தீபா செண்பகம்
Well-known member
- Messages
- 53
- Reaction score
- 25
- Points
- 93
ஆதிசக்தி, ஒவ்வொரு அத்யாயத்துக்கும் அருமையான கவிதை வரிகளால் ரசனை மிக்க விமர்சனகவிதை கவிதை படைக்கிறீங்க. மிக்க நன்றி.பெற்ற பெண்ணுக்காக அழுவதா..
கரை தொடும் கண்ணீரை ....
பொங்கும் முன் அணைகட்டி ...
கணவனுக்காக அரிதாரம் பூசியே நடிப்பதா...
அந்தோ இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது...
காதலித்து தான் திருமணம் செய்தேன்...
மனம் முகிழ்த்த வாழ்க்கை தான்...
பாசம் மிகுந்த பணம் படைத்த வாழ்க்கை தான்...
ஆனாலும்...இது இன்னொருவரின் சொந்தமாக சொர்க்கமாக இருந்தது...
இன்று அவர்கள் இருவரினுள்ளும் கடந்த கால அழகான சுவடுகள் அழியாமல் அழகோவியமாய்...
இதை பார்க்கையில்....எப்படி உணர்கிறேன்...
தாய்மொழி கூட வலிமையிழந்து போகிறது....
வார்த்தை பஞ்சத்தை என்னுள் விதைத்து.
ஆயினும் தெரிந்தே செய்த பயணம்...
வலிக்கிறதா...தவிக்கறதா...உணர முடியாமல்...உணர விரும்பாமல்.....