- Messages
- 271
- Reaction score
- 173
- Points
- 43
தீயாய் சுடும் என் நிலவு 10:
"இ..ல்..லை.. நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு சரியா புரியலை?" என்றாள் மிருதி அதிர்ந்த முகத்துடன்.
அவளை ஆச்சர்யமாய் பார்த்த டாக்டர் அமுதனிடம் திரும்பி,
"என்ன சார்? உங்க மனைவிக்கு அவங்க கற்பமா இருக்க விஷயம் தெரியாதா?" என்றார்.
மேலும் அதிர்ச்சியாய் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள,
"மேடம்! இவர் என்னோட கணவர் இல்ல. இவங்க ரெண்டு பேரும் என்னோட ப்ரெண்ட்ஸ்" என்றாள் மிருதி தான் இருக்கும் நிலையை நினைத்து மிகவும் நொந்து போய்.
"அப்போ உங்க கணவர் எங்க?" என்றார் மருத்துவர்.
மிருதி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, "தி" என்றான் அமுதன்.
அவனை ஒரு முறை நோக்கி மெல்ல சிரித்தவள்.
"அவர் ஊர்ல இருக்கார்." என்றாள் மிருதி.
"இதுக்கு முன்னாடி ஸ்கேன் எடுத்துருக்கிங்களா?" என்றார் மருத்துவர்.
"இல்ல ஆக்சுவலா எனக்கு லாஸ்ட் மந்த் அபார்ஷன் ஆகிடுச்சு" என்றாள் மிருதி.
மருத்துவர் ஒன்றும் புரியாமல் அவளை பார்க்க, "கொஞ்சம் தெளிவா சொல்றிங்களா?" என்றார் டாக்டர்.
மிருதி எதுவும் பேசாமல் கடந்த காலத்திற்கு செல்ல விரும்பாமல் தவிக்க.
அமுதன் ஸ்ரீஷாவை விழிகளால் வெளியே செல்லுபடி கூறினான்.
"தி. நீ பேசிட்டு கூப்பிடு. நாங்க வெளிய வெய்ட் பண்றோம்" என்று இருவரும் வெளியேறினர்.
"இங்க பாருங்க நீங்க என்ன நடந்ததுன்னு தெளிவா சொன்னா தான் நான் எதுவும் சொல்லமுடியும்" என்றார் டாக்டர்.
"அதுவந்து டாக்டர்." என்று ஆரம்பித்தவள் தான் கருவுற்றிருபத்தை மருத்துவமனை சென்று உறுதி செய்ததையும் பின் ஒரு விபத்தில் அடிபட்டு கரு கலைந்துவிட்டதையும் கூறினாள்.
"சோ, நீங்க கண்சிவா இருக்கிங்கன்னு தெரிஞ்சவுடனே அபார்ஷன் ஆகிட்டதுனால ஸ்கேன் எடுக்காம விட்டுட்டீங்க. என்ன நடந்துருக்கும்னா உங்களுக்கு இரட்டை குழந்தைகள் கரு தரிச்சிருக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. அடி பட்டதுல ஒரு கரு மட்டும் கலைஞ்சிருக்கும். இன்னொரு கரு தான் இப்போ வளர்ந்திட்டு இருக்கு. எதுக்கும் நாம ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்துடலாம். ஆனா, அபார்ஷன் ஆனப்ப உங்களுக்கு கொடுத்த மாத்திரைகளை நீங்க சாப்பிடலையா? ஏன்னா அதை சாப்பிட்டிருந்தா இந்த கருவும் கலைச்சிருக்குமே? " என்றார் மருத்துவர்.
"இல்ல டாக்டர். வெறும் விட்டமின் மாத்திரைகளை மட்டும் தான் போட்டேன் " என்றாள் மிருதி மிகவும் மெதுவான குரலில்.
என்ன சொல்வது? எப்படி உணர்வது? என்று தெரியாமல் திகைத்து நின்றிருந்தாள்.
வெளியே வந்த மிருதியை இருவரும் பார்க்க, "அமுதன். ஸ்கேன் எடுக்க சொல்லிருக்காங்க. ஆனா இன்னொரு நாள் எடுத்துக்கலாம். நாம வீட்டுக்கு போகலாம். எனக்கு டையர்டா இருக்கு." என்றாள் மிருதி.
அமுதன் மிருதியை ஒரு நிமிடம் கூர்ந்து கவனித்தவன். "சரி தி. நாம போகலாம்" என்று அனைவரும் வீடு திரும்பினர்.
வீட்டினுள் நுழைந்தவுடன் மிருதி இருவரையும் பார்த்து "நான் உங்ககிட்ட பேசணும்." என்றாள்.
"என்ன சொல்லு தி?" என்றான் அமுதன்.
"உக்காருங்க" என்றவள் தானும் அமர்ந்தாள்.
"அமுதன். என்னை பத்தி என்ன நடந்ததுன்னு இதுவரைக்கும் சொல்லவே இல்ல. நீங்களும் கேட்கலை. சொல்ல கூடாதுன்னுலாம் இல்ல." என்றாள் நிறுத்தி.
"நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே தி. உனக்கு சொல்லணும்னு தோணும் போது சொல்லு. எங்களுக்கு நீ நல்லா இருந்தா போதும்" என்றான் அமுதன்.
"இல்ல அமு. இன்னைக்கு என்னை பேச விடு. இவ்ளோ நாளா என் மனசை போட்டு அழுத்திக்கிட்டு இருக்க விஷயத்தை இறக்கி வைச்சா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்." என்றவள் வழிந்த விழிநீரை துடைத்து மீண்டும் தொடர்ந்தாள்.
"என் வாழ்க்கைல நான் எதிர்பார்க்காத விஷயங்கல்லாம் நடந்தது என் கல்யாணத்துக்கு பிறகு தான்." என்று திருமணத்திற்கு பிறகு நடந்த அணைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தாள்.
மனதில் இருந்த பாரம் இறக்க அழுதும் தீர்த்தாள்.
இருவரும் மிருதியின் இருபுறமும் அமர்ந்து எதுவும் பேச முடியாமல் அவர்களும் துக்கம் கொண்டனர்.
"தி" என்றான் அமுதன் மெதுவாய்.
"நான் யாருக்கும் எந்த கெடுதலும் நினைச்சதில்லையே அமுதா, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்?" என்றாள் மிருதி.
"அக்கா அழாதிங்க. எல்லாம் சரியாகிடும்" என்றாள் ஸ்ரீ.
"இல்ல ஸ்ரீ. எதுவும் சரியாகாது" என்றாள் மிருதி.
"எந்த பெண்ணும் வர போற புருஷன் தன்னை அன்பா பார்த்துக்கனும் ஆதரவா இருக்கணும் ரொம்ப நேசிக்கணும்னு தான் நினைப்பா. நானும் அதை எதிர் பார்த்தது தப்பா? இருந்தாலும் அவர் எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்னு அவரை விரும்ப ஆரம்பிச்சேன். அவர் எப்படி இருந்தாலும் அப்படியே ஏத்துக்க ஆரம்பிச்சேன். அவருக்காக என்னுடைய ஆசைகள் எல்லாத்தையும் எனக்குள்ள புதைச்சிக்கிட்டு வாழ ஆரம்பிச்சேன். ஆனா?" என்று முடிக்க முடியாமல் குலுங்கி அழ தொடங்கினாள்.
ஆதரவாய் அவளின் தலையை தடவ ஸ்ரீஷாவின் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டவள் சிறிது நேரம் அமைதியாயிருந்தாள்.
"தி. நீ இப்போ என்ன முடிவெடுத்தாலும் நாங்க உனக்கு துணையா இருப்போம். நீ கவலைப்படாதே. அதுமட்டுமில்ல குழந்தை இருக்குன்னு தெரிஞ்சப்புறம் நீ அவரை பார்க்கணும் அவர்கிட்ட சொல்லணும் இல்ல அவரோட சேர்ந்து வாழனும்னாலும் நாங்க உனக்கு உதவுறோம் இப்போ நீ எடுக்குற முடிவு தான்." என்றான் அமுதன்.