எண்ணங்களே வண்ணங்களாய்...
அத்தியாயம் 2
"ஏன்டா சந்துரு! இப்படி பண்ணுன?" என்றான் மனோஜ்.
நான் தான் ஆரம்பத்தில் இருந்தே பேச இஷ்டமில்லைனு சொல்லிக்கிட்டே இருக்கிறேன்.
"நீதான் நான் சொல்வதை கேட்கமால் போன் பண்ணி கொடுத்துவிட்டாய் மனோஜ்" என்றான் சந்துரு.
"ஹாய்! மட்டும் சொன்னவன் கூட ஒரு வார்த்தை சேர்த்து பேசினால் என்ன? எதுவும் குறைந்து போகிடுவாயா?" என்றான் மனோஜ்.
பிடிக்கலைனா? நேரடியாக அம்மாக்கிட்ட சொல்லிட வேண்டியது தானடா. உனக்கு கல்யாணம் செய்ய விருப்பமில்லைனு.
தேவையில்லாமல் ஒரு பொண்ணோட மனசுல ஆசையை வளர்த்துவிட்டு, அந்த பொண்ண ஆசை காட்டி மோஷம் செய்ய போறீயாடா? என்று கோபமாக பேசினான் மனோஜ்.
அம்மாட்ட மூன்று வருஷமா இல்லாத பொல்லாத சாக்கு போக்குலாம் சொல்லி, பார்த்த எல்லா பொண்ணையும் தட்டிக்கழுச்ச மாதிரி, இப்பவும் ஏதாவது குறை சொல்லி இந்த பொண்ணையும் பிடிக்கலைனு சொல்லிட வேண்டியது தானடா? என்றான் மனோஜ்.
ஒன்றும் பேச முடியாமல் அம்மாவின் பேச்சை மறுக்க முடியாத சூழ்நிலை கைதியாகிவிட்டேன் என்றான் சந்துரு.
அம்மா இந்த முறை நீ சொல்வதை நான் கேட்க மாட்டேன் சந்துரு.நான் பார்த்து சொல்லுகிற பொண்ணு கழுத்துல நீ வந்து தாலியக்கட்டினால் போதும்.
அதையும் மீறி மாட்டேனு! நீ ஏதாவது சொன்ன, நம்ம வீட்டில கல்யாணத்துக்கு பதிலாக கருமாரி தான் நடக்கும் பார்த்துக்கோ! அப்படினு சொல்லிட்டாங்க.
"இதுக்கு மேல நான் என்னடா செய்ய முடியும்?" அது தான் வேற வழியில்லாமல் சம்மதம் சொல்லிட்டேன்.
அப்படினா! அதுக்கு ஏற்ற மாதிரி நடக்க முயற்சி செய் சந்துரு.
கல்யாணம்னு சொன்னாலே எல்லாருடைய மனசுலையும் பல மனக்கோட்டை கட்டி வச்சுருப்பாங்க.
பசங்கள விட பொண்ணுங்களுக்கு ரொம்ப கனவுகளும் எதிர்பார்ப்பும் சற்று அதிகமாகவே இருக்கும்.
பெண் பார்க்கும் போது வீடியோ காலில் அந்த பொண்ணு முகத்தைக்கூட நீ பார்க்கல.
அதையெல்லாம் நான் ஆரம்பித்துல இருந்து உன்னை கவனிச்சுக்கிட்டு தான் வருகிறேன்.
அம்மா மெயிலில் அனுப்பி வைத்த அந்த பொண்ணு போட்டோவையும் பார்க்கல.
இன்னைக்கு வர அந்த மெயிலையும் ஓபன் செய்து நீ பார்க்கவே இல்லங்கிறதும் எனக்கு தெரியும்.
நீ போகிற போக்கில போய் கொஞ்சம் விட்டு பிடிக்கலாம்னு பார்த்தால், நீ உன் எண்ணத்தை கொஞ்சம் கூட மாற்றிக்கொள்வது மாதிரி தெரியவே இல்லை.
ஒன்னு நல்லா தெரிஞ்சுக்கோ சந்துரு."நடந்து முடிந்ததை நம்மால் மாற்ற முடியாது", ஆனால் " இனி நடக்க இருப்பதை நம்மால் மாற்ற முடியும்".
நம்ம "மனசு தான் எல்லாத்துக்கும் ஆணி வேர்".
உன் எண்ணங்களை மாற்ற முயற்சி செய்டா நண்பா.
நான் சொல்லுறதை சொல்லிட்டேன்.
யோசிச்சு முடிவு எடுக்க வேண்டியது உன் கையில் தான் இருக்கு.
நாளைக்கு காலையில 8 மணிக்கு ப்லைட்ங்கிறத மறந்துவிடாதே!
சரி, டைம் ஆச்சு! நீ போய் தூங்கு.மீதி கதையை நாளைக்கு ப்லைட்ல போய் பேசிக்கலாம் என்றான் மனோஜ்.
அழைப்பு துண்டிக்கப்பட்டது கூட தெரியாமல் ஹலோ! ஹலோ! என்று சாரு மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருந்தாள்.
டொய்ங்...டொய்ங் சத்தம் கேட்டவுடன் கைபேசியை பார்க்க மலர் வாடியது போல அவள் முகம் வாடியது.
திடீரென்று அவள் அறையின் கதவை வேகமாக பல கரங்கள் சேர்ந்து தட்டிய ஓசையை கேட்டு, கதவை திறந்தாள் சாரு.
அவளது தங்கைகள் வந்து, அக்கா! தாத்தா முகூர்த்தக்கால் பூஜை ஆரம்பிக்க போகிறாங்கலாம்.உங்களை கையோடு அழைத்து வரச்சொன்னார் என்றனர்.
சரி வாங்க போகலாம் என்று கூறிக்கொண்டு, தன் தங்கைகளுடன் சென்று முகூர்த்தக்கால் பூஜை நிகழ்வில் சம்பிரதாய முறைகளை செய்ய தொடங்கினாள் சாரு.
மூத்த தங்கை மதி, மெதுவாக சாருவின் காதருகே சென்று மாம்ஸ் என்ன சொன்னாங்க அக்கா? என்றாள்.
பேசுறதுக்குள்ள சிக்னல் கிடைக்காமல், கால் கட் ஆகிடுச்சு மதி!
சரி விடுங்க, அடுத்த வாரம் நேரில் பார்த்து பேசிவிடலாம் என்று கூறிவிட்டாள்.
"சரி எல்லாரும் சீக்கிரம் சாப்பிட்டு ரெடி ஆகுங்க".
டவுன்ல போய் எல்லோருக்கும் ஜவுளி எடுத்துவிட்டு வந்துருவோம் என்றார் சாருவின் தாத்தா.
மாப்பிள்ளை அடுத்த வாரம் வந்ததும், அவரைப் பார்க்க போகும்போது புது துணி வாங்கி கொடுக்கனும்.
அவருக்கும் சேர்த்தே எடுத்துட்டு வந்திடலாம் என்றார் சாருவின் தாத்தா.
சாருவின் குடும்பம் பரம்பரை ஜமீன் குடும்பம்.
தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை என்று ஒட்டு மொத்தமாக காலம் காலமாக சேர்ந்து வாழும்
கூட்டுக்குடும்பம்.
ஊரே கண்டு ஆச்சரியப்படும் வகையில் அவ்வளவு ஒற்றுமையாக, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து எப்போதும் கலகலவென சந்தோஷமாக வாழும் அன்புக்குடும்பம் தான் சாருவின் குடும்பம்.
எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின்னர், வண்டியில் ஏறினார்கள்.வண்டி கிளம்பியதும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியாக ஆடிப்பாடி கொண்டிருந்தனர்.
டவுனும் வந்தது.ஜவுளி கடையினுள் சென்றதும், எல்லாரும் உங்களுக்கு பிடித்த துணியை எடுத்துவிட்டு கடைசியாக பில் போடும் இடத்துக்கு வந்திடுங்க! என்று தன் குடும்பத்தாரிடம் கூறினார் தாத்தா.
சாரு மட்டும் தாத்தாவுடன் இருந்தாள்.
வா சாரு! நாம் சென்று மாப்பிள்ளைக்கு சட்டை பார்ப்போம் என்றார்.
சரிங்க தாத்தா! கடையின் இரண்டாவது மாடியில் தான் ஆண்கள் பிரிவு உள்ளது.
வாங்க தாத்தா! லிஃப்ட்டில் செல்வோம் என்று தாத்தாவை அழைத்து செல்லும் வழியின் எதிரில், அவள் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் வந்தனர்.
சாரு! நீயும் இங்கே தான் இருக்கிறாயா? என்றாள் பானு.அப்போ நல்லதா போச்சு! நாம் எல்லாரும் சேர்ந்து பார்த்தே சேலையை எடுத்துவிடலாம் என்றாள் பானு.
"கல்யாணத்துக்கு வீட்டில உள்ள எல்லோருக்கும் துணி எடுக்க வந்தோம் பானு" என்றாள் சாரு.
நீங்க பார்த்துக்கிட்டு இருங்க.நான் ஒரு பதினைந்து நிமிஷத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு தாத்தாவை அழைத்து கொண்டு இரண்டாவது மாடிக்கு சென்று மாப்பிள்ளைக்கு சட்டையை பார்க்க தொடங்கினாள்.
மின்னல் வேகத்தில் ஒவ்வொரு பிராண்ட்லையும் தேடி தேடி மொத்தமாக நான்கு சட்டையை தேர்வு செய்து தாத்தாவிடம் காட்டினாள்.
தாத்தா, பேத்தியின் ஆர்வம் கண்டு ஆச்சரியமாக அவளை பார்த்து மனதில் மகிழ்ச்சியடைந்தார்.
சாரு தன் மனக்கண்ணிலே சந்துருவிற்கு நேரடியாக ஒவ்வொரு சட்டையையும் போட்டு பார்த்து ஆசை ஆசையாக சட்டையை தேர்ந்தெடுத்தாள்.
தாத்தா, சாருவிடம் நீ பார்த்து வைத்த அனைத்து சட்டையையும் வாங்கிவிடலாம் சாரு என்றதும், சாருவின் மனதில் எல்லையில்லா ஆனந்தம் ஆட்கொண்டது.
தாத்தா! நான் சென்று என் பள்ளி ஆசிரியர்களை பார்த்துவிட்டு ஐந்து நிமிஷத்தில் வந்துவிடுகிறேன்.
நீங்கள் கீழே அமர்ந்திருங்கள் தாத்தா. "சரிடா, நீ கவனமாக போய் வா!" என்றார் தாத்தா.
மூன்றாவது மாடியில் சேலை செக்ஸனில் ஆசிரியர்கள் அனைவரும் பத்து சேலையை எடுத்து வைத்துக்கொண்டு, எதை எடுக்கலாம்? என்று குழம்பி கொண்டிருந்த சமயம் சாரு வந்தாள்.
அவளிடம் அனைத்து சேலையையும் காட்டினார்கள்.
சாரு வேகமாக ஒரு சேலையை எடுத்து, இந்த நீல நிறப்புடவை எல்லோருக்கும் அழகாக இருக்கும் என்று சொன்னதும் சாரு மாதிரி சரியாக தேர்ந்தெடுக்க யாராலும் முடியாது.
"வந்த ஐந்து நிமிஷத்தில் சேலையை எல்லோருக்கும் பொறுத்தமாக தேர்ந்தெடுத்துவிட்டாய் சாரு!" என்றாள் பானு.
சரி பானு, நாளைக்கு ஸ்கூலில் பார்க்கலாம்.தாத்தா கீழே தனியாக இருக்காங்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி தாத்தாவிடம் சென்றாள்.
வீட்டில் உள்ள அனைவரும் துணியை வாங்கி முடித்ததும் வீட்டிற்கு
கிளம்பிச்சென்றனர்.
அமெரிக்காவில் இருந்து சந்துருவும் அவனது நண்பன் மனோஜூம் விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.
விமானமும் இந்தியாவை நோக்கி புறப்பட்டது.
"சந்துருவின் மனதில் மாற்றம் வந்ததா?" என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்....
- தொடரும் -
இத்தொடரைக் குறித்த தங்களது விமர்சனங்களை கீழே பதிவு செய்யவும்.
🙏🙏🙏