Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL நரகமாகும் காதல் கணங்கள் - Tamil Novel

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 5​



டம்பிள் செட், புல்லப் பார், ஸ்டேஷனரி பைசைக்கிள், ரோவிங் மிஷின், பார்பெல் செட் என சுற்றி எங்கிலும் உலோகங்களின் முரட்டு சாம்ராஜ்ஜியம்.

அவள் நுழைந்த சமயம் பார்த்து அந்தப்பக்கமாய் திரும்பி நின்று ட்ரெட் மில்லில் ஓடிக்கொண்டிருந்தான் வீசி.

பயந்து பயந்து வந்தவள் வியர்வை சொட்ட ஓடிக்கொண்டிருப்பவனை "அத்தா.. ச்ச்.. என்னங்க" என்றழைத்தாள்.

ட்ரெட் மில்லை நிறுத்தி திரும்பியவன், பூந்துவாலை ஒன்றால் வழிந்த வியர்வையை ஒற்றி எடுத்துக்கொண்டே அவளை அலட்சியப்பார்வை பார்த்தான்.

பின், கைநீட்டி காபியை வாங்கி குடித்துக்கொண்டே, "என்ன சாப்பிட்டு சாப்பிட்டு வீட்டுலயே தூங்கி எந்திரிக்கலாம்னு நினைப்பா?.." என்றான்.

அவளுக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவில்லை. பேந்த பேந்த முழித்தபடி நின்றாள்.

"என்ன முழிக்கிற?.. பி.இ சிவில் படிச்சிருக்க.. ஞாபகம் இருக்குதில்ல?.. என் பிசினஸ் பார்ட்னர் ஒருத்தர் ஷாப்பிங் மால் கட்டிக்கிட்டு இருக்காரு.. மாலோட சீஃப் இன்ஜினியர் நமக்குத் தெரிஞ்சவர் தான்.. இன்னைக்கு அவர்கிட்ட உனக்கு ஒரு இன்டெர்வீவ் இருக்கு.. ரெடியா இரு.."

தலையும் புரியாமல் வாலும் புரியாமல் பேசியவனைப் பார்த்து, "இல்ல.." என்றவள் ஆரம்பிக்க, "ம்ம் சத்தமாப் பேசு" என்றவன் அருகில் வரவும், "இல்ல.. ஒண்ணுமில்ல" என்று தலையாட்டியவள் அவன் காபி கப்பை திருப்பித் தரவும், வாங்கிக்கொண்டு விட்டால் போதும் என்று கீழே ஓடிவிட்டாள்.

படிகளில் மூச்சு வாங்க ஓடிவந்தவளை கையில் பெட்டியுடன் எதிர்கொண்ட மதுபாலா, "ஹேய்! ஹேய்! பாத்து!.." என்றாள்.

அவளும் பிள்ளைகளும் எங்கோ செல்வது போல் புறப்பட்டு நிற்பதைப் பார்த்து, "என்ன அண்ணி எங்க கிளம்பி நிற்கிறீங்க?.." என்று அனுசரணையாக விசாரித்தாள் ஷ்ரதா.

"ம்ம்? எங்க வீட்டுக்குத்தான்.. பின்னே இங்கேயேவா இருந்திட முடியும்.. உங்க அண்ணாவால பசங்களை பார்க்காம இருக்க முடியலையாம்.." என்று அவளுக்கு பதிலளித்தாள் மதுபாலா.

"அருண்மொழியண்ணா தூத்துக்குடிலயிருந்து வீட்டுக்கு வந்துட்டாங்களா அண்ணி?.. நேத்து போன்ல பேசினப்போ அம்மா சொல்லவே இல்லயே?.. சரியா முகூர்த்தத்துக்கு ஒருமணி நேரத்துக்கு முன்னாடி சரக்கு வந்த கப்பல் கவுந்திருச்சின்னு போன் வந்தது.. அண்ணாவும் வேகமா கிளம்பிப் போயிட்டாங்க.." என்று சோகமாக சொன்னவளைப் பார்த்து, 'பேதைப்பெண்ணே! உன் அண்ணன் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு காரணம் கப்பல் கவிழ்ந்தது மட்டும் அல்ல.. என் தம்பி வீசியிட்ட நிபந்தனையும் தான்.. அவர் மட்டும் கிளம்பாமல் இருந்திருந்தால் உன் கழுத்தில் தாலியே ஏறியிருக்காது' என்று நாடகபாணியில் நினைத்தவள், வெளியே, "சொல்ல மறந்திருப்பாங்க" என்று மட்டும் சொல்லிவிட்டு சோபாவில் வந்து அமர்ந்தாள்.

பிள்ளைகளும் உற்சாகமாகக் கிளம்பி சமத்தாக அமர்ந்திருந்தனர்.

அருண்மொழி ஒன்பது மணிக்கு வருவேன் என்று கூறியிருந்ததால் மதுபாலா நேரத்தை கடத்திக்கொண்டே உட்கார்ந்திருந்த போது வாசலில் கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

அருண்மொழி காரிலிருந்து இறங்கி உள்ளே நுழைய.. வீசியும் அப்போது தான் மாடிப்படிகளிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான்.

இருவரின் கண்களும் சந்தித்தபோது கூர் வாள்கள் இரண்டு மோதிக்கொண்டது போல் கிளிங் என்ற சப்தம் இல்லாமலேயே ஒரு பளிச்.

மாடிப்படிகளின் முடிவில் இருந்த பூச்செடியை வேண்டுமென்றே காலால் எட்டி உதைத்த வீசி, "ஷ்ரதா!!!" என்று அதிர்ந்த குரலில் அழைத்தான்.

ஓடிவந்தவள் அங்கப்பிரதட்சணம் செய்துகொண்டிருந்த பூச்செடியைக் கண்டதும் தனது வேகத்தை குறைத்து நின்றாள். உடன் தனது அண்ணனையும் அப்போது தான் கவனித்தாள்.

பரவசத்தில் அவனை நோக்கிச் சென்றவளை, "ஷ்ரதா!" என்று அழுத்தி அழைத்து நிறுத்தினான் வீசி.

அவள் அப்படியே அந்த இடத்திலேயே நிற்க, அருகில் வந்தவன், "மார்னிங் கிஸ் கொடுக்கும்போது சொன்னதை மறந்துட்டியா டார்லிங்?.. பாரு லேட்டாகிடுச்சு.. வா போலாம்.." என அவளை தன்னுடனேயே கிட்டத்தட்ட இழுத்துச் சென்றான்.

தன் அண்ணனை கடக்கும்போது பாவமாய் அவனை பார்த்தபடியே சென்றாள் ஷ்ரதா.

வீசி ஷ்ரதாவுடன் சென்றவுடன் மதுபாலாவை சமீபித்த அருண்மொழி, "நான் இந்த வீட்டு மாப்பிள்ளை, கொஞ்சமாவது உன் தம்பி எனக்கு மரியாதை கொடுக்கிறானா பாரு.." என்று எரிந்து விழுந்தான்.

மதுபாலா அசட்டுச் சிரிப்பு சிரித்தபடியே பதிலளித்தாள். "இப்போ அவன் உங்க வீட்டு மாப்பிள்ளையும் கூட.. மறந்துறாதீங்க.. அதான் இப்படி பண்றான்.. உட்காருங்க காபி கொண்டு வர்றேன்.. இல்ல வேணாம், இது உங்க ப்ரேக்பாஸ்ட் டைம் இல்ல?.. டைனிங் டேபிளுக்கு வாங்க டிபன் பரிமாறுறேன்.." என்றாள்.

"ஒண்ணும் வேணாம்.. உன் தம்பியோட பாசமான பார்வையே பூஸ்ட் குடிச்ச தெம்பைக் கொடுக்குது.. கிளம்பு போகலாம்.." என்று அவசரப்படுத்தினான் அருண்மொழி.

"இருங்க அம்மாக்கிட்ட சொல்ல வேணாமா?.." என்றபடியே, "ம்மா" என்று சமையலறையில் இருந்த அபிராமியை கூவி அழைத்தாள் மதுபாலா.

வந்தவர் அருண்மொழியைப் பார்த்ததும், கைகளை முந்தானையில் துடைத்தபடியே, "வாங்க! வாங்க மாப்பிள்ளை! என்னடி நிற்க வச்சி பேசிக்கிட்டு இருக்க.. மாப்பிள்ளையை உட்காரச் சொல்லு.. இருங்க மாப்பிள்ளை காபி கொண்டு வரேன்.." என்று திடீர் தேனியாய் சுறுசுறுப்பானார்.

அருண்மொழி, "இல்ல அத்தை, வெளிய எனக்கு முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு.. சீக்கிரம் இவங்களை வீட்டுல விட்டுட்டுப் போகணும்.. இன்னொரு நாள் பொறுமையா வந்து விருந்தே சாப்பிடுறேன்" என்றுவிட்டு தன் மனைவியையும் குழந்தைகளையும் காரில் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான்.

மூன்று தடவை கேட்டும் பதிலில்லை என்றாலும் ஷ்ரதா தன் முயற்சியை கைவிடுவதாய் இல்லை. கார் மீண்டும் சிக்னலில் நிற்கும் போதும் கேட்டாள். "என்னங்க, நான் என் ஃபைல் எதுவும் எடுக்கலையே?.. ட்ரெஸ் கூட சல்வார்.. இப்படியேவா இன்டெர்வீவ்க்கு போவாங்க?.."

எல்லாம் சரியாய் இருந்தாலும் ஷ்ரதா இப்படி அனல் மேல் இட்ட புழுவாய் தான் நெளிந்துக் கொண்டிருப்பாள் என்பது வேறு கதை.

"என்னங்க.." மீண்டும் அதே கெஞ்சல் குரல்.

"எல்லாம் நான் எடுத்துட்டேன்.." அவன் விழிகள் சாலையிலேயே இருந்தது.

தவிப்புடனேயே அமர்ந்திருந்தாள் அவள்.

நேரே ஒரு துணிக்கடை பொட்டிக்கில் கொண்டு வண்டியை நிறுத்தியவன், "ம்ம் இறங்கு" என்று உத்தரவிட்டு உள்ளே சென்றான்.

நேரே அங்கிருந்த பணிப்பெண்ணிடம் சென்று ஷ்ரதாவின் உயரம் முதல் உள்ளாடை வரை என்ன அளவு என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

ஷ்ரதா புதிதாய் பள்ளிக்கூடம் சேர வந்த குழந்தையைப் போல் அலங்க மலங்க விழித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"வாங்க மேடம்" என்று அவளை தனியே ட்ரையல் ரூம் அழைத்துச் சென்ற பெண், தான் கையில் கொண்டு வந்திருந்த உடைகளைக் கொடுத்து "சேன்ஜ் பண்ணிட்டு வாங்க மேடம்" என்றாள்.

பதினைந்து நிமிடத்திலேயே சல்வார் களைந்து கோட் சூட்டுடன் வெளியே வந்தாள் ஷ்ரதா.

பணிப்பெண் அவளைப் பார்த்து வியந்தாள். "மேடம், சார் சொன்ன அளவு உங்களுக்கு கச்சிதமா இருக்கு மேடம்.. நாங்களே மெசர் பண்ணியிருந்தாலும் இவ்வளவு பெர்பெக்ட்டா அளவெடுத்திருப்போமா தெரியாது.. ரொம்ப ஃபிட்டா இருக்கு மேடம்.." என்றாள்.

சமாளிப்பாய் புன்னகைத்தபடியே வெளியே வந்தாள் ஷ்ரதா.

அடுத்தபடியாய் அவளை பியூட்டி பார்லரில் கொண்டு விட்டான் வீசி. அங்கு அவளின் முடியை வளை கொண்டையிட்டு, முகத்திற்கு டச்சப் செய்து விட்டார்கள். பின், சாலையில் ஒரு ஏசியிட்ட செருப்பு கடைக்கு வெளியே வண்டியை நிறுத்தி, அவளுக்கு பொருத்தமான ஹீல் உள்ள கட்ஷூ ஒன்றும் வாங்கிக் கொடுத்தான்.

ஷ்ரதாவின் மனம் முழுவதும் 'இவ்வளவு பார்த்து பார்த்து செய்கிறாரே ஒருவேளை இன்டெர்வீவில் செலெக்ட் ஆகவில்லை என்றால் நம்மை என்ன செய்வார்?' எனும் கேள்வியே தடக்தடக் ரயில் வண்டியாய் ஓடிக்கொண்டிருந்தது.

யோசித்துக்கொண்டே காரின் கண்ணாடியைப் பார்த்தபோது அவளுருவமே அவளுக்கு வித்தியாசமாய் தெரிந்தது.

விரைவாக காரை செலுத்தியவன் குபீரென்று உயர்ந்து நின்ற அந்த பத்துமாடி கண்ணாடிச்சுவர் கட்டத்திற்கு வெளியே காரை நிறுத்தி அவளை இறக்கிவிட்டான். தந்தித் தகவலாய், "தேர்ட் ஃப்ளோர்" என்று சொல்லிவிட்டு ஃபைலை அவள் கையில் திணித்தான்.

அவளும் பயத்தில் அவனை திரும்பிப் பார்த்தபடியே சென்றாள்.

நேரம் கொல்லைத் தின்ற குதிரைப் போல் வேகமாய் ஓட, அரைமணி நேரத்தில் வெளியே வந்து காரினுள் குனிந்தவள், "இன்டெர்வீவ்ல நல்லா ஆன்சர் பண்ணி இருக்கேங்க.." என்றாள்.

"ம்ம்.. ஆனா வேலை கிடைக்காது, வா" என்று சொல்லிவிட்டு காரின் மறுபக்கக் கதவை திறந்துவிட்டான் வீசி.

உள்ளே இருக்கையில் வந்து அமர்ந்தவள் அவனை கேள்வியாய் நெற்றிச் சுருக்கி பார்க்க, "உன் பாசமலர் அண்ணன் சிவாஜி கணேசன் இன்னைக்கு வந்தாரு இல்ல?.. நீ அவர்கிட்ட எதுவும் கொஞ்சி குலாவக்கூடாதுன்னு தான் உன்னை வெளியக் கூட்டிட்டு வந்தேன்.. இந்த இன்டெர்வீவ் எல்லாம் ஃபுல் செட்டப்" என்றதும் அவளுக்கு தன்னிரக்கத்தில் அழுகை வந்தது.

இது என்ன மாதிரியான சித்ரவதை என்றும் தோன்றியது.

இல்லை என்னால் இதற்கு மேலும் இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொள்ள முடியாதென முதல் முறையாய் தைரியம் வந்து அவனிடம் அந்தக் கேள்வியை கேட்டாள் ஷ்ரதா.

"ஏன்? ஏன் இப்படி பண்றீங்க?.."

அவன் புருவம் ஏளனமாய் ஏறி இறங்கி அவளிடம் கேட்டது. 'அட! நீ என்னை கேள்வி கேட்கும் அளவிற்கு வந்துவிட்டாயா?'

"சொல்லுங்க உங்களுக்கு எப்படி எனக்கு மல்லிகைப்பூ பிடிக்காதுன்னு தெரியும்?.. எப்படி எனக்கு பால் பிடிக்காதுன்னு தெரியும்?.."

நேரம் கெட்ட நேரத்தில் அவன் கன்னத்தில் அவள் ரசித்துப் பார்க்கும் கன்னக்குழி ஒன்று உருவாகியிருந்தது.

"சிரிக்காதீங்க.. சொல்லுங்க! எப்படி எனக்கு உரைப்பு ஒத்துக்காதுன்னு உங்களுக்குத் தெரியும்?.. எப்படி என்.. என்.. ப்ரேசியர் சைஸ் முதற்கொண்டு உங்களுக்குத் தெரியும்?" என்று மூச்சி வாங்கக் கேட்டாள்.

அவளின் கடைசி கேள்வியும் மூச்சு வாங்கலும் பார்க்கக்கூடாது என முயன்று தடுத்தாலும் அவனது விழிகளை வேறொரு பக்கமே இழுத்துச் சென்றன.

சற்றே பார்த்தும் பார்க்காததும் போல் பாவனை செய்தவன், "சபாஷ்" என்று தன் கைகளைத் தட்டி சிரிப்பில் மீசைத் துடிக்க, "கேள்விப் படலம் முடிஞ்சதா மேடம்?.. காது ரொம்ப வலிக்குது.. கிளம்பலாமா?" என்று காதைக் குடைந்து காண்பித்தான்.

அவளால் இந்த பரிகாசப் பதிலை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. குப்பென்று முகம் சிவந்து தேம்பித் தேம்பி அழுதாள்.

அவளிடம் தன் கைக்குட்டையை நீட்டியவன், அவள் வாங்கவில்லை எனவும் கோபத்தில் ஸ்டியரிங்கைப் பிடித்து சுழற்றினான்.

ஆற்றாமையில் இருக்கையில் கண்மூடி சாய்ந்துக் கொண்டாள் ஷ்ரதா. அவளுக்கு பேசாமல் காரின் கதவைத் திறந்து குதித்து விடலாமா என்றுகூட ஒரு நொடி தோன்றியது. ஆனால், பாழாய் போன மனதில் தைரியமில்லை.

கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தபோதே சாலையின் ஓரமாக காரை நிறுத்தினான் வீசி.

திடுக்கிட்டு விழித்தவள் என்னவென்று அவனைப் பார்க்க, காரிலிருந்து இறங்கியவன் அங்கு ஓரமாக தள்ளுவண்டிக்கடையில் பஞ்சுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்த முதியவரை அணுகி, பஞ்சுமிட்டாய் பாக்கெட் இரண்டை வாங்கிக்கொண்டு வந்தான்.

அசுவாரசியமாய் அதனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஷ்ரதா.

காரிற்குள் ஏறியவன் ஷ்ரதாவிடம் ஒரு பஞ்சுமிட்டாய் பாக்கெட்டை நீட்டி, "இந்தா.. பஞ்சுமிட்டாய்னா உனக்கு ரொம்பப் பிடிக்கும்ல, சாப்பிடு!" என்றான்.

ஷ்ரதா சோர்ந்து போனவள் போல் மீண்டும் பின்புறமாக சீட்டில் தலையை சாய்த்தாள்.

அவன் அவளை வெறுப்பேற்றவென்றே "அழுகை வரலை?" என்றான்.

"ம்ஹீம்" என்று கண்மூடியபடியே தலையசைத்தாள் ஷ்ரதா.

"ப்ச், நிறைய எதிர்பார்த்தேனே.. சரி விடு நாளைக்கு வர வச்சிரலாம்.." என்றான் வீசி.

பாவம், இவ்வாக்கியத்தை ஷ்ரதா சரியாக புரிந்து கொள்ளவில்லை.

நாளையென்றால் அவன் அகராதிப்படி நாளின் துவக்கமான இரவு பன்னிரண்டு மணிக்கே தன்னை அவன் படுக்கையில் அழ வைப்பான் என்று அவள் என்ன கனவா கண்டாள்?


காதல் கணம் கூடும்...


உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

கருத்துத்திரி,

எங்க தைரியமிருந்தா என்னைத் தொடுங்க பார்க்கலாம்😂
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 6​



அன்றிரவு ஒரு பன்னிரண்டு மணி இருக்கும். மெதுவாய் மெத்தையில் புரண்டு படுத்தாள் ஷ்ரதா. திடீரென எதுவோ அவள் கன்னத்தில் உரசியது போல் இருந்தது. முழுதாய் தூக்கம் கலையவில்லையானாலும் தனது கன்னத்தில் கூசுவது என்னவென்று கண்மூடியபடியே கண்டுபிடிக்க முயன்றாள்.

'மயிலிறகா?.. இல்லையே கொஞ்சம் குத்துவது போல் இருக்கிறதே.. ரொம்ப மென்மையாகவும் இல்லாமல் முள்போலும் குத்தாமல் இரண்டிற்கும் நடுவில்.. என்னது?..'

மீண்டும் அவள் கன்னத்தோடு பலமாய் ஒரு உரசல்..

'ஒருவேளை அவர் தானா?..' பதறி விழித்துப் பார்த்தாள் ஷ்ரதா. அப்போதும் கண்மூடி இருப்பது போல் தான் இருந்தது.

அவளுக்கு இது போல் இருள் என்றாலே பயம்.

கண்மூடியபடியே பக்கத்தில் மெத்தையில் தடவினாள். அவனை காணவில்லை.

ஆனால், தலையணையில் மட்டும் ஏதோ அசைவு தெரிந்தது. கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

அவள் பார்த்த பேய் படங்களின் ட்ரைலர்கள் எல்லாம் போட்டிபோட்டுக்கொண்டு அவளின் மூளைக்குள் ஓடிய வண்ணமிருந்தன.

மிதமிஞ்சிய ரோமாஞ்சனத்தில் நா உலர, "என்னங்க! என்னங்க!" என்றாள்.

எந்த பதிலும் இல்லை. மீண்டும் அந்த அமைதியும் அந்தகாரமும் அவளை அச்சுறுத்த, "முருகா! என்னை காப்பாத்து!" என்று வேண்டியபடியே எட்டி சுவற்றில் சுவிட்ச் போர்டை தேடினாள்.

அவளின் வேண்டுதலை முருகன் கேட்டது போல் திடீரென அவ்வறையில் வெளிச்சம் பரவியது.

கவன ஈர்ப்பான விட்டத்து விளக்கை பார்த்துக்கொண்டிருந்தவளின் கன்னத்தில் மீண்டும் அதே உரசல். காதில் வித்தியாசமாய் ஒரு கிசுகிசுப்புக்குரல். "ஹேப்பி பெர்த்டே ஷ்ரதா"

காதருகில் ஒலித்தது என்னமோ அவன் குரல் தான். ஆனால், அந்த கன்னத்து உரசல்?

"மியாவ்"

"பாரு! இந்த கிட்டியும் உனக்கு பெர்த்டே விஷ் சொல்லுது"

'பூனை.. சே! பெட்ல என் கன்னத்துல உரசினது இது தானா?.. இதோட மீசை தானா?.. நான் அவருதுன்னு இல்ல நினைச்சேன்.. ஆமா முதல்ல இந்தப் பூனைகளுக்கெல்லாம் எதுக்கு மீசை?..' மனதிற்குள் சபித்தாள் பிரம்மனை.

"என்ன பார்க்கிற?.. பூனை உனக்குப் பிடிச்ச பெட் தானே? வாங்கிக்கோ!"

ஆம், பூனை அவளுக்கு மிகவும் பிடித்த செல்லப்பிராணி தான். ஆனால், அது அவள் இன்ப கற்பனைக்கு எதிரான அர்த்தத்தை அல்லவா கொடுக்கிறது.

'இப்போது இதை வாங்கமாட்டேன் என்றால் வேறு வினையே வேண்டாம்' என்று யோசித்தபடியே கையில் பூனைக்கூடையை வாங்கிக் கொண்டாள் ஷ்ரதா. பூனை சமர்த்தாக கூடைக்குள் இருந்த குட்டி மெத்தைக்குள் விழிமூடி படுத்திருந்தது.

அதனை படுக்கைக்கு அருகிலிருந்த மேசை மேல் வைத்தவள் அவன், "அனதர் கிஃப்ட்" என்றவுடன் கேக்காகத்தான் இருக்கும் என்று திரும்பிப் பார்க்க, மின்சார அதிர்ச்சி.

பூச்சாடி இருக்க வேண்டிய இடத்தில் அவளின் ஜென்ம எதிரி. உலக வழக்கப்படி புழுக்களுக்கு தான் மீன் ஜென்ம எதிரி. ஆனால், இங்கு வீசியின் முன் புழுவாய் நெளியும் ஷ்ரதா என்னவோ அதை ஜென்ம எதிரியாக பாவித்தது வியப்பு தான்.

"எனக்கு மீன்னா பயம்.. ப்ளீஸ் ப்ளீஸ் இந்த ஃபிஷ் டேங்கை வெளியக்கொண்டு போட்டிருங்க.."

"ம்ஹீம் முடியாது.. இனி நீதான் இந்த கோல்டு ஃபிஷ்க்கு ஃபூட் போடுற.."

சன்னமான குரலில் முணுமுணுத்தாள் ஷ்ரதா. "நானா?.. முடியவே முடியாது.."

அவன் மீனை ரசித்துப் பார்த்தபடியே இருந்தான்.

"ப்ளீஸ்ங்க புரிஞ்சிக்கோங்க. எனக்கு இதை பார்த்தாலே சின்ன வயசிலிருந்தே பயம்.."

"தெரியும்"

விழி விரித்து அவனைப் பார்த்தவள், "உங்களுக்கெப்படி தெரியும்?" என்று கேட்க, தன் ஆயுத எழுத்து மார்க் புன்னகையை பதிலாக்கினான் வீசி.

கோல்டு ஃபிஷை பார்த்தவளுக்கு அது பெரிதாகி தன்னை நோக்கி கடிக்க வருவது போலவே எண்ணங்கள் பரிணமிக்க, பயத்தில் போர்வையை தலைவரை மூடி சத்தம் வராமல் அழுதாள். ஒரு சமயத்தில் அழுதபடியே தூங்கியும் போனாள்.

அவ்வப்போது வந்த அவளின் விசிப்புச் சத்தத்திலேயே அவளின் அழுகையை தெரிந்து கொண்ட வீசி, 'நேத்து கார்ல அழுகை வரலைன்னு சொன்ன இல்ல?.. இப்போ நல்லா அழு' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

காலையில் ஷ்ரதா எப்போதும் தான் எழும் நேரத்திற்கு விழித்தபோது, மெதுவாய் பயந்துகொண்டே போர்வையை கீழிறக்கிப் பார்த்தாள். கடவுள் புண்ணியமாய் மீன்தொட்டி அங்கு இல்லை. அறை முழுக்க விழிகளால் அலசியவள் மீன்தொட்டி அங்கு இல்லை என்று ஊர்ஜிதமாகவும் ஆசுவாசமடைந்து தனது
அன்றாட வேலைகளை கவனிக்கச் சென்றாள்.

இன்று தனக்கு பிறந்தநாள் என்பதால் குளித்து புத்தாடை அணிந்து கீழே வந்தவள் பயபக்தியாய் பிரகாஷ் சக்கரவர்த்தியிடமும் அபிராமியிடமும் காலில் விழுந்து ஆசி வாங்கினாள்.

தம்பதியர் இருவருமே, "என்ன விசேஷம்மா?" என்று ஒருசேர புன்னகையோடு வினவினர்.

அவள் தனக்கு பிறந்தநாள் என்று நாணம் இழையோடிய குரலில் கூறினாள்.

"அட! அதான் காலையிலேயே உங்க அம்மா வீட்டுலயிருந்து உனக்கு ஸ்வீட் வந்ததா?" என்று தான் தெளிவு பெற்றது போல் கேட்டார் பிரகாஷ் சக்கரவர்த்தி.

"என்ன மாமா சொல்றீங்க?" என்றவள் புரியாமல் கேட்கவும்,

"ஆமாம்மா" என்று ஒரு பித்தளை வாளியை காட்டினார் அபிராமி.

அவள் ஓடிப்போய் அதனை திறந்துப் பார்த்தாள்.

உள்ளே கருப்பட்டி பணியாரம், பருத்திப்பால், பருப்புப்போலி, பால் கொழுக்கட்டை என்று எல்லாம் அவளுக்குப் பிடித்த பதார்த்தங்களாக இருந்தன.

ஷ்ரதா அபிராமியிடம், "எல்லாம் எனக்குப் பிடிச்ச ஸ்வீட்ஸ் அத்தை" என்றாள், புன்னகையில் முகம் எக்ஸ்ட்ராவாய் ஒரு பவுன் ஜொலித்தபடியே.

"உனக்குப் பிடிச்ச சுவீட்ஸா?.. நேத்து நைட் வருணும் கருப்பட்டி பணியாரம், பருத்திப்பால், பருப்புப்போலி, பால் கொழுக்கட்டைன்னு விதவிதமா அடுக்கித்தான் இதுல ஏதாவது ஒண்ணு காலையில செய்யுங்கம்மான்னு சொன்னான்.. எனக்கு இப்போ தான் எல்லாம் விளங்குது"

அபிராமியின் பேச்சைக்கேட்டதும் ஷ்ரதாவின் நெற்றியில் கோடு விழுந்தது.

SrTeKJ7-u5AVBlQIZATjh6SqxrMQoYj0gQrnlSBk0gJ_RaQMLQLQMHWhFSuoYc9CUb9J1WfO07iLsPx7r2Nc7lscJ1nfVy4AIWiqH3i0CMgPmQtNagG_Gy_mTX3Qw6q3GgNe5CmH


அபிராமி மேலும் உபரிதகவலாய், "இதெல்லாம் உங்க அப்பா தான் கொடுத்து விட்டாராம் ஷ்ரதா" எனவும், கோடு நீங்கி சிரித்துக்கொண்டே மானசீகமாய் தன் தந்தைக்கு நன்றி சொல்லிவிட்டு, கருப்பட்டி பணியாரத்தை எடுத்து ஒரு கடி கடித்தாள் ஷ்ரதா. நெய் மணத்துக்கொண்டு இன்னும் கொண்டா கொண்டா என்றது.

அடுத்து வெதுவெதுப்பாய் இருந்த பருத்திப்பாலை எடுத்து அருந்தினாள். சுக்குவாசம் மூச்சுப்பாதையில் பயணித்தது.

அதிலிருந்து மீண்டு வருவதற்கு முன்னமே மென்மையாய் இருந்த பருப்புப் போலியை பிய்த்தாள். அது வம்பு செய்யாமல் உடனே அவளுக்கு இழைந்துக் கொடுத்தது. ஆசையாய் ஒரு வாய் வைத்தாள். இன்றைய நாள் மோட்சமடைந்து விட்டது போலவே ஒரு உணர்வு தோன்றி மறைந்தது.

கடைசியாய் பால் கொழுக்கட்டையையும் விட்டுவைப்பானேன் என அந்துருண்டை அளவில் ஆடையில்லாமல் ஸ்டீம் பாத் எடுத்துக் கொண்டிருந்த அரிசி உருண்டைகளில் இருந்தும் ஒன்றை கவனமாய் பிடித்துத் தூக்கி வாயில் போட்டாள். அது பஞ்சுபோல் மென்மையாய் கடிபட்டு சொர்க்கவாசல் அடைந்தது.

வருடா வருடம் தனது பிறந்தநாளை சரியாக நினைவு கூர்ந்து முதல் ஆளாக தன் படுக்கையறைக்கு வந்து தனக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறும் தனது தந்தையை இவ்விடத்தில் நினைத்து உள்ளம் பூரித்தாள் ஷ்ரதா. உடன் அவரை இன்று நேரில் காண முடியாத ஏக்கத்தையும் பெருமூச்சில் கரைத்தாள்.

இந்த திருமணத்திற்காகத் தான் ஒரு பெண் எத்தனை சந்தோஷங்களை பலி கொடுக்க வேண்டி இருக்கிறது!

அந்த நிமிஷம் அவள் இதயத்தில் ஒரு தவிப்பும் கண்களில் கண்ணீரும் சுரந்தது.

சிறிது நேரத்தில் காபி எடுத்து வந்த அபிராமி அவள் எழுவதை பார்த்ததும், "நீ உட்காரு, நான் போய் அவனுக்கு கொடுத்துட்டு வர்றேன்" என்று இன்று ஏனோ அவரே மாடிப்படி ஏறினார்.

"மாமியார் குலம் வாழ்க!" என்று வாழ்த்திய ஷ்ரதா, இன்றைய நாளின் இரண்டாவது ஆபத்திலிருந்து தப்பித்தாயிற்கு என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்காத குறையாக உட்கார்ந்திருந்தாள்.

சிறிது நேரத்திலேயே அந்த குதூகலிப்பை காணாமற்போகச் செய்யும் விதமாக கீழிறங்கி வந்தான் வீசி.

எப்போதும் கோட் சூட்டுடனே ஆபிஸிற்கு செல்பவன் இன்று ஆங்காங்கே கிழிந்து தொங்கிய உயர்ரக ஜீன்ஸ், கருநீல வண்ணத்தில் ஷூ, டிசைனர் லினன் முழுக்கை சட்டை, கூலிங் கிளாஸ் என வந்ததைப் பார்த்ததுமே குழம்பிப்போனாள் ஷ்ரதா.

அபிராமி அவளருகே வந்து, "என்ன ஷ்ரதா அவனை இப்படி பார்க்கிற?.. இன்னைக்கு அவன் ஆபிஸ் போகப் போறதில்லை.. ஆமா, நான் தான் உனக்கு இன்னைக்கு பிறந்தநாள்னால அவனை லீவ் போடச்சொல்லி உன்னை வெளிய எங்கேயாவது கூட்டிட்டு போகச்சொன்னேன்.. இப்போ உனக்கு சந்தோசம் தானே?.." என்று அவள் நாடியை பிடிக்கவும்,

'சொதப்பிட்டீங்களே அத்தை' என்று மனம் குமுறியவள், "ரொம்ப சந்தோசம் அத்தை" என்று கண்ணை சுருக்கிப் புன்னகைத்தாள்.

சற்று நேரத்திற்கு முன்பு 'மாமியார் குலம் வாழ்க!' என்று தான் சொன்ன வாசகத்தையும் வாபஸ் பெற்றாள்.

இந்தத் திடீர் பிரச்சினையிலிருந்து எப்படி தப்பிக்க என்று யோசித்துக் கொண்டிருந்தவள், பின் ஒரு வழி கண்டவளாய், "அத்தை, ப்ளீஸ் அத்தை நீங்களும் எங்கக்கூட வாங்க அத்தை.." என்று சிறுமியாய் அடம்பிடித்தாள்.

அவளைப் பார்த்து, "உன்னை மாதிரி மருமக கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும் ஷ்ரதா.." என்று கண்களில் நீர் கோர்த்த அபிராமி, "பாருடா என் மருமகளை" என்று வீசியிடம் அவளை மெச்சிக் கொண்டார்.

வீசி அவரின் அறியாமையை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவனாக, "ஆமா! ஆமா! உங்க மேல ரொம்பப் பாசம் தான் உங்க மருமகளுக்கு" என்று நக்கலாய் புன்னகைத்தான்.

அபிராமி ஷ்ரதாவிடம், "இல்லடா, நான் இன்னொரு நாள் வரேன்.. இன்னைக்கு நீங்க மட்டும் போயிட்டு வாங்க" என்று பிடிவாதமாய் சொல்லிவிட, வாடிய முகத்துடன் சரியென்று குனிந்தபடியே தலையாட்டினாள் ஷ்ரதா.

டைனிங் டேபிளில் சாப்பிட உட்கார்ந்த வீசியைப் பார்த்து, "நீயும் உட்காரு ஷ்ரதா" என்ற அபிராமி, அவன் தட்டில் உணவுப் பதார்த்தங்களை வைத்து, எல்லாம் ஷ்ரதாவின் வீட்டிலிருந்து வந்தது என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல, ஷ்ரதா பார்த்திருக்கும் போதே அனைத்தையும் குப்பைத் தொட்டியில் போய் கொட்டினான் வீசி.

ஷ்ரதாவிற்கு வாயில் வைத்த பதார்த்தம் தொண்டைக்குள் செல்ல மறுத்தது. 'ஏன்? அப்படி என் வீட்டுல இருக்கிறவங்க மேல என்ன கோபம் இவருக்கு?.. ஏன் அவங்களை விரோதி மாதிரி நினைக்கிறாரு இவரு?..' என்று மனதிற்குள்ளேயே ஆவேசப்பட்டாள்.

சமையலறையிலிருந்து தோசையுடன் வந்த அபிராமி, "எங்கேடா? அதுக்குள்ள எல்லாத்தையும் சாப்பிட்டுட்டியா?" என்று ஆச்சரியமாய் கேட்க, "ஆமா, ரொம்ப டேஸ்ட்டா இருந்தது அதான்.. நீங்களும் தான் ஸ்வீட் செய்றீங்களே.." என்று அலுத்துக் கொண்டான் அவன்.

"போதும் போதும் ரொம்ப உன் மாமனார் வீட்டுக்கு ஜால்ரா போடாத.. நாளைக்கு உன்னையும் ஷ்ரதாவையும் அவங்க பொண்ணுவீட்டு விருந்துக்கு கூப்பிட்டிருக்காங்க.. அங்கப்போய் போடவும் வேணும்.. மிச்சம் வச்சிக்க.." என்று அவன் தட்டில் தோசையை வைத்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டார்.

ஷ்ரதாவிற்கு மனம் தாளவில்லை. "எவ்ளோ பாசமா கொடுத்து விட்டிருப்பாங்க.. ஏன் இப்படி அநியாயமா குப்பைத் தொட்டிக்குள்ளப் போய் கொட்டினீங்க?" என்று துக்கம் தொண்டை அடைக்கக் கேட்டாள்.

"விஷம்னு தெரிஞ்சே எவனாவது சாப்பிடுவானா?"

அவன் வார்த்தைகள் தான் அமிலமாய் பட்டு அவள் காதை எரிய வைத்தன.

ஷ்ரதாவிற்கு தன் ஆத்திரத்தையும் ஆதங்கத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. தட்டைப் பார்த்து பிசிரற்ற குரலில் சொன்னாள். "விஷமா?.. எங்க வீட்டுல இருக்கிறவங்களுக்கு உங்க மேல என்ன குரோதம் இருக்கப்போகுது விஷம் வைக்கிற அளவுக்கு?.. என்னை கேட்டா நீங்க தான் இப்போ அவங்களுக்கு விஷம் வைக்கிற அளவுக்கு வெறுப்பைக் கக்கிக்கிட்டு இருக்கீங்க.."

"சாப்பிடும் போது பேசக்கூடாதுன்னு உனக்குத் தெரியாது?.."

"இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள்.. என்னை சந்தோசமா வச்சிக்கலைன்னா கூட பரவாயில்லை.. அட்லீஸ்ட் நோகடிக்காமலாவது இருக்கலாமில்லையா?.."

"உனக்கு காது கேட்குமில்ல?"

'ச்சே! எப்பவும் அவர் பேசினது தான்' என்று மனதிற்குள் சலித்தபடியே, சாப்பிட்டு முடித்து அபிராமி வழியனுப்பி வைக்க அவனுடன் காரிலேறி புறப்பட்டாள் ஷ்ரதா.

அப்பயணத்தால், அன்றைய நாளின் முடிவில் தனது வாழ்நாளிலேயே மோசமான பிறந்தநாள் இது தான் என்று அவள் நினைக்கும் அளவிற்கு செய்துவிட்டான் வீசி.


காதல் கணம் கூடும்...


உங்களது விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

இவ்வளவு தூரம் வந்துட்டு பூஜை அறையை எட்டிப் பார்க்காம போனா எப்படி?

போய் எட்டிப் பார்த்துட்டு வீசியை அர்ச்சிச்சிட்டு வாங்க😊

கருத்துத்திரி,
பூஜை அறை
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 7​


காரிலேறிப் புறப்பட்டவர்கள் கீரைத்துரை வழியே சிந்தாமணியை அடைந்த போது 'அத்தான் இந்தப் பக்கம் ஏன் காரை ஓட்டிட்டு போறாங்க?' என்று சிந்தித்தபடியே வந்தாள் ஷ்ரதா.

அங்கு அவன் ஒரு பெரிய பித்தளை கேட் பூட்டப்பட்ட வீட்டை போய் அடைந்த போது பெயர் பலகையில் 'ராஜ மாணிக்கம்' என்று பொறிக்கப்பட்டிருப்பதைக்கண்டு, "என்னங்க, இவர் வீட்டுக்கு எதுக்கு நம்ம வந்திருக்கோம்?.. இவரு சரியான ரவுடி.. வாங்க வேற எங்கேயாச்சும் போகலாம்" என்று பதைபதைப்புடன் சொன்னாள் ஷ்ரதா.

அவன் அவள் பேச்சை கேட்பதாக இல்லை. நேரே அந்த வீட்டிற்குள்ளேயே சென்றான். வீட்டின் காவலாளி பழக்கமானவன் போல் வீசிக்கு வணக்கம் வைத்தது கூட அவள் கருத்தில் பதியத்தான் செய்தது.

காரிலிருந்து இறங்கியவர்களை ஒரு ஐம்பதுவயது மதிக்கத்தக்க பெண்மணி வந்து ஆரத்தி சுற்றி வரவேற்றார். அவர் முகம் பல்ப் போட்டது போல் புன்னகையில் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

அவரருகில் நின்றிருந்த, ஷ்ரதாவின் வயதையொத்த பெண்ணொருத்தி அவளை முறைத்துப் பார்த்ததைக்கண்டு ஒரு மாதிரி கூச்சமாய் இருந்தது ஷ்ரதாவிற்கு.

ஆரத்தி சுற்றி முடித்ததும் அவர்களை தன் ஆட்களின் அறிவிப்பால் வாசல்வரை வந்து வரவேற்றார் ராஜ மாணிக்கம்.

ஜிப்பாவும் கைலியுமாய் தான் வந்திருந்தார். அவர் கழுத்தில் போட்டிருந்த சங்கிலிகளின் எடை ஒரு கொழுத்தப் பூனையின் எடையை ஒத்திருக்கும். விரல்களில் நாதஸ்வர தவில்காரர்கள் போல் மோதிரங்கள் வேறு.

கண் ரப்பைச் சுருக்கத்தை வைத்துப்போட்ட வயது கணிப்பில் அவரின் சிகையும் மீசையும் டையில் குளித்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

ஆனால், ஐம்பத்தைந்து வயதிலும் மல்யுத்தவீரன் போல் இன்னும் உடலை கட்டுகுலையாமல் பராமரித்திருந்தார் மனிதர்.

அங்கங்கு நின்றிருந்த முண்டா பனியன் முரட்டு உருவங்கள் எல்லாம் எமனின் வேலையாட்கள் போலவே படுபயங்கரமாய் தெரிய, வீசியின் முழங்கையை இறுகப் பற்றிக்கொண்டாள் ஷ்ரதா.

அவள் பிறந்த வீட்டிலும் இது போல் அடியாட்கள் உண்டும் தான். ஆனால், அவர்களெல்லாம் பழகிய மனிதர்கள் என்பதாலோ என்னவோ ஷ்ரதா இந்தளவிற்கு அவர்களைப் பார்த்து மிரண்டதில்லை.

'அத்தான் ஏன் இவங்க கூட எல்லாம் ஃப்ரெண்ட்ஷிப் வச்சிருக்காங்க?.. இவருக்கு ஃப்ரெண்ட்ஸாக வேற ஆட்களே கிடைக்கலையா?.. அப்பாவோட பரம விரோதி இந்த ராஜ மாணிக்கம்.. இவர் கூடப்போய் பழக்கம் வச்சிருக்காரு பாரு.. சே! அத்தானுக்கு விவஸ்தையே இல்ல..' என்று அக உலகில் பேசிக்கொண்டிருந்தவளை, தலையாட்டி ஹாஹாஹா போட்டு புற உலகிற்கு இழுத்துவந்தார் ராஜ மாணிக்கம்.

"என்னம்மா மகாராணி! வாம்மா! என்னைய ஞாபகம் இருக்குதா?.. பனிரெண்டு வருஷத்துக்கு முன்னாடி உன்னை கடத்திட்டு வந்து உங்கப்பனை பயமுறுத்தினேனே?.." என்று தன்னை அவர் நினைவு கூர்ந்தபோது, அவள் முகம் அருவருப்புக் காட்டியது.

'என்ன மாதிரியான நினைவு கூறல் இது?.. மீண்டும் நினைத்துப் பார்க்கக்கூடிய இனிய சம்பவமா அது?.. அப்பா அப்போது என்னை மீட்டபோது எத்தனை தடவை மறந்திடு ராசாத்தி என்றார்.. நானும் மறந்துவிட்டதாய் நினைத்தேனே.. இதோ இவர் சொல்லி தான் நான் மறக்கவில்லை என்பது எனக்கேத் தெரிகிறது'

ஞாபகம் உள்ளதென வேண்டாவெறுப்பாக தலையசைத்துவிட்டு, வலிய புன்னகைத்தபடி அவனுடன் உள்ளே நுழைந்தாள் அவள்.

அவ்வீட்டின் வரவேற்பறையானது வெள்ளை நிற பளிங்கு கற்களால் பளிச்சென்று இருந்தது.

விலை உயர்ந்த பட்டினால் ஆன மூன்று சோபா செட்டுகள் யூ வடிவில் அறையின் மையத்தை ஆக்கிரமித்திருக்க, சோபா செட்டுகளின் மையத்தில் இருந்த கண்ணாடி டீபாயில் பிளாஸ்டிக் பூச்செடி ஒன்று புன்னகைப் பூத்திருந்தது.

விழிகள் கபடியாட அனைத்தையும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த ஷ்ரதாவிற்கு சுவற்றில் ஆங்காங்கு தொங்கவிடப்பட்டிருந்த படங்களிலிருந்து ராஜ மாணிக்கத்தின் கடவுள் பக்தி தெரிந்தது.

வந்த விருந்தாளிகளுக்கு முதலில் பழச்சாறு கொடுக்கும்படி பணித்தார் ராஜ மாணிக்கம்.

கையில் கனத்த பழச்சாறை குடிக்கலாமா வேண்டாமா என்று ஷ்ரதா யோசித்துக் கொண்டிருந்த வேளை, ஒரே மூச்சில் குடித்து முடித்திருந்தான் வீசி.

அதைப் பார்த்து, 'எங்க வீட்டுப் பலகாரம் விஷம்.. இவங்க வீட்டு பழச்சாறு மட்டும் அமிர்தமோ?' என்று வீசியிடம் மனதிற்குள் நியாயம் கேட்டுக்கொண்டிருந்தாள் ஷ்ரதா.

"என்னம்மா மகளே! மாம்பழ ஜூஸ் எப்படி?.. எல்லாம் பின்னாடி இருக்க நம்ம தோட்டத்துப் பழத்துல போட்டது தான்.. என்னம்மா மகளேன்னு கூப்பிட்டதும் இந்த முழி முழிக்கிற?.. வீசி எனக்கு மருமகன்னா நீ எனக்கு மக தானே?.. ம்ம்! என் பொண்ணுக்கு கிடைக்காத வரம்.. உனக்கு கொடுத்து வச்சிருக்கு.." என்றவர் ஏக்கக் குரலில் கூறவும் தான், வாசலில் அந்தப்பெண் ஏன் தன்னை முறைத்துப் பார்த்தாள் என்பது விளங்கியது ஷ்ரதாவிற்கு.

ஊகா முள்ளை முழுங்கியது போலவே நெளிந்துகொண்டு உட்கார்ந்திருந்தவள், 'இங்க ஏன் அத்தான் நம்மளை கூட்டிட்டு வந்தாங்க?' என்று எண்ணும் போதே, ராஜ மாணிக்கம் தான் வீசியுடன் தனியாக பேச வேண்டும் என்பது போல், "ஷ்ரதாவை உள்ளக்கூட்டிட்டு போய் சுத்திக்காமி கமலா" என்று தன் மனைவியை ஏவினார்.

ஷ்ரதாவும் கொஞ்சம் தயங்கியபடியே, "வாம்மா" என்ற கமலாவுடன் எழுந்து சென்றாள்.

ராஜ மாணிக்கம் இந்த ஒரு வாரம் வீசியை சந்திக்காததால் பேசாமல் விட்ட கதைகளையெல்லாம் சுவாரசியமாய் பேசிக்கொண்டிருக்க, ஷ்ரதா சென்று வெகுநேரம் ஆகிவிட்ட பின்பும் அவரிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்றே தயங்கிக் கொண்டிருந்தான் வீசி.

அதை புரிந்து கொண்டவராய் ராஜ மாணிக்கம் படீரென, "அட! இப்போ என்ன ஆகிப்போச்சி வீசி?.. இதுவரை நீ நிமிர்ந்து என் கண்ணைப் பார்த்து பேசி தான் நான் பார்த்திருக்கேன்.. இப்படி தலை குனிஞ்சு இல்ல.." என்றதும், தெம்பும் துணிவும் வரப்பெற்றது போல் நிமிர்ந்து உட்கார்ந்தான் வீசி.

அவர் தொண்டையைச் செருமி அவனை பேச ஊக்கினார்.

"மாணிக்ஜி.." என்று தொடங்கியவன் மீண்டும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகியவனாய், "இல்ல மாணிக்ஜி.. உங்களுக்கு கொடுத்த வாக்கை என்னால காப்பாத்த முடியலைன்னு தான்.." என்று கூனிக் குறுகினான்.

ராஜ மாணிக்கம் அறை அதிர சிரித்து முடித்தவராக பின்பு பேசத் தொடங்கினார். "அதான் உன் சங்கடத்துக்குக் காரணமா வீசி?.. இப்பவும் என்ன? எனக்கு கொடுத்த வாக்கை நீ காப்பாத்திட்டாப் போச்சி.. என் பொண்ணை ரெண்டாம் தாரமா நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட எனக்கு சம்மதம் தான் வீசி.. அப்படி செஞ்சாலும் நாம அந்த விஜயாதித்தனை தோற்கடிச்ச மாதிரி தானே ஆகும்?" என்றவர் சொல்லவும் சட்டென்று வீசியின் தோள்களிரண்டும் இரண்டு அங்குலம் உயர்ந்தன.

பாவம்! இவர்களின் இந்தப் பேச்சு எதுவும் ஷ்ரதாவிற்கு தெரியாது. அவள் மேலே ராஜ மாணிக்கத்தின் மகள் வித்யாவுடன் வேறொரு விவாதத்தில் இருந்தாள்.

தன் அன்னையின் உத்தரவில் அவ்வீட்டை ஷ்ரதாவிற்கு சுற்றிக் காண்பித்து கொண்டிருந்த வித்யா இறுதியாக அவளைத் தன் படுக்கையறைக்கு அழைத்துச் சென்ற போது தான் பேயறைந்தது போல் ஒரு நொடி ஆடிப்போனாள் ஷ்ரதா.

அங்கு கட்டிலுக்கு பின்புறமிருந்த சுவரில் விதவிதமாய் சிரித்துக் கொண்டிருந்தான் வீசி.

புகைப்படத்திற்குள் புகைப்படமாய் சிரித்துக் கொண்டிருந்த வீசியைப் பார்த்ததும், "முருகா! ஏன் என்னோட ராசிபலன் இன்னைக்கு இவ்வளவு மோசமா இருக்கு?" என்று ஷ்ரதா முணுமுணுத்ததை நிச்சயம் வித்யா கேட்டிருக்க வாய்ப்பில்லை.

ஷ்ரதாவிற்கு வித்யா இதை தன்னிடம் காண்பிக்கவே மனம் உவந்து வீட்டை சுற்றிக் காண்பிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாய் தோன்றியது.

மேசை எங்கிலும் அவன் உபயோகிக்கும் பவுடர், சென்ட், ஷேவிங் செட், வாட்ச், கூலிங் கிளாஸ் என்று வீற்றிருக்க, அவளின் காதலின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட ஷ்ரதா, "நீங்க.. நீங்க அவரை லவ் பண்ணுனீங்களா?" என்று கேட்டாள். ஆம், தெளிவாய் வாக்கியத்தை இறந்த காலத்தில் அமைத்திருந்தாள் அவள்.

ஆனால், வித்யாவோ அவளுக்கும் மேல் உள்ளவளாய், "ஆமா, நான் அவரை லவ் பண்ணிக்கிட்டு இருக்கேன்" என்று நிகழ்கால சொற்றொடரைப் பிரயோகித்தாள்.

விசுக்கென்று வந்த கோபத்தில், "அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சி.. அவருக்கு இப்போ பொண்டாட்டியா நான் இருக்கேன்.." என்றாள் ஷ்ரதா.

அதற்கு வித்யாவும் தாட்பூட் என்றாள். "ஸோ வாட்?.. முன்னாடி அவரு என்னை கல்யாணம் பண்ணிக்கிறதா எங்கப்பாவுக்கு வாக்கு கொடுத்திருக்காரு.. நிச்சயம் என்னை கல்யாணம் பண்ணிக்கிவாரு.." என்று நம்பிக்கை தெரிவித்தாள்.

ஷ்ரதா பதிலளிக்க சற்றும் தயங்கவில்லை. "உங்கப்பாவுக்கு வாக்கு கொடுத்தவரு என்னை ஏன் கட்டிக்கணும்?.. ஒண்ணு உன்னை பிடிக்காம இருந்திருக்கணும்.. இல்ல என்னை அவருக்கு பிடிச்சிருக்கணும்.." என்று உதட்டைச் சுளித்தாள்.

நகைச்சுவை கேட்டவள் போல் திடீரென விழுந்து விழுந்து சிரித்த வித்யா, "உனக்கென்ன மனசுல பெரிய உலக அழகின்னு நினைப்பா?.. உண்மையை சொல்லு அவரு உன்னை இதுவரை எத்தனை தடவை பொண்டாட்டியா நெருங்கியிருப்பாரு?" என்றதும், 'எங்க பெட்ரூம் விஷயம் இவளுக்கு எப்படி தெரியும்?' என்று அதிர்ச்சியாக அவளைப் பார்த்தாள் ஷ்ரதா.

அந்த அதிர்ச்சி முகமே வித்யாவை மேலும் பேசத்தூண்டியது.

"வீசி எங்கப்பாவோட ஆளு.. அவரு எப்படி எங்கப்பாவுக்கு எதிரி பொண்ணான உன்னை கல்யாணம் பண்ணிப்பாரு?.. உங்கப்பாவுக்கு வீசியைப் பார்த்து பயம்.. எங்க வீசியும் எங்கப்பாவும் சொந்தக்காரங்களாகிட்டா, வீசி எங்கப்பாவோட வாரிசாகிடுவாறோன்னு பயந்து தான் வீசியை கட்டாயப்படுத்தி உன்னை கல்யாணம் பண்ண வச்சாரு உங்கப்பா"

"கட்டாயப்படுத்தியா?"

"என்ன தெரியாத மாதிரி கேட்கிற?.. வீசியோட அக்காவை நீங்க அடிச்சு துன்புறுத்தலை?.. வீசி உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் அவங்க உங்க வீட்டுல வந்து வாழ முடியும்னு பிளாக் மெயில் பண்ணலை?.."

"இல்ல, சத்தியமா இந்த விஷயம் எதுவும் எனக்கு தெரியாது.."

"ஓஹ் தெரியாதா?.. சரி இப்போ தான் தெரிஞ்சிருச்சே.. அவரை விட்டு விலகிரு.."

"அதெப்படி முடியும்?.. அவருக்கு விருப்பமில்லைனாலும் நடந்த கல்யாணம் நடந்தது தானே?.."

"ஹேய்! லூசா நீ?.. அவருக்கு உன்னைப் பிடிக்கலை.. புரியுதா?.. இதோ இப்போக் கூட காலைல வீசி இங்க வரதா சொன்னப்போ எங்கப்பா என்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா?.. வீசியை எப்படியாவது ரெண்டாவது கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறேன்னு தான் சொன்னாரு.."

'இவள் ஏன் இப்படி படையப்பா நீலாம்பரியைப் போல் நடந்து கொள்கிறாள்?.. எப்படியிருந்தாலும் படத்தில் ரஜினிக்கு ஜோடி சௌந்தர்யா தானே!.. ஆனால், என் கதையில் அப்படி நடக்குமா?.. இல்லை, அவருக்குத் தான் என்னைப் பார்த்தாலே காஞ்சரங்காயாய் கசக்குமே..' என்று மனதிற்குள்ளேயே புலம்பிய ஷ்ரதா, "இல்ல, இன்னொரு கல்யாணத்துக்கு எல்லாம் அவரு சம்மதிக்க மாட்டாரு" என்றாள்.

அவள் இதை வித்யாவுக்கு சொன்னாளா இல்லை தனக்குத்தானே சொல்லிக்கொண்டாளா என்று தெரியவில்லை.

"இங்கப்பாரு! உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டும் பிரம்மச்சாரியா இருக்கிறவரைப் பார்த்தா உனக்கு பாவமாத் தெரியலை?.."

அமைதியாக நின்றாள் ஷ்ரதா.

"நீயும் ஒரு பொண்ணா?.."

'என்ன நான் கேட்க வேண்டிய கேள்வியை இவ கேட்கிறா?'- ஷ்ரதாவின் மனசாட்சி

"தயவு செஞ்சு உன்னையும் உன் குடும்பத்தையும் அவர் அடிமனசுலயிருந்து வெறுக்கிறாருங்கிறதை புரிஞ்சிக்கோ.. சும்மா அடம் பிடிக்காத.. நீ பேசுறதைப் பார்த்தா உனக்கு உண்மை எதுவும் தெரியாதுன்னு தான் தெரியுது.. அவரை எனக்கு விட்டுக் கொடுத்திரு.."

'விட்டுக் கொடுக்க அவர் என்ன கார்ப்பரேஷன் அடி பம்பா?' இதுவும் ஷ்ரதாவின் மனசாட்சியே.

"உன்னை நான் மொத்தமா பிரிஞ்சுப் போக சொல்லலை.. எனக்கும் கொஞ்சம் அவரை விட்டுக்கொடுன்னு தான் கேட்கிறேன்.."

'ஒரு தாலி வரம் வேண்டி வந்தேன் தாயம்மா ரேஞ்சுக்கு கெஞ்சிக்கிட்டு இருக்காளே சண்டாளி..' புரிந்திருக்குமே யாரென்று.

"என்ன இவ்வளவு கெஞ்சுறேன், கல்லு மாதிரி நிற்கிற?.."

"இல்ல.. இல்ல.. என்னால முடியாது.. அவர் எனக்கு மட்டும் தான் சொந்தம்.. என்னால அவரை யாருக்கும் எதுக்கும் விட்டுக் கொடுக்க முடியாது.. நீங்க அவரை மறந்துருங்க வித்யா.. அது தான் எல்லாருக்கும் நல்லது.."

"ஏய்! என்ன உன்கிட்ட கெஞ்சுறதால என்னை இளக்காரமா நினைக்கிறியா?.. நான் ஒண்ணு ஆசைப்பட்டா அதை அடையாம விடமாட்டேன்.. நான் ஆசைப்பட்டதை நானே மறந்தாலும் எங்க அப்பா மறக்க மாட்டாரு.."

"என்ன மிரட்டுறீங்களா?"

"அப்படித்தான் வச்சிக்கயேன்.. இங்க எங்கப்பாக்கிட்ட வேலை பார்க்கிறவங்கயெல்லாம் பாப்பா பாப்பான்னு என் மேல உசுரையே வச்சிருக்காங்க.. நான் என் சுண்டு விரலை அசைச்சா போதும், உன்னை தடையமே இல்லாம நிமிஷத்துல முடிச்சிருவாங்க.."

"உங்களால முடிஞ்சதைப் பண்ணிக்கோங்க.." என்ற ஷ்ரதா வேகமாக படியிறங்கி வர, ராஜ மாணிக்கத்திடம், "நீங்க சொல்றதை யோசிக்க எனக்கு கொஞ்சம் டைம் வேணும் மாணிக்ஜி.." என்று கேட்டுக்கொண்டிருந்தான் வீசி.

"ம்ம், எவ்ளோ டைம் வேணுமோ எடுத்துக்கோ வீசி.. ஆனா நல்ல முடிவா தான் சொல்லணும்.." என்றார் ராஜ மாணிக்கம்.

அவர்களின் இப்பேச்சை கடைசிப்படியில் நின்றிருந்த ஷ்ரதா கேட்டுவிட்டு பின்னால் திரும்பிப் பார்க்க, பத்து படிகளுக்கு மேலே நின்றிருந்த வித்யா, 'எங்கப்பாவை பத்தி முன்னாடியே நான் சொல்லலை?' என்று விழியசைவிலேயே அவளிடம் கேட்டாள்.

z0ABKzD1RISKHizaI8N1TspytTx3gxf2_DRBNsSOH26fd7RfOyrw2_9RKKgU_1K-_SmNrCqEE0Ab3gxhHLkK6CMP4-S7w_w_AAiCOzNuF2MrXuZd8-ksrSFvdHuY8CCrrJ3zaXXO


காதல் கணம் கூடும்...

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

கருத்துத்திரி,
https://www.sahaptham.com/community/threads/நரகமாகும்-காதல்-கணங்கள்-comments.470/
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 8​



ராஜ மாணிக்கத்தின் பேச்சு ஷ்ரதாவை கடுப்பேற்ற, விறுவிறுவென்று வந்து வீசியின் அருகில் நின்று கொண்டாள்.

அவளிடம், "என்னம்மா வீட்டை சுத்திப்பார்த்திட்டியா?" என்றார் ராஜ மாணிக்கம்.

"ம்ம்" என்று வேண்டாவெறுப்பாய் தலையசைத்தாள் அவள்.

"நான் உன் அப்பாவுக்கு மட்டும் தான்மா எதிரி.. உனக்கில்ல?.. அதுவும் பிசினஸ்ல தான் எதிரி" என்று சிரித்தார் அவர்.

'ஆமாம், பேச்செல்லாம் நல்லா சர்க்கரையா தான் இருக்கு' என்று மனதிற்குள்ளேயே பொருமிக்கொண்டாள் ஷ்ரதா.

பின், அவர்களைவிட்டு அசையவே மாட்டேன் என்பது போல் சோபாவில் தன் கணவனின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

அதன் பின் வீசியும் ராஜ மாணிக்கமும் பேசிய வியாபார பேச்சில் 'ஏன்டா இவர்கள் அருகில் வந்து உட்கார்ந்தோம்?' என்று எண்ணுமளவிற்கு ஆகிவிட்டது அவளுக்கு.

அவளின் இவர்கள் பேச்சை எப்போது முடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பானது பள்ளிபருவத்தில் மதியத்திற்கு மேலான கணக்கு வாத்தியாரின் வகுப்பில் இந்த அராஜகம் எப்போது முடியும் என்று காத்திருந்ததற்கு ஒப்பாக இருந்தது.

அச்சமயமாக ஆபத்தாண்டவனாய் கமலா வந்து, "என்னங்க, சாப்பாடு ரெடி! ரெண்டுபேரையும் கூட்டிட்டு வாங்க" என்றார்.

ராஜ மாணிக்கத்தின் வீட்டில் குடும்பத்தினர் மட்டும் தனித்து சாப்பிடும் வழக்கம் கிடையாது.

தன்னிடம் வேலைப் பார்க்கும் ஆட்களையும் தங்களுடன் அமரவைத்து வயிறு முட்ட முட்ட சாப்பிட வைத்து அழகு பார்ப்பார் ராஜ மாணிக்கம்.

அந்த பெரிய சாப்பாட்டுமேசையில் தலைமையான ஆர்ம் சேரில் ராஜ மாணிக்கம் உட்கார, பக்கத்தில் வித்யா வந்து அமர்ந்தாள்.

அடுத்து அவளருகே வீசியும் ஷ்ரதாவும் அமர, மற்ற வேலையாட்களையும் சாப்பிடும்படி அழைத்து வந்தார் கமலா.

ஐந்து நிமிடத்திலேயே அனைத்து நாற்காலிகளும் நிரம்பிவிட, வேலையாட்கள் இருவரை சேர்த்துக்கொண்டு அனைவருக்கும் பரிமாறினார் கமலா.

அனைவருக்கும் வாழையிலையிலேயே சாப்பாடு பரிமாறப்பட்டது. ஆடு, கோழி, காடை, கௌதாரி, மீன் என்று ஒரு அசைவ உணவகத்தையே வீட்டிற்குள் இறக்கியிருந்தார் கமலா.

எப்போதும் சிரித்த முகமாகவே இருக்கும் கமலாவைப் பார்த்து அவருக்கு வாயே வலிக்காதா என்று யோசித்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா.

அவள் இந்த யோசனையுடனே கொஞ்சம் கொஞ்சமாய் கொரித்துக் கொண்டிருக்க, அடியாட்கள் அனைவரும் தங்கள் உடல்வலுவிற்கு ஏற்ப வெளுத்துக்கட்டிக் கொண்டிருந்தனர்.

வீசி சாப்பிடும் போது குடித்து விட்டு வைத்த தண்ணீர் தம்ளரிலேயே வித்யாவும் நீர் அருந்த, "அது அவர் குடிச்சது" என்று பரிதவித்துக் கூறினாள் ஷ்ரதா.

"ஓ! சாரி கவனிக்கலை.. காரமா இருந்ததா கைக்கு பக்கத்துல இருந்ததேன்னு எடுத்து குடிச்சிட்டேன் " என்று கூறி அவளைப் பார்த்து கண்ணடித்தாள் வித்யா.

'பொய்.. பொய்.. பச்சை, மஞ்சள், விப்ஜியார் பொய்.. புழுகுனி மூட்டை.. நிச்சயம் பிரம்மன் இவளை சரஸ்வதிக்கிட்ட கோபமா இருந்தபோது தான் படைச்சிருக்கணும்.. இல்லைன்னா இப்படி ஒருத்தியா?' என்று அவளை மனதிற்குள் தாளித்தெடுத்தாள் ஷ்ரதா.

பின், அவள் ராஜ மாணிக்கத்திடம், "அன்க்கிள், உங்கப்பொண்ணு எதை வித்தாங்கன்னு அவங்களுக்கு வித்யான்னு பேர் வச்சீங்க?" என்று அந்த ஆத்திரத்துடனேயே கேட்கவும், ஆனானப்பட்ட வீசியே அந்தக் கேள்வியில் பக்கென்று சிரித்துவிட்டான்.

அவர் அவளை, "தமாசா பேசறேம்மா" என்றபோது, காதில் புகைவந்தது வித்யாவுக்கு.

கமலாவின் அளவு மீறிய கவனிப்பில் வீசிக்கு ஒரு எல்லைக்கு மேல் சாப்பிட முடியாமல் போகவும் பாதியோடு இலையை மூடி வைக்கப்போனான்.

அவனை, "அய்யோ! என்ன வீசி பாதி சாப்பாட்டோட மூடி வைக்கப் போறீங்க?.. இருங்க சாப்பாட்டை வேஸ்ட் பண்ணக்கூடாது" என்று அவன் இலையிலிருந்த சாப்பாட்டை எடுத்து தன் இலையில் போட்டுக்கொண்டாள் வித்யா.

யாரும் அவளை எதுவும் சொல்லவில்லை. வீசியும் கண்டுகொள்ளவில்லை.

'சே! அம்மா அப்பா பக்கத்துல இருந்தும் இப்படி அநாகரீகமா நடந்துக்கிறாளே.. என்ன பொண்ணு இவ?.. நல்லா அடிச்சு வளக்காம.. எனக்கு மட்டும் இப்படி ஒரு பொண்ணு பிறக்கட்டும்.. அடிச்சி துவைச்சி எடுத்திரமாட்டேன்.. எனக்கொரு பொண்ணா?.. ஆமா இன்னும் ஒரு முத்தம் கூட வாங்கலை.. இதுல எங்கிட்டு பொண்ணு வாங்குறது?" என்று அவள் மனசாட்சியே அவளை இடித்துரைத்தது. இடக்கையும் தானாக அவள் வயிற்றை தடவிப் பார்த்துக்கொண்டது.

அதைப் பார்த்துவிட்ட வீசி, "வயிறு நிறைஞ்சிடுச்சினா எந்திரி.." என்று நாற்காலியிலிருந்து எழும்போது மந்திரம் போல் அவள் காதில் முணுமுணுத்துவிட்டுப் போனான்.

எவ்வளவு முயன்றும் முடியாமல் போராடி அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்பே தானும் சாப்பிட்டு முடித்த ஷ்ரதா, நிறைமாத கர்ப்பிணி போல் ஆடி அசைந்து மெதுவாக ஹாலுக்கு நடந்து வந்தாள்.

கமலா வீசியிடம் வெற்றிலை பாக்குத்தட்டை நீட்டியபடியே தன் மகளிடம், "வித்யா, வீசிக்கும் ஷ்ரதாவுக்கும் ஏதாவது காலியான ரூம் இருந்தா காட்டும்மா, தூங்கட்டும்.." என்றார்.

அவளும் "ம்ம்" என இருவரையும் தன்னறைக்கே அழைத்துக்கொண்டு சென்றாள்.

"கடங்காரி! ஒட்டி வச்சிருக்க போட்டோஸை காமிக்கணும்னே வேணும்னே அவ ரூமுக்கு கூட்டிக்கிட்டுப் போறாப்பாரு.. அப்படியே அவர்கிட்ட நான் உங்க மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கேன் பாருங்க வீசின்னு அனுமார் மாதிரி நெஞ்சைத் திறந்து காமிக்க நினைக்கிறாப் போல.. கிராதகி" என்று திட்டித்தீர்த்தாள்.

ஷ்ரதா, அந்தப் போட்டோக்களை பார்த்து வீசி என்ன சொல்வான் என்றே பதைபதைக்க, உள்ளே நுழைந்ததுமே சரேலென கட்டிலில் போய் விழுந்து விட்டான் வீசி. அதில் மங்கையர் இருவருக்குமே 'சப்'பென்றாகிவிட்டது.

ஷ்ரதா, 'இவர் ஒருத்தரு.. ஒண்ணத்துக்கும் ஒரு ரியாக்சனும் காட்ட மாட்டாரு..' என்று எப்போதும் போல் சலித்துக்கொண்டே, கதவை சாற்றுவது போல் நின்றுகொண்டு வித்யாவை வெளியேறச் சொன்னாள்.

வித்யா முகத்தை ஒரு முழத்திற்கு தூக்கி வைத்துக்கொண்டு வெளியேறினாள். அவள் பின்னால் நின்று 'வெவ்வெவ்வே' என்று அழவம் காட்டிவிட்டு திருப்தியாக கதவை சாற்றி தாழ்போட்டு அவன் அருகில் வந்து படுத்துக்கொண்டாள் ஷ்ரதா. ஆனால், தூக்கம் வருவேனா என்றது. தன் வாழ்க்கை தன் கண்முன்னேயே கை நழுவிப்போகும் நிலையில் தான் இருப்பதை உணர்ந்து அதை எப்படி சமாளிப்பது என்றே யோசித்துக்கொண்டிருந்தாள் ஷ்ரதா.

அவளின் எண்ணவோட்டத்துடனேயே காலமும் ஓட, சட்டென்று மாலை நான்கு மணியாகியது.

தூங்கி ஃப்ரெஷாக எழுந்தவன் பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

"ம்ம்! கொடுத்து வச்ச மகராசன்.. ஒரு பிரச்சினையும் இல்லாம நிம்மதியா இருக்காரு.. நான் பாரு எப்படி புலம்பிக்கிட்டு இருக்கேன்னு.." சிணுங்கிய ஷ்ரதா அவன் கிளம்பிய சிறிது நேரத்திலேயே தானும் முகத்தைக் கழுவி தனது துப்பட்டாவால் துடைத்தபடியே கீழே இறங்கி வந்தாள்.

அவள் வந்த சமயம் பார்த்து, வரவேற்பறையில் நடனமாடிக் கொண்டிருந்தாள் வித்யா.

வீசியும் அவளது பரதநாட்டியத்தை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

'ஆமா இவர் பெரிய சலீம்.. அந்தம்மா பெரிய அனார்கலி.. அவங்க ஆடுறதை இவரு ரசிச்சிப் பார்க்கிறாரு..' என்று பொசுபொசுவென்று வந்தது ஷ்ரதாவிற்கு.

வாஸ்தவமாக வீசியோடு சேர்த்து வித்யாவின் மொத்தக் குடும்பமும் தான் அவள் நடனத்தை கண்டுகளித்துக் கொண்டிருந்தது.

ஆனால், ஷ்ரதாவின் ஸ்பாட் லைட் விழிகள் வீசியின் மீதும் வித்யாவின் மீதும் மட்டும் தான் மாறிமாறி விழுந்து கொண்டிருந்தது.

வெகுண்டு வேகமாக வந்து தன் கணவனருகில் உட்கார்ந்தவள், பக்கத்தில் அவன் தன்னை திரும்பிக்கூட பாராமல் வித்யாவின் ஆட்டத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு, "போச்சி.. போச்சி.. எல்லாம் போச்சி.. மேனாமினுக்கி" என்று கருவினாள்.

ஷ்ரதாவின் கருவலை கேட்டது போலவே ஹோம் தியேட்டர் ஸ்பீக்கரில் பி.லீலா அறிவுரை கூறினார்.

"ஆறு பெருகிவரின் அணை கட்டலாகும்..
அன்பின் பாதையில் அணையிடலாமோ..
பேதமையாலே மாதே இப்போதே
காதலை வென்றிட கனவு காணாதே.."

வரிகளுக்கு ஏற்றபடியே வித்யாவும் அபிநயம் பிடித்துக் கொண்டிருந்ததில் எரிச்சல் மண்டியது ஷ்ரதாவின் முகத்தில்.

ஷ்ரதா அவசரப்பட்டு எழுந்து இவ்வரிகளுக்கு எதிர்வினையாற்றும் முன்னமே, "சாதுர்யம் பேசாதேடி.. என் சலங்கைக்கு பதில் சொல்லடி" என்று ஜிக்கி படபடத்து பாடிவிட்டார்.

வித்யாவை ஷ்ரதாவிற்கு பிடிக்கவில்லையானாலும் அவளே மறுக்க முடியாத அளவுக்கு மிகச்சிறந்த ஆடலரசியாக விளங்கினாள் வித்யா.

ஏனோ வீசி அவளின் ஆட்டத்தை கண்கொட்டாமல் பார்ப்பது போலவே ஷ்ரதாவுக்கு தோன்றியது.

'பெரிய துரோகம்.. முருகா! எனக்கு நீ செய்யும் பெரிய துரோகம்.. வார விரதம், நட்சத்திர விரதம்னு இருந்த உன் பக்தைக்கு நீ செய்யும் கைமாறு இது தானா?.. இவரு இப்படி பார்க்கிறதை பார்த்தா அவளை இந்த நாட்டியத்துக்காகவே கட்டிக்கிருவாரு போலயே..
சிலப்பதிகாரத்துல மாதவியும் இப்படி ஆடி ஆடி தானே கோவலனை மயக்கினா.. அப்போ எனக்கும் கண்ணகி கதி தானா?..' அவள் மனம் கிடந்து அரற்றியது.

ஆட்டம் முடிந்ததும் எல்லோரும் அவளை பாராட்ட, 'ஆமா என்ன பெருசா ஆடிட்டா.. சும்மா தய்ய தக்கான்னு குதிச்சா.. இது பெரிய விஷயமா?..' என்பது போலவே அவளைப் பார்த்திருந்தாள் ஷ்ரதா. அவளுக்கு அவளை பாராட்ட மனமில்லை என்பது அவளது அலட்சிய பார்வையிலிருந்தே தெரிந்தது.

"வித்யா பரத நாட்டியத்துல ஸ்டேட் லெவல்ல ப்ரைஸ் எல்லாம் வாங்கியிருக்கா ஷ்ரதா.." என்று கமலா அவள் மனக்குமுறல் தெரியாமல் ஷோவ் கேஸில் வரிசையாக மின்னிக்கொண்டிருந்த ஷீல்டுகளை எல்லாம் கைநீட்டி காண்பித்துக் கொண்டிருந்தார்.

வீசி அருகில் போய் அவற்றையெல்லாம் விசிட்டடித்துக் கொண்டிருந்தான்.

ஷ்ரதாவின் மனசாட்சி கிடந்து லபோதிபோவென்று கத்திக் கொண்டிருந்தது. 'அய்யோ! இப்போ இந்த கலாக்ஷேத்ராவை நடத்தும் யோசனை யாருக்கு வந்தது?.. நிச்சயம் வித்யாவின் துர்புத்திக்கும் இதில் பங்கு இருக்கும்'

வித்யா திடீரென ஷ்ரதாவிடம், "உங்களுக்கு என்னை மாதிரி ஆடத் தெரியுமா ஷ்ரதா?" என்று வம்பிழுத்தாள்.

'ஆடத்தெரியாது.. ஆனா ஓடத்தெரியும்.. ஓடி காமிக்கவா?..' என்று உள்ளுக்குள் கொதித்தவள், "ஆடுவேன்.. ஆனா, உங்க அளவுக்கு இல்ல" என்று தன்னடக்கமாக சொன்னாள்.

வீசி ராஜ மாணிக்கத்திடம், "சரிங்க மாணிக்ஜி, நேரமாகிடுச்சி.. இன்னொரு நாள் நாங்க வர்றோம்.." என்று கூறிவிட்டு கிளம்ப ஆயத்தமான போது "கமலா" என்றார் ராஜ மாணிக்கம்.

கமலா உடனே உள்ளே ஓடிப்போய் ஒரு சூடத்தட்டில் குங்குமச்சிமிழ் மற்றும் குட்டி குத்துவிளக்கு என வெள்ளி சகிதமாக வந்து ஷ்ரதாவிடம் நீட்டினார்.

ஷ்ரதா தயங்கியபடியே வீசியைப் பார்க்க, 'வாங்கிக்கொள்' என்று தலையசைத்தான் அவன். அவளும் வாங்கிக் கொண்டாள்.

பின், அனைவரிடமும் பிரியாவிடை கொடுத்துவிட்டு, அவளை அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டான்.

காரில் அவ்வீட்டின் வாயிலை கடந்தபோது ஷ்ரதா அடைந்த நிம்மதியானது சொல்லில் வடிக்க இயலாதது.

அவளின் ஆசுவாசத்தைப் புரிந்து கொண்டவன் போல் இதழில் புன்னகையை படரவிட்டான் வீசி.

அதைப் பார்த்ததும் தைரியம் வந்தவள் போல் வாதத்தை துவங்கினாள் ஷ்ரதா.

"உங்களுக்கும் எங்கப்பாவுக்கும் என்ன பிரச்சினைன்னு எனக்கு தெரிஞ்சிப் போச்சி.. எங்கப்பா உங்களை மிரட்டி என் கழுத்துல தாலி கட்ட வச்சது தப்பு தான்.. ஆனா, அவங்க செஞ்ச அதே தப்பை தான் நீங்களும் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. என்னை டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.."

"எங்கப்பாவும் அண்ணாவும் நான் சொன்னா கேட்பாங்க.. இனி அவங்க அண்ணியை தொந்தரவு பண்ண மாட்டாங்க.. இதுவரை நடந்ததுக்கெல்லாம் அவங்க சார்புல நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.. ப்ளீஸ் என் குடும்பத்தை மன்னிச்சிருங்க.. அவங்க மேல உள்ள கோபத்துல நம்ம வாழ்க்கையை நரகமாக்கிறாதீங்க.."

காரிலிருந்த ஸ்டீரியோவை இயக்கி அதிரவிட்டான் வீசி.

ஷ்ரதாவிற்கு, 'என்ன மனுஷன் இவர்!.. இவர் அகராதியில் மன்னிப்பு என்ற ஒன்றே கிடையாதா?..' என்று வெறுப்பாக இருந்தது. தலையை திருப்பிக் கொண்டாள்.

கார் சென்று கொண்டிருக்கும்போதே ஓரிடத்தில் சடன் பிரேக்கடித்து நின்றதில் திடுமென முன்னால் வந்து விழுந்தவள், ஏன் என்று அவன்புறம் திரும்பிப் பார்க்க, அவன் சாலையின் ஓரமாய் இருந்த இளநீர்க்கடையையே வெறித்துப்பார்த்து கொண்டிருந்தான்.

நன்றாக உற்றுப் பார்த்தபோது தான் கடைக்குள் ஸ்ட்ராவ் போட்டு இளநீர் உறிஞ்சிக் கொண்டிருந்த சிவனேஸ்வரன் தெரிந்தான் ஷ்ரதாவின் கண்களுக்கு.

"அய்யோ அத்தான்" என்று முணுமுணுத்தவள் வீசி திரும்பிப் பார்க்கவும், முகத்தைத் திருப்பினாள்.

காரிலிருந்து இறங்கிய வீசி பக்கத்து பெட்டிக்கடையிலிருந்து ஃபைவ் ஸ்டார் சாக்லேட் இரண்டை வாங்கிக் கொண்டு வந்து ஷ்ரதாவிடம் கொடுத்து, "போ! போய் உங்க அத்தான்கிட்ட உனக்கு பெர்த்டேன்னு சொல்லி சாக்லேட் கொடு" என்றான்.

அவள், அவள் விழியிரண்டும் வெளியே தெறித்து விழுவது போல் அவனைப் பார்த்தாள்.

அவன் "ம்ம்" என்றான்.

உள்ளே பீதி இருந்தாலும் சரியென்று அவள் சாலையை கடக்க எத்தனித்தபோது, "உன் அத்தான் கிட்ட அப்படியே அவன் கல்யாணம் எப்போன்னு விசாரிச்சிட்டு வா ஷ்ரதா" என்றான் வீசி.

வானிலிருந்து இறங்கி ஷ்ரதாவின் மேல் விழுந்த ஒற்றை மழைத்துளியானது புண்ணியமாய் அவளை சுயநினைவடையச் செய்து, சாலையைப் பார்த்து செல்லச்சொன்னது.

அவன் செயலின் பொருள் புரியாமலேயே சாலையைக் கடந்தாள் ஷ்ரதா.

வீசி காரின் மீது சாய்ந்துகொண்டு அவர்களை வேடிக்கைப்பார்த்து கொண்டிருந்தான்.

போன முறை போல் சென்றவுடன் அவன் மேல் "ஷிவா அத்தான்" என்று விழாமல் தள்ளி நின்றே பேசிக்கொண்டிருந்துவிட்டு சாக்லேட்டையும் கொடுத்துவிட்டு வந்தாள் ஷ்ரதா.

சாலையைக் கடந்து வந்தவளிடம், "கல்யாணம் எப்பவாம்?" என்றவன் கேட்டதும் தொங்கிய முகத்துடன், "பொண்ணு வீட்டுல ஏதோ பிரச்சனையாம்.. கல்யாணத்தை நிறுத்திட்டாங்களாம்.." என்றாள் ஷ்ரதா.

"ஓ! ஆமா அதான் கல்யாணம் நடக்கலையே அப்புறம் எதுக்கு கல்யாணப் பரிசு?.. போய் நீ கொடுத்த மோதிரத்தை வாங்கிட்டு வா.." என்றவன் சட்டமாய் சொன்னதும், வானில் தோன்றி மறைந்த மின்னல் கீற்று தன்னை தொட்டது போலவே உணர்ச்சியற்றுப்போனாள் ஷ்ரதா.

இளநீரை குடித்து முடித்துவிட்டாலும் சிவனேஸ்வரனுக்கு கிளம்ப மனமில்லை. அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான்.

"ம்ம்! போ ஷ்ரதா!" என்று வற்புறுத்தினான் அவன்.

"அது அவ்வளவு நாகரீகமா இருக்காதுங்க.." துப்பட்டாவின் நுனியை சுற்றினாள் அவள்.

"அந்த மோதிரத்துக்காக இப்போதைக்கு கல்யாணம் மட்டும் தான் நின்னிருக்கு ஷ்ரதா.. இன்னும் மோதிரம் அவன் கை விரல்லயே கிடந்ததுன்னா போட விரலே இல்லாத மாதிரி செஞ்சி தான் மோதிரத்தை வாங்குற மாதிரி இருக்கும்.. எப்படி ஷ்ரதா வசதி?.." என்றது தான் தாமதம் ஷ்ரதா வண்டி, கார், சாலை, சாரல் என எதையும் பார்க்காமல் விறுவிறுவென சென்று சிவனேஸ்வரன் விரலிலிருந்த மோதிரத்தை "சாரி அத்தான்" என்று பலாத்காரமாக கழற்றிக்கொண்டு வந்து காரில் ஏறி அமர்ந்தாள்.

பின், மோதிரத்தை காரின் கதவை அறைந்து சாற்றியவனின் இடக்கையில் வைத்தவளாக அப்போது தான் அதை உற்றுக் கவனித்தாள்.

நிச்சயம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் தேறாது. இதற்கா இந்தப்பாடு? - இக்கேள்வி அவளுக்கு தோன்றாமல் இல்லை.

வீசி மோதிரத்தை பத்திரமாய் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் போட்டுக்கொண்டான்.

uY6RbnOx80CTxgSaSwz2Z0zaxxsrnNj6-z2Szieqe8B1XgaXDmG9077B-XB0Zf24dJRI05QSk8p5X1SlGeWy_34cyQQgXNMeoalrB6eg1Q4KjJeS1Pyng6lTcAr9BqxQSeZ0muXD


வீட்டிற்கு வந்ததும் தலை துவட்டிக் கொண்டிருந்தவனிடம், "என்னடா? எங்கவெல்லாம் போனீங்க?" என்றார் அபிராமி.

வீசி அவரிடம், "ம்மா, வெளிய செம மழை.. இந்த சிட்டுவேஷனுக்கு ஒரு கப் இஞ்சி டீ குடிச்சா ஜென்ம சாபல்யமா இருக்கும்.. போட்டு எடுத்துட்டு வாங்க" என்று கெஞ்சினான். உண்மையில் அந்நேரத்திற்குள் அவன் சுதாரித்துவிட்டான் என்று தான் சொல்லவேண்டும்.

டீயை வாங்கியபடியே, "என்ன கேட்டீங்க?" என்றான், முன்னால் அக்கேள்வியையே கவனித்திராதவன் போல.

மீண்டும் அவர் தன் கேள்வியை ஒலிபரப்புப் பண்ணினார்.

"அதை ஏன் கேட்குறீங்க! வெற்றி தியேட்டர், திருமலை நாயக்கர் மஹால், விஷால்டி மால், ராஜாஜி பார்க், தெப்பக்குளம்னு உங்க மருமகளுக்கு மதுரையையே சுத்திக் காமிச்சாச்சு"

"அப்படியா ஷ்ரதா?"

அவள் மௌனம் அனுஷ்டித்தாள்.

"ம்ம்! சொல்லு ஷ்ரதா கேட்கிறாங்கல்ல?.. இப்போ தானே வந்திருக்கா.. அப்புறமா விலாவரியா சொல்லுவாம்மா" என்றான் அந்த சாகசக்காரன்.

அடிமனசுக்குள் ஈனஸ்வரத்தில் புலம்பிக் கொண்டிருந்தாள் ஷ்ரதா. 'பொய்.. பொய்.. எல்லாம் சுத்த சுகாதாரப் பொய்.. இப்படியெல்லாம் பேசுறதுக்கு இவர் வாயில புழு இல்ல பட்டாம்பூச்சி தான் பூக்கப்போகுது..'

அவனால் வேறு வழியில்லாமல் தன் மாமியாரிடம் சிரித்து சமாளித்த ஷ்ரதா தன்னறைக்குச்செல்ல மாடிப்படி ஏறியபோதே வீசியிடம் அபிராமி இதேது விளக்கு, குங்குமச்சிமிழ் என்று விசாரிப்பதும், அதற்கு அவன் பிறந்தநாள் பரிசாக தான் ஷ்ரதாவிற்கு வாங்கி கொடுத்தது என்று சமாளிப்பதும் கேட்டது.

அறைக்குள் நுழைந்த ஷ்ரதா மெத்தையில் வந்து விழுந்த கணம் மியாவ் என்றது பூனைக்குட்டி.

அச்சத்தத்தில் திரும்பிப் பார்த்த ஷ்ரதா.. "ஹேய்! கிட்டி உன்னை நான் மறந்திட்டேன் இல்ல.. என்னது பக்கத்துல கிண்ணத்துல பால் எல்லாம் இருக்கு?.. அத்தை கொண்டு வந்து வச்சாங்களா?.." என்று கடுகாகப் பொரிந்தாள்.

பூனைக்கு அவள் தன்னை விட சாது என்பது தெரியவில்லை. பாவம்! அவளைப் பார்த்து மிரண்டது. பின், மீண்டும் கூடைக்குள்ளேயே தலை சாய்த்தது.

மொசு மொசுவென்று இருந்த அந்தப் பூனைக்குட்டியை, "அய்யூ பட்டு" என்று கைகளில் அள்ளிக் கொண்டவள், பால்கனி கதவை திறந்து அங்கு தொங்கிக் கொண்டிருந்த மூங்கில் கூடையில் போய் உட்கார்ந்தபடியே, "ஓய் பட்டு! நான் இல்லாதப்போ என்ன பண்ணின?.. தூங்குனியா?.. பால் குடிச்சியா?.." என்று தலையை ஆட்டி ஆட்டி கேட்டுக்கொண்டிருந்தாள்.

டீ கப்பில் வாய் வைத்தபடியே தன் அறைக்குள் நுழைந்த வீசி, திறந்திருந்த சாளரத்தின் வழியே எதேச்சையாய் இக்காட்சியைப் பார்க்க நேரிட்டது.

அப்போது அவன் முகம் கொஞ்சம் கனிந்திருந்தது போல் தோன்றியது நமது பிரம்மையாகவும் இருக்கலாம்.


காதல் கணம் கூடும்...


உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

கருத்துத்திரி,
என்னைத் தொடு. யோகம் வரும்.
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 9​



பூனையை கொஞ்சிக் கொண்டிருந்தவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ கீழே சென்றுவிட்டான்.

அவன் இதுபோல் வந்து சென்றது எல்லாம் ஷ்ரதாவுக்கு தெரியாது. அவன் மேலே வராமலேயே இருந்தது அவளை அவன் புறக்கணிப்பதாகவே அவளை நம்ப வைத்தது.

இந்த நினைப்பிலேயே இருந்தவள் மாலையில் தன்னிடம் சிக்காமல் போனவனை, இரவு உணவை முடித்துவிட்டு அறைக்குள் வந்ததும் கிடுக்குப் பிடியாக பிடித்துக்கொண்டாள். அதாவது அவள் அவ்வாறு எண்ணிக்கொண்டாள்.

"அந்த வித்யா சொன்னது உண்மையா?"

"என்ன சொன்னா?"

"நீங்க அவளை ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொன்னாளே!.."

"ஓ"

"என்ன ஓ?.. அது உண்மையா இல்லையான்னு சொல்லுங்க?"

"நீ உண்மைன்னு நினைச்சா உண்மை.. பொய்யின்னு நினைச்சா பொய்.."

"இப்படி சொல்லி நழுவலாம்னு பார்க்கறீங்களா?.. நீங்க ரெண்டாவது கல்யாணமெல்லாம் பண்ணிக்கிட்டா உங்களை எங்கப்பா சும்மா விட மாட்டாங்க.."

"என்ன செய்வாரு? அவரு ரெண்டு கொம்பை வச்சி என்னை முட்டிருவாரா?"

"ப்ச், ஆமா அந்த வித்யா ஏன் உங்க போட்டோவை அவ ரூம் ஃபுல்லா ஒட்டி வச்சிருக்கா?"

"அவளுக்கு பிடிச்சிருக்கு ஒட்டி வச்சிருக்கா.. உனக்கும் பிடிச்சா ஒட்டி வையேன்"

"நீங்க அவளை…" என்று துவங்கியவளின் பேச்சு விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டதும் நின்றுவிட்டது.

பயத்தில் மெத்தையில் விழுந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள் ஷ்ரதா. சிறிது நேரத்திலேயே உறக்கம் எனும் ஊசி அவளது இமைகளை தைக்க, அடித்துப் போட்டது போல் அசந்துத் தூங்கினாள்.

அவ்வேளையில் நீலாம்பரி இசைக்க வேண்டிய அவள் மூளைக்குள் படையப்பா நீலாம்பரி போல் வித்யா பிரசன்னமாகினாள். அவளிடம் தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தாள் ஷ்ரதா.

"வித்யா, ஒருத்தனுக்கு ஒருத்தி தான் நம்ம கலாச்சாரம், புரிஞ்சிக்கோ.."

"பிடிச்சவனோட வாழாத வாழ்க்கை என்ன வாழ்க்கை!.."

"என் வாழ்க்கையையும் கொஞ்சம் யோசிச்சிப் பாரேன் வித்யா"

"அதையெல்லாம் யோசிச்சா நான் எப்படி சுகப்பட முடியும்?"

"ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிச்சிட்டு நீ சந்தோசமா வாழ்ந்திட முடியும்னு நினைக்கிறியா?"

"என் மனசு சொல்றதை கேட்காம நடந்தா தான் என்னால சந்தோசமா வாழ முடியாதுன்னு நினைக்கிறேன்.."

ஏதோ இன்கா நாகரீகம் போன்ற ஒரு மலைப்பிரதேசமான இடத்தில் தன் மடியில் வீசி மயங்கிக் கிடக்க, இவ்வாறு எதிரில் சூனியக்காரி போல் உடையணிந்து நின்றிருந்தவளிடம் பிரதிவாதம் புரிந்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா.

"இவரை நான் உயிருக்கு உயிரா காதலிக்கிறேன் வித்யா.. இவர் இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல"

"எனக்கு மட்டும்.. உண்மையை சொல்லு! உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு இவர் அப்படி என்ன சுகத்தை கண்டுட்டாரு?.. ஏன் இப்படி இவரை எனக்குத் தரமாட்டேன்னு அடம்பிடிக்கிற?.. நம்ம காதலிக்கிறவங்களை சந்தோசப்படுத்தி பார்க்கிறது தான் உண்மையான காதல்.. நீ அதை மொத புரிஞ்சிக்கோ.."

"இல்ல! இல்ல! இவரை உனக்கு விட்டுத்தர முடியாது!.."

வீசியின் முகத்தை தன் மார்போடு அழுத்திப் பிடித்துக்கொண்டாள் ஷ்ரதா.

"அடிமைகளே! இவர்களை பிரியுங்கள்!" என்று உத்தரவிட்டாள் வித்யா.

எங்கிருந்தோ பறந்து வந்த கோரப்பல் அரக்கிகள் இருவர், ஷ்ரதாவை வீசியிடமிருந்து பலாத்காரமாய் பிடித்திழுத்துப்போட்டனர்.

வித்யா வீசியை ஆசையோடு நெருங்கி அவன் நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டிருந்த முடிகளை பொறாமையுடன் விலக்கி, மென்மையாய் ஆசையாய் ஆதூரமாய் முத்தமிட்டாள். அவள் முகத்தில் அன்பு ததும்பியது.

பின், அவனது முடிகளை கோதிவிட்டுக்கொண்டே வாத்சல்யம் பொங்க அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அடுத்து அவனது கன்னத்தையும் வாஞ்சையோடு தடவிக்கொடுத்து, அவனை தன் நெஞ்சில் சாய்த்தாள்.

ஷ்ரதாவிற்கு அவற்றைக்கண்டு பற்றிக்கொண்டு வந்தது. முகத்தில் அசூயைக்காட்டினாள்.

பாய்ந்து அவர்களை பிரிக்கப்போனவளை ஈட்டிகளை எக்ஸ் வடிவில் போட்டு தடுத்து நிறுத்தினார்கள் அந்த குட்டைப்பாவாடை அரக்கிகள்.

ஷ்ரதா அவர்களிடம் வலுவாய் போராடினாள். அவர்களை ஆக்ரோஷமாய் பிடித்துத்தள்ளினாள்.

ஆச்சர்யம்! அரக்கிகள் இருவரும் எதிரெதிர் திசைகளில் போய் சுருண்டு விழுந்தார்கள்.

அவள் அவர்களை சமாளித்துவிட்டுவந்து பார்த்தபோது தனது இறக்கைகளை சடசடவென விரித்து வீசியை காததூரமாய் தூக்கிச் சென்றிருந்தாள் வித்யா.

"வருண் அத்தான்" என்று அந்தவிடத்திலேயே கைநீட்டி மடங்கி அழுதாள் ஷ்ரதா.

விண்ணிலிருந்து விடைபெற்ற மழைத்துளி அவள் கண்ணிலிருந்து விடைபெற்ற துளியோடு கலந்த போது உலகே சூன்யமானது போல் உணர்ந்தாள் ஷ்ரதா.

அவள் மார்பின் கொதிப்பு அடங்கவில்லை. சுவாசம் ஏறியேறி இறங்கியது. ரோமக் கால்களில் எல்லாம் வியர்வை துளிர்த்து கசகசத்தது. பட்டென்று விழித்துப் பார்த்தாள்.

அனைத்தும் கனவு என்று தெளிய அவளுக்கு சிறிது நேரம் பிடித்தது. தெளிந்த நேரம் அவள் மனதில் திடீர் பாரம் வந்தும் உட்கார்ந்தது.

கண்முன் தெரிந்த இருள் உலகை அவளின் கெட்ட சொப்பணங்கள் வண்ணமயமாக்கின. வீசியும் வித்யாவும் ஆலிங்கன நிலையில் இருப்பது போல் விதவிதமாய் காட்சி தோன்றி அவளை இம்சித்தன. கண்ணை மூடிக்கொண்டாலும் அதே கொடுமை. ஒரு நிலைக்கு மேல் முடியாமல் அவளின் விழி விளிம்புகளிலிருந்து வெளிநடப்பு செய்தன கண்ணீர் துளிகள்.

ஷ்ரதா மெத்தையில் அருகில் தடவிப்பார்த்தாள். அவன் அகப்பட்டான். அவள் ஒரு கணம் கூட யோசிக்கவில்லை. புரண்டு அவனை கட்டிக்கொண்டாள். திம்மென்ற அவன் நெஞ்சில் முத்தமிட்டாள். எக்கி அவன் நாடியில் முத்தமிட்டாள். அடுத்து அவன் கழுத்தில் என ஊர்ந்த உதடு மீண்டும் அவன் நெஞ்சில் வந்தே அடைக்கலமாகியது.

அவள் அமைதியடைந்த அடுத்த கணம், தான் எதிர்வினையாற்ற துவங்கினான் வீசி.

முதல் கட்டமாய் அவள் இடையில் கரங்களை கோர்த்து இறுக்கிக்கொண்டான். ஷ்ரதாவிற்கு வலித்தது. ஆனால், சொல்லவில்லை. நீரில் நீந்தும் சாரை போல் அவன் நெஞ்சிலிருந்து தலையை மட்டும் தூக்கிப்பார்த்தாள். அவ்வளவு தான். திடீர் புரளல். அவன் மேலே. அவள் கீழே. அழுத்தமாய் அவள் அதரத்தில் ஒரு முத்தம்.

அவன் முத்தமிட்டு நிமிர்ந்த இடைவெளியில் ஒரு தடய நிபுணரை ஆராயவிட்டிருந்தால் நிச்சயம் அவன் உதட்டு ரேகையை அவளிதழில் கண்டுபிடித்திருப்பார். அந்தளவிற்கு அவன் முத்த யுத்தத்தை நிகழ்த்தி முடித்திருந்தான்.

'இந்த இருட்டிலும் எப்படி கண்டுபிடித்தார் இதழ்களை?' ஷ்ரதாவினுள் பிரதானமாய் முளைத்த கேள்வி இது.

தன்னைப் பற்றிய அவனது அனுமானங்கள் அனைத்தும் எப்போதும் சரியாகவே இருப்பதை எண்ணி ஆச்சரியமடைந்தாள் அவள்.

சரியாக அவள் அதரத்திலிருந்து முத்த யாத்திரை புறப்பட்ட அவன் இதழ்கள் கீழே


ங்
கி
அவளுக்குள் பூகம்பத்தை உண்டாக்கின.

திடீரென உண்டான படபடப்பும், நாணமும், பயமும் அவன் அத்துமீறலை அவளைத் தடுக்கச்செய்தன. அந்த பலவீனமான எதிர்ப்பை அவன் அனாயசமாக சமாளித்தான்.

பாம்பு, புற்றை சொந்தம் கொண்டாடும் போது பாவம் கரையான்கள் என்ன செய்யக்கூடும்!

பூவில் தேனீக்கள் நுகரும் திறனாலே மகரந்தங்களைத் தேடி திரிவது போல் அவனாலும் தனக்கு வேண்டியவற்றை நுகர்ந்து திரிந்தே கண்டுபிடிக்க முடிந்தது.

அவ்வப்போது கிளம்பிய காமப் பெருமூச்சுகள்... அந்த இருளின் அமைதியை பதம் பார்த்துக்கொண்டே இருந்தன.

அவ்வப்போது சிணுங்கல்களின் முத்துக்களை உருட்டி விட்டபடி... அவனை உச்சத்திற்கு இழுத்துக்கொண்டே இருந்தாள் ஷ்ரதா. அவனும் அவள் உடல்மொழிக்கேற்ப இயங்கிக் கொண்டிருந்தான்.

அவள் கைகள் அவன் முதுகில் பரவிய சமயம் ஏகப்பட்ட தழும்புகளை நலம் விசாரித்தன. அதில் சில திடுக்கிடல்களும் அவளுக்குள் உருவாகின. ஆனால், எப்படியென்று கேட்கத் துணியவில்லை அவள்.

பதியும்படி முத்தமிட்டு, பற்களால் கோலமிட்டு, பற்றிப் பரவி என அவனின் சேட்டையால் அந்த இரவு புனிதமாகிக்கொண்டேப் போனது.

காலையில் கண்விழித்த இருவருக்குமே எல்லையற்ற வேறோர் உலகம் பயணித்த களைப்பு காணாமற்தான் போயிருந்தது.

ஷ்ரதா கண்ணாடி பார்த்தே வெட்கப்பட்டுக் கொண்டிருந்தாள். தற்போது அவள் இருக்கும் உற்சாகத்தில் நாம் வித்யாவை நினைவு கூர்ந்தால் கூட, வித்யாவா யாரது என்று அவள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எப்போதும் அவனுக்கு காபி கொண்டு போகும்போது முகத்தை இஞ்சி தின்றாற் போலவே வைத்திருப்பவள் இன்று ரோஜாப்பூவாய் சிவந்த கன்னங்களுடன் செல்வதைப் பார்த்து அபிராமியே குழம்பித்தான் போனார்.

ஆர்வமாக எப்படியோ அறை வரை வந்துவிட்டாலும் உடற்பயிற்சி கூடத்திற்குள் செல்ல மட்டும் அப்படியொரு பயம், வெட்கம், பதட்டம்.

ஐந்து நிமிடங்கள் நகத்தைக் கடித்தபடியே நின்றிருந்தவள், "முருகா! தைரியம் கொடு!" என்று வேண்டிக்கொண்டே, மன்னிக்கவும்! மிரட்டிக்கொண்டே உள்ளேப்போனாள்.

அன்று போலவே இன்றும் ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தான் வீசி. அவன் பனியன் முழுவதும் வியர்த்திருந்தது.

HTTNF0QpSF_TzNT-spM_HPOGdlzpzM4FJvyD7SrsBFSy-yc0QNEehsLVvAUd-Igtoxod5ZjhPXd-TGZ88lAtFigsiVSUzkTIbQwEd_blGq0r_rEFMmJI0UgQsLlSFHeiEuUVYLtb


ஷ்ரதாவிற்கு அவன் முதுகைப் பார்த்ததுமே அந்தத் தழும்புகள் ஞாபகம் வந்தன.

அதைப்பற்றி கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்தபடியே நின்றிருந்தாள்.

திடீரென ட்ரெட்மில்லை நிறுத்தி திரும்பியவன் அவளைப் பார்த்ததும், "எப்போ வந்த?.. வந்தா கூப்பிட மாட்டியா?" என்று கேட்டுக்கொண்டே காபி கப்பை வாங்கினான்.

அவள் அவனிடம் நயமாகக் கேட்டாள். "உங்க முதுகுல எப்படிங்க இவ்வளவு தழும்பு வந்தது?"

காபியை ஒரு மிடறு அருந்தியிருந்தவன், பட்டென்று குடித்துக் கொண்டிருந்த காபியை அவள் முகத்தை நோக்கி ஊற்றினான்.

அது அவள் முகத்தை சமீபிப்பதற்கு முன்னமே ஷ்ரதா தலையை சாய்த்து திருப்பி விட்டாள்.

விக்ரம் லேண்டர் போல் மைக்ரோ செகண்டில் குறிக்கோள் தவறியது காபி.

உண்மையில் இந்த திடீர் தாக்குதலில் விதிர்த்துப்போனாள் ஷ்ரதா.

காபி அபிஷேகத்திலிருந்து தப்பித்து மீண்டவள் வீசியை பார்த்தபோது அவன் கண்கள் வெம்மை பூத்து மின்காந்த கதிர்களை பாய்ச்சிக் கொண்டிருந்தன. அதில் அவள் கால்கள் செயலிழந்து, உடல் நடுங்கியது.

அவன் சொற்களும் ஒரு அதட்டலுடன் வெளி வந்தது. "காபி ஏன் ஆறிப் போயிருக்கு?.. சூடா கொண்டுவரத் தெரியாது.. போ! சூடா இன்னொரு காபி கொண்டு வா!" என்றபடியே திரும்பி நின்றான்.

அவள் உள்ளம் சொல்லவொண்ணா வேதனையில் பரிதவித்தது. அவன் காபியை ஊற்றியது கூட அவளுக்குப் பெரிதாக படவில்லை. அவனின் இந்த திடீர் திடீர் ஆவேசத்திற்கு தான் காரணம் தெரியாமல் தலையே வெடிப்பது போல் இருந்தது.

"ம்ம்! போ! ஏன் இன்னமும் இங்கயே நிற்கிற?.."

அவனுக்கு தான் அவளை ஏதேனும் பேசி விடுவோமோ என்று பயமாக இருந்தது.

"போறேன்.. ஆனா, நீங்க இன்னும் அந்த தழும்புக்கான காரணத்தை சொல்லலையே?"

"அது எப்படி வந்ததுன்னு தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன செய்யப்போற?.. போ! இன்னொரு காபி எடுத்துட்டு வா!"

அவனின் பேச்சை மீறுவது பயமாகத்தான் இருந்தது. ஆனாலும் உண்மை தெரிய வேண்டி அங்கேயே நின்றாள் ஷ்ரதா.

"என்ன பயம் விட்டுப் போச்சா?.."

"உங்களை பார்த்து நான் ஏன் பயப்படணும்?.. நீங்க என்ன பீஸ்ட்டா? இல்ல நான் தான் பியூட்டியா?.."

"ஷ்ரதா என் கோபத்தை தூண்டாம மரியாதையா இங்கயிருந்து போயிடு.."

"உங்களுக்கு கோபம் எங்க அப்பா உங்களை வற்புறுத்தி எனக்கு கல்யாணம் பண்ணி வச்சதோ, இல்ல உங்கக்காவை எங்க அண்ணா அடிச்சதோ இல்ல.. வேற ஏதோ.. அதை நீங்க சொல்ல மறுக்குறீங்க.. இல்ல மறைக்கிறீங்க"

"உனக்கு என்ன மனசில பெரிய சிஐடின்னு நினைப்பா?"

"உங்களுக்கு அந்த ராஜ மாணிக்கத்தோட சொத்து மேல ஒரு கண்ணு.. வித்யாவை கல்யாணம் பண்ணியிருந்தா இன்னும் பெரிய நிலைமைக்கு போயிருந்திருக்கலாமேன்னு ஒரு ஏக்கம்.. அதெல்லாம் கை நழுவி போன ஆதங்கத்துல தான் இப்படி என் மேலயும் என் குடும்பத்து மேலயும் எரிஞ்சு விழறீங்க.."

டப்பென தெறித்து நொறுங்கியது அந்த செராமிக் கப்பும் சாசரும்.

டக்கென இரண்டு எட்டு பின்னால் நகர்ந்துப்போனாள் ஷ்ரதா.

காதல் கணம் கூடும்...

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

யாருக்கெல்லாம் டைம் மெஷினில் பயணிக்க விருப்பம் ப்ரெண்ட்ஸ்?

இங்கு சகாப்தம் குழுவினர் வழங்கும் டைம் மெஷின் (கருத்துத்திரி) மூலமாக நீங்கள் ஷ்ரதாவின் எதிர்காலத்தை அறியலாம்.

ஆம், அடுத்த அத்தியாயத்தைப் பற்றி இரண்டு வரி கூறியுள்ளேன் ப்ரெண்ட்ஸ்.

இந்த டைம் மெஷின் பயணம் உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன்.

கருத்துத்திரி,
டைம் மெஷின்
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 10​



அபிராமி, வீட்டிற்குள்ளிருந்த ஈச்சங்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டே, குஷன்களுக்கு கவர் மாற்றிக் கொண்டிருந்த ஷ்ரதாவிடம் கேள்வி எழுப்பினார். "ஷ்ரதா, அவன் கிட்ட இன்னைக்கு சாயங்காலம் உங்க வீட்டுக்குப் போகணும்னு சொன்னியாம்மா?"

அவள் திடீரென ஏ ப்ளஸ் பி த ஹோல் ஸ்கொயர் ஃபார்முலா கேட்கப்பட்ட கடைசி பெஞ்ச் மாணவி போல் திருதிருவென விழித்தாள். "அது.. சொன்னேன் அத்தை.." என்றாள்.

அவர் திருப்தியடையாதவர் போல், "ம்ம்.. நாலு வேலை பார்க்கிறவன் பார்த்தியா? அதான் மறந்திருவான்.. மதியம் இன்னொரு தடவை போன்போட்டு ஞாபகப்படுத்திரும்மா.." என்றார்.

பதிலுக்கு, "சரிங்க அத்தை" என்று உயிர்ப்பே இல்லாத குரலில் சொன்னவளை, "என்னம்மா, காலைல எழுந்து வந்தபோது நல்லாயிருந்த.. இப்போ ஏதோ சூன்யம் பிடிச்ச மாதிரி இருக்க?.." என்றார்.

"ஒண்ணுமில்ல அத்தை" என்று பேச்சிற்காக சொன்ன ஷ்ரதாவால் அவன் காபிகோப்பையை தரையில் அடித்து நொறுக்கிவிட்டு பேசிய வார்த்தைகளை எல்லாம் மறக்க முடியவில்லை. இன்னமும் காதிற்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தன அவ்வார்த்தைகள்.

"எப்படி உனக்கு என் முன்னாடி இப்படி குரலை உசத்திப் பேச தைரியம் வந்தது?.. நேத்து நைட் கொடுத்த தைரியமா?.. இது ஒண்ணும் எனக்கு புதுசில்ல, நான் உன்னை தலைல தூக்கி வச்சி கொண்டாட, நீயும் என்னை உன் முந்தானைல முடிஞ்சி வச்சிக்கிற.. உன் எல்லை எதுவோ அங்கேயே நிற்கிறது தான், உனக்கும் நல்லது.. உன் குடும்பத்துக்கும் நல்லது.." என்றுவிட்டு சீக்கிரமே குளியலறை புகுந்து அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான் வீசி.

அப்படி அவன் சாப்பிடாமல் கிளம்பிவிட்டபடியால் தான் அவளிடம் விருந்து பற்றி அவனிடம் நினைவுபடுத்தச்சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார் அபிராமி.

ஷ்ரதா ஒன்றுமில்லை என்றுவிட்டு ஹிப்னாடிசத்திற்கு கட்டுப்பட்டவள் போலவே நீர் அருந்த டைனிங் டேபிளை நோக்கிச் சென்றபோது, மீண்டும் பழைய கவருடனே கிடந்த குஷன்களைப் பார்த்து சந்தேகமாய் தலையாட்டிக்கொண்டார் அபிராமி.

மதியம் பூனையை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு அவனுக்கு பேசுவோமா வேண்டாமா என்று போனையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா.

பின், பேசி தான் பார்ப்போமே என்று போன்போட்டாள். மூங்கில் மோடோவில் போன் கிர் கிர்ரென்று அதிர்ந்துக் கொண்டிருந்தது.

போனை எடுத்ததும் அவனிடம் அசாத்திய அமைதி நிலவியது. அவள் முன்னேற்பாட்டுடன் கொண்டு வந்திருந்த பூனையின் காதைத் திருகிவிட, அது அவனிடம் மியாவ் என்றது.

அவன் என்னவென்று கேட்டபோது, இன்னும் அவன் குரலில் கோபம் தெரிந்தது.

"இன்னைக்கு எங்க வீட்டுக்கு விருந்துக்கு போகணும்.. நாலு மணிக்கு.." என்றுவிட்டு போனை ஆஃப் செய்துவிட்டாள் ஷ்ரதா.

பின், பூனையைப் பார்த்து, "இப்போ நாமளும் அவர் மேல கோபமா இருக்கிறது அவருக்குப் புரிஞ்சிருக்கும்" என்று சொல்லி திருப்திபட்டுக்கொண்டாள்.

அவள் கொஞ்சம் நிதானித்திருந்தால் அவன் இன்று விருந்திற்கு செல்ல கொஞ்சம் தாமதமாகும் என்று சொல்ல வந்ததை கேட்டிருக்கலாம். எங்கே?

மாலை நான்கு மணியளவில், செல்வது தன் பிறந்த வீடு என்பதால் தன் அன்னைக்குப் பயந்து அபிராமியிடம் சொல்லி புடவை கட்டியிருந்தாள் ஷ்ரதா. அவன் வந்து 'வேறு உடை மாற்று' என்றாலும் முடியாது என்று அதிகாரமாய் சொல்லிவிடலாம் என்றே நினைத்திருந்தாள். ஆனால், அவன் வரும் வழியைத் தான் காணவில்லை.

அவள் கையிலிருந்த ஸிக்கோ க்வார்ட்ஸ் முதலில் நான்கரை என்றது. அடுத்து மனசாட்சியே இல்லாமல் ஐந்தரை என்றது. அவள் அவனுக்கு தொடர்ந்து போன் போட்டபோதும் அபசுருதியாய் 'சுவிட்ச் ஆப்' என்றே வந்தது.

பொறுமை இழந்தவளாக அவன் வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறான் என்று நினைத்துக்கொண்டு தன் அறைக்குப்போய் விக்கி விக்கி அழுதாள் ஷ்ரதா.

சிறுவயதிலிருந்தே ரொம்ப செல்லமாக வளர்ந்தவள் அவள். திருமணமாகி ஐந்து நாட்கள், தான் தன் தந்தையையும் தாயையும் பார்க்காமல் இருக்கிறாள்.

சுய பச்சாதாபத்திலும் ஏக்கத்திலும் சிறிது நேரம் நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தவள், போன் போட்டு தன் தந்தையிடம், "அப்பா, இப்போவே உங்களையும் அம்மாவையும் எனக்குப் பார்க்கணும்.. என்னை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு போயிருங்கப்பா.. இங்க எனக்கு இருக்கவே பிடிக்கலை.. இந்த அத்தான் என்னை அடிக்கடி மிரட்டிக்கிட்டே இருக்காங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா.. இந்த வீடு ஜெயிலு மாதிரி இருக்குது.. என்னை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு போயிருங்கப்பா.." என்று விசும்பிக்கொண்டே பேசினாள்.

அவளை போனிலேயே சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்த விஜயாதித்தன் அவள் திடீரென குளுக்கோஸ் குடித்த குரலில் பேசவும் அடங்கிப்போனார். "இதுக்கெல்லாம் நீங்களும் அண்ணாவும் தான் காரணம்.. நீங்க அண்ணியை டார்ச்சர் பண்ணி, என்னை அவரை கல்யாணம் செஞ்சிக்க வற்புறுத்தினதால தான் அவர் இப்படியெல்லாம் பண்றார்.." என்று தழுதழுத்தாள்.

விஜயாதித்தனால் அவளை சமாளிக்கவே முடியவில்லை. ஏகப்பட்ட நியாயங்களை அவள் முன் அடுக்கினார். எதுவும் அவளின் அழுகையை நிறுத்துவதற்கு ஏதுவாக இல்லை எனவும், முயற்சியை கைவிட்டு அமைதி காத்தார். ஷ்ரதா ஆவேசம் வந்தவள் போல் போனை மெத்தையில் விட்டெறிந்தாள்.

அச்சமயம் படக்கென்று அவளறையின் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தான் வீசி. அவன் அவளைப் பார்க்காதவன் போலவே அலட்சியமாகத் தன் கையிலிருந்த நான்கடி கரடிபொம்மையை கட்டிலில் தூக்கிப்போட்டான்.

ஷ்ரதா தன் அருகில் வந்து விழுந்த பொம்மையை தளிர் விரல்களால் தடவிக்கொடுத்தாள். அவள் வீட்டில் எப்போதும் இதுபோல் ஒரு கரடிபொம்மையை அணைத்துத் தூங்குவது தான் அவளுக்கு வழக்கம்.

இங்கு வந்த முதல் நாள் இரவில் அது இல்லாமல் ரொம்பவே சிரமப்பட்டாள். இவ்வயதில் தான் கரடி பொம்மையை கேட்டால் பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள் என்றே தன் ஆசையையும் மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.

ஆனால், தான் கேட்காமலேயே அவன் இப்படி கரடிபொம்மை வாங்கி வந்து தந்திருப்பது கொஞ்சம் அவளின் கோபத்தை தணித்தது.

அவன் அவளுக்கு முதுகுகாட்டி டையை தளர்த்திக்கொண்டே பீரோவில் உடை தேடிக்கொண்டிருந்தான்.

அவள் கோபத்தை உள்ளடக்கிய குரலில், "ஏன் இன்னைக்கு லேட்டாச்சு?" என்று கேட்டாள்.

"மதியம் மேடமுக்கு கேட்க நேரமில்ல.. இப்ப எனக்கு சொல்ல விருப்பமில்ல" என்றுவிட்டு அவன் கிளம்ப முனைப்பானான்.

ஷ்ரதாவிற்கு இப்போது அவனிடம் சண்டை போடுவதைக் காட்டிலும் தன் பிறந்த வீட்டிற்கு செல்வதே முதன்மையாகப்பட்டது. அம்மா அப்பாவை பார்க்கவேண்டும் அவளுக்கு.

ஓடிச்சென்று கண்ணாடியில் முகம் பார்த்தாள். தான் கர்ண கொடூரமாக தெரியவும், மீண்டும் ஒருமுறை குளித்தாள். தன் தேன்நிற சுடிதார் ஒன்றையும் தேடி எடுத்து அணிந்து கொண்டாள்.

அவள் கிளம்பும் ஆர்வத்தில் கட்டிலில் தன் கால்விரல் நகத்திற்கு நெயில்பாலீஷ் பூசிக்கொண்டிருந்த வேளை, தலைக்கு ஜெல்லை தடவிக்கொண்டே அவளை திரும்பிப்பார்த்த வீசி, அவள் தன் பிளேசரிற்கு பொருத்தமாக உடை அணிந்திருப்பதைப் பார்த்து மெச்சுதலாய் புருவம் உயர்த்தினான்.

அவளுக்கு அவன் தன்னை பார்ப்பது தெரிந்தாலும் நிமிர்ந்துப் பார்க்க விருப்பமில்லை. கருமமே கண்ணாயிருந்தாள்.

திடீரென அவளது தொலைபேசி ரிங்கியது. கைவிரலிலும் கால்விரலிலும் நெயில்பாலீஷ் இன்னும் உலராமல் இருந்தபடியால் மேசைமேல் இருந்த போனை பரிதாபமாகப் பார்த்தாள் ஷ்ரதா.

வீசி அப்போது நல்ல மூடில் இருந்தான் போலும். அருகில் வந்து போனை ஆன் செய்து அவள் காதில் வைத்தான். அவள் அன்னை மீனாட்சி தான் தன் கணவரின் தூண்டுதலால் அவளுக்கு புத்திமதி கூறிக்கொண்டிருந்தார்.

அனைத்தையும் கேட்டவள் இறுதி கேள்விக்கு, "இல்ல வேணாம்மா.. அவங்க வந்திட்டாங்க.. கிளம்பிட்டோம்மா.. கொஞ்ச நேரத்துல வந்திருவோம்" என்றாள்.

அவன் அவள் காய வைக்கும் பொருட்டு நீட்டிக்கொண்டிருந்த விரல்களையே பார்த்துக் கொண்டிருந்தான். மெனிக்கியூர் செய்யப்பட்ட கைவிரல்கள் 'தைரியமிருந்தால் என்னை உன் உதட்டால் தொட்டுப்பார்' என்று சவால் விட்டன.

போன் அணைக்கப்பட்டதும் அவள், "பேசியாச்சி" என்று சன்னமாக சொன்னாள். "ஓ" என்றவன் மீண்டும் தன் ஒப்பனையில் மூழ்கினான்.

அவள் நெயில் பாலீஷ் உலர்ந்ததுமே கீழே செல்லப் புறப்பட்டாள்.

அவன் தன்னை கடந்து செல்ல எத்தனித்தவளின் கையைப் பிடித்து நிறுத்தினான். பின், அவள் இடது கை மோதிர விரலில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெதுவாக அந்த கல்யாணப்பரிசு மோதிரத்தை அணிவித்து விட்டான்.

மோதிர விரலுக்கும் இதயத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு என்கிற இதயவியலாளர்களின் கூற்றை மெய்யாக்குவது போல் ஷ்ரதாவின் இதயமும் நிமிடத்திற்கு நூறுமுறை எகிறித் துடித்தது. உடன் துடித்த தன் கீழுதட்டையும் பற்களால் கடித்து அடக்கினாள் ஷ்ரதா.

அவன் மோதிரத்தை போட்டுவிட்டு அவளை நிமிர்ந்துப் பார்த்து, "இனி இது உன்கிட்ட தான் இருக்கணும்" என்று பத்திரம் சொன்னான்.

அவள் இருதலைக்கொள்ளி எறும்பாய் விருப்பும் வெறுப்பும் கலந்து தத்தளித்தாள்.

"அப்புறம் இனி நைட் தூங்கும் போது அந்த கரடிபொம்மையை உனக்கும் எனக்கும் நடுவுல படுக்க வச்சிக்கணும்.." என்றான்.

அவள் விழிகள் இரண்டிலும் நீர் திரண்டுவிட்டது. 'நேற்று என்னை தொட்டதற்காக வருத்தப்படுகிறாரா இவர்?.. அப்படியொரு சம்பவமே நடந்திருக்கக் கூடாது என்று நினைக்கிறாரா?.. ஏன் இப்படி உயர உயர இழுத்துச்சென்று என்னை கீழேப்பிடித்து தள்ளுகிறார்?..'

அவன் சொன்னதற்கு உம் இம்மென எதுவும் கொட்டாமல், ஏன் தன் பூம்பூம் மாட்டு தலையசைப்பைக் கூட தராமல் விறுவிறுவென வெளியேறிவிட்டாள் ஷ்ரதா.

'ரொம்ப தைரியமாகிடுச்சி இவளுக்கு' என்று நினைத்துக் கொண்டான் வீசி.

பதினைந்து நிமிட பயணத்தில் இருவரும் விஜயாதித்தனின் வீட்டை அடைந்தபோது தன் மனைவியுடன் இணைந்து, "வாங்க மாப்பிள்ளை.. வாம்மா ஷ்ரதா.." என்று வரவேற்ற விஜயாதித்தனை மிதப்பாகப் பார்த்தான் வீசி.

விஜயாதித்தன்.. ம்ம்? உங்களுக்கு ஏழாம் வாய்ப்பாடு தெரியுமா? 8×7 எவ்வளவு? ஆமாம், ஐம்பத்தியாறு தான். விஜயாதித்தனும் தற்போது அப்பிராயத்தில் தான் இருக்கிறார். வஞ்சனையில்லா கொழுக் மொழுக் தேகம். அகலமான முகத்தில் காணப்படும் நெற்றியோர தழும்பு, அவர் சில விஷயங்களுக்கு தயங்கவேமாட்டார் என்று கட்டியம் கூறும்.

புருவங்களில் பத்து சதவீதம் நரைமுடி, காதோரங்களில் சமரசமில்லா வெள்ளை, தங்க பிரேமில் கண்ணாடி, சற்றே தொங்கும் கன்னச்சதைகள், இருபத்தினாலு மணிநேரமும் மடிப்பு கலையாத வெள்ளை வேட்டி சட்டை என ஒரு அரசியல்வாதியின் க்ளோன் போலவே காட்சியளிப்பார் விஜயாதித்தன்.

ஏழு கிரானைட் தொழிற்சாலை, ஊரைச் சுற்றி சட்டத்திற்கு புறம்பாக ஆக்ரமிக்கப்பட்ட புறம்போக்கு நிலங்கள், பத்து மதுபானக்கடைகள், ஐந்து சொகுசு திருமண மண்டபங்கள், பனிரெண்டு ரைஸ்மில்கள், ஆறு கார், அறுபது கன்டெயினர் லாரி, இரண்டு சினிமா தியேட்டர், இன்னும் கணக்கில் வராத சொத்துக்கள் என பல நூறு கோடிகளுக்கு அதிபதி விஜயாதித்தன்.

அவரின் முக்கிய தொழில் என்னவென்று கேட்டால் கிரானைட் தொழிற்சாலைகளை நிர்வகித்தலும், ஊரின் பிரபல ஊழல் மன்னர்களுக்கு ஏந்து கட்டப்பஞ்சாயத்து செய்து ஏழைப்பாழைகளின் வயிற்றில் அடிப்பதும் தான்.

வீசி, கிரானைட் போர்த்தியிருந்த அவ்வீட்டை ஒருமுறை நோட்டம் விட்டான். பின், மீண்டும் விஜயாதித்தனைப் பார்த்து கன்னம் குழிய சிரித்தான்.

அவன் சிரிப்பில் ஒரு நிமிடம் திடுக்கிட்டு, பின் தன் மகளை ஆதூரமாக அணைத்துக்கொண்டார் விஜயாதித்தன்.

ஷ்ரதா அவருடன் மதுபாலா விஷயத்தில் பிணக்கு கொண்டாலும் நேரில் பார்த்ததும் பரிவும் பாசமும் பொங்கி வந்து விட்டது. அணைத்தவரின் நெஞ்சில் "அப்பா" என்று சலுகையாய் சாய்ந்து கொண்டாள்.

மேலுக்கு அவர் சமாதானப்படுத்த படுத்த அவள் அழுதுகொண்டே இருந்தாள்.

ஏதோ ஓரங்க நாடகத்தை வேடிக்கைப்பார்ப்பவன் போலவே இக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தான் வீசி.

பின், "உள்ள வாங்க மாப்பிள்ளை" என்று அழைத்துச்சென்ற மாமியார் தேநீரும் சமோசாவும் விநியோகிக்கவும், கொடுத்ததை தொட மறுத்துவிட்டான். அதற்கு வயிறு திம்மென்று இருப்பதாக வாகாய் ஒரு காரணமும் சொல்லிக்கொண்டான்.

அவனது ஒவ்வொரு அசைவிலும் தன் வீட்டையும் வித்யாவின் வீட்டையும் ஒப்பிட்டது ஷ்ரதாவின் மனம். கூடவே சிணுங்கி தன் மனத்தாங்கலையும் வெளிப்படுத்தியது.

திடுமென "மாமா" என்று மேலே வந்து விழுந்த தன் அக்கா குழந்தைகளிடம், தான் வழியில் வாங்கிக்கொண்டு வந்த இனிப்பு வகைகளை கொடுத்து, தன் தொடைக்கு ஒருவராய் இருவரையும் அமர்த்திக்கொண்டான் வீசி.

ஷ்ரதா தன் தந்தையிடம் மிழற்றிக் கொண்டிருந்த சமயம் அருண்மொழி தன் அறையிலிருந்து வெளியே வந்து "ஷ்ரதா" என்று உற்சாகக்கூவல் கூவினான். ஷ்ரதா அவனைக் கண்டதும் மீண்டும் ஓர் ஓரங்க நாடகம் நிகழ்த்த ஆயத்தமாக, வீசி குழந்தைகளின் கன்னத்தில் முத்தமிட்டபடியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

மீனாட்சி ஷோவிற்கு எண்ட்கார்ட் போடுபவராய் "ஏற்கனவே லேட்.. எல்லாம் ஆறி போயிடுறதுக்குள்ள சீக்கிரம் சாப்பிட வாங்க எல்லாரும்.. நீங்களும் வாங்க மாப்பிள்ளை" என்றார்.

ஷ்ரதா மீனாட்சியின் ஜாடை. வீசி அவரிடம், "இல்லங்க அத்தை வேணாம்.. ஏற்கனவே பிசினஸ் பார்ட்டின்னு வெளிய சாப்பிட்டுட்டு வந்திட்டேன்.. அம்மா சொன்னாங்களே ஏதோ சம்பிரதாயமேன்னு தான் வீட்டுக்கு வந்தேன்" என்று ரொம்பவே தன்மையாகப் பேசினான்.

விஜயாதித்தனுக்கு கோபம் வந்து விட்டது. "இதென்னது விருந்துக்கு வந்துட்டு சாப்பிடாம போறது?.." என்றார்.

வீசி பார்த்தபோது வேறுபுறம் இருந்தது அவரது முகம்.

"நான் சாப்பிடாம போறதால இப்போ யாருக்கு என்ன நஷ்டமாகிடப்போகுது?"

இப்போது அருண்மொழியும் தன் பங்கிற்கு சேர்ந்து கொண்டான். "எங்களை அவமானப்படுத்துறதுக்கு சமம் இது.." என்று காரமாய் மொழிந்தான்.

வீசி பிள்ளைகளை விளையாட அனுப்பிவிட்டு, தன் கால் மேல் கால் போட்டுக் கொண்டவனாக, "கட்டாயப்படுத்தி கல்யாணம் வேணா பண்ணி வைக்கலாம்; ஆனா உங்கப் பொண்ணுக்கூட என்னை வாழ வைக்க முடியாதுன்னு சொல்லி, நான் உங்கப் பொண்ணை தொடாம இருந்தா தானே அது நான் உங்களை அவமானப்படுத்துறதுக்கு சமம்.. நான் தான் அப்படி எதுவும் செய்யலையே.. உங்கப்பொண்ணு எங்க வீட்டுல சந்தோசமா தானே இருக்கா?.." என்றான்.

அவனது கடைசி வார்த்தையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் விஜயாதித்தன். "என்ன சந்தோசமாத் தான் இருக்கா?.. என் பொண்ணு காலை உடைச்சிருக்கீங்க நீங்க.." என்று முகத்தில் முந்நூறு கெல்வினைக் காட்டினார்.

ஓரமாய் நின்றிருந்த மதுபாலா, "காலையா?" என்று வாயைப் பிளந்தாள்.

தன்னருகில் வந்து தோளைத் தொட்ட தாயிடம் ஷ்ரதா, "காலை இல்லைம்மா.. கால் விரலை தான்" என்று சமாதானம் கூறினாள்.

விஜயாதித்தன் சமரசம் அடையவில்லை. "கால்விரலும் காலுல தானே இருக்கு" என்றார்.

பின், ஒவ்வொன்றாக ஞாபகம் வைத்து அடுக்கிகொண்டேப் போனார். "இன்னைக்கு காபி கப்பை உடைச்சு மிரட்டியிருக்கீங்க.. ரெண்டு நாளைக்கு முன்னாடி டீவியை உடைச்சு மிரட்டியிருக்கீங்க.. நேத்து மீன் தொட்டியைக்காட்டி மிரட்டியிருக்கீங்க.." என்றவர் வரிசையாகப் பட்டியலிடவும், விஜயாதித்தனுக்கு பைத்தியம் ஏதும் பிடித்திருக்கோ என்றே பார்த்துக் கொண்டிருந்தாள் அவரது மருமகள்.

இறுதியாக, "என் பொண்ணு பூ மாதிரி" என்றார் விஜயாதித்தன்.

"ஸோ, இந்தப்பூவை எனக்கு சரியா பார்த்துக்க தெரியலை.. சரி, என்ன பண்ணலாம் சொல்லுங்க?.." என்றான் வீசி.

இறுதியில் தன்னையே அவன் மடக்கியது விஜயாதித்தனுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. சந்தேகமே இல்லாமல் ஷ்ரதாவிற்கும் தான்.

அவனின் இந்த உதாசீனத்தில் விஜயாதித்தன் இப்போது அதிரடியாக 'ஷ்ரதா, இனி நீ அவங்க வீட்டுக்கு போக வேண்டாம்மா' என்று சொல்லலாம் தான். ஆனால், மாலை போன்போட்டபோதே ஷ்ரதா நேற்று தாங்கள் ராஜ மாணிக்கத்தின் வீட்டிற்கு சென்றது பற்றியும் வித்யாவை பற்றியும் கூறியிருந்தாளே.

கொஞ்சம் அவசரப்பட்டாலும் காரியம் சிதறிவிடும் என தீர யோசித்த விஜயாதித்தன், ஷ்ரதாவை நெருங்கி, "நீ இப்போ என்ன யோசிக்கிறேன்னு புரியுதுமா.. எங்க நான் ஒண்ணு சொல்லி நீ இங்கேயே இருந்திட்டா உன் தாலிக்கு ஆபத்து வந்திருமோன்னு தானே.. உன் விருப்பம் தான் எனக்கு முக்கியம்.. அப்பா அப்படி எதுவும் யோசிக்காம சொல்ல மாட்டேன்.. உன் புகுந்த வீட்டிலேயே இரு.." என்றதும், சரியென்று ஆட்டுக்குட்டியைப் போல் தலையை ஆட்டினாள் ஷ்ரதா. உடன் அவள் கண்ணிமைகளும் நனைந்திருந்தன.

"சோ! என் கண்ணுல்ல.. அழக்கூடாதும்மா.." என்று அவள் கண்களை தன் இரு முரட்டு கரங்களாலும் அழுந்தத் துடைத்துவிட்ட விஜயாதித்தன், மீண்டும் தொண்டையை செருமிக் கொண்டவராய், "இதுவே கடைசியும் முதலுமா இருக்கட்டும்!.. பொண்ணை கட்டிக் கொடுத்திருக்கோமேன்னு பொறுத்துப்போறோம்.." என்று எச்சரித்துவிட்டு ஷ்ரதாவின் தலையை தடவியவராய் உள்ளே சென்றுவிட்டார்.

வீசி நக்கலாய் புன்னகைத்துக் கொண்டான். அருண்மொழியும் மதுபாலாவை முறைத்துப் பார்த்துவிட்டு, தூக்கச்சொல்லி கை நீட்டிய தன் மகளை தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்றுவிட்டான்.

வீசி தன்னை எவ்வளவோ தடுக்க முயன்ற மீனாட்சியை நமஸ்கரித்துவிட்டு, ஷ்ரதாவோடு புறப்பட்டு விட்டான்.

இரவில் தங்களுக்கு நடுவில் கரடிபொம்மையை கும்பகர்ணன் போல் படுக்க வைத்துவிட்டு எட்டி இரவுவிளக்கை அணைத்தவனை ஷ்ரதாவால் எப்போதும் போல் புரிந்துகொள்ள முடியவில்லை.

Jj-1g_lb-j_KGADqk649-8CsRZW7kKGANvYcZZGsYeGhgHPveWQr4t66LoCr16vQjWCj0jO3iifo42Yv3gGsQ7DeyYiCzRYsqKzSGYaJ2PX2zG-szzruCwdF43wyHhhiXjOwSTPd


காதல் கணம் கூடும்...

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

கருத்துத்திரி,
https://www.sahaptham.com/community/threads/நரகமாகும்-காதல்-கணங்கள்-comments.470/
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 11​



மூன்று வாரங்களுக்குப் பிறகு…


அன்று விருந்திற்கு சென்று வந்ததிலிருந்தே ஷ்ரதாவிற்குள்ளும் வீசிக்குள்ளும் பெரிதாய் பேச்சு வார்த்தை எதுவும் கிடையாது. ஆனால் அவ்வப்போது அவளை சீண்டுவதை மட்டும் அவன் நிறுத்தவில்லை.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கொட்டிக்கொண்டு தான் இருந்தான். கூடவே உனக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது என்று தனது ஜோசியம் கூறும் வேலையையும் தவறாமல் செய்து கொண்டிருந்தான்.

காலக்கிரமத்தில் ஷ்ரதாவிற்கு இவையெல்லாம் பழகிவிட்டன என்று தான் சொல்லவேண்டும்.

அவள் அவன் மீதான தனது எதிர்பார்ப்புகளை எல்லாம் குறைத்துக் கொண்டாள். புத்தரின் 'ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் காரணம்' எனும் போதனையை முழுமையாக புரிந்து கொண்டாள். ஆயினும் மனதின் கடையோரத்தில் தலைகாட்டும் சிறுசிறு எதிர்பார்ப்புகளை அவளால் அறுத்தெறிய முடியவில்லை.

அலுவலகத்திற்கு செல்லும்போது போய் வருகிறேன் ஷ்ரதா எனலாம். காபி கொடுக்கும் போது நீ குடித்தாயா என கறார் குரலிலேயே கேட்கலாம். அறையில் நேற்று போட்டிருந்த ஸ்க்ரீனை காட்டிலும் இந்த ஸ்கைப்ளூ கலர் ஸ்க்ரீன் புதுவித அழகைக் கொடுக்கிறது; பரவாயில்லை வெட்டியாக கழிக்கும் பொழுதில் உருப்படியாகவும் இப்படி ஏதோ செய்கிறாய் என்று திட்டிக்கொண்டே பாராட்டலாம். அது ஏன், பூனை மெலிவதைப் பார்த்து பயந்து சமையல்கார பெண்மணியின் மூன்றாவது மகளுக்கு தூக்கிக் கொடுத்தாளே, அதை காரமாக விமர்சித்திருக்கலாம்.

ம்ஹீம் இப்படி ஒன்றும் சொல்லாமல், புத்தியை பேதலிக்கச் செய்யும் வகையில் புதுமையான முறையில் சித்திரவதை செய்து கொண்டிருந்தான் வீசி.

ஒரு கட்டத்தில் முருகனே சரணம் என்று இறைவனை சரணாகதி அடைந்துவிட்டாள் ஷ்ரதா. வாரந்தோறும் செவ்வாய், வெள்ளியன்று தவறாமல் காளியம்மன் கோவிலுக்குச் செல்வதையும் அங்கு முருகன் சன்னதியே கதியென்று கிடப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டாள்.

அபிராமி ஓரிரு நாட்கள் அவளோடு வந்தவர் அவள் இரண்டு மணிநேரமானாலும் முருகனின் வதனத்தைப் பார்த்துக்கொண்டே கிடப்பதை பார்த்து, ஏதோ தெய்வப்பிறவியை பார்ப்பது போல் அவளைப் பார்த்தார்.

தான் இப்படி தெய்வ வழிபாட்டில் தாமதப்படுத்துவதால் அபிராமியை அடுத்தடுத்த வாரங்களில் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் ஷ்ரதா. அபிராமியும் சங்கோஜத்துடனே சரியென்றுவிட்டார்.

இப்படி அவள் ஒருநாள் வெள்ளிக்கிழமை கோவிலுக்குச் சென்று வீட்டிற்கு கிளம்பியபோது தான் அவளை எதிர்கொண்டான் சிவனேஸ்வரன்.

அவன் கடந்த இரண்டு வாரங்களாகவே அவளை கவனித்துக்கொண்டு தான் இருக்கிறான். எதன்மீதும் பற்றில்லாமல் இலக்கின்றி செல்லும் அவளின் வெற்றுப்பார்வை அவனை ரொம்பவே இம்சித்தது.

ஒரு காலத்தில் அவள் முகம் எப்படி உற்சாகம் ததும்பி இருக்கும்! குறும்பு மின்ன புன்னகைப்பாளே! அவனுக்கு அலைஅலையாக ஞாபகங்கள் கரை புரண்ட வண்ணமிருந்தன.

விகல்பமில்லாமல் மடியில் தலை சாய்ப்பாளே, தோளில் தட்டி அத்தான் என்பாளே, தலையை கலைத்து விடுவாளே, நடையில் ஒரு துள்ளல் இருக்குமே.. என் கண்ணே! உன்னை ஒரு அரக்கன் கையில் விட்டுக் கொடுத்துவிட்டேனே! பக்கத்து தெருவில் தான் உன் வீடு. ஆனாலும் நான் உன்னை திருமணம் செய்துகொண்டிருந்தால் இப்படியா நடக்க விட்டிருப்பேன்?

சிவனேஸ்வரனால் இப்படியெல்லாம் நினையாமல் இருக்க முடியவில்லை.

குழந்தை வரம் கிட்டாத பெண்ணொருத்தி, கவனிப்பாரின்றி புழுதியில் புரளும் குழந்தையைப் பார்த்து அதன் தாயை எப்படி சபிப்பாளோ அப்படித் தான் சிவனேஸ்வரனும் வீசியை நினைத்து சபித்துக் கொண்டிருந்தான்.

இன்னொரு சமாச்சாரம் என்னவென்றால் ஷ்ரதா அடம்பிடித்து நடந்து வருவது வீசிக்கு மட்டும் தெரிந்திருந்தால் நிச்சயம் வீட்டில் ஒரு பூகம்பமே வெடித்திருக்கும் என்பது தான்.

தர்ம தரிசனம் முடிந்த பின், ஓரமாக நின்று பிடித்துக் கொண்டிருந்த சிகரெட் கையை சுடவும் கீழேப்போட்டு காலால் கசக்கி அணைத்தான் சிவனேஸ்வரன். சிகரெட் அவளுக்குப் பிடிக்காது என்பது தெரியும். கணவன் மனைவியாகிய பின் அவளுக்காகவே தான் சிகரெட்டை விட்டது போல் பாவனை செய்யவேண்டும் என்று ஒரு காலத்தில் அவன் நினைத்ததுண்டு. ஆனால், விதி அவன் வாழ்வில் இப்படி விளையாடும் என்று அவன் கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்கவில்லையே.

எப்போதும் தூர நின்றே அவளை தரிசிப்பவன், இன்று எது எப்படியாகினும் பேசிவிடுவதென முன்னேறியிருந்தான்.

வீட்டிற்கு செல்ல எழுந்தவள் திடீரென சிவனேஸ்வரனை பார்த்தவுடன் சுதாரிப்பாய் அக்கம் பக்கம் பார்த்தாள். அவளின் அதிர்ச்சி அவனுக்குப் புரிந்தது.

அன்று அவனிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதற்கு வருந்துவது போல் கைகளை பிசைந்தபடி நின்றிருந்தாள் ஷ்ரதா.

அவன் அவளிடம், "நீ சந்தோசமா இருக்கியா ஷ்ரதா?" என்றான்.

அவள் விசுக்கென்று நிமிர்ந்துப் பார்த்தாள்.

அப்போது தான் அவள் தன்னை தவறாக நினைத்து விடுவாளோ என்கிற பயம் எழுந்தது அவனிடம். 'ஒருவேளை அவளின் நிலையை சாதகமாக வைத்து அவளை நான் அபகரிக்க நினைக்கும் நீசன் என என்னை தவறாக எண்ணிவிட்டால்?' நினைக்கவே அருவருப்பாக இருக்கவும் உடனடி வார்த்தையை தேடினான், முன்பு கேட்ட கேள்வியை முதலுதவி செய்து ஆபத்துக் கட்டத்தை தாண்ட வைக்கும் மருத்துவன் போல.

"ம்ம் அது வந்து பிரச்சனை எதுவும் இல்லையேன்னு கேட்டேன்.."

ஹப்பா! மூச்சுவிட முடிந்தது அவனால்.

மனதிற்குள்ளிருப்பதை எல்லாம் யாரிடமாவது சொல்லவேண்டி இவ்வளவு நாள் தவித்துக் கொண்டிருந்தவள் கைக்குட்டையால் வாயை மூடி அழுதாள்.

"ப்ளீஸ் ஷ்ரதா.. அழாத.. சொல்ல விருப்பமில்லைனா விட்டிரு.." என்றவன் சொல்லவும்,

"இல்லத்தான்" என்று தடுத்தவள், மீண்டும் விழியை துடைத்துக் கொண்டாள்.

ஆனாலும் இமைகள் நனைந்து அழகாய் தெரிந்தாள் ஷ்ரதா. அவனால் அவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. 'என்றும் என் அன்புக்குரியவள் இவள்' என்று நினைத்துக் கொண்டான்.

அருகில் நிற்பதால் அதிகமாய் கவனித்தான் அவளை. நெஞ்சில் தொங்கிய தாலி அவன் கன்னத்தில் அறைந்தது. குங்குமம் வைக்கவேண்டி வெளியே எடுத்துப் போட்டிருந்தாள் ஷ்ரதா.

அவனுக்கு திடீரென அடிமனசில் ஒரு ஆவேசம்.

அவள் உருவில் பாதியாக இப்போது வீசி தெரிந்தான். பார்க்க பார்க்க ஆத்திரமாக வந்தது அவனுக்கு.

தன்னைப்போலவே அவளும் தன்னை பார்த்திருக்கிறாள் என்பதை இயல்பாய் அவள் பிரசாதத்தை நீட்டிய போது புரிந்து கொண்டான். அலட்டாமல் திருநீறை நெற்றியில் பூசிக்கொண்டான்.

அப்போது பக்கத்தில் ஒரு பெண் வந்து நிற்கவும் இருவருமே கவனம் சிதறினார்கள்.

வந்தவள் லிப்ஸ்டிக் போட்ட சுடிதாரினியாக இருக்கவும் ஷ்ரதாவின் தோழியாக இருப்பாள் என்று எண்ணிக்கொண்டான் சிவனேஸ்வரன்.

அவள் அவனைப் பார்த்தாள். பிரபல நாவல்களில் நாயகனை வருணிப்பது போலவே திருத்தமான களையான முகம், சற்றே தடித்த உதடுகள், உதட்டை பாதி மறைத்தவாறு அடர் மீசை, கூர் நாசி, அலை அலையாக கேசம், ஓங்கு தாங்கான ஆகிருதி என்று அலட்சியமாய் நின்றிருந்தவனை விழிகளால் அளவெடுத்தாள்.

பின், இவனால் ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்பது போல் ஷ்ரதாவிடம் திரும்பினாள் அந்தப்பெண்.

தான் நிமிடத்தில் மூலையில் வீசப்பட்டது போல் அசௌகரியமாக உணர்ந்தான் சிவனேஸ்வரன்.

"என்ன மேடம் எப்படி இருக்கீங்க?" அவள் பேச்சின் தொனி அவளை அணுக்கத் தோழியாக காண்பிக்கவில்லை அவனுக்கு.

"என்ன ஷ்ரதா சாமிக்கிட்ட வேண்டுதல் பலம் போல.. ஹாஹாஹா.. யார் என்ன நினைச்சாலும் அடுத்து நடக்க இருக்கிறதை தடுக்க முடியாது" தொடர்ந்து இப்படித்தான் பேசினாள் அந்தப்பெண்.

'ஏன் ஷ்ரதா இவளிடம் மௌனமாக இருக்கிறாள்?.. பார்க்க பெரிய இடத்துப்பெண் போல் தான் இருக்கிறாள்.. பேச்சு அதிகாரமாக வருகிறதே' நினைத்தபடியே தொண்டையை கொஞ்சம் கனைத்தான் சிவனேஸ்வரன்.

அந்த அனாமிகாவின் விழிகள் பெண்டுலம் போல் ஆடியது.

"நான் சொல்லலை?.. எங்கப்பா ஒரு விஷயத்தை நினைச்சா முடிச்சிருவாருன்னு.. வீசி மேரேஜ்க்கு ஓகே சொல்லிட்டாரு.. என் வேண்டுதலை துர்காம்மா நிறைவேத்தி கொடுத்ததால தான் எல்லாருக்கும் சர்க்கரை பொங்கல் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.. ம்ம் வாங்கிக்கோ" என்று வம்படியாய் அவள் கையில் தொண்ணையை வைத்தாள்.

ஷ்ரதா பூமி பிளந்து தான் உள்ளே போனது போல் உணர்ந்தாள். அசைவற்று நின்றாள்.

B99cj9Kl1bndc6Sxe-Ll6ixAmhSeas65q-6lk5d8HQpzERpUCiiIoQbrXqGV9H4QH8rDK5tlDEf8lTg1aVby8oQQnQwl5BV1m0o-48EhjWoJ4K6CCKeUd3sDUdokclG59pXzZANu


சிவனேஸ்வரன், "ஹலோ, நீங்க யாரு? ஏன் பொது இடத்துல வந்து இப்படியெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க?" என்றான்.

அவள் "ம்ம்ம்ம்…. மேடம் கிட்ட கேளுங்க சொல்லுவாங்க.." என்றபடியே உதட்டைச் சுளித்தாள்.

அவனுக்கு அவள் கன்னத்தில் ஒன்று விடலாம் போல் இருந்தது. முயன்று அடக்கிக்கொண்டான்.

"சீக்கிரமே கல்யாணப் பத்திரிக்கையோட வந்து உன்னை சந்திக்கிறேன் ஷ்ரதா" என்றவள் தன் மார்பில் வழிந்த கூந்தலை முதுகில் போடுகிறேன் பேர்வழி என்று சிவனேஸ்வரனின் முகத்தில் தூக்கிப்போட்டு விட்டுப்போனாள்.

அவன், "சரியான ராங்கிக்காரியா இருப்பா போலயே ஷ்ரதா? யாரிந்தப் பொண்ணு?" என்று வினவினான்.

ஷ்ரதாவின் கண்களிரண்டும் அருவியை பொழிந்த வண்ணமிருந்தன. அவன் பதறிப்போனான். அருகில் வந்து அவள் தோளை உலுக்கினான். ஷ்ரதா இடிந்து போனவள் போல் கடவுளே என்று அங்கேயே உட்கார்ந்தாள்.

சிவனேஸ்வரனுக்கு பொறுமை இல்லை. குனிந்து, "ஷ்ரதா, என்னாச்சு? ஷ்ரதா, யார் இந்தப்பொண்ணு? ஏன் இப்படி பேசிட்டுப் போறா? நீ ஏன் இப்படி அழற?" என்று ஆற்ற மாட்டாமல் கேட்டான். நடந்த அனைத்தையும் அவனிடம் ஒப்பித்தாள் ஷ்ரதா.

வித்யாவையும் அவளது பின்புலத்தையும் பற்றி தெரிவித்தாள்.

முழங்காலிட்டு அமர்ந்திருந்தவன் வீசியை நினைத்து தரையில் கோபமாக குத்தினான். "அவனை நான் சும்மா விட போறதில்லை ஷ்ரதா.." என்று வீறுகொண்டு எழுந்து நின்றான்.

ஷ்ரதா அவனது கால்களை பிடித்துக்கொண்டு, "ப்ளீஸ் அத்தான் வேண்டாம்.. அவரை நான் வேற மாதிரி நினைச்சேன்.. ஆனா, அவர் வேற மாதிரி இருக்காரு.. அவர் பழக்கம் வச்சிருக்கிற ஆட்கள் எல்லாம் ரொம்ப மோசமானவங்களா இருக்காங்க.. உங்களுக்கு என்னால ஆபத்து வர வேணாம்.." என்றாள்.

"அப்போ இதை வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்க சொல்றியா ஷ்ரதா? இப்படிப்பட்டவனோட நீ ஏன் இருக்கணும்? பேசாம டைவர்ஸ் பண்ணிடு ஷ்ரதா.." என்றான் சிவனேஸ்வரன்.

எழுந்து அவனை நேருக்கு நேராகப் பார்த்தவள், "இல்லை அத்தான், அவர் இப்படியெல்லாம் பண்றதுக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கு.. அவர் மனசுல ஏதோ உறுத்திக்கிட்டு இருக்கு.. அது தான் என்னன்னு எனக்கு தெரிய மாட்டேங்குது.. அவரால என்னை கஷ்டப்படுத்த முடியல.. ஆனாலும் கஷ்டப்படுத்தாம இருக்க முடியல.." என்று வருத்தமாகக் கூறினாள்.

"கிறுக்குப் பேச்சு ஷ்ரதா இது"

"உண்மை அத்தான்"

"உன் பொறுமையும் பயமும் தான் அவன் பலம்.."

மௌனமாக இருந்தாள் ஷ்ரதா.

அவனைத் தான் பிரியச் சொல்லியது அவளுக்குப் பிடிக்கவில்லை என்பது புரிந்துபோனது சிவனேஸ்வரனுக்கு.

"மாமா பண்ணினது தப்பு தான்.. ஆனா, அதுக்கு பதிலா உன்னை தண்டிக்கிறது நியாயமே இல்ல.. நீ எதுக்கும் பயப்படாத ஷ்ரதா.. ரெண்டாவது கல்யாணம்னு ஏதாவது சொன்னான்னா வீடு தேடி போலீஸ் வரும்னு மட்டும் அவன்கிட்ட சொல்லு.." என்று சொல்லிவிட்டு, பதுமையாய் நின்றிருந்தவளை பிரிய மனமில்லாமல் விடைபெற்று புறப்பட்டான்.

சிவனேஸ்வரனின் ஆறுதல் மொழிகள் எவ்வளவு தான் தைரியம் அளிப்பவையாக இருந்தாலும் ஷ்ரதாவின் மனமெனும் குட்டை கலங்கியபடி தான் இருந்தது.


காதல் கணம் கூடும்...

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

வண்ணங்கள் 2021ல் எழுத்தாளர்களுக்கு தான் போட்டியா? எங்களுக்கு இல்லையா? என்று வாசகர்கள் கேட்பீர்களாயின், நிச்சயம் உங்களுக்கும் போட்டி உண்டு.

வாராவாரம் மோஸ்ட் ஆக்டிவ் ரீடர் ஆஃப் வீக் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். அவர்களுக்கு சகாப்தம் சார்பில் பரிசும் அளிக்கப்படுகிறது.

நீங்கள் ஒரு வாரத்திற்குள் எவ்வளவு கதைகளை வாசித்து தளத்தில் கருத்துப் பதிவிடுகிறீர்களோ அதற்கேற்ப வெற்றி வாய்ப்பு.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

கருத்துத்திரி,
ஷ்ரதாவிற்கு பொங்கல் கொடுத்த வித்யாவிற்கு நீங்கள் பொங்கல் கொடுக்க வேண்டுமா? என்னைத் தொடவும்❤️
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 12​



கோவிலிலிருந்து வீட்டிற்கு திரும்பிய ஷ்ரதா பூக்கூடையை வரவேற்பறையில் விட்டுவிட்டு, வேகவேகமாய் தன் அறைக்குப்போய் மனம்விட்டு அழுதாள்.

சுவருக்கும் காதுண்டு என்பார்கள். அதேயிது வாயுமுண்டு என்றிருந்தால் அது அவளுக்கு உற்ற தோழியாய் உபாயம் கூறியிருக்குமோ என்னவோ!

அந்த அறை இதுவரை அவனும் அவளும் சிரித்துப்பேசி கண்டதில்லை. அன்றொரு நாள் இருட்டில் நடந்ததையும் அது பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஷ்ரதாவின் அழுகையையும் புலம்பலையும் மட்டுமே கண்ட சுதந்திரச் சுரங்கம் அது. இப்போதும் அவளின் புலம்பலையே ஜாக்கிரதையாய் கேட்டுக் கொண்டிருந்தது.

கண்ணாடியின் முன் சென்று நின்ற ஷ்ரதா, தன் முகத்தை திருப்பி திருப்பிப் பார்த்தாள்.

கண்ணில் காலையில் போட்டிருந்த காஜல் கரைந்துப் போய் கன்னத்தில் இறங்கியிருந்தது. அழுது அழுது மூக்கும் கண்ணும் சிவந்துப் போயிருந்தது.

தன்னுடைய இப்பிம்பம் அவளை தான் அகோரியாக இருப்பது போன்ற மாயையை தோற்றுவித்தது.

"அசிங்கம்.. அசிங்கம்.. அசிங்கம் நீ.." என்று கோப மிகுதியில் ட்ரெஸ்ஸிங் டேபிளைப்போட்டு தன் இரு கைகளாலும் நங் நங்கென்று குத்தினாள் ஷ்ரதா.

அப்போது அவள் போட்டிருந்த தங்க வளையல்கள் இரண்டும் காயத்தை உண்டாக்கின அவளது மணிக்கட்டுகளில்.

ஆனால், அது அவளுக்கு வலிக்கவில்லை. ஓய்ந்தவள் போல் அதன் மேலேயே சரிந்து உட்கார்ந்தாள்.

ஒரு வாரத்திற்கு முன்பு மாட்டப்பட்ட அவர்களின் திருமண புகைப்படம் நேர் எதிரேயிருந்த சுவற்றில் தொங்கி அவளைப் பார்த்து பல்லிளிக்க, மீண்டும் அவள் கண்கள் குளமாகின. அப்படியே தரையில் படுத்து பொட்டு பொட்டாக கண்ணீர் விட்டபடியே உறங்கிவிட்டாள்.

முன்பே மாடியேறிய ஷ்ரதா மதியம் இவ்வளவு நேரமாகியும் இன்னும் சாப்பிட வராததைக்கண்டு அவளறைக்கே சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வந்தார் அபிராமி.

அங்கு அவள் அலங்கோலமாக தரையில் படுத்திருப்பதைக் கண்டு பதறிப்போய், ட்ரெஸ்ஸிங் டேபிள் மீதே சாப்பாட்டை வைத்துவிட்டு, "ஷ்ரதா! ஷ்ரதா!" என்று அவள் கன்னத்தைப்போட்டு தட்டி உசுப்பினார்.

விழித்து எழுந்து உட்கார்ந்தவள், என்ன ஆகிற்று என்று வினவி நெற்றியிலும் கழுத்திலும் கைவைத்துப் பார்த்த மாமியாரை கட்டிப்பிடித்து கதறி நடந்ததைக் கூறினாள்.

அவர் அவளின் முதுகை தட்டிக்கொடுத்து இந்தப் பிரச்சினைக்கு இன்றே ஒரு முடிவு கட்டுகிறேன் என்று அவளுக்கு வாக்குக் கொடுத்தார்.

அவரின் ஆதரவான பேச்சில் விழிகளை துடைத்துக் கொண்டவள், அவர் சாப்பிடும்மா என்று கூறியபோது வேண்டாமென்று தலையாட்டி மறுத்தாள்.

ஆனால், அபிராமி விடவில்லை. பிடிவாதமாய் சாதத்தைப் பிசைந்து அவள் வாயருகே கொண்டு சென்றார். ஷ்ரதாவும் தன் அடத்தைவிட்டு ஆக்காட்டி வாங்கிக் கொண்டாள்.

அபிராமி மட்டும் இல்லையென்றால் தூங்கி எழுந்தவளின் முடிவு வேறு மாதிரிகூட இருந்திருக்கலாம். ஆனால், பெற்ற தாயைப் போல் பரிவு காட்டும் அபிராமியை மீற முடியவில்லை அவளால்.

சாப்பிடும் போதே மளுக்கென்று அவள் கண்களில் ஜலம் எட்டிப் பார்த்தபோது புறங்கையால் அதனை துடைத்துவிட்டவர், அவளை இந்த அறைக்குள்ளேயே விட்டு வைத்திருப்பது உசிதமல்ல என உத்தேசித்து தனதறைக்கு அழைத்துச் சென்றார்.

அன்றைய பொழுது அவரறையிலிருந்த நூல்களைப்பற்றி விவாதித்து அடுத்தடுத்த நாழிகைகளை பயனுள்ளதாக கழித்தவளுக்கு மாலை நெருங்க நெருங்க பயப்பந்து ஒன்று வயிற்றுக்குள் சுழல்வதுபோல் இருந்தது. இவ்வளவு நேரமும் இருந்த மகிழ்ச்சி பரோலில் விடுதலை பெற்றது போல் காணாமற் போயிருந்தது.

அவளின் மனக்கிலேசத்தை நீட்டிக்கும் வகையில் வழக்கத்திற்கு மாறாய் வீசியும் இன்று இரவு வெகுநேரம் சென்றே வீடு திரும்பியிருந்தான்.

வந்தவன் இன்னும் தூங்க செல்லாமல் ஹாலில் தனக்காகவே காத்துக்கொண்டிருந்த பெற்றோரையும் ஷ்ரதாவையும் கண்டு சற்று நிதானித்தான்.

பெரும் பிரளயம் ஒன்று நிகழப்போவதை அவன் உள்ளுணர்வு அவனுக்கு எச்சரித்தது.

முதல் பாணத்தை எய்தவர் அபிராமி. "வருண், ஷ்ரதா சொல்றது உண்மையா?" என்றார்.

அவன் தன் புத்திசாலித்தனத்தைக் காட்டினான். "ஷ்ரதா நான் உங்கப் பையன்னு சொல்லி இருந்தா உண்மைம்மா.. இல்லைன்னு சொல்லி இருந்தா பொய்ம்மா.. இப்போ அவ என்ன சொன்னாம்மா?"

அபிராமி பிரகாஷ் சக்கரவர்த்தியை திரும்பிப் பார்த்துவிட்டு, "என்ன இது எடக்கு மடக்கு பேச்சு! நீ அந்த ராஜ மாணிக்கத்தோட பொண்ணை ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்க இருக்கிறதா ஷ்ரதா சொல்றாளே உண்மையா?" என்று கோபாவேசமாய் கேட்டார்.

அவன் ஒரு பெருமூச்சுடன், 'ஆமாம்' என்றான்.

அவர், "உனக்கு புத்தி எதுவும் கெட்டுப்போச்சா வருண்? வீட்டுல ரதி மாதிரி பொண்டாட்டியை வச்சிக்கிட்டு இப்படி பேசுறியேடா? பெண்பாவம் பொல்லாதது" என்றார்.

அவன் நிர்தாட்சண்யமாய் சொன்னான். "நீங்க நினைக்கிற அளவுக்கான தப்பு ஒண்ணும் இல்லைம்மா இது"

வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பிரகாஷ் சக்கரவர்த்தி சோபாவிலிருந்து எழுந்தவராக, "சரி அபிராமி, அவன் அந்தப் பொண்ணை ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கட்டும்.. நாமளும் ஷ்ரதாவுக்கு நல்லப் பையனாப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.. இதுல தப்பு என்ன இருக்கு?" என்று கணீர் குரலில் சொன்னபோது, வீசியின் முகம் கன்றிச்சிவந்தது.

தன் தந்தையைப் பற்றி அவனுக்குத் தெரியும். அவர் என்றும் நியாயத்தையே முன்னிறுத்திப் பேசுபவர். அவர் பேச்சில் என்றும் ஒரு உறுதி மிளிரும்.

தன் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவர் இப்படி எல்லாம் பேசுகிறார் என்று அவனுக்குத் தெரிந்தாலும் எதிர்த்துப்பேச உத்தேசமில்லை. அப்படி பேசினால் நிச்சயம் ரசாபாசமாகிப்போகும் என்று அவனுக்குத் தெரியும்.

அமைதியாய் நின்றவனைப் பார்த்து அபிராமி உடைந்த குரலில் சொன்னார். "எங்கப் பையனை நாங்க இழந்திட்ட மாதிரி இருக்கு வருண்"

பேசியவர் அவனது தாய். அவனோ ஷ்ரதாவை உறுத்து விழித்துக் கொண்டிருந்தான்.

ஷ்ரதா பயத்தில் எச்சில் விழுங்கியவளாக, 'முருகா! அவர் பார்வையே சரியில்ல.. நீ எந்த தேசத்துல என்ன பணியில இருந்தாலும் சரி.. இன்னைக்கு நைட் மட்டும் என்கூட தான் இருக்கணும்' என்று உத்தரவிட்டாள்.

பாபம்! முருகன் இன்று நைட் ஷிஃப்ட் பார்க்கும் முடிவில் இல்லை என்பதை யார் ஷ்ரதாவிடம் சொல்வது.

"ம்மா, மாணிக்ஜி இந்த ஊருக்கு கெட்டவர்னாலும் நமக்கு எவ்வளவோ செஞ்சிருக்கார்.. அவர் என்கிட்ட கேட்டது இது ஒண்ணு தாம்மா.."

"அப்புறம் ஏன் நீ ஷ்ரதாவை கல்யாணம் பண்ணிக்கிட்ட?"

"இவ்ளோ சொன்னவ, அதை சொல்லலையா உங்கக்கிட்ட?"

"சொன்னா, மதுபாலாவுக்காக பண்ணிக்கிட்டேன்னு.. இவளை கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த நீ, இன்னொருப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையையுமே நாசமாக்கப்போறியா வருண்? இந்தப் பணம், காசு, அந்தஸ்து எல்லாம் இப்போ வந்தது.. நேத்து இது நம்மக்கிட்ட கிடையாது.. நாளைக்கு இருக்குமா தெரியாது.. ஆனா பந்த பாசம்ங்கிறது அப்படியில்ல வருண்.. வேணாம் வருண்.. என் புள்ளை எந்த அவப்பேரையும் சுமக்க வேணாம்.. எப்பவும் போல கௌரவமா வாழ்வோம்.. வறுமை நமக்கு புதுசில்ல.." என்று பிசிரற்ற குரலில் சொன்னார் அபிராமி.

தன் நிலை புரியாமல் ஆட்சேபிப்பவர்களை வீசிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. விறுவிறுவென்று மேலே மாடிப்படி ஏறிவிட்டான்.

பிரகாஷ் சக்கரவர்த்தி ஷ்ரதாவிடம், "அவன் தப்பான முடிவு எதும் எடுக்க மாட்டான் ஷ்ரதா.. அப்படியே எதுன்னாலும் நாங்க உன் பக்கம் இருக்கோம்மா" என்று தைரியம் கூறினார்.

அபிராமியும், "சஞ்சலப்படாத ஷ்ரதா.." என்றார்.

ஆனால், அவளுக்குத் தான் 'கெதக்'கென்று இருந்தது.

இப்போது அவன் அப்பா அம்மாவிடம் விஷயத்தை கடைபரப்பியதற்கான மண்டகப்படியும் தனக்கு நிச்சயம் கிடைக்கும் என்று பயந்தபடியே செல்லத்தயங்கிய கால்களை எட்டி வைத்து நடைபோட்டாள்.

அங்கு அவன் கையில் கத்தியுடன் அறையின் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தான்.

"முருகா! முருகா!" என்று தன்னால் உருப்போட்டன ஷ்ரதாவின் உதடுகள்.

அவள் வந்ததும் அறையின் கதவை சாற்றிவிட்டு எட்டி அவள் கையைப் பிடித்தவன், எடுத்த எடுப்பிலேயே, "உனக்காகத் தான் காத்திருக்கேன் ஷ்ரதா.." என்றான்.

ஷ்ரதாவிற்கு அவன் சிவப்பேறிய விழிகளைப்பார்க்க பயமாக இருந்தது. வியர்த்து குலை நடுங்கினாள்.

அவன் தன் பிடியை சற்றும் தளர்த்தாமல், "என்ன என் அம்மா அப்பாக்கிட்ட சொன்னா கல்யாணத்தை நிறுத்திடலாம்னு நினைச்சியா? ம்ஹீம் நடக்கப்போறதை யாராலயும் தடுக்க முடியாது.. வெளிப்படையா செஞ்சா தானே எல்லாருக்கும் தெரியும்.. ரகசியமா செஞ்சிக்குவேன்.. ஆமா வித்யா உன்னை இன்னைக்கு கோவில்ல பார்த்தாளாமே? அப்போ உன் கூட பேசிக்கிட்டு இருந்தது யாரு? உன் ஷிவா அத்தானா?" என்று விசாரணை நடத்தினான்.

'கடவுளே! இந்தக் கேள்வியை கத்தியால் என் கன்னத்தைத் தட்டி தான் கேட்க வேண்டுமா?' கதறியது ஷ்ரதாவின் மனம்.

"கேட்கிறேனில்லை?"

"ஆ.. ஆ.. ஆமா.."

"அப்போ வாரா வாரம் கோவிலுக்குப் போறது முருகனை பார்க்க இல்ல.. உன் ஷிவா அத்தானை பார்க்கத்தான்.. இல்லையா?"

இவை தன்னை ஈவு இரக்கம் இல்லாமல் பலியிடும் வார்த்தைகள் என்று நினைத்தாள் ஷ்ரதா. அவள் இரு கண்களிலும் கரகரவென்று கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

"உன் ப்ளட் க்ரூப் ஓ பாசிட்டிவ் தானே ஷ்ரதா? ஈஸியா கிடைக்கக்கூடியது தானே? ஏன் இந்தப் பயம் பயப்படுற?"

அந்தக் கத்தி அவள் முகத்தில் விழுந்த முடிகளை மெள்ள காதோரம் ஒதுக்கி விட்டது. பின், கண்ணீரையும் துடைத்து விட்டது.

"ஓகே ரைட்.. வித்யா பார்க்கும் போது எந்த விரல் ஷ்ரதா உன் அத்தானுக்கு திருநீறு பூசிவிட்டது?"

தன் வலக்கை முஷ்டிகளை இறுக மூடிக்கொண்டாள் ஷ்ரதா. அவளின் துடித்த இதழ்களும் ஏறி இறங்கிய தனங்களும் அவள் பயத்தின் உச்சநிலையை தம்பட்டமடித்தன.

அவன் "சொல்லு.." என்று ராகமிழுத்தது கூட அவளுக்கு கூடுதல் கிலியூட்டியது.

"இல்ல.. இல்ல.. வேணாங்க வலிக்கும்.."

"வித்யா சொன்ன போது எனக்கும் தான் வலிச்சது.."

"நீ.. நீ.. நீங்க.. வித்யா கூட பேசினா தப்பில்ல.. நான் அத்.. அத்.. அத்தான் கூட பேசினா மட்டும் தப்.. தப்.. தப்பா?"

"தப்பு தான்.." என்றவன் அவள் மடக்கியிருந்த வலக்கையைப் பிரித்து நடுவிலிருந்த மூன்று விரல்களையும் கத்தியால் விருட்டென்று கீறிவிட்டான். குபுக்கென்று கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறியது.

ஆ.. என்று அலறிய ஷ்ரதா அங்கேயே மூர்ச்சையடைந்து விழுந்தாள்.

அவளைத் தூக்கிக்கொண்டு போய் மெத்தையில் கிடத்தியவன், ஒருவித திருப்தியுடன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

வயிற்றின் மீது கிடந்த அவள் வலக்கையிலிருந்து ரத்தம் சொலுசொலுவென்று கொட்டிக் கொண்டிருந்தது.

fgrV7DIjF-xF1n2qXG9h4JmWbkyJHbw7RFAG368z1fWk0YUrJwLuDoVcZmsW6201k7s8fw4R_hGyESxIg5ROVn1BaoYXzdLezfwNtfh87W6CWVX2Nmz9HFhHttv9auO1t7j009RR


காதல் கணம் கூடும்...

***************

எனதருமை வாசக வைடூரியங்களே!

இது ஒரு கற்பனைக்கதை என்பதால் கதையின் போக்கில் என்ன மாதிரியான திருப்பங்கள் வேண்டுமானாலும் நிகழலாம்.

ஆனால், நிஜவாழ்வில் வீசியைப் போன்ற ஒருவனை கணவனாக அடையப்பெற்ற பெண் ஒருவரின் வாழ்விலும் இது போன்ற திருப்பங்கள் நிகழுமா என்றால் சாத்தியமில்லை.

அப்பெண் நிச்சயம் தன் கணவரை மன நல மருத்துவரிடமோ இல்லை, குடும்ப நல நீதிமன்ற வழக்கறிஞரிடமோ அழைத்துச் செல்லுதல் நலம்.

*****************

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

கருத்துத்திரி,
பின் வருவனவற்றுள் உங்களுக்குப் பிடித்தமான எண்ணைத் தொடுங்கள். அற்புதத்தைக் காணுங்கள். 1 2 3 4 5 6 7 8 9 0 💋
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 13​



கோவிலிலிருந்து ஆக்ரோசமாகப் புறப்பட்ட சிவனேஸ்வரன் நேரே சென்றது விஜயாதித்தனின் வீட்டிற்கு.

வந்தவன் யாரோ ஒரு வெள்ளை சட்டை ஆசாமியிடம் அவர் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருப்பதைக்கண்டு சட்டை செய்யாதவனாக, மாமா என்று ஹைடெசிபலில் அழைத்தான்.

அவனின் குரலின் உஷ்ணம் அவரை அவனை ஏறயிறங்கப் பார்க்க வைத்தது.

சிவனேஸ்வரன் அதனை கண்டுகொள்ளாமல் இரைந்த குரலில், "மாமா, உங்க தப்பான முடிவால இப்போ பாதிக்கப்பட்டுக்கிட்டு இருக்கிறது ஷ்ரதா தான்.. இப்போ அந்த வீசிக்கு ரெண்டாவது கல்யாண ஏற்பாடு வேற நடக்குதாம்.." என்று சீறியதும், அவர் தனது ஆள் ஒருவனுக்கு அழைப்புவிடுத்து பேசினார்.

பின், சிவனேஸ்வரனிடம் திரும்பி, "நியூஸ் உண்மை தான் மாப்பிள்ளை.." என்று ஆமோதித்தார்.

"அவன் நல்லவன் கிடையாது மாமா.. அவனுக்கு ஏன் ஷ்ரதாவை கல்யாணம் பண்ணி வச்சீங்க?.." என்று பரிதாபமாக வினவினான் சிவனேஸ்வரன்.

"அவனுக்கு ஏன் ஷ்ரதாவை கல்யாணம் பண்ணி வச்சீங்களாவா? ஹாஹாஹா அப்போ உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கணும்னு சொல்றீங்களா மாப்பிள்ளை?"

"ஏன் வச்சிருக்கக்கூடாதா?"

"என்னைப் பொறுத்தவரை என் தொழில் தான் மாப்பிள்ளை என் முதல் குடும்பம்.. இதுல இருக்க அரசியல் உங்களுக்குப் புரியாது.. புரிஞ்சிக்கவும் முடியாது.." எச்சரிக்கும் தொனியில் சொன்னார் விஜயாதித்தன்.

இன்னும் அவன் கோபம் தணியாதவனாக, "ஷ்ரதாவுக்கு ஒரு ஆபத்துன்னா என்னால பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது மாமா.. இதை இப்படியே விடக்கூடாது.. நாம லீகலா ஆக்சன் எடுக்கணும்.." என்றான். அவன் குரலில் ஒரு தீர்மானம் தெரிந்தது.

"கல்யாணம் நடந்தா கண்டிப்பா போலீஸ்கிட்ட போகலாம் மாப்பிள்ளை.." என்று விட்டேற்றியாக பதிலளித்தார் விஜயாதித்தன்.

'உண்மையில் இவர் தான் அந்த அழகுப் பெட்டகத்தின் தந்தையா?' இயற்கையின் முரணை சகிக்க முடியவில்லை அவனால். வஞ்சினத்துடன் வெளியேறினான்.

வீட்டிற்கு வந்த சிவனேஸ்வரனுக்கு மனம் ஆறவே இல்லை. அங்குமிங்குமாய் நடந்தான்.

"ஷ்ரதா எப்படிப்பட்டவள்! அவள் அழகு எப்படி ஆராதிக்கப்பட வேண்டியது! இந்த வீசி அவளை இப்படி சித்திரவதை பண்றானே, மடையன்!" என்றே கோபமாக திரிந்தான்.

அவன் மனம் அவனிடம் ஷ்ரதாவிற்கு ஏதேனும் நன்மை செய்யச்சொல்லி மன்றாடிக்கொண்டே இருந்தது.

அப்போது வீட்டினுள் திடும் பிரவேசமாக வந்த அவனது தாய் கோகிலா கோபமாக தன் பர்ஸை விட்டெறிந்தார். ஓடிக்கொண்டிருந்த டீவியையும் அணைத்து விட்டு கௌச்சில் வந்து உட்கார்ந்தார்.

அவரின் நடத்தைக்கு முகாந்திரம் புரியாமல், "என்னாச்சிம்மா?" என்றான் மைந்தன்.

"என் புள்ளைக்கு என்ன குறை? என்ன வார்த்தை சொல்லிட்டா அந்த செல்வி!" என்றார் அவர்.

சம்பவம் அவன் சம்பந்தப்பட்டது என்பதால் நிச்சயம் தெரிந்துகொண்டே ஆகவேண்டு மென்கிற உத்வேகம் பிறந்தது அவனுக்குள். தூண்டிலை வீசினான். "யாரு அப்பாவோட சித்தப்பா பொண்ணா?"

"அவளே தான்.. என் பொண்ணு அழகு சிலை மாதிரி இருந்தும் பணக்கார வீடா தேடிப் புடிச்சாங்கல்ல இப்படி தான் ஆகும்னு சொல்றா.. எவ்வளவு திமிர் இருக்கும் அவளுக்கு.. அதிலயும் உனக்கு பெங்களூர்ல ஒரு பொண்ணுக்கூட தொடர்பு இருக்குறது தெரிஞ்சி தான் கல்யாணம் நின்னுப்போச்சாம்.. கன்னாபின்னான்னு பேசுறா அந்த வக்கீல் பொண்டாட்டி.. எனக்கு அவளை அப்படியே கடிச்சுக் கொதறனும் போல வந்தது.. அடக்கிக்கிட்டேன்.." என்று ஆவேசப்பட்டார்.

'ஏன் இந்தப் பெண்கள் மட்டும் ஜோடிக்கும் வேலைகளில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்?' என்று சிவனேஸ்வரன் யோசித்த வேளையில், "அடடடடா! என்ன இப்படி காட்டுக் கத்து கத்திக்கிட்டு இருக்க கோகிலா?" என்று தன்னறையிலிருந்து சலித்தபடியே வெளியே வந்தார் காசிராஜன்.

"என்ன கத்திக்கிட்டு இருக்கேனா? என் புள்ளைக்கு கல்யாணம் நின்னதும் நின்னது எல்லார் வாய்க்கும் அவல் இப்போ நம்ம வீட்டு சங்கதி தாங்க.." என்றவர் மனத்தாங்கலாக சொன்னதும், அவரும் பேச முடியாமல் வாயடைத்துப்போனார்.

திருமண பத்திரிக்கை வரை வந்த திருமணம் நின்றுபோகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

"நாம யாருக்கு என்ன பாவம் செஞ்சோம்? நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது? ஊருல எல்லாரும் பேரன் பேத்தின்னு எடுத்து சந்தோசமா இருக்கலையா? ரெண்டு பிள்ளை பெத்தும் நம்ம மட்டும் இப்படி நிம்மதி இல்லாம இருக்கோமேங்க.." என்று துக்கம் தொண்டையடைக்க பேசிக்கொண்டிருந்தவரிடம் எதையெதையோ சொல்லி சமாதானப்படுத்தினார் காசிராஜன்.

தன் திருமணம் நின்றதற்கு காரணம் வருண் சக்கரவர்த்தி தான் என்று ஏற்கனவே ஷ்ரதாவின் மூலம் அறிந்திருந்த சிவனேஸ்வரன் தற்போது ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.

பின் தன் அன்னையின் அருகில் வந்து, "ம்மா, ப்ளீஸ் அழாதீங்க" என்று சமாதானப்படுத்தினான். அவர் அவனை விலக்கி அழுகையில் உடல் குலுங்கினார்.

தாய் அழ சகியாதவனாக, 'தப்பு செஞ்சிட்ட வீசி.. பெரிய தப்பு செஞ்சிட்ட.. என் வலியையும் வேதனையையும் நீயும் ருசி பார்க்கணும்டா..' என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டான் சிவனேஸ்வரன்.

துக்கம் தாளாமல் எது எதற்கோ முடிச்சுப் போடத்துவங்கினார் கோகிலா. "இதுக்கெல்லாம் காரணம் அந்த ராசியில்லாதவ தான்.. அன்னைக்கு கோவில்ல பத்திரிக்கையை அம்மன் பாதத்துல வச்சி எடுத்துட்டு வரும்போதே எதிர்க்க வந்துட்டாளே சிறுக்கி.. அப்போவே எனக்கு சுருக்குன்னுச்சி.. ஏதோ அபசகுனம் மாதிரி தோணுச்சி.. அன்னைக்கு நைட்டே ஒரு உருவம் மாடிலயிருந்து குதிச்சு கால் மட்டும் துண்டா போன மாதிரி கனவும் கண்டேன். அதான் இப்படி சம்பந்தமும் துண்டா போயிருச்சி.." என்றார்.

அவர் ஷ்ரதா மீது சுமத்திய குற்றச்சாட்டில் உடன்பாடில்லை சிவனேஸ்வரனுக்கு. அவர் அவளை பழித்ததாலோ என்னவோ இம்முறை அவருக்கு ஆறுதல் சொல்லக்கூட முனையவில்லை அவன்.

கோகிலா புடவையில் தன் கண்களைத் துடைத்தவாறே புதுக்கதை ஒன்றை சொன்னார். "உனக்கு பனிரெண்டு வயசுல டெங்கு ஜுரம் வந்து ரொம்ப கஷ்டப்பட்ட சிவா.. பக்கத்துல இருந்தவங்க எல்லாம் மாதா கோவிலுக்கு நேந்துக்கங்கன்னு சொன்னாங்க.. நானும் உனக்கு ஜுரம் போயிடுச்சின்னா வேளாங்கண்ணி மாதாவுக்கு மாலை வாங்கி சாத்துறதா வேண்டிக்கிட்டேன்.. ஏனோ அது அப்போ நிறைவேத்த முடியாமலேயே போயிடுச்சி.. அந்தக்கடன் தான் இப்போ நம்ம கழுத்தை வந்துப் பிடிக்குதுன்னு நினைக்கிறேன்.. நானும் உங்கப்பாவும் ஒரு ரெண்டு நாள் வேளாங்கண்ணி, திருச்செந்தூர், அப்புறம் இந்த ராமேஸ்வரம்னு போயிட்டு வர்றோம் சிவா.. நீ நிம்மதியா ஓய்வெடு என்ன!" என்றார். அவனும் சரியென்றான்.

மறுநாள் காலையில் ஏழு மணிக்கெல்லாம் கோகிலா, எல்லாம் வேலைக்காரர்களிடம் சொல்லியிருப்பதாகக் கூறிவிட்டு வேளாங்கண்ணி புறப்பட்டபோது, ஓசனிச்சிட்டு (Humming bird) போல் பின்னோக்கி பறந்தன சிவனேஸ்வரனின் ஞாபக குஞ்சுகள். அதுவும் களைப்பேயில்லாமல் பதினைந்து வருடம் பின்னோக்கி!

இதேபோல் ஒருமுறை தன் மொத்தக் குடும்பமும் வெளியூருக்கு கிளம்பியபோது தான் தன் நண்பன் ஒருவனுக்கு அழைப்பு விடுத்திருந்தான் சிவனேஸ்வரன்.

பூட்டிய வீட்டிற்குள் அவனும் அவனது நண்பனும் மட்டுமே இருந்தனர்.

அவர்களுக்கு முன்னால் டீபாயில் சிகரெட் பாக்கெட், தீப்பெட்டி, குண்டு விஸ்கிபாட்டீல், சோடா, கண்ணாடி தம்ளர்கள் இரண்டு, சிப்ஸ் பாக்கெட், ஊறுகாய் என எல்லாம் சகிதமாய் கனகட்சிதமாய் இருந்தது.

"சிவா, யாருக்காவது இந்த விஷயம் தெரிஞ்சா என்னாகும்டா?"

"என்னாகும் நாம பெரிய மனுசங்களா ஆகிட்டோம்னு நினைப்பாங்க.."

"உங்க சொந்தக்காரங்க யாராவது இப்போ வந்தா என்னடா ஆகும்?"

"அதெல்லாம் யாரும் வரமாட்டாங்க.. என் அண்ணனுக்கு டாக்டர் சீட்டுக்கு லட்சக்கணக்குல லஞ்சமா கொட்டினது; இப்ப அவனை மெடிக்கல் காலேஜ்ல சேர்க்க சென்னைக்கு போயிருக்குறதுன்னு எல்லாம் ஊருக்கே தெரியும்.. நல்லா தம்பட்டமடிச்சிட்டு தான் என் அம்மாவும் அப்பாவும் என் அண்ணனை கூட்டிக்கிட்டு சென்னைக்கு போயிருக்காங்க.."

"சிவா, வீட்டுல வீக்லி டெஸ்ட்க்கு உன்கூட சேர்ந்து படிக்கப்போறதா பொய்சொல்லிட்டு வந்திருக்கேன்டா.."

"நான் மெட்ரிகுலேசன், நீ தமிழ் மீடியம்.. இந்த வித்தியாசம் கூட உன் வீட்டுல இருக்கிறவங்களுக்குத் தெரியாதா?.. க்கும்.. க்கும்.. க்கும்.. ஃபர்ஸ்ட் டைம்னால இப்படி இருக்குதுன்னு நினைக்கிறேன்.. இந்தாடா நீயும் ஒண்ணு குடிச்சிப்பாரு.." என்று சிகரெட் பாக்கெட்டை எதிரிலிருந்தவனிடம் நீட்டினான் சிவனேஸ்வரன்.

"இல்ல வேணாம் சிவா.. அம்மாவுக்கு பிராமிஸ் பண்ணிருக்கேன்டா இதெல்லாம் தொடமாட்டேன்னு.."

"போடா இவனே.." என்றபடியே கிளாஸில் ஊற்றிய விஸ்கியை முகர்ந்துப் பார்த்து முகத்தை சுளித்தான் சிவனேஸ்வரன்.

"அதான் நாறுதில்ல.. அப்புறம் ஏன்டா குடிக்கிற?"

"பின்னே பெரிய மனுஷன் ஆக வேணாமா?"

இப்போது எழுந்து நின்ற சிவனேஸ்வரன் தன்னறைக்குப்போய் தீவிரமாக தேடி எடுத்து வந்த ஒரு சீடியை பிளேயரில் போட்டான். "எங்க அப்பா கலெக்சன்.. மறைச்சு வச்சிருந்தாருடா.." என்றான்.

நண்பனானவன் சுவாரசியமாக டீவியை பார்த்தான். உள்ளாடை சுதந்திரத்தோடு காட்சியளித்த ஆணும் பெண்ணும் தீவிரமாக பிசியாலஜி படித்துக் கொண்டிருந்தார்கள். கண்களை மூடிய நண்பன் விரல்களின் இடைவெளியில், "டீவியை ஆஃப் பண்ணுடா" என்று கத்தினான்.

சிவனேஸ்வரன் சிரித்துக்கொண்டே, "ஏன்டா, இதுவும் பார்க்கமாட்டேன்னு சத்தியம் பண்ணி தொலைச்சிட்டியா? அவசரப்பட்டுட்டியேடா.." என்று கிண்டலடித்தான்.

"ப்ளீஸ்டா.. எனக்குன்னு ஒரு கற்பனை இருக்கு.. இதைப் பார்த்து நான் அதை விகாரமாக்க விரும்பல.." என்ற நண்பன் கிளம்பும் பொருட்டு எழுந்துநின்றான்.

"இதுக்கெல்லாம் என் ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் தான் லாயிக்கு.. டைப் ரைட்டிங் கிளாஸ் ப்ரெண்ட்னு உன்னைக் கூப்பிட்டேன் பாரு.."

"சிவா, நான் கிளம்பவா? டெஸ்ட்க்கு படிக்கணும்டா.."

"அட ஏன்டா! என்னமோ நீ மட்டும் தான் படிக்கிறவன் மாதிரி பறக்குற.. லீவ் முடிஞ்சி இப்போ தானே ஸ்கூலே ஸ்டார்ட் ஆகிருக்கு.. பொறுமையா படிக்கலாம்.. அப்புறம் முக்கியமான விஷயம், இந்த விஸ்கி விஷயத்தை வெளிய யார்கிட்டயும் சொல்லக்கூடாது ம்ம்?"

"ம்ம், சொல்லலை.. ஆனா, நீ அடிக்கடி இந்த மாதிரி செய்யாத என்ன.." என்று வெளியேற முயன்ற நண்பனை, 'வீசி' என்று அழைத்த சிவனேஸ்வரன், "உன் அக்காவுக்கு இன்ஜினியரிங் காலேஜ்ல சேர சீட் கிடைச்சிருக்குன்னு சொன்னியே? சேர பணம் ரெடி பண்ணிட்டீங்களாடா?" என்றான்.

"ம்ம், அப்பா தெரிஞ்ச இடத்துல வட்டிக்கு பணம் வாங்கியிருக்காரு.. பேங்க்லயும் லோனுக்கு அப்ளை பண்ணியிருக்கோம்.." என்று நம்பிக்கை தெரிவித்தான் அவன்.

வீசி தலையசைத்து விடைபெறவும் கதவை பூட்டிவிட்டு வந்த சிவனேஸ்வரன் மீண்டும் தொலைக்காட்சி திரையில் மூழ்கினான்.

ஆனால், வீசியின் நன்னடத்தை சிறிதுநேரத்திலேயே அவனுக்குள் ஒரு குற்றவுணர்வை உண்டாக்கியது. வீசியின் நற்பண்பு அவனையே அவனுக்கு தரம் தாழ்த்தி காண்பித்தது.

படிப்பை பொறுத்தவரை வீசியைக் காட்டிலும் சிவனேஸ்வரனே முதல் நிலையில் இருந்தான். அதில் அவனுக்குப் பெருமையும் உண்டு. ஆனால், இப்போது வீசி தனது இந்த கெட்டசெயலில் பங்கெடுக்காதது அவனை வீசியுடன் ஒப்பிடும் போது கேடுகெட்டவனாக உருவகப்படுத்தியது. உடனே விஸ்கிபாட்டிலை தூக்கிக்கொண்டுபோய் குப்பைத் தொட்டிக்குள் போட்டான். அப்போது தான் அவன் வீட்டு அழைப்பு மணியும் சங்கீத ஒலி எழுப்பியது.

யாரும் வரமாட்டார்கள் என்ற மிதப்புடன் இருந்த சிவனேஸ்வரனுக்கு இப்போது பதட்டம் கூடியது. விரைவாக சென்று பிளேயரில் இருந்த சீடியை அவன் கழற்ற முயன்றபோது, சட்டென்று மின்சார வாரியம் வேலை செய்து பவர்கட் ஆனது. சீடியும் பிளேயரின் உள்ளேயே மாட்டிக்கொண்டது.

குப்பென்று வியர்த்துப்போனவன், "இனிமே இந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணமாட்டேன் கடவுளே.. ப்ளீஸ் இதை வெளிய மட்டும் கொண்டு வந்திரு" என்று மனதார இறையை வேண்டினான். வந்திடு சீசேம் என்று மந்திரம் போட்டும் அது வெளிவரவில்லை. வெளியே கதவு தட்டப்படும் சத்தம் வேறு தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.

பயத்தில் உடல் ஜில்லிட்டுப் போக, மெதுவாக சென்று கதவைத் திறந்தான் சிவனேஸ்வரன்.

அன்றலர்ந்த மலராக அங்கு நின்றிருந்தது அவன் தாய்மாமன் மகள் ஷ்ரதாஞ்சலி.

அவன் உதடு "ஷ்ரதா" என்று சன்னமாக முணுமுணுக்க, "அத்தான்" என்று பல்வரிசை காட்டினாள் அவள்.

"வா! வா ஷ்ரதா!" என்றான் அவன்.

அவள் உள்ளே வந்தாள். "என்ன அத்தான் கரெண்ட் போயிடுச்சா?" என்றாள்.

வியர்த்த தன் முகத்தை துடைத்துக்கொண்டே "ம்ம்.. ஜென்ரேட்டரும் வேலையில இருக்கு.. என்ன ஷ்ரதா திடீருன்னு வந்திருக்க?" என்றான்.

"ஒண்ணுமில்ல அத்தான்.. நீங்க பப்ளிக் எக்ஸாம்ல நானூத்தி தொண்ணூறு மார்க் எடுத்ததா சொன்னப்போவே ஏதாவது உங்களுக்கு கிப்ட் பண்ணனும்னு நினைச்சேன்.. பட் முடியலை.. அதான் இப்போ கொடுக்கவந்தேன்.. இந்தாங்க.." என்று தன் கையிலிருந்த ஹீரோ பென்செட்டை கைகுலுக்கிக் கொடுத்தாள். அவன் வாங்கிக்கொண்டான்.

நடுங்கிய அவனது கைகள் அவளுக்குள் ஏதோ தவறு என்றது. தன் முட்டைக் கண்களை உருட்டி சுற்றிமுற்றிப் பார்த்தாள். பின், நெருங்கி அவனை மோப்பம் பிடித்து, "என்ன அத்தான் ஏதாவது தப்பு பண்ணுனீங்களா?" என்றாள்.

அவன் "இல்லையே" என்று சொன்ன வேகமே அவளது சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது.

"இல்ல, தப்பு பண்ணி இருக்கீங்க.. நான் கண்டு பிடிச்சிட்டேன்.." என்றவள், நேரே டீபாயிலிருந்த சிகரெட் பெட்டியை எடுத்துக்காட்டி, இது என்னவென்று புருவத்தை ஏற்றி இறக்கினாள்.

"அது ஷ்ரதா சும்மா விளையாட்டுக்கு.. ப்ளீஸ் வீட்டுல யார்கிட்டயும் சொல்லிராத.." என்றவன் கண்கள் கலங்கியே விட்டான்.

"சரிங்கத்தான் சொல்ல மாட்டேன்.. பட் இது பேட் ஹேபிட்.. அப்பா குடிச்சாலே நாறும்.. கிட்டக்க போக முடியாது.. இனி நீங்க இதை தொடவேக்கூடாது.. ஓகே!" என்று அந்த பத்துவயது சிறுமி தன் கன்னத்தைத் தொட்டபோது அக்கரத்தின் மென்மையில் இன்னும் அழுகை வரும் போல் இருந்தது அவனுக்கு.

"வெளிய எல்லாரும் சும்மா பிக்னிக் கிளம்பினோமா.. அதான் உங்களை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.. இதோ வெளிய கார்ல தான் எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. பை அத்தான்.." என்று சொல்லிவிட்டு அவள் துள்ளிக்குதித்து ஓடிவிட்டாள்.

அவன் இன்னும் படபடப்பு நீங்காமலே நின்றிருந்தான். இப்போது கடவுள் ஆன்லைன் வந்தது போல், அவன் அனுப்பிய செய்திக்கு ப்ளூ டிக் கிடைத்தது போல் மின்சாரம் வந்தது.

அரக்க பறக்க ஓடிப்போய் முதல் வேலையாக பிளேயரிலிருந்து சீடியை உருவி குப்பைத் தொட்டியில் போட்டான் சிவனேஸ்வரன்.

பின், கீழ்மூச்சு மேல்மூச்சு வாங்க சோபாவில் சரிந்தான்.

சோர்வில் சொருகிய கண்களை அவன் திறந்தபோது டீபாயில் கிடந்த பென்செட் அவன் கவனத்தை ஈர்த்தது.


காதல் கணம் கூடும்...

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

என் மனமெனும் கல்வெட்டில் (கமெண்ட் த்ரெட்) உங்கள் பெயரும் பொறிக்கப்பட வேண்டுமா? உடனே தளத்தில் லாகின் செய்யுங்கள்.

கருத்துத்திரி,
கல்வெட்டை அடையும் வழி
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 14​



"நீயொரு தேவதை ஷ்ரதா.. உன்னை ஒரு தேவதையா தான் நான் அன்னைக்கு பார்த்தேன்.." கனவிலிருந்து விழித்தவன் போல் சொல்லிக்கொண்டிருந்தான் சிவனேஸ்வரன். அவனால் அந்த பதினைந்து வயது சம்பவத்தை மறக்க முடியவில்லை.

நீண்ட இடைவெளிக்குப்பின் வேறு எதையோ நினைத்தவன் போல், "இல்ல ஷ்ரதா, நான் அன்னைக்கு அவன் பேச்சை கேட்டிருக்கக்கூடாது.. அந்த லெட்டரை கிழிச்சிப்போட்டிருக்கக்கூடாது.. உன்கிட்ட குடுத்திருக்கணும்.. ஒருவேளை அதை நான் உன்கிட்ட குடுத்திருந்தா நீ என்னைவிட்டு போயிருக்க மாட்டல்ல ஷ்ரதா?" என்று ஆயிரமாவது முறையாக வினவினான்.

***************

"சிவா.. சிவா.."

"ஆன்! வரேன் டா"

சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகவே சிவனேஸ்வரனுக்காக அவனது அப்பாவின் 'வெட்டிப்பயல்' என்று பொருள் தாங்கி வந்த கோபாவேச பார்வையை சகித்துக்கொண்டு காத்திருந்த வருண் சக்கரவர்த்திக்கு அதற்கு மேல் பொறுமையில்லை.

மதுரை டிவிஎஸ் நிறுவனத்தில் கடந்த பதினைந்து வருடங்களாகவே ஆடிட்டராக பணிபுரிந்து வரும் காசிராஜனுக்கு தன் மகன் தங்கள் அந்தஸ்திற்கு கீழ் உள்ள அயலர்களிடம் நட்பு கொள்வதில் அவ்வளவு பிடித்தம் கிடையாது.

அதிலும் ஆவணிமூலவீதியில் ஒரு பெட்டிக்கடை போன்ற வெள்ளிக்கடையில் மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கும் பிரகாஷ் சக்கரவர்த்தியின் மகன் என்றால் அவருக்கு கூடுதல் இளக்காரம் தான்.

எவ்வளவோ முறை தன் பிடித்தமின்மையை நேரடியாகவும் மறைமுகமாகவும் அடிக்கோடிட்டு காட்டிவிட்டார் காசிராஜன். ஆனால், சிவனேஸ்வரன் தான் 'நெஞ்சத்து அகனக நட்பதே நட்பு' என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு நடமாடும் உதாரணமாகிக் கொண்டிருந்தான்.

தற்போது வருண் சக்கரவர்த்திக்கு காசிராஜன் கணக்குப் புத்தகத்தை ஹாலுக்கு தூக்கிக்கொண்டு வந்ததே தன்னை இதுபோல் விழியால் வாள் வீசி கூறுபோடத்தான் என்று தோன்றியது.

அவனுக்கு அந்த அவஸ்தையிலிருந்து விடுதலை கொடுக்க, "வந்திட்டேன் டா.." என்று தன் சட்டையை இழுத்துவிட்டபடியே வெளியேவந்தான் சிவனேஸ்வரன்.

அவன் அணிந்திருந்தது புது சட்டை என்பதை அதன் மொடமொடப்பிலிருந்தே தெரிந்து கொண்ட வீசிக்கு, அவனது இந்த பிரத்யேக அலங்காரம் வித்தியாசமாகப்பட்டது.

குனிந்து தன் சட்டையைப் பார்த்தான். போன தீபாவளிக்கு முந்தின தீபாவளிக்கு எடுத்தது. நீல நிறம் மங்கி வெளுத்துப் போயிருந்தது. இருக்கட்டும்! பாதகமில்லை என்று நினைத்துக் கொண்டான்.

"போலாமா?" என்று கேட்ட சிவனேஸ்வரன் தன் மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்துக்கொள்ள, அது பத்தை கடந்திருந்தது. பத்தரைக்கு மேல் சென்றால் உபயோகமில்லை. "ம்ம் க்விக்டா" என்றபடியே வெளியே வந்து தனது பைக்கை உதைத்துக் கிளப்பினான்.

'தடுக்கி விழுந்தால் நியூ டீலக்ஸ் தெரு.. மூன்று தெரு தள்ளியிருக்கும் வீட்டிற்கு செல்வதற்கெதற்கு பைக்?' வீசி யோசனையாய் சிவனேஸ்வரனின் பைக்கைப் பார்த்தான். அப்போது தான் பெட்ரோல் டேங்கின் மீது கிடந்த பிரவுன் அட்டை போட்ட நோட்டும் அவன் கவனத்தைப் பெற்றது.

"இது என்ன?" என்று கேட்பதற்குள் வீட்டின் வாயிலை கடந்திருந்தான் சிவனேஸ்வரன்.

அவனுக்குப் பின்னேயே வீசியும் வேகமாக பெடல் போட்டுக் கொண்டிருந்தான்.

பெடலுக்கு பெட்ரோல் பைபை சொல்லி தெருமுனையில் காணாமல் போனது.

அவர்கள் இருவரும் மாகாளிப்பட்டி சாலையில் 'கேட் பள்ளிக்கூடம்' என்று அன்புடன் அழைக்கப்படும் பாரதிதாசனார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு எதிரேயுள்ள விஜயாதித்தனின் புத்தகக்கடை காரியமாகத்தான் அவரை சந்திக்கச் சென்று கொண்டிருந்தார்கள்.

இருவரும் ஒரு வாரத்திற்கு முன்பு தான் அந்த புத்தகக்கடையில் 'வேலைக்கு ஆட்கள் தேவை' என்று பதாகை மாட்டியிருந்ததையும் பார்த்திருந்தார்கள். இந்தப் பயணத்தின் பின்னணியும் அது சம்பந்தப்பட்டதுவே.

கடந்த மூன்று வருடங்களாகவே கணிசமான ஊதியம் எதுவும் இல்லாமல் மதுரை சுற்றுபுறத்தில் லாடு லாடாக கட்டி வைத்திருக்கும் கனரக வாகனங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலேயே மாடாக உழைத்து ஓய்ந்துவிட்டான் வீசி.

எந்த நிறுவனமுமே தொழிலாளர்களை நிரந்தரப் பணியிலமர்த்தும் தீர்மானத்தில் இல்லை.

பாலிடெக்னீக் படிப்பை முடித்த இந்த மூன்று ஆண்டுகளில் மூன்று கம்பெனிகள் மாறிவிட்டான் வீசி. எந்த நிறுவனமும் நிரந்தரப்பணி எனும் பேச்சை மறந்தும் எடுக்கவில்லை. வேலைக்கு வருகிறாயா? வா. வேலையை விட்டு நிற்கிறாயா? நில். நீ போனால் உன் இடத்திற்கு வர வெளியே ஆயிரம் பேர் வேலையில்லாமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் அவர்களின் தாரக மந்திரமாக இருந்தது.

பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் இப்படித்தான் இயங்கியும் கொண்டிருக்கின்றன.

இது போன்ற நிறுவனங்களில் இனியும் தொடர்ந்து வேலை பார்த்தல் என்பது செக்கு மாட்டிற்கு சமம் என்று கருதிய வீசி, விடுமுறை நாட்களில் வேறொரு வேலையையும் தேடிக்கொண்டிருந்தான்.

அந்த தேடுதல் வேட்டையில் எதேச்சையாக அவன் கண்ணில் பட்டது தான் இந்த புத்தகக்கடை அறிவிப்பும்.

முதலில் பார்த்த போது வீசி அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏதாவது எடுபுடி வேலையாக இருக்கும் என்றே நினைத்தான். சிவனேஸ்வரன் அந்த வேலையில் சேர்பவர்களுக்கு ஊதியம் பத்தாயிரம் என்றபோது தான் அவனுக்கு கூடுதல் ஆர்வம் உண்டானது.

எப்படியாவது தான் அந்த வேலையைப் பெற்றுவிட்டால் உசிதம் என்றும் நினைத்தான். சிவனேஸ்வரனிடமே அதற்கான உபாயத்தையும் கேட்டான்.

சிவனேஸ்வரன் அவனிடம், "அது நம்ம மாமா கடை தான்டா" என்று சீண்டினான்.

சிவனேஸ்வரனுக்கு விஜயாதித்தன் தாய்மாமன் என்பது தொப்புள் கொடி உறவு. ஆனால், வீசிக்கு அவர் மாமன்முறை என்பது அவன் அக்கா வழி வந்த தாலிக்கொடி உறவு.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் மகனிற்கு தன் அக்காவை திருமணம் செய்து கொடுத்ததால் அவனுடைய விருப்பமே இல்லாமல் அவனுக்கு மாமனார் பதவி ஏற்றுவிட்டார் விஜயாதித்தன்.

அந்த மாமா எனும் பதத்தை அறவே வெறுத்தான் வீசி.

"அவர் கடையா?"

"ம்ம், மாமா இப்படி அடிக்கடி நல்ல விஷயமும் செய்வாரு.. உனக்கு அந்த வேலை வேணும், அவ்வளவு தானே.. அருண்மொழி மச்சான் கிட்ட சொன்னா வேலை சீக்கிரமே முடியுமேடா.."

வீசி வெறுக்கும் இரண்டாவது பதம் மச்சான். அருண்மொழியை ஏனோ அவனுக்கு முன்னாலிருந்தே பிடிக்கவில்லை. இப்போதும் மதுபாலாவை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்தால் வாசல்படியோடே அவளை விட்டுவிட்டு சென்றுவிடும் வாடிக்கை அவனுக்குள் எதற்குமே அருண்மொழியிடம் சென்று நிற்கக்கூடாது என்கிற வைராக்கியத்தை உண்டாக்கியிருந்தது.

ஆகவே, சிவனேஸ்வரனிடம், இது இரண்டும் தவிர்த்து என் தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் ஆபத்து நேராத வகையில் நீ ஏதாவது யோசனை சொன்னால் உசிதம் என்றான்.

சிவனேஸ்வரன் தன் பொறியியல் மூளையை முட்டை பொரியல் செய்தவனாக, "வீசி, சன்டே நீ என் கூட மட்டும் வா.. நான் உனக்காக மாமா கிட்ட பேசுறேன்.. அவரு உனக்கு இந்த வேலையை கன்பார்ம் பண்ணிடுவாரு.." என்றான்.

வீசி ஆயிரம் முறை யோசித்தவனாக, "இது வேலைக்காகுமாடா?" என்றான்.

"அதெல்லாம் ஆகும்.. நீ வா.." என்று கூடுதல் பலம் தந்துவிட்டுப்போனான் நண்பன்.

ஞாயிற்றுக்கிழமை அன்று தான் இருவருக்குமே விடுமுறை என்பதால் அந்நாளையே சுபயோக சுபதினமாக தேர்ந்தெடுத்தார்கள்.

அவர்களின் இந்த வேலை கேட்கும் படலத்திற்காக முன்னேற்பாடாய் நேரமே கிளம்பியும் வந்திருந்தான் வீசி.

சிவனேஸ்வரன் தான் தன் அலங்காரத்திற்காக சலுகையாய் கூடுதல் அரைமணிநேரம் எடுத்துக்கொண்டான்.

தன் மாமாவிற்கு தன்மேல் அளவு கடந்த பிரியம் உண்டு என்ற மமதையில், தான் கேட்டால் நிச்சயம் இந்த வேலையை அவர் வீசிக்கு கொடுப்பார் என்ற நம்பிக்கையில், அவனை தன்னுடன் அழைத்து வந்திருந்தான் சிவனேஸ்வரன். ஆனால், வீட்டை நெருங்கியவுடனே அவனுக்குள் ஒரு அபசுருதி.

உண்மையில் தன்மானத்தின் ராஜ்யப் பிரதிநிதியாக வலம்வரும் வீசிக்கு தன் அக்காவின் மாமனாரிடம் சென்று வேலை கேட்பதென்ப தென்னவோ கௌரவ குறைச்சலாகத் தான் இருந்தது. அவரின் பணத்திமிரை அறவே வெறுத்தான் அவன். அவரை போன்ற முரட்டாதிபதிகளின் பக்கமே வாசம் செய்யும் தனலெட்சுமியின் மீதும் ஆத்திரம் கொண்டான்.

தற்போது அந்த ஆத்திரத்தை ஓரமாய் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு தான் சைக்கிளின் பெடலை வியர்க்க விறுவிறுக்க மிதித்துக் கொண்டிருந்தான். அவன் நெற்றித் திருநீறை காவு வாங்கியிருந்தான் கதிரவன்.

பைக்கில் வேகமாய் சென்ற சிவனேஸ்வரன் நியூ டீலக்ஸ் தியேட்டருக்கு எதிரே உள்ள பெட்டிக்கடையில் மம்மிடாடி பாக்கு வாங்கி மென்றுக் கொண்டிருந்தான். அவனுக்கு அது ஒரு வாடிக்கை.

திரும்பி சுவரில் ஒட்டப்பட்டிருந்த இன்றைய காட்சிகளுக்கான போஸ்டரை உற்றுநோக்கியபோது டாப்லெஸ் பெண்கள் அவனை காமப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை அவன் வெறித்துப் பார்த்ததை கண்டுவிட்ட கடைக்காரர் நமட்டுச்சிரிப்பு சிரித்தார். அவன் வெட்கமாகி கிளம்பப்போன சமயம் அருகில் வந்து நின்றான் வீசி. வீசியைப் பார்த்ததும், மீண்டும் வேகமாய் ஹிக்கரை மிதித்தான் சிவனேஸ்வரன். முரட்டுத்தனமாய் உறுமியது பைக்.

உள்ளே உள்ளதை எட்டிப்பார்க்க முடியாத அளவிற்கு உயரமாய் காம்பவுண்ட் சுவர் போடப்பட்ட வீட்டின் எல்லைக்குள் இருவரும் ஒருசேர நுழைந்தபோது நுழைவுவாயிலில் மூன்று உயர்ரக கார்கள் நின்றிருந்தன.

ஆங்காங்கே வெள்ளை சட்டை பிரமுகர்கள் வேறு கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

உள்ளே செல்லச்செல்ல முரட்டு ஜாம்பவான்கள் முகத்தோற்றத்திலும் ஆகிருதியிலுமே மிரட்டிப் பார்த்தார்கள்.

வீட்டிற்குள் நுழைந்த சிவனேஸ்வரனை பார்த்ததும் பேசிக்கொண்டிருந்த மூவரையும் கைகூப்பி வழியனுப்பிய விஜயாதித்தன், வெளியே தனக்காக காத்திருந்த காவல்துறையை மறந்தவராக, "வாங்க மாப்பிள்ளை! சாந்தாம்மா மாப்பிள்ளைக்கு பூஸ்ட் கொண்டா.." என்று வேலைக்காரியிடம் உத்தரவிட்டார்.

இத்தனைக்கும் அவர் வீசியையும் பார்க்கத்தான் செய்தார். ஆனால், அவனை முகமன் கேட்கத் தான் அவருக்கு மனம் வரவில்லை.

"படிப்பெல்லாம் எப்படி மாப்பிள்ளை போகுது?" என்று கனிவாக விசாரித்தார். அப்போது முதுகலை பொறியியல் முதல் வருடத்தில் இருந்தான் சிவனேஸ்வரன்.

வீசியின் வீட்டிலும் பொருளாதார நிலைமை சாதகமாக இருந்திருந்தால் சிவனேஸ்வரனுடன் தான் அவனும் படித்துக் கொண்டிருப்பான்.

ஆனால், சூழ்நிலை அவனை அரசு பாலிடெக்னீக் கல்லூரியில் கொண்டுபோய் தள்ளியிருந்தது. இயந்திரப் பொறியியலில் டிப்ளமோ முடித்திருந்தான். அதிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தான்.

விதி தன்னை இப்படியொரு இக்கட்டில் கொண்டுபோய் தள்ளுமென்று அவன் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. இப்போது விஜயாதித்தன் தன்னை புறக்கணித்தது வேறு சுருக்கென்றது. வெளியேறிவிட பாதம் அவரசம் காட்டியது.

வெளியேற இயலாத நெருக்கடியில் தான் சிக்குண்டிருப்பதை நினைத்து தன்னையே வெறுத்தான் வீசி.

"மாமா வீசி என் ப்ரெண்ட்.."

"வீசியா?"

"வருண் சக்கரவர்த்தி.. ஷார்ட்டா வீசி மாமா"

ஏதோ ஹஸ்யம் கேட்டது போல் ரசித்துச் சிரித்தார் விஜயாதித்தன்.

"சரிங்க மாப்பிள்ளை, அவரையும் உட்கார சொல்லுங்க.."

வீசி கர்வமாக வேண்டாமென நின்றபடியே இருந்தான்.

"மாமா, உங்க புத்தகக்கடைக்கு மோகன் அண்ணாவுக்கு உதவியா ஆள்வேணும்னு போர்டு போட்டிருந்ததைப் பார்த்தோம்.."

"ஆமா மாப்பிள்ளை.. வாஸ்தவம் தான்.. உங்களுக்கு அப்படி யாராவது தெரியுமா?" அகஸ்மாத்தாக கேட்டார் அவர்.

"ஆமா மாமா, அந்த வேலையை நீங்க வீசிக்கு கொடுக்கணும்.. வீசி சொல்லிக் கொடுத்தா எல்லாம் கத்துக்குவான் மாமா.. இவனை நீங்க வேலைக்கு எடுத்துக்கணும்.." எனவும், அவர் கொஞ்சம் யோசித்தார்.

பின், தன் மருமகனிடம் விளையாட ஆசைப்பட்டவராக, "சரிங்க மாப்பிள்ளை, உங்க ப்ரெண்டுக்கு நான் வேலைபோட்டு கொடுக்கிறேன்.. ஆனா, உங்க ப்ரெண்ட் நம்ம வைக்கிற பரீட்சையில பாஸ் பண்ணனுமே.." என்று பீடிகை போட்டார்.

சிவனேஸ்வரன் சற்று முன்னே குனிந்து, "என்ன பரீட்சை மாமா?" என்று ஈனஸ்வரத்தில் கேட்டான்.

அவர் "டேய் முருகேசு!" என்று சத்தம் போட்டு அழைத்தார்.

"என்னங்கய்யா" என்று வெளியிலிருந்து முரட்டு ஆசாமி ஒருவன் உள்ளே ஓடி வந்தான்.

"வெளிய நிற்கிற கான்ஸ்டபிளை உள்ளே வரச்சொல்லு!" என்றார் அவர்.

பின், மிடுக்காய் உள்ளே நடந்து வந்த கான்ஸ்டபிளைக் காட்டி, "இதோ நம்ம ஆளு தான் இவரு.. உங்களை விட நாலு வயசு மூத்தவராயிருக்கும்.. ப்ரொமோஷன் கேட்டு வந்திருக்காரு.. இவரோட புஜபலத்துக்கும் உங்க ப்ரெண்டோட புஜபலத்துக்கும் போட்டி வச்சிப்போம் மாப்பிள்ளை.. யாரு ஜெயிக்கிறாங்களோ அவங்களுக்கு அவங்க கேட்டது.." எனவும், மாமா என்று தயங்கியபடியே தன் நண்பனைப் பார்த்தான் சிவனேஸ்வரன்.

வீசி தைரியமாய் சரியென்றான். அவனுக்கு வேலை சிவனேஸ்வரனின் பரிந்துரையால் கிடைத்தது என்பதைக் காட்டிலும் தன் திறமையினால் கிடைத்தது என்றால் ஆத்ம திருப்தியே.

அங்கிருந்த கிரானைட் டீபாயிலேயே இருவரும் பலத்தை நிரூபிக்க கைகளைக் கோர்த்தார்கள்.

நினைத்ததைக் காட்டிலும் கான்ஸ்டபிள் அறிவழகனுக்கு வீசியின் கையை சமாளிப்பது சவாலாய் இருந்தது.

வீசிக்கு பள்ளி சமயத்திலேயே விளையாட்டில் ஆர்வம் அதிகம். அவனது அரைக்கை சட்டை புஜத்தின் தசைக்கோளங்களை வடிவம் காட்டும்.

சபாஷ் சரியான போட்டி என்பது போலவே இருவருக்கும் நடுவிலிருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் விஜயாதித்தன்.

பத்து நிமிடங்களுக்கு மேலாக இருவரும் போராடிக் கொண்டிருந்தார்கள். வீசிக்கு காதோரத்தில் வியர்த்து வழிந்தது.

கான்ஸ்டபிள் அறிவழகனுக்கு ஒரு சிறுவனிடம் தான் தோற்றோம் என்று சொல்லிக்கொள்ள விருப்பமில்லை. வலுவை திரட்டி முயன்றுக் கொண்டிருந்தார்.

வீசியின் கைகள் தளர்ந்தது போன்ற சமயத்தில் அறிவழகன் அதிக விசையை பிரயோகித்தார்.

வீசிக்கும் விட்டுக் கொடுக்க மனமில்லை போல் தன்னம்பிக்கையுடன் போராடினான். அவன் முகம் ஒரு கணம் கூட சோர்ந்து போகவில்லை.

கான்ஸ்டபிளுக்கு அவன் தன்னைப் பார்த்து பயப்படவில்லை என்பதே ஆச்சரியமாக இருந்தது.

மீண்டும் மீண்டும் போக்குக்காட்டி கரங்கள் சமநிலையில் வர, கண்ணிமைக்காமல் அவர்களின் கரங்களையே பார்த்துக் கொண்டிருந்த விஜயாதித்தனுக்கு ஏமாற்றமாக இருந்தது. 'ப்ச்' என்றார்.

அந்த 'ப்ச்'சில் தான் சிவனேஸ்வரனுக்கு தன் தோழன் மீது நம்பிக்கையே பிறந்தது. "கமோன் வீசி.. கமோன் வீசி.." என்று அவனை உற்சாகப்படுத்தினான்.

மோடோ முட்டுக் கொடுக்க முடியாமல் அதிர்ந்தது.

திடீரென கான்ஸ்டபிளின் மேல் ஏதோ வந்து விழுந்ததில் அவர் கவனத்தை அங்கு திருப்ப, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை வீழ்த்தியிருந்தான் வீசி.

தன் நண்பனை சந்தோஷத்தில் கட்டித் தழுவிக்கொண்டு குதித்தான் சிவனேஸ்வரன்.

விஜயாதித்தன் தன் தொண்டையை செருமிக்கொண்டவராக, "சின்னப் பையன் கிட்டப்போய் தோத்துட்டியேய்யா" என்று கான்ஸ்டபிளை உஷ்ணப்படுத்தினார்.

அறிவழகன் கோபித்து வெளியேறும் போது வீசியை முறைத்தபடியே சென்றார்.

அங்கங்கு ஓரமாய் நின்று இதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த விஜயாதித்தனின் அடியாட்களுக்கெல்லாம் வீசியைப் பார்க்க பிரமிப்பாக இருந்தது.

விஜயாதித்தன், "ம்ம், உங்க ப்ரெண்டு பலசாலி தான் மாப்பிள்ளை.. ஒண்ணாம் தேதி வேலையில வந்து சேரச்சொல்லுங்க" என்றபடியே தன் ஆள் ஒருவனை அழைத்து "விஷயத்தை முடிச்சிடு" என்றார்.

மாஃபியா குழுக்கள் போல் அடியாட்கள் வைத்து நிர்வாகம் செய்கிறவரிடம், முடிச்சிடு, போட்டுத் தள்ளிடு, தூக்கிடு எனும் பிரயோகங்கள் தானே சரளமாக வரும்.

சிவனேஸ்வரன், "தான்க்ஸ் மாமா" என்றுவிட்டு தன் காலருகில் உருண்டு வந்த அழிப்பியை கையிலெடுத்து ஆராய்ந்தான்.

"இந்த ரப்பர் மட்டும் கீழே விழுந்து கான்ஸ்டபிளின் கவனத்தை திசை திருப்பியிருக்கா விட்டால் வீசி ஜெயித்திருப்பது கடினம் தான்" என்று எண்ணிக் கொண்டான்.

பின், அந்த அஸ்திரத்தைப் பிரயோகித்தது யார் என்று அறிய மேலே அன்னார்ந்துப் பார்த்தான்.

வீசியும் களைப்பாக தன் வியர்வையை சுண்டி எறிந்துகொண்டே அவனைத் தொடர்ந்து மேலே நிமிர்ந்துப் பார்த்தான்.

சிவனேஸ்வரனுக்கு கையசைத்து 'ஹாய்' சொன்ன அந்தப் பெண், வீசி தலையை உயர்த்தவுமே கையிலிருந்த புத்தகத்தால் தன் முகத்தை மூடிக்கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்.

'இவ்வளவு நேரமும் என்னை ஒரு பெண் பார்த்துக் கொண்டிருந்தாளா?' இவ்வெண்ணம் எழுந்ததுமே கலவரமாகி குனிந்து தன் சட்டையைப் பார்த்தான் வீசி.

போன தீபாவளிக்கு எடுத்ததை போட்டுக்கொண்டு வந்திருக்கலாம் என்று எழுந்த எண்ணத்தை அவனால் தடுக்க முடியவில்லை.

_QGoaMmiL9c5PrFk9K_rppGTU5mxxoDQUj8p5rYAJAHocuPMcd49sTgJItJ65a5t8s-n6PSmmEw62TAuwuzNUJcTy5Ly5dMF1HgropdtCZRrIiv1kObzy7-aseygn2ox7m2pI8SF


காதல் கணம் கூடும்...

உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க பரிசு வெல்லுங்க❣️

கடந்த மூன்று வாரங்களாக அதிக கதைகளை வாசித்து, தளத்தில் கருத்து பதிவிட்டு, "Most active reader of the week" பரிசு பெற்ற தோழமைகள் Bala raji, Reshma resh, Dharshini ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்😊

நல்லவர்களுக்கு மட்டுமே கீழே உள்ள லிங்க் வேலை செய்யுமாம். உடனே சோதித்துப் பாருங்கள் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை😂

கருத்துத்திரி,
நல்லவர்களுக்கான லிங்க்❤️
 
Last edited:
Top Bottom