Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

Status
Not open for further replies.

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -49

நீலகிரி என்றால் நினைவுக்கு வருவது ஊட்டி. ஊட்டிக்குத்தான் தேவ்வும் , யாழரசியும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். முன்புறம் அமர்ந்திருந்த யாழரசி கார் கண்ணாடியை இறக்கிவிட்டுக் கொண்டாள். குளிருக்கு பாதுகாப்பாக ஸ்வெட்டர் , மஃப்ளர் எல்லாம் அணிந்து கொண்டு பசுமையை ரசித்துக் கொண்டு சில்லென்ற காற்றையும் வாங்கிக் கொண்டாள்.

அடிக்கடி தேவ் ஆராய்ச்சிப் பார்வை பார்க்கவும் தவறவில்லை. தேவ் அவள் பார்ப்பது தெரிந்தாலும் தெரியாதது போல் காட்டிக் கொண்டான். இருவரும் வெற்றிவேள் –சப்ரீன் திருமணத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

ஊட்டி சவாய் ஹோட்டலில் டெஸ்டினேஷன் வெட்டிங்க் . அங்குதான் சென்று கொண்டிருக்கின்றனர். கிறிஸ்துவனான வெற்றி முஸ்லீம் பெண்ணான சப்ரீனை கரம்பிடிக்கப் போகிறான். வெற்றி தமிழ்நாடு அரசுப்பணித் தேர்வில் வெற்றி பெற்று செய்து காவல் துறையில் பணியாற்றுகிறான். சப்ரீன் ஒரு லாயர். ஒரு வழக்கு விஷமாக சந்தித்த இருவரும் காதலில் விழுந்தனர். போராடி திருமணத்தை நடத்தப் போகின்றனர்.

‘அப்படா…பைனலி வெற்றிக்கு ஒரு நல்ல பெண் கிடைத்துவிட்டாள்.’ என்ற மகிழ்ச்சியில் இருந்தாள் யாழரசி. மதம் மாறித் திருமணம் செய்வதால் நெருங்கிய நபர்களுக்கு மட்டுமே அழைப்பு வந்திருந்தது. நண்பர்கள் சேர்ந்து திட்டமிட்டு அனைவரும் திருமணத்திற்கு முந்தைய நாள் சந்திக்க இருக்கின்றனர்.

ஹோட்டல் சவாய். யாழரசி ஹோட்டல் வந்ததும் உற்சாகத்துடன் இறங்கினாள். பச்சை புல்வெளி , வீடு போன்ற அமைப்புடன் விடுதி இருந்தது. தன்னுடைய சிறிய கண்களை உருட்டி அனைத்தையும் ரசித்தாள். தேவ் இவளைப் பார்த்தவாறே இறங்கினான்.

பிறகு இருவரும் செக் – இன் செய்து கொண்டனர். மதியமே இவர்கள் வந்துவிட்டனர். அடுத்த சில மணி நேரங்களில் மீனினி , அவள் கணவன் சூர்யா மற்றும் குழந்தையுடன் காரில் வந்திறங்கினாள்.

மீனு வந்ததும் யாழரசி அவளை வரவேற்க சென்றுவிட்டாள். மாப்பிள்ளை பிசியாக புயூட்டி பார்லரில் இருந்தார். அதனால் வெற்றியின் தம்பி , அக்காக்கள் விருந்தினர்களைக் கவனித்துக் கொண்டனர். யாழரசி “நீங்க மத்த கெஸ்டை பாருங்க. நான் பிரண்ட்ஸ் எல்லாம் பார்த்துகிறேன்.” என்று வெற்றி அக்காவிடம் கூறிவிட்டாள்.

யாழரசியின் பின்னே தேவ்வும் தான்.

மீனுவும் , யாழரசியும் ஒருவரை அணைத்து வரவேற்றனர். இவர்களின் கொஞ்சலைப் பார்த்து சூர்யாவுக்கு வயிறு எரிந்தது வேறு கதை.

சூர்யாவின் கையில் இருந்த குழந்தையைப் பார்த்த யாழ்

“குட்டிபாஸ் தூங்கரானா? “

“ஆமாக்கா. அறிவு அண்ணா வரலையா? “

“அவன் காலையிலே ஊட்டிக்கு வந்துட்டான். மாமனார் வீட்டுக்குப் போயிட்டு ஈவினிங்க் வருவான்.”

“அக்கா சாருமதியை பார்க்க அடிக்கடி இங்க வந்து கடைசியில் எப்படியோ கல்யாணம் பன்னிட்டார்.”

“அவனோட லவ், டீரிம் ஜாப் ரெண்டும் கிடைச்சிருச்சு. வெற்றிக்கும் நாளைக்கு நடந்துரும். ஐம் சோ ஹேப்பி.”

“எனக்கும் தான். “

“நாளைக்கு போடற டிரஸ் கலர் என்ன? மீனு.”

“ரெட் அண்ட் கீரின் அக்கா. “

“நானும் தான். நம்ம வேவ்லெந்த் வேற லெவல்தான்.”

“ஆமாக்கா...”

இருவரும் கைகளைப் பிடித்தபடி பேசிக் கொண்டே இருக்க சூர்யாவும் , தேவ்வும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டனர்.

இடையிட்ட தேவ் “யாழுமா…அவங்களுக்கு ரூம காட்டுவோம். அப்புறம் பேசுவோம்.”

யாழரசியும் “சரி வா மீனு. சூர்யா நீங்களும் வாங்க. எங்களுக்கு இரண்டு ரூம் தள்ளிதான் உங்க ரூம்.”

இவர்கள் இருவரும் முன்னால் செல்ல பின்னால் வந்த சூர்யா தேவிடம் “ சார் இவங்க இரண்டு பேரையும் பார்த்தா கவர்மென்ட் ஆபிசர்ஸ் மாதிரியா இருக்காங்க? “ கேலியாகக் கேட்டான்.

மீனினி எஸ். எஸ்.சி தேர்வில் வெற்றிபெற்று மத்திய அரசில் பணிபுரிகிறாள். சூர்யா அவள் காதல் கணவன். வீடே அவளுக்கு நகரமாகி துன்புறுத்த அவளைக் காப்பாற்றியது காதல். இப்போது யாரும் அவளை உடல் பருமனை குறைத்து விட்டிருந்தாள். இனி பாடி ஷேமிங்க் செய்ய முடியாது.

அறிவு சாருமதியை திருமணம் செய்வதற்குள் ஒருவழியாகிவிட்டான். சாரு சம்மதம் சொல்ல வருடங்கள் ஆகிவிட்டது. யாழரசியின் நண்பர்கள் மூவரும் வெவ்வேறுவிதமாக தங்களுக்கென ஒரு முகவரியை உருவாக்கியிருந்தனர்.

“மீனு நைட் பான்ஃபையர் இருக்கு. நீயும் வெற்றியும் பாட்டுப்பாடியே ஊட்டில் இருக்க கொசு, வைல்ட் அனிமல் எல்லாம் ஓட்ட இன்னிக்கு அருமையான சான்ஸ். இன்னிக்கு ஊட்டியே உங்க பாட்ட கேட்டு அதிரப் போகுது. “

“போக்கா…நீயும் தான் பாடுவியே ?”

“நான் பாடறது இருக்கட்டும். நீ பாடி வரவச்ச கொரானா ஒழியறதுக்கு எவ்வளவு நாளாச்சு.”

இப்படி மாறி மாறி பேசிக் கொள்ள தேவ்வும் சூர்யா, குட்டி பாஸ் மூவரும் “அன்பு ஒன்றுதான் அனாதை “ என்ற ரேஞ்சில் பின்னால் சென்றனர்.

இரவு பான்ஃபையர் . நடுவில் தீ ஜொலி ஜொலித்து எரிந்து கொண்டிருக்க வெற்றி, சப்ரீன் , அறிவு , சாருமதி, யாழரசி, தேவ், சூர்யா, மீனினி , வெற்றியின் தம்பி மற்றும் இன்னும் சில வெற்றியின் நண்பர்கள் அமர்ந்திருந்தனர். யாழரசி நெருப்பை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.

வெற்றியின் நண்பன் ஒருவன் கிட்டார் வாசிக்க ‘என் இனிய பொன் நிலாவில் ஆரம்பித்து தூரிகா வரை பாடி மீனும் , வெற்றியும் அட்டகாசம் செய்து கொண்டிருந்தனர்.

அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி நிரம்பி அந்தச் சுற்றுப்புறம் முழுவதும் வழிந்து கொண்டிருந்தது. அப்போது யாழரசியின் மொபைலுக்கு கால் வந்தது.

“ஐ வில் பி பேக் “ என்று மீனினியிடம் சொல்லிச் சென்றாள்.

இருபக்கத்திலும் பூச்செடிகள் நடு நடுவே வண்ண இரவு விளக்குகள் வைத்த நடைபாதை .

“எஸ் சொல்லுங்க?”

“மேம் நீங்க கேட்ட ரிப்ரோர்ட் வந்துருச்சு? வாட்சப் பாருங்க.”

“தேங்க் யூ. நான் பார்த்துட்டு சொல்றேன்.”

வாட்ஸ்ப் ஓப்பன் செய்து படிக்க ஆரம்பித்தாள். படிக்க படிக்க அவள் கண்கள் ஆச்சரியத்திலும் , அதிர்ச்சியிலும் விரிந்தன்.

“நோ.” உதடுகள் முனுமுனுத்தன.

தேவ் நீண்ட நேரம் ஆகியும் யாழரசி திரும்பி வரவில்லை . அதனால் அவளைத் தேட ஆரம்பித்தான். சுற்றும் தேடியவன் அவள் நடைபாதையில் தலையை குனிந்து நிற்பதை அவள் உடையை வைத்து தெரிந்துவிட்டான்.

எலும்புக்குள் ஊடுருவும் குளிர்காற்று வீசிக் கொண்டிருந்தது. அதற்கு மாறாக லாவா மாதிரி கொதிநிலையில் நின்று கொண்டிருந்தாள் யாழரசி. அவள் தோளைத் தொட்டான். மெதுவாக திரும்பினாள் யாழரசி.

“யாழ் இங்க என்ன செஞ்சுட்டு இருக்க? குளிர் அதிகமா இருக்கு பாரு.?”

“சொல்லு.. ஏன் இப்படி செஞ்ச? உன்னை யாருமே மேரேஜ்க்கு ஃபோர்ஸ் பன்னல. நீதான் சஸ்மிதாவ ரிஜெக்ட் செஞ்சுருக்க. அத்தை அவ்வளவு பிராட் மைண்ட்டா இருக்கும் போதே எனக்கு சந்தேகம் வந்திருக்கனும். சொல்லு எதுக்கு என்னை மேரேஜ் செஞ்ச? மீனினி ரெகவர் ஆனாலும் அவளுக்கு தன்னோட விஷயத்தை உலகத்திற்கு தெரிவிச்சு எல்லாரும் பரிதாப பார்வை பார்க்க விருப்பமில்லை. அவளோட பிரைவேட் லைஃப்ப வெளி உலகத்திற்கு காட்ட விரும்பல. சொல்லு எதுக்கு என்னோட லைஃப்ல வந்த? “

யாழரசி மூச்சு விடாமல் பேசிக் கொண்டே இருக்க தேவ் அவளின் கோபம் எல்லை தாண்டிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தான்.

“யாழரசி காம் டவுன். வா ரூமுக்குள்ள போய் பேசிக்கலாம்.”

இவ்வளவு நேரம் கோபத்துடன் பேசிய யாழரசி தீடிரென சில விநாடிகள் அமைதியாகினாள். மூச்சை உள்ளிழுத்து விட்டவள் முகத்தை அப்படியே மாற்றிக் கொண்டாள்.

“அங்க போனா மட்டும் உண்மையான மோட்டிவ்வ சொல்லப் போறியா என்ன?” குரல் நிதானமாக வெளியே வந்தது.

தேவ் தலையைக் கோதியபடி ‘ உண்மையச் சொல்லாமா ?’ என்று யோசித்துக் கொண்டிருந்தான். அந்த சூழ்நிலையைக் குளிர்விக்க இயற்கை நினைத்ததோ என்னவோ மழை தூர ஆரம்பித்தது.

“நான் முன்ன பின்ன பார்த்தது கூட கிடையாது. அப்புறம் ஏன் ? உனக்குத் தெரியுமா ? நான் எப்பவும் என்னோட முடிவுகளை எடுப்பேன். மத்த பொண்ணுங்க மாதிரி சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்ட மாட்டேன். எனக்கு பிடிச்ச மாதிரி இருப்பேன். என்னோட கல்யாணம் மட்டும் வீட்டு ஆளுங்க ஆசைப்படி நடக்கனும். அவங்களுக்கு ஒரு சின்ன சந்தோஷத்தையாவது கொடுக்கனும் நினைச்சேன். பாரெவர் என்னை ஓடிப்போய் கல்யாணம் செஞ்ச டேஷ்னு பேரு எடுக்க வச்சுட்ட? பொண்ணுங்க என்ன செஞ்சாலும் சொசைட்டி அப்படித்தான் பேசும். ஆப்ட்ர் ஆல் லவ் செய்யறது கிரைம். நான் அவமானப்படறது கூட பெரிசில்லை. அது ஒரு விஷயேமே இல்லை.ஆனால் என் ஃபேம்லி ஆளுங்கள நினைச்சுப் பார்த்தியா? அவங்களோட சந்தோஷம் , என்னால வீட்டுக்கு கூட போக முடியல. அப்ப கோபத்துல என்னைக் கவனிக்காதவங்க நான் வீட்டுக்கு போனா கண்டிப்பா நான் எப்படி இருக்கேனு கண்டுபிடிச்சுருவாங்க. எனக்கு வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான என் ஃபேம்லிய நான் உன்னால இழந்துட்டேன்.”

மழை நன்றாக பெய்ய ஆரம்பித்தது.

“கமான்.. மழை பெய்யுது? வா உள்ள போலாம். “

“போதும். ஸ்கேப்கோட் மேல உனக்கு என்ன அக்கறை? இட்ஸ் நாட் லைக் யு லவ் மீ ஆர் லைக் மி.” குளிர் விஷம் போல் இறங்கிக் கொண்டிருக்க யாழரசி வார்த்தைகளில் விஷம் தடவி எதிரில் இருப்பவனின் மனதைக் குத்திக் கொண்டிருந்தான்.

அவன் கூறுவதை கேட்கவே முயற்சி கூட அவள் செய்யவில்லை. அதிக நாள் சேர்த்து வைத்திருந்த ஆதங்கம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. தேவ் எதாவது செய்து அவளை ரூமுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டான். அவளுக்கு குளிர் என்றால் ஆகாது.

இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்த அவள் வாயைப் தன் கையால் மூடினான் தேவ். இருவர் முகத்திலும் மழை நீர் ஓழுகிக் கொண்டிருந்தது .அது இருவர் உணர்வுகளையும் அடித்துச் சென்று கொண்டிருக்கிறது. அவளை நேருக்கு நேராகப் பார்த்து , “ஆமா நான் உன்னை லவ் பன்னல. “

கூறிவிட்டு அவள் கைகளைப் பிடித்துச் செல்ல ஆரம்பித்தான்.

அவள் கையை விடுவித்துக் கொள்ள முயற்சிக்க “வாக். இல்லை உன் தோள் மேல தூக்கிட்டு போக எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. “

யாழரசிக்கும் பொதுவெளியில் இப்படி நடந்து கொள்ள விருப்பம் இல்லை. அதனால் அமைதியாக இருந்தாள்.

யாழரசியும் அவன் இழுவைக்கு உட்பட்டு நடக்க ஆரம்பித்தாள். அறைக்கு வந்த தேவ் கதவை தாழிட்டான்.

பாத்ரூமிற்கு சென்று இரண்டு பெரிய டவலை எடுத்து வந்தவன் ஈரம் சொட்ட சொட்ட இன்னும் கதவருகில் சிலை போல் நின்று கொண்டிருந்த யாழரசியின் அருகில் வந்தான்.

ஒரு துண்டை எடுத்து நீட்ட அவள் வாங்கவில்லை.

‘கேட்கமாட்டா? சொல்றத கேட்கமாட்டா’ என்று நினைத்தவன் டவலைக் கொண்டு அவள் தலையைத் துவட்டிவிட ஆரம்பித்தான்.

தேவ்வின் கைகளைப் பிடித்தவள் “ என்னை லவ் பன்னலங்கறது உண்மையா? “

“ஆமா நான் உன்னை லவ் பன்னல…ஆனா”
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம்-50 ( இறுதி )

பான்ஃபையரை சுற்றி அமர்ந்திருந்தவர்கள் மழை தூர ஆரம்பித்ததும் தங்களது அறையில் உள்ள ரூமை நோக்கி ஓட ஆரம்பித்தனர். யாழரசி சென்ற சிறிது நேரத்திலேயே மீனினி முன்பே குழந்தை அழுகிறான் என்று அறைக்குத் திரும்பிவிட்டாள்.

வெற்றி “ டேய் யாழு எங்கடா ? “ அறிவிடம் கேட்டான்.

தேவ் , யாழரசி சென்றும் திரும்பவில்லை என்பதால் அறிவு அவர்களைத் தேடிச் சென்றான். சிறிது தூரத்தில் இருந்து பார்க்கும் போதே ஏதோ வாதம் செய்வது போல் இருந்தது. அதனால் திரும்பி வந்துவிட்டான்.

“அவங்க ரூமுக்கு போயிட்டாங்க. நீ சீக்கிரம் போய் ரெஸ்ட் எடு.”

மழை வேகமாகப் பிடிக்கவும் விரைவாக இருவரும் விடுதியினுள் ஓடினர்.



கணப்பொழுதில் மின்னல் ஒன்று பூமியைத் தொட்டு ஒளிவெள்ளத்துடன் மழை வெள்ளத்துடன் கலந்தது. அதற்குப் பின்னே அந்தப் பகுதியே அதிருமளவு ஒரு இடி இடித்ததது. இவையெல்லாம் இருதயத்தில் பூகம்பம் வெடித்து கொண்டிருக்கும் இருவருக்கும் கவனத்தில் வரவில்லை.

“அதுதான் தெரியுமே? உன்னோட மோட்டிவ் தான் என்ன? சஸ்மிதாவ ஏன் வேண்டானு சொன்ன ? ஷீ இஸ் அ பிக் கேட்ச் அண்ட் உன்னோட பிரண்ட். அப்ப இதுக்கு பின்னாடி இருக்க காரணம் என்ன?”

“சொல்றத முழுசாக் கேளு. அந்த டைரியைப் படிக்கும் போதோ இல்லை உன்னை நான் மீட் பன்னும் போதோ எனக்கு உன்மேல் காதல் கிடையாது. ஆனால் நீதான் யாழரசியை தெரிஞ்சதுக்கு அப்புறம் டைரியை கொடுத்துட்டு போயிரலாம் நினைச்சேன். ஆனால் அந்த இன்விட்டேஷன் எடுத்து எனக்கு கொடுத்த பார்த்தியா? அப்பதான் எனக்கு தோணுச்சு. உன்னை எப்படியாவது அந்த கன்னிங்க் பீபிள்ட்ட இருந்து தப்பிக்க வைக்கனும் தோணுச்சு. அதான் லிப்ட் முன்னாடி அப்படி பேசுனேன். ஆனால் நீ பிடிவாதம் பிடிச்ச. என்ன ஆனாலும் நீ இந்த கல்யாணத்தை நிறுத்த மாட்டனு எனக்குப் புரிஞ்சுது. அதே மாதிரி நீ என்னை ஸ்ட்ரேஞ்சர் சொன்ன பார்த்தியா? அப்பதான் எனக்கு இன்னொன்னும் புரிஞ்சுது. நீ என்னோட வாழ்க்கையில் எப்பவும் இருக்கனும் தோணுச்சு. அந்த சீட்டர்கிட்ட உன்னை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. எனக்கு அப்ப இருந்த ஒரு வழி அதான். உன்னோட கமிட்மெண்ட்ட நீ மீனினிக்கு கொடுத்த டிரஸ்ட் வச்சு தோக்கடிக்கனும் முடிவு செஞ்சேன். உங்கிட்ட அப்படி பேசினதுக்கு பின்னாடி எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா? இப்படி ஒரு பொண்ணை பிளாக் மெயில் செய்வேனு நானும் நினைச்சு கூட பார்க்கல. நீ சம்மதிப்பீனு கூட எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனா மீனினிக்காக நீ வந்த. மீனினி விஷயம் உன் ஃபேம்லி அவமானப்படறத விட பெரிய விஷயம்னு நீ முடிவ செஞ்ச கரக்டா. ஐ லவ் யூ. போதுமா? “

யாழரசிக்கு உடல் குளிரில் நடுங்கத் தொடங்கியது.

“ஆனால் கல்யாணத்தை வேற வழியில் நிறுத்திருக்கலாம். இப்படி செய்யனும் அவசியம் இல்லையே.”

“அந்த மொமண்ட்ல நானும் அப்படி பேசிட்டு யோசிச்சேன். ஆனால் அப்படியே கல்யாணத்தை நிறுத்தினாலும் நான் உங்கிட்ட வந்து புரபோஸ் செய்தா நீ கண்டிப்பா அக்சப்ட் செஞ்சுருக்க மாட்ட. உன் டைரியில் எழுதனமாதிரிதான் செய்வ. “ அவள் கன்னங்களை இரு கைகளாலும் பிடித்தவன் கண்களை பார்த்து உறுதியாக “ ஐ லவ் யூ. நீ என் வாழ்க்கையில் இருக்கனும்னா லா அண்ட் ஆர்டரை பிரேக் செய்யாம நான் எது வேணாலும் செய்வேன். “

“ அதுக்காக பிளாக்மெயில் , என்னோட ஃபேம்லி பட்ட கஷ்டம் இதை என்னால மன்னிக்க முடியாது. ஏத்துக்கவும் முடியாது.“

யாழரசியை இன்னும் தன் பிடியில் இருந்து விடவில்லை.

“அப்படியா ? உன்னையே கேட்டுப்பாரு. உனக்கு என்மேல எந்த வித அட்ராக்சனும் இல்லையா? ஜிவல்லரி ஷாப்பில் நான் உன் கையை பிடிச்ச உடனே எதுக்கு உன்னோட ஹார்ட் பீட் எகிறுச்சுனு சொல்லு. நம்ம வெட்டிங்க் டே அப்ப கூட உனக்கு வருத்தம் மட்டும்தானே தவிர நீ நர்வஸ் ஆகல.

உன்னை நான் கிஸ் செஞ்ச அப்ப கூட நீ டிஸ்கஸ்டா ஃபீல் செய்யல. சொல்லு உண்மையா இல்லையா? உனக்கு பிடிக்காத ஆளு பக்கத்தில் இருக்க கூட விரும்ப மாட்ட. சொல்லு. “

யாழரசி பதில் சொல்லவில்லை. கண்களை சிறிது தாழ்த்தினாள்.

“என் கண்ணைப் பாரு. உன்னால பொய் சொல்ல முடியல. அதான் அமைதியா நிக்கற. ஃபேம்லி ஃபேம்லினு சொல்ற. இப்பநான் தான் உன்னோட ஃபேம்லி. அத மனசில வச்சுக்கோ.”

யாழரசி மின்சாரம் தாக்கியது போல் நிமிர்ந்து பார்த்தாள்.

“போ உனக்கு குளிர் ஒத்துக்காது. டிரேஸ் சேஞ்ச் பன்னு.” என்று கூறிவிட்டு பாத்ரூமிற்குள் உடைமாற்றச் சென்றான்.

சில நிமிடங்களில் வெளியே வந்தவன் ஏதோ ஒரு பொருளைத் தேடிக் கொண்டிருந்தான். யாழரசி இவன் வந்ததும் உடைமாற்றச் சென்றாள். அவள் ஐந்து நிமிடங்கள் கழித்து உடைமாற்றி வருகையில் தேவ் அந்த அறையில் இல்லை.

அன்று இரவு முழுவதும் அவன் அறைக்குத் திரும்பிவரவில்லை. ஹோட்டல் ஜிம். தேவ் டிரட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தான். மனதில் அவள் நினைவுகள் தான். அந்நேரம் அவன் அருகில் உள்ள டிரெட் மில்லில் யாரோ ஓட ஆரம்பித்தார்கள். பக்கத்தில் இருப்பவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை தேவ்.

“தேவ் சார் நிறுத்துங்க. “

என்று கேட்ட குரலில் நிமிர்ந்து பார்த்தான் . அறிவுதான் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான்.

“வாங்க உட்கார்ந்து பேசலாம். “

தேவ்வுக்கும் அப்போதைய மனநிலையில் யாரிடமாவது மனம் விட்டு பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

“என்ன சார் யாழு பிடிவாதம் பிடிக்கிறாளா? “

தேவ் தலையை மட்டும் ஆட்டினான்.

“பிளாக்மெயில் செஞ்சு மேரேஜ் செய்யும் போது அதுக்காக விளைவுகள் இருக்கும் .“

தேவ் திடுக்கிட்டான்.

“எனக்கெப்படித் தெரியும்னு யோசிக்காதீங்க. யாழரசி பத்தி எனக்குத் தெரியும். அவள எங்க வீட்டில் மீட் செய்யும் போதுதான் உங்களுக்கு நம்பர் கொடுத்தாள். நீங்க இரண்டுபேரும் லவ் பன்னீங்க. மிஸ் அண்டர்சாண்டிங்க்ல பிரேக் அப் ஆச்சு. வேற ஒரு ஆளு கூட நிச்சயம் ஆகும்போது

ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருக்க முடியாதுனு தோணுச்சு. மேரேஜ் செஞ்சுகிட்டீங்க. இந்தக் கதையை யாழரசி வீட்டில் கூட நம்பலாம். நான் , வெற்றி , மீனினி யாரும் நம்பல. வி நோ ஹெர். அவளுக்கு ஒரு லவ் இருந்தா கண்டிப்பா சொல்லியிருப்பா. மீனினிக்கு யாழரசி அந்த இடியட்டை கல்யாணம் செய்ய விருப்பமே இல்லை. அவளுக்கு ஏதோ தப்பா பட்டுருக்கு. அத யாழரசிகிட்டேயும் சொல்லியிருக்கா.

ஆனால் யாழ் வீட்டு ஆளுங்க முடிவ மாத்த முடியாது மீனு. பதில் சொல்லிட்டா. சொல்லப் போனால் நீங்க மேரேஜ் செஞ்சுகிட்டது அவளுக்கு சந்தோஷம்தான். உங்க் வொய்ஃப் கொஞ்சம் கோல்ட் ஹார்ட்டடு பர்சன். டைம் கொஞ்சம் எடுக்கும். “

“எப்படி சொல்றீங்க?”

“யாழரசிய நீங்க கவனிக்கறது இல்லை போல. அவ யார்கிட்ட பேசவும் தடுமாறவோ , தயங்கவோ மாட்டா. உங்கள பார்த்தா ஒரு தடுமாற்றம் தெரியும் . பான்ஃபையரில் மேடம் வச்ச கண்ணு வாங்காம உங்களதான் பார்த்துட்டு இருந்தா. இதுவரைக்கும் நாங்க பார்க்காத எமோஷன் அவ கண்ணில் இருக்கு. என்ன ஆனாலும் அவள் பக்கத்தில் இருங்க. உங்க காதலை காமிச்சுட்டே இருங்க. நீங்க செஞ்ச தப்ப மறக்க வாய்ப்பு இல்லைனு தோணுது. ஆனா காதலை ஏத்துக்கலாம். “

“அது எப்படி பாசிபிள் ? “

“யாழரசி எப்பவும் அவ ஃபேம்லிய மன்னிப்பா. விட்டுக் கொடுக்கவும் மாட்டா. நீங்கதான் அவளோட ஃபேம்லி. உங்க அன்ப காட்டிட்டே இருங்க. “

தேவ்வுக்கு புதிதாக ஒரு நம்பிக்கை உருவானது.

“டெமோ பார்க்கறீங்களா சார்? “

அறிவு போனை எடுத்து யாழரசிக்கு டயல் செய்தான்.

அறையில் உறக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டிருந்தவள்

போனின் சத்தம் கேட்கவும் எடுத்தாள்.

“பிபி எதுக்கு அன் டைமில் கூப்பிடறான்? “ முனகியபடியே

போனை எடுத்து காதில் வைத்தாள்.

“யாழு நீ உடனே ஜிம் பக்கத்துல வா. தேவ்வுக்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சு. “

தகவலை மட்டும் கூறிவிட்டு துண்டித்துவிட்டான்.

“அறிவு என்ன இப்படி சொல்லிட்டீங்க? அவ கோபப்படப் போறா.“ தேவ் கவலையுடன் சொன்னான்.

“நீங்களே பாருங்க? இரண்டு நிமிஷம். உங்க வெய்ஃப் தலை தெறிக்க ஓடி வரும். சொல்ல முடியாது உங்களை மரத்துக்கு பின்னாடி வச்சு அறஞ்ச மாதிரி என்னையும் அந்த பக்கி சாத்துனாலும் சாத்தும். பாய். “

அறிவு எஸ்கேப் ஆகிவிட்டான்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் யாழரசி ஓடி வந்து கொண்டிருந்தாள்.

ஜிம்மில் நுழையும் போதே “தேவ் தேவ்…” என்று கத்திக் கொண்டே வந்தாள்.

தேவ் அமர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவன் அருகில் ஓடி வந்தாள்.

“தேவ் உனக்கு என்னாச்சு? எங்க அடிபட்டுச்சு? “

பதட்டத்துடன் அவனை ஆராய்ந்தவள் அவன் கைகளைப் பிடித்தாள்.

“எனக்கா அடி ஒன்னும் படலையே. “ தேவ் உள்ளுக்குள் மகிழ்ச்சியில் பொங்கிக் கொண்டிருந்தாலும் முகத்தில் காட்டவில்லை.

திகைத்த யாழரசி “டேய் அறிவு… நீ என் கையில் சிக்கும் போது உனக்கு இருக்கு. “ என்று சத்தமாகவே சொன்னாள்.

பெருமூச்சு விட்டபடியே திரும்பிப் போக முயற்சிக்க அவளின் ஒரு கையைப் பிடித்து இழுக்க தேவின் மீதே விழுந்தாள் அவள்.

அவளை மடியில் அமர்த்திக் கொண்டான்.

ஜிம்மின் மறுபுறம் நின்றிருந்தனர். மீனினி , வெற்றி, அறிவு மூவரும்.

“அறிவு அண்ணா நீங்க சூப்பரா வேலை பார்த்திருக்கீங்க!!!”

“நீயும் வெற்றியும் போட்டுக் கொடுத்த திட்டம் வொர்க் ஆவுட் ஆகிருச்சு. சரி வாங்க எஸ்கேப் ஆகிருவோம். இதுக்கு மேல பிரைவசி பிராப்ளம்.” மூவரும் புன்னகைத்தபடியே நகர்ந்தனர்.

வெற்றி “யாழு லவ்வுல இருக்கறத பார்க்கிறது சந்தோஷமா இருக்கு. “ என்றான்.

மீனினி “ நல்லாருக்கு. அறிவு அண்ணா நீங்க மட்டும் சண்டை போட்ட விஷயத்தை சொல்லனா எதுவும் செஞ்ருக்கவே முடியாது. “ பேசிய படியே கலைந்தனர்.

“விடு தேவ்..” யாழரசி அவன் பிடியிலிருந்து விலக முயற்சித்தாள்.

“எதுக்காக எனக்கு அடிபட்ட நீயூஸ் கிடைச்சதும் ஓடி வந்தீங்க மேடம்? “

“யாரா இருந்தாலும் அப்படித்தான் வந்திருப்பேன்.”

அவள் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்தவன் “இப்படி யார் செஞ்சாலும் அமைதியாக இருப்பீங்களா மேடம்? “

யாழரசி பதிலை யோசித்துக் கொண்டிருக்க “ ரொம்ப யோசிக்காத .சொல்லு எப்ப இருந்து என்னை உனக்கு பிடிக்க ஆரம்பிச்சுது? “

யாழரசி பதில் பேசவில்லை. “ இப்ப நீ ஆன்சர் செய்யலனா உன் கன்னம் இன்னும் பனிஸ்மெண்ட் வாங்கும். “

அவன் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்று உணர்ந்தவள் மெல்லிய குரலில் “ வெட்டிங்க் டே அப்ப நான் கீழ மண்டி போட்டு கேட்டப்ப நீங்களும் அதே மாதிரி செஞ்சீங்க. அப்ப இருக்கலாம். நான் என்னதான் இக்னோர் செஞ்சாலும் நீங்க என்ன இண்டேரக்டா கேர் செஞ்சுட்டே இருந்தீங்க.“ மரியாதையாகப் பேசினாள்.

“இவ்ளோ நாள் வா போ. இரண்டு மூணு டைம் அடிக்க வேற செஞ்சுருக்க. ம்ம்ம் சரி. உனக்கு வேணுங்கற டைம் எடுத்துக்க. உன்னை நான் ஃபோர்ஸ் செய்ய மாட்டேன். நீ என்னை மன்னிக்கற வரை உன்னை சமாதானம் செய்வேன். ஐ லவ் யூ .”

இன்னொரு கன்னத்தில் முத்தமிட்டு “போ “ என்றான்.

யாழரசி சிட்டென பறந்துவிட்டாள். தேவ் புன்னகையுடன் அமர்ந்திருந்தான். அடுத்தநாள் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
எபிலாக்:

பத்து வருடங்களுக்குப் பிறகு …

ஊட்டி சவாய் ஹோட்டல் அறையில் ஒன்றில் அமர்ந்து

டைரியில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள் யாழரசி

“டியர் டாம் ,

உன்னோட லவ்வரான பெக்கியை நான் சாம்பல் ரிவரில் போட்டிங்க் போன போது கைதவறி தொலைச்சுட்டேன். அதற்குப் பிறகு என் வாழ்க்கையே மாறியது. அந்த டைரி என்னோட ஹஸ்பன்ட கண்டுபிடித்துக் கொண்டு வந்தது.

மீனினி அவளோட வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாள். கிளப் ஹவுஸில் கிடைத்த நண்பர்கள் மூலம் கோடிங்க் புராஜக்ட் செய்து அப்படியே எஸ். எஸ்.சி தேர்வு எழுதி வெற்றி பெற்றாள். அவளுடைய காதல் ஆன்லைன் காதல். சூர்யா சாப்ட்வேர் டெவலப்பர். மீனுவைப் பற்றி அனைத்தும் தெரியும். ஒரு ஆண் குழந்தை பெண் குழந்தையுடன் வாழ்கின்றனர். அவ சிலிம் பூயூட்டி ஆகிட்டா. முக்கியமான விஷயம் மீனு கலெக்டர் எக்ஸாமும் பாஸ் பன்னிட்டாள். நம்ம வாழ்க்கையை நாமே மாத்தி எழுதிலாம் அப்படிங்கறதுக்கு மீனுதான் உதாரணம் .

வெற்றி சப்ரீன் இரண்டு பேருமே ஃபன்னி கபிள்ஸ். எட்டு வயதில் ஒரு மகன் இருக்கான். பேரு சமீர் அகமத்துலா. அமைதியான பையன்.

அறிவு சாருக்கு ஓரு மகள். முன்னாடி எல்லாம் தனியா காடு மேடுனு சுத்தற ஆள் இப்ப குடும்பத்தோட சுத்திட்டு இருக்கான். அவங்களுக்கு ஏழுவயசில் பொண்ணு இருக்காள். பேரு சுடரொளி. பியர் கிரிஸ் மாதிரி ஆவேன் சொல்லிட்டு இருக்காள். பிரேவ் கேர்ள்.

அப்புறம் யாரு நானும் தேவ்வும் இருக்கோம். கொஞ்ச நாள் கழிச்சு நான் அவனை மன்னிச்சுட்டேன். அன்புதான் பெரிசு. எங்களுக்கு டிவின்ஸ் இருக்காங்க. பொண்ணு ஒன்னு. பையன் ஒன்னு. ஏழு வயசாகுது. எங்க வீட்டிலேயும் கொஞ்சநாள் கழிச்சு மன்னிச்சுட்டாங்க. அத்தை மாமா ரெண்டு பேரும் ரிடையர் ஆகிட்டாங்க. யாழரசன் பத்தி அடிக்கடி ஃபீல் செய்வாங்க. ஆனால் பேரபிள்ளைங்கள பார்த்து மனச தேத்திக்குவாங்க. டிவின்ஸ் பேரு என்ன தெரியுமா ? யாழினி ,யாழரசன். தேவ் என் வாழ்க்கையில் வந்து எல்லாத்தையும் மாத்திட்டான். …

இப்படி இவள் எழுதிக் கொண்டிருக்கையில்

அறைக்கதவைத் தட்டியபடி உள்ளே வந்தான் அறிவு.

“யாழு தேவ் அண்ணா வரச் சொன்னார். இன்னும் டைரி எழுதறத விடலயா நீ ? “

“வெய்ட் அறிவு. டூ மினிட்ஸ்ல் வரேன்.

சரி..இன்னிக்கு எனக்கும் தேவ்வுக்கு வெட்டிங்க் ஆனிவர்சரி. அத செலிபிரேட் செய்யத்தான் வந்திருக்கோம். மீனு , அறிவு , வெற்றி எல்லாரும் ஃபேம்லியா டிரிப் வந்திருக்கோம்.இன்னிக்கு காலையில் எங்கிட்ட தேவ் கேட்டான். இன்னும் எதாவது சீக்ரெட்ஸ் உன்கிட்ட இருக்கானு ?
இந்தக்கேள்வியை அவன் நான் முழுசா ஏத்துக்கிட்டதிலிருந்து கேட்டுகிட்டு இருக்கான். இரண்டு வருஷம் அவன நல்லா கஷ்டபடுத்திதான் ஏத்துகிட்டேன்.
8 வருஷமா இதுக்கு நான் சொல்ற பதில் " எல்லா ரகசியங்களும் தெரிந்தால் வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது. டைரியில் கண்டிப்பாக எழுத மாட்டேன். ஒரு தடவை அனுபவிச்சது போதும். சொல்ல முடிஞ்சத சொல்வேன். மத்தது எல்லாம் ரகசியமாகவே இருக்கட்டும். "

மனதில் இருப்பவை அனைத்தையும் வெளியில் சொன்னால் பலரின் வாழ்க்கை நன்றாக இருக்காது.





பாய்… டாம்.

எழுதி முடித்தவள் டிராலியைத் திறந்து பெக்கி என்ற டைரியின் அருகில் இதையும் வைத்துப் பூட்டினாள்.

“ஏன் அறிவு இந்த வெற்றியும் மீனினியும் பாட்டுப்பாடி எத்தனை கொசுவ சாகடிக்கப் போறாங்களோ? தெரியல “ என்று புலம்பியபடி வந்தார்கள்.



வெளியே பான்ஃபயர் . வட்டமாக நாலு சோபாக்கள் போடப்பட்டிருந்தது. யாழரசி தன் கணவனைப் பார்த்தாள். அவன் தோற்றத்தில் பெரிதாக மாற்றமில்லை. சில நரைமுடிகள் மட்டும் எட்டிப் பார்த்திருந்தன . டிவின்ஸ் அவனின் இரு புறமும் அமர்ந்திருந்தனர். மூன்று நண்பர்களின் குடும்பமும் அமர்ந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தனர்.

வெற்றி கிட்டாரை எடுத்து மீட்டத் தொடங்கினான்.

“ஆரம்பிச்சுட்டியா? சப்ரீன் இந்த கிட்டாரை ஒளிச்சு வச்சுருக்கலாம் நீ. “ என்றபடியே வந்து அமர்ந்தாள் யாழரசி. அறிவும் சாருவுடன் அமர்ந்தான்.

இதைக்கேட்ட மற்ற அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

தேவ்வின் பையன் யாழரசன் விரும்பிச் சாப்பிடுவது தன் சித்தப்பா யாழரசனுக்கு பிடித்த சாக்லேட் தான். இப்போது அதை அனைவருக்கும் கொடுக்கும் வேலையை ஆரம்பித்திருந்தான்.





முற்றும்.







 
Last edited:

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
CREDITS:
I AM THANKFULL TOWARDS MY ACADAMY PALS AND FAMILY, WITHOUT THEM I WONT BE ABLE TO FINISH THE STORY. MY PERSONAL CRITIC NILA HELPED ME A LOT. THIS IS THE FIRST STORY I WROTE MORE THEN 45000 WORDS. I GOT VACCINATED AND SUFFERED WITH BROKEN SHOULDER. ON THE TOP OF THE CHERRY MY LAPTOP BROKE 4 DAYS BEFORE THE END OF THE COMPETITION. I LOST MY FILES COMPLETELY WHICH INCLUDES FIRST 37 CHAPTERS OF THIS NOVEL TOO. BUT THE DATE EXTENDED . IT HELPED ME TO DEVELOP A NEW PLOT AND WROTE MORE THAN I EXPECTED. FOR PC I HAVE TO THANK MRS. KAVITHA AND MY BROTHER NAVEEN KUMAR. I AM ALSO THANKFULL TO NITHYA KARTHIKAYAN SISTER FOR THIS OPPORTUNITY. AFTER WRITING THIS NOVEL I CANT STOP WRITING. I AM WRITING MORE AND MORE. REASON IS THE MINIMUM WORDLIMIT SET IN THIS COMPETITION.

I DID NOT EVEN EXPECT THAT 2K PEOPLE WOULD READ THIS ONE. I THOUGHT WHO IS GOING TO READ THESE KIND OF NOVEL. DHARSINI 'S COMMENTS BOOSTED ME A ALOT. THANK YOU ARABU FOR YOUR LIKES. THANK YOU READERS.

FIND YOUR ADDRESS. DO NOT LET YOUR FEELINGS UNADDRESSED.EXPRESS IT.

THANK YOU. STAY SAFE. WEAR MASK. GET VACCINATED

பொறுப்பு துறப்பு:

நாவலில் உள்ள கருத்துகள் யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல. யாரையும் குறிப்பிடுதற்காக அல்லை. கொங்குநாடு என்று முன்னோட்டத்தில் குறிப்பிட்டு இருப்பேன். அது அந்த பிரச்சினை எழுவதற்கு முன்னே எழுதப்பட்டதாகும். எந்த பிரிவினைவாதத்தை முன்வைக்கும் வகையில் அது குறிப்பிடவில்லை. அதேபோல் யாழரசி கோபப்பட்டு அடித்ததாக இருக்கும். ஆணே பெண்ணோ வன்முறை தவறு.
அவ்வளவு பெரிய பதவியில் இருந்து கொண்டு அவ்வளவு விரைவில் சுயகட்டுபாட்டை இழந்து விடமாட்டார்கள். நன்றி.


 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom