Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL முகவரியற்றவை - Tamil Novel

Status
Not open for further replies.

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -29

பொறாமை

என்று ஆரம்பித்திருந்தாள் யாழரசி

இந்த விஷயத்திற்கு நான் எப்படி ஒத்துக் கொண்டேன் என்று எனக்குமே இன்னும் தெரியவில்லை. இந்த மாதிரி நான் நடந்து கொண்டதில்லை. அதுவும் பார்த்து சில நாட்களே ஆன வெற்றிக்காக சம்மதித்தேன்.

கொஞ்சம் பழைய டிரிக் தான். ஆனால் வொர்க் அவுட் ஆகும் ஒன்று. ஷாலினி வெற்றிக்கு ஓகேவும் சொல்லவில்லை. நோவும் சொல்லவில்லை. உண்மையாக அவள் மனதில் என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் , வெற்றியும் தன்னால் மூவ் ஆன் ஆக முடியும் என்பதைக் காட்டுவதற்காக இதைச் செய்ய நானும் சம்மதித்தேன். வேற என்ன ? வேற ஒரு பொண்ணு கூட வெளியில் அவுட்டிங்க் போறதுதான். அந்த பொண்ணு நான் தான்.

‘ஐ எக்ஸ்பெக்ட்டு இட்.’ தேவ் முனுமுனுத்தான்.

முதலில் டிரஸ் செலக்சன். ஓரே மாதிரி டிரஸ் இரண்டு பேரும் போட வேண்டும். எங்க இரண்டு பேரிடமும் ஓரே மாதிரி நிறத்தில் டிரஸ் அதிகமாக இல்லை. ஒரு கருநீலம், கோல்டன் கலர் கலந்த டிரஸ் இருந்தது. அதற்கு மேட்சாக வெற்றி சாண்டல் கலர் சர்ட் வைத்து மேட்ச் செய்து கொண்டான். இதுக்கு வாட்ஸ் அப்பில் அரை மணி நேரம் டிஸ்கசன் வேற செஞ்சோம். நான் டிரஸ் எடுக்கவே பத்து நிமிஷம்தான் ஆகும். இரண்டாவது இடம் . சிம்பிளா பக்கத்தில் ஒரு குல்ஃபி ஷாப் இருந்தது. அங்கே செல்லலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

எங்க கூட இன்னொரு பையனும் வருவான். வெற்றியோட பிரண்ட் ராகுல். மீனினி வயதுதான். ராகுல் மலையாளி. தம்பி என்பதால் அனியன் என்று கூப்பிடுவேன். ராகுலை எங்களுடன் இருக்க அழைத்து வருவதற்குக் காரணம் நான் கம்பர்டபிளா இருக்கனும் . அதனால் வெற்றி ராகுலையும் வரச் சொன்னது.

குல்ஃபி சாப்பிட்ட பின் போட்டோ எடுப்போம். முன்னாடியே ஷாலினி பிரண்ட் நம்பர் வாங்கிட்டேன். கேண்டீனில் வைத்து ஒரு தடவை ஷாலினி மற்றும் அவளது தோழியிடம் அறிமுகமாகி போன் நம்பர் வாங்கிட்டேன்.

அப்புறம் என்ன மூணு பேரும் குல்ஃபி சாப்பிட்டு செல்ஃபி எடுத்தோம். அதை வாட்ஸ்ப் மற்றும் இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் போட்டாச்சு. என்னோட குரூப் மெம்பர்ஸ் பார்த்து ஷாக்காகிட்டாங்க. நான் தான் பசங்க கூட பேசி அவங்க பார்த்ததே இல்லை. ஆனால் என்னோட இன்ஸ்டாவில் நான் ஃபேம்லி , பிரண்ட்ஸ் போட்டோ போடுவது வழக்கம் என்பதால் ரொம்பவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கூட ராகுலும் இருப்பதால் பிரச்சினை இல்லை.

இவ்வளவு ரிஸ்க் எடுத்தோம் இல்லை. அதுக்கு ரியாக்சன் எதிர்பார்த்தோம். நாங்க வெளியில் போனத எப்படியோ தெரிஞ்சுகிட்ட ஷாலினி என்னிடம் கொஞ்சம் நன்றாகப் பழக ஆரம்பித்தாள்.

வெற்றியோட காதல் ரொம்பவும் ஆழமானது. அவன் சொன்ன ஒரு விஷயம் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. ஒரு படி மேலே போய்விட்டான் . ‘அவ என் கூட இல்லாட்டியும் பரவாயில்லை. அவளுக்கு யூபிஎஸ்சி பாஸ் பன்னறது ரொம்ப முக்கியம். அது அவளோட கனவு. அவளோட பியூட்சர் ஹஸ்பண்ட் அதுக்கு சப்போர்ட் செய்வாரானு தெரியல. அவளோட கனவு எப்படியாவது நிறைவேறனும். அதுதான் எனக்கு கவலை.’ இப்படி என்னிடம் ஒருநாள் கூறினான்.

அன் கண்டிஷனல் லவ்வர் அவன். பதிலுக்கு அவனுக்கு கிடைத்தது கேரக்டர் டிபேமஷன். அகாடமியில் சூப்பரா ஒரு லைப்ரரி இருக்கு. அதில் படித்துக் கொண்டிருக்கும் இடம் எங்கிருந்தாலும் ஷாலினியைப் பார்க்கும்படி இருக்கும். நாலுபேர் அமரும் படி வட்ட மேசை நடுவில் இருக்கும். ஷாலினி அருகில் இன்னொரு பேட்ச் மேட் பெண்ணும் அமர்ந்திருக்கிறாள்.

இவன் ஷாலினியைப் பார்க்க , இவள் டெலிகிராமில் யாரைப் பார்க்கிறாய் என்று கேட்டாள். வெற்றி ‘நான் உன்னைப் பார்க்கவில்லை. பக்கத்தில் இருந்த பொண்ணைத் தான் பார்த்தேன்’ பதில் கொடுத்திருக்கிறான்.

இப்படி ஏது எதுவோ பேச இறுதியில் ஷாலினி பக்கத்தில் இருந்த பெண்ணிடம் என்ன சொன்னாள் என்று தெரியவில்லை. அந்தப் பெண் போய் மெண்டரிடம் கம்பிளையிண்ட் செய்துவிட்டாள்.

இரண்டு மெண்டர்கள் அழைத்து அவன் விசாரித்தார்கள். கிட்டதட்ட பொறுக்கி அளவுக்கு அவன் பெயர் கெட்டுவிட்டது. ஸ்டூடன்ஸ் யாருக்கும் தெரியாது. மெண்டர்களுக்கு மட்டும்தான் தெரியும். பின்னாடி வந்த நாளில் அந்த மெண்டர்களே வெற்றியிடம் நல்ல பிரண்டாகிவிட்டனர்.

நடந்த விஷயத்தை எல்லாம் வெற்றி சொன்ன போது நானும் மீனினியும் பொங்கி விட்டோம். காதலுக்கு இதைவிட சிறந்த பரிசு யாராவது தர முடியுமா? ஷாலினிக்கு தெளிவான மனநிலை கிடையாது.

நான் தனியாக என்னொட காலேஜ் கேண்டீனில் சாப்பிட்டுருக்கேன். ஹோட்டல்ஸ் தனியா சாப்பிட்டுருக்கேன். முன்ன பின்ன தெரியாதவர்களுடன் சாப்பிட்டு இருக்கேன். தனியாக டிராவல் செய்திருக்கேன். ஏன் கிடாவெட்டில் தயிர்சாதம் கூட சாப்பிட்டு இருக்கேன். ஆனால் நான் ஷாலினி கூட ஒரு லன்ச் கேண்டீனில் சாப்பிட்டேன். தி மோஸ்ட் ஆக்வர்டு லஞ்ச் ஐ எவர் ஹேட்.

அவ கூட ஏப்படி சாப்பிட நேர்ந்தது தெரியுமா? அன்று ஒரு மாக் டெஸ்ட் இருந்தது. வெற்றி எனக்கு கேண்டீனில் வைத்து ஆல் தி பெஸ்ட் கூறிவிட்டான். அவளும் எனக்கு அருகில்தான் இருந்தாள்.

டெஸ்ட் முடிந்த பிறகு , மதியம் சாப்பிடாமல் இருந்தேன். வழக்கமாக நான் லஞ்ச் சாப்பிட மாட்டேன். தாராபுரம் போக வேண்டும் என்பதால் என்னோட லஞ்ச் மதுரை பஸ்ஸில் சாப்பிட்டு விடுவேன். தேர்வு சீக்கிரம் முடிந்தது. அன்று அம்மாய் வீட்டுக்குச் செல்வதால் திருப்பூர் செல்ல வேண்டும். டைம் இருந்தது.

இப்படி இருக்கும் போது மீனினி அவளுடன் சாப்பிட அழைத்திருந்தாள். ஷாலினியும் அவள் தோழியும் அன்று அவர்களுடன் சாப்பிட அழைத்தனர். மீனினியிடம் அவர்களுடன் சாப்பிடுவதாகச் சொல்லிவிட்டேன்.

அதே மாதிரி சாப்பிடவும் சென்றேன். ஒருத்தரோட உள்நோக்கம் என்னனு உள்ளுணர்வு சொல்லி விடும்.. எனக்கும் புரிந்தது. ரொம்ப அன் கம்பர்டபிளா பீல் செய்தேன். அன்று பிடித்து வெற்றியிடம் புலம்பித் தீர்த்து விட்டேன். வெற்றி எனக்கு விஷ் செய்ததால் என்னைச் சாப்பிட அழைத்தனர் என்பது உண்மை. வெற்றி எந்தப் பெண்ணிடம் பேசினாலும் இப்படித்தான் செய்து கொண்டிருந்தனர்.

அவனுக்கு நீ ஓகேவும் சொல்லப் போறது இல்லை. அதே சமயம் உனக்கு எங்கேஜ்மெண்ட் ஆகிருச்சு. முடிஞ்ச அளவுக்கு ஒதுங்கி இருக்கனும். அல்லது பிரண்டா தன்னோட எல்லையில் இருந்து பழகிருக்கனும். பொதுவாக எனக்கு பெரும்பான்மையான ஆண்களின் குணம் பிடிப்பதில்லை. அதே சமயம் எனக்கு பெண்களின் சில டைப்ஸ் பிடிக்காது. ரொம்ப அலம்பல் செய்யற ஆளுங்க , செல்ஃப்பிஷ் டைப் , நாலடி நடக்கறதுக்கு அரை மணி நேரம் செய்யறவங்க. அழுதே காரியம் சாதிக்கும் மேனிப்புளேட்டிவ் டைப் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

‘பொதுவா பொண்ணுங்க் பசங்க இப்படி இருக்கனும் டைப் வச்சுருப்பாங்க. நீ என்னமா பொண்ணுங்களுக்கே டைப் வச்சுருக்க? ரொம்ப கஷ்டம் ‘ தேவின் மனதில் இதுதான் ஓடியது.

நானும் மீனுவும் சேர ஒரு ஆள வெறுத்தோம்னா அது ஷாலினிதான். அவளைத் திட்டாத நாள் கிடையாது. அதே சமயம் அவள் மனசு மாறி வெற்றிக்கு ஓகே சொன்னா பரவாயில்லைனு கூட சில சமயம் தோனியிருக்கு. வெற்றியோட காதல் என்னை வியக்க வைத்த காதல். அவள் கனவை நிஜமாக்க வேண்டும் என்று நினைத்த காதல்.

ஒருத்தரை இவ நடத்துன மாதிரி நடத்தக் கூடாது. பசங்க உண்மையா காதலிச்சா இப்படித்தான் இருப்பாங்க. ஆனா பொண்ணுங்க தூக்கி எறிஞ்சுருவாங்க. வைஸ் வர்ஸா மாதிரி பெண்களை ஏமாற்றும் ஆண்களும் உண்டு. ஆனால் என்ன சினிமால கூட ஆண்களால் ஏமாறும் பெண்களுக்கு பாட்டெழுவது குறைவுதான். ஒட்டு மொத்தமாக பொண்ணுங்களே இப்படித்தான் பாடுவாங்க. கடலை கூட ஆழமில்லை பொண்ணுங்க மனசு ஆழம்னு பாட்டுப்பாடுவாங்க. அதை விட ஏதாவது பெட்டராகச் செய்யலாம். ஆனால் மனிதர்கள் எல்லாருக்கும் ஏமாற்றத் தெரியும். அதுதான் நிதர்சனம்.





ஷாலினிக்கு தெளிவான ஐடியாலஜி கிடையாது. ஆனால் பெற்றவர்களை மீறி எதுவும் செய்ய மாட்டாள். அதாவது திருமணம் போன்றவை பெரிய முடிவுகளை அவள் எடுக்க மாட்டாள்.

எனக்கும் அந்த பெண்ணைப் பற்றி பேச விருப்பமில்லை. ஆனால் அவள் வெற்றிக்கு செய்தது தவறு என்றே தோன்றியது. அவங்க லவ் லைஃப்ல நாம கருத்து சொல்ல முடியாது. வெற்றிக்கும் இது தெரியும். அவன் விருப்பப்பட்டு செய்ததுதான் இது எல்லாம்.



அவளை விடு. நானும் வெற்றியும் அப்பப்ப காஃபி சாப்பிட போவோம். பக்கத்தில் காஃபி ஷாப்ஸ் நிறைய இருக்கும். போர் அடிச்சுதுனா அப்படியே ஸ்டீரிட் வாக்கிங்க் போவோம். ராகுலும் கூட இருப்பான். நாங்க மூணு பேரும் பேசிக் கொண்டே நடந்து செல்வோம். அவனோட பார்ட்னர் நான். பார்ட்னர் இன் கிரைம். அவனுடன் பிரண்டானது கோச்சிங்க் கிளாஸ் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் தான். ஷார்ட் டைமில் என்னோட பிரண்ட் ஆகிட்டான். என்ன ஹெல்ஃப் கேட்டாலும் செய்வான். மை பார்ட்னர். அவன் மேல என்ன கோபம் இருந்தாலும் பேசியே சாமாளிச்சுருவான்.

ஒரு இடத்தில் நானும் வெற்றியை ஃபேக் பாய் பிரண்டாக உபயோகித்திருக்கிறேன். ஒரு இடியட் கிட்ட இருந்து என்னைக் காப்பாத்தான். ஒவ்வொரு தடவை பேசும் போதும் எதாவது புதுசு புதுசா சொல்லுவான். ரொம்ப நேரம் பேசிட்டே இருப்போம். இன்னுமே அவனைப் பத்தி நிறைய எனக்குத் தெரியாது. அவனுக்கும் என்னைப் பத்தி கண்டிப்பாகத் தெரியாது.

தேவையும் இல்லை. நாங்க பிரண்ட்ஸா இருக்கனும் கூட அவசியம் இல்லை. ஆனால் நாங்கள் நண்பர்கள். அதை யாராலும் மாற்ற முடியாது.



வெற்றியும் முகவரி அற்றவன். அவன் அன்புக்கு இதுவரை சரியான முகவரி கிடைக்கவில்லை. அவன் அறிவுக்கும் முகவரி கிடைக்கவில்லை. வெற்றி போல் இருக்கின்றனர். ஏதோ ஒரு தேடலுடன் வாழ்வில் போய்க் கொண்டே இருப்பார்கள். இருந்தாலும் என்றாவது ஒரு நாள் அவனுடைய முகவரியை அடைவான் என்று நான் நம்புகிறேன்.

இப்படியே போய்கிட்ட இருந்த எங்க லைஃப்ல இல்லை உலகத்தேயே ஆட்டிப் படைத்த கொரானா வர அகாடமி மூடப்பட்டது. அதற்குப்பிறகு எங்களுடைய நட்பு போனில்தான் வளர்ந்தது.

‘என்ன இது அவ்வளவுதானா? ‘ என்று நினைத்த தேவ் ஊர் பற்றிய குறிப்புகளை மீண்டும் பேப்பரில் எழுதி வைத்தான்.

அலைவான்.............
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம்-30

எனக்கு ஒரு பழக்கம் இருக்குது. அது உனக்கே தெரியும். நான் ஒரு சைபர் செயிண்ட். ரேராதான் டெக்ட், கால்ஸ் எல்லாம் செய்வேன். கால் லிஸ்ட் பார்த்தா ஒன்னும் இருக்காது. எனக்கு எவ்வளவு குளோஸ் பிரண்டா இருந்தாலும் போன் கால்ஸ் ஆடிக்கு ஒரு முறை அமவாசைக்கு ஒரு தடவை செய்யற சோம்பேறியான நானே என் கிட்ட இந்த மாதிரி ஒரு பிகேவியர எதிர்பார்க்கவில்லை. நான் தினமும் ஒருத்தருக்கு போன் செஞ்சு பேசறதா? நோ வே. எல்லா விதிகளும் என்றாவது ஒரு நாள் உடைக்கப்படும்.

மீனினி என்று தலைப்பிட்டு யாழரசி எழுதியிருந்தாள்.

அப்படிப் பேசுன முதல் ஆள் மீனினி. இரண்டாவது ஆள் வெற்றிவேள். பிபிக்கு அப்ப அப்ப தான் கூப்பிடுவேன். சில சமயம் கான்பிரஸ் கால் உண்டு. மூணு பேரும் ஒன்னா சேர்ந்து என்னை கலாய்ப்பாங்க.

வெற்றி மாதிரி இல்லாம நான் மீனினியை முன்னாடியே மீட் பன்னிட்டேன்.

லெட் மீ இண்டர்டியூஸ் மீனினி. என்னோட ஸ்வீட் நத்திங்க்ஸ், பாலிட்டி டிஸ்கஸன், நாட்டு நடப்பு வாதங்கள், வீட்டு பிரச்சினைகள் இப்படி எல்லாம் இவ கூடதான் பேசுவேன். இந்த உலகத்திலேயே அதிகம் நான் மனம்விட்டு பேசிய ஒரே ஆள் மீனினி. அதே மாதிரி அவளோட மிகப்பெரிய ரகசியத்தை சுமக்கும் ஒரே ஆள் நான் தான். அத என்னனு பின்னாடி சொல்றேன்.



அவ தேர்ட் ரோ தான். அவளொட டீம் மேட் என் காலேஜ் சீனியர். அவளோட அண்ணா என்னோட பேட்ச் மேட். அவனொட பிரண்ட் என்னோட பிரண்ட். இப்படி எனக்கும் மீனினிக்கும் இன்விசிபிளா ஒரு கனக்ஷன் 2013-ல் இருந்தே இருந்திருக்கிறது.

எங்களோட பாண்ட் ரொம்பவும் ஸ்பெஷல். மீனினியும் நானும் நன்றாக பேசியது கேண்டீனில் தான். நல்லா புட் ஷேர் செய்வோம். அப்படி ஒரு நாள் மதியம் தான் இருவரும் பேசத் தொடங்கியது. நான் சைக்காலஜி படித்ததும் ஒரு காரணம்.

என்னோட சீனியர் அக்கா அவங்களுக்கும் ஒரு டிராமா இருந்தது. அதைப் பற்றி என்னிடம் பேசுவார்கள். அந்த அக்கா ஒரு குட் சோல். அவங்க எங்கள விட வயதில் மூத்தவர் என்பதால் மிக நன்றாகக் கவனித்துக் கொள்வார்,

அவர்தான் மீனினிக்கு ஒரு பிரச்சினை இருக்கு. அத எப்படியாவது சரி செய்தே ஆகனும் என்று என்னிடம் முதலில் கூறியவர். மீனினி இருபது வயது கூட முடியவில்லை. என்னை மாதிரிதான் பத்தொன்பது வயது ,முடிவதற்குள் அவளும் யூஜி முடித்து விட்டு அகாடமியில் சேர்ந்திருந்தாள்.

எனக்கு தெரிந்த வரை அகாடமியில் உள்ளதில் மிகவும் சிறியவள் மீனினியாக இருக்க வாய்ப்பு உள்ளது. மீனினி என்னை அந்த பெயர் மிகவும் கவர்ந்தது. ரொம்பவும் யூனிக்கான நேம்.

என்னிடம் முதலில் கவுன்சிலிங்க் வேண்டும் என்று கேட்டாள். நான் உன்னொட லிசனரா வேணா இருப்பேன். ஆனால் பிரன்ட்ஸ்க்கு கவுன்சிலரா இருக்க முடியாதுனு சொல்லிட்டேன். ஏனென்றால் அது ஒரு தடவை பேக்ஃபயர் ஆனது போதாது.

நானும் மீனினியும் ரொம்பவும் குளோசாகும் போகும் போது எனக்கும் ஒரு வித இன்செக்கியூரிட்டி இருந்தது. எங்க முன்னாடி நடந்த மாதிரி ஆகிடுமோ என்று? ஐ வாஸ் இன்செக்யூர். ஆனால் வெளியில் சொல்லிட்டா அது யாழரசி இல்லையே. மீனினிக்கு நன்றாக உள்ளுணர்வு வேலை செய்யும். நன்றாக ஆட்களையும் எடை போடுவாள். செம ஸ்மார்ட்ம் கூட. ரொம்ப பர்சப்டிவ். எதையும் சீக்கிரம் புரிஞ்சுக்க முடியும். அப்புறம் புக் ரீடர் கூட புக்ஸ் பத்தி நிறைய பேசுவோம். நல்லா மூவிஸ் பத்தி பேசுவோம். கே டிராமாஸ் பார்ப்போம்.

என்னோட குரூப் மெம்பர்ஸ் விட அவளிடம் மிகவும் குளோசாக ஆரம்பித்தோம். நான் அடிக்கடி காபி ஷாப் போனது இவளுடன் தான். அங்கு ஒரு பேக்கரி இருக்கும். ஒன்றாகச் சாப்பிடுவோம்.

நான் இந்த அகாடமிக்கு வரதுக்காக என்னோட டீச்சிங்க் ஜாப்ப விட்டுட்டு வந்தேன். எனக்கு பெரிதாக யாருடனும் பேசவோ பழகவோ விருப்பமில்லை. ஆனாலும் என்னோட குரூப் மெம்பர்ஸ் , மீனு இவங்கள எல்லாம் மீட் செஞ்சது இட்ஸ் மை பேட்தான்.

கோயம்புத்தூர் வந்துட்டு போறதில் கிட்டதட்ட ஆறு மணி நேரம் பேருந்து பயணத்தில் கழியும். இதன் விளைவாக ஒட்டுமொத்தமாக ஒரு மாதத்தில் எட்டு ஆக்சிடண்ட் பார்த்தேன். அதனால் டிப்ரஸனில் விழுந்தேன்.

புத்தகங்களில் இருக்கும் ஒரு வார்த்தை கூட படிக்க முடியாது. பிளாங்கா ஸ்டேரிங்க் மட்டும் தான் செய்ய முடியும்.

அப்ப எல்லாம் என் கூட இருந்தது மீனினி தான். அவளோட பிரச்சினை எல்லாம் தீர்க்க என்னிடம் வந்தாள். அவளுடைய பிரசன்ஸ் என்னை ஹீல் செய்ய ஆரம்பித்தது என்பதுதான் உண்மை.

சரி இப்ப மீனினி குடும்பத்தைப் பத்திப் பார்க்கலாம். மீனினி கொங்கு நாட்டில் அப்பர் கேஸ்ட்டா பார்க்கப் படும் ஒரு பிரிவைச் சார்ந்தவள். ஏன் சாதியைப் பற்றிப் பேச வேண்டும் என்று கேட்கலாம். நானும் அதே கொங்கு நாட்டில் மற்றொரு உயர்வகுப்பைச் சார்ந்தவள்.

அதிலும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எனில் கட்டுப்பாடுகள் அதிகம். மீனினியும் நானும் ஒரே மாதிரி மனப்பான்மை கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர்கள். ஆமாம் நாங்கள் ஸ்கேரி டேல் சொல்லி வளர்க்கப்பட்டவர்கள். மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட பெண் மீனினி. எனக்கு ஐம்பது சதவீத சுதந்திரம் என்றால் மீனுக்கு முப்பது சதவீதம்தான்.

அவளும் அவள் அண்ணனும் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள். கேட்டது கிடைக்கும். மீனு எதிர்த்துக் கூட பேச மாட்டாள். என்னை மாதிரி ரிபெல் கிடையாது.

அவளுக்கு சிறுவயதிலிருந்தே நண்பர்கள் கிடையாது. ஊரில் யார் பிரண்ட் என்று கேட்டால் அவளுக்குச் சொல்ல ஒருவரும் கிடையாது.

மொத்தத்தில் காஸ்மோபாலிட்டன் சிட்டியில் கன்சர்வேட்டிவாக வளர்க்கப்பட்ட பெண். நான் பட்டிக்காட்டில் கொஞ்சம் பிராட் மைண்டடு ஆட்களால் வளர்க்கப்பட்டவள்.

உடல்களுக்குத்தான் முகவரி உண்டு. உள்ளங்கள் முகவரி அற்றவை. எப்படி யாரு யோசிப்பார்கள் என்று யாராலும் கட்டுப்படுத்த இயலாது. தளைகள் மெய்களுக்குதான். மனங்களுக்கு இல்லை. நானும் மீனுவும் யோசிப்பது எல்லாம் இந்த சமூகத்தின் கட்டமைப்புக்கு பெரும்பாலும் எதிராகத் தான் இருக்கும்.



அவளது பெற்றோர்கள் பெருமையாகச் சொல்லக் கூடிய விஷயம் “என் பொண்ணுக்கு பிரண்ட்ஸே கிடையாது “ என்பதுதான். நண்பர்கள் இல்லை என்பது பெருமையான விஷயம். எங்க வீட்டில் ஆப்போசிட். என் சித்தி , அம்மா எல்லாம் தோஸ்த் படா தோஸ்த்னு இன்னும் பிரண்ட்சிப்ப மெயிண்டெயின் பன்ற ஆட்கள்.

அவ்வளவு அருமையான பெண். அவளுடைய பெரியப்பா மகன்கள், அத்தை மகள்களுடன் ஒரு நல்ல தோழமை இருந்தது. அவள் கூட பிறந்த அண்ணன் கார்த்தி சொன்னால் கூட கேட்காத மீனு அவளுடைய பெரியப்பாவின் மகன் வாசு சொன்னால் கேட்பாள். வாசு அண்ணாவுக்கும் மீனு என்றால் மிகவும் பிடிக்கும். அவர் வெளிநாட்டில் வேலை செய்பவர். எப்போது ஊருக்கு வந்தாலும் மீனுவைப் பார்க்காமல் போகாமல் போக மாட்டார். அந்த அளவு அவருக்கும் இவளைப் பிடிக்கும்.

ஆரம்ப கால கட்டங்களில் நானும் மீனுவும் வகுப்பு பற்றித்தான் பேசுவோம். கிளாஸ் செட்யூல் எல்லாம் ரொம்ப ஹெக்டிக்கா இருக்கும். அடிக்கடி பேச முடியாது. பிரேக்ல டைம் கிடைத்தால் பேசுவோம். மற்றபடி பேசமாட்டோம். தெரிந்த பெண் அவ்வளவுதான். சின்ன பொண்ணு.

எனக்கு யாரு முன்னாடியும் அழறது பிடிக்காது. அப்படி இருக்கற நான் வகுப்பில் எல்லார் முன்னாடியும் அழுதுட்டேன். முன்னாடி ரோ அதனால் முன்னாடி அழ வேண்டியதாகிடுச்சு,

யூபிஎஸ்சி மேல ரொம்ப அப்செஸ்டா இருந்தேன். அது மட்டும் இல்லாமல் வீட்டிலும் என் சம்பந்தமாக சில பிரச்சினைகள். அழுத நாளன்று சித்தி வீட்டில் கோவையில் தங்கியிருந்தேன். முந்தைய நாள் இரவு சித்தி சொன்ன சில விஷயங்கள் என்னை உணர்வுப் பூர்வமாகப் பாதித்திருந்தது. ஸ்டிரஸ் கொஞ்சம் கொஞ்சமா பில்ட்ப் ஆகிட்டு இருந்தது. எனக்குத்தான் அவ்வளவு ஈசியாக அழுகை வராது உனக்கே தெரியும் பெக்கி. கோபம் வேணா கந்து வட்டி மாறி அளவு இல்லாமல் வரும். ஒருவேளை அழுது சீன் கிரியேட் நிறைய இடத்தில் செய்திருந்தால் என்னைப் பார்த்து நிறைய பேர் பரிதாபப்பட்டிருப்பார்களோ என்னவோ?

மேட்டருக்கு வரேன். எப்போதும் போல் வகுப்புக்கு அரைமணி நேரம் முன்னாடி வந்துட்டேன். மழை வந்தால் நகரத் தெருக்களின் நிலையைச் சொல்ல வேண்டியது இல்லை. ஐ ஹேட் இட். எனக்கு கால் செருப்பு கூட அழுக்கா இருக்கக் கூடாது. சோ ரெஸ்ட் ரூம் போய் கீளின் செய்திட்டுதான் வருவேன்.

அகாடமி துப்பரவு செய்யும் ஒரு அக்கா இருப்பார்கள். அந்த அக்கா எப்போதும் ஒரு வகை விரக்தியுடனே இருப்பார்கள். காலையில் நான் அவர்களை கிராஸ் செய்யும் போதே நிறுத்தி “நீ தான் நேத்து பாத்ரூம் யூஸ்பன்னிட்டு “ இப்படி ஆரம்பித்து என்னைத் திட்டத் தொடங்கிவிட்டார்கள்.

இதில் என்ன ஐரானி என்றால் நான் அதற்கு முந்தைய நாள் மேல் புளோரில் உள்ள பாத்ரூமைத் தான் உபயோகித்தேன். நானும் நான் இல்லைக்கானு சொல்லிப் பார்த்தேன். அந்த அக்கா எதையும் கண்டு கொள்ளாமல் கத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

நானும் பேசாமல் வகுப்பு நடக்கும் இரண்டாவது மாடிக்கு படியேற ஆரம்பித்துவிட்டேன். ஆனால் அதற்குள் இந்த விஷயத்தைப் பார்த்துவிட்ட பசங்க சிலர் ஸ்டூண்ட் கோ ஆர்டினேட்டர் இன்ஃபார்ம் செய்யவும் அவர் கீழே இறங்கி வந்தார்.

அதற்குள் இந்த விஷயம் எல்லாருக்கும் தெரிந்து விட்டது. எனக்குப் பின்னால் இருப்பவர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். அது நான் அப்படினு எல்லாருக்கும் தெரிஞ்சுருச்சு. இது ஒரு இஸ்யூ ஆகும்னு எனக்குத் தெரியும். எங்க இருந்து எனக்குக் கண்ணீர் வந்ததுனு தெரியல. முதல் மூணு ரோல இருக்க என்னோட பிரண்ட்ஸ் எல்லாரும் ஆறுதல் சொன்னார்கள். ஸ்டூண்ட் கோ ஆர்டினேட்டர் தங்கமான மனுசன். அவரும் ஆறுதல் சொன்னார்.

பின்னாடி இருந்த சில பெண்களும் அந்த அக்கா இப்படித்தான் காலையில் வழி மறித்துத் திட்டுவதாக கம்பிளெயிண்ட் செய்தார்கள். பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டப்பட்டது.

ஒரு சில ஸ்டிரியோ டைப் இருக்கும் . எப்பவும் மக்கள் துப்புரவு பணியாளர்களை மதிப்பதில்லை என்று. எல்லாரும் அப்படி இல்லை. துப்பரவு வேலை செய்யறதுனால் என்னை மாதிரி ஆளுங்களை இப்படி நடத்தவும் அவங்களுக்கு உரிமை இல்லை. என்னைப் பொறுத்த வரை யாருக்கும் யாரையும் ஹர்ட் செய்ய உரிமை கிடையாது. நான் அழுது பிரச்சினையான பிறகு துப்புரவுப் பணியாளர்கள் யாரும் மாணவர்களுடன் பேசக்கூடாது என்ற ரூல் போடப்பட்டது. என்னை திட்டினார்கள் என்பதால் அந்த அக்கா மீது எனக்குக் கோபம் இல்லை. இன்பாக்ட் என்னை அழ வைத்தார்கள் என்பதற்கு சந்தோஷப்பட்டேன்.

தீவிரமாக வாசித்த தேவ் “நீ லூசுனு தெரியும். ஆனால் இந்த அளவுக்கு என்று தெரியாது. அழுததற்கு சந்தோசப்பட்டாங்களாம் மேடம் “ சத்தமாகவே சொன்னான். தன் தலை முடியைக் கோதி விட்டவன் மீண்டும் படிக்க ஆரம்பித்தான்.

நான் அழுததப் பார்க்கவும் மீனு தேர்ட் ரோவில் இருந்து எழுந்து வந்து என்னை ஹக் செஞ்சுட்டாள். “ஒன்னு இல்லைக்கா. அழதா” என்று ஆறுதல் படுத்தினாள்.

“என்னக்கா நீ அழுவேனு நினைச்சே பார்க்கல. நீ எவ்வளவு ஸ்டார்ங்க்.” அப்படி இப்படினு சொல்லி சமாதானம் செய்தாள்.

நானே முன்னூறு பேருக்கு முன்னாடி பப்ளிக்கா கண்ணீர் விட்டேன் எம்பாரசிங்கா ஃபீல் செஞ்சுட்டு இருந்தேன். கண்ணீர் எல்லாம் நின்றுவிட்டது. ஆனால் மூட் மட்டும் டெரிபிளா இருந்தது.

இந்த விஷயத்தினால் மீனு முன்னாடி என்னோட இமேஜ் டேமேஜ் ஆனது. அவ மைண்ட்ல என்னை ரொம்ப ஸ்ட்ராங்க்னு நினைச்சுருக்கா. எவ்வளவு மனவலிமை படைத்தவர்களாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் கண்ணீர் வரும். அது உண்மை, சரியான நேரத்தில் தூக்கம் வருதலும் , அழுதலும் வரம்.




அலைவான்.............
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -31

“வலிமை”

நீ எது பலம் என்று நினைக்கிற பெக்கி? அது உடல் வலிமையா ? இல்லை உள்ளத்தின் வலிமையா? இல்லை இரண்டும் சேர்ந்ததா? வலிமைக்கு அளவுகோல் இருக்கிறதா?

வலிமையும் மனிதர்களுக்கு மனிதர்கள் மாறுபடும்.

எப்போது நம்மால் எழுந்து கொள்ள முடியாது என்று தோன்றுகிறதோ அப்போது ஒரு காலடி எடுத்து வைக்க முயற்சி செய்தால் அது வலிமை.

ஆனால் ஒவ்வொரு அடி எடுத்து வைக்க முயற்சி செய்யும் போதெல்லாம் காலில் சுத்தியலில் அடித்தால் எப்படி இருக்கும்?

அடுத்த அடி எடுத்து வைக்க முடியுமா? அந்த சுத்தியல் ஏற்படுத்திய காயத்துடனும் வலியுடனும் வாழ வேண்டும் என்றால் முடியுமா?

என்னோட சீனியர் அக்கா சொன்ன வரைக்கும் மீனுவுக்கு லவ் பெயிலியர் ஏதோ இருக்குனு தெரியும். ரீலேசன்ஷிப் தெரியும். அதே மாதிரி ரீபவுண்ட் ரிலேசன்ஷிப்னா என்ன என்று தெரியுமா?

மீனினிக்கு இரண்டுமே நடந்தது. அதுவும் எப்போது தெரியுமா? பதினேழு வயதில் ஆரம்பித்தது. மீனினி கல்லூரி வாழ்க்கையில் முதலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். மீனு என்னை மாதிரி கிடையாது. ரொம்பவும் அமைதியான பொண்ணு. ஷை டைப் என்று பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.

அவளொட சர்க்கிளில் மிகவும் ஆட்கள் குறைவு. கல்லூரிக்கு வருவாள் போவாள். தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பாள். அவள் படித்தது கோவையில் புகழ்பெற்ற மகளிர் கல்லூரி. கணினி சம்பந்தப்பட்ட படிப்பு படித்தாள்.

அவளுடைய மாமாவின் பெண் ஒருத்தி இருக்கிறாள். பெயர் சந்தியா. அவளும் அதே கல்லூரியில் முதுகலை படித்தாள். சந்தியாவும் மீனினியும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள் . மீனினி சந்தியாவுக்காக எதுவும் செய்வாள். அவ்வளவு நெருக்கம். சந்தியா மூன்றுவருடம் மீனுவை விட மூத்தவள். அதனால் அவளும் மீனுவை நன்றாக பார்த்துக் கொள்வாள்.

சந்தியா வகுப்புத் தோழிகள் உண்டு. அதில் ஒரு தோழியின் நண்பன் என்று சந்தியாவுக்கு அறிமுகமானவன் ராம் . சந்தியாவுக்கு தெரிந்தவன் என்றால் மீனுவுக்கு தெரியாமல் போவானா? மீனினிக்கும் அவனுக்கும் அறிமுகம் உண்டு. சந்தியாவும் ராமும் அடிக்கடி பேச ஆரம்பித்தார்கள்.

சந்தியா மீனினிக்கு ராமுடன் பேச வேண்டாம் என்று கட்டளை இட்டு விட்டாள். ராமிடமும் மீனினியுடன் பேச வேண்டாம் என்று கூறிவிட்டாள்.

இப்படியே நாட்கள் போகின்றது. மீனு முதல் வருடம் கல்லூரியில் படிக்கும் போது அவள் வீட்டில் பேசிக் மாடல் மொபைல் போன் வாங்கித் தந்துள்ளனர். அதனால் மூஞ்சிபுக் , வாட்ஸப்ப் இல்லை. தீடிரென்று ஒரு நாள் மீனு மொபைலைக்கு ஒரு அழைப்பு வருகிறது. அதை அவள் எடுக்கவில்லை. அவளின் அம்மா எடுக்கிறார். அவர் பேசியதைக் கேட்டதும் மறுமுனையில் அமேசானின் ஏதோ பொருள் ஆர்டர் செய்ததாகவும் அட்ரஸ் தரும்படி கேட்டும் பேசியுள்ளனர். மீனுவின் அம்மாவும் அப்படி எதுவும் ஆர்டர் செய்யவில்லை என்று கூறி அந்தக் போன் காலை துண்டித்துவிட்டார்.

ஆனால் மீனுவுக்கு நன்றாகத் தெரியும். அவள் அண்ணா மொபைலில் மட்டும்தான் அமேசானில் ஆர்டர் செய்ய முடியும். அதனால் தற்போது வந்த போன் கால் கண்டிப்பாக வேறு யாரோ என்று புரிந்திருக்கிறது.

சிறிது நேரம் கழித்து அதே நம்பரில் இருந்து மீண்டும் அழைப்பு வந்திருக்கிறது. மீனுவும் எடுத்துப் பேசியிருக்கிறாள். அப்போதுதான் தெரிந்திருக்கிறது. ஆமாம் பெக்கி அது ராம். அவன் சந்தியாவின் கைப்பேசியிலிருந்து ரகசியமாக போன் நம்பரை எடுத்து மீனுவுக்கு அழைத்திருக்கிறான்.

இது ஒரு முக்கியமான திருப்பு முனை. இந்த ராம் யார் தெரியுமா? சந்தியாவின் தோழி ஒருத்தியால் காதலித்து ஏமாற்றப்பட்டவன். பணக்காரப் பசங்களும் காதலித்து ஏமாறுவார்கள். இந்த விஷயம் மீனுவுக்கும் முன்னாடியே தெரியும். அதனால் ராம் மீது மீனுவுக்கு ஒரு சாப்ட் கார்னர் உண்டு, அட்ராக்சனும் உண்டு.

அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாகப் பழகி இருக்கிறார்கள். ஆனால் இந்த விஷயம் சந்தியாவுக்குத் தெரியாது. மீனுவுக்கு கல்லூரியில் சில தோழிகள் கிடைத்திருக்கிறார்கள். இதில் இரண்டு பெண்கள் மீனு குளோஸ் இவர்களுக்கும் இந்த விஷயம் தெரியும். நாட்கள் நகர இரண்டாவது வருடம் நான்காவது

செமஸ்டரும் வருகிறது. கல்லூரி வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கும். ஆப்டர் ஆல் ஐஞ்சுவையும் கலந்ததுதான் வாழ்க்கை.

மீனினி தன்னோட வாழ்க்கையில் இப்படி நடக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள். மீனினிக்கு ராமின் மீது சலனம் இருந்தது உண்மை. ஆனால் அது ட்ரூ லவ் கிடையாது .

சந்தியாவுக்கு மீனினி ராமிடம் பேசிக் கொண்டு இருக்கிறாள் என்பது தெரிய வந்துவிட்டது. மீனினியிடம் ஆண்டார்ய்ட் மொபைலும் வீட்டில் வாங்கி தந்துவிட்டார்கள். சந்தியாவுக்கு எப்படி தெரிய வந்தது தெரியுமா?

மீனினியும் ஒரு அரசியல் சம்பந்தமான கேம்ப் சென்றிருக்கிறார்கள். ராம் ஏதோ வாட்ஸ்ப்பில் ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறான். மீனு ஏதோ ஸ்டேட்டஸ் போட அது ராமுக்கு பதில் தரும் ஸ்டேட்டஸாக அமைந்துவிட்டது. உடனே ராமும் மீண்டும் ஸ்டேட்டஸ் பதிலுக்குப் போட்டிருக்கிறான்.

மீனும் மாற்றி மாற்றி போட இப்படி விளையாட்டு தொடர்ந்திருக்கிறது. இவர்களின் வாட்ஸப்பைப் பார்ப்பவர்களுக்கு இது புரியாமல் போகுமா? அந்த கேம்ப் முடிந்த அன்று மீனினியை அழைத்துச் செல்ல தன்னுடைய காரை எடுத்து வந்திருக்கிறான் ராம். ராம் மீனு இருவரும் ஒரே ஊரைச் சார்ந்தவர்கள். அவர்கள் வகுப்பினர் . சந்தியாவின் பிரண்ட் என்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. மீனுவைப் பொறுத்தவரை அவள் தான் எல்லாருக்கும் கடைக்குட்டி. நோ ஒன் டிரிட்ஸ் லைக் ஹெர் அடல்ட். பொதுவாக நடக்குறதுதான். நாம ஏதாவது ஓப்பினியன் சொன்னா “சின்ன புள்ள உனக்கு ஒன்னும் தெரியாது “ இப்படி வீட்டினர் கூறுவர். ஏதாவது மிஸ்டேக் செய்துவிட்டால் “இவ்வளவு பெரிசாயும் உனக்கு அறிவில்லை “ என்று திட்டுவர்.

ஆக மொத்தத்தில் இந்தியக் குழந்தைகள் எப்போது பெரிதாவர்கள் என்று எனக்கும் தெரியவில்லை. என்னுடன் பிஜி படித்த அக்கா ஒருவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இன்னமும் அவர்கள் வீட்டில் ஏதாவது கருத்து சொன்னால் “ நீ சின்ன புள்ளை உனக்கு ஒன்னும் தெரியாது” என்று பேரண்ட்ஸ் கூறுவார்களாம்.

சின்னவங்களா ? இல்லை பெரியவங்களா? அப்படினு தெரியறதுக்குள்ள நமக்கு வயசாகிடும். ஒருவேளை நாமளும் இப்படி வருங்காலத்தில் ஆகிடுவோமா? கன்பூசிஸ்ட் இண்டியன் கேர்ள்ஸ்னு நானும் ஒருத்தி.

மீனு சொல்ற ஒப்பினியனை யாரும் கண்டுக்கவே மாட்டாங்க. தொண்டை கிழிய கத்தற வீட்டுத் தலைப்புள்ளையோட தலைமகளை, நாலவது தலைமுறையில் முதல் ஆளான நம்பர் ஒன் பேத்தியான என்னையே எங்க வீட்டில் கண்டுக்க மாட்டாங்க.

சரி அதை விடு. சோ சந்தியாவுக்கும் ராமும் , மீனுவும் பேசிக் கொண்டிருப்பது தெரிந்துவிட்டது. சந்தியாவுக்கு ரொம்ப கோபம். அதுவும் வெடிச்சுருச்சு.

ஏனென்றால் ராமும் . சந்தியாவும் ரிலேசன்ஷிப்பில் இருந்திருக்கிறார்கள். அதே மாதிரி மீனுவிடமும் ராம் பேசியிருக்கிறான். டூ டைமிங்க் தான். உடனே இவ்வளவுதான அப்படினு நீ நினைக்கலாம்.

டிவிஸ்டே இங்க தான். ராம் என்பவன் சந்தியாவின் ஒரு தோழியால் காதலித்து ஏமாற்றப்பட்டவன். ஆனால் ராம் சந்தியாவிடன் காதலிப்பது போல் பழகியுள்ளான். ஆனால் சந்தியாவுக்கும் வாசு அண்ணனும் ரிலேசன்ஷிப்பில் ஏற்கனவே இருந்துள்ளனர்.

இந்த விஷயம் வாசு அண்ணாவுக்கும் தெரிய வர மீனினி வீட்டிற்கு வந்திருக்கும் சந்தியாவிடம் கேட்க பிரச்சினை பெரிதாயிருக்கிறது. ஆனால் மீனுவுக்கு தான் ஏமாந்ததும் புரிந்தாலும் வாசு அண்ணாவுக்கும் சந்தியாவுக்கு இடையில் இருந்த ரிலேசன்ஷிப் தெரியவில்லை. அதனால் வாசு அண்ணாவிடம் சண்டை போட்டிருக்கிறாள். வாசு அண்ணாதான் டிஸ்டர்ப் செய்கிறான் என்று நினைத்து விட்டதால் வந்த வினை. அதற்குப் பிறகு உண்மை தெரிய வந்ததும் ராமை நல்லவன் என்று நினைத்து அவன் சந்தியாவிடம் இருந்து தப்பித்தால் நல்லது என்று நினைத்திருக்கிறாள்.

ஆனால் இது எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் ராம் அந்த வருடமே வீட்டில் பார்த்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். இது எப்படி இருக்கு?

“பிராவோ…சான்சே இல்லை. இடியாப்பக் காதல் கதை “ தேவ் சத்தமாகவே சொன்னான். மீண்டும் படிப்பதில் ஆழ்ந்தான்.

என்னடா இப்படி ஆகிடுச்சேனு நீ நினைக்கலாம். மனித உறவுகள் எப்போதும் எளிமையான ஒன்றல்ல. மனித மனமும் உணர்வுகளும் மாறிக் கொண்டே இருக்கும் ஒருத்தரை நேற்று வெறுத்திருக்கலாம் . அதே நபர் ஏதோ ஒரு நல்லதைச் செய்து இன்று நம் மனதில் இடம் பிடிக்கலாம். நாளை இன்னொரு நபர் நம் மனதில் இருக்கலாம். காதல் யாரு மேல யாருக்கு எந்த நொடியில் வரும்னு யாராலும் சொல்ல முடியாது.

இத ராம் செய்யறதுக்கான காரணம் என்னவாக இருக்கும்.? சந்தியாவுக்கும் மீனினிக்கு உள்ள ஆழ்ந்த உறவு உடைய ஒரு காரணம் ராம். அதே மாதிரி வாசு அண்ணாவுக்கும் மீனுவுக்கும் விரிசல் விழக் காரணம் ராம்.

இத எல்லாம் ஏன் அவன் செய்யனும்? என்ன காரணம் இருக்க முடியும். நிச்சயமாக எனக்குத் தெரியாது. ஏன் மீனினிக்கும் தெரியாது. அவன் பழிவாங்க செய்திருக்கலாம். இல்லை டைம்பாஸ்க்காகச் செய்திருக்கலாம். ஏன் இப்படி ராம் செய்தான் என்பதற்கு அவன் மட்டும் தான் விடை கொடுக்க முடியும். ஆனால் ஒரு உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும். வாழ்கையில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்காது.



அலைவான்...............
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -32

மீனினி ராமிடம் பேசுவது அவளது கிளாஸில் படிக்கும் அந்த இரண்டு குளோஸ் பிரண்ட்ஸ்க்கும் தெரியும். மீனுவுக்கும் அந்தப் பெண்ணுக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் சண்டை வந்திருக்கிறது. சின்ன சின்ன வாக்குவாதங்கள் வருவதுதானே . ஆனால் அந்தப் பெண் “நீ ராம் கூட அப்யர்ல் இருக்கறவதானே “ என்று கூறிவிட்டாள்.

மீனினிக்கு அப்போதுதான் புரிந்தது. தன்னைப் பற்றி இழிவாக நினைத்திருக்கிறாள் என்று, அந்த பெண்ணின் நட்பு முடிந்து போனது. இந்த டீனேஜர்ஸ்க்கு ஒரு பழக்கம் இருக்கும். எதைச் செய்ய வேண்டாம் என்று சொல்கிறோமோ அதைத்தான் செய்வர். சந்தியா ராமிடம் பேச வேண்டாம் என்று சொன்னதும் மீனுவுக்கு ஏன் பேசினால் என்னவென்று தோன்றியிருக்கிறது. ராமே வந்து பேசவும் இவளும் பேசியிருக்கிறாள். இதில் ஹைலைட் என்னவென்றால் ராம் மீனுவின் மீது மிகவும் ஆர்வமுள்ளவன் போல் பேசி இருக்கிறான். அந்தப் பருவத்தில் கிடைக்கும் அட்டேன்சன் அவளை மகிழ வைத்திருக்கிறது. தன் மேலும் அக்கறை எடுக்க ஒருவர் உள்ளார் என்ற ஆனந்தம்.

அது துரோகத்தால் பின்னப்படப் போகும் நட்பு என்று அவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. இரண்டு வருடத்தில் தனக்கு முக்கியமான சிலரின் உறவுகளில் விரிசல் அதனால் ஏற்படப் போகிறது என்று அறிந்திருக்கமாட்டாள்.

இந்த விஷயம் வீட்டினருக்கு முழுதாகத் தெரியவில்லை. ஆனால் பிரச்சினை நடந்தது தெரியும்.

மேலும் மீனினியும் மனதை உடைக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. சந்தியாவின் உண்மை முகம் ஒன்று வெளிப்பட்டது. சந்தியாவின் பெஸ்ட் பிரண்ட் ஒருத்தியிடம் மீனுவைப் பற்றி திட்டிப் பேசியிருக்கிறாள். “அவளைக் கூட வைத்திருப்பதே தன்னோட இமேஜா இம்பூருவ் செய்யதான். மீனு குண்டாக இருப்பதால் நான் அழகாத் தெரிவேன்.” இப்படி ஒரு வார்த்தையே விட்டிருக்கிறாள்.

மியூட்சுவல் பிரண்ட்ஸ் இருந்தால் தான் பிரச்சினை. சந்தியாவின் பெஸ்ட் பிரண்ட் இந்த விஷயத்தை வெளியில் சொல்ல அது அங்க சுற்றி , இங்க சுற்றி மீனுவின் காதுக்கு வரவும் மனமுடைந்து போய்விட்டாள்.

எஸ் மீனினிக்கு உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது. அதனால் அவள் நிறைய இடங்களில் பாடி ஷேமிங்க் அனுபவிக்க நேர்ந்திருக்கிறது.

பாடி ஷேமிங்க் என்றால் என்ன தெரியுமா? ஒருவரின் உடலைப் பற்றி அவர்களின் மனது பாதிக்கும் வகையில் எதிர்மறையாக விமர்சனம் செய்வது. இது பல மனநலப் பாதிப்புகளைப் ஏற்படுத்தும். தாழ்வு மனப்பான்மை , இன்செக்யூரிட்டி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

பாடி ஷேமிங்க் எங்கு தொடங்குகிறது என்றால் முதலில் வீட்டில் தான். ஆண்கள் பெண்கள் இருவருக்கும் பாடிஷேமிங்க் பொதுவானது. பெண்கள் ஆண்களை விட அதிமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

வீட்டில் எப்படி நடக்கும்? ஏன் இல்லை? ஒரு அம்மா மார்பகம் பெரிதாக உள்ள பெண்ணை அல்லது குண்டாக உள்ள மகளைப் பார்த்து ஒரு தடவை கூட அந்தப் பெண் மனம் வருந்தும்படி ஏதாவது கூறாமல் இருந்திருப்பார்களா என்றால் நிச்சயம் கூறியிருப்பார்.

வீட்டிலும் பாடிஷேமிங்க் என்பது தெரியாமலேயே நடக்கும். அதுதான் பிரச்சினையே. வெளியில் யாரவது இந்த மாதிரி கமெண்ட் அடித்தால் அது லீகலாக பிரச்சினை ஆகும்.

இந்திய பெற்றோர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்களுடைய விருப்பங்களை அக்கறை என்ற பெயரில் குழந்தைகளின் மீது திணிக்கின்றனர். குழந்தைகளும் அதை அன்பு என்றுதான் நினைக்கின்றனர்.

மீனினியும் பாடி ஷேமிங்க் அனுபவித்திருக்கிறாள். இவ்வளவு ஏன் எங்க கோச்சிங்க் செண்டரில் கூட அவளை கேலி செய்து விட்டு மென்ஸ் ரெஸ்ட்ரூமில் மறைந்த கோழைகளும் உண்டு. ஆமாம் பின்னே மாட்டினால் பிரச்சினை ஆகிவிடும்.

ஆனால் மீனினி சொல்வாள். “அக்கா நான் குண்டா இருக்கறதில் எந்த பிரச்சினையும் இல்லை. என்னை நான் முழுசா அக்சப்ட் பன்னிட்டேன். எனக்கு எப்பாவது ஒல்லியாகனும் தோணுதோ அப்ப கண்டிப்பாக குறைப்பேன். மத்தவங்க கிண்டல் செய்யறாங்கனோ இல்ல வீட்டில் சொல்றாங்கனோ நான் குறைக்க மாட்டேன். “ இப்படி பாடி பாசிட்டிவிட்டி கடைபிடிக்கற ஆளு அவள்.

எனக்கு பாடி பாசிட்டிவிட்டி குறைவு. ஏனென்றால் நான் ஒல்லியாக இருந்து லைட்டா ஓபேஸ் ஆகிட்டேன். ஹெல்த் பீரிக்கான நான் கண்டிப்பா கவலைப்படுவேன். இத்தனை வருஷம் ஒரு மாதிரி இருந்துவிட்டு தீடிரென்று வெயிட் ஏறியதை என்னால் ஏற்றுக் கொள்ள ,முடியவில்லை.

உனக்குத் தெரியுமா? மீனினி வெயிட்லாஸ் ஒல்லியாகினா கொரியன் ஆக்டர்ஸ் ஷின் மினா மாதிரி இருப்பாள். ஹையிட் , டிம்பில்ஸ் , யெல்லோ வைட்டிஸ் ஸ்கின், லைட் பிரவுன் ஹேர். அவ்வளவு அழகாக இருப்பாள். சந்தியா எல்லாம் இவள் முன்னாடி எதுவும் இல்லை. கம்பேர் செய்யக் கூடாது. ஆனால் நான் சொல்வது உண்மைதான். சந்தியாவுக்கும் மீனினியை யூஸ் பன்ன எந்த உரிமையும் இல்லை. அது நல்ல பண்பும் இல்லை.

இவ்வளவு பேசற எனக்கு மீனினி ஒன்றும் அவ்வளவு குண்டாகத் தோன்றியது இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு அப்படி இல்லையே. எங்க வீட்டு ஆளுங்களுக்கு கூடதான் என்னுடைய மூக்கு பிடிக்காது. மற்றவர்களை விட என்னுடைய மூக்கின் அடி நுனி வித்தியாசமாக இருக்கும். நானும் அதுக்காகத் திட்டு வாங்குவேன். பிறக்கும் போது அப்படி இல்லை. நான் கையால் இழுத்துதான் அப்படி மாறியது என்று சொல்வார்கள்.

மூக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் மீனுவுக்கு சந்தியாவின் துரோகம் மனதை உடைத்து விட்டது என்று கூறலாம். ரோஸ் நிறக் கண்ணாடி உலகம் ஒரே நேரத்தில் உடைந்து சிதறிவிட்டது. உருவத்துக்காக தன்னைக் கூட வைத்திருந்த விஷயம் தெரிந்தால் யாராக இருந்தாலும் கண்டிப்பாக மனது அழும். தன்னுடைய உருவத்தை பற்றிப் பேசியது , ராமின் மற்றொரு முகம், வாசு அண்ணனின் பிரிவு அதனால் உண்டான ஒரு குற்ற உணர்வு , தோழியின் பேச்சு இது எல்லாம் மீனினியை மிகவும் பாதித்திருக்கிறது.

ஆண்டராய்ட் மொபைல் இருப்பது அவளுக்கு சிறிது ஆறுதல். அதிலும் ரியால்டியில் இருப்பது பிடிக்காமல் இ புக்ஸ்ஸில் நேரத்தை ஓட்டியிருக்கிறாள். இப்படி நாட்கள் போகையில் அவனுக்கு மூன்றாம் வருடத்தில் அறிமுகமானவன் மாதேஷ். இன்ஸ்டா கிராமில் ஏற்பட்ட நட்பு.

இவன் ஏதோ மியூட்சுவல் பிரண்ட் என்பதால் மீனினியும் அக்சப்ட் செய்திருக்கிறாள். மீனினி மெய்நிகர் உலகத்திலும் ஆட்களைக் கணிப்பதில் கொஞ்சம் வல்லவள். மாதேஷ் நல்ல மாதிரி என்று தோன்றவும் பேச ஆரம்பித்தாள்.

அவன் கோயம்புத்தூரில் வேறு ஒரு கல்லூரியில் இளங்கலை மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்தான். கேரளாவாசி. கோவையில் படிப்பதற்கென்று வரும் கேரளா மக்கள் அதிகம். அப்படி வந்தவர்களில் மாதேஷும் ஒருவன்.

மீனினி தன்னோட வலியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா விடுபட ஆரம்பித்தாள். முழுதாக இல்லை. மீனினிக்கு தன்னுடைய நிலை தெரியும். இருந்தாலும் ரிபவுண்ட் ரிலேசன்ஷிப்பாக மாதேஷுடன் ஆரம்பித்திருந்தாள். “அவனுடன் எனக்கு இருக்கும் அந்த பாண்டை பீல் செய்ய முடிந்தது என்றாள். நானும் அவனிடம் எதுவும் முழுதாக ஷேர் செய்யவில்லை. அவனும் அப்படித்தான். நாங்க சரியான சந்தர்ப்பத்தில் மீட் செய்திருந்தால் எங்களுக்குள் நன்றாக செட் ஆகியிருக்கும். ஆனால் என்னோட வாழ்க்கையில் டைமிங்க் என்ற ஒன்று சரியாகவே அமையாது. அப்படியே அமைந்தாலும் காதல் திருமணத்திற்கு வாய்ப்பே கிடையாது. என் பெற்றோர்கள் நான் என் காஸ்டை சேர்ந்த ஒருவனைக் காதலித்தாலே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதில் வேறு மதம், வேறு மாநிலம் என்றால்???????? வாய்ப்பே கிடையாது அக்கா. என் அண்ணன் காதலித்த பெண்ணையே திருமணம் செய்யலாம். அதுவும் சொந்தத்தில் என்றால் நடக்கும். எனக்கு எல்லாம் காதல் என்ற வார்த்தையே அனுமதி கிடையாது. ஆப்டர் ஆல் ஒவ்வொரு குடும்பத்தின் கௌரவமும் பொண்ணுங்ககிட்ட தான் இருக்குது. பெற்றவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு நடந்தால் தான் நான் நல்ல பெண். என் பேரண்ட்ஸ்க்கு நான் என்றால் ரொம்பச் செல்லம். என்ன கேட்டாலும் வாங்கித் தருவாங்கா. இப்படி இருக்கும் போது நான் காதல் என்கிற வார்த்தையே நம்பிக்கைத் துரோகம். என்னோட வாழ்க்கை முன்னாடியே டிசைன் செஞ்சுட்டாங்க. அதை மீறி நான் நடந்தால் அது பெரிய பாவம். ஒரு சின்ன விஷயம் சொல்றேன் கேளுங்க. என் அண்ணாவுக்கு பசங்க , பொண்ணுங்க பிரண்ட்ஸ் நிறைய உண்டு, அவங்க எல்லாரும் வீட்டுக்கும் வருவாங்க. அவங்களுக்கு எல்லாம் கவனிப்பு பயங்கரமா இருக்கும். அண்ணாவோட பிரண்ட்ஸ் மாதிரிதானே என்னோட பிரண்ட்ஸ்ம் என்று நினைத்து எனக்கு டிவல்த் படிக்கும் போது கிடைத்த பெஸ்ட் பிரண்ட் ஆரவ்வை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். ஆனால் என் அம்மாவுக்கு முகமே மாறிவிட்டது. பெயருக்கு விசாரித்தார்கள். சாப்பிடக் கூட அழைக்கவில்லை. எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. அவன் என்னுடைய லவ்வரா இருப்பானோ என்ற சந்தேகம்தான் காரணம். அதற்குப் பிறகு அவனை ஒரு வழியாக உபசரித்து அனுப்பி வைத்தேன். அப்பதான் எனக்குப் புரிஞ்சது. நான் பொண்ணு அதனால் ஒரு பையன் கூட இருக்கற பிரண்ட்சிப் தவறாக மட்டும் தான் என் வீட்டில் பார்க்கப்படும். இப்படி உயர்ந்த கொள்கை கொண்ட எங்க வீட்டில் லவ் பன்றேன்னு சொன்னா நில நடுக்கேமே வந்துரும். அதனால் மாதேஷ் உடன் இருக்கும் ரிலேஷன்ஷிப்பை மியூட்சுவலா சொல்லி பிரிஞ்சேன். அது மட்டும் இல்லாமல் அவனும் என்னை சீட் செய்திட்டான். எதுக்கு என் கூட பழகுற அப்படினு கேட்டதுக்கு உன்னோட உடம்புக்காகத்தான் அப்படினு சொல்லிட்டான். இட் புரோக் மை ஹார்ட். அகாடமியில் சேர்ந்த பின்னாடி இரண்டு மாசம் கழிச்சு எங்க இரண்டு பேருக்கு நடந்துச்சு. அதுக்கு இன்னொரு காரணம் இருக்குது. என் அப்பா ஒரு நாள் பேசிட்டு இருக்கும் போது என்னைப் பார்த்து உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு மீனுனு சொல்லிட்டார். எனக்கு வீட்டுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யறோம் என்று தோன்றியது. எனக்கும் தெரியும் நான் வீட்டைத் தாண்டி எதுவும் செய்ய மாட்டேன் என்று. என்னை அது ரொம்பவே அபெக்ட் செஞ்சுது. என்னோட ரிபவுண்ட் ரிலேஷன் ஷிப் கவுந்த கதை இதுதான்.”

நாங்க இரண்டு பேரும் போன்ல பேசும் போது மீனு சொன்ன விஷயங்கள் இது. மீனு எப்பவும் அன்புக்காக ஏங்கின ஆள். தனக்கு வெளியில் ஒரு ஆள் அன்பு வைக்கனும் என்று மிகவும் ஏங்கினாள். ஆனால் அந்த இரண்டுமே அவளுக்கு நடக்க வில்லை.


அலைவான்....
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -33

நானும் மீனினியும் பேச ஆரம்பித்த குறைவான காலத்தில் அவ்வளவு சீக்கிரம் நண்பர்களாக மாறிவிட்டோம். நான் அகாடமிக்கு தினமும் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். 2020 பிறந்து அமேசான் காடு பற்றி எறிந்து கொண்டிருந்த கால கட்டம். ஜனவரி அப்படியே கழிந்தது.

இந்த சமயத்தில் நான் கோவையிலிருந்து தங்கி படிக்க முடிவு செய்தேன். ஹாஸ்டல் எதாவது வீடு கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் மீனினி “எங்க வீட்டுக்கு வாக்கா” என்று அழைத்தான். நானும் பார்க்கலாம் என்று யோசித்தேன். மீனினி வீடு என்றால் பாதுகாப்புக்கு பிரச்சினை இல்லை என்று தோன்றியது.

உறவினர் வீடுகளில் கூட தங்காத நான் மீனினி வீட்டில் தங்க பர்மிஷன் கேட்டேன். ரெண்ட் கொடுத்துதான். பேயிங்க் கெஸ்ட் மாதிரி. எங்க வீட்டினர் தீவிரமாக டிஸ்கஸ் செய்தார்கள். மீனினி அப்பாவிடம் நேரடியாகப் பேசினேன். ரெண்ட் பற்றிக் கேட்டதற்கு “விவசாயி மகளிடம் நான் காசு வாங்க மாட்டேன் . நீ படிச்சு இந்த மாதிரி மத்தவங்களுக்கு ஹெல்ப் செய். அதுதான் ரெண்ட்.” அங்கிள் இப்படி பதில் கூறி வாயை அடைத்துவிட்டார்.

மீனினி “அக்கா என் அப்பா பிலாசிபி நிறைய பேசுவார். உனக்கும் ரொம்ப பிடிக்கும். “ என்று சொன்னாள்.

நானும் அவர்கள் வீட்டில் தங்கப் போகும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தேன். ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். எங்கள் வீட்டில் நிறைய யோசித்தனர். வேறு சாதி, வீட்டில் மீனினியின் அண்ணன் இருக்கிறான் இந்த இரண்டில் இரண்டாவது காரணம் மிகவும் பிரச்சினையாக இருந்தது.

ஆனால் மீனு அண்ணாவுக்கு லவ்வர் இருக்கா அது மட்டும் இல்லாமல் அவனுக்குத் திருமணம் செய்துவிடுவார்கள் என்று சொன்னதும் எங்கள் வீட்டிலும் ஒரு வழியாகச் சம்மதித்துவிட்டனர், நான் ரொம்ப கம்ஃபோர்ட் ஜேன்ல வளர்ந்த ஒருவள். என்னோட வீடு, அம்மாய் வீடு இந்த இரண்டிலும் தான் நான் மிகவும் கம்பர்ட்டபிளாக உணர்வேன். அது என்னுடைய இயல்பு. ஆனால் மீனு வீட்டுக்கு எப்படி போக சம்மதித்தேன் என்று இன்று வரை எனக்கும் தெரியவில்லை. எங்க வீட்டு ஆளுங்க பத்து பேரு சம்மதத்தை வாங்கிறதுக்கு உள்ள நானும் ஒரு வழி ஆகிட்டேன். ஓ காட். எனக்கு ஓட்டு வீடு என்றால் மிகப் பிடித்தம். அதுவும் செட்டி நாடு பாணியில் மழை நடுவில் விழுமாறு அமைக்கப்பட்ட வீடுகள் என்றால் கொள்ளைப் பிரியம். அப்பா அம்மா தங்கியிருந்த வீடு அப்படித்தான் இருக்கும். ரொம்பவும் ஸ்பேசோட இருக்கும். மார்டன் ஆர்க்கிடெக்சரில் ஒரு வித உயிர்ப்பு இல்லாதது போன்று தோன்றும். பழைய வீடுகளில் அதுவரை வாழ்ந்து விட்ட மனிதர்களின் சுக துக்கங்களைத் தாங்கி உயிர்ப்புடன் இருப்பதாகத் தோன்றும்.

மீனு வீட்டைப் பத்தி எனக்கும் எந்தக் கவலையும் இல்லை. என்னோட நோக்கம் படிக்கறது மட்டும்தான் .ஆனால் மீனினி வாட்ஸப்பில் வீடியோ காலில் அழைத்தாள். வீடியோகால் ஹோம் டூர் . “எங்க வீடு எப்படி இருக்குனு பாருங்க? “ என்று ஒவ்வொரு பகுதியாகச் சுற்றிக் காண்பிக்க ஆரம்பித்தாள்.

இரண்டு மாடிகளுடன் நவீன கட்டமைப்புகளுடன் கட்டப்பட்ட வீடு அது. சிம்பிளி பூயூட்டிபுள். சமையல் அறை , ஹால் பூசை அறை , அவளுடைய ரூம் , மாடி பாத்ரும் என்று ஒன்றையும் விடாமல் சுத்திக் காட்டினாள்.

அவளுக்கு நான் அடிக்கடி என் அப்புச்சி தென்னை மரத் தோப்பையும் , வயல்களையும் சுற்றிக் காட்டுவேன். எனக்குப் பிடித்த தென்னை மரத் தோப்பைக் காட்டி இது என்னை மிகவும் அமைதிப்படுத்தும் என்று நானும் வீட்டு டூருக்குப் பதிலாகக் காட்டினேன்.

ரொம்பவும் எக்சைட்மெண்டுடன் மீனு வீட்டுக்குப் போகும் நாளை எண்ணிக் காத்திருந்தேன் என்று சொல்லலாம். எங்க அம்மாய் வேறு நூறு அறிவுரை. என்னுடைய குணத்துக்கு எப்படி அட்ஜஸ்ட் செய்து இருப்பேன் என்று புலம்பிக்கிட்டே இருப்பார்கள். எனக்குப் பிடிக்காத இடத்தில் என்னை ஒருவராலும் தங்க வைக்க இயலாது. அதே மாதிரி தான் மனிதர்களுக்கும். ஆனால் எந்த ஒரு இடத்தையும் எந்தக் குறை இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டும் என்னால் இருக்க முடியும். எந்த ஒரு மனிதனும் , எந்த ஒரு இடமும் பர்ஃபெக்ட் கிடையாது. என்னோட யூஜி ஹாஸ்டல் வார்டன் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார். “எல்லா இடத்திலும் நீ அட்ஜஸ்ட் பன்னி இருந்துக்கிற நீ.” அப்படிப்பட்ட என்னைப் பார்த்து என் வீட்டினர் புலம்புவார்கள். சோ சேட் பட் நாட் மச்.

மீனு வீட்டுக்குச் செல்வதற்கு ஆயத்தங்கள் செய்யத் தொடங்கினேன். டிராலி வேண்டியது இல்லை. சிம்பிளா ஹேண்ட் பேக் போதும் என்று நினைத்தேன். வார இறுதி நாட்களில் எப்படி இருந்தாலும் வீட்டுக்கு வந்து விடுவதாகத் திட்டம். அப்புறம் புக்ஸ் வேற நிறைய எடுத்துச் செல்லும் மாறு இருக்கும் . அதையும் மீனுவின் அப்பாவின் மூலம் முன்னாடியே கொடுத்து விட்டுட்டோம். நானும் மீனுவும் பக்காவா தலைவர் அறிவுரையான “எல்லாத்தையும் பிளான் பன்னி பன்னனும் “ என்பதை சரியாகக் கடை பிடித்தோம்.

அதற்குப் பிறகு பிப்ரவரி ஒன்றாம் தேதி மீனு வீட்டுக்குச் சென்றேன். மீனுவிடம் பஸ் ரூட் எல்லாம் கேட்டு விட்டேன். பஸ் நம்பர்ஸ் எல்லாம் வாட்ஸப்பில் மெசேஜ் செய்துவிட்டதால் எனக்கும் சுலபமாக இருந்தது.

மீனினியின் ஊர் ஈசா போகும் வழியில் இருந்தது. கோவை மாநகரை ரசித்தப்படி பயணத்தைத் தொடர்ந்தேன். ஊர் வந்ததும் மீனுவுக்கு அழைத்தவுடன்.

அவள் வந்து என்னை அழைத்துச் சென்றுவிட்டாள்.

ஒரு சிறு ரோட்டில் நுழைந்ததும் முதலில் இருந்தது அந்த ஊரின் பெயரிலேயே இருந்த அம்மன் கோவில்தான். ஊர் மக்கள் சிலரும் அங்கு இருந்தனர்.

கோவிலுக்குப் பின்னே தான் வீடு அமைந்திருந்தது. மீனினியின் அத்தை வீடு அருகில் தான் அமைந்திருந்தது. அவர்கள் அனைவருக்கும் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.

மீனுவின் அம்மா அப்பாவை அங்கிள் ஆண்ட்டி என்றே அழைத்தேன் . என் அப்பா அம்மாவைத் தவிர யாரையும் அப்பா அம்மா என்று அழைக்க எனக்கு அவ்வளவுவாக வராது.

மீனுவின் ரூம் மாடியில் அமைந்துள்ளது. அதனால் அங்கு சென்று பொருட்களை அடுக்கினோம். மீனு ஸ்டடி ரூம் அவளுடைய அண்ணன் ரூம். மீனு ரூமில் ஒரு விஷேசம் உண்டு. அதில் கொஞ்ச நேரம் இருந்தால் தூக்கம் வந்து விடும். அதனால் ஸ்டடி ரூமாக அதைப் பயன்படுத்தினாள். நான் அந்த ரூமில் கொஞ்ச புத்தகங்கள் இந்த ரூமில் கொஞ்ச புத்தகங்கள் என்று மாற்றி மாற்றி வைத்திருந்தேன். ஆண்ட்டி மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டார்.

மீனு செய்யும் வேலைகள் எல்லாம் நான் அவள் வயதாயிருக்கும் போது செய்தது இல்லை. மீனு என்னை விட நன்றாக சமைப்பாள். என்னதான் கிராமத்தில் வளர்ந்தாலும் என் ஊரில் என் வயதில் இருக்கும் ஆட்கள் செய்யும் வேலையை நான் செய்தது இல்லை.

மீனு என்னதான் லேசினாலும் வேலையை நிதானமாக செய்து முடிப்பாள். முதல் நாள் நன்றாகச் சென்றது. நிறையப் பேசிக் கொண்டே இருந்தோம். சாப்பிடும் போது அனைவரும் பெரும்பாலும் காலை மற்றும் இரவு நேரங்களில் ஒன்றாகத் தான் சாப்பிடுவார்கள். நானும் ஜோதியில் ஐக்கியமாகிட்டேன். டைம் டிப்ரன்ஸ் ரொம்ப இருந்தது. எங்க வீட்டில் ஒன்பது மணிக்கே இரவு உறங்கி விடுவர். ஆனால் இங்கு சாப்பிடுவதே ஒன்பது மணிக்குத்தான். ஏழு மணிக்கே கொட்டிக் கொள்ளும் பழக்கம் இருக்கும் ஆள் நான்.

அதே நேரம் காலையில் நான்கு மணிக்கே கண்விழிப்பது எங்கள் வீட்டு வழக்கம். மீனு வீட்டில் எழுவதே ஆறு மணிக்குத்தான். மீனுவின் அப்பாவுடன் பேசும் பொழுதுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு வாரம் அகாடமியில் நேரம் விரைவில் கழிந்தது. ஆனால் வார முடிவில் எனக்கு ஒரு பிரச்சினை வந்து சேர்ந்தது. எனக்கு மண்ணாங்கட்டி மாரியாத்தா என்றழைக்கப்படும் பொன்னுக்கு வீங்கி வந்து விட்டது. நாம படிக்கலானு கிளம்புனாதான் எங்கோ இருக்கற வைரஸ் ஏம்மேல ஏறாத்தா மாதிரி ஏறித் தொலைந்தது.

“வாட் பொன்னுக்கு வீங்கி , மாரியாத்தா ?’ யோசித்தான் தேவ். சரி இருக்கவே இருக்கு கூகுளாத்தாள் என்று அதில் பொன்னுக்கு வீங்கி என்று அடித்து தேடியதும் அவனுக்கான பதில் கிடைத்தது. அதைப் பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டது. இதுதான் அந்த வைரஸா? என்று சிரிப்பு வந்தது.

வாய் கண்ணம் விங்கி விட்டது. சாப்பிட வேற முடியல. ஆண்ட்டி நானே பார்த்துக்கிறேன் என்றார்கள். ஆனால் எனக்குத்தான் சங்கடமாக இருந்தது. மீனுவும் அதைத்தான் சொன்னாள். ஆனால் என் வீட்டினரும் கிளம்பி வரச் சொல்லி விட்டனர்.

போனது தான் போனேன். மாத்தி மீனுவோட மோட்டோ சார்ஜரையும் தூக்கிப் போட்டுட்டு போய் அவளைச் சிரமப் படுத்திவிட்டேன். அந்த சார்ஜர் அதிகமாகக் கிடைக்காது. பாவம் அவள். அதற்குப் பிறகு தெரிந்த ஒருவரிடம் சார்ஜரை வாங்கி பயன்படுத்தி இருக்கிறார்கள்.

எங்க வீட்டில் வேற வேப்பிலையும் , மஞ்சளும் அரைத்துப் பூசி விட்டனர். என்னுடைய கன்னம பன்னு மாதிரி வீங்கிக் கிடந்தது. கூட ஒரு தங்கச் சங்கிலியும் கழுத்தில் அணிவித்து விட்டனர், மாரியாத்தா தங்கத்துக்கு ஆசைப்பட்டு நோயைத் தருவதாகச் சொல்வார்கள், அது ஒரு மூடநம்பிக்கை. ஆனாலும் தமிழில் இந்த நோயை பொன்னுக்கு வீங்கி என்று அழைப்பார்கள்.

நல்லா வீங்குச்சு. என் வீட்டில் அந்தப் போனைப் பார்க்காமல் தூங்கு என்று அறிவுரை வேறு. தூக்கம் வந்தா தூங்க மாட்டாமோ? வெயிலில் வெளியில் செல்லக் கூடாது. எனக்கு பொழுது சென்றதே மீனினியின் போன் கால்சால் தான். இதிலும் எனக்குத் தொண்டை வீங்கிச் சரியாகப் பேச முடியவில்லை. ஆனாலும் இருவரும் பேசிக் கொண்டே இருந்தோம். எங்களுக்கு பேசுவதற்கு கண்டெண்ட் இல்லாமல் இருக்காது. ஐந்து நிமிஷத்தில் வைக்கிறோம் என்ற போன் கால் குறைந்தது இரண்டு மணி நேரமாகிவிட்டும்.

வெற்றி மீனுவுடன் கான்பிரசில் வந்து “வாயைக் குறை பார்ட்னர் “ என்று அட்வைஸ் வேறு. ஆமாம் வீட்டிலும் என்னை யாரும் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். ஆனால் தினமும் மீனினியும் நானும் பேசாமல் இருக்க மாட்டோம். அகாடமியிலும் மெயிலில் லீவ் கேட்டதால் பிரச்சினை இல்லை.

ஒரு வாரம் கழித்து மீண்டும் கோவை திரும்பி மீனு வீட்டுக்கு வந்தேன். நாம எங்காவது போய் நொறுக்குத்தீனி கொடுக்காமல் விட்டிருக்கிறார்களா? மீனு வீட்டில் அப்படியே கொண்டு போய் கொடுத்தாச்சு.

நானும் மீனுவும் மறுபடியும் அகாடமி சென்றோம். மீனுவின் மாடியில் இருந்துப் பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் அழகை ரசிக்கலாம். நானும் அடிக்கடி நின்று ரசிப்பேன். இரவு நேரம் நிறையப் பேசுவோம். அவளுடைய விஷயங்கள் எல்லாம் என்னிடம் சொல்வாள்.

இப்படி இருக்கையில் நான் மீனு ரூமில் மெத்தையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். மீனு பேசிட்டு அந்தப் பக்கம் போனாள். திரும்ப வந்து ஒரு விஷயம் சொன்னாள். எனக்கு ஹார்ட் அட்டாக் வராத குறைதான்.


அலைவான்............
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம்-34

முதல் பால் vs இரண்டாம் பால்

பெக்கி ஒரு விஷயத்தை எழுதும் போது என்ன நடக்கும் என்றால் திரும்பவும் அதே நிகழ்வை நம் மனதில் நடந்ததுபடி நினைப்போம். அந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நடக்கும் போது இருந்த உணர்வு மீண்டும் மனதில் எழும். அதனால் இந்த விஷயத்தை எழுதறது எனக்கு மீண்டும் அப்போது நான் உணர்ந்த அதே வலியை உருவாக்கும். நெஞ்சின் நடுவே பாரம் கூடும்.

மீனினி சின்ன வயதில் இருந்தே நிறைய சாப்பிடுவாள். அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவாள். அதனால் பத்து வயதில் அவளுடைய உடல் எடை ஐம்பதைத் தொட்டிருந்தது. அவள் உயரம் அதிகம் தான். நான் அவள் தோள்பட்டை அளவே இருப்பேன். பதிமூன்று வயதில் முப்பது கிலோவில் இருந்து முப்பத்தி ஒரு கிலோ ஏற்ற என்னுடைய டாக்டர் அவ்வளவு சிரமப்பட்டார்.

ஆனால் மீனுவின் நிலையே வேறு. அவள் சாப்பிட்டுக் கொண்டே இருந்தாள். பின்ஞ் ஈட்டிங்க் என்று அளவுக்கு அதிகமாக சாப்பிடும் வழக்கம் இருந்தது. அதே சமயம் சின்ன சிறு குழந்தைகள் பக்கத்து வீடுகளில் இருக்கும் குழந்தைகளுடன் விளையாட ஆசைப்படும். விளையாட ஆரம்பிக்கும். வெற்றியும் நானும் சின்ன வயதில் விளையாடிக் கொண்டே இருப்போம்.

மீனினி அந்த மாதிரி இல்லை. மீனினி வீட்டிலேயே அடைந்து கிடைந்தாள். வீட்டினர் மட்டும் தான் உலகம். அவர்கள் பெற்றோர்கள் பெருமையாக “ என் பொண்ணுக்கு பிரண்ட்ஸே கிடையாது “ என்று சொல்லும் அளவு வைத்திருக்கும்படி அவளது நடத்தை இருந்திருக்கிறது. என் பக்கத்தில் பெண்கள் என்றால் வீட்டோடு அடங்கி ஒடுங்கி இருந்தால் தான் நல்ல பெண் என்று கூறுவார்கள்.

இவ்வளவு ஏன் யுஜி படிச்சுகிட்டு இருக்கும் போது கல்லூரி விடுதியில் இருந்து வீட்டுக்குத் திரும்பினால் நான் வேறேங்கும் செல்ல மாட்டேன். ஏனென்றால் இவ்வளவு நாள் வெளியில் இருந்திருக்கிறோம். அதனால் வீட்டில் இருப்பேன். அதற்கு என் பக்கத்து வீட்டுப் பெண்மணி “உங்க பொண்ணு இருக்கற இடமே தெரியாம அமைதியாக இருக்குதுங்க.” என்று என் அம்மாவிடம் பாராட்டிச் சென்றிருக்கிறார்.

இதெல்லாம் என்னைப் பற்றியா இப்படிப் பேசினார்கள் என்று வியந்த போன விஷயங்கள். அதே அம்மாள் நான் ஹாஸ்டல் டேவில் ஆடிய ஆட்டத்தைப் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்.

ஆனால் மீனினிக்கு நண்பர்களே அவர்களின் கசின்ஸ் மட்டும் தான். அதுமட்டுமில்லாமல் அவளுக்கு சோஷியல் ஆன்சைட்டி இருந்திருக்கிறது. வகுப்பில் பதில் தெரிந்தாலும் எழுந்து பதில் சொல்லப் பயம். அகாடமியில் படிக்கும் போது கூட அப்படித்தான். அவள் பதில் கூறி நான் பார்த்ததில்லை.

“எனக்கு எல்லார் முன்னாடியும் பேச ரொம்ப பயம் கா. டீச்சர்ஸ்ட்ட பதில் சொல்லறதுக்கும் பயம்.”

அதுமட்டுமில்லாமல் முன் பின் தெரியாத ஆட்களிடமும் பேச பயம். கொஞ்சம் ஷோஷியல் ஆன்சைட்டி இருக்கிறது. சிறு வயதிலிருந்தே அவளுக்கு வீட்டில் எதும் பெரியதாக வேலைகள் இருந்ததில்லை. விளையாட எங்கும் சென்றதில்லை. மீனினிக்கு பிசிக்கல் ஆக்டிவிட்டி கிடையாது.

பள்ளிக் கூடத்தில் டீனேஜிற்கு பிறகு சில நண்பர்கள் அமைந்திருக்கிறார்கள். ஆனால் அடிக்கடி அவளுக்குச் மனச் சோர்வாக இருக்கும். அடிக்கடி தற்கொலை எண்ணமும் வரும். இதெல்லாம் எதற்கு என்று மட்டும் தெரியவில்லை.

அகாடமியில் வகுப்பில் நாங்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். அன்று பார்த்து நான் முதல் ரோவில் அமரவில்லை. மீனினிக்கு அருகில் அமர்ந்திருந்தேன். வழக்காமாக மாணவர்களுக்கு மைக் ஏதாவது விழா என்றால் மட்டும் தருவார்கள். சாதராணமாக வகுப்பு நடக்கும் போது மைக் மாணவர்களிடம் வராது. நார்மலாகப் பேசுவோம். அன்று வேறு சமூகப் பிரச்சினைகளைப் பற்றி தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தோம். பெண்களுக்கு உள்ள பிரச்சினைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். உனக்கே தெரியும் பெக்கி. பெண்கள் எந்த அளவுக்கு நசுக்கப்படுகிறார்கள் என்று.

முதல் முறை ஒரு மாணவன் பேசினான். அவன் எப்பவும் வகுப்பில் பதில் அதிகமாகப் சொல்லும் ஆட்களில் ஒருவன். ஐ மஸ்ட் சே ஹி இஸ் பிரிட்டி.

ஆனால் அன்று மட்டும் ஏதோ நடுங்கும் குரலில் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் இந்த விஷயத்தையும் மக்கள் முன் வந்து பேச வேண்டும் என்று சொன்னது காதில் விழுந்தது. எனக்கு அந்த உணர்வைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவ்வளவு பெரிய ஹாலில் எனக்குச் சரியாக காதில் அவன் பேசியது விழவில்லை.

அவன் பேசிய விஷயம் தான் மீனினியை என்னிடம் அந்த விஷயத்தைக் கூற வைத்தது. அவ அதைச் சொன்ன விதம் இருக்கே “அக்கா காபி குடிச்சேன் “ அப்படினு சொல்ற மாதிரி இயல்பா சொல்லிவிட்டு என் மனதில் பாரத்தை ஏற்றிவிட்டது தான் மிச்சம்.

கதவு நிலவில் சாய்ந்து கொண்டே “அக்கா ஐ வாஸ் ரேப்ட் டூயூரிங்க் சைல்ட்குட்.” மீனினி என்னிடம் சொன்னது இதுதான். அவ்வளவு சீக்கிரம் அசராத என்னையே அதிர்ச்சியாக்கின பெருமை அவளை மட்டுமே சேரும்.

“வாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்? அத காஃபி குடிச்சங்கற மாதிரி சொல்ற?” என்று அதிர்ச்சியுடனே கேட்டேன்.

“எப்போ எப்படி ?”

“ஐஞ்சு வயசாக இருக்கும் போது.”

“அப்புறம் ஏன் யாருக்கும் சொல்லல?”

“எனக்கு டென்த் படிக்கும் போதுதான் நியாபகம் வந்தது.”

“ஏன் கிட்ட மட்டும் ஏன் சொன்ன?”

“உன் கிட்ட மட்டும்தான் கம்பர்ட்டபிளா பீல் செய்ய முடியுது.”

தண்ணீரை எடுத்து மட மட வென்று குடித்தேன். நெஞ்சின் நடுவே ஏறிய பாரம் குறையவே இல்லை.

அன்று இரவு உறங்குவதற்குள் நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். நான் சைக்காலஜி பீல்ட்ல இருந்திருந்தா எனக்கு இவ்வளவு அதிர்ச்சி இருந்திருக்காது. ஆஃப் பீல்ட் வந்துட்டு திரும்ப உள்ள போன மாதிரி இருந்தது.

அவளிடம் இந்த கன்பெஷனுக்கு பிறகு மறுபடியும் அமர வைத்துப் பேசினேன்.

“இப்ப ஏன் உனக்கு சொல்லனும் தோணுச்சு?”

“இன்னிக்கு கிளாஸில் அந்த சொன்ன விஷயம் என்னை டிரிகர் செஞ்சுருச்சு. “

“எந்த அண்ணா? என்ன விஷயம்?”

“அதான் சங்கர் அண்ணா. “

“பிரண்ட் ரோ பாய். அவன் என்ன சொன்னான்?”

“அவன் சொன்னது நீ கேட்கலயா அக்கா?”

“அவன் ஏமோஷனலான பேசுனான். அது மட்டும் புரிஞ்சுது. ஆனா கண்டென்ட் என்னனு எனக்குக் கேட்கல.”

“அந்த அண்ணாவை சின்ன வயசாக இருக்கும் போது அவருக்குப் பாடம் எடுத்த டீச்சரே அவங்கள செக்ஸ்யுவல் ஆப்யூஸ் செஞ்சுருக்காரு. நிறைய தடவை. அதத்தான் அவரு சொன்னாரு. பொண்ணுங்க ரேப் பத்தி பேசுற எல்லாரும் அந்த அளவுக்கு ஆண்கள் ரேப் செய்யப்படறதப் பத்தி பேசறது இல்லை. ஏன் சட்டமும் கூட இல்லை. நிறைய ஆண்களும் இதை வெளியில் சொல்றதுக்கு முனவரது இல்லை. ஏன்னா பசங்களுக்கு இந்த மாதிரி நடந்துச்சுனு சொன்னா அத கேலியாகத்தான் பார்க்கிறாங்க. இந்த விஷயமும் வெளியில் பேசப்படனும் . இதத்தான் அந்த அண்ணா சொன்னாங்க. அதனால தான் எனக்கும் தைரியம் வந்துச்சு.”

“வீட்டுல தெரியுமா? “

“இல்லைக்கா சொல்ல தைரியம் இல்லை. ஆனால் ஒரு தடவை என்னோட பூயூச்சர் சிஸ்டர் இன் லாகிட்ட சொல்ல டிரை செய்துருக்கேன். அதுவும் இன் டைரக்டா. ஆனால் அது எல்லாம் நானே இமேஜின் பன்னிகிறேனு அப்படியே அத கண்டுக்கவே இல்லை. இவளே என்னைப் புரிஞ்சாகத்த எங்க சொல்ல. நான் இத வீட்டுல சொல்லி என்னை வீட்டுல ஏத்துக்காம ரிஜக்ட் செய்துட்டா என்னால அத மட்டும் தாங்கவே முடியாது.”

நான் தலையை மட்டும் ஆட்டினேன்.

அவளுக்கு தீடிரென்று டென்த் படிக்கும் போது தீடிரென்று நியாபகம் வந்திருக்கிறது. அதிலிருந்துதான் தான் இதுவரை காரணம் அறியாமல் அனுபவித்த வேதனைகளுக்கு காரணம் தெரிந்திருக்கிறது. ஆனால் நினைவு வந்த பிறகு மேலும் அவள் நிலை மோசமடைந்ததே தவிர சரியாக வில்லை. ஒரு கட்டத்தில் தன் அப்பாவின் இயல்பான தொடுதலுக்குக் கூட எரிந்து விழுந்திருக்கிறாள்.

மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறாள். அவளுடைய மூட் சுவிங்க்ஸ் , சூசைட் தாட்ஸ் குறையவே இல்லை. அதையும் மீறி எப்படி வாழ்ந்தாள் என்றால் எனக்குச சாகிற அளவுக்குத் தைரியம் பத்தாது என்பாள்.

பதினைந்து வருடத்திற்கு மேலாக நைட் டெடரில் வாழ்ந்திருக்கிறாள்.

நான் ஒரு தடவை இந்த் மாதிரி ஒரு விசயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு பெண்ணுக்கு தான் சிறுவயதில் வன்புணர்வு செய்யப்பட்டது மறந்துவிட்டது. அது அறுபது வயதில் நினைவுக்கு வந்து கோர்ட்டில் வழக்குப் போட்டுவிட்டார், அவருக்கு செலக்டிவ் அம்னீசியா இருந்திருக்கிறது. தாங்க முடியாத ஒரு நிகழ்வை மனமே மறக்கடித்துக் கொள்ளும். அதுதான் அவர்களை தங்கள் வாழ்வில் மேலும் வாழ உதவும்.

ஆனால் மீனினி மறந்தாலும் அவள் ஆழ்மனதில் அது அப்படியே தான் இருந்திருக்கிறது. அதுதான் அவளுடைய அதிகப்படியான சாப்பிடுதல் , யாரிடமும் பழகாமை என்ற குணங்களை வலுப்படுத்தி இருக்கிறது.

மீனினி இதிலிருந்து எப்படியாவது எஸ்கேப் ஆக முயற்சி செய்திருக்கிறாள். அந்த டைவர்சன்தான் காதலில் விழ முயற்சி செய்திருக்கிறாள். ஆனாலும் அதுவும் வேலைக்காகவில்லை. தன்னை மட்டும் அப்படியே ஏற்றுக் கொண்டு அன்பைச் செலுத்தும் ஒரு உறவைத் தேடினாள்.

இன்னமுன் என் மனதில் ஏற்பட்ட வலி அப்படியே இருக்கிறது. அவனைக் கொல்ல வேண்டும். மீனினியை சைல்ட்கூட் அடல்ட்கூட் என்று அனைத்தையும் பாழாக்கியது அவள் சிறு வயதாக இருக்கும் போது அவர்கள் வீட்டுக்கு அருகில் தங்கியிருந்த ஒரு பதினாறு வயது பையன். இப்போது அவனுக்கு வயதாகி விட்டது.

பக்கத்து வீட்டில் அடிக்கடி விளையாட அவளைத் தூக்கிச் செல்வான் அவன். அப்படி கிடைத்த ஒரு நாளில் மீனினியை இவ்வாறு செய்துவிட்டான். அதற்குப் பிறகுதான் மீனினி முழுதாக மாறிவிட்டாள்.

அலைவான்....


டைரி இயல்பாக இருக்க வேண்டும் என்று தமிழ் , ஆங்கிலம் , கொங்கு தமிழ் கலந்து எழுதி இருப்பேன். பிழைகளும் விட்டிருப்பேன். ஏனென்றால் பிழை இல்லாமல் எழுவது சாத்தியம் கிடையாது. நாம் எடிட் செய்யலாம். ஆனால் ஒரு பர்பெக்ட் டைரியைப் பார்க்க முடியாது.
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -35



இந்த கன்பஷனுக்குப் பிறகு மறுபடியும் ஒரு வாரம் கழிந்தது. அவளைக் குஷிப் படுத்த டவுன் ஹாலில் உள்ள பேமஸ் பிரியா ஜீஸ் கார்னருக்குச் சென்றோம். பர்கர் சாப்பிட்டோம்.

அடுத்த நாளிலிருந்து எனக்கு உடல் அரிக்க ஆரம்பித்து விட்டது. சிவப்பு சிவப்பாகத் தடிப்புகள் வேறு. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. டிரஸ்ஸில் ஏதாவது பிரச்சினையா என்று ஆராய்ந்தேன். அதில் பிரச்சினை இல்லை என்றதும் சாப்பிட்ட பர்கரால் அலர்ஜி ஏற்பட்டதோ என்று எண்ணம் தோன்றியது. வாய்ப்பே இல்லை . எனக்கு எந்த சோப் , ஷாம்பூ, உணவுப் பொருட்களும் அலர்ஜியைத் தராது.

அதற்குப்பிறகு பக்கத்தில் ஒரு டாக்டரிடம் மாத்திரை வாங்கிப் போட்டேன். ஒரு மாதிரியாக இருந்தது. எக்கனாமிக் சர்வே ஸ்பெஸல் கவேரஜ் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அட்டண்ட் செய்துவிட்டேன். மறு நாள் அட்டண்ட் செய்துவிட்டு என் உறவினர் கல்யாணத்திற்காக அம்மாய் ஊர் திரும்புவதாகப் பிளான். ஆனால் அதுதான் நடக்கவில்லை. அன்று இரவே காய்ச்சல் வந்துவிட்டது. கைகால் எல்லாம் வீங்கி விட்டது.

டெம்பச்சேர் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஒரு பாரசிட்டமால் போட கட்டுப்பட்டது. ஆண்ட்டியிடம் மட்டும் வீட்டினரடிடம் போன் செய்து சொன்னேன்.

என்னை வீட்டுக்கு வரச் சொன்னதால் நானும் அம்மாவும் மருத்துவமனை செல்வதாக முடிவெடுத்தாயிற்று. மீனுவை என்னை டவுன் ஹால் வரை விடும் படி சொல்லிவிட்டேன். அவள் வீட்டிலும் என்னை அனுப்ப விடவில்லை. ஆனால் நான் கொஞ்சம் தெம்பாகத் இருந்தேன். சிலவற்றைப் பேக் செய்து கிளம்பி காங்கயம் சென்றேன். அம்மாவும் வந்துவிட ஹாஸ்பிட்டலில் பிளட் டெஸ்ட் எடுக்க வைரல் பிரசன்ஸ் என்று வந்தது. ஆனால் அம்மாய் அம்மை பார்த்திருக்க வாய்ப்பு இருக்கு என்றார்கள்.

மருத்துவமனையிலிருந்து வீடு. அன்று சரியான காய்ச்சல் மற்றும் சிவப்பு தடிப்புகள் மீண்டும் அடுத்த நாள் வர அம்மை பார்த்திருக்கிறது என்று முடிவு செய்துவிட்டார்கள். பொன்னுக்கு வீங்கியைத் தொடர்ந்து இப்படி சில சமயங்களில் அம்மையும் வருமாம். நாம படிக்கனும் கிளம்பறது எந்த வைரஸ்க்கும் பிடிக்கவில்லை.

மறுபடியும் முதலில் இருந்து டீரிட்மெண்ட். படுத்தே கிடந்தேன். மீனினி கால்ஸ்தான் பொழுது செல்லக் காரணம். சரியான பின் மீண்டும் கோவை திரும்பினேன். மீனினி வீட்டை நெருங்கும் சமயம் வாட்ஸ் அப் மெசேஜ். அகாடமியில் வகுப்புகள் கொரானாவை முன்னிட்டு கால வரையின்றி ரத்து செய்யப்படுகின்றது. மறுபடியும் ஒரு வைரஸ்.

லாக்டவுன் போடறது உறுதி என்றாகிவிட்டது. அதனால் அன்று மட்டும் மீனினி வீட்டில் தங்கிவிட்டு டிரஸ் கொஞ்சம் , புக்ஸ் கொஞ்சம் , லேப்டாப் சகிதமாக அடுத்த நாள் காலை வீட்டுக்குத் திரும்பிவிட்டேன்.

வீடு வந்த அடுத்த வாரத்தில் லாக் டவுன் ஆரம்பித்திருந்தது.

வாரிவிட்ட வைரஸ்கள். ஆனால் இந்த கொரானா வைரஸ் மட்டும் உலகத்துக்கே வந்து பாண்டமிக்காக மாறி பலரின் வாழ்வை பதம் பார்த்துவிட்டது. என் அம்மாய் வீட்டுக்கு வந்துவிட்டேன். சொல்லப்போனால் என் வாழ்க்கையில் மற்றும் என் ஊர் மக்களின் வாழ்விலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கால்நடை வளர்ப்பு என்பதால் வாழ்க்கை அப்படியேதான் இருந்தது.

சிம்பிளி நத்திங்க் சேஞ்ட் இன் அவர் லைஃப். சில சில மாற்றங்கள். பேருந்துகள் வரவில்லை. லாரிகள் புழுதியுடன் பறக்கவில்லை. அவ்வளவுதான் . நடு ரோட்டில் அமர்ந்து போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டேன்.

‘இதற்கு மாறாக மீனினி வீட்டில் அடைந்து கிடக்க வேண்டிய நிலையாகிப் போனது. அவள் என்ன செய்வாள்? அவளுக்கு இருந்த ஒரே அவுட்லெட் அகாடமி சென்று படிப்பதுதான். ஆனால் அவள் வீட்டில் உடலைக் குறைக்காமல் இருப்பதற்காக அவளை பாடிஷேமிங்க் செய்ய ஆரம்பித்தனர்.

“இப்படி குண்டாக இருந்தால் உன்னை யாரு கல்யாணம் செஞ்சுக்குவான். உன்னைக் கல்யாணம் செய்தாலும் வேறு ஒரு பெண்ணைத் தேடிப் போயிருவான்..எக்ஸ்டா ….”

இது கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தது. வீட்டில் இருப்பதே மூச்சு முட்டுவதே போலிருக்க அவள் மிகவும் சிரமப்பட ஆரம்பித்தாள். இடையில் கொஞ்சம் விதிகள் தளர்த்தப்பட்ட போது மீனினி வீட்டிலிருந்த புத்தங்களை வெற்றி வாங்கி என் சித்தி வீட்டில் கொடுத்துவிட அவர்கள் இங்கே அம்மாய் வீட்டில் கொண்டு வந்து தந்துவிட்டனர்,

கிட்டதட்ட என்னிடம் மூன்று மாதங்களுக்கு மேல் புத்தகங்கள் இல்லை. லேப்டாப் இருந்ததால் இ புக்ஸ் வைத்து சாமாளித்தேன்.

நாங்க எல்லாரும் பிரிலிம்ஸ் அட்டம்ட் கொடுத்தோம். அடுத்தநாள் மீண்டும் மீனுவின் வீட்டுக்குச் சென்றேன். மீதமிருக்கும் பொருட்களையும் எடுத்துக் கொண்டு வீடு திரும்பிவிட்டேன்.

ஆனால் மீனினியின் அண்ணனுக்கு இடைப்பட்ட காலத்தில் திருமணம் ஆகியிருந்ததால் மீனுவிற்கு அழுத்தம் கூடியது. அவளைத் திருமணத்திற்காக உடலைக் குறைக்கும்படி வற்புறுத்தினார்கள். திட்டினார்கள். போன்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று அதைப் பிடுங்கி வைத்துக் கொண்டிருந்தனர்.

மீனுவிடம் இயல்பாக எடுத்துச் சொல்லியிருந்தாள் கேட்டிருப்பாளோ என்னவோ ? அவளை அவமானப்படுத்தவும் அவளுடைய மனநிலை மிகவும் பாதிக்கப்பட ஆரம்பித்தது.

எவ்வளவு நாள் போன் செய்து அழுதிருக்கிறாள். எனக்கு அவள் பேரண்ட்ஸ் மீது ஒரு விஷயத்தில் கோபம். அவர்கள் பெண் சிறு வயதிலிருந்த அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு இருக்கிறாள். வெளியில் மற்ற குழந்தைகளுடன் பழகாமல் ஷோஷியல் ஸ்கில்ஸ் பற்றாற்குறையுடன் வளர்ந்திருக்கிறாள். அப்போது கவனிக்காமல் இப்போது டார்ச்சர் செய்வதால் என்ன பிரயோஜனம். அவள் சந்தோஷமாக இல்லை என்று ஏதாவது சொன்னால் “நீ கேட்டது எல்லாம் வாங்கித் தந்திருக்கிறோம் ?” என்று பதில் வரும்.

ஆனால் பொருட்களால் மட்டும் சந்தோஷம் , மனநிம்மதி கிடைத்துவிடுமா? தான் பொண்ணு சந்தோஷமாக இருந்திருக்கிறாள். அவளுக்கு என்ன குறை என்ற பிம்பத்தில் அவர்கள் இன்னமும் வாழ்கின்றனர். தான் பெண்ணுக்கு இப்படி அநீதி நடந்து அதனால் அவளுடைய குணமே மாறிப் போனது இன்னும் தெரியவில்லை. அது அவர்கள் குடும்பத்தையே அடியோடு புரட்டிப் போடும் புயல்.

தனக்கு நினைவு வந்த பிறகும் போலிச் சிரிப்புடன் வாழ்ந்து வருகிறாள். எனக்குப் பேசிய கால்களில் அவள் அழுது கொண்டே பேசியது அதிகம். தற்கொலை பற்றிப் பேசியது அதிகம்.

மீனினியின் காயத்திற்கு அவள் குடும்பத்தினரின் ஆறுதல் என்ற முகவரி கிடைக்குமா என்று தெரியாது. இருட்டான , நீரே இல்லாத கிணற்றில் விழுந்த அவளுக்கு வெளிவரும் வழி தெரியவில்லை. வெளியே வர முயற்சிக்கும் போது அவள் வீட்டில் கிடைக்கும் உடல் பருமன் சம்பந்தமான பேச்சுகள் அவளை மீண்டும் அதே கிணற்றில் தள்ளி விடுகின்றன. அவளும் தவித்துக் கொண்டிருக்கிறாள்.

இதில் வர்ஜ்னிட்டி சார்ந்த கருத்துகள் வேறு. வர்ஜினிட்டி சார்ந்த மூட நம்பிகைகள் நிறைய இருக்கின்றன. தன் திருமண வாழ்வை எண்ணி அடிக்கடி கலக்கம் கொள்கிறாள். வர்றவன் இதை ஏத்துக்கலான நான் என்ன செய்யறது என்று வருத்தப்படுவாள்.

ரேப் ஒரு ஆக்சிடெண்ட் என்று எல்லாரும் தூக்கி வீசிவிட்டு கடக்க முடியாது. அது அனுபவித்தவர்களின் வலி. அதை நம்மால் புரிந்து கொள்ள முடியாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் ஏற்றுக் கொண்டால் நல்லாயிருக்கும். பெண்களை உடலைக் கொண்டு குணத்தை அளவிடும் சமூகத்தில் அது கடினம்.

உனக்குத் தெரியுமா? அவளால் தன்னை இழிவாகப் பேசிய சந்தியா செய்ததைக் கூட மன்னித்து விட்டாள். அவள் பெற்றோரின் திட்டுகளையும் அவள் அன்பு என்றுதான் கூறுவாள். தன்னை யார் ஹர்ட் செய்தாலும் மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனபாவம் அவளுடையது. எனக்கு அவளுடைய பெருந்தன்மை கிடையாது.

துரோகிகளை என்னால் மன்னிக்க முடியாது. மறக்கவும் முடிவதில்லை. என்னை ஹர்ட் செய்யாமல் பாதுகாக்கவும் வாழ்க்கை தந்த பாடங்களில் இதுவும் ஒன்று,

பார் பெக்கி, நான் இத எழுதிட்டு இருக்கேன். எப் எம்மில் “வாழ நினைத்தால் வாழலாம்..வழியா இல்ல இந்த பூமியில் “ என்ற பாடல் ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்ப சொல்லு. யார் ஸ்ட்ராங்க்? மீனுதானே. என்னிடம் இப்படி ஒரு விஷயத்தைச் சொன்ன முதல் ஆள் மீனினிதான். நமக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் எந்த மாதிரி ஒரு நிலையில் இருப்பார்கள் என்று கணிக்கவே முடியாது பெக்கி. முடிஞ்ச அளவுக்கு அன்றாடம் கடக்கும் நபர்களைப் பார்த்து ஒரு புன்னகை செய்யலாம். அது ஒரு சிறிய மகிழ்ச்சியை ஒருவருக்கு அளிக்கலாம்.

ஒன் ஸ்மைல் கேன் சேஞ்ச் லாட் ஆஃப் திங்க்ஸ்.

அப்புறம் நான் சொல்ல மறந்துட்டேன் பார்த்தியா ? நானும் மீனுவும் அடிக்கடி இம்சை அரசன் ஸ்டைலில் பேசிக் கொள்வோம். அவளை நான் மன்னா என்று அழைப்பேன். அவள் என்னை மங்குனி அமைச்சரே என்று அழைப்பாள். அதில் அப்படி ஒரு சந்தோஷம்.

ஆனால் நான் ஒரு இன்னசெண்ட் பர்சன் சொன்னா மட்டும் ஏத்துக்க மாட்டாள். ஏத்துக்காட்டி என்ன? நான் ஒரு இண்டலிஜண்ட் இன்னொசெண்ட். எனக்கு நிறைய விஷயங்களில் ஒன்றுமே தெரியாது. ஆனால் மீனுவுக்கு நிறையத் தெரியும். ஆனால் வீட்டில் அவள் ஒரு இன்னசெண்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவளுக்கு என்று ஒரு ஒப்பினியன் இருக்கக் கூடாது.

“எங்க வீட்டில் பொண்ணு என்றால் எப்படி இருக்கனும் தெரியுமா? ஒல்லியாக இருக்கனும். எல்லா வீட்டு வேலையும் செய்ய தெரிஞ்சுக்கனும். பேரண்ட்ஸ் என்ன சொன்னாலும் அத அப்படியே கேட்டு நடந்துக்கனும். நமக்குனு சொந்தமாக எந்த ஒரு விருப்பமும் இருக்கக் கூடாது. இப்படி ஐடியலா ஒரு பொண்ணு இருக்கனும். ஏன்னால் இந்த ஸ்டான்டர்டா மீட் செய்ய முடியல அக்கா. பொண்ணுங்கனா கல்யாணம் பன்னிக் கொடுத்து புள்ள பெத்துக்கற மிஷினா மட்டும்தான் பார்க்கறது எனக்குப் பிடிக்கல,” என்பாள்.

மீனினி வீட்டில் அவள் சுடிதாரைத் தவிர வேறு எதுவும் அணியக் கூடாது. தலை கூட சைட் வாக்கில் எவுர் எடுத்துச் சீவக் கூடாது. கண் மை நோ. இப்படி பல ரூல்ஸ் இருக்குது.

மீனினி தன்னோட ரூம்ல இருந்தா சோம்பேறியாகிடுவா என்பதால் அவளை தங்களுடைய ரூமிற்கே அழைத்து வந்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் போனுக்கு ரீசார்ஜ் செய்யக் கூட உடலைக் குறைத்தால் செய்துவிடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இது எல்லாம் சரிபட்டு வராது என்று உணர்ந்த மீனு எப்படியோ ஒரு வழியாக வேலையில் சேர்ந்திருக்கிறாள். அதையும் சேர்ந்த ஒரு வாரத்தில் இருந்து விடச் சொல்லி வற்புறுத்தல் தொடர்ந்திருக்கிறது. உனக்கு ஒன்னு தெரியுமா? என் வீட்டில் கூட நான் வேலைக்கும் போகும் போது என்னை நடத்திய விதத்திற்கும் , என் தம்பி வேலைக்குப் போகும் நடத்திய விதத்திற்கு நிறைய வேறுபாடுகள் உள்ளது. என்னை திட்டும் போதெல்லாம் “படிச்ச திமிரு” , “வேலைக்குப் போற திமிரு. பெரிய வேலை பார்க்கறாலாம்.” இப்படிப்பட்ட பேச்சுகளை நான் கேட்டுருக்கேன்.

பொண்ணுங்க படிச்சா , சுயமாக சம்பாரித்தால் திமிரு வந்து ஒட்டிக் கொள்ளும் போல. மீனினி வீட்டில் சொல்லவே வேண்டாம். அவளுக்கும் தான் சுயமாக சம்பாரிக்கவில்லை என்றால் அவளின் நிலை என்று மாறாது என்று உணர்ந்திருக்கிறாள். கில்ட் டிரிப்பிங்க் கூட வீட்டில் செய்திருக்கினர்.

செக்ஸ்யுவல் அப்யூஸ் அவளுக்கு இழைத்தது வேறு ஒரு வெளியாள். ஆனால் வெர்மல் அப்யூஸ் , பிசிக்கல் அப்யூஸ் , எமோஷனல் அப்யூஸ் இந்த மூன்றும் அவளுக்கு நடந்தது அவள் வீட்டில் தான். தனக்காக குரல் எழுப்ப மறுக்கப்பட்ட தங்களுடைய சொந்தக் கருத்துகளுக்கு முகவரி இல்லாத பலரில் மீனுவும் ஒருவள்.

பெற்றவர்கள் தங்கள் கைக்குள் வைத்து குழந்தைகளை வளர்ப்பதாக இருந்தால் அவர்களுக்கு தர வேண்டியது தைரியத்தையும் , தன்னம்பிக்கையும் , அன்பையும் , அரவணைப்பையும் தானே பொருட்களை அல்ல. அப்படி இருந்தால் தன் குழந்தைக்கு என்ன நடந்தது என்ற ஐடியா இல்லாமலே காலம் முழுக்க வாழ வேண்டியதுதான். உண்மை காலம் கடந்து தெரிய வந்தால் ஹெல் வில் பிரேக் லூஸ்.




அலைவான்..............
 
Last edited:

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -36

சில ரகசியங்கள் எப்பவும் வெளியில் தெரியாமல் இருப்பது நல்லது என்று சொல்லலாம் பெக்கி. அதுதான் பலரின் அமைதியான மன நிலையைக் காப்பாற்றும். மீனினி தட்டுத் தடுமாறி வாழ்க்கையில் முன்னேறிப் போயிக் கொண்டே இருப்பாள்.

தேவ்க்கு மீனினியைப் பற்றிப் படித்த பிறகு அவனுக்கும் மனதில் பாரம் ஏறியது. அவன் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் வளர்ந்ததில்லை. ‘இப்படியும் ஒரு நிறைய பெற்றோர்கள் இருக்கிறார்கள். தன் உணர்வுகளை மட்டும் பெரிதாகக் கருதுவார்கள். அவர்கள் நினைப்பதை அப்படியே குழந்தைகள் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் நல்ல பிள்ளைகள். இது அடிமைத்தனம் மாதிரி இருக்கு.’ தேவ் இவ்வாறு எண்ணினான்.

டைரியை அப்படியே வைத்தவன் மன ஆறுதலுக்காக அறையினுள் சிறிது நேரம் நடந்தான். போனில் மியூசிக் பிளேயரை ஆன் செய்தான். இன்ஸ்ட்ருமெண்டல் இசையை ஐ போன் துல்லியமாக அறையை நிறைத்தது.

கைப்பேசியில் வாட்ஸ்சப்பில் வந்திருந்த குறுஞ்செய்திகளைப் பார்த்தான். தேவ் ஆன்லைனில் இருப்பதைப் பார்த்த பார்த்திபன் என்ற நண்பன் மெசேஜ் செய்தான்.

“டூட் ,காண்ட் ஸ்லீப்பா.”

“யா காட் அப் இன் சம் வொர்க்.” தேவ்வும் பதில் கொடுத்தான்.

“டிரான்ஸ்பர் பத்தி கேள்வி பட்டேன். புது டிரைனி ஒரு வுமன்னு கேள்வி பட்டேன்.”

“யுப் டூட். இன்னும் டூ டேய்ஸ் இருக்கு. அப்ப டீடெய்ல்ஸ் பார்த்துக்கலாம். “

“ஓகே . குட் நைட் தேவ்.”

“குட் நைட் பார்த்தி.”

நண்பனுடன் சாட்டிங்கை முடித்த பிறகு ஒரு பெருமூச்சுடன் போனை டேபிளில் வைத்தான். அறையில் இருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான். கண்கள் சிவந்திருந்தது. உடல் முழுவதும் லேசாக வலிக்கத் தொடங்கியது. விமானப் பயணம், பேருந்துப் பயணம் மற்றும் நாள் முழுக்க காட்டில் அழைத்து புகைப்படம் எடுத்தது தேவ்வுக்கு களைப்பைப் ஏற்படுத்தியிருந்தது. பொதுவாக அவன் தூங்கும் நேரத்தை அனாவசியமாக கெடுத்துக் கொள்ள மாட்டான். ஆரோக்கியமான உடலுக்கு நல்ல தூக்கம் தேவை என்பதில் கவனமாக இருப்பான்.

அப்படிப்பட்டவனின் தூக்கத்தை இந்த டைரி பறித்து விட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் டைரியில் இருக்கும் நபர்கள் இவன் மனதில் ஏதோ ஒரு விளைவை ஏற்படுத்திவிட்டிருந்தனர்.

டைரியில் இருப்பவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் உருவாகியிருந்தது. டைரியில் இருப்பவர்கள் உயிரோடு இருப்பார்களா என்று தெரியாது. இருந்தாலும் அவர்களைப் பற்றி அறிய வேண்டும் என்ற எண்ணம் தேவ்வின் மனதில் வலுப்பட்டிருந்தது.

எப்படியாவது அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவன் தாளில் குறித்து வைத்திருந்த குறிப்புகளை எடுத்தான். அதில் சிலவற்றை டைப் செய்து வாட்ஸப்பில் யாருக்கோ அனுப்பி வைத்தான்.

பிறகு மீண்டும் டைரியை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.

மீனு வாழ்க்கையில் எப்படியாவது சந்தோஷமாக இருக்க வேண்டும். மீனு மாதிரி ஒருத்தியை நான் சந்திப்பேன் என்று நினைத்ததில்லை.

“அழகன்”

என்று அடுத்த பக்கத்தில் ஆரம்பித்திருந்தாள் யாழரசி.

பிபியோட பேரு அறிவழகன்.

அறிவ நான் முன்னாடியே கிளாஸில் பார்த்திருக்கேன். அதிகமாக பிரண்ட் ரோவில் அமர்ந்து ஆன்சர் செய்யும் ஆட்களில் அய்யாதான் ஃப்ர்ஸ்ட். ஆள பார்த்தா ரொம்ப ஸ்டிரிக்ட் ஆபிஸர் மாதிரி இருப்பார். டக் இன் செய்துட்டு கிளாஸுக்கு வருவான். அது மட்டும் இல்லாமல் ரிம்லெஸ் கிளாஸ் ஒன்னு மூக்கு மேல இருக்கும். ஒரு புரபசர் ரேஞ்சுக்கு பக்காவா கெட்டப்ல சுத்துவான். செண்டரல் கவர்மெண்ட் ஆபிசர் சார். அதுதான் இப்படி ஒரு கெட்டப்பில் சுத்தியிருக்கான். ஸ்டாப்ஸ் கூட அவன மரியாதையாக நடத்துவது போல் இருக்கும். அதுக்குக் காரணம் இது என்று எனக்கு அப்போது தெரியாது.



ஆனால் அப்போது எல்லாம் அவனுடன் பேச முயற்சித்தது கிடையாது. அறிவைப் பத்தி வெற்றிதான் என்னிடம் சொன்னான். ஷாலினி பிகேவியரப் பற்றிப் பேசும் போது அறிவைப் பற்றிய பேச்சு எழுந்தது.

இப்ப நாம ஆர்பிட்டுக்குள்ள போறோம் பெக்கி. எவ்வளவு நாள் தான் கொசுவர்த்தி சுருளையே வச்சு பிளாஸ்பேக்கை ஓட்டறது. ஆர்பிட், டைம் மெசின் இப்படி எல்லாம் புதுசு புதுசா யோசிப்போம். மொத்தத்தில் வட்டமாக இருந்தால் போதும். இப்ப சீனுக்குள்ள போறோம்.

இதில் எப்படி ஷாலினி மேடம் வந்தாங்கனு? உனக்கு டவுட்டாக இருக்கலாம். ஷாலினி எப்படி மதில் மேல் பூனை மாதிரி கேம் விளையாடிச்சோ அப்படி எல்லாம் செய்யாத ஒரு பொண்ணை அறிவு லவ் பன்னான்.

அறிவு ரிஜக்ட் ஆன கதையைக் கேட்ட பிறகு அந்த பொண்ணை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.

அறிவு பத்து மணிக்கு மேல ஆபிஸ் ஆரம்பிக்கும்.

வகுப்புகள் முன்னாடி ஆரம்பித்துவிடுவதால் பக்கி பாதி கிளாஸ் வரை இருக்கும். ஆபிஸ் பக்கத்தில் என்பதால் சீக்கிரமும் சென்றுவிடலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவன் அகாடமி லைப்ரரியில் படிப்பான்.

அப்படி படிக்கும் போது அவனுக்கு ஒரு பெண்ணைப் பிடித்துவிட்டது. அவள் பெயர் சாருமதி. அந்த ஊட்டி ஆப்பிள் ஒரு டெண்டிஸ்ட். ரியல் பியூட்டி. அறிவுக்கு ஏதோ ஒரு விதத்தில் அந்தப் பெண்ணைப் பிடித்துவிட்டது. எப்படியோ பேசி அவள் நண்பனாகி விட்டான். இப்படியே நாட்கள் கடந்தது.

அவள் மேல் காதலும் கூடிக்கொண்டே போனது. அறிவுக்கு எதுவும் முகத்துக்கு நேராகப் பேசித்தான் பழக்கம். இதனால் இந்தக் காதலையும் அவன் ஒரு நாள் சொல்லிவிட முடிவு செய்துவிட்டான்.

சாருமதியிடம் பேச வேண்டும் என்று சொல்லி அகாடமி கட்டிடத்தின் பக்கவாட்டில் அழைத்து வந்தான்.

“சாரு எனக்கு சுத்தி வளைச்சு எல்லாம் பேச தெரியாது. ஐ லவ் யூ.”

சாரு சாக்காகி இல்ல ஷாக்காகி “நோ.”

“இங்க பாரு சாரு. எனக்கு இந்த டைம் பாஸ் லவ் எல்லாம் கிடையாது. உனக்கு ஓகேனு சொன்னா நான் வந்து வீட்டில் பொண்ணு கேட்கிறேன். “

“இல்ல அறிவு. நான் அப்பா அம்மா சொல்றவங்களதான் கல்யாணம் செஞ்சுக்குவேன்.”

“நானும் கல்யாணம் செய்யத்தான் கேட்கிறேன்.”

“எப்படி இருந்தாலும் நோ.”

இப்படி கூலாக அறிவை நீ ஆணியே புடுங்க வேண்டாம் என ரிஜக்ட் செய்துட்டு போயிருச்சு நம்ம சாரு. ரெஸ்பெக்ட் 200 பர்சண்ட்.

ஷாலினியை சாருகூட கம்பேர் செஞ்சு வெற்றி சொன்னான். அப்படி தெளிவாக சொன்னால் பரவாயில்லை என்று அவனுக்கு தோன்றியிருந்தது. லவ் செய்தால் மேனிபுலேட் செய்ய வில்லை. யூஸ் செய்து கொள்ளவில்லை. என்னை விட ஒரு வருஷம் பெரிய பொண்ணுதான். ஆனால் அவளின் மெச்சூயுரிட்டி , கேரக்டர் எல்லாம் இந்த ஒரு விஷயத்திலேயே எனக்கும் மீனினிக்கு சாருவின் மேல் ஒரு வித மரியாதையை ஏற்படுத்தி இருந்திருந்தது.

நான் இவ்ளோ காமடியாக அறிவ அந்த பொண்ணு அழகா ரிஜக்ட் செய்தது எனச் சொன்னாலும் அறிவால அவள மறக்க முடியல. இப்படிப்பட்ட பொண்ணை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்திட முடியுமா என்ன?

இப்படி எனக்கு இண்டேரக்டா அறிமுகமாகி இருந்த அறிவழகனிடம் பேச ஆரம்பித்தது முதலில் கேண்டீனில். எங்களோட யூபிஎஸ்சி டீரிம் காமனா இருந்தாலும் கேண்டீன் எங்களை மீட் செய்ய வச்சு பாண்ட் கிரியேட் செய்யக் காரணம்.

அறிவு கூட பேசியது அகாடமி வைத்த முதல் மாக் டெஸ்ட் அன்றுதான். எல்லாரும் மாக் டெஸ்ட் முடிந்து கிளம்பி விட்டார்கள். அப்போதிலிருந்து இப்போது வரை டெஸ்ட் முடிச்சா சிட்டா வீட்டுக்குப் போறது வழக்கம். வீக்லி வீக்லி டெஸ்ட் இருக்கும். மாக் டெஸ்ட் லேட்டாதான் நடக்கும்.

நான் டெஸ்ட் அப்பவாது ரிலாக்ஸா போகலாம் என்று நினைத்து மெதுவாக கேண்டீனில் சாப்பிட சென்றேன். கேண்டீனில் ஆண்கள் ஒரு புறமும் பெண்கள் ஒரு புறமும் அமர்வர்.

இதை யாரும் நோட்டிஸ் செய்தார்களா என்று தெரியாது. ஆனால் பெண்கள் எப்பவும் இடது பக்கமும், ஆண்கள் வலது பக்கமும் அமர வைக்கப்படுவர். ஆண்கள் எப்போதும் ரைட் என்று சிம்பாலிக்கா சொல்றாங்களோ என்னவோ? ஒரு மீட்டிங்க் நடக்கும்போது எதிரில் நின்று பேசுபவர்களுக்கு ஒரு வசதி இருக்கு. பெரும்பாலனா மனிதர்கள் உடலில் வலது புறத்தை அதிகமாக உபயோகிப்பார்கள். எதிரில் நின்று பேசும் போது பேச்சாளரின் வலதுபுறத்தில் பெண்கள் இருப்பர். அண்ணன் விஜய் சொல்றது மாதிரி பொண்ணுங்க பக்கத்தில் இருப்பது ஒரு பூஸ்ட் மாதிரியாகக் கூட இருக்கலாம்.

பாரேன் எங்க ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டேன். அறிவு கேண்டீன் என்ட்ரன்ஸ் பார்த்த மாதிரி ரைட் சைடில் அமர்ந்திருக்க நான் லெப்ட் சைட் அவனுக்கு ஆப்போசிட்டா கேண்டீன் முன்புறம் பார்க்கும் படி இருந்தேன்.

அதனால் எனக்கு அவனை நேருக்கு நேராகப் பார்க்க முடியும். அவன் இருப்பதை முதலில் நான் கவனித்து விட்டாலும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. போக்கஸ் புஃல்லா புட்ல இருக்கனும். அவனும் ஏதோ கேண்டீனில் ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

ஏதோ சப்தம் கேட்டுத் திரும்பிய போதுதான் நான் கவனித்தேன். அறிவு ஸ்பூனில் இட்லியைப் பிய்த்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வலது கையில் கட்டுப் போடப் பட்டிருந்தது. கீயூராயாசிட்டி தாங்காம நானே

“என்ன அறிவு கையில கட்டு?”

அறிவு யார் தன்னிடம் பேசியது என்று திரும்பிப் பார்த்தான். பார்த்ததும் அவனுக்கு தெரிந்துவிட்டது. அவனும் பிரண்ட் ரோவில் இருப்பதால் அவனுக்கு என்னைத் தெரியும்.

“பைக் சைலன்சரில் கை பட்டுருச்சு.”

“ஓ....அப்ப எப்படி டெஸ்ட் எழுதின?”

எனக்கு ஷேடிங்க் செய்யறது கஷ்டம். செய்து பழக்கம் இல்லை என்றாலும் அந்த வட்டத்தில் கலர் அடிக்கும் போது ஒரு மாதிரியாக இருக்கும். இதில் அடிபட்ட கையை வைத்துக் கொண்டு அவன் எப்படி ஷேட் செய்திருப்பான்?

“லெப்ட் ஹேண்ட் யூஸ் செஞ்சேன்.”

“இப்ப கை எப்படி இருக்கு?”

“ஒன்னும் பிரச்சினை இல்லை. ஒரு வாரத்தில் கட்டுப் பிரிச்சரலாம்.”

“ஓகே டேக் கேர். “

அவனும் சாப்பிட ஆரம்பித்தான். நானும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினேன்.

இதுதான் முதல் தடவை அவனிடம் பேசியது. அடுத்த முறையும் கேண்டீனில் பார்த்தேன். ஜெனரலா பேசிக் கொண்டோம். வேறென்ன கழுதை கெட்டா குட்டிச் சுவரு. அதுமாதிரி யூபிஎஸ்சி ஆப்சனல் , சப்ஜெக்ட் இப்படித்தான் பேசுனோம்.

வெற்றியிடம் அவனிடம் பேசியதைச் சொன்னேன். அறிவின் மொபைல் நம்பரையும் வாங்கிவிட்டேன். எனக்கு பிரண்ட் ஆகிவிட்டதால் மீனுவுக்கு அறிவை அறிமுகம் செய்துவிட்டேன். மீனு வீட்டில் தங்கியிருக்கும் போதுதான் எனக்கு அறிவு நல்ல குளோஸ் பிரண்ட் ஆனான்.

மீனுவுக்கு அவனுடைய போட்டாவை காண்பித்தேன். அந்த போட்டாவைப் பார்த்து மீனு சொன்ன விஷயம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது.




அலைவான்...........
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -37



‘மறுபடியும் ஆரம்பிச்சுட்டா? டேரக்டா எழுதற பழக்கமே கிடையாதா ? சோதிக்கறாளே என்னைய?’

தேவ் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.

‘சீக்கிரம் எல்லார் பத்தியும் எழுதி முடிச்சுரு தாயே..’ என நினைத்துவிட்டு மீண்டும் டைரியைப் படிக்க ஆரம்பித்தான்.

சரியா? தவறா? மீனு சொன்ன விஷயம் எனக்கு ஷாக்தான். நான் ‘ஆள் யாருனு காட்டு . அவனை நசுக்கித் தூக்கிப் போட்டுருவேன் ‘ என்று தலைவர் டையலாக் மீனுவை ஒருத்தன் முறைச்சான் என்பதற்காக சொல்லியிருக்கேன். அந்த ஆளு அறிவா இருக்க வாய்ப்பு இருக்கு பெக்கி.



மீனு ஒருநாள் லைப்ரரியில் படித்துக் கொண்டு இருந்தாள். வட்ட மேசையில் நான்கு பேர் அமரும் படி நூலகம் அமைக்கப்பட்டிருக்கும். நான்கு பேர் அமர்ந்தால் வாய் சும்மா இருக்குமா ? சிலர் பேசியே தீருவர். மீனுவும் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறாள். பேசவில்லை. ஆனால் தும்மல் வந்துவிட்டது. தும்மிவிட்டாள். அதற்காக இவளை பக்கத்து டேபிளில் அமர்ந்திருக்கும் ஒரு பையன் முறைத்துவிட்டான்.

மீனு என்னிடம் போன் காலில் “அக்கா தும்மறது ஒரு குத்தமா அக்கா ? அதுக்காக என்னைப் பார்த்து முறைச்சுட்டாங்க.” என்று புலம்பினாள்.

இதைக் கேட்ட பிறகு எனக்கும் கோபம் வந்தது. அறிவின் போட்டாவைக் காண்பித்த போது அவன் தான் இவனோ என்ற சந்தேகத்தை மீனு சொன்னாள்.

நானும் அறிவுக்கு ஆப்பு வைக்க முடிவு செய்தேன். வெற்றியிடம் விஷயத்தை போனில் சொல்லிவிட்டேன். அதற்குப் பிறகு அறிவிடம் பேசினேன்.

“நான் அவனில்லை.” பக்கி இப்படி சொல்லிருச்சு. அதனால் நானும் சும்மா விட்டுட்டேன். ஆனாலும் அப்பப்ப அதைக் கேட்பேன். நான் எங்க சண்டைக் கட்டிருவேனு மீனுவும் அவர் இல்லைனு தோணுதுக்கா. ரொம்ப நாள் ஆகிருச்சு. முகம் சரியாக நினைவில்லை என்று சொல்லிவிட்டாள்.

அதனால் அவனை சும்மா விட்டுவிட்டேன். ஆனாலும் அவ்வப்போது போனில் அதை சொல்லி ஓட்டுவேன். இது எனக்கும் அறிவுக்கும் எப்பவும் இருக்கும் தீர்க்கப்படாத ஒரு கணக்கு. அவன் மட்டும் சும்மாவா? வெற்றி , அறிவு, மீனு என்று மூவரும் சேர்ந்து என்னைக் கலாய்ப்பார்கள்.

அப்பாவி நான் தான்.

‘என்ன தேவ் செய்யறது? விக்கிரமாதித்தனா இருந்தா வேதாளம் சொல்ற கதைய கேட்டுத்தான ஆகனும். ‘ பெருமூச்சு விட்ட படி படிப்பதைத் தொடர்ந்தான்.

சரி பெக்கி. அறிவழனோட சரித்திரத்தைச் சொல்றேன் . இந்த எருமை ஊரும் ஹரிஹரா நதிக்குப் பக்கத்தில் தான் உள்ளது. வெற்றியின் ஊரும் , அறிவின் ஊரும் ஒரு அரைமணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது. பனைமரம், வயல்கள் தோப்புகள் என்று பசுமையாக இருக்கும்.

ஒப்பன் பன்னா ஊர் ரொம்ப அழகாக இருக்கும்.

அறிவோட அம்மாவுக்கு , அப்பாவுக்கு நடந்தது ஒரு டிவிஸ்டான மேரேஜ். அறிவோட அப்பாவை அங்கிள்னு சொல்லிக்கலாம். அம்மாவை ஆண்ட்டி.

அங்கிள் ஒரு பொண்ணை லவ் பன்னியிருக்கார். இந்த விஷயம் அவர் வீட்டில் தெரிந்து பிரச்சினை ஆகிவிட்டது. அவருடைய காதலியின் தோழிதான் அறிவின் அம்மா. என்ன புரியலையா?

ஒரு மாஸ் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கில் நடந்துவிட்டது அங்கிள் ஆண்டியின் திருமணம். தன்னுடைய தோழிக்கு உதவ வந்தவரை அங்கிளின் காதலி என்று நினைத்து ஊர்க்காரர்கள் திருமணம் செய்ய வைத்துவிட்டனர். அந்தக்காலத்தில் காதல் என்றால் ஒருவருக்கும் ஆகாது. இதில் மணப்பெண் தோழி மணப்பெண்ணாகிவிட்டார்.

கூட்டத்தினரிடம் மறுத்துப் பேச முடியவில்லை. கண்டேன் காதலை மூவியை உள்டா செய்தது போல் நடந்திருக்கிறது.

‘ஓ மை காட்…இந்த மாதிரி நிஜத்தில் எல்லாம் நடக்குமா?’ தேவ் ஆச்சரியத்தில் மூழ்கினான்.

அறிவு இப்படி சொன்னதைக் கேட்டதும் எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் யோசித்துப் பார்த்தால் மனிதர்கள் என்றால் எதுவும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு தவறான புரிதல் இரண்டு குடும்பங்கள் மட்டுமில்லாது அதற்கடுத்த தலைமுறையினரின் தலையெழுத்தையும் மாற்றும் வல்லமை உண்டது. இந்த பூமியில் கடைசியாகத் தோன்றி பல்கிப் பெருகி நம்மை சுற்றி இருப்பனவற்றையும் அழிக்கும் சக்தி கொண்ட ஒரு பவர்ஃபுல் ஸ்பீசிஸ் நாம். நாட் யூ பெக்கி.

இருவரின் மதமும் வேறு. அறிவின் தந்தையர் வீட்டில் அவர்களை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர். ஆண்ட்டியின் அப்பா நல்லவர். ஊரிலேயே பெரிய தலைக்கட்டு. அவர் தன் பெண்ணையும் , மாப்பிள்ளையும் ஏற்றுக் கொண்டார். அவர்கள் தங்க வீடும் கொடுத்தார்.

ஆண்ட்டியும் , அங்கிளும் தங்கள் நிலையைப் புரிந்து கொண்டு மனமொத்து வாழ ஆரம்பித்தனர். எனக்கு போர் அடிச்சா மூவிஸ் பார்ப்பேன். நமக்கு புத்தகங்கள் , கதைகள் ஏன் ரொம்ப பிடிக்கும் தெரியுமா? அதில் இருப்பவை போன்று நம்ம ரியல் லைஃப்பில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையும் காரணம்.

நான் வாழ்க்கையில் திரில் ரொம்ப எதிர்பார்ப்பேன். ஆனால் அன்பார்ச்சுனேட்டலி மெலோ டிராமா என்னோட லைஃப் ஜெனர். அறிவோட பேரண்ட்ஸ் லைஃப்பில் நடந்தது அதெல்லம் வேற லெவல் டிவிஸ்ட். ஆனால் ஒரு விஷயம் நடந்தால் அதுக்கு கான்சிக்வன்ஸ் இருக்கும். அதோட விளைவை அறிவோட அப்பா அனுபவிக்க வேண்டியதாகப் போய்விட்டது.

அவருடைய தந்தை சரியாக பேசுவதில்லை. அவருடைய சொத்துகளையும் காதல் திருமணம் செய்ததால் மூத்த பையனுக்கு கொடுக்காமல் இளைய பையனுக்கு கொடுத்துவிட்டார். அதில் மளிகைக் கடையும் ஒன்று.

அறிவுக்கு முன்னால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அது பெண் என்ற காரணத்தால் தந்தையர் வீட்டில் இன்னும் சரியாக அவர்களை நடத்தவில்லை. ஆனால் அறிவு பிறந்த பின்பு ஏதோ பேச ஆரம்பித்திருக்கிறார்.

குழந்தைகள் விரைவாகத் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி நடக்கிறார்கள் மற்றும் தன்னை எப்படி நடத்துகிறார்கள் என்று புரிந்து கொள்வர். அறிவுக்கு தாத்தாவின் வீட்டினர் தங்கள் குடும்பத்தினரிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று புரிந்து கொண்டதால் அவனும் அதிகமாகப் பழக மாட்டான்.

இந்த விஷயத்தினால் அவன் சோர்ந்து எல்லாம் போகவில்லை. பயங்கர சுட்டி , சேட்டைத் தனம் உண்டு. அப்புறம் இவன் பேருக்கு ஏத்த மாதிரி அழகாக இருந்ததால் அவன் ஊருக்கே செல்லம் என்று சொன்னான். அவனை எல்லாரும் எடுத்துக் கொஞ்சினார்களாம். பாண்டிய நாட்டைச் சேர்ந்த அறிவும் , வெற்றியும் கொங்கு நாட்டில் வந்து அல்வாவை உருட்டிட்டு இருக்காங்க. அவங்க சொல்லிட்டாங்க. அத நிசம்னு நாம நம்பித்தான் ஆகனும்.

பேக்ட் நானு ரொம்ப அழகாக இருந்ததால் என்னையும் ஊர்க்காரர்கள் கொஞ்சினார்கள். எஸ் காரணம் இதுதான். சொல்லப் போனால் கிராமப் புறங்களில் குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க மாட்டார்கள். அக்கம் உள்ள வீடுகள் அனைத்திற்கும் தூக்கிக் கொண்டு போவார்கள். அதனால் பொதுவாக ஊரில் இருப்பவர்கள் எல்லார் கையிலும் ஒரு குழந்தை சென்று வந்திருக்கும். அப்புறம் அழகு அது எல்லாரிடமும் இருக்கும். சிலருக்கு அது முகத்தில் …சிலருக்கு குணத்தில் அதுதான் வித்தியாசம்.

மீனுவைத் தவிர நாங்கள் மூவரும் சிறு வயதினை கிராமத்தில் கழித்தவர்கள். அதனால் நாங்கள் அழகுதான்.

‘போதும் சாமி. நீங்க எல்லாரும் அழகுதான். ‘ தேவ் நேரில் அவர்கள் இருந்தால் கையெடுத்துக் கும்பிட்டிருப்பான்.

அறிவு வளர்ந்து ஐந்து வயதாகிவிட்டது. அவனுடைய சித்தப்பா மளிகைக் கடை வைத்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு தீனி என்றால் பிடிக்கும். அய்யாவுக்கும் பிடிக்கும். அவனுடைய சித்தப்பாவும் இவனுக்கு கொடுப்பார். ஆனால் சார் வாங்க மாட்டார். இவன் போய் கேட்டால் அவரும் கொடுக்க மாட்டேன் என்பார். சார் கல்லை எடுத்து கடை மீது வீசிவிடுவார். தில்லப் பார்த்தியா பெக்கி. சேட்டை ..

இது மட்டுமில்லை. பிபி வண்ணம் வண்ணமா நல்லா திட்டறதுக்கும் சின்ன வயசிலேயே பழகியாச்சு. அவனோட ஒரு மாமா இருக்கார். லாயர் . அறிவுக்கு இவரைப் பிடிக்காது. அவரையே இவன் ஊர் மத்தியில் இருக்கும் மாடி வீட்டில் ஏறி நின்னுட்டு வார்த்தை பேசிருக்கான்.

நல்ல வேளை . பொதிகை டிவியில் ஒரு நாடகம் பார்த்திருக்கேன். ஒரு குழந்தை மாடி மீது நின்று கொண்டு கரண்டி இந்த மாதிரி எந்த பொருள் கிடைச்சாலும் கீழே நடப்பவர்களின் தலையில் வீசும். அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை.

இருந்தாலும் வெரி டேஞ்சரஸ் பையன். இப்படி அழும்பு பன்னிட்டு இருந்திருக்கான். புடிச்சு ஸ்கூலில் சேர்த்து விட்டிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் படிக்க அடம் பிடித்திருக்கான். ஆனால் இரண்டாம் வகுப்பில் அவன் போக்கு மாறியிருக்கிறது. அதுக்குக் காரணம் அவனுடைய ஆசிரியை கேட்ட ஒரு கேள்வி. அதற்கு அவன் சொன்ன பதில்.

ஆசிரியர் கேட்ட கேள்வி ‘ இமாலயம் போன்ற மலைகளில் இருந்து வரும் ஆறுகள் வற்றவதில்லை?’

வகுப்பில் யாருக்கும் பதில் தெரியவில்லை. ஆனால் அறிவழகன் பதில் சொல்லியிருக்கான், ‘ ஏன்னா பனிக்கட்டி அங்க இருக்கு.’

இது அவன் வாழ்வை மாற்றி அமைத்த சம்பவங்களுள் ஒன்று.

ஆசிரியர் வியந்து போய் வகுப்பினரை கைதட்டச் சொல்லியுள்ளார். இது பிபியை நன்றாகப் படிக்க உத்வேகம் அளித்திருக்கிறது.

நன்றாகப் படித்து மாடல் ஸ்டூடண்ட் ஆகிட்டான். அதுமட்டுமில்லை விளையாட்டிலும் அப்படித்தான். பின்னாடி அகாடமிக் , எக்ஸ்டா கரிக்குலர் இப்படி எல்லாவற்றிலும் அவன் ஷைன் ஆக இந்தச் சம்பவம் காரணம்.

இடையில் அவனை பள்ளி மாற்றி சேர்த்திருக்கிறார்கள். அப்போது பிபியும் டவுன் ஆகியிருக்கான். பிறகு மீண்டும் வேலையைக் காட்டிவிட்டான்.

அறிவுகிட்ட அவனைப் பத்தி ஒரு வார்த்தையில் கூறு என்று கேட்டால் ‘கடவுளின் செல்லப்பிள்ளை ‘ என்று சொல்வான்.

அறிவுக்கு ஒரு தங்கையும் இருக்கிறார்.

அறிவுக்கு குழந்தைசாமி, பிபி என்ற பெயர் எல்லாம் நான் வைத்ததுதான்.

லாக் டவுன் டைமில்தான் நான் அறிவிடம் நன்றாகப் பேச ஆரம்பித்தேன். எங்களோட சைல்ட் குட் , இண்டர்ஸ்ட் இந்த மாதிரி நிறையப் பேசுவோம்.

அவன் காலேஜில் செய்த வம்புகள் எல்லாம் சொல்வான். சார் ஒரு மொரட்டு சிங்கிள் தெரியுமா? காலேஜில் ஆல் ரவுண்டாரான அறிவுக்கு பலர் புரப்போஸ் செஞ்சுருக்காங்க. அப்ப அவனுக்கு முரட்டுத்தனமும் அதிகம். ரொம்ப ஃகோல்டா அவங்களை எல்லாம் ரிஜக்ட் செஞ்சுருவான்.

கோபம் நம்மை நாமே அழித்துக் கொள்ளும் ஆயுதம் என்பர். கோபம் என்பதை வேறு வகையாகக் கூட உபயோகிக்கலாம். அன்பு என்பதை எப்படி டாக்சிக் ரிலேசன்ஷிப் எப்படி எதிர்மறையாக பயன்படுத்திக் கொள்கிறதோ அதுபோல கோபம் என்பது ஆயுதம். தேவையில்லாத பலரை நம்மை நெருங்கவிடாமல் அது தடுக்கும். கோபத்தை நம்மை நேர்மறையாக நம்மை பாதுகாக்கப் பயன்படுத்தலாம். நான் கூட அப்படித்தான். அறிவும் அதே மாதிரிதான். அவன் கல்லூரியில் படிக்கும் போது இப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தான்.

இது சரியா ? தவறா?




அலைவான்.........
 

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
அத்தியாயம் -38

‘எல்லாருக்கும் இப்படி ஒரு முகமூடி வாழ்க்கையில் ஒரு டைம் ஆவது தேவைப்படும்னு நினைக்கிறேன். ‘ தேவ் அப்படித்தான் தோன்றியது. ஏன் அவனும் கூட அந்த மாதிரி முகமூடியில் சில காலம் வாழ்ந்திருக்கிறான் என்று தோன்றியது.

‘என் தம்பி போனதுக்கு அப்பறம் அம்மா அப்ப ரொம்பவே உடைஞ்சுபோயிட்டாங்க. என்னாலையும் அவன் இறந்தத ஏத்துக்க முடியல. அப்ப தாத்தா எங்கிட்ட வந்து “ தேவா நீதான் அப்பா அம்மாவை எப்படியாவது சமாதானம் செய்யனும். நீ இப்படி இருக்கறது அரசனுக்கு பிடிக்காது. போ அம்மா அப்பாவைச் சாப்பிட வை. இனி நீதான் அம்மா அப்பாவுக்கு எல்லாமே. “ சொன்னார். அவருக்கு அரசனா அவ்வளவு பிடிக்கும். எப்ப பார்த்தாலும் வம்பு பன்னிட்டே இருப்பான். அவருக்கும் பேரனை இழந்த சோகம்தான்.

நானும் அதே மாதிரிதான் செஞ்சேன். மாஸ்க் இல்லனா சில சமயம் சர்வைவ் ஆகறது கஷ்டம்.’

பெருமூச்சு விட்டவன் மீண்டும் டைரியைப் படிக்க ஆரம்பித்தான்.

‘முகமூடி கழற்றப்படும்.’

எவ்வளவு வலுவான முகமூடியாக இருந்தாலும் ஒரு நாள் கழற்ற வேண்டியதாக இருக்கும். அப்படி இல்லை என்றாலும் யாரவது முன்பு கழற்ற வேண்டியதாக இருக்கும். மூகமுடிகள் வீழ்வது நிச்சயம்தான்.

அறிவோட முகமூடி யுஜியில் விழவில்லை. அவன் அப்படியேதான் இருந்தான். ஆனால் பிஜி படிக்க கோயம்புத்தூர் வந்தான். அங்க ஒரு யூனிவர்சிட்டியில் சேர்ந்தான்.

அப்பதான் அமிர்தாவை சந்தித்தான். அமிர்தா அறிவின் மனதை அசைத்துப் பார்த்த முதல் பெண். ரொம்ப நல்லா படிக்கும் பொண்ணு. பேசக் கூடிய ஆளும் கூட. ஆனால் அறிவுக்கும் இவளுக்கும் முட்டிகிட்டே இருக்கும்.

ரைவல்ஸ். ஆமாம் படிப்பில் எதிரிகள். முதலாவது இடம் எடுக்க போட்டி இருவருக்கும் நடந்து கொண்டே இருக்கும்.

அறிவு முதலிடம் பிடித்துவிடுவான். வகுப்பில் இருவருக்கும் சண்டைகள் கூட நடக்கும். ஆனால் எப்போது அவள் மீது காதலில் விழுந்தான் என்றான் அவனுக்கு தெரியவில்லை.

மலையடிவாரம் அவர்கள் மனதில் காதல் மழையின் சாரலையும் அடிக்காமல் செல்லவில்லை. நேரடியாக சொல்லாமலே இருவரும் காதலை வளர்த்தனர் என்றே சொல்லலாம்.

ஆனால் தன் பெண் காதலில் விழுந்தது அமிர்தாவின் வீட்டினர் அறிந்து கொண்டனர். அறிவு தமிழ்நாட்டில் உயர்சாதிகள் என்று கருதப்படும் ஒரு வகையைச் சார்ந்தவன். நான் வெற்றி அறிவு மூவரும் ஒரே சாதிதான். ஆனால் வெற்றி கன்வர்ட்டு கிறிஸ்டியன். மீனுவும் மற்றொரு உயர்சாதியைச் சார்ந்தவள். எனக்கு சாதியைப் பற்றிப் பேசும் போது ஆயுஸ்மான் குரானாவின் ஆர்ட்டிகிள் 16 படம் நினைவில் வந்து செல்கிறது. காவலர்கள் அனைவரையும் வைத்து அவர்களின் சாதியைக் கேட்பார். அதுதான் ஓரே சாதிக்குள்ளே இது பெரிய சாதி , சின்ன சாதி என்ற கிளைப்பிரிவு இருக்கும்.

ஆனால் இந்த சாதி பலருடைய வாழ்க்கையில் சதி செய்திடும். அமிர்தா தாழ்ந்த சாதி என்று கருதப்படுவதில் ஒன்றைச் சார்ந்தவள். அவள் வீட்டினர் அமிர்தா அறிவு விஷயம் தெரிந்ததும் மிகவும் பயந்தனர். ஆனால் அறிவே நேரில் சென்று பேசி சமாதானப் படுத்திவிட்டான்.

இது சரியாக இரண்டாம் வருட முடிவில் நடந்துவிட்டது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. அமிர்தா டிசி வாங்க வரும் போது திருமணமாகி வந்தாள். அறிவுடன் அல்ல அவளது சாதியில் ஒருவரைப் பார்த்து வீட்டினர் திருமணம் முடித்துவிட்டனர்.

இப்படி அறிவின் காதலும் சாதியினால் முகவரியற்று போய் விட்டது. சில முகவரிகள் இருப்பதனால் சில முகவரிகள் அழிந்து போய்விடும்.

அறிவோட மனசைப் பத்தி சொல்லவே தேவையில்லை. ஆனால் இதில் மிகப் பெரிய டிவிஸ்ட் என்ன தெரியுமா? அறிவுக்கு அரசுப்பணி கிடைத்ததற்கு காரணம் அமிர்தா.

இவங்க இரண்டு பேரும் செகண்ட் இயர் படிக்கும் போது மத்திய அரசு தேர்வு ஒன்று வந்திருக்கிறது. அதற்கு அறிவை விண்ணப்பிக்க வைத்தது அமிர்தா. தேர்வும் எழுதி முடித்துவிட்டனர்.

இடையில் அமிர்தாவின் திருமணம் அறிவை உடைத்து போட்டுவிட்டது. உள்ள நாம செத்துட்டு இருப்போம். ஆனால் வெளியில் சிரிக்க வேண்டும். அதே நிலைதான் அவனுக்கும். இப்படி காலம் கழிய தேர்வு முடிவுகள் வந்திருந்தது. அமிர்தா சில மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால் அறிவு பாஸ் செய்துவிட்டான். வீட்டிற்கு லெட்டர் வந்திருக்கிறது. கோபத்தில் கிழித்தே எறிந்துவிட்டான்.

ஏதோ நம்பர் இருக்குமாம். வேலைக்குச் சேரும் முன் அதை அவன் கொடுக்க வேண்டும். ஆனால் அறிவுக்கு அது நினைவில் இல்லை. ஆனால் அமிர்தாவுக்கு தெரியும்.

“எனக்குத் தெரியும்டா நீ இப்படித்தான் எதாவது செய்யவனு. இந்தா உன் நம்பர்” என்று அவள்தான் அந்த நம்பரை மெசேஜ் செய்திருக்கிறாள்.

அறிவு வேலையில் சேர அதுதான் உதவியது. பணியேற்றதும் போஸ்டிங்க் பாண்டிச்சேரி. சார் அங்க பறந்துட்டார். அவனுக்கும் மனமாற்றம் தேவைப்பட்டிருக்கிறது.

அவனுக்கு பணியிடம் நன்றாக அமைந்திருக்கிறது. அங்கு சந்தித்த சில நபர்கள் அவனது கவனத்தை இயற்கையின் மீது திருப்பிவிட்டிருக்கிறார்கள். விலங்கியல் படிச்ச ஆளு. சொல்லவா வேணும்.

பேர்ட் வாட்சிங்க் . டிரக்கிங்க் இதெல்லாம் அவன் வாழ்வில் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்திருக்கிறது. அப்படியே

ஐஒ .எஃப் . எஸ் பற்றியும் தெரிந்து கொண்டான். பாரஸ்ட் ஆபிசர் ஆகனும் என்பது அவனுடைய ஆசை.

அவனுக்கும் எனக்கும் இன்னொரு ஆசை இருந்தது. விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது அது. நான் ஜீவாலஜி எடுக்காமல் உளவியல் எடுத்த போது அந்த ஆசையை விட்டுவிட்டேன்.

அறிவு அந்த லட்சியத்தை விட்டதற்கு அவன் யூனிவர்சிட்டியில் பார்த்த சில கருப்புப் பக்கங்கள் காரணம். கண்டிப்பாக அதைப் பற்றி நான் எழுத மாட்டேன்.

பாடி பில்டர் மாதிரி இருக்கற அறிவுக்குள்ள இப்படி ஒரு விஷயத்தை யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க. லாக் டவுன் போட்டதுக்கு அப்புறம் வெற்றி இடியட்டை பார்க்க முடியல. ஆனால் அறிவை ஒரு நாள் கோவை சென்றிருந்த போது பார்த்தேன். நான் ஒரு அரசுத் தேர்வு எழுதச் சென்றிருந்தேன். அப்போது வீட்டுக்குப் போகும் முன் அவனை காந்திபுரத்தில் சந்தித்தேன்.

ஒரு ஹோட்டல் போய் சாப்பிட்டோம். அதற்குப் பிறகு பேசிக் கொண்டே காந்திபுரத்தின் தெருக்களைச் சுற்றினோம். ஒரு பிரைவேட் கவர்மெண்ட் எக்ஸாம் கோச்சிங்க் அகாடமிக்கு என்னை அழைத்துச் சென்றான்.

அங்கு வேலை முடிந்த பிறகு செல்ஃபிக்களை எடுத்துத் தள்ளினோம். அவன் முன்னாடி நான் ஒரு பூனை மாதிரிதான் தெரிந்தேன். அவன் எனக்கு பாடி கார்டு மாதிரி இருந்தான்.

அதற்குப் பிறகு நான் ஊருக்குச் சென்றுவிட்டேன். அதற்குப் பிறகு அவர்கள் மூவரையும் நான் நேரில் பார்க்கவில்லை. இரண்டு வருடங்களுக்கும் மேலாகிறது.

ஆனால் போனில் பேசிக் கொண்டுதான் இருந்தோம். நானும் வீட்டில் பிசியாகிவிட்டேன். மீனு லாக்டவுனில் எமோஷனல் அப்யூஸ் செய்யப்பட்டாள். அறிவும் , வெற்றியும் அவரவர் வேலைகளில் மூழ்கினர். கான்பிரஸ் கால் பேசுவோம்.

லாக் டவுன் போட்டால் என்ன ? வாழ்க்கையில் நாம் ஓடித்தானே ஆக வேண்டும்.

இந்த மூணு பேரும் தான் பெக்கி என் வாழ்க்கையை என்னை ஹீல் செய்த ஆசாமிகள். மீனினியால் நான் மீண்டும் கவுன்சிலிங்க் வோர்ல்ட்குள் வந்தேன். வெற்றி வாழ்க்கையோட நிறைய பரிணாமங்களை என்னை உணர வைத்தவன்.

அப்புறம் பிபி. பிக் பிரதர் அறிவழகன். எனக்கு எதாவது ஒரு விஷயத்தில் குழப்பம் என்றால் அவனிடம் கேட்கலாம். வாழ்க்கையோட எதார்த்தத்தை புரிய வைத்தவன் அவன்.

இயற்கையை யாராலும் மீற முடியாது என்பது அவன் மோட்டோ. அதுவும் உண்மைதான். இந்த எருமை மாடு காட்டுக்குள்ள போய் புலியைக் கூட பார்த்துட்டு வந்துருச்சு,

எப்ப வேணாலும் அவனிடம் கூப்பிட்டு பேசலாம். என்விரான்மெண்ட் பத்திக் கேட்கலாம். இன்னும் சாருமதி நினைப்பில்தான் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

மீனுவும் , நானும் மறுபக்கதில் திருமணத்திற்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறோம். சொல்லப் போனால் மனதிருப்திக்காக யாரும் கல்யாணம் செய்து வைக்கறதில்லை. மற்றவர்களைத் திருப்திப்படுத்ததான் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. ஷாலினியின் திருமணம் முடிந்துவிட்டது. அறிவும் அடுத்த வேலைகளில் மூழ்கிவிட்டான்.

This is our untold story. We represent the unaddressed issues . we are never going to talk about this until we have the power. Even if we have I am not sure. After all we need peace too. BYE BECKY.
 
Status
Not open for further replies.

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom