Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஹாசினி சந்திரா - Comments

தந்தை உயிர் காக்க தத்தையவள் தத்தளிக்கிறாள்...


அறியாதவராயினும் ஆன்பு கொண்ட இதயம் பாசத்தை மட்டுமே அந்த நிமிடம் மனதில் நிறுத்தி...

முன்பின் அறியார்....முகபரிச்சயமற்றவர் என்பதை மறந்து பாதம் பணிய துணிகிறாள்...

நஞ்சு கொண்ட நாகங்களோ..மங்கையிவளை எமனிடம் பேரம் பேசியதை அறிவாளா...

பெற்ற தாய் மட்டுமின்றி மற்றவர்களூம்...

இவள் மடிந்து மண்மாதவை தழுவி விட்டாள் என நம்புவதை கேட்க நேர்ந்தால் என்ன செய்வாள்???
 
பெற்ற பெண்ணுக்காக அழுவதா..

கரை தொடும் கண்ணீரை ....

பொங்கும் முன் அணைகட்டி ...

கணவனுக்காக அரிதாரம் பூசியே நடிப்பதா...

அந்தோ இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது...

காதலித்து தான் திருமணம் செய்தேன்...

மனம் முகிழ்த்த வாழ்க்கை தான்...

பாசம் மிகுந்த பணம் படைத்த வாழ்க்கை தான்...

ஆனாலும்...இது இன்னொருவரின் சொந்தமாக சொர்க்கமாக இருந்தது...

இன்று அவர்கள் இருவரினுள்ளும் கடந்த கால அழகான சுவடுகள் அழியாமல் அழகோவியமாய்...

இதை பார்க்கையில்....எப்படி உணர்கிறேன்...

தாய்மொழி கூட வலிமையிழந்து போகிறது....

வார்த்தை பஞ்சத்தை என்னுள் விதைத்து.

ஆயினும் தெரிந்தே செய்த பயணம்...

வலிக்கிறதா...தவிக்கறதா...உணர முடியாமல்...உணர விரும்பாமல்.....
 
கண்டுகொண்டாள் கள்ளியிவள்...

மட்டியாய் புத்தி பேதலித்து விட்ட வார்த்தையில்...


உள்ளத்தால் நெருங்கி ....உருவத்தால் பிரிந்து கிடந்தோம்....


உன்னை சூழ்ந்த பகை...ஆள்துளை கிணரடி அணங்கே...

உன்னை காக்க உன்னிடமே போராடுகிறேன்...அரகிருக்கனாக.. .அரக்கனாக...
 

New Threads

Top Bottom