும் மச்சி...

விவேக்... என்னால முடியல டா... என்று சிரித்துக்கொண்டே இருந்த ஆர்யாவிடம்,

நீ வேற மூளையால ஸைட் அடிக்கணும்னு மது சொன்னான்னு சொல்ற... அதெல்லாம் என் விஷயத்துல நடக்கிற காரியமாடா? நாம் இருவர் நமக்கு ஒருவர்ங்கிற இல்லற வாழ்க்கைய எதுக்கு மச்சி சிக்கலாக்கணும்? மூளை, லிட்மஸ் டெஸ்ட் அது இதுன்னு சொல்லி எதுக்கு இல்லற வாழ்க்கையை சிக்கலாக்கணும்? என்றான் விவேக்.

ஹா...ஹா...

நான் பேசப் பேச நிறுத்தாம சிரிக்கிற? அப்பவே உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன்... ஆனா பாவம் போனா போகுதுன்னு சொல்லாம விடலாம்னு நினைச்சா... நீ என்னை வம்பிழுத்திழுத்துட்டே இருக்க??

ஹா... ஹா... என்கிட்ட நீ என்ன விஷயம் மச்சி சொல்லணும்?

ஆர்யா வேணா... நீ தாங்க மாட்ட... உன்னை மன்னிச்சி விட்டுருறேன்... பொழச்சிப்போ... சிரிக்க மட்டும் செய்யாத.

ஹா... ஹா... கோழி மிதிச்சி குஞ்சு சாகுமா? பராவாயில்ல சொல்லு மச்சி... என்றவன் அடக்க மாட்டாமல் சிரித்தான்.

திரும்பத் திரும்ப சிரிக்கிற? இருடா இரு... என்ற விவேக் உள்ளறைக்குள் வேகமாக நுழைந்து ஆர்யாவின் கப்போர்ட்களை உருட்டினான். வெளியே வந்தவன், மச்சி உன்னோட ரெட் கலர் பென் டிரைவ் தான இது?

ஆமா டா.- விவேக் கையில் இருந்த சிகப்பு நிற பென் டிரைவ்வைப் பார்த்து அலறலாய் ஆர்யா.

ரெட் கலர் பென் டிரைவ் என் கையில இருக்கு... ப்ளூ கலர் பென்டிரைவ் எங்க? - நக்கலாய் விவேக்.

ஓ... மை கடவுளே...

ஹா... ஹா... மதுகிட்ட எந்தக் கலர் பென் டிரைவ் கொடுத்த மச்சி?

ஓ மை காட்... ஓமை காட்...

இப்ப நான் சிரிப்பேனே... ஹா.. ஹா... ஹா...
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
ஒரு மாதம் கழித்து...

மது கேட்டிருந்த இந்த ஒரு மாத கால அவகாசத்தில் ஆர்யா மதுவினுடன் பேசுவதை முற்றிலும் குறைத்திருந்தான். அவள் இருக்கும் திசைப்பக்கமாகத் திரும்பியும் பார்க்கவில்லை அவன். பென் டிரைவ்வைப் பற்றி ஏதும் கேட்டு விடுவாளோ என்று பயம்... (பலான படங்கள் அடங்கிய ப்ளூ கலர் பென்டிரைவ்) அதனால் நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தபடியே இருந்தான்.

முக்கியமாக லிஃப்ட்டிற்குள் அவன் அவளுடன் தனிமையில் இருப்பதை அரவே தவிர்த்தான். அன்றைய லிஃப்ட்டின் தனிமையில் முத்தம் வரை சென்றவன் அடுத்த தனிமை லிஃப்ட்டில் கிடைத்தால் அது முத்தத்தோடு நிற்காது என்பதை உறுதியாகத் தெரிந்து வைத்திருந்த காரணத்தால் அந்தத் தனிமையைத் தவிர்த்தான்.

தனது அழகு முதலிரவை அவன் லிஃப்ட்டிற்குள் கொண்டாடவும் விரும்பவில்லை.

சரியாக முப்பது நாட்கள் முடிந்தபோது... அந்த முபத்தியோராம் நாள் வந்தபோது...

மது உனக்கு நான் நாலு ப்ளான்க் மெயில் அனுப்பிருக்கேன். இன்னும் பத்து நிமிஷத்துல அதுக்கு எல்லாம் எனக்கு வார்த்தைகள் வேணும். என்று மதுவிற்கு வாட்ஸ் ஆப் செய்தான்.

ஆர்யா சொன்ன பத்து நிமிடம் கடந்து போன பிறகுகூட மதுவின் மின்னஞ்சல் வரவில்லை. பற்களைக் கடித்துக்கொண்டு குண்டம்மா... குண்டு கத்திரிக்கா... அலைய விடுறா பாரு. நாலே நாலு ப்ளான்க் மெயில்... அதுக்கு ரிப்ளை பண்ண முடியில அவளுக்கு... என்று அவளைத் திட்டியபடியே கோபத்தை அடக்கவே முடியாமல் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்தான்.

மதுவின் கைபேசிக்கு அழைத்தான். நேரில் வரச்சொன்னான். மது நேரில் அவனது கேபினுக்கு ஸ்வீட்டியுடன் வந்தாள். ஆர்யாவுடன் பத்து நிமிடங்கள் பேசினாள். அவனது ரெட் கலர் பென்டிரைவ்வை அவனது கையில் கோபமாகத் திணித்தாள். பிறகு சென்றுவிட்டாள்.

பிறகு விவேக்கிற்கு அழைத்து, டேய் மச்சான். வாழ்க்கையில முதல் தடவையா தண்ணியடிக்கப் போறேன். பப்புக்கு வர்றியா? என்று கோபமாகக் கேட்டான் ஆர்யா.

இருவரும் பப்புக்குச் சென்றனர். தண்ணியடித்தனர். வீட்டிற்கு வந்ததும் மௌனராகம் படம் பார்த்துவிட்டு உறங்கினர். மறுநாள் விடிந்து பல மணி நேரம் கழித்து விவேக் எழுந்தபோது ஆர்யாவைக் காணவில்லை.



பெங்களூர் டோல் கேட்...

விவேக் மற்றும் குருவின் உரையாடல்...




ஹா... ஹா... அந்த ப்ளூ கலர் பென் டிரைவ்வில் என்ன படமெல்லாம் ஆர்யா வச்சிருந்தானாம்? அதைப் பார்த்திட்டுதான் மது கோபமா பேசிருப்பா... அந்தப் படங்கள் பெயர் சொல்லு விவேக்.

'ரொம்ப முக்கியம்...' என்று வாய்க்குள் புலம்பிய விவேக், சார்... அதுலாம் எங்கள மாதிரி வயசுப் பசங்க பார்க்கிற இங்கிலிஷ் படம் தான் சார்... வேற எதுவும் தப்பா இல்ல சார். நாங்கலாம் ரொம்ப ரொம்ப நல்ல பசங்க சார்.

உங்கள மாதிரி வயசுப் பசங்கள நம்ப முடியாது. படத்தோட பெயரைச் சொல்லு... அப்பதான் நான் நம்புவேன்.

விவேக் தலையில் அடிக்காத குறையாக புலம்பியபடி அவர் காதுருகே சென்று அனைத்து படங்களின் பெயரையும் சொன்னான்.

இந்த படமெல்லாம் ரொம்ப மோசம் இல்லயே... இதுலாம் பார்க்கிறதுல தப்பு இல்லதான்... ஆனா பொண்ணுங்க ஒத்துக்க மாட்டாங்கப்பா. ஆம்பள எனக்குப் புரியிது, ஆனா பொண்ணுங்க ஒத்துக்க மாட்டாங்கப்பா... ஒரு வழியா என்னோட டவுட் தீர்ந்திடுச்சு... மது ஸ்வீட்டிகூட பென்டிரைவ் கொடுக்க அவன் கேபினுக்கு வந்தப்ப தான் அவ அவனோட மூக்குமேல கைவச்சி பேசிருக்கணும்.- காவல்துறை அதிகாரி சங்கர்.

சார்... அது அப்படி இல்ல... இது எல்லாம் ஒரு கெட்ட கனவா...

ஆர்யாவை இதையெல்லாம் ஒரு கெட்ட கனவா நினைச்சு மறக்க சொல்றியா? ஆர்யா மதுவை மறக்கவே மாட்டான்... இரு நானே மதுக்கு கால் பண்றேன். பிரச்சனையை எப்படி நல்லபடியா முடிக்கிறேன்னு பாரு... என்றவர் விவேக்கின் மறுப்பை மீறி மதுவிற்கு அழைத்திருந்தார்.

ஆர்யா மதுவின் சந்திப்பிற்கு நான்கு மணி நேரத்தில் ஏற்பாடும் செய்திருந்தார்.

* * *

மது, ஆர்யா, விவேக், சங்கர் மூவரின் முன்னேயும் இரண்டு மினரல் வாட்டர் பாட்டிலும், ஆளுக்கு ஒரு ஆரன்ஞ் ஜுஸ்ஸும் இருந்தது. அனைவரும் அதை முன்னே வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்தபோது காவல் துறை அதிகாரி தனது ஜுஸை எடுத்து ஒரு மிடறுகுடித்தபடி பேச்சை மதுவிடமிருந்து ஆரம்பித்தார்.

ஏம்மா ஆர்யா மூக்கு மேல கையை வச்சி அவனை வேணாம்னு சொன்ன?- மதுவிடம் காவல்துறை அதிகாரி சங்கர்.

சார்... அப்படி எல்லாம் மது சொல்லலை சார். மௌனராகம் படம் பார்த்துட்டு படுத்தேனா... அதனால் கனவுல தான் சார் அப்படி ஒரு சீன் வந்தது. அந்தப் படத்துல வரும் ரேவதி-கார்த்திக் சீன் மனசுல அப்படியே பதிஞ்சி, கனவா வந்திடுச்சு... என்று போதை தெளிந்த ஆர்யா அசால்ட்டாய் சொல்லவும்,

என்னது கனவா? பின்ன எதுக்கு தண்ணியடிச்ச?- காவல் துறை அதிகாரி சங்கர்.

முப்பது நாள் முடிந்தபிறகும் மது மெயில் அனுப்பல உடனே நேர்ல வரச்சொன்னேன்... ஆனா அவ ஸ்வீட்டியோட என் கேபினுக்கு வந்தா. ஸ்வீட்டி முன்னாடி நான் என்னோட லவ்வைப் பற்றி பேச முடியுமா சார்? மெயிலும் அனுப்பல, தனியா வான்னு கூப்பிட்டா ஸ்வீட்டியோட வந்து நிற்குறா... பென் டிரைவ்வைக் கையில கோபமா திணிச்சிட்டு இன்னும் ரெண்டு நாள் டைம் வேணும்னு கேட்டா... அதான் கோபத்துல விவேக்கை பப்புக்கு கூப்பிட்டேன்.- இப்போதும் கோபமாய் ஆர்யா.

ஷ்... என்று பெருமூச்செறிந்துவிட்டு ஒரு மினரல் வாட்டர் பாட்டிலை மொத்தமாக தலையில் ஊற்றிக்கொண்டார் சங்கர்.

அப்படியே அவர் கோபமாக விவேக்கைப் பார்க்கவும்,

சார் நான் தான் ஆரம்பத்துல இருந்து அது ஒரு கனவு, கெட்ட கனவுன்னு சொன்னேன்ல சார்? நீங்க தான் என்னை அதுக்கு மேல பேசவே விடல.- பயந்தபடியே விவேக்.

ஷ்... என்றவர் இன்னொரு மினரல் வாட்டர் பாட்டில் வாங்கி தண்ணீரை முகத்தில் ஊற்றிக்கொண்டார்.

நீ என்னம்மா வந்த நேரத்துல இருந்து பேசாம இருக்க? ஏதாவது பேசு.- சங்கர் மதுவிடம்.

சார்... ஒரு பையனைப் பார்த்ததும் வர்றதுக்கு பேரு லவ் இல்ல சார்... யோசிக்க டைம் வேணும்ல? அந்தப் பையன் நல்லவனா? கெட்டவனான்னு யோசிக்க டைம் வேணும்ல?

ஆமா... ஆமா... நீ சொல்றது ரொம்ப சரி.

அதான் சார்... நான் ஒரு மாசம் டைம் கேட்டேன். அது தப்பா? ஒரு மாசம் டைம் பத்தலை... அதான் ரெண்டு நாள்... ரெண்டே ரெண்டு நாள் எக்ஸ்ட்ரா கேட்டேன்... அது தப்பா சார்?? என்று கோபமாகக் கேட்க, அவளைப் பார்த்து பயந்தேபோன சங்கர்,

தப்பே இல்ல மா... நீ பத்து நாள் எக்ஸ்ட்ரா கேட்டாக்கூட தப்பில்ல... - சங்கர்.

தாராளப் பிரபுதான் டா இவரு... நம்மகிட்ட பத்து பத்தா ரெண்டு பத்தாயிரம் வாங்கிட்டு மதுவுக்கு சார் எக்ஸ்ட்ராவாக பத்து நாள் அள்ளிக்கொடுக்கிறார் பாரேன்.- ஆர்யாவிடம் கிசுகிசுத்தான் விவேக்.

ஆர்யாவும் விவேக்கும் கோபத்தில் வெந்துகொண்டிருக்க சங்கர் அவர்களைக் கண்டு கொள்ளாமல் மேலும் தொடர்ந்தார்,

நீ ரொம்ப பிரிலியன்ட். நீ என்ன முடிவு எடுத்தாலும் இந்த அங்கிள்கிட்ட சொல்லுமா. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். எனக்கும் இரண்டு பொண்ணுங்க இருக்கு. நீங்க பேசிட்டுக் கிளம்புங்க... வீட்டுக்குப் போனதும் உனக்கு கால் பண்ணி உன்னோட முடிவை கேட்குறேன். என்று மதுவிடம் சொன்ன சங்கர், ஆர்யாவிடம் திரும்பி இதற்குதான்... இந்தப் பொம்பள ஹிட்லர் ஃபிகருக்குத்தான் ஆசைபட்டாயா பாலகுமாரா? என்பது போல ஒரு லுக்விட்டுக்கொண்டு, இந்தப் பொண்ணு என்ன சொல்லுதோ அது தான் முடிவு. என்று கூறிவிட்டு தனது ஜீப்பில் பறந்துவிட்டார்.

டேய்... இந்த ஆளை ஆரம்பத்துல இருந்து நம்பக்கூடாதுன்னு என் உள் மனசு சொல்லிட்டே இருந்திச்சு டா. அது சரியாப் போச்சு. ரெண்டு பொண்ணுங்களுக்கு அப்பாவாம் டா. மனுஷன் அந்தர் பல்டி அடிச்சிட்டாரே... என்று ஆர்யாவின் காதில் சொன்ன விவேக், மச்சி இந்தா உன் ஃபோன், இன்னிக்கு தான் அந்த போலிஸ்காரர் கொடுத்தார். நான் கிளம்புறேன்பா, நீங்க பேசி ஒரு முடிவுக்கு வாங்க. என்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டான்.

ஆர்யாவைப் பார்த்து, தண்ணியடிச்சிருக்க நீ? என்று கோபமாகப் பேசிவிட்டு மதுவும் நகரப்போன போது,

மது அப்படின்னா என்னோட நாலு மெயில்ல ஒன்றுக்குகூட நீ பதில் அனுப்ப மாட்டியா? என்று அமைதியாகக் கேட்டான் ஆர்யா.

உன்னோட மெயிலைப் பாரு ஆர்யா. என்ற மது ஆர்யாவிடம் முகத்தைக் காட்டாமல் கோபமாகச் சொன்னாள்.

ஆர்யா வேகமாக தனது கைபேசியை உயிர்ப்பித்தான். அதில் தனது மின்னஞ்சல்களைத் திறந்து பார்த்தான்.

முதல் மின்னஞ்சல் சொன்னது,

ஆர்யா நீ நல்ல பையன். L.K.G யில இருந்து ஒரே ஃப்ரண்ட்டை வச்சிருக்கும் பையன், அம்மாவுக்காக கோயிலுக்கு போகும் பையன், ஒரு மாசம் ஒரு பொண்ணோட பதிலுக்காக அமைதியா வெயிட் பண்ண பையன் ரொம்ப ரொம்ப நல்ல பையன் தான்.

இரண்டாவது மின்னஞ்சல் சொன்னது,

உன்னோட பென்டிரைவ்ல நீ இருபது ப்ளூ கலர் படம் வச்சிருந்தாலும் அதில் ஆஸ்கார் அவார்ட்டு வாங்குன பத்து படம் இருந்ததைப் பார்த்தபோது... முக்கியமா Shawshank Redemption, Titanic, The Notebook, a moment to remember, Slum dog millionaire படங்கள் இருந்ததைப் பார்த்தபோது நான் ப்ளாட் ஆகிட்டேன் ஆர்யா... உன்னை மிஸ் பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு.

மூன்றாவது மின்னஞ்சல் சொன்னது,

ஆர்யா ஐ டூ லவ் யூ.

நான்காவது மின்னஞ்சல் சொன்னது,

மிச்சத்தை நேர்ல பேசலாமா?

ஆர்யா மின்னஞ்சல்களைப் படித்ததும் மது என்று ஆசையாய் அழைத்தான்.

ஹா ஹா... என்று ஆர்யாவின் முகம் பார்த்து வெட்கமாய் அளவாய் சிரித்தாள் மதுமிதா.

சட்டென ஆர்யா மதுவை இறுகக்கட்டிக்கொண்டு சிரித்தான்.

அதைப்பார்த்து ஹா... ஹா... என்று அட்டகாசமாய் சிரித்தார் லவ் குரு.

எதுக்கு லவ் குரு சிரிச்சார்?

சார், எதுக்கு சிரிச்சீங்க?- நான்.

....- லவ் குரு.

சார், உங்களைத்தான்... எதுக்கு சிரிச்சீங்க? இப்பவும் அவுங்களை பிரிக்கப் போறீங்களா? நீங்க மோசமான வில்லன் சார்.- நான்.

அவுங்க சரியாதான் லவ் பண்றாங்க. இப்ப எதுக்கு அவுங்களை நான் பிரிக்கணும்?- லவ் குரு.

என்ன சார் சொல்றீங்க? புரியல.- நான்.

என் பேரு குரு. செல்லமா எல்லாரும் லவ் குருன்னு கூப்பிடுவாங்க. யாராவது தப்புத் தப்பா லவ் பண்ணா அந்த லவ்வை பிரிச்சிடுவேன். எனக்கு அது பிடிக்காது. அதே மாதிரி பசங்க பொண்ணுங்களை டிஸ்டர்ப் பண்ணாலும் ஏதாவது பண்ணி...- லவ் குரு.

ஆட்டத்தைக் கலச்சி விட்டுருவீங்க.- நான்.

ம்... சரியாச் சொன்னீங்க. ஆட்டத்தைக் கலச்சி விட்டுருவேன். மது விஷயத்துல மதுவை ஒரு மாசம் யோசிக்க விட்டது மட்டும் தான் என்னோட வேலை. மற்றபடி மதுவே சரியா யோசிச்சி சரியான வயசுல சரியான முடிவு எடுத்திருக்கா. மனசுக்குள்ள ஆர்யாவுக்கு ஒரு பெரிய டெஸ்டே வச்சி தான் அவனை செலக்ட் பண்ணிருக்கா...- லவ் குரு.

லவ் குருவுடன் நான் பேசிக் கொண்டிருக்கும் போதே நான்கு விடலைப் பையன்களும் மூன்று பெண்களும் அவரைக் கடந்து நடந்து சென்றனர்.

ஏங்க இப்ப நான் போலாமா? - லவ் குரு.

எங்க போறீங்க?- நான்.

இப்ப ஒரு நாலு பசங்க போனாங்களே... அங்கதான் போறேங்க. அந்தப் பசங்கள்ல ஒருத்தன் ஒரு பொண்ணை லவ் பண்றான். அந்தப் பையன் உண்மையா லவ் பண்றானா, இல்ல தப்பான எண்ணத்தோடு இருக்கானான்னு நான் தெரிஞ்சிக்கணும். அந்தப் பொண்ணு ரொம்ப ரொம்ப நல்ல ஆத்மாங்க. அந்தப் பொண்ணுக்கு இப்ப என்னோட உதவி தேவைங்க. நான் வர்றட்டா?

சார்...- அவரை விட மனமில்லாமல் நான்.

இப்ப என்னங்க?- அவரசமாய் பேசியபடி மிஸ்டர் லவ் குரு.

சார்... நீங்க சொல்றது லேசா புரியிது...

தெளிவா சொல்றேன் கவனமா கேட்டுக்கோங்க. தப்பான எண்ணத்தோடு தெளிவில்லாத புத்தியோடு பசங்க நல்ல பொண்ணுங்களைத் தொந்தரவு பண்ணா... ரெண்டு பேரோட நன்மைக்காக...

ஆட்டத்தை கலச்சி விட்டுருவீங்க. அப்படித்தான?- நான்.

ஹா... ஹா... ஹா... எனக்கு அடுத்த வேலை காத்துட்டு இருக்குங்க. டாட்டா... என்று கூறியபடியே பேய் அலறலாய் சிரித்துக்கொண்டே மாயமாய் மறைந்து போனார் மிஸ்டர் லவ் குரு.

* * *



அழகிய முதலிரவில்...

கிட்டவா... மது... முதல் பட்டனையே எவ்வளவு நேரம் திருகிட்டே இருப்ப? இரண்டாவது மூனாவது எல்லாம் ரொம்ப நேரமா வெயிட் பண்ணுதுல? நீ அடுத்த மாசம் அமெரிக்கா போயிடுவ... இன்னும் ஒரு வருஷம் கடல் தாண்டி பறந்து பறந்து வந்து கிடைச்ச நேரத்துல குடித்தனம் பண்ணணும்... எவ்வளவு நேரம் பேசிட்டே இருப்ப? - ஆர்யா.

அதான் ஆறுமணிக்கே தூக்கம் வருதுன்னு சொல்லி ரூமுக்குள்ள என்னையும் இழுத்துட்டு வந்திட்டீல? இது ஃப்ர்ஸ்ட் நைட் இல்ல... ஃப்ர்ஸ்ட் ஈவினிங். என் மானமே போச்சு, ஜானு எப்படி சிரிச்சா தெரியுமா? இன்னும் கொஞ்ச நேரம் பேசலாம். பதில் சொல்லுப்பா. உனக்கு எத்தனை கிரஷ் வந்திருக்கு? எவ்வளவு நேரமா கேட்குறேன்... எனக்கு தொண தொணன்னு புருஷன் சட்டையப் பிடிச்சி கேள்வி கேட்குறதுலாம் பிடிக்கவே பிடிக்காது. I dont like nagging wives you know...

மூனு கிரஷ் வந்திருக்கு. என்னோட மூனு கிரஷ்ஷும் ஒரே பொண்ணுதான். முதல் நாளே யாருடா அந்த கிரஷ்னு என் சட்டையைப்பிடிச்சி கேட்காத குறையா கேட்டீல? அப்பவே You have started to nag madhu... and you know wife always nags...'

ஏய் பேச்சை மாற்றி சமாளிக்காதப்பா... பாதி பதில் தான் சொல்வியா? மூனு கிரஷ்ஷும் ஒரே பொண்ணா? அப்படின்னா அந்தப் பொண்ணு பேரு என்ன?

என்னோட 1st , 2nd மற்றும் 3rd கிரஷ்ஷா? என்னோட மூனு கிரஷ்ஷும் யாருன்னா... என்று மீண்டும் மீண்டும் சொன்ன ஆர்யா அவளது இதழ்களை மீண்டும் மீண்டும் முத்தமிட்டுச் சிரித்தான்.

அவனது முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கிரஷ்ஷின் மொத்தமும் சகலமும் அவனது இதழ்களால் கசங்கிக் கிரஷ்ஷாகிக் கொண்டிருந்தது அந்த இரவு முழுவதும்.

* * *



சுபம்

ஆறடி உயரமும் யவன அழகும் என்றும் இல்லறத்திற்கு உதவாது. இதுபோன்ற லிட்மஸ் பரீட்சைகளே உதவும்...

இந்தக் காதலின் லிட்மஸ் பரீட்சையை ரசித்ததற்கு நன்றி.



எனது பிற நூல்கள்: ( all available in kindle )

1) சிற்பமும் அவள் சிற்பியும் அவள். (this is not yet uploaded)

2) ஷ்... இது வேடந்தாங்கல்.

3) காஜலிட்ட விழிகளே...

4) டைட்டானிக் கனவுகள்...

5) லட்சம் காதலால் காதல் செய்.

6) ஆயூத எழுத்தில் காதல்.
 
Top Bottom