இதுவரை படிச்சிட்டேன்...
Interesting ah poguthu sis...
பவியின் பாட்டி அவளிடம் வந்துட்டாங்க... அவங்க ரெண்டு பேர் இடையிலான உரையாடல்கள், பாட்டியின் நக்கல் பேச்சுகள் சூப்பர்... அதுவும் நாய் கூண்டு மேல நடந்துட்டு வந்தது
கோபு மாமாவை சமாளிக்கும் அப்பா மகள் trick நல்லா இருக்கே...
மீனாட்சி பல குடும்ப தலைவிகள் போல.. ஆனாலும் மாமியாரை கனிவா தான் பார்த்து இருக்காங்க... கொஞ்சம் வாய் ஜாஸ்தி... இருக்கும் ஆதங்கங்களை பேசி தீர்த்துகராங்க... பவி மேல பாசமும் இருக்கு.. வெளிக்காட்டுவது லிமிடெட் போல...
இந்த விக்ரம் அம்மா ஜெயா இப்படிலாம் கவலை படுவாங்க... எல்லாமே அவங்க ஆசைக்கு வரணும் என்றால் என்ன செய்யுறது... அவன் இல்லை என்றாலும கவலை, சரி என்ராலும் இப்போ பொண்ணை நினைச்சு கவலை... கொஞ்சம் பொறுமை இருக்கலாம் அவருக்கு என்பது எனக்கு தோன்றியது.. விக்ரமிடம் ஒரு அலட்சிய போக்கு இருக்க போல தோணுது.. எதையும் திட்டமிட்டு செய்ய மாட்டான் போல, போற போக்குல தோனுரதை செய்யுற மாதிரி எனக்கு தோணுது...
இவன் ஃபோனில் பேசியதாக முதலில் பவி அப்பா சொன்னார் தானே.. பெயர் எல்லாம் கூட சொன்னார்.. அப்பறம் எப்படி ரெண்டு பேருமே மறந்தாங்க... பவி கூட குழப்பம், கல்லூரி என மறந்து இருக்கலாம்.. இவர் எப்படி மறந்தார்?
அலமுவின் கதையை கேட்க ஆவலா இருக்கு...
காளையன் எப்போ தேடி வருவான்.. மாரி அட பிராடு பயலே.. இவனை நம்பி வேற போக போறான் என்ன ஆகுமோ....