அத்தியாயம் 71
இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் எல்லையிலிருந்து வெகுதூரம் தள்ளி ஈக்வேடார் கோட்டுக்கு வெளியே, இந்தோனேஷியா எல்லையில் நங்கூரமிடப்பட்டிருந்தது ஒரு கார்கோ கப்பல். அதாவது சரக்குக் கப்பல்.
விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்படும் டேங்கர் கப்பல்களில் சில கப்பல்கள் நடுக்கடலில்...
அத்தியாயம் 70
அன்றைய விடியல் எதையோ பெரிதாக இழந்துவிட்டது போன்றதொரு உணர்வுடனே விடிந்திருந்தது மிருதுளாவுக்கு. காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை. அவள் கண் விழிக்கும் போது படுக்கையில் அவளுக்கு அருகில் அர்ஜுன் இல்லை.
‘விடியற்காலை மூன்று மணியாகிவிட்டது, ஓய்வெடுக்க வேண்டும் என்று சொன்னவன் எப்போது...
அத்தியாயம் 69
“பைத்தியம் பிடிச்சிடுச்சா உங்களுக்கு? என்ன நெனச்சுக்கிட்டு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க? ஆர் யு கான் மேட்?” - ஆத்திரத்துடன் கத்தி கொண்டிருந்த ஷோபாவின் கோபமும் பதட்டமும் அவரை சற்றும் பாதிக்கவில்லை. மனைவிக்கு செவி சாய்க்கும் எண்ணம் கூட இல்லாதவராக, ஒரு வெள்ளை தாளில்...
அத்தியாயம் 68
அர்ஜுனின் கார் மகல்பாட்னா மளிகை வளாகத்திற்குள் நுழைந்த போது நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது. பாதுகாவலர்களை தவிர மற்றவர்களின் நடமாட்டம் வெகுவாக அடங்கியிருந்தது. வாயிலுக்கு வெகு அருகில் காரை நிறுத்திவிட்டு மிருதுளா கீழே இறங்க உதவி செய்தான் அர்ஜுன். அவள் மிகவும் சிரமப்பட்டாள். வலது...
அத்தியாயம் 67
தெறித்து விழுந்த தோட்டாக்களும், அருவியாக பெருகிய குருதியும் அந்த அறையை போர்க்களமாக மாற்றியிருந்தது. வேட்டையாட வந்தவர்களை வேட்டையாடி வீழ்த்திவிட்ட வெற்றி களிப்போடு இரண்டாம் அணி நெஞ்சை நிமிர்த்த, அர்ஜுனின் ஆராய்ச்சி பார்வையோ அவர்களை சல்லடையாக துளைத்தது. உடனே முன்னே வந்த அந்த...
அத்தியாயம் 66
“நாம லவ் பண்ணினது உண்மை. ரிலேஷன்ஷிப்ல இருந்தது உண்மை. ஆனா இனி என்கிட்ட எந்த எமோஷன்ஸுக்கும் இடம் இல்ல. கோர்த்தால என்னோட பொசிஷன் எனக்கு திரும்ப வேணும். நா இழந்த மரியாதையை திரும்ப சம்பாதிக்கனும். அதுக்கு எனக்கு சுதந்திரம் வேணும். போயிடு.. என்னை விட்டு விலகிப் போயிடு” - அணிந்திருந்த...
அத்தியாயம் 65
அர்ஜுன், காலை உணவு சமைத்துக் கொண்டிருக்கும் போதே அவனுடைய பிரத்யேக அலைபேசிக்கு தொடர்பு கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அஞ்சனி லால். அதோடு அன்று மாலை ஹோட்டல் புகாரியில் ராகேஷ் சுக்லா அவனை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்.
அவரிடம், ‘ஐ’ல் டேக் கேர்’ என்று கூறிவிட்டு...
அத்தியாயம் 64
மலையை உடைத்து மனிதனாய் செதுக்கியது போன்ற மகா ஆஜானுபாகுவான தோற்றத்தில் மல்லார்ந்து படுத்திருந்தான் அர்ஜுன். அகண்டு திரண்ட அவன் புஜத்தில் தலை சாய்த்திருந்தாள் மிருதுளா. சீரான மூச்சுக் காற்றோடு மெல்லிய குறட்டை ஒலியும் அவனிடமிருந்து வெளியேறியது. இதற்கு முன் அவன் இத்தனை நிம்மதியாக...
அத்தியாயம் 63
நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது போல், நடந்து முடிந்த சம்பவத்திற்கும் இரண்டு நியாயங்கள் இருக்கக் கூடும் என்று நம்பிக் கொண்டிருந்தாள் மிருதுளா. தன் பெற்றோரின் நியாயத்தை அர்ஜுனிடம் எடுத்துரைத்து அவனை சமாதானம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இப்போது அனைத்தும்...
அத்தியாயம் 62
குற்ற உணர்வும் பதட்டமும் சரிவிகிதத்தில் மிருதுளாவை ஆக்கிரமித்திருந்தது. கனத்த மனதுடன் ஒரு கணம் தயங்கி நின்றவள், முடிவெடுத்த பின் பின்வாங்குவது மூடத்தனம் என்பதை உணர்ந்து அங்கிருந்து வெளியேறினாள். அர்ஜுனின் சுயநினைவற்ற நிலை அவனுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சம் அவளை...
அத்தியாயம் 61
காட்டுத்தீயின் கோரம் தெரிந்தது அவன் முகத்தில். மிருதுளா துணுக்குற்றாள். அவனுடைய மனநிலை விளிம்பிலிருப்பதை உணர்ந்துகொண்டாள். விலகி நில் என்று மனம் எச்சரித்தது. ஆனாலும் தைரியத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு அவனை ஏறிட்டாள். பளபளக்கும் அவன் கண்களை படிக்க முயன்றாள். கோபத்தையும்...
அத்தியாயம் 60
ஓநாய் மற்றும் அவருடைய கிடான்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் காட்டுத் தீயாக பரவிக் கொண்டிருந்தது. இதுவரை அவர் யார் என்கிற விபரம் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படவில்லை. வெளிப்பட்டுவிட்டால் பல விஷயங்கள் பொதுமேடைகளில் விவாதத்திற்குள்ளாகும். கோர்த்தாவை உள்ளே கொண்டுவர முடியாது என்றாலும்...
அத்தியாயம் 59
‘பறந்த தோட்டாக்கள்.. உருண்ட தலைகள். அனந்தபூர் படுகொலையில் தொடரும் மர்மங்கள்’ - கையில் மைக்கோடு கேமிராவை பார்த்து படபடவென்று மூச்சுவிடாமல் பேசினாள் அந்த ரிப்போர்ட்டர்.
பின்னணியில், சம்பவம் நடந்த இடம் மஞ்சள் நிற நாடா கயிற்றால் சுற்றிவளைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம்...
அத்தியாயம் 58
மழை பெய்து ஓய்ந்திருந்த மாலை நேரம். நீண்டு அகண்ட அந்த பெரிய சாலையின் இருபுறமும் வரிசையாக அணிவகுத்திருந்த கடைகளில் மழைக்காக ஒதுங்கியிருந்த மக்கள் சாலையில் இறங்கி நடக்க துவங்கியிருந்தார்கள். மிருதுளா மெடிக்கல் ஷாப்பிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். காரில் சாய்ந்து நின்றபடி...
அத்தியாயம் 57
ராகேஷ் சுக்லாவின் வார்த்தை நெஞ்சுக்குள் ஈட்டி போல் பாய்ந்தது. குரல் வேண்டுமானால் அவருடையதாக இருக்கலாம். ஆனால் கேள்வி அவளுடையது - ஆர்த்தியுடையது.
‘என்னுடைய இடத்தில் என்னை கொன்றவர்களின் மகளா!’ - அவள் ஆன்மாவின் அழுகுரல் செவியில் ஒலித்தது. நாணறுந்த வில் போல் விறைத்து நிமிர்ந்தான்...
அத்தியாயம் 56
மிருதுளா கண் விழித்த போது அர்ஜுன் அறையில் இல்லை. ஒரு கனவு - அது எவ்வளவு பெரிய பயங்கரமான கனவாகவும் இருக்கட்டும். ஆனால் வெறும் கனவு அர்ஜுன் ஹோத்ரா எனும் ஆளுமையான மனிதனை இந்த அளவு பாதிக்கக் கூடுமா? நேற்று இரவு அவன் பதட்டப்பட்டதை அவள் பார்த்தாள். அவன் உடல் நடுங்கியதை உணர்ந்தாள். அவன்...
அத்தியாயம் 55
அர்ஜுன் வீடு திரும்பும் போது நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டது. உறக்கம் வராமல் வாசலில் நடைபழகிக் கொண்டிருந்த டேவிட், நண்பனை கண்டதும் நிம்மதியடைந்தான். அர்ஜுன் காரை கராஜில் விட்டுவிட்டு வெளியே வந்த போது, “காலையிலிருந்து எங்க போயிருந்த?” என்றபடி அருகில் நெருங்கியவன் புருவங்கள் முடிச்சிட...
அத்தியாயம் 54
என்ன முயற்சி செய்தும் அவளை பற்றிய எண்ணங்கள் அவனைவிட்டு விலக மறுத்தன. எந்த வேலையில் ஈடுபட்டாலும் கவனம் சிதறியது. அவளுடைய அழுகையும் கூக்குரலும் காதுக்குள் பேரிரைச்சலாய் ஒலித்துக் கொண்டிருந்தது. நெஞ்செல்லாம் பிசைவது போலிருந்தது. ஓரளவுக்கு மேல் அந்த கனத்த உணர்வை தாக்குப்பிடிக்க...
அத்தியாயம் 53
முதல் நாள் நடந்ததெல்லாம் கனவோ என்று கூட தோன்றியது மிருதுளாவுக்கு. பாறையை வைத்து கட்டியது போல் கணக்கும் தலை மட்டும் சாட்சி கூறவில்லை என்றால் அனைத்தையும் கனவென்றே அவள் நம்பியிருக்கக் கூடும். ஆனால் அத்தனையும் உண்மை.. பொட்டில் அறைந்தது போல் கூறினானே! அவன் பக்கம் நிற்க அவனுடைய மனைவி...
அத்தியாயம் 52
கதவை தாழிட்டு திரும்பிய அர்ஜுன் ஹோத்ராவின் பார்வை, அடிபட்ட மயில் போல் மெத்தையில் உணர்வற்று கிடந்தவள் மீது படிந்தது. கால்கள் வேரூன்றி போனவனாக ஓரிரு நிமிடங்கள் அவளை பார்த்துக் கொண்டே நின்றவன் பிறகு குளியலறைக்குள் சென்று இலகுவான இரவு உடையில் திரும்பினான். கட்டிலுக்கு அருகே சைட்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.