Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
479
Reaction score
452
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
Visual ஆ பார்த்த feel கொடுத்துச்சு ஹீரோயின் Superb 👌
மிக்க நன்றி சகோதரி🙏
 

Neha

New member
Messages
9
Reaction score
12
Points
3
எண்ணங்களே வண்ணங்களாய்...


அன்பிற்குரிய வாசகர்களுக்கு வணக்கம்🙏,

இது எனது முதல் நெடுந்தொடர்.
படித்து விட்டு தங்களது விமர்சனங்களை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


மிக்க நன்றி,


அன்புடன்
திருமதி.ராஜதிலகம் பாலாஜி

* * * * * * * * * * * * * * * *

அத்தியாயம் 1


புதுமாப்பிள விட்டா இப்போவே ஊருக்கு போய் பொண்ணு கழுத்துல தாலிக்கட்டிடுவான் போல, "பொண்ண நேர்ல பார்க்காமலே வீடியோ காலில் பார்த்து சம்மதம் சொல்லியவன்டா இவன்" என்று மாறி மாறி சந்துருவை அவனது நண்பர்கள் கிண்டலடித்து கொண்டிருந்தனர்.



"எப்போடா பேஜ்லர் பார்டி தரப்போற? என்று கேட்க" அவர்கள் கூறிய எதுவுமே காதில் விழாதது போல, லேப்டாப்பை ஆன் செய்து மும்முரமாக வேலை பார்க்க தொடங்கினான் சந்துரு.


டேய்! சந்துரு என்னடா? நாங்கள் உன்னைப்பற்றி தான் பேசிக்கிட்டு இருக்கிறோம்.


வேற யாரையோ பற்றி நாங்க பேசுற மாதிரியும், உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரியும், நீ உன் வேலையை பார்த்துக்கிட்டு இருக்கடா சந்துரு? என்றனர் அவனது நண்பர்கள்.


இன்னைக்கு மதியம் எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு.
அதுக்குள்ள ஒரு சில வேலைகளை முடிக்கனும்.


இதைப்பற்றி பிறகு பேசலாம் என்று கூறி விட்டு தனது வேலையில் கவனம் செலுத்தினான் சந்துரு.


சந்துரு அமெரிக்காவில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறான்.நண்பர்களுடன் சேர்ந்து வசித்து வருகிறான்.


சாரு கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறாள்.அவளது குடும்பம் மிகப்பெரிய கூட்டுக்குடும்பம்.


கூந்தலில் மல்லிகை பூச்சூடி, நீல நிற சேலை அணிந்து, முகத்தில் புன்கைப்பூ பூத்த முகத்துடன் பூலோக தேவதை பூமிக்கு இறங்கி பள்ளிக்கு வந்தது போல காட்சியளித்தாள் சாரு.



பெண்களே பொறாமை பட வைக்கும் அளவுக்கு அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கினாள் சாரு.



அன்பான உள்ளம் கொண்டவள், பொறுமையின் சிகரமவள், இரக்க குணம் படைத்தவள், பேசும் பேச்சில் கனிவும் தெளிவும் கொண்ட பாரதி கண்ட புதுமைப்பெண்.


ஆசிரியர்களின் ஓய்வு அறையில் அமர்ந்து புத்தகம் படித்து கொண்டிருந்தாள் சாரு.


அப்போது அவளுடன் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், "அமெரிக்கா மாப்பிள்ளை என்ன சொல்கிறார் சாரு?" என்றதும் நாணத்தில் முகம் சிவந்து போனாள் சாரு.


உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேன் சாரு.நாங்கள் எல்லோரும் சேர்ந்து அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை டவுனுக்கு சென்று ஆசிரியர் தினத்துக்கு செட் சேலை எடுக்கலாம்னு முடிவு செய்திருக்கிறோம்.



நேற்று நீ விடுமுறை என்பதால் உன்னிடம் சொல்ல முடியவில்லை.
சேலை எடுக்க நீயும் வருகிறாயா சாரு?



சும்மா இருங்க டீச்சர்! இனிமேல் அவளுக்கு நம்ம கூட பேசலாம் நேரம் கிடையாது.


"மாப்பிள சார் கிட்ட கடலை போடவே நேரம் சரியாக இருக்கும்" என்றாள் சாருவின் நெருங்கிய சிநேகிதியும், அங்கு பணிபுரியும் ஆசிரியரான பானு.



சும்மாயிரு பானு! என்றாள் சாரு.அந்த ஞாயிற்றுக்கிழமை தான் வீட்டில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.என்னால் வர முடியாது டீச்சர்.



நான் சொன்னது உண்மையாகிடுச்சுல டீச்சர் என்று சிரித்து கொண்டிருக்கும் போது பெல் அடித்த சத்தம் கேட்டது.


எனக்கு அடுத்த வகுப்பிற்கு டைம் ஆகிடுச்சு டீச்சர்.பிறகு பேசலாம் என்று சொல்லி தன் வகுப்பிற்கு பாடம் எடுக்க கிளம்பிவிட்டாள் சாரு.



அந்திசாயும் மாலை நேரம், தனது வேலையை முடித்துவிட்டு வீட்டு தோட்டத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டே வானத்தை நோக்கி பார்த்து கொண்டிருந்தான் சந்துரு.



சந்துருவின் தோள்பட்டையை தட்டினான் மனோஜ்.என்னடா! நீ இன்னும் முடிந்ததையே நினைத்து கொண்டிருக்கிறாயா? என்றான் மனோஜ்.



அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா மனோஜ்.நீ மனசுல நினைக்கிறதை மறைக்கனும்னு நினைத்தாலும், உன் முகம் நல்லா காட்டிக்கொடுக்குது சந்துரு.அதையெல்லாம் விட்டு தள்ளுடா.காலப்போக்கில் எல்லாம் சரியாகிடும்.



உனக்கு மூன்று முறை அம்மா போன் பண்ணியும் நீ போன் எடுத்து பேசவில்லையாம்.அம்மா எனக்கு போன் பண்ணாங்க.



முதலில் அம்மாவிடம் போன் பண்ணி பேசுடா என்றான் மனோஜ்.



அந்த பொண்ணுக்கிட்ட இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை போன் பண்ணி பேச சொல்றாங்க.எனக்கு அதுல சுத்தமாக விருப்பம் இல்லடா என்றான் சந்துரு.



லூசாடா நீ! அடுத்த மாதம் கல்யாணம் வச்சுக்கிட்டு பேச இஷ்டமில்லங்கிற.



அந்த பொண்ணு எவ்வளவு எதிர்ப்பார்ப்புடன் இருப்பாங்க?
ஒழுங்கா அந்த பொண்ணுட்ட பேசுகிற வழியப்பாரு என்றான் மனோஜ்.



சனிக்கிழமை இரவு வந்தது.
சாருவிற்கு மனதில் உற்சாகம் தாங்க முடியவில்லை...



சாரு வேகமாக சென்று "தனது நாட்குறிப்பு டைரியில் பல கனவுகளுடன் காதல் கவிதைளை கொட்டும் அருவிப்போல எழுதித்தீர்த்தாள்" சந்துருவை நினைத்து....



எழுதி முடித்து படுக்கை அறைக்கு வந்த சாருவால் சந்தோஷத்தில் தூங்க முடியவில்லை.கண்ணை மூடினால் சந்துருவின் முகம்தான்.



அவரது குரல் எப்படி இருக்கும்? என்று கற்பனையில் சந்துருவுடன் பேசுவது போல பேசிப்பார்த்தாள்.



அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து தேவதை போல கிளம்பி சந்துருவின் அழைப்பிற்காக கைபேசியை கையிலே
வைத்துக்கொண்டு மணியையும் பார்த்தாள், கைபேசியையும் பார்த்தாள்.



போன் ரிங் அடித்ததும் வேகமாக எடுத்து, ஹலோ! என்று சாரு சொல்ல, வணக்ம் மேடம்.நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம்.



உங்களுக்கு லோன் வேணுமா மேடம்? என்று வங்கியிலிருந்து அழைப்பு வந்தது. இல்லங்க சார் வேண்டாம்! என்று கூறி அழைப்பை கட் செய்து விட்டாள்.



நேரங்காலம் தெரியமால் இவுங்க வேற இந்த நேரத்தில் என்று சொல்லி கொண்டிருக்கும் போதே, மீண்டும் ஒரு அழைப்பு மணி வந்தது.



நம்பரை பார்த்தாள் சாரு.வெளிநாட்டு நம்பராகத்தான் இருந்தது.




சாரு ஆவலுடன் ஹலோ! என்று சொல்ல எதிர்த்தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.




தனது இனிமையான குரலில் மீண்டும் ஹலோ! என்று கூறினாள்.ஹாய்! என்று ஒரு குரல் கேட்டதும், சாருவின் இதய துடிப்பு வழக்கத்தை விட வேகமாக துடிக்க ஆரம்பித்தது.




என்ன தான் ஆசிரியராக இருந்தாலும் தன் வருங்கால கணவருடன் முதல் முதலாக பேசும் போது சந்தோஷத்தில் பதற்றம் ஏற்படத்தானே செய்யும்.



அடுத்து அவள் பேச ஆரம்பிக்கும் போது திடீரென டொய்ங்.... டொய்ங்னு.... ஒரு சத்தம் கேட்டது.



சாரு சந்துருவுடன் பேசினாளா?இல்லையா? என்ன நடந்தது? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்....


- தொடரும் -

* * * * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது விமர்சனங்களை கீழே பதிவு செய்யவும்🙏🙏🙏
அடுத்து என்ன நடக்குமோ, எதற்கு இந்த மௌனம் என ஆவலை தூண்டுகிறது...ஆசிரியரே..நல்ல ஆரம்பம்....தோழி..வாழ்த்துகள்...
 

Neha

New member
Messages
9
Reaction score
12
Points
3
எண்ணங்களே வண்ணங்களாய்...


அத்தியாயம் 2


"ஏன்டா சந்துரு! இப்படி பண்ணுன?" என்றான் மனோஜ்.


நான் தான் ஆரம்பத்தில் இருந்தே பேச இஷ்டமில்லைனு சொல்லிக்கிட்டே இருக்கிறேன்.


"நீதான் நான் சொல்வதை கேட்கமால் போன் பண்ணி கொடுத்துவிட்டாய் மனோஜ்" என்றான் சந்துரு.



"ஹாய்! மட்டும் சொன்னவன் கூட ஒரு வார்த்தை சேர்த்து பேசினால் என்ன? எதுவும் குறைந்து போகிடுவாயா?" என்றான் மனோஜ்.


பிடிக்கலைனா? நேரடியாக அம்மாக்கிட்ட சொல்லிட வேண்டியது தானடா. உனக்கு கல்யாணம் செய்ய விருப்பமில்லைனு.


தேவையில்லாமல் ஒரு பொண்ணோட மனசுல ஆசையை வளர்த்துவிட்டு, அந்த பொண்ண ஆசை காட்டி மோஷம் செய்ய போறீயாடா? என்று கோபமாக பேசினான் மனோஜ்.


அம்மாட்ட மூன்று வருஷமா இல்லாத பொல்லாத சாக்கு போக்குலாம் சொல்லி, பார்த்த எல்லா பொண்ணையும் தட்டிக்கழுச்ச மாதிரி, இப்பவும் ஏதாவது குறை சொல்லி இந்த பொண்ணையும் பிடிக்கலைனு சொல்லிட வேண்டியது தானடா? என்றான் மனோஜ்.


ஒன்றும் பேச முடியாமல் அம்மாவின் பேச்சை மறுக்க முடியாத சூழ்நிலை கைதியாகிவிட்டேன் என்றான் சந்துரு.


அம்மா இந்த முறை நீ சொல்வதை நான் கேட்க மாட்டேன் சந்துரு.நான் பார்த்து சொல்லுகிற பொண்ணு கழுத்துல நீ வந்து தாலியக்கட்டினால் போதும்.


அதையும் மீறி மாட்டேனு! நீ ஏதாவது சொன்ன, நம்ம வீட்டில கல்யாணத்துக்கு பதிலாக கருமாரி தான் நடக்கும் பார்த்துக்கோ! அப்படினு சொல்லிட்டாங்க.



"இதுக்கு மேல நான் என்னடா செய்ய முடியும்?" அது தான் வேற வழியில்லாமல் சம்மதம் சொல்லிட்டேன்.


அப்படினா! அதுக்கு ஏற்ற மாதிரி நடக்க முயற்சி செய் சந்துரு.


கல்யாணம்னு சொன்னாலே எல்லாருடைய மனசுலையும் பல மனக்கோட்டை கட்டி வச்சுருப்பாங்க.


பசங்கள விட பொண்ணுங்களுக்கு ரொம்ப கனவுகளும் எதிர்பார்ப்பும் சற்று அதிகமாகவே இருக்கும்.


பெண் பார்க்கும் போது வீடியோ காலில் அந்த பொண்ணு முகத்தைக்கூட நீ பார்க்கல.


அதையெல்லாம் நான் ஆரம்பித்துல இருந்து உன்னை கவனிச்சுக்கிட்டு தான் வருகிறேன்.


அம்மா மெயிலில் அனுப்பி வைத்த அந்த பொண்ணு போட்டோவையும் பார்க்கல.


இன்னைக்கு வர அந்த மெயிலையும் ஓபன் செய்து நீ பார்க்கவே இல்லங்கிறதும் எனக்கு தெரியும்.


நீ போகிற போக்கில போய் கொஞ்சம் விட்டு பிடிக்கலாம்னு பார்த்தால், நீ உன் எண்ணத்தை கொஞ்சம் கூட மாற்றிக்கொள்வது மாதிரி தெரியவே இல்லை.


ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கோ சந்துரு."நடந்து முடிந்ததை நம்மால் மாற்ற முடியாது", ஆனால் " இனி நடக்க இருப்பதை நம்மால் மாற்ற முடியும்".


நம்ம "மனசு தான் எல்லாத்துக்கும் ஆணி வேர்".


உன் எண்ணங்களை மாற்ற முயற்சி செய்டா நண்பா.



நான் சொல்லுறதை சொல்லிட்டேன்.
யோசிச்சு முடிவு எடுக்க வேண்டியது உன் கையில் தான் இருக்கு.


நாளைக்கு காலையில 8 மணிக்கு ப்லைட்ங்கிறத மறந்துவிடாதே!


சரி, டைம் ஆச்சு! நீ போய் தூங்கு.மீதி கதையை நாளைக்கு ப்லைட்ல போய் பேசிக்கலாம் என்றான் மனோஜ்.


அழைப்பு துண்டிக்கப்பட்டது கூட தெரியாமல் ஹலோ! ஹலோ! என்று சாரு மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருந்தாள்.


டொய்ங்...டொய்ங் சத்தம் கேட்டவுடன் கைபேசியை பார்க்க மலர் வாடியது போல அவள் முகம் வாடியது.


திடீரென்று அவள் அறையின் கதவை வேகமாக பல கரங்கள் சேர்ந்து தட்டிய ஓசையை கேட்டு, கதவை திறந்தாள் சாரு.


அவளது தங்கைகள் வந்து, அக்கா! தாத்தா முகூர்த்தக்கால் பூஜை ஆரம்பிக்க போகிறாங்கலாம்.உங்களை கையோடு அழைத்து வரச்சொன்னார் என்றனர்.


சரி வாங்க போகலாம் என்று கூறிக்கொண்டு, தன் தங்கைகளுடன் சென்று முகூர்த்தக்கால் பூஜை நிகழ்வில் சம்பிரதாய முறைகளை செய்ய தொடங்கினாள் சாரு.


மூத்த தங்கை மதி, மெதுவாக சாருவின் காதருகே சென்று மாம்ஸ் என்ன சொன்னாங்க அக்கா? என்றாள்.


பேசுறதுக்குள்ள சிக்னல் கிடைக்காமல், கால் கட் ஆகிடுச்சு மதி!


சரி விடுங்க, அடுத்த வாரம் நேரில் பார்த்து பேசிவிடலாம் என்று கூறிவிட்டாள்.



"சரி எல்லாரும் சீக்கிரம் சாப்பிட்டு ரெடி ஆகுங்க".



டவுன்ல போய் எல்லோருக்கும் ஜவுளி எடுத்துவிட்டு வந்துருவோம் என்றார் சாருவின் தாத்தா.



மாப்பிள்ளை அடுத்த வாரம் வந்ததும், அவரைப் பார்க்க போகும்போது புது துணி வாங்கி கொடுக்கனும்.



அவருக்கும் சேர்த்தே எடுத்துட்டு வந்திடலாம் என்றார் சாருவின் தாத்தா.



சாருவின் குடும்பம் பரம்பரை ஜமீன் குடும்பம்.



தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை என்று ஒட்டு மொத்தமாக காலம் காலமாக சேர்ந்து வாழும்
கூட்டுக்குடும்பம்.



ஊரே கண்டு ஆச்சரியப்படும் வகையில் அவ்வளவு ஒற்றுமையாக, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து எப்போதும் கலகலவென சந்தோஷமாக வாழும் அன்புக்குடும்பம் தான் சாருவின் குடும்பம்.



எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின்னர், வண்டியில் ஏறினார்கள்.வண்டி கிளம்பியதும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியாக ஆடிப்பாடி கொண்டிருந்தனர்.



டவுனும் வந்தது.ஜவுளி கடையினுள் சென்றதும், எல்லாரும் உங்களுக்கு பிடித்த துணியை எடுத்துவிட்டு கடைசியாக பில் போடும் இடத்துக்கு வந்திடுங்க! என்று தன் குடும்பத்தாரிடம் கூறினார் தாத்தா.



சாரு மட்டும் தாத்தாவுடன் இருந்தாள்.
வா சாரு! நாம் சென்று மாப்பிள்ளைக்கு சட்டை பார்ப்போம் என்றார்.



சரிங்க தாத்தா! கடையின் இரண்டாவது மாடியில் தான் ஆண்கள் பிரிவு உள்ளது.


வாங்க தாத்தா! லிஃப்ட்டில் செல்வோம் என்று தாத்தாவை அழைத்து செல்லும் வழியின் எதிரில், அவள் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் வந்தனர்.



சாரு! நீயும் இங்கே தான் இருக்கிறாயா? என்றாள் பானு.அப்போ நல்லதா போச்சு! நாம் எல்லாரும் சேர்ந்து பார்த்தே சேலையை எடுத்துவிடலாம் என்றாள் பானு.



"கல்யாணத்துக்கு வீட்டில உள்ள எல்லோருக்கும் துணி எடுக்க வந்தோம் பானு" என்றாள் சாரு.



நீங்க பார்த்துக்கிட்டு இருங்க.நான் ஒரு பதினைந்து நிமிஷத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு தாத்தாவை அழைத்து கொண்டு இரண்டாவது மாடிக்கு சென்று மாப்பிள்ளைக்கு சட்டையை பார்க்க தொடங்கினாள்.



மின்னல் வேகத்தில் ஒவ்வொரு பிராண்ட்லையும் தேடி தேடி மொத்தமாக நான்கு சட்டையை தேர்வு செய்து தாத்தாவிடம் காட்டினாள்.



தாத்தா, பேத்தியின் ஆர்வம் கண்டு ஆச்சரியமாக அவளை பார்த்து மனதில் மகிழ்ச்சியடைந்தார்.



சாரு தன் மனக்கண்ணிலே சந்துருவிற்கு நேரடியாக ஒவ்வொரு சட்டையையும் போட்டு பார்த்து ஆசை ஆசையாக சட்டையை தேர்ந்தெடுத்தாள்.



தாத்தா, சாருவிடம் நீ பார்த்து வைத்த அனைத்து சட்டையையும் வாங்கிவிடலாம் சாரு என்றதும், சாருவின் மனதில் எல்லையில்லா ஆனந்தம் ஆட்கொண்டது.



தாத்தா! நான் சென்று என் பள்ளி ஆசிரியர்களை பார்த்துவிட்டு ஐந்து நிமிஷத்தில் வந்துவிடுகிறேன்.



நீங்கள் கீழே அமர்ந்திருங்கள் தாத்தா. "சரிடா, நீ கவனமாக போய் வா!" என்றார் தாத்தா.



மூன்றாவது மாடியில் சேலை செக்ஸனில் ஆசிரியர்கள் அனைவரும் பத்து சேலையை எடுத்து வைத்துக்கொண்டு, எதை எடுக்கலாம்? என்று குழம்பி கொண்டிருந்த சமயம் சாரு வந்தாள்.


அவளிடம் அனைத்து சேலையையும் காட்டினார்கள்.


சாரு வேகமாக ஒரு சேலையை எடுத்து, இந்த நீல நிறப்புடவை எல்லோருக்கும் அழகாக இருக்கும் என்று சொன்னதும் சாரு மாதிரி சரியாக தேர்ந்தெடுக்க யாராலும் முடியாது.




"வந்த ஐந்து நிமிஷத்தில் சேலையை எல்லோருக்கும் பொறுத்தமாக தேர்ந்தெடுத்துவிட்டாய் சாரு!" என்றாள் பானு.



சரி பானு, நாளைக்கு ஸ்கூலில் பார்க்கலாம்.தாத்தா கீழே தனியாக இருக்காங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி தாத்தாவிடம் சென்றாள்.



வீட்டில் உள்ள அனைவரும் துணியை வாங்கி முடித்ததும் வீட்டிற்கு
கிளம்பிச்சென்றனர்.


அமெரிக்காவில் இருந்து சந்துருவும் அவனது நண்பன் மனோஜூம் விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.
விமானமும் இந்தியாவை நோக்கி புறப்பட்டது.



"சந்துருவின் மனதில் மாற்றம் வந்ததா?" என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்....


- தொடரும் -


இத்தொடரைக் குறித்த தங்களது விமர்சனங்களை கீழே பதிவு செய்யவும்.
🙏🙏🙏
சன்துருவின் மனதில் என்னதான் உள்ளது என்ற ஆர்வம் எனக்கும் வந்துவிட்டது.... தோழி
 

Rajathilagam Balaji

Well-known member
Vannangal Writer
Messages
264
Reaction score
406
Points
63
சன்துருவின் மனதில் என்னதான் உள்ளது என்ற ஆர்வம் எனக்கும் வந்துவிட்டது.... தோழி
மிக்க நன்றி அம்மா🙏
 

New Threads

Top Bottom