Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update தீயாய் சுடும் என் நிலவு!

dharshini chimba

Saha Writer
Team
Messages
300
Reaction score
221
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 5:

"இரு ஒரு நிமிஷம்" என்று உள்ளே ஓடியவன் ஒரு கிளாஸ் தண்ணீருடன் அவளுடைய மாத்திரைகளை எடுத்து வந்தான்.

"இந்தா இந்த மாத்திரையை முதல்ல போடு" என்று நீட்ட, அமைதியாய் வாங்கி போட்டுக்கொண்டு மீண்டும் சோபாவில் சாய்ந்தாள்.

அவளின் அருகினில் தரையினில் அமர்ந்தவன் மிருதியின் தலையை லேசாக கோதிவிட்டான்.

"பாப்பா எங்க அமு?" என்றாள் மிருதி.

"பாப்பா சாப்பிட்டு தூங்குறா. நீ ரெஸ்ட் எடு. நான் பார்த்துக்குறேன்." என்றான் அமுதன்.

இங்கு வந்த புதிதில், அமுதனை தன்னுடன் பார்த்த சில தினங்களில் அப்பா ஒரு நாள், "அம்மா மிருதி. எனக்கு எப்படி கேக்குறதுன்னு தெரியலை.... அந்த தம்பி அமுதன் ரொம்ப நல்ல பையனா இருக்கான். நீங்க ரெண்டு பேரும் விரும்புறிங்களாம்மா? அப்படி எதுவாது இருந்தா சொல்லும்மா? நான் அந்த தம்பிகிட்ட பேசுறேன்." என்றார்.

அவரை சிரித்து கொண்டே பார்த்த மிருதி, "அப்பா. கட்டிக்க போறவனுக்கும் பிரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குப்பா. எனக்கு அமுதனை பிடிக்கும். ஆனா, அது நண்பன்ற உறவுல தான். அவனுக்கும் அப்படிதான். அதுவுமில்லாம என்கூட இருக்க ஸ்ரீஷா யாருன்னு நினைச்சிங்க? அவங்க ரெண்டு பேரும் ஒன்றரை வருஷமா விரும்புறாங்கப்பா. நான் எவ்ளோ சொல்லியும் கேட்காம, எனக்கு ஆறுதலாகவும் பாதுகாப்பாவும் இருக்க ஸ்ரீஷாகூடயே தங்கவச்சிட்டான். ஸ்ரீஷாவும் ரொம்ப நல்ல பொண்ணுப்பா. என்கூட பொறந்த தங்கச்சியா பாரக்கறேன் பா. அவளும் அப்படி தான் அக்கா அக்கான்னு ரொம்ப அன்பா இருப்பா. நல்ல வேலை இதை என்கிட்ட கேட்டீங்க. அமுதங்கிட்ட கேட்டிருந்தா என்ன நினைச்சிருப்பான்? இங்க என்னை அவங்க ரெண்டு பேரும் தான் நல்லா பார்த்துகுறாங்கப்பா." என்றாள் மிருதி.

"அடகடவுளே! நல்ல வேலை. நான் அந்த தம்பிக்கிட்ட பேசலாம்னு இருந்தேன். எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன். உன்கிட்ட கேட்டது நல்லதா போச்சு." என்றார் அவளின் அப்பா.

அதை இப்பொழுது நினைத்தவள் சிரித்தாள்.

"எதுக்கு சிரிக்கிற மிருதி?" என்றான் அமுதன்.

அன்று நடந்ததை கூறினாள்.

"அயையோ! அப்பா அப்படியா சொன்னார். பாவம் வெகுளியான மனுஷன்" என்றான் அமுதன்.

"ஸ்ரீஷா எங்க அமு?" என்றாள் மிருதி.

"இப்போ தான் போன் பண்ணா. வந்துட்டே இருக்கேன்.வரவரைக்கும் கூட இருன்‌னு சொன்னா. வந்துடுவா." என்றான் அமுதன்.

"ஓஹ் அப்போ. உங்க வீட்டுக்காரம்மா சொன்னா இருப்பிங்களோ?" என்றாள் அமுதனை வம்பிழுக்க.

"அயையோ! அப்படியெல்லாம் இல்ல தி. நான் என் டார்லிகூட விளையாடிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியலை. ஷி இஸ் ஷோ கியூட் இல்ல. அவ இல்லாம நாங்க எப்படி இருக்க போறோம்னு தெரியலை" என்றான் அமுதன் சோகமாக.

"நான் என்ன பண்ணபோறேன்னு தெரியலை அமு." என்று கண்கலங்கினாள் மிருதி.

"சரி. இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம். நீ அமைதியா தூங்கு" என்றான் அமுதன்.

மாத்திரையின் வேலையால் உறக்கம் தன்னை தழுவ, அவளின் விழிகள் மூடும் முன் தன்னவனின் கெஞ்சல் முகம் தோன்றியது.

"மிருதி. பிலீஸ் போதும் எனக்கு இந்த மூணு வருஷ தண்டனை. என்கிட்ட வந்துடு" என்றான் தீரன்.

'எனக்கும் ஆசை தான் தீரா. ஆனா அது நடக்காது.' என்றவள் எண்ணங்கள் மூன்று வருடங்களுக்கு முன் சுழன்றோடியது.

மசக்கையின் மயக்கத்தில் உறங்கி கொண்டிருந்தாள் மிருதி.

இரவு பதினோரு மணி, முட்ட முட்ட குடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் தீரன்.

வழக்கமாக தனக்கான காத்திருக்கும் மிருதியை காணாமல் போக, நேராக சமையலறை சென்றான்.

அங்கு சமைத்து வைக்கப்படாததால் எரிச்சல் அடைந்தான்.

'வீட்ல இருக்கிறதே சமைக்கிறது ஒரு வேலை தான். அதைக்கூட செய்யாம என்ன பண்றா இவ?' என்று புலம்பியபடி மாடியேறினான்.

தங்களின் அறையிலும் இல்லாததால் கோபம் அதிகமாக, "மிருதி"

"மிருதி" என்று கோபமாக கத்திகொண்டே கீழே இறங்கினான்.

அவளின் குரல் எங்கும் கேட்காததால் அருகிலிருந்த அறைக்கு தள்ளாடியபடியே சென்றான்.

அங்கே மாத்திரையின் மயக்கத்தில் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த மிருதிக்கு இவை எதுவும் தெரிய வாய்ப்பில்லை.

மிருதியின் கையை தன் காலால் மெல்ல தள்ளினான்.

எந்த அசைவும் இல்லாமல் போக மீண்டும் இரண்டு முறை தள்ளினான்.
"ஏய் மிருதி. எந்திருடி. "
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
300
Reaction score
221
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 6:

"எந்திருடி! புருஷன் வேலைக்கு போய்ட்டு வரும்போது சமைச்சு வைக்கணும்னு தெரியாதா? இப்படி பொறுப்பே இல்லாம தூங்கிட்டு இருந்தா என்னடி அர்த்தம்?" என்றான் தீரன்.

எதுவுமே அறியாமல் மிருதி உறங்கி கொண்டிருக்க இன்னும் கோபம் அதிகமாகியது.

"எத்தனை தடவை கூப்பிட்டு இருக்கேன். எதுவுமே கேகாத மாதிரி படுத்திருந்தா என்ன நினைச்சிட்டு இருக்க நீ? வீட்ல இருக்கிறதே சமைக்கிறது மட்டும் தான் அதையும் செய்ய முடியாதா உன்னால? இப்போ எந்திரிக்க போறியா இல்லையா?" என்றான் குடிபோதையில் என்ன பேசுகிறோம் என்று அறியாமல்.

"இல்ல நான் பேசுறது கேட்டும் சும்மா படுத்திருக்கியா? எந்திருடி" என்று ஓங்கி வயிற்றில் காலால் எட்டி உதைத்தான்.

இதை எதுவும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு திடீரென்று வயிற்றினில் ஏற்பட்ட தாக்குதலில் நிலைகுலைந்து அலறினாள் மிருதி.

"அ..ம்..மா.." என்று வயிற்றை பிடித்து கொண்டு அலற தொடங்கினாள் மிருதி.

"வீட்ல இருக்க ஒரு வேலைய கூட செய்யமுடியலைன்னா அப்புறம் எதுக்கு என்னை தான் கல்யாணம் பண்ணிப்பேண்ணு ஒத்த கால்ல நின்ன? வேலை செய்யாம இருக்கிறதுக்கு இது என்ன புது நடிப்பா?" என்று தீரன் கேட்க.

உடலில் ஏற்பட்ட ரணத்தை காட்டிலும் மேலும் ரணமாய் அவனின் வார்த்தைகள் இதயத்தை தைக்க மேலும் இரண்டும் சேர்ந்து தாள முடியாமல் அழுதாள் மிருதி.

"நான் வேற பொண்ண காதலிக்கிறேன்னு தெரிஞ்சும், நான் கல்யாணாம்னு பண்ணா மாமாவை தான் கல்யாணம் பண்ணிப்பேண்ணு ஒத்தைகால்ல நின்னு அடம் பிடிச்சியாமே? வெக்கமால்ல உனக்கு. உன்னால தான் என்னோட வாழ்க்கை இப்படி தலைகீழா ஆகிடுச்சு. எங்கம்மா எங்க... பையன் வெள்ளைக்காரிய கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட போறான்ன்னு இதான் நேரம்னு என்னை பிளாக்மெயில் செஞ்சு உன்னை என் தலைல கட்டி வச்சிட்டாங்க. பிடிக்காத ஒரு பொண்ணுகூட வாழு வாழுன்னா எப்படி வாழ்றது. என் வாழ்க்கை இப்படி ஆகுறத்துக்கு நீ தான் காரணம். உன்னை என்னைக்கும் நான் மன்னிக்கவே மாட்டேன்" என்று விருட்டென்று வெளியே சென்றான்.

அவன் கூறிய வார்த்தைகள் எதுவும் புரியாமல் போக வலி இன்னும் அதிகமாகியது.

'எனக்கு இந்த கல்யாணமே இப்போதைக்கு வேணாம்னு சொன்னேன் நான். அப்புறம் இவர் வேற மாதிரி சொல்றார். ஏதோ இருக்கு' உள்ளுக்குள் புகைந்தாலும் வலி எல்லாவற்றையும் மறக்க வைக்க அகிலாவிற்கு போன் செய்து உடனே வர சொன்னாள்.

பதறியடித்து ஓடி வந்த அகிலா மிருதி துடிப்பதை பார்த்து பயந்து போனாள்.

'அயோ மிருதி! என்னம்மா ஆச்சு? " என்றாள் பதறியபடி.

"அக்கா பிளிஸ். எனக்கு ரொம்ப வலிக்குது. ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போங்க" என்று அழுதாள்.

விரைந்து மருத்துவமனையில் மிருதியை சேர்த்த பின் மனம் கனக்க வெளியில் நின்றிருந்தாள் அகிலா.

'கடவுளே! அந்த பொண்ணு ரொம்ப பாவம். காப்பாத்துப்பா' என்று வேண்டினாள்.

'என்ன ஆனாலும் யாருக்கும் சொல்லக்கூடாது' என்று வரும் வழியில் கூறி மிருதி மயக்கமாகிட 'என்னவாக இருக்கும்?' என்று ஒன்றும் புரியாமல் தவித்தாள் அகிலா.

"இங்க மிசஸ். மிருதி கிட வந்தவங்க யாரு?" என்று நர்ஸ் கேட்க, "நான் தான் சிஸ்டர்." என்றாள் அகிலா.

"உங்களை டாக்டர் கூப்பிடறாங்க" என்று சென்றுவிட்டாள்.

பதற்றத்துடன் உள்ளே சென்ற அகிலா.

"டாக்டர்! இப்போ மிருதி எப்படி இருக்கா?" என்றாள் அகிலா.

"நீங்க என்ன வேணும்? அவங்க வீட்டுக்காரர் எங்க?" என்றார்.

"நான் அவங்க அக்கா. அவர் இப்போ ஊர்ல இல்ல" என்றாள் அகிலா.

"சாரி. வயித்துல பலமா அடிப்பட்டதால அவங்களுக்கு அபார்ஷன் ஆகிடுச்சு." என்றார் டாக்டர்.

"கடவுளே. மிருதிக்கு ..." என்று இழுக்க.

"அவங்க நல்லா இருக்காங்க. மாத்திரை எழுதி கொடுத்திருக்கேன். ஸ்கநல்லா சத்தானதா சாப்பிட கொடுங்க. ஒரு வாரம் கழிச்சு கூட்டிட்டு வாங்க" என்றார் டாக்டர்.

"சரிங்க டாக்டர்." என்றாள் அகிலா.

"கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும். அப்புறம் நீங்க அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்" என்றார் மருத்துவர்.

மிருதியிடம் வந்த அகிலா, "மிருதி! என்ன ஆச்சு? எப்படி இப்படி நடந்தது?" என்றார் வேதனையாய்.

"எல்லாம் என் தலையெழுத்துக்கா." என்று அழுதாள் மிருதி.

"சரி. எல்லாம் சரியாகிடும். வீட்டுக்கு போலாமா?" என்றார் அகிலா.

'இல்ல. இனி அங்க போகமாட்டேன். என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டாங்க. இவங்க யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.' என்று நினைத்தவள்.

"அக்கா. ஏன்னு கேக்காதீங்க. ஆனா நான் இங்க இருக்கிறதையோ, எனக்கு நடந்ததையோ, நான் இனி எங்க போரென்றது முதற்கொண்டு யார்கிட்டயும் சொல்லமாட்டேன்னு சொல்லுங்க அக்கா. " என்றாள் மிருதி.

"ஏன் மா?" என்றார் அகிலா.

"அக்கா. இப்போதைக்கு என்னால எதையும் சொல்ல முடியாது. ஆனா கண்டிப்பா அந்த வீட்டுக்கு போகமாட்டேன். எங்க அப்பா அம்மாகிட்ட கூட சொல்லாதீங்க. உங்களுக்கு என்னை பத்தி எதுவும் தெரியாது சரியா. அப்படி தான் சொல்லணும்." என்றாள் மிருதி.

"நீ ரொம்ப கஷ்டபடறன்னு மட்டும் தெரியுது. சரி டா. நான் யார்கிட்டையும் சொல்லமாட்டேன். ஆனா என்கிட எப்பவும் நீ பேசணும் சரியா?" என்றாள் அகிலா.

"சரிக்கா. எனக்கு ஒரு உதவி பண்ணனும்" என்றாள் மிருதி.

"என்னம்மா?" என்றார் அகிலா.

"இப்போ வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க. நீங்க போய் கொஞ்சம் திங்ஸ் மட்டும் எடுத்து வந்துடுங்க." என்றாள் மிருதி.

சிறிது நேரம் யோசித்த அகிலா, "சரி" என்றார்.

"அக்கா! கண்டிப்பா யார்கிட்டயும் சொல்லக்கூடாது. சொன்னிங்கன்னா. உங்ககிட்டக்கூட சொல்லாம நான் போயிடுவேன்" என்றாள் மிருதி.

"இல்ல மிருதி. நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன். நீ என்னை நம்பலாம்" என்றார் அகிலா உடனே.

வீட்டிற்கு சென்று மிருதிக்கு தேவையானவற்றை ஒரு சூட்கேஸில் எடுத்து வந்தாள் அகிலா.

"அக்கா வீட்ல நீங்க போகும் போது.." என்று மிருதி முடிக்கும் முன் "இல்ல யாரும் வீட்ல இல்லை" என்றாள் அகிலா.

"தாங்க்ஸ்கா. ரொம்ப பெரிய வேதனைல இருக்கேன் நான். என் குழந்தை வயித்துல வளருதுன்னு தெரிஞ்சு ஒரு நாள் கூட முழுசா அந்த சந்தோஷத்தை அடையமுடியலை." என்று அழுகையை கட்டு படுத்தியவள் தான் எங்கே செல்வது என்று யோசிக்க தொடங்கினாள்.
 

vaishnaviselva@

Well-known member
Messages
317
Reaction score
256
Points
63
theeran ippadi pannuvaanu yethir pakkala sis:(.......but miruthi yedutha decision crt ...............spr epi sis 🤩🤩🤩🤩🤩
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
300
Reaction score
221
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 7

அவளின் நினைவுக்கு உடனே வந்தது பெங்களூரில் இருக்கும் தன் சிறுவயது முதல் நெருங்கிய நண்பனான அமுதன் தான்.

'இப்போ அமுதனை ஹெல்ப் கேட்டா நல்லா இருக்குமா?' என்று யோசித்தாள்.

"யோசிக்காத. நீ ஒன்னும் அமுதன் கூட தங்க போறதில்லை. அங்கயே நல்ல வேலை தேடிட்டு விமென்ஸ் ஹாஸ்டெல்ல தங்கிகலாம். என்ன ஆனாலும் இவங்க யார்கிட்டயும் போக மாட்டேன்' என்று நினைத்தவள் அமுதனுக்கு போன் செய்தாள்.

"ஹலோ" என்ற அமுதனின் குரலை கேட்டதும் தொண்டைக்குழியில் அடைக்க பேச திணறினாள்.

"ஹலோ! " என்றான் அமுதன் மறுபடியும்.

"ஹ...லோ!" என்றாள் மிருதி திணறியபடி.

"மிருதி... என்னம்மா இந்நேரத்துக்கு போன் பண்ணிருக்க?" என்றான் பதட்டமாய் அரைதூக்கத்தில் இருந்து எழுந்தவன்.

"எனக்கு உடனே உன்னை பார்க்கணும்" என்றாள் கண்ணீரை அடக்கி.

"என்ன தி? உன் வாய்ஸ் ஏன் ரொம்ப டல்லா இருக்கு? உடம்பு சரி இல்லையா?" என்றான் அமுதன்.

"ஆமா" என்றாள் மிருதி ஒற்றை வார்த்தையில்.

"தி... இப்போ மணி நயிட் 3.00மணி" என்றான்.

"எனக்கு மணி பார்க்க தெரியாம தான் போன் பண்ணேனா?" என்றாள் கோபமாக.

"இல்லடா. நீ இந்த டைமக்கு போன் பண்ணமாட்டியே? அதான்..." என்றான் அமுதன்.

"அமு. இப்போ உன்னால வர முடியுமா முடியாதா?" என்றாள் மிருதி.

"ஏய்! சண்டைக்கோழி வரேண்டி. எங்க வரணும்?" என்றான் அமுதன்.

"சொல்றேன்" என்று தான் இருக்கும் இடத்தை கூறி உடனே வர சொன்னாள்.

"ஹாஸ்பீட்டல்ல ஏன் இருக்க? உனக்கு உடம்புக்கு என்ன? உன் வீட்டுக்காரர் எங்க?" என்று அமுதன் கேள்விகளை பதற்றமாய் அடுக்கி கொண்டே போனான்.

"ஒரு நிமிஷம் அமு. டென்ஷன் ஆகாத. எனக்கு ஒண்ணும் இல்லை. நீ இங்க வா. எல்லாம் சொல்றேன்." என்றாள் மிருதி.

"இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்." என்றான் அமுதன்.

"என்ன அமு? எப்படி அரைமணி நேரத்துல இங்க இருப்ப? பெங்களூர்ல இருந்து அவ்ளோ சீக்கிரத்துல வந்துட முடியுமா?" என்றாள் குழப்பமாக மிருதி.

"முடியும் தி. ஏன்னா நான் இங்க தான் இருக்கேன்." என்று சிரித்தான் அமுதன்.

" ஓஹ் அப்போ இங்க வந்துட்டு என்னை பார்க்காம இருக்க?" என்றாள் கோபமாக.

"ஹிம்.. அப்படி இல்ல தி. என் ஃப்ரெண்ட் கல்யாணதுக்கு வந்தேன். நைட் பத்து மணிக்கு தான். மார்னிங் கல்யாணம் முடிச்சிட்டு என் லவரை வந்து பார்க்கலாம்னு இருந்தேன்" என்றான் அமுதன்.

"என்னது லவரா? யாருடா அது சொல்லவே இல்ல?" என்றாள் மிருதி ஆச்சர்யமாய்.

கலகலவென சிரித்த அமுதன் "என் டார்லிங்.. என் லவர் எல்லாமே நீ தானே உன் இடத்தை யாரல நிரப்ப முடியும் தி." என்றான் அப்பாவியாய்.

"என்னது நான் உன் லவ்வரா? எடு அந்த செருப்ப?" என்றாள் மிருதி.

"ஏன் தீ? செருப்பு கீழ விழுந்துடுச்சா?" என்றான் அமுதன் சிரிப்பை அடக்கி.

"உன்னை அடிக்க தான்டா எருமை மாடு, குரங்கு, பண்ணி ..." என்று திட்டிக்கொண்டே போக.

"ஏய் போதும்டி நிறுத்து. என்னை ஓவேரா டேமேஜ் பண்ற... சரி சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். சர்ப்ரைஸ்சா நாளைக்கு உன்னை வீட்ல வந்து பார்த்துட்டு வரலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீயே போன் பண்ணிட்ட" என்றான் அமுதன்.

"சரி. என்கூட பேசிட்டு இருந்தா எப்போ கிளம்பி வரது." என்றாள் மிருதி.

"தி. நீ ஏதோ பெரிய பிரச்சனைல இருக்கன்னு மட்டும் தெரியுது. என்கூட பேசினா ஒரு பத்து நிமிஷம் அந்த கவலைல இருந்து மனசு லேசாகும்னு தான் பேசிட்டு இருந்தேன். நான் ஏற்கனவே கிளம்பிட்டேன். இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன். அதுவரைக்கும் எதை பத்தியும் நினைச்சு அழாம கண்ணை மூடி இரு. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். புரியுதா?" என்றான் அமுதன்.

"ரொம்ப தாங்க்ஸ் அமு. அதுக்கு தான் என் ஃப்ரெண்ட் உனக்கு போன் பண்ணேன். நீ வா" என்றாள் கண்ணீர் வழிய.

"ஹிம்" என்று இணைப்பை தூண்டித்தான் அமுதன்.

சிறிது நேரத்தில் அவள் இருந்த கோலத்தை கண்டவன், "என்னாச்சு தி? எனக்கு ஒண்ணுமில்லைன்ன? உன் புருஷன் எங்க? உங்க அப்பா அம்மா எங்க? நீ இப்படி கிழஞ்ச நாராய் யாருமில்லாம இருக்க?" என்றான் கண்களில் கோபத்தோடு.

"அமுதா. இப்போ எதுவும் சொல்ற நிலைமைல நான் இல்லை. எனக்கு இங்க இருக்க பிடிக்கலை. எங்கயாவது போய்டலாம்னு தோனுனப்ப என் கண்ணுக்கு தெரிஞ்ச ஒரே ஆள் நீ மட்டும் தான். உன்னால முடியாதுன்னா சொல்லு. நான் பார்த்துக்குறேன்" என்றாள் மிருதி பிடிவாதமாய்.

"சரி தி. உனக்கு விருப்பமாகும் போது சொல்லு. ஆனா இப்போ எதுக்காக ஹாஸ்பிட்டல்ல இருக்க? அதை மட்டும் சொல்லு?" என்றான் அமுதனும் பிடிவாதமாக.

மிருதி எதுவும் சொல்லாமல் இருக்க, "அவளுக்கு அபார்ஷன் ஆகிடுச்சு தம்பி" என்றார் அகிலா.

"என்ன? எப்படி தி?' என்றான் மிகவும் வருத்தமாய்.

எதுவும் பேசாமல் மிருதி விழிகளில் நீரோடு அவனை பார்த்துக்கொண்டிருக்க அமுதன் பெருமூச்செறிந்து.

"போலாம் தி. என்கூட வந்துடு. நான் பார்த்துக்குறேன்." என்றான் அமுதன்.

அவனை பார்த்து ஸ்னேகமாய் சிரித்தவள்.

"இல்ல அமுதன். என்னால யாருக்கும் பாரமா இருக்க முடியாது." என்று சிரித்தாள் மிருதி.

"என்ன தி பேசுற? எனக்கு எப்படி பாரமா இருப்ப? சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் எனக்காக எவ்ளோ உதவி செஞ்சிருக்க நீ. எல்லாத்தையும் மறந்துடுவேனா நான்?" என்றான் அமுதன்.

"இல்ல அமு. உன்கூட என்னால தங்க முடியாது. அது சரி வராது. நான் உன்கூட வரேன். ஆனா, என்னை ஏதாவது லேடிஸ் ஹாஸ்டல்ல சேர்த்துவிடு. நான் பார்த்துக்குறேன் " என்றாள் முடிவாக.

எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன். கண்ணில் சிந்திய நீரை சுண்டி விட்டு சிரித்தான்.

"நீ இன்னும் மாறவே இல்ல தி. அடுத்தவங்களுக்குன்னா என்ன உதவின்னாலும் செய்வ. ஆனா உனக்குன்னு வரும்போது உன் கால்ல மட்டும் தான் நிப்ப. நீ பெஸ்ட் தி. உன்னோட காண்பிடென்ஸ்ச நான் குறைக்க மாட்டேன். நீ சொன்ன மாதிரியே செய்றேன். போலாமா.?" என்றான் அவளை பார்த்து ஸ்னேகமாய்.

"ஹிம்.." என்றாள் மிருதி.

அகிலா அமைதியாய் இருவரையும் பார்க்க,

"ரொம்ப நன்றிக்கா. தி மத்த எல்லாரையும்விட உங்களை நம்பிருக்கா. நீங்க கவலையே படாதீங்க அவளை பத்திரமா பார்த்துக்குறேன். அவ அப்போலர்ந்து இப்போ வரைக்கும் எங்க வீட்ல ஒரு பொண்ணுக்கா." என்று சிரித்தான் அமுதன்.

"எனக்கு மனசுக்கு நெருடலா இருந்துது தம்பி. இந்த புள்ள எங்கயோ போகுறேன்னு சொல்லுதே எப்படி இருக்குமோன்னு. ஆனா உங்களை பார்த்த அப்புறம் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. அவ நிறைய கஷ்ட்டபட்டுட்டா. பத்திரமா பார்த்துக்கோங்க பா." என்றார் அகிலா.

"மிருதி. உடம்ப பத்திரமா பார்த்துகோ. எப்படியும் உன் புருஷன் என்கிட்ட வந்து கேப்பார். உனக்காக நான் எனக்கு தெரியாதுன்னு சொல்றேன். ஆனா நீ அவங்க எல்லார்க்கிட்டயும் நீ என்ன முடிவு பண்ணிருக்கியோ அதை தெளிவா சொல்லிடு. அது தான் எல்லோருக்கும் நல்லது." என்றார் அகிலா.

"சரிக்கா. நான் பார்த்துக்குறேன்" என்று அமுதனுடன் கிளம்பினாள் மிருதி.

"அமுதா. கல்யாணம் ஏதோ அட்டென்ட் பண்ணனும்னு சொன்னியே? நீ வேணா போயி அட்டென்ட் பண்ணிட்டு வந்துடு. நாம அப்புறம் போகலாம்" என்றாள் மிருதி.

"இல்ல தி. நான் போகலை. அதை நான் பார்த்துக்குறேன். நாம போகலாம்" என்று மிருதியை தன் பொறுப்பில் ஒரு நல்ல நண்பனாய் அன்றில் இருந்து பாதுகாக்கிறான் அமுதன்.

*******
நீண்ட நாள் கழித்து பதிப்பதற்கு மன்னிக்கவும்
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
300
Reaction score
221
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 8:

"வா தி" என்றான் ஒரு வீட்டினுள் நுழைந்து.

"யார் வீடு இது?" என்று கேட்டுக்கொண்டே வீட்டை சுற்றி முற்றி பார்த்தபடி உள்ளே நுழைந்தாள் மிருதி.

"ஹ்ம்ம் இது என் பிரென்ட் வீடு." என்றான் கையில் இருந்த பையை கீழே வைத்து.

"எங்க அவங்க?" மிருதி

"இதோ வந்துட்டேன்." என்று கையில் நீருடன் நின்றாள்.

"ஹாய்" என்றாள் மிருதி.

"ஹாய். நீங்க அமுதனோட பிரென்ட்னா என்னைவிட பெரியவங்களா தான் இருப்பிங்க. சோ உங்களை நான் அக்கான்னு கூப்பிடறேன்" என்று க்ளாஸை நீட்டினாள்.

"எப்படி வேணா கூப்பிடு." என்று சிரித்தாள் மிருதி.

"தி. இது ஸ்ரீஷா. இங்க தனியா தான் இருக்கா. இனி இங்கயே நீ தங்கிக்கோ." என்றான் அமுதன்.

"வேணாம் அமுதா. என்னால அவங்களுக்கு தொல்லை எதுக்கு?" என்றாள் மிருதி.

"அட நீங்க வேற அக்கா. எனக்கு இங்க தனியா இருக்க எவ்ளோ போர் அடிக்குது தெரியுமா? இப்போ நீங்க வந்துட்டீங்கன்னு நிம்மதியா இருந்தா அதுக்குள்ள இப்படி சொல்லட்டிங்க?" என்றாள் பாவமாய் முகத்தை வைத்து கொண்டு.

"என்னை இப்போ தான் பார்க்குற. அதுக்குள்ள..?" என்று ஸ்ரீஷாவை பார்க்க,

"எப்போ பார்த்தா என்ன? அமுதன் கூட்டிட்டு வந்துருக்காரு. அது ஒண்ணே போதும்." என்றாள்.

"அயோ! தி. சும்மா இரு. நீ இங்க தான் இருக்க போற. இது ஸ்ரீஷாவோட சொந்தவீடு." என்றான் அமுதன்.

"அப்போ மாச மாசம் வாடகை கொடுத்திடறேன்" என்றாள் மிருதி.

"சரி. அதைபத்தி அப்புறம் பேசிக்கலாம். உனக்கு உடம்பு சரி இல்லை. நீ முதல்ல ரெஸ்ட் எடு. ஸ்ரீ பார்த்துக்க. நான் அப்புறம் வரேன்" என்று கிளம்பிவிட்டான்.

மறுநாள் மாலை ஸ்ரீஷாவிற்கு போன் செய்தான் அமுதன்.

"ஹலோ!" அமுதன்.

"ஹலோ! " ஸ்ரீ.

"என்ன பண்ற? சாப்பிட்டியா?" என்றான் அமுதன்.

"இல்லப்பா. பசிக்கலை" என்றாள் ஸ்ரீ.

"ஸ்ரீ. மிருதி எப்படி இருக்கா? ஏதாவது சாப்பிட்டாளா?" என்றான் கவலையாய்.

"இல்ல அமுதா. நேத்து கொஞ்சம் வற்புறுத்தி சாப்பிட வச்சேன். அழுதுகிட்டே இருக்காங்க. எவ்ளோ சொன்னாலும் சாப்பிட மாட்டேன்னு அந்த ரூம்குள்ளயே தான் இருக்காங்க. வெளிய வரலை. சாப்பிடவும் இல்லை. அவங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னும் தெரியலை." என்றாள் ஸ்ரீஷா.

"அவ மனசுல வலி அதிகமா இருக்கு. அவ எப்பவும் இப்படி தான். கஷ்டமா இருந்தா யார்கிட்டயும் பேசமாட்டா. தன்னையர் தனிமை படுத்திப்பா. என்ன செஞ்சுருக்க?" என்றான்.

"டிபன் இட்லி தான்" என்றால் ஸ்ரீஷா.

"சரி நான் வரேன்." என்று சிறிது நேரத்தில் வந்தவன் சாப்பாட்டு தட்டுடன் மிருதியின் அறைக்குள் நுழைந்தான்.

"தி" என்றான் மெதுவாய்.

விட்டத்தை விழிநீர் வழிய எந்த உணர்ச்சியும் காட்டாமல் படுத்திருந்தாள்.

"தி. எழுந்திரு முதல்ல. கொஞ்சமா சாப்பிடு" என்று தட்டுடன் மிருதியின் அருகில் அமர்ந்தான்.

"இல்ல அமுதா. எனக்கு வேணாம் பசிக்கலை." என்று கண்ணீரை துடைத்துக்கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

"இல்லம்மா அப்படி சொல்லக்கூடாது. உனக்கு எவ்ளோ மனசு கஷ்டமா இருந்தாலும் சாப்பாட்டில காட்டக்கூடாது. அதுவும் இல்லாம இப்போ உனக்கு உடம்புருக்கிற கண்டிஷனுக்கு சாப்பிட்டே ஆகணும். அதனால ப்ளீஸ் உனக்காக இல்லன்னாலும் எங்க ரெண்டு பேருக்காகவும் சாப்பிடுப்பா. ஸ்ரீஷாவும் இன்னும் சாப்பிடாம இருக்கா."என்றான் அமுதன்.

"எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்? நான் யாருக்கும் எந்த துரோகமும் நினைச்சதில்லையே" என்றாள் மனமுடைந்து.

"நல்லவங்களுக்கு தான் சோதனை அதிகமா வரும். இப்போ தான் உடைஞ்சு போகாம தைரியமா எழுந்து நிக்கணும். இருக்கிறது ஒரு வாழ்க்கை அதிலையும் நாம நூறு வருஷம் வாழப்போறதில்லை. அம்பது வருஷம் அதிகபட்சம் அதுக்குள்ள உன்னால என்ன முடியுமோ அதை நீ நினைச்ச மாதிரி மாத்திக்கனும்." என்றான் அமுதன்.

ஸ்ரீஷாவும் அருகில் வந்து நிற்க.

"நீ சொல்றது சரி தான் அமு. என்னை கஷ்டப்படுத்தினவங்க ரொம்ப சந்தோஷமா இருக்கும்போது நான் ஏன் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கப்பும்? நானும் வாழ்க்கையை எனக்கு பிடிச்ச மாதிரி மாத்திக்க போறேன்." என்று சிரித்தாள் மிருதி.

"இப்போ தான் என்னோட பிரென்ட் தி நீ" என்று சிரித்தான் அமுதன்.

ஸ்ரீஷாவின் கரத்தை பிடித்து அருகில் அமர வைத்தவள்.

"எனக்காக நீயும் சாப்பிடலையா?" என்றால் மிருதி.

"எப்படிக்கா ஒரே வீட்ல இருந்துகிட்டு நீங்க கஷ்டப்பட்டு சாப்பிடாம இருக்கும்போது என்னால சாப்பிடமுடியும்?" என்றாள் ஸ்ரீஷா.

"தாங்கஸ் டா. எனக்குன்னு யாரும் இல்லைனு நினைச்சேன். ஒரு தங்கச்சியை கொடுத்திட்ட." என்றாள் ஸ்ரீஷாவை அணைத்துக்கொண்டு.

"வா சாப்பிடலாம்" என்று மூவரும் சாப்பிட்டனர்.

முதலில் சில நாள் மனதின் வலி தாள முடியாமல் இரவுகளும் பகலாய் மாறி கண்ணீர் வடித்தாள் மிருதி.

இங்கு வந்த மூன்றாம் நாள் தன் பெற்றோருக்கு போன் செய்தாள்.

"ஹலோ" என்ற அம்மாவின் குரலில் உடைந்து போக மனதை திடப்படுத்திக்கொண்டு.

"நான் மிருதி பேசுறேன்." என்றாள் எந்த உணர்வும் காட்டாமல்.

"மிருதி எங்கடி போன? உன்னை எங்க எல்லாம் தேடறது? இப்படி சொல்லாம கொல்லாம எங்கடி போன? எதுக்கு போன?" என்ற அன்னையின் கதறலை சமாளித்து.

"நான் நல்லா இருக்கேன் எனக்கு ஒன்னும் இல்லை." என்றாள் மிருதி.

"ஏன்டி இப்படி பண்ண? மாப்பிள்ளை எவ்ளோ பதறி போய்ட்டார். உன்னை காணம்னு எல்லா இடமும் தேடி அலைஞ்சார்.. இன்னும் தேடறார்... அவர் சாப்பிடறதே இல்லை" என்ற அன்னையிடம் "நான் அப்பாகிட்ட பேசணும்" என்றாள் அந்த பேச்சை தவிர்க்க.

"இதோ கூப்பிடறேன்." என்ற சிறிது நேரத்தில் அவளின் அப்பாவின் குரல் கேட்டது.

"அம்மாடி... மிருதி.." என்ற உடைந்த குரல் மிருதியை மேலும் உடைய வைத்தது.

"அப்பா..." என்றாள் நா தழுதழுக்க.

"எங்கம்மா இருக்க? ஏன்டா இப்படி பண்ண? அப்பாகிட்ட சொல்லிருக்கலாம்ல டா ஏதாவது ப்ரச்னைன்னா." என்றார்.

"அப்பா நா கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க? கல்யாணத்துக்கு முன்னாடியே அவர் வேற பொண்ணை விரும்புறார்னு உங்களுக்கு தெரியுமா?" மிகவும் நிதானமாக.

"அம்மா.." என்றார் மெதுவாக.

"சொல்லுங்க" என்றாள் மிருதி.

"தெரியும்டா." என்றார் அவளின் அப்பா.

"தெரிஞ்சும் ஏன்பா அவருக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சிங்க?" என்றாள் மிருதி இயலாமையில்.

"இல்லம்மா... அத்தை வந்து ரொம்ப அழுதா... பாப்பாவை கல்யாணம் பண்ணா எல்லாம் சரியாகிடும்னா. நீங்க தான் என் பையனை காப்பாத்தனும்னு" என்றார் அவளின் தந்தை.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
300
Reaction score
221
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 9:

"அப்போ உங்க தங்கச்சியோட கண்ணீருக்காக என்னை பலியாக்கிட்டிங்க?" என்றாள் இது வரை அடக்கி வைத்திருந்த கோபம் வெளிப்பட.

"என்னடா மா இப்படி பேசுற? தங்கச்சி பையன் நல்லா படிச்சிருக்கான் நல்ல திறமை இருக்கு, சொந்ததுல கொடுத்தா உன்னை நல்லா பார்த்துப்பான். நீயும் என் பக்கத்துலையே இருப்பன்னு தானம்மா சரின்னு சொன்னேன். ஏன்மா உங்களுக்குள்ள என்ன பிரச்சனை? எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். வாடா" என்றார் கலக்கமாய்.

"அப்பா உங்க தங்கச்சிக்காக என்னை நீங்க கல்யாணம் பண்ணி கொடுத்திங்க. ஆனா, அவருக்கு நான் அவர் காதல்ல குறுக்கவந்த விரோதி" என்றாள்.

என்னதான் தீரன் தன்னை விரும்பாவிட்டாலும் தான் அவனை விரும்பியது உண்மைதான். தங்களுக்குள் நடந்தது தங்களுக்குள்ளாகவே இருக்கட்டும் என்று எண்ணியவள் எதையுமே விளக்கமாக கூறவில்லை.

"என்னம்மா சொல்ற?" என்றார் அவளின் அப்பா அதிர்ச்சியாய்.

"அப்பா உங்க எல்லோராலையும் என் வாழ்க்கை பாழாகிடுச்சு. அதோட..." என்று தேம்பினாள் மிருதி.

"அம்மாடி ஏன்மா அழற? அப்பாகிட்ட வந்துிட்றா. நான் பார்த்துக்குறேன் உன்னை. நீ எங்கயும் போகவேணாம். அப்பா நானிருக்கேன்டா" என்றார் அவரும் அழுதபடி.

"அதோட என் குழந்தையும் போயிடுச்சு... எனக்கு நீங்க யாருமே வேணாம். என்னை தேடாதிங்க. எனக்கு மனசு சரியானப்புறம் கூப்பிடறேன். அதுவரைக்கும் எனக்கு போன் பண்ணாதீங்க" என்று அழுதுகொண்டே வைத்துவிட்டாள்.

ஒரு மாதம் முடிந்த நிலையில் ஒரு நாளும் எந்த விளக்கமும் கேட்டகவில்லை அமுதன்.

அன்று மாலை ஸ்ரீஷாவின் வீட்டில் இருந்தான் அமுதன்.

"ஸ்ரீ ரொம்ப தாங்க்ஸ் டா. எனக்காக மிருதியை உன் கூட தங்க வைக்க சம்மதிச்சு அவளையும் நல்லா பார்த்துகிற." என்றான் அமுதன்.

"நான் தான் உனக்கு தாங்க்ஸ் சொல்லணும் அமுதன். இங்க தனியா இருக்க எவ்ளோ கொடுமையா இருந்தது. அக்கா வந்ததுக்கப்புறம் எனக்கு ரொம்ப அதரவா இருக்காங்க தெரியுமா? உண்மையாவே அவங்க ரொம்ப நல்ல கேரக்டர் பா. அதுவும் இல்லாம நீ அவங்களுக்கு இவ்ளோ இம்பார்ட்னஸ் கொடுக்குறன்னா அவங்க எவ்ளோ முக்கியமானவங்கன்னு தெரியுது பா." என்றாள் ஸ்ரீஷா.

"உனக்கு அவகிட்ட ஜூவலசி இல்லையா?" என்றான் அமுதன்.

"பொறாமையா எதுக்கு?' என்றாள் ஸ்ரீ.

"இல்ல இந்நேரத்துக்கு உன் இ்டத்துல வேற பொண்ணு இருந்திருந்தா எங்க ரெண்டு பேரையும் சந்தேக பட்ருப்பாங்க."என்றான் அமுதன்.

"என்ன அமுதன் இப்படி சொல்ற? எந்த ஒரு பெண்ணுக்கும் தனக்கு சொந்தமானவனோட பார்வை மத்த பொண்ணுங்க மேல எப்படி இருக்குன்னு பார்க்கத்தான் செய்வா. ஆனா அவன் பேசுற அக்கறை காட்ற எல்லோரையும் சந்தேகப்படறது தப்பு. அக்கறையான அன்பான பார்வைக்கும், எனக்கு மட்டும் தான் நீ சொந்தம்னு காதலா பார்க்கிற பார்வைக்கும் வித்யாசம் இருக்கு. என்னைக்கும் ரெண்டும் ஒண்ணாகமுடியாது. அந்த வித்யாசம் தெரியாம தான் பல காதல் காற்றிலே பறக்கும் புழுதியாய் பறக்கின்றன." என்றாள் ஸ்ரீஷா.

அவளின் விளக்கத்தை பிரம்மிப்பாய் பார்த்து கொண்டிருந்தான்.

"நான் ரொம்ப லக்கி ஸ்ரீ. நீ என் வாழ்கைல வீசும் வசந்தம்" என்றான்.

"ஹ்ம்ம் அப்படி இல்ல அமுதா. ஸ்நேகிதியே இவ்ளோ அக்கறையா பார்த்துக்குற நீ. என்னை எவ்ளோ நல்லா பார்த்துப்பேன்னு எனக்கு தெரியுது. உன்னை விரும்பினதுக்காக நான் ரொம்ப பெருமை போடறேன். கணவனா வரபோறவன் அழகா இருந்தா மட்டும் போதாது. நல்ல மனசு இருக்கறவனாவும் இருக்கணும். அது உன்கிட்ட இருக்கு." என்றாள் ஸ்ரீஷா.

வாசலில் சத்தம் கேட்க இருவரும் திரும்பினர்.

சோர்வாய் உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள் மிருதி.

"தி என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க? உடம்பெதும் முடியலையா?" என்றான் கரிசனையுடன்.

"அதெல்லாம் ஒன்னுமில்லை. வெளிய போய்ட்டு வந்த டயர்ட் தான்." என்று சோபாவில் அமர்ந்தாள்.

"அக்கா இந்தாங்க தண்ணி குடிங்க" என்று நீரை கொடுத்தவள், அமுதனிடம் திரும்பி "இல்ல ஒரு வாரமாவே இவங்க இப்படி தான் இருக்காங்க" என்றாள் ஸ்ரீ.

மிருதியின் அருகில் வந்தவன் நெற்றியில் தொட்டு பார்க்க, "ஜுரம் இல்ல அமுதா" என்றாள் மிருதி.

"சரி தி. எழுந்திரு முதலில் ஹாஸ்ப்பிட்டல் போய்ட்டு வந்திடலாம்." என்றான் அமுதன்.

"அதெல்லாம் வேண்டாம் அமுதா. ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்" என்றாள் மிருதி.

"அக்கா இப்படியே தான் ரெண்டு நாளா நான் கூப்பிட்டபவும் சொன்னிங்க. ஆனா இன்னைக்கு ரொம்ப சோர்வா இருக்கிங்க. அதனால ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்துடுங்க." என்றாள் ஸ்ரீஷா.

" தி. இப்போ வரபோறியா இல்லையா? நீ வரலைன்னா வலுக்கட்டாயமாக தூக்கிட்டு போயிடுவேன்" என்றான் அமுதன்.

விழிகள் விரிய அவனை பார்த்தவள் "நீ செஞ்சாலும் செய்வடா. வரேன்" என்று அவர்களுடன் மருத்துவமனை சென்றாள்.

தேவையான டெஸ்ட்டுகளை எடுத்து பார்த்து விட்டு "இது உங்க ரெண்டாவது மாசமில்ல. லாஸ்ட்டா எப்போ செக் பண்ணிங்க? ரிபோர்ட்ஸ் எடுத்துட்டு வந்துருக்கிங்களா?" என்றார் டாக்டர்.

"என்ன?" என்றனர் மூவரும் அதிர்ச்சியாக.
 

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom