Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

vaishnaviselva@

Well-known member
Messages
312
Reaction score
248
Points
63
:LOL::ROFLMAO::ROFLMAO:Adaa....periya bulb koduthutiggale authour ji 😍:love::love:.......ippadi kanvaa poche pavam saaru yeggala vida saarutha athigama feel panni iruppa.:LOL:🤩............so sprb epi sis saaru kanaugal and avaloda emosions yella but avva la ithuku sari pattu varamaattaane iva yeppo saaruva purinju kirathu emosions and feelings la mattu odastagana avlotha intha saaru vera kanna moodittu avva mela love overflow aguraale...........waiting for next epi sis🤩:love::love::love::love:..........

🌸vaishu🌸
 
Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406

Thank you so much Dear sis....I updated next episode ..please read and share ur comments...
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
இந்த எபிலயும் சந்திக்கலையா.....அப்போ ஹாஸ்பிடல்லதான் சந்திப்பாங்களா??சந்துருக்கு என்னாச்சு......சாரு பேரம் பேசுனவங்க கிட்ட பேசுனதும் மன்னிப்புகேட்டதும் 👌 👌👌👌👌:love:பாட்டியிடம் பேசுனது செம.....ஜானகி அம்மாக்கு சாருவ பார்க்கப்போறன்னு சந்துரு சொன்னதும் ரொம்ப சந்தோஷப்படறாங்க.......சாருக்கு ஏமாற்றமாவே இருக்கு...
 
மிக்க நன்றி சகோதரி...விரைவில் சந்திப்பார்கள்....
 
Geethraniprakash

New member
Messages
7
Reaction score
8
Points
3
எண்ணங்களே வண்ணங்களாய்...

அத்தியாயம் 5

சந்துரு! சந்துரு! எழுந்திருடா...மணி எட்டு ஆகிடுச்சுடா... என்றான் மனோஜ்.

ஒரு ஐந்து நிமிஷம்டா மனோஜ்.நீ போய் முதலில் குளித்து ரெடியாகி கிளம்புடா என்றான் சந்துரு.

டேய்! மாப்பிள்ளை நீயா? இல்ல நானா? ஒழுங்கு மரியாதையாக எழுந்து கிளம்புகிற வழியைப்பாரு.இல்லை என்றால் அம்மாவை அழைத்து வந்திருவேன் சந்துரு என்றான் மனோஜ்.

ஒரு ஐந்து நிமிஷம் நிம்மதியாக தூங்க விடுகிறாயா மனோஜ்? என்று அவனை திட்டிக்கொண்டே குளிக்க சென்றான் சந்துரு.

சந்துருவும் மனோஜூம் தயாராக கிளம்பி சாப்பிட வந்தனர்.

நேரத்துக்கு தூங்குனா தான சீக்கிரம் எழுந்திருக்க முடியும்.

மணியை பாரு! ஒன்பது மணி ஆகிடுச்சு.உனக்கு அந்த பொண்ண பார்க்கனும்னு விருப்பம் இருக்கிற மாதிரி கொஞ்சம் கூட தெரியவில்லை.

உன் வயசு பசங்களாம் போய் பாருடா சந்துரு.கல்யாணம் பேசி முடிக்கிறதுக்கு முன்னாடியே தான் கட்டிக்க போகிற பொண்ணோட சேர்ந்து பீச், பார்க், சினிமானு நல்லா ஊர் சுத்திக்கிட்டு இருக்காங்க.

நீ என்னடானா இரண்டு நாளில் கல்யாணத்தை வைத்துக்கொண்டு இன்னும் சாருவை பார்க்காமல் இருக்க.

சரி, வெளிநாட்டில இருந்ததால் அதுக்கு வாய்ப்பில்லைனு வச்சுக்கலாம்.

வந்து மூன்று நாளில் ஒரு நாளாவது சாருக்கிட்ட போன் பண்ணி பேசினுயா? என்று தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார் சந்துருவின் அம்மா.

சந்துரு மறுபதில் எதுவுமே கூறாமல் மௌனமாக இருந்தான்.சாப்பிட்டு முடித்தவுடன், அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு "சாருவை சென்று பார்த்துவிட்டு வருகிறோம்" என்று சொன்னதும் சந்துருவின் அம்மாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.சரிப்பா கவனமாக போய்ட்டு வாங்க! என்றார்.

மலர்ந்த முகத்துடன் சமையலறைக்குள் நுழைந்தார் சந்துருவின் அம்மா.

அம்மா! கடந்த இருப்பதைந்து வருஷத்துக்கு பிறகு இன்னைக்கு தான் உங்களோட முகத்துல இவ்வளவு சந்தோஷத்தை பார்க்கிறேன்.

என்னமா? சின்ன ஐயா பழைய மாதிரி மனசு மாறீட்டாங்களா? என்று கேட்டார் அங்கு வீட்டு வேலை செய்யும் கண்ணம்மா.

ஆமாம் கண்ணம்மா...சந்துரு இதுநாள் வரைக்கும் சாருக்கிட்ட எதுவுமே பேசவும் இல்லை.

அவளை போய் பார்க்கவும் இல்லை.அவளைப்பற்றி ஒரு நாள் கூட என்னிடம் எதுவும் கேட்டதுமில்லை.

சந்துருக்கு விருப்பமில்லாமல், அவனை கட்டாயப்படுத்தி கஷ்டப்படுத்துவது மட்டுமில்லாமல், நம்ம குடும்பத்தை பற்றி எதுவுமே சொல்லாமல் சாருவையும் சேர்த்து சங்கடத்துக்கு ஆளாக்கிட்டு இருக்கிறேனோ? என்று சில நாட்களாகவே மனதிற்குள் கொஞ்சம் நெருடலாகவே இருந்து கொண்டடிருந்தது கண்ணம்மா.

நான் சந்தோஷபடும் அளவுக்கு எதுவும் பெரியதாக ஒன்றும்
நடக்கவில்லை.இருந்தாலும் என்னமோ தெரியவில்லை
கண்ணம்மா.

சந்துரு இன்றைக்கு முதல் முதலாக சாருவின் பெயரை, அவன் வாயால் சொன்னதை கேட்டதும் மனசுலா என்னையே அறியாமல் அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது கண்ணம்மா.

சாரு ரொம்ப பொறுமையான பொண்ணு கண்ணம்மா.பண்பாடு தெரிந்த புத்ததிசாலி பொண்ணும்கூட.

அவள் இந்த வீட்டுக்கு வந்ததும், சந்துரு பழைய மாதிரி மாறிடுவானு எனக்கு நம்பிக்கை இருக்கிறது கண்ணம்மா.

அம்மா! நீங்கள் தப்பா எடுத்துக்கமாட்டீங்கனா? நான் உங்களிடம் ஒன்று சொல்லலாமா அம்மா? என்றாள் கண்ணம்மா.

நீ சொல்ல வருவதை சொல்லு கண்ணம்மா.நான் ஒன்றும் தப்பா நினைக்க மாட்டேன்.

இல்லங்கமா! நீங்களே
சின்னம்மாவிடம் எல்லா
விஷயத்தையும் நேரில் பார்த்து சொல்லிவிடலாம்ல அம்மா.

நானும் அதைப்பற்றி பல முறை சந்துருவிடம் பேசி பார்த்துவிட்டேன் கண்ணம்மா.அவன் என் பேச்சை கேட்கிற மாதிரி தெரியவேயில்லை.

அவனுக்கா சொல்லனும்னு தோணும் போது சொல்லிக்கிறேன் என்று கூறிவிட்டான்.

இப்போதைக்கு எதுவும் நீங்க அவசரப்பட்டு சொல்ல வேண்டாம் அம்மா! என்று கூறி என் வாயை அடைத்து விட்டான் கண்ணம்மா.

சந்துரு குணம் பற்றி தான் உனக்கு நல்லாவே தெரியும்ல கண்ணம்மா என்றார் சந்துருவின் அம்மா.

சரி கண்ணம்மா... வடக்கு தெருல இன்னும் கொஞ்ச பேருக்கு பத்திரிக்கை கொடுக்க வேண்டியது இருக்கு.நான் சென்று கொடுத்துவிட்டு
வருகிறேன்.

மதியம் சாப்பாட்டுக்கு பூண்டு குழம்பும், பீட்ரூட் பொறியலும் சமைத்து வச்சிரு கண்ணம்மா என்று கூறிவிட்டு சென்றார் சந்துருவின் அம்மா.

கடந்த இருபத்தைந்து வருஷமாக சந்துருவின் வீட்டோடு தங்கி சமையல் வேலை செய்து வருபவர் தான் கண்ணம்மா.

சந்துருவின் வீட்டில் தொடர்ந்து நடந்த கசப்பான சம்பவங்களின் துக்கத்திலிருந்து, ஜானகி அம்மாவை மீட்டெடுத்து பழைய நிலைக்கு கொண்டு வந்தது மட்டுமில்லாமல், அவருக்கு எப்போதும் ஆறுதலாகவும் பக்க பலமாகவும் இருப்பவர் தான் இந்த கண்ணம்மா.

சந்துருவின் அம்மாவின் பெயர் தான் ஜானகி.

சாரு கனவில் பார்த்தது போலவே செதுக்கி வைத்த சிலையாட்டம் கிளம்பி வந்தாள்.

ஏய் சாரு! இந்த பையை மாப்பிள்ளைக்கிட்ட கொடுத்துவிடு என்றார் சாருவின் அம்மா.

"இந்த பையில் என்ன இருக்குமா?"

முதல் முதலாக மாப்பிள்ளையை பார்க்க போகும் போது வெறுங்கையை வீசிக்கிட்டு போக போகிறீயா சாரு?

நான் கொஞ்சம் பலகாரம் சுட்டு அதில் எடுத்து வைத்திருக்கிறேன்.கொண்டு போய் கொடுத்துவிடு.

இந்த யோசனை எனக்கு வராமல் போயிருச்சே அம்மா? என்றாள் சாரு.

உங்கள் நினைவெல்லாம் மாமாக்கிட்ட இருக்கும் போது, அந்த யோசனை உங்களுக்கு எப்படி அக்கா வரும்? என்று சொல்லிவிட்டு சிரித்தாள் மதி.

நீ சும்மா இருக்கவே மாட்டட மதி.நான் ஒரு வார்த்தை பேசிறக்கூடாது.உடனே கிண்டலடிக்க ஆரம்பிச்சிடுவியே! என்றாள் சாரு.

சரிங்மா.. நான் அவுங்களை சென்று பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சந்துருவை பார்க்க மிகவும் ஆவலாக புறப்பட்டாள் சாரு.

பானு, சாருவின் வீட்டு வாசலில் ஸ்கூட்டியில் காத்து கொண்டிருந்தாள்.
பானு சாருவின் அழகை கண்டு வர்ணிக்க தொடங்கினாள்.சாரு ஒன்றும் பேசாமல் செல்லும் வழியெல்லாம் சந்துருவை நினைத்து கொண்டே சென்றாள்.

இருவரும் கோவிலின் வாசலை வந்தடைந்தார்கள்.அங்குள்ள பூக்கார பாட்டியிடம், ஒருவர் ஒரு முழப்பூவிற்கு பேரம் பேசிக்கொண்டிருந்தார்.

அவர் வாங்கிவிட்டு சென்றதும், ஒரு முழம் பூ எவ்வளவு பாட்டி? என்றாள் சாரு.முழம் பத்து ரூபாய்மா என்றார் பாட்டி.சரிங்க பாட்டி...எனக்கு ஐந்து முழம் பூ கொடுங்க என்றாள் சாரு.

அந்த பாட்டியிடம் நூறு ரூபாயை கொடுத்தாள் சாரு.என்னிடம் நூறு ரூபாய்க்கு சில்லரை இல்லையேமா? என்றார் பாட்டி.

பரவாயில்லை பாட்டி! மீதி பணம் உங்களிடமே இருக்கட்டும்.நான் அடுத்த முறை கோவிலுக்கு வரும் போது மீதி பணத்தை வாங்கி கொள்கிறேன் என்று கூறிவிட்டாள் சாரு.

சாருவும் பானுவும் மலையில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு படி கட்டுகளில் ஏறி நடக்க ஆரம்பித்தனர்.

அந்த பாட்டிக்கிட்ட மீதி பணம் வாங்காமல் நூறு ரூபாயை அப்படியே கொடுத்துவிட்டு வந்துட்ட சாரு.

நீ இந்த கோவிலுக்கு அடிக்கடி வரும் ஆளும் கிடையாது.பிறகு எப்போது வந்து மீதி பணத்தை திருப்பி வாங்குவ? என்றாள் பானு.

யாரு வந்து பணத்தை வாங்க போறா?
கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி நீதான அப்படி பாட்டிக்கிட்ட சொன்ன சாரு.

ஆமாம்...அப்படி சொன்னதால் தான் அந்த பாட்டி சரினு ஒத்துகிட்டாங்க.

நீங்களே மீதி பணத்தை வைத்து கொள்ளுங்கள் பாட்டி! என்று மட்டும் நான் சொல்லியிருந்தால் கண்டிப்பாக பணத்தை பெற்று கொள்ள சம்மதிச்சிருக்க மாட்டாங்க.

பாட்டிக்கு பாக்கியை எப்படி திருப்பி கொடுக்கிறது? என்று நினைத்து பூவை விற்கவும் முடியாமல் போயிருக்கும்.

இப்போது பாரு.பாட்டி பூவையும் விற்ற மாதிரி ஆச்சு! பாட்டி மனசும் நிறைஞ்ச மாதிரி ஆச்சு!

சிறிது நேரத்திற்கு முன்னர் அந்த பாட்டியிடம் பேரம் பேசியவரின் அருகே வேகமாக நடந்து சென்றாள் சாரு.

ஒரு நிமிஷம் உங்களிடம் பேசலாமா சார்? என்றாள் சாரு.

ம்ம்...சொல்லுங்கமா...என்றார்.

தள்ளாடும் வயதிலும், வேகாத வெயிலில் உட்கார்ந்து ஒரு வேளை சாப்பாட்டுக்காக பூவை விற்று வயிற்றை நிரப்பும் அந்த பாட்டிக்கிட்ட இனிமேல் தயவு செய்து இந்த மாதிரி பேரம் பேசாதீங்க சார்.

அந்த பூவை விற்றால் ஐந்தோ! பத்தோ! தான் கிடைக்கும்.நம்மை ஒன்றும் பெரியதாக ஏமாற்றி, அந்த பாட்டி கோட்டை கட்டுவதற்கு பூ வியாபாரம் செய்யவில்லை சார்.

உங்களால் டவுன்ல உள்ள ஏதாவதொரு பெரிய கடைக்கு சென்று, இப்படி பேரம் பேசி விலையை குறைத்து ஒரு பொருளை வாங்க முடியுமா சார்? என்றாள் சாரு.

சாருவின் கேள்விக்கு திருப்பி பதிலளிக்க முடியாமல் தலைகுனிந்து அமைதியாக இருந்தார் அவர்.

நான் பேசியதில் ஏதாவது தவறு இருந்திருந்தால் மன்னிகவும் சார் என்று கூறிவிட்டு படிகளில் ஏறி நடக்க தொடங்கினாள் சாரு.

எப்படி சாரு? உன் எண்ணங்களும் உன்னைப் போலவே ரொம்ப அழகாக இருக்கிறது என்றாள் பானு.

மாப்பிள்ளை சார் ரொம்ப கொடுத்து வைத்தவர் தான் என்று சந்துருவை பற்றி பேசத்தொடங்கினாள் பானு.

சந்துருவை பற்றி பேச ஆரம்பித்ததும் செடிகளில் பூத்துக்குலுங்கும் மலர்களை போல சாருவின் முகத்தில் புன்கைப்பூ பூத்துக்குலுங்க தொடங்கியது.

தாத்தாவுக்கு வேற இடமே கிடைக்கவில்லையா சாரு? கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது.

படிகட்டில் நடக்க நடக்க அப்படியே தோசை கல்லை காலில் வைத்தது போல இருக்கிறது சாரு என்றாள் பானு.

அப்படியா! எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லையே பானு என்றாள் சாரு.

உனக்கு மாப்பிள்ளை சாரை பார்க்க போகிற குஷில சூட்டெரிக்கும் சூடுலாம் உனக்கு தெரியாதுமா என்றாள் பானு.

ஒரு வழியாக கோவிலுக்கு வந்தடைந்தனர்.ஆனால் சாருவின் நினைவெல்லாம் சந்துருவை பற்றியே இருந்தது.

மணியும் பத்தாகி விட்டது.கோவிலின் மேலிருந்து, கீழே ஏதேனும் கார் வருகிறதா? என்று பார்த்து கொண்டும் நடந்து கொண்டும் இருந்தாள் சாரு.

மணியையும் பார்த்தாள்! பாதையும் பார்த்தாள்! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்தவொரு காரும் வருவதாக தெரியவில்லை.

மணியும் மதியம் இரண்டாகிவிட்டது.
கோவில் பூசாரி சாருவிடம் வந்து கோவில் நடையை மூட நேரமாகிவிட்டதுமா.

மீண்டும் மாலை ஐந்து மணிக்கு தான் நடைத்திறக்கப்படும் என்று கூறிவிட்டு சீக்கிரம் கிளம்புங்கள் என்றார்.

பானும் சாருவும் படியிலிருந்து இறங்கியதும், அவள் கனவில் கண்ட அதே வெள்ளை நிற கார் வந்தது.ஆசை நாயகனை காண ஆவலுடன் அக்காரின் அருகில் சென்றாள் சாரு.

ஆனால் காரிலிருந்து இறங்கியது சந்துரு அல்ல, அவனது நண்பன் மனோஜ்.

வணக்கம் சாரு.நான் சந்துருவின் நெருங்கிய நண்பன் என்று சாருவிடம் அவனை அறிமுகம் செய்தான் மனோஜ்.

உங்களை இவ்வளவு நேரம் காத்திருக்க வைத்ததிற்கு மன்னிகனும் சாரு! என்றதும்
பானுவிற்கு பயங்கரமாக கோபம் பொங்கி வந்துவிட்டது.

என்னங்க சார்? செய்வதெல்லாம் செஞ்சிட்டு மன்னிப்பு வேற கேட்கிறீங்களா? என்று கேட்டாள் பானு.

வருவதற்கு நேரமாகும் என்றால், ஒரு போன் பண்ணி சொல்லனும் கூடவா உங்களுக்கும் உங்க நண்பருக்கும்
தெரியாது.

சாரு காலையிலே சீக்கிரமாக கிளம்பி சாப்பிட கூட இல்லாமல், அவ்வளவு ஆசையாக மாப்பிள்ளை பார்க்கனும்னு வேகமாக வந்து காத்துக்கொண்டு இருக்கிறாள்.

கொஞ்சம் நேரம் அமைதியாகயிரு பானு! என்றாள் சாரு.

அண்ணா! மன்னிகனும்.பானு பேசியதை தவறாக எண்ண வேண்டாம் என்றாள் சாரு.

இருக்கட்டும் சாரு.அவுங்க கேட்டதிலும் நியாயம் இருக்கிறதுமா என்றான் மனோஜ்.

சந்துரு மருத்ததுவமனையில் இருக்கின்றான் சாரு.அதனால் தான் நான் வந்திருக்கின்றேன் என்று மனோஜ் கூறினான்.

அந்த செய்தியை கேட்டதும், ஐயோ! அவுங்களுக்கு என்ன ஆச்சு அண்ணா? என்று கண்களில் கண்ணீருடனும் குரலில் பதற்றத்துடனும் கேட்டாள் சாரு.

சந்துருவிற்கு என்ன நிகழ்ந்தது? ஏன் மருத்துவமனையில் இருக்கின்றான்? என்று அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...

- தொடரும் -

* * * * * * * * * * * * * * * * *

இத்தொடரைக் குறித்த தங்களது பொன்னான விமர்சனங்களை கீழே உள்ள நீல வண்ண எழுத்துகளை அழுத்தி அதில் பதிவு செய்யவும் .
🙏🙏🙏
விறுவிறுப்பான கதை. சந்துரு சீக்கிரம் சாருவப் பார்க்கனும் அப்படின்னு நமக்கு படபடப்பா இருக்கு
 
Messages
30
Reaction score
29
Points
18

நாளுக்கு நாள் விறுவிறுப்பு ஏறிக்கொண்டே போகிறது. அடுத்த அத்தியாயத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
 
Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406
Points
63
நாளுக்கு நாள் விறுவிறுப்பு ஏறிக்கொண்டே போகிறது. அடுத்த அத்தியாயத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
மிக்க நன்றி அம்மா...விரைவில் அடுத்த அத்தியாயம் பதிவு செய்ய முயற்சிகிறேன்...
 
Rajathilagam Balaji

Well-known member
Messages
264
Reaction score
406
Points
63
விறுவிறுப்பான கதை. சந்துரு சீக்கிரம் சாருவப் பார்க்கனும் அப்படின்னு நமக்கு படபடப்பா இருக்கு
மிக்க நன்றி சகோதரி...விரைவில் சந்திப்பார்கள்🙏😍😉
 
vaishnaviselva@

Well-known member
Messages
312
Reaction score
248
Points
63
Deiii:mad:.............sandru nee saaru kitta pesa kudathunu hospital la admit aagi irukkiya.... illa unmaiyalu yethacha aagiduchu 🤔........sandruku yenna nadanthathu yethuku saaruva kasta pada vaikkura intha sandru frad du payale ithuku mela saaru feel pannaana na poggiduva banu maari .....spr epi sis ....... 🤩 😍😍😍
 
Neha

New member
Messages
9
Reaction score
12
Points
3
விறுவிறுப்பான கதை. சந்துரு சீக்கிரம் சாருவப் பார்க்கனும் அப்படின்னு நமக்கு படபடப்பா இருக்கு
ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.. திலகம். அழகான எழுத்து நடை...ரசித்தேன்..மா
 
Latest posts

New Threads

Top Bottom