Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed Kanalvizhi Kadhal - Novel

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 84

தேவ்ராஜின் பிடிவாதம் மாயாவின் மனதிற்கு உவப்பானதாக இல்லை. என்ன நடக்குமோ என்கிற பயத்துடன் மதுராவை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டிருந்தாள். பிரபாவதி அவளை வாக்கிங் போய்விட்டு வரலாம் என்று அழைத்தால் கூட மருத்துவமனைக்குத்தான் கிளம்புகிறார்களோ என்று பயந்து நடுங்கினாள். ஆனால் மதுரா வீட்டை விட்டு எங்கும் கிளம்பும் மனநிலையில் இல்லாதது அவளுக்கு சற்று அமைதியைக் கொடுத்தது. அந்த அமைதிக்கும் ஆயுட்காலம் ஐந்து நாட்கள் தான். ஆறாவது நாள்தான் அந்த பூகம்பம் வெடித்தது.



காலை எழுந்ததிலிருந்தே பிரபாவதி சுறுசுறுப்பாக இருந்தாள். மருத்துவமனைக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தாள் போலும். இறுகிய முகத்தோடு ஒரே இடத்தில் அமர்ந்திருந்த நரேந்திரமூர்த்தி மனைவியை அழைத்து, "மதுராகிட்ட பேசிட்டியா?" என்றார்.



"டெய்லி பேசிக்கிட்டுதானே இருக்கேன்... அவளுக்கு தெரியும்"



"இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போறோம்னு தெரியுமா?" - எறிந்துவிழுந்தார்.



நினைத்ததை நடத்தி முடிப்பதற்காக எதையும் செய்யலாம்... அடங்கிப் போவதானாலும் சரி... அதட்டி அடக்குவதானாலும் சரி... நேரத்திற்கு தகுந்தாற் போல் சூட்சமமாக நடந்துகொள்ள வேண்டியதுதான் என்கிற தெளிவோடு, "சொல்லிடறேன்..." என்று அடக்கி வாசித்துவிட்டு மகளைத் தேடி வந்தாள்.



வழக்கம் போல் மதுரா கட்டிலில் சுருண்டுக் கிடந்தாள். அவளை எழுப்பி அமரவைத்து, "இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போகணும் மது. எழுந்து குளி" என்றாள்.



"ம்ம்ம்...." - கால்களை கட்டி கொண்டு அமர்ந்தவளுக்கு எழ வேண்டும் என்கிற எண்ணமே இல்லை.



"இன்னைக்கு எல்லாம் முடிஞ்சிடும். இன்னையோட அவனை தலை முழுகிட்டு எப்பவும் போல சந்தோஷமா... கலகலப்பா இருக்க ட்ரை பண்ணு" - அவள் பதில் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.



"என்ன மது...? எழுந்து போயி குளி..." - பிரபாவதி தூண்டினாள். மதுரா மீண்டும் படுக்கையில் சாய்ந்தாள்.



"மது... எந்திரிடா... டைம் ஆச்சு பாரு... பத்து மணிக்கு டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் இருக்குல்ல..." - மதுரா புரண்டுப் படுத்து தாயை பார்த்தாள்.



"இன்னைக்கு கிளீயர் பண்ணியாகணும்" - தாய் என்ன சொல்கிறாள் என்பது மதுராவுக்கு நன்றாகவே புரிந்தது. அவளுடைய பார்வையில் ஒரு தீவிரம் வந்தது. தன் வயிற்றை தொட்டுத் தழுவி உள்ளே இருக்கும் உயிரை உணர்ந்தாள்.



"ஐ வாண்ட் திஸ்..." - மூன்றே வார்த்தைகள்... எளிமையான வார்த்தைகள்... அந்த நேரத்தில் பிரபாவதியின் மூச்சையே நிறுத்திவிடும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக மாறியது.



"என்னடி சொல்ற?" - இடிவிழுந்தது போல் அதிர்ந்துபோனவளின் விழிகள் தெறித்தன.



"ஐ வாண்ட் மை பேபி..." - மீண்டும் தெளிவாகக் கூறிவிட்டு கண்களை மூடிக் கொண்டாள்.



"மது... பைத்தியம் மாதிரி பேசாத. எந்திரி முதல்ல" - மகளை அதட்டி உலுக்கி எழுப்பி அமரவைத்தாள். தாயின் பதட்டம் மதுராவின் சிந்தனையை தூண்டியது.



"வாட்ஸ் ராங்?" - அலுப்புடன் கேட்டாள்.



"எல்லாமே தப்பாதான் இருக்கு. உனக்கு இந்த குழந்தை வேண்டாம்..."



"எனக்கு வேணும்" - மதுராவின் குரலில் அழுத்தம் கூடியது.



"வேணுன்னு இப்ப சொன்னா எப்படி? ஒரு வாரமா மாத்திரை சாப்பிட்டு இருக்க. ஏதாவது ஊனம் கீனமா பிறந்து தொலைச்சுச்சுன்னா என்ன செய்வ? பேசாம ஹாஸ்ப்பிட்டலுக்கு கிளம்பு" - கோபத்துடன் அதட்டினாள்.



"மாத்திரையா! ஊனமா...! என்ன மாத்திரை? என்ன ஊனம்?" - புரிந்தும் புரியாத நிலையில் அவள் முகம் வெளிறி உடல் நடுங்கியது.



மகள் வயிற்றிலிருக்கும் குழந்தையின் மீது எந்த பற்றும் இல்லாமல், "உன் வயித்துல இருக்கறதை சிதைக்கறதுக்கு ஒரு வாரமா நீ மாத்திரை சாப்பிட்டுக்கிட்டு இருக்க" என்றாள்.



"நோ...." - உச்சஸ்தாதியில் அலறினாள் மதுரா. "இது உண்மை இல்ல... நா நம்ப மாட்டேன்... நம்...ப மாட்...டேன்..." - கடுங்கோபத்துடன் கத்தினாள்.



அவளுடைய திடீர் மனநிலை மாற்றத்தில் சற்று அதிர்ந்தாலும் சமாளித்துக் கொண்டு மகளை அணைத்துப் பிடித்து, "பாரு மது... எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகற... ஒண்ணும் இல்ல... ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்..." என்று அவளை அமைதிப் படுத்திவிட்டு, "பாதி கிணறு தாண்டிட்டோம். இப்போ முடியாதுன்னு சொன்னா எப்படி?" என்றாள்.



"இல்லம்மா... நா எந்த மாத்திரையும் சாப்பிடல. என் குழந்தைக்கு ஒண்ணும் இல்ல..." - கண்களில் கண்ணீர் பெறுக பரிதாபமாக கூறினாள்.



"நான்தானேடா கொடுத்தேன். எனக்குத் தெரியாதா... அம்மா உன் நல்லதுக்..." - "ச்சீ..." - தாயை உதறிவிட்டுஎழுந்து ஒதுங்கி நின்றாள். முகத்தில் அருவருப்புடன் கூடிய வெறுப்பு படர்ந்தது.



"தேவையில்லாம ரியாக்ட் பண்ணுற நீ... ஜஸ்ட் டென் மினிட்ஸ்... எல்லாத்தையும் டாக்டர் பார்த்துப்பாங்க... உன் லைஃபுக்கு இதுதான்..." - "ஏன்? ஏன் இப்படி செஞ்ச?" - பாய்ந்துச் சென்று அவள் தோளை பிடித்து உலுக்கினாள். வெறிபிடித்து போல் ஆக்ரோஷமாக மாறினாள்.



"மது...! நா சொல்றத கொஞ்சம்..." - "எங்குழந்தையை கொலை செஞ்சுட்டியா! யூ ப்ளடி கில்லர்... ஹௌ டிட் யூ டூ திஸ்...! ஹௌ... டிட்... யூ....!!! உன்ன கொல்ல போறேன்... கொல்ல போ...றே...ன்... ஆஆஆஆ... மை பே...பி...." - வெறி பிடித்தவள் போல் அவளை பிடித்து உலுக்கி, பின்னால் தள்ளிவிட்டு தரையில் சரிந்து மண்டியிட்டு கத்தினாள்... கதறினாள்... கண்ணீர்விட்டாள்.



அவள் போட்ட சத்தத்தில் வீடே அதிர்ந்தது. அரண்டு போன நரேந்திரமூர்த்தி "என்...ன ஆ....ச்சு?" என்றபடி தடதடப்புடன் மகளுடைய அறைக்கு ஓடிவந்தார். நொடி பொழுதில் அங்கே குழுமிவிட்ட துருவன், திலீப், மாயா மற்றும் தேஜா அனைவரும், ஹிஸ்டீரியா பேஷண்ட் போல் கத்திக் கொண்டிருக்கும் மதுராவைக் கண்டு அதிர்ந்தார்கள். யாருக்கும் எதுவும் புரியவில்லை.



மகள் தள்ளிவிட்ட வேகத்தில் நிலை தடுமாறிப்போய் கட்டிலில் விழுந்த பிரபாவதி அவளுடைய ஆக்ரோஷத்தைக் கண்டு திகைத்து திக்பிரம்மை பிடித்தது போல் விழுந்த இடத்திலேயே கிடந்தாள். நடப்பது எதையும் அவளால் நம்பவே முடியவில்லை. மதுராவின் வார்த்தை வன்மையும் ஒருமை விளிப்பும் நிஜமென்று நினைக்கக் கூட முடியவில்லை.



"மது...!" - நரேந்திரமூர்த்தி மகளை நெருங்க முயன்றார். "நோ...." - சுட்டுவிரல் நீட்டி கத்தினாள். "கிட்ட வராத... என்கிட்ட வராத..." - வெறுப்புடன் தூர விலகினாள்.



"மது!!!" - நம்பமுடியாத ஆச்சர்யத்துடன் மகளை பார்த்தார்.



'மது... மது...' என்று அவர் அழைத்தாலும் அவர் எதிரிலிருந்து கூச்சல் போடுவது அவருடைய அன்பு மகள் மதுராவே அல்ல என்று தோன்றியது அவருக்கு. மதுரா எப்படி இப்படியெல்லாம் பேசுவாள்! பயம்... பதட்டம்... படபடப்பு எல்லாம் சேர்த்துக் கொண்டு அவருடைய இரத்த அழுத்தத்தை எக்குத்தப்பாக உயர்த்தியது.



"மதும்மா..." "மது..." - "நா சொல்றதை கேளு..." - "கொஞ்சம் அமைதியா இரு..." - துருவனும் திலீப்பும் தங்கையை சமாதானம் செய்ய முயன்று அவளை நெருங்கினார்கள். அவ்வளவுதான்... பெரும் பேய் ஒன்று பிடித்துக் கொண்டது போல் ஆட்டமாய் ஆடினாள்.



"கோ அவே... கிட்ட வராதீங்க... ஆல் ப்ளடி கில்லர்ஸ்... டோண்ட் கம் நியர் மீ... கோ அவே... கோ..." - காட்டுக்கத்தாக கத்தியபடி கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி அடித்தாள். மேஜையில், அலமாரியில் இருந்த பொருட்களையெல்லாம் உருட்டிவிட்டாள். சுவற்றில் மாட்டப்பட்டிருந்த சித்திரங்களையெல்லாம் போட்டு உடைத்து ரகளை செய்தாள். தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டாள். காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு பெருகுவது போல் கட்டுடைந்த அவளுடைய உணர்வுகளைக் கண்டு அங்கிருந்த மொத்தபேரும் விக்கித்துப்போனார்கள். அவளை சமாதானம் செய்யும் வழியறியாது செயலற்று நின்றார்கள். கண்முன் நடந்து கொண்டிருக்கும் கலவரத்தைக் கண்டு உறைந்து போன மாயாவிற்கு இன்னமும் கூட விஷயத்தை முழுதாக புரிந்துக்கொள்ள முடியவில்லை.



'அபார்ஷன் வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்வதுதானே! எதற்காக இப்படி கத்துகிறாள்!' - குழம்பி நின்றாள். அவளுடைய குழப்பத்திற்கு விடைகொடுத்தார் நரேந்திரமூர்த்தி.



"எத்தனை தரம் சொன்னேன். கேட்டியா? அவகிட்ட சொல்லாம எந்த கருமத்தையும் கொடுக்காத கொடுக்காதேன்னு சொன்னேன்... இப்ப என்ன செய்ய போற?" - மனைவியிடம் சீறினார். பதில் சொல்ல முடியாமல் கலங்கி நின்றாள் பிரபாவதி. கத்திக்கத்தி தொண்டை வறண்டு... உடம்பிலுள்ள சக்தியெல்லாம் வடிந்து... தளர்ந்து மயங்கி தரையில் சரிந்தாள் மதுரா.



"மதூ....!!!" - பாய்ந்து ஓடி தங்கையை தங்கினார்கள் சகோதரர்கள். அனைவரும் பதட்டத்துடன் அவளை நெருங்கினார்கள். பழந்துணிபோல் தரையில் துவண்டுக் கிடந்த தங்கையை தூக்கி மெத்தையில் கிடத்தினான் துருவன். அவளை அந்த நிலையில் பார்க்க சகிக்காமல் அவன் மனம் வேதனையில் துவண்டது. திலீப்பின் உள்ளம் உறுமியது. யார் மீது பாய்வது என்று புரியாமல், "என்னம்மா பண்ணி தோலைச்சீங்க? ஏன் இப்படி நடந்துக்கறா?" என்று தாயிடம் பாய்ந்தான்.



கொலை வெறியோடு நரேந்திரமூர்த்தி மனைவியை முறைத்துப் பார்க்க, அவருடைய பார்வையை புறக்கணித்துவிட்டு, "தேஜா, டாக்டருக்கு போன் பண்ணு" என்று அடுத்த செயலில் இறங்கினாள்பிரபாவதி.



"டாடி... என்ன நடக்குது இங்க?" - திலீப்பின் கேள்விக்கணை தந்தையை நோக்கி பாய்ந்தது. அவர் அனைத்தையும் புட்டுப்புட்டு வைத்தார்.



"வாட்ஸ் ராங் வித் யூ ம்மா... அவகிட்ட கேட்காம நீங்களா ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தீங்க? இதுமட்டும் அவனுக்கு தெரிஞ்சா..." என்று சொல்லிக் கொண்டே வந்தவன் சட்டென்று நிறுத்திவிட்டு மாயாவைப் பார்த்தான். கையில் சூலம் மட்டும்தான் இல்லை. காளி அவதாரம் எடுத்தவள் போல் அக்கினிப் பிழம்பாக நின்றுக் கொண்டிருந்தாள். அவளுடைய சுட்டெரிக்கும் பார்வை பிரபாவதியை பொசுக்கியது.



திலீப்பை தொடர்ந்து அனைவருடைய பார்வையும் மாயாவின் பக்கம் திரும்பியது. திலீப் துருவனைப் பார்த்தான். கண்களால் கெஞ்சினான். அவளை சமாளிக்கும்படி தம்பி கூறுவது அண்ணனுக்கு புரியத்தான் செய்தது. சில நாட்களுக்கு முன்பு இதே பிரச்னையை அவள் அவனிடம் கொண்டுவந்த போது பட்டுக்கத்தரித்தது போல் பேசி துண்டித்துவிட்டவன் இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளிடம் இதைப் பற்றி பேசுவான்! ஆனால் பேசாமலும் இருக்க முடியாது.



"மாயா... இட்ஸ்... இட்ஸ் கோயிங் டு பி ஆல்ரைட்... ரிலாக்ஸ் ஓகே... ரிலாக்ஸ்... எனக்கும் இப்பதான்... ஓகே... தெரியாம நடந்துடிச்சு... சரியாயிடும்..." - என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் உளறி கொட்டினான்.



அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் கையிலிருந்த அலைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தாள்... 'தேவ்ராஜ்...' - 'சொல்லிவிடுவாளோ! - அனைவரும் அவளை டென்ஷனோடு பார்த்துக் கொண்டிருக்க, அழைப்பை ஏற்றாள்.



"ஹலோ..."



"................." - மாயாவிற்கு பேச்சு வரவில்லை.



"ஹலோ... மாயா..." - தேவ்ராஜின் குரல் அவள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.



"என்ன ஆச்சு? எனிதிங் ராங்? ஆர் யு ஆல்ரைட்?"



"..............................."



"மது எப்படி இருக்கா? மாயா... என்ன ஆச்சு மதுக்கு...?" - அவன் குரலில் பதட்டம் தெரிந்தது. "ஹேய்... வாயத் தெறந்து பேசு... மாயா... இஸ் ஷி ஓகே?" - கத்தினான்.



"நோ... நல்லா இல்ல... மதுரா இங்க நல்லா இல்ல... உங்க குழந்தையும் நல்லா இல்ல... அபார்ஷன் பண்ணறதுக்கான மாத்திரையை ஒரு வாரமா சாப்பிட்டுட்டு இருந்திருக்கா... அவளுக்கே தெரியாம... என்ன செய்ய போறீங்க? அவளோட முடிவை தெரிஞ்சுக்க ஆசைபட்டிங்களே... இதுதான் அவளோட முடிவு... அவளுக்கே தெரியாத முடிவு.. போதுமா... இன்னும் ஏதாவது தெரியனுமா?"- உடைந்து போய் அனைத்தையும் அனைவருக்கும் முன்பாகவே கொட்டினாள்.



அந்த பக்கத்திலிருந்து ஓரிரு நிமிடங்கள் எந்த சத்தமும் வரவில்லை... பிறகு, "இஸ் ஷி ஓகே?" - மீண்டும் அந்த கேள்வியை கேட்டான். குரல் உடைந்து கரகரத்தது.



"இருக்கா... பைத்தியக்காரி மாதிரி கத்திக்கத்தி மயங்கிக்கிடக்கறா..." - தமையனுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று நினைத்ததாலோ என்னவோ வெகு தீவிரமாய் அனைவரையும் எதிர்க்க துணிந்துவிட்டாள் மாயா.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 85

"நோ... நல்லா இல்ல... மதுரா இங்க நல்லா இல்ல... உங்க குழந்தையும் நல்லா இல்ல..." - கோபத்துடன் படபடத்த மாயாவின் குரலில் அழுகையின் சாயலும் தென்பட தேவ்ராஜை பரபரப்பு தொற்றிக் கொண்டது. அமர்ந்திருந்த நாற்காலியை விருட்டென்று பின்னால் தள்ளிவிட்டு எழுந்து வேகமாக அறையைவிட்டு வெளியேறினான். "என்ன ஆச்சு சார்?" என்று எதிரே வந்த ரஹீமை மதிக்காமல் அவசரமாக லிஃப்டை அடைந்து கீழே இறங்கினான்.



"அபார்ஷன் பண்ணறதுக்கான மாத்திரையை ஒரு வாரமா சாப்பிட்டுட்டு இருந்திருக்கா... அவளுக்கே தெரியாம... என்ன செய்ய போறீங்க?" - திடுக்கிட்டான். 'வாட் த... ஹெ...ல்...!' - அவனுக்குள் இருந்த கொடூரன் பயங்கரமாக உறுமினான்.



"கெட் மீ மை கார் கீ..." - லிஃப்ட்டிலிருந்து வெளியேறும்போதே ரிஷப்ஷனிஸ்ட்டை நோக்கி சத்தம் போட்டான். அவனுடைய ஆவேசத்தைக்கண்டு அதிர்ந்துபோனவள் அவசரமாக சாவியை எடுத்து நீட்ட, அதை அவளிடமிருந்து பிடுங்காதக் குறையாக பெற்றுக் கொண்டு, டிரைவருக்கு காத்திராமல் தானே வண்டியை ஸ்டார்ட் செய்து கிளப்பினான்.



"அவளோட முடிவை தெரிஞ்சுக்க ஆசைபட்டிங்களே... இதுதான் அவளோட முடிவு... அவளுக்கே தெரியாத முடிவு.. போதுமா... இன்னும் ஏதாவது தெரியனுமா?" - மாயாவின் வார்த்தை அவனை கூறுபோட்டது. சல்லடையாக இதயம் துளைப்பட்டது. வலி... பயங்கரமான வலி அவனை கொன்றது. "இஸ் ஷி ஓகே?" - அது மட்டும்தான் அவனுக்கு தேவையானதாக இருந்தது.



"இருக்கா... பைத்தியக்காரி மாதிரி கத்திக்கத்தி மயங்கிக்கிடக்கறா..." - அவளுடைய பதில் அவனை மேலும் மூர்க்கனாக்கியது. கோபமும் ஆத்திரமுமாக ஆக்சிலரேட்டரை அழுத்தமாக மிதித்து, அசுரவேகத்தில் பறந்தான்.



காதில் பொருத்தியிருந்த புளூடூத்தில் மாயாவின் குரல் இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தது. எதுவும் அவன் செவியில் ஏறவில்லை. 'மது... மது...' என்று மனம் உருப்போட அழைப்பை துண்டித்துவிட்டு காரின் வேகத்தை மேலும் கூட்டினான். சாலையின் வலது பக்கம் ஏறி ஓட்டி, எல்லா வாகனங்களையும் ஓவர்டேக் செய்து பறந்தான். சிக்னலில் எறிந்த சிவப்பு விளக்கை மதிக்காமல், சீறிக்கொண்டு சென்றான். அசுர வேகத்திலும் லாவகமாக ஓட்டி விபத்தை தவிர்த்து, நரேந்திரமூர்த்தியின் வீட்டுவாசலில் வந்து பிரேக் அடித்தான்.



தடதடதடவென்று கதவு உடைபடும் சத்தம் கேட்டு வீடே அதிர்ந்தது. வந்திருப்பது யார் என்பதை ஊகிக்க அதிக நேரம் தேவைப்படவில்லை. அடுத்தடுத்து அலறிய அழைப்பொலியும்... படுபயங்கரமாக உடைபடும் கதவும் வெளியே நின்றுக் கொண்டிருக்கும் அசுரனை அடையாளம் காட்ட, உள்ளே இருந்த அனைவரும் தவிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு நரேந்திரமூர்த்தி எழுந்துச் சென்று கதவைத் திறந்தார். கனலை கக்கும் விழிகளோடு உக்கிரமாக நின்றுக் கொண்டிருந்தான் தேவ்ராஜ்.



நரேந்திரமூர்த்தியை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவனின் வேகத்தைக் கண்டு, "தேவ்.. நில்லு... நா சொல்றதை கேளு..." என்று பதறினார் மூத்தவர்.



"வாட் த ஹெல் யு வாண்ட் மீ டு லீசன்?" - ஆக்ரோஷமாக சீறினான் அவரிடம். அவனுடைய ஆவேசத்தில் திடுக்கிட்டு சற்று பின்னடைந்தவர் அடுத்து பேசுவதற்குள் திலீப் அவர்களுக்கு நடுவில் வந்தான்.



"ஸீ... ஐ அன்ட்ரஸ்டண்ட் யுவர்..." - " ஷ்...ஷ...ட்...அப்...!!! ஷட்....!!! அப்...!!! வழிய விடு...!!! விலகிப் போ...!!! " - கடுமையான கத்தலுடன் அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளினான்.



பதறிப்போன பிரபாவதி "ஏய்...ஏய்..." என்று அவனை சுட்டெரிப்பது போல் முறைக்க, "தேவ்..! என்ன இது?" என்று அதட்டினார் நரேந்திரமூர்த்தி. தேஜா கலவரத்துடன் ஒதுங்கி நிற்க மாயா தமையனை தடுக்க முன் வந்தாள்.



"தேவ் பாய்..." - மாயா.



"நா என்ன வைஃபை பார்க்க வந்திருக்கேன். என்னை தடுக்கற அதிகாரம் இங்க யாருக்கும் இல்ல..." - தங்கையை ஒதுக்கிவிட்டு அதிகாரமாக முழங்கினான்.



"என் பொண்ணு மேல உனக்கு எந்த உரிமையும் இல்ல" - கோபத்தில் வார்த்தையை விட்டார் நரேந்திரமூர்த்தி.



"என் குழந்தை மேல உரிமை இருக்குல்ல? நகருங்க..." - துச்சமாக அவரை ஒதுக்கினான். 'என்ன திமிர்!' - பிரபாவதியின் அகம்பாவம் அடிவாங்கியது.



"பிறக்காத குழந்தை மேல என்ன பெரிய உரிமை... அதெல்லாம் பிறந்தா பார்த்துக்கலாம்... நீ இப்ப வெளியே போ..." - கொதிப்புடன் வார்த்தையைக் கொட்டினாள். நொடி பொழுதில் அவன் கையில் முளைத்த பிஸ்ட்டல் நரேந்திரமூர்த்தியின் நெற்றியை குறிபார்த்தது.

IMG-7190.png


பிஸ்டலை அவர் நெற்றியில் வைத்து பார்வையை பிரபாவதியின் முகத்தில் பதித்திருந்த தேவ்ராஜ், "என் குழந்தையை அழிக்கணும்னு நெனச்ச... உன் குடும்பத்தை அழிச்சிடுவேன்..." என்றான் அடங்கிய குரலில். அவன் கண்களில் தெரிந்த தீவிரம் சொன்னதை செய்து முடிப்பேன் என்று உறக்கக் கூவியது. மொத்த குடும்பமும் உறைந்து போய்விட்டது. பிஸ்ட்டலை எடுக்கும் அளவிற்கு... கொலை மிரட்டல் விடும் அளவிற்கு அவன் போவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மாயா உட்பட...



"தேவ் பாய்... ரிலாக்ஸ்... ப்ளீஸ்..." - மாயா கெஞ்சினாள்.



"மது எங்க?" - இறுகிய குரலில் கேட்டான்.



"ரூம்ல... டாக்டர் வந்து பார்த்தாங்க. ஷி இஸ் ஓகே நௌ... நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க பாய்..." - தங்கையின் சமாதானம் அவன் செவியில் ஏறவில்லை. அங்கிருந்த அனைவருடைய கோபப்பெருமூச்சையும், எரிக்கும் பார்வையையும் புறக்கணித்துவிட்டு மனைவியின் அறையை நோக்கிச் சென்றான்.



"அவளுக்கு ரெஸ்ட் வேணும்... பார்த்து..." - தமையனின் பின்னால் ஓடிவந்தபடி மாயா பதட்டத்துடன் எச்சரித்தாள்.



"ஸ்டே அவே..." - சட்டென்று நின்று தங்கையை அதட்டி அடக்கிவிட்டு மனைவியின் அறைக்குள் நுழைந்தான்.



கண்மூடி கட்டிலில் துவண்டுக் கிடந்தாள் மதுரா. அதுவரை அவனுக்கிருந்த உட்சபட்ச கோபம் ஆத்திரமெல்லாம் சூரியனைக் கண்ட பனித்துளியாய் உருகிக் கரைந்தது. அவளை பார்த்தபடியே அறைவாசலிலேயே நின்றுவிட்டவன் ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே நுழைந்தான். வெளிறிப்போயிருந்த அவள் முகத்தை வேதனையுடன் நோக்கியபடி அவள் அருகில் மெல்ல அமர்ந்தான். மனதில் ஏதேதோ உணர்வுகள்... போராட்டங்கள்... இன்னெதென்று வரையறுக்க முடியவில்லை.



அவன் கை தானாக எழுந்து அவள் கையை தொட்டு தடவியது. அவன் இரு வலிய கரங்கள், தளர்ந்துக் கிடந்த அவள் மென்கரத்தை தனக்குள் பொத்திப் பாதுகாத்துக் கொண்டன. நெஞ்சாங்கூட்டிற்குள் ஏதோ அழுத்தியது. தொண்டைக்குழிக்குள் ஏதோ அடைத்தது. அலறி அழ வேண்டும் போலிருந்தது. அடக்கிக் கொண்டான். மூச்சின் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டது. தன் கைகளுக்குள் சிக்கியிருந்த அவள் கையில் அழுத்தமாக இதழ்பதித்தான். அடிவயிற்றிலிருந்து எழுந்துவந்த துக்கம் அவன் நெஞ்சை முழுவதுமாக ஆக்கிரமித்தது. கோவைப்பழம் போல் சிவந்துவிட்ட விழிகள் கசிந்தன. அவள் கையை தன் கண்களுக்குள் வைத்து அழுத்திக் கொண்டான். ஓரிரு நொடிகள் அவனிடம் எந்த அசைவும் இல்லை. அவளுடைய அருகாமை... அவளுடைய ஸ்பரிசம்... அவளுடைய வலி... துக்கம்... அனைத்தும் அவனை பெரிதும் பாதித்தது. அதிலிருந்து விடுபட்டு வெளியேறி அவன் நிமிர்ந்த போது, மதுராவின் சோர்ந்த பார்வையை சந்தித்தான். அந்த பார்வை அவனை கேள்வி கேட்டது... குற்றம்சாட்டியது... கனத்த மனதோடு அவள் கண்களை சந்தித்தவன், "ஆர் யூ ஓகே?" என்றான் முணுமுணுப்பாக.



அவள் கண்களில் இப்போது கோபம் குடியேறியது. "சாகல..." - வெறுப்புடன் கூறினாள். அவன் உடல் விறைத்தது. உதடுகள் அழுந்தமூடின. சற்று நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான். பிறகு, "இட்ஸ் கோயிங் டு பி ஆல்ரைட் மது... இட்ஸ் கோயிங் டு பி ஆல்ரைட்..." என்றான் அவள் கைகளில் அழுத்தம் கொடுத்து.



"ஆல்ரைட்...!!! ஹா..." - வியந்து பார்த்து கசந்த புன்னகை புரிந்தாள். இயலாமையுடன் அவளை பார்த்தான் தேவ்ராஜ்.



"ஏன் இங்க வந்திங்க தேவ்? எதுக்காக வந்திங்க? என்னோட கஷ்ட்டத்தை பார்க்கவா... இல்ல... என் குழந்தையோட அழிவை பார்க்கவா!" - அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது.



"நோ... நோ மது... நம்ம குழந்தைக்கு எதுவும் ஆகாது. நீ பயப்படாத..." - அவரசமாக மறுத்து அவளுக்கு தைரியம் கொடுக்க முயன்றான்.



"ஆனாதான் என்ன...! பிடிக்காத மனைவி... வேண்டாத குழந்தை போகட்டுமே!" - விரக்தியுடன் வெளிப்பட்ட வார்த்தைகள் அவன் இதயத்தை கசக்கிப் பிழிந்தன.



மறுப்பாக தலையசைத்து, "நோ... டோண்ட் சே தட்..." என்றான் வலி மிகுந்த குரலில். அவள் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வெளியே வர முடியாமல் கண்களை மூடியபடி மூச்சை ஆழமாக உள்ளிழுத்தான்.



"இங்க பாருங்க... என்னை பாருங்க தேவ்... பதில் சொல்லுங்க... நாளைக்கு குழந்தை குருடா... செவிடா... இல்ல வேற ஏதாவது ஊனமா பிறந்திட்டா என்ன செய்வீங்க? எப்படி அந்த பிள்ளையை பார்ப்பீங்க? எப்படி அவன்கிட்ட சொல்லுவீங்க...? உன் அப்பாவோட கோவம்தான் உன்னை ஊனமாக்கிடுச்சுன்னு அவன்கிட்ட எப்படி சொல்லுவீங்க தேவ்...? சொல்லுங்க... எனக்கு பதில் சொல்...லு...ங்க..." - அழுகையும் ஆத்திரமுமாக கத்தினாள். அவன் கையை பிடித்து இழுத்து அவனை உலுக்கினாள்.



தேவ்ராஜ் உறைந்து போய்விட்டான். அவள் சொல்வது எதையும் அவனால் கற்பனைகூட செய்ய முடியவில்லை. மனதை பயமெனும் பெரும் பேய் ஆக்கிரமித்தது. உடல் நடுங்கியது. கண்கள் கசிந்தன.



"காம் டௌன்... காம் டௌன் மது... கா...ம் டௌன்... நம்ம குழந்தைக்கு எதுவும் ஆகாது ஓகே... எதுவும் ஆகாது..." - அவளுக்கு சொல்வதோடு சேர்த்து தனக்குமே தைரியம் சொல்லிக் கொண்டான்.



"பொ...ய்... இது பெரிய பொய்... ஒரு வாரமா... ஒரு வாரமா விஷத்தை சாப்பிட்டுட்டு இருக்கேனே... எப்படி ஒண்ணும் ஆகாது தேவ்! எ...ப்...படி...ஆஆஆ...!!! ம்மா...! எங்...கு..ழ..ந்தை...!!!" - கன்றை இழந்த தாய் பசுவாக அலறினாள். அவளை இழுத்து தூக்கி தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான் தேவ்ராஜ். அவன் உள்ளம் துடித்தது. உடம்பின் ஒவ்வொரு அணுவும் அதிர்ந்தது. அவளுக்கு சமாதானம் சொல்ல முடியாமல் தவித்தான்.



"ஐம் சாரி... ஐம் சாரி மது... ஐம் சாரி..." - அவன் அடர்ந்த மீசைக்குள் ஒளிந்திருந்த மொத்த ஈகோவையும் தகர்த்து நொறுக்கிவிட்டு, அந்த வார்த்தைகள் வெளியே வந்து குதித்தன.



"ப்ளீஸ்... ப்ளீஸ் ஸ்டே ஸ்டராங்... என்னால உன்ன இப்படி பார்க்க முடியல... ப்ளீஸ்..." - கலங்கி கண்ணீர்விட்டான்.



"பெரிய தப்பு பண்ணிட்டேன்... என்னை மன்னிச்சுடு... ஐம் சாரி... ஐம் சாரி மது..." - மீண்டும் மீண்டும் புலம்பிக் கொண்டிருந்தவனின் கண்களிலிருந்து கசிந்த கண்ணீர் அவள் தோள்பட்டையை நனைத்தது. தன்னிலையிழந்து அவன் அணைப்பில் சற்று நேரம் அடங்கியிருந்தவள் திடீரென்று அவனை உதறிவிட்டு விலகினாள். அவள் பார்வை அவன் கண்களுக்குள் ஊடுருவியது.



"எனக்கு தெரியும் தேவ்... உங்களுக்கு என்னை பிடிக்கும்... எம்மேல உங்களுக்கு நிறைய அன்பு இருக்கு... அது எனக்கு நல்லா தெரியும்... ஆனா எம்மேல அன்பை வச்ச நீங்க ஏன் நம்பிக்கையை வைக்காம போனீங்க?" - சற்று திடப்பட்டிருந்த குரல் மீண்டும் உடைந்தது... "ஏன் என்ன பத்தி நல்ல விதமா யோசிக்காம போனீங்க தேவ்.. ஏ...ன்...? உங்களோட கோபத்துக்கும் வெறுப்புக்கும் என் குழந்தையை பலியாக்கிடீங்களே! இதை நா எப்படி மறப்பேன்! இதை நா எப்படி மன்னிப்பேன்..." - கோபத்தில் குரல் உயர்ந்தது. "ஐ ஹேட் யூ... ஐ ஹேட் யூ டு த கோர்... போயிடுங்க.... இங்...கிரு...ந்...து போ...யி...டு...ங்க..." - உச்சஸ்தாதியில் கத்தினாள். "போ...யி...டு...ங்...க..." - முழங்கால்களைக் கட்டிக்கொண்டு முகம் புதைத்துக் குலுக்கினாள்.



திகைப்புடன் மனைவியைப் பார்த்த தேவ்ராஜ், "ம...ம...தூ..." - மெல்ல அவள் தோள் மீது கைவைத்தான். "கோ..... கோ அ...வே...!!" - சட்டென்று நிமிர்ந்து அலறினாள்.



மதுராவின் அதிகப்படியான சத்தம் மாயாவை அந்த அறைக்குள் இழுத்துக்கொண்டு வந்தது. மனைவியின் மீது பதித்தப் பார்வையை விலக்காமல் சிலை போல் நின்றுக் கொண்டிருந்த தமையனை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துக் கொண்டு வந்தாள். பித்துப்பிடித்தவன் போல் தங்கையின் இழுப்புக்கு கட்டுப்பட்டு ஹாலுக்கு வந்தவன் தலையைப் பிடித்துக் கொண்டு சோபாவில் பொத்தென்று அமர்ந்தான். அவளுடைய அலறலும் கண்ணீரும் அவன் மூளையை மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டது. குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தவனின் கண்களிலிருந்து முத்து முத்தாக உதிர்ந்த கண்ணீர் தரையில் விழுந்து தெறித்தது. சற்று நேரம் அப்படி அமர்ந்திருந்தவன் பிறகு நரேந்திரமூர்த்தியை நிமிர்ந்து பார்த்து, "இப்படி ஒரு காரியத்தை ஏன் செஞ்சீங்க" என்றான் நொறுங்கிப்போனவனாக. அவன் மனம் வெகுவாய் புண்பட்டிருப்பதை அந்த குரலில் உணர்ந்தவன் உடனே அவன் அருகில் அமர்ந்து, "சாரி பேட்டா... வெரி சாரி... தெரியாம நடந்துடுச்சு... ப்ளீஸ் டோண்ட் லூஸ் யுவர் ஹோப்... எதுவும் ஆகாது..." என்று அவனுக்கு தைரியம் சொன்னார்.



நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டியவனோடு கண்ணிமைக்கும் நேரத்தில் சமாதானமாகிவிட்டாரே இந்த மனிதன் என்கிற திகைப்புடன் கணவனை வெறித்துப் பார்த்தாள் பிரபாவதி.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 86

"சாரி பேட்டா... வெரி சாரி... தெரியாம நடந்துடுச்சு... ப்ளீஸ் டோண்ட் லூஸ் யுவர் ஹோப்... எதுவும் ஆகாது..." என்ற நரேந்திரமூர்த்தியின் வார்த்தைகள் அவன் செவிகளில் ஏறவே இல்லை. மதுராவின் வெறுப்பும் நிராகரிப்பும் தந்த வலியை கண்மூடி அனுபவித்தபடி தலைகுனிந்து அமைதியாக அமர்ந்திருந்தான். சற்று நேரம் கழித்து அவரை நிமிர்ந்து பார்த்தவன், "மதுராவ கூட்டிட்டு போறேன்" என்றான்.



உடனே படமெடுக்கும் நாகம் போல் சீற்றத்துடன் நிமிர்ந்தாள் பிரபாவதி. "அதெப்படி! இவ்வளவு தூரம் வந்த பிறகு எதை நம்பி என் பொண்ண அந்த வீட்டுக்கு அனுப்பறது!" என்றாள் ஆங்காரத்துடன்.



"ஹௌ டேர் யூ..." - எரிமலை போல் பொங்கி எழுந்த தேவ்ராஜ் அடுத்த வார்த்தை பேசுவதற்குள், "பிரபா...!!!" என்கிற நரேந்திரமூர்த்தியின் கணீர் குரல் அந்த அறையையே அதிர செய்தது.



பிரபாவதி திடுக்கிட்டுப் போய் கணவனைப் பார்க்க, குறையா கோபத்துடன் அவளை முரைத்துக் கொண்டு நின்றான் தேவ்ராஜ். அவன் மனம் எரிந்தது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு எப்படி அவள் தன் எதிரில் நின்று பேசுகிறாள் என்று கொதித்தது அவன் உள்ளம். அவளை பார்க்கவே வெறுப்பாக இருந்தது.



"தேவ்... உட்காரு... உட்காருன்னு சொல்றேன்ல்ல... ப்ளீஸ்... உட்காருப்பா..." - பெரும்பாடுபட்டு அவனை இருக்கையில் அமர வைத்தார் நரேந்திரமூர்த்தி.



"கருவில் இருக்க குழந்தைக்கு கூட உங்க வீட்ல பாதுகாப்பு இல்ல. எந்த நம்பிக்கையில என் மனைவியை நா இங்க விட்டுவைக்க முடியும்?" - இறுகியிருந்த அவன் குரலில் தெரிந்த எஃக்கு உறுதியில் பதட்டமானார் நரேந்திரமூர்த்தி.



"அது தெரியாம நடந்த தப்புப்பா..."



"இல்ல... உங்க சம்மதத்தோட... நால்லா தெரிஞ்சே நடந்த கொடுமை... இல்லைன்னு சொல்லுங்க..." - நேருக்கு நேர் அவர் கண்களை பார்த்தான். அந்த பார்வையை சந்திக்க முடியாமல் தலைகவிழ்ந்தார் பெரியவர்.



"இதுக்குமேல ஒரு நிமிஷம் கூட என்னோட மனைவியை நா இங்க விடமாட்டேன். நா கூட்டிட்டு போறேன்..." - அவளுடைய அறையை நோக்கி நடந்தான்.



"தேவ் அவசரப்படாத..." - பரபரப்புடன் வெளிப்பட்ட அவர் குரல் தேவ்ராஜின் வேகத்திற்கு தடைபோட்டது. அவன் நின்று அவரை திரும்பிப் பார்த்தான்.



"உம்மேலையும் தப்பு இருக்குப்பா... நீ நடந்துகிட்டு விதம் சரியில்ல. அவளுக்கு கொஞ்சம் டைம் கொடு..."



"ஐ நோ... நா நடந்துகிட்டவிதம் சரியில்லதான். ஆனா நா ஏன் அப்படி நடந்துக்கிட்டேன். எதுக்கு எனக்கு அவ்வளவு கோபம் வந்தது... இதெல்லாம் எங்க ரெண்டுபேருக்கும் மட்டுமே தெரிஞ்ச விஷயங்கள். அதெல்லாம் நாங்க பேசினாத்தான் சரியாகும்... விலகி போய்ட்டா எதுவுமே மாறாது... நீங்க எல்லாரும் இதுல தலையிடாம இருக்கறது நல்லது" என்று கூறிவிட்டு மனைவியின் அறைக்குள் நுழைந்தான். அடுத்த சில நொடிகளிலேயே, "மதூ..." என்ற அவனுடைய அலறலில் வீடே கிடுகிடுத்தது.



நாசியில் கசியும் குருதியோடு சுயநினைவிழந்து மரக்கட்டைப்போல் கிடந்த மதுராவின் உடல் சில்லிட்டுப்போயிருந்தது. சர்வமும் ஒடுங்கிப்போன தேவ்ராஜ் பதட்டத்துடன் அவளை தூக்கி உலுக்கினான். தட்டி எழுப்பினான். 'மது... மது...' என்று பிதற்றினான். அவள் அசைவற்றுக் கிடக்கவும் பயந்துப் போய் அலறினான். நொடியில் வீடே அங்கு கூடிவிட்டது.



"என்ன முடிவு பண்ணியிருக்கீங்க சார்?" - மருத்துவரின் பார்வை தேவ்ராஜின் முகத்தில் பதிந்தது.



"புரியில. நான் என்ன முடிவு பண்ணறது?"



"குழந்தையை பற்றி..."



"எனக்கு என்னோட குழந்தை வேணும். பத்திரமா வேணும்" - இப்போது அவருடைய பார்வை நரேந்திரமூர்த்தியின் முகத்தில் அழுத்தமாக பதிந்தது.



"அவங்க சாப்பிட்ட மாத்திரை ரொம்ப வீரியமானது. குழந்தைக்கு முப்பதுலேருந்து நாற்பது பர்சன்ட் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கு. அப்புறம் நாளைக்கு ஏதாவது பிரச்சனைன்னா என்னை குறை சொல்லக் கூடாது" - அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.



"என்ன பேசற நீ! நீதானே அந்த மாத்திரையை கொடுத்த.. நீயே அதை சரி பண்ணறதுக்கும் மருந்து கொடு... இல்ல... நீ என் குழந்தைய சேதப்படுத்தின அதே வழியில உன்னையும் நா சேதப்படுத்துவேன் " என்று மருத்துவரிடம் ஆவேசமாக உறுமினான். அவருடைய பார்வை மீண்டும் நரேந்திரமூர்த்தியிடம் பாய்ந்து அவரை குற்றம் சொன்னது.



பின்னாளில் இது போல் பிரச்சனை வந்தால் தானே பொறுப்பெடுத்துக்கொள்வதாகக் கூறித்தான் அன்று கருக்கலைப்பிற்கு மருத்துவரை சம்மதிக்க வைத்தார் நரேந்திரமூர்த்தி. அதை இப்போது நினைவுகூர்ந்து,



"தேவ்... ப்ளீஸ் அமைதியா இரு... இவருக்கும் அந்த டேப்ளெட்ஸ்சுக்கும் சம்மந்தம் இல்ல..." என்று கூறி மருத்துவரை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கில் அவனை திசைதிருப்பினார்.



கொலைவெறியுடன் அவரை முறைத்த தேவ்ராஜ், "இவரு கொடுக்கலைன்னா! வேற எங்க போயி வாங்கிட்டு வந்தீங்க? யாரு ப்ரிஸ்கிரைப் பண்ணினது?" என்றான் ஆத்திரத்துடன்.



"அதை அப்புறம் பேசிக்கலாம். இப்போ இங்க ஆகவேண்டியதை பார்ப்போம். நீ கொஞ்சம் அமைதியா இரு" என்று அவனை சமாதானம் செய்ய முயன்றுவிட்டு மருத்துவரிடம் திரும்பி, "குழந்தையை சேவ் பண்ண என்ன செய்யணுமோ அதை செய்ங்க... எங்களுக்கு அந்த குழந்தை பத்திரமா வேணும்" என்றார். மருத்துவர் நெற்றியை நீவினார்.



"மதுரா ஏற்கனவே ரொம்ப வீக்கா இருக்கா. வீரியமான மாத்திரையையும் சாப்பிட்டிருக்கா. எந்த நேரத்துலேயும் எதுவும் ஆகலாம். ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். ஒரு சின்ன டென்ஷன் கூட அவளை நெருங்க கூடாது. ரெத்த அழுத்தம் கண்டிப்பா சீரா இருக்கணும் இல்லன்னா எந்த நேரத்துலேயும் மிஸ்கேரேஜ் ஆயிடலாம். சத்தான உணவையும், நா எழுதித்தர்ற மருந்தையும் சரியான நேரத்துல கொடுங்க. மைண்ட் ஸ்ட்ரெஸ் இருக்கக் கூடாது. அதுக்கு இப்போ பார்த்துட்டு இருக்க சைக்கியார்ட்டிஸ்ட்டை தொடர்ந்து பாருங்க. அவங்க என்ன சொல்றாங்களோ அதை கட்டாயமா ஃபாலோ பண்ணுங்க. கடவுள் கைவிடமாட்டார்..." - கடைசியாக கடவுள் மேல் பாரத்தை போட்டார் மருத்துவர். கலங்கிப்போய்விட்டான் தேவ்ராஜ், "எந்த நேரத்துலேயும் மிஸ்கேரேஜ் ஆயிடலாம்" என்ற மருத்துவரின் கூற்று அவனை அச்சுறுத்தியது. அசைவற்று அமர்ந்திருந்தவனை நரேந்திரமூர்த்திதான் வெளியே இழுத்துக் கொண்டு வந்தார்.



திகிலடைந்தது போல் பேச்சற்று மெளனமாக ஒரு மூலையில் வந்து அமர்ந்துவிட்ட மருமகனை ஆதுரத்துடன் பார்த்த நரேந்திரமூர்த்தி, அவனிடம் நெருங்கி "கவலைப்படாத தேவ். எதுவும் ஆகாது" என்று அவனுடைய தோளை ஆதரவாக பற்றினார்.



அதே நேரம் சூறாவளியின் சீற்றத்துடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இராஜேஸ்வரி மகனைக் கண்டதும் அவனிடம் பாய்ந்து வந்து அவன் சட்டையை பிடித்து இழுத்து உலுக்கி, "என்னடா பண்ணி தொலைச்சிருக்க... என்ன பண்ணி தொலைச்சிருக்க? என் வாழ்க்கைதான் வீணா போச்சு... நீங்களாவது குடும்பம் குழந்தைகுட்டி சந்தோஷமா வாழ்வீங்கன்னு பார்த்தா நீங்களும் இப்படி வாழ்க்கையை நாசம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கிறீங்களே! ஏண்டா இப்படி இருக்கீங்க?" என்று ஆத்திரப்பட்டாள். அவள் கண்களில் பொலபொலவென்று கண்ணீர் உகுந்தது. பிரபாவதி மேல் கொட்ட முடியாத அத்தனை கோபத்தையும் தன் மகன் மீது கொட்டித்தீர்த்தாள்.



தாயின் கோபத்திற்கு அவனிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை. நெஞ்சிலும் தோளிலும் அவள் அடிக்கும் அடிகளை வாங்கி கொண்டு சிலை போல் அசையாமல் அமர்ந்திருந்தான்.



"ராஜி... விடு... அவனை விடு ராஜி... அவனே உடைஞ்சு போயிருக்கான். அவன்கிட்ட போயி சத்தம் போடற" - தங்கையை அனைத்துப் பிடித்தார் நரேந்திரமூர்த்தி. சட்டென்று அவரை உதறித்தள்ளினாள் தங்கை.



"உங்களுக்கு கூட இதை தடுக்கணும்னு தோணலையா? எப்படி மனசு வந்தது உங்களுக்கு?" - ஆற்றாமையுடன் கேட்டாள். அவர் பதில் சொல்ல முடியாமல் சங்கடத்துடன் நிற்க, "எல்லாம் என்னோட விதி. இதையெல்லாம் பார்த்து சகிக்கணுங்கறது என்னோட தலையெழுத்து. எனக்கு பிறந்த மூணும் மூணு திசைக்கு இழுத்துகிட்டு போகுது... உங்களையெல்லாம் குறை சொல்லி என்ன பண்ண முடியும்?" என்று முணுமுணுத்தபடி அவரிடமிருந்து விலகி மருமகளின் அறையை எட்டிப் பார்த்தாள். பிரபாவதி உள்ளே இருப்பதை கண்டுவிட்டு உள்ளே செல்ல விரும்பாமல் வெளியே கிடந்த நாற்காலியில் அமர்ந்தாள்.



இப்போது இருக்கும் மனநிலையில் அவள் முகத்தில் விழிப்பதைக் கூட விரும்பவில்லை இராஜேஸ்வரி. வாய்திறந்து பேசவே பயந்தவளாக அமைதியாய் பூனை போல் மெதுவாக வந்து தாய்க்கு அருகில் அமர்ந்தாள் மாயா. இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கிறது. எதுவும் தன்னுடைய கவனத்திற்கு வரவே இல்லை என்பதில் மாயாவின் மீதும் அவளுக்கு கோபம் இருந்தது. எனவே மகள் பக்கமும் திரும்பாமல் இறுக்கமாக அமர்ந்திருந்தாள்.



தங்கையின் கலங்கிய முகத்தைக் காண நரேந்திரமூர்த்திக்கு என்னவோ போல் இருந்தது. "உள்ள வா... மது முழிச்சிகிட்டுதான் இருக்கா. பார்க்கலாம்..." என்று அழைத்தார். அவள் அசையவில்லை. பிரபாவதி இருப்பதால்தான் இவள் உள்ளே வர மறுக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டவர், உடனே உள்ளே சென்று மனைவியை வெளியே அனுப்பிவிட்டு, தங்கையை உள்ளே அழைத்தார். நாத்தனாருக்கு கொடுக்கப்படும் முன்னுரிமையை கடுப்புடன் பார்த்தபடி ஒதுங்கி நின்றாள் பிரபாவதி.



அனைவரும் அவ்வப்போது மதுராவை உள்ளே சென்று பார்ப்பதும் வருவதுமாக இருக்க தேவ்ராஜ் மட்டும் அமர்ந்த இடத்திலிருந்து அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான். அவனுக்கு ஆதரவாக அருகில் வந்து நின்றார் நரேந்திரமூர்த்தி.



"மதுக்கு ஒண்ணும் இல்ல தேவ்..."



"நா அவளை பார்க்கணும்..." - தவிப்புடன் கேட்டான்.



உடனே, அருகில் நின்ற பிரபாவதி, "ஒரு சின்ன டென்ஷன் கூட அவளை நெருங்க கூடாதாம்..." என்றாள் குத்தலாக.



அந்த வார்த்தை சுருக்கென்று அவன் மனதில் தைத்தது. அவள் அவனை குறிப்பிட்டுத்தான் கூறுகிறாள் என்று ஆண்கள் இருவருக்குமே புரிந்தது. நரேந்திரமூர்த்தி மனைவியை முறைத்தார். இப்போது தேவ்ராஜ் பிரபாவதியோடு சண்டை போடும் மனநிலையில் இல்லை. மனம் மனைவியின் அருகாமைக்காக ஏங்க மாமனை பரிதாபமாகப் பார்த்தான்.



"என்னோட ப்ரசன்ஸ் மதுக்கு டென்ஷனா இருக்க முடியாது மாமா... அவளால என்னை வெறுக்க முடியாது... ஒதுக்க முடியாது... நிச்சயம் முடியாது. என்னாலதான் இது எல்லாமே... என்னாலதான் அவ நொறுங்கிப்போய்ட்டா... நான்தான் அவளை பிரேக் பண்ணினேன். இது எல்லாமே உண்மைதான்... ஆனா இது எல்லாத்துக்கும் மேல இன்னொரு உண்மையும் இருக்கு... என்னாலதான் அவளை பிக்ஸ் பண்ண முடியும். என்னால மட்டும் தான் முடியும். அவ என்னை தேடுவா... என்னோட பிரசன்ஸ் அவளுக்கு தேவைப்படும்... என்னால அவளை விட்டுப் போக முடியாது மாமா..." - தவிப்புடன் கூறினான்.



பரிவோடு அவனை பார்த்தவர், "உன்ன யாரு விலகிப் போக சொன்னா? வா... உள்ள அவனது உன் மனைவியை பாரு... எல்லாம் சரியாயிடும்..." - அவன் கையை பற்றினார்.



"கூட்டிட்டு போங்க... போயி ஒரேடியா அவளை மேல அனுப்பிவச்சுட்டு வாங்க" - பிரபாவதியின் குரோத குரலில் அடிவாங்கிய தேவ்ராஜ், "நோ..." என்று அவர் பிடியிலிருந்து தன் கையை உருவிக் கொண்டான்.



உடம்பெல்லாம் நடுங்குவது போலிருந்தது. 'தாய்தானே இவள்! எப்படிப்பட்ட வார்த்தையை சொல்லிவிட்டாள்!' - அவன் இதயம் தடதடத்தது.



"ஏய்...! அறிவில்ல உனக்கு? என்ன பேச்சு பேசற?" - நரேந்திரமூர்த்தி மனைவியை அதட்டுவது அவன் காதில் கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் கேட்டது. தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார்.



"இவ இப்படித்தான் ஏதாவது உளறிக்கிட்டு இருப்பா. நீ எழுந்து வா..." - மருமகனின் கையைப் பிடித்து அழைத்தார். இல்லை என்பது போல் தலையசைத்தவன், "என்னால் முடியாது ..." என்றான். 'எப்போ வேணுன்னாலும் மிஸ்கேரேஜ் ஆகலாம்...' - மருத்துவரின் குரல் அவன் செவியில் எதிரொலித்தது. முகமெல்லாம் சூடாகி வியர்த்தது.



"இவ பேச்சையா பெருசா எடுத்துக்கற?" - வியப்புடன் கேட்டார் நரேந்திரமூர்த்தி. அவனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. ஆனால் தான் மதுராவை பார்ப்பது அவளுக்கு ஆபத்தாக முடிந்துவிடுமோ என்கிற பயம் மேலெழுந்தது.



"தேவ்... தேவையில்லாம உன்ன குழப்பிக்காத. மதுராவுக்கு ஒண்ணும் இல்ல... அவளுக்கு எதுவும் ஆகாது. நீ பயப்படாத..." - அவனுடைய முகமாற்றத்தைக் கண்டு பரபரப்புடன் இதை சொன்னார் பெரியவர். அவருடைய பேச்சு அவன் மனதில் பதியவில்லை. அவனை ஆட்கொண்டிருந்த பெரும்பயம்... குழப்பம்... மதுராவிடம் அவனை நெருங்கவிடாமல் துரத்தியது. மனதில் கொள்ளை பிரியம் இருந்தும், மாமனார் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் அவளை பார்க்க உடன்படவில்லை.



"மாயா..." - தங்கையை அழைத்தான். நொடிப்பொழுதில் தமையனின் எதிரில் வந்து நின்றாள்.



"பாய்?" - நெஞ்சுக்குழியிலிருந்து பொங்கிவந்த ஓர் உணர்வு தொண்டையை அடைத்துக்கொள்ள பேசமுடியாமல் சற்றுநேரம் மெளனமாக நின்றான். பிறகு,



"மதுரா உனக்கு இன்னொரு ஆதிரா... பார்த்துக்க..." என்றான் கரகரத்த குரலில். உயிரை தன்னிடம் ஒப்படைத்துவிட்டு வெறும் கூடாக வெளியேறும் தமையனை இயலாமையுடன் பார்த்தாள் மாயா.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 87

திடீரென்று அவளுக்கு மூச்சுமுட்டியது. உறக்கக் கலக்கத்திலேயே தலையணையை இருக்கமாகப் பிடித்துக் கொண்டு போராடியவள் விருட்டென்று எழுந்து அமர்ந்தாள். உடல் முழுவதும் வியர்வையில் தொப்பலாக நனைந்துவிட்டது. தினமும் அவளுடைய உறக்கத்தை குலைக்கும் இந்த பயங்கர கனவிலிருந்து எப்போது அவளுக்கு விடுதலை கிடைக்கும்! ஓயாத கண்ணீர் அவள் கண்களிலிருந்து வழிந்துக் கொண்டே இருந்தது. மெத்தையிலிருந்து நழுவி தரையில் காலை ஊன்றினாள். பலமிழந்து தளர்ந்த கால்கள் அடியெடுத்து வைக்க முடியாமல் தடுமாறின. கட்டிலை பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்து நடந்து குளியலறைக்குள் நுழைந்தாள். குழாயை திறந்து குளிர்ந்த நீரை நடுங்கும் கைகளில் வாங்கி முகத்தில் அடித்துக் கொண்டு நிமிர்ந்து கண்ணாடியைப் பார்த்தாள். மதுராவின் தோற்றத்தில் மனமுடைந்த ஒரு பெண்ணை அங்கே கண்டாள். அவள் மதுரா அல்ல... அவளுடைய சாந்தமான முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பிருக்கும். அதுதான் அவளுடைய அடையாளம். அந்த அடையாளத்தை தொலைத்துவிட்ட இந்த பெண் யார்!



கண்ணாடியை ஊன்றிப் பார்த்தாள். உள்ளே இருந்த பெண்ணின் கண்களில் கண்ணீர் நிற்காமல் கசிந்துக் கொண்டே இருந்தது. அந்த துக்கம் கொண்ட முகத்தை பார்க்க பிடிக்காமல் கீழே குனிந்தவள் திடுக்கிட்டாள். தலைசுற்றி கண்களை இருட்டிக் கொண்டு வந்தது! - 'கடவுளே! எவ்வளவு ரெத்தம்! எப்படி...!' நன்றாகக் குனிந்துப் பார்த்தாள். அவளுடைய கால்களை சுற்றி... குளம்கட்டி நின்ற குருதிவெள்ளத்தைக் கண்டதும் அவள் இதயம் அதி வேகமாக துடித்தது. மூச்சுக்காற்றின் வேகம் எக்குத்தப்பாக எகிறியது.



'முடிந்துவிட்டதா! கடவுளே! எல்லாம் முடிந்துவிட்டதா! கண்ணே! என் கண்மணியே!' - கதறியது அவள் உள்ளம். 'ஆஆஆஆ....' - முகத்தை மூடிக் கொண்டு வீறிட்டாள். சுக்கல் சுக்கலாக நொருங்கிப் போய் தரையில் சரிந்து விழுந்தாள். என்ன மாயம்! திடீரென்று இரத்த வெள்ளம் அவள் கண்களிலிருந்து மறைந்து போனது. திடுக்கிடலுடன் தரையை தொட்டு தடவி பார்த்தாள். மீண்டும் மீண்டும் பார்த்தாள். எதுவுமே இல்லை! வெறும் தரைதான்... சுத்தமாக பளிங்குத்தரை... மீண்டும் ஹாலுசினேஷன்! மாயத்தோற்றம்! இல்லாததை இருப்பது போலும்... நாடகக்காததை நடந்துவிட்டது போலும் கற்பனை செய்துகொள்ளும் விசித்திரம்!



முழங்கால்களை இருக்கமாகக் கட்டிக் கொண்டு தலையை அதில் கவிழ்து கொண்டாள். "யூ ஆர் ஓகே பேபி... யூ ஆர் ஓகே... இது எல்லாமே ஒரு கற்பனைதான்... கனவுதான்... உனக்கு ஒண்ணும் இல்ல பேபி... நீ நல்லா இருக்க... அம்மா உன்ன பத்திரமா வச்சிருக்கேன். பயப்படாத... உனக்கு ஒண்ணும் இல்ல..." - வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையிடம் வாய்விட்டுப் பேசினாள்.



அவள் மனம் சற்று அமைதியடைந்த பிறகு மெல்ல எழுந்தாள். குளியலறையிலிருந்து வெளியேறி படுக்கைக்கு அருகே உள்ள டிராயரிலிருந்து மாத்திரையை எடுத்து குளிர்ந்த நீரோடு விழுங்கிவிட்டு மெத்தையில் அமர்ந்தாள். மனம் மெல்லமெல்ல நிதானப்பட்டது. மூச்சு சீரானது. இந்த பயம் அவளுக்குள் முளைத்து மூன்று மாதங்களாகிவிட்டது. இப்போது குழந்தை வயிற்றில் ஆறு மாதம். வயிறு நன்றாக மேடிட்டுவிட்டது. மனநல மருத்துவரிடம் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் அது முற்றிலும் அவளுக்கு கைகொடுக்கவில்லை. இந்த பயமும், கற்பனையும், கொடூரமான கனவும் அவளை நிழல் போல் துரத்திக் கொண்டே இருக்கின்றது. விடுபட முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறாள்.



மறுநாள் காலை வழக்கம் போல் வெகுதாமதமாக எழுந்தாள். இரவெல்லாம் உறங்குவதில்லை. அப்படியே உறங்கினாலும் கனவும் கற்பனையும் அவளை உறங்கவிடுவதில்லை. காலைநேரத்தில் கண்ணயர்வது மட்டும் தான் அவளுக்கான ஓய்வு... அதுவும் மாத்திரையின் வீரியத்தால் கிடைக்கும் ஓய்வு... தளர்ந்த நடையோடு குளியலறைக்குள் நுழைந்தவள் வெளியே வரும் போது மகளுக்காக அந்த அறையில் காத்திருந்தார் நரேந்திரமூர்த்தி.



அவரை பார்த்ததும் மதுராவின் முகம் சுருங்கியது. அவரோடு மட்டும் அல்ல.. வீட்டில் ஒருவரோடும் அவள் முகம் கொடுத்து பேசுவதில்லை. குழந்தை பற்றிய பயம் அவள் மனதை குடைய குடைய, அந்த பயமெல்லாம் குடும்பத்தாரின் மீது கோபமாக மடைமாற்றப்படுகிறது.



அதுமட்டுமல்ல... அவர்கள் மீது அவளுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. எதை எடுத்தாலும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும்... பயத்தோடு மீண்டும் மீண்டும் பரிசோதிப்பதும் வழக்கமாகிவிட்டது. இந்த மூன்று மாதத்தின் ஆரம்ப காலங்களிலெல்லாம் பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறாள். எந்த உணவில் எதை கலந்தார்களோ என்கிற சந்தேகம் அவர்கள் கையால் பச்சை தண்ணீரைக் கூட அருந்தவிடாமல் தடுத்தது. உணவும் இல்லாமல் உறக்கமும் இல்லாமல் பித்துப்பிடித்தவள் போல் இருந்தாள். அந்த நேரத்தில் மட்டும் அவன் இருந்திருந்தால்! பெருமூச்சுவிட்டாள்! இது என்ன புதிதா! அவளுடைய எந்த தேவைக்கு அவன் அருகில் இருந்திருக்கிறான். அவனுடைய தேவை எப்போது அவளுக்கு அதிகமாக இருந்ததோ அப்போதெல்லாம் நிர்க்கதியாக அவளை தவிக்க விட்டுவிடுவது அவனுக்கு வழக்கம் தானே! இப்போதும் அதைத்தான் செய்திருக்கிறான்.



வர வேண்டாம்... போய்விடு என்று சொன்னது அவள் தான்! சொன்னால் போய்விடுவானா! போய்விட்டான்! இந்த மூன்று மாதத்தில் ஒருமுறை கூட அவளை எட்டிப்பார்க்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றவில்லையே! - தொண்டடையை அடைத்தது. மௌனமாக தலை குனிந்து நின்றாள்.



"எப்படிம்மா இருக்க?" - தந்தையின் கனிவான குரல் அவள் மனதில் பதிந்தது. ஆனால் அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை.



"இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாயிக்கம்மா... தேவ் உன்ன பார்க்க வர்றேன்னு சொல்லியிருக்கான்" - வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.



'தேவ்!' - கையில் பிடிபட்ட பறவையின் சிறகு போல் படபடவென்று அடித்துக் கொண்டது அவள் இதயம்.



இத்தனை நாட்களாக இல்லாமல் இப்போது என்ன திடீரென்று! - 'நான் அவனை பார்க்க விரும்பவில்லை' என்று கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால் மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்ட நா பிறழ மறுத்தது.



'உங்க ரெண்டு பேருக்குள்ள எப்படி இவ்வளவு பெரிய பிளவு வந்ததுன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு! உங்ககிட்ட கோபப்படக் கூடாதுங்கறதுக்காக ஆங்கர் மேனேஜ்மேண்ட் கோர்ஸ் எடுத்துக்கிட்டார். உங்களுக்கு பிடிக்கலைங்கறதுக்காத அதை பாதியிலேயே நிறுத்தவும் செஞ்சார். உங்க மேல அவ்வளவு பிரியம் அவருக்கு. எப்படி பிரிஞ்சீங்க! உங்களோட பிரிவுக்கு காரணம் அவரோட கோவம்தான்னா நீங்க அதை கொஞ்சம் கன்சிடர் பண்ணனும். கோவம் அவரோட குணம் இல்ல.. வீக்கனஸ்...' - மனநல சிகிச்சைக்காக தினமும் வீட்டிற்கு வரும் மருத்துவர் மேதா சொன்னது இப்போது அவள் நினைவில் தோன்றியது. அவளுடைய வார்த்தையில் மதுராவின் மனம் கனியத்தான் செய்தது. ஆனால் அவனுடைய வீக்கனஸ் குழந்தையை ஆபத்தின் விளிம்பில் கொண்டு நிறுத்திவிட்டதை நினைக்கும் போது அவளால் அவனை மன்னிக்க முடியவில்லை. வேண்டாம் என்று வெறுக்கவும் முடியாமல், வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் இரண்டும் கெட்டானாய் கிடந்து அடித்துக் கொண்டது அவள் மனம்.



***************************

அவன் வழக்கமாக செய்யும் வேலைகள் அனைத்தும் அன்று தடைபட்டு போய்விட்டன. காலை நேர ஜாகிங் கூட ஜகா வாங்கிவிட்டது. மனம் பரபரத்தது. இன்று அவளை பார்க்கப் போகிறான். மூன்று மாதங்களுக்குப் பிறகு... நீண்ட நெடிய தொண்ணூறு நாட்களுக்குப் பிறகு அவளை சந்திக்கப் போகிறான். அவளுடைய அழகான குரலை கேட்கலாம்... அவளுடைய பளிங்கு கண்களோடு பேசலாம்... அவள் சுவாசித்த மிச்சக்காற்றை சுவாசித்து உயிரை நிறைத்துக்கொள்ளலாம்...! முட்டாள்தனமான உணர்வுகள் அவன் உள்ளத்தை ஆக்கிரமித்து, இதமாய் வருடின.



அவள் இல்லாத இந்த வாழ்க்கை வெறுமை... தண்டனை...! தனிமையும் துயரமும் விடாமல் துரத்தும் இந்த மூன்று மாதங்களை எப்படி கழித்தான் என்பது கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம். பகலெல்லாம் வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாலும் இரவில் மூச்சுமுட்டி செத்து செத்து பிழைத்தான். 'ஆக்டபஸ்' போல் மூளையை சுருட்டிப் பிடித்துக்கொள்ளும் அவளுடைய நினைவுகளிலிருந்து அவனால் வெளியே வரவே முடிவதில்லை. பழைய தேவ்ராஜாக இருந்திருந்தால் மதுராவை மறக்க மதுவை நாடியிருப்பான். ஆனால் அவனை மூர்க்கனாக்கி அவளை அவனிடமிருந்து பிரித்ததே இந்த சனியன் பிடித்த போதைதானே! இன்னொருமுறை அதை தொடுவதா! - முற்றிலும் அதை விலக்கிவிட்ட இந்த புது மனிதனுக்கு அந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட செக்கு மாடாய் அவள் நினைவுகளிலேயே உழன்றான்.



நியாயப்படி அவனை இப்படி புலம்பவிட்டதற்கு... தனிமையில் தவிக்க விட்டதற்கு அவளுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். ஆனால் இப்போது அவனுக்கு அப்படி தோன்றவில்லை... அவள் எதிரில் மண்டியிட்டு என்னை ஏற்றுக்கொள் என்று கெஞ்ச வேண்டும் போல் இருந்தது. அவளை சமாதானம் செய்வதற்காக அவளிடம் கெஞ்சுவதென்ன... யாசிக்கக் கூட தயாராகிவிட்டான். அவளுக்கு முன் அவனுடைய கர்வமும் சுயமரியாதையும் கூட மதிப்பிழந்துவிட்டதாகத் தோன்றியது. அதை நினைத்து அவன் வெட்கப்படவில்லை... அவமானப்படவில்லை... மதுரா என்னும் பொக்கிஷத்திற்காக எதையும் இழக்கலாம் என்கிற பெருமிதத்தோடு குளியலறைக்குள் நுழைந்தான்.



பூந்தூறல் போல் ஷவரிலிருந்து உதிர்ந்த குளிர்ந்த நீர் அவன் மேனியில் வந்து மோதியது. 'இனி மிஸ்கேரேஜ் ஆயிடுமேங்கற பயம் தேவை இல்ல... நீங்க தாராளமா மதுராவை பார்க்கலாம். அவளுக்கும் உங்க ஏக்கம் இருக்கு. வெளியே காட்ட மாட்டேங்கிறா... அந்த பிடிவாதத்தை நீங்கதான் உடைக்கணும்' - மேதா கூறியதை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்ந்தபடி குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தான்.



இந்த மூன்று மாதங்களில் அவளை நேரடியாக பார்க்கவில்லையே ஒழிய, மாயா என்னும் கண்ணாடி வழியாக ஒவ்வொரு நாளும் அவளை கண்காணித்துக் கொண்டுதான் இருந்தான். அவள் பட்ட கஷ்டங்களையும் அனுபவித்த துன்பங்களையும் இரு மடங்காக அவன் உள்ளத்தில் உணர்ந்தான். அவளுடைய மேலான சிகிச்சைக்கு ஆனதை செய்தான். அதன்படி அவளுடைய மனோதத்துவ நிபுணரை மாற்றி மேதாவை நியமித்தான். அவள் மூலம் அவளிடம் தெரிந்த ஒவ்வொரு சிறு முன்னேற்றத்தையும் தெரிந்துக் கொண்டான். இப்போது அவள் உடல்நிலையிலும் மனநிலையிலும் நல்ல மாற்றம் வந்துவிட்டது. அதுமட்டுமல்ல... அவனுக்காக அவள் ஏங்குகிறாளாம்! அவன் மனம் இனித்தது.



வோர்டராபை திறந்தான்... தன்னுடைய தோற்றத்தைப் பற்றி அவன் எப்போதும் பெரிதாக கவலைப்பட்டதில்லை. ஆனால் இப்போது அப்படி இல்லை... தன் மனதிற்கு இனியவளை கவரும் விதத்தில் நன்றாக உடுத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணினான். சட்டென்று அவன் முகத்தை வெட்கம் ஆக்கிரமித்தது. 'காட்!' - பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தான். நல்லவேளை யாரும் பார்க்கவில்லை. என்ன அசட்டுத்தனம்...!!! - 'மதூ...! என்னை என்ன பண்ணிட்ட நீ!' - இனிய உணர்வுடன் அவளை மானசீகமாக கடிந்துகொண்டவன், அவளுக்கு பிடித்த நிறத்தில் ஒரு சூட்டை தேர்வு செய்தான்.



மீண்டும் ஒருமுறை கண்ணாடிக்கு எதிரில் சென்று நின்று அதில் தெரிந்த பிம்பத்தை மேலும் கீழும் பார்த்தான். தாடியை தடவி மீசையை முறுக்கிவிட்டான். ஏற்கனவே சரியாக இருந்த கோட்டை மீண்டும் ஒருமுறை சரியாக இழுத்துவிட்டான்.



தேவ்ராஜா இவன்! இருக்கவே முடியாது... இந்த பதட்டமும் பரபரப்பும் அவனுக்கு சற்றும் சம்மந்தமில்லாதது. - 'காட்! மணியாகிவிட்டதா!' - கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்தான். ஒன்பது மணியென்று காட்டியது. 'எழுந்திருப்பாளா!' - அலைபேசியை எடுத்து மாயாவிற்கு அழைத்தான்.



"நா வர்றேன்னு தெரியுமா? என்னை பார்த்ததும் டென்ஷன் எதுவும் ஆயிட மாட்டாளே!"



"அவ நல்லா இருக்கா தேவ் பாய்... அதோட நீங்க வர்றீங்கன்னு மாமா அவகிட்ட சொல்லீட்டாரு. நார்மலாதான் இருக்கா. டென்ஷனாகாம வாங்க"



"நா வர்றேன்னு சொன்னதும் என்ன சொன்னா?"



"ஒண்ணும் சொல்லியிருக்க மாட்டான்னு நினைக்கறேன். அவர் என்கிட்ட எதுவும் சொல்லல..."



"அவர் மதுகிட்ட பேசும் போது நீ பக்கத்துல இல்லையா?"



"இல்லையே... ஏன்?"



"ப்ச்... என்ன இல்லையே! எங்க போன? நீ அங்க இருந்திருந்தா நா வர்றேன்னு தெரிஞ்சதும் சந்தோஷப்பட்டாளா... முகம் மாற்றம் எப்படி இருந்ததுன்னெல்லாம் கவனிச்சிருக்கலாமல்ல..." - எரிச்சலுடன் கேட்டான்.



"அட தேவ் பாய்... பேசாம கிளம்பி வாங்க... டீனேஜ் பையன் மாதிரி படுத்தாம..." - கண்டுபிடித்துவிட்டாளே! அவன் முகத்தில் வழிந்த அதிசட்டுத்தனத்தை காண அருகில் ஒருவரும் இல்லாமல் போனது அவன் செய்த பாக்கியம்.



ஓரிரு நொடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டவன், "டீனே...ஜ்! பைய...னா! லூசு... என்னை திடீர்ன்னு பார்த்ததும் மது... மது டென்ஷன் ஆயிட கூடாதுல்ல... அப்புறம் முன்னாடி மாதிரி ஏதாவது ஆயிட்டா என்ன பண்ணறது. அதான் கேட்டேன்... உளறாம வேலையைப் பாரு..." என்று தன் மனதை மறைத்து தங்கையிடம் வெடுவெடுக்க முயன்றான். புஷ்வாணமாகிவிட்ட அவனுடைய முயற்சியை ரசித்து சிரித்தபடி அழைப்பை துண்டித்தாள் மாயா.



தேவ்ராஜ் மீண்டும் ஒருமுறை கண்ணாடிக்கு முன் வந்து நின்றான். எதுவும் அதிகமாக இருக்கிறதா என்று பார்த்தான். அந்த முரட்டு முகத்தில் மீசையையும் தாடியையும் தவிர அதிகமாவதற்கு என்ன இருக்கிறது! சிரித்துக் கொண்டான்.



'இன்னும் கொஞ்ச நேரம் மது. உன் முன்னாடி நான் இருப்பேன். எனக்கு தெரியும். என்னை பார்த்ததும் நீ கோவப்படத்தான் செய்வ... என்னை குற்றம் சொல்லுவ... வெளியே போக சொல்லி விரட்டுவ... ஆனா நா விடமாட்டேன்... உடனே நீ ஃபிரஸ்ட்ரேஷனோட அழுது கத்துவ... என்னைய அடிக்கக் கூட செய்வ... நா அப்படியே உன்ன என்னோட கைல ஏந்திக்குவேன்... உன்ன இறுக்கமா கட்டிக்குவேன்... ஆரம்பத்துல முரண்டு பண்ணினாலும் அப்புறம் உருகி என்னோட நீ ஒட்டிக்குவ... நா உன்கிட்ட மன்னிப்பு கேட்டு கெஞ்சுவேன்... நீ என்னை மன்னிக்க மாட்ட... ஆனா நீ மண்ணிக்கற வரைக்கும் நா உன்ன விடவே மாட்டேன்...' - அங்கு என்ன நடக்கப் போகிறது என்பதை இப்போதே கற்பனை திரையில் கண்டபடி காரில் ஏறினான் தேவ்ராஜ்.



 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 88

தேவ்ராஜின் கார் நரேந்திரமூர்த்தியின் அப்பார்ட்மெண்ட் வளாகத்திற்குள் நுழைந்தது. அவள் இங்குதான்... வெகு அருகில் இருக்கிறாள் என்னும் எண்ணம் அவனுக்குள் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது. ஆழமூச்செடுத்து தன்னை திடப்படுத்திக் கொண்டு கட்டிடத்திற்குள் நுழைந்தான். அழைப்புமணிக்கு அவசியம் இல்லாமல் வீடு திறந்தே இருந்தது. ஹாலில் அமர்ந்திருந்த நரேந்திரமூர்த்தியும் பிரபாவதியும் அவன் கண்ணில் பட்டார்கள் ஆனால் அவனுடைய பார்வை பசைபோட்டு ஒட்டிக் கொண்டது போல் மதுராவின் மீதே நிலைத்திருந்தது.



சாதாரண நீல நிற உடையில் அமர்ந்திருந்தவள் அவன் கண்களுக்கு தேவதை போல் தோன்றினாள். முழுமதி போல் ஒளிர்ந்த அவள் முகத்திலிருந்து நழுவிய அவன் பார்வை, மேடிட்டிருந்த வயிற்றை அடைந்த போது மூச்சே நின்றுவிட்டது அவனுக்கு. 'அவளுக்குள் அவனுடைய உயிர் வளர்ந்துக் கொண்டிருக்கிறது!' - தெரிந்த விஷயம்தான். ஆனால் அதை கண்கூடாக பார்க்கும் போது மனமும் உடலும் சிலிர்த்துப் போகிறது. 'மது!' - மென்மையாக அவன் உதடுகள் அவள் பெயரை முணுமுணுத்தன. மாயம் செய்தது போல் அவள் உடல் விரைத்து நிமிர்ந்தது. அவனுடைய அழைப்பு அவள் காதில் விழுந்தது போல் சட்டென்று வாசல் பக்கம் பார்வையை திருப்பினாள். இவருடைய பார்வையும் ஒன்றோடொன்று கலக்க அவன் மூச்சுவிட மறந்துபோனான்.



அவளை தவிர அங்கிருந்த அனைத்தும் அவன் பார்வையில் மங்கிப்போனது. அவனுடைய கால்கள் அவளை நோக்கி முன்னேறின. இடைப்பட்ட இந்த மூன்று மாதங்களில் அவள் இன்னும் அழகாகியிருந்தாள். பொலிவு கூடியிருந்த அவள் முகத்தில் உணர்வுகள் துடைக்கப்பட்டிருந்தன. அவள் கண்கள் பேசும் மொழியை அவனால் படிக்க முடியவில்லை. இவன் உள்ளே நுழைய எத்தனித்ததும் அவள் வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டது அவனுக்கு விழுந்த முதல் அடி. அதை அவன் ஜீரணிக்க முயன்று கொண்டிருந்த போது, "தேவ்! வா வா... உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்" என்கிற நரேந்திரமூர்த்தியின் குரல் அவன் கவனத்தை ஈர்த்தது.



'மழைவிட்டாலும் தூவானம் விடாது... ஒரேடியா ஒழிச்சு கட்டிடலாம்னு பார்த்தா துரத்திக்கிட்டே வருது... ஹும்...' - பிரபாவதியின் முணுமுணுப்பு அவன் செவியை எட்டவில்லை என்றாலும், அவளுடைய முகபாவமும் இவனை பார்த்ததும் விருட்டென்று அவள் எழுந்து உள்ளே சென்ற விதமும் தனக்கான சிறந்த வரவேற்பு என்பதை புரிந்துக் கொண்டவன், முயன்று அந்த அவமானத்தை சகித்தான்.



"வாப்பா... உள்ள வந்து உட்காரு..." - நரேந்திரமூர்த்தி அவன் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். மதுராவிற்கு எதிரில் அமர்ந்தவனுடைய பார்வை அவள் முகத்திலேயே நிலைத்திருந்தது. அவள் கலங்குவாள் அல்லது கோபம்கொள்வாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவளோ நேருக்குநேர் அவன் பார்வையை சந்தித்தாள். அந்நியனை பார்ப்பது போல்... யாரென்றே தெரியாதவனை பார்ப்பது போலிருந்தது அந்த பார்வை. உள்ளே தோன்றிய கடுமையான வலியை ஒரு புன்னகையில் மறைத்தான்.



*********************

'தேவ் உன்ன பார்க்க வர்றேன்னு சொல்லியிருக்கான்' என்று தந்தை கூறியதும் எதிர்பார்ப்பும் கோபமும் கலந்த ஒரு கலவையான உணர்வு அவள் நெஞ்சில் நிறைந்தது. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இயல்பாக இருந்தாள். அவன் வருவதற்காக நாம் எதற்கு ரெடியாக வேண்டும் என்று வீம்போடு அமர்ந்திருந்தாள். மாயா இரண்டுமூன்று முறை வந்து அவளிடம் பேச்சு கொடுத்தாள். நரேந்திரமூர்த்தியும் அவளை விடவில்லை. தனியாக அமர்ந்திருந்தால்தானே இந்த பிரச்சனை என்று எண்ணி ஹாலுக்கு வந்து டீவியை போட்டுக் கொண்டு அமர்ந்தாள். மனம் முழுவதும் அவனையே சுற்றிக் கொண்டிருக்க, திரையில் என்ன படம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கூட அவள் அறியவில்லை.



சற்று நேரத்தில் நரேந்திரமூர்த்தி அவளுக்கு அருகில் வந்து அமர்ந்து, தேவ்ராஜின் வருத்தங்களையும் மாற்றங்களையும் எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களில் பிரபாவதியும் அங்கே ஆஜராகிவிட அவர் பேச்சை மாற்றினார்.



திடீரென்று அவளுக்குள் ஏதோ ஒரு விசித்திர உணர்வு... உடல் சிலிர்த்தது... உள்ளம் குறுகுறுத்தது... இயல்பாக அமரமுடியாத நிலை... சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவன்! அவளுடைய இரவுகளை நரகமாக்கியவன்... உறக்கத்தை களவாடியவன்... உள்ளத்தை பொசுக்கியவன். முகம் சூடானது... இதயத்துடிப்பு எக்குத்தப்பாக எகிறியது... உடல் நடுங்கியது... எதிர்பார்த்துத்தானே அமர்ந்திருந்தோம்! ஏன் இத்தனை பதட்டம்! விளங்கிக்கொள்ள முடியாத தவிப்புடன் அவன் பார்வையை சந்தித்தாள்.



அவளுடைய கண்களிலிருந்து விலகிய அவன் பார்வை மேடிட்டிருந்த அவள் வயிற்றை தழுவிய போது அவன் முகத்தில் ஓர் அதிர்வு தெரிந்தது. பின் முகத்தில் ஒரு கனிவு...! கண்களில் காதல்...! எரிச்சலுடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.



"தேவ்! வா வா... உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்" - மகளுடைய வாழ்க்கையை சிதைத்து சின்னாபின்னமாக்கியவனை தந்தை மகிழ்ச்சியோடு உபசரித்தார்.



"மழைவிட்டாலும் தூவானம் விடாது... ஒரேடியா ஒழிச்சு கட்டிடலாம்னு பார்த்தா துரத்திக்கிட்டே வருது... ஹும்..." - வெறுப்புடன் தூற்றினாள் தாய். இதயத்திற்குள் சுருக்கென்று குத்தியது அவளுடைய வார்த்தை. தந்தையின் உபசரிப்பையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, தாயின் தூற்றுதலையும் தாங்க முடியவில்லை. அசைவற்று இறுகிப்போய் அமர்ந்திருந்தாள்.



'என்னதான் ஆயிற்று நமக்கு! நம்மை உடைத்து நொறுக்கிவிட்டு அவன் சந்தோஷமாகத்தான் இருக்கிறான். அவனிடம் எந்த வருத்தமும் தெரியவில்லை. கோட்டும் சூட்டுமாக கம்பீரமாக நம் எதிரில் வந்து நின்றான். நாம் மட்டும் இப்படி நலிந்த ஆடையுடன் களையிழந்து போய் அமர்ந்திருக்கிறோமே!' என்று வருந்தினாள். அவனுக்கு முன் தன்னுடைய பலவீனம் வெளிப்படுவது அவமானமாகத் தோன்றியது. சிரமப்பட்டு தன்னுடைய உணர்வுகளை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு அவன் பார்வையை நேருக்கு நேர் சந்தித்தாள். வழக்கமான அவனுடைய வசீகரப் புன்னகை அடர்ந்த அவன் மீசைக்குள்ளிருந்து எட்டிப்பார்த்தது. தன்னையும் தன் கோலத்தையும் எல்லி நகையாடும் அவன் புன்னகையை முயன்று புறந்தள்ளிவிட்டு அவனை இயல்பாக நோக்கினாள் மதுரா.



"நீங்க பேசிட்டு இருங்க... எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு. அப்புறம் பார்க்கலாம்..." அவர்களுக்கு தனிமையைக் கொடுத்துவிட்டு விலகிச் சென்றார் நரேந்திரமூர்த்தி.



சற்று நேரம் அவள் முகத்தை பார்வையால் பருகிய தேவ்ராஜ், "எப்படி இருக்க?" என்றான் கரகரத்த குரலை செருமி சரிசெய்தபடி.



"நன் ஆஃப் யுவர் பிசினஸ்... எதுக்கு என்னை பார்க்க வந்தீங்கன்னு மட்டும் சொல்லுங்க" - அவள் நினைத்தைதைவிட இருமடங்கு அதிக கடுமையோடு வெளிப்பட்டது அவள் குரல்.



நம்பமுடியாமல் அவளை பார்த்தான் தேவ்ராஜ். அவன் அறிந்த மென்மையான மதுராவிற்குள் இப்படி ஒரு பரிமாணம் இருக்கக் கூடும் என்பதை அவன் நினைத்துப் பார்த்ததே இல்லை.



அவனுடைய தேவதை மிகவும் மென்மையானவள்... அதிர்ந்து பேச தெரியாத சிறு பெண். ஆனால் இப்போது அவன் எதிரில் அமர்ந்திருப்பவள் ஒரு பக்குவப்பட்ட பெண். உணர்வுகளை மறைக்காத தெரிந்தவள். கடுமையை காட்ட தெரிந்தவள்! மூன்றே மாதத்தில் எப்படி இந்தனை பெரிய மாற்றம்! - தன் கண்களையே நம்ப முடியவில்லை.



"எதுக்கு வந்தீங்கன்னு கேட்டேன்" - திகைத்துப்போய் அமர்ந்துவிட்டவனிடம் மீண்டும் ஒருமுறை கேட்டாள்.



"உன்னை பார்க்க வர்றதுக்கு எனக்கு எந்த ரீசனும் தேவையில்லை" - கட்டுப்பாட்டை மீறி சிறு கோபம் வெளிப்பட்டுவிட்டது அவனுடைய குரலில்.



உதட்டைக் கடித்துக் கொண்டு மெளனமாக அமர்ந்திருந்தாள் மதுரா. தலைகுனிந்து அவள் அமர்ந்திருந்த தோற்றம் அவன் மனதை பிசைந்தது. "ஐம் சாரி..." - பெருமூச்சு விட்டான்.



"மது... மது ப்ளீஸ் லீசன் டு மி. நா இந்த குழப்பத்தையெல்லாம் சரி பண்ணனும்னு நினைக்கறேன். உன்ன நல்லா பார்த்துக்கணும்னு விரும்பறேன். என்னை கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு" - தழைத்த குரலில் கெஞ்சினான்.



அவனை நிமிர்ந்து நிதானமாக பார்த்த மதுரா, "என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். நீங்க சிரமப்பட வேண்டாம்" என்றாள். கல்லடி பட்டது போல் இருந்தது அவனுக்கு.



"எங்கிட்ட இது மாதிரி பேசாத மது..." என்றான் பரிதாபமாக.



"எனக்கு உன்னோட கோபம் புரியாது. நா செஞ்சது எல்லாம் தப்புதான். அதுக்காக உன்கிட்ட எத்தனை தரம் வேணுன்னாலும் மன்னிப்பு கேட்கறேன். அப்படியும் உனக்கு கோவம் குறையலன்னா என்னைய திட்டு... அடி... என்ன வேணுன்னாலும் பண்ணு... ஆனா இப்படி யாருன்னே தெரியாதவங்ககிட்ட பேசற மாதிரி பேசாத... என்னால... இதை... அக்ஸப்ட் பண்ண முடியல.... ப்ளீஸ்..." - அவன் கண்களில் தெரிந்த வலியை கண்டவளின் மனம் கனிந்தது. அதை உணர்ந்தது போல்,



"எனக்கு தெரியும் மது... நீ என் மனசுல எந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்கியோ அதே அளவுக்கு நானும் உன் மனசுல இருக்கேன். ஆனா ஒத்துக்கத்தான் மாட்டேங்கிற" என்றான். உடனே அவள் முகத்தில் கடுமை குடியேறியது.



"சரி... சொல்லு... உன்னோட கோபம் குறைய நா என்ன செய்யணும்? என்ன வேணுன்னாலும் சொல்லு... செய்யறேன். பதிலுக்கு நீ என்கூட வீட்டுக்கு வரணும். பழசையெல்லாம் மறந்துட்டு சந்தோஷமா இருக்கணும்... அதுதான் உனக்கு... எனக்கு... நம்ம குழந்தைக்கு... எல்லாருக்குமே நல்லது. எல்லாருக்குமே நல்லதுன்னா அதை செய்றதுதானே புத்திசாலித்தனம். இப்படி பிடிவாதமா இருக்கறதுனால யாருக்கு என்ன லாபம் சொல்லு... எல்லாருக்குமே நஷ்ட்டம் தான்..." - அவன் பேசப் பேச மதுராவின் முகம் உக்கிரமாக மாறியது.



"பிசினஸ் பேசுறீங்களா?" - 'பிசினஸா! நா எப்ப..!' - புரியாமல் விழித்தான்.



"லாப நஷ்ட்டம் பார்க்கறதுக்கும்... கொடுக்கல் வாங்கல் பேசறதுக்கும் வாழ்க்கை ஒண்ணும் பிசினஸ் இல்ல மிஸ்டர்... லைஃப் இஸ் சம்திங் டிஃபரென்ட்... அதுல மனுஷங்களோட எமோஷன்ஸுக்கும் பீலிங்க்ஸுக்கும் முக்கியத்துவம் இருக்கணும். அதெல்லாம் என்னன்னே தெரியாத நீங்க எதுக்காக இந்த ரிலேஷன்ஷிப்பை இன்னும் காம்ப்ளிகேட் பண்ணிகிட்டே போறீங்க?" - கடுப்படித்தாள்.



"மது நா அந்த மாதிரி எதுவும்..." - "போதும்..." கையை உயர்த்தி தடுத்தாள்.



தான், வாழ்க்கையைப் பற்றி பேசியதே, பிசினஸ் டோனில் வெளிப்பட்டுவிட்டது என்பது புரியாமல் குழம்பி அவளை மலங்கமலங்க பார்த்தான்.



"என்னோட குழந்தைக்கு நீங்க அப்பா... உங்க குழந்தைக்கு நா அம்மா.. அவ்வளவுதான். இதுக்கு மேல நமக்குள்ள எந்த உறவுக்கும் வழியில்லை..." - பிசிறற்ற குரலில் அவள் கூற அவன் பதறிப்போனான். முகத்தில் கலவரம் சூழ்ந்துக் கொண்டது. சட்டென்று எழுந்து அவள் காலடியில் மண்டியிட்டு அவள் கைகளை பிடித்துக் கொண்டான்.



"என்ன பண்றீங்க... எழுந்திரிங்க... எழுந்திரிங்கன்னு சொல்றேன்ல..." - அவளுடைய பார்வை சுற்றும் முற்றும் பாய்ந்தது. நல்லவேளை யாரும் இல்லை. ஆனால் அதை பற்றிய கவலை எதுவும் அவனுக்கு இல்லை. மனைவியின் கைகளை இருக்கமாகப் பிடித்துக் கொண்டு அவளை ஏக்கத்துடன் பார்த்தான்.



"என்கிட்டேருந்து விலகிப் போகாத மது. என்னால உன்ன வீட்டுக் கொடுக்க முடியாது... நீ இல்லாம நா ரொம்ப வெறுமையா ஃபீல் பண்ணறேன். நீ என்ன பனிஷ்மென்ட் கொடுத்தாலும் நா ஏத்துக்கறேன். ஆனா இது வேண்டாம்... ஐ காண்ட் டேக் திஸ்..." - நடுங்கும் அவன் கைகளில் வெளிப்பட்டது அவனுடைய பதட்டம்.



'வரன் பேசப்போன உங்க டாடியை மீட்டிங் ஹால்ல உட்காரா வச்சு பிசினஸ் டீல் பேசினானாம். இந்த கல்யாணத்துல அவனுக்கு என்ன லாபம்னு கேட்டானாம். திலீப்பை விலை பேசினானாம்...' - பிரபாவதியின் ஓதல் மதுராவின் செவியில் எதிரொலித்தது.



வலிக்கும் இதயத்தை கையை வைத்து அழுத்தியபடி, "இந்த கல்யாணமே உங்களுக்கு ஒரு பிசினஸ்தானே தேவ்! எந்த லாபமும் இல்லாத இந்த பிசினஸ் இனி எதுக்கு உங்களுக்கு?" என்றாள்.



அதிர்ச்சியோடு அவளை பார்த்தான். "அதெல்லாம் என்னோட முட்டாள்தனம். நா செஞ்ச தப்பு... மது... நா மாறிட்டேன்... பழசையெல்லாம் காரணம் காட்டி என்னை ஒதுக்கிடாத..." - கண்ணீரில் பளபளத்தன அவன் கண்கள்.



உண்மைதான்... அவன் மாறிவிட்டான்... அவனுடைய மாற்றத்தை அவள் கண்கூடாக காண்கிறாளே! இந்நேரம் பழைய தேவ்ராஜாக இருந்திருந்தால் அவளை கட்டி இழுத்துக் கொண்டு போயிருப்பான். இப்படி மண்டியிட்டு கெஞ்சிக் கொண்டிருக்க மாட்டான். ஆனால் மாற்றம் அவனுக்கு மட்டும் சொந்தமானதா? அவளும் தானே மாறியிருக்கிறாள்! மற்றவர்களுக்காக மண்டையை ஆட்டும் மக்கு மதுரா அல்லவே இவள்... உறங்காத இரவுகள் கற்றுக் கொடுத்த பாடத்தை அவள் எப்படி மறப்பாள்! "ஐம் சாரி தேவ்..." - அவன் பிடியில் சிக்கியிருந்த தன் கையை உருவிக் கொண்டு எழுந்தவள், தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவை மூடிக் கொண்டாள்.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 89

உறக்கம் வராமல் கொட்டக்கொட்ட விழித்தபடி மொத்த இரவையும் கழிப்பதென்பது பெரும் கொடுமை. அந்த கொடுமையைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருந்தாள் மதுரா. நேரம் நள்ளிரவைத்த தாண்டிவிட்டது. ஆனாலும் அவளுடைய கண்கள் மேல்கூரையை வெறித்தபடி விழித்துக் கிடந்தன. சிந்தனைகள் அவனையே சுற்றிக் கொண்டிருந்தன. அவனுடைய சோகமான முகம் அவளுடைய மனத்திரையிலிருந்து அகல மறுத்தது. அவனுடைய யாசிக்கும் கண்கள் ஏதோ மாயம் செய்து அவள் இதயத்தை வேலைசெய்யவிடாமல் தடுத்தது. பழைய நினைவுகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஓடிச் சென்று அவனைக் கட்டி கொள்ள வேண்டும் போல்... அவனுடைய துன்பத்தையெல்லாம் கலைத்துவிட வேண்டும் போல் தோன்றுகிறது! - 'காட்! இந்த சித்திரவதையிலிருந்து அவளுக்கு விடுதலையே கிடையாதா! அவனைப் பற்றிய நினைவுகள் அவளை விட்டு அகலாதா! உறக்கம் அவள் கண்களை தழுவாதா!' - ஏக்கப் பெருமூச்சுடன் எழுந்து அமர்ந்தாள். டிராயரில் இருந்த மாத்திரையில் ஒன்றை கூடுதலாக எடுத்து விழுங்கினாள்.



அப்போதும் உறக்கம் வரவில்லை. அன்று காலை அவனுடனான சந்திப்பு அவள் மனதிலிருந்து அகலவே இல்லை. அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் மனதில் ஆழப்பதிந்ததோடு மீண்டும் மீண்டும் நினைவில் வந்து அவளை துன்புறுத்திய. இது மூன்றாவது முறை... அவன் அவளிடம் மன்னிப்பை வேண்டுவது... நிச்சயமாக அவனிடம் மாற்றம் இருக்கிறது. அதை அவன் கண்களில் அவள் கண்டாள். அவனுடைய தவறுகளையெல்லாம் சரி செய்ய நினைக்கிறான். அவர்களுடைய உறவை சீர் செய்ய போராடுகிறான். ஆனால் அது எதுவும் இப்போது இருக்கும் நிலைமையை மாற்றிவிடாது. மகிழ்ச்சியோடு துள்ளி திரிந்து கொண்டிருந்த சிறு பெண் இப்போது வலிகளை சுமந்துக் கொண்டு நடமாடும் பெண்மணியாக மாறிவிட்டாள். குழந்தை என்ன குறையோடு பிறக்குமோ என்கிற பயம் அவளுக்குள் ஆழமாக ஊடுருவி அவளுடைய வலியை பலமடங்கு அதிகமாக்கும் போது இயல்பான வாழ்க்கையைப் பற்றி எப்படி அவளால் சிந்திக்க முடியும்.



தொடர்ச்சியான சிந்தனைகளில் அவள் மூழ்கியிருந்த போது அலைபேசியின் பீப் ஒளி அவள் கவனத்தை ஈர்த்தது. எடுத்துக் பார்த்தாள். தேவ்ராஜிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. அவனுடைய பெயரை திரையில் பார்த்ததுமே சுருக்கென்ற வலி அவளுக்குள் பாய்ந்தது. ஓரிரு நிமிட யோசனைக்குப் பிறகு மெசேஜை திறந்தாள்.



'ஹாய் மது.. இன்னும் தூங்கிருக்க மாட்டேன்னு நினைக்கறேன். என்னை பத்தி தான் யோசிச்சுகிட்டு இருக்கியா?' - பட்டாம்பூச்சிகள் பல வயிற்றுக்குள் பறப்பது போன்றதொரு உணர்வு. மீண்டும் ஒரு பீப் ஒலி... அடுத்த மெசேஜ்... அதையும் திறந்தாள்.



'உனக்குள்ள இப்படி ஒரு ஸ்ட்ராங் உமனா! ஆச்சரியமா இருக்கு! எவ்வளவு உறுதியா என்னை அவாய்ட் பண்ணற! ஆனா மது... இதெல்லாம் எவ்வளவு நாளைக்கு கன்டினியூ ஆகும். யூ ஆர் கில்லிங் மீ வித் யுவர் சைலன்ஸ்... பட் திஸ் வோண்ட் ஸ்டாப் மீ. எனிவே... நீ எதை பத்தியும் கவலைப்படாத... நா உன்கூட எப்பவுமே இருப்பேன். டேக் ரெஸ்ட் மை லவ்...' - மதுராவிற்கு தொண்டையை அடைத்தது. கண்களில் கண்ணீர் திரண்டது. அந்த கடைசி வரியை படிக்கும் போது அவளுடைய இதயம் நழுவியதை அவள் உணர்ந்தாள்.



"டேக் ரெஸ்ட் மை லவ்" - அவள் இதழ்கள் மெல்ல முணுமுணுத்தன. அவனைப் பொறுத்தவரை வெறும் வார்த்தைகள். சாதாரண வார்த்தைகள்! ஆனால் அவளுக்கு! ஏன் இப்படி செய்கிறான்! ஏன் அவளை நிம்மதியாக விடமாட்டேன் என்கிறான்! இயலாமை தந்த கோபத்துடன் அலைபேசி திரையை வெறித்தாள்.



'நா உன்கூட எப்பவுமே இருப்பேன்' - இந்த வார்த்தையை எந்த அளவுக்கு அவன் மனதார கூறினான் என்பதை அடுத்து வந்த நாட்களில் மதுரா அறிந்துக் கொண்டாள். மதுரா கெஞ்சிக்கெஞ்சி அழைத்த போது அந்த வீட்டுப்பக்கம் தலைக்கூட வைத்துப் படுக்காத தேவராஜ் இப்போது தினமும் அழையா விருந்தாளி போல் அங்கு வந்து கொண்டிருந்தான்.



தினமும் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது மதுராவை ஒரு முறை சந்தித்துவிட்டு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ஆண்கள் அலுவல் காரணமாக வெளியே சென்றுவிட பெண்கள் மட்டுமே வீட்டிலிருந்தார்கள். இவனை பார்த்தததும் எதையாவது ஜாடையாக சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக்கொள்ளும் பிரபாவதியை சகித்துக் கொண்டு மதுராவை பார்க்கச் சென்றால் அவளும் அறையில் அடைந்துகொள்வாள். மாயாதான் அவனுக்கு அந்த வீட்டில் இருந்த ஒரே பிடிப்பு. அவள் துணையோடுதான் அவன் தினமும் மனைவியை சந்தித்துக் கொண்டிருந்தான். அவள் விலகிச் சென்றாலும் விடாமல் துரத்துச் சென்று பிடிவாதமாக அவளுடைய தனிமையை துரத்தினான்.



அவள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தினமும் அவளுக்கு எதிரில் தோன்றி பிரசன்னம் கொடுத்துக் கொண்டிருந்தவன் திடீரென்றி இரண்டு நாட்கள் காணாமல் போனான். அவனிடமிருந்து வழக்கமாக வரும் குறுஞ்செதிகள் கூட மிஸ்ஸிங். மதுராவின் மனம் அவளுடைய கட்டுப்பாட்டையும் மீறி அவனைத் தேடியது. யாரிடமும் கேட்கவும் முடியாமல், அவனுக்கு என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளவும் முடியாமல் அவள் தவித்துக் கொண்டிருந்த போதுதான் திலீப் அந்த செய்தியோடு தங்கையை தேடி வந்தான். கிஷோர் கேஸில் தேவராஜ் எந்தவிதத்திலும் ஈடுபடவில்லை என்று கூறினான்.



"என்ன!" - நம்பமுடியாத ஆச்சர்யத்துடன் மீண்டும் ஒருமுறை கேட்டாள். அவன் 'ஆமாம்' என்றான் அழுத்தமாக. தேவ்ராஜுக்கும் அந்த சம்பவத்திற்கு யாதொரு தொடர்பும் இல்லை என்று அடித்துக் கூறினான்.



திலீப்பை பொறுத்தவரை தேவ்ராஜிக்காக ஒரு துரும்பைக் கூட அசைக்க மாட்டான். அதனால் அவனுக்கு உதவி செய்யும் விதத்தில் இவன் பொய் சொல்ல வாய்ப்பில்லை. ஆனாலும் ஒரு சந்தேகத்துடன், "உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றாள்.



"தெரிஞ்சுதான் சொல்றேன். பிரச்சனை என்னங்கறதை நல்லா விசாரிச்ச பிறகுதான் உன்கிட்ட சொல்றேன். எனக்கு தேவ்ராஜை சுத்தமா பிடிக்காதுங்கறது உண்மைதான். ஆனா இந்த விஷயத்துல அவன் மேல தப்பு இல்ல...." - முடித்துவிட்டு எழுந்துவிட்டான்.



அந்த பிரச்சனைதான் அவள் அவனிடமிருந்து பிரிந்து வந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது. இப்போது அது ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டதே என்கிற எண்ணத்தில் அப்படியே அமர்ந்துவிட்டாள் மதுரா. அவள் மனம் அன்று நடந்த நிகழ்வுகளை அசைபோட துவங்கியது.



அவன் கிஷோரின் கைதுக்கு காரணமாக இல்லை என்றாலும்... அவள் தேவையில்லாமல் கிஷோருக்கு வலிய சென்று உதவி செய்திருந்தாலும்... அன்று அவன் நடந்துகொண்ட முறை... அவளை நடத்திய விதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே தோன்றியது அவளுக்கு.



அவன் மீது தணிந்திருந்த கோபத்தை கிளறிவிட்டது போல் அமைந்துவிட்டது திலீப் அன்று கொண்டுவந்த அந்த செய்தி. அன்று முழுவதும் இறுகிய முகத்தோடு நடமாடிக் கொண்டிருந்தாள்.



இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பிறகு அன்று மீண்டும் பாலிஹில் வந்தான் தேவராஜ். அவன் பக்கம் பார்வையைக் கூட திருப்பாமல் தன் போக்கில் இங்கும் அங்கும் சென்றுக் கொண்டிருந்தாள் மதுரா.



"என்ன... ரெண்டு நாளா எப்படி இருந்தாங்க மேடம்?" - மீசையை முறுக்கிக் கொண்டே மனைவியை பார்வையால் தொடர்ந்தபடி தங்கையிடம் கேட்டான்.



"ம்ஹும்... மலையைக் கூட ஒடச்சிடலாம்... இவை மனசுல என்ன இருக்குங்கறதை கண்டு பிடிக்க முடியாது...." - உதட்டை பிதுக்கினாள் மாயா.



"மிஸ் பண்ணியிருப்பா..."



"எப்படி சொல்லறீங்க?"



"மூஞ்ச பார்த்தா தான் தெரியுதே!" - அவன் உதடுகள் புன்னகையில் விரிந்தன.



"நல்லது நடந்தா சரி" - முணுமுணுத்தாள் மாயா.



"அதுசரி... நீங்க ஏன் ரெண்டு நாளா வரல... டெஸ்ட் பண்ணறதுக்குத்தானா?"



"ப்ச்... இல்ல..."



"பின்ன?"



"பாரதி திரும்ப ட்ரபுள் பண்ணறா... நீ பேசுனியா இல்லையா அவகிட்ட..."



"என்ன... திரும்ப அந்த மோனிகாகூட பேச ஆரம்பிச்சசுட்டாளா?"



"அவ எப்போ நிறுத்தினா திரும்ப ஸ்டார்ட் பண்ணறதுக்கு... அவ தான் நாம சொல்லரதையே கேட்க மாட்டேங்கிறாளே! என்னதான் பண்ணறதுன்னே தெரியல எனக்கு" - புலம்பினான்.



"அவசரப்படாதீங்க..."



"அம்மாவுக்கு தெரியிற வரைக்கும் அமைதியா இருக்க சொல்றியா?"



"இல்ல... அதுக்கு முன்னாடியே ஏதாவது பண்ணிடலாம்"



"என்ன பண்ணறது?



"ஏதாவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளையா பாருங்க. நாடு கடத்திடுவோம்"



"ஒத்துக்குவாளா?"



"நா பேசி சம்மதிக்க வைக்கிறேன்"



"அங்க போனா மட்டும் திருந்திடுவாளா? போன்ல பேசினா?"



"அதெல்லாம் மாறிடுவா தேவ் பாய்... ஃபேமிலி... குடும்பம் குழந்தைன்னு வந்துட்டா எல்லாம் மறந்துடும்... நம்மளையே மறந்துடுவா... கவலைப்படாதீங்க" - அண்ணனுக்கு நம்பிக்கை கொடுத்தாள். அவன் சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான். பிறகு, "நம்ம கூடத்தானே மாயா அவளும் பிறந்தா... அப்புறம் ஏன் இப்படி இருக்கா!" - ஆற்றாமையுடன் கேட்டான்.



"ஓவரா செல்லம் கொடுத்தா இப்படித்தான். சொல் பேச்சையே கேட்கணும்னு தோணாது" - மாயா சொல்லிக் கொண்டிருக்கும் போது மதுரா அவளுடைய அறையிலிருந்து வெளிப்பட்டு சமையலறை நோக்கி சென்றாள். அவளை பார்வையால் விழுங்கிய தேவ்ராஜ், "கடைசியா பிறக்குறதுங்களே இப்படித்தான் இருக்குங்க போல... உயிரை எடுக்குதுங்க..." என்றான் அலுப்புடன்.



தமையனின் பார்வையை கவனித்துவிட்ட மாயாவின் முகத்தில் நமுட்டு புன்னகை தோன்றியது. "நாம பாரதியை பற்றித்தானே பேசிகிட்டு இருக்கோம்?" என்றாள்.



சட்டென்று தங்கையின் பக்கம் திரும்பியவன், "ஆங்...! ஆமாம்... பாரதியை பத்திதான்...!" என்றான் அவசரமாக.



மகள் வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்க வேண்டும் என்கிற எண்ணம் இப்போது பிரபாவதிக்கு இல்லை... அதுதான் முடியாமல் போய்விட்டதே! இப்போது அவளுடைய கவலையெல்லாம் பிறக்கும் குழந்தை நல்ல குழந்தையாக பிறக்க வேண்டுமே என்பதுதான். தெரியாத்தனமாக மாத்திரையை கொடுத்து தொலைத்துவிட்டோம். அது எந்தவிதமான பாதிப்பையும் குழந்தைக்கு ஏற்படுத்தியிருக்கக் கூடாதே என்பகிற பயம்தான் அவளை ஆட்டிப்படைத்தது. கோவில் கோவிலாக ஏறி இறங்கினாள். வேண்டுதல் வைத்தாள்... விரதங்கள் இருந்தாள்... அனைத்திற்கும் பலன் இருக்குமா! அதை தெரிந்து கொள்ளும் காலமும் வந்தது.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 90

மதுராவிற்கு இது ஒன்பதாவது மாதம்... மேதா கொடுத்த ஒரு தன்னம்பிக்கை புத்தகத்தை வாசித்தபடி மெத்தையில் ஒருக்கணித்துப் படுத்திருந்தவள், திடீரெண்டு அடிவயிற்றில் ஒரு அசவுகரியத்தை உணர்ந்தாள். வயிறு இறுகுவது போல் இருந்தது. சற்று வசதியாக புரண்டு படுத்து அந்த உணர்விலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள். அந்த நொடியே அவளுடைய வயிறு மற்றும் இடுப்புப் பகுதி தசைகளில் ஏற்பட்ட அழுத்தத்தில் அவள் கண்கள் அகல விரிந்தன. மறு நொடி அந்த அழுத்தம் குறைந்து இயல்பானது.



கையிலிருந்த புத்தகத்தை பக்கவாட்டு மேஜையில் மூடி வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தவள், அறைவாசலில் அரவரம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். லேசாக மூடியிருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் தேவ்ராஜ். வழக்கமான நேரத்திற்கு சரியாக அவளை பார்க்க வந்துவிட்டான். வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் மனம் ரகசியமாய் மகிழ்ந்தது. அவளுடைய கலவரமாக முகத்தை கவனித்துவிட்டு "என்ன ஆச்சு? இஸ் எவ்ரித்திங் ஆல்ரைட்?" - புருவம் முடிச்சிட அவள் கைகளை பற்றிக் கொண்டு அருகில் அமர்ந்தான்.



அவள் தலையை மேலும் கீழும் அசைத்தாள். எப்போதும் அவனுடைய அருகாமையை தவிர்க்க முயல்கிறவள்... அவனிடமிருந்து விலகிச் செல்ல விழைகிறவள் இன்று அமைதியாக அமர்ந்திருப்பது அவனுடைய குழப்பத்தை இன்னும் அதிகமாக்கியது.



"வாட் ஐஸ் இட், மது? இஸ் சம்திங் ராங்?" - கலக்கத்துடன் கேட்டான்.



"நோ... ஐம் ஆல்ரைட்" என்றவள் மீண்டும் அடிவயிற்றில் அந்த உணர்வை உணர்ந்தாள்.



"தேவ்... நீங்க கொஞ்சம் வெளியே இருங்க" - அவள் முகத்தில் தெரிந்த கலவரத்தில் அவன் பதறினான்.



"இல்ல... நா இங்கேயே இருக்கேன். உனக்கு ஏதோ பண்ணுது. என்னனு சொல்லு..."



"இல்ல... ஐ... ஐ ஜஸ்ட் நீட் டு யூஸ் ரெஸ்ட்ரூம்... " - அந்த அசவுகரிய உணர்வு அதிகரித்துக் கொண்டே சென்றது. சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருந்தது. எந்த நொடியிலும் அவளுடைய கட்டுப்பாடு இழந்துவிடும் போல் தோன்றியது. அவனுக்கு எதிரில் அசிங்கமாகிவிடுமோ என்கிற தவிப்பில், "ப்ளீஸ்..." என்றாள். அவள் கண்கள் கெஞ்சின.



அவளுடைய நிலைமை அவனுக்கு சிறிதும் புரியவில்லை. ஏன் இப்படி விசித்திரமாக நடந்துக்கொள்கிறாள் என்று குழப்பமாகத்தான் இருந்தது.



"ரெஸ்ட்ரூம்தானே போகணும்... போ... நா இங்க வெயிட் பண்ணறேன்" என்றான். அவளுக்கு ஆத்திரமாக வந்தது.



"ஐயோ! ஏன் இப்படி உயிரை எடுக்குறீங்க? ஒருதரம் சொன்னா புரியாதா? வெளியே போங்க... கெட் அவே ஃப்ரம் மீ...." என்று பெருங்குரலில் கத்தினாள். திடுக்கிட்டுப்போன தேவ்ராஜ் அவளை வியப்புடன் பார்த்தான்.



"மது ப்ளீஸ்..."



"ஐ நீட் மை ஸ்பேஸ்... லீவ் மீ அலோன்..." - செக்கச்செவேறென்று சிவந்துவிட்ட அவள் முகம் அவனுடைய கவலையை அதிகப்படுத்தியது. அவள் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறாள் என்று சிறிதும் புரியவில்லை. மாயாவிடம் கேட்கலாம் என்று தோன்றியது.



"ஓகே ரிலாக்ஸ்... நா போறேன்... ஹால்லதான் இருப்பேன். ஏதாவதுன்னா உடனே குரல் கொடு ஓகே?" - மனமே இல்லாமல் அந்த அறையிலிருந்து வெளியேறினான்.



எப்போதடா அவன் அங்கிருந்து நகர்வான் என்று காத்துக் காத்துக்கொண்டிருந்தவள், அவனுடைய தலை மறைந்ததும் கட்டிலிலிருந்து எழுந்து காலை கீழே எடுத்து வைத்தாள். மறுகணமே அவள் பயந்தது நடந்துவிட்டது.



ஆடை நனைந்து தரையெல்லாம் ஈரமாகிவிட்ட போது அடுத்த அடியை எடுத்துவைக்க முடியாவில்லை அவளால். 'கடவுளே!' - மிகவும் சங்கடத்துடன் சமைந்து நின்றுவிட்டவள், 'நம்முடைய கட்டுப்பாட்டை மீறி எப்படி!' - இன்னமும் கூட நம்பமுடியவில்லை அவளால். இதுவும் ஹாலுசினேஷனா! குழப்பத்துடன் கீழே குனிந்து தரையைப் பார்த்தாள். அவளுடைய விழிகள் தெரித்துவிடுவது போல் விரிந்தன. காலை சுற்றி குளம்கட்டி நின்ற நீர்...! இன்னமும் நிற்காத போக்கு...! அப்படியென்றால் இது! - உடலில் நடுக்கம் பிறந்தது. முகம் வெளிறி இதயம் எகிறிக் குதித்தது.



பனிக்குடம் என்றால் என்ன... அது உடைந்தால் எப்படி இருக்கும்... என்று மகப்பேறு மருத்துவர் படித்துப்படித்து சொல்லிக் கொடுத்த பாடம் சரியான நேரத்திற்கு அவள் நினைவில் வந்தது.



'நீ தனியா இருக்க வாய்ப்பில்லை... ஆனாலும்... ஒருவேளை... தனியா இருக்கற சூழ்நிலை வந்தா... அந்த நேரத்துல பனிக்குடம் உடைஞ்சிடுச்சுன்னா... உடனே பயந்துடக் கூடாது. உன்னோட குழந்தை இந்த உலகத்துக்கு வர ரெடியாயிடிச்சுனு நெனச்சு சந்தோஷப்படணும். நிதானமா இருக்கணும்...' - மருத்துவரின் குரல் அவள் செவிகளில் எதிரொலித்தது. அவளுடைய பதட்டம் கட்டுக்குள் வந்தது.



"பனிக்குடம் உடைஞ்ச பிறகு குழந்தை பிறக்க மூனுலேருந்து நாலு மணிநேரம் கூட ஆகலாம். அதுக்குள்ள நீ யாரோட உதவியையாவது கேட்டுக்கலாம்..." - தன்னைக் கண்டு தானே வியக்கும் அளவிற்கு அவளுக்குள் திடம் பிறந்தது.



மேதாவோடு இனைந்து மகப்பேறு மருத்துவரும் அவளுக்கு சிறப்பு ஆலோசனை கொடுத்து, எந்த சூழ்நிலையையும் தாக்குப்பிடிக்கும்படி அவளை தயார் செய்திருந்தார்கள். அதன் பலனாக மதுரா மெல்ல அடியெடுத்து வைத்து குளியலறைக்குள் நுழைந்து உடைமாற்றிக் கொண்டாள். பெரிய விஷயம்தான்... தைரியமான பெண்களே உடைந்து போகும் தருணம் அது... ஆனால் எதெற்கெடுத்தாலும் பயந்து நடுங்கும் மதுரா அந்த சூழ்நிலையை அருமையாக கையாண்டாள்.



அவள் விரும்பிய அளவுக்கு வேகமாக செயல்பட முடியவில்லை. அவளுடைய மெலிந்த உடலுக்கு வயிறு மிகவும் பெரிதாகத்தான் இருந்தது. அதை தேவ்ராஜ் மிகவும் ரசிப்பான்.



'தன்னுடைய குழந்தை அவளுடைய வயிற்றில்...' என்னும் எண்ணம் அவனுக்கும் அவளுக்குமான தொடர்பை உறக்கக் கூறுவது போல் தோன்றும்.



அவள் எத்தனைமுறை உதறி தள்ளினாலும்... விரட்டி அடித்தாலும்... அவள் வயிற்றோடு உரையாடும் வழக்கத்தை அவன் கைவிடவே மாட்டான். தினமும் குழந்தையோடு பேசும் சாக்கில் அவளோடு கழிக்கும் நேரம் அவன் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. அவளை போல் ஒரு பெண் குழந்தைதான் வேண்டும் என்று அடிக்கடி கூறுவான். வயிற்றிலிருக்கும் குழந்தையை பிரின்சஸ் என்றுதான் விளித்துப் பேசுவான். ஆனால் அவளுக்கு ஆண் குழந்தைதான் விருப்பம்... காரணம் அவள் மனம் மட்டுமே அறிந்த ரகசியம். என்ன குழந்தை பிறக்குமோ! - பயத்தை உள்ளே மறைத்து இன்ப படபடப்போடு வெளியே வந்தாள்.



ஆண்கள் மூவரும் வீட்டில் இல்லை... ஆதிராவை அழைத்துக்கொண்டு பிரபாவதி கோவிலுக்கு போய்விட்டாள். மாயாவோடு பேசியபடி சோபாவில் அமர்ந்திருந்த தேவ்ராஜ் மனைவியைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து அவளிடம் நெருங்கினான். அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டான். அவள் நடக்க சற்று சிரமப்பட்டாள். அவள் இடுப்பை ஒரு கையால் அணைத்துப் பிடித்து அழைத்துச் சென்று சோபாவில் அமரவைக்க முற்பட்டான்.



"வெயிட்..." - அமர மறுத்தாள் மதுரா.



"என்ன ஆச்சு?" - தேவ்.



"ஆர் யூ ஓகே?" - மாயா.



"ஆர் யூ ஹர்ட்? ஆர் யூ இன் பெயின்?” - அவனுடைய பதற்றம் மதுராவின் மனதை வருடியது.



"இல்ல... எனக்கு வலிக்கல... ஆனா தேவ்... யூ ஸ்டே காம்... நா சொல்ல போறத பதட்டப்படாம கேளுங்க... இட்ஸ் ஆள் குட் அண்ட் ஓகே... பட்..." - அவனுடைய புருவம் உயர்ந்தது. அவள் அடுத்து என்ன சொல்லப் போகிறாள் என்று காத்திருந்தான். மதுராவின் பார்வை அவன் முகத்திலேயே நிலைத்திருந்தது.



"பனிக்குடம்... உடஞ்சிடிச்சு...!" - அவள் என்ன சொல்கிறாள் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.



"வாட்!" - மாயா.

"வாட் இஸ் தட்?" - குழப்பத்துடன் தங்கையின் பக்கம் பார்வையைத் திருப்பினான்.



"குழந்தை பிறக்க போகுது..." - மாயாவின் முகத்திலும் கலவரம் சூழ்ந்தது.



"ஷிட்!! வாட் த ஹெல்...! மை காட்! இன்னும் ரெண்டு நாள் இருக்கே! அதுக்குள்ள எப்படி!" - பதறினான். படபடவென்று அடித்துக் கொண்டது அவன் இதயம். அவளை அணைத்துப் பிடித்துக் கொண்டான்.



"தேவ் பாய் டென்ஷன் ஆகாதீங்க"



"மாயா... வி ஆர் நாட் ரெடி... வி ஆர் நாட் ரியலி ரெடி... இது எப்படி! மது... ஓ மை டியர்...!" - அவன் முகத்தில் வியர்வை அரும்பியது. அவளை அணைத்துப் பிடித்திருந்த அவனுடைய கைகள் நடுங்கின.



"தேவ் பாய்... அவளை பயமுறுத்தாம பேசாம இருங்க" - அதட்டினாள் மாயா.



"பயமா...! நோ நோ... மது... நீ பயப்படாத... இது ஒண்ணும் இல்ல... நாம... நாம ஹாஸ்ப்பிட்டலுக்கு போயிடலாம்... பயப்படாத ஓகே?" - உளறினான்.



"தேவ்! ஐம் ஓகே..." - தன்னுடைய பதட்டத்தையும் பயத்தையும் மறைத்துக் கொண்டு அவனுக்கு தைரியம் கொடுத்தாள் மதுரா.



"ஆர் யூ ஷூர்... ஆர் யூ ரியலி ஷூர் பேபி...?" - அதீத பயம் தெரிந்தது அவனிடம். அவனுடைய கையை அழுத்தி கண்களை மூடி திறந்து 'ஆம்' என்பது போல் தலையசைத்தவள், மறுநொடியே, "அம்ம்...ம்மா...!" என்றாள் பல்கலைக் கடித்துக் கொண்டு.



"வா...ட்ஸ் ரா...ங்!" - தேவ்ராஜின் கண்கள் அகல விரிந்தன. மிரண்டு போய் மாயாவைப் பார்த்தான்.



"ஏதாவது கான்டராக்க்ஷன்ஸ் பீல் பண்ணறியா மது?" - தேவ்ராஜை நகர்த்திவிட்டுவிட்டு மதுராவிடம் நெருங்கினாள் மாயா.



"ஆமாம்... கொஞ்சம்... அதோட... வாட்டர் ப்ரோக் ஆகி பத்து நிமிஷம் ஆயிடிச்சு..."



"அதனால ஒண்ணும் இல்ல... நாம ஹாஸ்ப்பிட்டல் போறதுக்குள்ள எதுவும் ஆயிடாது. பயப்படாத..." - அவளை தாங்கி கொண்டாள்.



"வேர் ஆர் யூ மேன்...? கெட் த கார்" - போனில் கத்தினான்.



"வாசல்லதான் சார் இருக்கேன்" - அந்த பக்கத்திலிருந்து பயந்த குரலில் பதில் சொன்னான் ட்ரைவர்.



"கார் ரெடி..." என்று கூறிவிட்டு மருத்துவரின் தொடர்பு எண்ணை அழுத்தினான்.



"நீங்க கீழ கூட்டிட்டு போங்க தேவ் பாய்... நா மதுவோட பேகை எடுத்துட்டு வந்துடறேன்" என்றாள் மாயா அவசரமாக.



அவளுக்கும் பதட்டம்தான். கையும் ஓடவில்லை... காலும் ஓடவில்லை... முயன்று மனதை நிலைப்படுத்தி, தேவையான பொருட்களை பையில் சேகரித்தாள். அதை செய்யும் போதே தேஜாவை சத்தம் போட்டு அழைத்தாள். அவளிடம் விபரத்தை சொல்லிவிட்டு இவள் கீழே வரும் போது தேவ்ராஜ் மதுராவை காரில் அமரவைத்திருந்தான். சீட்டில் அமரமுடியாமல் அவள் சிரமப்படுவதைக் கண்டு தவித்துப்போன தேவ்ராஜ், தங்கையைக் கண்டதும் சீறினான்.



"யூ ஆர் டோட்டலி யூஸ்லெஸ்... என்ன பண்ணின இவ்வளவு நேரம்? ஏறு வண்டில..." - காட்டுக்கத்து கத்தினான்.



"நீங்க வண்டியை ஸ்டார்ட் பன்ணறதுக்குள்ள நா ஏறிடுவேன்"



"அதுக்கு ட்ரைவர் இருக்கான். ஆர்கிவ் பண்ணாம ஏறு" - கடுப்படித்தான்.



அவனுடைய கடுப்பை காதில் போட்டுக்கொள்ளாமல் அவசரமாக ஏறி மதுராவிற்கு பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள் மாயா. மறுபுறம் வந்து மனைவிக்கு அருகில் அமர்ந்த தேவ்ராஜ், "ஸ்டார்ட் பண்ணு வேகமா போ..." என்று ட்ரைவரை அதட்டினான்.



அவன் பயத்துடன் காரை அதிவேகமாக விரட்ட, "என்னடா ட்ரைவ் பண்ணற?பார்த்து ஸ்மூத்தா போ..." என்று அதற்கும் கத்தினான்.



"தேவ் பாய் ரிலாக்ஸ்..." - மாயா தமையனை அடக்கினாள்.



மதுராவின் அடிவயிற்றில் சுறுசுறுவென்று ஒரு உணர்வு... அதிக வலியில்லை... ஆனால் வலிக்க போகிறது என்பது போல் ஒரு உணர்வு... தேவ்ராஜின் பதட்டத்திற்கு பயந்து பல்லை கடித்துக் கொண்டு ரியாக்ட் செய்யாமல் அமர்ந்திருந்தவள் ஒரு கட்டத்தில் முனகினாள்.



"வாட்ஸ் ராங்... வாட்ஸ் ராங் பேபி... இதோ வந்துட்டோம்... பயப்படாத ஓகே..." - பதறினான். அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான். அவள் கரத்தை ஆதரவாகப் பற்றிக்கொண்டான். மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள் மதுரா. சுரீர் என்று பாய்ந்தது... "ஆ...ம்ம்மா..." - அவள் கத்த, "என்ன என்ன..." என்று இவன் பதற... "ரிலாக்ஸ் மது... ஒண்ணும் இல்ல... நல்லா மூச்சுவிடு... ரிலாக்ஸ்சா இரு..." என்று மாயா டென்ஷனை குறைக்க முயன்றாள். தேவ்ராஜின் கண்களில் கண்ணீர் வடிந்தது.



சற்று நேரத்தில் அந்த வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட, "ஒண்ணும் இல்ல... ஐம் ஓகே..." - என்று கணவனுக்கு தைரியம் கொடுக்க முயன்றாள்.



அடுத்த சில நிமிடங்களில் கார் மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. தேவ்ராஜின் உதவியோடு காரிலிருந்து இறங்கினாள் மதுரா.



(அடுத்த அத்தியாயம் இன்னும் சிறிது நேரத்தில் பதிவிடப்படும்)
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 91

"வேர் இஸ் டாக்டர் ப்ரீத்தி..." - காரிலிருந்து இறங்கியதும் ரிஸப்ஷனை நோக்கி கத்தினான் தேவ்ராஜ்.



"தேவ்! கத்தாதீங்க" - மதுரா அவனை அடக்க முயன்றாள். ஹால்வேயில் சென்றுக் கொண்டிருந்த சில செவிலியர்களும் மருத்துவர்களும் அவனுடைய சத்தத்தைக் கேட்டு நின்று திரும்பிப் பார்த்தார்கள்.



"நீங்கதான் தேவ்ராஜா?" - அனுபவம் மிக்க செவிலியர் ஒருவர் அவனிடம் நெருங்கி கேட்டாள்.



"ஆமாம்..." - சீற்றத்துடன் வெளிப்பட்டது அவன் குரல். அவன் அப்போது இருந்த மனநிலைக்கு, டாக்டர் நர்ஸ் எல்லாம் வாசலில் வந்து அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தால் கூட திருப்தியடைய மாட்டான். அப்படி ஒரு ஆர்பரிப்பில் இருந்தது அவன் மனம்.



"உங்க மனைவிக்காக டாக்டர் ரூம் ரெடி பண்ணி வச்சிருக்காங்க. வாங்க என்கூட" - அவனுடைய கோபத்தைக் கண்டு அஞ்சாமல் அமைதியாக பேசினாள் அந்த பெண்மணி.



"தேவ்... என்னால நடக்க முடியும்..." - மதுரா அவனுடைய பிடியிலிருந்து விலகி தனித்து நடக்க முற்பட்டாள். சட்டென்று அவளிடம் திரும்பியவன்,



"இல்ல... நீ இப்படியே வா..." என்றான் அழுத்தமாக.



விவாதம் செய்யும் நிலையில் அவள் இல்லை. எனவே அவனுடைய தோளில் சாய்ந்து, பாதி கனத்தை அவன் மீது சுமத்தியபடியே சென்று லிஃப்ட்டில் ஏறினாள்.



"இதுதான் உங்களுக்கு ஒதுங்கியிருக்க ரூம்..." என்று ஒரு அறையை காட்டினாள் நர்ஸ்.



விஐபி அறை என்று சாதாரணமாக அதை சொல்லிவிட முடியாது. அனைத்து வசதிகளுடனும் காணப்பட்ட அந்த பெரிய அறையில் வைக்கப்பட்டிருந்த அத்தனை பொருட்களும் புதிதாக இருந்ததை அந்த இக்கட்டான நேரத்தில் கூட மதுராவால் கண்டுகொள்ள முடிந்தது. இந்த ஏற்பாடுகளுக்காக தேவ்ராஜ் சிரத்தை எடுத்திருக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது.



மதுராவை படுக்கையில் அமரவைத்து அவளுடைய முதுகுக்கு அணைவாக தலையணையை எடுத்து வைத்தபடி, "ப்ரீத்தி எங்க?" என்றான் செவிலியரிடம்.



"ஆப்பரேஷன் தியேட்டர்ல இருக்காங்க" - அலட்டிக்கொள்ளாமல் பதில் வந்தது.



"என்ன! ஆப்பரேஷன் தியேட்டர்லயா! இந்த நேரத்துல அவங்க இங்கதானே இருந்திருக்கணும்... இப்போ இங்க யாரு டெலிவரி பார்க்கறது?" - கத்தினான்.



அவனுடைய கோபத்தைக் கண்டு மதுரா நெற்றியை நீவினாள். அவளுடைய ஓரக்கண் பார்வை நர்ஸின் மீது படிந்தது. சிரஞ்சை எடுத்துக் கொண்டு அவளிடம் நெருங்கினாள்.



"வலிக்காது..." என்று கூறியபடி அவளுடைய கையில் ஊசியை ஏற்றினாள். கண்களை மூடிக் கொண்டு வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள் மதுரா. அவளிடமிருந்து சின்ன முனகல் வெளிப்பட்டது. உடனே தேவ்ராஜ் நர்ஸை முறைத்தான். "ஏ...யேய்...!! என்ன பண்ணின? என்ன ஊசி அது?" என்று சீறினான்.



"தேவ் பாய்..." - மாயாவின் குரல் அவனை அதட்டியது.



"சார் ப்ளீஸ்... நா என்னோட வேலையை தான் செஞ்சுகிட்டு இருக்கேன். அதோட உங்க மனைவிக்கு இப்போதான் காண்ட்ராக்ஷன்ஸ் ஸ்டார்ட் ஆயிருக்கு. குழந்தை பிறக்க இன்னும் சில மணிநேரம் கூட ஆகலாம்... அது அவங்களோட உடம்பை பொறுத்தது. நாங்க இதெல்லாம் தினம் தினம் நிறைய பார்த்துகிட்டு இருக்கோம். அதனால நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க" - பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கூறினாள். ஆனால் அவன் சமாதானம் ஆகவில்லை.



"அதுவரைக்கும் இவ இப்படி வலியோட கஷ்ட்டப்படணுமா? எப்போ தான் வருவாங்க உங்க டாக்டர்?"



இப்போது அவள் முகத்தில் எரிச்சல் தெரிந்தது. "இந்த உலகத்துலேயே முதன்முதலா உங்க மனைவிதான் குழந்தை பெத்துக்கறாங்களா? அமைதியா இருங்க சார், அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது"



தேவ்ராஜின் பார்வை அவளை பஸ்பமாக்கியது. "இவ எ...ன்...னோட மனைவி... இவளுக்கு இதுதான் முதல் தரம்... அதிகமா பேசாம டாக்டரை வர சொல்லு" - பல்லை கடித்துக் கொண்டு பேசினான்.



அவன் நர்ஸிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது, "ஆஆ...ம்...மா...." என்று பெரிதாக ஒரு அலறல் ஒலி மதுராவிடமிருந்து எழுந்தது. சட்டென்று அவனுடைய கவனம் மனைவியிடம் திரும்பியது. "ஒண்ணுல்ல... ஒண்ணுல்ல... அவ்வளவுதான்... முடிஞ்சிடிச்சு... முடிஞ்சிடிச்சு... மது..." என்று பதறி துடித்தபடி அவளுடைய கைகளை பிடித்தான்.



சிக்கிய அவனுடைய கைகளை பலம் கொண்டமட்டும் இறுக்கிப் பிடித்தாள். இன்னும் இன்னும் அதிகமாக... அவளுடைய கூர் நகங்கள் அவன் கைகளை பதம்பார்க்கும் அளவிற்கு... அவனுடைய தோல் பிய்த்துக் கொண்டு இரத்தம் கசியும் அளவிற்கு...



அதைபற்றியெல்லாம் யோசிக்கக் கூட அவனுக்கு நேரமில்லை... அதற்குள் அவளுக்கு அடுத்த வலி வந்துவிட்டது. உயிரே போய்விடும் போல் கத்தினாள். "வ...லி...க்கு...து...!" - மதுராவின் அலறல் ஒலி அறையை நிறைத்தது. கதிகலங்கிப் போனான் தேவ்ராஜ்.



"ஐயோ... ஏதாவது செய்யேன்!" என்று நர்ஸிடம் கெஞ்சினான்.



அடுத்தசில நிமிடங்களுக்கு வலியில்லை. மெல்ல கண்களைத் திறந்து கணவனின் முகத்தை ஏறிட்டாள். கண்ணீரின் ஊடே கலங்களாகத் தெரிந்த அவன் முகம் இருண்டு போயிருந்தது.



முத்துமுத்தாக வியர்த்திருந்த அவளுடைய முகத்தை ஈரத்துணியால் துடைத்துவிட்டாள் மாயா. அந்த குளிர்ச்சி அவளுக்கு சற்று ஆசுவாசத்தைக் கொடுத்தது. அதை முழுவதும் அனுபவிப்பதற்கு முன் அடுத்த வலி... கத்திக் கதறினாள்.



"முடியில... ரொம்ப வ...லிக்கு...து... இட்ஸ் டூ... ம...ச்...!!"



"மது.. மது ப்ரீத்... மூச்சை நல்லா இழுத்துவிட்டு... ப்ரீத்..." - தேவ்ராஜின் குரல் அவள் செவிக்கு அருகில் ஒலித்தது.



"ஐம் ப்ரீத்திங் யூ இடிய...ட்... கெட் அவே..." - கடுங்கோபத்துடன் கத்தினாள். அவனுடைய கையை பிடித்து முறுக்கினாள். ஏற்கனவே காயம் பட்டிருந்த இடத்தில் மீண்டும் அவளுடைய நகம் பதிந்திட போது தன்னையறியாமல் தேவ்ராஜிடமிருந்து ஒரு சிறு முனகல் வெளிப்பட்டுவிட்டது.



'வலிக்குதா! இந்த வலியை தாங்க முடியலையா உனக்கு...! நா எவ்வளவு அவஸ்த்தை பட்டுக்கிட்டு இருக்கேன்... உனக்கு உன்னோட கை வலி பெருசா போச்சா!' - அவன் மீது எரிச்சல் மண்டியது. மீண்டும் வலி... கத்தல்... அழுகை... 'ஓ மை காட்...! மது...!' - அரற்றியது தேவ்ராஜின் உள்ளம்... பார்க்க முடியவில்லை... சகிக்க முடியவில்லை அவனால்... அவளுடைய கையை விட்டுவிட்டு அவளிடமிருடந்து விலகிச் சென்றான்.



பற்றியிருந்த பற்றுக்கோலை விட்டுவிட்டு நடுக்கடலில் தத்தளிப்பது போல் தவித்துப் போனாள் மதுரா. 'நோ தே...வ்...! வாங்க... என்கிட்ட வந்துடுங்க!' - உள்ளம் கூக்குரலிட கண்விழித்துப் பார்த்தாள். சற்று தொலைவில், இரண்டு கைகளாலும் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு நின்றான்.



கோட் இல்லை... டை தளர்ந்து பாதி அவிழ்ந்த நிலையில் கழுத்தில் சுற்றிக் கிடந்தது... உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. தலை கண்டபடி கலைந்திருந்தது. அவன் இவ்வளவு அலங்கோலமாக காணப்படுவது இதுதான் முதல் முறை... மிகவும் சோர்வாகத் தெரிந்தான். அவளுடைய வலியை அவன் உணர்வது கண்கூடாகத் தெரிந்தது.



"ப்ரீத்தி எங்க?" - நூறாவது நுரையாக அந்த கேள்வியை கேட்டான். அவன் குரலில் கூட சோர்வு தெரிந்தது.



"எமர்ஜென்சி கேஸ் சார்... வந்துடுவாங்க" - - நர்ஸின் பதிலைக் கேட்டதும் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது அவனுக்கு.



"என்ன எமர்ஜென்சி யூ ப்ளடி டாஷ்..." என்று சீறினான்.



"தேவ்... ப்ளீஸ் வாங்க..." - கத்திக்கத்தி வறண்டுபோயிருந்த மனைவியின் குரலைக் கேட்டு அவளிடம் பாய்ந்து வந்தான்.



அவனுடைய நெற்றி அவளுடைய நெற்றியில் பதிந்திருந்தது. அவனுடைய கண்கள் அவளுடைய கண்களோடு பின்னியிருந்தது. "என்னை கொஞ்சம் நிமிர்த்தி உட்கார வைங்க"



அவளுடைய முதுகில் கைகொடுத்து தூக்கி நிமிர்த்தி அமறைவைத்தான். முதுகுக்கு அணைவாக தலையணையை எடுத்து வைத்தான்.



"உங்களுக்கு இன்னும் சரியா வலி வரலம்மா"



"வாட்! உனக்கு கண்ணு தெரியிதா இல்லையா! இவ்வளவு வலில துடிக்கிறா... இன்னும் வலி வரலைன்னு சொல்ற!"



பிரசவத்தைக் கூட எளிதாக பார்த்துவிடலாம். ஆனால் இவனை சமாளிப்பதுதான் பெரும்பாடு என்று எண்ணியபடி, அவனுடைய பேச்சிற்கு பதில் சொல்லாமல், "எழுந்து கொஞ்ச நேரம் நடங்க... ஈஸியா இருக்கும்" என்றாள்.



"ஹேய்...!!! ஆர் யு கான் மேட்...!" - கடுப்பானான் தேவ்ராஜ்.



"ஷட்அப் தேவ் பாய்... உங்கள வெளியேதான் துரத்தப் போறாங்க..."



"யாராலயும் அதை செய்ய முடியாது...! ஐ வில் கில் ஆல் ஆஃப் தெம்..." - கொலைவெறியோடு உறக்கக் கூவினான்.



இது போல் ஒரு பிரசவத்தை வாழ்க்கையில் இதற்கு முன் அந்த செவிலியர் பார்த்திருக்கவே மாட்டாள். இங்கு குழந்தை பெற்றுக்கொள்வது மதுராவா அல்லது இந்த முசுட்டு மனிதனா என்கிற சந்தேகமே அவளுக்கு வந்திருக்கும். அந்த அளவிற்கு அவளை படுத்தி எடுத்துவிட்டான்.



"ஐயோ பாய்... அவங்க சரியாதான் சொல்லறீங்க. மதுராவை நடக்க வைங்க..."



"அறிவு இருக்கா உனக்கு? லூசு... போசாம போ அந்த பக்கம்..." - தங்கையிடம் எரிந்து விழுந்தான். 'படுக்கவே முடியாம கத்தறா! அவளை போயி நடக்க வைக்கணுமாம்!' - கோபத்தின் உச்சத்திலிருந்தான்.



"தேவ்..." - மதுரா.



"சொல்லு மது... என்ன?" - நொடியில் கோபம் மறைந்து குரல் குழைந்தது.



"எனக்கு ஹெல்ப் பண்ணுங்க... நா நடக்கணும்"



"நோ..."



"தேவ்... எனக்கு ஒண்ணும் இல்ல..."



"வேண்டாம் மது..." - பயம் அப்பட்டமாக தெரிந்தது அவன் குரலில்.



"ஐ கேன் டூ திஸ் தேவ்... வி கேன் டூ திஸ்... உங்க பிரின்சஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க கைல இருப்பா... ப்ளீஸ் ஹெல்ப் மீ டு வாக்..." - அவனுடைய முகத்தை கைகளில் ஏந்தி அவன் கண்களை பார்த்து பேசிக் கொண்டிருந்தவளுக்கு சட்டென்று வலி வந்தது. நிதானிக்க நேரமின்றி அவன் முகத்தை அழுத்தப் பற்றினாள். கைகளை பதம்பார்த்த அவள் நகங்கள் இப்போது அவன் முகத்தையும் கீறி கிழித்தன.



அவள் படும் துன்பத்தைக் கண்டு அவன் மனம் கலங்கித்தவித்தது. 'இதெல்லாம் ஏன்...!' என்கிற எண்ணம் கூட எழுந்தது. அவள் வலி குறைந்து சற்று நிதானப்பட்டதும் அவளை நெஞ்சோடு அனைத்துக் கொண்டான். அவனுடைய வன்மையான இதயம் தாறுமாறாக துடுப்பதை அவள் உணர்ந்தாள். "பயப்படாதீங்க... ஐம்... ஐம் ஆல்ரைட்..." என்று தடுமாற்றத்துடன் அவனுக்கு தைரியம் கொடுத்தாள்.



"ஐ லவ் யூ... ஐ ரியலி லவ் யூ டியர்..." - அவள் காதோரம் அவன் உதடுகள் முணுமுணுத்தன. அவன் கண்களில் கசிந்த கண்ணீர் அவள் தோள்பட்டையை ஈரமாக்கியது. அவளுடைய கண்களிலும் கண்ணீர் வடிந்தது.



கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு திரும்பிப் பார்த்தான். மருத்துவர் ப்ரீத்தி உள்ளே நுழைவதைக் கண்டு சீறி கொண்டு எழுந்தவன், "எங்க போயி தொலைஞ்சீங்க இவ்வளவு நேரம்?" என்று பாய்ந்தான்.



திடுக்கிட்ட அந்த பெண், "எக்ஸ்கியூஸ் மீ..." என்றாள் கட்டுப்படுத்திய கோபத்துடன்.



"தேவ் பாய்... இது பிரச்சனை பண்ணற நேரமா. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்ஸெல்ஃப்... டாக்டர்... நீங்க மதுவை பாருங்க... ரொம்ப கஷ்ட்டப்படறா..." - மாயா இருவருக்கும் நடுவில் புகுந்தாள்.



"ஆப்ரேஷன் பண்ணி குழந்தையை வெளியே எடுங்க. இதுக்கு மேல அவளால தாங்க முடியாது..." - பொறுமையிழந்து சிடுசிடுத்தான்.



யாருக்கும் பதில் சொல்லாமல் மதுராவை பரிசோதித்த மருத்துவர் "பத்து நிமிஷத்துல குழந்தை பிறந்துடும். சர்ஜெரியெல்லாம் தேவையில்லை..." என்றாள். அவள் சொன்னது போலவே, தாயின் உயிரை பிழிந்து அவளை அரை உயிராக்கிவிட்டு இந்த உலகத்தில் வந்து உதித்தது தேவ்ராஜின் குழந்தை.



"இட்ஸ் எ பாய்..." - மருத்துவரின் குதூகல குறளைத் தொடர்ந்து வீறிட்ட குழந்தையின் அழுகுரல் தேனாய் பாய்ந்தது தேவ்ராஜின் செவியில்.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 92

"இட்ஸ் எ பாய்..." என்கிற மருத்துவரின் குரலைக் கேட்டதும் மதுராவின் மனம் பூரிப்பில் நிறைந்தது. அதை அடுத்து கேட்ட குழந்தையின் அழுகுரல் அவள் கண்களில் ஆனந்த கண்ணீரை கொண்டுவந்தது. மனைவியின் கையை பிடித்தபடி அவளுடைய தலைப்பக்கம் நின்றுக்கொண்டிருந்த தேவ்ராஜ் அவளுடைய கண்ணீரை துடைத்து நெற்றியில் இதழ்பதித்தான்.



'பிரின்சஸ் பிரின்சஸ்னு சொல்லிட்டு இருந்தானே! பையனா பிறந்துட்டானே! எப்படி ஃபீல் பண்ணறான்!' - கணவனை ஏறிட்டாள். கனிந்த முகத்தோடு அவளை பார்த்துக் கொண்டிருந்தான் அவன். இருவருடைய பார்வையும் பின்னிக் கொண்டது.



"பை...யன்..." - மதுராவின் உதடுகள் முணுமுணுத்தன. பற்றியிருந்த அவள் கையில் முத்தமிட்டு, "என்னோட பையன்' என்றான் பெருமை பொங்க.



"உங்கள மாதிரிதான் இருக்கானா?" - மீண்டும் முணுமுணுப்பாக ஒலித்தது அவள் குரல். கலைத்துப் போயிருந்த அவன் முகம் புன்னகையில் மலர்ந்தது.



"பேபியை இங்க கொண்டு வாங்க" - தொப்புள் கொடியை வெட்டிக் கொண்டிருந்த மருத்துவரிடம் கூறினான்.



"கிளீன் பண்ணி கொண்டுவரேன் சார்" - நர்ஸ்.



"நோ நீட்... இங்க கொடுங்க..." - உதிரத்தில் குளித்திருந்த குழந்தையை அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டான்.



நொழுநொழுவென்றிருந்த அந்த குட்டி உடல் தன் கையிலிருந்து நழுவிவிடுமோ என்கிற பயத்துடன், "என்ன...! பேபி இவ்வளவு சின்னதா இருக்கு!" என்றான்.



ஐந்து வயது சிறுவனிடம், பிறந்த குழந்தையைக் கொடுத்தால் அவன் முகத்தில் எப்படி ஒரு பயமும் உற்சாகமும் கலந்த கலவையான உணர்வு தோன்றுமோ அப்படி ஒரு உணர்வுதான் இப்போது தேவ்ராஜின் முகத்திலும் இருந்தது. அதைக் கண்ட நர்ஸ் சிரித்தாள். சற்றுநேரத்திற்கு முன் ஆவேசத்துடன் தன்னிடம் சீறி கொண்டிருந்த மனிதன் இப்போது சட்டென்று குழந்தையாய் மாறிவிட்டதை வியப்புடன் பார்த்தபடி, "நார்மல் சைஸ் தான் சார்..." என்றாள்.



"அப்படியா! நார்மல் சைஸ்தானா!" - நம்ப முடியாமல் மீண்டும் ஒருமுறை கேட்டான்.



"பீடியாட்ரீஷியந்தான் இருக்காங்களே... கேட்டுடுங்க..." - அவனுடைய பார்வை குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்றது.



"அவங்க சொல்றது சரிதான்... பயப்படாதீங்க"



"தேங்க் யூ..." - மெய்சிலிர்க்க தன் நெஞ்சோடு குழந்தையை அணைத்தபடி மனைவியிடம் எடுத்துச் சென்றான்.



"பாரு... யார் மாதிரி இருக்கான்னு நீயே சொல்லு" என்றான். அவன் கண்களில் தெரிந்த ஆர்வத்தை கண்ட மதுரா புன்னகையுடன் அவன் கையிலிருந்த குழந்தையைப் பார்த்தாள். குட்டி உருவம்... யார் சாயல் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் வைத்த கண்ணை அகற்ற முடியவில்லை. அப்படி ஒரு ஈர்ப்பு... தாய் என்பதால் வந்த ஈர்ப்போ! - மெல்ல தொட்டுப் பார்த்தாள். உள்ளே இனித்தது.



"கேன் ஐ ஹோல்டு ஹிம்?" - ஆசையோடு கேட்டாள்.



"உன்னால முடியுமா?"



"ம்ம்ம்..."



"ஹெல்ப் பண்ணுங்க...." - நர்ஸை அழைத்தான். அவள் வந்து அவனிடமிருந்த குழந்தையை வாங்கி மதுராவின் மீது அழகாக படுக்க வைத்தாள். அது அவளிடம் முட்டி மோதியது. ஆச்சரியப்பட்டுப்போனாள் மதுரா.



"என்ன செய்றான்!" - விரிந்த விழிகளுடன் நர்ஸை பார்த்தாள்.



"அம்மாவை கண்டுபிடிச்சிட்டான்..." என்று சிரித்தவள் "பீடியாட்ரீஷியன் பார்த்துடட்டும்... அவங்க பார்த்த பிறகு கிளீன் பண்ணி கொண்டு வரேன். பீட் பண்ணலாம்..." என்று கூறிவிட்டு அதே அறையில் இருந்த குழந்தைகள் நல மருத்துவரிடம் குழந்தையைக் கொண்டுச் சென்றாள்.



அதுவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி இருந்தவளுக்கு, பீடியாட்ரீஷியன் என்கிற வார்த்தையைக் கேட்டதும் மாத்திரையின் நினைவும், குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்கிற பயமும் தோன்றியது.



"பேபிக்கு... எதுவும்... இல்லைல... நல்லா இருக்கு தானே" என்றாள் பதற்றத்துடன். தேவ்ராஜின் டென்ஷன் நொடியில் உச்சத்திற்கு சென்றது. உடல் இறுக குழந்தையை பரிசோதிக்கும் மருத்துவரின் முகபாவத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மனைவியின் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் கூட அவன் இல்லை.



"ஹி இஸ் அப்சலியூட்டலி நார்மல்" என்று அவர் உறுதி கொடுத்த பிறகுதான் உயிரே வந்தது.



"ஓ காட்! ஹி இஸ் நார்மல்... ஹி இஸ் டாம் நார்மல்..." என்று அவன் கூச்சலிட மதுராவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.



கோவிலிலிருந்த பிரபாவதிக்கு அலைபேசியில் அழைத்து தேஜா விபரம் சொல்ல, அங்கிருந்தபடியே அரக்க பறக்க மருத்துவமனைக்கு ஓடினாள். தாய் மனம் பதறியது. போகும் வழியிலேயே கணவனுக்கும் மகன்களுக்கும் போன் செய்தாள். தேஜாவின் மூலம் அவர்களுக்கும் ஏற்கனவே விஷயம் தெரிந்திருந்தது. வந்து கொண்டிருப்பதாக கூறினார்கள். பிரபாவதி மருத்துவமனைக்கு வந்த போது மதுரா வலியில் கதறிக் கொண்டிருந்தாள். ஓரிருமுறை மகள் உள்ளே சத்தம் போடுவதை வெளியே நின்றபடி கேட்ட தாய் கலங்கி தவித்தாள். வயிற்றில் புளியை கரைத்தது... கால்களெல்லாம் வலுவிழந்தன. மகள் படும் துன்பத்தை சகிக்க முடியவில்லை அவளுக்கு... 'அம்பிகையே! அபிராமியே!' என்று கடவுளின் நாமத்தை முணுமுணுத்தபடி அமர்ந்திருந்தாள்.



சற்று நேரத்தில் வெளியே வந்த மருத்துவர் "ஆரோக்கியமான ஆண் குழந்தை" என்று சிரித்துக் கொண்டு சொன்ன போதுதான் நிம்மதியாக மூச்சுவிட்டாள்.



தங்கள் குடுபத்தின் புதுவரவை அனைவரும் ஆவலோடு வந்து பார்த்தார்கள். சச்சரவுகள்.. கோப தாபங்கள்... மனஸ்தாபங்கள் அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது அவர்களுடைய மனதில்.



****************************



அன்று இரவு மதுராவுக்கு உதவியாக பிரபாவதியும் மாயாவும் மருத்துவமனையில் தங்கியிருந்தார்கள். பேரனை பார்க்கப்பார்க்க பிரபாவதியின் மனதில் மத்தாப்பூ ஒளிர்ந்தது. அவ்வளவு அழகாக இருந்தான். அதோடு மதுரா குழந்தையாக இருந்த போது எப்படி இருந்தாளோ அதே போல் இருந்தான். நெற்றி, மூக்கு, கன்னம் தாடை அத்தனையும் மதுராவின் சாயலிலேயே இருந்தது.



தொட்டிலில் உறக்கிக் கொண்டிருந்த குழந்தையை ஆசையோடு பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த பிரபாவதி, அவனிடம் அசைவு தெரியவும் தொட்டிலை ஆட்டிவிட்டாள். குழந்தை உறங்க மறுத்து லேசாக முனகியது. 'பசிக்கிறதோ!' - எழுந்து தூக்கினாள். முனகி கொண்டிருந்த குழந்தை கண்விழித்து பாட்டியின் முகத்தை பார்த்தது.



பிரபாவதியின் புருவன் சுருங்கியது. அவள் பேரனை கூர்ந்து பார்த்தாள். சுருக்கங்களுடன் இருந்த குட்டி கண்கள் தான்... இமைகளை மூடிமூடி திறந்து, கண்களை சுருக்கிச்சுருக்கிப் பார்க்கும் குழந்தை பார்வைதான்... ஆனாலும் அவளால் அந்த கண்களை இனம்காண முடிந்தது. தாயிடமிருந்து வந்த அத்தனை அம்சங்களையும் தோற்கடித்துவிட்ட அந்த கண்களை அவளால் கண்டுகொள்ள முடிந்தது. கர்வமும் கம்பீரமும் கொண்ட தேவ்ராஜின் கண்கள் அது...



'ஹும்ம்ம்...' - நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது அவளிடமிருந்து. 'முகமெல்லாம் மது மாதிரிதான் இருக்கு. ஆனா இந்த கண்ணை மட்டும் அப்படியே அவன்கிட்டேருந்து கொண்டு வந்துட்டானே!' - அந்த நேரத்தில் பிரபாவதியின் மனதில் ஒரு விஷயம் தோன்றியது. ஆனால் அவள் அதை வாய்விட்டு சொல்லாமல் விழுங்கி கொண்டாள்.



குழந்தையை மகளிடம் எடுத்துச் சென்று பசியாற்றினாள். அதன் பிறகும் கூட பேரனை தொட்டிலில் இட மனமே வரவில்லை. தூக்கியே வைத்திருக்க வேண்டும் போல் ஆசையாக இருந்தது. சற்று நேரம் மடியிலேயே வைத்திருக்கலாம் என்று நினைத்தாள். ஆனால் வீறிட்டான் தேவ்ராஜின் மகன். 'கண்ணே... மணியே...' என்று எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தாள். அவன் அடங்கவில்லை.



நள்ளிரவுவரை விழித்திருந்துவிட்டு அப்போதுதான் கண்ணயர்ந்த மாயா குழந்தையின் அழுகுரல் கேட்டு உடனே எழுந்தாள்.



"என்ன ஆச்சு? ஏன் அழறான்? என்ன பண்ணுனீங்க?" - கேள்விமேல் கேள்வி கேட்டபடி எழுந்து வந்தாள். எரிச்சலுடன் அவளை முரைத்த பிரபாவதி, "நா என்ன பண்ணுனேன்... திடீர்ன்னு அழறான்..." என்றாள்.



"கொடுங்க..." - உறக்கத்தை உதறிவிட்டு அண்ணன் மகனை அள்ளிக் கொண்டாள். குழந்தையின் அழுகை சன்னமாய் குறைந்தது. அதை வியப்புடன் பார்த்த பிரபாவதி பொருமினாள்.



"இவ்வளவு நேரமா நா தூக்கி வச்சிருந்தேன்... என்ன கத்து கத்தினான்! இப்போ அத்தைக்காரிகிட்ட போனதும் அப்படியே அடங்கிட்டானே! அந்த குடும்பத்து வாசனை தெரியுமோ! அப்படியே அப்பன் மாதிரி..." என்று தனக்குள் முணுமுணுத்தாள் கொண்டாள்.



அந்த குட்டிக் கண்ணனுடைய கண்களை பார்த்த போது தோன்றிய, 'அப்படியே அப்பன் மாதிரி' என்கிற எண்ணம் இப்போது வெளிப்பட்டது.



"ஏதாவது சொன்னீங்களா?" - மாயா.



"இல்லையே! நா என்ன சொல்ல போறேன்... பிள்ளை சமத்து... தூங்கிட்டான் போலருக்கே!" - எரிச்சலை மறைத்துக் கொண்டு பல்லை காட்டினாள். வேறு வழி!

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 93

யாருடைய விருப்பு வெறுப்பைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை. அந்த குட்டி பூங்கொத்தை பார்க்காமல் கழியும் ஒவ்வொரு நொடியும் யுகமாய் மாறியது அவனுக்கு. அதனால்தான் முன்பெல்லாம் மாலை மட்டும் மாமனார் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தவன் இப்போது கூடுதலாக காலை வேளையிலும் ஒருமுறை எட்டிப்பார்த்துவிட்டு அலுவலகத்திற்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.



அலுவலகத்திலிருந்து எத்தனை மணிக்கு திரும்பினாலும் ஒரு முறை அந்த பால் முகத்தை பார்த்தால்தான் அன்று இரவு அவனுக்கு உறக்கம் வரும். அப்படியும் சில நாட்களில் ஏக்கத்துடன் வெகு நேரம் விழித்துக் கிடப்பான். அந்த நேரத்தில் மனைவிக்கு அழைத்து அவளுடைய தூக்கத்தையும் கெடுக்க மனம் வராமல், குழந்தைகள் சம்மந்தப்பட்ட வலைத்தளங்களில் நுழைந்து அவர்களுடைய உலகத்தை அறிந்துகொள்ள முயல்வான். அந்த முயற்சியில் நிறைந்தது நரேந்திரமூர்த்தியின் வீடு.



'அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில குடை பிடிப்பானாம்...' - குட்டிக்கண்ணனுக்கு அவன் வாங்கி குவித்திருக்கும் பொருட்களை வைக்க இடமில்லாமல் திணறும் பிரபாவதி, யாருக்கும் தெரியாமல் அடிக்கடி வாய்க்குள் முணுமுணுக்கும் வசனம் இது.



தொட்டில்... ஊஞ்சல்... ம்யூஸிக்கல் வாக்கர்... என்று அத்தனையும் ஒன்றுக்கு மூன்றாக வந்து சேர்ந்ததோடு அல்லாமல் சின்னச்சின்ன விளையாட்டு சாமான்கள் முதல் ஆடை அணிமணிகள் வரை அனைத்தும் பெட்டிப் பெட்டியாய் வந்து இறங்கியது. பிறந்த குழந்தைக்கு தொட்டில் வாங்கியது சரிதான்... ஆனால் ஊஞ்சலும் வாக்கரும் எதற்கு? அதெல்லாம் அந்தந்த காலகட்டத்தில் வாங்கிக்கொள்ளக் கூடாதா? இதையெல்லாம் எங்கு கொண்டு வைப்பது என்று எரிச்சல்பட்டாள்.



பாதி பெட்டியை திறந்து பார்ப்பதே இல்லை. அதை பிரித்து ஒரு மூலையில் போட்டு வைப்பதை விட அது பெட்டியோடு ஒரு ஓரமாக எங்காவது இருந்துவிட்டு போகட்டும் என்று லாஃப்டில் அடுக்கி வைத்துவிடுவாள்.



கொரியர்காரன் வந்தாலே அவளுக்கு பயமாக இருக்கும். 'இப்போது எதை ஆடர் செய்து வைத்தானோ!' என்று திட்டிக் கொண்டே போய்தான் கையெழுத்திடுவாள். வந்திருக்கும் பார்சல் அளவில் பெரிதாக இருந்தால் முகம் கடுகடுவென்று மாறிவிடும். ஆனால் யாரிடம் சொல்ல முடியும்? அந்த மாத்திரை மேட்டருக்கு பிறகுதான் அவளுடைய பேச்சிற்கு மதிப்பு தரைமட்டத்திற்குக் குறைந்துவிட்டதே...



நாட்கள் இப்படியே நகர்ந்துக் கொண்டிருந்தன. குழந்தை முகம் பார்த்து சிரிக்க துவங்கினான். குப்புத்துக் கொண்டு தவழ முயன்றான்... தினமும் வரும் தந்தையை அடையாளம் கண்டு அவனை பார்த்ததும். "ஊ... ஊ..." என்று சத்தம் எழுப்பினான். அதை அவனுடைய மனைவி குறிப்பிட்டுக் காட்டினாள்.



"பாருங்க... உங்க பையன் உங்களை பார்த்ததும் எப்படி சத்தம் போடறான்!" - வாழ்க்கையில் இதைவிட சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும் ஒரு ஆண்மகனுக்கு. நிறைந்த மனதோடு மனைவியை வீட்டுக்கு அழைத்தான்.



"பையனுக்கு பேர் வைக்கணும். ஃபங்ஷன் பெருசா பண்ணனும். எப்போ வீட்டுக்கு வர்ற?" - அவள் எதிர்மறையாக எதுவும் சொல்லிவிட மாட்டாள் என்கிற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. காரணம்... குழந்தை பிறந்ததிலிருந்து மதுரா அவனிடம் சுமூகமாகத்தான் பேசிக் கொண்டிருந்தாள். இவன் குழந்தையை கொஞ்சும் போது அவள் கூட இருந்து ரசிப்பாள். இவன் இல்லாத நேரத்தில் குழந்தை ஏதாவது புதிதாக செய்தால் அதை செல் போனில் வீடியோவாக பதிவு செய்து அவனுக்கு போட்டு காட்டுவாள். குழந்தையின் குறும்புகளையும் சேட்டைகளையும் அவனிடம் பகிர்ந்து கொண்டு சிரிப்பாள். மகன் பிறந்து மனைவியின் கோபத்தை கரைத்துவிட்டான் என்பது தேவ்ராஜின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையோடுதான் அவளுடைய பதிலுக்காகக் காத்திருந்தான். ஆனால் அவளிடம் எந்த மறு மொழியும் இல்லை.



தன் மடியில் உறங்கும் குழந்தையின் முகத்திலேயே பார்வையைப் பதித்து சிலை போல் அமர்ந்திருப்பவளைக் கண்டு துணுக்குற்ற தேவ்ராஜ், "என்னால தனியா இருக்க முடியல. நீயும் குழந்தையும் எனக்கு திரும்ப வேணும்... ப்ளீஸ்..." என்றான் அவள் கையில் தன் கையை வைத்து.



உதட்டைக் கடித்துக் கொண்டாள் மதுரா. அவள் உள்ளம் போராடியது. சூழ்நிலை மாறும் போது மனநிலையும் மாறும் என்பார்கள். மதுராவின் மனநிலையும் மாறிதான் இருந்தது. தேவ்ராஜின் மீது அவளுக்கு இருந்த எதிர்மறை உணர்வுகளெல்லாம் மனதிலிருந்து மறைந்திருந்தது. ஆனாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு தயக்கம்... அவனுடைய அழைப்பிற்கு இசையை முடியாத மனச்சிக்கல்...



"முன்னாடி நடந்த மாதிரி இனி எதுவும் நடக்காது... நம்பு.."



"............................."



"இப்படி அமைதியாவே உட்கார்ந்திருந்தா நா எப்படி புரிஞ்சுக்கறது?"



"............................."



"ஏதாவது பேசு மது..."



"என்னோட மனசு இன்னமும் உனக்கு புரியலையா?"



"நல்லா புரிஞ்சதுனாலதான் பயப்படறேன் தேவ். உங்களோட அதிகப்படியான அன்பு என்னை சாஃபக்கேட் பண்ணுது... மூச்சு முட்டுது... உங்களோட ஆட்டிடியூடை என்னால ஹாண்டில் பண்ண முடியல" - இப்போது அவன் பதில் சொல்ல முடியாமல் அமைதியாகிவிட்டான்.



ஓரிரு நிமிடங்கள் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தான். பிறகு அவளுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்து, "ஐம் ஒர்கிங் ஆன் தட்..." என்றான்.



"ஒர்கிங் ஆன் வாட்?"



"என்னோட டெம்பர்... எமோஷன்ஸ் எல்லாம் உன்ன ஹர்ட் பண்ணாம பார்த்துக்கறேன்"



"எப்படி?"



"என்னால முடியும். நீ கூட இருந்தா எல்லாமே முடியும்..." என்றான் நம்பிக்கையோடு. அவள் இல்லை என்பது போல் தலையசைத்தாள்.



"ஒண்ணு... உங்களை ஹாண்டில் பண்ணற மெச்சூரிட்டி எனக்கு வரணும்... இல்ல என்னை புரிஞ்சுகிட்டு எனக்கான ஸ்பேஸை கொடுக்கற மனப்பக்குவம் உங்களுக்கு வரணும். ரெண்டுல ஏதாவது ஒண்ணு நடந்தாதான் நாம வாழலாம். நமக்குள்ள இன்னொரு சண்டை வரா கூடாது தேவ். அதை நம்ம பையன் பார்க்கக் கூடாது. பிரச்சனைகளை பார்த்துப் பார்த்து முரட்டுத்தனமா நீங்க வளர்ந்துடீங்க. இன்னொரு முரடான என்னோட பையனை வளர்க்கறதுல எனக்கு விருப்பம் இல்ல..."



தேவ்ராஜின் முகம் சிறுத்துவிட்டது. குரலை உயர்த்தவில்லை என்றாலும் அவளுடைய மறுப்பு அழுத்தமாய் இருந்தது. அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



"நான் அப்பா இல்லாம... அவரோட அன்பு இல்லாம... கைடன்ஸ் இல்லாம வளர்ந்தேன். என்னோட பையனும் அப்படி வளரக் கூடாது. அதை நா அலோ பண்ண மாட்டேன்" என்றான் முகம் சிவக்க. அவன் கண்களில் தெரிந்த சீற்றத்தைக் கண்ட மதுரா,



"இதோ... உங்க மாற்றத்து சாட்சி... எவ்வளவு கோவம்! உங்களால மாற முடியாது தேவ். உங்களுக்கு பிடிக்காத எதையும் நா செய்யக் கூடாது. செஞ்சா அதை தடுக்க நீங்க எந்த எல்லைக்கும் போவீங்க... எவ்வளவு நாள் நா இப்படி உங்க நிழலாவே வாழறது? எனக்குன்னு எண்ணங்கள்... ஆசைகள் இருக்காதா? இருக்கக் கூடாதா?" என்றாள் ஆற்றாமையுடன்.



மதுராவின் வார்த்தைகள் ஆணியறைந்தது போல் அவன் மனதில் பதிந்தது. அவள் சொன்னதில் இருந்த உண்மை அவனை சுட்டது.



இப்போது அவனுக்கு வந்த கோபம் நியாயமான கோபம் தான்... எல்லை மீறாத கோபம் தான். ஆனால் அவளுடைய பிடிவாதம் அதிகரிக்கும் போது இந்த நியாயமான கோபம் அநியாயத்திற்கு எல்லை மீறும் என்பதும் உண்மைதான். அதை அவனுடைய உள்மனம் உணர்ந்து, தவறென்றும் ஏற்றுக் கொண்டது.



இந்த வாழ்க்கை அவனுடையது மட்டும் அல்ல... அவனுக்கும் அவளுக்கும் பொதுவானது. முடிவெடுக்கும் உரிமை அவனுக்கு மட்டும் அல்ல... அவளுக்கும் இருக்கிறது. அவளுடைய விருப்பங்களை இவன் அனுசரிக்கத்தான் வேண்டும். தன்னுடைய விருப்பங்களை அவள் மீது திணிக்காமல் விலகத்தான் வேண்டும்... அதுதான் நியாயம்...



மனைவியையும் குழந்தையையும் தன்னோடு... தன்னுடைய இறகுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அவனுடைய விருப்பம். அந்த கட்டுக்குள் அவள் அடைபட மறுப்பது அவனுக்கு பிடிக்கவில்லைதான். ஆனால் இந்த மறுப்பை அவன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவளுடைய விருப்பத்துக்கு மதிப்புக்கு கொடுத்துத்தான் ஆக வேண்டும். - தேவ்ராஜின் உண்மையான மனமாற்றம் அந்த நொடியில்தான் ஆரம்பித்தது. மனைவியின் முகத்தை வாஞ்சையோடு பார்த்து, "வெயிட் பண்ணறேன்" என்றான்.



அதற்கு மேல் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வெகுநேரம் உறங்கும் குழந்தையின் முகத்தை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் தேவ்ராஜ். அவன் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் மதுரா. மனதை பரிமாறிக்கொள்ள அவர்களுக்கு வார்த்தைகள் தேவைப்படவில்லை. அவர்கள் கொடுத்து வாங்கி கொண்ட அருகாமையே அவர்களுடைய உணர்வுகளை பரிமாற்றம் செய்தது. மௌனம் மட்டுமே அங்கு மத்தியஸ்தராக வேலை செய்தது.

 

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom