வேய்ந்தனின் வல்லினம்
நாவலாசிரியர் : திவ்ய ஸ்ரீ
ஹீரோஸ் : ருத்ரஜித், விஷ்வஜித்
ஹீரோயின்ஸ் : அபூர்வா, பிரகல்யா
அழுத்தமான காதல் கதை...
நிழலாய் நிஜமாய் ஓர் சதுரங்க ஆட்டம்!!!
முடிந்து போன தங்கையின் அத்தியாயங்களை புரட்டுகையில் தானுணர்ந்து செய்யாத தவறுக்கு சிறைவாசம் சென்றாள் ஒருத்தி!
தமக்கையின் குழந்தையாய் இருந்தவள் அவன் காதலில் குமரியாய் மாறிப் போக மறைக்கப்பட்ட ரகசியங்கள் கூட புதைந்து தான் போயிற்று ஆட்டத்தில்!
நிஜத்திற்கு நிழலாய் திரை மறைவில் மறைந்திருந்தவன் காதலியை நிரபராதியாக்க தேடிய தேடல் நிஜத்தை தூர விலக்கி விட நிழலாய் தொடர்ந்தான் அவள் பின்னே!
கண்களில் காதலுடன் நீ என்னை பார்க்க நான் மங்கல நாணேற்ற வேண்டும் என நினைத்திருந்தவன் அவள் அகம் நுழைந்து காதலாகி கரம் பிடிக்க, குழந்தையை காப்பாற்ற போராடும் தாயாய் தமக்கை எனும் அண்ணை தன் கழுத்தில் மங்கல நாணை ஏற்ற தோற்றுத் தான் போயிற்று ஒட்டு மொத்த அக்கா தங்கை பாசங்களும்!!!
நிஜம் நிழலாக நிழல் நிஜமாக மறைக்கப்பட்ட இரகசியங்கள் சிதற காதலை கொடுத்தவனே காயமாகிப் போக வாக்குகள் கூட காணாமற் போக விதி நுழைந்தது ஆட்டத்தில்!!!
விலகல் காதலை அதிகரிக்க மீண்டும் கண்ட நொடி வார்த்தைகள் மௌன மொழியாகிப் போக தேடி ஓடியவள் அடைக்கலமானாள் அவனவளாக!
வேய்ந்தனனின் வல்லினமாய் என்றும்!!!
நீங்கள் மென்மேலும் வளர வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,
நன்றி.
ரிஷி.
21-09-2021.