Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406
Points
63
Wow Ulitmete What a Episode sis outstanding👌👌👌👌👌scene by scene twist unexpected 😍 சங்கர் தான் 😄 சூப்பர் no words to say sis love it ❤
Thank you so much dear🙏😍
 

Geethraniprakash

New member
Messages
7
Reaction score
8
Points
3
அருமையான கதை அதை அழகாக நகர்த்தும் பாங்கு அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலைத் தூண்டுவதாக உள்ளது
 

Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406
Points
63
அருமையான கதை அதை அழகாக நகர்த்தும் பாங்கு அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலைத் தூண்டுவதாக உள்ளது
மிக்க நன்றி சகோதரி🙏😍
 

Anu22

New member
Messages
1
Reaction score
1
Points
3
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 10


முகூர்த்த நேரம் நெருங்கும் சமயம் பார்த்து மாப்பிள்ளை சார் எதுவும் சொல்லாமல் எழுந்து போய்ட்டாரு.
இங்கே என்ன நடக்குது சாரு? திடீரென்று போலீஸ் வேற வந்திருக்காங்க.


நீ என்னடானா எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருக்க? போதாத குறைக்கு உன் மாமா பையன் வேற நேரம் காலம் தெரியாமல் இப்படி பிடிவாதம் பிடிக்கிறான் என்று
சாருவின் காதருகே சென்று சொல்லிக்கொண்டிருந்தாள் பானு.


சாரு எந்தவொரு பதிலும் சொல்லாமல் மௌனமாக சங்கரை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.


நாங்கள் எல்லோரும் அடுத்து என்ன நடக்க போகுதோனு தெரியாமல் பீதியில் இருக்கிறோம்.பயப்பட வேண்டிய நீ கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் கூலா எப்படி இப்படி சிரிச்சுக்கிட்டு இருக்கிற சாரு? என்று கேட்டாள் பானு.


அடுத்து என்ன நடக்க போகுதுனு இன்னுமா உனக்கு தெரியல?
நீ ஒன்றும் பதறாமல் அமைதியாக இருந்து அடுத்து நடக்க போவதை மட்டும் பொறுத்திருந்து பார்.


நீ போனை கையில்
வைத்துக்கொண்டு தயாராகயிரு.
நான் சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கிறதா? என்று பானுவிடம் கேட்டாள் சாரு.


அதைப்பற்றி நீ எதுவும் கவலைப்படாதே! கல்யாணம் முடிந்ததும், உன் கைக்கு கரெக்ட்டா வந்து சேர்ந்துவிடும் என்றாள் பானு.


வாங்க சார்...வாங்க...உங்களை தான் இவ்வளவு நேரமாக எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டு இருந்தேன்.
முகூர்த்த நேரத்திற்கு சரியாக வந்துடீங்க சார்.இங்கே வந்து உட்காருங்க என்று வந்த காவல்துறை அதிகாரியை வரவேற்றார் சாருவின் தாத்தா.


என்னங்க ஐயா! நீங்கள் போய் என்னை சார்னு கூப்பிடுறீங்க.சும்மா என் பெயரை சொல்லி கூப்பிடுங்கள்.
அன்றைக்கு நீங்கள் மட்டும் எனக்காக பேசாமல் இருந்திருந்தால், இன்றைக்கு இந்த பதவியே எனக்கு கிடைத்திருக்காது ஐயா! என்றார் அந்த காவல்துறை அதிகாரி.


ஒவ்வொரு பதவிக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுக்கனும் சார் என்று தாத்தா அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே மணமேடையிலிருந்து வந்த சந்துரு எதுவும் முக்கியமான தகவலாக இருந்திருந்தால் ஒரு வார்த்தை போன் செய்து சொல்லிருக்கலாமே சார்? என்று வந்த காவல்துறை அதிகாரியிடம் கேட்டான்.


அந்த விபத்து குறித்த தகவல் எதுவும் கிடைத்ததா சார்? என்று கேட்டான் சந்துரு.தம்பி! நான் உங்களது கல்யாணத்திற்கு தான் விருந்தினராக வந்திருக்கிறேன்.முகூர்த்த நேரம் நெருங்கிருச்சு, நீங்க மணமேடைக்கு போங்க.அதைப்பற்றி பிறகு பேசிக்கலாம் என்று கூறினார் காவல்துறை அதிகாரி.


முகூர்த்ததிற்கு நாளிகை ஆகிடுத்து!மாப்பிள்ளை சீக்கிரம் வாங்கோ! என்று சந்துருவை அழைத்தார் புரோகிதர்.
சந்துருவை அழைத்துக்கொண்டு மணமேடைக்கு சென்றார் தாத்தா.


டேய்! அமுல் பேபி எழுந்திருடா! பார்க்க கால் படி உலக்கு உயரம் இருந்துகிட்டு என்னமா வாய் பேசிகிறான் பாருங்க! என்றான் மனோஜ்.


மனோஜை பார்த்து முரைத்து முகம் சுழித்தான் சங்கர்.


எழுந்திருடா கண்ணா! மாப்பிள்ளை உட்காரட்டும் என்றார் தாத்தா.


எழுந்திருக்க மாட்டேன்! என்று பிடிவாதம் செய்தவனின் கையை பிடித்து இழுத்து தூக்கிக்கொண்டு சென்றார் சங்கரின் அப்பா பசுபதி.


ஐந்து வயதாகும் சங்கர் செய்யும் குறும்புத்தனம் கண்டு அனைவரும் சிரித்தனர்.


சாருவின் அருகில் வந்து அமர்ந்த சந்துரு சாருவின் முகத்தை பார்த்தான்.
சாரு எந்தவொரு பதற்றமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.


சந்துருவின் கையில் திருமாங்கல்யத்தை கொடுத்தார் புரோகிதர்.


கெட்டி மேளம்... கெட்டி மேளம்... என்று கூறிவிட்டு "மாங்கல்யம் தந்துனானே..." மந்திரத்தை புரோகிதர் சொல்ல அனைவரும் அட்சதை அரிசியை மணமக்களின் மேலே தூவ சாருவின் கழுத்தில் இறைவனை சாட்சியாக கொண்டு முதல் முடிச்சையும், முன்னோர்களின் சாட்சியாக இரண்டாவது முடிச்சையும், பெற்றோர்கள் மற்றும் திருமணத்திற்கு வருகை தந்தவர்களின் சாட்சியாக மூன்றாவது முடிச்சையும் போட்டு, சாருவின் நெற்றியில் திலகமிட்டு தன் மனைவியாக்கி கொண்டான் சந்துரு.


சந்துருவின் அப்பா இல்லாமல் இத்தனை நாட்கள் தன் மகனின் கல்யாணத்தை முடிக்க பாடுப்பட்ட ஜானகி அம்மாவின் போராட்டமும் மனகவலையும் இன்றோடு தீர்ந்தது.
தனது மகனின் கல்யாணத்தை நல்ல படியாக முடிந்ததை கண்டு சந்துருவின் அம்மாவின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வடிந்தது.


மறுபக்கம் சாருவின் வீட்டார் அனைவரும் ஆனந்த கண்ணீருடன் அவர்கள் மேல் அட்சதை அரிசியை தூவி வாழ்த்தினர்.


மனோஜ் மட்டும் அட்சதை அரிசியை மணமக்களின் மேல் தூவாமல், பானுவின் மேல் போட்டு கொண்டிருந்தான்.பானுவிடம் கை சைகையிலே இப்போதே உன் கழுத்தில் தாலிக்கட்டட்டுமா? நான் ரெடி...நீங்க ரெடியா? என்று கேட்டான்.


நான் என் அப்பாவை கூப்பிடட்டுமா? என்று கண் ஜாடையிலே மனோஜிடம் சிரித்துக்கொண்டே கேட்டாள் பானு.மனோஜ் சிரித்துக்கொண்டே அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு சந்துருவின் பக்கம்
திரும்பிக்கொண்டான்.


சந்துரு, சாருவின் கையை பிடித்து அக்னியை சாட்சியாக வைத்து ஏழு முறை வலம் வந்தான்.அவளது கையை தொட்ட அந்த நிமிடம் சந்துருவினால் தாக்கு பிடிக்க முடியவில்லை.கண்கள் கலங்க ஆரம்பித்தது.சாருவின் கை விரல்கள் தீண்டியதும் சஞ்சுளாவின் நினைவுகள் அனைத்தையும் அவன் கண் முன்னே கொண்டு வந்தது.


சந்துரு! ஏன் உன் கண்ணுலாம் இப்படி சிவந்து போய் இருக்குது? என்று அவனது சித்தி கேட்டார்.


அதிகாலையில் வேகமாக எழுந்ததால் இருக்கும் சித்தி என்று கூறி சமாளித்து விட்டான்.


வேகமாக சந்துருவின் கண்களை பார்த்தாள் சாரு.சந்துருவின் கண்களை வைத்தே அவன் ஆழ் மனதில் ஏதோ நினைத்து கலங்குகிறான் என்பதை தெரிந்து கொண்டாள் சாரு.ஆனால் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.


பெற்றோர்களிடத்தில் ஆசிர்வாதம் வாங்குமாறு புரோகிதர் கூறினார்.


சந்துருவின் அம்மா முதலில் ஆசிர்வாதம் செய்ய மறுத்தார்.தான் சுமங்கலியாக இல்லாததால் சாருவின் பெற்றோரிடத்தில் முதலில் ஆசிர்வாதம் வாங்குமாறு சொன்னார்.


ஜானகி அம்மாவின் அருகில் சென்ற சாரு, உங்களது மகனை நல்ல படியாக பெற்று வளர்த்து ஆளாக்கி தினமும் கடவுளிடம் உங்களுக்காக வேண்டாமல் உங்கள் பிள்ளைகள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று பிராத்தனை செய்யும் உங்களின் ஆசிர்வாதம் தான் எங்களை பல்லாண்டு காலம் நன்றாக வாழ வைக்கும்.


வேறு எதை பற்றியும் யோசித்து மனதை குழப்பாமல், எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அத்தை என்று சாரு கூறியதை கேட்டதும் ஜானகி அம்மாவின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.சாரு பேசும் விதம் கண்டு ஆச்சரியப்பட்டு போனான் சந்துரு.


பதினாறு செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ்க! என்று ஆசிர்வாதம் தனது மகனையும் மருமகளாய் வந்த மகளையும் வாழ்த்தி, சாருவை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.


அதற்கு பின்னர் சாருவின் தாத்தா, பாட்டி அப்பா, அம்மாவிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.சாருவின் குணம் கண்டு உள்ளம் பூரித்து போனார்கள் சாருவின் குடும்பத்தினர்.


அதையடுத்து மற்ற திருமண சடங்குகளும் நடைபெற தொடங்கியது.அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மெட்டியை மிருதுவான பாதமலர்கள் கொண்ட சாருவின் விரல்களை பிடித்து போட்டுவிட்டான் சந்துரு.


ஒரு பானையில் தண்ணீர் ஊற்றி அதனுள் மோதிரத்தை போட்டு வைத்திருந்தனர்.யார் முதலில் எடுப்பது என்று பார்க்கலாம்? என்று சந்துருவையும் சாருவையும் பார்த்து சுற்றியிருந்த அனைவரும் உற்சாகப்படுத்தி கரகோஷம் எழுப்பினார்கள்.


சாரு விடாதடி... எப்படியாவது அந்த மோதிரத்தை எடுத்துவிடு! என்றாள் பானு.அதையும் பார்த்திடலாம் என்று சந்துருவிற்கு ஆதரவாக பதில் கூறினான் மனோஜ்.


டேய் சந்துரு! ஒழுங்கா மோதிரத்தை எடுத்து மானத்தை காப்பாற்றி விடுடா மச்சான் என்றான்.


வேண்டா வெறுப்பாக பானையினுள் கையை விட்டான் சந்துரு.ஆனால் சாருவோ மிகவும் ஆர்வத்துடன் தனது கையை விட்டாள்.


பத்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது.
இப்போதைக்குள் இரண்டு பேரும் பானையிலிருந்து கையை எடுப்பது போல தெரியவே இல்லை.


ஆரவாரமாக கத்திக்கொண்டிருந்த அனைவரும் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு அமைதியாக அவர்களையும் பானையையும் மாத்தி மாத்தி பார்த்துக்கொண்டிருந்தனர்.


சீக்கிரமாக மோதிரத்தை எடு சாரு! என்று கத்திக்கொண்டே இருந்தாள் பானு.


அவள் சொல்லி முடித்த மறுகணமே பானையிலிருந்து கையை எடுத்தாள் சாரு.


சந்தோஷம் தாங்க முடியாமல் சாருவை கட்டிப்பபிடித்து அவளது கையை திறந்து பார்த்த பானு குரலின் ஓசை சட்டென்று குன்றியது.


எதிர்ப்புறத்திலிருந்து மனோஜின் குரல் ஓங்கி ஒலித்தது.சந்துருவின் கையில் தான் மோதிரம் இருந்தது.


பானையினுள் என்ன நிகழ்ந்தது? என்று சந்துரு, சாருவிற்கு மட்டும் தான் தெரியும்.


பானையினுள் வேகமாக தேடுவது போல நடித்து கொண்டிருந்தான் சந்துரு.ஆனால் பானையினுள்ளே பார்த்தால் சுவற்றில் பல்லி ஒட்டிக்கொண்டிருப்பது போல அவனது கை சாருவின் கையை தொடாதவாறு பானையின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது.


சாருவும் பொறுத்து பொறுத்து பார்த்தாள்.பிறகு மோதிரத்தை எடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டு மறுகணம் தனது கையை பானையிலிருந்து வெளியே எடுத்துவிட்டாள்.


தன் கணவன் தான் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றெண்ணி வெற்றியை சந்துருவிற்காக விட்டு கொடுத்துவிட்டாள் சாரு.


திருமண பந்தத்தில் ஒன்றிணையும் மணமக்கள் இருவருக்கும் இருக்க வேண்டிய பண்புகளில் மிகவும் முக்கியான ஒன்று, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து அன்புடன் புரிந்து கொண்டு நடப்பது தான்.அதை தான் சாருவும் செய்தாள்.


வெளியே பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால், சந்துரு வென்றுவிட்டதாக தெரியலாம்.
உண்மையிலேயே அந்த போட்டியில் வென்றது சாரு தான்.போட்டி முடிந்த பின்னர் அனைவரும் சாப்பிட சென்றனர்.


அசோகா, பொங்கல், போண்டா, மனோகர பருப்பு தேங்காய், ரவா கிச்சடி, கீரை வடை, பூந்தி, தயிர்வடை, பிஸிபேளாபாத், மிக்ஸ்டு சேவை, சேப்பங்கிழங்கு ரோஸ்ட், பீன்ஸ் பருப்பு உசிலி, கோஸ் பட்டாணி பொரியல்,
வெண்டைக்காய் மோர்க்குழம்பு,
வெஜிடபிள் புலாவ், காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை, கதம்ப சாம்பார், மணத்தக்காளி வற்றல் குழம்பு, சேனை வறுவல், அவியல், ரசம், அப்பளம், பால் பாயசம், பழப்பச்சடி, ஃப்ரூட் தயிர்சாதம், முந்திரி கேக் என்று பல வகையான செட்டிநாட்டு சமையல் வகைகள் பந்தியில் பரிமாறப்பட்டது.


அதோடு மட்டுமில்லாமல் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் தாம்பூல பையுடன் சேர்த்து மரக்கன்றும் பரிசாக வழங்கப்பட்டது.


திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரின் வயிறும் மனதும் சந்தோஷத்தில் நிறைந்து மணமக்களை மனதார வாழ்த்திவிட்டு சென்றனர்.


பக்கத்திலிருந்த உறவினர்கள் சந்துரு சாருவிற்கும், சாரு சந்துருவிற்கும் மாறி மாறி உணவை ஊட்டுமாறு கூறினார்கள்.


முதலில் இருவரும் தயங்கினார்கள்.
பின்னர் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிவிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர்.


காவல்துறை அதிகாரி வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவர்களுக்கு திருமண பரிசை அளித்தார்.


அங்கு வந்த கணக்குப்பிள்ளை தனது மகனை சந்துருவிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.


அன்றைக்கு எனது மகனை போலீஸ் ட்ரைனிங்கு அனுப்புவதற்கு மறுப்பு தெரிவித்தேன்.பிள்ளைகளின் விருப்பத்திற்கு வேலி போட்டு உனது விருப்பத்தை அவர்கள் மீது திணிக்க நினைக்காதே! என்று ஐயா தான் எனக்கு பாடம் புகட்டினார் என்று சந்துருவிடம் பழைய கதையை எல்லாம் கூறினார் கணக்குப்பிள்ளை.


சந்துருவிற்கு காவல்துறை அதிகாரி வந்ததிற்கான விவரம் அப்போது தான் தெரிய வந்தது.


அந்த வண்டியை கண்டுபிடித்து விட்டீர்களா சார்? என்று கேட்டான் சந்துரு.


பிடித்தாச்சு தம்பி! லாக்கப்ல தான் அந்த பசங்க இருக்காங்க.நாளைக்கு கோர்ட்ல ஆஜர் செய்ய போகிறோம் என்றார்.


சரிங்க சார்...ரொம்ப நன்றி என்று கூறினான் சந்துரு.


இது என்னுடைய கடமை தம்பி என்றார் அந்த காவல்துறை அதிகாரி.எனக்கு நேரமாகிடுச்சு தம்பி.நான் ஐயாவிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.


மண்டபத்திலிருந்து மணமக்களை சந்துருவின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.வீட்டிற்கு வந்த மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.வலது காலை எடுத்து வைத்து தன் புகுந்த வீட்டிற்குள் நுழைந்தாள் சாரு.


பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டதும் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்தனர்.


சந்துரு, சாருவிடம் எதுவும் சொல்லாமல் அவளை ஹாலிலேயே விட்டுவிட்டு அவனது அறைக்கு சென்றான்.


தனது அறைக்குள் நுழைந்தவன், அம்மா! என்று திடீரென அலறி கத்தினான்.சந்துருவின் அலறல் சத்தம் கேட்ட சாரு, வேகமாக பதறி அடித்துக்கொண்டு சந்துருவின் சத்தம் வரும் திசையை நோக்கி ஓடினாள்.


ஜானகி அம்மாவும் மனோஜூம் சந்துருவின் அறைக்கு விரைந்து சென்று சந்துரு! சந்துரு! என்னாச்சுடா? என்று அறையின் கதவை வேகமாக தட்டினார்கள்.


சந்துருவிற்கு என்ன நிகழ்ந்தது?சந்துருவின் அலறலுக்கு காரணம் என்ன?அறைக்குள் அப்படி என்ன நடந்தது? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...


- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
Thilaga, What a excellent writing skill you have.. eagerly waiting for episode10… keep on rocking
 

vaishnaviselva@

Well-known member
Messages
312
Reaction score
248
Points
63
wow very sweet epi sissy :love::love::love::love:.......saaru yeppadi sandru va change panna pora 🤩 🤩.......yegga irunthu vantha intha sam saaru ku vana therinju irukku polayee ava yenna panna poraanu therilaye :unsure::unsure::unsure::unsure:............yella epi laum oru twist podu mudikkuriga sagi next epi seekkaram podugga ..............sam already saaru va meet panni irukkaa so interesting sissy......waiting for next epi
 
Messages
30
Reaction score
29
Points
18
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 11


முதன் முறையாக தன் புகுந்த வீட்டிற்கு வந்திருக்கும் சாருவிற்கு எங்கே? எந்தெந்த அறை இருக்கிறது? என்பது தெரியாமல் சத்தம் வரும் திசையை வைத்து சந்துருவின் அறையை கண்டறிந்தாள்.


பதற்றத்துடன் அனைவரும் கதவை வேகமாக தட்டினார்கள்.எப்போதும் தைரியமாக இருக்கும் சாருவின் மனதில் சிறிது பதற்றம் ஏற்படத் தொடங்கியது.


மணக்கோலத்தில் பிரகாசமாக ஒளி வீசிக்கொண்டிருந்த சாருவின் முகம் ஐந்து நிமிடத்தில் வாடிய மல்லிகை போல சோர்ந்து போய் விட்டது.
சந்துருவின் சத்தத்திற்கு காரணம் புரியாமலும் மனதில் சந்துருவை சீக்கிரம் பார்க்க வேண்டும் என்ற தவிப்புடனும் கண்கள் கலங்கி கதவை தட்டிக்கொண்டிருந்தாள் சாரு.


சில நிமிடங்களுக்கு பிறகு சட்டென்று கதவை திறந்தவன், என்னாச்சுமா? ஏன் எல்லாரும் என் ரூம் வாசலில் வந்து நிற்கிறீங்க? என்று கேட்டான்.


நான் ஒரு நிமிஷம் லேட்டா வந்து கதவை திறந்திருந்தால், நீங்க எல்லோரும் சேர்ந்து அடித்த அடியில் கதவு கையோட வந்திருக்கும் போல என்றான் சந்துரு.


நல்ல கதையா போச்சுப்பா.நீதான கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வீடே இரண்டாகுற மாதிரி அம்மானு கத்துன சந்துரு என்றார் ஜானகி அம்மா.


நீ என்னடானா உனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி பேசுறப்பா சந்துரு! என்றார் ஜானகி அம்மா.


அவ்வளவு சத்தமாகவா கத்துனே? என்று சந்துரு கேட்டதும், மனோஜ் அவனை முரைத்து பார்த்தேன்.


கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத மாதிரி எப்படிடா இப்படியெல்லாமே பேச கத்துக்கிட்ட. நானும் உன் கூட தான் ரொம்ப வருஷாக இருக்கிறேன்.எனக்கு இப்படி எல்லாம் பேசவே தெரியமாட்டீங்கிதே! என்றான் மனோஜ்.


சந்தருவை பார்த்ததும் சாருவின் மனதில் அவனை குறித்த பயமும் பதற்றமும் பஞ்சாய் பரந்து சென்றது.
ஒளியிளந்த முகம் மீண்டும் பிரகாசமாக பௌர்ணமி நிலவு போன்று ஜொலிக்க தொடங்கியது.


ரூம்ல அப்படி எதை பார்த்து பயந்து இப்படி தலையே தெறித்த மாதிரி கத்துன சந்துரு? என்ன எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க.வாயை திறந்து பதில் சொல்லு சந்துரு என்றார் ஜானகி அம்மா.


சாரு எதுவும் பேசாமல் அமைதியாக சந்துருவின் ரூமையே எட்டிப்பார்த்து கொண்டிருந்தாள்.சாருவின் கண்களுக்கு ஒரு உருவத்தின் நிழல் மட்டும் தெரிந்தது.


சாருவின் கவனம் எல்லாம் சந்துருவின் அறையை நோக்கி தான் இருந்தது.கதவின் பின்புறம் இருக்கும் அந்த உருவத்தை பார்க்க சாரு ரொம்ப முயற்சி செய்தாள்.அவளது கால்கள் சந்துருவின் அறையை நோக்கி வேகமாக எட்டு எடுத்து வைக்க தொடங்கிய சமயம் பார்த்து, அந்த உருவம் முன்னோக்கி வந்தது.


நான் பார்த்து பயந்ததிற்கு காரணம் இது தான் என்றான் சந்துரு.கதவின் பின்புறம் பேய் போன்ற முகமூடி அணிந்த உருவம் ஒன்று அனைவரின் முன் வந்து நின்றது.அந்த முகமூடி உருவத்தை பார்த்த எல்லோரும் பயந்து கத்த தொடங்கினார்கள்.


சாரு மட்டும் கத்தாமல் அந்த முகமூடிக்கு பின்னால் மறைந்திருக்கும் முகத்தை பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தாள்.


யாரும் பயப்படாதீங்க! என்று கூறிவிட்டு சந்துரு அந்த முகமூடியை வேகமாக கழற்றி வீசினான்.
முகமூடிக்கு பின்னால் இருந்த முகம் பார்த்ததும் சாருவை தவிர அனைவரும் சிரித்தனர்.


முகமூடி போட்டிருந்தது வேறு யாருமில்லை சந்துருவின் சித்தி மகன் ஷ்யாம்.மேல் படிப்பு படிப்பதற்காக கனடா சென்றிருந்தான்.மூன்று வருடங்களுக்கு பிறகு இன்று தான் இந்தியாவிற்கு திரும்பி வந்திருக்கிறான்.


என்னப்பா ஷ்யாம்! உன் அண்ணன் கல்யாண நாள் அதுவுமா சந்தோஷமான சர்ப்ரைஸ் எதாவது கொடுப்பனு பார்த்தால், இப்படி அவனையும் பயமுறுத்தி எங்களையும் பதற வச்சுட்டியேப்பா! என்றான் மனோஜ்.


சும்மா விளையாண்டு பார்த்தேன் மனோஜ் அண்ணா.ஆனால் அண்ணா இப்படி பயந்து போவாங்கனு கொஞ்சம் கூட நான் எதிர்ப்பார்க்கவே இல்லை என்றான் ஷ்யாம்.சரி இதெல்லாம் பிறகு பேசிக்கலாம்.
முதலில் என் அண்ணியை கண்ணுல காட்டுங்க என்றான் ஷ்யாம்.


இதோ இவுங்க தான் உன் அண்ணி சாரு என்று தன் பின்னாடி நின்று கொண்டிருந்த சாருவை முன்னாடி அழைத்து ஷ்யாமிற்கு அறிமுகம் செய்து வைத்தார் ஜானகி அம்மா.


சாருவை பார்த்த ஷ்யாமிற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.எதுவும் பேசாமல் வாயடைத்து நின்றான்.


அண்ணியை பார்த்ததும் எதுவும் பேசாமல் அமைதியாகிட்ட ஷ்யாம் என்று கேட்டார் ஜானகி அம்மா.அண்ணி மேல் உள்ள மரியாதையாக இருக்கும் அம்மா என்றான் மனோஜ்.


உடனே ஹாய்... என்று சொன்னான் ஷ்யாம்.சாருவும் எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் வணக்கம் என்று கூறினாள்.


சந்துருவிற்கு மட்டும் திருமண வாழ்த்துக்கள் தெரிவித்தான்.எனக்கு ப்லைட்ல வந்தது கொஞ்சம் உடம்பு அலுப்பாக இருக்கு பெரியம்மா என்றான்.


சரி ஷ்யாம்... நீ கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு வா! என்றார் ஜானகி அம்மா.


சரிங்க பெரியம்மா... என்று கூறியவன் சாருவை பார்த்து கொண்டே மாடியிலிருந்து கீழே இறங்கி சென்றான்.


ஷ்யாம் கீழே இறங்கியதும் வேகமாக அவனது அறைக்கு சென்று முகத்தை கழுவினான்.மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் நினைத்து பார்த்தான்.


ஷ்யாம் அவனின் அம்மாவை தேடி சமையலறைக்கு சென்றான்.ஷ்யாமை பார்த்ததும் சந்தோஷத்தில் மகனை கட்டி அணைத்தார்.என்னப்பா ஷ்யாம் இப்படி உடம்பு மெலிஞ்சு போயிட்ட? என்று கேட்டார் ஷ்யாமின் அம்மா மாலதி.


அம்மாவின் கேள்விக்கு பதில் கூறாமல், அம்மா! இவுங்க தான் அண்ணாவுக்கு பார்த்த பொண்ணாமா? எனக்கு ஏன் நீங்க இவுங்க போட்டோவை அனுப்பி வைக்கல? என்று கேட்டான்.


சந்துரு, எல்லா பொண்ணையும் தட்டி கழித்த மாதிரி இந்த பொண்ணையும் வேண்டாம்னு சொல்லிருவானு எதிர்ப்பார்த்தேன் ஷ்யாம்.இந்த கல்யாணம் நடக்காதுனு நினைச்சு தான் உனக்கு போட்டோ அனுப்பி வைக்கல ஷ்யாம் என்றார் மாலதி.


என்னம்மா சொல்லுறீங்க?
கொஞ்சம் புரிகிற மாதிரி தெளிவாக சொல்லுங்கள் என்றான் ஷ்யாம்.


உனக்கு எல்லாத்தையும் புளி போட்டு விளக்கனும்.ப்லைட்ல ஒழுங்காக தூங்கிருக்க மாட்ட.கொஞ்சம் நேரம் போய் தூங்குடா ஷ்யாம்! பிறகு எல்லா கதையையும் பொறுமையாக பேசலாம் என்றார் மாலதி.


நீங்க முதலில் சொல்ல வந்ததை முழுசா சொல்லி முடிங்கம்மா என்றான் ஷ்யாம்.


வழக்கம் போல பொண்ணு பிடிக்கல.
கல்யாணம் வேண்டாம்! அப்படினு சொல்லிருவான் தான் நினைத்தேன்.
ஆனால் உங்க பெரியம்மா எப்படியோ சந்துருகிட்ட பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுட்டாங்க.


சந்துருவிற்கு வீடியோ கால் போட்டு பொண்ண பார்க்க சொல்லி கொடுத்த போது கூட அவன் சாருவின் முகத்தை பார்க்கவே இல்லை.


இந்த சந்துரு பையன் நேற்று வரை சாருவை பார்க்கலடா ஷ்யாம்.முதல் முறையாக சாருவை, நிச்சயதார்த்தம் நடந்த போது தான்டா நேரிலே பார்த்தான்.


நாங்க பொண்ணு போய் பார்த்துட்டு வந்ததிலிருந்து, சந்துரு இன்னைக்கு வரை சாருகிட்ட எதுவும் பேசினது மாதிரி கொஞ்சம் கூட தெரியவில்லை என்றார் மாலதி.


என்னம்மா சொல்லுறீங்க...நிஜமாவே இன்னும் அவுங்க ரெண்டு பேரும் பேசிக்க கூட இல்லையா? என்று கேட்டான் ஷயாம்.


ஆமாம்டா ஷ்யாம் என்றார் மாலதி.


அதுதான் கல்யாணம் முடிஞ்சுருச்சுல.
இனி எப்படினாலும் இரண்டு பேரும் பேசித்தான் ஆகனும்.பிடிக்கிதோ? பிடிக்கலையோ? கடவுள் போட்ட முடிச்ச யாராலும் மாற்ற முடியாது.எல்லாம் விதிப்படி நடக்கும் என்றார் மாலதி.


நீ எதுக்கு இவ்வளவு ஆர்வமாக சாருவை பற்றி கேட்குற? என்றார் மாலதி.உனக்கு சின்ன பிள்ளையிலிருந்தே சந்துருவை சுத்தமாக பிடிக்காதுனு தெரியும்.


நீ எதுக்கு இதெல்லாம் தேவையில்லாமல் கேட்டுக்கிட்டு இருக்க? என்று ஷ்யாமிடம் கேட்கும் போதே மாலதி! மாலதி! என்று ஜானகி அம்மா ஷ்யாமின் அம்மாவை அழைத்தார்.


சரிடா ஷ்யாம்... நீ போய் முதலில் தூங்குற வழியை பாரு.பிறகு மற்றது எல்லாம் பேசிக்கலாம் என்று கூறிவிட்டு சென்றார் மாலதி.


நீ உங்க ரூம்ல போய் கொஞ்சம் ஓய்வெடுமா சாரு என்று கூறிவிட்டு சென்றார் சாருவின் மாமியார்.


சந்துருவின் அறையின் வாசலில் தனியாக நின்று கொண்டிருந்தாள் சாரு.சந்துருவோ, சாருவை பற்றி யோசிக்காமல் மனோஜிடம் பேசிக்கொண்டிருந்தான்.


சாருவை கவனித்து கொண்டிருந்த மனோஜ், டேய் சந்துரு! சாருவை போய் கூப்பிட்டு வாடா.வெளியே அவுங்க மட்டும் தனியாக நிற்கிறாங்க பாரு என்றான்.


சாருவை பார்த்து என்னங்க... உள்ள வாங்க... என்று சாருவை அவனது அறைக்குள் அழைத்தான் சந்துரு.


நீயும் உள்ள வாடா மனோஜ்! என்றான் சந்துரு.புதுமணதம்பியதருக்கு இடஞ்சலாக இருக்க கூடாது என்று எண்ணி, எனக்கு கீழே கொஞ்சம் வேலை இருக்கு.போய்ட்டு வந்து விடுகிறேன் சந்துரு என்று நாசுக்காக பேசி அங்கிருந்து கழன்று சென்று விட்டான் மனோஜ்.


அறையின் உள்ளே தயக்கத்துடன் வந்தாள் சாரு.சந்துரு நின்று கொண்டிருந்ததால் சாருவும் உட்காராமல் நின்று கொண்டிருந்தாள்.


ஏன் நிற்கிறீங்க..உட்காருங்க என்றான் சந்துரு.உங்களுக்கு குடிக்க தண்ணீர், ஜீஸ் எதுவும் வேண்டுமா? என்று கேட்டான்.


இல்லங்க...அது வந்து நீங்க நிற்கும் போது நான் உட்கார்ந்த நல்லா இருக்காதுங்க... என்று தனது இனிமையான குரலில் பதில் கூறினாள் சாரு.


நான் எதுவும் சொல்ல மாட்டேன்.நீங்க தாராளமாக எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம் என்று சாருவின் கண்களை பார்க்கமலே பேசிக்கொண்டிருந்தான் சந்துரு.


சாருவிற்கு புது இடம் என்பதால் மனதில் கொஞ்சம் தயக்கம் இருந்தது.அதோடு மட்டுமில்லாமல் சந்துருவிடம் பேசி பழகியதும் இல்லை.அவன் மனம் நோகாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டிருந்தாள்.


சாருவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது சந்துருவிற்கு போன் கால் வந்தது.


சாருனு என் பெயரை சொல்லி கூப்பிடாமல், என்ன வாங்க போங்கனு ஏங்க சொல்லுறீங்க சந்துரு? நான் இனி உங்களுக்கு சொந்தமானவள். உங்களின் சரி பாதி அல்லவா நான்! என்றெல்லாம் சந்துருவிடம் கேட்க வேண்டும் என்று சாருவிற்கு தோன்றியது.ஆனால் எதுவும் கேட்காமல் சந்துருவையே பார்த்து கொண்டிருந்தாள்.


சந்துரு போன் பேசி முடித்து திரும்பியதும், சாரு சட்டென்று தனது பார்வையை வேறு பக்கம் பார்ப்பது போல மாற்றிவிட்டாள்.


சரிங்க நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.. என்று கூறிவிட்டு கீழே சென்று விட்டான் சந்துரு.


சந்துருவின் அறை முழுவதையும் சுற்றி பார்த்து கொண்டிருந்தாள் சாரு.
சந்துருவின் அறை முழுவதும் அழகான ஓவியங்களும், ஒரு அலமாரி நிறைய புத்தகங்களும், மற்றொரு அலமாரி நிறைய பாட்டு சீடிக்களும் இருந்தன.


வீட்டு பால்கனியில் ஒரு பெரிய ஊஞ்சலுடன் கண்ணுக்கு குளிர்ச்சியாக மனதிற்கு நிம்மதி தரும் விதமாக பல வகையான பூச்செடிகளும் இருந்தது.


சந்துரு வாங்கிய விருதுகள் மற்றும் போட்டோ எல்லாவற்றையும் வரிசையாக பார்த்து சந்துருவை நினைத்து ரசித்து தனியாக சிரித்து கொண்டிருந்தாள்.


ஜன்னலின் ஓரத்தில் கலர் கலரான மீன்கள் நிறைந்த ஒரு மீன் தொட்டியும் இருந்தது.


அதன் பிறகு அறையிலிருந்த மற்றொரு ஜன்னல் வழியாக வீட்டின் முற்றத்தை பார்த்தாள் சாரு.


ஷ்யாம் வீட்டின் முற்றத்திலிருந்து சாருவையே பார்த்து கொண்டிருந்தான்.அங்கு நின்று பார்த்து கொண்டிருந்தவன் கண் இமைக்கும் நேரத்தில் திடீரென்று காணாமல் போய்விட்டான்.


டக்குனு ஒரு கை வந்து சாருவை கட்டிப்பித்ததும் பயந்து திகைத்து போனாள் சாரு.


யார் இந்த ஷ்யாம்? ஷ்யாமிற்கும் சாருவிற்கும் என்ன சம்பந்தம்? சாருவை கட்டிப்பிடித்தது யார்? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...


- தொடரும் -


* * * * * * * * * * * * * *


இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும்.
🙏🙏🙏
சாருவின் சந்தோஷமான வாழ்க்கையைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேனு
 

Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406
Points
63
சாருவின் சந்தோஷமான வாழ்க்கையைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேனு
மிக்க நன்றி அம்மா🙏😍...விரைவில் பதிவு செய்கிறேன்....
 

Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406
Points
63
wow very sweet epi sissy :love::love::love::love:.......saaru yeppadi sandru va change panna pora 🤩 🤩.......yegga irunthu vantha intha sam saaru ku vana therinju irukku polayee ava yenna panna poraanu therilaye :unsure::unsure::unsure::unsure:............yella epi laum oru twist podu mudikkuriga sagi next epi seekkaram podugga ..............sam already saaru va meet panni irukkaa so interesting sissy......waiting for next epi
Thank you so much sis🙏😍😍😍....soon will post next epi sis....
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
ஷ்யாமுக்கு சந்துருவை பிடிக்காதா..அப்றம் எதுக்கு வந்திருக்கான் :unsure: :unsure:.....சாருவை பார்த்து எதுக்கு ஷ்யாம் shock ஆனான்..ஆல்ரெடி சாரு ஷ்யாம் மீட் பண்ணிருக்காங்களா சிஸ்....nice going👌👌(y)
 

Latest posts

New Threads

Top Bottom