Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL வான்சூழ் உலகு - Tamil Novel

Status
Not open for further replies.

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 40



அடுத்த நாள் காலையில் ஜீவா தனது இருசக்கர வாகனத்துடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்க, அந்நேரத்தில் அங்கு வந்த குரு "எதாவது பிரச்சனையா" என்றான்



"இல்ல. நான் பாத்துக்குறேன்" என்ற ஜீவா வாகனத்தில் கவனத்தைச் செலுத்த



"நான் வேணா ட்ராப் பண்றேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல" என்றான் குரு



"பரவால்ல. வேலைக்கு நேரமாகும் கிளம்புங்க" என்றான் ஜீவா அவனைப் பாராமல்



"அட பரவால்ல. வாங்க" என்று குரு அதித்தன் வற்புறுத்தி அழைக்க, ஜீவாவும் அவன் பின்னால் ஏறி அமர்ந்தான்



ஜீவாவின் மனதிற்குள் ஓடியது எல்லாம் பல நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு தான். இந்துஜாவின் அலைபேசியை எதேச்சையாகப் பார்த்துக் கொண்டிருந்தவன், வெறும் ஸ்மைலி மட்டும் இடப்பட்டு சேமிக்கப்பட்டு இருந்த அந்த எண்களுக்கு அழைத்துப் பார்த்தான். இந்த பக்கம் ஜீவா மௌனமாகவே இருக்க, அந்த பக்கம் பேசியது ஒரு ஆண் குரல். அதுவும் சாதாரணமாக இல்லை; மிகவும் இந்துஜாவிடம் உரிமை எடுத்துக் கொண்ட விதத்தில் இருந்தது அப்பேச்சு. ஜீவா யோசனையுடன் அவ்வெண்ணைத் தன் அலைபேசியின் ட்ரூ காலரில் சோதித்துப் பார்க்க, தெளிவாக குரு என்ற பெயர் திரையில் தெரிந்தது. அன்றைய தினம் குரு வருணின் காதல் பிரச்சனையால் ஏற்பட்டிருந்த எரிச்சலில், அழைத்தது இந்துஜா தானா என்று தெரிவதற்குள்ளாகவே 'அப்பறம் பேசுறேன் வைடி' என்று கூறியிருந்தான். இன்றளவும் ஜீவாவிற்கு அதே வார்த்தைகள் தான் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தன.



"என்ன பாஸ். பயங்கரமான யோசனைல வரீங்க" என்று குரு அதித்தன் ஜீவாவின் யோசனைகளைக் கலைத்துப் போட்டுக் கேட்டிட



"இல்ல... உங்க கிட்ட ஒன்னு கேக்கணும். அதான் எப்படி கேக்குறதுனு யோசிச்சுட்டு இருக்கேன்" என்று ஜீவா சொல்ல, குருவுக்குள் ஒரு அதிர்வு கிளம்பி இருந்தது



அதைச் சமாளித்தபடி "என்ன விஷயம்னு தயங்காம சொல்லுங்க" என்று குரு கேட்க



"இந்துஜாவுக்கு வரன் பாக்குறோம். அதான் உங்க ஊர்ப்பக்கம் யாராச்சும் இருந்தா, கொஞ்சம் பாத்து சொல்லுங்க" என்றான் ஜீவா நேரடியாக விஷயத்திற்கு வராமல்



"படிச்சுட்டு தான இருக்காங்க. இப்போவே மேரேஜா" என்று குரு அதித்தன் அதிர்ச்சியைக் காட்டாமல் கேட்டு வைக்க



"இப்போவே பாக்கறது தான் நல்லதுனு நினைக்குறேன். பொண்ண வீட்டுல வச்சுருக்குற வரைக்கும் மனசு கிடந்து தவிக்குது. அது மத்தவங்களுக்கு சொன்னா புரியாது" என்றான் ஜீவா மறைமுகமாக



அதற்கு பிறகு எதுவும் பேச முடியாமல் மௌனம் காத்த குரு, ஒரு பெரிய அடுக்குமாடிக் கட்டிடத்தின் முன்னால் வண்டியை நிறுத்தினான்



ஜீவா இறங்கிக் கொள்ள "ஒரு நிமிஷம்" என்று அழைத்து அவன் அருகில் சென்றான் குரு அதித்தன்



ஜீவா அவனை வெறுமனே பார்த்திருக்க "நானும் இந்துவும் லவ் பண்றோம்" என்றான் அவன் நொடியும் தாமதிக்காமல் நேருக்கு நேர்



அவனைப் பார்த்து இதழ் விரித்த ஜீவா எதுவும் கூறாமலே சென்று விட்டான். அவன் சுற்றி வளைத்து மாப்பிள்ளையைப் பற்றிப் பேசியதெல்லாம் உண்மையை வரவழைக்க தானே.



'இவன் என்ன கத்திக் கூச்சல் போடுவான்னு பாத்தா அமைதியா போறான்' என்று யோசித்த குரு இந்துவிற்கு அழைத்தான்



"ஹலோ... நான் தான் இன்னைக்குக் காலேஜ்ல வேலை இருக்கு, கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாதனு சொன்னேன்ல" என்று இந்துஜா கேட்க



"தலைப் போற விஷயம்னா கூடக் கூப்பிடக் கூடாதா" என்றான் குரு எரிச்சலுடன்



"அப்படி என்ன தலைப் போற விஷயம். கனவுல நான் வந்தேனா" என்று இந்துஜா சிரிப்புடன் கேட்க



"உங்க அண்ணனைக் காலையில பாத்தேன். நான் தான் அவனை ஆஃபிஸ்ல ட்ராப் பண்ணேன்" என்று குரு சொன்னான்



"நல்ல விஷயம் தான... உங்களுக்குள்ள ஃப்ரென்ட்ஷிப் வொர்க் அவுட் ஆச்சா" என்று இந்து ஆர்வத்துடன் கேட்டிட


"இல்ல. நாம லவ் பண்ற விஷயத்த அவன்ட்ட சொல்லிட்டேன்" என்றான் குரு தயங்கியபடி



"என்ன... எதுக்காக... என்ன அப்படி உனக்கு அவசரம். லூசாய்ட்டியா. அது அதுக்குனு ஒரு நேரம் இருக்கு குரு" என்று இந்துஜா கத்த ஆரம்பிக்க



"அவன் தான் என் வாய கிளறுனான். என் கிட்டயே வந்து உனக்கு மாப்ள பாக்கணும்னு சொன்னா நான் பதிலுக்கு, ஆன் சரிங்க பாத்துரலாம், நம்ம பாப்பாக்கு தான அப்டினா சொல்ல முடியும்" என்றான் குரு பொறுமையிழந்து



"காலைலயே என்னை டென்ஷன் ஆக்காத. இப்போ நான் எந்த முகத்தை வச்சிட்டு வீட்டுக்குப் போவேன். அய்யோ... கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா தான் என்னவாம்" என்று இந்துஜா பயம் கொண்டு புலம்ப


"இப்போ என்ன செய்ய சொல்லுற நீ" என்று குரு முடிவாகக் கேட்டான்



"என்ன பண்ணுவியோ தெரியாது. மதியம் ஒழுங்கா என் காலேஜுக்கு வந்து என்னைப் பாரு" என்றாள் இந்துஜா பதிலுக்கு



"அதெப்படி வர முடியும். எனக்கு வேலை இருக்கு" என்று குரு சொல்ல



"எங்க அண்ணன் கிட்ட சொல்லும் போது மட்டும் வலிக்கலைல. மதியம் வரலைனா உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. பை" என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்



அஷ்வின் முற்பகல் வேளையில் பாக்கியத்தின் வீட்டில் இருந்தான். அங்குள்ள பழையப் புகைப்படங்களை ஆராய, அவன் தேடிய பதில் தான் அவனுக்குக் கிடைக்கவில்லை.



அவனிடம் வந்த பாக்கியம் "என்னடா புதுசா பாக்குற மாதிரிப் பாத்துட்டு இருக்க" என்றார்



"ஏன்மா நாம எப்போவாச்சும் சென்னைல இருந்தோமா" என்று அஷ்வின் கேட்டிட



"இல்லைடா. நான் பிறந்ததே கோயம்புத்தூர் தான். அதை விட்டு நான் வெளிய போனதே இல்ல" என்று பாக்கியம் சொன்னார்



"அப்பா எந்த ஊரும்மா" என்று அஷ்வின் கேட்க



"அவரும் அதே ஊரு தான். நான் படிச்ச ஸ்கூலுக்குப் பக்கத்துல பரோட்டா மாஸ்டரா இருந்தாரு. அதான் சொல்லிருக்கனேடா..." என்று பாக்கியம் கூறினார்



"ரெண்டு பேருக்கு ஒரே நேம் இருக்குமா என்ன. நான் இதுவரைக்குக் கேள்விப்பட்டதே இல்ல. நம்ம அப்பா பேரும் காத்தவராயன். ஸ்வேதாவோட அப்பா பேரும் காத்தவராயன்" என்று அஷ்வின் அவர் மடியில் படுத்துக் கொண்டே சொல்ல



"இது ஒரு விஷயம்னா யோசிச்சுட்டு இருக்க" என்று சிரித்தார் பாக்கியம்



"உனக்கு எதுவும் தோணலையா. போம்மா. ஆமா அப்பாவோட அப்பா பேரு என்ன" என்று அஷ்வின் ஆராய



"அவரு அதெல்லாம் சொல்லலடா. நான் கேட்டதும் இல்ல. அவருக்குனு யாருமே இல்ல" என்றார் பாக்கியம்



"எப்படிமா ஒத்தை ஆள நம்பி, வீட்டை விட்டுப் போய் அவரையே கல்யாணம் பண்ணிக்கிட்ட... அப்படி என்ன பண்ணிட்டாரு அவரு உனக்காக" என்று அஷ்வின் வினவ



"என்னடா கேள்வி இது. இதுக்கு நான் என்னனு பதில் சொல்லுவேன். எனக்கு அவரைப் பிடிச்சுருந்தது. அவ்ளோ தான்" என்றார் பாக்கியம் சாதாரணமாக



"அம்மா, அப்பா உன்னை எப்படி கரெக்ட் பண்ணாரு" என்று அஷ்வின் கேட்க



அவனது காதைப் பிடித்துத் திருகியவர் "நீ எப்படி உன் கேர்ள் ஃப்ரெண்ட கரெக்ட் பண்ணியோ. அப்படித்தான். அதனால இந்த கேள்விய சான்ட்ரா கிட்டப் போய் கேளு. நல்ல பதிலா கிடைக்கும்" என்றார்



"ஏன்மா வெக்கப்படுற. இதைக் கூட என்கிட்ட சொல்ல மாட்டேங்குற" என்று அஷ்வின் சிரித்துக் கொண்டே கேட்க



"ஏன்டா இதெல்லாமா சொல்லுவாங்க. வாழ்க்கைல எல்லாத்தைப் பத்தியும் ஆராய்ஞ்சிட்டே இருக்கக் கூடாது. எழுந்திரு... சான்ட்ராவுக்கு சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். கொண்டு போய் கொடு, பசியோட இருப்பா" என்று அவனைத் துரிதப்படுத்தினார் பாக்கியம்



"இன்னொரு தடவை சாப்பாடு போடு. சாப்பிட்டுப் போறேன். எனக்குப் பசிக்குற மாதிரியே இருக்கு" என்ற அஷ்வின் கை கால்களை நீட்டி முழக்க



"அவக் கூட சேந்து சாப்பிடு, போ. என்ன பழக்கம் இது... ஒருத்தங்க பசியா இருக்கக்குள்ள, தனியா விட்டுட்டு சாப்பிடறது" என்று கண்டித்தார் பாக்கியம்



"அவ இவ்வளவு நேரம் எனக்கு வெயிட் பண்ணிட்டு இருப்பானு நினைக்கிறியா... இந்நேரம் பாஸ்தா, நூடுல்ஸ்னு எதையாச்சும் கிண்டிக் கிளறி சாப்பிட்டுருப்பா" என்றான் அஷ்வின் அன்னையைக் கட்டிக்கொண்டு



"ஒருவேளை சாப்பிடலைனா..." என்று பாக்கியம் சொல்ல



"சரி... கிளம்புறேன். என்னை இங்கருந்து துரத்துறதுலயே இருக்க" என்றவன் அவர் எடுத்து வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்



வாசல்வரை சென்றவர் "வீட்டுக்குப் போயிட்டுக் கூப்டுடா" என்று கூறிட



"ஓகேமா. பை" என்றவன் அங்கிருந்து துள்ளிக் குதித்து ஓடி விட்டான்



"அதுக்குள்ள வளந்துட்டான், என் பையன்" என்று நினைத்தவர் மகனை எண்ணி விரல்களை மடக்கி நெட்டி முறித்துக் கொண்டார்



மதியமாய் வீட்டில் அமர்ந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த பானுமதி "நீயாச்சும் கொஞ்சம் என்னை நிம்மதியா விடேன்மா. எப்போ பாரு குளிக்குற நாள் வந்துச்சா வந்துச்சானு கேட்டு சாகடிக்காத. மாசம் ஆனா வந்துட்டு தான் இருக்கு. நாங்க இப்போ ப்ளான் பண்ணலமா..." என்றாள் அயர்ந்து போய்



"என்னடி ப்ளானு அது இதுன்னுட்டு. உங்க அப்பா வேற உங்களை நினைச்சு வருத்தப்படுறாரு" என்று அன்னக்கொடி சொல்ல



"எங்களுக்கு இப்போ என்ன முடியாம போச்சுனு வருத்தப்படுறீங்க. இதெல்லாம் தேவையில்லாத கவலை உங்களுக்கு. கல்யாணம் ஆன ரெண்டே வருஷத்துல இடுப்புல ஒன்னு, வயித்துல ஒன்னுனு வச்சுட்டு இருந்தா சுகமா இருக்குமோ" என்று பானு கோபப்பட்டாள்



"என்னத்துக்குக் கோவப்படுறவ. சரி மாப்பிள்ளை வந்தா அப்பாக்குப் பேச சொல்லு" என்று அன்னக்கொடி சொல்ல



"அப்பா அவருக்கிட்ட எதாச்சும் கேட்டு வைக்கப் போறாருமா. அப்பறம் அவரு தேவையில்லாம டென்ஷன் ஆவாரு" என்று பானுமதி சொல்ல



"அப்படி ஒன்னும் நாங்க விவஸ்தை கெட்டுப் போயிடல" என்று அன்னக்கொடி சொல்லிக் கொண்டிருந்த நேரம் அங்கு ஜீவா வந்தான்



"அம்மா... அவரு வந்துட்டாரு. நான் அப்பறம் பேசுறேன்" என்ற பானுமதி அழைப்பைத் துண்டித்தாள்



வாசலில் காலணியைக் கழட்டிய படியே "பானு, பானு" என்று ஜீவா கத்த



"இங்க தான இருக்கேன்... என்னத்துக்கு இப்படிக் கத்துறீங்க" என்று பானுமதி சாதாரணமாய் கேட்டாள்



"என்ன பாத்தா உங்களுக்குலாம் லூசு மாதிரி தெரியுதில்ல. ம்ம்ம்..." என்று ஜீவா கேட்க



"எதுக்கு இப்போ கோவப்படுறீங்க. என்ன நடந்துச்சுனு சொல்லுங்க" என்ற பானு எழுந்து நின்று விசாரித்தாள்



"இன்னும் என்ன நடக்கணும். மேல்வீட்டுப் பையனும் உன் ஃப்ரெண்டும் காதல் பண்றாங்களாம். உனக்கும் இதெல்லாம் தெரியும் தான. இத்தனை நாளா மறைச்சிட்ட இல்ல" என்று ஜீவா ஆத்திரத்துடன் கேட்டிட



"என்னங்க சொல்றீங்க" என்றாள் பானு புரியாமல்



"நடிக்காத, நடிக்காத. ரெண்டு பேருக்கும் சேத்து சாயந்தரம் இருக்கு" என்று ஜீவா சீற



"எதாச்சும் புரியுற மாதிரி சொல்றீங்களா" என்றாள் பானு



"நான் உன்னை நம்புனேன். ஆனா நீ என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சுட்ட" என்ற ஜீவா அங்கிருந்து வெளியேறி இருந்தான்



காலையில் மக்கர் செய்த வண்டி ஜீவா உதைத்த வேகத்தில் இப்போது சீறிட, சீற்றத்துடன் செல்பவனையே சோர்வாகப் பார்த்திருந்தாள் பானுமதி



கோபம் வந்து
கண்ணை மறைக்கும்
காதல் வந்தால்
உண்மை விளங்கும்
கசப்புகள் வாழ்வில்
கல்லடி போல
அவ்வப்போது வந்து
இன்பம் பறிக்கும்
மரமாய் கிளைகளை
விரித்து உயர்ந்திரு
வலியைத் தாங்கி
இனிப்பை வழங்கிடு
 

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 41



ஜீவா சம்பந்தமே இல்லாமல் கோபித்துக் கொண்டு செல்ல, சத்தம் கேட்டு அங்கு வந்த ஃபஹிமா "என்னடா எதாச்சும் பிரச்சனையா" என்று கேட்டாள்



பானுமதியோ இவ்வளவு நேரம் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீரை உகுக்க ஆரம்பித்திருந்தாள்



"ஹே... என்னாச்சு. எங்க வீட்டுக்கு வா. அங்க போய் பேசலாம்" என்று பதறிய ஃபஹிமா பானுமதியின் வீட்டுக் கதவை இழுத்துத் தாழிட்டாள்



பானுமதி ஃபஹிமாவுடன் அவள் வீட்டிற்கு செல்ல "அழாத பானு. இப்படி தான் வேலைல இருக்குற டென்ஷன சான்ஸ் கிடைச்சா நம்ம மேல காட்டிடுவாங்க. ஈவ்னிங் மறுபடியும் நார்மலா ஆகி வருவாரு பாரேன்" என்று சமாதானம் சொன்னாள் ஃபஹிமா



"இல்லக்கா. நான் எந்த தப்பும் செய்யாமலயே என் மேல கோவப்படுறாரு" என்றாள் பானு விசும்பலோடு



"அவங்க குணமே அப்படி தான். நாம தான் பொறுமையா புரிய வைக்கணும்டா. அழுதா எதுவும் சரியாகாது. புருஷன் திட்டுனதுக்கே இம்புட்டு அழுகையா. மாமியார் திட்டுனா என்ன பண்ணுவ" என்ற ஃபஹிமா அவளது முதுகைத் தடவிக் கொடுக்க, பானுமதி அழுகையை மெல்ல நிறுத்திக் கண்களைத் துடைத்துக் கொண்டாள்



"இரு, சமையலுக்குத் தேவையானத ரெடி பண்ணிட்டேன். பத்து நிமிஷம் உக்காரு, கூட்டி வச்சுட்டு வந்துட்றேன்" என்ற ஃபஹிமா எழுந்து சமையலறைக்குச் சென்றாள்



"நானும் வரேன்க்கா" என்ற பானுவும் அங்கு செல்ல, ஃபஹிமா காய்கறி வெட்டியிருந்த விதமே அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது



"எப்படிக்கா எல்லா பீசும் ஒரே சைஸுல இருக்கு" என்று பானுமதி ஆச்சர்யத்துடன் கேக்க



"நானே அவசர அவசரமா கட் பண்ணேன். ஏன்டி கிண்டல் பண்ற" என்றாள் ஃபஹிமா பதிலுக்கு



"அக்கா உண்மையா தான் சொல்றேன். ஆமா, நான் உங்களுக்கு ஒரு வீடியோ எடுத்துத் தரேன்னு சொன்னேன்ல. நீங்க சமைங்க நான் எடுக்குறேன்" என்றாள் பானு



"அதெல்லாம் வேணாம். கிச்சன் க்ளீனாவே இல்ல. நாம இன்னொரு நாள் எடுப்போம்" என்றாள் ஃபஹிமா அவளைத் தடுத்து



"போதும் போதும். எல்லாம் சுத்தமா தான் இருக்கு. இன்னொரு நாள் இன்னொரு நாள்னு தான் இவ்வளவு நாள் கடந்துடுச்சு" என்றாள் பானு



பத்து - இருபது நிமிடங்களில் முடிக்க வேண்டிய சமையல், முப்பது - நாற்பது நிமிடங்கள் அவர்களின் சிரிப்பொலியோடு தொடர்ந்தது



பின்பு இருவருமாய் அமர்ந்து உண்ண "வாவ், என்ன டேஸ்ட்டா சமைக்குறீங்க. இது வரைக்கும் இந்த டேஸ்ட்டுல நான் சாப்டதே இல்ல. புதுசா இருக்கு. ஆனா நல்லாருக்கு" என்றாள் பானுமதி ருசித்து



"அமைதியா சாப்பிடு. புரையேறப் போகுது" என்றாள் ஃபஹிமா கவனத்துடன்



"திடீர்னு அண்ணா வந்துட மாட்டாரே. நான் வேற ராஜ்கிரண் மாதிரி உக்காந்து சாப்பிட்டு இருக்கேன்" என்று கேட்டாள் பானுமதி



"வந்தா வெளியத் துரத்தி விட்டுரலாம். கவலைப்படாத" என்று ஃபஹிமா கூற



"என்ன தான துரத்தி விடுவீங்க... நான் உங்க வீட்டுத் தட்டோட கிளம்பிடுவேன்" என்று சிரித்தாள் பானு



"உன் புருஷனுக்கும் எடுத்துப் போய் கொடு" என்று ஃபஹிமா சொல்ல



"அய்யோ வேணாம். ஏற்கனவே கோவத்துல போயிருக்காரு. ஈவ்னிங் வந்து என்ன பண்ணப் போறாருனே தெரியல. உங்கக் கிட்ட சொல்றதுக்கு என்னக்கா... என் நாத்தானார் மேல்வீட்டுப் பையன லவ் பண்றாளாம். என் கிட்ட ஒரு வார்த்தைச் சொல்லிருந்தா, நானே அவருக்கிட்ட நிதானமா எடுத்துச் சொல்லிருப்பேன். இப்போ அவரா தெரிஞ்சுக்கிட்டு ஒரேயடியா குதிக்கிறாரு" என்று புலம்பினாள் பானுமதி



"இதுக்கு நீ என்ன பண்ண முடியும். விடு, எதோ கோவத்துல உன்னைத் திட்டிட்டாரு. சாயந்தரம் நீ தான் அண்ணனையும் தங்கச்சியையும் சமாதானப்படுத்த வேண்டி வரும். ரெடியா இரு" என்றாள் ஃபஹிமா



"இடையில போய் என்ன பாடுபடப் போறேனோ. ஏற்கனவே அண்ணனுக்கு ஒன்னு சமைச்சா, தங்கச்சிக்கு ஒன்னு சமைக்க வேண்டியதா இருக்கு. அவங்க ரெண்டு பேருக்கும் அவ்ளோ பொருத்தம்..." என்ற பானு தட்டை எடுத்துக் கொண்டு கழுவச் சென்றாள்



"இந்த வேலை தான் வேணாங்குறது" என்று ஃபஹிமா கண்டிக்க



"பரவால்ல விடுங்கக்கா. நம்ம வீடு தான. சரி நான் வரேன்க்கா. முன்னாடியே எங்க வீட்டுல ஒரு வார்த்தை சொல்லி வைக்கிறேன். இந்த மனுஷன் கோவப்பட்டு வீட்டுக்குக் கிளம்புனு சொல்லிடப் போறாரு" என்றாள் பானு கவலையுடன்



"அவரா... உன்னை விட்டுட்டு இருந்துருவாருனு நினைக்காத. சண்டைப் போட்டாலும் கதவை சாத்தி வச்சிட்டு தான் கத்துவாரு. கவலைப்படாம போ" என்று ஆறுதல் சொல்லி அனுப்பினாள் ஃபஹிமா



பதிலுக்கு சிரித்த பானுமதி பல விஷயங்களை யோசித்தபடி வீட்டிற்குள் சென்றாள்



மதிய வேளையில் குரு இந்துஜாவின் முன் புகைப் பிடித்துக் கொண்டு நின்றிருக்க, "வாய தொறக்குறியா எங்கயாச்சும். செய்யுறத செஞ்சுட்டு கல்லு மாதிரி நிக்குற" என்றாள் இந்துஜா



"இப்போ என்னடி செய்யணும். வா போய் கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றான் குரு அவள் கரம் பற்றி இழுத்து



"கைய விடு குரு. உன் வாலைக் கொஞ்சம் சுருட்டிட்டு இருக்கியா. எனக்கு பயத்துல சாப்பிடக் கூடத் தோணல. எங்க வீட்டுல என்னை அடிப்பாங்களா, கொல்லுவாங்களானு எனக்கு பயமா இருக்குடா" என்றாள் இந்துஜா கவலையுடன்



"ஏய்... சும்மா பொலம்பாத. நானும் அங்க தான இருக்கப் போறேன். எதாச்சும் பிரச்சனைனா ஒரு குரல் கொடு. வந்துட்றேன். பயப்படுறதுக்கு இங்க வேலையே இல்ல. நீ பயந்து ஒரு ஸ்டெப் பின்னாடி வச்சாலும், ப்ளாக் மெயில் பண்ண ஆரம்பிச்சுருவாங்க" என்றான் குரு எவ்விதக் கவலையுமின்றி



"என்னால வேற ஒருத்தனை நினைச்சுக் கூடப் பாக்க முடியாது" என்றாள் இந்து கண்கள் கலங்க



"லூசு மாதிரி அழாத. சரி நான் கிளம்புறேன். லேட்டாகுது" என்றான் குரு தனது இருசக்கர வாகனத்தில் ஏறிக் கொண்டு



"போகாத ப்ளீஸ்" என்று இந்துஜா கெஞ்சிட



"ஈவ்னிங் பாக்கலாம், என்ன. எங்க பை சொல்லு" என்று குரு கேட்டிட, அவள் முகத்தைத் திருப்பவே இல்லை



"ஓய்" என்று அழைத்தவன் அவளைப் பார்த்துக் கண்சிமிட்டி ஒரு வாய் முத்தத்தைப் பறக்க விட



"பை" என்றாள் இந்துஜா சிரமப்பட்டுப் புன்னகைத்து



மாலை நேரம் ஜீவா வீட்டிற்கு வர, இந்துஜா ஒரு மூலையில் உம்மென்று அமர்ந்திருந்தாள்



பானுமதி அவனுடய பையை வாங்கிக் கொண்டு "பால் வாங்கிட்டு வரலையா" என்றாள் மெல்லிய குரலில்



பதிலுக்கு ஜீவா முறைக்க "எனக்கு எதுவும் சத்தியமா தெரியாதுங்க" என்றாள் பானு கண்களால் இறைஞ்சி



கழிவறைக்குச் சென்று கை கால்களைக் கழுவிக் கொண்டு வந்தவ ஜீவா அங்கிருந்த ஃசோபாவில் அமர்ந்தான். என்ன நடக்கப் போகிறதோ என்று பானுமதி புடவை நுனியைக் கையில் சுற்றியபடி பார்த்துக் கொண்டு இருந்தாள்.



"இந்து..." என்று ஜீவா கடுமையான குரலில் அழைத்திட, அவள் என்னவென்பது போல் அவனைப் பார்த்திருந்தாள்



"உனக்கு இது அவசியம் தேவை தானா? அம்மா உன்னை முன்னவே கல்யாணம் பண்ணிக் கொடுத்துர்லாம்னு சொன்னாங்க. நான் தான நீ படிக்க ஒத்துக்கிட்டேன். அதுக்கு இதான் நீ கொடுக்குற சன்மானமா" என்று ஜீவா கேட்டிட



"நானா எதையும் தேடிப் போகல. இத்தனை வருஷத்துல நான் இப்படி இல்லனு உனக்கே தெரியும். லவ் சொல்லிட்டு வராது அண்ணா" என்று இந்துஜா சொல்லிட



"எனக்கே பாடம் எடுக்குறியா. நானும் உன் வயசைத் தாண்டி தான் வந்துருக்கேன். லவ் அதுவா தான் வரும். அதை நம்ம வாழ்க்கைக்கு எடுத்துக்குறதும் விலக்கி வைக்குறதும் நம்ம கைல தான் இருக்கு. படிப்புல நாட்டம் இல்லைனு சொல்லிருந்தா, முன்னவே கல்யாணம் பண்ணி வச்சிருந்துருப்பேன்ல" என்றான் ஜீவா



"எனக்கு இப்போவும் படிக்க விருப்பம் இருக்கு. இப்போதைக்குக் கல்யாணம் பண்ணிக்குற அவசரமும் இல்ல" என்றாள் இந்துஜா நேரடியாய்



"இப்போ என்ன சொல்ல வர" என்று ஜீவா கேட்டிட



"நான் குருவ தான் கல்யாணம் பண்ணிப்பேன். நீங்க தான் செஞ்சு வைக்கணும்" என்றாள் இந்துஜா உறுதியாக



"அப்படியே அடிச்சுப் பல்லலாம் கழட்டிடுவேன். நம்ம வீட்டை விடு. அவங்க வீட்டுல முதல்ல ஒத்துப்பாங்களா. இத்தனை நாள் பழகுறல்ல... அவனோட ஜாதி என்ன" என்று ஜீவா கேட்டிட



"அண்ணா... நீயுமா இப்படி. உனக்கு இந்த கேள்வி தான் முதல்ல தோணுச்சா" என்றாள் இந்துஜா முகம் சுளித்து



"நீ பெங்களூர்ல உக்காந்துட்டு இப்படி பேசிடுவ. நான் ஒன்னும் தெரியாம இந்த கேள்விய கேக்கல. கிராமத்துல தான பிறந்து வளந்த... அவனைப் பாக்கும் போதே உனக்குத் தெரியல. நானே மனசு வந்து இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சாலும், அவங்க வீட்டுல உன்னை எந்த நிலைமைல வச்சு நடத்துவாங்கனு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்ல இந்து. அந்த பையனே நாள பின்ன இந்த காரணத்துக்காக உன்னை வெறுத்தாலும் வெறுப்பான்" என்றான் ஜீவா விளக்கமாய்



"குரு கிட்ட நான் ஏற்கனவே சொல்லிட்டேன். அவனுக்கு இதைப் பத்திக் கவலையில்ல" என்று இந்துஜா பதிலுக்கு சொல்ல



"என்னால இதுக்கு மேலயும் எதுவும் எக்ஸ்ப்ளெய்ன் பண்ண முடியாது. நாம அவங்க வீட்டு ஆளுங்க முன்னாடி கூனிக் குறுகிக் கும்பிடு போடணும் இல்ல. அம்மாவையும் அக்காவையும் வர சொல்றேன். அவங்க சொன்னா தான் உனக்குக் கொஞ்சமாச்சும் உரைக்கும். நீங்களா உக்காந்து பேசித் தீத்துக்கோங்க" என்ற ஜீவா வேகமாக எழுந்து உள்ளே சென்று விட்டான்



அவன் எழுந்து உள்ளே சென்றதும் இந்துஜா அழுக ஆரம்பித்திருக்க, "எல்லாம் சரியா போய்டும் இந்து. உங்க அண்ணன் எதோ கோவத்துல பேசுது. நான் போய் பேசுறேன்" என்று சமாதானம் கூறிய பானு ஜீவாவிடம் சென்றாள்



அவன் சோர்ந்து போய் கட்டிலில் சாய்ந்திருக்க, "என்னங்க" என்று அழைத்துப் பார்த்தாள் பானு



ஜீவா அவளுக்கு செவி சாய்க்காமல் எதோ யோசனையிலேயே ஆழ்ந்திருக்க "அத்தான்..." என்று அவனை உசுப்பிப் பார்த்தாள்



"என்னைக் கொஞ்ச நேரம் தனியா விடுறியா" என்றான் ஜீவா சீற்றத்துடன்



பானுமதி யாரிடமும் பேசி சுமூகத்திற்கு வர முடியாமல் எழுந்து சமையலறைக்குச் சென்றாள்



தோசையை ஊற்றியவள் இந்துவிடம் தட்டை எடுத்துச் சென்று "சாப்பிடுமா. உடம்பைக் கெடுத்துக்காத" என்று அவள் கைகளில் திணித்தாள்



முதலில் முரண்டு பிடித்தவளுக்குப் பசியில் வயிறு கிள்ள "தேங்க்ஸ் அண்ணி" என்று கூறிவிட்டு உண்ணத் துவங்கி இருந்தாள்



பானு அவளிடம் ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு, மீண்டும் சில தோசைகளை ஊற்றி எடுத்துக் கொண்டு ஜீவாவிடம் சென்றாள்



"என்னங்க. எழுந்திருச்சு சாப்பிடுங்க. மதியமே சாப்பிடல போல. கொண்டு போன சாப்பாட்ட அப்படியே எடுத்துட்டு வந்துட்டீங்க" என்றாள் கனிவாக



"அவ என்ன பண்ணுறா" என்று ஜீவா மெதுவாக வினவிட



"சாப்பிட்டு சோஃபால கண்ணை மூடிப் படுத்திருக்கா" என்று பானு பதிலளித்தாள்



கருங்கல்லைத் தூங்கி
நெஞ்சில் வைத்தால்
மிகுந்து கனக்கும்
உன் பொய்கள்
என்னைக் குலைத்து
மூச்சைப் பிடிக்கும்
 

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 42



வேகமாகப் படுக்கையில் இருந்து எழுந்து சென்ற ஜீவா கதவைச் சாத்தினான்



பானுவின் அருகில் வந்தமர்ந்து "நீ முதல்ல சாப்பிடு. நான் சாப்பிடுறேன்" என்று ஜீவா சொல்ல



"நான் உங்களுக்கு மட்டும் தான் தோசை ஊத்துனேன். நீங்க முதல்ல சாப்பிடுங்க" என்று பானுமதி சொன்னாள்



"சாப்பிடுமா" என்று ஜீவா சொல்லவும் பானு உண்ண ஆரம்பித்தாள்



ஜீவா ஊரில் இருக்கும் வள்ளிக்கு அலைபேசியில் அழைத்தான்



"அம்மா..."



"ஆன் நல்லாருக்கேன். ம்ம்ம்ம்"



"கிளம்பி வா நாளைக்கு"



"என்ன ஏதுனு சொன்னா தான் வருவியா"



"நாளைக்கு வர முடியாதா" என்று ஜீவா பேசிக் கொண்டிருக்க, பானுமதி அவனுக்கு இடையிடையில் ஊட்டிவிட அவனும் வாங்கிக் கொண்டான்



"சீக்கிரம் வானா வாயேன்"



"சரி பாத்துட்டு எப்போ வரேன்னு ஃபோன் பண்ணு" என்று கூறிவிட்டு ஜீவா அழைப்பைத் துண்டித்தான்



"உடனேவே இதை அத்தைக் கிட்ட சொல்லணுமாங்க..." என்று பானுமதி பொறுமையாகக் கேட்க



"வேற என்ன செய்யுறது சொல்லு" என்றான் ஜீவா அலட்டலாய்



எங்கே ஏதாவது கூறப் போய் உண்ணாமல் இருந்து விடுவானோ என்று எண்ணிய பானு அமைதியானாள்



சற்று நேரத்தில் தட்டு காலியாகி விட "நான் போய் இன்னும் ரெண்டு ஊத்தி எடுத்துட்டு வரேன்" என்று எழுந்தாள் பானு



"ம்ச்ச் வேணாம். அதை ஓரமா வை" என்றான் ஜீவா



"போய் கையாச்சும் கழுவிட்டு வரேன்" என்ற பானு எழுந்து வெளியே சென்றாள்



வெளிக்கதவைச் சாற்றி விட்டுத் திரும்பி வந்தவள் "வெளியப் போய் படுத்துக்கலாமா" என்று கேட்டாள்



அவளை உள்ளே வருமாறு சைகை செய்தவன் மீண்டும் அறைக்கதவைத் தாழிட்டான்



பானுவின் கரங்களைப் பற்றிக் கொண்ட ஜீவா "நான் இத்தனை நாள் இந்துவோட வாழ்க்கைக்காக உன் வாழ்க்கைய வீணடிச்சுட்டேன். இப்போ யோசிச்சுப் பாத்தா எல்லாமே முட்டாள் தனமா தெரியுது" என்று கூறி வலியுடன் சிரித்தான்



"அப்படிலாம் சொல்லாதீங்க. எல்லா விஷயங்களும் நாம நினைக்குற மாதிரி நடக்காது. எதை நினைச்சும் கவலைப்படாதீங்க. அடுத்து என்ன பண்ணுறதுனு யோசிச்சு முடிவெடுக்கலாம்" என்று பானு நிதானமாகச் சொல்ல



"இனிமே என்ன யோசிச்சு என்னத்த பண்ண போறோம். எல்லாம் முடிஞ்சுடுச்சுனு நினைக்கிறேன்" என்று ஜீவா பதிலுக்குப் புலம்பினான்



"நீங்க கஷ்டப்படுறதப் பாத்து என்னால தாங்கிக்க முடியல. கொஞ்சமாச்சும் ரிலாக்ஸா இருங்க" என்ற பானு அவனை ஆசுவாசப்படுத்த முயல, ஜீவா அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்



"ஐ அம் சாரிடி. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்" என்று ஜீவா சொல்ல



"ஏன் இப்படிலாம் பேசுறீங்க. நான் தப்பா எதுவும் நினைச்சுக்கல. நாம சேந்து முடிவு பண்ணது தான" என்றாள் பானுமதி



"மதியம் யார்க்கிட்டப் பேசிட்டு இருந்த" என்று ஜீவா கேட்க



"அம்மா தான் பேசுனாங்க" என்றாள் பானு



"என்ன சொன்னாங்க" என்று ஜீவா கேட்டிட



"எப்பவும் போல தான். சும்மா பேசிட்டு இருந்தோம்" என்றாள் பானுமதி



"ப்ரெக்னன்ட்டா இருக்கியானு எதுவும் கேட்டாங்களா" என்று ஜீவா குற்றவுணர்வுடன் கேட்க



"அவங்க எப்பவும் கேக்குறது தான. இது ஒன்னும் எனக்குப் புதுசு இல்ல. விடுங்க... கண்டதைப் போட்டுக் குழப்பிக்காதீங்க. நம்ம இந்துவோட கல்யாணத்தைப் பத்தி மட்டும் இப்போதைக்கு யோசிப்போம்" என்று பானுமதி சொன்னாள்



"அந்த விஷயத்துல இனிமே நாம யோசிக்குறதுக்கு ஒன்னும் இல்ல பானு" என்றான் ஜீவா எங்கோ வெறித்துப் பார்த்தபடி



"ஓகே. எதா இருந்தாலும் நாளைக்குக் காலைல பேசிக்கலாம். இப்போதைக்கு நிம்மதியா படுத்துத் தூங்குங்க" என்று பானுமதி சொல்ல



"நான் இனிமே நம்மள பத்தி தான் யோசிக்கப் போறேன்" என்ற ஜீவா அவளைத் தன்னோடு பிணைத்துக் கொண்டான்



இப்போது கூச்சமாக உணர்ந்தவள் அவனிடம் இருந்து விலக முயல, ஜீவா அவளை விட்டபாடில்லை



"ஏங்க... நீங்க மேல போய் படுத்துக்கோங்க. நான் கீழப் படுத்துக்குறேன்" என்று பானுமதி சொன்ன பிறகும் ஜீவா எதுவும் சொல்லாமல் அவளை இன்னுமே இறுக்கிக் கொண்டான்



இருவருக்கும் இடையே மௌனமே நிலவ, ஒவ்வொரு நொடியும் தீராதத் தகிப்பும் காதலும் ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது. ஜீவா பதமாய் அணுக, அவளும் இதமாய் தன்னைத் தன்னவனுக்கே உரித்தாக்கினாள். இத்தனைக் கால ஏக்கமும் தவிப்பும் புதுமையான இந்த உணர்வும் போட்டிப் போட்டிக் கொண்டு கிளர்ந்தெழ, இருவரும் உறங்கவே விடியல் ஆகிப் போனது. விடியற்காலை அலாரம் கூவ, பானுமதி கண்களைத் திறக்க முடியாமல் திணறினாள். அலாரத்தை நிறுத்திய ஜீவா தனது வெற்று மார்பில் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு மீண்டும் உறங்கிப் போனான். பானு எழுந்து பார்த்த போது மணி ஒன்பதை நெருங்கி இருந்தது.

'


அச்சச்சோ இவ்வளவு நேரம் தூங்கிட்டோமே'
என்று பானுவுக்குத் தூக்கி வாரிப் போடத் திடுக்கிட்டு எழுந்தாள்



அவள் எழுந்ததில் ஜீவாவுக்குமே மெல்ல தூக்கம் கலைய, "நான் இன்னைக்கு ஆஃபிஸ் போகல. எழுப்பாத" என்றான் முணகலுடன்



இரவு நடந்ததை எண்ணி ஒரு நொடி சிலிர்த்துப் போனவள் அவன் நெற்றி முடியை ஒதுக்கி முத்தமிட ஆசை கொண்டாள். பிறகு வேண்டாமென்று உள்ளுக்குள் மறுதலித்தவள் சிறு புன்னகையுடன் தன்னை சீர்ப்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள். பானு வெளியே வந்த போது இந்துஜாவை அங்கு காணவில்லை.



'எங்க போனா இந்த பொண்ணு. ஒருவேளை சீக்கிரம் எழுஞ்சு கிளம்பி காலேஜ் போயிருப்பாளா. ச்ச்ச நம்ம தான் அசடாட்டம் தூங்கிட்டோம்' என்று எண்ணிக் கொண்ட பானு கழிவறைக்குச் சென்று முகங்கழுவிப் பல் துலக்கி விட்டுத் திரும்பினாள்



பானுமதி இந்துஜாவின் எண்ணிற்கு அழைத்துப் பார்க்க, அவளது மொபைல் வீட்டிலேயே இருந்து ஒலித்தது



'ஃபோன எடுக்காம எங்க போயிருப்பா' என்ற யோசனையுடன் பானுமதி மாடிவரைச் சென்று திரும்பி வந்தாள்



வீட்டினைச் சுற்றியும் ஒருமுறை தேடிப் பார்க்க இந்துஜா எங்கேயும் இல்லை



அவசரமாக வீட்டிற்கு திரும்பி வந்த பானுமதி "என்னங்க... எழுந்திரிங்க... நம்ம இந்துவ காணும். ஃபோனயும் இங்கேயே வச்சுட்டுப் போயிருக்கா" என்று பதற



"இங்க தான் எங்கயாச்சும் மூஞ்ச தூக்கி வச்சுட்டு உக்காந்துருப்பா. நல்லா பாரு" என்ற ஜீவா கண்களைக் கசக்கிக் கொண்டு தூக்கத்தில் இருந்து எழுந்தான்



"சுத்தித் தேடிப் பாத்துட்டேன். ஆளையே காணும்" என்று பானுமதி சொல்ல, ஜீவாவும் எழுந்து வந்து துலாவினான்



"வீட்டுல சாப்பாடு இன்னும் செய்யலைனு, பக்கத்துல எதாச்சும் கடைக்குப் போயிருப்பாளா இருக்கும்" என்று ஜீவா சமாதானம் சொல்லிக் கொண்டிருந்த நேரம் வாசலில் டாக்ஸி சத்தம் கேட்டது



பானுமதி என்னவென்று வெளியில் சென்று பார்க்க, அப்படியே உறைந்து போய் நின்றாள். ஜீவாவும் வெளியில் வந்து எட்டிப் பார்க்க, டாக்ஸியில் இருந்து மாலையும் கழுத்துமாய் இந்துஜாவும் குரு அதித்தனும் இறங்கினர். அவர்களுடன் வருணும் சேர்ந்து கொண்டு மூவருமாய் மேலே வர, பானுமதி இறுக்கமாக ஜீவாவின் தோளைப் பற்றிக் கொண்டாள்.



ஜீவா அவள் கையை உதறி விட்டு வேகமாகச் சென்று குருவின் சட்டையைப் பிடித்து உலுக்க, "அண்ணா விடுண்ணா அவர" என்று இந்துஜா குறுக்கே வந்து நின்றாள்



"என்ன இந்து இது. ஏன்டி இப்படி பண்ண. உங்க அண்ணன் உன்னை எவ்வளவு நம்புனாரு. நேத்திக்குக் கூட உன்கிட்ட சத்தம் போட்டாரே தவிர, உன் மேல கை வச்சிருப்பாரா. இப்படி எங்களை ஏமாத்த உனக்கு எப்படி மனசு வந்துச்சு" என்று பானுமதி நடுவில் நின்று கேட்க



"எனக்கு வேற வழித் தெரியல அண்ணி. அம்மா வந்தா எங்க எங்களைப் பிரிச்சுடுவாங்களோனு பயமா இருந்துச்சு. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க" என்ற இந்துஜா குலுங்கிக் குலுங்கி அழுதாள்



"என் முகத்துலயே முழிக்காத. அண்ணன் அண்ணினு எந்த உறவு சொல்லிக் கூப்டாத. தயவு செஞ்சு என் வீட்டுக்குள்ள காலெடுத்து வைச்சுடாத. யாரை நம்பி போனியோ, அப்படியே இருந்துடு" என்று உதடுகள் துடிக்கச் சொன்ன ஜீவா, அவளது பொருட்களை மொத்தமாகத் தூக்கி வந்து வெளியே வீசி எறிந்தான்



இந்துஜா ஒரு பக்கம் அழ, பானுமதி இன்னொரு பக்கம் அழுதபடி நிற்க ஜீவா அவளை விருட்டென்று உள்ளே அழைத்துச் சென்றிருந்தான்



இவர்களின் சண்டையை கவனித்து வேலைக்குக் கூடப் போகாமல் நின்றிருந்த ஸ்வேதா "என்கிட்டக் கூட சொல்லல. என்ன பண்ணி வச்சிருக்கீங்க" என்று வருணிடம் முணுமுணுத்தாள்



"அப்புறம் சொல்றேன். அந்த பொண்ண உள்ள கூட்டிட்டுப் போய் சமாதானப்படுத்து" என்று வருண் சொல்ல ஸ்வேதாவும் இந்துஜாவை வீட்டினுள் அழைத்துச் சென்றாள்



"என்னடா அடி விழும்னு சொன்ன, அவங்க அண்ணன் அடிக்காமலே போய்ட்டான்" என்று குரு மெல்ல வினவ



"நான் வேணா அவன்ட்ட போய் மாப்பிள்ளை வரதட்சணை கேக்குறாராம்னு சொல்லிப் பாக்குறேன். அப்பறம் பாரு அடி இடி மாதிரி விழும். கீழ உன் பொண்டாட்டியோட சர்ட்டிஃபிகேட் ஃபைல்லாம் கிடக்குப் பாரு. பொறுக்கி எடு" என்றான் வருண் பதிலுக்கு



அப்போது அங்கு வந்த சான்ட்ரா "என்னடா ரெண்டு பேரும் சம்பவம் பண்ணிட்டீங்களா" என்றாள் சிரிப்போடு



"ஆமா, சண்டை நடக்கும்போது வராதீங்க. சண்டைலாம் போட்டு முடிஞ்சதும் செத்துட்டானா உயிரோட இருக்கானுங்காளன்னு பாக்க மட்டும் வாங்க" என்று வருண் அலுத்துக் கொள்ள



"நீங்க எங்கள்ட்ட சொல்லிட்டுப் பண்ணிருந்தா முன்னாடியே வந்து நின்னுருப்போம்" என்றாள் சான்ட்ரா பதிலுக்கு



அங்கு வந்த ஸ்வேதா "குரு உள்ள வந்து உக்காருங்க. நீயே பொருள எடுத்துட்டு வரலாம்ல வருண். இப்போ தான கல்யாணம் ஆகியிருக்கு. அவங்களை வேலை செய்ய விட்டு வேடிக்கைப் பாத்துட்டு இருக்கியே" என்று முறையிட



"எனக்கும் தான் கல்யாணம் ஆச்சு. அதுக்காக என்ன இப்போ கொம்பா முளைச்சிருச்சு. அவனோட வேலைய அவன் தான் செய்யணும்" என்றான் வருண்



"சோ ரூட்" என்ற ஸ்வேதா முறுக்கிக் கொண்டு உள்ளே சென்று விட, சான்ட்ராவும் குருவுமாய் சேர்ந்து பொருட்களை எடுத்துக் கொண்டு பின்னே சென்றனர்



வருண் உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று யோசித்தபடியே நின்றிருக்க, "வருண் இங்க வாங்களேன்" என்று ஸ்வேதா அழைத்தாள்



'என்ன இவ்ளோ பாசமா கூப்பிடுறா' என்று யோசித்தபடி வருண் உள்ளே செல்ல



அவனைத் தனியாக அழைத்துச் சென்ற ஸ்வேதா "புதுசா கல்யாணம் ஆனவங்களுக்குப் பாலும் பழமும் சாப்ட தருவாங்க. போய் வாங்கிட்டு வந்துடேன்" என்றாள் மெதுவாக



"ஹ்ம்ம்ம்... இதை சொல்ல தான் ரகசியமா கூப்டியா" என்று சலிப்புடன் கேட்ட வருண் அங்கிருந்து வெளியேற எத்தனிக்க



"வருண்" என்றழைத்த ஸ்வேதா அவன் திரும்பும் நேரம் பார்த்து அவன் கன்னத்தில் எட்டி முத்தம் பதித்திருந்தாள்



வருண் மெல்லிய புன்னகையுடன் அவளை ஏறிட, "கிளம்புங்க லேட் ஆகுது" என்று வெட்கத்துடன் அவனை வெளியே தள்ளினாள் ஸ்வேதா



காதல் வந்து
மாயம் காயம்
செய்யும் நேரம்
காற்றில் கூட
பாரம் காரம்
ஏறிப் போகும்
 

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 43

அன்று இரவு வந்து சேர்ந்த வள்ளி அழுது ஊரைக் கூட்ட, "என்ன பிரச்சனை" என்றபடி படியேறி வந்தார் துர்கா

படிக்கட்டிலேயே நின்றிருந்த ஃபஹிமா "இந்துவும் மேல் வீட்டு அண்ணாவும் கல்யாணம் பண்ணிட்டாங்க. உங்களுக்குத் தெரியாதா" என்று கேட்டிட

"இதெல்லாம் வேற நடக்குதா. கடவுளே... இந்த மனுஷன் வேற அதிக சத்தம் வந்தாலே கோவப்படுவாரே. நான் போய் அவரைப் பாத்துக்குறேன். எதாச்சும் பெரிய கலவரம் வந்தா மட்டும் கூப்டுடி. நீ இப்படி ஓரமாவே நில்லு. இந்த நேரத்துல நடுவுல போய் மாட்டிக்காத. பத்திரம்" என்று கூறி விட்டு துர்கா சென்று விட்டார்

"நாசமா போறவள. நீயெல்லாம் உருப்படுவியா... நல்லா இருப்பியா..." என்று வள்ளி வசைபாட

"இப்போ எதுக்குக் கத்திட்டு இருக்கீங்க. எதா இருந்தாலும் நிதானமா ஆற அமரப் பேச மாட்டீங்களா" என்று குரு கேட்டான்

"என் மானத்தைக் கொத்தோட அறுத்துட்டாளே. இப்போ சந்தோஷமாடி. இப்போ சந்தோஷமா... நாங்க எல்லாரும் தலை குனிஞ்சு நிக்கறது உனக்குக் குளிர்ச்சியா இருக்கா. அப்போவே இவளைப் படிக்க வைக்காத வைக்காதனு அவன்கிட்ட சொன்னேன். அவ இன்னும் நல்லா படிச்சுக் குடும்பத்துப் பேர காப்பாத்துவானு உங்க அண்ணன் சொன்னானே. இப்போ சந்தி சிரிக்க வச்சுட்டாளே..." என்று வள்ளி மேலும் அடித்துக் கொண்டு அழ

"இதெல்லாம் வீட்டுக்குள்ள வச்சுப் பேசுங்களேன். எதுக்கு இப்போ ஊரக் கூட்டி நீங்களே உங்கள அசிங்கப்படுத்துக்கிறீங்க" என்று கேட்டாள் ஸ்வேதா

'இவ எதுக்கு இப்போ வாய விட்டா' என்று வருண் நொந்து கொண்டபடி நிற்க

"வாம்மா மகராசி. கல்யாணம் ஆகாம புள்ளைப் பெத்தவ தான நீயு. உனக்கு வேணா இதெல்லாம் சின்ன விஷயமா இருக்கலாம். நாங்க அப்படி இல்ல. சோத்துல உப்புப் போட்டு சாப்டறவங்க" என்று வள்ளி வாய்க்கு வந்தபடி பேசினார்

"அம்மா... இப்போ தேவையில்லாம எதுக்கு அந்த அக்காவைத் திட்டுறீங்க. உங்க மனசு ஆறுற வரைக்கும் என்ன மட்டும் திட்டிக்கோங்க" என்று இந்துஜா விசும்பியபடி சொல்ல

"ச்சீ வாய மூடு. உனக்குப் பேசுற அளவுக்கு என்ன அருகதைக் கிடக்கு. ஓடுகாளி நாயே. எங்கயாச்சும் அப்படியே போய் தொலைக்க வேண்டியது தான. இங்க வந்து தங்கி ஏன் மானத்தை வாங்குற" என்றார் வள்ளி ஆக்ரோஷமாக

"அம்மா, கொஞ்சம் மரியாதையா பேசுங்க. நீங்க கோவமா இருக்கீங்கங்கறதுக்காகப் பேசுறது எல்லாத்தையும் சகிச்சுக்க முடியாது" என்று வருண் குரல் கொடுத்தான்

"உங்க அப்பா அம்மா எல்லாரும் உங்களை நல்லபடியா தான் வளத்தாங்களானு சந்தேகமா இருக்கு. எதுக்கு இப்படி புத்திக் கெட்டுத் திரியுறீங்க" என்று வள்ளி நீட்டிப் பேச

"முதல்ல ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோங்க. உங்க பொண்ணா விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணா. அவள நீங்க தான் என்ன ஏதுனு விசாரிக்கல. அதனால தான் நாங்க தங்க இடம் கொடுக்குற மாதிரி ஆச்சு. உங்க குடும்ப விஷயத்தை வீட்டுக்குள்ள வச்சுப் பேசிருந்தா நாங்கலாம் எதுக்கு இடையில வரப் போறோம். இப்போ எதுக்காக நீங்க ஸ்வேதாவ பத்தி அப்படி ஒரு வார்த்தை சொன்னீங்க. அவளைப் பத்தி உங்களுக்கு எதாவது தெரியுமா. உங்க பொண்ணைப் பத்தியே உங்களுக்குத் தெரியல. பின்ன எங்க..." என்று சான்ட்ரா சொன்னாள்

"உன் யோக்கியதை என்னனு எனக்குத் தெரியாதா..." என்று வள்ளி ஆரம்பிக்க

"போதும், இத்தோட நிறுத்திக்கோங்க. இவ தான் உங்க பொண்ணே இல்லைனு சொல்லிட்டீங்கள்ல, இந்து நீ உள்ள போமா. மச்சான் அழைச்சிட்டுப் போடா. ஸ்வேதாவைப் பத்தி தப்பா பேசுனீங்கள்ல. இவ என் பொண்டாட்டி தான். ரோஷினி எங்க குழந்தை தான். நம்பலையா... பாத்தீங்களா தாலி. நான் கட்டுனது... இப்போ இவ சுத்தமானவளா ஆயிட்டாளா. சான்ட்ரா பத்தி எதோ சொல்ல வந்தீங்களே... அவ கையப் பாத்தீங்களா, மோதிரம். இதுவும் அன்புக்கான ஒரு அத்தாட்சி தான். யாரும் முறை கெட்டுப் போய் வாழல. எங்களுக்குத் தகுந்தவங்களா பாத்து நல்லபடியா தான் வாழ்ந்துட்டு இருக்கோம். மனசு குளிர எங்கள வாழ்த்துனதுக்கு நன்றி. இப்போ கிளம்புங்க. தூக்கம் வருது" என்று கை கூப்பிய வருண், சான்ட்ராவையும் ஸ்வேதாவையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்

அங்கு வந்த ஜீவா வள்ளியை உள்ளே அழைத்துச் சென்று "போதும். கத்தி ஊரைக் கூட்டுனது எல்லாம். பொட்டியக் கட்டு. வேற வீட்டுக்குப் போலாம். நாளைக்கே..." என்றான் அழுத்தமாய்

தூங்கிய ரோஷினியைத் தோளில் போட்டபடி மேலே வந்த அஷ்வின் "இன்னுமா உங்க பஞ்சாயத்து முடியல" என்றான்

சான்ட்ரா அவனை முறைக்க, "வா வீட்டுக்குப் போலாம். மீதிக் கதைய நாளைக்குப் பேசிக்கலாம்" என்றான் அவன் கெஞ்சலாய்

"சான்ட்ரா கிளம்பு. இனிமே இப்போதைக்கு வர மாட்டாங்க" என்று வருணும் சொல்ல

"ஓகே பை. எதாச்சும்னா கால் பண்ணுங்க... இல்லனா கீழ வந்து கூப்டுங்க. ஃபீல் பண்ணாம தூங்கு இந்து. எங்க வீடு கொஞ்சம் பெருசா இருக்கும். அங்க வான்னு சொன்னாலும் வர மாட்றீங்க" என்று சான்ட்ரா வருத்தப்பட

"நாங்க கீழ வந்தா, அவங்களும் கீழ வந்து கலாட்டா பண்ணுவாங்க. அப்பறம் துர்காம்மா டென்ஷன் ஆவாங்க. எதுக்கு" என்றான் குரு பதிலுக்கு

"டேக் கேர் கைய்ஸ்" என்று கூறிவிட்டு அஷ்வின் சான்ட்ராவை அழைத்துச் சென்று விட்டான்

"சரி. குருவும் இந்துவும் உள்ள போய் ரெஸ்ட் எடுக்கட்டும். ஸ்வேதா, நீயும் பாப்பாவும் இங்கயே படுத்துக்கோங்க" என்றான் வருண்

"நீ எங்க போற" என்று குரு அதித்தன் கேட்டிட

"நான் மேல போய் தூங்கப் போறேன். விடிஞ்சதும் வந்துட்றேன்" என்றான் வருண்

"நீங்களும் எங்க கூடவே இருங்க... எனக்கு பயமா இருக்கு" என்று இந்துஜா சொல்லவும் வருண் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டான்
ஸ்வேதா அந்த சிறிய அறையில் பொருட்களை ஒதுக்கி வைத்து, ஒரு பாயைப் போட்டு விட்டு வெளியே வந்தாள்

"மச்சான் உள்ள போடா" என்று வருண் சொல்லவும் இருவரும் தயங்கித் தயங்கி உள்ளே சென்றனர்

"வருண்... ஒரே ஒரு பாய் தான் இருந்துச்சு" என்று ஸ்வேதா மெல்லமாகக் கூறிட

"இரு. நான் போய் எங்க ரூம்லருந்து எடுத்துட்டு வந்துட்றேன்" என்ற வருண் மேலே சென்றான்

இந்துவை அழைத்து அவள் கையில் தண்ணீர் செம்பினைக் கொடுத்த ஸ்வேதா "கதவை சாத்திக்கோ... காலைல பொறுமையா எழுந்திரி. பாத்ரூம் போகணும்னா எப்போ வேணாலும் வெளிய வா... எந்த பிரச்சனையும் இல்ல" என்று தாழ்ந்த குரலில் சொல்ல

"கதவு திறந்தே இருக்கட்டும். உங்களுக்கு எதாச்சும் தேவைனா எடுப்பீங்கள்ல" என்றாள் இந்து பதிலுக்கு

"அதெல்லாம் இல்ல. எதுவும் வேணும்னா தயங்காம கேளு. இப்போ கதவ சாத்திக்க சரியா" என்ற ஸ்வேதா கதவை இழுத்து மூடிவிட்டு வந்தாள்
வருண் வந்து பாயை விரித்துப் போர்வையை விரிக்கவும் ரோஷினியை அதில் கிடத்தினாள் ஸ்வேதா

"என்ன ஒரே ஒரு பாய் தான் எடுத்து வந்துருக்கீங்க" என்று ஸ்வேதா கேட்க

"இது ஒன்னு தான் கொஞ்சம் சுத்தமா இருந்துச்சு. இன்னொன்னு நாரிப் போய் கிடந்துச்சு. அதான் எடுத்துட்டு வரல. நீ பாய்ல படுத்துக்க. நான் ஓரமா படுத்துக்குறேன்" என்றான் வருண்

"உங்களுக்கு ஜூரம் எதும் வந்துருச்சுனா... இருக்குற பிரச்சனைய யாரு சமாளிக்குறது. அதான் இவ என் பொண்டாட்டி பொண்டாட்டினு மைக் போட்டு சொல்லியாச்சுல்ல. பாய்லயே படுங்க" என்றாள் ஸ்வேதா சலிப்பாய்

"கோவமா" என்று வருண் மெல்ல கேட்டிட

"அதெல்லாம் இல்ல. காலைல ரோஷினி எழுஞ்சதும் அவக் கிட்டயும் நீங்களே சொல்லிடுங்க" என்றாள் ஸ்வேதா

"சரி. சொல்லிடுறேன்" என்று வருண் தலையாட்டி விட்டுப் படுக்க, ஸ்வேதா அவனிடம் போர்வையை நீட்டினாள்

"குளிர் தாங்காம நீ தான் நடுங்குவ. நீயும் ரோஷினியும் போத்திக்கோங்க" என்ற வருண் திரும்பிப் படுத்துக் கொண்டான்

அந்நேரத்தில் அவனுக்கு யாரோ அழைக்க, எழுந்து வெளியே சென்றவன் நீண்ட நேரமாகியும் வரவேயில்லை. மெல்ல கண்ணயர்ந்த ஸ்வேதா அவன் உள்ளே நுழைந்து கதவைத் தாழிடுவதைப் பாதித் தூக்கத்தில் பார்த்து விட்டு முழுதும் உறங்கிப் போனாள். காலையில் எழுந்து பார்த்த போது வருண் குறுகிக் கொண்டு படுத்திருக்க, ஸ்வேதா அவனுக்கும் ரோஷினிக்கும் சேர்த்தே போர்த்தி விட்டாள். முதல் வேலையாக ஸ்வேதா எழுந்து கீழே செல்ல அஷ்வின் தான் வந்து கதவைத் திறந்தான்.

"பால் வாங்கிட்டு வரியா அஷ்வின்" என்று அவள் கேட்க

"உன்னை தான் எல்லாரும் கவனிக்கணும். நீ என்னனா சுத்தி சுத்தி வந்துட்டு இருக்க" என்று அஷ்வின் முகம் சுளித்தான்

"இருக்குற வரைக்கும் தான..." என்று ஸ்வேதா பதில் சொல்ல

"அப்படியே வாய்லயே போட்டேன்னு வை" என்ற அஷ்வின் அவள் தலை முடியைக் கலைத்து விட்டுக் கடைக்குச் சென்று விட்டான்

அந்நேரம் ஜீவா, பானுமதி, வள்ளி மூவரும் ஒரு வாடகை வண்டியைப் பிடித்துப் பொருட்களை ஏற்ற ஆரம்பித்திருந்தனர். இருபது நிமிடங்களில் வீட்டை காலி செய்தவர்கள் துர்காவிடம் கடைசியாக சொல்லி விட்டுக் கிளம்ப எத்தனித்தனர்.

பானுமதி ஃபஹிமாவிடம் "இன்னொரு நாள் முடிஞ்சா பாக்கலாம்க்கா. அடிக்கடி ஃபோன் பண்றேன்" என்று குரலில் சுரத்தே இல்லாமல் கூற, ஃபஹிமா அவளைக் கட்டியணைத்து விடை கொடுத்தாள்

ஸ்வேதா இவர்களைப் பார்த்தபடி ஓரமாய் நிற்க, வள்ளி அவளை ஒரு தரம் பார்த்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றார்

ஸ்வேதாவிடம் வந்த துர்கா "ஏன்மா இத்தனை நாள் தாலிய மறைச்சா வச்சிருந்த. வருணைத் தேடி தான் பெங்களூர் வந்தியா. இதுல மறைக்கறதுக்கு என்ன இருக்கு. சரி விடு. இந்துஜா வீட்டுல கொடுத்த அட்வான்ஸ வாங்காமலே போயிட்டாங்க. வேணும்னா பொண்ணையும் மாப்ளயையும் இங்கேயே தங்கிக்க சொல்லு" என்று கூறிவிட்டுச் சென்றார்

அஷ்வினிடம் பாலை வாங்கிக் கொண்டு மேலே சென்று பார்த்த போது, ரோஷினி வருணின் மடியில் உட்கார்ந்து அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்தாள்

பாலைக் காய்ச்சி எடுத்து வந்த ஸ்வேதா "ரோஷினி... காலைலயே எதுக்கு மொபைல். இங்க வா" என்று அதட்ட

"இனிமே நீ சொல்லுறத கேக்கக் கூடாதுனு வருண் அங்கிள் சொல்லிட்டாரு" என்று பழிப்புக் காட்டினாள் ரோஷினி

"அங்கிள் இல்ல அப்பா" என்று வருண் மெதுவாய் அவள் காதருகில் முணுமுணுக்க

"ஆன்... வருணப்பா சொல்லிருக்காரு" என்றாள் ரோஷினி உற்சாகமாய்

அவள் காதைப் பிடித்து இழுத்த ஸ்வேதா "என்ன வால் ரொம்ப ஆடுது" என்று செல்லமாய் மிரட்ட
"இப்படி சொன்னா தான் ஐஸ்க்ரீம் கிடைக்கும். இல்லப்பா..." என்றாள் ரோஷினி புன்னகையுடன்
சிரித்துக் கொண்டே "யெஸ் மை கேர்ள்" என்றான் வருண், இத்தனை நாட்கள் பைக்கில் அழைத்துச் சென்று வாங்கிக் கொடுத்த ஐஸ்க்ரீம்கள் மற்றும் சாக்லெட்டுகளின் பலனை உணர்ந்தவனாய்

கசப்பைக் கடந்தால்
இனிப்பும் வந்திடுமே
வாழ்வின் அரும்புகள்
இனிதாய் சுவைத்திடுமே
 

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 44



வருண் சற்று நேரம் கழித்துக் குளிப்பதற்காக மேலே செல்ல, "டேய் எங்கடா போனீங்க... குரு எங்க. ரெண்டு நாள் வீட்டுல இல்லனுதும் ஊர்ப் பொறுக்கப் போயிட்டீங்களா" என்று கேட்டான் வாசுதேவன்



வருண் நேற்று நடந்ததை எல்லாம் சொல்லி முடிக்க "என்னது... கல்யாணம் ஆயிடுச்சா... உங்க ரெண்டு பேருக்குமா. நீ ஏன்டா இத்தனை நாள் கமுக்கமா இருந்த" என்று கேட்டான் வாசு



"இன்னும் உங்களுக்கே கல்யாணம் ஆகல. பாத்தல்ல எவ்ளோ ஃபாஸ்ட்டா இருக்காங்க... நம்ம கிட்ட சொல்லி என்னாகப் போகுதுனு சொல்லிருக்க மாட்டாங்க" என்று தர்ஷன் ஏற்றி விட



"டேய் டேய்... அடங்கு. ஸ்வேதா தான் இப்போதைக்கு சொல்ல வேணாம்னு சொன்னா. நாமளாம் அப்படியா பழகியிருக்கோம். இன்னைக்கு நைட்டு ட்ரீட்டு ஓகேயா" என்றான் வருண் சமாதானமாய்



"நடந்தது நடந்துருச்சு. இந்தா மொய்க்காசா வச்சுக்கோங்க. நைட் பார்ட்டி முடிஞ்சு நாங்க அப்படியே ஊருக்குக் கிளம்புறோம். ரெண்டு மூணு பெருசுங்க இழுத்துட்டுக் கிடக்கு. அதனால கொஞ்ச மாசத்துக்கு அங்கேயே தங்கிடப் போறோம்" என்றான் வாசு வருணின் கைகளில் பணத்தைத் திணித்து



"அண்ணா... இதெல்லாம் எதுக்கு... வைணா... ஊர்ல இருக்குறவங்களுக்கு எதாச்சும் பண்ணு" என்றான் வருண் பதிலுக்கு



ஜீவா காலி செய்து விட்டுப் போன வீட்டிலேயே குருவும் இந்துஜாவும் தங்கிக் கொண்டனர். ஒரு நாள் காலையில் இந்துஜா அசந்து தூங்கி விட, எழுந்து மணியைப் பார்த்த குரு அவளிடம் சண்டையிட்டான்.



"இப்போ என்ன நடந்து போச்சு. டெய்லி காலேஜ் போகணும், மறுபடியும் வந்து சமைக்கணும், பாத்திரம் கழுவணும்னா டயர்டா இருக்காதா" என்று இந்துஜா சொல்ல



"இனிமே சுடுதண்ணி வச்சு, நீ ட்ரெஸ் அயர்ன் பண்ணி, நான் எப்போ குளிச்சு ஆஃபிஸ் போறது" என்று கத்தினான் குரு



"இன்னைக்கு ஒரு நாள் குளிக்கலைனா ஒன்னும் குறைஞ்சிராது. கத்துற நேரத்துல போய் முகம் கழுவிட்டு வாங்க. நான் உங்க ஷர்ட்ட அயர்ன் பண்றேன்" என்றாள் இந்து



"இப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுறது" என்று குரு கேட்டிட



"ஒரு நாள் கடைல சாப்டுக்க வேண்டியது தான்" என்றாள் இந்து சாதாரணமாய்



"போன வாரமும் இதே தான் பண்ண" என்று குரு சலிப்பாய் சொல்லி விட்டுச் சென்றான்



குளிர்ந்த நீரில் குளித்து விட்டு வெளியே வந்தவன் அவசர அவசரமாகக் கிளம்ப, இந்துஜா கடைசி நிமிடத்தில் தயாராகி நின்றாள்



குரு அவளை வண்டியில் ஏற்றிக் கொண்டு செல்ல "அச்சோ முக்கியமான ரெக்கார்ட மறந்துட்டேன்" என்றாள் இந்து



எரிச்சலோடு வண்டியை வீட்டுக்குத் திருப்பியவன், அவள் புத்தகத்தை எடுத்துக் கொண்ட பிறகு விரைவாக வண்டியைச் செலுத்தினான்



"நைட் முழுக்க மொபைல் நோண்டுற... விடிஞ்சதும் தூங்குற. இப்படி இருந்தா என்ன தான் பண்றது" என்று குரு சத்தம் போட



"நான் மொபைல் நோண்டுறது தான் பிரச்சனையா... நைட் வேணாம் வேணாம்னு சொல்ல, நீ தான் கேக்கல. எனக்கு சத்தியமா முடியல. நடுராத்திரி வரைக்கும் உடம்ப டயர்ட் ஆக்கிட்டு, காலைலயே எழுந்திரினா எப்படி எழுந்திரிக்குறது. வாரத்துக்கு ஒரு தடவைனு சொன்னா நீ ஒத்துப் போகவே மாட்டேங்குற" என்றாள் இந்து பரிதாபமாய்



"கல்யாணம் பண்ணிட்டுப் பின்ன தனியா போய் பிட்டுப் படமா பாக்க முடியும். ஆசை அப்போ தான் வரும், இப்போ தான் வரும்ணு எதாச்சும் வரைமுறை இருக்கா சொல்லு. இதுக்கு தான் சொல்றேன். இந்த படிப்பலாம் மூட்டைக் கட்டுனு" என்று சிடுசிடுத்தான் குரு



"எப்போவும் என்னைப் படிக்க விடாம பண்றது தான் உன் எய்ம் இல்ல. நீ இது போல பேசப் பேசத்தான் எங்க வீட்டு நியாபகமே வருது" என்று இந்துஜா கண் கலங்க



"உன்னைக் கட்டுனதுக்கு நான் தான் அழணும். உங்க வீட்டுக்கே போ... யாரு வேணாம்னாங்க. உன்னால காலேஜ் லைஃபயும் பர்சனல் லைஃபயும் பேலன்ஸ் பண்ண முடிஞ்சா, நான் ஏன் இப்படி பேசப் போறேன். மாசக் கடைசில ஈசியா ஹோட்டல்ல சாப்டுக்கலாம்னு சொல்ற" என்று குற்றம் சாட்டினான் குரு



"நீ தான் சம்பாதிக்குறங்குறத குத்திக் காட்டிப் பேசுற மாதிரி இருக்கு. இனிமே நீ எனக்காக எதுவும் பண்ணாத. எனக்கு சாப்பாடும் வேணா... ஒன்னும் வேணா... நான் இப்போ தான் வாழ்க்கைல ஒவ்வொன்னா கத்துட்டு இருக்கேன். முடிஞ்ச வரைக்கும் பொறுப்பா இருக்கணும்னு தான் நினைக்குறேன். அதைப் புரிஞ்சுக்காம காலைலயே இவ்ளோ திட்டணுமா" என்று இந்துஜா வருத்தமுற்றாள்



"நீயும் சாப்பிட வேணாம்... நானும் சாப்டல. நான் ரொம்ப கொடுத்து வச்சவன்" என்ற குரு அவளைக் கல்லூரி வாசலில் இறக்கி விட்டுச் சென்று விட்டான்



வழியும் கண்ணீரைப் பிறர் பார்க்காதபடி துடைத்துக் கொண்டே கல்லூரிக்குள் சென்றாள் இந்துஜா. மதிய நேரத்தில் அவள் அழைத்துப் பார்க்க, குரு ஏதோ வேலைகளில் மூழ்கிப் போயிருந்தவனாய் அழைப்புகளை நிராகரித்தான். பிறகு, நடந்த சண்டையை முற்றிலும் மறந்தவனாய் மாலை வீட்டிற்கு வந்து பார்க்க வீடு பூட்டிக் கிடந்தது. இந்துஜாவின் எண்ணிற்கு அழைத்துப் பார்க்க, அவளது அலைபேசி அணைப்பில் இருப்பதாகவே வந்தது. வருணை அழைத்துக் கொண்ட குரு அவளது கல்லூரிக்குச் சென்று பார்க்க, முன்னரே அனைவரும் கிளம்பி விட்டதாக பதிலளித்தான் அந்த வாயிற்காவலன்.



"என்னடா நடந்துச்சு. ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற" என்று வருண் கேட்டிட



"காலைலயே சின்ன சண்டை" என்றான் குரு தயக்கமாய்



"என்ன விளையாட்றீங்களா... யாரும் வேணாம் நீ மட்டும் போதும்னு ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணீங்க. அப்புறம் அட்ஜஸ்ட் பண்ணி வாழாம, சண்டை போட்டுக்கிட்டா என்ன அர்த்தம்" என்றான் வருண்



"காலைல எட்டு மணி வரைக்கும் தூங்குறா" என்று குரு சொல்ல



"நீ அலாரம் வச்சு சீக்கிரம் எழுஞ்சு அவளையும் எழுப்பறது. ரெண்டு பேருல யாரு எந்த வேலைய பண்றதுனு பிரிச்சு செய்ய வேண்டியது தான. நீயும் லேட்டா தான் எழுந்துருச்ச... இல்லையா. அதுக்கு அவள மட்டும் திட்டுனா எப்புடி" என்றான் வருண் நியாயமாய்



"எனக்கு ஒழுங்கா சமைக்கவும் வராது. இவளும் வாரத்துக்கு ஒரு தடவை சலிப்புப் பட்டுக்கிட்டு ஹோட்டல்ல சாப்பிடலாங்குறா" என்று குரு கூறிட



"என்னடா மச்சான்... வாரம் ஆறு நாள் சமைச்சா, நீ ஒரு நாள் சமையேன். அட்லீஸ்ட் காய்கறி கட் பண்ணி தந்தாலே பாதி வேலை முடிஞ்ச மாதிரி இருக்கும்ல. அந்த பொண்ணு படிப்புல கான்சன்ட்ரேட் பண்ண வேண்டாமா... என்னடா இப்படி இருக்க" என்றான் வருண் சலிப்பாய்



"எதோ டென்ஷன்ல கத்திட்டேன். மத்தபடி நானும் அப்பப்போ ஹெல்ப் பண்ணிட்டு தான்டா இருக்கேன். இப்போ அவளை எங்க போய் தேடுறது" என்றான் குரு



"அவங்க அண்ணன் வீடு தெரியுமா... அங்க வண்டிய விடு" என்றான் வருண் பதிலுக்கு



"பிரச்சனை பெருசாயிடப் போகுதுடா" என்று குரு சொல்ல



"ஒரு எட்டுப் பாத்துட்டோம்னா, அடுத்ததா போலிஸ் கம்ப்ளெய்ன்ட்டாச்சும் கொடுக்கலாம். யோசிக்காத... போ" என்று வருண் அவசரப்படுத்தினான்



குரு தயங்கியபடி சென்று கதவைத் தட்ட பானு தான் வந்து கதவைத் திறந்தாள்



"என்ன திடீர்னு..." என்று பானுமதி கேட்க, அங்கு வந்த ஜீவா பல்லைக் கடித்தான்



"எங்கள நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்களா" என்று ஜீவா கத்த



"இல்ல... இந்து..." என்று இழுத்தான் குரு அதித்தன்



"எதுவும் சொல்லாத... வா போயிடலாம்" என்று சற்றுத் தள்ளி நின்றிருந்த வருண் மெல்ல சொல்ல



"என்னடா பண்ணீங்க அவளை... என்ன நடந்துச்சு" என்று குரலை உயர்த்திக் கேட்டான் ஜீவா



"இல்லை... காலேஜ் போனவங்க வீட்டுக்கு வரல. ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிருப்பானு நினைக்கிறேன். நாங்க பாத்துக்குறோம்" என்ற குரு வேகமாக அங்கிருந்து நடந்தான்



"என்னங்க... இப்படி சொல்லிட்டுப் போறாங்க" என்று பானுமதி அச்சப்பட



"பைக் சாவிய எடு... இதென்ன புது தலைவலியா இருக்கு" என்று நொந்து கொண்டான் ஜீவா



"ஒருவேள இந்நேரம் வீட்டுக்குப் போயிருப்பாளோ" என்றெண்ணிய குரு மறுபடியும் வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினான்



வருண் சான்ட்ராவிடமும் ஒருமுறை விசாரிக்க "அவ இன்னும் வரல வீட்டுப் பக்கமே" என்றாள் அவள்



வண்டியை எடுத்துக் கொண்டு விரைந்த ஜீவா, நேரடியாக அவளது கல்லூரி வளாகத்திற்குள் சென்று பார்த்தான்



புதருக்கு மறைவில் சுவற்றோரம் சாய்ந்தமர்ந்து இந்துஜா அழுது கொண்டிருக்க, நிம்மதி அடைந்தவனாய் "ஏய் எழுஞ்சு வா" என்று கத்தினான் ஜீவா



சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டவள் பையோடு அவன் அருகில் வர "அறிவில்ல. யாரும் இல்லாத இடத்துல தனியா இப்படி உக்காந்திருக்க. நேரா நேரத்துல வீட்டுக்குப் போகணும்னு தெரியாது" என்று ஜீவா சீறினான்



அவனை உடனே அணைத்துக் கொண்ட இந்துஜா "சாரி அண்ணா... சாரிடா. என்னால நைட் ஆனா நிம்மதியா தூங்க கூட முடியல. குற்ற உணர்ச்சியா இருக்கு. தனியா வாழ்க்கைனு வாழ்ந்து பாக்கும் போது தான் எவ்ளோ கஷ்டம்னு புரியுது. நான் ரொம்ப அவசரப்பட்டுட்டேன். உன்னையும் கஷ்டப்படுத்திட்டேன்" என்று கதறலோடு கூற ஜீவா அசையாமல் நின்றான்



"மன்னிச்சுட்டேன்னு சொல்லு ஜீவா" என்று இந்து தேம்ப



"இங்கருந்து முதல்ல கிளம்பலாம். வா" என்றான் அவன் ஆரவாரம் இல்லாமல்



அந்நேரத்தில் சரக்கு பாட்டிலும் கையுமாய் அங்கு வந்த இளைஞர்கள் இவர்களையே உற்றுப் பார்க்க, "சீக்கிரம் வண்டில ஏறு" என்று அவசரப் படுத்தினான் ஜீவா



இந்துஜாவும் பின்னால் ஏறிக் கொள்ள ஜீவா வண்டியை முன்னே செலுத்திக் கூட்டத்தின் நடுவே சென்றான்



அதில் ஒருவன் சும்மா இல்லாமல் இந்துஜாவின் துப்பட்டாவைப் பிடித்து இழுக்க "அண்ணா ஷாலு... என் ஷாலு" என்று பதறிப் போனாள்



சட்டென்று வண்டியை நிறுத்திய ஜீவா அவர்களைத் திரும்பி முறைக்க, அவர்கள் கூட்டமாக சுற்றி வளைத்து நின்றனர்



"வாட் இஸ் யுவர் ப்ராப்ளம். ஷி இஸ் மை சிஸ்டர். ஜஸ்ட் லீவ் ஹியர்" என்று ஜீவா பேச



"டோன்ட் யூ ஸ்பீக் கன்னடா... ஓ தமிழா. யு ஒன்லி ஸ்பீக் இங்க்லீஷா" என்றான் ஒருவன்



"ப்ளீஸ் விட்டுருங்க. நாங்க போயிடுறோம். எந்த பிரச்சனையும் வேணா" என்று இந்துஜா கெஞ்ச



"ஸ்பீக் இன் கன்னடா பேபி. தென் வி வோன்ட் டிஸ்டர்ப் யூ" என்று இன்னொருவன் வற்புறுத்தினான்



அவர்கள் இவள் மேலே இடிப்பது போல வருவதும் நகர்வதுமாய் இருக்க, இந்துஜா ஜீவாவுடன் பயந்து ஒன்றிக் கொண்டாள்



பொறுமையாக சிந்தித்து "தப்பாயிட்டு சார். நானு கன்னடாவன்னு சென்னாகி மாத்தனாடுவுடில்லா. சோ கைன்ட்லி லெட் அஸ் லீவ்" என்று கரம் கூப்பினான் ஜீவா


காலம் கண்ணீர் விட வைக்கும்
காயம் ஏற்படுத்தித் திண றடிக்கும்
மெல்ல மேலே எழுந்து வா
விடிகாலம் உண்டு நம்பிக்கை வை
 
Last edited:

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 45


ஜீவா என்ன தான் செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம், மறுபடியும் இந்துவைத் தேடியபடி குருவும் வருணும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் இருவரும் ஜீவாவைப் போல இலகுவாக இல்லாமல் கூடி நின்ற கூட்டத்திடம் உறுமலாக நடந்து கொள்ள, ஜீவா அங்கிருந்து விலகிக் கொண்டான். இந்துஜாவை அழைத்துக் கொண்டு கல்லூரியை விட்டு வெளியே சென்றான். ஜீவா வண்டியை நிறுத்த, இந்துஜா இறங்கி நின்று அவனையே பார்த்திருந்தாள்.


"சரி நான் போறேன். நீ... பாத்து... போ" என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னவன் திரும்பி அவளைப் பார்த்தான்


அவள் மறுபடியும் அழுவதற்கு தயாராகியபடி "என்னை மன்னிக்க மாட்டியா" என்று கேட்டாள்


அவனுக்கு பதில் சொல்லும் அளவு மனம் இல்லாமல் போகவே, பக்கத்திலிருந்த கடையில் இருந்து ஒரு பழச்சாறை வாங்கி நீட்டினான். இந்துஜா இருந்த பசியில் மறுக்காமல் வாங்கிக் கொள்ள, ஜீவா தொண்டையில் முள் சிக்கியதைப் போல எதைப் பேசலாம் எதைப் பேச வேண்டாம் என்ற எண்ணத்திலே உழன்று கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் குரு அதித்தன் வந்து சேர, அவனுக்குத் தலைக்கு மேல் கோபம் ஏறியது.


பழச்சாறுக்கான பணத்தைக் கொடுத்த ஜீவா "பாத்து இருந்துக்க. யாரையும் நம்ப முடியாது. நட்டாத்துல விட்டுட்டுப் போய்டுவாங்க" என்று இந்துஜாவிடம் சொல்லி விட்டு முறுக்கிக் கொண்டு சென்று விட்டான்


"இப்போ எதுக்கு உங்க அண்ணன் என்னை முறைச்சிட்டுப் போறான்" என்று குரு சிடுசிடுக்க


"பின்ன நீ செஞ்ச வேலைக்குக் கொஞ்சுவாங்களா. காலைல இருந்து ஒரு ஃபோன் கால் இல்ல. நான் செத்தனா உயிரோட இருக்கனானு கூட உனக்குக் கவலை இல்லைல" என்று இந்துஜா கத்த


"உன் மேல அக்கறை இல்லாம தான் நாய் மாதிரி ரோட் ரோடா சுத்திட்டு இருந்தாங்களா... என்ன வார்த்தைப் பேசிட்ட நீ" என்றவன் இருந்த கோபத்தில் அவள் கன்னத்தில் மிதவேகத்தில் அடித்தான்


எதிர் வினையாய் மெல்லிய வலியில் இந்துஜா கன்னத்தைப் பிடித்துக் கொண்ட காட்சியையும் பார்த்தபடி மீண்டும் வந்த ஜீவா, வேகமாக வாகனத்தில் இருந்து இறங்கினான்


"ஆக்சுவலா பேசிப் புரிய வச்சுட்டுப் போலாம்னு தான் வந்தேன். என்ன உனக்கு அவ்ளோ திமிரு" என்ற ஜீவா பளிச்சென்று குருவின் கன்னத்தில் அறைய
விளையாட்டு வினையாய் மாறிவிட்டப் பரிதவிப்பில்

"அண்ணா... அவரு சும்மா தான் அடிச்சாரு" என்று அவசரமாகச் சொன்னாள் இந்துஜா
அருகில் இருந்த வருண் இந்துஜாவிடம் மேலே எதுவும் பேச வேண்டாம் என்று சைகையால் தடுக்க "வெறும் கல்யாணம் தான பண்ணிருக்க. நாளைக்கே அழுதுட்டு வந்து நின்னானா அழகா பிரிச்சு வைச்சு, வேற ஒருத்தவனுக்கு முடிச்சு வச்சுருவேன். அவசரப்பட்டுப் புள்ளை எதுவும் கொடுத்துடாதடா. என்ன... அப்றம் அதையும் தூக்கி அனாதை ஆசிரமத்துல சேக்க வேண்டியதா போய்டும். அந்த பாவம் நமக்கெதுக்கு" என்றான் ஜீவா


"ம்ச்ச்ச்" என்று குரு அதித்தன் முகத்தைச் சுளித்திட


"இந்த தெனாவட்டுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. பாக்க தானப் போறேன். நீ குடும்பம் நடத்தப் போற லட்சணத்த. இன்னைக்கே பாதிய பாத்துட்டேன். மீதியும் நாளைக்கே தெருவுக்கு வரும். அது வரைக்கும் வெயிட் பண்ணிட்டே இருப்பேன். உன்னை ஜெயில்ல போட்டு மிதிக்கலனா என் மனசே ஆறாது" என்று பொங்கியவன் அங்கிருந்து சென்று விட்டான்


இந்துஜா குருவை என்னவென்று சமாதானம் செய்வது என தெரியாமல் நின்று கொண்டிருக்க, வருண் அவர்களிருவரையும் வாகனத்தில் அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று சேர்ந்தான்
"டேய் மச்சான்... நான் ஹாஸ்பிட்டல் கிளம்புறேன். ஸ்வேதாவ போய் கவனிச்சுக்கணும்" என்று வருண் சொல்ல


"நானும் வரவாடா" என்று கேட்டான் குரு அதித்தன்


"நீ முதல்ல ஒழுங்கா நடந்துக்கக் கத்துக்கோ. மானத்த வாங்காத" என்ற வருண் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றான்


இந்துஜா முன்னே சென்று கதவைத் திறக்க, உள்ளே நுழைந்த குரு அவளைப் பார்க்கவே மறுதலித்தான். அவன் இருந்த எரிச்சலுக்கு அவசரமாக சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்க, இந்துஜா சோர்வாகச் சென்று படுத்துக் கொண்டாள். பசியில் உருண்டு கொண்டிருந்தவளுக்குத் தூக்கம் கூட வர மறுத்தது. கண்களை இறுக்க மூடி, வயிற்றைக் கட்டிக் கொண்டு படுத்திருந்தாள்.


சற்று நேரம் கழித்து அவளிருக்கும் அறைக்கு வந்த குரு, "ஏய்... பட்டினி கிடந்து செத்துராத. என்ன வேணும்னு சொல்லு வாங்கிட்டு வரேன்" என்றான் அதட்டலாய்


இந்துஜா எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருக்க "உன்ன தான் கேக்குறேன். சொல்லப் போறியா இல்லையா" என்று கேட்டவன் வேகமாக அவள் கையைப் பிடித்துத் திருப்பினான்


வலியில் முணகிய இந்துஜா "ஆ... ஏன் இப்படி நடந்துக்குற. எனக்கு ஒன்னும் நீ சோறு போடத் தேவையில்ல. உன் வேலைய மட்டும் பாரு. எதுக்காக நாம கல்யாணம் பண்ணோம்னே எனக்கு இப்போ புரியல" என்றாள் வேதனையுடன்


"இப்போ என்ன... அந்த தாலியக் கழட்டி வச்சுட்டு, உங்க வீட்டுலப் போய் சேந்துக்க. அட்லீஸ்ட் நீயாச்சும் நிம்மதியா இருப்ப" என்று குரு சொல்ல


அவனை ஓங்கி அடித்தவள் "எப்படி உன்னால இப்படிலாம் பேச முடியுது. கழட்டி விடலாம்னு பாக்குறல்ல. அவ்ளோ தான், நான் போர் அடிச்சுட்டேன்ல" என்று கோபமாகக் கேட்டாள்


"இப்போ நீ தான சொன்ன, எதுக்குக் கல்யாணம் பண்ணோம்னே தெரியலைனு" என்று குரு பதிலுக்குக் கூற


"அதுக்கு அர்த்தம் வேற... நாம ஒரு அன்டர்ஸ்டேன்டிங்க வளத்துக்காம இன்னும் சண்டை போட்டுட்டே இருக்கோமேங்குறதுக்காக சொன்னது" என்றாள் இந்துஜா


"நமக்குள்ள செட் ஆகலைனு தான சொல்ல வர. எனக்கெந்த பிரச்சனையும் இல்ல. வா உங்க அண்ணன் வீட்டுல விட்டுட்டு வரேன்" என்று குரு சொல்ல


"நான் உன்னை விட்டுட்டுப் போகப் போறேனு இப்போ சொன்னேனா. இல்ல விட்டுப் போய்ட்டா பரவாயில்லைனு உனக்கு ஆசையா இருக்கா. தொல்லை ஒழிஞ்சுச்சுனு நினைப்பல்ல" என்றாள் இந்துஜா அவனை முறைத்து


"உங்க அண்ணன் அவ்ளோ பேசுனப்போ அமைதியா தான இருந்த. அப்போ அவன் சொல்றதுலாம் உண்மைனு ஆயிடுதுல்ல. நான் உன்ன ஏமாத்துறதுக்காகக் கல்யாணம் பண்ணேனா சொல்லு" என்று குரு வலியுடன் கேட்க


"அவனை எதித்துப் பேசுனா, கடைசி வரைக்கும் எங்க வீட்டோட நம்மளால சேரவே முடியாது. நீ இன்னைக்கு நடந்துக்கிட்டதுலாம் நியாயமா. உனக்கு என்னனு சப்போர்ட் பண்ணிப் பேச சொல்ற. மதியம் நல்லா கொட்டிக்கிட்டு இருந்துருப்பியே. நான் இன்னைக்குத் தொண்டைய நினைச்சதே ஜீவா வாங்கிக் கொடுத்த ஜூஸ்ல தான். அவ்ளோ தான் உனக்கு என் மேல இருக்குற அக்கறையா. பசில எங்கயாச்சும் மயங்கி விழுந்துருந்தா என்ன பண்ணிருப்ப. ஜீவா இன்னும் கொஞ்சம் லேட்டா வந்துருந்தா, என் நிலைமை என்னாயிருக்கும் சொல்லு. அதனால தான் என்னால அவனை எதித்துப் பேச முடியல" என்றாள் இந்து


"இப்போ என்ன சொல்ல வர. என் மேல தான் எல்லா தப்புமேவா. நான் காலைலயே நாம போட்ட சண்டைய மறந்துட்டேன்டி. நான் வேலை விஷயமா பிசியா இருந்தேன். அதான் ஃபோன எடுக்க முடியல. உன்னை நானா சாப்டாம இருக்க சொன்னேன். அதான் பேக்ல எப்போவும் நூறு ரூபா வச்சுக்கோனு கொடுத்துருக்கேன்ல. அதுல எதாச்சும் வாங்கி சாப்பிட வேண்டியது தான. காலைல பேசுனத சாயந்தரம் வரைக்கும் நியாபகம் வச்சுட்டு, தனியா போய் உக்காந்துருக்க. சைல்டிஷ்ஷா இருக்கு" என்று குரு அதித்தன் கூற, இந்துஜா மௌனமாய் இருந்தாள்


"சரி ரெண்டு பேரு மேலயும் தான் தப்பு. நான் சீக்கிரம் எழுஞ்சு ப்ரேக் ஃபாஸ்ட் சமைக்கிறேன். ஆனா நைட் நேரத்துல நீ என்னைத் தொந்தரவு பண்ணக் கூடாது" என்று இந்துஜா சொல்லவும்


"அதே மாதிரி நீயும் எனக்கு பயமா இருக்கு. கட்டிப்பிடிச்சா தான் தூக்கம் வரும். என் மேல காலைத் தூக்கிப் போட்டா தான் தூக்கம் வரும்னு சொல்லாத. நான் அமைதியா மொபைல் பாத்துட்டு இருந்தா, என் முகத்தைக் கூடப் பாத்துப் பேசவே மாட்டேங்குறனு சண்டை போடுறத நிறுத்து. நான் என் வேலையப் பாக்குறேன். நீ உன் வேலையப் பாரு" என்றான் குரு


"இதுக்குப் பேரு தான் ஃபேமிலியா. உன் கிட்டப் பேசுறதுக்குக் கூட அப்பாயின்ட்மென்ட் வாங்கணுமா" என்று இந்துஜா கேட்க


"நான் என்ன துறவறமா இருக்கேன், நீ எது பண்ணாலும் அமைதியா வேடிக்கைப் பாக்குறதுக்கு. பொண்ணுங்களுக்கு எதாச்சும்னா மட்டும் கேட்டு வாங்கிக்குறீங்க. எங்க நிலைமை தான் பாவமா இருக்கு. கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடியும் நல்லவனா இருக்கணும். கல்யாணம் பண்ண பிறகும் ஒழுக்க சீலனா இருக்கணும். கட்டுனப் பொண்டாட்டிய பாக்கக் கூட பர்மிஷன் வாங்கணும் போல" என்று சலித்துக் கொண்டவன் கடைக்குச் சென்று உணவு வாங்கி வந்தான்


இந்துஜா உண்ணாமல் அமர்ந்திருக்க "ஏய் சாப்பிடு" என்று அதட்டினான் குரு


"நீ ஊட்டி விட மாட்டியா" என்று இந்துஜா கேட்டிட, பெரிய உருண்டையாய் உருட்டி அவள் வாயில் வைத்தான் குரு


அவன் அடுத்த வாய் உணவை உண்ண, அவனருகில் சென்ற இந்துஜா மெல்ல அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் மேலும் அவனோடு தன்னை இறுக்கிக் கொண்டு அமர, குரு அவளை விலக்கி விட்டான். இந்துஜா அவன் மடியிலேயே ஏறி அமர்ந்து கொள்ள, அவன் பார்வை முன்பை விடக் கூர்மையானது.


"தள்ளி உக்காருடி" என்று குரு அதித்தன் சொல்ல


"முடியாது" என்றவள் அவன் கழுத்தை சுற்றிக் கையால் இறுக்கிக் கொண்டாள்


"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான சொன்னேன். என்னைக் கோவப்படுத்தாத. ஒழுக்கமா இரு சொல்லிட்டேன்" என்றான் குரு


"ஏங்க கோச்சுக்குறீங்க... இந்த முகத்தைப் பாக்க முடியல. சிரிச்சுட்டே இருந்தா தான் அழகா இருப்பீங்க, தெரியுமா" என்றவள் அவன் இதழோடு இதழ் சேர்க்க, அவன் எந்தவித உணர்வும் காட்டாமல் அமர்ந்திருந்தான்


"மூஞ்ச பாரு. குரங்கு மாதிரி வச்சுக்கிட்டு" என்று அவனைத் திட்டியவள் அவனிடமிருந்து விலகி உண்ண அமர்ந்தாள்


பாதி உணவில் எழுந்து சென்ற குரு, கை கழுவி விட்டு வந்து அமர்ந்தான்
"ஏன் சாப்பிடலையா" என்று இந்துஜா கேட்க


"இப்போதைக்குப் போதும். பசிச்சா அப்பறம் சாப்டுக்குறேன்" என்றவன் பாயில் சென்று படுத்துக் கொண்டான்


அவன் மனம் அறிந்தவளாய் அருகில் சென்றவள் அவனை இறுக்க அணைத்துக் கொண்டாள். குரு முரண்டு பிடிக்க, பக்குவமாகத் தன்பக்கம் இழுத்துக் கொண்டாள்.


"என்னைப் படுத்துற நீ" என்று குரு சலித்துக் கொள்ள


"இன்னைக்கு ஒரு நாள் ரூல்ஸ தள்ளி வச்சுரலாம். நாளைல இருந்து ஃபாலோ பண்ணிக்கலாம்" என்றாள் இந்துஜா அவனுடன் ஒன்றிக் கொண்டு


"உன்னை விட்டுத் தள்ளியே இருக்கறது தான் நல்லது. உங்க அண்ணன் எப்போ வேணாலும் இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பான். இப்படி நெருக்கமா இருந்தா, நாளைப் பின்ன பிரியறதுக்குக் கஷ்டமா இருக்கும். உன் நல்லதுக்கு தான் சொல்றேன்" என்று குரு சொல்ல


அவன் கன்னத்தில் சப்பென்று அறைந்தவள் "இன்னொரு தடவை இப்படி பேசுன, நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்" என்று சீறினாள்


"உன்ன அடிக்கறதோட நிறுத்தக் கூடாது. அப்படியே கழுத்த நெறிச்சுக் கொன்னா தான் என்ன. எனக்கு அந்த உரிமை இல்லையா" என்று கேட்டபடி குரு அவளை முறைக்க


"உன் கையால செத்தா கூட சுகமா தான் இருக்கும். என் செல்லம். என் பட்டு. என் தங்கம்" என்று சிரித்தபடி கொஞ்சி அவனைக் குளிர்வித்தாள் இந்துஜா


தணலும் தணலும்
மோதிக் கொண்டு
குளிர்நீராய் மாறும்
காதலில் மட்டும்
இயற்கையின் விதிகள்
விதிவிலக்காய் ஆகும்
 

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 46


"ஹலோ அக்கா எப்படி இருக்கீங்க" என்று பானுமதி கேட்டிட


"நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க. உன்னை யாரும் எதுவும் கேட்டுத் தொந்தரவு பண்ணலையே" என்றாள் ஃபஹிமா



"அதெல்லாம் இல்ல. கொஞ்சம் புலம்பல் தான் அதிகமா இருக்கு. என்ன சொல்லி சமாதானப் படுத்துறதுனே தெரியல. அத விடுங்க, ஹாஸ்பிட்டல்லாம் போறீங்களா" என்று பானு கேட்க


"போய்ட்டு தான் இருக்கேன். இப்போ வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லைனு தான் சொல்றாங்க" என்றாள் ஃபஹிமா


"ஒரு பிரச்சனையும் ஆகாது. கவலைப்படாதீங்க. அப்பறம் நான் உங்க சமையல் வீடியோ அப்லோட் பண்ணேன்னு சொன்னேன்ல. இன்னைக்கு தான் செக் பண்ணேன். இரண்டாயிரம் வியூவ்ஸ் போயிருக்கு அக்கா. ஃபர்ஸ்ட் வீடியோக்கே இப்படின்னா... இன்னும் க்ளியரா பேசி, பக்கத்துல ஸ்டெப் பை ஸ்டெப் இங்க்லீஷ்ல டெக்ஸ்ட் எடிட் பண்ணி போட்டா நல்லா போகும்" என்றாள் பானுமதி


"அட ஏன்டி... தங்க்லீஷ்ல டைப் பண்ணுறதுலயே நான் அரைகுறை" என்று ஃபஹிமா அலுப்பாய் சொல்ல


"நீங்க இப்போதைக்கு நான் சொல்லுறத மட்டும் கேட்டுக்கோங்க. வீடியோ ஷூட் பண்ண, எடிட் பண்ணலாம் தனித் தனியா ஆளுங்க இருப்பாங்க அக்கா. இப்போதைக்கு உங்களால எது முடியுதோ அத மட்டும் பண்ணுங்க. இப்போதைக்கு நான் அந்த சேனலுக்கான மெயில் ஐடியும் பாஸ்வேர்டும் மட்டும் அனுப்பி வைக்குறேன். நீங்க இந்து கிட்டப் போய் கேளுங்க. இதெல்லாம் நல்லாவே சொல்லித் தருவா" என்றாள் பானுமதி


"ஏன்மா அவக் கூடக் கோத்து விடுற. உனக்குப் பேசணும்னா அவக்கிட்ட ஃபோன தரேன். நீயே பேசிக்க" என்று ஃபஹிமா சொல்ல


"ரொம்ப பண்ணாதீங்க. அவ உங்கள அப்படியே கடிச்சு வச்சுர மாட்டா. டெக்னாலஜிய தெரிஞ்சு வச்சுக்கோங்கனு சொன்னேன்" என்றாள் பானுமதி



"ஓஹோ" என்று ஃபஹிமா வேண்டுமென்றே இழுக்க


"நைட் நிம்மதியா தூங்க முடியுதா... இல்ல எதுவும் அக்கம் பக்கம் சத்தமா இருக்கா" என்று பானுமதி சாவகாசமாகக் கேட்டாள்


"ஏன் நேரடியாவே கேக்குறது. உன் நாத்தனார் வீட்டுல அடிச்சுட்டுக் கிடக்காங்களா... கூடிட்டு இருக்காங்களானு..." என்றாள் ஃபஹிமா பதிலுக்கு


"அதான் என்ன கேக்க வரேன்னு தெரியுதுல்ல. நீங்க தான் கொஞ்சம் சொல்லுறது" என்று பானுமதியும் கேட்க


"பெருசா ஒன்னும் ஆர்ப்பாட்டம் இல்ல. காலைல ஒன்னா போவாங்க. மதியத்துக்கு மேல இந்து வருவா. அப்புறம் அந்த பையன் ஆறு ஏழுக்குள்ள வந்துரும். லீவ் நாளுனா மாடில உக்காந்து பேசிட்டு இருப்பாங்க" என்றாள் ஃபஹிமா தான் கவனித்ததை


"ஓகே ஓகே. நீங்க மறக்காம போய் அவள்ட்ட பேசுங்க. அண்ணா நல்லா இருக்காங்களா" என்று பானுமதி கேட்க


"எல்லாரும் நலம். ஒரு நாலு நாள் கழிச்சு ஃபோன் பண்ணு. அதுக்குள்ள நான் இந்து கிட்ட பேசிப் பாக்குறேன்" என்று ஃபஹிமா கூறினாள்


"நல்ல அக்கா. டேக் கேர்" என்ற பானுமதி மனநிம்மதியோடு அழைப்பைத் துண்டித்தாள்


ஒரு நாள் மாறன் வேலைக்குச் சென்ற போது, அவ்விடத்தில் புதிதாக ஒரு ஓட்டுநர் இருந்தான்


சிறிது நேரம் காத்திருந்த மாறன், அங்கு ராம்கி எதிர்ப்படவும் "ஐயா" என்றழைத்தான்


"செக்யூரிட்டி கிட்ட நேத்திக்கே சொல்ல சொன்னேனே. அவன் உனக்கு சொல்லலையா. புதுசா ஆள் எடுத்தாச்சுப்பா" என்று ராம்கி சொல்ல


"என்ன சொல்றீங்க ஐயா. திடீர்னு நான் வேற எங்க போவேன். வீட்டுல வயித்துப் பிள்ளைக்காரியா இருக்கா" என்று மாறன் பதறினான்


"நீ நான் சொன்ன வேலைய செய்றேன்னு சொல்லு. மறுபடியும் வச்சுக்குறேன். இத விட அதிகமான அளவு காசு கிடைக்கும். இன்னொரு கல்யாணம் கூடப் பண்ணிக்கலாம்" என்று ராம்கி சொல்ல


"இத்தனை நாளுக்கான சம்பளத்தை மட்டும் கொடுத்து விட்ருங்க. நான் கிளம்புறேன்" என்றான் மாறன் மறுயோசனை இல்லாமல்


"ரெண்டு நாள் கழிச்சு வந்து வாங்கிக்க "என்ற ராம்கி காரில் ஏறிச் சென்றுவிட


அங்கு வந்த ப்ரவீன் "நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்தேன். கேக்கவே இல்ல" என்றான் மாறனிடம் வருத்தத்துடன்


"இதுல எதுக்கு நீ தலையிடுற. எக்ஸாம் வருதுல்ல... நல்லா படி. அம்மா கிட்டப் போய்ட்டு வரதா சொல்லிடு" என்ற மாறன் வேகமாக வீடு திரும்பினான்


அவனை எதிர்பார்த்திராத ஃபஹிமா "நேத்திக்கும் லீவு. இன்னைக்கும் லீவா. செம" என்று சந்தோஷப்பட, மாறன் முகம் வெளிறிப் போய் உள்ளே நுழைந்தான்


இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் சென்ற போதும் ராம்கி அவனை அலைக்கழித்தார். அடுத்த சில நாட்கள் கழித்துக் கையில் இருந்த இருப்புக் குறைய, எப்படி மருத்துவச் செலவைப் பார்க்கப் போகிறோம் என்ற வேதனை மாறனைத் தொற்றிக் கொண்டது. ஃபஹிமா அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அமைதியாக இருக்க, மாறன் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான். நாட்கள் கடந்து மாறனை ஒரு வேலைத் தேடி வந்தது. முதல் வேலை எப்படி நடக்கிறது என்று பார்த்து விட்டே அடுத்த வேலை தருவோம் என்று நிபந்தனை போட்டார்கள். மாறனும் இத்தனை நாளுக்குமாய் சேர்த்து ஊதியம் கிடைக்கப் போகிறதென்ற நம்பிக்கையில் இரவு நேரத்தில் வண்டியோட்ட சம்மதித்தான். வந்தவர் கோட் சூட்டுடன் கையில் கேஸூடன் இருக்க, எதோ தொழில் பயணம் என்று நினைத்த மாறனும் வண்டியை ஓட்டிச் சென்றான். காவல்துறை வந்து இடைமறித்ததும் அந்த ஆள் பின்னால் இறங்கி ஓடிவிட, உள்ளூர் மொழி தெரியாதவனாக அவர்கள் தேடிப்பிடித்து இதில் கோர்த்து விட்டிருக்கிறார்கள் என்பதை மாறன் உணர்ந்து கொண்டான். அவனுக்கு காவலர்கள் கேட்பதும் புரியாமல் இவன் பேசுவது அவர்களுக்கும் புரியாமல் ஒரே குழப்பமாய் போனது.


மாறனுக்குக் கிடைத்த ஒரேயொரு வாய்ப்பில் அவன் அழைத்தது அஷ்வினின் எண்ணிற்கு தான். வேறு எவரும் அவனைக் காப்பாற்றுவார்களா என்று கூட எண்ணி மாறன் வாழ்க்கையையே வெறுத்திருந்தான். அஷ்வின் அவனை ஏமாற்றி விடவில்லை; அடித்துப் பிடித்து வருணை அழைத்துக் கொண்டு, காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்திருந்தான். வருணும் அஷ்வினும் காவல்துறையின் அலட்டலைப் பொறுத்துக் கொண்டனர். முதலில் பணிவாகப் பேசியவர்கள் ராம்கியின் பெயரை இழுத்துப் பார்த்தனர். காவலர்களும் ராம்கிக்கு அழைத்திட, அவர் தனக்கும் மாறனுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பேசி வைத்து விட்டார். மாறன் மனிதர்களின் பச்சோந்தி குணத்தை எண்ணி அயர்ந்து போனான். வருணும் அஷ்வினும் கடைசியாக ஃபஹிமா கர்ப்பமாக இருப்பதைப் பற்றிக் கூறிக் கெஞ்சவும் தான் அவர்கள் சற்றே மனதிறங்கி வந்தனர். கையிலிருந்த பணத்தை வாங்கிய பின், மாறனின் ஓட்டுநர் உரிமத்தையும் பிடுங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். வருணும் அஷ்வினும் அவனை அழைத்துக் கொண்டு போய் வீட்டில் சேர்க்க, ஃபஹிமா கண்ணீரோடு நன்றி சொன்னாள்.


சற்று நேரம் யோசித்த மாறன் அலைபேசியை எடுத்து சுந்தரலிங்கத்திற்கு அழைத்து "அப்பா" என்றான்


உடலெல்லாம் ஒரு நிமிடம் சிலிர்த்துப் போய் "மாறா... எதாச்சும் பிரச்சனையாப்பா" என்றார் சுந்தரலிங்கம்


மாறன் சொல்லவொண்ணா துயரத்தில் "அப்பா" என்று விட்டு விசும்பினான்


"எதுக்கு ஓடி ஒளியுற. இது நீயில்ல மாறா. என்னைப் பாத்தா பயப்படுற... எங்க இருக்கனு சொல்லுப்பா" என்று சுந்தரலிங்கம் கேட்க


"என் மேல உனக்குக் கோவம் இல்லையா" என்றான் மாறன்


"கோவம் இருந்துச்சு. அதை விட வருத்தமா இருக்கு. எங்களுக்குனு கொள்ளி வைக்கக் கூட ஆளில்ல. அதை என்னைக்காச்சும் நினைச்சுப் பாத்தியா. வந்துரு. என்ன தப்புப் பண்ணிருந்தாலும் பரவால்ல. பிறந்தப்போ நீ என்னை அப்பனா ஏத்துக்கலையா. அதே போல நான் உன்னைய ஏத்துப்பேன்" என்றார் சுந்தரலிங்கம்


"எனக்கு உங்க கூடப் பேசணும் போல இருந்துச்சு. அதான் கூப்டேன். நான் நாளைக்குக் கூப்பிடுறேன்" என்ற மாறன் அழைப்பைத் துண்டித்து இருந்தான்


"ஏன் இப்படி அழறீங்க... தைரியமா இருங்க" என்று ஃபஹிமா அவனைத் தேற்ற


"ஃபஹி... நாம நம்ம ஊருக்குப் போயிடலாம்" என்றான் மாறன்


"நான் வர மாட்டேன். நம்மையும் நம்ம குழந்தையையும் எதாச்சும் பண்ணிடுவாங்க. நாம பசில செத்தாலும் இங்கயே செத்துடலாம். தயவு செஞ்சு இப்படி யோசிக்காதீங்க" என்று ஃபஹிமா கதறி அழுதாள்


"இது நம்ம இடம் இல்ல. எங்க வீட்டுல எதாச்சும் சொன்னா, உங்க வீட்டுக்குப் போவோம். அங்கயும் பிரச்சனை பண்ணா, தமிழ்நாட்டோட கடைக்கோடிக்குக் கூடப் போவோம். ஆனா இங்க வேணாம். என் மண்ணுங்குற நினைப்பு இல்லாம, எனக்கு வாழ்க்கையே வெறுக்குது. நம்ம புள்ளைப் பிறந்தா, அது தமிழ்நாடா தான் இருக்கணும்" என்றான் மாறன் உறுதியாய்


சான்ட்ராவின் வீட்டில் "நான் போய் ஸ்வேதாவப் பாக்கணும். ரோஷினிய கவனிச்சுக்கோ. நான் கிளம்புறேன்" என்றான் வருண்


"இரு நானும் வரேன். எனக்கும் அவளைப் பாக்கணும் போல இருக்கு" என்று அஷ்வின் கூற


"இவ்வளவு நேரம் சுத்திட்டு இப்போ தான வந்த அஷ்வின்... நான் கூப்டா வர மாட்டுற. அந்த வேலை இருக்கு, இந்த வேலை இருக்குனு சொல்லுற. நைட்டு நேரத்துல கிளம்புனா எப்புடி" என்று முறையிட்டாள் சான்ட்ரா


"உனக்கென்ன பேய் பயம் இருக்கா. இல்லைல" என்றான் அஷ்வின் அவளைப் பார்த்து


"ரோஷினியும் இவளும் மட்டும் இருப்பாங்க. நீயும் துணையா இரேன்டா" என்று வருண் சொல்ல
"ஸ்வேதா மேல ரொம்ப உரிமை எடுத்துக்காத. சரியா... ஸ்வேதாவே எனக்கு தான் முன்னுரிமை கொடுப்பா. எதோ எனக்காக தான் உன்னையும் ஒரு ஆள்னு மதிக்குறா. தெரியும்ல" என்றான் அஷ்வின் அலட்டலாய்


"இதெல்லாம் நான் பொறுத்துக்கணுமா சொல்லு" என்ற வருண் சான்ட்ராவை ஏறிட


"வாய்க் கொழுப்பு இப்போலாம் ஜாஸ்தியா இருக்கு. என்ன செய்யறதுனே தெரியல" என்றாள் சான்ட்ராவும் வருணுக்கு சாதகமாய்


"உங்களுக்குலாம் பொறாமை... எல்லாரும் என் மேல பிரியமா இருக்காங்களேனு" என்றான் அஷ்வின் சட்டைக் காலரை நீட்டி


"எல்லாரும்னா... யாரு" என்று வருண் கேட்டிட


"எங்கம்மா, என் கேர்ள் ஃப்ரெண்டு" என்று அஷ்வின் சொன்னான்


"வேற" என்று வருண் அழுத்தமாய் கேட்டான்


"அப்புறம் ரோஷினி, ஸ்வேதா, நம்ம துர்காம்மா, மாறன், ஃபஹிமா எல்லாரும் தான்" என்று அஷ்வின் சொல்ல


"உன்னை வெறுக்குற ஆளயும் அப்படியே நோட் பண்ணிக்கோ... நான்... அப்பறம் உன் முகத்தை வேற வழியில்லாம பாத்து, பாவமேனு உன் குரலைக் கேக்குற சப்ஸ்க்ரைபர்ஸ் அத்தனைப் பேரும்" என்று சிரித்த வருண் சான்ட்ராவை ஏறிட்டான்


சான்ட்ரா எதையும் காதில் வாங்காமல் நின்று கொண்டிருக்க "எம்மா தாயே... அஷ்வின நீயே வச்சுக்க... அவனை எப்படி வீட்டுலயே இருக்க வைக்கறதுனு தான தீவிரமா யோசிச்சுட்டு இருக்க" என்றான் வருண்



"அதெல்லாம் இல்ல. எனக்கென்ன பயம். இடத்தை காலி பண்ணுங்க" என்றாள் சான்ட்ரா சமாளித்து


உள்ளுக்குள் என்னடி சேதி
மனந்திறந்து சொல்லடி கள்ளி
 

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 47


மாறன் மறுபடியும் ஒரு நாள் சுந்தரலிங்கத்திற்கு அழைத்தான்


"எனக்கு இங்க இருந்த வேலைப் போய்டுச்சு. ஃபஹிமா முழுகாம இருக்கா. நான் ஊருக்கு வர்றதா இருக்கேன் அப்பா" என்று மாறன் சொல்ல


"சந்தோஷம்பா... நாங்களே வந்து கூட்டிட்டு வரோம். அந்த பொண்ணு வீட்டுலயும் நான் சொல்றேன். உங்க அம்மாட்ட பேசுறியா" என்றவர் செண்பகத்திடம் அலைபேசியைத் தந்தார்


"இப்போவாச்சும் உனக்கு நல்ல புத்தி வந்துச்சே. வீட்டுக்கு வந்து சேரு" என்றார் செண்பகம் மகனிடம்


"நீங்க நிஜமாவே மன்னிச்சுட்டீங்களா" என்று மாறன் கேட்க


"எங்களுக்கு வேறெந்த வழியும் தெரியல. உன்னைத் தள்ளி வைக்கறதால எங்களுக்கு தான் மனுசும் உடம்பும் நோகுது. வா ராசா... வீட்டுக்கு வா" என்றார் செண்பகம்


"ம்ம்ம்ம். நீங்க கிளம்பும்போது சொல்லுங்க. நான் அட்ரெஸ் சொல்லுறேன்" என்ற மாறன் யோசனையுடன் அழைப்பைத் துண்டித்தான்


இன்னும் ஃபஹிமாவை அவனால் சமாதானப்படுத்த முடியவில்லை. ஆனால், எதுவும் தப்பாகாது என்று மாறனுக்கு நம்பிக்கை நிறைந்திருந்தது. எத்தனையைப் பார்த்தாயிற்று; இந்த விஷயத்தைக் கடந்து வந்து விட முடியாதா என்ற எண்ணம் தோன்றிற்று.


"என்னங்க... ஏன் கொஞ்ச நாளா டல்லாவே இருக்கீங்க" என்று ஜீவாவின் அருகில் அமர்ந்தபடி கேட்டாள் பானு


"ஒன்னும் இல்ல. நிறைய விஷயம் உள்ளுக்குள்ள ஓடிட்டு இருக்கு. எத சொல்றது" என்றான் ஜீவா அவள் முகம் பார்த்து


"உங்க கஷ்டத்த என்னால தீத்து வைக்க முடியாது தான். இருந்தாலும் மனசு விட்டுப் பேசலாம் தப்பில்ல" என்று புன்னகைத்தாள் பானு


"ஊருக்குப் போனா ஆளாளுக்கு ஒன்ன பேசுவாங்க. என்னத்த சொல்லி சமாளிக்குறதுனே தெரியல" என்று ஜீவா சொல்ல


"இதுக்கா கவலைப்படுறீங்க. இத்தனை நாள் நான் சமாளிச்சுருக்கேனே... என் கிட்டக் கேளுங்க. எது சொன்னாலும் தலையத் தலைய ஆட்டிட்டு சோகமா முகத்த வச்சுட்டு இருந்தா விட்டுடுவாங்க" என்றாள் பானுமதி


"ரொம்ப கஷ்டம். எது வேணாலும் சமாளிச்சுடுவேன். நான் இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்து படிக்க வச்சதால தான், இப்படி ஆகிடுச்சுனு என் மேலயே பழியைத் தூக்கிப் போட்டுடுவாங்க. அத தான் தாங்கிக்க முடியாது" என்று வருந்தினான் ஜீவா


"அவங்க ஆயிரம் பேசட்டுமே. நமக்குத் தெரியாதா... உங்க மேல எந்த தப்பும் இல்லை. நீங்க இத்தன நாள் பொறுப்பா தான் நடந்துட்டு இருக்கீங்க. நம்ம வீட்டுக்காக தான் எப்போவும் யோசிச்சுருக்கீங்க" என்று ஆறுதல் சொன்னாள் பானு


"எனக்கு இன்னொரு வருத்தமும் இருக்கு பானு. நீ ரொம்ப சின்ன பொண்ணா இருக்கா. அதுக்குள்ள உன்னைக் கல்யாணம் பண்ணி வீட்டுல அடைச்சிட்டனோனு தோணுது" என்றான் ஜீவா


"சரியான லூசு தான் நீங்க. நான் எப்போவாச்சும் அப்படி சொன்னேனா. ஆளைப் பாரு" என்று அவன் கன்னத்தைக் கிள்ளினாள் பானு


"ஹே நிஜமா தான் சொல்றேன். உனக்கு என்ன ஆசை சொல்லு. மேல படிக்கணுமா, வேலைக்குப் போகணுமா, இல்ல சொந்தமா பிசினெஸ் பண்ணணுமா" என்று கேட்டான் ஜீவா


"எனக்கா... சொல்லவா... என் ஆசை என்னனா" என்று பானு இழுக்க ஜீவா மிகவும் கவனத்துடன் கேட்கலானான்


"நீங்க ருசிச்சு ருசிச்சு சாப்ட்ற மாதிரி சமைச்சுக் கொட்டணும். அப்பறம் உங்க கூடக் கையக் கோத்துக்கிட்டு பெங்களூர சுத்தி வரணும். உங்க பிள்ளைய வயித்துல சுமக்கணும். உங்களை என் மனசுல சுமக்கணும். நைட் ஆனா உடம்பால தாங்கணும். அவ்ளோ தான்" என்று பானுமதி கண்சிமிட்ட


"எவ்ளோ பெரிய லட்சியம்" என்று கிண்டல் செய்தான் ஜீவா


"உங்கள்ட்ட போய் சொன்னேன் பாருங்க" என்ற பானு அவனிடம் இருந்து எழுந்து கொள்ள


அவள் கையைப் பிடித்து அமர வைத்தவன் "உனக்குள்ள என்னைத் தவிர வேற என்ன நினைப்பு இருக்கு" என்று கேட்டான்


"ம்ம்ம்... இப்போ தான் நியாபகம் வருதுங்க. ரொம்ப நாளா ட்ரைவிங் லைசென்ஸ் வாங்கணும்னு ட்ரை பண்ணேன். எங்க அம்மா கடைசி வரைக்கும் என்ன விடவே இல்ல" என்றாள் பானு


"சூப்பர் சூப்பர். முதல் விஷயமா நான் இதை நிறைவேத்த ஏற்பாடு பண்ணுறேன். வேற என்ன ஆசை. நான் சம்பந்தப்படாத விஷயமா சொல்லு" என்று ஆவலுடன் கேட்டான் ஜீவா


"ஒரு தையல் மிஷன் வாங்கணும். பெருசா ஒன்னும் கத்துக்கலைனாலும், வீட்டுல இருக்குற ட்ரெஸ்ஸயாச்சும் தைக்கணும்னு அப்பப்போ தோணும். அப்புறம் எம்ப்ராய்டரி போடக் கூட ஆசை வரும்" என்று பானு சொல்ல


"சரி நான் மெஷின் வாங்கித் தரேன். வீட்டுல போரடிச்சா எதையாச்சும் தச்சிட்டு இரு" என்றான் ஜீவா


"சின்ன சின்ன ஆசை எல்லாம் நிறைவேத்துறீங்க சரி. நான் இதுக்கு முன்னாடி கேட்டது என்னாச்சு" என்று பானுமதி சிணுங்க


"என்ன கேட்ட... இப்போவே கேளு, ஏற்பாடு பண்ணுறேன்" என்றான் ஜீவா முழு மனதுடன்


"உங்கள மாதிரி ரெண்டு பையன், அப்பறம் உங்கள மாதிரியே ஒரு பொண்ணு. இது எத்தனை நாள் கனவு தெரியுமா" என்று பானு சொல்ல


"அதென்ன பசங்க மட்டும் ரெண்டு" என்று கேட்டான் ஜீவா


'அதுல ஒருத்தன இந்துக்குப் பொண்ணு பொறந்தா கட்டி வைக்க தான்' என்று உள்ளுக்குள் சிந்தித்துக் கொண்ட பானு "எல்லாம் காரணமா தான்" என்றாள் ஜீவாவிடம்


"மூணு போதுமா... இல்ல இன்னும் வேணுமா. உன்னை மாதிரியே கிறுக்குத் தனமா ஒரு பாப்பா, வேணாவா" என்றான் ஜீவா புருவம் உயர்த்தி


"அவங்களாம் என் மாமா மாதிரியே ஸ்மார்ட்டா பொறுப்பா இருக்கணும்ல. என்னை மாதிரி இருந்தா உறுப்படாம போய்டுங்களே" என்று பானு சொல்ல


"உன்ன மாதிரி காதல் பித்துப் பிடிச்சவள நான் பாத்ததே இல்ல" என்ற ஜீவா அவளைத் தோளோடு தோள் அணைத்து இதழ்களில் முத்தம் பதிக்க, பானு தன்னைத் தந்து கண்களை மூடிக் கொண்டாள்


சில நாட்கள் கழிந்த நிலையில், அஷ்வின் ரோஷினியுடன் விளையாடிக் கொண்டிருந்தான்


அவனையே சான்ட்ரா உற்றுப் பார்த்திருக்க "எதாச்சும் பேசணுமா" என்றான் அஷ்வின்


"நானும் ரொம்ப நாளா அதுக்கு தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன். பட்... நீ எந்த டைமும் ஒதுக்க மாட்டேங்குற" என்று குற்றம் சுமத்தினாள் சான்ட்ரா


"வாட்... நான் அவ்ளோ பிசியா ஒன்னும் இருந்த மாதிரி தெரியலையே" என்று அஷ்வின் சாதாரணமாகக் கூறிட


"ஐ ஜஸ்ட் ஹேட் யூ" என்று முகம் திருப்பினாள் சான்ட்ரா


"ஓ... டார்லிங் என்ன ஆச்சு. கமான்" என்று அஷ்வின் அவள் தோளில் கையை வைக்க, சான்ட்ரா வேகமாகத் தட்டி விட்டாள்


அந்நேரம் அங்கு வந்த ஸ்வேதா "என்னாச்சு... உங்களுக்குள்ள என்ன பிரச்சனை" என்றாள்


"நத்திங்" என்ற சான்ட்ரா அங்கிருந்து எழுந்து செல்ல முற்பட்டாள்


அவள் பின்னே சென்ற வருண் "நான் இன்னும் எதுவும் பேசவே இல்ல. அதுக்குள்ள டென்ஷனான எப்படி. நான் பேசுனா தான நீ டென்ஷன் ஆகணும்" என்றான் விளையாட்டாய்


"அய்ய்... காமெடி" என்று சான்ட்ரா அவனிடம் இளித்துக் காட்ட
"என்னனு சொல்லு. நான் சால்வ் பண்ணி வைக்குறேன்" என்றான் வருண்


"உன்கிட்டலாம் சொல்ல முடியாது" என்று சான்ட்ரா சொல்லிக் கொண்டிருக்க


அவளிடம் சென்ற ஸ்வேதா "சாரி சான்ட்ரா. நான் உங்கள ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேனா... எப்பவும் ரோஷினி இங்கேயே இருக்கறதால, உங்க ப்ரைவசியே போய்டுச்சு இல்ல" என்று வருந்தினாள்


"அடேய்... நான் அப்படிலாம் நினைக்கவே இல்ல. நான் அஷ்வின் கிட்ட பர்சனலா சண்டைப் போட்டுட்டு இருந்தேன். அதுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" என்று சான்ட்ரா அவசரமாய் மறுத்திட


"பர்சனலாமாம்... இனிமே நாங்களும் எல்லாத்தையும் பர்சனலா வச்சுக்குறோம்" என்ற வருண் ரோஷினியிடம் சென்றான்


"வா... வீட்டுக்குப் போகலாம்" என்று வருண் ரோஷினியை அழைக்க


"கொஞ்ச நேரம் கழிச்சுப் போலாமே" என்று கெஞ்சினாள் ரோஷினி விளையாட்டு மும்முரத்தில்


"போதும் வா செல்லம்" என்று வருண் மீண்டும் அழைக்க


"என்னடா உன் பிரச்சனை. என் செல்லத்த என் கிட்ட இருந்து பிரிக்கப் பாக்குறியா" என்று கேட்டான் அஷ்வின்


அங்கு வந்த சான்ட்ரா "வருண் ஓவரா பண்ணாத. என்ன விஷயம்னே தெரியாம, நீயா ஒன்ன முடிவு பண்ணிக்காத" என்றாள்


"ஸ்வேதா... வா வந்து உக்காரு. அவ எப்போவும் இப்படி தான். சின்ன விஷயத்துக்குலாம் மூஞ்ச தூக்கி வச்சுப்பா" என்று அஷ்வின் சமாதானம் சொல்லப் போக, சான்ட்ரா மறுபடியும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்


"ஓ... நான் சின்ன விஷயத்தைப் பெருசாக்குவேனா. எத்தன தடவ அதே போல பண்ணேனாம். சொல்லு பாக்கலாம்" என்று சான்ட்ரா அஷ்வினிடம் முறையிட


"எதோ ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன். ஏன் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் பாக்குற" என்றான் அஷ்வின் பொறுமையாய்
"உனக்கு ரெஸ்பான்சிபிளிட்டிங்குற விஷயமே கண்ணுக்குத் தெரிய மாட்டேங்குது" என்று சான்ட்ரா முணுமுணுக்க


"என்ன தான்மா உன் பிரச்சனை" என்றான் அஷ்வின் தவிப்புடன்
"நான் தான் சொன்னேன்ல வருண். ரோஷினியயும் கூட்டிட்டுப் போகலாம்னு, நீ தான் கேக்கல. இப்போ பாரு நம்மளால அவங்களுக்கு இடையில எதோ பிரச்சனை" என்று ஸ்வேதா மீண்டும் ஆரம்பிக்க


"ஐயோ... இல்ல ஸ்வேதா. இது வேற" என்றாள் சான்ட்ரா தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய்


"என்னனு தான் சொல்லேன் சான்ட்ரா. எங்க முன்னாடி சொல்லக் கூடாதுனு எதுவும் இருக்கா" என்று வருண் கேட்க, சான்ட்ரா அஷ்வினை ஒருமுறைப் பார்த்தாள்


பின் மேலே பார்த்து கீழே பார்த்து யோசித்தவள் அவர்கள் மூவரையும் ஒரு சேரப் பார்த்தாள். உதடுகளைப் பற்களுக்கிடையில் கடித்தபடி கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தாள்.


"நீ பொறுமையா யோசி. நாங்க போயிட்டு நாளைக்கு வரோம். வா அஷ்வின். அவ தனியா உக்காந்து யோசிக்கட்டும்" என்று வருண் சொல்ல


"வெய்ட்... வெய்ட்..... ஐ அம் ப்ரெக்னென்ட்" என்றாள் சான்ட்ரா நிதானமாக


"வாட்..." என்று வருண் ஆச்சர்யத்தோடு கேட்டிட


"வெய்ட் வாட்... லைக் ஹௌ... ஆர் யூ ஷ்யூர்" என்றான் அஷ்வின் அவளை விநோதமாகப் பார்த்து


"டேய் நாங்க தான் ஷாக் ஆகணும். நீயும் என்ன சேந்து ஷாக் ஆயிட்டு இருக்க" என்று வருண் கேட்க


"சும்மாயிருங்க ரெண்டு பேரும். எவ்வளவு நல்ல விஷயம் சொல்லிருக்கா. ரெண்டு பேரும் கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க" என்ற ஸ்வேதா சான்ட்ராவை இறுக்க அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள்


"டாக்டர் கிட்டப் போலாமா டார்லிங். எத்தனை நாள் ரகசியம் இது" என்று ஸ்வேதா கொஞ்சலாய் கேட்க


"போகலாம் போகலாம். குழந்தையோட அப்பா தான முடிவு பண்ணணும்" என்றாள் சான்ட்ரா வெட்கித்தபடி


"அஷ்ஷூ... ஏன் சிலை மாதிரி உக்காந்துருக்க. எதாச்சும் சொல்லு" என்ற ஸ்வேதா அஷ்வினை உலுக்கி எடுத்தாள்


இதென்ன புது உணர்வு
மனமெங்கும் ஓர் நிறைவு
எத்தனை நாள் கனவு
இன்று ஆனது நினைவு
 

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 48



இனிமையான விஷயத்தைக் கிரகித்துக் கொள்ள சற்று நேரம் எடுத்துக் கொண்ட அஷ்வின், சுற்றி உள்ள யாரையும் கருத்தில் கொள்ளாமல் சான்ட்ராவிடம் சென்று அவளை இறுக அணைத்துக் கொண்டான்



"அஷ்வினு... சுத்தி நாங்களாம் இருக்கோம்" என்று வருண் அவனுக்கு நினைவுப்படுத்தியும், அஷ்வின் அவளது தோளில் முகம் புதைத்து விசும்பினான்



"டேய் லூசு... எதுக்குடா அழற" என்று சான்ட்ரா இதமாய் வினவ, அஷ்வின் எதுவும் சொல்லாமல் அவளது முகத்தைக் கைகளில் ஏந்தி ஆனந்தக் கண்ணீரோடு பார்த்தான்



"என்ன அதிர்ச்சில ஊமையா மாறிட்டானா" என்று வருண் கேலி செய்ய



"வாய வச்சுட்டு சும்மாவே இருக்க மாட்டீங்களா" என்று அவன் தோளில் இடித்துரைத்தாள் ஸ்வேதா



"நான் லாயருமா. பேசிப் பேசி தான் பொழைப்ப ஓட்டணும்" என்று வருண் சொல்லிக் கொண்டிருக்க, அஷ்வின் அழுத்தமாய் சான்ட்ராவின் நெற்றியில் முத்தம் பதித்து இருந்தான்



ஸ்வேதா இங்கிருந்து கிளம்பி விடலாம் என்பது போல சைகைக் கொடுக்க, வருணும் இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்



"ஹே... இருங்க இருங்க. நான் போய் எதாச்சும் ஸ்வீட் வாங்கிட்டு வரேன்" என்றான் அஷ்வின் அவசரமாய்



"வெறும் ஸ்வீட்டோட கழிச்சுக் கட்டிரலாம்ணு பாக்காத. நாங்க இப்போ போயிட்டு அப்புறமா வருவோம்" என்றான் வருண் அழுத்தமாக



சான்ட்ரா அஷ்வினின் கண்களைத் துடைத்து விட்டபடி "அதான் இப்போவே வாங்கிட்டு வரேன்னு சொல்றான்ல. வெயிட் பண்ணு" என்றாள் வருணை முறைத்து



"தோ பாரு பொண்ணே... இனிமே முறைக்குறது, திட்டுறது, கத்துறது இந்த வேலையெல்லாம் வச்சுக்காத. இல்லைனா உனக்கு வரப் போறதும் உன்னை மாதிரியே ராட்சசியா பிறக்கும்" என்று வருண் சொல்ல



"ரொம்ப கலாய்க்காத சரியா. அவளோட பொலைட்டான இன்னொரு முகத்த நீ பாத்ததில்ல. நீ பண்ணுற அராஜகத்துக்கு இந்த முகம் தான் உனக்கு சரி" என்றான் அஷ்வின் சான்ட்ராவுக்கு ஆதரவாக



"ஓஹோ... அப்படியா" என்று ஸ்வேதாவும் இப்போது கேலி செய்தாள்



"பைக் சாவி கொடு. நானும் ரோஷினியும் ஓடிப் போய்ட்டு, ஓடி வந்துட்றோம்" என்று அஷ்வின் சொல்ல



"அதான் பைக் இருக்கே... அப்புறம் எதுக்கு ஓடிப் போகணும்" என்று சிரித்தாள் ரோஷினி



வருணிடம் சாவியைப் பெற்றுக் கொண்ட அஷ்வின் ரோஷினியைத் தூக்கிச் சென்று வண்டியில் அமர வைத்தான்



"பைசா எடுத்தியா. ஃபோன் எடுத்தியா" என்று சான்ட்ரா வினவ



"எடுத்தாச்சு..." என்றான் அஷ்வின் வண்டியில் சாவியைப் போட்டபடி



"ஏன் இத்தனை நாளா உண்மைய மறைச்சேனு சண்டை போடுவனு நினைச்சேன். அப்படியே ஆப்போசிட்டா நடந்துக்குற" என்று சான்ட்ரா கேட்டிட



"எதுக்கு சண்டை போடணும்" என்று கேட்டான் அஷ்வின்



"போய்ட்டு வா பேசிக்கலாம்" என்று சான்ட்ரா கூறிட



"அஷ்வின் என்னை எறும்பு கடிக்குது" என்று ரோஷினி சிணுங்கி வைத்தாள்



உடனே "அம்மா கிட்டப் போய் சொல்லு" என்று அவளை இறக்கி விட்டான் அஷ்வின்



"நான் வர வரைக்கும் போகக் கூடாது. ப்ராமிஸ்..." என்று ரோஷினி கேட்க, அவனும் தலையை ஆட்டினான்



ரோஷினி உள்ளே சென்றதும் அஷ்வினின் அருகில் சென்ற சான்ட்ரா, "நானே தான் முன்ன ஒரு நாள் சொன்னேன்ல. எனக்கு குழந்தை பிறக்காதுனு... அதைப் பத்தி எதுவும் கேக்கவே இல்ல" என்றாள் முணுமுணுப்பாய்



"நான் எடுத்த எடுப்பிலயே குழந்தைய பத்திப் பேசவும் நீ எதோ சமாளிக்குறதுக்காக, அப்படி பொய் சொல்லிருக்கனு இப்போ தான் புரிஞ்சிகிட்டேன்" என்றான் அஷ்வின்



"நடுவுல உண்மைய சொல்லிடலாம்னு நினைச்சேன். பட் எங்க நீ பொய் சொன்னதுக்காகக் கோவப்பட்டுப் பேசாமப் போய்டுவியோனு சொல்லல" என்றாள் சான்ட்ரா தயங்கியபடி



"ஆனா அந்த பொய்யே இப்போ நமக்கு பேபி உருவாகறதுக்குக் காரணமாய்டுச்சுப் பாத்தியா. நீ ஒழுங்கா உண்மைய சொல்லிருந்தா மே பி சேஃபா இருந்துருக்கலாம். எனக்கு இதுல முழுக்க முழுக்க சந்தோஷம் தான். உனக்கு ஓகேனா வச்சுக்கலாம்... இல்லைனாலும் பாத்துப் பண்ணிக்கலாம். எனக்காக யோசிக்காத" என்றான் அஷ்வின் நிதானமாக



"அஷ்வின்... நீ எனக்காக யோசிக்குறது தான், நான் இன்னும் இன்னும் உன்னை லவ் பண்றதுக்குக் காரணமே. உன் ஆசையே ஒரு பேபி வேணுங்குறது தான. ஐ அம் ரியலி ஹேப்பி டு கிவ் திஸ் ஹேப்பினஸ் டு யூ" என்றாள் சான்ட்ரா புன்னகையோடு



அவளை இழுத்துக் கன்னத்தில் முத்தம் பதித்தவன் "எனக்கு இப்போதைக்கு வானத்துல பறக்குற மாதிரி இருக்கு. இவ்வளவு தான் என்னோட சந்தோஷம்னு சொல்ல முடியல. அவ்ளோ ஸ்வீட்டா இருக்கு இந்த மொமண்ட்" என்றான் கண்கள் சிரிக்க



திரும்பி வந்த ரோஷினி "என்னைத் தூக்கு" என்றபடி நிற்க, அஷ்வின் அவளை அள்ளி முன்னால் அமர வைத்தான்



"சான்ட்ராக்கு பை சொல்லு" என்று அஷ்வின் சொல்லவும், ரோஷினி மகிழ்ச்சியாய் கையசைத்தாள்



"ஹே... ஒரு நிமிஷம். ஹெல்மெட் போடாமலே போறியே" என்று சான்ட்ரா கேட்டிட



"பக்கத்துல தான. போய்ட்டு உடனே வந்துட்றேன்" என்று கூறிவிட்டுச் சென்றான் அஷ்வின்



அஷ்வின் அருகில் இருக்கும் கடைக்குச் சென்று பார்க்க, அது மூடப்பட்டு இருந்தது. சரியென்று அவன் அடுத்ததாகப் பயணத்தைத் தொடர, விதி எதிரே பைரவர் ரூபத்தில் வந்தது. சட்டென்று ஒரு நாய் குறுக்கிட, அதன் மீது மோத வேண்டாமென்று தடையை அழுத்தி இருந்தான் அஷ்வின். தூக்கக் கலக்கத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி ஓட்டுநர், தடையை அழுத்தாமல் வந்து பட்டென மோத இருசக்கர வாகனம் குலுங்கி நொறுங்கியது. மோதலின் வேகத்தில் அஷ்வின் முன்னோக்கி செல்ல, அடுத்த நொடி அவன் கைகள் ரோஷினியை அணைத்திருந்தது. இருவரும் காற்றில் தூக்கி வீசியெறிப்பட, அவனின் கையில் இருந்து நழுவிய ரோஷினி முகம் தரையில் தேய தள்ளிச் சென்று சாலையோரம் விழுந்தாள். வேறு திசையில் பறந்த அஷ்வினின் தலை நேராக பாதையின் குறுக்கே இருந்த சிறு சுவற்றில் பலமாக மோத, அடுத்தடுத்து வந்த வாகனங்கள் அப்படி அப்படியே நின்றன.



"எங்க இவங்கள இன்னும் காணும். சந்தோஷத்துல எங்கயாச்சும் பறந்துட்டு இருக்கானா" என்று ஸ்வேதா கேட்க



"வருவாங்க... எங்க போயிடப் போறாங்க" என்றாள் சான்ட்ரா



"கால் பண்ணிப் பாக்கலாமா. வேண்டாம்... ட்ரைவிங்ல இருக்கும் போது டிஸ்டர்ப்பா இருக்கும்" என்று ஸ்வேதா யோசித்தபடி சொன்னாள்



சிறிது நேரம் கழித்து, வருணின் எண்ணிற்கு அழைப்பு வர அதை எடுத்தவன் "ஹலோ... வருண் ஸ்பீக்கிங்" என்றான்



"ஆமா. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல" என்று ஸ்வேதா முகத்தைச் சுழித்துக் காட்ட



"ஷ்ஷ்ஷ். இரு" என்றவாறே வருண் எழுந்து வெளியில் சென்று விட்டான்



அவன் இங்கும் அங்கும் அலைந்தபடி பேசிக் கொண்டிருக்க, பின்னால் சென்று நின்ற ஸ்வேதா அவன் அலைபேசியை வைக்கும் வரையில் காத்திருந்துவிட்டு "என்னாச்சு" என்றாள் இயல்பாய்



வருண் எதுவும் சொல்லாமல் எங்கோ வெறித்தபடி இருக்க "உன் தலைல என்ன இடியா விழுந்துடுச்சு" என்றாள் ஸ்வேதா அவனிடம் சென்று



வருணை அவ்வளவு வருத்தமாக இதற்கு முன் அவள் பார்த்ததே இல்லை. ஏதோ நடக்கக் கூடாதது நடந்தது போன்ற பதற்றம் ஸ்வேதாவைத் தொற்றிக் கொண்டது. அவளை உடனடியாக அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறியவன், சற்றுத் தொலைவில் இருந்த மருத்துவமனையின் முன் இறங்கி அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.



"என்ன நடக்குது வருண். என் கிட்ட சொல்லு" என்று ஸ்வேதா கேட்டிட



"என்னால எதுவும் சொல்ல முடியல. கொஞ்சம் அமைதியா வா" என்றவன் மறுபடியும் தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டான்



உள்ளே ரோஷினியை முகத்தில் கட்டுடன் பார்த்த ஸ்வேதா துடித்துப் போனாள். பிறகு பெரும் அதிர்ச்சியாக அஷ்வினின் உயிரற்ற உடலைக் காணவும் முற்றிலும் உடைந்து போனாள். வருணும் சொல்ல முடியாத ஆதரவற்ற நிலையிலே தனித்து நின்றிருந்தான். அவர்கள் இருவரும் மனதைத் தேற்றிக் கொண்டு, கம்மிய குரலோடு மற்றவர்களுக்கும் சேதி சொன்னார்கள். துக்கத்தின் அளவு யாராலும் தாங்க முடியாததாக இருந்தது. வாழ்க்கையே மாறப் போகிறது என்று மகிழ்ந்திருந்த தருணத்தில், சான்ட்ராவை வாழ்வு மீண்டும் ஒருமுறை புரட்டிப் போட்டது. அவள் கதறி அழக் கூட முடியாமல் சுவற்றோரம் சோர்ந்து அமர்ந்தாள். எதிர்பாராதவை நடந்தேறி எல்லாரையும் நொடிக்கு நொடி நோகடித்தது. அஷ்வினின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.



சான்ட்ரா எதையும் சொல்லிப் புலம்பக் கூடத் தோன்றாமல் பாக்கியத்தின் மடியிலே தஞ்சம் புகுந்தாள். தான் வாழ்ந்து முடித்த அதே வாழ்க்கையை இவளும் வாழப் போகிறாளே என்ற கவலை பாக்கியத்தை நொறுக்கியது. வந்திருந்த மகிமை ராஜாவால் மகளைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. வருண் ரோஷினியை கவனிக்கச் சென்றுவிட, ஸ்வேதா சான்ட்ராவை அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டாள். ஆனால், அவளிடம் ஆறுதல் சொல்லக் கூட வார்த்தைகள் ஏதும் இல்லை. வருணுக்கு பதில் மாறனும் குருவும் நடக்க வேண்டியதை கவனித்தனர். ஊரில் இருந்து யோகேஷும் லாவண்யாவும் கூட அடித்துப் பிடித்து ஓடி வந்தனர்.



இரண்டு நாட்கள் கழித்து, துர்கா தனியாக உட்கார்ந்து அழும் பாக்கியத்தைத் தேற்றிக் கொண்டிருக்க, அங்கு வந்த மகிமை ராஜா "என்னை மன்னிச்சுடுங்க. நான் உங்க வாழ்க்கையக் கெடுத்தேன். கடைசில என் மக வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு" என்று கதறினார்



கண்களைத் துடைத்துக் கொண்டு "நீங்க போலிஸா உங்க வேலைய தான செஞ்சீங்க" என்று பாக்கியம் சமாதானம் சொல்ல



"இல்ல... நீங்க எவ்வளவோ சொன்னீங்க. உங்க வீட்டுக்காரர் திருந்திட்டாருனு, நான் தான் கடமைய செய்யுறேன்னு என்கவுன்டர் பண்ணிட்டேன்" என்று மகிமை ராஜா உருக்கத்துடன் சொன்னார்



"அதைப் பத்திப் பேசி என்னாகப் போகுது. இது எதையும் சொல்லாமலே எந்த வஞ்சத்தையும் ஊட்டாம, உண்மைய மறைச்சு மறைச்சு தான் என் புள்ளைய வளத்தேன். அவங்க அப்பாவோட குணம் துளிக் கூட இல்லாம வளர்றானேனு ரொம்ப சந்தோஷப்பட்டேன். கடைசில அவனையும் அந்தக் கடவுள் என் கிட்ட இருந்து பிரிச்சுட்டான்" என்று பாக்கியம் மனதில் இருப்பதைக் கொட்டி அழுதார்



சற்று நேரத்தில் அழுகையை இழுத்துப் பிடித்த பாக்கியம் "உங்க பொண்ண இங்கருந்து கூட்டிட்டுப் போயிடுங்க" என்றார் கரம் கூப்பி



"அவ வயித்துல உங்க பேரன் வளருறான்" என்று மகிமை ராஜா வெதும்பிக் கூற



"அதனால தான் சொல்லுறேன். ஒரு குழந்தைய தனியா வளக்க நான் பட்டக் கஷ்டம் எனக்கு தான் தெரியும். எத்தனைக் கஷ்டம், எத்தனை அவமானம், தினம் தினம் செத்துப் பிழைக்கணும். சான்ட்ராவுக்கு அந்தக் கஷ்டம் வேணா... அவள... கருவைக் கலைச்சிட சொல்லுங்க" என்று கூறிய பாக்கியத்தின் கண்களில் கண்ணீர் தளும்பிச் சொட்டியது



இவ்வளவு நேரம் வெளியில் நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சான்ட்ரா, பாக்கியத்தின் அருகில் வந்தமர்ந்து "ஏன்மா இப்படி சொல்லுறீங்க... உங்க மகனை நீங்க திரும்பவும் பாக்க நினைக்கலையா" என்று சோர்வுடன் கேட்டிட



பாக்கியம் அவள் முகத்தைக் கையிலேந்தி "இது உனக்கு வேண்டாம் மகளே" என்று பதறினார்


அவரது கைகளை ஆறுதலாகப் பற்றிய சான்ட்ரா "நீங்க தான் இருக்கீங்களே... அஷ்வின மாதிரியே இவனையும் நீங்க நல்லா வளக்கணும். எனக்கு இருக்குற கடைசி சந்தோஷம் இந்தக் குழந்தை மட்டும் தான்" என்று கூறித் தாயின் கரங்களில் முகம் புதைத்தாள்



குடியிருப்புக்கு வெளியில் சுந்தரலிங்கமும் சில ஆட்களும் காத்திருக்க, "நீங்களும் வாங்க. என்னை ஏன் தனியா அனுப்புறீங்க. எனக்கு ஊருக்குப் போகவே கொலை நடுங்குது" என்று ஃபஹிமா அழுது புலம்பிக் கொண்டிருக்க



"புரிஞ்சுக்கோ ஃபஹி. அஷ்வின் நமக்காக எவ்ளோ பண்ணிருக்கான். இந்த நிலைமைல என்னால விட்டுத் தள்ளிட்டு வர முடியாது. என் மனசாட்சி என்னைக் காலத்துக்கும் குத்திட்டே இருக்கும். ரெண்டு மூணு நாள் இருந்துட்டு வந்துட்றேன். அந்தப் பொண்ணோட நிலைமைய நினைச்சுப் பாரு" என்றான் மாறன் கெஞ்சலாய்



"ஆனா... மாறா" என்று ஃபஹிமா கண்ணீரை உகுத்துக் கொண்டே இருக்க



"என் குணம் உண்மையிலேயே தெரிஞ்சவ தானா நீ. என்னால இதுக்கு மேல பொய்யா இருக்க முடியாது. தைரியமா கிளம்பு. போனா உயிர் தான போகும், போகட்டும். மனுஷத் தன்மையில்லாத உயிர் இருந்தென்ன ப்ரயோஜனம்" என்று ஃபஹிமாவிடம் தனித்துப் பேசிய மாறன், "அப்பா பாத்துக் கூப்பிட்டுப் போங்க. நான் சீக்கிரமா வரேன்" என்று சுந்தரலிங்கத்திடம் கூறிவிட்டு அவளைத் திரும்பிப் பார்க்காமல் சென்றான்



நல்ல உயிர் போனதடி
மனம் வெந்து தவிக்குதடி
ஆறுதல் சொல்லும் காலமடி
மனிதமே என் பாதையடி
 

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
அத்தியாயம் 49

சான்ட்ரா அவசரமாகப் படுக்கையில் ஏற கால்களால் மிதி பட்டு அது கலைந்தது


'இந்த வீட்டுல ஒரு கயிறு கூட இல்ல' என்று முணுமுணுத்தவள் துப்பாட்டா ஒன்றை எட்டி எட்டிப் போட்டுக் கொண்டிருந்தாள்


போட்டவுடன் அது மேலே உறுதியாக நின்று கொள்ள, 'யார் கண்ணுலயும் படாமப் போய் சேந்துடணும்' என்று முடிவு எடுத்தவளாய் அவசரமாக மற்றோரு முனையைக் கழுத்தில் மாட்டினாள்


'இப்படிக் கால் பெட்டுல மோதுனா எப்படி சாகறதாம்' என்று சான்ட்ரா சலித்துக் கொண்டு காலை உயரே தூக்கினாள்


அந்நேரம் உள்ளே நுழைந்த அஷ்வின் "ஏய் லூசு... ஒரு கயிறு கூட உனக்கு ஒழுங்கா கட்டத் தெரியல" என்று தலையில் அடித்துக் கொண்டான்


"நீயே கட்டித் தா. எனக்கு தான் ஹைட் எட்டல" என்று சான்ட்ரா கூற


"ஆமா... நான் தான் கூடவே இருக்கேன்ல, நீ எங்க போற" என்றான் அஷ்வின் புன்னகைத்து


"புரியல எனக்கு" என்று சான்ட்ரா மனம் பதறியபடிக் கேட்டிட


"நான் உன் பக்கத்துலயே தான் நிக்குறேன். உனக்குத் தெரியலையா. கண்ணைத் திறந்து பாரு" என்றான் அஷ்வின்


சான்ட்ரா கண்களைத் திறந்து பார்க்க, இதயம் துடிக்கும் ஓசை நேரடியாகக் காதில் விழுந்து கொண்டிருந்தது. சுற்றிப் பார்க்க கீழே படுக்கை, மேலே மின்விசிறியைத் தவிர எதுவும் இல்லை. தனது வயிற்றில் கை வைத்துக் கொண்டவள் "சாக மாட்டேன்... அவ்ளோ சீக்கிரம் சாக மாட்டேன். என் அஷ்வின் என் கூடவே இருக்கான்" என்று தனக்குத் தானே உறுதி சொல்லிக் கொண்டாள்.


மாறன் சான்ட்ராவிடம் பெரிதாகப் பேசவில்லை எனினும் சில நாட்கள் அங்கேயே ஒத்தாசையாக இருந்தான். ஊரில் இருந்து ஃபஹிமாவுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று அழைப்பு வந்தது. ஆனால், மாறன் போவதற்கு முன் முடிக்க வேண்டியிருந்த ஒரு காரியத்தை எண்ணித் திட்டமிட்டுக் கொண்டு இருந்தான். வாழ்க்கையில் இனி ஓடி ஒளியவே கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தான்.


"மாறா.. நீ கேட்டது" என்று ப்ரவீன் யாருக்கும் தெரியா வண்ணம் சில கோப்புகளை அவனிடம் கொடுத்தான்


"இதைப் பண்ணியே ஆகணுமானு குழப்பமா இருக்குடா... நீ எதாச்சும் சிக்கல்ல மாட்டிக்கிட்டீனா" என்று மாறன் ஒரு நிமிடம் தயங்கினான்


"உன் ப்ளான் தான் சரி... இத நான் உனக்காக செய்யல. நமக்காக... உன்னால ஆக வேண்டியது ஃப்யூச்சர்ல நிறைய இருக்கு" என்றான் ப்ரவீன்


"என்னடா அரசியல்வாதி பையன்னு நிரூபிக்கிறியா" என்று மாறன் வியப்போடு கேட்க


"நீயும் அரசியல்வாதி ஆகுனு தான் சொல்லுறேன்" என்ற ப்ரவீன் கண நேரத்தில் மறைந்தான்


சில மணி நேரங்கள் கழித்து அலைபேசியை எடுத்த மாறன் "ஹலோ... ஆன் ராம்கி சார்" என்று முதன்முறையாகப் பெயர் சொல்லி அழைக்க


சற்றே உள்ளுக்குள் அதிர்ந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாத ராம்கி "அந்த பேலன்ஸ் அமௌண்ட் தான... நாளைக்கு வந்து" என்று வழக்கம் போல தள்ளிப்போட நினைத்தார்


"அய்யோ சார்... அந்தப் பணத்தை என் நியாபகமா நீங்களே வச்சுக்கோங்க. உங்க நியாபகமா நான் ஒன்னு எடுத்துட்டுப் போகப் போறேன். அத சொல்ல தான் கூப்பிட்டேன்" என்ற மாறன் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தான்


"என்ன சொல்லுற" என்று ராம்கி புரியாமல் கேட்க


"உங்களோட பச்சை ஃபைல் ஒன்னு கைல மாட்டிருக்கு. நீங்க பச்சை துரோகினு காட்ட ரொம்ப போதுமானதா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று மாறன் சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தான்


ராம்கிக்கு ஒரு நொடி வியர்த்துக் கொட்ட, உடனடியாக அவனது எண்ணிற்கு அழைத்தார்; மாறனின் எண்ணோ அணைத்து வைக்கப் பட்டுள்ளதாக வந்தது.


அவரின் உள்ளம் பதற மீண்டும் அவனாக அழைத்த மாறன் "ஹலோ... பயந்துட்டீங்களா" என்றான் கேலியாக


"இப்போவே வரேன்டா உன் வீட்டுக்கு... உன் பொண்டாட்டிய தூக்குனா ஆட்டம் அடங்கிடும்ல" என்று ராம்கி உறும


"நான் இருந்த இடத்தை காலி பண்ணி ரொம்ப நாளாச்சு. என்னைத் தேடி மதுரைக்கு வேணா வா. நீ வர்றதுக்குள்ள நாலஞ்சு காப்பி எடுத்து என் தோழர்கள் கிட்டலாம் கொடுத்து வைக்குறேன்" என்று சிரித்தான் மாறன்


பேசிக் கொண்டே வீட்டிற்கு விரைந்த ராம்கி, அவன் சொல்வது பொய்யாக இருக்க வேண்டுமென்று நினைத்தார். ஆனால், வீட்டினுள் இருந்த முக்கியமான அறையில் யாரோ புகுந்து அலசியது போல் எல்லாம் அப்படி அப்படியே கிடந்தன. தான் செய்யும் தவறுகளில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று எண்ணியிருந்த ராம்கி, ப்ரவீனே பலமுறை சிசிடிவி வைக்கக் கூறியும் இதுவரை அதைச் செய்யவில்லை. இன்று அதுவே அவருக்கு எதிராக முடிந்து விட்டது.


இது எவ்வாறு சாத்தியமானது என்று கூட யோசிக்காமல் "நகை பணம்லாம் அப்படியே இருக்கு. உனக்கு என்ன தான் வேணும்" என்றார் ராம்கி பதற்றத்தில்


"அதாவது நீ என்னைத் தேடி வரக் கூடாது. ரெண்டாவது உன் ஆளுங்களயும் அனுப்பக் கூடாது. மூணாவது கம்ப்ளெய்ண்ட் ஃபைல் பண்ணக் கூடாது. இதுல எது பண்ணாலும் வேற யார் மூலமாவது உன் டாக்குமென்ட் டீடெயில்ஸ் வெளிய வரும்" என்றான் மாறன் பொறுமையாக


"என்னைப் பழிவாங்குறியா" என்று ராம்கி எரிச்சலுடன் கேட்க


"எனக்கு அதுலலாம் விருப்பம் இல்ல. உன்னை நான் காட்டிக் கொடுக்க மாட்டேன். உனக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிங்க கிட்ட இருக்குற பௌசு எனக்குத் தெரியும். அதனால உன் சிபாரிசுல நான் சொல்லுற கட்சில சேத்து விட்டுடு" என்றான் மாறன்


"டேய்... கட்சில சேர்றதுக்கா இவ்ளோ. இங்க வா தம்பி. நம்ம கட்சியிலயே சேந்துக்க" என்றார் ராம்கி கோபத்தைப் புன்னகையால் மறைத்து


"ச்ச்சச்சச்சசச... என்னை இன்னும் ஏமாளியாவே நினைச்சுட்டு இருக்கல்ல. உன் கண்ணுல இனி படவே மாட்டேன். நாளைக்குக் காலைல கட்சில சேர ஏற்பாடு பண்ணிடுங்க சார்... பண்ணிக்கலாம்ல... பண்ணி தான் ஆகணும்" என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான் மாறன்


நாட்கள் வேகமாக ஓடியது; அஷ்வின் தங்களுக்கு எல்லாம் உதவி செய்ததாகக் கூறி நிறைய பேர் நேரில் வந்தனர்; பாக்கியத்தையும் சான்ட்ராவையும் பார்த்து ஆறுதல் சொல்லி விட்டுச் சென்றனர். ஒரு நாள் கோயம்புத்தூரில் இருந்து கூட்டமாகப் பிள்ளைகள் வந்து, அஷ்வினின் கல்லறையில் மலர் வளையம் வைத்து விட்டுச் சென்றனர். அவர்கள் அனைவரும் இத்தனை நாள் உண்டது, படித்தது அஷ்வின் தந்த தானத்தில் தான். தன் மகன் இத்தனை நாளாய் சம்பாதித்தப் பணத்தை எதற்காகச் செலவு செய்துள்ளான் என்று உணர்ந்து பாக்கியம் நெக்குருகிப் போனார். வீட்டில் முதல் முறையாகத் தனது கணவரின் புகைப்படத்தையும், அஷ்வினின் புகைப்படத்தின் அருகில் மாட்டி வைத்தார் பாக்கியம்.


அதைப் பார்த்த ஸ்வேதா "இவரு..." என்று கேட்டு நிறுத்திக் கொள்ள


"அஷ்வினோட அப்பா. அவரு செத்த பிறகு அவர் ஒரு ரௌடினு சொல்லிக்கிட்டாங்க. என் கிட்ட எதையும் அவரு காட்டிக்கிட்டது இல்ல. வாழ்க்கைல திடீர்னு வந்தாரு, திடீர்னு போயிட்டாரு" என்றார் பாக்கியம்


ஸ்வேதா அடுத்த நொடியே கண்கலங்க "என்னாச்சு ஸ்வே" என்றான் வருண் அருகில் வந்து


"எங்கள சின்ன வயசுலயே அனாதையா விட்டுட்டு, என்கவுண்டர்க்கு பயந்து சென்னைல இருந்து கோயம்புத்தூர் ஓடிப் போன மனுஷன் இவர் தான்" என்ற ஸ்வேதாவின் கன்னங்களில் நீர் உருண்டு கொண்டிருந்தது


"காத்தவராயன்" என்று வருணின் உதடுகள் முணுமுணுக்க


அதிர்ச்சியுடன் திரும்பிய பாக்கியம் "அஷ்வின் ஒரு நாள் இதைப் பத்திக் கேட்டான்மா. நான் தான் பெருசா எடுத்துக்கல" என்றார்


"என் தம்பி என் கூடவே இருந்துருக்கான்... எனக்காக எல்லாம் பண்ணிருக்கான். அவன் தான் தம்பினு கடவுள் எனக்கு சொல்லல பாத்தீங்களா. அந்த அளவுக்கு நான் ஒரு துரதிர்ஷ்டசாலி" என்று ஸ்வேதா வேதனையுற


வருண் பாக்கியத்தைப் பார்த்தபடி "கடவுள் உனக்கு அம்மாவ அடையாளம் காட்டிட்டாரு ஸ்வே" என்றான் மென்மையாக


சான்ட்ரா அஷ்வினின் இடத்தையும் சேர்த்து நிரப்ப, தன்னைத் தானே மாற்றிக் கொண்டாள். முன்பை விடக் கனிவாக, வெளிப்படையாக, பொது நோக்கம் உடையவளாக மாறினாள். அஷ்வின் விட்டுச் சென்ற யூ ட்யூப் சேனலின் பக்கம் கவனத்தைத் திருப்பினாள். தனது பாடல்களால் மீண்டும் தன் திறமைகளை வெளிக் கொண்டு வந்தாள். தொடர்ந்து அஷ்வின் செய்து கொண்டிருந்த தொண்டுகளைப் பின்பற்றி வாழ்வை நகர்த்தினாள். அவளது வயிற்றில் இருந்த ஜீவனும் வேகமாக வளர்ந்தது.


மாதங்கள் பல கடந்து செல்ல, சான்ட்ரா புதிதாகப் பிறந்த உயிரில் தன்னைத் தொலைத்தாள். அஷ்வினின் சொல்படியே யுகி என்று பெயர் வைத்துக் கொஞ்சினாள். அவனது மென்விரல்கள் முகத்தில் படும்போது, தாயாக தந்தையாக உலகமே அவனாகத் தெரிந்தது. அவனது சிரிப்பில் எப்போதும் அஷ்வினே வெளிப்பட்டான். அதன் மயக்கமே அவளை வாழ்வில் உந்தித் தள்ள உதவியது.


ஒரு நாள் வருண் தனது ஊருக்குப் போயே ஆக வேண்டும் என்று சொல்லிவிட, ஸ்வேதா மனமில்லாமல் கிளம்பினாள்


"நீ மட்டும் போய்ட்டு வா" என்று ஸ்வேதா முறுக்கிக் கொள்ள


"இப்போ தான் எல்லா ட்ரீட்மெண்டும் முடிஞ்சுருச்சுல்ல. இனிமேலும் தள்ளிப் போட முடியாது. நான் அவசியம் இல்லாம கூப்டுவனா சொல்லு" என்றான் வருண்


"நீ கூப்பிட்டுப் போய் ஊரோடவே தங்க சொல்லிடுவியோனு பயப்படுறா வருண்" என்று சான்ட்ரா சொல்ல


"என்ன இது முட்டாள் தனம்" என்றான் வருண் ஸ்வேதாவை முறைத்து


"அண்ணி... எதுக்கு இந்த தேவையில்லாத பயம். ரோஷினியும் இங்க தான் படிக்குறா. அவன் இந்த ஸ்டேட் பார் கவுன்சில்ல தான் பதிவு பண்ணிருக்கான். எப்படியா இருந்தாலும் இங்க தான் திரும்பி வந்தாகணும்" என்றாள் சான்ட்ரா


"சும்மா ஊருக்கு தான கூப்பிட்டேன். அதுக்கா இவ்ளோ ஆர்ப்பாட்டம். கடைசி வரைக்கும் இந்த வீட்டுலயே வாடகைக் கொடுத்துட்டு வாழ்க்கைய ஓட்டலாம்ணு இருக்கியா" என்று வருண் கேட்டிட


"இல்ல. பெரிய வீடா கட்டி எல்லாரும் ஒன்னா இருக்கணும்" என்று வருணைப் பார்த்து உதட்டைச் சுளித்த ஸ்வேதா, "அம்மா... பத்திரமா இருங்க. யுகிய எங்கயும் தனியா விட்டுராதீங்க. சான்ட்ரா உன்னோட பூனைங்க முடி தான் வீடு முழுக்க இருக்கு. ஒன்னு கூட யுகி மேலயே படக் கூடாது சொல்லிட்டேன். வேக்யூம் க்ளீன் பண்ணிட்டே இரு" என்றாள் அக்கறையுடன்


"அவனை நான் பாத்துக்குறேன். நீ போய் உன் மாமனார் மாமியாரப் பாத்துட்டு வா" என்று வழியனுப்பினாள் சான்ட்ரா


"அப்பா... யுகியயும் தூக்கிட்டுப் போலாம். சான்ட்ரா அவனுக்குப் புது ட்ரெஸ் போடு" என்று ரோஷினி சொல்ல


"அவன் அம்மா இல்லாம வர மாட்டான். வேணும்னா சான்ட்ராவ கூடக் கூப்பிடு" என்ற வருண் கிளம்புவதிலே மும்முரமாய் இருந்தான்


ரோஷினி இப்போது சான்ட்ராவைப் பார்க்க, "நான் வந்துட்டா மியாவ யார பாத்துக்குறது. பூனைக் குட்டிக்குலாம் பசிக்கும்ல. நீ போய்ட்டு வர்ற வரைக்கும் நான் அவங்கள பத்திரமா பாத்துக்குறேன். உன்னைப் பாக்காம யுகியும் அழுவான்ல. அதனால ஊருக்குப் போய்ட்டு ஒரு ஹாய் சொல்லிட்டு உடனே வந்துடு" என்று பேசி சமாளித்தாள் அவள்


"போயே ஆகணுமா" என்று ரோஷினிக்கு மேல் ஸ்வேதா அடம்பிடிக்க, பெட்டியுடன் ரோஷினியைத் தூக்கிக் கொண்டு வெளியில் நடந்தான் வருண்


மூவரும் வீட்டில் விடைபெற்றுப் பேருந்தில் ஏறி அமர, "சிடுமூஞ்சி... எதுக்கு என்னைக் கட்டாயப்படுத்தி ஊருக்குக் கூட்டிட்டுப் போற" என்று திட்டினாள் ஸ்வேதா


"ஆன் உன்னைத் திருட்டுக் கல்யாணம் பண்ண தான்" என்று வருண் வேகமாக பதில் சொல்ல


"ரோஷினி முன்னாடி இப்படிப் பேசாத" என்று பற்களைக் கடித்தாள் ஸ்வேதா


"அப்போ நீயும் என்னை எதுவும் கேக்காத" என்றான் வருண்


"அப்பா பஸ்ஸூல வேர்க்குது. கார் எப்போ வாங்குவீங்க" என்று ரோஷினி கேட்க


கார், பைக் என்று எதை நினைத்தாலும் அஷ்வினும் நடந்த விபத்துமே கண் முன்னால் வர வருண் அமைதியானான்


வருணின் மனநிலைப் புரிந்தவளாய் "முதல்ல நாம ரோஷினி குட்டிக்கு சைக்கிள் வாங்கலாம், சரியா?" என்ற ஸ்வேதா, ரோஷினியை மடியில் வைத்து இறுக்கிக் கொண்டாள்


நேரில் விபத்தைப் பார்த்த ரோஷினியை இந்த சகஜ நிலைக்குக் கொண்டு வர, யுகியின் பிறப்பு மட்டுமே உதவியது. அதை எண்ணி ஸ்வேதா பெருமூச்சு விட இப்போது பேருந்து புகையை வெளியேற்றிக் கிளம்பியது.


கசப்புகள் கரைய
காலங்கள் காணும்
உறுதியாய் உந்தி
உனையே உயர்த்திடு
 
Status
Not open for further replies.
Top Bottom