Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

Status
Not open for further replies.

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -39

கண்ணாடி ஜன்னல்களின் வழியே சூரியஒளி காட்டின் பசுமை வழியே ஊடுருவி கசிந்து கொண்டிருந்தது. ஜன்னல்களின் திரைச்சீலையை மூடாதபடியால் மெது மெதுவாக அது ஊடுருவி தேவ்வின் முகத்தில் விழ ஆரம்பித்தது.

சிறிது நேரம் கழித்து அவன் முகத்தை அது சூடாக்க மெதுவாக முகத்தைச் சுழிக்க ஆரம்பித்தான். தீடிரென்று கண்களைத் திறந்தான். கைப்பேசியை எடுத்து மணியைப் பார்த்தான். மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

நன்றாக விழிப்பு வந்ததும் இரவு படித்தவை அனைத்தும் நினைவுக்கு வந்தது. படித்து முடிக்கையில் இரவு மணி இரண்டாகிவிட்டிருந்தது. வாட்ஸ் அப்பை உடனே திறந்து குறுஞ்செய்திகளை வாசிக்க ஆரம்பித்தான்.

அவன் எதிர்பார்த்த எதுவும் வரவில்லை. ஏமாற்றை உணர்ந்தான். ‘ இன்வெஸ்டிகேட் செய்ய டைம் எடுக்கும் . போய் பிரஷ் ஆகிட்டு சாப்பிட வெளியில் போலாம்.’ என முடிவெடுத்தவன் கைப்பேசியை சார்ஜரில் போட்டுவிட்டு குளிக்கச் சென்றான்.

குளிக்கம் போதும் அவன் மனதில் ஆயிரம் கேள்விகள்.

‘அந்த நாலு பேரும் இப்ப வாழ்க்கையில் என்ன செஞ்சிட்டு இருப்பாங்க? அவங்க கனவை நிறைவேத்தினாங்களா? மீனினி வாழ்க்கையில் ஏதாவது முன்னேற்றம் இருக்குமா? சாருமதி அறிவை கல்யாணம் செஞ்சுருப்பாங்களா? யாழரசிக்கு கல்யாணம் ஆகிருக்குமா?....’ இப்படி நொடிக்கு நொடிக்கு அவன் மனம் கேள்விகளால் சுழன்று கொண்டிருந்தது. ஷவரின் நீர்த்துளிகள் வடிகாலில் வட்டமாக சுழன்று மறைவதைப் போல் அவனது மனத்தின் கேள்விகள் மறையவில்லை.

பாத் ரோபை அணிந்தபடி வெளியே வந்தவன் கருநிறச் சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டான். பார்க் அவன்யூ பர்ஃப்யூமைத் தெளித்தவன் தலையையும் வாரிக் கொண்டான்.

கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான். ‘ நீ எப்ப இருந்து ஒரு விஷத்திற்கு இப்படி எக்சைடடு ஆகற? நேத்து வரைக்கும் இப்படி இல்லையே ? ‘ என்றும் தோன்றியது.

அதற்கு அவனே மீண்டும் மனதில் காரணம் சொல்லிக் கொண்டான் .’ ஹூயுமன் மைண்ட் எப்பவும் டைனமிக்.’

தன்னுடைய பர்ஸ் , போன் , கேமரா பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். முன்பே வாடகைக்கு வாகனம் ஏற்பாடு செய்துவிட்டதால் அது காத்திருந்தது. வெளியில் சென்று திருப்தியாக சாப்பிட்டு முடித்தவன் மீண்டும் திரும்பி வந்தான்.

இன்று எங்கும் வெளியில் செல்லப் பிடிக்கவில்லை. அறையில் ஓய்வெடுக்கலாம் என்று முடிவெடுத்தான்.

பன்னிரெண்டு மணிவாக்கில் அவன் எதிர்பார்த்த போன் கால் வந்தது. தேவ்வும் ஆர்வத்தோடு எடுத்து “ஹலோ.” என்றான்.

மறுமுனையில் “தேவ்..அந்த அகாடமி இருந்தது உண்மை. அங்க அந்த பொண்ணு படிச்சது உண்மை. ஆனால் அகாடமியில் அவங்க கொடுத்த அட்ரஸில் இல்லை. போன் நம்பரும் மாத்திட்டாங்க. என்ன செய்யறது? இன்னும் பர்தரா டிக் செய்யறதா? வேற எதாவது குளு இருக்கா?”

தேவ்வுக்கு சிறிது ஏமாற்றம்தான் . அதை மறைத்தவன்

“ இருக்கு. அந்த பொண்ணு கூட மீனினி , அறிவழகன் , வெற்றிவேள் இந்த மூணு பேர் படிச்சாங்க. அவர்களில் யாரைவது பிடிச்சா ஏதாவது இன்ஃபார்மேஷசன் கண்டிப்பாகக் கிடைக்கும். நான் டீடெய்ல்ஸ் வாட்ஸப் செய்யறேன். “

“ஓகே தேவ்.”

“தேங்க் யூ.”

“புரோ நமக்குள்ள என்ன?” என்று மறுமுனையில் இருந்தவன் சிரித்தான். “சரி நீ எதுக்கு இவங்களத் தேடறனு தெரிஞ்சுக்கலாமா?”

“அவங்க ஒரு பொருள் ஒன்னு எங்கிட்ட இருக்கு. அதைத் திருப்பிக் கொடுக்கனும்.”

“ஓகே..நீ செண்ட் பன்னு. நான் பார்த்துகறேன்.”

“ஓகே.”

அழைப்பு துண்டிக்கப்பட்டது.

பால்கனியில் அமர்ந்தான் தேவ்.

‘இந்த டைரி ரொம்ப சீக்கிரமாகவே முடிஞ்ச மாதிரி இருந்தது. டெலிபிரேட்டா கட் செய்த மாதிரி இருந்தது. ‘

அவன் எண்ணைத்தை இடையூறு செய்யும் விதமாக அலைபேசி ஒலித்தது.

அவனது அம்மா லைனில் வந்தார்.

“ மாம்..”

“தேவ்.. சாப்டியா?”

“இது என்ன ஸ்டாண்டர்டு புரசிட்சர் மாதிரி எப்பவும் இந்தக் கேள்வியை விட மாட்டிங்க போல?”

மறுமுனையில் அவனது அம்மா நகைக்க ஆரம்பித்தார்.

“தேவ்..பூமியில் ஒரு குழந்தை பிறந்ததும் ஒரு தாயோட முதல் கடமை என்ன தெரியுமா?”

“ நீங்களே சொல்லுங்க?”

“ குழந்தைக்கு பால் கொடுக்கறது. அதாவது சாப்பிட வைக்கிறது. மனுசங்க பெண்மையை போற்றுவோம் அப்படினு இதை பெண்கள் கடமையாய் மாற்றிவிடுவார்கள். ஆனால் பறவைகள் , விலங்குகளில் தந்தைப் பறவையும் தாய்ப் பறவையும் மாத்தி மாத்தி காவல் காத்து உணவு கொடுப்பாங்க. அதுவும் குட்டியோ குஞ்சோ தானா வாழக் கத்துக்கற வரை தொடரும். ஆனால் எப்பவும் உலகத்தில் எல்லாவற்றிற்கும் எக்சப்சன் இருக்கு. தாயால் கொல்லப்படும் உயிர்களும் இருக்கு. ஆனால் பேரண்டஸ்க்கு தன் குழந்தை சாப்பிடறது முக்கியம். “

“போதும் தாயே.. ரொம்பத் தெளிவா புரிய வச்சுட்டீங்க. எப்படிமா சன் டீவில ஆரம்பிச்சு டிஸ்கவரில முடிக்கிறீங்க. இப்பதான் புரியுது. எனக்கு எதனால் அவள புடிக்க ஆரம்பிச்சுருக்கும்.”

“டேய் என்னடா சொல்ற?”

“ஜஸ்ட் நத்திங்க். டீஸ் செஞ்சேன்.”

“அம்மா?”

“சொல்லு?”

“அதுவந்து… என் பிரண்ட் எப்படி இருக்கா?”

“அத நீயே கேட்க வேண்டியதுதான?”

“இல்லை மா. அது நல்லாருக்காது. நானே அவள ஹர்ட் செஞ்சுட்டு நானே சமாதானமும் செஞ்சா அது குரூயலா இருக்கும்.”

“ஓகே. ஆனால் அவ நல்லா இல்லைனு மட்டும் என்னால் சொல்ல முடியும்.”



அலைவான்....................
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -40

“இட்ஸ் ஓகே மா. நான் பார்த்துகிறேன்.”

“இல்லை தேவ். அவங்க அப்பா?”

“மாம். அவரு பொலிட்டிசியனா நம்ம பேம்லி 50 வருஷமா கவர்மென்ட் அபிஷியல்ஸ். சோ அவரு எந்த ஹார்ம் செய்யவும் வாய்ப்பு இல்லை. அதுக்கு என்னோட பிரண்டும் விட மாட்டா.”

“என்னமோ போடா..அந்தப் பொண்ணும் நல்ல பொண்ணு. அவரு அப்பாவும் தன்னோட குழந்தைகளை அரசியல் சுயலாபத்துக்காக உபயோகிக்க மாட்டார்.”

“ஓகே மாம். நீங்க சாப்பிட்டீங்களா?”

“நானும் சாப்பிட்டேன் தேவ். சரி டாட் எங்க?”

“அவரு எங்க ஆபிஸ்தான் .”

“ஈவினிங்க் பேசிக்கிறேன்.”

“சரி தேவ். அந்த பொண்ணைப் பத்திக் கொஞ்சம் சொல்லுடா?”

“எந்தப் பொண்ணு?”

“அதாண்டா நீ லவ் பன்னற பொண்ணு?”

“ஓ…என்ன மாம் சொல்றது? மேடம் மேல எனக்கு லவ் இருக்குதுனு என்னை விட்டுட்டுப் போனதுக்கு அப்புறம்தான் எனக்குப் புரிஞ்சுது. “

“ உங்கப்பா மாதிரியே நீ லவ்ல ஃபூயுஸ் போன பல்புதான். போடா அந்தப் பொண்ணுகிட்ட சொன்னியா இல்லையா?”

“மாம்…” தேவ்வின் குரலில் தன்னை ஃபூயுஸ் போன பல்பு என்று சொல்லிவிட்டார்கள் என்பதற்காக லேசான கோபம் இருந்தது.

“தேவ் அந்த பொண்ணு இப்ப எங்க இருக்கா?”

“சொந்த ஊருக்குப் போயிட்டா.”

“டேய் இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அவளைக் கண்டுபிடிச்சு போய் லவ்வ சொல்லு. அதுக்கப்பறம் நடக்கறதப் பார்த்துக்கலாம்.”

“அந்த பொண்ணு எப்படி இருப்பா? என்ன செய்யறா? கேரக்டர் இதைப் பத்தி நீங்க எதுவும் கேட்கல? ஏன்மா?”

“உன்னை நான் நம்புறேன். சோ நோ கொஸ்டீன்ஸ். எவ்வளவு பொண்ணுங்க வெளியில் அப்பாவி மாதிரி காட்டிக்குவாங்க. ஆனால் வாழ்ந்துப் பார்க்கும் போது எப்படி மேனிபுலேட்டிவ் செய்வாங்க. அதனால் முன்னாடியே எதையும் ஜட்ஜ் செய்யக் கூடாது.

“ அவளுக்கு மேனிபுலேஷன் வராது. ஸ்டெரெய்ட் ஃபார்வார்டு.”

“நைஸ் கண்ணா. நான் போன் வைக்கிறேன். ஆல் தி பெஸ்ட்.”





“ஓகே மாம்.”

அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

மணித்துளிகள் வேகமாகக் கரைந்து அடுத்த நாளும் வந்தது. ஆனால் இதுவரை யாழரசியைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

இன்று தேவ் கிளம்ப வேண்டும். அவனுடைய விடுமுறை முடிவுக்கு வந்திருந்தது. அவன் சென்று பணியேற்க வேண்டும். முன்பை விட தற்போது அவனது பொறுப்புகள் கூடியிருந்தன.

தேவ் கேரளாவை கனத்த மனதுடன் விட்டுக் கிளம்பினான்.

காதலின் கனம் கூடி

கண்களும் கலங்குதம்மா….

கண்மணி முகம் தேடி

பாழும் மனம் திரியுதம்மா….
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் – 41

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் செல்லும் பாதை. காரில் விரைந்து கொண்டிருந்தான் தேவ். அறிவு , வெற்றி இருவரையும் தேடும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

அதனால் அகாடமியில் படித்த மற்ற சிலரிடம் விசாரணை போய்க் கொண்டிருக்கிறது. காட்டுப்பாதையில் யாரோ ஒருவன் ஒரு பெண்ணிடம் வம்பு செய்து கொண்டிருப்பது போலிருந்தது. உடனே காரை நிறுத்தச் செய்து இறங்கினான்.

அந்தப் பெண் மாஸ்க் மாதிரி அணிந்திருந்தாள்.

“என்னமா வண்டியில் வந்து நீயா விழுந்துட்டு பிரச்சினை செய்யறியா? இதே வேலையா போச்சு. வண்டி ஓட்டத் தெரியலனா எதுக்கு நீ வண்டி ஓட்டற?”

இறங்கி இருவரின் அருகிலும் சென்றான்.

“என்ன சார் இங்க பிரச்சினை?”

“சார் இந்தப் பொண்ணு என்மேல் வண்டியை விட்டுருச்சு ? ஏந்தான் இந்தப் பொண்ணுங்க எல்லாம் வண்டியை எடுத்துட்டு வராங்களோ? இதுகளா அடுப்படியில் கிடக்கிற வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. படிக்கறேன் வேலைக்குப் போறேன் வெளியில் வந்து எத்தனை பேரு உயிரை எடுக்க வர்ராங்களோ?”

அவன் குடித்திருப்பது போல் தோன்றியது.

“ஸார் இங்க பாருங்க..” என்று தேவ் சொல்லி முடிப்பதற்குள் மாஸ்க் அணிந்திருந்த பெண் எதிரில் நின்றவனை காதில் பட்டாம் பூச்சிகள் பறக்கும் அளவுக்கு கன்னத்தில் அறைந்திருந்தாள்.

அந்தப் பெண் அடித்ததில் அவன் உடல் தடுமாறியது. கன்னத்தில் கைவைத்து நின்றான்.

மறுபடியும் அவனை அடிக்க கை ஓங்குகையில் அவளின் கை தேவின் கையில் அகப்பட்டிருந்தது. அவளது கண்கள் கோபமாகத் தேவையும் முறைத்துக் கொண்டிருந்தது இப்போது.

‘என்ன கோபம்டா இந்தப் பொண்ணுக்கு?’

அவள் கையை உதற முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

‘”பாரும்மா.. நீ அவரை இடிச்சதே கேஸாகும். அதோட அடிச்சா இன்னும் பிரச்சினை ஆகும்.”

பொறுமையாக எடுத்துக் கூறினான். ஆனால் எதிரில் உள்ள பெண் கேட்பதாக இல்லை.

“நீங்க யாரு இதுல மூக்கை நுழைக்கிறீங்க? இங்க முதல்ல என்ன நடந்துனு தெரியுமா? அவன் என்ன பேசுனானு தெரியுமா? லீவ் மை ஹேண்ட். இல்ல நீங்களும் இவன மாதிரி இல்லாம தரையில் கிடப்பீங்க. “

அவள் கையைவிட்டான் தேவ்.

தன்னுடன் சண்டை போட்ட ஆடவனை இன்னொரு அறைவிட்டாள்.

“ இங்க பாரு உன்னை நான் அடிக்கனும் நினைக்கல. குடிச்சுட்டு ராங்கா வந்தது நீ. அதனால் உன் மேல் என் வண்டி மோதிருச்சு. அதெல்லாம் கூட பரவாயில்லைடா. ஆனால் அதுக்கப்பறம் ஒரு பேராகிராஃப் பேசினுயே அதுக்குத்தான் இந்த அறை. படிக்க மட்டும் இல்லை அடிக்கறதுக்கு கத்துகிறாங்க பொண்ணுங்க. கிளம்பு இந்தப் பக்கம் உன்னை நான் இனிமேல் பார்க்கக் கூடாது.”

என்று தோரனையாகக் கூறிவிட்டு தனது ஸ்கூட்டியில் ஸ்டார்ட் செய்தாள். அவளது இடது முழங்கையில் இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. கையில் ஏதோ டேட்டூ போலிருந்தது. அதன் மீதும் இரத்தம் திட்டுத்திட்டாக உறைந்திருந்தது. அடுத்த நொடியில் அங்கிருந்து பறந்திருந்தாள்.

அடிவாங்கி நின்றிருந்தவனைப் பார்த்து , “ஸார் கிளம்புங்க.” என்று கூறியவன் தானும் வண்டியை எடுத்தான்.

அவன் இன்னும் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தான்.

தேவ் ‘நான் எதுக்கு சம்பந்தம் இல்லாம இந்தப் பிரச்சினையில் இன்வால்வ் ஆனேன். கடைசியில் ஒரு சிவிலியன்கிட்ட அடி வாங்க வேண்டியதாக இருக்கும். கரெக்ட் டைம் வர வரைக்கும் எதுவும் செய்யக் கூடாது.’

பார்க்கிறதுக்கு எத்தூண்டு அந்தப் பொண்ணு இருக்குது. என்ன அடி? தைரியம் அதிகம். ‘ என்று நினைத்தவாறே வண்டியை ஓட்டினான்.

காற்று சுகமாக வீசிக் கொண்டிருந்தது. அவன்பாட்டுக்கு பயணம் செய்து கொண்டிருந்தான். தன் புதிய பணியில் சேர ஆர்வத்துடன் பயணம் செய்தாலும் இன்னும் அந்த நால்வரைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்ற வருத்தம் இருந்தது உண்மை.

சில நாட்கள் கழித்து தேவ் ஈரோட்டில் இருந்தான். ஞாயிற்றுகிழமை என்பதால் வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. காட்டிலே அதிகம் நேரம் செலவிடுவதால் ஞாயிறன்று வெளியில் செல்லலாம் என்று முடிவெடுத்தான்.

அன்று அதிகமாக வெயில் இல்லை. மேகமூட்டமாகக் காணப்பட்டது. பைக்கை எடுத்துக் கொண்டு ஈரோட்டுக்கு வந்துவிட்டான். ஈரோட்டில் உடைகள் நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டுள்ளான்.

அதனால் அப்படியே கடைவீதியைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே பர்சேஸ் எதாவது செய்யலாமென்று வந்திருந்தான்.

மெருன் நிற சட்டையும் , நீல ஜீன்ஸ் அணிந்திருந்தான். அவன் முகம் ஒரு வித மென்மையான உணர்வுடன் காணப்பட்டது. ஈரோட்டில் உள்ள மிகப்பெரிய ஜவுளிக் கடைக்குள் நுழைந்திருந்தான்.

ஏசியின் காற்று அவன் முகத்தில் சில்லென்று மோதியது. கடைப் பணியாளர் ஒருவர் அவனை வரவேற்றார்.

“ஸார் எந்த மாதிரி டிரஸ் பாக்குறீங்க?”

ஓரு புன்னகையுடன் “முதல்ல சாரி அப்புறம் பேண்ட்ஸ் அண்ட் சர்ட்.”

“ஸாரிஸ் எல்லாம் செகண்ட் புளோரில் இருக்குங்க சார். பேண்ட் சர்ட் தேர்ட் புளோரில் கிடைக்கும். லிப்ட் ரைட் சைட்.”

“தேங்க் யூ .” புன்னகையுடன் தேவ் நகர்ந்தான்.

லிப்ட் அருகிலேயே மாடிப்படி இருந்தது. லிப்ட் மேலே சென்றுகொண்டிருப்பதாகக் காட்டியது.

‘சரி படியேறிப் போலாம்.’ என்று படிகளில் ஏறத் தொடங்கினான்.

முதல் மாடி ஏறிவிட்டான். யாரோ ஒரு சிலர் அவனைக் கடந்து சென்றார்கள். தேவ்வும் அவன் பாட்டுக்குச் சென்று கொண்டிருந்தாள்.

இரண்டாம் புளோர் ஏறும் போதுதான் ஒரு குரல் தேவ்வுக்கு கேட்டது.

‘இது அந்தப் பொண்ணு குரல் மாதிரி இருக்கே..’ இரண்டாம் புளோரின் நுழைவில் அவன் நுழையும் போது வந்து மோதினாள் ஒருவள்.

மோதியவள் நிமிர்ந்து பார்ப்பதற்குள் “ ஐம் சாரி. ஐ டிண்ட் சி. ஐம் சாரி.” என்று கூறிவிட்டிருந்தாள். கீழே விழுந்த தனது தனது போனை எடுத்துவிட்டு நிமிர்ந்தாள்.

“யூ ???” என்று தனது சிறிய கண்களை விரித்தாள்.

‘சோ நான் நினைச்சது கரக்ட்தான்.”

“வாட் ஆர் யூ டூயிங்க் ஹியர்?”

தேவ்வுக்கு கோபம் வந்தது. ‘நான் ஒன்னும் இந்தப் பொண்ணு வீட்டுக்குப் போகலயே? எதுக்கு இப்படி கேள்வி கேட்குறா?’

சிரித்தவாறே , “அதுவா.. இங்க மிளகாய் பஜ்ஜி நல்லாருக்குனு சொன்னாங்க. அதான் சாப்பிட வந்தேன்.”

அவள் முகம் மாறியது. அவள் கோபமாக எதாவது பேசுவாள் என்று எதிர்பார்த்தால் அதற்கு மாறாக சிரிக்க ஆரம்பித்தாள்.

“ஓகே ஐ கெட் இட். நீங்க என்னை கண்டுபிடிச்சுட்டீங்க? அன்னிக்கு நான் ரொம்ப கோபத்தில் இருந்தேன். அதான் அப்படி பேசிட்டேன். சாரி. “ இரண்டு கைகளையும் உயர்த்தி கேசுவலாகச் சொன்னாள்.

அவள் அப்படிச் சொல்லும் போது தேவ்வும் அமைதியாகிவிட்டான்.

“நீங்க யார் கூட வந்திருக்கிறீங்க?” தேவ் அவளைப் பார்த்துக் கேட்டான்.

“எங்கேஜ்மெண்ட்க்கு டிரஸ் எடுக்க வந்தோம். உள்ள ஃபேம்லி மெம்பர் இருக்காங்க. நீங்க யார் கூட வந்தீங்க?”

“நான் ஊருக்கு புதுசு. வேலைக்காக வந்தேன். சும்மா எதாவது பர்சேஸ் பன்னலாம் வந்தேன். “

“ஓ சரி. இது சாரி செக்சன். மேலே உங்களுக்கு.”

“இல்லை முதலில் அம்மாவுக்கு அப்புறம் எனக்கு எடுப்பேன்.”

“ ஓ .. சரி பாருங்க. பாய்.” என்று கூறிவிட்டு அந்தப்பெண் மாடிப்படியில் இறங்கிச் சென்றுவிட்டாள்.

‘ சே பேர் கேட்காம போயிட்டோமே?’ என்று தோன்றியது. அதன்பிறகு உள்ளே நுழைந்து அவன் அம்மாவுக்கு பட்டுப்புடவை ஒன்றைப் பார்க்கத் தொடங்கினான். பெண்கள் பகுதி என்பதால் கூட்டம் ஒர் அளவுக்கு இருந்தது. ஆனால் அவனுக்குப் பின்னால் இருந்தால் இரு பெண்கள் பேசியது அவன் காதில் விழுந்துவிட்டது.

“ஊர்ல இல்லாத பொண்ணு. கவர்மென்ட் வேலையில் இருக்காளாம். இதோ அந்த மெருன் சட்டை போட்ட ஆளுகிட்ட நின்னு என்னமோ பேசிட்டு இருந்தா. நிச்சய புடவை எடுக்கும் போது இந்த ஆளும் இங்க இருக்கான். எனக்கு என்னமோ அவளுக்கும் இந்த பையனுக்கும் சம்பந்தம் இருக்குமோனு தோணுது?”

“அதப்பத்தி எல்லாம் அத்தைக்கு கவலை கிடையாது. அந்தப் பொண்ணு கவர்மெண்ட் வேலையில் இருக்கு. கடைசி வரைக்கும் நல்லா இருக்கலாம். நம்ம சரண் லவ் பன்ன பொண்ணவிட்டுட்டு இவளைக் கல்யாணம் செய்ய அதுதான் காரணம். இதெல்லாம் யாருக்கும் தெரியாது.”

தேவ் பொறுக்க முடியாமல் திரும்பினான். ஆனால் அந்தப் பெண்கள் யாரென்று தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். நிறையப் பெண்கள் இருந்தனர்.

‘சே என்ன மாதிரியான பெண்கள் ….” என்று அவனுக்குத் தோன்றியது. ‘தன்னைத் தான் குறிப்பிட்டு அவர்கள் பேசினார்கள் என்று தேவ்க்கு புரிந்தது.

‘அந்தப் பொண்ணு இப்படி ஒரு குடும்பத்தில் போய் மாட்ட வேண்டாம் .’ அதே சமயம் யாழரசியின் நினைவு வந்தது. இப்படிப்பட்ட நபர்களை அவளுக்குப் பிடிக்காது என்று தோன்றியது.





அலைவான்......................
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -42

“அம்மா , அப்பா , பாட்டி , தாத்தா , சித்தி என்னை எல்லாரும் மன்னிச்சிருங்க. நான் இப்படி பன்னிருக்க கூடாது. ஆனால் என்னோட சூழ்நிலை அப்படி. இவரதான் நான் லவ் பன்றேன். ரெஜிஸ்டர் மேரேஜும் செஞ்சுகிட்டேன்.”

முழங்காலில் மண்டியிட்டு கண்ணீரோடு கெஞ்சிக் கொண்டிருந்தாள் யாழரசி. இதுவரை நின்று கொண்டிருந்த தேவ்வும் அவளுடன் சேர்த்து மண்டியிட்டான்.

“அரசி மேல எந்தத் தப்பும் இல்லை. எல்லாத்துக்கும் நான் தான் காரணம்.”

அவன் மண்டியிட்டதும் உடனே யாழரசியின் பாட்டி அவனைத் தூக்கினார். “ மாப்பிள்ளையை மண்டி போடற வழக்கம் எங்க குடும்பத்தில் இல்லை. எந்திரி பா. இப்ப அவள கூட்டிட்டுப் போ. மத்தத ஆற அமரப் பேசிக்கலாம்.”

சுற்றி நின்றிருந்த யாழரசியின் உறவினர்களும், அவளுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை வீட்டு உறவினர்களும் நின்று கொண்டிருந்தனர்.

இதுவரைப் பேசாமல் நின்று கொண்டிருந்த மாப்பிள்ளையின் அம்மா , “ஐயோ இந்த அநியாயத்தைப் பாருங்களேன். பத்து நிமிஷம் வரைக்கும் எம்பையன மாப்பிள்ளைனு சொல்லிட்டு இப்ப இவன சொல்றாங்க. “

யாழரசியின் அப்பா “ அம்மா மன்னிச்சுருங்க. இந்த மாதிரி நடக்கும்னு நாங்க எதிர்ப்பார்க்கல. “

“என்னையா பொண்ணை வளர்த்து வச்சுருக்க. ஏதோ கவர்மென்ட்ல வேலை பார்க்கறா. கை நிறைய சம்பளம். அடக்கமா இருக்கற. காலத்துக்கும் நமக்கு அடிமையா இருப்பானு உம் பொண்ண பேசி முடிச்சா அவ என்னடான எவனோ ஒரு தறுதலையைப் இழுத்துட்டு வந்திருக்கா.”

யாழரசியின் குடும்பமே அதிர்ந்தது. ஒவ்வொருவர் மனசிலும்

‘ச்சீ இந்த மாதிரி ஒரு குடும்பத்திலா நம்ம புள்ளைய கொடுக்க நினைச்சோம்.’ என்ற அசூயை எழுந்தது.

இதுவரை பேசாத யாழரசியின் தாத்தா “ இந்தாம்மா.. எம் பேத்தி சாதாரண கவர்மெண்ட் வேலையாள் இல்லை. கலெக்டருக்கு படிச்சவ. உன்னோட சொந்த ஊரான ஈரோட்டுக்கு இவதான் டெபுட்டி கலக்டர். எம் பேத்தி உனக்கு அடிமையா. கிளம்பு வெளிய.” கோபத்துடன் கூறியேவிட்டார்.

அவர் அடுத்தது பேசுவதற்குள் அந்தக் கோயிலுக்கு முன் வரிசையாக சைரன் ஓலித்தபடி கார்கள் வந்து நின்றது.

அங்கிருந்த அனைவரும் ‘இங்கு என்னடா நடக்கிறது ? ‘ என்று அதிர்ச்சியோடு பார்க்கையில் காரிலிருந்து ஒவ்வொருவராக இறங்கி உள்ளே வர ஆரம்பித்தனர்.

ஈரோட்டின் எம்.பியுடன் சேர்ந்து இன்னும் நவநாகரீகமாக நாற்பது வயதிற்கும் மேலிருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் உள்ளே வந்தனர். அந்தப் பெண்மணி நடந்து வந்ததில் அப்படி ஒரு கம்பீரம் இருந்தது. அதற்கேற்ப அந்த ஆணும் கம்பீரமாக நடந்து வந்தார்.

நடந்து வந்த பெண்மணி யாழரசியின் அருகில் வந்தார்.

“மருமகளே எந்திரி. என்னோட மருமக யார் முன்னாடியும் தலை குனிந்து நிற்க வேண்டிய அவசியம் கிடையாது. கமான். யாழ்த்தேவன் யூ டூ” தன்மகனுக்கும் சேர்த்து கட்டளை இட்டார்.

புன்னகைத்தவாறே எழுந்தான் யாழ்த்தேவன். யாழரசியும் பிடித்து எழ வைத்தாள்

அந்தப் பெண்மணி பேசியதில் இருந்தே அவர்தான் யாழரசியின் மாமியார் என்று சபைக்கு புரிந்துவிட்டது. ஆனாலும் சூழ்நிலை இறுக்கமாகத்தான் இருந்தது.

யாழ்த்தேவன் இப்போது பேச ஆரம்பித்தான்.

“எல்லாருக்கும் என் வணக்கம். அதோட மன்னிப்பையும் கேட்டுகிறேன். நான் யாழ்த்தேவன் , சத்தியமங்கலம் பாரஸ்ட் டிவிசன் டெபுட்டி டேரக்டர். இவங்க என்னோட அம்மா நித்ய காயத்ரி தேவி , நேஷனல் கமிஷன் ஆஃப் வுமன் சேர்மேன்.

அப்பா சத்ய பிரகாஷ் , எஃப் . ஏ . ஓ டேரக்டர்.

கிட்டத்தட்ட அனைவரும் வாயைப் பிளக்காத குறைதான்.

இவ்வளவு நேரம் காட்டுக்கத்தாக கத்திக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் அருகில் சென்றான் யாழ்த்தேவன்.

“தறுதலை இல்லை. எங்க பரம்பரையே கவர்மெண்ட் சர்வண்ட்ஸ்தான். கொஞ்சம் பெரியதலை. நீங்க கிளம்பலாம். “ அனைவருக்கும் கேட்கும் படி சொல்லியவன் பிறகு அவரது காதருகே குனிந்து ஏதோ சொன்னான்.

அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் அவர்களின் பட்டாளம் கோயிலை விட்டுத் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவிட்டிருந்தனர். அவர்கள் செல்வதற்கும் இன்னும் மூன்று கார்கள் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

முகவரிகள் மாறும்....
 
Last edited:

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -43

காரில் இருந்து இறங்கினாள் மீனினி. கையில் ஒரு வயதுக் குழந்தை ஒன்று இருந்தது. பின்னால் இருந்த கார்களில் இருந்து அறிவழகன் , வெற்றிவேள் இருவரும் இறங்கினர்.

“இந்தக் கோயில்தான மீனு?” அறிவு கேட்டான்.

“ஆமாண்ணா. இதுதான் .”

“இங்கதான் வாழைமரம் கட்டியிருக்காங்க. அப்ப இதுதான்.”

என்று கூறிய வெற்றியை முறைத்தனர் மீனும் அறிவும்.

“டேய்..வாயை மூடிட்டு வாடா. “ அறிவின் வார்னிங்கை வெற்றிப் பொருட்படுத்தினால் தானே.

“உங்களுக்கு வித்தியாசமாத் தெரியலையா? நிச்சய வீடு கலகலப்பா இருக்கும். இங்க என்ன புயல் வரதுக்கு முன்னாடி இருக்கற அமைதி மாதிரி இருக்கு. “ இதைக் கவனித்துச் சொன்னது வெற்றிதான்.

“அட உங்க டிஸ்கஷன உள்ள போய் பார்த்துக்கலாம். வாங்க.” மீனு குழந்தையைத் தூக்கியபடி உள்ளே சென்றாள்.

“ஏய் மீனு . வேகமாகப் போகாதே. குழந்தை தூங்குறான் பாரு. “

வெற்றி மீனுவிடம் கூறிக் கொண்டே செல்ல அறிவும் அவர்களைத் தொடர்ந்தான்.

மீனுவை முந்திக் கொண்டே வெற்றி சென்றான். உள்ளே யார் யாரோ கோபத்துடன் நிற்பதைப் பார்த்த வெற்றி திரும்பி மீனுவிடம் “நாம தப்பான அட்ரஸ்க்கு வந்துட்டோம்னு நினைக்கிறேன்.”

“இல்லை வெற்றிண்ணா. அங்க பாரு அக்கா.”

“ஹாய் யாழு. “ வெற்றி கை அசைத்தான்.

மீனு வெற்றியிடம் “அண்ணா இங்க என்னமோ சரியில்லை. யாழுக்கா கையை பிடிச்சிட்டு நிக்கறது அவளுக்கு நிச்சயம் செஞ்ச மாப்பிள்ளை இல்லை. இது யாருனு தெரியல?“

“ஆனால் எனக்குத் தெரியும். “ இதுவரை பேசாத அறிவு மெதுவாகச் சொன்னான்.

“ யாழு கையப் பிடிச்சுட்டு இருக்கிறவர் பேர்

யாழ்த்தேவன் ., ஐ. எஃப். எஸ். சத்தியமங்கலம் பாரஸ்ட் டிவிசன் , டெபுட்டி டேரக்டர். “

“யூ மீன். நீ இப்ப அங்கதான் டிஸ்டிரிக்ட் பாரஸ்ட் ஆபிசரா இருக்க.?“ வெற்றி சந்தேகத்தைக் கேட்டான்.

யாழ்த்தேவனும் இவர்கள் மூவரைப் பார்த்துவிட்டான். முகம் புன்னகையைச் சூடிக் கொண்டது.

“வாங்க வெற்றிவேள் , மீனினி, அறிவழகன். “ என்று வரவேற்றான். நண்பர்கள் மூவரும் யாழின் முகத்தைப் பார்த்தனர். அவள் முகம் கல்லைப் போன்று இருந்தது.

“மறுபடியும் எல்லார்கிட்டேயும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். நீங்க எல்லாரும் அப்பா, அம்மா, மினிஸ்டர் அங்கிள்ட பேசுங்க. என்னோட வொய்ஃப் நேத்திலிருந்து சரியா சாப்பிடலை. அவள நான் வெளியில் கூட்டிட்டுப் போய் சாப்பிட வச்சுட்டு திரும்ப வீட்டுக்கே கூட்டிட்டு வரேன். நீங்க எல்லாரும் போய் பொறுமையா அங்க அடுத்து என்ன செய்யறதுனு பேசிட்டு இருங்க. கூட யாழு பிரண்ட்ஸ் மூணு பேரையும் கூட்டிட்டுப் போறேன். “

அவன் மன்னிப்பு கூட கம்பீரமாகத்தான் இருந்தது.

யாழரசியின் பாட்டி மட்டும் “போப்பா. கூட்டிட்டுப் போ.”

என்று பதில் கொடுத்தார்.

யாழரசியின் கையைப் பிடித்ததும் அவளும் நடக்கத் தொடங்கினாள்.

அறிவு, மீனு , வெற்றி மூவரும் இங்க என்னடா நடக்குது என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

யாழ்த்தேவன் இவர்கள் அருகில் வந்ததும் , “கமான். என்னோட கார்ல போய்க்கலாம். அறிவு நீ டிரைவ் செய்யறியா?”

“யெஸ் சார்.”

மீனு யாழரசியைப் பார்த்தாள். அவள் கண்களில் ‘அக்கா என்ன செய்றது?’ என்ற கேள்வி தொக்கி நின்றது.

‘வா போலாம்’ என்று கண்களைச் சிமிட்டினாள்.

யாழ்த்ததேவனும் யாழரசியை கூட்டிக் கொண்டு முன் சென்றான்.

மீனு அவர்கள் பின்னால் செல்லவும் வெற்றி “மீனு நில்லு.”

என்றான்.

மீனுவும் நின்றாள். “மீனு இது எனக்குச் சரியாப் படல. மூனு நிமிஷத்துக்கு முன்னூறு எக்ஸ்பிரசன் காமிக்கற யாழு முகத்தில் ஒரு எக்ஸ்பிரஷனும் இல்லை.”

“ஆமாம். அவ அமைதியா இருக்கா. அப்படினா இதைப் பத்திப் பேசமாட்டா. அவளுக்கு எதுவுமே பிடிக்கலனா இப்படி சைலண்ட் மோடுக்கு மாறிருவா.”

“எப்படி சொல்ற?”

“அவளும் நானும் ஓரே வீட்டில் இருந்திருக்கோம். அவ எல்லா நம்மகிட்ட ஷேர் பன்னற மாதிரி இருக்கும். ஆனால் அப்படிக் கிடையாது.”

அதற்குள் காரின் ஹாரனை அடித்தான் அறிவழகன்.

“வாங்க.” என்று சைகையைக் காட்டினான்.

பின்சீட்டில் யாழ்த்தேவனும் , யாழரசியும் அமர்ந்திருந்தனர். மீனு குழந்தையுடன் யாழரசியின் அருகில் அமர்ந்தாள். வெற்றி டிரைவர் சீட்டுக்கு அருகில் உள்ள முன்புறத்தில் அமர்ந்து கொண்டான். வண்டி செல்லத் தொடங்கியது.

யாரும் பேசவில்லை. அவர்களின் அமைதியைக் கலைக்கும் வண்ணம் மீனுவின் குழந்தை வீறிட்டது.

“பேபிம்மா.. அழாதீங்க. “

“வெற்றி அண்ணா. இந்த பேக்கிலிருந்து பால்பாட்டில் எடுத்துக் கொடுங்க. “



அதற்குள் மீனுவின் கையிலிருந்த பேக்கை வாங்கி யாழரசியே பால்பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள்.

“அறிவு வண்டியை நிறுத்து. பாப்பா பால் குடிச்சு முடிக்கற வரைக்கும் மரத்து நிழலில் வண்டிநிறுத்துங்க.”

அது ஒரு ஒதுக்குப் புறமான இடம். ஆள் நடமாட்டம் இல்லை.

“கொஞ்சம் கீழ இறங்குறீங்களா?” தேவிடம் யாழரசி சொன்னாள்.

‘என்ன ரொம்ப மரியாதையாப் பேசறா?’ தேவ் யோசித்தபடியே இறங்கினான்.

“நீங்க நாலு பேரும் இங்கேய இருங்க.”

நண்பர்கள் மூவரும் யாழரசியை அர்த்ததுடன் பார்த்தனர்.

வெற்றி மட்டும் அமைதியாக இராமல் “யாழுமா இது பப்ளிக் பிளேஸ்.”

வெற்றியை முறைத்தவாறே இறங்கிவிட்டாள்.

காரின் வெளியே நின்றிருந்த தேவ் கையைப் பிடித்தவாறே யாழ் அருகிலிருந்த மரத்தின் பின்னே இழுத்துச் சென்றாள்.

“அறிவு யாழு மரத்துக்குப் பின்னாடி அவரை இழுத்துகிட்டு போறாடா?”

“வெற்றி அண்ணா கொஞ்சம் நேரம் சும்மா இரு. பாப்பா தூங்கனும்.”

உடனே அமைதியாகிவிட்டான். அறிவு மட்டும் ஏதோ யோசித்தபடி இருந்தனர்.

மரத்தின் பின் என்ன நடந்ததோ தெரியவில்லை. ஐந்து நிமிடம் கழித்து இருவரும் வந்தனர். அமைதியாகக் காரில் ஏறி அமர்ந்தனர்.

யாழரசி மட்டும் சீட்டில் பின் பக்கத்தில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள். ஈரோட்டில் உள்ள பிரபல ஹோட்டல். தேவ் ஐவரும் அமர்ந்திருந்தனர்.

சாப்பாடு வரவைக்கப்பட்டது. தேவ்வே அனைவருக்கும் என்ன வேண்டும் என்று கேட்டு ஆர்டர் செய்தான். சாப்பாடு வந்தது. மீனு குழந்தையை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். குழந்தையை வைத்துக் கொண்டு சாப்பாடு உண்பது சிரமம்.

“மீனு நீ அப்படியே உட்காரு. நானே உனக்கு ஊட்டி விடறேன். “

“அக்கா....யூ ஆர் தி பெஸ்ட்.”

‘ஐ நோ அக்கா. ஏதோ ரொம்ப தப்பா இருக்கு. ஆனா நீ இப்பவும் நீ சேனிட்டியோட இருக்க.’ என்று மீனு நினைத்துக் கொண்டாள்.

வெற்றி அவன்பாட்டுக்கு சாப்பிட ஆரம்பித்தான். அறிவு மட்டும் அடிக்கடி தேவ்வின் மீது பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தான். யாழுவும் மீனுவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். தேவ் யாழரசியின் மீது பார்வையைச் செலுத்தியவாறே உணவை உண்டு கொண்டிருந்தான்.

ஆண்கள் மூவரும் சாப்பிட்டு முடித்து விட்டனர்.

“வாங்க பிரதர்ஸ் நாம போய் ஹேண்ட் வாஷ் பன்னலாம். அவங்க மெதுவா பேசட்டும். “ தேவ் கூறிவிட்டு எழுந்தான்.

அறிவும் , வெற்றியும் தேவ்வைத் தொடர்ந்து சென்றனர். ஹேண்ட் வாஷ் செய்யும் இடம் . மூவரும் ஆளுக்கு ஒரு பைப்பில் நின்று கைகழுவினர்.

கைகளைக் காய வைத்ததும் வெற்றி நேராக தேவ்வின் சட்டைக் காலரைப் பிடித்தான். தேவ் தீடிர் தாக்குதலில் ஆச்சரியத்துடன் புருவத்தைத் தூக்கினான்.

ஆனால் திருப்பி எதுவும் செய்யவில்லை. அறிவும் வெற்றி இப்படிச் செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை.

“வெற்றி அவரை விடு.” அறிவு வெற்றியின் கைகளை எடுத்துவிட முயற்சி செய்து கொண்டிருந்தான்.

“நீங்க எவ்வளவு பெரிய ஆபிசரா வேணா இருக்கலாம். ஆனால் நீங்க யாழுகிட்ட கவனமா இருங்க. நீங்க என்ன செஞ்சு அவளைக் கல்யாணம் செய்தீங்கனு தெரியல. ஆனால் எதாவது தப்பா இருந்துச்சுனா உங்களை நாங்க சும்மா விட மாட்டேன். “

தேவ் சிரித்தே விட்டான். “நீங்க அவளுக்கு எவ்ளோ நல்ல பிரண்ட்ஸ்னு இப்ப புரியுது. கையை எடுங்க பிரதர். “

வெற்றிக்கு மேலும் கோபம் வந்தது.

“வெற்றி விடு . அவரு அந்த மரத்துக்குப் பின்னாடி வாங்குன அறையே போதும். அப்படி எதாவதுனா யாழுவே பார்த்துப்பா. விடு.” அறிவு இப்படிச் சொன்னதும் வெற்றி கண்களைச் சுருக்கினான். மெதுவாக சட்டையை விட்டான்.

“சார் அவன் ஏதோ ஒரு கோபத்துல இப்படி செய்திட்டான். பெரிசா எடுத்துக்காதீங்க.” தேவ்விடம் அறிவு கேட்டான்.

தேவ் மெலிதாகச் சிரித்தான்.

“இட்ஸ் ஓகே. வாங்க போலாம்.”

மூவரும் திரும்பிச் சென்றனர். மீனுவும் யாழுவும் உணவை சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் இருந்தனர். தேவ் மீனுவின் அருகில் வந்து “குழந்தையைக் கொடுமா. நான் வச்சுருக்கேன். நீயும் யாழரசி கூட போயிட்டு வா.”

மீனுவும் தலையசைத்தாள். குழந்தையை அவனிடம் கொடுத்தாள். யாழுவும் , மீனுவும் கைகழுவச் சென்றனர்.

அந்த ஆறடி மனிதன் மிகவும் கவனமாக ஒரு பூவைப் பிடிப்பது போல் அந்தக் குழந்தையைப் பிடித்துக் கொண்டிருந்தான். வெற்றியும் , அறிவும் நாற்காலியில் அமர்ந்தனர்.

மீனு வெளியே வந்ததும் யாழரசியின் முழங்கையைப் பிடித்தாள். “அக்கா இப்பவாவது என்னாச்சுனு சொல்லேன். நீ ஏன்கா இப்படி இருக்க? பீளிஸ் சொல்லு. காலையில் தீடிர்னு மெசேஜ் செஞ்ச. நானும் அதைப் பார்த்துட்டு கிளம்பிட்டேன். “

“வீட்டில் திட்டீங்கா அதான். மத்தப்படி ஒன்னும் இல்லை. அதான் அவங்கள எப்படி சமாதானம் செய்யறதுனு யோசிட்டுவந்தேன். சரி சூர்யா ஏன் வரல. நீ மட்டும் தனியா வந்திருக்க?”

“உண்கிட்ட உண்மைய வாங்கறது கஷ்டம். அவருக்கு கடைசி நேரத்தில் ஏதோ ஆபிஸில் எமர்ஜென்சினு கிளம்பிட்டார். மேரஜுக்கு பார்த்துக்கலாம் அப்படினு சொன்னார். ஆனால் இன்னிக்கே மேரேஜ் ஆகும்னு நினைச்சுக்கூடப் பார்க்கல. “

“சரி ரிசப்ஷன் வைப்பாங்க. அதில் பார்த்துக்கலாம்.” யாழரசி எளிதாகச் சொல்லிவிட்டாள்.

மீனுவுக்கு குழப்பம். ‘அக்கா ஹேப்பியா இருக்காளா இல்லை பொய் சொல்றாளா ? உண்மையை பாதி மறைச்சு சொல்றாளா?’ யோசித்துக் கொண்டே இருந்தாள்.

அதற்குள் கைகழுவி முடித்த யாழரசி , “வா மீனு போலாம். “ என்று அழைத்துச் சென்றாள். பில்லை செட்டில் செய்துவிட்டு கிளம்பினர். குழந்தை உறங்கியதால் மீண்டும் மௌனம்.

தேவ்வின் போன் மெல்ல அதிர்ந்தது. அவன் அம்மா அழைத்திருந்தார். மெலிதான குரலில் பேசிவிட்டு வைத்தான். அவனை அமைதியாகப் பார்த்துக் கொண்டு வந்தாள் யாழரசி.

“ரிசப்ஷன் இன்னும் இரண்டு நாள் கழிச்சு ஈரோட்டில் வைக்கிறாங்க. நீங்க மூணுபேரும் அதுவரை இங்கேயே இருந்தா நல்லாருக்கும்.” பொதுவாக தேவ் சொன்னான்.

மூவரும் தலையை மட்டும் ஆட்டினர். யாழரசி தகவலைக் கேட்டுக் கொண்டாள். இரண்டு நாட்களில் மீனுவும் எவ்வளவோ கேட்டாலும் யாழரசியின் பதில் மாறவில்லை. தேவ்வின் வீட்டுப் பக்கம் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் யாழரசியின் வீட்டினர் இன்னும் முழுதாக சமாதானமாகவில்லை. அவர்களுக்கு நேர்ந்த தலைக்குனிவை மறக்க இயலவில்லை. அதற்கு நாளாகும்.

யாழரசி எதைச் சொன்னாலும் கேட்டுக் கொண்டு செய்தாள். தனியாகக் கருத்த் எதுவும் கூறவில்லை. அந்த எம்.பிக்கே மிகப்பெரிய மண்டபம் ஒன்று இருந்தது. அதனால் வரவேற்புக்கு அவரே மண்டபம் அளித்துவிட்டார். உறவினர்களை அழைப்பதையும் துரிதமாகச் செய்து முடித்தனர். தேவ் அனைத்திற்கும் முன்னேற்பாடு செய்து வைத்திருந்தான். அவன் அம்மாவிடம் இந்தத் தேதியில் ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்யும்படி முன்னரே கேட்டுக் கொண்டான்.

யாழரசியிடமும் முன்பே கூறியிருந்தான். அவளும் ஆற்றின் நீரோட்டத்தில் மிதக்கும் இலைபோல் வாழ்க்கையின் போக்கில் போய்க் கொண்டிருந்தாள்.

அவள் வீட்டினரே ‘இவ நம்ம யாழரசிதானா?’ என்று நினைக்கும்படி இருந்தாள். ரிசப்சனும் நல்லபடியாக முடிந்தது. இருவருக்குமே ஈரோட்டில் பணி. தேவ் முன்பே ஒரு வீட்டில் இருந்ததால் யாழரசியையும் அதே வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.



முகவரி மாறும்...
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -44

வரவேற்பு சீறும் சிறப்புமாக நடந்து முடிந்தது. தமிழ்நாட்டின் பெரும்புள்ளிகள் பெரும்பாலும் வந்திருந்தனர். அதற்கு முன்பு இரண்டு நாட்கள் யாழுவின் வீட்டிலேயே இருவரையும் தங்க வைத்தனர். யாழுவின் அருகில் யாராவது இருந்து கொண்டே இருந்தனர்.

யாழரசி போலிப்புன்னகையுடன் வலம் வந்து கொண்டிருந்தாள். அவள் வீட்டினர் தற்சமயம் சமாதானமாக இருந்தனர். இருந்தாலும் அவர்களின் கோபத்தையும் , ஆதங்கத்தையும் உணர முடிந்தது. ஆனால் பாட்டி கொஞ்சம் ஆதரவாக இருந்தார். அவள் வீட்டில் தற்போது துரோகி என்ற நிலையை எட்டியிருந்தாள். தேவ் அவளைக் கவனித்துக் கொண்டே இருந்தான். ஊர்க்காரர்கள் புறணி பேசக் கிடைத்த அற்புதமான வாய்ப்பாக அமைந்தது இவர்களின் திருமணம்.



வரவேற்பு முடிந்ததும் ஈரோட்டில் இருக்கும் தேவ்வின் வீட்டிற்கு யாழரசியின் உறவினர்களும் வந்து பார்த்துவிட்டு தனிமை கொடுத்து திரும்பி இருந்தனர். தேவ்வின் பெற்றோரும் சென்னைக்குத் திரும்பி இருந்தனர்.

தேவ் ஏதோ பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். யாழரசி தேவ்வின் அறையில் மெத்தை மீது அமர்ந்திருந்தாள். தலையை தரையை நோக்கித் தொங்கப் போட்டு இரு கைகளாலும் அழுத்திப் பிடித்தபடி கண்களை இறுக மூடி அமர்ந்திருந்தாள்.

தேவ் யாழரசியைத் தேடிவந்தான். அவள் அமர்ந்திருந்த விதம் அவனை வருந்தியது . அவளின் நிலையைக் கண்டவன் அருகில் வந்து , “என்ன யாழரசி தலைவலிக்குதா? மாத்திரை வேணுமா? “

சத்தம் கேட்டு தலையை நிமிர்த்திப் பார்த்தாள். தீடிரென்று எழுந்து அவன் மார்பில் இரு கைகளாலும் அடித்துக் கொண்டே “ எல்லாம் உன்னாலதாண்டா? நீதான் என்னொட தலைவலி. ஏண்டா இப்படி செஞ்ச? உனக்கு என்ன பாவம் நான் பன்னேன்? ஏண்டா ஏன்? “ கண்களில் கண்ணீரும் கசியத் தொடங்கியது. கைகள் மட்டும் அடிப்பதை நிறுத்தவில்லை. சில நிமிடங்கள் பார்த்துவிட்டு தேவ் அவளை நிறுத்துவதற்காக அவளின் கைகள் இரண்டையும் பிடித்து அவள் தோளுடன் சேர்த்து அணைத்தான்.

“என்னோட தப்புதான். ஆனா எனக்கும் வேற வழியில்லை. என் பிரண்ட மேரேஜ் செய்துக்க விருப்பம் இல்லை. உன்னை நான் யூஸ் செய்ய வேண்டியதா போயிருச்சு.” வார்த்தைகளை தேவ்வும் விட்டான்.

உறுத்து விழித்த யாழரசி , “ஆனா நீ என்னையும் என் ஃபேம்லியும் ஹர்ட் பன்னிட்ட. இதுக்கு உன்னை நான் சும்மா விடமாட்டேன். “

“ம்ம்ம்ம்ம்ம் …. ஆனா நம்ம டீல் மாறப்போறது இல்லை. கடைசி வரைக்கும் நீ எங்கூடதான் இருக்கனும். உண்மையோட விலை அதான். அதனால் கோபபடறது எல்லாத்தையும் விட்டுட்டு டிரை டூ கெட் அலாங்க் வெல் வித் மீ.” தேவ் அலட்சியமாகச் சொன்னான்.

இதுவரை உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டிருந்த யாழரசி தெளிந்தாள். “இதை நீ செஞ்சதுக்கு உன்னை வருத்தப்பட வச்சே தீருவேன். “ அவன் கண்களைப் பார்த்து உறுதியாகக் கூறினாள்.

“அது சரி இப்ப என்ன ஹக் பன்னிட்டே செய்யப் போறியா? என்ன?” சிரித்தவாறே தேவ் கூறினான்.

உடனே இதுவரை அவன் கைகளில் இருந்தவள் அவனைத் தள்ளி விலக்கிவிட்டு பாத்ரூமிற்கு ஓடினாள். அவளைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டே இருந்தான் தேவ். முகத்தைக் கழுவிய பின் திரும்பி வந்தவளிடம்

“இன்னும் ரெண்டு நாளில் மதுரை போய்ட்டு சென்னை போறோம்.”

“நான் வர மாட்டேன். நீ எங்க வேணாலும் போய்க்கோ. நான் வொர்க்கு திரும்பப் போறேன். “

தேவ்வும் அவள் கோபம் தணிய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று மேலும் வற்புறுத்தவில்லை. அவள் கோபத்தை விடுவது மிகவும் கடினம் என்று அவன் இன்னும் அறியவில்லை. நிராகரிப்பு எப்படி இருக்கும் என்பதை தேவ் அறியப் போகிறான். அவள் கோபத்தை ஈகோவை அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுப்பவள் அல்ல என்பதையும் உணரவில்லை. தேவ் செய்த செயலின் விளைவுகளை அனுபவிக்கும் பொறுப்பு அவனுடையது.

தேவ்வுக்கு நிதானமும் பொறுமையும் அதிகம். வாழ்க்கையில் விளையாட்டில் எது வெல்லும் என்பது? சொல்லும் கருவி காலம் மட்டுமே.

யாழரசியின் நிச்சயத்திற்கு நான்கு நாட்கள் முன்பு:

தேவ் ஜவுளிக் கடையில் பார்த்த அந்தப் பெண்ணிற்காக வருந்தினாலும் அவன் போய் என்ன செய்ய முடியும். ‘அந்த பொண்ணைப் பார்த்தா வார்னிங்க் கொடுக்கலாம். ஆனால் ஸ்ட்ரேஞ்சர் போய் எப்படி இன்வால்வ் ஆகறது?’ என்று நினைத்தப்படி விட்டுவிட்டான். தனக்கும் , தன் குடும்பத்தினருக்கும் உடைகள் எடுத்துவிட்டு தன் வீட்டுக்குத் திரும்பிவிட்டான். வழக்கமான பணிகளுக்குத் திரும்பிவிட்டிருந்தான்.

அன்று புதிய மாவட்ட வனத்துறை அலுவலர் ஈரோடு டிவிஷனுக்கு பணிமாற்றம் அரசாங்கத்தால் செய்யப்பட்டார். அதே நாளில் தேவ்வின் வாட்ஸப்புக்கு ஒரு தகவல் வந்தது.

புதிய மாவட்ட வனத்துறை அலுவலரின் பெயரும் தகவலும் தேவ்வுக்கு வாட்ஸப்புக்கு அனுப்பப்பட்டிருந்தது.

“தேவ் தி இஸ் அறிவழகன் ஐ. எஃப். எஸ், நீயுலி அப்பாயிண்ட்டடு ஈரோடு டிவிசன். திஸ் இஸ் ஹிஸ் பிக். கோ அண்ட் மீட் ஹிம். சர்ப்ரைஸிங்க்லி ஹீஸ் நியர் டூ யூ.”

தேவ்வுக்கு ஆனந்த அதிர்ச்சிதான். உடனே அறிவழகனைத் தேடிச் சென்றான். ‘இவ்வளவு நாள் தேடியவங்க பக்கத்தில் நான் இருக்கேன். ‘ ஆர்வத்துடன் அவனை பணி முடிந்ததும் மாலை நேரம் தேடி அவனது வீட்டுக்கே சென்றான்.

அவன் எங்கிருக்கிறான் என்று தெரிந்த பிறகு வீட்டின் முகவரியைக் கண்டுபிடிப்பது ஒரு விஷயமே கிடையாது.

‘இனி யாழரசியைப் பார்த்து டைரியைக் கொடுப்பது ரொம்ப ஈசி’ என்று நினைத்தான். ஆனால் விஷயங்கள் கைமீறிப் போகும் என்று அவனுக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை.

தவறுவதும் , தவறாமல் நடப்பதும் வாழ்க்கையின் நியதி.

ஈரோட்டின் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் தங்கியிருந்தான் அறிவழகன். இரண்டாம் மாடியில் இருக்கும் அறிவின் பிளாட்டிற்குச் சென்றான். தேவ் மகிழ்ச்சியாக அறிவைத் தேடிச் சென்றான். ஆனால் திரும்பும் போது அது இருக்கப் போவதில்லை.

அவனது கதவுக்கு முன்னால் காலிங்க் பெல் அடித்தபடி நின்று கொண்டிருந்தாள் ஒரு பெண்.

“டேய் பிபி சீக்கிரம் வாடா. பை வெயிட்டா இருக்கு.”

தேவ் பிபி என்ற வார்த்தையைக் கேட்டதும் அதிர்ந்தான்.

‘யாழரசி!!!!!’ கதவின் அருகே சென்றான்.

அதே நேரம் தனக்கு பின்னாடி ஏதோ அசைவு இருப்பதை உணர்ந்த அந்தப்பெண்ணும் திரும்பினாள்.

இந்த முறை இருவரும் அதிர்ந்தனர்.

‘அட மிளகாய் பஜ்ஜி இங்க என்ன செய்யறாரு?’

“ஹலோ !! நீங்க எங்க இங்க?” எதிரே இருந்த யாழரசி கேட்டாள்.

“நீங்க ?”

“என் பிரண்ட் அறிவை எக்கேஜ்மெண்ட்க்கு கூப்பிடலானு வந்தேன். “

“உங்கள இங்க பார்ப்பேனு எதிர்ப்பார்க்கல. நாம இரண்டு வாரத்துக்குள்ள மூணு தடவை மீட் பன்னிட்டோம். “

“நானும் எதிர்பார்க்கவே இல்லை.”

அதற்குள் கதவைத் திறந்தான் அறிவு.

“யாழு கொஞ்சமாவது கத்தாம இருக்கியா? “ வெளியே வந்த அறிவு யாழுவின் அருகில் இருக்கும் ஆடவன் யாரென்று தெரியாமல் பார்த்தான். அவனாகவே யோசித்து

“யாழு உன்னோட வுட்பிய கூட்டிட்டு வரனு சொல்லவே இல்லை?”

“சாரி. அவன் தெரியாம சொல்லிட்டான். “ என்று தேவ்வைப் பார்த்துக் கூறிவிட்டு

“இடியட் இவரு பேரு கூட எனக்குத் தெரியாது. சும்மா இரு. “

அறிவும் தவறாக புரிதலை உணர்ந்தவன் “ சார். நீங்க யாரைப் பார்க்க வந்தீங்க?”

“ மிஸ்டர். அறிவழகனை பார்க்க வந்தேன்.”

“என்னையா? நீங்க யாரு?”

தன் விசிட்டிங் கார்டை எடுத்துத் தந்தான். அதைப் பார்த்ததும் அறிவு

“நைஸ் மீட்டிங்க் யூ சார்.”

“வெரி நைஸ் மீட்டிங்க் யூ அறிவழகன்.”

“இவங்க யாழரசி. டெபுட்டி கலெக்டர்.” அறிவு அவளை அறிமுகப்படுத்தினான்.

‘இலட்சியத்தை நிறைவேத்திட்ட யாழரசி.’ என்று மனதில் பாராட்டியவன் யாழரசியை நோக்கிக் கைநீட்டினான். “ யாழ்த்தேவன். ஐ. எப்.எஸ் .”

“ஓ…நீங்களுமா? நான் எதிர்பார்க்கவே இல்லை. “ புன்னகைத்தபடியே கை கொடுத்தாள். அவள் கண்களை உற்று நோக்கினான் தேவ்.

“நானும்தான். “ சிரித்தபடி சொன்னான்.

“சரி ரெண்டு பேரும் உள்ள வாங்க.”

யாழும் , தேவும் பிளாட்டை ஆராய்ந்தனர். டபுள் பெட் ரூம் , கிட்சன் , ஹால் உள்ள பிளாட். எங்கும் தூய்மையாக இருந்தது.

“வாங்க உட்காருங்க. “ என்று அமர வைத்தான்.

யாழரசியும் , தேவ் எதிர் எதிராக சோபாவில் அமர்ந்தனர்.

“இந்தாடா. புரூட்ஸ் எல்லாம் பிரிட்ஜில் வை.” தன் கையில் இருந்த பையைக் கொடுத்தான்.

“ஸார் என்ன சாப்படீறீங்க?”

“ஜஸ்ட் வாட்டர் மட்டும்.”

“உனக்கு யாழு “ என்று அறிவு கேட்கவும்

“பிபி சாக்லேட் எடுத்துட்டுவா.”

தலையசைத்தவாறே சென்றான்.

“நீங்க எந்த இயர் கிளியர் பன்னி சர்வீஸுக்கு வந்தீங்க.”

“2017”

“ஓ…ஓகே.”

“கேன் ஹேவ் யுவர் நம்பர்?”

“ஓகே..நாம ஒரே டிஸ்டிரிக்ட்ல இருக்கோம். என்னோட நம்பர்……….” தனது கைப்பேசி எண்ணைக் கொடுத்தாள் யாழரசி.

“யுவர் நம்பர் ? “ அவள் கேட்கவும் தேவ்வும் தன்னுடைய எண்ணைக் கொடுத்தான்.

அறிவு இவர்களுக்குள் நடக்கும் உரையாடலைக் கேட்டவாறே தண்ணீரையும் , சாக்லேட்டையும் எடுத்து வந்தான்.

தண்ணீரை மெதுவாகக் குடித்தான் தேவ்.

சாக்லேட்டைக் கையில் வாங்கிய யாழரசி அதைத் தனது கைப்பையில் திணித்தாள். அதன்பிறகு இரண்டு டிசைன் செய்யப்பட்ட பத்திரிக்கைகளை எடுத்தாள்.

“அறிவு இந்தா இன்விட்டேசன். நாலு நாள் கழிச்சு வந்துரு.” அறிவு பத்திரிக்கையை வாங்கிப் பார்க்க ஆரம்பித்தான்.

“யாழ்த்தேவன் சார் இந்தாங்க. நீங்களும் வந்துருங்க.” மெல்லிய புன்னகையுடன் கொடுத்தாள். “கோவில்லதான் நடக்கப் போகுது.”

‘அவ பத்திரிக்கையைக் கொடுக்கப் போகும் போதுதான் எனக்குப் புரிஞ்சது. இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தனும். அவ தப்பான ஒரு பேம்லிகிட்ட மாட்ட போறானு.’

“ஆரேஞ்ட் மேரஜா? இல்லை லவ் மேரேஜா?”

“ஆரேஞ்ட் மேரேஜ். “ குரல் கொஞ்சம் சலிப்பாக வந்தது போல் தேவ்வுக்குத் தோன்றியது .

“கன்கிராட்ஸ்.”

“தேங்க் யூ. சரி பிபி நான் கிளம்புறேன். டைம் ஆகிடுச்சு. பாய் சார்.”

தேவ்வும் தலையசைத்தான்.

யாழு கிளம்பியதைப் பார்த்தவுடன் “ சார் நீங்க எதுக்காக என்னைப் பார்க்க வந்தீங்கனு தெரிஞ்சுக்கலாமா? “

“ஒன்னும் இல்லை. நாளைக்கு பாரஸ்ட் ஆபிசர்ஸ் அன் ஆபிஷியலா ஒரு டின்னர்க்கு மீட் பன்ன போறாங்க. நம்ம டிவிஷன் மட்டும்தான். அதுக்குத்தான் இன்வைட் செய்யறேன். என் நம்பருக்கு ஜஸ்ட் மெசேஜ் செய்யுங்க. நான் லெக்கேஷன் செண்ட் பன்றேன். “

“ஓகே சார். “

சோபாவிலிருந்து எழுந்த தேவ் “ தென் ஐ வில் டேக் மை லீவ். சீ யூ.”

தேவ் அவசரமாக அறிவின் வீட்டை விட்டு வெளியேறினான்.

லிப்ட்டின் முன் நின்றுகொண்டிருந்தாள் யாழரசி. இன்னும் லிப்ட் வரவில்லை.

‘நல்ல வேளை . இன்னும் கிளம்பல. “

“யாழரசி “

தன் பெயரைக் கூப்பிட்ட சத்தம் கேட்டதும் திரும்பினாள் யாழரசி. தேவ்வை கூப்பிட்டதும் திரும்பிப்பார்த்தாள்.

“யெஸ் .”

“இந்த எங்கேஜ்மெண்ட்ட நிறுத்து. “

யாழரசி அதிர்ச்சி அடைந்தாள். எதிர்விளைவு தாமதமாக வந்தது.

“வாட்…ஆர் யூ கிட்டிங்க்? “

“நோ. சீரியஸா சொல்றேன்.”

“சி. உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீங்க சொல்றத நான் ஏன் கேட்கனும்? ஸ்ட்ரேஞ்சர் நீங்க என்ன செய்யனும் செய்யக் கூடாதுனு சொல்ல உரிமை இல்லை.”

“லிசன். நீ மேரஜ் செஞ்சுக்க போற ஆளு ஒரு சீட். அவன் பேம்லியே உன்னை பணத்துக்காகத் தான் கல்யாணம் செய்ய நினைக்கிறாங்க.”

“ஓ இது உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் யாருனே தெரியாது. என் பியான்சிய பார்த்ததுக் கூட கிடையாது. சி திஸ் இஸ் நாட் குட்.”

“லிசன் ..” ஜவுளிக் கடையில் நடந்ததைச் சொல்லி முடித்தான்.

கைகளைக் கட்டிக் கொண்டு கேட்டு முடித்தாள். லிப்ட் கிழிறங்கிக் கொண்டிருந்தது.

“ஓகே…என்னைப் பத்தி கோஷிப் செய்யறவங்க, அதே மாதிரி அவங்கள செய்ய வாய்ப்பு இருக்கு இல்லை.”

“யெஸ் . கரெக்ட். ஆனால் உன்னோட மாமியாரை நான் பார்த்தேன். அவங்களப் பார்த்தாலும் நல்லவங்களா தெரியல. சோ பீளிஸ் இதுல மாட்டிக்காதீங்க.”

ஒரு கையால் தலையைத் தடவிக் கொண்டாள் யாழரசி.

“ நான் என் பேம்லிய நம்புறேன். அதனால் இந்த வெட்டிங்க் நடக்கும். பாய்.”

‘ச்சே இவ்வளவு சொல்லியும் புரிஞ்சுக்க மாட்டிங்கறா? என்ன செய்யறது? என்ன செய்யறது?” தேவ் குழம்பிக் கொண்டிருந்தான்.

யாழரசிக்கு கோபம் தலைக்கு மேலே ஏறியிருந்தது.

‘இந்த லிப்ட் வேற . இவன் யாருனு என் வாழ்க்கையில் கருத்து சொல்ல வந்துட்டான்?’

லிப்ட் வந்து கதவு திறக்க ஆரம்பித்தது. யாழரசி லிப்டினுள் சென்றாள். கதவு பூட்டும் வேளையில் தேவ் கைவைக்க கதவு திறந்தது.

யாழரசி கோபத்துடன் தேவ்வைப் பார்த்தாள்.

“நௌ வாட்? “

புன்னகைத்த தேவ் “நீ உன்னோட எங்கேஜ்மெண்ட் டேட்டில் என்னை கல்யாணம் செய்துக்க போற.”

லிப்ட் குளோஸ் ஆகியது. “வாட்ட்ட்ட்ட்ட்ட? ஆர் யூ மேட்?” யாழரசியின் குரல் லிப்டினுள் எதிரொலித்தது.

“நீ உலகத்திற்கு தெரியாம சில ரகசியங்களை மறைக்கிறல. அந்த ரகசியங்கள் வெளிய வராமல் இருக்கனும். அதுக்கு நீ என்னைக் கல்யாணம் செய்யனும்.”

“என்ன ரகசியம்? “ யாழரசி தடுமாறினாள்.

“நீ டென்த் படிக்கும் போது?”

இதைச் சொன்னதும் ‘என்னைப் பத்தி எல்லா டீடெயிலும் தெரிஞ்சுருக்கு.’ என்று புரிந்து கொண்டாள்.

“நோ பிராபளம். அதுக்காக எல்லாம் உங்களைக் கல்யாணம் செய்ய முடியாது.”

“எஸ் இதை நீ சொல்வேனு எதிர்பார்த்தேன். மீனினியோட சீக்ரெட் வெளியில் வரது உனக்கு ஓகேவா?”

யாழரசியின் முகம் பயத்தில் வெளுத்தது. அவள் முகத்தைப் பார்த்த தேவ் “ சோ உனக்கு இரண்டு நாள் டைம். மூணாவது நாள் முடிவச் சொல்லு. நாலவது நாள் மேரஜ். கால் மீ.”

சிரித்தவாறு போனைக் காதில் வைப்பது போன்று சைகை செய்தபடி லிப்ட் கதவு திறந்தவுடன் வெளியேறினான் தேவ்.

யாழரசி இன்னும் லிப்டில் நின்று கொண்டிருந்தாள்.

அவள் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. யாரோ ஒருவன் இப்படி அமைதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் கலகம் மூட்டுவான். இதனால் பலரின் நிம்மதி கெடப் போகிறது என்றும் தெரியவில்லை.

மீனினியின் ரகசியம் இப்படி தனக்கெதிராக ஒரு நாள் பயன்படுத்தப்படும் என்று அவள் அந்த ரகசியத்தைத் தெரிந்து கொண்ட நாளில் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அதிர்ச்சியுடனே வீடு வந்து சேர்ந்தாள். நல்ல வேளை அவளுடைய பெற்றோர்களுடன் அவள் தங்கவில்லை. ஈரோட்டில் தனியாகத் தங்கியிருக்கிறாள். வீடு வந்து சேர்ந்தவள் அப்படியே மெத்தையில் போய் குப்புற விழுந்தாள்.

அன்றைய இரவு முழுவதும் இதிலிருந்து தப்பிக்க ஏதாவது ஒரு வழி இருக்கிறதா என்று யோசித்துக் கொண்டே இருந்தாள். விடியற்காலையில் உறக்கம் அவளை வீழ்த்தியிருந்தது.

அதிகாலை எட்டுமணிக்கு மேல் தீடிரென விழித்தாள். மீனினிதான் கனவில் வந்திருந்தாள். அவள் ரகசியம் வெளியில் தெரிந்துவிடுவது போன்ற கெட்ட கனவு அவளை

“மீனினி “ என்ற அலறலுடன் விழிக்க வைத்தது.

அன்றைக்கு ஒரு முக்கிய வேலை அவளுக்கு அலுவலகத்தில் இருந்தது. வேகமாக கிளம்பிச் சென்றாள். மனதில் தேவ் கூறிய வார்த்தைகள் ஓடிக் கொண்டிருந்தன.

கவனம் சிதறிக் கொண்டே இருந்தாலும் பணிகளை முடித்தாள். சக்கர நாற்காலியில் பின்புறம் சாய்ந்து பேனாவை மேவாயில் தட்டியபடி யோசித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அவளது செயலாளர் “ மேம் அடுத்த மாசம் போக வேண்டிய பங்க்சன் ஒன்னு இருக்கு . டைரில மார்க் பன்னட்டுமா?”

யாழரசியிடம் பதில் இல்லை.

“மேம்…” மீண்டும் அதே விஷயத்தைக் கேட்டார். டைரி என்ற வார்த்தை அவளை அசைத்துப் பார்த்தது.

“இப்ப என்ன சொன்னீங்க?” இவள் கேட்டதும் மீண்டும் அவர் விஷயத்தைக் கூறினார்.

“சாரி. மார்க் பன்னுங்க. நான் ஒரு பர்சனல் கால் பேசனும். “

அவளின் சொல்லுக்கு கட்டுப்பட்ட செயலாளர் வெளியேறிவிட்டார்.

தனது கைப்பேசியை எடுத்தவள் வேகமாக காண்டாக்டில் யாழ்த்தேவன் என்று டைப் செய்தாள். எண் தென்பட்டதும் அழைத்தாள்.

“ஹலோ . குட் மார்னிங்க். நீ …” மறுமுனையில் தேவ் பேசும் முன்பு இடைவெட்டியள் “டைரி எங்க தேவ்?”

“குட் ஷாக்கில் இருந்தாலும் கேட்ச் பன்னிட்ட. என் கிட்ட பத்திரமா இருக்கு. என்ன அந்த லாக்கைத் திறக்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். ஓரே நைட்டில் எல்லாத்தையும் படிச்சு முடிச்சுட்டேன். “ யாழரசிக்கு அவன் கூறுவதைக் கேட்கப் பொறுமை இல்லை.

“டைரி எங்க கிடைச்சது?”

“சம்பல் ரிவர். டென்சன் ஆகாத. டைரியோட இன்னும் சில ஆதாரங்கள் கலெக்ட் பன்னி வச்சுருக்கேன். அறிவழகனை பார்க்க வந்ததே உன்னை பத்தி விசாரிக்கத்தான். ஆனால் நீயே அங்க வந்துட்ட!!!!!!” உற்சாகத்துடன் அவன் பேச யாழரசி வெறுப்பில்

“ஸ்டாப் இட்.”

“ஹே சில். எப்படியும் சாப்பிட்டு இருக்க மாட்ட. சாப்பிட்டு அதுக்கு அப்புறம் என்னை எப்படி டீல் செய்யலானு யோசி. நீ நான் சொன்னதுக்கு ஓகே சொல்லலனா என்னால வேற விதமாவும் செய்ய முடியும்.”

“நீ இந்த மாதிரி செய்யறதுக்கான உண்மையான காரணம் என்ன? உனக்கு இதனால் என்ன இலாபம்? ஏன் ? “

“இப்பதான் நீ கரெக்டா கேட்கற. யெஸ். எனக்கு ஒரு பொண்ணொட நிச்சயம் செய்யப் போறாங்க. அவள எனக்குப் பிடிக்கல. ஆனால் வீட்டில் ரொம்ப ஃபோர்ஸ் செய்யறாங்க. அதனால் எனக்கு ஒரு ஸ்கேப்கோட் வேணும். நீ வீக்னெஸ் இருக்க ஸ்கேப்கோட். தட்ஸ் ஆல் . உனக்கு மேரேஜ் நடந்தா அது பாசிபிள் இல்லை.”

‘நோ இதில் ஏதோ மிஸ் ஆகுது. இன்னும் ஏதோ விஷயம் இருக்கு.’ யாழரசிக்கு உறுதியாகத் தோன்றியது.

அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

இரண்டு நாட்கள் கடந்தது. யாழரசி யாரிடமும் சென்று உதவி கேட்க முடியாத சூழல். ‘மீனினிக்கு கொடுத்த சத்தியம் முக்கியம். டைரி ஆத்தில் போனதால் யாருக்கும் கிடைக்காதுனு நினைச்சது என்னோட மிஸ்டேக். ஐ அம் பேயிங்க் பார் மை டூ மிஸ்டேக்ஸ்.’ பலவாறு யோசித்து

மூன்றாவது நாள் தன் சம்மதத்தைத் தெரிவித்திருந்தாள் யாழரசி. பிறகென்ன பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை நடத்திவிட்டான் தேவ்.
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -45

சென்னை.

அந்த ரோஜா நிற பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்தாள் யாழரசி. கண்கள் தோட்டத்தில் காற்றில் அசைந்தாடும் மரங்களை வெறித்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்திற்கு முன்புதான் அறிவு அழைத்திருந்தான்.

“யாழு எப்படி இருக்க?”

“நான் நல்லாருக்கேன்.”

“பொய் சொல்லாத. உன்னோட கம்பி கட்டற கதை உன் குடும்பம் நம்பலாம், ஊர் உலகம் எல்லாம் நம்பலாம். ஆனால் என்னால் நம்ப முடியாது. உனக்கு பேரே தெரியாதுனு சொன்ன ஆள அடுத்த நாலு நாளில் என்னோட லவ் ஆஃப் மை லைஃப் சொல்லிட்டு கல்யாணம் செய்யறத என்னால் நம்ப முடியாது.”

‘பிபிக்குத் தெரியும். அவன் கண்டுபிடிச்சுட்டான். இவனுக்கு தெரியும்னா மீனு, வெற்றி எல்லாரும் கண்டுபிடிக்க வாய்ப்புண்டு. ‘

‘’பிபி எனக்கு அவரை முன்னாடியே தெரியும். நாங்க பிரிஞ்சரதா இருந்தோம். ஆனால் … கடைசியில் இப்படி செய்ய வேண்டியதா போயிருச்சு.”

“சரி. உனக்கு எப்ப ஹெல்ஃப் வேணுமானாலும் கேளு.”

“ஓகே.”

அழைப்புத் துண்டிக்கப்பட்டது. யாழரசி சிந்தனையில் ஆழ்ந்தாள். ‘எல்லாரும் எங்கிட்ட நல்லாதான் நடந்துகிறாங்க. இவங்க வீட்டிலும் எந்தப் பிரச்சினையும் இல்லாம ஏத்துகிட்டாங்க. இவங்க இவ்வளவு பெரிய இடம்னு எனக்குத் தெரியாது. என்னை எதுக்கு டிராப் செய்யனும்? தேவ் லைஃப்ல நான் இது வரைக்கும் கிராஸ் செஞ்சதே இல்லை. வாட் இஸ் த ரீசன்? ‘ காதருகில் சத்தமிடும் கொசுவைப் போல் இந்தக் கேள்வி அவள் மனதில் ஓசையெழுப்பிக் கொண்டிருந்தது.

திருமணமாகி ஒரு மாதம் முடிந்திருந்தது. தனது உறவினர்கள் இருக்கும் போது மட்டும்தான் அவள் தேவ்விடம் பேசுவாள். ஈரோட்டில் இருக்கும் போது தேவ்விடம் அவள் மொழி மௌனமே. திருமணம் முடிந்து பின் மறுவீடு , விருந்து இந்த மாதிரி எந்த நிகழ்வுக்கும் அவள் செல்லவிரும்பவில்லை. வேலையைக் காரணமாகக் காட்டி அவள் மறுத்துவிட்டாள். தேவ்விடம் பேச வாட்ஸப் மட்டுமே பயன்படுத்துவாள். ஒரு மாதம் கழித்து தேவ்வின் அம்மா கேட்டுக் கொண்டதால் சென்னைக்கு தேவ்வுடன் வந்திருந்தாள்.

ஒரு மாதமாக அவள் மனதில் இருப்பது அவன் மட்டுமே. தன்னைத் திருமணம் செய்ய வேறு ஏதோ காரணம் இருப்பதாக நம்பினாள். அதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். தேவ் எந்த ஒரு இடத்திலும் யாழரசியை மோசமாக நடத்தவில்லை. தேவையான இடத்தில் உதவினான். அது அவள் குழப்பத்தை மீண்டும் அதிகரித்தது. சில நேரங்களில் அவன் எதற்கோ வருத்தப்படுவது போல் தோன்றும்.

யாழரசி அவனை வருத்தப்பட வைப்பேன் என்று சொல்லியிருந்தாள். அதற்காக பழிவாங்க எதுவும் முயற்சிக்கவில்லை. பெஸ்ட் ரிவெஞ்ச் இஸ் இக்னோரன்ஸ் என்பது போல் அவனை கண்டுகொள்ளவே இல்லை. ஓரே வீட்டில் இருந்தனர். சாப்பிட்டனர். தனித்தனி அறையில் உறங்கினர். தேவ்வும் அவளை டிஸ்டர்ப் செய்யவில்லை.

அவன் தன்னைத் திருமணம் செய்து கொண்ட உண்மையான காரணத்தை அறிந்து கொண்டால் அது தனக்குச் சாதகமாக இருக்கும் என்று நம்பினாள். சென்னை வரும் போது தேவ் தன்னைப் பற்றிய சில விஷயங்களைச் சொல்லிதான் கூட்டிவந்திருந்தான்.

இவளைப் பற்றி அவனுக்கு ஓரளவு தெரியும். அதனால் அவன் சாமாளித்துக் கொள்வான். அனைத்தையும் இவள் கேட்காதது போல் ஹெட்செட் போட்டாலும் கேட்டுக் கொண்டாள்.

மாலை தேவ்வின் வீட்டுக்கு வந்ததும் ஓய்வெடுக்கச் சொல்லி அவ்ளை தேவ்வின் ரூமுக்கு அனுப்பி வைத்திருந்தனர். தேவ் அவளை தன் அறையில் விட்ட பின்பு தன் நண்பர்களைப் பார்க்க வெளியில் செல்வதாகக் கூறிச் சென்றிருந்தான்.
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம்-46

மெரீனா கடற்கரை. மணலில் அமர்ந்திருந்தான் தேவ். காற்றுடன் போட்டி போட்ட அலைகள் கரைகளை வந்து மோதி தள்ளாத நிலையில் நுரை தள்ளிக் கொண்டிருந்தன. காற்று வெற்றிப் பெற்றதற்கு அடையாளமாக அலைக்கு முன் கரையைக் கடந்து இதமாக வீசிக் கொண்டிருந்தது. தேவ் கடற்காற்றின் சுகத்தை அனுபவிக்கும் மனநிலையில் இல்லை.

யாழரசியின் டைரியை படிக்க ஆரம்பித்தில் இருந்து மனதில் இருந்தவள் தற்போது தன் இல்லத்தரசியாக மாறிவிட்டிருந்தாள்.

அவன் எடுத்த முடிவு தவறுதானோ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

‘ அவ முகத்தில் உண்மையான சிரிப்பைப் பார்த்து ஒரு மன்த் இருக்கும். நான் அவளுக்கு இதச் செய்யனும் நினைக்கல. என்னோட சுட்சுவேசன் அப்படி. பிளாக்மெயில் பன்னி கல்யாணம் செய்வேனு நானும் நினைச்சுப் பார்க்கல. அவ எங்கிட்ட சண்டை போடுவா? டார்ச்சர் செய்வா? இப்படி எல்லாம் நான் எதிர்பார்த்தேன். ஆனால் எல்லாத்துக்கும் மேல் நான் ஒருத்தன் இருக்கேன் அப்படிங்கறது அக்நானேலேஜ் செய்யறதே இல்லை. ஏதோ ஒரு யூஸ்லெஸ் பொருள் இருக்கு. அப்படித்தான் அவளுக்கு நான். என்ன செய்யறது? உண்மையச் சொன்னாலும் அவ நம்பப் போறது இல்லை. இவள நான் எப்படிச் சமாளிக்கறது? ‘

அவன் மனம் கடல் அலைகளுக்குப் போட்டியாக ஆர்பரித்துக் கொண்டிருந்தது.

நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் இருட்டியதும் வீடு வந்து சேர்ந்தான். அவனது அம்மா ஹாலில் அமர்ந்திருந்தார்.

“அம்மா..யாழரசி எங்க?”

“டேய் நானும் இங்க இருக்கேன். வைஃப்போட அம்மாவையும் கொஞ்சம் பாருடா.” அவனைக் கேலி செய்தார்.

“மம்மியத்தான் 28 வருசமாப் பார்க்கிறேன். இனி வைஃப்பையும் பார்க்கனும். “

“போடா..போ. யாழரசி தலைவலினு சொன்னா. ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கா. “

“சாப்பிட்டாளா அம்மா?”

“இல்லைடா. சாப்பாடு எடுத்துட்டுப் போய்க் கொடு. “

தலையசைத்தான்..

“தேவ்..”

“என்னம்மா? “

“யாழரசி முகத்துல் சந்தோஷம் இருக்க மாதிரி தெரியலடா. என்னடா சண்டை போட்டீங்களா? போ ஃபுட் மேல எடுத்துட்டு போய் கொடுத்து சமாதானப்படுத்து. “

“அதெல்லாம் ஒன்னும் இல்லைமா. அவ வீட்டு ஆளுங்க சம்மதத்தோட கல்யாணம் செய்யலனு ஒரு வருத்தம். அவங்கள டிஸ்அப்பாயிண்ட்மெட் பன்னிட்ட கில்ட் அவ்வளவுதான். போகப் போக சரியாயிருவா. “

“ம்ம்ம். டைம் எடுக்கும். மேக் ஹெர் கம்பர்டபிள்.”

சிரித்தவாறே அவளுக்கு டைனிங்க் ஹாலில் சென்று சப்பாத்தி எடுத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றான்.

டீபாயின் மீது வைத்தவன் யாழரசியைத் தேடினான்.

‘மேடம் எங்க போனாங்க?’ தலைவலினு சொல்லியிருக்கா? ‘

கபோர்டில் தலைவலி மாத்திரையை எடுத்தவன். அவளைத் தேடினான். ‘பால்கனில தேடுவோம்.’

கதவைத் திறந்து பால்கனிக்குச் சென்றாள். அங்கு நாற்காலியில் கால்களை மடக்கியவாறு தலையணைப் பிடித்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள் யாழரசி.

‘பாரு குளிரில் எப்படி தூங்கிட்டு இருக்கா? ‘

“யாழரசி..யாழ்..”

அவள் எழுந்துகொள்ளவில்லை. ‘போயிட்டுப் போகுது. மேடம் இருக்க சைஸுக்கு நாம் ஈசியா உள்ள தூக்கிட்டு போயிடலாம். சாரி கூட சேஞ்ச் செய்யல.’

அவளைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றான். கட்டிலின் அருகில் நெருங்கையில் விழிப்பு வந்துவிட்டது.

‘இப்ப ஏன் மிதக்கற மாதிரியே இருக்கு.’ கண்களைத் திறந்து பார்த்தாள். தேவ் தன்னைத் தூக்கிக் கொண்டு நடப்பதை உணர்ந்தாள்.

உடனே அவன் கையில் இருந்து துள்ளிக் குதிக்க முயன்றாள்.

“ஓ முழிச்சிட்டியா… துள்ளாத மெத்தை இங்கதான் இருக்கு. “ தூக்கி தொப்பென்று அவளைக் கட்டிலில் போட்டான். உடனே எழுந்து அமர்ந்தாள் யாழரசி.

“நீ ஏன் என்னைத் தூக்கின?” கோபமாகக் கேட்டாள்.

“ஓகே ரிலாக்ஸ். நீ நல்லா தூங்கனும்தான் நான் தூக்கிட்டு வந்தேன். மத்தபடி எனக்கு வேற எந்த இண்டென்சனும் இல்லை.”

முகத்தைச் சுருக்கியவள் “ நான் அப்படி மீன் பன்னல. யுவர் மியர் பிரசன்ஸ் இட்ஸெல்ஃப் மேக்கிங்க் மீ ஆங்கரி அண்ட் சபகேட்டடு. அதனால்தான் என்னை நீ டச் பன்ன வேண்டாம்னு சொன்னேன். இதுக்கு மேல எனக்கு சொல்லப் பிடிக்கல.”

வார்த்தைகளில் விஷத்தைத் தடவி நேராக அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள். ஒரு நொடி தேவின் முகத்தில் வருத்தம் மின்னி மறைந்தது போல் அவளுக்குத் தோன்றியது.

“ஓ…அப்படியா? உனக்குத் தெரியுமா? நாம செய்யற விஷயங்களுக்கு ஒரு கான்சிகுவன்ஸ் இருக்கும். வோர்ட்ஸ் ஹேஸ் இட்ஸ் பிரைஸ்.”

புருவத்தைத் தூக்கிப் பார்த்தாள்.

“ஐ பெய்ட் மை பிரைஸ். ஆனால் கடைசி வரைக்கும் நீ எங்கிட்ட அந்த விலையைக் கொடுத்தாகனும்.”

“எப்படி நீ நான் இந்த உலகத்திலேயே இல்லாத மாதிரி இக்னோர் பன்னிட்டு இருக்கியே அத சொல்றியா? இப்ப பேசிட்டு இருக்க?” கோணல் புன்னகையுடன் கேட்டான்.

தன் தவற்றை உணர்ந்தவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளின் இந்த செயலில் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் தேவ். அடுத்து அவன் செய்த செயலினால் யாழரசி அவனைத் துரத்திக் கொண்டிருந்தாள்.

முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தவளின் கன்னத்தில் முத்தமிட்டிருந்தான். “யுவர் பிரைஸ். யூ நோ வாட் . நீ முகத்தைச் சுருக்கும் போது எலி மாதிரி கீயுட்டா இருக்க.”

யாழரசியின் காதில் புகை மட்டும் வரவில்லை. அருகில் கிடந்த தலையணையை எடுத்து அவன் முகத்தின் மீது வீசினான். தேவ் அதை தவிர்த்துவிட்டு சிரித்தான்.

“சிரிக்கிறியா?” யாழரசியில் மெத்தையில் இருந்து புடவையை கால்களில் படாமல் தூக்கிப் பிடித்தபடி குதித்தாள்.

தேவ் கண்களை விரித்தவாறே “ஓ காட் ..பிசாசு புடவையில் குதிக்குதே. ரன் தேவ்.” தேவ் கத்திக்கொண்டே கதவை நோக்கி ஓடினான்.

யாழரசி அவன் பின்னால் துரத்த ஆரம்பித்தாள்.

“டேய் நில்லுடா.. உனக்கு எவ்வளவு தைரியம்? “

‘சேரி கட்டுனாலும் எப்படி ஓடி வர்ரா!!!!! இன்னிக்கு சிக்குனா அவ்வளவுதான் தேவ். அவ வாயை வச்சுட்டு சும்மா இருந்திருந்தா நானும் வாயை வச்சுட்டு கம்ம்னு இருந்திருப்பேன். இப்படி ரன்னிங்க் செய்யத் தேவையில்லை. வெயிட். நான் ஏன் ஓடனும்.?’

கதவின் முன்னே சென்ற தேவ் நின்றான்.

பின்னாடியே ஓடி வந்த யாழரசியும் “மாட்டுனியா? “ மூச்சு வாங்கியபடி சிரித்தவாறே அவன் கைகளைப் பிடித்தாள்.

“ஹவ் டேர் யூ? “

“ஸ்ஸ்ஸ்…. எப்பவும் பிரச்சினை பேஸ் செய்யனும் நீதான் டைரியில் சொல்லியிருக்க. அதுமட்டுமில்லாமல் உன்னை யாரவது ஃபுலி செஞ்சா நீ என்ன செய்வ? ரெண்டு மடங்கு திருப்பிக் கொடுப்ப. சோ கொடுத்துட்டு போ?”

இப்போது என்ன செய்வாய் ? என்று அவன் பார்க்க யாழரசி இதுவரை செய்ததை நினைத்துப் பார்த்தாள்.

“யா..நீ சொல்றது சரிதான்? இப்ப நான் திருப்பிக் கொடுத்தே ஆகனும்.”

தேவின் கைகளைப் பிடித்து தன்னருகே இழுத்தாள். தேவ் அதிர்ச்சியில் கண்களை விரித்தவாறே “ஏய்ய்ய்..” என்று கூறி முடிக்கும் முன்னே அவன் கன்னங்களை நன்றாகக் கடித்துவிட்டாள்.

தேவ் வலியில் “ஆஆ…” அலறிவிட்டான்.

“பே பேக் எப்படி ? “ கைகளைக் கட்டியபடி ஒற்றைப் புருவத்தை காட்டினாள்.

ஒரு கையால் கன்னத்தைத் தேய்த்தபடி நின்றான் தேவ்.

“போ ஐஸ் பேக் வை. “ கூறிவிட்டுத் திரும்பிப் போக முயன்றாள். தீடிரென்று தன் ஒரு கையால் பற்றப்பட்டு பின்பக்கமாக இழுக்கப்பட்டாள். தேவ் தான் தன்பக்கமாக இழுத்திருந்தான். இவள் தப்பிக்கும் முன் இடையைச் சுற்றி வளைத்துப் பிடித்திருந்தான். அவள் இதழில் முத்திரை ஒன்றும் வைத்திருந்தான்.

நொடிகளில் நடந்து முடிந்திருந்த நிகழ்வுகளினால் யாழரசி எதிர்விளைவு கொடுக்க முடியாமல் நின்றிருந்தாள்.

“நீ என்ன செஞ்சாலும் என்னோட பதில் இப்படித்தான் இருக்கும். நான் கன்னத்தில்..மிஸ்பிளேஸ் ஆகி.” சொல்லவந்ததை பாதியில் நிறுத்திவிட்டு கதவைத் திறந்து தேவ் வெளியே சென்றான்.
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -47

தனது அறையை விட்டு வெளியே வந்த தேவ் தோட்டத்தில் அமர்ந்தான். வெண்ணிலவின் கீற்றொளி மரங்களின் நடுவில் கசிந்து கொண்டிருந்தது.

‘என்னடா தேவ் செஞ்சு வச்சுருக்க? ‘ கன்னத்தை நீவிக் கொண்டான். ‘எப்படி கடிச்சுருக்கா ? ஓகாட். இன்னிக்குதான் இவ்வளவு புரோவோக் ஆகிப் பாக்குறேன். சிரிச்சதையும் பார்க்குறேன். இட்ஸ் லைக் டெவில் ஈஸ் பேக். அவகிட்ட விளையாடறது ரொம்ப நேச்சுரலா இருக்கு. பீச்ல இருக்கறப்ப இருந்த கவலை இப்ப இல்லை.’

தேவ் பலவற்றை அலசிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதே நேரம் யாழரசி மெத்தையில் புரண்டு கொண்டிருந்தாள். ‘ நான் எப்படி என்னோட கன்ட்ரோலை இழந்து கடிச்சு வைக்கிற அளவுக்குப் போனேன். வாட் ஈஸ் ஹேப்பனிங்க் டூ மி? ரொம்ப ஸ்ட்ரெஸில் எனக்கு ரிப்ரஷன் வந்திருச்சோ.( சிக்மெண்ட் பிராய்டின் டிபென்ஸ் மெக்கானிசம்.) குழந்தைப் பருவத்து பிகேவியர் வெளியில் வருதோ? என்னோட எக்ஸ்பியான்சி பக்கத்தில் வந்தாவே எனக்கு அன்கம்பர்டபிளா இருக்கும். ஆனா…….. இல்லை….இல்லை…’ இரு கைகளாலும் தலையைப் பிடித்தப்படி எழுந்து அமர்ந்தாள்.

அப்போதுதான் அவள் கண்களில் டிபாயில் இருந்த மூடிவைத்த தட்டு பட்டது. எழுந்து சென்று அதைத் திறந்து பார்த்தாள். ‘சாப்பாடு..இங்க. தேவ் கொண்டுவந்தானா? ‘ அருகில் தலைவலி மாத்திரைப் பட்டையும் கிடந்தது.

‘இதுவா…எனக்குத் தலைவலினு அத்தைகிட்ட சொன்னேன். தேவ் மட்டும்தான் இந்த ரூமுக்கு வந்தான். சாப்பாடு அவன் தான் கொண்டு வந்துருக்கனும். ஸ்கேப்கோட் மேல இவ்வளவு அக்கறை எதுக்கு? பலிகடாவை நல்லா பார்த்துக்கிற மாதிரியோ?’

இப்படி தாறுமாறாக யோசித்த யாழரசிக்கு பசி எடுத்தது.

‘சாப்பிடு யாழு. அப்பதான் பிரைன் பங்க்சன் ஆகும். அவனோட ரியல் மோட்டிவ கண்டுபிடிச்சே ஆகனும். பழைய ஃபார்முக்கு வந்துரு. இன்னிலிருந்து போர் ஸ்டார்ட் ஆகுது.’

சாப்பிட்டு முடித்தவள் தனது கைப்பேசியை எடுத்தவள் யாருக்கோ வாட்ஸ்ப் அனுப்பினாள்.

‘பேக் டூ ஃபார்ம் யாழ். இப்படி ஓவர் பில்டப் டையலாக் மனசுக்குள்ள பேசறது விட்டுட்டு போய் தூங்குவோம். ‘

நித்திரை லோகத்தில் குதித்தாள் யாழரசி. தேவ் உறக்கமின்றி தோட்டத்தில் உலாவிவிட்டு பேய் மாதிரி தனது அறைக்குள் வந்தான். அறை கும்மிருட்டாக இருந்தது. பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை எடுத்து டார்ச் ஆன் செய்தான்.

யாழரசி ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். ‘ மேடம் தூங்கறத பாரேன். இங்க நான் தூக்கம் இல்லாம அலைஞ்சுட்டு இருக்கேன். இப்ப நான் எங்க தூங்க?’ என்ற யோசனையி;

அடுத்தநாள் சூரியனவன் தன் காதலைக் கரம் நீட்டி பூமியிடம் கூறிக் கொண்டிருக்கும் காலைவேளை. தேவ் தனது கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தான்.

தீடிரென ஏதோ தொப்பென்று விழுந்த சத்தம். தேவ் அலறி அடித்துக் கொண்டு எழுந்தான். பார்த்தால் மூடியெல்லாம் கோரமாகக் கலைந்து முகத்தை மூடியவாறு கட்டிலின் மறுபக்கத்தின் கீழே இருந்து தலைமட்டும் தெரிந்தது.

தேவ் “ஆஆஆஆஆஆஆஆஅ……பேய்ய்ய்…”

இவன் அலறிய அலறல் கேட்டு அந்த உருவம் மெதுவாக தலைமூடியை விலக்கி முகத்தைக் காட்டியபடி இடுப்பைப் பிடித்துக் கொண்டே எழுந்தது.

“ஏண்டா கத்தற? நான் தான்..ஆ..” தூக்க கலக்கத்தில் ஒலித்தது.

‘ஓ நம்ம வொய்ஃபிதான். ‘ தெரிந்த பின்னும்

“அய்யோ நிஜமாவே பேய்.” தேவ் சிரித்தபடி கூறினான்.

அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் அவள் இல்லை. இடுப்பைப் பிடித்தவாறு மெத்தையில் அமர்ந்தாள். பிறகு கீழே கிடந்த பெட்சீட்டை எடுத்து மீண்டும் போர்த்தி தூங்க ஆரம்பித்தாள்.

எட்டு மணிக்கு மேல் எழுந்தவள் குளித்துவிட்டு கீழே வந்தாள். அவளுடைய மாமியார் காயத்ரி தேவி சோஃபாவில் அமர்ந்து ஏதோ பேப்பரைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“குட் மார்னிங்க் அத்தை. தலைவலினால நல்லாத் தூங்கிட்டேன். “

“குட் மார்னிங்க் அரசி. இப்ப ஓகேவா?”

“ஃபைன் அத்தை. “

“நாம இதுவரைக்கும் அதிகமாக பழகறதுக்கு சுட்சுவேசன் அமையல. அதனால் இன்னிக்கு நானும் லீவ். நாம இரண்டு பேரும் சாப்பிட்டு ஷாப்பிங்க் போறோம். ஊரை சுத்திப் பார்க்கப் போறோம்.”

“அத்தை?” யாழரசி கேள்வியுடன் பார்த்தாள்.

“யாழரசி எனக்கு வயசாகிடுச்சு. அதனால் ஓல்ட் ஸ்கூல் கிடையாது. உன்னோட அத்தை டீவி சீரியல் பார்த்து மருமகளை எப்படி கொடுமைப் படுத்தறத ரசிக்கிற சேடிஸ்ட் இல்லை. ஏன் இந்த சொசைட்டியில் பெண்களை பெண்கள் கொடுமை படுத்தறமாதிரி இமேஜ் கிரியேட் செஞ்சாங்கனு தெரியல. மே பி பெண்களுக்குள்ளேயே பகையைக் கிரியேட் செஞ்சா அவங்க முன்னேற முயற்சிக்க மாட்டாங்க. ஒருத்தரை ஒருத்தர் டெஸ்டிராய் செய்வாங்க. கண்ணாடி பாட்டிலுக்குள் விழுந்த தவளை இரண்டும் ஒருத்தரை ஒருத்தர் தடுத்து கடைசியில் செத்துப் போகும் அந்த மாதிரி பேட்ரியாக்கி செஞ்ச வேலைகளில் இதுவும் ஒன்னு.”

“அத்தை இனிமேல் நாம இரண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸ். நீங்க நல்ல ஒரு பர்சன்னு தெரியும். ஆனால் இவ்வளவு ஓபன் மைண்டட இருப்பீங்கனு தெரியல.”

“உன்னைப் பத்தி என் கிட்ட தேவ் நிறைய சொல்லியிருக்கான். நீ ரொம்ப துரு துரு யாழரசன மாதிரி…” பாதியுடன் நிறுத்திவிட்டார்.

‘என்ன பாதியோட ஸ்டாப் செஞ்சுட்டாங்க? யாழரசியை யாழரசனு வாய் தவறி சொல்லிட்டாங்க போல.’

“சரிங்க அத்தை. சாப்பிடப் போகலாம் வாங்க. தேவ் வெளியில் சாப்பிடறேனு சொல்லிட்டார். “

யாழரசிக்கு தேவ்வின் அம்மாவை மிகவும் பிடித்துவிட்டது. இருவரும் இண்ஸ்டண்ட் பாண்ட் ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.

காரில் போகும் போது அரட்டை அடித்துக் கொண்டே சென்றனர்.

“உனக்குத் தெரியுமா? உங்க மாமா என்னோட ரிலேட்டிவ்தான். ஆனா லவ் மேரேஜ். எங்கிட்ட லவ் சொல்றதுக்கே இரண்டு வருஷம் பன்னிட்டாரு. இவர் இப்ப சொல்வாரு அப்ப சொல்வாருனு நான் காத்திருந்து ஒரு வழியாகிட்டேன். தேவ் அவங்க அப்பா மாதிரி . ஆனா உன்னை இப்படி சடனா மேரேஜ் செய்வானு நினைச்சே பார்க்கல. உன்னைப் பத்தி சொல்லியிருக்கான். நான் தான் உன்னை மிஸ் பன்னாம புரப்போஸ் செய்யச் சொன்னேன். கல்யாணத்துக்கு முன்னாடி நாள் கூப்பிட்டு ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப் போறேனு சொன்னான். எனக்கும் அவருக்கும் ஷாக். ஆனா தேவ் எதுக்குமே அவசரப் பட மாட்டான். சோ ரீசன் இருக்கும்னு தோணுச்சு. அவசர அவசரமா கிளம்பி ஈரோடு வந்து உங்க மேரேஜ் கடைசி நேரத்தில் பார்க்க முடிஞ்சது. “

யாழரசிக்கு சங்கடமாக போய்விட்டது.

“அத்தை உங்களுக்கு என் மேல வருத்தம் இல்லையா?”

“யாருக்கு இல்லாம இருக்கும்? அதான் ரிசப்ஷன் கிராண்டா செஞ்சாச்சு. அதுமட்டுமில்லாம கல்யாணத்தை லட்ச லட்சமா கொட்டி செலவு செஞ்சுவச்சா பலர் ஒரு வருஷத்துக்குள்ள பிரிஞ்சறாங்க. கல்யாணம் எப்படி நடந்தா என்ன? கடைசி வரைக்கும் நிலைச்சு நின்னா போதும்.”

யாழரசியின் கண்கள் லேசாக கசிந்திருந்தன.

“அத்தை உங்கிட்ட யாரவது சொல்லிருக்காங்களா? “

“என்னமா?”

“ நீங்க ரொம்ப அமேசிங்க் அண்ட் கிரேட் பர்சன்.”

யாழரசியின் தோளில் தட்டிய அவர் “தேங்க்ஸ். வெட்டிங்க் டே அன்னிக்கு நீ ரொம்ப டென்சனா இருந்த. நான் உன்னை ரொம்ப சின்ன பொண்ணுனு நினைச்சுட்டேன் . அப்புறம் தான் தெரிஞ்சுகிட்டேன். “

“உங்க பையன் ஹைட் அப்படி. அதனால் தான் குட்டியா தெரிஞ்சுருப்பேன்.”

“இருக்கலாம்..”

“மாமா எப்ப வருவார்? “

“அவரு நீங்க வர்ரப்ப இங்க இருக்கனும் ரொம்ப ஆசைப்பட்டார். ஆனா அர்ஜெண்டா நார்த்க்கு போக வேண்டியதாயிடுச்சு. எல்லாரும் கவர்மெண்ட் சர்வீஸில் இருந்தா இதுதான் பிரச்சினை. நாம எல்லாரும் ஒன்னா மீட் செய்யறது சிரமம் ஆகிடும்.”

“யெஸ் அத்தை. “

மருமகளும் மாமியாரும் பேசிக் கொண்டே தி நகரில் ஷாப்பிங்கைத் தொடங்கினர். மதியம் தேவ்வும் இவர்கள் இருக்கும் இடம் தேடி வந்துவிட்டான். அப்போது நகைக்கடையில் இருந்தனர்.

காயத்ரி அம்மாளும் யாழரசியும் நகைகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். யாழரசி ஏதோ ஒரு ஆரத்தை எடுத்து தேவ்வின் அம்மாவுக்கு வைத்துப் பார்த்தாள்.

“அத்தை இது உங்களுக்கு நல்லாயிருக்கும். “

“உன் மாமனார் இதை நான் போடற பார்த்தா கண்டிப்பா கிண்டல் அடிப்பார். உனக்கு எடுக்கலாம். “ அவர் சிரித்துக் கொண்டே கூறவும் யாழரசியும் சிரித்துவிட்டாள். நகைகளை ஆராய்ந்தவர் பூ டிசைன் போட்ட ஒரு நெக்லஸை எடுத்தார்.

“இது உனக்கு நல்லாயிருக்கும் .” அதைக் அவள் கழுத்தில் வைத்துப் பார்த்தார்.

இவர்களை சற்று தூரத்தில் இருந்து பார்த்த தேவ்வும் புன்னகையுடன் வந்தான். காயத்ரியும் , யாழரசியும் திரும்பிப் பார்த்தனர்.

“மாம்…”

“தேவ் வாடா..”

யாழரசியின் முகம் தேவைப் பார்த்ததும் மாறியது. தேவ்வும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு சிரித்தவள் “ஹாய்.. பிரன்ட்ஸ் எல்லாம் பார்த்தாச்சா? “

“எஸ் மேடம். மாம் , யாழ் உங்க இரண்டு பேருக்கும் நான் பிரேசிலெட் வாங்கலானு இருக்கேன். “

“எனக்கு வேண்டாம் . யாழுக்கு மட்டும் வாங்கிக் கொடு.”

“ஓகே மாம். “

யாழரசியின் வலது கை மணிக்கட்டைப் பிடித்தான். மின்சாரம் பாய்ந்தது போல் தேவ்வைப் பார்த்தாள். அவளின் சிறிய கை அவனது கைகளுக்குள் புதைந்து போயிருந்தது.

இரு இதயங்களும் அளவுக்கு அதிகமாக துடிக்க ஆரம்பித்திருந்தன. அவள் நாற்காலியில் அமர்ந்திருந்தாள். தேவ் நின்று கொண்டிருந்தான். நான்கு விழிகளும் சாய்வுக் கோணத்தில் சங்கமித்து உணர்வுப் பிராவாகம் பொங்கிக் கொண்டிருந்தது.

யாழரசியின் மணிக்கட்டைப் பிடித்து இருந்ததால் அவளின் நாடித்துடிப்பை தேவ் உணர்ந்தான்.

‘ஏன் பல்ஸ் ரைஸ் ஆகுது?’ தேவ் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தான்.

மயக்கும் மனதில் மாய வலையிலிருந்து இருவரும் நகைக் கடைப் பணியாளரின் “இந்த மாதிரி டிசைன்ஸ் பார்க்கலாமா? சார்” என்பதில் வெளிவந்தனர்.

பிறகு இருவரும் பிரேசிலெட்டை சேர்ந்தே செலக்ட் செய்தனர். தன்னுடைய மாமியாருக்கு தான் எடுத்த நகையை தனியாக பில் போட்டு அவருக்கு கிப்டாகப் பரிசளித்தாள். முதலில் மறுத்த காயத்ரியும் வாங்கிக் கொண்டனர். அவரும் அவளுக்கு சில நகைகளை வாங்கிப் பரிசளித்தார்.

இவர்கள் மூவரும் நகைக்கடையை விட்டு வெளியே வருகையில் பால் நிறத்தில் மாடல் போன்ற உயரத்தில் ஜீன்ஸ் , டாப் அணிந்து கூலருடன் உள்ளே நுழையப் போனாள் அந்த அழகி.

தங்களுக்கு எதிரில் நிற்பவர்களைப் பார்த்தவுடன் அவளும் திகைத்து நின்றுவிட்டாள்.

தேவ்வின் உதடுகள் “சஸ்மிதா.” என்று முனுமுனுத்தன.

எதிரில் உள்ள மூவரையும் அளவெடுத்தாள் அவள்.

“தேவ் , ஆண்ட்டி.”

காயத்ரி தேவி “ சஸ்மிதா..நீ எப்ப திரும்பி வந்த?”

தேவ்வின் தன்னை மணக்க மறுத்ததால் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டு சிலநாட்களுக்கு முன் திரும்பி இருந்தாள் சஸ்மிதா. திருமணத் தகவலும் வர அவள் மூவ் ஆன் ஆக முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

‘ஸம்திங்க் ஏதோ வித்தியாசமா இருக்கே. எக்ஸ்பிரஸ்சன் சரியில்லை. யாரு இந்த பால்கோவா? ‘ யாழரசி அந்த சூழ்நிலையை நுணுக்கமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

“டிரையிங்க் டூ பி பைன் ஆண்ட்டி. சி யூ லேட்டர் . “

என்று கூறிவிட்டு நகர்ந்துவிட்டாள் அவள்.

“மாம். நீங்களும் யாழரசியும் வீட்டுக்கு போங்க. எனக்கு ஒரு வேலை இருக்கு முடிச்சுட்டு வந்தறேன். “

யாழரசி முந்திக் கொண்டு “ஓகே கேரி ஆன். ஆண்ட்டி வாங்க டயர்டா இருக்கு. வீட்டுக்குப் போகலாம். “ என்று இருவரிடமும் பேசினாள்.

“சரி தேவ். “

தேவ் சஸ்மிதாவின் பின்னாடி செல்ல ஆரம்பித்தாள். யாழரசி தன் மாமியாரின் கை பிடித்தபடி அவனுக்கு எதிரான திசையில் நடக்க ஆரம்பித்தாள்.

யாழரசி அன்றைய பொழுதை தன் மாமியாருடன் பல கதைகள் பேசி ஓட்டியிருந்தாள். இரவு உணவை உண்டவள் வாட்ஸ்ப்பில் மீனினியுடன் உரையாட ஆரம்பித்தாள் . அவர்கள் இருவரும் பேச ஆரம்பித்து முடிப்பதற்குள் ஒரு முழுத்திரைப்படமே பார்த்துவிடலாம்.

வாட்ஸப்பில் மீனினியின் ஸ்டேட்டஸ் ஒன்றைப் பார்த்தாள்.

“ HATE IS A PASSION THAT IS OF EQUAL INTEREST TO LOVE.”

இதைப் பற்றி உரையாட ஆரம்பித்தாள்.

“தீவிரமாக ஒருத்தர வெறுக்கறதுக்கு எப்படி ஒரு டெபனிசன் மீனு.”

“வெறுப்பும் அன்பும் மனிதர்களோட அதிகம் பாதிக்கும் உணர்வுகள் அக்கா.”

“அதுவும் கரெக்ட்தான்.”

“ அதே மாதிரி வெறுப்புக்கும் காதலுக்கும் ஒரு மெல்லிய கோடுதான் இருக்கு அக்கா.”

“அப்படியா? ஐ டோண்ட் அக்ரி மீனு.”

“அட போக்கா. தம்பி அழறான் நான் போய் பாக்கிறேன் . “ என்று ஆஃப்லைன் போய்விட்டாள்.

அந்த உரையாடலை யோசித்துவிட்டு தூங்கிவிட்டாள். தேவ் இரவு மிகவும் தாமதமாகத்தான் வீடு திரும்பினான்.
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -48

யாழரசி இன்னும் தன் பிறந்த வீட்டுக்குச் செல்லவில்லை. அதிக வேலை போன்று ஏதோ ஏதோ காரணங்களைக் காட்டி அவள் மறுத்துவிட்டாள். திருமண நேரத்தில் கோபத்தில் அவள் வீட்டுப் பெண்மணிகள் அவளைக் கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். ஆனால் எதுவும் சரியில்லாத சூழ்நிலையில் சிக்கினால் நிச்சயம் அவள் முகத்தைப் பார்த்து சந்தேகிப்பர்.

இரண்டு நாட்கள் சென்னையிலிருந்து வீடு திரும்பிவிட்டிருந்தனர். அந்தப் பெண் சஸ்மிதா யாழரசியின் மனதில் உறுத்தலை ஏற்படுத்திவிட்டிருந்தாள். தேவ்வின் விவரங்கள் பற்றி சேகரிக்க ஒருவரிடம் ஓப்படைத்திருந்தாள். கொக்கு மீனுக்கு காத்திருப்பது போல் அந்த ரிப்போர்ட்டிற்கு காத்திருக்க ஆரம்பித்தாள்.

‘நான் இத ஒரு மாசத்துக்கு முன்னாடியே செஞ்சுருக்கனும். வெறுப்பில் எதையும் யோசிக்கத் தோணலை. அவங்கிட்ட இருந்து என் வீட்டில் இருந்து எப்படி எஸ்கேப் ஆகறது என்னோட ஜாப்பில் ஓவர் கான்சரெட் பன்னிட்டேன். இதுக்கு மேல் வீட்டில் அதிக நேரம் இருக்கப் போறேன். என்னோட சோ கால்ட் ஹஸ்பண்ட் பத்தி ஆப்சர்வ் செய்யப் போறேன். ‘ மதிய உணவு இடைவேளையின் போது யாழரசி ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தாள்.

தேவ் அவர்கள் இருவரும் தனியாக இருக்கும் போது முடிந்தஅளவு இடைவெளியை கடைபிடித்தான். அன்று அப்படி நடந்து கொண்டது அத்துமீறலோ என்று அவனை வருத்திக் கொண்டிருந்தது. யாழரசியின் டைரியை படித்ததால் ஓரளவுக்கு அவளைப் பற்றி யூகிக்க முடிந்தது. தன்னுடைய இமேஜ் அவளிடம் ஏற்கனவே பியாண்ட் ரிப்பேர் என்று தெரியும். அதில் இது வேறா என்று நொந்து கொண்டிருந்தான்.

சென்னையில் இருந்து திரும்பி வந்திருந்த ஒரு வாரத்தில் யாழரசியின் நடத்தையில் ஒரு மாற்றம் தெரிந்தது. கடந்த ஒரு மாத காலமாக அவன் இருக்குமிடத்திற்கு அவள் வரக் கூட மாட்டாள். அவனை வீட்டிற்குள் எந்த அளவு தவிர்க்க முடியுமோ தவிர்த்தவள் இப்போது தான் இருக்குமிடத்திற்கு மெதுமெதுவாக வர ஆரம்பித்திருந்தாள்.

தேவ் ‘என்ன பிளான் செஞ்சுருக்கா? ‘ என்ற ரீதியில் யோசிக்க ஆரம்பித்தான் . யாழரசி மிகவும் குறைந்த அளவில் தேவ்வுடன் பேசவும் ஆரம்பித்திருந்தாள்.

ஒரு வாரம் கடந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை வெற்றிவேள் அறிவுடன் யாழரசியும் தேவ்வையும் பார்க்க வந்திருந்தான்.

இருவரையும் நன்றாக உபசரித்த யாழரசிக்குத் முன்னேரே தெரியும் வெற்றியின் திருமணச் செய்திதான் அது. இதுவரை இழுபறியாகப் இருந்த அவனது காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடக்க இருக்கிறது. அதற்கு பத்திரிக்கை வைக்க வந்திருந்தான். தேவ் மற்றும் யாழரசியின் வாழ்க்கையை மாற்றப் போகும் திருமணத்திற்கு அவர்கள் இருவருமே தயாராகினர்.
 
Status
Not open for further replies.

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom