Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed Kanalvizhi Kadhal - Novel

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 74

இவ்வளவு பெரிய அநியாயத்தை அவளுக்கு செய்துவிட்டு எப்படி இவ்வளவு சாதாரணமாக இருக்கிறான்! மனதில் சிறு உறுத்தல் கூட இல்லையா! மன்னிப்பு கேட்க வேண்டாம்... வருத்தம் கூட தெரிவிக்க வேண்டாம்... இயல்பாக ஒரு வார்த்தை... அதை கூட அவன் பேசவில்லை. அவ்வளவு மட்டரகமாகவா அவளை எண்ணிக் கொண்டிருக்கிறான்! - பொங்கிப் பொங்கி அடங்கியது அவள் மனம். அடிவயிறெல்லாம் எரிந்தது. என்ன அலட்சியம்! என்ன தோரணை! - அவளால் சகிக்க முடியவில்லை. கொடும் பாதகத்தை அவளுக்கு செய்துவிட்டு, ஏதோ அவள்தான் தவறு செய்தவள் போல அவளை புறக்கணிக்கவும் செய்தான். மனம் நொந்து போன மதுரா இரவெல்லாம் உறக்கமின்றி தவித்தாள். காலையில் தாமதமாக எழுந்தாள்... எழும் போதே காலை நேர உபாதைகளால் பெரும்பாடுபட்டாள். அவளை தாங்கிப் பிடித்து அந்த துன்பத்தையெல்லாம் பகிர்ந்துக்கொள்ள வேண்டியவனோ தன் போக்கில் ஓடிக் கொண்டிருந்தான். அவனை பார்ப்பது கூட அரிதாகிப் போனது. வலியையும் வேதனையையும் பகிர்ந்துகொள்ள ஆளில்லாமல் தனக்குள்ளேயே புழுங்கி மரத்துப்போன மனதுடன், உணர்வுகளற்ற இயந்திரம் போல் நடமாடிக் கொண்டிருந்தாள் மதுரா.



மாயாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் சிக்கலால் மனஉளைச்சலுக்கு ஆளான இராஜேஸ்வரியின் இரத்த அழுத்தம் எக்குத்தப்பாக எகிறியது. மருத்துவர் பரிந்துரை செய்த மருந்துகள் எதிர்பார்த்தபடி பலனளிக்கவில்லை. ஒரு பக்கம் தாயின் ஆரோக்கியம்... இன்னொரு பக்கம் மாயாவின் வாழ்க்கை... அதோடு பாரதியின் மீதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இவ்வளவு பிரச்சனைகளையும் தலையில் சுமந்துக் கொண்டிருந்த தேவ்ராஜ் மதுராவைப் பற்றி பெரிதாக எதுவும் யோசிக்கவில்லை.



அவனை பொறுத்தவரை, நின்று போன திருமணத்தை பற்றி அவள் பெரிதாக கண்டுகொண்டிருக்கக் கூடாது. பழைய கதை எதுவாக இருந்தாலும் இப்போது அவள் தேவ்ராஜின் மனைவி. அவனுடைய உறவை போற்றி பாதுகாத்துக்கொள்ளத்தான் நினைத்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இப்படி ஆர்ப்பாட்டம் செய்து மாயாவின் வாழ்க்கையை சிக்கலாக்கியிருக்கக் கூடாது என்று நினைத்தான்.



அதுமட்டுமல்ல... அந்த பிஞ்சு குழந்தை தந்தையைக் கேட்டு தினமும் அழுகிறதே! அந்த குழந்தையின் துன்பத்திற்கு நாம் தானே காரணம் என்கிற குற்ற உணர்ச்சி சிறிதாவது இருக்கிறதா! ஏதோ ரோபோ போல் போவதும் வருவதுமாக எதிலும் ஈடுபட்டுக்கொள்ளாமல் இருக்கிறாளே! அப்படி என்ன கோபம்? அந்த கிஷோர் அவ்வளவு முக்கியமானவனாகிவிட்டானா! - இதைத்தான் அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.



எத்தனை நாட்களுக்கு இப்படி இருப்பாள்? இருக்கட்டும்... பார்த்துக்கொள்ளலாம் என்கிற பிடிவாதத்துடன் அவனும் அவளிடம் நெருங்கவில்லை. அதோடு 'நம் மனைவி... நம் பாதுகாப்பில்... நம் வீட்டில் தானே இருக்கிறாள். எங்கு போய்விட போகிறாள்... பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்கிற தைரியமும் கூட அவனுடைய அலட்சியத்திற்குக் காரணமாக இருந்தது.



இப்போதெல்லாம் இராஜேஸ்வரி முன்பு போல் மதுராவை தங்குவதில்லை. உடல்நிலை சரியில்லாததுதான் காரணமா அல்லது மகளின் வாழ்க்கையை கெடுத்துவிட்டாளே என்கிற கோபம் உள்ளுக்குள் இருந்ததோ தெரியவில்லை. மொத்தத்தில் அவளுக்கு அந்த வீட்டில் இருந்த ஒரே உண்மையான ஆதரவும் இப்போது இல்லாமல்போய்விட்டது. ஒரு பக்கம் தேவ்ராஜின் அலட்சியம்... இன்னொரு பக்கம் மாயா மற்றும் பாரதியின் அக்கினிப்பார்வை... இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு நெருப்பில் நிற்பது போல் வாழ்ந்துக் கொண்டிருந்தாள் மதுரா. ஒரு நொடி போதும் அந்த வீட்டைவிட்டு வெளியேற. அவளை போற்றி பாதுகாக்க பெற்றோரும்... உடன் பிறந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவளால் போக முடியாது. காரணம் ஆதிரா...



அந்த குட்டிக் தேவதையின் அழுகையும் ஏக்கமும் மதுராவின் மனதை வதைத்தது. எதற்கெடுத்தாலும் அடம் செய்து ஆர்ப்பாட்டம் பண்ணி அடிவாங்கிக்கொள்ளும் ஆதிராவின் மனதில் இருக்கும் சோகத்தை தனதாக உணர்ந்தாள் மதுரா. துருவன் கோபம் தணிந்து மனைவியை ஏற்றுக் கொண்டால் தான் அந்த குழந்தையின் முகத்தில் சிரிப்பை காண முடியும். இங்கு பிரச்சனை என்று மதுரா மூட்டையை கட்டிவிட்டால் துருவன் இன்னும் உச்சானிக் கொம்பில் சென்று அமர்ந்துகொள்வான். அவனுடைய குடும்பம் சிதறிவிடும். அந்த பாவத்தை அவள் செய்யலாமா? - மனதை கல்லாக்கிக் கொண்டாள்.



மாயாவின் மீது அவளுக்கு தீராத கோபம் இருக்கத்தான் செய்தது. அந்த கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தாயிடம் அவளுக்கு ஆதரவாக பேசினாள். ஆதிராவின் மனநிலையை விலக்கினாள். நடந்த பிரச்சனைக்கெல்லாம் மூலக்காரணம் தேவராஜ் தான் என்பதை எடுத்துக் கூறி துருவனை சமாதானம் செய்யும்படி கேட்டுக்கொண்டாள்.



தேவ்ராஜ் சொல்லித்தான் மாயா அந்த காரியத்தை செய்தால் என்று தெரிந்ததும் மருமகன் என்கிற பாசமே அற்றுப் போய்விட்டது பிரபாவதிக்கு. பெண்ணை கொடுத்துவிட்டோம் என்று அமைதியாக இருந்தாளே ஒழிய, அவன் மீது எல்லையில்லா வெறுப்பு அவள் மனதில் மண்டியது.



மருமகள் மீது கோபம்தான்... ஆனால் பேத்தி ஏங்குகிறாள் என்று தெரிந்தால் மனம் கேட்குமா? பிரபாவதியின் மனம் தாளவில்லை. மகனிடம் பேசி சமாதானம் செய்ய முயன்றாள். அதோடு எய்தவனிருக்க அம்பை குற்றம் சொல்லி என்ன செய்வது என்று எடுத்துக் கூறினாள்.



இராஜேஸ்வரியின் உடல்நிலை குன்றிவிட்டதை அறிந்த நரேந்திரமூர்த்தி பதறிக் கொண்டு தங்கையை பார்க்க ஓடிவந்தார். அப்போது அண்ணனும் தங்கையும் ஒன்று கூடி பேசி, மாயாவை துருவனோடு சேர்த்து வைத்துவிட வேண்டும் என்கிற முடிவை எடுத்தார்கள். அதன்படி நரேந்திரமூர்த்தியும் மகனிடம் சமாதானம் பேசினார்.



"இந்த சமாச்சாரமெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும் ப்பா... இதையெல்லாம் பெருசாக்கக் கூடாது. நம்ம வீட்டுக்குள்ள இருக்க வேண்டிய பிரச்னையை நாமளே தெருவுக்கு கொண்டு வர கூடாது. அதோட இதுக்கெல்லாம் காரணம் தேவ் தானாம். இப்போ மதுராவும் தேவும் ஒண்ணா வாழாமலா போய்ட்டாங்க? நீ எதுக்குடா இவ்வளவு ரியாக்ட் பண்ணற?" என்று மகனுக்கு அறிவுரை கூறினார்.



யார் சொல்லியும் துருவன் கேட்கவில்லை. "தேவ்ராஜ் சொல்லுவான்... இவளுக்கு எங்க போச்சு அறிவு?" என்று குறையா கோபத்துடன் எதிர்வாதம் பேசினான்.



என்னதான் பேசினாலும் குழந்தையை பார்க்க வேண்டும் என்கிற ஆசை அவனுக்கும் இருந்தது. எனவே தந்தையிடம் சொல்லி குழந்தையை மட்டும் அழைத்துக் கொண்டு வர சொன்னான். விடுவானா தேவ்ராஜ்!



'குழந்தையை பார்க்கணும்னா அவன் இங்க வரணும்" என்றான் பிடிவாதமாக.



இராஜேஸ்வரி எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தாள். நரேந்திரமூர்த்தியும் எடுத்துக் கூறினார். செவிடன் காதில் ஊதிய சங்கு போல அவன் எதையுமே எடுத்துக் கொள்ளவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று பிடிவாதமாகக் கூறி அவரை திருப்பி அனுப்பிவிட்டான். எந்த பிரச்சனையும் முடிவுக்கு வராமல் ஒரு வாரம் கழிந்துவிட்டது.



நாட்கள் செல்லச் செல்ல மாயாவிற்குள் பயம் தலை தூக்கியது. குழந்தை மெல்லமெல்ல இந்த வீட்டு சூழ்நிலைக்கு பழகிக்கொள்ள ஆரம்பித்தாள். தந்தையை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் அவளுடைய அடம் வெகுவாய் குறைந்துவிட்டது. பெரியவர்களின் பேச்சு வார்த்தையும் தோல்வியடைந்துவிட்டது. இனி அவர்களை ஒன்று சேர்க்கும் காரணி எது? அவளுக்கு புரியவில்லை. தேவ்ராஜின் பிடிவாதமும் துருவனின் கோபமும் தன்னுடைய வாழ்க்கை அழித்துவிடுமோ என்கிற பயம் அவளுடைய நிம்மதியை குலைத்தது.



அன்று மாலை ஒரு ஐந்து மணியிருக்கும். யாருக்கும் கட்டுப்படாத தமையனை தானே நேரில் சந்தித்துப் பேசி சமாதானம் செய்யலாம் என்று எண்ணி தாய் வீட்டுக்கு வந்திருந்தாள் மதுரா. துருவன் அலுவலகத்திலிருந்து வரும் வரை காத்திருந்து, மாணிக் கணக்காகப் பேசி அவனை கரைத்தாள். தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்... சின்ன விஷயத்தை பெரிதாக்காதே... குழந்தையைப் பார் என்று பலவிதமாகப் பேசி அவன் மனதை இளக செய்துவிட்டு வீட்டிற்கு வந்த போது, அவளை கொத்திக் குடிக்கக் காத்திருந்தான் தேவ்ராஜ்.



மதுராவின் மீது கோபமாக இருந்தாலும்... அவளை அவமதித்தாலும்... புறக்கணித்தாலும்... அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் பொழுது, அவள் உர்ரென்று தூக்கி வைத்திருக்கும் முகத்தையாவது பார்த்தாக வேண்டும் தேவ்ராஜுக்கு. இல்லையென்றால் பைத்தியம் பிடித்துவிடும். அன்றும் அப்படித்தான் பைத்தியம் பிடித்துப் போய் சுற்றிக் கொண்டிருந்தான். சாதாரணமாக அங்கும் இங்கும் போவது போல் வீட்டை பத்து முறை சுற்றி வந்துவிட்டான். ஆளையே காணவில்லை. பிறகு தோட்டத்தில் நடை பழகுவது போல் நைசாக கேரேஜில் எட்டிப் பார்த்தான். அவளுடைய கார் இல்லை. 'எங்கே சென்றிருப்பாள்!' - சிந்தனை மேலிட்டது. போன் செய்து கேட்கவும் ஈகோ இடம் கொடுக்கவில்லை. செக்யூரிட்டியிடம் பேச்சுக்கு கொடுத்து, சாதாரணமாக கேட்பது போல் எத்தனை மணிக்கு வெளியே போனாள் என்று கேட்டு தெரிந்துக் கொண்டான். பிறகு தாயிடம் வந்து உடல் நலத்தையெல்லாம் விசாரித்துவிட்டு, "எங்க அவ?" என்று அலட்சியமாக கேட்பது போல் கேட்டான்.



"யாரை கேட்கற?" - இராஜேஸ்வரிக்கு புரியவில்லை.



"மதுரா..."



"மதுராவா! வீட்ல இல்ல?"



"இல்லையே. உங்ககிட்ட எதுவும் சொல்லிட்டு போகலையா?"



"இல்லையப்பா... போன் பண்ணி பாரேன்..."



"ஆங்... கேட்டுக்கறேன்... நீங்க ரெஸ்ட் எடுங்க" - தாயின் அறையிலிருந்து நழுவி வந்து ஹாலில் அமர்ந்தான். டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆதிராவை கொஞ்சுவதற்குக் கூட மனமில்லை. மாடிக்கு வந்து கணினியை உயிர்ப்பித்து அவனுடைய ஷேர்ஸை கண்காணித்தான். அதில் மூழ்கிய பிறகு அவனுக்கு நேரம் சற்று இலகுவாக கழிந்தது. கதவு திறக்கும் ஓசைகேட்டது. சட்டென்று அவனுடைய விரல்கள் வேலை நிறுத்தம் செய்தன. அவள்தான்... நிமிர்ந்து பார்க்காமலேயே அவனால் உணர முடிந்தது. மணியை பார்த்தான். எட்டு முப்பது என்று காட்டியது கணினி. கோபம் பொங்கியது... வாய் துடித்தது. அவள் ஏதாவது சொல்கிறாளா என்று பார்க்க வேண்டும் என்று அமைதியாக இருந்தான். அவள் இவனை கண்டுகொள்ளவே இல்லை. மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைத்தாள். சட்டென்று கணினியை மூடிவிட்டு, மூடியிருந்த குளியலறை கதவை வெறித்துப் பார்த்தான்.



வெகு நேரம் கழித்து வெளியே வந்த மதுரா, வழக்கம் போல ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு அவனிடமிருந்து விலகிப் போனாள். அவனுடைய எரிச்சல் எல்லை மீறியது. "உன் இஷ்டத்துக்கு வர்றதுக்கும் போறதுக்கும் இது மடம் இல்ல... வீடு..." - சீற்றத்துடன் வெளிப்பட்ட குரலில், நின்று அவனை திரும்பிப் பார்த்தாள். அவள் முகத்தில் தெரிந்த சோர்வும் களைப்பும் அவன் புருவ மத்தியில் முடிச்சிடச் செய்தது.



"என்ன வேணும்?" - உள்ளடங்கிய குரலில் கேட்டாள்.



"எங்க போயிட்டு வர்ற?" - சற்று இளகியது அவன் குரல்.



சற்று நேரம் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மதுரா பதட்டமில்லாமல் மெல்லிய குரலில் ஆனால் அழுத்தமாக, "நிச்சயமா கிஷோரை பார்க்க போகல..." என்றாள். அவ்வளவுதான்... இடி விழுந்தால் எப்படி இருக்கும்... அப்படி இருந்தது தேவ்ராஜுக்கு.



'என்ன தைரியம்!' - உஸு... புஸு... என்று வெப்ப பெருமூச்சை வெளியேற்றியபடி உக்கிரமாக அவளை பார்த்தான்.



"வேற என்ன?" - இலகுவாக கேட்டாள்.



"எங்க... போனேன்னு... கேட்டேன்..." - பற்கள் நறநறக்க ஒவ்வொரு வார்த்தையையும் கடித்துத் துப்பினான்.



"சொன்னனே" - ஒடிந்து விழுவது போல் நின்றுக் கொண்டு குரலில் அவள் கொடுத்த அழுத்தம் அவனை மலைக்க வைத்தது. இதற்கு மேல் ஏதாவது கேட்டால் நிச்சயம் ஏறுக்கு மாறாகத்தான் பதில் சொல்வாள்... நமக்கும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஏற்கனவே பஞ்சத்தில் அடிபட்டவள் போல் நின்றுக் கொண்டிருக்கிறாள். விட்டுத் தொலைக்க வேண்டியதுதான்... என்று நினைத்து போனை எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியேறினான்.



 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 75

தேவ்ராஜ் பரவலாக பல நிறுவனங்களில் ஷேர்ஸ் வைத்திருந்தான். அதில் ஒரு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியில் கலந்துகொள்வதற்கு மதுராவை அழைத்தான். அவளுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அதை வைத்து இன்னொரு பிரச்சனை உருவாக வேண்டாம் என்று எண்ணி அவனோடு சேர்ந்து புறப்பட்டாள். பார்ட்டி ஹாலில் குடிகொண்டிருந்த சனி, டப்பாங்குத்து டான்ஸ் ஆடி அவளை உள்ளே வரவேற்றது என்று கூறினால் அது மிகையாகாது. காரணம் உள்ளே கிஷோர் இருந்தான். அவனை பார்த்த மாத்திரத்திலேயே உயிரில் பாதி ஒடுங்கிவிட்டது அவளுக்கு. அழுத்தமான காலடிகளுடன் காலடிகளுடன் தன்னோடு சேர்ந்து நடக்கும் இரும்பு மனிதனை திரும்பிப் பார்க்கவே பயமாக இருந்தது. ஆம் பயமாகத்தான் இருந்தது... 'மரத்துப்போன உணர்வுகள்... கல்லான மனம்...' இதெல்லாம் எத்தனை பெரிய பொய் என்பதை அப்போதுதான் அவளே உணர்ந்தாள்.



தேவ்ராஜ் வெகு இயல்பாக இருந்தான். அவன் கிஷோரை பார்க்கவே இல்லை என்று தோன்றியது அவளுக்கு. அதற்கு வாய்ப்பும் இல்லை... காரணம் அது ஒன்றும் அவ்வளவு பெரிய ஹால் இல்லை... யார் யார் உள்ளே இருக்கிறார்கள் என்று தெரியாமல் போவதற்கு. அப்படியானால் அவனை மறந்துவிட்டானா. அவ்வளவு சீக்கிரம் மறக்கக் கூடியவனும் அல்ல... அதிலும் கிஷோரை நிச்சயம் மறந்திருக்க மாட்டான். அப்படியென்றால் அவளை சோதிக்கத்தான் இங்கே அழைத்து வந்தானா! - மதுராவின் மனம் எரிந்தது.



உண்மையில் கிஷோரை அங்கு பார்த்தது தேவ்ராஜுக்கும் அதிர்ச்சிதான். அவன் இங்கு இருப்பான் என்று தெரிந்திருந்தால் இந்த திசை பக்கம் கூட மதுராவை தலைவைத்துப் படுக்க அனுமதித்திருக்க மாட்டான். அப்படி இருக்க அவனே அவளை இங்கு அழைத்துக் கொண்டு வருவதா! முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டிக்கொள்ளாமல் அனைவரோடும் பேசிக் கொண்டிருந்தான். பேச்சோடு பேச்சாக கிஷோரைப் பற்றியும் விசாரிக்கத் தவறவில்லை அவன். எந்த நிறுவனம் அந்த பார்ட்டியை அரேஞ் செய்திருந்ததோ அந்த நிறுவனத்தில் ஒரு முக்கியமான ஆடிட்டர் என்பதை தெரிந்துக் கொண்டான். மதுராவிற்கு வயிறு கலங்கியது. இதையெல்லாம் எதற்காக விசாரிக்கிறான் என்று அஞ்சினாள்.



கையில் ட்ரேயுடன் சுற்றிக் கொண்டிருந்த சீருடையணிந்த பணியாளன் அவர்களை உபசரித்த போது, தேவ்ராஜ் மதுக்கோப்பையை தேர்ந்தெடுத்தான். கண்ணெதிரில் கிஷோர்... கையில் மதுக்கோப்பை... பக்கத்தில் மதுரா... சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். கரும்பித்தம் பிடித்தவன்... மது ஏறினாள் மனிதனாகவே இருக்கமாட்டான். மதுராவின் மூளை எச்சரித்தது. அவன் முதல் கோப்பையை முடித்துவிட்டு அடுத்த கோப்பையை எடுத்த போது, "போதும்...." - என்று அவன் காதோரம் மெல்ல முணுமுணுத்தாள்.



"என்ன போதும்?" - அவனுக்கு புரியவில்லை. அவளுடைய பார்வை அவன் கையிலிருக்கும் கோப்பையில் பதிந்தது. இப்போது அவனுக்கு நன்றாகக் புரிந்தது.



"ஏன்?" - சிறு எரிச்சல் தெறிந்தது அவன் முகத்தில். வீம்பாக பேசி வம்பை இழுத்துக்கொள்ள அவள் தயாராக இல்லை... "ப்ளீஸ்..." - பணிந்துப் போனாள். அவள் கண்களில் தெரிந்த கலவரத்தை கவனித்தவன், எடுத்த கோப்பையை திருப்பி வைத்துவிட்டான்.



பார்ட்டியில் சமத்துப்பிள்ளையாக அவள் சொல்வதைக் கேட்டவன் வீட்டுக்கு வந்து தன் வேலையைக் காட்டினான். பிரிட்ஜில் ஸ்டார்க் வைத்திருந்த சரக்கை தாராளமாக குடித்து முடித்தவன் மதுராவிடம் வம்பிழுத்தான்.



கிஷோரின் கண்கள் சரியில்லையாம்... அவனுடைய பார்வை தவறானதாம்... அவனை மும்பையில் விட்டு வைத்திருப்பதே குற்றமாம்... அதுமட்டும் அல்ல... அவளுக்கு கட்டிய கணவன் மீது அக்கறையில்லையாம். அந்த கிஷோரைப் பற்றித்தான் கவலையாம்... அதனால்தான் அவனை பாதுகாப்பதற்காக இவனை மது அருந்த வேண்டாம் என்று தடுத்தாளாம். "நீ தடுத்தால் விட்டுவிடுவேனா! அவனை என்ன செய்கிறேன் பார்..." என்று சவால் விட்டான்.



***********************



வெளியில் வீம்பாக பேசினாலும் தனிமையில் நிறைய அழுதாள் மாயா. துருவனின் கோபத்தில் நியாயம் இருப்பதை அவள் உள் மனம் மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தது. அவள் செய்த அதே காரியத்தை அவன் பாரதிக்கு செய்திருந்தால் அவளும் கொந்தளிக்கத்தான் செய்திருப்பாள். என்ன ஒன்று... அனைவருக்கும் முன்பாக அசிங்கப்படுத்திவிட்டான். அதைத்தான் அவளால் தாங்க முடியவில்லை.



"ம்மி... ம்மி... டாடிட்ட எப்ப போவோம்?" - சோகமாக அமர்ந்திருக்கும் தாயின் துப்பட்டாவை பிடித்து இழுத்து பாவமாகக் கேட்டாள் ஆதிரா. முன்பெல்லாம் அழுது அடம்பிடிப்பவள் இப்போது இப்படி அமைதியாக கேட்கத் துவங்கியிருந்தாள்.



அந்த குழந்தையின் ஏக்கத்திற்கு சற்றும் குறையாத ஏக்கம் அவள் மனத்திலும் இருந்தது. "டாடிகிட்ட பேசுறியா?" என்றாள்.



"ஆங்... பேசுறேன்..." - கண்களை விரித்து வேகமாக தலையை ஆட்டினாள்.



நடுங்கும் விரல்களோடு கணவனின் அலைபேசி எண்ணை அழுத்திவிட்டு குழந்தையிடம் கொடுத்தாள். முழுவதுமாக ரிங் சென்று ஓய்ந்தது. அவன் எடுக்கவில்லை. 'முற்றிலும் வெறுத்துவிட்டானா!' - மாயாவின் மனம் வேதனைக் கொண்டது. கன்னங்களில் வழியும் கண்ணீரை துடைக்கக் கூடாது தோன்றவில்லை அவளுக்கு.



"அழாத ம்மி... நீயும் நானும் டாடிகிட்ட ஓடிடுவோம்... வா..." - கையை பிடித்து இழுத்தது.



"இல்லடா... நாம ஓடல்லாம் வேண்டாம். டாடியே வந்து நம்மள கூட்டிட்டு போவாங்க. இப்போ நீ டாடிக்கு வாய்ஸ் மெசேஜ் பண்ணுறியா?"



"ம்ம்ம்ம்" - தலையை ஆட்டினாள்.



ரெக்காடிங் பட்டனை அழுத்திக் கொண்டு, "ம்ம்ம்... பேசு..." என்றாள்.



"டாடி... டாடி... ஹலோ... ம்மி டாடி பேசல..." - மறுபக்கத்தில் தந்தையின் குரல் கேட்கவில்லை என்றதும் குழம்பிய குழந்தை பேச தடுமாறினாள். மாயா கையால் சைகைக் காட்டி 'பேசு பேசு' என்றாள். குழந்தை தொடர்ந்தது... "மிஸ் யூ டாடி... என்கிட்ட வாங்க டாடி... ஹார்ஸ் வெளாடலாம்... பிஷ் வெளாடலாம்... ஜாலியா இருக்கும்... பை டாடி.... ம்ம்ம் பேசிட்டேன்..." - ஒற்றை கிளிக்கில் குழந்தையின் குரல் தந்தையின் அலைபேசிக்கு சென்று சேர்ந்தது.



வலியா இன்பமா என்று புரியாத ஓர் ஊடல் உணர்வு துருவனின் மனதை ஆக்கிரமித்திருந்தது. கண்களில் நிறைந்த கண்ணீரோடு மகளின் குரலை பத்து முறை கேட்டான். ஆவல் அடங்கவில்லை ... மீண்டும் மீண்டும் கேட்டான். நூறு முறை கேட்டான்... அதைவிட அதிகமாக ஒருமுறை, "ம்ம்ம்... பேசு" என்ற மனைவியின் குரலை கேட்டான்.



உள்ளே வலித்தது. அவள் செய்த தவறு ஒரு பக்கம் வலித்தது... அவளை அடித்துத் துரத்தியது இன்னொரு பக்கம் வலித்தது. உணர்வுகள் சமன்படும்வரை அமைதியாக அமர்ந்திருந்தவர் பிறகு அலைபேசியை எடுத்து மனைவியின் எண்ணை அழுத்தினான். சற்று நிறத்தில் ஆதிராவின் குரல் கேட்டது. ஆசை தீரும்வரை அவளோடு பேசினான். அழைப்பை துண்டிக்கும் நேரத்தில் மனைவியை பற்றி கேட்க வேண்டும் போல் மனம் துடித்தது. ஆனால அவன் கேட்கவில்லை.



அன்று இரவு ஒரு பொட்டு தூக்கமில்லை துருவனுக்கு. மனைவியோடும் மகளோடும் கொஞ்சி... குழைந்து... உருண்டு புரண்ட மெத்தை இன்று முள்ளாய் குத்தியது. ஆதிராவின் மணிமணியான பேச்சு அவன் செவியில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. மகளோடு பேசும் போது மனைவியின் குரலை ஒருமுறையாவது பின்னணியில் கேட்டுவிடலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்தவன் ஏமாற்றத்துடன் அழைப்பை துண்டித்தான்.



**********************



திடீரென்று ஒருநாள் மதுராவின் அலைபேசிக்கு அழைத்த சோனியா கதறிக் கதறி அழுதாள். பயந்து போன மதுரா, "சோனி! ஏய்... என்ன... என்னன்னு சொல்லு... என்னடி ஆச்சு?" என்று பதறினாள்.



அவளால் பேசவே முடியவில்லை. பிறகு அவளுடைய அலைபேசியில் வேறு ஒரு குரல் கேட்டது. "ஏம்மா... என்னதாம்மா உம்புருஷனுக்கு வேணும்? நாங்கபாட்டுக்கும் நாங்க உண்டு எங்க வேலை உண்டுன்னு இருக்கோம். எங்க மருமகனை இப்படி சிக்கல்ல இழுத்துவிட்டுட்டாரே உம்புருஷன்... நியாயமா இதெல்லாம்? உங்களுக்கு புடிக்கலன்னா.... அபாண்டமான பழி சொமத்தி பொய் கேஸுல உள்ள பிடிச்சு குடுத்துடுவீங்களா?" - ஆங்காரமாகப் பேசினாள் சோனியாவின் தாய்.



தேவ்ராஜ் தன்னுடைய பழி உணர்ச்சிக்கு தீனி போட்டுக் கொண்டான் என்று புரிந்தது கொண்ட மதுரா மிகவும் வேதனைக்கு ஆளானாள். "அம்மா... என்ன நடந்தது? கிஷோருக்கு என்ன ஆச்சு? ப்ளீஸ் கொஞ்சம் க்ளீயரா சொல்லுங்க" - இவள் நிதானமாகக் கேட்க அந்த அம்மாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது. "நிதானமா சொல்லனுமா? உன் வீட்ல இப்படியொரு அநியாயம் நடனதா நீ நிதானமாத்தான் இருப்பியா? அமைதியா இருங்க பொறுமையா இருங்கன்னு ஈஸியா சொல்ற! ஒரு தப்பும் பண்ணாம உள்ள இருக்கது எங்க மருமகன். நீ அமைதியாவும் பொறுமையாவும் இருப்ப... நாங்க எப்படி இருக்கறது?" என்று மதுராவை பிடித்து ஏறு ஏறு என்று ஏறிவிட்டாள்.



அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அலைபேசியை பிடிங்கி சோனியா பேசினாள். "மதுரா... உன்ன கெஞ்சி கேட்டுக்கறேன். உங்களோட விளையாட்டை எங்க வாழ்க்கையில விளையாடாதீங்க. அவர் ஒரு பாவமும் அறியாதவர். அவரை போயி இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே! தயவு செஞ்சு அவரை வெளியே கொண்டுவர ஏற்பாடு செய்யி. இல்ல... சத்தியமா சொல்றேன்... நா உயிரோடவே இருக்க மாட்டேன். என்னோட பாவம் உன் பரம்பரையையே சும்மா விடாது சொல்லிட்டேன்..." - வயிறெரிந்து கண்ணீரும் கம்பலையுமாக அவள் விடும் சாபம் மதுராவை உலுக்கியது.



"சோனி... அவசரப்படாத... எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்... கிஷோருக்கு ஒண்ணும் ஆகாது. ப்ளீஸ் நீ கொஞ்சம் பொறுமையா இரு சோனி... நா... நா தேவ்கிட்ட... தேவ்கிட்ட... கேட்கறேன். எப்படியாவது... சரி பண்ணிடலாம்..." - பதட்டத்தில் நடுங்கியது அவள் குரல். தன்னால் ஒரு உயிர் போய்விடுமோ என்கிற பயத்தில் இதயம் தாறுமாறாக துடித்தது.



தோழியிடம் சமாதானம் சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டு உடனே கணவனுக்கு தொடர்புகொண்டாள். அழைப்பை ஏற்ற ரஹீம், "சார் மீட்டிங்ல இருக்காங்க மேம்" என்றான்.



அவளுக்கு காத்திருக்கும் பொறுமையில்லை. சோனியாவின் அழுகையும் ஆவேசமும் அச்சுறுத்த உடனடியாக கார் சாவியை எடுத்தாள். அரைமணி நேர பயணத்தை பதினைந்து நிமிடமாக சுருக்கி அவள் தேவ்ராஜின் அலுவலகத்தை அடைந்த போது முகம் கலவரத்தை பூசி கொண்டிருக்க... உடல் வியர்வையில் குளித்திருந்தது.



ரஹீம் சொன்னது போலவே அவன் மீட்டிங்கில் தான் இருந்தான். ஆனால் அந்த மதித்து காத்திருக்கும் பொறுமை அவளுக்கு இல்லை. ரஹீமை வற்புறுத்தி அவனிடம் தான் வந்திருப்பதை தெரிவிக்கும் படி கூறினாள். அவளுடைய பதட்டத்தை கண்கூடாகப் பார்த்த ரஹீம் ஏதோ சீரியஸான விஷயம் என்று புரிந்துக் கொண்டு சந்திப்பு அறைக்குள் நுழைந்தான்.



இடையூருக்கு மன்னிப்பை வேண்டியபடி தேவ்ராஜிடம் நெருங்கிய ரஹீம் அவன் காதில் விஷயத்தை முணுமுணுக்க, "எக்ஸ்கியூஸ் மீ" என்றபடி சட்டென்று எழுந்தான் தேவ்ராஜ்.



 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 76

தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருப்பவன் என்றாவது ஒருநாள் செய்யாத தவறுக்கு மாட்டிக்கொள்வான். அப்படித்தான் இன்று தேவ்ராஜும் மதுராவிடம் மாட்டிக் கொண்டு விழித்தான். வியர்வையும் பதட்டமுமாக அலங்க மலங்க தன் முன் வந்து நிற்கும் மனைவியை கண்டு திகைத்த தேவ்ராஜ், "ஹே... என்ன ஆச்சு! எனிதிங் சீரியஸ்?" என்றான்.



மேல்மூச்சு வாங்க அவன் முகத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த மதுரா, "கிஷோரை வெளியே கொண்டுவாங்க" என்றாள்.



"கிஷோரை... வெளியே கொண்டுவரணுமா! எங்கிருந்து?" - உண்மையில் அவனுக்கு புரியவில்லை.



வழக்கமாக அவன் கண்களில் இருக்கும் கனல் இப்போது மதுராவின் கண்களுக்கு இடம்மாறியது. அவளுடைய உக்கிர பார்வையைக் கண்டு புருவம் சுருக்கியவன், "வா...ட்?" என்று இழுத்தான்.



"ஹௌ க்ரூயல் யூ ஆர்!" - முகம் சுளித்தாள். சட்டென்று கடுமை பரவியது அவன் முகத்தில். "வாட் யூ மீன்?"



"இதுவரைக்கும் செஞ்ச பாவமே போதும். இதோட நிறுத்திக்கோங்க... இனி வேண்டாம்..."



"ப்ச்..." - மணிக்கட்டை திருப்பிப் பார்த்தான். "முக்கியமான மீட்டிங்கிலேருந்து வந்திருக்கேன். சொல்லவந்த விஷயத்தை க்ளீயரா சொல்லு. இல்லன்னா வீட்டுக்கு கிளம்பு" - அழுத்தமாக ஒலித்தது அவனுடைய கண்டிக்கும் குரல்.



"உங்களை சுத்தி நடக்கறது எல்லாமே நீங்க நினைக்கற மாதிரி நடக்கணும். இல்லன்னா இப்படித்தான்... இராட்சஸன் மாதிரி நடந்துக்குவீங்க. கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லையா? இதமாதிரி எத்தனை குடும்பத்தை அழிச்சிருக்கீங்க? எத்தனை பேரை காவு வாங்கியிருக்கீங்க? இந்த வெறி அடங்காதா?" -



"வெயிட்..."



"யாரோட அழிவுல அடங்கும்?"



"வெ...யி...ட்..."



"நா அழியணுமா?"



"என்ன பேசுற நீ?"



"என்னோட அழிவுலதான் உங்க வெறி அடங்குமா"



"குட் யூ ப்ளீ....ஸ்... ஸ்டாப் யுவர் நான்சென்ஸ்?" - உச்சஸ்தாதியில் உயர்ந்த அவன் குரலில் தடைபட்டது அவளுடைய படபடத்த பேச்சு. கண்களில் தொடுக்கி நின்ற கண்ணீர் மணிகள் ஒருமுறை சிமிட்டினால் கணங்களில் உருண்டுவிடும் நிலையில் இருந்தது. ஓரிரு நிமிடங்கள் அவளை முறைத்துப் பார்த்தவன், "பிரச்சனையை மட்டும் சொல்லு" என்றான்.



அவள் முகத்தில் ஒரு கசந்த புன்னகை தோன்றியது. "புரியாதவங்களுக்கு விளக்கம் கொடுக்கலாம்... புதிரியாதது மாதிரி நடிக்கிறவங்களுக்கு எப்படி விளக்கம் கொடுக்கறது?" - வறண்ட குரலில் கேட்டாள்.



"காட்...!" - தலையை அழுந்தக் கோதி... ஆழ மூச்செடுத்து... சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, "நிஜமாவே நீ என்ன சொல்றேன்னு எனக்கு புரியல மதுரா. என்ன தான் ஆச்சு அவனுக்கு? வெளியே கொண்டுவா.... வெளியே கொண்டுவான்னா... அவன் என்ன ஜெயில்லையா இருக்கான் வெளியே கொண்டு வர்றதுக்கு?" என்றான் கடுப்பாக. அதுதான் உண்மை என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.



"ஏன்? கேஸை ஜோடிச்ச உங்களுக்கு தெரியாதா... அரெஸ்ட் ஆயிட்டானா இல்லையான்னு?"



"என்ன!" என்று அதிர்ந்தவன் பிறகு, "அரஸ்ட்டா!" என்று வியந்து... உடனே, "ஏய்... என்ன? அவனை நாந்தான் உள்ள அனுப்பினேன்னு சொல்றியா?" என்றான் அதட்டலாக.



"அதுல என்ன சந்தேகம்? நேத்து சொன்னீங்க... அதை இன்னைக்கு செஞ்சுட்டீங்க"



"அது நா ஏதோ கோவத்துல... ஒரு டென்ஷன்ல பேசினது. அதை பெருசா எடுத்துக்கிட்டு என்னோட நேரத்தை வீணாக்கிகிட்டு இருக்க! அவன் என்ன பண்ணிட்டு உள்ள போனானோ... எனக்கு என்ன தெரியும்? நீ முதல்ல வீட்டுக்கு கிளம்பு..." என்று கடுப்படித்தான். அலுவலகம் என்பதால் இந்த பொறுமை... இதுவே வீடாக இருந்திருந்தால் நடப்பதே வேறு. அவன் ஏதாவது பிராடுத்தனம் செய்துவிட்டு உள்ளே போவானாம்.. அவனை இவன் போய் காப்பாற்ற வேண்டுமாம். இன்னொரு முறை அவன் பெயரை சொல்லட்டும்... - பற்களை நறநறத்தான்.



"வேண்டாம் தேவ்... நீங்க எத்தனையோ தப்பு பண்ணியிருக்கீங்க. எல்லா தப்புக்கும் உங்க பக்கத்துலேருந்து ஏதாவது ஒரு நியாயத்தை உங்களால சொல்ல முடியும். ஆனா இந்த தப்புக்கு உங்ககிட்ட எந்த நியாயமும் இல்ல... சோனி பாவம்... இப்போதான் கல்யாணம் ஆயிருக்கு. அவ சந்தோஷமா இருக்கவேண்டிய பீரியட் இது. அதை நீங்க நரமாக்கிக்கிட்டு இருக்கிறீங்க. அவங்கள விட்டுடுங்க... உங்களை கெஞ்சிக் கேட்டகன்றேன்... ப்ளீஸ்..." - அவள் பேசப் பேச அவன் முகம் இறுகி பயங்கரமாக மாறியது.



"ஒருத்தரோட வாழ்க்கையில் விளையாடறது பெரிய பாவம் தேவ்... அந்த பாவத்தை நீங்க செய்யாதீங்க. அந்த கிஷோர் என்ன தப்பு பண்ணீட்டான். நடந்த விஷயத்துல எது அவனோட தப்பு? நீங்கதான் அவனுக்கு நடக்க இருந்த கல்யாணத்தை தடுத்தீங்க. நீங்கதான் அவனை நயவஞ்சகமான ஏமாத்தினீங்க? அதுக்குப் பிறகும் அவன் உங்களுக்கு எந்த பிரச்சனையும் கொடுக்கலையே! அப்புறம் ஏன்?" - அழுதாள்.



"அவனுக்காக நீ இப்படி என்கிட்ட வந்து அழும் போதுதான்... உண்மையாவே அவனை அழிக்கணும்னு எனக்கு தோணுது மதுரா..." - பளபளக்கும் கண்களுடன் தீவிரமாக அவன் கூறியபோது, உடல் சில்லிட்டு நாவறண்டது மதுராவிற்கு.



தன் வழியில் குறுக்கே நின்ற கிஷோரை அகற்ற வேண்டும் என்பது மட்டும் தான் தேவ்ராஜின் குறிக்கோள். எப்படியோ அது நடந்துவிட்டது... இவனும் மதுராவை திருமணம் செய்து கொண்டான். எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது தேவையில்லாமல் எங்கோ இருப்பவனைத் தேடிப்பிடித்து போய் அவனுக்கு குடைச்சல் கொடுப்பதற்கும்... அதன் மூலம் தன்னுடைய வாழ்க்கையில் பிரச்னையை உண்டாக்கிக்கொள்வதற்கும் அவன் என்ன முட்டாளா! அறிவுகெட்டவள்... யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிட வேண்டியது.



உண்மையில் கிஷோர் கைது செய்யப்பட்டதற்கும் தேவ்ராஜுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவன் வேலை செய்த பழைய நிறுவனத்திற்கும் இப்போது வேலை செய்யும் நிறுவனத்திற்கும் இடையே நடக்கும் பனிப்போரில் இவன் பலியாடாக ஆக்கப்பட்டுவிட்டான். அந்த உண்மை கிஷோருக்கே தெரியவில்லை. முதல்நாள் தேவ்ராஜை பார்ட்டியில் பார்க்கிறான்... அவனுடைய முதலாளியும் தேவ்ராஜும் நீண்ட நேரம் தனியாக பேசுகிறார்கள். மறுநாள் இவனுடைய முதலாளி இவனுக்கு எதிராக ஒரு புகாரை எழுப்புகிறார். உடனடியாக கைது சம்பவம் நடக்கிறது என்றால் அவன் யாரை சந்தேகப்படுவான். தன்னுடைய சந்தேகத்தை மனைவியிடமும் குடும்பத்தாரிடமும் தெரிவித்த போது அவர்களும் அதை உண்மை என்றுதான் நம்பினார்கள். அதற்கு தகுந்தாற் போல் வாய் ஜம்பமாக அவனும் மதுராவிடம் ஏதேதோ உளறிவிட்டான். இத்தனைக்கும் மேல் அவன் சதி செய்யவில்லை என்று மைக் செட் போட்டு அலறினாலும் யார் நம்புவார்கள். நிழல் போல் கூட இருக்கும் ரஹீம் கூட நம்ப மாட்டான். மதுரா நம்பிவிடுவாளா?



அன்று மாலை தேவ்ராஜின் கார் உள்ளே நுழைந்த போது தோட்டத்தில் நின்ற மதுரா அலைபேசியில் ஏதோ சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தாள். இவன் வந்ததைக் கூட அவள் கவனிக்கவில்லை.



அவன் ரெஃப்ரெஷ்... செய்து உடைமாற்றி... காபி அருந்தி... அம்மாவிடம் நலன் விசாரித்து... தங்கைகளிடம் பேசி... ஆதிராவை கொஞ்சி... மேகசீன்ஸ் புரட்டி... லேப்டாப்பை தட்டி... அலைபேசியை உருட்டி... அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டான். அவள் இன்னும் உள்ளே வரவில்லை. டெரஸிற்கு சென்று நோட்டம்விட்டான். இப்போதும் அதே சீரியஸ்னஸோடு யாரிடமோ வாதாடிக் கொண்டிருந்தாள்.



"இவ்வளவு நேரமா யார்கிட்ட பேசிகிட்டு இருக்கா!" - அவன் புருவம் சுருங்கியது. இரவு உணவு வேளையும் வந்துவிட்டது. இப்போதான் அந்த போனை வச்சுட்டு உள்ள வர்றான்னு பார்க்கலாம் என்று அவன் எரிச்சலோடு காத்திருந்த போது அவள் அறைக்குள் நுழைந்தாள். கண்கள் சிவந்திருந்தன. முகத்தில் பதட்டம் தெரிந்தது. இவனிடம் எதுவும் கேட்காமல் குளியலறைக்குள் நுழைந்தாள். சற்று நேரத்தில் ஈர முகத்தோடு வெளியே வந்தாள்.



அவளை கண்களால் தொடர்ந்துக் கொண்டே இருந்தவன் பொறுமையிழந்து, "போனெல்லாம் பேசி முடிச்சாச்சா?" என்றான். அவனை திரும்பிப் பார்த்தாள் மதுரா. முகத்தில் எந்த உணர்வுகளும் இல்லை.



"அதென்ன... நா வந்ததை கூட கவனிக்காம இவ்வளவு நேரம் பேச்சு? யார் போன்ல?" - விசாரித்தான்.



"ஃபிரண்ட்..."



"யாரு? அந்த கிஷோரோட வைஃபா?" - மூக்கை விடைத்தான்.



அவள் மிகவும் கலைத்துப் போயிருந்தாள். அவனோடு வாதாடவோ... வம்பிழுத்துக்கொள்ளவோ அவளிடம் தெம்பில்லை. "நா டயர்டா இருக்கேன்... ப்ளீஸ்..." - கட்டிலை சுற்றி வந்து படுத்து கொண்டாள். அவளை சற்று நேரம் பார்த்துக் கொண்டே நின்ற தேவ்ராஜ் கண்களை மூடி... ஆழ மூச்செடுத்து வெளியேற்றி அங்கிருந்து நகர்ந்தான்.



'நீ அவனுக்காக என்கிட்ட வந்து பேசும் போதுதான் அவனை அழிக்கணும்னு தோணுது' என்று தேவ்ராஜ் சொன்ன கணமே அவனிடம் இதைப் பற்றி இனி பேசிக் கூடாது என்கிற முடிவிற்கு வந்துவிட்டாள் மதுரா. மீறிப் பேசினால் விளைவு எதிர்மறையாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. அதற்காக சோனியாவை அப்படியே விட்டுவிட முடியாது. அவள் விடும் கண்ணீரும் சாபமும் அவளுடைய குழந்தையின் தலையிலல்லவா விடிந்துவிடும். அதோடு ஒருவருக்கு தீங்கு செய்துவிட்டு எப்படி நிம்மதியாக உறங்க முடியும்... இவன் எப்படி உறங்குகிறான்! - பாதி இரவில் உறக்கம் களைந்து எழுந்துவிட்ட மதுரா, கும்பகர்ணனைப் போல் குறட்டைவிடும் தேவ்ராஜை வியப்புடன் பார்த்தாள். இவனுக்கு தெரியாமல் எப்படியாது சோனியாவிற்கு உதவ வேண்டும்... கிஷோரை வெளியே கொண்டுவர வேண்டும்... யாரிடம் உதவி கேட்கலாம் என்று யோசித்தாள். அப்பா தேவ்ராஜுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட கிள்ள மாட்டார். அவரிடம் பேசிப் பயனில்லை. துருவன் ஏற்கனவே மனைவியையும் குழந்தையையும் பிரிந்து இருக்கிறான். இப்போது இந்த பிரச்னையை அவனிடம் கொண்டுச் சென்றால் இன்னும் மோசமாக அவனுடைய வாழ்க்கையை பாதிக்கக் கூடும். மீதமிருப்பது திலீப் மட்டும் தான். அவனால் தான் தனக்கு உதவ முடியும் என்று எண்ணி மறுநாளே அவனை தொடர்பு கொண்டாள்.



திலீப்பிற்கு ஏற்கனவே தேவ்ராஜை பிடிக்காது. அதிலும் இப்போது கைகலப்பு வேறு செய்துவிட்டான். அவனுக்கு எதிராக செயல்படச் சொன்னால் மாட்டேன்ட் என்றா சொல்வான். அதிலும் கிஷோர் மீது தவறு இல்லை என்று வெட்டவெளிச்சமாகிவிட்டது. அதற்கு மேல் அவனுக்கு என்ன தடை... உடனடியாக தங்கையை அழைத்துக் கொண்டு கிஷோரின் வீட்டுக்குச் சென்றான். அங்கு யாரும் இவர்களை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்கவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டுதான் போனார்கள். அவர்களிடம் சமாதானமாக பேசி, உதவி செய்யத்தான் வந்திருக்கிறோம் என்று எடுத்துக் கூறி அவன் எந்த வழக்கில் சிக்கியிருக்கிறான் என்று விபரம் சேகரித்தார்கள். நல்ல வழக்கறிஞரிடம் பேசினார்கள். நிறைய பணம் செலவு செய்தார்கள். அவனை வெளியே கொண்டுவர அத்தனை ஏற்பாடுகளையும் ரகசியமாகவே செய்தார்கள்.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 77

வாழ்க்கையில் யாரெல்லாம் அதிகமான விமர்சனத்துக்கு உள்ளாகிறார்களோ... அல்லது யாருடைய வாழ்க்கை கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகிறதோ அவர்களையெல்லாம் கவனித்துப் பார்த்தால் அவர்களிடமெல்லாம் ஒரு கோபமிருக்கும். எந்த நேரத்தில் எதை சொல்லி யார் நம்மை காயப்படுத்துவார்களோ என்கிற பயம் இருந்துக் கொண்டே இருக்கும். அந்த பயம் பல நேரங்களில் கோபமாக வெளிப்படும். அந்த கோபமே அவர்களுடைய கேடயம். தன்னுடைய மென்மையான உடலை பாதுகாத்துக்கொள்ள தனக்குத்தானே ஒரு கடுமையான ஓடை உருவாக்கிக்கொள்ளும் ஆமை. அது போல இவர்களும் தங்களுடைய மென்மையான மனதை மற்றவர்களுடைய சொல்லடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தனக்குத்தானே ஒரு ஓடை உருவாக்கிக்கொள்கிறார்கள். அந்த ஓடுதான் அவர்களை பாதுகாக்கிறது. அப்படி ஒரு ஓட்டுக்குள் தான் தேவ்ராஜும் பதுங்கியிருந்தான்.



தந்தையின் நெறிதவறிய வாழ்க்கை, அவனுடைய ஒழுக்கத்தை கேள்விக் குறியாக்கியது. அவர் தன்னுடைய வாழ்க்கையில் வைத்துக்கொண்ட சர்ச்சை தீ அவனையும் தீண்டிப் பார்த்தது. அந்த வெப்பத்திலிருந்து தப்பிக்க அவன் தன்னை சுற்றி ஒரு அகழியை அமைத்துக் கொண்டான். அதை தாண்டி அவனால் வெளியே வர முடியவில்லை... ஆனால் மனதை கட்டுப்படுத்தும் ஆற்றல் அகழிக்கும் இல்லை... ஆமை ஓட்டுக்கும் இல்லை அல்லவா! அவன் மனம் மதுராவை தேடி ஓடியது.



அகழிக்குள் சிக்கிக் கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்த தேவ்ராஜ், அவளாவது தன்னை நாடி வருவாளா என்று எதிர்பார்த்தான். அவளோ கிஷோர் பக்கம் சாய்ந்துவிட்டாள். அவளாக எடுத்த முடிவு அல்ல என்று தெரிந்தும்... பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்திருக்கிறாள் என்று புரிந்தும்... அவன் மனம் வலிக்கத்தான் செய்தது. அந்த வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள தன்னுடைய கேடயத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். கோபத்தை கொட்டினான்.



அவனுக்கு தெரிந்தது... அல்லது தெரிந்ததாக அவன் நினைத்துக் கொண்டிருப்பது என்னவெனில், மதுராவுக்கு பிடித்த மாதிரி அவன் இல்லை. அவனால் மாறவும் முடியாது. அதே சமையம் அவளுடைய பிடித்தமின்மையை... விலகலை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இந்த முரண்பாட்டை கையாள அவனுக்கு கோபம் தான் கைகொடுத்தது.



அவளை உருட்டி மிரட்டி தனக்கு பிடித்த மாதிரி நடக்கச் செய்தான். அவளுடைய பேச்சும் காதலும் உண்மை அல்ல என்று அவனுக்கு தெரிந்தாலும், அந்த பொய்க்காக ஏங்கும் பரிதாப நிலையில்தான் அவன் இருந்தான். அதற்கும் வேட்டு வைத்தது அன்று அவன் செவியை எட்டிய செய்தி.



திலீப்பின் கடுமையான முயற்சியால் கிஷோருக்கு பெயில் கிடைத்துள்ளது. அவனை பின்னாலிருந்து வலியுறுத்தியது மதுரா என்று தெரிந்த போது. துக்கமும் வேதனையும் அவன் மனதை அழுத்தியது. ரணவேதனை என்று சொல்வார்களே! அப்படி ஒரு வேதனை அவன் மனதை பிழிந்தது. அவனுடைய விருப்பத்திற்கும்... உணர்வுகளுக்கும் அவள் கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதானா! - அவனுடைய முகம் இறுகியது. கோபமும் ஆத்திரமும் கிளர்ந்தெழுந்தது. கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். 'நமக்கு பிடிக்காது என்று தெரிந்தும் திலீப்பை கூட்டு சேர்த்துக் கொண்டு கிஷோருக்கு உதவி செய்திருக்கிறாள். அதற்கு என்ன அவசியம்? அவன் யார் இவளுக்கு...!' - உள்ளே இருக்கும் மிருகம் உறுமியது.



அன்று வழக்கத்தைவிட வெகு விரைவாகவே வீட்டுக்கு வந்துவிட்டான் தேவ்ராஜ். முகம் கருத்து களையிழந்து போயிருந்தது. உடல் வியர்வையில் குளித்திருந்தது. சிவந்திருந்த கண்களில் ஒருவித தீவிரம் தெரிந்தது... அல்லது வெறி என்று கூட சொல்லலாம்... மகனைக் கண்டு துணுக்குற்ற இராஜேஸ்வரி, "என்னப்பா? ஏதாவது பிரச்சனையா?" என்றாள்.



தாயின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தவிர்த்தவன், "மதுரா எங்க?" என்றான்.



"வெளியே போயிருக்கா. ஏம்ப்பா?"



"ஓ! எப்ப போனா?"



"காலையில"



"ரைட்..." - சோபாவில் அமர்ந்தான். உடை மாற்றவில்லை... ரெப்ரெஷ் செய்யவில்லை... வேட்டைக்காரன் போல் அவன் அப்படி அமர்ந்திருப்பது இராஜேஸ்வரியின் வயிற்றை கலக்கியது. தன்னுடைய அறைக்குச் சென்று ரகசியமாக மருமகளுக்கு தொடர்புகொள்ள முயற்சி செய்தாள். முயற்சி மட்டும்தான் செய்யமுடிந்தது. ஏனென்றால் மதுராவின் அலைபேசி அணைத்து வைக்கப் பட்டிருந்தது.



'எங்க போயி தொலைஞ்சா!' - பலமுறை முயற்சி செய்துவிட்டு எரிச்சலுடன் வெளியே வந்து, "டிரஸ் சேஞ்சு பண்ணிக்கிட்டு வாயேம்ப்பா... காபி கொண்டு வரேன்" என்று அவனுடைய மனநிலையை மாற்ற முயன்றாள்.



"வேண்டாம்... ஐம் ஆல்ரைட்... நீங்க உள்ள போங்க... ரெஸ்ட் எடுங்க..." - ரிமோட்டை கையிலெடுத்து டிவியை போட்டான். திரையில் ஏதோ ஓடிக் கொண்டிருந்தது. அவனுடைய கவனம் அதில் இல்லை என்பது அவனுடைய வெறித்த பார்வையிலேயே தெரிந்தது.



நேரம் ஓட ஓட தேவ்ராஜின் முகம் ஜிவுஜிவுவென்று சிவந்துக் கொண்டிருந்தது. இராஜேஸ்வரி வயிற்றில் நெருப்பைக் கட்டி கொண்டு, உள்ளேயும் வெளியேயுமாக நடந்து கொண்டிருந்தாள்.



கிஷோர் வீடு வந்து சேரும்வரை தோழிக்கு துணையிருந்து தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள் மதுரா. ஒருவேளை பெயில் கிடைக்காமல் போய்விட்டால் உடைந்து போய்விடுவாளே என்கிற பயமிருந்தது அவளுக்கு. திலீப் போன் செய்து நல்ல செய்தியை சொன்ன பிறகுதான் அவளுக்கு மூச்சே வந்தது. அதன்பிறகு சற்று நேரத்திலேயே ஆண்கள் இருவரும் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். அவர்களிடம் கேஸ் நிலவரத்தைப் பற்றி கேட்டு விவாதித்துவிட்டு அவள் வீட்டுக்கு வந்த போது சூரியன் முற்றிலுமாக மறைந்துவிட்டான்.



'எப்பவும் தாமதமாக வீட்டுக்கு வரும் தேவ் இன்றைக்கு பார்த்து சீக்கிரம் வந்துவிட்டானே!' - கணவனுடைய காரை பார்த்து எச்சில் விழுங்கியவள் சற்று தயக்கத்துடன் தான் வீட்டுக்குள் நுழைந்தாள். தேவ்ராஜ் டிவி பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பது ஓரக்கண்ணில் தெரிய, அந்த பக்கம் திரும்பாமலே மாடிக்கு செல்ல எத்தனித்தாள்.



"ஏய்..." என்கிற கடுமையான குரல் அவளை தடுத்தது. அந்த 'ஏய்' என்ற வார்த்தையும்... அவனுடைய தொனியும்... பச்சை மிளகாயை கடித்தது போல் சுர்ரென்றிருந்தது மதுராவிற்கு.



"டைம் என்ன?" - அவனுடைய குரலில் தெரிந்த மாற்றமும்.. மிதக்கும் கண்களும் அவளுக்குள் எச்சரிக்கை மணியை அடிக்க, சற்று நிதானித்தாள்.



"மேடம் இவ்வளவு நேரம் எங்க போயிட்டு வர்றீங்க?" - ஏளனம் தெறித்தது அவன் குரலில்.



"ஃபிரண்ட பார்க்க" - மெல்ல முணுமுணுத்தாள்.



"ஃபிரண்ட பார்க்கவா... இல்ல அவ புருஷனை பார்க்கவா?" - விஷத்தை கக்க அவன் எப்பவும் தயங்குவதே இல்லை என்பதை இன்னொருமுறை நிரூபித்தான். செவியில் வந்து பாய்த அமிலம் அவள் இதயத்தை பொசுக்கியது. வெறுப்புடன் அவனைப் பார்த்தாள். கட்டுப்படுத்த முடியாத கோபம் ஆட்கொள்ள,



"ரெண்டு பேரையும்தான்" என்று அழுத்தமாகக் கூறினாள். தேவ்ராஜின் முகம் பயங்கரமாக மாறியது. பட்டென்று அவள் கன்னத்தில் அடித்தான். வேலையாட்களெல்லாம் திரும்பிப் பார்த்தார்கள். கன்னத்தை தாங்கிப் பிடித்தபடி அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் மதுரா. அவமானத்தில் குன்றியது அவள் மனம். கண்களில் திரண்ட கண்ணீர் கன்னத்தை நனைத்தது.



"மேல போ..." - சுட்டுவிரல் நீட்டி எச்சரித்தான். என்ன அதிகாரம்!



கோபமும் ஆற்றாமையும் உந்தித்தள்ள, "சந்தேகமா? என்னைய சந்தேகப்படறீங்களா... இல்ல உங்களை நீங்களே சந்தேகப்படறீங்களா?" என்றாள் நடுங்கும் குரலில்.



சுருக்கென்று தைத்தது அவளுடைய கேள்வி. அதிலிருந்த உண்மை அவனைச் சுட்டது. அவளை தவறானவள் என்று அவன் ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனாலும் ஒரு பாதுகாப்பின்மையும் பயமும் அவன் மனதில் உறைந்து போயிருந்தது. அது ஏன் என்று எண்ணிப் பார்த்தால்... சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால் அவனுக்குள் ஒரு தாழ்வுமனப்பான்மை இருப்பதை அறிந்துகொள்ளலாம். அந்த தாழ்வுமனப்பான்மைதான் தன்னைவிட அந்த கிஷோர் ஏதோ ஒருவிதத்தில் உயர்ந்தவன் என்று எண்ண வைத்தது. அந்த தாழ்வுமனப்பான்மைதான் அவனுடைய கோபத்திற்கு வித்திட்டது. தெரிந்தோ தெரியாமலோ மதுரா அதை சுட்டிக்காட்டிவிட்டதில் திகைத்துப் போனான் தேவ்ராஜ்.



தனிமையில் அவன் கொடுத்த அத்தனை இன்னல்களையும் சகித்துக் கொண்டவளுக்கு, வேலைக்காரர்களுக்கு முன் அவன் கைநீட்டி அடித்துவிட்டதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. "நீங்க கிஷோரைப் பார்த்து பயப்படறீங்க... பொறாமைப்படறீங்க... அதான் அவனை துரத்தித் துரத்தி அடிக்கிறீங்க. அவனை பழிவாங்குறீங்க" என்று படபடத்தாள்.



"அவனை பத்தி நா யோசிக்கவே இல்ல... எனக்கும் அந்த கேஸுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உன்கிட்ட இதை எத்தனை தடவ சொல்றது?" - எரிந்து விழுந்தான்.



"ஹா... குழந்தைகூட நம்பாது இந்த பொய்யை..." - அலட்சியமாக தலையை சிலுப்பியவள் மறுநொடியே வலியில் முகம் சுளித்தாள். அவளுடைய மெல்லிய கரம் அவனுடைய இரும்புப் பிடியில் சிக்கியிருந்தது.



"சோ... நா சொல்றது பொய்... அந்த ஃபிராட் சொல்றது உண்மை... ம்ம்ம்?" - பளபளக்கும் கண்களுடன் அடி குரலில் உறுமினான்.



"தேவ்... கையை விடுங்க..." - அவனுடைய பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போராடினாள். கை ஒடிந்துவிடும் போலிருந்தது. கண்களில் கண்ணீர் திரண்டது... "தேவ் ப்ளீஸ்..." - அவள் குரல் உடைந்தது.



"பதில் சொல்லு..." - இரக்கமற்ற இராட்சசனாய் மாறியிருந்தான்.



"என்ன... என்ன பதில்...? ஸ்... ஆ... ப்ளீஸ்..." - தவித்தாள்.



"சொல்லு... இப்ப யார் பேச்சை நம்புற...?" - பல்லைக்கடித்தான். பிடி மேலும் இறுகியது.



"ஆஆ..." - துடித்துப் போய்விட்டாள். மணிக்கட்டு எலும்பு முறிந்து போய்விட்டது என்று தோன்றியது. மனதில் மிஞ்சியிருந்த தைரியம் முற்றிலும் அற்றுப் போய்விட வெடித்து அழுதாள்.



"ஸ்பீக் அவுட்..." - கத்தினான்.



"உங்... உங்கள... உங்களைத்தான் நம்....நம்பறேன்... நம்பறேன்... நம்...ப...றேன்... ஐயோ..."



"அப்புறம் ஏன் அங்க போன?" - பிடி லேசாக தளர்ந்தது.



"ஐம் சாரி... சாரி... தேவ் ப்ளீஸ்... வலி...க்குது... ஆ... விடுங்க"



"எனக்கும் வலிச்சது மதுரா... இப்பவும் வலிக்குது..." - சட்டென்று இழுத்து அவளை கீழே தள்ளினான். நிலைகுலைந்துபோய் சோபாவில் விழுந்தாள் மதுரா.



"அவ்வளவு தைரியமா?" - தன் ஆறடி உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று உறுமினான். கோழிக்குஞ்சு போல் சோபாவில் நுடங்கி கிடந்த மதுராவின் உடல் குலுங்கியது.



"கிஷோர்... திலீப்... சோனியா... எல்லாரையும் பத்தி யோசிக்கற... என்னை பத்தி எப்ப யோசிக்க போற?"



"அந்த திலீப் என்ன பெரிய ..........ஆ? டாமிட்... இதுவரைக்கும் அவனை எதுவும் பண்ணனும்னு எனக்குத் தோணல... ஆனா இப்ப தோணுது... அந்த கிஷோர் திலீப்... ரெண்டு போரையும் சேர்த்து வச்சு அப்டியே..." - "தே...வ்..." - இராஜேஸ்வரியின் அதட்டல் அவனுடைய ஆங்கார பேச்சில் குறுக்கிட்டது.



மருமகளுக்காகக் காத்திருந்துவிட்டு அப்போதுதான் உள்ளே சென்றாள். இவள் வந்ததும் தெரியவில்லை. இவர்கள் சண்டைப் போட்டுக் கொண்டதும் தெரியவில்லை. ரெஜினா மட்டும் உள்ளே வந்து தகவல் கொடுக்காவிட்டால் இன்னமும் கூட தெரிந்திருக்காது.



வெறிபிடித்தவன் போல் இவன் கண்டதையும் கத்தி கொண்டிருக்க மதுரா சோபாவில் குப்புறக் கிடந்தாள்.



"என்னப்பா பேச்சு இது? தினமும் இந்த வீட்ல ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகிட்டே இருக்கணுமா?" - கண்டிப்புடன் கேட்டாள்.



"நா எந்த பிரச்சனையையும் உள்ள கொண்டு வர்றது இல்ல... இவ... உங்க மருமக... இவளை கேளுங்க... என்ன... பண்ணினான்னு கேளுங்க... என்னை ஹர்ட் பண்ணிகிட்டே இருக்கா... கேளுங்க அவளை..." - பேச்சில் மாற்றம் தெரிந்தது. இழுத்து இழுத்து சற்று குளறிப் பேசினான்.



"சரி நா கேட்டுக்கறேன். நீ உள்ள போ..."



"நோ... நா போமாட்டேன். எம்முன்னாடியே கேளுங்க. எங்க போயிட்டு வந்தான்னு கேளுங்க..."



"எனக்கு இன்னைக்கு தெரிஞ்சாகணும். அவ மனசுல என்ன இருக்குன்னு எனக்கு இன்னைக்கு முழுசா தெரிஞ்சாகணும். ஏய்... எந்திரிடி... எந்திரி..." - அவளிடம் நெருங்கினான். அவனைப் பிடித்துத் தடுத்து நிறுத்திய இராஜேஸ்வரி, ஏதோ தோன்ற சட்டென்று மருமகள் பக்கம் திரும்பினாள். அவளிடம் அசைவு தெரியவில்லை. எக்குத்தப்பாக விழுந்துக் கிடப்பது போல் தோன்றியது. சட்டென்று மகனை உதறிவிட்டு மருமகளிடம் பாய்ந்தாள்.



"மதுரா... மது... மதூ..." - எழுப்பினாள்... அவள் எழவில்லை என்றதும் தானே அவளை திருப்பினாள்... "ஐயோ...! கடவுளே!" - வீடே அதிர்ந்தது அவளுடைய பெருங்குரலில். சட்டென்று திரும்பிய தேவ்ராஜின் இதயம் ஒரு நொடி நின்று பின் துடித்தது. ரெத்தம்... அவ்வளவு ரெத்தம்.. எப்படி! சோபாவில் தானே! - ஒன்றுமே புரியவில்லை.



"ம...மது... ம்ம...மதூ..." - நாகுழற... உடல் நடுங்க மனைவியிடம் விரைந்தான்.



"தொடாதடா... தொடாத அவளை... தொடாத..." - மகனை வெறுத்து விரட்டினாள் இராஜேஸ்வரி. அதற்குள் வீடே கூடிவிட்டது. ஒருவர் ஈரத்துணியை எடுக்க... இன்னொருவர் மருந்தை எடுக்க... தேவ்ராஜை ஒதுக்கி ஓரமாகத் தள்ளிவிட்டு, மயங்கி கிடந்தவளுக்கு அவசர அவசரமாக முதலுதவி செய்யப்பட்டது.



"ஏய்... நகரு... நகரு எல்லாரும்... ஷி இஸ் மை வைஃப்... மூவ்..." - அவளை சூழ்ந்திருந்த மனித வளையத்திற்கு வெளியே நின்று அதட்டினான்... புலம்பினான்... ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. அனைவருடைய கவனமும் மதுராவின் மீதே இருந்தது.



"என்ன தேவ் பாய் இப்படி பண்ணீட்டிங்க? அவளுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல... கண்ணு முழிக்கவே மாட்டேங்கிறா..." - மாயா பயத்துடன் தமையனிடம் பாய்ந்தாள்.



"கண்ணு முழிக்க மாட்டேங்கிறாளா! நோ... அவளுக்கு ஒண்ணும் இல்ல... இப்படி கூட்டமா சுத்தி நின்னுட்டு இருந்தா எப்படி முழிப்பு வரும்... லெட் மீ டாக் டு ஹர். என்னோட குரல் கேட்டா முழிச்சுப்பா... ஷி வில் பி ஆல்ரைட்... எல்லாரையும் நகர சொல்லு... விலகி போகச்சொல்லு..." அவன் தங்கையிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டம் விலகியது. யாரோ ஒருவன் மதுராவை தூக்க முற்பட்டான்.



"ஏய்... டோன்ட்... டோன்ட் டேர் டு டச் ஹர்..." - அவளை தொட துணியாதே என்று அவ்வளவு போதையிலும் விழிகள் சிவக்க கர்ஜித்தான். அவன் பயந்து பின்வாங்கினான்.



"ஷி இஸ் மை வைஃப்... அவளுக்கு ஒண்ணும் இல்ல... மது... மதூ... கெட் அப்..." - தள்ளாட்டத்துடன் மனைவியிடம் நெருங்கினான்.



"டேய்... போடா அந்த பக்கம்... ஏய்... நீ தூக்கு... சீக்கிரம் ஹாஸ்ப்பிட்டல் கொண்டு போகணும். ட்ரைவர் வண்டியை ரெடி பண்ணிட்டானா?" - இராஜேஸ்வரியின் குரல் ஆளுமையுடன் ஒலிக்க, உடனடியாக மதுரா காரில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டாள்.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 78

பாறையை தூக்கி வைத்தது போல் பாரமாக இருந்த தலையை தாங்கிப் பிடித்தபடி எழுந்து அமர்ந்தான் தேவ்ராஜ். படுக்கையில் இருந்த வித்தியாசம் கருத்தில் பதிய அறையை சுற்றி பார்வையால் வட்டமிட்டான். நேற்று இரவு நடந்ததெல்லாம் காலங்கள் காட்சியாய் நினைவில் வந்தன. சட்டென்று எழுந்தான்.மதுரா..! - பதறியது அவன் மனம். அவசரமாக அறையிலிருந்து வெளியேறினான். நேற்று மதுராவை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு வந்த போது அவனும் அவர்களை பின்தொடர்ந்து வந்துவிட்டான். வந்தவன் சும்மா இருக்காமல் ஒரே அலம்பல்... ஒருவருக்கும் சமாளிக்க முடியவில்லை. வேறு வழியின்றி இராஜேஸ்வரியின் வேண்டுதலுக்கு இணங்க ஊசிமூலம் அவனை அமைதிப்படுத்த மருந்து கொடுத்து, அதே மருத்துவமனையில் வேறு ஒரு அறையில் படுக்க வைக்கப்பட்டான். மருந்து வேகத்தில் இரவெல்லாம் நன்கு உறங்கியவன் இப்போது விழிப்பு வந்ததும் பதறினான். ரத்தவெள்ளத்தில் அவள் புரண்டது நினைவிற்கு வந்ததும் தலைபாரமெல்லாம் போன இடம் தெரியாமல் பறந்து போய்விட அவசரமாக அவளைத் தேடி விரைந்தான்.



அந்த ஸ்பெஷல் வார்டின் வெளியே இராஜேஸ்வரியோடு சேர்ந்து மதுராவின் குடும்பமும் காத்திருப்பதைக் கண்டவன், சற்றும் கலங்காமல் அழுத்தமாகவே அவர்களிடம் நெருங்கினான். இவனைக் கண்டதும் அவனைவரின் முகமும் கடுகடுத்தது. முகத்தை திருப்பிக் கொண்டார்கள். யாரையும் கண்டுகொள்ளாமல் அவன் உள்ளே செல்ல எத்தனித்த போது, "அங்க எங்க போற? டாக்டர் உள்ள இருக்காங்க" என்று எரிந்து விழுந்தாள் இராஜேஸ்வரி.



சட்டென்று நின்ற தேவ்ராஜ் தாயிடம் திரும்பி, "எப்படி இருக்கா?" என்றான் இறங்கிய குரலில்.



"உயிரோடுதான் இருக்கா..." - ஆத்திரத்துடன் இடையிட்டாள் பிரபாவதி. அக்கினிப் பிழம்பாய் தகித்தது அவள் முகம். பார்வையாலேயே எரித்துவிடுவது போல் அவனை முறைத்தாள். அவளை வெறித்துப் பார்த்த தேவ்ராஜ் பதில் ஏதும் சொல்லாமல் அங்கு கிடந்த நாற்காலியில் அமர்ந்தான்.



தலையை குடைந்தது அவனுக்கு... அந்த ரெத்தம்... அவளுடைய அழுகை... தன்னுடைய வெறிச்செயல்... அனைத்தும் அவன் மனதை புழுங்கச் செய்தது. எப்படி அடிபட்டது! சோபாவில் தானே விழுந்தாள்! என்ன ஆயிற்று! எப்படி இருக்கிறாள்! - சிந்தனைகள் நிலைகொள்ளாமல் அலைபாய சட்டென்று எழுந்து தாயிடம் நெருங்கி, "இஸ் ஷி அல்ரைட்?" என்றான். இராஜேஸ்வரியின் அனல் பார்வை அவனை மேலே பேசவிடவில்லை. மீண்டும் வந்து நாற்காலியில் அமர்ந்தான்.



சற்று நேரத்தில் வெளியே வந்த மருத்துவர் நரேந்திரமூர்த்தியிடம், "ஷி இஸ் ஓகே... ரெஸ்ட் எடுக்கட்டும். டிஸ்டர்ப் பண்ணாதீங்க" என்றார். சட்டென்று நிமிர்ந்த தேவ்ராஜ் மருத்துவரைப் பார்த்துவிட்டு அவரிடம் நெருங்கினான்.



"எப்படி இருக்கா? இஸ் ஷி ஆல்ரைட்?" என்றான் பதற்றத்துடன். அவனை ஏறுறாங்க பார்த்த மருத்துவர், "யார் நீங்க?" என்றான்.



"தேவ்ராஜ்... மதுரா என்னோட மனைவி"



"ஓ!" - 'நீதானா அது!' - என்பது போல் இருந்தது அவருடைய பார்வை.



"என்னை ரூம்ல வந்து பாருங்க" ஒரே வரியில் பதிலளித்துவிட்டு நகர்ந்தார். ஓரிரு நொடிகள் அவர் முதுகையே வெறித்துக் கொண்டு நின்றவன் பிறகு மனைவியை பார்க்கும் உத்தேசத்துடன் அறைக்குள் செல்ல எத்தனித்தான்.



"தேவ்..." - நரேந்திரமூர்த்தியின் குரல் கடுமையாக ஒலித்தது. கதவில் வைத்த கையை எடுக்காமல் அவரை திரும்பிப் பார்த்தான்.



"எம்பொண்ண தொந்தரவு பண்ணாத" - எச்சரிக்கும் தொனியில் கூறினார்.



"ஷி இஸ் மை வைஃப்" - அழுத்தமாக உரைத்தவனின் முகத்தில் எரிச்சல் மண்டியிருந்தது.



"வைஃப்? வைஃபை ட்ரீட் பண்ணற மாதிரியா நீ ட்ரீட் பண்ணியிருக்க? எவ்வளவு தைரியம் உனக்கு எம் பொண்ணு மேல கைவைக்க?" - ஆவேசப்பட்டார்.



தவறு தன் மீது இருப்பதை உணர்ந்ததாலோ என்னவோ தேவ்ராஜ் நிதானமாக பதில் சொன்னான்.



"எனக்கு புரியாது... ஆனா தப்பு என்மேல மட்டும் இல்ல. நா மதுராவை பார்க்கணும்... பேசணும்... எல்லாம் சரியாயிடும். ஷி வில் பி ஆல்ரைட்"



மகாராணி போல் வாழ்வாள் என்று எதிர்பார்த்தவருக்கு அவனுக்கு திருமணம் கொடுத்தவர், தன் மகளை கிழிந்த நாராக பார்த்த போது முற்றிலும் உடைத்துப் போய்விட்டார். தன்னுடைய ஒரே செல்ல மக்களைவிட தேவ்ராஜ் எத்தனை பெரிய கொம்பனாக இருந்தால்தான் அவருக்கு என்ன? கடுப்புடன் எடுத்தெறிந்து பேசினார்.



"நோ... நீ உள்ள போகக் கூடாது. என் பொண்ண பார்க்கக் கூடாது. நா உன்ன அனுமதிக்க மாட்டேன்"



"எக்ஸ்...கி...யூஸ் மீ....???" - கடுமையாக மாறியது தேவ்ராஜின் முகம். "ஹூ த ஹெல் ஆர் யூ டு ஸ்டாப் மீ?" - அவரிடம் சீறினான்.



"ஐம் ஹர் ப்ளடி டாட் யூ டாமிட்..." - அவரும் பதிலுக்கு கத்தினார்.



"டாட்-ஆ இருந்தாலும்... டாஷ்-ஆ இருந்தாலும் எனக்கு அப்புறம் தான். எங்களுக்கு இடையில வர்றதுக்கு உங்களுக்கு எந்த ரைட்டும் இல்ல. ஸ்டே அவே..." - எச்சரித்தது அவன் குரல்.



"எவ்வளவு தைரியம்டா உனக்கு. ஒரு பொண்ண அடிச்சு காயப்படுத்தினதும் இல்லாம திமிரா பேசுறியா? கொன்னுடுவேன்டா உன்ன" - திலீப் பாய்ந்தான். அவனை தடுத்த துருவன், "இது ஹாஸ்ப்பிட்டல்... பிரச்சனை பண்ணாத..." என்றான். அவன் அண்ணனின் பிடியிலிருந்து திமிரிக் கொண்டிருக்கும் போதே,



"ஒண்ணுக்கும் உதவாத முட்டாள் பயலே... நீதாண்டா என்னோட ஒவ்வொரு பிரச்சனைக்கும் காரணம். இப்ப கூட உன்னாலதான் எங்களுக்குள்ள சண்டை வந்தது. நீ என்னடா என்னை கொல்லறது... உன்ன நா கொன்னுடுவேன்டா..." - பல்கலைக் கடித்துக் கொண்டு எகிறினான் தேவ்ராஜ்.



"அப்போவே சொன்னேன்... இந்த காட்டுமிராண்டிக்கு பொண்ணு கொடுக்காதீங்கன்னு... கேட்டாதானே? இவனை ஒரு ஆளுன்னு நம்பி, கண்ணுக்குள்ள வச்சு வளர்த்த பொண்ண கொடுத்தீங்கள்ல.. இப்போ அனுபவிங்க... குடும்பத்தையே அழிச்சிடுவான்... அந்த புத்தி மாறுமா?" - பிரபாவதியின் தூற்றுதல் தேவ்ராஜை மேலும் மூர்க்கனாக்கியது. உடல் நடுங்க உக்கிரமாக முறைக்கும் மகனை பதட்டத்துடன் பார்த்த இராஜேஸ்வரி, "தேவ்... நீ கிளம்பு... ப்ளீஸ் கிளம்புடா..." என்றாள் அவன் கையைப் பிடித்துக் கொண்டு.



தாயின் கையை உதறிவிட்டு அவளை முறைத்த தேவ்ராஜ், "ஏன்? ஏன் நா கிளம்பனும்? உள்ள இருக்காது என்னோட மனைவி. நா அவளை பார்க்கக் கூடாதுன்னு தடுக்கறதுக்கு இங்க எந்த ............க்கும் ரைட்ஸ் இல்ல" - அகம்பாவத்துடன் பேசியவனிடம் பாய முயன்ற திலீப்பை கட்டிப்பிடித்து துருவன் தடுக்க, "திலீப்..." என்று பெருங்குரலில் அதட்டினார் நரேந்திரமூர்த்தி. அலட்சியமாக அவனைப் பார்த்தபடி, அறையின் கதவை தள்ளி திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் தேவ்ராஜ்.



கோபத்தோடு உள்ளே வந்த தேவ்ராஜின் ஆவேசம் மதுராவை பார்த்த நொடியிலேயே வடிந்து முற்றிலும் காணாமல் போனது. மெத்தையில் தளர்ந்து போய் கிடந்தாள் மதுரா. வலது கையில் சின்னதாய் ஒரு கட்டு... இடது கையில் செலைன் பாட்டிலோடு இணைந்த ஊசி... வெளியிற முகம்... மூடிய கண்கள்... மூக்கின் நுனியில் காய்ந்திருந்த துளி ரெத்தம்... பிடிங்கி எறிந்த கொடி என்பார்களே...! அப்படித்தான் கிடந்தாள். உள்ளே வலித்தது... மனதை பிசைவது போன்றதொரு உணர்வு... இதயத்திற்குள் எதையோ தூக்கி வைத்தது போல் கனத்தது. அவளிடம் மெல்ல நெருங்கினான்.



"மது" - மெல்ல அழைத்தான். அவளிடம் அசைவில்லை. லேசாக நாசி விடைப்பது தெறிந்தது. அதுவரை சீராக இருந்த அவளுடைய மூச்சில் இப்போது சிறு மாற்றம் தெரிந்தது. அவள் உறங்கவில்லை என்பதை புரிந்துக் கொண்டான்.



"மது" - மீண்டும் ஒருமுறை சற்று குரலை உயர்த்தி அழைத்தான். மூடியிருந்த கண்களின் ஓரம் இரு துளி கண்ணீர் மணிகள் உருண்டோடின. உதட்டைக் கடித்துக் கொண்ட தேவ்ராஜின் நெஞ்சுக்குழிக்குள் ஆழமாய் ஓர் உணர்வு பாய்ந்தது.



சற்று நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், "கண்ண திற..." என்றான். அவளிடம் எந்த அசைவும் இல்லை. கண்ணோரம் வடியும் கண்ணீர் அதிகமானது. மின்னல் போன்றதொரு உணர்வு உள்ளே பாய, கண்களை இறுக்கமாக மூடித்திறந்தான். அவளுடைய கண்ணீரை துடைக்க வேண்டும் என்று கை துடித்தது. ஆனால் ஏதோ ஒரு தயக்கம்... பயம்... "மது..." - மீண்டும் அழைத்தான். "ப்ளீஸ்... என்னை பாரு..." - அவன் குரல் தளர்ந்தது.



"எக்ஸ்கியூஸ் மீ சார்..." - குரல் கேட்டுது திரும்பிப் பார்த்தான். சீருடை அணிந்த செவிலியர் நின்றுக் கொண்டிருந்தாள்.



"பேஷண்ட் ரெஸ்ட் எடுக்கணும். டிஸ்டர்ப் பண்ணாதீங்க ப்ளீஸ்" - 'ப்ளீஸ்' என்கிற வார்த்தையை இறுதியில் தொடுக்காக சேர்த்துக் கொண்டாலும் அவள் கராறாகவே பேசினாள்.



வெளியே நிற்கும் குரூப்தான் இவளிடம் சொல்லி அனுப்பியிருப்பார்களோ என்கிற சந்தேகம் எழுந்தது அவனுக்கு. "பைவ் மினிட்ஸ்..." என்றான் இறுகிய முகத்தோடு.



"சீக்கிரம்..." என்று கூறி அவனை பார்த்தபடி நின்றாள்.



"கொஞ்ச நேரம் வெளியே இருங்க..." - அழுத்தமாகக் கூறினான். ஒரு நொடி தயங்கிய நர்ஸ் வேறு வழியில்லாமல் வெளியேறினாள்.



"ஹேய்... மது... ஸ்டராபி... லுக் அட் மீ... ப்ளீஸ்... இங்க பாரு..." - பெட்டில் அவள் ஓரமாக அமர்ந்துவிட்டான். அவள் கண்ணீரை துடைத்தான். முடியை கோதினான். கையை வருடினான். மதுராவின் உடல் இறுகியது. முகத்தில் ஒருவித இறுக்கம்... இல்லை கோபம்... இல்லையில்லை வெறுப்பு... என்ன இது! ஏன் இப்படி மாறுகிறது அவள் முகம்! - திகைத்தான் தேவ்ராஜ்.



"மது ஐம் சாரி... நான்... நான் பண்ணினது தப்புதான்... ஐம் வெரி சாரி... ஆனா நீயும்... சரி அதை விடு... ஐம் சாரி... நா பண்ணினதுதான் தப்பு... ஓகே...? என்னை பாரு... ப்ளீஸ் லுக் அட் மீ ஹனி..." - சட்டென்று முகத்தை சுளித்துக் கொண்டு அவன் தொடுதலில் இருந்த கையை பிடுங்கினாள். கையேடு மாட்டியிருந்த டியூப் ஆடி, செலைன் பாட்டில் குலுங்கியது. "ஏய்ய்ய்... என்ன பண்ணற?" - பதறினான் தேவ்ராஜ். இன்று இந்த சின்ன ஊசிக்கு அவன் பதறும் இந்த பதட்டம் நேற்று அவள் கையை ஒடிக்கும் போது எங்கு போனது என்று அவனுக்கே தெரியவில்லை. நேற்று இருந்த கோபமும் உண்மை... இப்போது அவன் காட்டும் கரிசனமும் உண்மை... இந்த மூட் ஸ்விங்கிற்கு காரணமான மனஅழுத்தத்தை வெல்லத் தெரியாமல் வாழ்க்கையை பெரிதும் சிக்கலாக்கிக் கொண்டான்.



அவளுடைய திடீர் ரியாக்ஷனில் திகைத்துப் போய் நின்றான் தேவ்ராஜ். அவனுக்கு முதுகுக்காட்டி ஒருக்கணித்துப் படுத்த மதுரா கூட்டுக்குள் ஒடுங்கும் நத்தை போல சுருண்டுக் கொண்டாள்.



அவளுடைய புறக்கணிப்பை மென்று விழுங்கி ஜீரணித்துக் கொண்டவன், "தட்ஸ் இட்? அவ்வளவுதானா? என்னை இக்னோர் பண்ணுறியா நீ?" என்றான் ஆற்றாமையுடன்.



அவள் எந்த விதத்திலும் அவனுக்கு பதிலளிக்கவில்லை. உடனே கட்டிலை சுற்றிக் கொண்டு மறுபுறம் வந்தவன், "சரி நீ கோபமாவே இரு... ஆனா நீ என்னை இங்கோர் பண்ண முடியாது... கூடாது... விடமாட்டேன்..." என்றான் பிடிவாதக் குரலில். அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே மதுராவின் மூக்கிலிருந்து லேசாக இரத்தம் கசிந்தது.



பகீரென்றது தேவ்ராஜுக்கு. திகில் விழுந்தது போல் அவளை பார்த்தான். இதயம் தாறுமாறாக எகிறியது. 'என்ன இது!' - அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. நேற்று அந்த இரத்தம்! அவன் உள்ளே நுழையும் போது கூட மூக்கில் ஒரு துளி காய்ந்து போய் இருந்ததே! என்ன ஆயிற்று இவளுக்கு! - பயந்துவிட்டான். மதூ! - மனம் அலறியது.



பதட்டத்தை அவளிடம் காட்டிக்கொள்ளாமல் இரண்டே எட்டில் விருட்டென்று சென்று கதவைத் திறந்தவன், வராண்டாவில் நின்றுக் கொண்டிருந்த நர்ஸிடம், "எக்ஸ்கியூஸ் மீ... கொஞ்சம் வாங்க" என்றான். அவன் குரலிலிருந்த பதட்டம் அனைவரையும் தொற்றிக்கொள்ள, "என்ன... என்ன ஆச்சு?" என்று பல குரல்கள் ஒருங்கே ஒலித்தன. சட்டென்று அறைக்குள் நுழைந்த நர்ஸ் மதுராவை பார்த்துவிட்டு சற்று ஆசுவாசமடைந்தாள். இரவு வந்தது போல் பிட்ஸ் ஏதும் வந்திருக்குமோ என்று பயந்துவிட்டாள்.



"எதுக்கு கூப்பிடுங்க?"



"ரெத்தம்... நோஸ்ல..." - கையால் தன் மூக்கை தொட்டுக்காட்டி குழந்தை போல் மலங்க விழித்தான்.



அவனை வெறித்துப் பார்த்த நர்ஸ், "ரெஸ்ட் கொடுங்கன்னு சொன்னனே! அப்போ கேட்கல..." என்றவள், 'இப்போ மட்டும் பதர்றீங்களே!' என்ற கேள்வியை நிலுவையில் விட்டாள்.



தேவ்ராஜின் பதட்டம் குறையவில்லை. இதயம் திக் திக் கென்று அடித்துக் கொண்டது. "என்ன ஆச்சு? ஏன் இப்படி?" என்றான் மிரட்சியுடன்.



"டாக்டரை போயி பாருங்க சார்" - நர்ஸின் உணர்ச்சியற்ற குரல் அவனை கலவரப்படுத்தியது.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 79

"ஆன்க்ஸைட்டி... இதை சிம்பிளா பதட்டம் படபடப்புன்னு முடிச்சிட்டு முடியாது... டிப்ரஷனுக்கு முன்னாடி ஸ்டேஜ்... கவனிக்காம விட்டா அவங்க உயிருக்கே ஆபத்து மிஸ்டர் தேவ்ராஜ்" - மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி கூறும் மருத்துவரை வெறித்துப் பார்த்த தேவ்ராஜின் முகத்தில் வியர்வை துளிர்த்தது. கண்களில் கலக்கம் சூழ்ந்தது.



"வெளியே சொல்லாத அதிகப்படியான கவலை... பயம்... அதனால ஏற்படற ஹைபர்டென்ஷன்... இதெல்லாம்தான் ஆன்க்ஸைட்டிக்கு காரணம்" - கண்களை இறுக்கமாக மூடினான். அவனுடைய போராட்டத்தை ஆழ்ந்து பார்த்தபடி சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார் மருத்துவர்.



ஓரிரு நிமிடங்கள் எடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன், "அந்த நோஸ் ப்ளீடிங்?" - கரகரத்த குரலில் இழுத்தான்.



"ஆன்க்ஸைட்டி அட்டாக் வரும் போது, அதிகப்படியான திடீர் ரெத்த அழுத்தத்தால ரத்த நாளங்கள் வீக் ஆகி... அந்த மாதிரி ரெத்தக் கசிவு ஏற்படறது உண்டு..."



"இதை சரி பண்ண..."



"கட்டுப்படுத்தலாம்"



"வாட்! கட்டுப்படுத்தலாம்ன்னா?" - கலவரமானான்.



"ஐ மீன் இட் மிஸ்டர் தேவ்ராஜ்... ஆன்க்ஸைட்டியை கட்டுப்படுத்த முடியும். ஆனா குணப்படுத்த இன்னைக்கு வரைக்கும் எந்த மருந்தும் இல்ல"



"டாக்டர்...."



"ஐம் சாரி..."



"நோ!"



"நீங்க கவனமா இருக்கணும் சார். அவங்களுக்கு இன்னொரு முறை ஆன்க்ஸைட்டி அட்டாக் வர கூடாது. அவங்க டிப்ரஷனுக்கு போயிடக் கூடாது... அடிக்கடி அவங்க மனசுல ஒருவித வெற்றுணர்வு, பயம், பிரமை, படபடப்பு ஏன்... தற்கொலை எண்ணம் கூட எழும்... இது எதுவும் அவங்க வயித்துல இருக்க குழந்தையை பாதிச்சுடக் கூடாது" - மருத்துவரின் அமைதியான குரல் அவனுக்குள் ஆழமாக இறங்கியது. பொறிகலங்கிப் போனது போல் ஒரு உணர்வு... அவர் சொன்னதெல்லாம் பிரமையா அல்லது உண்மைதானா என்று புரிந்துகொள்ள முடியாத கலக்கம் திரை போல் அவன் சிந்தனையில் குறுக்கிட்டது.



ஓரிரு நிமிடங்கள் அப்படியே திகைத்துப் போய் அமர்ந்துவிட்டவன், "கு...ழந்...தை...யா!" என்று முணுமுணுத்தான். குரலே எழும்பவில்லை.



அவனை விசித்திரமாகப் பார்த்த மருத்துவர், "ஷி இஸ் கேரியிங்... பன்னிரண்டு வார கரு" என்றார். அவன் கண்களிருந்து உதிர்ந்த இரு துளி வைர மணிகள் அவரை ஆச்சரியப்படுத்தியது.



"ஐம் சாரி... இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியா இருக்கும்னு நம்பினேன்" என்றார்.



"அஃப் கோர்ஸ்... இட்ஸ்... இட்ஸ் எ கிரேட் நியூஸ்... ஃபார் மீ..." - உதட்டை கடித்துக் கொண்டான்.



முகத்தில் பெருமிதமும் கண்களில் கண்ணீருமாக அமர்ந்திருக்கும் அந்த முறுக்கு மீசைக்காரனை சுவாரஸ்யமாக பார்த்த மருத்துவர், "உங்க வைஃபோட இந்த பிரச்னைக்கு நீங்கதான் காரணம்ங்கறதை என்னால நம்ப முடியல..." என்றார்.



அவனிடமிருந்து நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது. மனதிலிருக்கும் புழுக்கம் பெருமூச்சிலெல்லாம் கரைந்துவிடுமா என்ன! மனம் பாறையாக கனத்தது. மூன்று மாதங்கள்... ஒருமுறை கூட நம்மிடம் சொல்லவில்லை... சொல்லும் வாய்ப்பை நாம் கொடுக்கவில்லை...' - மனசாட்சி குத்தியது. அவளுக்கு பிரஷர் கொடுத்துக் கொடுத்து கார்னர் செய்து இந்த நிலைக்கு தள்ளிவிட்டோம் என்கிற குற்றஉணர்ச்சியில் மனசாட்சி மரத்தின் மீது ஏறி நின்று ஆடும் பயங்கர பேயாக மாறியது.



"நேத்து மதுராவை எக்ஸமைன் பண்ணின சைக்கியார்ட்டிஸ்ட் ஈவினிங் டியூட்டிக்கு வருவாங்க. நீங்க அவங்களை ஒருதரம் மீட் பண்ணி பேசுங்க. உங்க லைஃப்பை திரும்ப சரியான பாதைக்கு திருப்ப அவங்களால உதவ முடியலாம்..." - அக்கறையோடு கூறினார்.



அவரிடம் ஆமோதிப்பாக தலையசைத்து நன்றி கூறிவிட்டு மதுரா அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையை நோக்கி வந்தான். சற்று நேரத்திற்கு முன்பு அடாவடித்தனமாக அந்த அறைக்குள் நுழைந்தவனுக்கு இப்போது கால் கூசியது. உள்ளே ஏதோ ஒருவித பயம் கவ்வியது. வராண்டாவில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் வந்து அமர்ந்தான்.



குனிந்த தலை நிமிராமல் இறுகிப்போய் அமர்ந்திருக்கும் மகனிடம் நெருங்கி, "என்ன ஆச்சு? டாக்டரை பார்த்தியா? என்ன சொன்னாரு?" என்றாள் இராஜேஸ்வரி. அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை. தவறு செய்தவன்தான்... ஆனால் மகனாயிற்றே! எதையோ இழந்துவிட்டது போல் அவன் அமர்ந்திருக்கும் நிலை அவள் அடிவயிற்றை பிசைந்தது. பக்கத்தில் அமர்ந்து, "என்னப்பா?" என்றபடி தோளில் கை வைத்தாள். சட்டென்று அந்த கையில் முகத்தை சாய்த்துக் கொண்டான். அவன் கண்கள் மூடியிருந்தன.



"ஒண்ணும் இல்லப்பா... சரியாயிடும். கவலைப்படாத" - தாயின் ஆறுதல் மொழி அவன் மனதை எட்டவில்லை. சற்றுநேரம் அசையாமல் அமர்ந்திருந்தவன் பின் அன்னையின் முகத்தை திரும்பிப் பார்த்தான்.



"ஐம் கோன பி எ ஃபாதர்..." - அவனுடைய உதடுகள் முணுமுணுத்தன. இராஜேஸ்வரி ஆமோதிப்பாக தலையசைத்தாள். அவள் முகத்தில் சிறு புன்னகை தோன்றியது.



"இனி உன்னோட கோவம்... பிடிவாதம் எல்லாம் கொறஞ்சிடும்..." - தாயின் கூற்றைக் கேட்டு கண்ணீருடன் புன்னகைத்தான் தேவ்ராஜ். மனதிற்குள் ஆனந்த மழை பொழிவது போல் இருந்தது. இன்னொருபக்கம் இதயத்தை யாரோ பொசுக்குவது போல் உணர்ந்தான்.



'மதுராவை இந்த பாதிப்பிலிருந்து எப்படி மீட்டுக் கொண்டுவர போகிறோம்' என்கிற கவலை அவனை வருத்தியது.



"மதுரா மனசு ரொம்ப பாதிக்கப்பட்டிருக்குன்னு சொல்ராங்களேப்பா... என்ன செய்ய போற?" - தாயின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கீழே குனிந்துக் கொண்டவன், சற்று நேரத்திற்கு பிறகு "எனக்கு தெரியிலம்மா... ஐ டோன்ட் நோ..." என்றான் உடைந்து போய்.



ஏற்கனவே வருந்திக் கொண்டிருப்பவனை மேலும் காயப்படுத்த விரும்பாமல், "எல்லாம் சரியாயிடும். கவலைப்படாத... குழந்தை பிறந்தா எல்லாத்தையும் மறந்துடுவா...' என்றாள் மகனுக்கு ஆறுதல் கூறும்விதமாக. இந்த குழந்தை அனைத்து காயங்களையும் ஆற்றிவிடும் என்கிற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.



"இந்த... இந்த விஷயம் மதுவுக்கு தெரியுமா?" - தயக்கத்துடன் கேட்டான்.



மகனை ஆழ்ந்து பார்த்த தாய், "மூணு மாசம்ப்பா... தெரியாம இருக்க வாய்ப்பு இல்லையே!" என்றாள்.



"ஹும்ம்ம்..." என்று பெருமூச்சு விட்டவன், "இடையில எவ்வளவோ பிரச்சனை... மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ஸ்... ரொம்ப அலோனா பீல் பண்ணியிருப்பா..." என்றான் இறங்கிய குரலில்.



"இனி நீ கூட இரு தேவ்... மத்தவங்களுக்கு கொடுக்கற முக்கியத்துவத்தை உன்னோட மனைவிக்கும் கொடு..." - எவ்வளவு மறைக்க முயன்றும் இராஜேஸ்வரின் குரலில் கடுமை எட்டிப்பார்த்துவிட்டது.



தயை வியப்புடன் பார்த்த தேவ்ராஜ், "ஷி இஸ் எ பார்ட் ஆப் மீ ம்மா... நா அவளை வேற ஒரு பெர்சனா பார்க்கல" என்றான்.



"ஆனா அவ ஒரு தனி மனுஷிப்பா... அவளோட விருப்பங்கள்... ஆசைகள்... எல்லாம் வேறையாத்தான் இருக்கும். நீ புரிஞ்சுக்கணும். அவளுக்கான ஸ்பேஸை நீ கொடுக்கணும். அதே சமயம் அவளை கேர் பண்ணிக்கணும். அவளுக்கு தேவையானதை செய்யணும்... ரெண்டையும் பேலன்ஸ் பண்ணினாதான் வாழ்க்கை நல்லா இருக்கும் ப்பா... " - தாய் கூறும் அறிவுரையை அமைதியாகக் கேட்டுக் கொண்டான்.



"உங்ககிட்ட எதுவும் பேசினாளா?" - மெல்ல கேட்டான்.



"ம்ஹும்... யார்கிட்டேயும் எதுவும் பேசல... நேத்து நைட் கண்டிஷன் ரொம்ப சீரியஸ்... காலையில ரெண்டுதரம் கண்ணு முழிச்சா... யாரையும் பார்க்கல... பேசல..." - நீண்ட பெருமூச்சுடன் எழுந்தான். எதிர் பக்கம் கிடந்த நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் மாமனாரையும் மைத்துனர்களையும் கண்டுகொள்ளாமல் மனைவியின் அறைக்குள் நுழைந்தான். உள்ளே மகளுக்கு அருகில் சேர் போட்டு அமர்ந்திருந்தாள் பிரபாவதி. அவளை பார்த்ததும் அவனுக்குள் ஒரு தயக்கம் வந்தது. ஏதாவது பேசிவிடுவாளோ என்று பயந்தான். ஆனால் பயத்தையும் மீறிய ஆவல் அவனை மனைவியிடம் இழுத்துச் சென்றது. நன்றாக உறங்கி கொண்டிருந்தாள். அந்த அறையின் கார்னரில் அமர்ந்திருந்த நர்ஸிடம், "எப்போ முழிப்பா?" என்றான்.



"ஸ்லீப்பிங் டோஸ் போட்டிருக்கு சார்... ரெண்டு மணிநேரம் ஆகும்"



"ஓ!" - மதுராவின் தலைமாட்டில் வந்து நின்று அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். பிரபாவதியின் இரத்த அழுத்தம் கூடியது. அவனுடைய முகத்தையும்... நடிப்பையும் பார்க்கப்பார்க்க அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது. சட்டென்று எழுந்து வேகமாக வெளியேறினாள்.



பீடையை விரட்டிவிட்டது போல் ஆசுவாசமடைந்த தேவ்ராஜ் நிம்மதியாக மனைவிக்கு அருகில் அமர்ந்து அவளுடைய கையை பிடித்துக் கொண்டான். ஊசி ஏறியிருந்த அவள் கரத்தை மெல்ல வருடிக் கொடுத்தான். உறங்கி கொண்டிருக்கும் அவள் முகத்தை பார்வையால் வருடியவனின் கண்கள் அடிக்கடி கலங்கின.



புயல் வேகத்தில் வெளியே வந்த பிரபாவதி கணவனை அழைத்துக் கொண்டு தனியாக வந்தாள்.



"அவனுக்கு இன்னும் இங்க என்ன வேலை? எதுக்கு அவனை விரட்டாம இருக்கீங்க?" - கடுப்படித்தாள்.



"என்ன பேசற நீ? இது ஹாஸ்ப்பிட்டல்... சண்டை போட்டுக்கிட்டு இருக்க சொல்றியா?"



"சரி சண்டை போட வேண்டாம்? அடுத்து என்ன செய்ய போறீங்க? என்ன முடிவு எடுத்திருக்கீங்க?"



"முதல்ல மதுரா சரியாகி வரட்டும்"



"நேத்து எம்பொண்ணு செத்திருந்தான்னா இன்னைக்கு ஒரு பிடி சாம்பலாயிருப்பா... இன்னமும் உங்க தங்கச்சி மேலையும்... தங்கச்சி பையன் மேலையும் ஆசை விட்டுப்போகலையா உங்களுக்கு?"



"இது மதுரவரோட வாழ்க்கை. அவளோட ஒப்பீனியன் தெரியாம நாமளா எந்த முடிவையும் எடுக்க முடியாது பிரபா"



"கல்யாணம் செய்யும் போது அவளோட ஒப்பீனியன் கேட்டுத்தான் செஞ்சீங்களா? பார்த்துப்பார்த்து வளர்த்த எம் பொண்ண அடிச்சு கொடுமை படுத்தியிருக்கான். கையை ஒடச்சிருக்கான்... என் வயிறு எரியுது... நீங்க எப்படி பொறுமையா இருக்கீங்க?"



"பொறுமையா இல்ல பிரபா... நிதானமா இருக்கேன்"



"உங்க நிதானத்தை கொண்டு போயி குப்பையிலே போடுங்க"



"என்ன செய்ய சொல்ற நீ?"



"எம் பொண்ணுக்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் இருக்கக் கூடாது. விடுதலை வாங்கி கொடுங்க... எம் பொண்ண காப்பாத்திவிடுங்க ப்ளீஸ்..." - கையெடுத்துக் கும்பிட்டாள்.



"சரி... லீகலா அப்ரோச் பண்ணலாம்..."



"அதுக்கெல்லாம் நேரம் இல்ல... இப்பவே... இப்பவே அவனுக்கும் எம் பொண்ணுக்கும் ஒண்ணும் இல்லைன்னு ஆகணும். அவனோட நிழல் கூட எம் பொண்ணுமேல இனி படக் கூடாது"



"அது எப்படி முடியும்...?"



"களைச்சு விட்டுட சொல்லுங்க... அவனோட குழந்தை எம் பொண்ணு வயித்துல இருக்கு... அது வேண்டாம்... அந்த அசிங்கம் எம் பொண்ணுக்கு வேண்டவே வேண்டாம்... அந்த குழந்தையை சாக்கா வச்சுக்கிட்டு அவன் எம் பொண்ண நெருங்க கூடாது... வாங்க... வந்து டாக்டர்கிட்ட பேசுங்க. உடனே கிளியர் பண்ண சொல்லுங்க" - ஆவேசப்பட்டாள்.



 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 80

மகளின் கன்றி சிவந்திருந்த கன்னம்... புசுபுசுவென்று வீங்கியிருந்த கை... மூக்கிலிருந்து தொடர்ந்து கசிந்துக் கொண்டிருந்த ரெத்தம்... அனைத்தையும் பார்த்து துடித்துப் போயிருந்த நரேந்திரமூர்த்தியை தனியாக அழைத்து வேப்பிலை அடித்தாள் பிரபாவதி. தன் மகளின் உயிருக்கு ஆபத்து... அவன் மதுராவை கொன்று விடுவான் என்று அச்சுறுத்தினாள்... அவனிடமிருந்து மதுராவை விடுவிக்க வேண்டும் என்று வேண்டினாள். அவனோடு தொடர்புரைய எதுவும் நம் மகளுக்கு வேண்டாம் என்றாள். அவளுக்கு புதிய வாழ்க்கையை அமைத்துத்தர வேண்டும்... அதற்கு தடையாக இந்த குழந்தை இருக்கக் கூடாது என்றாள். கருதானே... கலைத்துவிட்டால் போகிறது... என்று அலட்சியமாக பேசி அவருக்கு தைரியம் கொடுத்தாள்.



ஆரம்பத்தில் சற்று பதட்டமடைந்தாலும் மனைவியின் கடுமையான 'பிரைன் வாஷ்' நரேந்திரமூர்த்தியை மாற்றி யோசிக்க வைத்தது. பிரபாவதி சொல்வதெல்லாம் சரிதான் என்று தோன்றியது. அன்றே தேவ்ராஜை வேண்டாம் என்று எச்சரித்தாள். அப்போது அவளுடைய பேச்சை கேட்கவில்லை. இப்போதும் அதே தவறை செய்யக் கூடாது என்று எண்ணினார். மகளின் நலனுக்காக செய்யும் எதுவும் நியாயம் என்று நினைத்தார். அதோடு கருவை கலைப்பது ஒன்றும் கொலைக்குற்றமல்ல... மகளின் எதிர்காலத்திற்கு தடை என்றால் கலைத்தெறிந்துவிட்டு போகவேண்டியதுதான் என்கிற மனைவியின் கூற்றை ஏற்றுக் கொண்டு மருத்துவரை சந்திக்கச் சென்றார்.



"ஆர் யூ ஷுர்? இதை செஞ்சுதான் ஆகணுமா?" - மருத்துவரின் புருவம் மேலேறியது.



"நிச்சயமா... இந்த குழந்தை எங்களுக்கு வேண்டாம்"



"கொஞ்சம் யோசனை பண்ணுங்கம்மா. அவசரப்படாதீங்க"



"நல்லா யோசிச்சிட்டோம் டாக்டர். எங்க பொண்ணோட நிலைமையை பார்த்தீங்கள்ல? அவனை நம்பி இனி எப்படி எங்க பொண்ணை அங்க அனுப்ப முடியும். அவளோட வாழ்க்கைக்கு இதுதான் நல்லது. ப்ளீஸ்... முடியாதுன்னு சொல்லிடாதீங்க"



"தேவ்ராஜை பார்த்தா கொஞ்சம் ஒரு மாதிரியான ஆளாத்தான் தெரியுதும்மா... ஆனா உண்மையிலேயே அவர் அப்படி இல்ல. அவருக்குள்ளேயும் சாஃப்ட் பீலிங்ஸ் இருக்கு. நா பார்த்தேன். கொஞ்சம் யோசிங்க... ஒரு குழந்தையை அபார்ட் பண்ணறது சாதாரண விஷயம் இல்லம்மா..."



"இல்ல டாக்டர்... உங்களுக்கு தெரியாது. அவன் ஒரு கொலைகாரன். என் பொண்ண கொன்னுடுவான். வேண்டாம்... அவனோட அப்பனுக்கு குடும்பத்துமேல சாஃப்ட் பீலிங் இருந்துல்ல இவனுக்கு இருக்கணும். ரெண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைங்க. எம் பொண்ணுக்கு அந்த நரகம் வேண்டாம். ப்ளீஸ் டாக்டர்... ப்ளீஸ்..."



"சரி... அந்த பையன் வேண்டாம்னா டைவர்ஸ் பண்ணிட்டு போகலாமேம்மா... எதுக்கு அபார்ஷன்?" - தயங்கினார்.



"அவனே வேண்டாம்னு ஆனா பிறகு அவனோட பிள்ளை மட்டும் எதுக்கு?" - வெறுப்புடன் முகத்தை சுளித்தாள்.



'பிறக்காத குழந்தை மீது இத்தனை வெறுப்பா!' - மருத்துவர் ஆச்சரியப்பட்டார்.



"சார்... அவங்க எமோஷனலா பேசறாங்க... நீங்களாவது கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க... யோசிச்சுப்பாருங்க... அந்த குழந்தை உங்க பொண்ணுக்கும் குழந்தை தானே?" - அதுவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் சிலைபோல் அமர்ந்திருந்த நரேந்திரமூர்த்தி கடைசியாக வாயைத் திறந்தார்.



"இதை கிளீயர் பண்ணறதுக்கு என்ன ப்ரொஸிஜரோ அதை செய்ங்க"



"ஹௌ அபௌட் மிஸ்டர் தேவ்ராஜ்? அவர் இதுக்கு ஒத்துப்பாரா?"



"அவன் ஏன் ஒத்துக்கணும்? இது என்னோட முடிவு"



"லீகலா பிரச்சனை வரும் சார்"



"எந்த டாகுமெண்ட்ல வேணுன்னாலும் நான் சைன் பண்ணறேன். பினிஷ் இட் ஆஃப்" - உறுதியாக கூறினார். மருத்துவருக்கு வேறு வழியில்லை.



"மதுராவுக்கு நிறைய பிளட் லாஸ் ஆகியிருக்கு. வீக்கா இருக்காங்க. ஒரு வாரம் போகட்டும்... பார்த்துக்கலாம்... அதுவரைக்கும் இந்த மாத்திரையை கொடுங்க..." என்று கூறி கருக்கலைப்பு மாத்திரையை எழுதிக் கொடுத்தார்.



************************



மனைவியின் கையை பிடித்தபடியே அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த தேவ்ராஜ், அவளிடம் அசைவு தெரிந்ததும் சட்டென்று பதட்டமானான். ஆவலோடு அவள் முகத்தைப் பார்த்தான். இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. எப்படி ரியாக்ட் செய்வாளோ என்கிற பயம் ஆட்டி வைத்தது. அவள் மெல்ல கண்விழித்தாள். இவன் அமைதியாக அமர்ந்திருந்தான். இவருடைய பார்வையும் ஓரிரு நொடிகள் கூடி கலந்தன. தேவ்ராஜின் பதட்டம் பலமடங்கு அதிகமானது. அவளிடம் என்ன பேசுவதென்று அவனுக்கு புரியவில்லை.



அவள் சோர்வுடன் மீண்டும் கண்களை மூடிக் கொண்ட போது இவன் அவளுடைய மென்கரத்தில் இதழ் பதித்தான். மூடிய இமைகளை சட்டென்று விரித்த மதுரா அவனை வெற்றுப்பார்வை பார்த்தாள். அன்பு... நேசம்... காதல்... கோபம்... வெறுப்பு... எதுவுமே இல்லை அந்த பார்வையில். யார் நீ என்று கேட்டு எட்டி நிறுத்திய அவள் பார்வை அவனை கூறு போட்டது. மெளனமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தவன், "ப்ளீஸ் டோன்ட் ஹேட் மீ மது" என்றான் கரகரத்த குரலில் முணுமுணுப்பாக. அவள் பதில் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டாள். மீண்டும் அவளிடம் வழக்கடித்து அவளுடைய பிரஷரை அதிகமாக்க விரும்பாமல் அமைதியாகிவிட்டான் தேவ்ராஜ்.



சற்று நேரத்தில் உள்ளே வந்த இராஜேஸ்வரி, "தேவ்... ஒரு நிமிஷம் இங்க வா..." என்று மகனை தனியாக அழைத்து "வீட்டுக்கு போயி குளிச்சுட்டு டிரஸ் சேன்ஜ் பண்ணிக்கிட்டு வா" என்றாள்.



"இல்ல வேண்டாம்..."



"காலையிலிருந்து நீ எதுவும் சாப்பிடலைப்பா... வீட்டுக்கு போயிட்டு கொஞ்சம் பிரெஷ் ஆயிட்டு வா..." - அப்போதுதான் அவனுக்கு நினைவே வந்தது.



"ம்மா... நைட்லேருந்து இங்க இருக்கீங்களே! ஏதாவது சாப்பிட்டீங்களா?" என்றான்.



"என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். நீ கிளம்பு"



"சாப்பிட்டீங்களா இல்லையா?"



"கேன்டீன் இருக்குப்பா... நா பார்த்துக்கறேன் நீதான் பேயடைஞ்ச மாதிரி இருக்க" - நேற்று இரவு கடுமையான போதை... அதன் பிறகு ஊசி மருந்து... இப்போது வரை எதுவும் உண்ணவில்லை... உண்மையில் பேயடைந்த மாதிரிதான் இருந்தான். தாய் மனம் கேட்காமல் போராடியது.



தேவ்ராஜ் ட்ரைவரை வர சொல்லி அன்னையிடம் சமாதானம் சொல்லி அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் மதுராவின் அறைக்கு சென்ற போது, அவள் எழுந்து கட்டிலில் அமர்ந்திருந்தாள். கண்கள் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தன. அதே அறையில் இருந்த பிரபாவதி அலமாரியில் எதையோ குடைந்துக் கொண்டிருந்தாள்.



"சாப்பிட ஏதாவது கொடுத்தீங்களா?" - நர்ஸிடம் கேட்டான் தேவ்ராஜ்.



"சாப்பிட்டாங்க சார்... மெடிசன்ஸ் கொடுக்கணும்..."



"ம்ம்ம்... கொடுத்துடுங்க..." - தேவ்ராஜ். நர்ஸ் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து வந்த போது, "இந்தாம்மா... மத்த மருந்தோட இதையும் சேர்த்து கொடு..." - பிரபாவதி ஒரு மாத்திரை டப்பாவை நீட்டினாள்.



"இது என்ன டேப்லெட்?" - டப்பாவை வாங்கிப் பார்த்த நர்ஸ் அதிர்ச்சியோடு பிரபாவதியை ஏறிட்டாள். மனைவியின் முகத்திலேயே பார்வையை பதித்திருந்த தேவ்ராஜ் தன் முதுகுக்கு பின்னால் நடக்கும் நாடகத்தை கவனிக்கவில்லை.



"டாக்டர் எழுதிக் கொடுத்ததுதான்..." - பிரபாவதி.



"எனக்கு பிரிஸ்கிரிப்ஷன் வரலையே!"



"வேணுன்னா போயி கேட்டுட்டு வாயேன்... என் பொண்ணுக்கு கெடுதலானதை நானே கொடுப்பேனா என்ன?" - நொடித்துக் கொண்டாள்.



"ஓகே மேடம்... டாக்டரை கலந்துக்காம நான் எதையும் கொடுக்க முடியாது. செக் பண்ணிட்டு வந்துடறேன்" - மாத்திரை டப்பாவுடன் வெளியேச் சென்றாள்.



சற்று நேரத்தில் மீண்டும் அந்த அறைக்கு வந்த நர்ஸின் முகம் வாடியிருந்தது. மனம் ஒப்பாமல் அந்த மருந்துகளை அவளுக்கு வழங்கினாள். தேவ்ராஜின் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு மாத்திரையாக விழுங்கினாள் மதுரா.



இராஜேஸ்வரி மீண்டும் மருத்துவமனைக்கு வந்த போது அவளோடு பாரதியும் மாயாவும் உடன் வந்தார்கள். மாயாவின் கையை பிடித்துக் கொண்டு வந்த ஆதிரா தூரத்தில் நின்ற தந்தையைப் பார்த்ததும் தாயின் கையை உதறிவிட்டு, "டா...டி..." என்று ஓடி அவனிடம் தாவி ஏறினாள். மயிர்கூச்செரிய மகளை அள்ளி அனைத்து முத்தத்தில் குளிப்பாட்டினான் துருவன். மகளை கொஞ்சி கலையாரிய பிறகு, "யாரோட வந்த?" என்று விசாரித்தான். அவள் தாயின் பக்கம் கைகாட்டினாள்.



அதுவரை கணவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த மாயா, அவன் தன் பக்கம் திரும்பிய போது சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டாள். அவனுடைய பார்வையை சந்திக்க மனமில்லை அவளுக்கு. குனிந்த தலை நிமிராமல் மதுராவின் அறைக்குள் நுழைந்தாள். தாயின் வற்புறுத்தலுக்கு இணங்கி உடன் வந்த பாரதியும் கடமைக்காக மதுராவை சென்று சந்தித்தாள்.



மனித மனம் எப்போது எப்படி மாறும் என்று யாராலும் கூற முடியாது. தன்னை போல் எந்த துன்பத்தையும் அனுபவிக்காமல் பெற்றோரின் அரவணைப்பில் ராஜகுமாரியாக வளம் வந்த மதுராவின் மீது மாயாவிற்கு பொறாமை இருந்தது உண்மைதான். ஆனால் அந்த பொறாமைக்கு வித்திட்டது பிரபாவதியின் அதிகப்படியான அலட்டல் என்பது மாயாவின் மனதிற்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.



குடும்பமே ஒன்றாக சேர்ந்து ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி கலந்தாலோசிக்கும் போது மருமகளை மட்டும் நாசுக்காக ஒதுக்கிவிடுவது பிரபாவதியின் வழக்கம். மகளுக்கு ஏதேனும் நல்லது நடக்கும் போது கண் பட்டுவிடுமோ என்று அவளுடைய வெற்றிகளை மாயாவிடமிருந்து மறைப்பது அவளுடைய மனப்பாங்கு. மருமகளின் காதுப்படவே அவளுடைய குடும்பத்தை ஜாடையாக பழிப்பதும் இகழ்ந்து பேசுவதும் அவளுடைய துர்குணம். பிரபாவதியின் சின்னச்சின்ன செயல்கள் நாளடைவில் மாயாவின் மனதை முழுக்க முழுக்க நஞ்சாக மாற்றியது. கணவனைத் தவிர ஒட்டுமொத்த குடும்பத்தையும் வெறுத்தாள்.



அப்போதுதான் மதுராவின் திருமணப் பேச்சு ஆரம்பமானது. அவளுக்கு வரும் மாப்பிள்ளைகள் மாயாவிடமிருந்து மறைத்து வைக்கப்படுவதை அறிந்த போது அவள் மனம் கல்லாக மாறியது. அதோடு நிற்கவில்லை... நரேந்திரமூர்த்தி மதுராவை தேவ்ராஜிற்கு கொடுக்க வேண்டும் என்று கூறினார். அவ்வளவுதான்... வெறும் வாய்க்கு கிடைத்தது அவல் என்று அவன் பெயரை ஆளாளுக்கு மென்று துப்பினார்கள். மாயாவின் காதுப்படவே அவள் அண்ணனுடைய குணத்தையும் தொழிலையும் கழிவென இகழ்ந்து, மதுராவை புண்ணியாத்மா என்று கூறி அவளை கோபுரத்தில் கொண்டுச் சென்று அமரவைப்பது போல் பீற்றி கொண்டார்கள். அனைத்தையும் அதே வீட்டிலிருந்தபடி சகித்துக் கொண்ட மாயா, மதுராவை வெறுத்தாள். அது தவறென்று அவளுக்கு தோன்றவில்லை. அந்த வீட்டிலிருக்கும் யாரையும் அவள் மனதிற்கு பிடிக்கவில்லை. அவர்களுடைய மகிழ்ச்சி அவளுக்கு வயிற்றெரிச்சலாகத்தான் இருந்தது.



மதுராவின் கண்ணீரில் அந்த வீடே கதறும் என்றால் அவள் அழட்டும் என்று எண்ணினாள். அவள் எண்ணியது ஈடேறுவதற்குள் தன் அண்ணனின் விருப்பம் அவள் மீது இருப்பதை தெரிந்துக் கொண்டாள். மனதிற்குள் இருக்கும் வெறுப்பை அப்படியே ஓரம் கட்டிவிட்டு அந்த காரியத்தை செய்தாள். மதுராவிற்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திவிட்டு அவளை தன் அண்ணனோடு சேர்த்து வைத்தாள்.



சுயநலம் தான்... சதி வேலைதான்... ஆனால் அதற்காக அவள் அன்று வருத்தப்படவில்லை. தேவ்ராஜை போல் ஒரு மாப்பிள்ளைக் கிடைக்க மதுரா கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று தான் நினைத்தாள். அந்த எண்ணம் தவறோ என்று இன்று தோன்றியது. கையில் கட்டோடு கண்மூடி படுத்திருக்கும் மதுராவைக் கண்டு அவள் மனம் பரிதாபப்பட்டது.



மதுரா மாயாவிற்கு பிடிக்காதவள் தான்... வெறுப்பிற்கு உள்ளானவள் தான்... ஆனால் அவள் இவ்வளவு தூரம் உயிர்வதை படவேண்டும் என்று மாயா எண்ணியதில்லை. தேவ்ராஜின் செய்த காரியத்தை அவள் மனம் ஏக்கவில்லை. தமையனை தனியாக அழைத்து பேசினாள்.



"என்ன தேவ் பாய் இதெல்லாம்? அவ மேல இன்ட்ரெஸ்ட் இருந்ததாலதானே கல்யாணம் பண்ணுனீங்க! அப்புறம் ஏன் இப்படி?"



"ப்ச்... எதையும் கேட்காத மாயா. என்கிட்ட எந்த பதிலும் இல்ல. நீ வீட்டுக்கு கிளம்பு" - பேச்சை தவிர்க்க முயன்றான் தேவ்ராஜ்.



"ஒரே அறை... என்னால இப்பவும் அந்த அவமானத்துலேருந்து வெளியே வர முடியல தேவ் பாய்... துருவனோட முகத்தைக் கூட என்னால பார்க்க முடியல... நீங்க ஏன் இப்படி பண்ணுனீங்க? நாளைக்கு உங்க லைஃப் எப்படி ஸ்மூத்தா போகும்?" - பதில் சொல்ல முடியாமல் எங்கோ வெறித்தான் தேவ்ராஜ்.



"நீங்க சந்தோஷமா இருக்கணும்னு தான் நான் அவ்வளவு பெரிய ரிஸ்க்கை எடுத்தேன்... ஆனா நா செஞ்ச காரியத்துக்கு இப்போ அர்த்தமே இல்லாம போயிடிச்சு" - வருத்தத்துடன் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றாள்.



 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 81



வீட்டுக்கு புறப்படும் நேரம் நெருங்கிவிட்டது. ஆதிராவைத் தேடி அலைந்த மாயாவின் கண்கள் ஏமாற்றத்துடன் தாயின் பக்கம் திரும்பியது.



"குட்டிமா துருவனோட கேன்டீன்ல இருக்கா... இப்ப தான் பார்த்துட்டு வந்தேன்" - மகளின் முகத்தை பார்த்தே அவளுக்கு தேவைப்பட்ட விபரத்தை அளித்தாள் இராஜேஸ்வரி.



யாரை அனுப்பி குழந்தையை அழைத்து வர சொல்வது என்று புரியாமல் சற்று நேரம் காத்திருந்தாள் மாயா. நேரம் கடந்துக் கொண்டே சென்றது. குழந்தை தானாக நம்மை தேடி வருவாள் என்கிற மாயாவின் நம்பிக்கை நீர்த்துப் போனது. இப்போது இருக்கும் சூழ்நிலையில், குழந்தையை அழைத்துவர யாரை அனுப்பினாலும் பிரச்சனை பெரிதாகும் வாய்ப்பு இருப்பதாக தோன்ற, வேறு வழியின்றி அவளே கேன்டீனுக்கு சென்றாள்.



குழந்தை அவள் தந்தையின் மடியில் அமர்ந்திருந்தாள். அவன் அவளிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தான். தூரத்திலிருந்தபடி அவர்களை பார்த்த மாயா சற்று தயங்கி நின்றாள். பிறகு மனதை திடப்படுத்திக் கொண்டு அவர்களிடம் நெருங்கினாள்.



"குட்டிமா... டைம் ஆச்சுடா... கிளம்பு..." - அவன் முகத்தை ஏறிட்டு பார்க்காமல் கூறினாள்.



ஆதிரா தாயை நிமிர்ந்து பார்க்காமல் தந்தையின் வயிற்றை இன்னும் இறுக்கமாக கட்டி கொண்டாள். அவளுடைய செய்கை மாயாவை வருத்தியது.



"குட்டிமா... கிளம்புடா..." என்றாள் அமைதியாக.



"டாடியும் வரணும்..." - பிடிவாதத்துடன் ஒலித்தது குழந்தையின் குரல்.



"நா போறேன். நீ வரியா இல்லையா?" - கண்டிப்புடன் கேட்டாள்.



"வரல..." - மகளின் வெடுக்கென்ற பேச்சில் புண்பட்டுப்போன மாயா, "அம்மா வேண்டாமா உனக்கு?" என்றாள் மனதிலிருக்கும் வேதனையை மறைத்தபடி.



"டாடி வேணும்" - தாயை திரும்பிப் பார்க்காமலேயே பேசினாள் ஆதிரா. துருவனுக்கு சங்கடமாக இருந்தது. மனைவியின் வருத்தத்தை அவன் ரசிக்கவில்லை.



"அதி குட்டி... இப்போ அம்மா கூட கிளம்புங்க. நாளைக்கு வந்து டாடியை பார்க்கலாம்..." என்று கூறி மகளை சமாதானம் செய்து அவளோடு அனுப்ப முயன்றான். ஆனால் அவள் கேட்கவில்லை. அடம் செய்து அழ துவங்கிவிட்டாள்.



மாயாவின் முகம் செத்துப் போய்விட்டது. ஆதிரா எதுவும் அறியா குழந்தை என்று மாயாவிற்கு புரிந்தாலும் அவள் தன்னை புறக்கணிப்பதாகவே தோன்றியது அவளுக்கு. அதுவும் அவளை வேண்டாம் என்று ஒதுக்கிய கணவனுக்கு முன்னிலையில் அவள் இப்படி செய்வது உயிர் போவது போல் இருந்தது. அவமானத்தில் முகம் சிவந்தது. ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது.



"குட்டிமா... நீ இப்போ வர போறியா இல்லையா?" - கோபத்துடன் அதட்டினாள்.



"ப்ச்... அவ குழந்தை. ஏன் அவகிட்ட சத்தம் போடற... உட்காரு இப்படி..." - சமாதானத்திற்கு முதல் அடியை எடுத்து வைத்தான் துருவன்.



கேண்டீனிலிருந்து வரும் பொழுது மூவரும் ஒன்றாக வந்தார்கள். மாயாவின் கண் இமைகள் தடித்திருந்தன. விழிகளும் முகமும் சிவந்திருந்தன. குடும்பத்தில் அனைவருடைய பார்வையும் அவர்கள் மீதே பதிந்திருந்தது. தன் கையிலிருந்த குழந்தையை மனைவியிடம் கொடுத்து,"பார்த்து போ..." என்றான். அவள் பதில் சொல்லாமல் குழந்தையை வாங்கி கொண்டு பாரதியை பார்த்தாள். சகோதரியின் பார்வையை புரிந்துக் கொண்டு, தாயிடம் விடைபெற்று உடன் கிளம்பினாள் தங்கை.



***********************



இரண்டாவது நாள் மதுரா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். பிரபாவதி மகளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லும் முடிவில் இருந்தாள். கடைசி நேரத்தில் இது ஒரு பிரச்சனையாகக் கூடாது என்று நினைத்த நரேந்திரமூர்த்தி, தங்கையை தனியே அழைத்து தங்களுடைய முடிவை சொன்னார். இராஜேஸ்வரிக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை. சில நாட்கள் அவள் தாய் வீட்டில் இருந்துவிட்டு வரட்டும். அப்போதுதான் தன் மகனுக்கும் மனைவியின் அருமை புரியும் என்று எண்ணி சம்மதித்தாள்.



விஷயத்தை கேள்விப்பட்ட தேவ்ராஜ் தாயிடம் கடுப்படித்தான். "எதுக்கு சரின்னு சொன்னீங்க? அவ எங்கேயும் போகமாட்டா... நம்ம வீட்டுக்குத்தான் வருவா. அவருகிட்ட போயி அனுப்ப முடியாதுன்னு சொல்லுங்க" என்றான் எரிச்சலுடன்.



"நாம என்னப்பா அனுப்பறது. முடிவை அவங்க எடுத்திருக்காங்க"



"அவங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு என்னோட விஷயத்துல முடிவெடுக்க?"



"அவங்க பொண்ணு சம்மந்தப்பட்ட முடிவை அவங்க எடுக்கறாங்க. நீ எப்படி அதை தடுப்ப உனக்கு என்ன அதிகாரம் இருக்கு? பேசாம போ..." - கோபப்பட்டாள். தேவ்ராஜ் டென்ஷனுடன் உதட்டை கடித்தான். சற்றுநேரம் தீவிர யோசனையுடன் நின்றவன் பிறகு மதுராவிடம் சென்று, அவளிடம் பேச முயன்றான்.



ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்த மதுராவின் முகம் தேவ்ராஜை கண்டதும் இறுகியது. அவனுடைய பார்வையை சந்திக்க விரும்பாமல் தலை குனிந்துக் கொண்டாள். அழுத்தமான காலடிகளுடன் அவளிடம் நெருங்கி... கட்டிலுக்கு அருகே சேரை இழுத்துப்போட்டு அமர்ந்தான். ஓரிரு நிமிடங்கள் மெளனமாக அமர்ந்திருந்தவன் பிறகு ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு,



"மது... வீட்டுக்கு வா..." என்றான் அவளுடைய கையை பிடித்தபடி. அவனுடைய குரலிலும் முகத்திலும் தெரிந்த வருத்தம் மதுராவின் மனதை தொடவில்லை. உதடுகளை அழுந்த மூடியபடி இறுக்கமாக அமர்ந்திருந்த மனைவியின் மனம் கண்ணாடி போல் தேவ்ராஜின் கண்களுக்கு புலப்பட்டது.



"ப்ளீஸ்... டோன்ட் கோ அவே ஃப்ரம் மீ" - யாசித்தான். என்ன சொல்ல போகிறாளோ என்று மனம் பரிதவித்தது. புண்பட்டு போயிருந்த மதுராவின் மனம் அவனுடைய யாசிப்பையும் பரிதவிப்பையும் உள்வாங்கிக்கொள்ளவில்லை. உணர்வுகளை உள்ளே தள்ளி இரும்பு கதவுபோட்டு பூட்டிக் கொண்டவள் போல் இறுக்கமாக அமர்ந்திருந்தாள். தேவ்ராஜின் மனம் தவித்தது.அவளுடைய இந்த விலகலும் இறுக்கமும் அவனை அச்சுறுத்தியது.



"மது... ஐ ப்ராமிஸ் யூ... இனி... இனி இப்படி நடக்காது... ப்ளீஸ்..." - எடுத்துக்கூறி அவளை சமாதானம் செய்ய முயன்றான். அவள் எதற்கும் அசைந்துக் கொடுக்கவில்லை.



"ஐ காண்ட் லீவ் யூ மது... என்னால உன்ன... விட முடியாது... நிச்சயமா முடியாது..." - இயலாமையுடன் கூறினான். மதுராவின் பார்வை தன் கையில் சுற்றப்பட்டிருந்த சப்போர்ட் பெல்ட்டில் பதிந்தது. அவன் பிடியில் சிக்கியிருந்த இன்னொரு கையை நாசுக்காக உருவி, அந்த பெல்ட்டை வருடியபடி, "லீவ் மீ அலோன்" என்றாள் மெல்ல.



அவள் குரலில் இருந்த அந்நியத்தன்மை நெருஞ்சி முள்ளாக அவன் உள்ளத்தை தைத்தது. அவள் முகத்தையே சற்று நேரம் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன், "ஐம் சா...ரி... " என்று முணுமுணுத்தான்.



அன்று மதுராவை பார்ப்பதற்காக மாயா குழந்தையோடு மருத்துவமனைக்கு வந்தாள். அவள் வரவேண்டுமே என்று ஆவலாக காத்திருந்த துருவன் மனைவியைக் கண்டதும் ஆசுவாசமடைந்தான். அவள் காரிலிருந்து இறங்கும் போதே அவளிடம் நெருங்கி மகளை கையில் ஏந்தி கொண்டான். மனைவியோடு சேர்ந்து நடந்து தங்கையின் அறைக்கு சென்றான். பூனைக்குட்டி போல் அவள் செல்லுமிடமெல்லாம் பின்னால் சென்றுக் கொண்டே இருந்தான். வெளியே அனுப்பும் போது சுலபமாக அனுப்பிவிட்டான். இப்போது 'வீட்டுக்கு வா...' என்று ஒரு வார்த்தை சொல்வது அவ்வளவு சுலபமாக இல்லை.



மிகுந்த பதட்டத்துடன் மகளை கையில் சுமந்தபடியே சுற்றிக் கொண்டிருந்தவன் மதுராவின் டிஸ்சார்ஜ் ப்ரொஸிஜெரெல்லாம் முடிந்த பிறகு மீண்டும் மனைவியிடம் நெருங்கினான்.



குடும்பத்தினர் அனைவரும் அவர்களை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். அவன் யாருடைய ஆலோசனைக்காகவும் சம்மதத்திற்காகவும் காத்திருக்கவில்லை. தன்னுடைய மனைவியும் குழந்தையும் தனக்கு வேண்டும் என்று தோன்றியது... தானே முன்வந்து அவளை, "வீட்டுக்கு வா" என்று அழைத்தான்.



கணவனை நிமிர்ந்து பார்க்காமல் குனிந்து கைவிரல்களை ஆராய்ச்சி செய்தபடியே, "யார் வீட்டுக்கு?" என்று வினவினாள் மாயா.



அவள் வில்லங்கமாக எதையோ சொல்லப்போகிறாள் என்று ஊகித்தபடி, "நம்ம வீட்டுக்குத்தான்" என்றான்.



"நம்ம வீட்டுக்கா! ஹா..." - கசப்பாக புன்னகைத்தாள். துருவன் பதில் சொல்லாமல் மனைவியின் முகத்தை கூர்மையாகப் பார்த்தான்.



"உங்க வீட்டுக்குன்னு சொல்லுங்க. அந்த வீட்ல எனக்கு என்ன உரிமை இருக்கு?"



"நீ செஞ்சது தப்புன்னு இன்னமும் உணரலையா?" - அவன் முகத்தில் கடுமை வந்தது.



சட்டென்று அவனை திரும்பிப் பார்த்த மாயா, "நீங்க செஞ்சது? அது சரியா?" என்றாள்.



"நடந்தது நடந்து முடிஞ்சிடிச்சு. அதை பத்தி பேசறதுனால எந்த பிரயோஜனமும் இல்ல... இன்னைக்கு மதுரா இருக்கற நிலைமைக்கு முக்கியமான காரணம் நீதான்... அதையும் மீறி நா உன்கிட்ட வந்து நிக்கிறேன்... இதுக்கு மேலையும் விவாதம் பண்ணி பிரச்னையை பெருசாக்கணும்னு நீ நினச்சா அப்புறம் உன்னோட இஷ்ட்டம்..." - கண்டிப்புடன் கூறினான்.



ஒரு காலத்தில் காதல் பொங்கி வழிந்த அவன் கண்களில் இப்போது கடுமையை காண்பது அவளுக்கு வேதனையாக இருந்தது. ஆனால் இதுதான் வாழ்க்கை... இதுதான் நிதர்சனம்... எல்லா நேரத்திலும் நம்முடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிடாது. தன்னை அவமதித்ததற்காக கணவன் கடுமையாக வருந்த வேண்டும்... உருகி கரைய வேண்டும் என்றெல்லாம் மாயாவின் மனம் எதிர்பார்க்கத்தான் செய்தது. ஆனால் துருவனின் எல்லை மாயாவின் எதிர்பார்ப்பை எட்டித் தொடவில்லை. இருவருக்கும் இடையே பெரிய பள்ளம் இருந்தது. அதை அப்படியே விட்டுவிட்டால் பள்ளம் அதல பாதாளமாக மாறி அவர்களுடைய வாழ்க்கையை விழுங்கிவிடும் என்கிற அச்சம் அவளுக்குள் எழுந்தது. விட்டுப்பிடிப்பதுதான் வாழ்க்கை... வீம்புப்பிடித்தால் வெறுமைதான் மிஞ்சும் என்பதை அறிந்து, மனதிற்கு பிடிக்கவில்லை என்றாலும் கணவனோடு சேர்ந்து அவனுடைய வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தாள் மாயா.



 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 82

மருத்துவமனையிலிருந்து நேராக ஜுஹூவிற்கு அழைத்து வரப்பட்டாள் மதுரா. தாயின் அரவணைப்பும் ஆதரவும் அவளை சற்று ஆசுவாசப்படுத்தியிருந்தாலும், எதையோ தொலைத்துவிட்ட ஒரு உணர்வு அவளுக்குள் மிக ஆழமாக ஊடுருவியிருந்தது. அவளுக்கு பழக்கப்பட்ட அல்லது அவள் விரும்பிய ஏதோ ஒன்று இப்போது அவளிடம் இல்லை... இனி இருக்கப்போவதும் இல்லை... தனிமை... முழுமையின்மை... - இதை எப்படி சொல்வது...! எப்போதும் உள்ளே ஒரு வலி... பாரம்... துக்கம்... இருந்துக் கொண்டே இருந்தது. எதுவும் பேச பிடிக்கவில்லை... யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை... எதையும் கேட்கப் பிடிக்கவில்லை... அம்மா கொடுக்கும் மாத்திரையை போட்டுக் கொண்டால் நன்றாக தூக்கம் வருகிறது. தூங்கிவிட்டால் இந்த வலி... துக்கமெல்லாம் தெரிவதில்லை... அமைதி கிடைக்கிறது... நிம்மதி கிடைக்கிறது...



எந்த நேரம் பார்த்தாலும் உறங்கி கொண்டே இருக்கும் மகளைக் கண்டு அச்சம் கொண்ட நரேந்திரமூர்த்தி, "என்ன பிரபா... மது இப்படி தூங்கிகிட்டே இருக்காளே!" என்றார் கவலையுடன்.



"மருந்து சாப்பிடறால்ல... அதனாலதான்... வேற எதுவும் இல்ல... பயப்படாதீங்க"



"என்ன மருந்தோ ஏதோ... கண்டதையும் கொடுத்து அவ உடம்புக்கு ஏதாவது ஆயிடப்போகுது..."



"அதான் மொத்தமா நொறுக்கி மூட்டை கட்டி கொடுத்தனுப்பீட்டானே! இன்னும் என்ன இருக்கு வீணா போறதுக்கு" - முகம் சிவந்தாள்.



"சரி அதை விடு..." என்று அந்த பேச்சை தவிர்த்தவர், "அபார்ஷன் பத்தி எதுவும் பேசுனியா? நீபாட்டுக்கும் மருந்தை கொடுத்துக்கிட்டு இருக்க. நாளைக்கு அவ முடியாதுன்னு சொன்னா குழந்தைக்கு ஏதாவது ஆயிடும் பார்த்துக்க" என்றார்.



"அவ ஏன் முடியாதுன்னு சொல்லப் போறா... நம்மள மீறி எப்ப நடந்திருக்கா. உங்க பேச்சை கேட்டுகிட்டு அந்த வீணாப்போனவனுக்கே கழுத்தை நீட்டினா... இப்போ அவனையும் அவனோட வாரிசையும் மொத்தமா தலைமுழுகறதுக்கு மாட்டேன்னு சொல்லிடுவாளா" - நம்பிக்கையுடன் பேசினாள்.



"நீயாவே எல்லாத்தையும் முடிவு பண்ணிக்காத. அவகிட்ட பேசிடு" - மனைவியை எச்சரித்தார்.



"சரி சரி... இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்துடுவா... நா பார்த்துக்கறேன்" என்று கணவனுக்கு உறுதிக்கு கொடுத்த பிரபாவதி, சொன்னது போலவே மதுரா எழுந்ததும் அவளிடம் பேசினாள்.



மாலை நேரம்... உறக்கத்திலிருந்து எழுந்த மதுரா மெத்தையைவிட்டு இறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். களைந்த கேசமும் சிவந்த விழிகளுமாக உறக்கக் கலக்கத்தோடு அமர்ந்திருக்கும் மகளிடம் நெருங்கி, "ஏன் இப்படியே உட்கார்த்திருக்க? எழுந்து போயி முகம் கழுவிட்டு வா... தலை சீவி நெத்தில பொட்டு வையி... என்ன குடி முழுகி போச்சு இப்போ" என்று மகளிடம் பேச்சு கொடுத்து அவளை இயல்பாக்க முயன்றாள். செவிடன் காதில் சங்கு ஊதுவது போல ஏதோ சிந்தனையிலேயே அமர்ந்திருந்தாள் மதுரா. ஒரு முறைக்கு பத்து முறை சொன்ன பிறகே படுக்கையிலிருந்து எழுந்தாள். தாயின் கட்டாயத்திற்காக முகம் கழுவி தலைவாரினாள்.



"வா... இப்படி வெளிய வந்து உட்க்காரு. எப்பவும் ரூம்லேயே அடைஞ்சு கிடைக்கணுமா?" - மகளை கூடத்திற்கு அழைத்து வந்து சோபாவில் அமர வைத்து தானும் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.



"நீ வருத்தப்படற அளவுக்கு எதுவும் கெட்டுப்போயிடல... நானும் டாடியும் இருக்கோம்ல? இதெல்லாம் சரி பண்ணிட மாட்டோம்? எதுக்கு கவலைப்படற நீ?" - மகளிடம் பேசி தைரியம் கொடுத்தாள். உணர்வுகளற்று வெறுமையாய் அமர்ந்திருந்த மதுராவின் செவிகளில் எதுவும் ஏறியதாகத் தெரியவில்லை. ஆனாலும் பிரபாவதி தொடர்ந்து பேசினாள்.



"பாரு மது... அவன் ஒரு காட்டான். தெரியாத்தனமா உங்க டாடி உன்ன அவன்கிட்ட மாட்டிவிட்டுட்டாரு. இப்போ ஒண்ணும் கெட்டுப்போயிடலை... நல்லதுதான் நடந்திருக்கு. அவன்கிட்டேருந்து விடுதலையாகி வர்றதுக்கு இது ஒரு நல்ல சான்ஸ். இதை நாம விட்டுடக் கூடாது"



"எங்க காலத்திலேயே புருஷன் மனைவி மேல கை வைக்க முடியாது. இந்த காலத்துல இவன் இப்படி ஒரு மனுஷன் இருக்கான்! ஹி இஸ் எ சிக் மேன்... அவன்கிட்டேருந்து வெளியே வந்துடறதுதான் நல்லது" என்று கூறி மகளின் முகத்தை சற்று நேரம் ஆழ்ந்து பார்த்தவள், "இந்த கரு... இது வேண்டாம் நமக்கு... மூணு மாசம் தானே... கலச்சுவிட்டுடுவோம்... கொஞ்ச நாள் ஃப்ரீயா இரு. அதுக்கு பிறகு உனக்கு ஒரு நல்ல லைஃபை அமைச்சு கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு" என்றாள்.



மகளுடைய ரியாக்ஷன் என்ன என்பதை தெரிந்துகொள்ளும் ஆவலில் பிரபாவதியின் விழிகள் அவள் முகத்தில் நிலைத்திருந்தது. மதுராவிடம் எந்த மாற்றமும் இல்லை. அதே உணர்வுகளற்ற முகம்... ஆனால் அவளுடைய உதடுகள் பிரிந்தன. ஏதோ சொல்ல போகிறாள்... என்ன... சம்மதித்துவிடுவாளா... எதிர்பார்ப்புடன் மூச்சைப் பிடித்துக் கொண்டு மகளை கவனித்தாள் பிரபாவதி. "பசிக்குது... சாப்பிட என்ன இருக்கு?" - முணுமுணுப்பாக வெளிப்பட்டது மதுராவின் குரல்.



சப்பென்று ஆகிவிட்டது அவளுக்கு! இதுதான்... இதை மட்டும்தான் மருத்துவமனையிலிருந்து வந்ததிலிருந்து செய்து கொண்டிருக்கிறாள். சாப்பிடுவது... உறங்குவது... என்னதான் ஆயிற்று இவளுக்கு... செய்வதற்கு... பேசுவதற்கு வேறு எதுவுமே இல்லையா! ஏன் இப்படி ஆகிவிட்டாள்! - நரேந்திரமூர்த்திக்கு இருந்த கவலை இப்போது பிரபாவதிக்கும் வந்தது.



எதேர்ச்சையாக தன்னுடைய அறையிலிருந்து வெளியே வந்த மாயா, பிரபாவதியின் பேச்சை கேட்டு பேரதிர்ச்சிக்கு ஆளானாள். அதைவிட மதுராவின் ரியாக்ஷன் அவளுடைய விழிகளை வெளியே தள்ளியது. 'குழந்தையை அழிக்க வேண்டும் என்று ஒருத்தி சொல்லிக் கொண்டிருக்கிறாள்.... இவள் என்னடாவென்றால் பசிக்கிறது என்கிறாளே!' - அவளுக்கு மயக்கம் வராத குறைதான். கால் கையெல்லாம் வெடவெடத்தது... என்ன செய்வது என்று புரியவில்லை. இப்போதுதான் சமாதானமாகி வந்திருக்கிறோம்... அதற்குள் இவளுடைய பிரச்சனையில் மூக்கை நுழைப்பதா என்கிற பயம் ஒருபக்கம் இருந்தாலும்... குழந்தை அவளுடைய அண்ணன் குழந்தையாயிற்றே! விட்டுவிட முடியுமா! மனம் கேட்கவில்லை.



வீட்டுக்கு வந்ததிலிருந்து கணவனிடம் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தவள் இப்போது வலியச் சென்று பேசினாள். "அபார்ஷன்னு பேசிக்கிறாங்களே... நீங்க எதுவும் சொல்லக் கூடாதா?" என்றாள்.



"மதுராவோட டிஸிஷன் தான் இறுதி... அவ என்ன முடிவெடுத்தாலும் நா கூட இருப்பேன். எதிர்க்க மாட்டேன்" - துருவன்.



"எதிர்க்க வேண்டாம். எடுத்து சொல்லலாம்ல... அபார்ஷன் பண்ணறதுன்னா அவ்வளவு ஈஸியா போச்சா உங்களுக்கு?" - கோபப்பட்டாள் மாயா.



"இந்த பிரச்னையை நமக்குள்ள கொண்டு வராம இருக்கறது நம்மளோட லைஃபுக்கு நல்லது" - உறுதியான குரலில் அவன் தன்னுடைய நிலைப்பாட்டை கூறிவிட மாயா வாயடைத்துப்போனாள்.



சமயம் கிடைக்கும் போதெல்லாம் பிரபாவதி மதுராவின் மூளையை கழுவிக் கொண்டிருந்தாள். அதைப் பார்க்கப்பார்க்க மாயாவிற்கு வயிற்றை கலக்கியது. வேறு வழியே இல்லாமல் அலைபேசியை கையில் எடுத்தாள்.



*************************



தேவ்ராஜ் வெகு இயல்பாக இருந்தான். மதுரா வீட்டில் இருக்கும் போது எப்படி இருந்தானோ அப்படித்தான் இப்போதும் இருந்தான். நன்றாக உண்டு, உறங்கி, உடுத்தி கட்டுக்குலையாமல் கம்பீரமாகவே இருந்தான். அலுவலகத்திற்கு போவதும் வருவதும், அலைபேசியை கட்டி கொண்டு அழுவதுமாக இருக்கும் மகனைக் நினைத்து வெதும்பினாள் இராஜேஸ்வரி.



மதுராவை இங்கிருந்து அனுப்பியது தவறோ என்று தோன்றியது அவளுக்கு. காரணம்... அவளோடு மருத்துவமனையிலிருக்கும் போது அவன் முகத்தில் இருந்த வாட்டம் இப்போது இல்லை. சிறிதும் இல்லை... எப்படி இப்படி இருக்கிறான்! மனைவியை பிரிந்த வருத்தமே இல்லையா அவன் மனதில்! அவனுடைய தந்தை கூட நம்மை சுற்றிச்சுற்றி வந்தாரே! அவரைவிட மோசமானவனா என் மகன்! - அவள் மனம் வருந்தியது. தாயறியா சூல் உண்டோ என்று கூறுவார்கள்... ஆனால் இங்கே இருந்தது. தேவ்ராஜின் மனம் தாய் கூட அறியமுடியாத சூலாகத்தான் இருந்தது.



மாலை ஆறு மணியிருக்கும். தேவ்ராஜின் கார் வாசலில் வந்து நின்றது. வீட்டுக்குள் நுழையும் போதே கையிலிருந்த கோட்டை வேலையாள் ஒருவனிடம் தூக்கிப் போட்டுவிட்டு, கழுத்தில் சுற்றியிருந்த டையை முரட்டுத்தனமாக உருவி எறிந்தான். முழுக்கை சட்டையின் மணிக்கட்டு பொத்தானை அவிழ்த்து சட்டையை முட்டிக்கை வரை மடித்துவிட்டுக் கொண்டு, "காபி கொண்டுவா..." என்று வேலையாளுக்கு உத்தரவிட்டபடி சோபாவில் பொத்தென்று அமர்ந்தான்.



மகனுடைய குரல் கேட்டு வெளியே வந்தாள் இராஜேஸ்வரி. அதுவரை அவன் அமர்த்தலாக இருக்கிறான்... இயல்பாக இருக்கிறான் என்று கறுவி கொண்டிருந்தவளின் மனம் மகனைக் கண்டதும் நொடி பொழுதில் அந்தர் பல்டி அடித்தது. அவனுடைய இறுக்கமான முகம் அவளை கவலைக்கொள்ள செய்தது.



"என்னப்பா ஆச்சு?"



"காபி கேட்டேன் ம்மா..." - எரிச்சலுடன் சிடுசிடுத்தான். அவ்வளவுதான். அதற்குமேல் எதுவும் பேச முடியாது. வேலைக்காரன் ட்ரேயோடு வந்து நின்றான். அவன் கொடுத்த கசந்த கருப்பு காபியை ருசித்து அருந்திவிட்டு, "பாரதி எங்க?" என்றான்.



"ரூம்ல..." - தாயின் பதிலை தலையாட்டி அங்கீகரித்துவிட்டு படிக்கட்டில் எறியவன், நேராக தங்கையின் அறைக்குள் நுழைந்தான்.



"அப்புறம்... அடுத்து என்ன பிளான்?" - அமர்த்தலாக அமர்ந்துக் கொண்டு அவளிடம் புருவம் உயர்த்தினான்.



"என்ன தேவ் பாய்?" - புரியாமல் விழித்தாள் பாரதி.



"ஏதோ சொன்னியாமே! அம்மாகிட்ட..."



"ஆங்.... எம்பிஏ பண்ணலான்னு..."



"என்ன திடீர்ன்னு... இத்தனை வருஷம் கழிச்சு படிப்பு மேல ஆசை வந்திருக்கு?"



"இல்ல... சும்மாதானே வீட்ல இருக்கேன். ஜஸ்ட் ஒரு டைவர்ஷன்..."



"ஓஹோ..." - என்றபடி தலையை ஆட்டிக் கொண்டே தன்னுடைய அலைபேசியை தட்டினான். உடனே அவளுடைய கையிலிருந்த அலைபேசி பீப் ஒலியெழுப்பியது.



"எடுத்து பாரு..." - அவனுடைய உணர்ச்சிகளற்ற குரல் அவள் புருவங்களை முடிச்சிடச் செய்தது. சிந்தனையுடன் அலைபேசியை திறந்தாள். வாட்ஸ் ஆப் செயலி ஒரு இளைஞனின் புகைப்படத்தை திரையில் காட்டியது. பாரதிக்கு பகீரென்றது. தமையனின் எண்ணத்தை ஊகித்தவளாக, "யார் இது?" என்றாள்.



"ஹி ஐஸ் த ஒன்... ஹூ இஸ் கோண பி யுவர் லைஃப்... பார்ட்னர்..." - அவள் கண்களை பார்த்து அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.



"வாட்!" - அதிர்ச்சியில் அவள் விழிகள் விரிந்தன.



"எஸ்... ஆல் பிக்ஸ்ட்" - இலகுவாகக் கூறினான்.



"நோ தேவ் பாய்... நோ..." பதட்டமடைந்தாள் பாரதி.



"ஏன்?" - அவனுடைய புருவம் சுருங்கியது. விழிகள் கூர்மையாகின.



"எனக்கு பிடிக்கல..." - இயலாமையுடன் கூறினாள்.



"ஐ வாண்ட் சாலிட் ரீஸன்...." என்று கண்ணோடு கண் பார்த்து அவளை கடுமையாக முறைத்தவன் "...புரியுதா?" என்று பற்களை நறநறத்தான். உள்ளுக்குள் உதறலெடுத்தது பாரதிக்கு.



"பாய் எனக்கு கல்யாணம் செஞ்சுக்க விருப்பம் இல்ல..." - கலங்கிப்போய் கூறினாள்.



"யார் காரணம்? அந்த மோனிகாவோட தம்பியா?" - கண்கள் இடுங்க கேட்டான்.



"நோ..." - உடனடியாக மறுத்தாள். அவளை நம்பகமில்லாமல் பார்த்தவன், "பின்ன?" என்றான்.



அமைதியான அழுத்தமான அந்த குரலுக்கு பதில் சொல்லாமல் யாராலும் புறக்கணிக்க முடியாது. இதயத்துடிப்பு அதிகமாகி வியர்த்து விறுவிறுத்து வறண்ட நா மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள, "தி...லீ...ப்..." என்று மெல்ல முணுமுணுத்தாள் பாரதி.



நாணருந்த வில்லாக விறைத்து நிமிர்ந்தான் தேவ்ராஜ். "வாட் யூ மீன்?" உறுமியது அவனது அடி குரல்.



"என்னால, அவனை என்னோட மைண்ட்லிருந்து எடுக்க முடியல தேவ் பாய்... நா ரொம்ப ட்ரை பண்ணறேன்... ஆனா... என்னால... முடியல..." - அவமானத்திலோ தன் மீதே தோன்றிய கோபத்திலோ முகம் சிவந்துவிட்டது அவளுக்கு.



"இல்ல... நா உன்ன நம்ப மாட்டேன்... ரெண்டு நாள் முன்னாடி நீ மோனிகாவை பார்த்திருக்க... ஐ காட் தி நியூஸ்.... அதுக்கு பிறகுதான் நான் இந்த ஏற்பாடு பண்ணினேன். இதை அவாய்ட் பண்ணறதுக்காக நீ பொய் சொல்ற... இதுதான் உண்மை... ஐ நோ ஆல் யுவர் அக்லி லைஸ் யூ டாம் இட்..." - அமைதியாக ஆரம்பித்தவன் போகப் போக குரலை உயர்த்திக் கத்தியபடி சீற்றத்துடன் எழுந்தான்.



"உண்மைதான் தேவ் பாய்... நா மோனிகா வீட்டுக்கு போனேன். ஆனா நா அங்க போனது அவங்களை பார்க்க மட்டும்தான். அவங்க தம்பியோட எனக்கு எந்த சம்மந்தமும் இல்ல... ஹி இஸ் நத்திங் டு மீ..." - உண்மையைத்தான் சொன்னாள். ஆனால் அந்த உண்மை அவனை திருப்திப்படுத்த வேண்டுமே!



"ஹவ் டேர் யூ! மோனிகா வீட்டுக்கு போனேங்கறதை என்கிட்டயே தைரியமா சொல்ற...! சரி இனி மறச்சு பேச எதுவும் இல்ல... எம்பிஏ - கிம்பிஏ ன்னு கதைவிடாம இப்போ சொல்லு. வாட்ஸ் யுவர் ட்ரு பிளான்?"



"எதுவுமே இல்ல தேவ் பாய்... ஜஸ்ட் மைண்ட் டைவர்ஷனுக்கு ஏதாவது படிக்கலாம்னு நினைக்கறேன். அவ்வளவுதான்"



"அப்போ எதுக்கு மோனிகாவோட ரிலேஷன்ஷிப்?"



"ஐ டோன்ட் நோ... அவங்ககிட்ட பேசும் போது எனக்கு.. ஏதோ... ஏதோ ஒரு குட் ஃபீல்... எனக்கு அது தேவைப்படுது..." - வெறுப்புடன் தலையை கோதினான் தேவ்ராஜ். கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டான். கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்ள முயல்கிறான் என்பதை அவளால் புரிந்துக்கொள்ள முடிந்தது.



"இங்க பார்... உனக்கு ரெண்டு ஆப்ஷன் தர்றேன். நம்பர் ஒன்... இந்த நிமிஷத்தோட மோனிகாங்கற கேரக்டரை உன்னோட மைண்ட்லேருந்து எரைஸ் பண்ணிடு... இல்ல... நம்பர் டு... மோனிகாவை இந்த உலகத்தை விட்டு நா எரைஸ் பண்ணறேன்... டெல் மீ... எது உனக்கு விருப்பமான ஆப்ஷன்?" - அவன் கண்களில் தெரிந்த மூர்க்கன் பாரதியின் கருத்தில் பதிய அவள் அடிவயிறு தடதடத்தது. அவன் மீது கோபம் பொங்கியது., அவனை வெறுப்புடன் முறைத்துப் பார்த்தபடி, "ஐ வோண்ட் எய்தார் மீட்... ஆர்... டாக் டு ஹர்... எனி...மோ...ர்" என்று கத்தினாள். உணர்ச்சிப்பிழம்பில் அவள் உடல் நடுங்கியது. முகமெல்லாம் சிவந்து கண்களில் கண்ணீர் வடிந்தது.



அதீதமாக உணர்ச்சிவசப்பட்டு தன்னிலை இழந்த தங்கையை கண்டு ஒரு நொடி திகைத்த தேவ்ராஜ் சிந்தனையோடு நெற்றியை நீவியபடி அவளுடைய அறையிலிருந்து வெளியேறினான்.

 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
750
Reaction score
859
Points
93
அத்தியாயம் - 83

தங்கைகளுக்காக எதையும் செய்வான்... எந்த எல்லைக்கும் இறங்குவான் தேவ்ராஜ். அப்படிப்பட்ட அண்ணனை அவனுடைய அன்புத் தங்கை பார்த்த பார்வையில் ஏன் அத்தனை வெறுப்பு! அவ்வளவு கோபம்! - சிந்தனையோடு பாரதியின் அறையிலிருந்து வெளியேறினான் தேவ்ராஜ். இதே வெறுப்பை பலமுறை அவன் மதுராவின் கண்களிலும் கண்டிருக்கிறான். அப்போதெல்லாம் அவளுடைய வெறுப்பு மட்டும்தான் அவன் மனதில் பதிந்ததே தவிர அதற்கான காரணத்தை ஆராய தோன்றவில்லை. ஆனால் இன்று தோன்றுகிறது. உடன் பிறந்த தங்கையே அவனை அத்தனை துவேஷத்துடன் பார்க்கிறாள் என்றால் என்ன அர்த்தம்! கனத்த மனதுடன் தன் அறைக்கதவை திறந்தான். மதுரமாய் மதுரா நிறைந்திருந்த அறை இன்று வெறுமையாய் அவனை வரவேற்றது. தங்கையைப் பற்றிய நினைவுகள் பின்னோக்கி தள்ளப்பட்டுவிட மனைவியை மட்டும் மனதில் கொண்டு ஒரு பெருமூச்சுடன் உள்ளே நுழைந்தான்.



அந்த அறையில் அவளுடன் கழித்த பல இனிமையான தருணங்கள் அவன் சிந்தனையை சிறை செய்தன. அவளுடைய சிரிப்பு... வெட்கம்... கோபம்... அழுகை அனைத்தும் அவன் நினைவுகளை ஆக்கிரமித்து சிறிது சிறிதாய் அவனை சிதைக்கத் துவங்கின. அதோ அந்த கோச்சில் தான் அவள் மடியில் தலை சாய்த்து படுத்திருந்தான்... அதோ அந்த இடத்தில் தான் அவளை வழி மறித்து வம்பிழுத்தான். இதோ இந்த வார்ட்ராபில் தான் ஆடையை தேடுவது போல் அவளை சீண்டினான். அனைந்து இனிமையான நினைவுகளும் பாரமாய் மாறி அவன் மனதை அழுத்தியது. வெறுப்புடன் தலையை அழுந்த கோதியபடி மெத்தையில் அமர்ந்தான்.



அவளுடைய பிரத்யேக மணம் அந்த அறையில் நிறைந்திருந்த காற்றில் கலந்திருப்பது போல் தோன்ற, கண்கள் செருக ஆழமாக மூச்சை உள்ளிழுத்தான். மனபாரம் குறைவதற்கு பதில் இன்னும் அதிகமானது. அமர்ந்திருந்த நிலையிலேயே படுக்கையில் மல்லார்ந்து சாய்ந்தான். கால்கள் இரண்டும் தரைதட்டி நிற்க உடல் மட்டும் படுக்கையில் கிடந்தது. நினைவுகள் அவளையே சுற்றிக் கொண்டிருந்தன. எங்கு தவறு நடந்தது...? - சிந்தித்தான்.



'நடந்த பிரச்சினைகளுக்கெல்லாம் நாம்தான் காரணமா! நாம் மட்டும் தான் காரணமா! நம்மிடமிருந்து வெளிப்பட்ட கோபமெல்லாம் ரியாக்ஷன்ஸ் மட்டும் தானே!' - தெளிவு கிடைக்கவில்லை. எல்லாம் குழப்பமாக இருந்தது. எப்போது திரும்பி வருவாள் என்கிற ஏக்கம் மேலோங்கியது. மனம் சோர்ந்து போய் கண்களை மூடினான். அருகில் கிடந்த அலைபேசி வைப்ரேட் ஆனது. எடுத்து பார்த்தான். மாயா...! - 'புத்திசாலி... நல்ல காரியம் செய்தாள். கணவன் மனைவி பிரிந்திருப்பது ஒன்றும் அத்தனை எளிதான காரியம் அல்ல...' - துருவனின் மீது இருக்கும் கோபம் அப்படியே இருந்தாலும் தங்கையை பற்றி பெருமையாக நினைத்தபடி அழைப்பை ஏற்றான்.



"ம்ம்ம்... சொல்லு... குட்டிமா என்ன பண்ணறா?" - தமையனின் சோர்வான குரலில் துணுக்குற்ற மாயா தான் சொல்ல வந்ததை பின்னுக்குத் தள்ளிவிட்டு, "என்ன ஆச்சு தேவ் பாய்? ஏன் வாய்ஸ் என்னவோ போல இருக்கு?" என்றாள் கவலையுடன்.



"வாய்ஸா! என்னவோ போல இருக்கா! ப்ச்... அது அப்படியே இருக்கட்டும்.. நீ சொல்லு... எப்படி இருக்க?"



"நா நல்லாத்தான் இருக்கேன். அங்க என்ன நடந்துச்சு? நீங்க ஏன் இவ்வளவு டல்லா இருக்கீங்க?" - அவள் விடுவதாக இல்லை.



தேவ்ராஜ் சற்று நேரம் அமைதியாக இருந்தான். பிறகு மெல்ல கேட்டான்.



"என்னை பத்தி நீ என்ன நினைக்கிற மாயா?"



"என்ன!" - வியப்பும் குழப்பமுமாக ஒலித்தது அவள் குரல்.



"இல்ல... ஜஸ்ட்... சொல்லு... உன் மனசுல நா... எப்படிப்பட்டவன்?" - தயக்கத்துடன் கேட்டான்.



"மேன் ஆஃப் மில்லினியம்... பவர்ஃபுல் மான்ஸ்டர்... பிசினஸ் டைக்கூன்... மை பிரதர்..." - அவள் அடுக்கிக் கொண்டே போக, "நோ... நோ..." என்று அவளை தடுத்தவன்,



"ஐம் நாட் ஆஸ்கிங் அபௌட் ஆல் தீஸ் புல் ஷிட்..." என்று சிடுசிடுத்தான்.



"வேற என்ன?" - அவளுக்கு புரியவில்லை.



"ஆம் ஐ குட் அட் டீலிங் வித் பீப்பிள்?" - 'மனிதர்களை கையாள்வதில் நான் சிறந்தவனா?' - என்றான். மாயா சற்று நேரம் எதுவும் பேசவில்லை. அவன் பதிலுக்காக காத்திருந்தான்.



"தொழில்முறை மனிதர்களை கையாள்வதில் நீங்கள் சிறந்தவர் தான்" என்று பதிலளித்தாள். இப்போது மௌனம் அவன் முறையானது.



"பாய்?"



"வாட் அபௌட் பர்சனல் அண்ட் பேமிலி ரிலேஷன்ஷிப்ஸ்?" - அவனுடைய அந்த கேள்விக்கு அவளால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.



"ஏன் இதெல்லாம் கேட்கறீங்க?" என்றாள். சிறு தயக்கத்துக்கு பிறகு அவன் பாரதியின் விஷயத்தைப் பற்றி முழுவதுமாகக் கூறினான். அனைத்தையும் கேட்டு முடித்த பிறகு, "வெரி சாரி டு சே திஸ் தேவ் பாய். யு ஆர் நாட் ரியலி குட் அட் டீலிங் வித் பீப்பிள். அதுலயும் குறிப்பா எமோஷன்ஸை எக்ஸ்பிரஸ் பண்ணறதையும் தப்பா பண்ணிறீங்க... புரிஞ்சுக்கறதையும் தப்பா புரிஞ்சுக்குறீங்க" என்றாள்.



"ரியலி!" - 'அது எப்படி!' அவனுக்கே நம்ப முடியவில்லை.



"சத்தியமா... இது ஒரு சின்ன பிரச்சனை... நா அங்க தங்கியிருந்த கொஞ்ச நாள்ல எனக்கு என்ன புரிஞ்சதுன்னா, பாரதி ரொம்ப லோன்லியா இருக்கா. அவகூட நாம கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணி பேசினாலே ஈஸியா சால்வ் ஆகற பிரச்சனை அது. அதை நீங்க இன்னும் காம்ப்ளிகேட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க"



"ஆம் ஐ...?" - இதையும் அவனால் நம்ப முடியவில்லை. அவ்வளவு அசடாகவா இருக்கிறோம் என்று தோன்றியது. மாயா பாரதியை மனதில் கொண்டு சொன்னதை இவன் மதுராவிற்கு ஒப்பிட்டுப் பார்த்தான். சிந்தனையில் நெற்றி சுருங்கியது.



"தேவ் பாய்... பாரதி கவலையை விடுங்க. அது ஒரு விஷயமே இல்ல... நா பார்த்துக்கறேன். இப்போ இங்க ஒரு பெரிய பிரச்சனை கிளம்புது. அதை நீங்கதான் ஹாண்டில் பண்ணியாகணும்"



"இன்னொரு பிரச்சனையா! காட்..." - என்னவென்று கேட்கவே அச்சமாக இருந்தது. அவன் மனம் அவ்வளவு சோர்ந்திருந்தது. ஆனால் கேட்டுத்தானே ஆக வேண்டும்!



"சொல்லு... இப்ப என்ன புதுசா?" என்றான்.



ஓரிரு நொடிகள் எப்படி சொல்வது என்று யோசித்து வார்த்தைகளை சேகரித்துக் கொண்டு, "மதுராவுக்கு அபார்ஷன் பண்ணனும்னு பேசிகிட்டு இருக்காங்க" என்றாள்.



அமிலமென பாய்ந்த வார்த்தைகள் அவன் இதயத்தை பொசுக்க விருட்டென்று எழுந்து அமர்ந்தான். அந்த கணம் அவன் மனதில் ஊற்றெடுத்த உணர்வுகளை விளக்க வார்த்தைகள் இல்லை. இதற்கு முன் இப்படி ஒரு உணர்வை அவன் அனுபவித்ததும் இல்லை. கோபம் துக்கம் பயம் என்று பலவித உணர்வுகளின் கலவை அவனை புரட்டிப்போட்டது. நிலைகுலைந்து போய் அமர்ந்திருந்தவனுக்கு மொழி கூட மறந்து போனது.



அவன் ஏதாவது சொல்லுவான் என்று காத்திருந்த மாயா, 'புஸ்... புஸ்...' என்று மூச்சுவிடும் சத்தத்தை தவிர வேறு எதுவும் கேட்காததால், "பாய்..." என்று அழைத்து அவன் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க முயன்றாள். ஆனால் பலன் இல்லை. அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.



"ஹலோ... தேவ் பாய்..." - குரலை உயர்த்தினாள்.



"ஆங்..."



"என்ன ஆச்சு?"



"நத்திங்..." - குரல் கரகரத்தது.



"ஆர் யூ ஓகே?" - உடனே அவனிடமிருந்து பதில் வரவில்லை. சற்று நேரம் கழித்து,



"ம்ம்ம்... ஐம் ஆல்ரைட்..." என்றான். ஓரிரு நிமிட அவகாசத்தில் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டான்.



"என்ன பண்ணலாம்?"



"மதுரா... மதுரா என்ன சொல்றா?"



"ஷி இஸ் அவுட் ஆஃப் மைண்ட். அபார்ஷன் பண்ணலாம்னு சொல்றாங்க... இவ பசிக்குதுன்னு சொல்றா. அவளை நம்ப முடியாது" - அவன் பதில் சொல்லவில்லை. மாயா சொல்வதை அவன் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.



'அவள் எப்படி இதற்கு சம்மதிப்பாள். நிச்சயம் மாட்டாள்! நிச்சயம்... நிச்சயம்...' - அவன் மனம் உருப்போட்டது. அவள் இதை நடக்க விடமாட்டாள் என்று அவனுடைய உள்ளுணர்வு கூறியது. அவள் சுயநிலையில் இல்லை... அவள் மனநிலை சரியில்லை என்று மாயா எச்சரித்தும் கண்ணைமூடிக் கொண்டு குருட்டுத்தனமாக அவளை நம்பினான்.



"தேவ் பாய்... நீங்க நாளைக்கே இங்க வாங்க... வந்து சமாதானம் பண்ணுவீங்களோ இல்ல சண்டை போடுவீங்களோ... ஆனா மதுராவை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க. இல்லைன்னா குழந்தைக்கு ஆபத்து..." என்று பதட்டத்துடன் கூறிய தங்கைக்கு,



"இல்ல மாயா... மதுரா என்ன நினைக்கிறான்னு எனக்கு தெரியனும்" என்று நிதானமாக சொன்னான்.



"சீரியஸ்லி! தப்பான முடிவு தேவ் பாய்... ஏதாவது பிரச்சனை ஆயிடப் போகுது" - பயந்தாள். ஆனால் அவன் உறுதியாக இருந்தான்.



மதுரா தன்னோடு விரும்பி மனமொத்து வாழ்கிறாளா அல்லது கடமைக்காக காலத்தை கழிக்கிறாளா என்கிற சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே அவனுக்கு இருந்தது. அதற்கான விடை இப்போது கிடைக்கும் என்று தோன்றியது. பல நாட்கள் அவனை அலைக்கழித்து ஆட்டிப்படைத்த மன நிறைவின்மை... அலைபாய்தல்... பாதுகாப்பின்மை... இவற்றிலிருந்தெல்லாம் இப்போது விடுதலை கிடைக்கும் என்று தோன்றியது.



இன்று இருக்கும் சூழ்நிலை அவனுக்கு மிகவும் எதிரானது. அன்பு மனைவியின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறான். உற்றார் உறவினரின் வெறுப்புக்கும் இலக்காகியிருக்கிறான். பிரபாவதி அவனுக்கு எதிராக அவளை மூளை சலவை செய்து கொண்டிருக்கிறாள். அனைத்தையும் மீறி அவனுக்காக அவள் நிற்பாளா? - இந்த கேள்விக்கான விடையில் தான் இப்போது அவனுடைய சுவாசம் அடைபட்டிருக்கிறது.



அவள் மனதில் அவனுக்கு பரிபூரண இடம் இருந்தால், அவன் செய்த குற்றம் குறை அனைத்தையும் ஒதுக்கிவிட்டு அவன் பக்கம் நிற்பாள். அவனுடைய குழந்தையை பாதுகாப்பாள். - முட்டாள்தனம் தான்... மூர்க்கத்தனம் தான்... ஆனால் தேவ்ராஜ் பிடிவாதமாக இருந்தான். மதுரா அவன் மீது கொண்டிருக்கும் அன்பை, காதலை கண்கூடாக காண காத்திருந்தான்... மாத்திரையில் அடைபட்ட பேரரக்கன் கருவிலிருக்கும் தன் குழந்தையை மெல்லமெல்ல நெருங்கி கொண்டிருப்பதை அறியாமல்.





 

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom