எண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 8
கந்தசாமி! நீ சீக்கிரம்
மலைப்பிள்ளையார் கோவிலுக்கு சென்று அந்தப்பெண்ணையும் குழந்தையையும் பார்த்து பத்திரமாக அழைத்து கொண்டு வா!
பத்து மணிக்கு மாப்பிள்ளை அழைப்பிற்கு, மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறினார் தாத்தா.
சரிங்க ஐயா! சீக்கிரமாக வந்து
விடுகிறேன் என்று கூறிவிட்டு கிளம்பினான் கந்தசாமி.
காதில் ஹெட்செட் மாட்டிக்கிட்டு பாட்டு கேட்டு கொண்டே மெதுவாக படியிலிருந்து இறங்கி வந்தான் சந்துரு.
அதைப்பார்த்த ஜானகி அம்மா, வேகமாக அவன் காதில் மாட்டியிருந்த ஹெட்செட்டை கழற்றி வீசி எறிந்தார்.
உன்னோடு கத்தி கத்தியே என் தொண்டை தண்ணீரெல்லாம் வற்றி போயிரும் போல...
ஏன்ம்மா ஹெட்செட்டை தூக்கி எறிந்தீர்கள்? என்று கேட்டான் சந்துரு.
இன்றைக்கு என்ன நாள் சந்துரு?
இன்றைக்கு செவ்வாய்கிழமை என்றான் சந்துரு.செம காமெடி! சிரிப்பே எனக்கு வரவில்லை என்று கூறினார் ஜானகி அம்மா.
இன்றைக்கு சாயங்காலம் உனக்கு நிச்சயதார்த்தம்.அது உனக்கு நியாபகம் இருக்கிறதா? இல்லையா?
இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை மாப்பிள்ளை அழைக்க பொண்ணு வீட்டிலிருந்து எல்லோரும் வந்திருவாங்க.
நீ என்னடானா? இன்னும் குளிக்காமல் பாட்டு கேட்டுக்கிட்டு பொண்ணு மாதிரி அன்ன நட போட்டு மெதுவாக நடந்து வந்து கொண்டிருக்கிறாய் என்று சந்துருவை திட்டிக்கொண்டிருந்தார்.
போதும் போதும்மா காலையிலே சுப்ரபாதம் பாட ஆரம்பிக்காதீங்க.
காபி குடிக்கலாம்னு கீழே இறங்கி வந்தது ஒரு குத்தமா? என்று கேட்டான் சந்துரு.காபி குடிக்க வந்தது ஒன்றும்
குத்தமில்லை.ஆனால் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பது தான் தவறு சந்துரு.
என்னை அவுங்க அழைக்க வரும் நேரத்திற்கு நான் கிளம்பி தயாராக இருப்பேன்.உங்க கையில் இருக்கின்ற காபியை முதலில் கொடுங்கம்மா.
நீங்கள் போய் மற்ற வேலையை பாருங்கம்மா என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு காபியை எடுத்துக்கொண்டு சென்று விட்டான் சந்துரு.
கோவிலிலிருந்த அந்தப்பெண்ணை அழைத்து வந்தார் கந்தசாமி.
வீட்டிலிருந்த அனைவரும் அவளை வரவேற்கும் விதத்தைப்பார்த்து ஆச்சரியமடைந்தாள் அந்தப்பெண்.
உனது பெயர் என்னமா? என்று கேட்டார் பாட்டி.என் பெயர் சுதாம்மா.என் குழந்தையின் பெயர் கண்ணன் அம்மா என்றாள்.
பெயருக்கேற்றார் போல கண்ணன் மாதிரியே அழகாக இருக்கிறான் என்று கூறி குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்தார் பாட்டி.
சரிம்மா சுதா, நீயும் குழந்தையும் போய் குளித்துவிட்டு சாப்பிடுங்கள்.
மதியம் இந்த பையில் இருக்கிற புதுத்துணியை உடுத்தி கிளம்பி தயாராகயிரும்மா என்று ஒரு நீல நிற துணிப்பையை சுதாவிடம் கொடுத்தார் பாட்டி.
ரொம்ப நன்றி அம்மா.நான் வந்த வழியல்லாம் சீரியல் பல்பும், மாவிலை தோராணமும், வீடு முழுக்க மலர்களால் அலங்கரித்து ரொம்ப அழகாக இருக்கிறது அம்மா.வீட்டில் எதுவும் விசேஷமா அம்மா? என்று கேட்டாள் சுதா.
ஆமாம் சுதா.இன்றைக்கு சாயங்காலம் என் பேத்தி சாருவிற்கு நிச்சயதார்த்தம்.
நாளைக்கு காலையில் சாருவிற்கு கல்யாணம் சுதா.
சரிம்மா நாங்கள் மாப்பிள்ளை அழைப்பிற்கு செல்ல நேரமாகிவிட்டது.
மதியம் கார் அனுப்பி வைக்கின்றோம்.நீ கிளம்பி வீட்டில் வேலை செய்யும் மற்றவர்களோடு சேர்ந்து மண்டபத்திற்கு வந்துவிடு சுதா என்று கூறிவிட்டு பாட்டி புறப்பட்டார்.
என்னடா சந்துரு! ஆச்சரியமாக இருக்கிறது.அதுக்குள்ள கிளம்பி தயாராகி இருக்க என்று கேட்டான் மனோஜ்.
உனக்கு என்னடா மனோஜ் பிரச்சனை? கிளம்பிவிட்டாலும் கேள்வி கேட்கிற, கிளம்பாவிட்டாலும் கேள்வி கேட்கிற என்று கொஞ்சம் கோபமாக கேட்டான் சந்துரு.
பதில் சொல்ல தெரியாமல் சிரித்து சமாளித்தான் மனோஜ்.
சந்துரு வீட்டின் வாசலில் நாலைந்து கார்கள் வருகின்ற சத்தம் கேட்டது.
ஜானகி அம்மாவும், சந்துருவின் சித்தி மாலதி அம்மாவும் சாரு வீட்டிலிருந்து மாப்பிள்ளை அழைப்பிற்கு வந்த அனைவரையும் வரவேற்று உபசரித்தனர்.
சந்துரு இருக்கும் அறையை ஒரு கரம் வேகமாக தட்டியது.மனோஜ் சென்று திறந்ததும், உள்ளே நுழைந்தான் சங்கர்.
சந்துருவை பார்த்து, நீங்கள் தான் மாப்பிள்ளையா? என்று கேட்டான் சங்கர்.
ஆமாம்...நீங்க யாரென்று தெரிந்து கொள்ளலாமா சார்? என்றான் சந்துரு.
நான் தான் சாருவின் முறைப்பையன் சங்கர்.நான் கட்டிக்க வேண்டிய பொண்ணை தான் நீங்க கல்யாணம் செய்ய போகிறீங்க சந்துரு என்று சொல்லி கொண்டிருக்கும் போதே ஜானகி அம்மா வந்துவிட்டார்.
கீழே எல்லோரும் உனக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள் சந்துரு.
சீக்கிரம் வா! என்று கூறி கையோடு அழைத்து சென்றார் ஜானகி அம்மா.
அவருடைய முகநூல் பக்கம் எல்லாம் திறந்து பார்த்தேன்.பிறகு கொஞ்சம் நேரம் சிந்தித்து பார்த்தேன்.
"ஆக்க பொறுத்தவுங்களுக்கு, ஆற பொறுக்க முடியாத என்ன? "
அப்படினு நினைத்து முகநூலை விட்டு வெளியே வந்து கம்ப்யூட்டரை ஆப் செய்து விட்டேன் என்றாள் சாரு.
உன்னையெல்லாம் இந்த ஜென்மத்தில் திருத்தவே முடியாது சாரு.நீயெல்லாம் இந்த காலத்தில் பிறக்க வேண்டிய பெண்ணே கிடையாது.மன்னர்கள் காலத்தில் பிறக்க வேண்டியவள்.
அந்த காலத்தில் கூட புறாக்கள் மூலமாக தூது அனுப்பி காதலனோடு
பேசுவாங்கலாம்.
நீ அந்த காலத்தில் பிறந்திருந்தாலும் கூட இப்படி தான், வாய்ப்பு கிடைத்திருந்தாலும் அதை பயன்படுத்தி கொள்ளாமல் தனியாக நீ மட்டும் வருங்கால கணவனை நினைத்து கொண்டு கனவுலேயே காதல் கீதம் பாடிக்கொண்டிருந்திருப்பாய் சாரு என்றாள் பானு.
சாரு! சாரு! என்று சாரு இருக்கும் அறையின் கதவை தட்டினார் சாருவின் சித்தி.சீக்கிரம் போன் பேசிவிட்டு சாப்பிட வாடா சாரு.உனக்கு மேக்கப் போட பியூட்டிசன் வந்திட்டாங்கமா என்றார்.
இதோ ஐந்து நிமிஷத்தில் வந்து விடுகிறேன் சித்தி என்றாள் சாரு.
ஏய் பானு! சீக்கிரம் கிளம்பி வீட்டிற்கு வாடி என்றாள் சாரு.நீ கண்ணை மூடி திறப்பதற்குள் உன் கண் முன்னாடி வந்து நிற்பேன் சாரு என்று சொன்னாள் பானு.
அதைப்போலவே சாரு திரும்பியதும் அவள் முன் வந்து நின்று கொண்டிருந்தாள் பானு.
சொன்ன மாதிரியே வந்துட்ட பானு.
நான் எப்போ வருவேன்? எப்படி வருவேனு? யாருக்கும் தெரியாது?ஆனால் வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டாக வந்திருவேன்! என்றாள் பானு.
சரி, வா பானு! சாப்பிட போகலாம் என்று பானுவை அழைத்து சென்றாள் சாரு.
உனக்கு புது ப்ரெண்ட் கிடைச்சிருக்காங்க போல பானு என்று கேட்டாள் சாரு.
அப்படி யாரும் இல்லையே! என்றாள் பானு.முழு பூசணிக்காயை சோத்துக்குள்ள வைத்து மறைக்க நினைக்காதே பானு! என்று சாரு கூறியதும் பானுவின் குரலில் தடுமாற்றம் தெரிந்தது.
அது வந்து...என்று இழுத்தாள் பானு.
பார்த்து பேசி பத்து நிமிஷம் கூட ஆகவில்லை.அதுக்குள்ள நீயும், மனோஜ் அண்ணாவும் முகநூலில் நண்பர்கள் ஆகிட்டீங்கலா? என்று கேட்டாள் சாரு.
உன்னிடம் இதுவரை ஏதாவது மறைத்திருக்கின்றேனா சாரு?
நீயே! இன்னும் மாப்பிள்ளை சாரை பார்க்காமல் வருத்ததில் இருக்கிறாய்.
அதனால் தான் உன்னை நேரில் பார்க்கும் போது இந்த விஷயத்தை பற்றி சொல்லிக்கலாம்னு இருந்தேன் என்றாள் பானு.
ஏன் சாரு! நான் ஒன்று சொன்னால் கோபப்பட மாட்டியே?
நீ முதலில் விஷயத்தை சொல்லு பானு!
மாப்பிள்ளை சார் சரியான கல் நெஞ்சக்காரராக இருப்பாரோ? அவருக்கு ஒரு நாள் கூட உன்னிடம் பேச வேண்டும் என்று தோன்றவே இல்லையா? என்று கேட்டாள் பானு.
கல் நெஞ்சம் படைத்தவராக இருந்திருந்தால், வாயில்லா ஜீவனை காப்பாற்றுவதற்கு உதவி செய்ய முன் வந்திருப்பாங்களா பானு? என்று கேள்வியை திருப்பி பானுவிடம் கேட்டாள் சாரு.
இந்த வயதிலேயே உன்னால் மட்டும் எப்படி இந்த மாதிரி பல கோணங்களில் சிந்திக்க முடிகிறது சாரு.உன்னை நினைத்து ஒரு பக்கம் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
இப்படி அருமையான எண்ணங்கள் கொண்ட உன்னிடம் இன்னும் மாப்பிள்ளை சார் பேசவில்லையே என்று நினைத்து மறுப்பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது என்றாள் பானு.
சாருவும் பானுவும் சாப்பிட்டு முடித்தனர்.சாருவிற்கு மேக்கப் போட தொடங்கினார் பியூட்டிசன்.சாருவை அலங்காரம் செய்வதை கண் இமையை கூட அசைக்காமல் பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் பானு.
சந்துருவின் வீட்டில் அனைத்து சாஸ்திர சம்பிரதாய முறைகளையும் முடித்த பின்னர், சாருவின் உறவினர்கள் சந்துருவை மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
சாருவை மண்டபத்திற்கு அழைத்து செல்ல காரும் தயாராக வந்து காத்துக்கொண்டிருந்தது.
இத்தனை நாட்களாக சாரு காத்திருந்த அந்த பொன்னான தருணம் நெருங்கி அருகில் வந்தது.
தனது ஆசை நாயகனை பார்த்ததும், அந்த பேதையின் உள்ளம் கொண்ட இன்பம் எப்படி இருந்தது? சாருவின் மீது இவ்வளவு உரிமை கொண்டாடும் அந்த சங்கர் யார்? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...
- தொடரும் -
* * * * * * * * * * * * * *
இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏