- Messages
- 130
- Reaction score
- 162
- Points
- 43
அத்தியாயம் 40
அடுத்த நாள் காலையில் ஜீவா தனது இருசக்கர வாகனத்துடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்க, அந்நேரத்தில் அங்கு வந்த குரு "எதாவது பிரச்சனையா" என்றான்
"இல்ல. நான் பாத்துக்குறேன்" என்ற ஜீவா வாகனத்தில் கவனத்தைச் செலுத்த
"நான் வேணா ட்ராப் பண்றேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல" என்றான் குரு
"பரவால்ல. வேலைக்கு நேரமாகும் கிளம்புங்க" என்றான் ஜீவா அவனைப் பாராமல்
"அட பரவால்ல. வாங்க" என்று குரு அதித்தன் வற்புறுத்தி அழைக்க, ஜீவாவும் அவன் பின்னால் ஏறி அமர்ந்தான்
ஜீவாவின் மனதிற்குள் ஓடியது எல்லாம் பல நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு தான். இந்துஜாவின் அலைபேசியை எதேச்சையாகப் பார்த்துக் கொண்டிருந்தவன், வெறும் ஸ்மைலி மட்டும் இடப்பட்டு சேமிக்கப்பட்டு இருந்த அந்த எண்களுக்கு அழைத்துப் பார்த்தான். இந்த பக்கம் ஜீவா மௌனமாகவே இருக்க, அந்த பக்கம் பேசியது ஒரு ஆண் குரல். அதுவும் சாதாரணமாக இல்லை; மிகவும் இந்துஜாவிடம் உரிமை எடுத்துக் கொண்ட விதத்தில் இருந்தது அப்பேச்சு. ஜீவா யோசனையுடன் அவ்வெண்ணைத் தன் அலைபேசியின் ட்ரூ காலரில் சோதித்துப் பார்க்க, தெளிவாக குரு என்ற பெயர் திரையில் தெரிந்தது. அன்றைய தினம் குரு வருணின் காதல் பிரச்சனையால் ஏற்பட்டிருந்த எரிச்சலில், அழைத்தது இந்துஜா தானா என்று தெரிவதற்குள்ளாகவே 'அப்பறம் பேசுறேன் வைடி' என்று கூறியிருந்தான். இன்றளவும் ஜீவாவிற்கு அதே வார்த்தைகள் தான் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தன.
"என்ன பாஸ். பயங்கரமான யோசனைல வரீங்க" என்று குரு அதித்தன் ஜீவாவின் யோசனைகளைக் கலைத்துப் போட்டுக் கேட்டிட
"இல்ல... உங்க கிட்ட ஒன்னு கேக்கணும். அதான் எப்படி கேக்குறதுனு யோசிச்சுட்டு இருக்கேன்" என்று ஜீவா சொல்ல, குருவுக்குள் ஒரு அதிர்வு கிளம்பி இருந்தது
அதைச் சமாளித்தபடி "என்ன விஷயம்னு தயங்காம சொல்லுங்க" என்று குரு கேட்க
"இந்துஜாவுக்கு வரன் பாக்குறோம். அதான் உங்க ஊர்ப்பக்கம் யாராச்சும் இருந்தா, கொஞ்சம் பாத்து சொல்லுங்க" என்றான் ஜீவா நேரடியாக விஷயத்திற்கு வராமல்
"படிச்சுட்டு தான இருக்காங்க. இப்போவே மேரேஜா" என்று குரு அதித்தன் அதிர்ச்சியைக் காட்டாமல் கேட்டு வைக்க
"இப்போவே பாக்கறது தான் நல்லதுனு நினைக்குறேன். பொண்ண வீட்டுல வச்சுருக்குற வரைக்கும் மனசு கிடந்து தவிக்குது. அது மத்தவங்களுக்கு சொன்னா புரியாது" என்றான் ஜீவா மறைமுகமாக
அதற்கு பிறகு எதுவும் பேச முடியாமல் மௌனம் காத்த குரு, ஒரு பெரிய அடுக்குமாடிக் கட்டிடத்தின் முன்னால் வண்டியை நிறுத்தினான்
ஜீவா இறங்கிக் கொள்ள "ஒரு நிமிஷம்" என்று அழைத்து அவன் அருகில் சென்றான் குரு அதித்தன்
ஜீவா அவனை வெறுமனே பார்த்திருக்க "நானும் இந்துவும் லவ் பண்றோம்" என்றான் அவன் நொடியும் தாமதிக்காமல் நேருக்கு நேர்
அவனைப் பார்த்து இதழ் விரித்த ஜீவா எதுவும் கூறாமலே சென்று விட்டான். அவன் சுற்றி வளைத்து மாப்பிள்ளையைப் பற்றிப் பேசியதெல்லாம் உண்மையை வரவழைக்க தானே.
'இவன் என்ன கத்திக் கூச்சல் போடுவான்னு பாத்தா அமைதியா போறான்' என்று யோசித்த குரு இந்துவிற்கு அழைத்தான்
"ஹலோ... நான் தான் இன்னைக்குக் காலேஜ்ல வேலை இருக்கு, கால் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாதனு சொன்னேன்ல" என்று இந்துஜா கேட்க
"தலைப் போற விஷயம்னா கூடக் கூப்பிடக் கூடாதா" என்றான் குரு எரிச்சலுடன்
"அப்படி என்ன தலைப் போற விஷயம். கனவுல நான் வந்தேனா" என்று இந்துஜா சிரிப்புடன் கேட்க
"உங்க அண்ணனைக் காலையில பாத்தேன். நான் தான் அவனை ஆஃபிஸ்ல ட்ராப் பண்ணேன்" என்று குரு சொன்னான்
"நல்ல விஷயம் தான... உங்களுக்குள்ள ஃப்ரென்ட்ஷிப் வொர்க் அவுட் ஆச்சா" என்று இந்து ஆர்வத்துடன் கேட்டிட
"இல்ல. நாம லவ் பண்ற விஷயத்த அவன்ட்ட சொல்லிட்டேன்" என்றான் குரு தயங்கியபடி
"என்ன... எதுக்காக... என்ன அப்படி உனக்கு அவசரம். லூசாய்ட்டியா. அது அதுக்குனு ஒரு நேரம் இருக்கு குரு" என்று இந்துஜா கத்த ஆரம்பிக்க
"அவன் தான் என் வாய கிளறுனான். என் கிட்டயே வந்து உனக்கு மாப்ள பாக்கணும்னு சொன்னா நான் பதிலுக்கு, ஆன் சரிங்க பாத்துரலாம், நம்ம பாப்பாக்கு தான அப்டினா சொல்ல முடியும்" என்றான் குரு பொறுமையிழந்து
"காலைலயே என்னை டென்ஷன் ஆக்காத. இப்போ நான் எந்த முகத்தை வச்சிட்டு வீட்டுக்குப் போவேன். அய்யோ... கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா தான் என்னவாம்" என்று இந்துஜா பயம் கொண்டு புலம்ப
"இப்போ என்ன செய்ய சொல்லுற நீ" என்று குரு முடிவாகக் கேட்டான்
"என்ன பண்ணுவியோ தெரியாது. மதியம் ஒழுங்கா என் காலேஜுக்கு வந்து என்னைப் பாரு" என்றாள் இந்துஜா பதிலுக்கு
"அதெப்படி வர முடியும். எனக்கு வேலை இருக்கு" என்று குரு சொல்ல
"எங்க அண்ணன் கிட்ட சொல்லும் போது மட்டும் வலிக்கலைல. மதியம் வரலைனா உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. பை" என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்
அஷ்வின் முற்பகல் வேளையில் பாக்கியத்தின் வீட்டில் இருந்தான். அங்குள்ள பழையப் புகைப்படங்களை ஆராய, அவன் தேடிய பதில் தான் அவனுக்குக் கிடைக்கவில்லை.
அவனிடம் வந்த பாக்கியம் "என்னடா புதுசா பாக்குற மாதிரிப் பாத்துட்டு இருக்க" என்றார்
"ஏன்மா நாம எப்போவாச்சும் சென்னைல இருந்தோமா" என்று அஷ்வின் கேட்டிட
"இல்லைடா. நான் பிறந்ததே கோயம்புத்தூர் தான். அதை விட்டு நான் வெளிய போனதே இல்ல" என்று பாக்கியம் சொன்னார்
"அப்பா எந்த ஊரும்மா" என்று அஷ்வின் கேட்க
"அவரும் அதே ஊரு தான். நான் படிச்ச ஸ்கூலுக்குப் பக்கத்துல பரோட்டா மாஸ்டரா இருந்தாரு. அதான் சொல்லிருக்கனேடா..." என்று பாக்கியம் கூறினார்
"ரெண்டு பேருக்கு ஒரே நேம் இருக்குமா என்ன. நான் இதுவரைக்குக் கேள்விப்பட்டதே இல்ல. நம்ம அப்பா பேரும் காத்தவராயன். ஸ்வேதாவோட அப்பா பேரும் காத்தவராயன்" என்று அஷ்வின் அவர் மடியில் படுத்துக் கொண்டே சொல்ல
"இது ஒரு விஷயம்னா யோசிச்சுட்டு இருக்க" என்று சிரித்தார் பாக்கியம்
"உனக்கு எதுவும் தோணலையா. போம்மா. ஆமா அப்பாவோட அப்பா பேரு என்ன" என்று அஷ்வின் ஆராய
"அவரு அதெல்லாம் சொல்லலடா. நான் கேட்டதும் இல்ல. அவருக்குனு யாருமே இல்ல" என்றார் பாக்கியம்
"எப்படிமா ஒத்தை ஆள நம்பி, வீட்டை விட்டுப் போய் அவரையே கல்யாணம் பண்ணிக்கிட்ட... அப்படி என்ன பண்ணிட்டாரு அவரு உனக்காக" என்று அஷ்வின் வினவ
"என்னடா கேள்வி இது. இதுக்கு நான் என்னனு பதில் சொல்லுவேன். எனக்கு அவரைப் பிடிச்சுருந்தது. அவ்ளோ தான்" என்றார் பாக்கியம் சாதாரணமாக
"அம்மா, அப்பா உன்னை எப்படி கரெக்ட் பண்ணாரு" என்று அஷ்வின் கேட்க
அவனது காதைப் பிடித்துத் திருகியவர் "நீ எப்படி உன் கேர்ள் ஃப்ரெண்ட கரெக்ட் பண்ணியோ. அப்படித்தான். அதனால இந்த கேள்விய சான்ட்ரா கிட்டப் போய் கேளு. நல்ல பதிலா கிடைக்கும்" என்றார்
"ஏன்மா வெக்கப்படுற. இதைக் கூட என்கிட்ட சொல்ல மாட்டேங்குற" என்று அஷ்வின் சிரித்துக் கொண்டே கேட்க
"ஏன்டா இதெல்லாமா சொல்லுவாங்க. வாழ்க்கைல எல்லாத்தைப் பத்தியும் ஆராய்ஞ்சிட்டே இருக்கக் கூடாது. எழுந்திரு... சான்ட்ராவுக்கு சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். கொண்டு போய் கொடு, பசியோட இருப்பா" என்று அவனைத் துரிதப்படுத்தினார் பாக்கியம்
"இன்னொரு தடவை சாப்பாடு போடு. சாப்பிட்டுப் போறேன். எனக்குப் பசிக்குற மாதிரியே இருக்கு" என்ற அஷ்வின் கை கால்களை நீட்டி முழக்க
"அவக் கூட சேந்து சாப்பிடு, போ. என்ன பழக்கம் இது... ஒருத்தங்க பசியா இருக்கக்குள்ள, தனியா விட்டுட்டு சாப்பிடறது" என்று கண்டித்தார் பாக்கியம்
"அவ இவ்வளவு நேரம் எனக்கு வெயிட் பண்ணிட்டு இருப்பானு நினைக்கிறியா... இந்நேரம் பாஸ்தா, நூடுல்ஸ்னு எதையாச்சும் கிண்டிக் கிளறி சாப்பிட்டுருப்பா" என்றான் அஷ்வின் அன்னையைக் கட்டிக்கொண்டு
"ஒருவேளை சாப்பிடலைனா..." என்று பாக்கியம் சொல்ல
"சரி... கிளம்புறேன். என்னை இங்கருந்து துரத்துறதுலயே இருக்க" என்றவன் அவர் எடுத்து வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்
வாசல்வரை சென்றவர் "வீட்டுக்குப் போயிட்டுக் கூப்டுடா" என்று கூறிட
"ஓகேமா. பை" என்றவன் அங்கிருந்து துள்ளிக் குதித்து ஓடி விட்டான்
"அதுக்குள்ள வளந்துட்டான், என் பையன்" என்று நினைத்தவர் மகனை எண்ணி விரல்களை மடக்கி நெட்டி முறித்துக் கொண்டார்
மதியமாய் வீட்டில் அமர்ந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த பானுமதி "நீயாச்சும் கொஞ்சம் என்னை நிம்மதியா விடேன்மா. எப்போ பாரு குளிக்குற நாள் வந்துச்சா வந்துச்சானு கேட்டு சாகடிக்காத. மாசம் ஆனா வந்துட்டு தான் இருக்கு. நாங்க இப்போ ப்ளான் பண்ணலமா..." என்றாள் அயர்ந்து போய்
"என்னடி ப்ளானு அது இதுன்னுட்டு. உங்க அப்பா வேற உங்களை நினைச்சு வருத்தப்படுறாரு" என்று அன்னக்கொடி சொல்ல
"எங்களுக்கு இப்போ என்ன முடியாம போச்சுனு வருத்தப்படுறீங்க. இதெல்லாம் தேவையில்லாத கவலை உங்களுக்கு. கல்யாணம் ஆன ரெண்டே வருஷத்துல இடுப்புல ஒன்னு, வயித்துல ஒன்னுனு வச்சுட்டு இருந்தா சுகமா இருக்குமோ" என்று பானு கோபப்பட்டாள்
"என்னத்துக்குக் கோவப்படுறவ. சரி மாப்பிள்ளை வந்தா அப்பாக்குப் பேச சொல்லு" என்று அன்னக்கொடி சொல்ல
"அப்பா அவருக்கிட்ட எதாச்சும் கேட்டு வைக்கப் போறாருமா. அப்பறம் அவரு தேவையில்லாம டென்ஷன் ஆவாரு" என்று பானுமதி சொல்ல
"அப்படி ஒன்னும் நாங்க விவஸ்தை கெட்டுப் போயிடல" என்று அன்னக்கொடி சொல்லிக் கொண்டிருந்த நேரம் அங்கு ஜீவா வந்தான்
"அம்மா... அவரு வந்துட்டாரு. நான் அப்பறம் பேசுறேன்" என்ற பானுமதி அழைப்பைத் துண்டித்தாள்
வாசலில் காலணியைக் கழட்டிய படியே "பானு, பானு" என்று ஜீவா கத்த
"இங்க தான இருக்கேன்... என்னத்துக்கு இப்படிக் கத்துறீங்க" என்று பானுமதி சாதாரணமாய் கேட்டாள்
"என்ன பாத்தா உங்களுக்குலாம் லூசு மாதிரி தெரியுதில்ல. ம்ம்ம்..." என்று ஜீவா கேட்க
"எதுக்கு இப்போ கோவப்படுறீங்க. என்ன நடந்துச்சுனு சொல்லுங்க" என்ற பானு எழுந்து நின்று விசாரித்தாள்
"இன்னும் என்ன நடக்கணும். மேல்வீட்டுப் பையனும் உன் ஃப்ரெண்டும் காதல் பண்றாங்களாம். உனக்கும் இதெல்லாம் தெரியும் தான. இத்தனை நாளா மறைச்சிட்ட இல்ல" என்று ஜீவா ஆத்திரத்துடன் கேட்டிட
"என்னங்க சொல்றீங்க" என்றாள் பானு புரியாமல்
"நடிக்காத, நடிக்காத. ரெண்டு பேருக்கும் சேத்து சாயந்தரம் இருக்கு" என்று ஜீவா சீற
"எதாச்சும் புரியுற மாதிரி சொல்றீங்களா" என்றாள் பானு
"நான் உன்னை நம்புனேன். ஆனா நீ என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சுட்ட" என்ற ஜீவா அங்கிருந்து வெளியேறி இருந்தான்
காலையில் மக்கர் செய்த வண்டி ஜீவா உதைத்த வேகத்தில் இப்போது சீறிட, சீற்றத்துடன் செல்பவனையே சோர்வாகப் பார்த்திருந்தாள் பானுமதி
கோபம் வந்து
கண்ணை மறைக்கும்
காதல் வந்தால்
உண்மை விளங்கும்
கசப்புகள் வாழ்வில்
கல்லடி போல
அவ்வப்போது வந்து
இன்பம் பறிக்கும்
மரமாய் கிளைகளை
விரித்து உயர்ந்திரு
வலியைத் தாங்கி
இனிப்பை வழங்கிடு