Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீயாய் சுடும் என் நிலவு!

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 19:

19

“அவ சொல்ல வந்த நேரத்துல நடந்த பிரச்சனையால தான் இப்போ இங்க வந்து நிக்கறிங்க.” என்றான் அமுதன் மெதுவாக.

“என்ன?” என்றான் தீரன் அதிர்ச்சியாய்.

’என்ன இவ்ளோ அதிர்ச்சியாகுறார்?’ என்று நினைத்தவன்.

“என்ன என்ன?” என்றான் அமுதன்.

“இல்ல..” என்ற தயங்கிய தீரனை ஒன்றும் புரியாமல் பார்த்த அமுதன், “என்ன ஸார் ஏன் தயங்குறீங்க? நீங்க கொஞ்சம் தெளிவா பேசினா தான் திகூட உங்களை சேர்த்து வைக்க எங்களால ஹெல்ப் பண்ண முடியும்.” என்றான் அமுதன்.

“இல்ல அமுதன். அன்னைக்கு என்ன நடந்ததுன்னு தெரியாம தான் இந்த மூணு வருஷமா ரொம்ப நொந்து போய்ருக்கேன்.” என்றான் தீரன்.

“என்ன சொல்றீங்க தீரன்?” என்றான் அமுதன் அதிர்ச்சியாய்.

“ஆமா. அன்னைக்கு ஓவரா குடிச்சிருந்ததால... என்ன நடந்ததுன்னு.. எனக்கே தெரியலை. விடிஞ்சு வீட்டுக்கு வந்து மிருதியை காணாம தேடினேன். யாருமே எதுவுமே சொல்லலை. அவங்க அப்பா அம்மாகிட்ட போயி கேட்டேன். அவங்களுக்கும் எதுவும் தெரியலை. உங்கக்கூட தானே என் பொண்ணு இருந்தா திடீர்னு வந்து எங்கன்னு எங்ககிட்ட கேக்குறிங்கன்னு பெரிய பிரச்சனை ஆகிட்டு. அதுக்கப்புறம் எவ்வளவோ ட்ரை பண்ணியும் மிருவ கண்டுபிடிக்க முடியலை. ரொம்ப நாள் அவங்க அப்பா அம்மாகிட்ட மன்னிப்புக்காக அவங்க வீட்டு வாசல்ல போயி நின்னுருக்கேன். ஆனா கடைசி வரைக்கும் அவளை பத்தி ஒரு தகவலும் எனக்கு கிடைக்கல. உங்ககிட்ட கண்டிப்பா மிருதி எல்லாத்தையும் சொல்லிருப்பா. தயவு செஞ்சு என்ன நடந்ததுன்னு சொல்லுங்க” என்றான் தீரன் உருக்கமாக.

“நான் ஒரு விஷயம் சொல்லியே ஆகணும். உங்களை என் திகூட சேர்த்து வைக்கணும்னு நான் இப்போ நினைக்கிறேன். ஆனா, அன்னைக்கு நான் ... எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலை. நைட் 3 மணிக்கு போன் பண்ணி ஹாஸ்பிடல் வர சொன்னா. தி என்னைக்குமே எவ்ளோ பிரச்சனை வந்தாலும் நைட் 8மணிக்கு மேல போன் பண்ண மாட்டா. காலேஜ் படிக்கும் போது எவ்ளோ பசங்க அவ பின்னாடி சுத்திருக்காங்க தெரியுமா? ஆனா அவளோட ஒரே பதில். எனக்கு உலகமே எங்க அப்பா அம்மா தான். அவங்க யாரை கை காட்றாங்களோ அவங்க தான் என் கழுத்துல தாலி கட்ட முடியும்னு சொன்னவ. அவளோட கனவே வேற. ரொம்ப பெருசு. அவளுக்கு கனவெல்லாம் எம்.எஸ்.டபல்யு படிச்சு அதுலயே ஹெச்.ஆர் முடிக்கனும். அவங்க அப்பாக்காக இந்த கல்யாணதுக்கு சம்மதிச்சா.

அவ எதுவுமே என்கிட்ட சொன்னதில்லை. அன்னைக்கு நான் ஹாஸ்பிட்டல்ல இருந்த நிலமைல நீங்க என் முன்னாடி இருந்திருந்தீங்க சத்தியமா சொல்றேன். கண்டிப்பா அடிதடில தான் போய் முடிஞ்சிருக்கும்.” என்றான் அமுதன் கோபத்தை அடக்கி.

அவனின் வார்தைகள் தீரனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

“இங்க கூட்டிட்டு வந்தப்புறம் அவ எங்கக்கூட சகஜமா பேசுறதுக்கு முழுசா மூணு மாசம் ஆச்சு. எப்படி சொல்றது அவ வந்தப்ப சித்த பிரம்மை பிடிச்ச மாதிரி இருந்தா. ரெண்டு நாள் எதுவுமே சாப்பிடலை. அபார்ஷன் ஆன பொண்ணு சாப்பிடாம மூணு நாள் இருந்தா என்ன ஆகுணும்னு யாரும் சொல்லா தேவை இல்ல உங்களுக்கு. அதிக ரத்த போக்கு காரணமா மயக்கமாய் அடுத்த ரெண்டு நாள் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி அதுக்கப்புறம் அவளை சாப்பிட வைக்க ஒரு ஒரு வேளையும் போராட்டம் தான். நாங்க செஞ்சோம்னு சொல்லி காட்டலை. ஆனா அந்த அளவுக்கு மிருதி உங்களால காயபட்ருக்கா. ரெண்டு மாசம் கழிச்சி தான் அவ வயதுள்ள இன்னொரு கரு வளருதுன்னு எங்களுக்கு தெரியும். அதுக்கப்புறம் அவளை ஒரு வழியா தேற்றி கொஞ்ச கொஞ்சமா பழைய நிலைக்கு கொண்டு வந்தோம்.

அது மட்டுமில்ல, எங்களுக்கு பாரமா இருக்க கூடாதுன்னு வேலைக்கு போறேன்னு அடம் பிடிச்சு வெளிய போய் எவ்ளோ கஷ்டபட்டான்னு சொல்ல முடியாது. புருஷன் கூட இல்லன்னா அது அவளோட தப்புன்னு சொல்லி இந்த சமுதாயம் அவளை ஒதுக்கி வைக்குது. அதோட அவகிட்ட முடிஞ்ச வரைக்கும் ஒரு சில ஆண்கள் தப்பா நடக்க முயற்சியும் செய்றாங்க. அப்படி பட்ட ஒருத்தங்கிட்ட மாட்டி உடைஞ்சு போய் வந்தா. அப்போ முடிவு பண்ணி வெளிய அனுப்பாம என்கூடயே கேப்ல ஒரு வேலை கொடுத்து பார்த்துக்க சொன்னேன். இன்னும் நிறைய இருக்கு. உங்களால அவ நிறைய பட்ருக்கா. அதனால அவகிட்ட மன்னிப்பு உடனே கிடைக்கும்னு எதிர் பார்க்காதீங்க. முயற்சி பண்ணுங்க.மாறிட்டிங்கன்னு அவளுக்கு புரிய வைங்க. உங்க உண்மையான அன்பை அவளுக்கு காட்டுங்க. அப்போ தான் தி உங்கக்கூட சேரதுக்கு வழி இருக்கு. என்னடா இவன் இவ்ளோ பேசுறானேன்னு நினைக்காதீங்க. நான் அவளோட ஃப்ரெண்ட் நிச்சயமா நா கேட்பேன். அப்புறம் ஸ்ரீஷா என்னோட வருங்கால மனைவி. நாங்க அஞ்சு வருஷமா விரும்பறோம். இன்னும் ரெண்டு மாசதுல கல்யாணம். அதனால என்னையும் தியும் தப்பாலாம் யோசிக்காதீங்க.” என்றான் அமுதன் ஒரே மூச்காய்.

அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டியாய் இறங்கியது தீரனின் நெஞ்சத்தில்.

“அப்புறம் அன்னைக்கு என்ன நடந்ததுன்னு நாங்க எதுவுமே கேட்டதில்லை. மூணு மாசம் கழிச்சி அவளே எங்ககிட்ட சொன்னா. ஆனா, அதைபத்தி என்னால சொல்லமுடியாது. அது நீங்க அவகிட்ட கேட்டு தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்.” என்றான் அமுதன்.

விழிகளில் நீரோடு தலைகுனிந்து அமர்ந்திருந்த தீரனை, “மாமா! அவர் பேசுனது எல்லாமே உண்மை தான். ஆனா எல்லாம் முடிஞ்சு போனது. இனி நடக்க போறதை பத்தி யோசிங்க. நீங்க பண்ண தப்பை எப்படி சரி செஞ்சு எப்படி அக்கா கூட சேரதுன்னு யோசிங்க. எல்லாம் சரி ஆகிடும்” என்றாள் ஆறுதலாக. .

.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 20:

20

“இப்போ நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளுங்க” என்றான் அமுதன்.

“சொல்லுங்க” என்று அமுதனை பார்த்தான் தீரன்.

நீங்க போய் நின்னவுடனே நிச்சயமா தி எவ்ளோ முடியுமோ அவ்ளோ இன்சல்ட் பண்ணுவா உங்களை. அவளும் அதுக்கு கஷ்ட படுவா. ஆனா அவளோட டார்கெட் நீங்க அவ லைஃப்ல திரும்பி வரக்கூடாது அவ்ளோதான்.”; என்றான் அமுதன்.

“ஏன்? எனக்கு ஒரு சந்தேகம், எதுக்கு உங்களை வருங்கால கணவர்னு என்கிட்ட சொன்னா? அவளுக்கு என்னை பிடிக்கலையோ?” என்றான் தீரன் மெதுவாக இதயத்துடிப்பு எகிற.

“உங்களை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். எவ்ளோனா அவளோட சந்தோஷத்தைவிட வாழ்க்கையைவிட உங்களை தான் பிடிக்கும். ஏன்னா அவளுக்கு இப்போ ஹெல்த் சரி இல்ல.” என்றான் அமுதன்.

மெல்ல சிரித்தவன் உடனே “நான் கூட கேட்டேன் உனக்கு அவர்கூட சேர்ந்து வாழ ஆசை இல்லையா? ஏதோ ஒரு தடவை நடந்த தவறால இப்போவும் அவரை அந்த அளவு வெறுக்குறியா?” என்றான் அமுதன்.

“மிருதிக்கு என்னா ஆச்சு?” என்றான் பதற்றமாய்.

“இருங்க சொல்றேன். அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா? “ என்று அவன் விழிகளில் சிரிப்பு மின்ன தொடர்ந்தான்.

“ஏற்கனவே மூணு வருஷம் அவர் அனுபவிக்கிற தண்டனையே போதும். திரும்பி அவர்க்கூட வாழ போனா அவருக்கு தேவையில்லாம இன்னும் கஷ்டம் அதிகம். இப்போ போலவே முகம் கொடுத்து பேசாம இருந்துட்டா அவர் பொண்ணு கூட மட்டும் அடுத்த கட்டத்துக்கு போகணும்னு நினைக்கிறேன். அவருக்குன்னு வேற வாழக்கைய தேடிக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்” என்றான் அமுதன் தன் தோழியை நினைத்து கண்கள் பனிக்க.

இந்த நிலையிலும் மிருதி தனக்காக கவலை படுவதை எண்ணி நெகிழ்ந்து போனான்.

“பிளீஸ் மிருதிக்கு என்ன ஆச்சு?" என்றான் தீரன் மீண்டும்.

“இது .. எப்படி நான் சொல்றது? நீங்க தான் மிருதிக்கிட்ட பேசி கேட்டு தெரிஞ்சிக்கணும்.” என்றான் அமுதன்.

“பிளீஸ் தீரன். அவ என் மேல ரொம்ப கோபமா இருக்கா. இப்ப போய் நான் கேட்டா சொல்லுவாளா? பிளீஸ் என்ன ஆச்சு சொல்லுங்க?” என்றான் தீரன் கெஞ்சலாய்.

“அது தீரன்..” என்று மீண்டும் அமுதன் தயங்க, “பிளீஸ் அமுதன். உங்க ஃப்ரெண்ட் தி மேல பிராமிசா கேக்குறேன் சொல்லுங்க”? என்றான் தீரன்.

“சரி சொல்றேன். அன்னைக்கு நீங்க பலமா மிருதி வயிற்றுல தாக்கினதுனால அவளுக்கு கர்பப்பைக்குள்ளையே பிளீடிங்க் அதிகமாகிடுச்கு. இது ரொம்ப றார் கேஸ்னு டாக்டர் சொல்றாங்க. பிளட் ஹீமோரேஜ் ன்னு சொல்றாங்க. எங்களுக்கு இதை பத்தி முதல்ல எதுவும் தெரியலை. மிதிஷா பிறந்தப்புறம் கூட எங்களுக்கு தெரியலை. அப்போகூட தி நல்லா தான் இருந்தா. தீடிர்ன்னு ஒரு நாள் ரொம்ப வயிறு வலிக்குது துடிச்சு போயிட்டா. அவளால நிக்க கூட முடியலை. ஹாஸ்பிட்டல்ல சேர்த்து ட்ரீட்மெண்ட் பார்த்தோம். இப்போ இந்த ஏழு மாசமா ரொம்ப கஷ்டபட்றா” என்றான் அமுதன்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 21

மிகவும் அதிர்ச்சியாக அமுதனை பார்த்த தீரன்.

“என்ன சொல்றிங்க நீங்க? நான் அடிச்சேனா? அதுவும் மிருதிய? சான்ஸே இல்ல..” என்றான் மிகவும் சாந்தமான அடக்கிய கோபத்தோடு.

“அப்படியா?” என்று அவனை நம்பாத தோரணையில் நெஞ்சிற்கு குறுக்கே கரங்களை கட்டிக்கொண்டு நின்றான் அமுதன்.

“ஹ்ம்.. அப்படின்னா தி எதுக்கு உங்களை விட்டு போனா தெரியுமா?” என்றான்.

‘இல்லை’ என்று தீரன் தளர்வாக தலையாட்ட.

“இதுவும் ஒரு முக்கிய காரணம்” என்றான் அமுதன்.

“இல்ல. அப்படி நடக்க வாய்ப்பே இல்ல. மனசால கூட நாம பேசுற வார்த்தையால யாரும் பாதிக்க கூடாதுன்னு நினைக்கிறவன். அதனால தான் என் சோகத்தை கூட வெளிய காட்டாம மிருதிய விட்டு விலகி போனேன். பொண்ணுங்க நம்மளைவிட உடலவலிமை குறைஞ்சவங்களா இருந்தாலும் மனசால நம்மளைவிட நூறு மடங்கு தைரியம் நிறைஞ்சவங்கன்னு நம்புறவன் நான். ஆண்களை படைச்சதே பெண்களை பாதுகாக்க தான்னு ஆழமா நம்புறேன். அபப்டி இருக்கும்போது நான் என் மிருதிய காயப்படுத்துவேணா?” என்றான் தீரன் என்ன சொல்வதென்று தெரியாமல் உணர்ச்சி பெருக்கில்.

அவனின் பேச்சில் வாயடைத்து போய் நின்ற அமுதன்.

“சரி. உங்களுக்கு நான் சொல்றதுல நம்பிக்கை இல்லைன்னா இப்போவே தியை வர சொல்லி கேளுங்க?” என்றான் அமுதன்.

சிறிதுநேரம் அமைதியாக இருந்த அமுதன் அமைதி பெருமூச்சுவிட்டபடி தனக்குள் உடைந்து போய் துளிர்க்கும் கண்ணீரை துடைக்காமல் அமர்ந்திருக்கும் தீரனை பார்த்தான்.

“இங்க பாருங்க தீரன். உங்ககிட்ட பொய் சொல்லி எனக்கென்ன ஆகபோகுது? என் தி உங்கக்கூட சந்தோஷமா இருக்கணும் எனக்கு அவ்ளோதான்” என்றான் அமுதன்.

கண்ணீரை துடைத்த தீரன் “இப்போ நான் என்ன செய்யனும்?” என்றான்.

“நீங்க நேரா வீட்டுக்கு போங்க. தி உங்களை உள்ள விடமாட்டா. ஏன்னா உங்கமேல கோபமா இருக்கேன்னு சொல்றதெல்லாம் கண்துடைப்பு. உண்மை என்னன்னா கொஞ்சம் நேரம் உங்ககூட இருந்தாக்கூட எங்க தன் மனசு மாறி உங்ககூட சேர்ந்து வாழ சம்மதிச்சிடுவாளோன்னு அவமேலயே அவளுக்கு பயம்.” என்று சிரித்தான் அமுதன்.

விழிகள் விரிய தீரன் ஆச்சர்யமாய் அமுதனை நோக்க, “என்ன அப்படி பார்க்கறிங்க? அவ ஸ்கூல்ல அடிஎடுத்து வெச்ச நாள்ல இருந்து எனக்கு ஃப்ரெண்ட். அவளை பத்தி நல்லா தெரியும் எனக்கு” என்று சிரித்தான்.

“சோ, நீங்க நான் என் பொண்ணுக்காக வந்துருக்கேன்னு சொல்லுங்க. தேவைபட்டா என் டார்லிங்க ஹெல்ப்புகு கூப்பிட்டுக்கோங்க பிச்சி உதறுவா. இங்க தான் கொஞ்ச நாள் தங்க போறதா சொல்லுங்க” என்றான் அமுதன்.

“முடியுமா?” என்றான் தீரன்.

“கண்டிப்பா முடியும். ஆனா நாங்க உங்ககிட்ட பேசினதை திகிட்ட எந்த காரணத்துக்காவும் சொல்ல கூடாது.” என்றான் அமுதன்.

“சரி சொல்லமாட்டேன்” என்றான் தீரன்.

“அப்படி தெரிஞ்சுது. எங்ககிட்ட கூட சொல்லாம வெளிய போய்டுவா. அதனால கவனமா இருங்க” என்றன தீரன்.

“கண்டிப்பா. ரொம்ப நன்றி அமுதன்” என்று அமுதனை கட்டிக்கொண்டான் தீரன்.

“நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா போதும்.” என்று கிளம்பினான் அமுதன்.

இருவரும் வெவ்வேறு திசையில் பயணிக்க அவர்களின் எண்ணங்கள் மட்டும் ஒரே புள்ளியில் வந்து நின்றது அது... மிருதி.”

**

பேசியபடி மறுநாள் காலை மிருதியின் வீட்டு வாசலில் வந்து நின்றான் கையில் பெட்டியுடன் தீரன்.

வெளியே வந்த ஸ்ரீஷா அவனை கண்டு நகைத்தாலும் மிருதி வருவதை கண்டு, “யாரு சார் நீங்க? உங்களுக்கு யார் வேணும்?” என்றாள்.

‘என்னை மறந்துட்டாங்களா அதுக்குள்ள?’ என்று தீரன் யோசிக்க, அவளின் பின்னே வந்து நிற்கும் மிருதியை கண்டுகொண்டவன்.

‘ஒஹ்... நம்ம சிலுசிலு தான் நிக்குறாளா? சரி நாமளும் சேர்ந்து ஆக்டிங் கொடுப்போம்’ என்று உள்ளுக்குள் சிரித்தவன்.

“இங்க மிஸஸ். மிருதி இருக்காங்களா?” என்றான் தீரன்.

“நீங்க யாருங்க சார்?” என்றாள் ஸ்ரீஷா மீண்டும்.

அவளை பார்த்து கொண்டே வந்த மிருதி.

“யாரு வாசல்ல ஸ்ரீ? யாருக்கூட பேசிட்டு இருக்க?’ என்றாள் மிருதி.

“யாருன்னு தெரியலைக்கா உங்களை கேக்குறாங்க? அதான் யாருன்னு கேட்டுட்டு இருக்கேன்” என்றாள் ஸ்ரீ.

வாசலில் தீரணை பார்த்த மிருதி அதிர்ச்சியில் வாயடைத்து போய் நிற்க. இருவரின் விழிகள் மட்டும் வார்த்தைகள் இல்லாமல் போர் நடத்தி கொண்டிருந்தன.

“அப்பா” என்ற மழலையின் குரலில் இருவரின் சிந்தனையும் திசை திரும்ப இருவரும் ஒரு சேர மிதிஷாவை கண்டனர்.

“மிஷா குட்டி. வாங்க எப்டி இருக்கீங்க?’ என்றான் தீரன்.

“அப்பா... அப்பா” என்று குதித்தது குழந்தை.

“இங்க என்ன பண்றிங்க?” என்றாள் மிருதி கடுமையான குரலில்.

“நான் வந்த வேலை இன்னும் முடியலை. இன்னும் கொஞ்ச நாள் இழுக்கும் போல.. அதான் அதுவரைக்கும் எதுக்கு ஹோட்டல்ல இருக்கணும்? என் பொண்ணுகூட இருக்கலாம்னு வந்துட்டேன்.” என்றான் சாதாரணமாக.

“என்ன?” என்றாள் மிருதி அதிர்ச்சியாய்.

“என்ன என்ன? நான் ஒண்ணும் உன்கூட இருக்க வரலை என் பொண்ணுகூட இருக்க போறேன்” என்றான் தீரன் வெடுக்கென்று.

அவனின் வார்த்தைகள் சுருக்கென்று தைத்தாலும் உடனே மறைத்துகொண்டவள்.

“நீங்க பாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு இங்க வந்து இருக்க முடியாது.” என்றாள் மிருதி.

எதுவும் பேசாமல் அவளையே ஆழமாக பார்த்தவன். “உன் கழுத்துல இருக்க தாலிக்கு சொந்தக்காரன் நான் தானே? இந்த குட்டி தேவதையும் நமக்கு பிறந்தவ. வேறேன்ன வேணும் நான் இங்க தங்க?” என்றான் தீரன்.

அவனின் வார்த்தைகளில் ஒரு நொடி பின்வாங்கியவள் “இருக்கலாம் அதுக்காக எல்லாம் இங்க தங்க வைக்க முடியாது” என்றாள் மிருதி.

“அம்மா.. பிளீஸ்... அப்பா... வேணும்..” என்றது.

‘அப்படி சொல்றா என் செல்ல குட்டி’ என்று தனக்குள் சிரித்து கொண்டான் தீரன்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 22

“அம்மா அப்பா வேதும்..” என்றது குழந்தை மீண்டும் மிருதியின் புடவையை லேசாக இழுத்தபடி.

மிருதி தீரனை முறைக்க, அவனோ ஒற்றை புருவம் உயர்த்தி கள்ள சிரிப்பு சிரித்தான்.

‘லேசா சிரிக்கும் போதுகூட எவ்ளோ அழகா இருக்கார்?’ என்று மனம் சொல்ல

‘தப்பு தப்பு இது மாதிரி நீ யோசிக்கவே கூடாது. அவனை தூரமா வைக்க தானே இத்தனை நாளா நீ கஷ்டபட்ற? அப்புறம் இப்படி சைட் அடிச்சா வெலங்குன மாதிரி தான்’ என்றது மூளை.

‘அதெல்லாம் ஒண்ணுமில்லை... சரி.. தப்பு தான். ஆனாலும் என் புருஷன் அழகு தான்.’ என்றது மனம்.

‘மக்கு மனமே. மக்கு மனமே... உன்னை ... இப்போ கொல்ல போறேன் பாரு’ என்றது மூளை.

‘என்னை கொன்னா நீயும் செத்து போய்டுவ’ என்று சிரித்தது மனம்.

‘அய்யோ! உன்னை எல்லாம் கூட வச்கிக்கிட்டு ஒரு வேலையும் செய்யமுடியாது. நான் என்ன பண்ண போறேனோ?’ என்றது மூளை.

‘வேற வழியே இல்லை உனக்கு. நீ எனக்கு தான் வாழ்க்கை பட்ருக்க. அதனால என் கூட தான் இருக்கணும்.’ என்றது மனம்.

‘என்னது நான் உனக்கு வாழ்க்கை பட்ருகேனா? உன்னை’ என்று மனதை துரத்த.

‘புடிச்சிக்கோ முடிஞ்சா’ என்று சிறிது ஓடியது மனம்.

‘என்ன எதிர்ல இருக்கவனை நிக்க வச்சிக்கிட்டு இவங்க ரெண்டு பேரும் இப்படி ஓடிட்டு இருக்காங்க.’ என்று ‘போதும் நிறுத்துங்க உங்க சண்டைய. எதிர்ல இருக்கவர் உங்களையே வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்கார். நீங்க என்னடான்னா ஓடி புடிச்சி விளையாடிட்டு இருக்கீங்க. உங்க பஞ்சாயத்த அப்புறம் வச்சிக்கோங்க’ என்றது மேனி.

‘இப்போ என்ன பண்றது? அவர்கிட்ட இருந்தா என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு தான் தூரமா இருந்தேன். இப்போ என்கூட ஒரே வீட்ல இருந்தா நிச்சயமா அவரை மன்னிச்சு வாழ எண்ணம் வரும்.’ என்றது மனம்.

‘அதுக்கு தான் திருப்பி அனுப்பிடுன்னு சொல்றேன்’ என்றது மூளை.

இவளுக்குள் இப்படி போராட்டம் நடக்க, எதிரில் நிற்கும் தீரனுக்கு

‘அப்படி அந்த சின்ன மூளைக்குள்ள என்ன தான் ஒடிட்டு இருக்கும்? ரொம்ப யோசிக்கிறா என்ன யோசிக்கிறான்னு தெரியலையே? இவளை யோசிக்க விடக்கூடாது அது நமக்கு ஆபத்தா முடியும். அதனால தீரா அவளுக்கு யோசிக்க இடம் கொடுக்காம உள்ள போய்டு’ என்று கூறியது அவனின் மனம்.

‘ஆமா ஆமா’ என்றது மூளை.

மீதிஷாவை பார்த்து சிரித்தவன்.

“மீஷாகுட்டி உங்க அம்மா ஏதோ கனவுலகத்துக்கு போயிட்டாங்க போல. நாம உள்ள போலாமா? எனக்கு உன்னோட ரூம் காட்றியா?” என்று மீஷாவை தூக்கி கொண்டு சட்டென வீட்டினுள் நுழைந்தான் தீரன்.

அவன் உள்ளே போவதை பார்த்த மிருதி அவன் பின்னே செல்ல போக, அவளின் கையை பிடித்து நிறுத்தி, ‘இவர் தான் மாமாவா? செம ஹான்ட்ஸமா இருக்கார்.’ என்று சிரித்தாள் ஸ்ரீ.

ஸ்ரீயை முறைத்த மிருதி, ‘ஆமா. ஆனா மாமா கீமான்னு அவர்கிட்ட சிரிச்சு பேசுன உன்னை தொலைச்சிருவேன்.” என்று உள்ளே சென்றாள்.

‘ஹிம்.. வர்க் அவுட் ஆகுது’ என்று உள்ளுக்குள் சிரித்தவள்.

“அக்கா இது மாமாகூட நான் பேசுறேன்னு போறாமையா? இல்ல அவர் மேல கோபமா இருக்கிங்கன்னு பேசக்கூடாதா?” என்று கேட்டுக்கொண்டே அவளின் பின்னால் சென்றாள் ஸ்ரீ.

நேராக அவளுக்கு முன்னாள் மிருதியின் நுழைந்தவள் மிகவும் மெதுவான குரலில், “மாமா சூப்பர்.” என்று ஹைபை அடித்துகொண்டு.

“அக்கா வரா.” என்று மெதுவாக முணுமுணுத்து, பின் அவனை முறைத்து, “இங்க பாருங்க. எங்க அக்காக்கு நீங்க இங்க இருக்கிறது பிடிக்கலை. அப்புறம் ஏன் இங்க தங்கறிங்க. இந்த மூணு வருஷம் உங்களால எங்க அக்கா எவ்ளோ கஷ்ட பட்டாங்க தெரியுமா? இப்போ திடீர்னு வந்து பொண்ணு பொண்டாட்டின்னு இருக்கீங்க?’ என்று திட்டிக்கொண்டே விழிகளால் மன்னித்து விடும்படி கெஞ்சினாள்.

அவளை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவன்.

‘இந்த புள்ள சும்மா மிருதி முன்னாடி திட்றாளா? இல்ல உண்மையாவே இவ மனசுல இருக்கிறதை இப்படி திட்றாளா?’ என்று யோசித்தான்.

அவளின் பின்னே வந்த மிருதி ஸ்ரீ தீரணை திட்டுவதை கண்டு மனம் கலங்க, ‘என்னாலயே அவரை திட்ட முடியலை அதனால தான் கண்காணாத இடத்துல வந்து இருக்கேன். இவ இப்படி திட்றாளே’ என்று அவர்களின் அருகே சென்று.

“மிருதி விடு. அவர் ஒண்ணும் என்னை பார்க்க வரலை. அவர் பொண்ணுகூட இருக்க தானே வந்துருக்கார். இருந்துட்டு போகட்டும். முடிஞ்சத பத்தி பேசி இப்போ எதுவும் நடக்க போறதில்லை.” என்றாள் வேதனையாக.

அந்த வார்த்தைகளில் அவளின் வலி இருந்தாலும் அவள் தனக்காக ஸ்ரீயிடம் பரிந்து பேசுகிறாள் என்பதில் மிகுந்த மகிழ்ச்கி அடைந்த தீரனுக்கு அவளுடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசையோடு முடியும் என்ற நம்பிக்கையும் வந்தது.

“நீ சும்மா இருக்கா. இந்த மூணு வருஷமா நீ எவ்ளோ கஷ்ட பட்ருக்க. மெண்டல் ஹாஸ்பிட்டல்ல கொண்டு போயி சேர்க்கலை அது மட்டும் தான். எவ்ளோ உடைஞ்சு போயிருந்த.. உன்னை திருப்பி கொண்டு வரதுக்குள்ள நாங்க எவ்ளோ பாடுபட்டோம். அவ்ளோ ஏன் உன் முகத்தில சிரிப்புங்கறதே மிதிஷா உன் வாழ்க்கைல வந்தப்புறம் தானே? இவரை இன்னும் நாலு வார்த்தை நல்லா கேட்டா தான் என் ஆத்திரம் அடங்கும்.” என்றாள் ஸ்ரீ.

வார்த்தை எழாமல் மிருதியையே பார்த்து கொண்டிருந்தான் தீரன்.

“ஸ்ரீ. நான் தான் சொல்றேன்ல இதைபத்தி பேசி எந்த பிரயோஜணுமும் இல்ல. நானே எதுவும் கேக்கலை. நீ எதுக்கு அதைபத்தி பேசிட்டு இருக்க.” என்றாள் மிருதி.

ஸ்ரீ விழிகளால் தீரனை பார்த்து சிரித்து கொண்டே, “சரிக்கா. நீ சொல்றதால நான் அமைதியா போறேன்” என்று வெளியேறினாள்.

“மிரு..” என்று ஆரம்பிக்க அவனை ஒரு முறை பார்த்தவள் வெளியேறினாள்.

உடைந்து போய் அமர்ந்தவன் ‘கடவுளே! நானே அறியாம என் மிருவை ரொம்ப கஷ்ட படுத்திருக்கேன். இதை நானே தான் சரி பண்ணனும். அவகூட சேர்ந்து வாழனும். தொலைஞ்சு போன இந்த மூணு வருஷத்தை அவளுக்கு என் அன்பால சந்தோஷத்தை திருப்பி தரணும்.

மிருதியும் மிஷாவும் மெத்தையில் உறங்க, தீரனோ தரையினில் படுத்திருந்தான்.

ஒரே அறையில் தன்னவளுடன் இருந்துகொண்டே அவள் சுவாசிக்கும் காற்றை தானும் சுவாசிக்கிறோம் என்ற சுகமே போதுமானதாக இருந்தது தீரனுக்கு அந்த நிலையில்.

இரண்டு நாட்கள் கழிந்தது.

“அக்கா ஆபிஸ்ல நாளைக்கு டூர் போறோம். ஒன் வீக். பத்திரமா இருங்க” என்றாள் ஸ்ரீ.

“என்னடி திடீர்னு டூர்னு வந்து சொல்ற?’ என்றாள் மிருதி.

“ரெண்டு நாள் முன்னாடியே சொல்லிட்டாங்க அக்கா. நான் டென்ஷன்ல மறந்துட்டேன்.” என்றாள் ஸ்ரீ.

“சரி எங்க?” என்றாள்மிருதி.

“மூணார்” என்றாள் ஸ்ரீ.

“அமுதன் கிட்ட சொல்லிட்டியா?’ என்றாள் மிருதி.

“சொல்லிட்டேன். அவன்தான் உங்கக்காகிட்ட சொல்லிட்டு பெர்மிஷன் வாங்கிட்டு போன்னு சொல்லிட்டான்.” என்றாள் ஸ்ரீ.

“ஸ்ரீ பார்த்து பத்திரமா போகணும். புது இடம் யாரையும் நம்பக்கூடாது. தினமும் ரெண்டு தடவை போன் பண்ணனும். சரியா?” என்றாள் மிருதி.

“சரிக்கா.. உங்களை தனியா விட்டுட்டு போக முதல்ல யோசனையா இருந்தது. ஆனா இப்போ நீங்க தனியா இல்லை. கூட ஒரு ஆள் துணைக்கு இருக்கிறதால தான் போறேன்” என்றாள் ஸ்ரீ.

“நான் பார்தூக்குறேன் ஸ்ரீ. நீ போய்ட்டு வா.” என்றாள் மிருதி.

“சரிக்கா” என்று மிருதியை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள் ஸ்ரீ.

எதிரில் மிஷாவுடன் விளையாடிக்கொண்டிருந்த தீரனுடம் வந்தவள்.

“நான் ஒரு வாரம் இருக்க மாட்டேன். உங்களால அக்காவ பார்த்துக்க முடியுமா? இல்லை அமுதனை வர சொல்லடா?” என்றாள் ஸ்ரீ.

“நான் பார்த்துக்குறேன். இப்போ எனக்கு அதை விட முக்கியம் எதுவுமில்லை” என்றான் மிருதியை பார்த்துகொண்டே.

மிருதி உள்ளே சென்றுவிட, “மாமா அக்காவை பத்திரமா பார்த்துகோங்க. உங்க ரெண்டு பேருக்கும் பேசுறதுக்கு இப்போ தனிமை தேவை அதான் நான் வெளிய போறேன். உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்” என்றாள் மெதுவாக.

‘சரி’ என்று தலையாட்டி சிரித்தான் தீரன்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 23

மிருதி கேப்க்கு கிளம்ப மிஷாவும் தான் வருவதாக அடம் பிடித்தாள்.

"மிஷா குட்டி அம்மா சொன்னா கேட்பல்ல. நீ வீட்ல இருடா." என்றாள்.

"இல்ல. நான் வீட்டுல இருக்க மாட்டேன். உன்கூட தான் வருவேன்" என்றாள் மீண்டும் மிதிஷா.

தன் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த தீரன், அம்மா மகளின் பேச்சை கேட்டு சிரித்து கொண்டிருந்தான்.

"மிஷாகுட்டி எதுக்கு அம்மாகிட்ட சண்டை போடறிங்க?" என்று மகளுருகில் வந்து மகளை தூக்கி கொண்டான்.

"அப்பா நான் அம்மாகூட போகணும்." என்றாள் மிஷா.

"இங்க பாரு மிஷா. அம்மாக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு. நீ அங்க வந்தா உன்னை அம்மாவால பார்த்துக்க முடியாது. அதனால நீ உங்கப்பா கூட இரு. அம்மா மதியம் வந்துடுவேன்." என்றாள் மிருதி.

"என்னாச்சு மிரு. உடம்புக்கு என்ன? டாக்டர் கிட்ட போகலாமா?" என்று பதறி அவளிடம் நெருங்கினான்.

"போதும் உங்க அக்கறைக்கு. உங்க அக்கறையை உங்க பொண்ணோட நிறுத்திக்கோங்க எனக்கு வேணாம். இத்தனை நாள் எப்படி இருந்தேனோ அப்படியே இருந்துக்குறேன்." என்றாள் கோபமாக மிருதி.

"மிரு ப்ளிஸ். நான் பண்ணது தப்பு தான். ஆனா நான் எதுவும் வேணும்னே செய்யலை. அன்னைக்கு இருந்த என்னோட மனநிலைல தான் அப்படி நடந்துருச்சு. அதுக்காக நான் பண்ணது தப்பு இல்லைன்னு சொல்லலை. தப்பு தான். ப்ளிஸ் என்னை மன்னிச்சு எனக்காக ஒரு வாய்ப்பு தரக்கூடாதா?" என்றான் தீரன் உடைந்து கெஞ்சும் குரலில்.

மனம் உருகினாலும், "இப்போ இதை பற்றி குழந்தை முன்னாடி எதுவும் பேச வேண்டாம். எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம். எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்பனும்" என்றாள் மிருதி.

"இன்னைக்கு லீவ் கேட்டா அமுதன் கொடுக்கமாட்டாரா என்ன? லீவ் சொல்லிட்டு வீட்ல ரெஸ்ட் எடுக்கலாம்ல?" என்றான் தீரன்.

"அமுதன்கிட்ட லீவ் கேட்க நான் அவர்கிட்ட வேலை செய்யலை. இது என்னோட கேப் நான் தான் பார்த்துக்கனும்" என்றாள் மிருதி.

சொந்தமாக மிருதி தொழில் செய்கிறாள் என்று தற்பொழுது தான் தெரிவதால் வாயடைத்து போனான்.

"அப்போ சரி. நாங்களும் வரோம்" என்றான் தீரன்.

"இல்ல வேணாம்" என்றாள் மிருதி.

"உனக்கு ரெண்டு சாய்ஸ் தான். ஒன்னு நீ வீட்ல ரெஸ்ட் எடு. இல்ல நாங்களும் வரோம்." என்றான் தீரன்.

எதுவும் செய்யமுடியாதென்ற நிலையில் தன் வீழ்ச்சியை ஏற்றுக்கொண்டு. "சரி வாங்க" அவர்களையும் கூட்டி சென்றாள்.

"ஹை ஜாலி போலாம்?" என்று கை தட்டி குதித்தது குழந்தை.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும் மிருதி வேலை செய்து கொண்டிருக்க, தீரன் லேப்டாப்பில் தன் வேலையில் மூழ்கியிருக்க, மிஷா அங்கே விளையாடி கொண்டிருந்தாள்.

திடீரென்று மயக்கம் வருவதை போல் இருக்க மிருதி ஒரு நொடி சாய்ந்து அமைதியாக கண் மூடினாள்.

தீரன் தன் வேலையில் இருந்தாலும் அவ்வபொழுது அவனின் பார்வை மிருதியின் மேல் இருந்தது.

அவள் உடல்நிலையை பற்றி அமுதன் கூறி இருந்ததால் அவனுக்குள் ஒரு எச்சரிக்கை உணர்வு இருந்து கொண்டே இருந்தது.

மிருதியின் முகமாற்றத்தை கண்டவன் உடனே அவளிடம் நெருங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் கழித்து சாய்ந்த நிலையிலேயே விழிகள் மூடிருக்க, கைகள் மட்டும் தானாக தன் வயிற்றை அழுத்தி பிடித்தது.

வேகமாக எழுந்து அவளிடம் ஓடியவன். "மிரு என்னம்மா பண்ணுது?" என்று அவளின் தோளை தொட்டு உலுக்கினான்.

"விடுங்க என்னை" என்று அவன் கைகளை தட்டி விட்டாள்.

சுருக்கென்று தைத்தாலும் கோபமாக, "உன் கோபத்தை காட்ட இது நேரமில்லை" என்று முறைத்தான்.

பெருமூச்சு விட்டவன், "சாரி டா. மிரு நாம வீட்டுக்கு போகலாம்" என்று அவளை கைத்தாங்கலாக கூட்டி சென்றான்.

அவனிடம் மேலும் வாதிட தெம்பு இல்லாததால் மிருதியும் கிளம்பினாள்.ஆனால் வீட்டிற்கு செல்லும் முன்பே வழிலேயே வலியில் துடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

தீரனுக்கு மிகவும் கவலையாக இருக்க மருத்துவமனை செல்லலாம் என்று கூற மிருதி வேண்டாம் வீட்டுக்கு செல்லலாம் என்று ஆரம்பித்துவிட்டாள்.

வீட்டிற்கு வந்தவுடன் அறையில் சென்று மெத்தையில் விழுந்தவள் வலியில் மிகவும் துடிக்க என்ன செய்வது என்று தெரியாமல் அமுதனுக்கு பொன் செய்தான்.

"பயபடாதீங்க. அவளுக்கு மாத்திரை கொடுங்க. வெந்நீர் ஒத்தடம் கொடுங்க நான் வந்துட்டே இருக்கேன்." என்று போனை வைத்துவிட்டான்.

அமுதன் கூறியபடி மாத்திரையை கொடுத்து, வெந்நீர் ஒற்றடம் கொடுத்தான் தீரன். முடியாத நிலையில் அவனின் உதவியை வேண்டாமென்று மிருதியால் மறுக்க நினைத்தாலும் அவனின் கெஞ்சலான பார்வையால் மறுக்க முடியவில்லை.

அரைமணி நேரம் கடந்திருக்க வலி குறைந்து உறங்க, அமுதன் பதட்டத்துடன் வீட்டினுள் நுழைந்தான்.

"இப்போ எப்டி இருக்கு? தூங்குறாளா?" என்றான் கவலையாய் அமுதன்.

எதுவும் பேசாமல் கண்கள் பனிக்க அமுதனை கட்டிக்கொண்டான் தீரன்.

"தீரன் என்னாச்சு? தி நல்லா இருக்கா இல்ல?" என்றான் நெற்றி சுருக்கி.

"நல்லா இருக்கா அமுதன்." என்று அமுதனின் கைகளை பற்றி கொண்டு "ரொம்ப தாங்க்ஸ் அமுதன். நான் இல்லாத நேரத்துல நீங்க ரெண்டு பேரும் மிருவ பத்திரமா பார்த்துக்கிட்டு இருக்கிங்க. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை" என்று கதறினான்.

"சரி விடுங்க தீரன். அதான் நீங்க வந்துட்டிங்க இல்ல. எல்லாம் சரியாகிடும். அவ மாத்திரை எடுத்துகிட்டு இருக்கா. நிச்சயமா இன்னும் கொஞ்ச நாள்ல சரி ஆகிடும்னு டாக்டர் சொல்லிருக்காங்க." என்றான் அமுதன்.

"ச்சே... நான் எவ்ளோ மோசமானவன். என்னால தான் அவளுக்கு இப்படி நடந்திருக்கு. எனக்கு இதுக்கு மன்னிப்பே கிடையாது" என்றான் தீரன்.

"தீரன் நடந்தது நடந்திருச்சு. அதுக்கு நீங்களும் மூணு வருஷம் உங்க மகளை பார்க்காம இருந்துட்டிங்க. இனி நடக்க வேண்டியதை பார்ப்போம்" என்றான் அமுதன்.

"நான் அவளுக்கு செஞ்ச கொடுமைக்கு எனக்கு மன்னிப்பு கிடைக்குமான்னு தெரியலை அமுதன்" என்றான் தீரன்.

"கண்டிப்பா... அவ மனசுல நீங்க மட்டும் இருக்கீங்க. சொல்ல போனா நீங்க தான் அவளோட உயிரே... ஆனா, அதை வெளிய சொல்ல மாட்டா. மனசுக்குள்ளயே வச்சி மறைச்சிடுவா. அழுத்தக்காரி." என்றான் அமுதன்.

"அவ என்னை மன்னிக்க என்ன வேணும்னாலும் செய்ய தயாரா இருக்கேன்" என்றான் தீரன்.

"முதல்ல பொறுமையா இருங்க. நிச்சயமா வார்த்தையால உங்களை கொல்வா. என்னா அவளோட வலிய அப்படி வெளிபடுத்துவா. நீங்க தான் கூடவே இருக்கணும்" என்றான் அமுதன்.

"அப்பா அம்மா கூப்பிட்றாங்க" என்று மிஷா சொல்ல இருவரும் உள்ளே ஓடினர்.

அவளின் அருகில் சென்ற அமுதன்.

"தி இப்போ எப்படி இருக்கு? ஆர் யு பீல் பெட்டர்?" என்றான் அமுதன் கவலையாய்.

அவன் நிற்க வேண்டிய இடத்தில் அமுதன் இருக்க, சுருக்கென்று கோபம் வந்தது தீரனுக்கு.

'முட்டாள் அவளோட நண்பன் அவன். நீ இல்லாதப்ப கண்ணும் கருத்துமா அவங்க தான் கூட இருந்து கவனிச்சிட்டு இருந்திருக்கான். அப்போ எல்லாம் எங்க போன நீ ?' என்றது.

"இப்போ பரவால்ல அமுதன்." என்றாள் மிருதி.

"நான் அப்போவே இதுக்கு தான் யோசிச்சேன் ஸ்ரீய அனுப்ப வேண்டாம்னு. இரு உடனே அவளுக்கு ஃபோன் பண்ணி வர சொல்றேன்" என்று தன் போனை எடுத்தான் அமுதன்.

"டேய் அதெல்லாம் வேணாம். அவளே இப்போ தான் அதிசயமா போய்ருக்கா. அதான் அவர் இருக்கார் இல்ல. அவ இருந்துட்டு வரட்டும்" என்றாள் மிருதி.

அமுதனின் இதழில் புன்னகை மலர்ந்தாலும் உடனே மறைத்து , "யாரு இவரா? மூணு வருசத்துக்கு முன்னாடி உன்னை விட்டுட்டு போனவர் தான? இப்போ திடீர்னு வந்து நின்னா இவரால எல்லாம் உன்னை பார்த்துக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இல்ல" என்றான் அமுதன்.

"அமுதன் தேவை இல்லாம் எதுக்கு இப்போ அதை பத்தி எல்லாம் பேசிக்கிட்டு. அவர் தான் இருக்கார்ல பார்த்துப்பார்" என்றாள் மிருதி.

"என்னவோ நீ தான் சொல்ற" என்று அறையை விட்டு வெளியேறினான்.

அவன் பின்னே வந்த தீரனை பார்த்து சிரித்தவன்.

"நான் தான் சொன்னேன்ல? அவளால யாருக்கிட்டயும் உங்களை விட்டு தரமுடியாது. பார்த்திங்கல்ல? உங்களை திட்டினதுக்கு எப்படி சப்போர்ட்டுக்கு வரான்னு?' என்றான் அமுதன்.

"இனி அவ மனசுல இருக்கிறதை வெளிய கொண்டு வரது உங்க பொறுப்பு. சரி நான் மிஷாவை கூட்டிட்டு போறேன். எனக்கு நாளைக்கு லீவு தான் நான் பார்த்துக்குறேன். ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க" என்று கிளம்பினான்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 24:

இரவு சாப்பிட மிருதியை எழுப்ப தூக்கத்திலிருந்து எழுந்தவள் அவனின் கையில் தட்டை பார்த்துவிட்டு "எனக்காக நீங்க இதை செய்ய வேண்டாம். உங்க பொண்ணுகூட டைம் ஸ்பெண்ட் பண்ணதானே வந்திங்க. அதைமட்டும் பாருங்க." என்று மெத்தையில் இருந்து இறங்க போனவளை தடுத்து அமர வைத்தான்.

"எதுக்கு பயபட்ற மிரு?" என்று அவளின் நெற்றியில் இருந்த கற்றை முடியை தன் ஒற்றைவிரலால் தீண்டியபடி ஒதுக்கிவிட மிருதியின் மேனியில் ஒரு தாக்கம் தென்பட்டதை உணர்ந்து மலர்ந்தான்.

"ஹ்ம்ம் நான் எதுக்கு பயப்படப்போறேன்? அதெல்லாம் ஒன்னுமில்லை" என்றாள் வேறெங்கோ பார்த்தபடி.

"அப்படியா?" என்று கேட்டவன் தன் ஆட்டகாட்டி விரலால் அவளின் முகத்தில் கோலமிட ஒரு நொடி திணறியவள் அதன்பிறகு, "இல்ல நீங்க எனக்காக வரலை" என்று அவனின் கரத்தை தட்டிவிட்டு முகம் திருப்பினாள் கண்ணீரை அடக்க.

"நான் எதுக்காக வந்துருக்கேன்னு உனக்கு தெரியாது இல்ல?" என்றான் அழுத்தமாய்.

பதில் எதுவும் கூறாமல் மிருதி வேறெங்கோ பார்த்து கொண்டிருக்க.

"உனக்கு எங்க என்கிட்ட உன்னை முழுசா இழந்துடுவியோன்னு பயம் அதான் பயபட்ற?" என்று சிரித்தான்.

மின்னல் தாக்க கட்டுண்டவள் போல் ஒரு நொடி அமைதியாக இருந்தவள். "அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. நீங்களா ஏதாவது ஒரு கற்பனை பண்ணிகாதிங்க" என்று முறைத்தாள்.

"மிரு உனக்கு உண்மையாவே புரியலையா? இல்லை புரிஞ்சும் புரியாத மாதிரி என்னை சோதிக்கிறியா? நீ இல்லாத ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நரகமா இருக்குடி. எனக்கு பொண்ணு இருக்கான்னு தெரியாமயே உன்னை பார்த்தா போதும்னு ஓடி வந்தேன். எனக்கு மகள் இருக்கான்னு தெரிஞ்சவுடனே என் சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும் அளவே இல்லை. சந்தோஷம் எனக்கு மகள் மனைவி இருக்காங்கன்னு.. துக்கம் ஒவ்வொரு புருஷனும் ஆசைப்பட்ற மாதிரி என் மக பிறக்கும்போது உன்கூட இல்லாம போனதுக்கு நானே காரணமாகிட்டேனேன்னு. இப்போக்கூட உன்னோட இருக்கலாம்ன்ற ஒரு பேராசைல தான் என் பொண்ணை காரணம் காட்டி உன்னை பார்த்துக்கிட்டே இருந்தாக்கூட போதும்னு வந்து இருக்கேன். நான் என்ன பண்ணா உனக்கு என்மேல கோபம் போகும்?" என்றான் தீரன்.

அவள் எதுவும் பேசாமல் விழிகளில் நீரோடு முகத்தை திருப்பிக்கொண்டாள்.

"மிரு பிளீஸ். எனக்கு நீ வேணும். நம்ம பொண்ணு வேணும். உங்கக்கூட நான் கடைசி வரைக்கும் இருக்கணும்." என்றான் தீரன்.

"எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க" என்றாள் மிருதி.

"சரி. ஆனா அதுவரைக்கும் உன்னை டிஸ்டர்ப் பண்ணாம உன்கூடயே இருக்கேன். பிளீஸ்" என்றான் தீரன்.

"சரி" என்று அமைதியாகினாள்.

"உனக்கு மதியம் சாப்பிட என்ன வேணும்?" என்றான் தீரன்.

"இல்ல தீரன்... " என்று நிறுத்தியவள் அவனை பார்க்க, அவனும் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.

"இல்ல... நான் ஆபீஸ் போகணும்" என்றாள் மெல்ல சிரித்து.

"ஒரே ஒரு தடவை .." என்று அவளை பார்க்க.

"என்ன ஒரு தடவை?" என்றாள் படபடக்கும் நெஞ்சோடு.

"அது .." என்று இழுத்தவன் அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டு உச்கிமுகர்ந்தான்.

"ஐ ஆம் சாரி. நான் பண்ண எல்லாத்துக்குமே" என்றான் கண்கள் மூடி.

இந்த நாள் கனவில் கூட நடக்காது என்று எண்ணி இருந்தவளுக்கு நிஜத்தில் நடக்க ஆனந்தம் தாளவில்லை. இருந்தாலும் தான் பட்ட துயரத்திற்கும் மனா உளைச்சலுக்கு இது போதாது என்று எண்ணினாள்.

தீரன் ஒரு சில நிமிடங்கள் தன்னை மறந்து நின்றிருக்க, அவனை தள்ளிவிட நினைத்தவளின் விழிகளில் தன் மகள் நெருங்குவதை கண்டு அமைதி காத்தாள்.

"அப்பா அம்மா" என்று குரல் கேட்க திடுக்கிட்டு திரும்ப, அங்கே இடையில் கரம் வைத்து முறைத்து கொண்டு நின்றிருந்தாள் மிஷா.

"என்னம்மா?" என்றான் தீரன்.

"நானு" என்று தன் கரங்களை விரிக்க புன்னகை தானாக இதழ்களில் மலர்ந்து மிதிஷாவை அள்ளி அணைத்து கொண்டான் தீரன்.

"ஐ ல யு செல்லக்குட்டி." என்று மீஷாவின் நெற்றயில் முத்தம் கொடுத்தான்.

"ஐ லப் யு தூ பா" என்றது தன் மழலை மொழியில் தந்தையை கட்டியணைத்து.

"சோ கியூட்." என்று மிஷாவின் நெற்றியில் செல்லமாய் மோத.

உடனே குழந்தை கண்களை சுருக்கி கலகலவென சிரித்தது.

"அப்பா" என்று கூப்பிடும் மகளிடம் திரும்பியவன்.

"என்னம்மா?" என்றான் வாஞ்சையாய்.

"அப்பா அம்மாக்கு?" என்றது கேள்வியாய்.

நெற்றி சுருக்கி, "என்னது அம்மாக்கு குட்டிமா?" என்றான் தீரன்.

"அது எதக்கு பக் கொதித்திங்க.. அதுபோல அம்மாக்கு கொதுங்க." என்றது குழந்தை.

"என்ன சொல்றா?" என்று ஒன்றும் புரியாமல் மிருதியை தீரன் பார்க்க, தங்கள் மகளின் வார்த்தைகளை கேட்டு உள்ளுக்குள் முகம் சிவந்தவள் எதுவும் பேசாமல், "எனக்கு தெரியலை முடிஞ்சா கண்டுபிடிங்க" என்று நகர்ந்தாள்.

'இவ எதுக்கு இப்படி வெட்கபட்றா? அப்போ மிசா ஏதோ ஏடாகூடமா கேட்ருக்கா போல?' என்று தனக்குள் யோசித்தவன், "என்ன மிரு கேட்குறா பாப்பா?" என்றான் மீண்டும்.

திரு திருவென முழித்து, "அது.. அது... அவளுக்கு வேற வேலை இல்ல. வாங்க போகலாம்" என்றாள் மிருதி.

"ஒண்ணுமில்லாம தான் நீ இவ்ளோ வெட்கபட்றியா?" என்றான் தீரன் விடாமல்.

'மானங்கெட்ட மனமே! நீ இப்போ கோபமா இருக்கணும். ஹம் இவான் கண்டுபிடித்துவிட்டானே?' என்று மனதை நொடித்தவள், "இப்போ வர போறிங்களா இல்லையா?" என்றாள் மிருதி.

"எங்க போக போற?" என்றான் தீரன்.

"வேற எங்க? கடைக்கு தான்" என்றாள் மிருதி.

"என்னது கடைக்கா? அமுதன் இன்னும் நாலு நாளைக்கு நீ கடை பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லிருக்கார்." என்றான் தீரன்.

தலையிலடித்து கொண்டவள். "இவனுக்கு இதே வேலை. நாம போகலாம்" என்றாள் மிருதி.

அவளின் போன் திடீர்ன்னு அடிக்கவே எடுத்து, "டேய் இதெல்லாம் ஓவரா இல்ல உனக்கு? இன்னைக்கு நல்லா தானே இருக்கேன். அப்புறம் எதுக்கு வரக்கூடாதுன்னு சொல்ற? எனக்கு முக்கியமான வேலை இருக்கு அமுதன்?" என்றாள் மிருதி.

"என்ன வேலையாய் இருந்தாலும் பரவால்ல நான் பார்த்துக்குறேன். நீ இங்க வந்த அப்புறம் உன்னை தூக்கிட்டு போய் ரூம்ல அடைச்சிடுவேன்." என்றான் நக்கலாய் சிரித்து.

"எருமை.. எருமை.." என்று திட்டியவள்.

"சரி வரலை. போதுமா?" என்றாள்.

"தாங்க் யு ஸ்வீட் ஹார்ட்" என்றான் அமுதன்.

"வந்தேன் பல்லை கழட்டி கைல கொடுத்திருவேன். ஸ்வீட் ஹார்ட்டுன்னு கூப்பிடேன்னா?" என்றாள் எச்சரிக்கும் தொனியில்.

"ஏன் உங்க மாமா தான் கூப்பிடனுமோ?" என்று அவளை சீண்டினான்.

"போடா எருமை மாடு. குரங்கு" என்று வாய் திட்டினாலும் முகம் குங்குமமாய் மலந்தது மிருதிக்கு.

'இப்போ இவ எதுக்கு வெட்கபட்றா?' என்று யோசித்த தீரன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43

தீயாய் சுடும் என் நிலவு 25:​



"நிகரா தன் நிகரா... " என்று தன் மொபைல் அடிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தவன் சுற்றி முற்றி பார்த்து அப்பொழுது தான் உணர்ந்தான்.

'ச்செ! எல்லாமே கனவா? ... அப்போ மிருதிக்கு நான் எதுவும் செய்து கொடுக்கலையா சாப்பிட? மிதிஷா முத்தம் கேட்கலையா? எல்லாம் நிஜமா நடந்த மாதிரியே இருந்ததே? நிஜத்துல நடந்தா எவ்ளோ நல்லா இருக்கும்?' என்று எண்ணிக்கொண்டவன் மணியை பார்த்தான் ஒன்பது என்று காட்டியது.

"நைட் மிரு தூங்குறாளான்னு அடிக்கடி எழுந்து பார்த்ததுல தூக்கம் வராம காலைல நாலு மணிக்கு தான் தூக்கம் வந்துச்சு" என்று தனக்கு தானே கூறி கொண்டவன் காலை கடன்களை முடித்து நேராக சமையலறை சென்றான்.

"பாவம் பசிக்கும். எங்க இவளை காணமே?' என்று அங்கும் இங்கும் நோட்டமிட மிருதி இல்லாததால், 'சரி சமைச்சாவது வைப்போம்' என்று உள்ளே சென்றான். நாசியில் சமையலின் மனம் நுழைந்தது. அனைத்து சமையலும் முடித்திருந்தது.

"எல்லாத்தையும் செஞ்சிட்டு இருக்காளே? இவளை யாரு இதெல்லாம் செய்ய சொன்னது?" என்று புலம்பிக்கொண்டே அவளை தேடினான்.

"அங்கயும் இல்லையே?" என்றவன் விழிகளில் டி.வி ஸ்டாண்டில் இருந்த காகிதம் பட்டது. அதில், "நான் கடைக்கு கிளம்புறேன். நீங்க சாப்பிடுங்க. ஹிம் சொல்ல மறந்துட்டேன். நேத்து அமுதன் தேவையில்லாம அவன் வேலையை விட்டுட்டு என்கூட இருக்க கூடாதுன்னு தான் நீங்க பார்த்துப்பிங்கன்னு சொன்னேன். ஸோ, நீங்க வேற எதுவும் நினைச்சுக்காதீங்க. உங்களை மன்னிக்கிற எண்ணம் இப்போதைக்கு இல்ல. உங்க வேலையை போயி பாருங்க" என்று இருந்தது.

'ரொம்ப அழுத்தகாரி தான் நீ. எங்க இங்க எங்கூட இருந்தா மனசு மாத்த ட்ரை பண்ணுவேன்னு ஓடிட்டியா? இருந்தாலும் விடமாட்டேன் மிரு டார்லிங்' என்று சிரித்து கொண்டு தான் வேலையை கவனிக்க சென்றான்.

நேரம் கடந்துகொண்டே இருந்தது. தீரனுக்கும் அவன் வேலைகள் சரியாக இருக்க மதிய உணவை மறந்து போனான்.

வீடு திரும்ப மணி ஏழு ஆயிற்று. உள்ளே நுழையும் போதே மிருதியின் சிரிப்பொலி அவன் காதில் தேனாய் பாய்ந்தது.

"தி. பிளீஸ் எனக்காக இந்த ஒரு தடவை மட்டும். செல்லம் இல்ல." என்ற அமுதனின் குரல் கேட்டவுடன் திடுக்கிட்டாலும் அவனின் வார்த்தைகளில் தீ பற்றியது தீரனுக்கு.

"நோ வே அமு. பிளீஸ் நகர்ந்து போ அந்த பக்கம்" என்றாள் மிருதி விளையாட்டு தனம் கலந்த கண்டிப்புடன்.

"பிளீஸ் தி" என்றான் கொஞ்சலாய் அமுதன் 'இதுக்கு மேல நிற்க முடியாது' என்று நுழைந்த தீரனின் விழிகள் அவர்களை தேட.

"அப்பா!" என்று வேகமாய் ஓடி வந்து அவன் கால்களை கட்டி கொண்ட மிதிஷாவால் அவர்களின் கவனம் தீரனிடம் திரும்பியது.

"வாங்க தீரன். இங்க பாருங்க" என்று கையில் வைத்திருந்த ஐஸ்கிரீம் கப்பை காட்டினான்.

"உலகத்துலயே ஐஸ்க்ரீம் வேணாம்னு சொல்ற ஒரே ஆள் உங்க பொண்டாட்டி தான். படிக்கும் போதுலர்ந்து இப்போ வரைக்கும் இவளுக்கு ஐஸ்கிரீம் மட்டும் பிடிக்க மாட்டேங்குது. எவ்ளோ நேரம் நானும் டார்லிங்கும் கெஞ்சுறோம். அழுத்தக்காரி ஒரு வாய்க்கூட வேணாம்ன்றா" என்றான் அமுதன்.

நிம்மதி பெருமூச்கு விட்டான் தீரன்.

"சரி கிளம்புறேன். எனக்கு நேரம் ஆகுது. நீங்க சாப்பிடுங்க" என்றவன் "இன்னொரு ஐஸ் கிரீம் பிரிஜ்ல இருக்கு" என்று கிளம்ப தயாரானான் அமுதன்.

"ஸ்ரீ பேசினாளாடா?' என்றாள் மிருதி.

"ஹூம். பண்ணா. போன் பண்ணாகூட என்னை பத்தியா கேக்குறா? உன்னையும் என் டார்லிங் பத்தி தான் பேசுறா. அவளுக்கென்ன ஜாலியா இருக்கா" என்று திரும்பினான்.

"பேபி" என்றது குழந்தை.

"யெஸ் பேபி" என்றான் இவனும்.

"நாதும் வதேன்" என்றது குழந்தை.

"ஹை. ஜாலி. அப்போ நைட் நாம கார்ட்டூன் படம் பார்க்கலாம்." என்று திரும்பியவன், "சரி! நாங்க லவர்ஸ் ரெண்டு பேரும் கிளம்புறோம்" என்றான் அமுதன்.

"அதெல்லாம் வேணாம். அவன் டைர்யர்டா இருப்பான். நீ அங்க போனா ரெண்டு பேரும் தூங்காம நைட் முழுக்க டி.வி பார்ப்பிங்க. ஒழுங்கு மரியாதையா ரெண்டு பேரும் போய் தூங்குங்க" என்றாள் மிருதி இடையில் கரம் வைத்து.

இவர்களின் இந்த செல்ல சண்டைகளையே ரசித்து சிரித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் தீரன்.

"இல்ல மா. பிளீது .. நா. போதேன்.." என்றது குழந்தை.

"நோ!" என்றாள் மிருதி.

"மா" என்றது குழந்தை கெஞ்சலாய்.

"தீ! இதெல்லாம் ரொம்ப ஓவர். என் டார்லிங் எவ்ளோ நேரமா கெஞ்சுறா? நீ முடியாதுன்னு சொல்ட்ற." என்று மிதிஷாவிடம் திரும்பியவன்.

"டார்லிங்! அம்மாகிட்ட நான் சொல்லிட்டேன். நாம போலாம்" என்று அவளை தூக்கி கொண்டு சென்றான்.

"டேய்! அமு.. நில்லு. ரெண்டுமே ஒண்ணா நம்பர் திருடுங்க. போக வேணாம்னு சொல்றேன். மீறி கூட்டிட்டு போனா என்ன அர்த்தம்?" என்றாள் மிருதி.

"ஹிம்.. உன்கிட்ட சொல்லியாச்சு எங்களுக்கு உன் பெர்மிஷன் தேவையில்லைன்னு அர்த்தம்" என்று வெளியேறினான் அமுதன்.

"வாங்க வாங்க. ரெண்டு பேரும் இங்க தானா வரணும். வாசப்படில காலை வைங்க. உடைச்சிட்றேன்" என்றாள் மிருதி.

வெளியே சென்ற அமுதன் மீண்டும், "போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு சந்தேகம்?" என்றவன்.

"உனக்கு ஐஸ்கிரீம் பிடிக்காது. ஆனா, என் டார்லிங்கு ஐஸ் க்ரீம்னா உயிர். எப்படி?" என்றவுடன் அவளின் விழிகள் சடாரென தீரனிடம் நின்றது.

"ஒஹ்! ஒஹ்! .. அப்படி போகுதோ கதை. சரி எங்களுக்கு நிறைய இருக்கு பேச. பை." என்று வெளியேறினான்.

ஒரு ஸ்பூன் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டே மிருதியை நோக்கி நடந்தான் தீரன்.

"உடம்பு எப்படி இருக்கு மிரு?" என்றான் தீரன்.

"ஹ்ம். என்னை மிருதின்னு கூப்பிடுங்கன்னு ..." என்று முடிக்கும் முன் ஐஸ்க்ரீமுடன் அவள் இதழ்களை சிறைபிடிக்க, ஒரு நொடி விழிகள் விரிய அதிர்ந்தவள் மறுநொடி அவனை தன் பலம் கொண்ட மட்டும் தள்ளிவிட்டவள் இதழ்கள் ஐஸ்கிரீமின் சுவை தொண்டைக்குள் இறங்கியது.

தீரனே எதிர்பார்க்கா வண்ணம் மிருதியின் கரம் அவனின் கன்னத்தில் பதிந்திருந்தது.

"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? காணாம போன பொண்டாட்டி எதுக்கு போனான்னு கூட தெரியாம இத்தனை வருஷமா இருந்துட்டு இன்னைக்கு திடீர்னு வந்து என் கூட வாழுன்னு சொன்னா உடனே வந்துரனுமா? என் பொண்ணு... நம்ம பொண்ணு பிறந்ததைக்கூட உங்ககிட்ட சொல்லாம இருந்துருக்கேன்னா எவ்ளோ என்னை காயப்படுத்துருப்பிங்கன்னு யோசிச்சு பாருங்க. நீங்க செஞ்சதையும் உங்க வார்த்தைகளையும் என் உயிர் இருக்கிற வரைக்கும் மறக்கமுடியாது. ஆறாத ரணமாவே இருந்துட்டு இருக்கு" என்ற மிருதி அவன் பேசும் முன் விருட்டென்று தன் அறைக்குள் நுழைந்து கதவை படாரென்று சாத்தினாள்.

என்ன நடந்தது என்று அவன் புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் கடந்திருந்தது.

"சே... முட்டாளாடா நீ!" என்று சோபாவில் தலையில் கைவைத்து அமர்ந்தான்.

"இன்னும் நிறைய பொறுமை வேணும் உனக்கு அப்படி என்ன தான் நடந்திருக்கும்?" என்று தலையில் கைவைத்து கொண்டான்.

'அதான் தெரியலையே? ஆனா என்னவோ நடந்திருக்கு?' என்று உள் மனது கூற, 'போதும் ஏற்கனவே நான் நொந்து போயிருக்கேன்.' என்றான்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 26:

"நிகரா தன் நிகரா..." என்று தன் மொபைல் அடிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தவன் சுற்றி முற்றி பார்த்து அப்பொழுது தான் உணர்ந்தான்.

'ச்செ! எல்லாமே கனவா? ... அப்போ மிருதிக்கு நான் எதுவும் செய்து கொடுக்கலையா சாப்பிட? மிதிஷா முத்தம் கேட்கலையா? எல்லாம் நிஜமா நடந்த மாதிரியே இருந்ததே? நிஜத்துல நடந்தா எவ்ளோ நல்லா இருக்கும்?' என்று எண்ணிக்கொண்டவன் மணியை பார்த்தான் ஒன்பது என்று காட்டியது.

"நைட் மிரு தூங்குறாளான்னு அடிக்கடி எழுந்து பார்த்ததுல தூக்கம் வராம காலைல நாலு மணிக்கு தான் தூக்கம் வந்துச்சு" என்று தனக்கு தானே கூறி கொண்டவன் காலை கடன்களை முடித்து நேராக சமையலறை சென்றான்.

"பாவம் பசிக்கும். எங்க இவளை காணமே?' என்று அங்கும் இங்கும் நோட்டமிட மிருதி இல்லாததால், 'சரி சமைச்சாவது வைப்போம்' என்று உள்ளே சென்றான். நாசியில் சமையலின் மனம் நுழைந்தது. அனைத்து சமையலும் முடித்திருந்தது.

"எல்லாத்தையும் செஞ்சிட்டு இருக்காளே? இவளை யாரு இதெல்லாம் செய்ய சொன்னது?" என்று புலம்பிக்கொண்டே அவளை தேடினான்.

"அங்கயும் இல்லையே?" என்றவன் விழிகளில் டி.வி ஸ்டாண்டில் இருந்த காகிதம் பட்டது. அதில், "நான் கடைக்கு கிளம்புறேன். நீங்க சாப்பிடுங்க. ஹிம் சொல்ல மறந்துட்டேன். நேத்து அமுதன் தேவையில்லாம அவன் வேலையை விட்டுட்டு என்கூட இருக்க கூடாதுன்னு தான் நீங்க பார்த்துப்பிங்கன்னு சொன்னேன். ஸோ, நீங்க வேற எதுவும் நினைச்சுக்காதீங்க. உங்களை மன்னிக்கிற எண்ணம் இப்போதைக்கு இல்ல. உங்க வேலையை போயி பாருங்க" என்று இருந்தது.

'ரொம்ப அழுத்தகாரி தான் நீ. எங்க இங்க எங்கூட இருந்தா மனசு மாத்த ட்ரை பண்ணுவேன்னு ஓடிட்டியா? இருந்தாலும் விடமாட்டேன் மிரு டார்லிங்' என்று சிரித்து கொண்டு தான் வேலையை கவனிக்க சென்றான்.

நேரம் கடந்துகொண்டே இருந்தது. தீரனுக்கும் அவன் வேலைகள் சரியாக இருக்க மதிய உணவை மறந்து போனான்.

வீடு திரும்ப மணி ஏழு ஆயிற்று. உள்ளே நுழையும் போதே மிருதியின் சிரிப்பொலி அவன் காதில் தேனாய் பாய்ந்தது.

"தி. பிளீஸ் எனக்காக இந்த ஒரு தடவை மட்டும். செல்லம் இல்ல." என்ற அமுதனின் குரல் கேட்டவுடன் திடுக்கிட்டாலும் அவனின் வார்த்தைகளில் தீ பற்றியது தீரனுக்கு.

"நோ வே அமு. பிளீஸ் நகர்ந்து போ அந்த பக்கம்" என்றாள் மிருதி விளையாட்டு தனம் கலந்த கண்டிப்புடன்.

"பிளீஸ் தி" என்றான் கொஞ்சலாய் அமுதன் 'இதுக்கு மேல நிற்க முடியாது' என்று நுழைந்த தீரனின் விழிகள் அவர்களை தேட.

"அப்பா!" என்று வேகமாய் ஓடி வந்து அவன் கால்களை கட்டி கொண்ட மிதிஷாவால் அவர்களின் கவனம் தீரனிடம் திரும்பியது.

"வாங்க தீரன். இங்க பாருங்க" என்று கையில் வைத்திருந்த ஐஸ்கிரீம் கப்பை காட்டினான்.

"உலகத்துலயே ஐஸ்க்ரீம் வேணாம்னு சொல்ற ஒரே ஆள் உங்க பொண்டாட்டி தான். படிக்கும் போதுலர்ந்து இப்போ வரைக்கும் இவளுக்கு ஐஸ்கிரீம் மட்டும் பிடிக்க மாட்டேங்குது. எவ்ளோ நேரம் நானும் டார்லிங்கும் கெஞ்சுறோம். அழுத்தக்காரி ஒரு வாய்க்கூட வேணாம்ன்றா" என்றான் அமுதன்.

நிம்மதி பெருமூச்கு விட்டான் தீரன்.

"சரி கிளம்புறேன். எனக்கு நேரம் ஆகுது. நீங்க சாப்பிடுங்க" என்றவன் "இன்னொரு ஐஸ் கிரீம் பிரிஜ்ல இருக்கு" என்று கிளம்ப தயாரானான் அமுதன்.

"ஸ்ரீ பேசினாளாடா?' என்றாள் மிருதி.

"ஹூம். பண்ணா. போன் பண்ணாகூட என்னை பத்தியா கேக்குறா? உன்னையும் என் டார்லிங் பத்தி தான் பேசுறா. அவளுக்கென்ன ஜாலியா இருக்கா" என்று திரும்பினான்.

"பேபி" என்றது குழந்தை.

"யெஸ் பேபி" என்றான் இவனும்.

"நாதும் வதேன்" என்றது குழந்தை.

"ஹை. ஜாலி. அப்போ நைட் நாம கார்ட்டூன் படம் பார்க்கலாம்." என்று திரும்பியவன், "சரி! நாங்க லவர்ஸ் ரெண்டு பேரும் கிளம்புறோம்" என்றான் அமுதன்.

"அதெல்லாம் வேணாம். அவன் டைர்யர்டா இருப்பான். நீ அங்க போனா ரெண்டு பேரும் தூங்காம நைட் முழுக்க டி.வி பார்ப்பிங்க. ஒழுங்கு மரியாதையா ரெண்டு பேரும் போய் தூங்குங்க" என்றாள் மிருதி இடையில் கரம் வைத்து.

இவர்களின் இந்த செல்ல சண்டைகளையே ரசித்து சிரித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் தீரன்.

"இல்ல மா. பிளீது .. நா. போதேன்.." என்றது குழந்தை.

"நோ!" என்றாள் மிருதி.

"மா" என்றது குழந்தை கெஞ்சலாய்.

"தீ! இதெல்லாம் ரொம்ப ஓவர். என் டார்லிங் எவ்ளோ நேரமா கெஞ்சுறா? நீ முடியாதுன்னு சொல்ட்ற." என்று மிதிஷாவிடம் திரும்பியவன்.

"டார்லிங்! அம்மாகிட்ட நான் சொல்லிட்டேன். நாம போலாம்" என்று அவளை தூக்கி கொண்டு சென்றான்.

"டேய்! அமு.. நில்லு. ரெண்டுமே ஒண்ணா நம்பர் திருடுங்க. போக வேணாம்னு சொல்றேன். மீறி கூட்டிட்டு போனா என்ன அர்த்தம்?" என்றாள் மிருதி.

"ஹிம்.. உன்கிட்ட சொல்லியாச்சு எங்களுக்கு உன் பெர்மிஷன் தேவையில்லைன்னு அர்த்தம்" என்று வெளியேறினான் அமுதன்.

"வாங்க வாங்க. ரெண்டு பேரும் இங்க தானா வரணும். வாசப்படில காலை வைங்க. உடைச்சிட்றேன்" என்றாள் மிருதி.

வெளியே சென்ற அமுதன் மீண்டும், "போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு சந்தேகம்?" என்றவன்.

"உனக்கு ஐஸ்கிரீம் பிடிக்காது. ஆனா, என் டார்லிங்கு ஐஸ் க்ரீம்னா உயிர். எப்படி?" என்றவுடன் அவளின் விழிகள் சடாரென தீரனிடம் நின்றது.

"ஒஹ்! ஒஹ்! .. அப்படி போகுதோ கதை. சரி எங்களுக்கு நிறைய இருக்கு பேச. பை." என்று வெளியேறினான்.

ஒரு ஸ்பூன் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டே மிருதியை நோக்கி நடந்தான் தீரன்.

"உடம்பு எப்படி இருக்கு மிரு?" என்றான் தீரன்.

"ஹ்ம். என்னை மிருதின்னு கூப்பிடுங்கன்னு ..." என்று முடிக்கும் முன் ஐஸ்க்ரீமுடன் அவள் இதழ்களை சிறைபிடிக்க, ஒரு நொடி விழிகள் விரிய அதிர்ந்தவள் மறுநொடி அவனை தன் பலம் கொண்ட மட்டும் தள்ளிவிட்டவள் இதழ்கள் ஐஸ்கிரீமின் சுவை தொண்டைக்குள் இறங்கியது.

தீரனே எதிர்பார்க்கா வண்ணம் மிருதியின் கரம் அவனின் கன்னத்தில் பதிந்திருந்தது.

"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? காணாம போன பொண்டாட்டி எதுக்கு போனான்னு கூட தெரியாம இத்தனை வருஷமா இருந்துட்டு இன்னைக்கு திடீர்னு வந்து என் கூட வாழுன்னு சொன்னா உடனே வந்துரனுமா? என் பொண்ணு... நம்ம பொண்ணு பிறந்ததைக்கூட உங்ககிட்ட சொல்லாம இருந்துருக்கேன்னா எவ்ளோ என்னை காயப்படுத்துருப்பிங்கன்னு யோசிச்சு பாருங்க. நீங்க செஞ்சதையும் உங்க வார்த்தைகளையும் என் உயிர் இருக்கிற வரைக்கும் மறக்கமுடியாது. ஆறாத ரணமாவே இருந்துட்டு இருக்கு" என்ற மிருதி அவன் பேசும் முன் விருட்டென்று தன் அறைக்குள் நுழைந்து கதவை படாரென்று சாத்தினாள்.

என்ன நடந்தது என்று அவன் புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் கடந்திருந்தது.

"சே... முட்டாளாடா நீ!" என்று சோபாவில் தலையில் கைவைத்து அமர்ந்தான்.

"இன்னும் நிறைய பொறுமை வேணும் உனக்கு அப்படி என்ன தான் நடந்திருக்கும்?" என்று தலையில் கைவைத்து கொண்டான்.

'அதான் தெரியலையே? ஆனா என்னவோ நடந்திருக்கு?' என்று உள் மனது கூற, 'போதும் ஏற்கனவே நான் நொந்து போயிருக்கேன்.' என்றான்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 27:

அவளின் வார்த்தைகள் அவனுக்குள் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்க, மூன்று நாட்கள் மிருதியை சந்திக்காமல் தவிர்த்து நடமாடினாலும் அவளின் உடல்நிலையை அறிந்தவன் என்பதால் தூரத்தில் இருந்து கண்காணித்து வந்தான்.

அவ்வப்பொழுது மிருதி வலியில் துடிக்கும்பொழுது அருகில் சென்று தேவையானவற்றை செய்து சற்று குணமானதும் விலகி நிற்பான்.

அவளின் கோபம் ஒருபுறம் இருந்தாலும் தீரனின் மேல் இருந்த காதல் அதைவிட பெரியது என்றபோதும் அவன் தன்னிடம் அனைத்தையும் மனம்விட்டு பேசி மன்னிப்பு கேட்டு சரியான காரணத்தை கூறவேண்டும் என்று எதிர்பார்த்தாள் மிருதி.

மிதிஷாவின் முன் இருவரும் பிணக்கம் இருப்பது போல் காட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள்.

தீரனின் கிளை அலுவலகம் திறக்கும் வேலைகளும் ஒருவழியாய் முடிந்துவிட இன்னும் இரண்டு நாளில் கிளம்பவேண்டும் என்று தவித்தான்.

மிருதியும் தீரனிடம் முகம் கொடுத்து பேசினாலே எங்கே அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வோமா என்று பயந்து அவளும் நெருங்காமல் அவனையும் நெருங்கவிடாமல் தனிமை எனும் வலையில் நுழைந்து தவித்துக்கொண்டிருந்தாள்.

நேரில் தீரனை தனியாக சந்தித்த அமுதன்.

"தீரன் பேசுனிங்களா தி கிட்ட? அவளை சமாதானம் பண்ணிட்டீங்களா?" என்று கேட்டான்.

"இல்ல அமுதன். எங்க என்னை பார்த்தாலே ஒண்ணு எரிக்கிற மாதிரி முறைக்கிறா இல்ல என் கண்ணுலையே படாம ஓடிட்றா? அதுவுமில்லாம அவளுக்கே உடம்பு முடியாத இந்த நேரத்துல நானும் சேர்ந்து டென்ஷன் பண்ணனுமான்னு யோசிக்கிறேன்?" என்றான் தீரன் மெதுவாய்.

"ஓஹ் அப்படியா சொல்றிங்க? எனக்கு வேற மாதிரி தோணுதே?" என்றான் அமுதன்.

"என்ன?" லேசாக திணறியபடி.

"அது... எனக்கென்னவோ தி எப்படி உங்களை கிட்ட நெருங்க விட்டா எதுக்காக இப்படி தன் வாழ்க்கை உங்களால மாறுச்சுன்னு தெரியாம போய்டுமோன்னு தள்ளி நிக்கிறாளோ அதே போல தான் நீங்களும் அவகிட்ட நெருங்க பயபட்றிங்கன்னு தோணுது?" என்றான் கேலியாக அமுதன்.

"நான் எதுக்கு பயப்படணும்? எனக்கு எதுவும் பயமில்லை?" என்றான் தீரன் மிகவேகமாய்.

"இருங்க எதுக்கு இவ்ளோ பதட்டம்? உண்மையை பார்த்து பயபட்றிங்க நீங்க ரெண்டு பேரும். உங்க கடந்த காலத்தை பற்றி நிச்சயமா திகிட்ட சொல்லவேண்டி வரும்னு உங்களுக்கு பயம். அதோடு மட்டுமில்லை அவளோட கேள்வி எவ்ளோ பயங்கரமானதா இருக்கும்னு உங்களால நினைச்சுக்கூட பார்க்க முடியலை. அதான் இந்த தடுமாற்றம். உண்மையை ஏத்துக்கோங்க. நானும் ஒரு ஆண் தான். என்னால உங்களை புரிஞ்சுகிட முடியுது தீரன். ஆனா?" என்று அமுதன் நிறுத்த கேள்வியாய் என்ன என்பது போல் பார்த்தான் தீரன்.

"இது தான் உங்களுக்கு கிடைச்சிருக்குற பெரிய வாய்ப்பு. இவ்ளோ நாள் இருந்துட்டீங்க. இப்போ பேசாம நாளைக்கு போய்ட்டிங்கன்னா இதுக்கப்புறம் தி கிட்ட உங்களுக்கு இது மாதிரி பேச வாய்ப்பு கிடைக்குமான்னு என்னால சொல்ல முடியாது. அதனால இன்னைக்கு எப்படியாவது பேசிடுங்க." என்றான் அமுதன்.

"அமுதன் .." என்று தீரன் இழுக்க.

"அஸ் எ ஃப்ரெண்டா சொல்றேன். தி உங்களுக்கு கிடைச்ச பொக்கிஷம். ஒரு தடவை அவளை மிஸ் பண்ணிட்டீங்க. மறுபடியும் அதே தப்பை பண்ணிடாதீங்க. வேற ஒரு பொண்ணு அவ நிலைமைல இருந்தா இந்நேரம் மண்ணோடு மக்கி போய்ருப்பா இல்ல உங்களை உங்க சொந்தக்காரங்க முன்னாடி ரொம்ப அவமான படுத்தி தலைகுனிய வச்சிருப்பா. ஆனா என் தி உங்களை அவ உயிரை விட அதிகமா நேசிக்கிறா. நீங்க, அவளுக்கு உங்களை அறியாமலே கொடுத்த பொக்கிஷமா மிதிஷாவை நினைக்கிறா. மிதிஷா ரூபத்துல உங்களை பார்க்கிறா." என்று தீரனை பார்க்க ஆச்சர்யத்தில் வாய் பிளந்து நின்றான்.

"என்ன இதெல்லாம் தீ என்கிட்ட சொன்னாளான்னு கேக்குறீங்களா? இல்ல எதையுமே பொண்ணுங்க அவ்ளோ சீக்கிரம் வாய திறந்து மனசுல இருக்கிறதை சொல்ல மாட்டாங்க. அவங்க மனசுல இருக்கிறதை நாம புரிஞ்சுகிட்டு செய்யணும்னு நினைப்பாங்க. ஆனா, தி இன்னும் ரொம்ப அழுத்தக்காரி அவ மனசுல இருக்கிற சந்தோஷம் மட்டுமில்லை சோகத்தை கூட வெளிய சொல்லமாட்டா. நீங்க அவளை உங்க உண்மையான காதலால மறுபடியும் உங்களுக்கு சொந்தமாக்கிக்கோங்க. எனக்கு என்னோட தி குடும்பமா சந்தோஷமா நல்லா இருக்கணும். அவ இதுவரைக்கும் ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்தது போதும். அதுக்கான முயற்சி உங்ககிட்ட தான் இருக்கு." என்றான் விழிகளில் ஒரு துளி கண்ணீரோடு.

"உங்களை மாதிரி ஒரு ஃப்ரெண்ட் கிடைச்சத்துக்கு மிருதி ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்." என்று அமுதனை தழுவிக்கொண்டான்.

"நீங்க வேற தீரன். தி மாதிரி ஒரு ஃப்ரெண்ட் கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கனும். என்னோட சின்ன வயசு ரொம்ப கொடுமையானது தீரன். அப்பா இல்லாம அம்மா மட்டும் தான். எல்லோரும் கிண்டல் பண்ணி என்னை ஒதுக்கினப்ப தேவதையா வந்தா. எனக்கு அப்பப்போ படிப்புன்னு மட்டும் இல்ல நிறைய வகைல உதவி செஞ்சுருக்கா. நான் நல்ல நிலமைல இருக்கேன். அதை பார்க்க எங்கம்மா இன்னைக்கு இல்ல. எங்கம்மாவுக்கு அப்புறம் அவங்க இடத்துல மரியாதையா வச்சு பார்க்கிற ஒரே ஆள் தி தான்." என்று தன் கண்ணீரை மறைக்கும் விதமாக வேறு புறமாக முகத்தை திருப்பினான்.

"என்னோட கடந்த காலத்தை பற்றி மிருதிகிட்ட சொல்ல எனக்கு கொஞ்ச தயக்கமா இருந்தது. ஆனா இனியும் தாமதிச்சா மிருதியோட நான் சேர்ந்து வாழ முடியாம போய்டும்னு தெளிவா புரியவச்சிட்டிங்க. இன்னைக்கே நான் பேசுறேன். மிருதி என்னை ஏத்துப்பாளா? " என்றான் தீரன்.

"உங்களுக்கு மிருதி மனசுல இருக்கிறதை தெரிஞ்சிக்கணும் அவ்ளோதானே? அப்போ" என்று நிருதினான்.

"இப்போ நான் என்ன செய்யனும் அமுதன்?" என்றான் தீரன்.

"ஒண்ணுமில்லை தீக்கு போன் பண்ணி இன்னைக்கு வீட்டுக்கு வரமுடியாதுன்னு சொல்லுங்க" என்றான் அமுதன்.

"வீட்டுக்கு போகலைன்னா மிருதிக்கிட்ட எப்படி பேச முடியும்?" என்றான் குழப்பமாய் தீரன்.

"சொல்றேன்ல? செய்ங்க" என்று சிரித்தான் அமுதன்.

"சரி" என்று தன் போனில் மிருதிக்கு போன் செய்து, "ஹலோ! மிருதி இன்னைக்கு என்னால வீட்டுக்கு வரமுடியாதுன்னு நினைக்கிறேன்" என்றான் அமுதன்.

"ஹிம்ம சரி " என்றாள் மிருதி.

"நீ தனியா இருப்பல்ல." என்றான் தீரன்.

"இத்தனை வருஷம் தனியா தானே இருந்தேன். நான் இருந்துப்பேன்." என்று வைத்துவிட்டாள் மிருதி.

"சொல்லிட்டேன் " என்று நிமிர்ந்தான் தீரன்.

"தி பத்தி எனக்கு நல்லா தெரியும். நீங்க பார்க்கிற தீ வேற. ஆனா தி இயல்பா எப்படி இருப்பான்னு இன்னைக்கு நீங்க பார்க்க போறிங்க." என்று புன்னகையோடு கூறும் அமுதனை வியப்பாய் பார்த்தான் தீரன்.

"என்ன அப்படி பார்க்குறிங்க? இப்போ என்ன நடக்கும்னு சொல்லட்டா?" என்று குறும்பாய் கேட்டான் அமுதன். 'சரி' என்று தலையசைத்தான்.

'நீங்க வீட்டுக்கு வரமாட்டேன்னு சொன்னதால எப்பவும் எட்டறை மணிக்கு வீட்டுக்கு வர்ரவ இன்னைக்கு ஆறு மணிக்கெல்லாம் போய்டுவா." என்றான் அமுதன் விஷமமாய் புன்னகைத்து.

விழிகளை அகல விரித்து ஆச்சர்யமாய் அமுதனை தீரன் பார்க்க.

"நீங்க என்ன பண்றிங்க? ஏழு மணிக்கு வீட்டுக்கு போங்க." என்றான் அமுதன்.

"நான் தான் வரமாட்டேனு சொல்லிட்டேனே அப்புறம் ஏன் போகணும்?" என்று எதுவும் புரியாமல் தீரன் கேட்க.

"யோவ் மக்கு! நான் சொல்லி முடிக்கிறதுக்குள்ள என்ன அவசரம்?" என்று கேட்க தீரன் அமுதனை வாயை பிளந்து பார்த்தான்.

"சாரி! ஏதோ கொஞ்சம் உரிமையா சொல்லிட்டேன்" என்று மழுப்பலாக சிரித்து தலையை சொறிந்து நின்றான் அமுதன்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 28:

தீயாய் சுடும் என் நிலவு 28​
மெல்ல சிரித்தவன், "பரவால்ல. இதே நல்லாருக்கு" என்றான் தீரன்.

"நீங்க சீக்கிரமா போங்க. அந்த நேரம் நான் அவளுக்கு போன் பண்றேன். உள்ள போகாம கவனிங்க. அப்போ தெரியும் உங்க மிருதி யார்னு?" என்று சிரித்தான்.

"அப்படியா சொல்றிங்க?" என்றான் தீரன்.

"என் மேல சத்தியமா. உன்னை திகூட சேர்த்து வைக்கிறதுக்குள்ள எனக்கு நாக்கு தள்ளிரும் போல இருக்கே" என்றான் நெற்றியில் அடித்து கொண்டு.

வாய் விட்டு சிரித்த தீரன், "ஓகே! ஓகே! நான் போறேன். அதுக்கு முன்னாடி வீ ஆர் ப்ரெண்ட்ஸ்" என்று கரம் நீட்டினான்.

தீரனின் முகத்தையும் கரத்தையும் மாறிமாறி பார்த்த அமுதன்.

"போச்சு.இ துக்கே இப்போ தான் வரியா? நான் உன்னை ஃப்ரெண்டாக்கி பல நாள் ஆச்சு. ஆள் வளர்ந்துருக்க அப்படியே கொஞ்சம் மேல காலியா இருக்க உன்னோட ஃப்ரைனையும் வளர்ந்துருக்க" என்றவனை தீரன் முறைத்தான்.

"ஓகே! கோவிச்சிக்காத என் ஃப்ரெண்ட்கிட்ட இப்படி தான் பேசுவேன்." என்றான் மெதுவாய் அமுதன்.

கலகலவென சிரித்த தீரன்.

"எனக்கு உண்மையாவே உன்னை ரொம்ப பிடிச்சிருக்குடா" என்று கட்டிக்கொண்டான்.

"சரி. நான் சொன்ன மாதிரி சரியா செய் பா." என்று தீரனை அனுப்பி வைத்தான்.

அமுதனின் போன் அடிக்க, போக இருந்த தீரனை நிறுத்தினான்.

"எப்பா நில்லு? ஏழரை கூப்பிடுது... நான் மட்டும் ஏன் வாங்கணும். நீயும் வா சேர்ந்தே அர்ச்சனை வாங்குவோம்." என்றான் அமுதன்.

"என்னடா சொல்ற?" என்று ஒன்றும் புரியாமல் அருகில் வந்து நின்றான் தீரன்.

"ம்ம். என் வருங்கால பொண்டாட்டி கூப்பிடறான்னு சொல்றேன்" என்றான் அமுதன் நக்கலாய்.

"யாரு ஸ்ரீஷாவா? நீ பேசு. அதுக்கு ஏன் என்னை கூப்பிடற?" என்றான் தீரன்.

"எது? எதுக்கு உன்னை கூப்பிடறேனா? எல்லா பொண்ணுங்களும் வருங்கால புருஷன்கிட்ட பேசினா என்ன கேப்பாங்க? ஆனா, இவ என்ன கேட்பா தெரியுமா? இரு நீயே கேளு" என்று அட்டெண்ட் செய்து, "ஹலோ! ஸ்ரீமா எப்படி டா இருக்க?" என்றான்.

"ஹிம் நல்லா இருக்கேன். அக்கா எப்படி இருக்காங்க? அக்காவும் மாமாவும் பேசிட்டாங்களா? நீ ஏதாவது ஹெல்ப் பண்றியா இல்லையா? டேய் நான் வரதுக்குள்ள அவங்க சேர்ந்து வாழ முடிவு செயலை அவ்ளோ தான் உனக்கும் எனக்கும் கல்யாணம் தேதி சொல்லாம தள்ளி போட்ருவேன் ஜாக்கிரதை" என்றதை கேட்டவுடன் அமுதன் முகம் அதிர்ச்சியில் அஷ்டகோணலாக, தீரனோ வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.

'இருடா என்னை பார்த்தா சிரிக்கிற? இப்போ நீ மாட்டின' என்று யோசித்த அமுதன்.

"ஸ்ரீ டார்லிங்! அப்படில்லாம் சொல்லக்கூடாது. நா எவ்வளவோ தீரன் சார் அதாவ்து உங்க அக்கா வீட்டுக்காரர்கிட்ட சொல்லிக்கிட்டே தான் இருக்கேன். ஆனா, அவர் தான் நான் சொல்றதை காது கொடுத்தே கேட்க மாட்றார். இப்போகூட இங்க தான் இருக்கார்" என்றதும் தீரன் சிரிப்பை நிறுத்தி பேயறைந்ததை போல் அமுதனை பார்க்க. அவனோ கொக்கரித்து சிரித்தான்.

"என்னது மாமா கேட்க மாட்டேன்னு சொல்றாரா? அட எருமை அப்போ நீ ஒழுங்கா அவருக்கு புரியற மாதிரி சொல்ல வேண்டியது தான?" என்றதும் மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான் தீரன்.

"அடியே! இதெல்லாம் ரொம்ப ஓவரு சொல்லிட்டேன். உன் மாமன் கேட்கலைன்னா நான் என்ன செய்ய அதுக்கு போய் என்னை தீட்ற? இந்தா நீயே சொல்லு அப்பவாவது அந்த மர மண்டைக்கு கேட்குதான்னு பார்க்கலாம்" என்று அவனுக்கு நையாண்டி காட்டிவிட்டு, "தீரன் இந்தாங்க ஸ்ரீஷா உங்ககிட்ட பேசனுமாம்" என்றான் பதுசாய்.

'அடப்பாவி நம்மளை மாட்டிவிட்டுட்டானே?' என்று யோசித்த தீரன் வாங்கி "ஹலோ!" என்றான்.

"ஹலோ மாமா! எப்படி இருக்கீங்க?" என்றாள் ஸ்ரீஷா.

'அடிப்பாவி உன் ஆருயிர் காதலன் இங்க இருக்கேன் என்னை ஒரு வார்த்தை நல்லா இருக்கியான்னு கேட்டியா? இப்போ இந்த நொன்னையை மட்டும் நல்லா இருக்கியான்னு கேக்குறியே?' என்று தீரனை முறைத்தான்.

அவன் முறைப்பத்திற்கான அர்த்தம் புரிந்து லேசாக புன்னகைத்து, "நான் நல்லா இருக்கேன் ஸ்ரீஷா. நீங்க எப்படி இருக்கீங்க?" என்றான் தீரன்.

"நல்லா இருக்கேன். அக்கா பாப்பா எப்படி இருக்காங்க?" என்றாள்

"ஹ்ம் ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இருக்காங்க." என்று சிரித்தான்.

"சரி மாமா. அக்காகிட்ட ஏன் இன்னும் பேசலை? நீங்க ரெண்டு பேரும் உங்க பிரச்சனையை பேசி தீர்க்கணும்னு தானே நான் வெளிய வந்தேன். இன்னும் நீங்க பேசாம் இருந்தா எப்படி?" என்றாள் ஸ்ரீஷா.

"இல்ல ஸ்ரீஷா. அதுவந்து உங்க அக்கா என்னை கண்டாலே வேப்பங்காயை பார்த்தா மாதிரி பார்க்கிறா? அதான் என்ன பன்றதுன்னு தெரியாம அமுதங்கிட்ட பேசிட்டு இருக்கேன்." என்றான் தீரன்.

"மாமா! வேப்பங்காய் உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு அவளுக்கு தெரியும் இருந்தும் ஏத்துக்க மாட்டா. ஏன்னா அக்கா பட்ட கஷ்டம் அது மாதிரி. ஆனா, அதுக்காக நாம அப்டியே விடமுடியாது. இதுல உங்க ரெண்டு பேரோட லைஃப் மட்டும் இல்ல. திஷா குட்டியோப்ட வாழ்க்கையும் இருக்கு. சோ அக்காக்கு புரியவைங்க. பேசுங்க. கெஞ்சுங்க. மன்னிப்பு கேளுங்க. கொஞ்சுங்க. என்னவோ ஒண்ணு பண்ணுங்க. அக்கா சரி ஆகணும்." என்றாள் ஸ்ரீஷா.

"சரிம்மா" என்று தலையாட்டினான் தீரன்.

"மாமா! ஏற்கனவே நான் ரெண்டு நாள் முன்னாடியே வந்துட்டேன். ஃப்ரெண்ட் வீட்டுல தங்கிருக்கேன். அக்காக்கு மட்டும் இது தெரிஞ்சுது அவ்ளோ தான் என்னை தொலைச்சிருவாங்க" என்றாள் ஸ்ரீஷா.

"என்ன ஸ்ரீஷா சொல்றிங்க?" என்றான் தீரன்.

"ஆமா. எனக்கு மூணு நாள் தான் டூர். சரி உங்க ரெண்டு பேருக்கும் பிரைவசி வேணும்னு தான் நான் வெளில தங்கிருக்கேன்." என்றாள் ஸ்ரீஷா.

"இன்னைக்கு கண்டிப்பா பேசிடுவேன். எப்படி இருந்தாலும் நீங்க நாளைக்கு வீட்டுக்கு வந்துடுங்க. நான் நாளை மறுநாள் ஊருக்கு போறேன்." என்றான் தீரன்.

"ஏன்?" என்றாள் ஸ்ரீ.

"எனக்கு இங்க வேலை முடிஞ்சுதும்மா. ஒபனிங்க்கு கொஞ்ச வேலை அங்க போய் பண்ணனும்" என்றான் தீரன்.

"அப்போ சரி. இன்னைக்கு கண்டிப்பா பேசிடுங்க. அமுதங்கிட்ட போனை கொடுங்க மாமா" என்றாள் ஸ்ரீ.

"சரி" தீரன்.

"டேய் அமுதா!" என்றதும் திடுக்கிட்டு பார்த்தான் அமுதன்.

"அடிப்பாவி கட்டிக்க போறவனை இப்படி கூப்பிடலாமா?" என்றான் அமுதன்.

"கட்டிக்கபோறவனை தான் அப்படி கூப்பிட முடியும்" என்றதும் போனை ஸ்பீக்கரில் இருந்து ஆப் செய்து காதுக்கு வைத்தான் அமுதன்.

"அமுதன் செல்லம். நீ என் டார்லிங். அதனால உன்கிட்ட நான் எப்படி வேணா பேசலாம் அதுக்கு லிமிட்டே கிடையாது" என்று ஸ்ரீஷா கூறியதும் விழிகள் விரித்து கேட்டு கொண்டிருந்தான் அமுதன்.

"ஹிம்" என்று ஒற்றை வார்த்தையில் சரி என்று கூற, "சரி நான் நாளைக்கு வந்துடுவேன். வந்தப்புறம் வருங்கால புருஷனுக்கு தர வேண்டிய மரியாதைய தரேன்" என்றதும் முகம் மலர்ந்தது அமுதனுக்கு.

"வச்சிட்றேன் பை" என்று வைத்துவிட்டாள்.

"சரி. நான் கிளம்புறேன் அமுதா" என்று தீரனும் கிளம்பினான்.

"சரி. நான் சொன்ன மாதிரி செய்." என்று அனுப்பி வைத்தான் அமுதன்.

மாலை எழு மணி மிருதியின் வீட்டு வாசலில்,

'ஹ்ம் இவன் பேச்சை கேட்டு வந்துட்டோம். வீட்ல மிரு இருப்பாளா? எப்படி பேச போறோம்? எதுவும் புரியலை?' என்று புலம்பியபடி வீட்டின் வாசலில் செருப்பை கழட்டினான்.

வீட்டினுள் நுழையாமல் வாசலில் கரங்களை கட்டிக்கொண்டு நின்றான்.

"நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

ஆயுள் காலம் யாவும்
அன்பே நீயே போதும்
இமைகள் நான்கும் போர்த்தி

இதமாய் நாம் தூங்கலாம்

என் பாதை நீ
என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி

என் வானம் நீ
என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி"

என்ற பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தாள் மிருதி.

"ஹ்ம் என் பொண்டாட்டிக்கு குரல் இவ்ளோ அழகா இருக்கு அதை கூட தெரிஞ்சுக்காத மொக்கை பையனா இருந்திருக்கேன். சாரி மிரு. ஆனா இனி உன்னோட ஒவ்வொரு விருப்பத்தையும் ஏன் உன் அசைவையும் கூட ரசிச்சு விரும்ப போறேன். தெரிஞ்சுக்க போறேன்." என்று தனக்குள் கரைந்தவனின் கவனம் மிருதியின் குரலில் கலைந்தது.

"இவனை... எப்போ பாரு என்னை இம்சை பண்றதே வேலை. பக்கி எனக்கு பிரென்ட் ஆகிட்டானே என்ன பண்றது?" என்று தலையில் அடித்துக்கொண்டு அவளின் போனை எடுத்து ஸ்பீக்கரில் போட்டாள்.

"ஹலோ!" என்றாள்.

"ஹலோ! என் தி செல்லம் என்ன பண்றாங்க?" என்றான் அமுதன் ஏதுமறியா குரலில்.

"டேய் பிராடு. குரல் ரொம்ப குழையுது?. என்னடா எருமை எதுக்கு போன் பண்ண?" என்றாள் மிரு.

பக்கென்று சிரித்துவிட்டான் தீரன்.
 
Top Bottom