Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேல்விழியின் குளிர் நிலவோ - கதைப்பகுதி

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
32:

வெடுக்கென்று கோவத்தோடு கதவை திறந்து திட்ட வாய் திறந்தவன் எதிரில் நின்றவரை கண்டு திறந்த வாயை வேகமாக மூடிக்கொண்டான்.



'என்ன இவர்? வேகமா போனவரு ரொம்ப பம்மராரு? யாரு வந்துருப்பாங்க ?' என்று யோசித்து கொண்டிருக்கையில் சாப்பாட்டு தட்டுடன் உள்ளே நுழைந்த அத்தையை கண்டவுடன் உருண்டெழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் வாயில் கைவைத்து பொத்தி கொண்டாள் நிலா.



"நீயும் வந்து சாப்பாடு எடுத்துட்டு போற மாதிரி தெரியலை? அதான் நானே எடுத்துட்டு வந்துட்டேன். ரெண்டு பேரும் சாப்பிடுங்க" என்று வெளியே சென்றுவிட்டார்.



நிலாவை முறைத்து கொண்டிருந்த வேலன் வேகமாக கதவை சாத்திவிட்டு அவளின் அருகில் வந்து இடுப்பில் கை வைத்து முறைக்க, அடக்கி வைத்திருந்த சிரிப்பை முழுவதும் கொட்டிவிட்டாள்.



அவளின் சிரிப்பை உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியே முறைத்து கொண்டிருந்தவன் வேகமாக வந்து அவளை அணைத்து கொண்டான்.



அவனின் இந்த செய்கையில் ஒரு நொடி அதிர்ந்தாலும் சுதாரித்து, "என்ன பண்றிங்க? என்னை விடுங்க... தள்ளுங்க..." என்று அவனை தள்ள முயற்சிக்க தன் பிடியை இன்னும் இறுக்கினான் அவளின் வெற்றிடையில்.



தொண்டைக்குழியில் எழுந்த பெரும் ஒலியை சிரமப்பட்டு அடக்கியவள்.



"ப்ளீஸ்! விழியா... என்னை விடுங்க." என்று தள்ளிவிட முயற்சித்தாள்.



"என்ன ஸ்வீட் ஹார்ட்? இவ்ளோ நேரம் விழுந்து விழுந்து சிரிச்ச? இப்போ இவ்ளோ அமைதியாகிட்ட?" என்று சீண்டினான்.



"இல்ல... ப்ளீஸ் விழியா விடுங்க என்னை" என்று விழிநீர் அவன் கரம் மேல் விழ திடுககிட்டவன்.



"ஹே நிலா நான் சும்மா விளையாடினேன். ஐ ஆம் சாரி. உனக்கு பிடிக்கிலைன்னா?" என்று அவளை விடுவித்து எழுந்து அந்த அறையை விட்டு வெளியேறினான்.



இதை சற்றும் எதிர்பார்க்காத நிலா தடுமாறி போனாள்.



'ஐ ஆம் சாரி விழியா. திடிர்ன்னு நீங்க வந்து கட்டிபிடிச்சவுடனே எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை.' தேம்பியபடி உறங்கிவிட்டாள்.



அறையிலிருந்து வெளியேறியவன் தனதறைக்கு சென்று நின்றான். 'ஏன் அவள் அழறா? நான் சும்மா விளையாட்டுக்கு தானே சீண்டினேன். ஒருவேளை என்னோட தொடுகை அவளூக்கு பிடிக்கலையோ? ' என்று மனம் குழம்பினான்.



அவனும் உண்ணாமல் உறங்கிவிட மறுநாள் விடிந்தது. எப்பொழுதும் அவளையே சுற்றி சுற்றி வந்த வேலன் இப்பொழுது அவளை புறகணிக்க ஆரம்பித்தான்.



அவளை காணாமல் அலுவலகம் சென்றான். இரவும் வேலை பளு அதிகமிருப்பதாக கூறி இரவு தாமதமாக வந்தான்.



"அம்மா எனக்கு கொஞ்ச நாளைக்கு வேலை ஜாஸ்தியா இருக்கும். அதனால ப்ளீஸ் நீங்க கொஞ்ச நாளைக்கு நிலாவை பார்த்துக்கோங்க" என்றான் வேலன்.



"சரிப்பா நான் பார்த்துக்குறேன். ஆனா, ஏனோ ரெண்டு நாளா அவ சரியாவே சாப்பிடலை. நீயும் வேலை இருக்குன்னு வீட்லயே சாப்பிட்றதில்ல. உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா?" என்றார் கஸ்தூரி.



அவரின் கேள்வியில் சற்று தடுமாறியவன் பின் சமாளிப்பதற்காக, "அதெல்லாம் ஒண்ணுமில்லைமா. வேலை கொஞ்சம் அதிகம். அவளோ தான் ஒரு ஒன் வீக் எல்லாம் சரி ஆகிடும்." என்று மெலிதாய் சிரித்தான்.



"சரி பா. அந்த புள்ளைய அப்படி பார்க்க என்னால முடியல. அதனால தான் கேட்டேன்." என்று உள்ளே சென்றுவிட்டார்.



மணி பதினொன்றை கடந்திருக்க., நிலாவின் அறையினுள் நுழைந்தவன் அவளின் அருகில் அமர்ந்தான். உறங்கும் அவளையே பார்த்து கொண்டிருந்தவன் அவளின் தலையை கோத கரம் கொண்டு சென்று பின் அவளின் அழுகை ஞாபகம் வர அப்படியே பின் வாங்கினான்.



"நீ ஏன் அப்படி பண்ண நிலா. நான் உன்னை தொடறது உனக்கு பிடிக்கலையா? ஐ ஆம் சாரி. உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன்." என்று வருத்தம் அவன் விழிகளில் நீர் தளும்ப எழுந்து நின்றான்.



அவனின் கையை பற்றி நிலா இழுக்க தடுமாறி அவளின் மேலே விழுந்தவன் ஒரு நொடி அதிர்ச்சியானான்.



என்ன நடந்தது என்று ஒரு நொடி யோசிப்பதற்குள் நிலாவின் இதழ்கள் அவனை சூழ்ந்தன.



முதலில் பின் வாங்க நினைத்தவன் நிலாவின் விழிகளில் தெரிந்த அவனுக்கான அன்பில் கரைந்து அவனும் இணைந்து கொண்டான்.



நீண்ட நிமிடங்களுக்கு பின் விடுபட்ட இருவரும் ஒருவரை ஒருவர் காணமுடியாமல் விழிகளை வேறெங்கோ சுழட்ட. "விழியா!" நிலாவின் காந்தக்குரல் அவனின் செவிகளில் சென்றடைந்தது.



ஒரு நொடி அவளின் விழிகளுள் கரைந்தது அவனின் விழிகளும்.



"என்னை மன்னிச்சிடு. அன்னைக்கு என்னால... என்னால..." என்று குரல் தெளிவில்லாமல் திணற.



"பரவால்ல விடு நிலா. நீ இப்போ எனக்கு சொன்ன பதிலே போதும். என் சந்தேகங்கள் மறைஞ்சிடுச்சு." என்று அவளின் நெற்றியோடு தன் நெற்றியை மோதினான்.



"இல்ல விழியா. எனக்கு திடிர்ன்னு உன்னுடைய ஸ்பரிசத்த தாங்க முடியலை. அதனால தான் என்னை நானே ..டி ..." என்று விழிகளை தாழ்த்திக்கொள்ள அவளின் பதிலில் ஆச்சர்யத்தில் விரிந்தது வேலனுக்கு.



'அப்போ என் நிலா என்னை ரொம்ப மிஸ் பண்றா. இதை விட சந்தோஷம் எனக்கு என்ன இருக்கு.?' என்று நினைத்தவன். அறையை சாற்றிவிட்டு அவளுடனே உறங்கினான்.



"அர்ஜுன்" என்றான் வர்மதேவன்.



"சொல்லுங்க அய்யா?" என்று அவனின் முன் கைகட்டி நின்றான் அர்ஜுன்.



'எல்லாம் என் நேரம் என் முன்னாடி நூறு பேரு கைகட்டி நின்னு வேலை பார்த்தவன்டா நான். ஆனா, இன்னைக்கு அந்த நிலா.. குட்டி பிசாசால இவன் முன்னாடி நான் கை கட்டி நிக்க வேண்டியதா போச்சு.'



"என்ன அர்ஜுன்? ஏதோ யோசனை பலமா இருக்கே?" என்றான் வர்மதேவன்.



"அதெல்லாம் ஒன்னுமில்லைங்கையா" என்றான் அர்ஜுன்.



"சரி. அர்ஜுன் இங்க பக்கத்து ஊர்ல ஒரு மில்லு விலைக்கு வருது. அதை போய் பார்த்துட்டு வரனும். நாம ரெண்டு பேரும் தான் போகணும். ரெடி ஆகிட்டு வாங்க." என்றான்.



"சரிங்கையா" என்று உள்ளே சென்று தயாராகி வந்தான் அர்ஜுன்.



இருவரும் காரில் கிளம்பினர்.



வர்மதேவன் வண்டியை ஒட்டிக்கொண்டு வர. "உனக்கு கார் ஓட்ட தெரியுமா அர்ஜுன்?"என்றான் வர்மதேவன்.



"ஹ்ம்ம் தெரியும் சார்" என்றான்.



தாங்கள் இருவர் மட்டும் தனியாக இருப்பதால் இது தான் சரியான நேரம் தான் எதற்கு வந்திருக்கிறோம் என்பதை சொல்லிவிடலாம் என்று யோசித்தவன்.



"சார். உங்கக்கிட்ட கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும். பேசலாமா?" என்றான் அர்ஜுன்.



வர்மதேவன் திரும்பி அவன் விழிகளில் பார்த்தவன் எதுவும் பேசாமல் தன் உதட்டின் மேல் விரல் வைத்து அமைதியாய் இருக்கும்படி சைகை செய்தான்.



ஒன்றும் புரியாமல் முழித்தவன், பின் ஏதோ அர்த்தமிருப்பதாக உணர்ந்து அமைதியானான்.



அந்த மில்லுக்கு சென்றவுடன் அதனை இருவரும் பார்வை இட்டபின் அதை பற்றி பேசிக்கொண்டே வந்தனர்.



ஒரு இடத்தில் நின்ற வர்மதேவன் "ஒரு நிமிஷம் அர்ஜுன். ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன் " என்று அவன் இதழ்கள் அசைந்தாலும் அவனின் விழிகள் தன்னை தொடர்ந்து பின்வருமாறு சைகை செய்துவிட்டு சென்றான்.



'எதுக்காக இப்படி கூப்பிட்றான்?' என்று முழித்தவன் 'சரி போவோம் ' என்று அங்கே சென்று கதவை தட்ட வெளியே வந்தான் வர்மதேவன்.



"இப்போ சொல்லுங்க அர்ஜுன்" என்று தன் மார்பிற்கு குறுக்கே கரங்களை கட்டிக்கொண்டு சிரித்தான்.



"எதுக்கு இப்படி சிரிக்கிறான்? ஒருவேளை உள்ளே நட்டு கழண்டு இருக்குமோ?' என்று யோசிக்க.



அவன் முன் சொடுகிட்ட வர்மதேவன்.



"ஏதோ பேசணும்னு சொல்லிட்டு இப்போ அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?" என்று கேட்டான் ஒற்றை புருவம் உயர்த்தி.



அவன் இன்னும் பேசாமல் அமைதியாய் இருக்க.



"என்ன அர்ஜுன் ? நீங்க எதுக்காக இங்க வந்துருகிங்கன்னு இப்போ என்கிட்டே சொல்லனும்னு வந்திட்டு எதுவும் பேசாம அமைதியாய இருந்தா என்ன பண்றது?" என்று சிரித்தான்.



அவனின் சொற்களில் அதிர்ச்சியாய் அவனை நோக்கினான் அர்ஜுன்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
33:

"சார்!" என்றான் அர்ஜுன் அதிர்ச்சியாய்.



"என்ன அர்ஜுன்? எனக்கு எப்படி தெரியும்னு பார்க்கிறிங்களா? சாரி! அர்ஜுன் இல்ல... மாமா ரைட்" என்று மென்மையாய் சிரித்தான் வர்மதேவன்.



திறந்த வாயை மூடாமல் அவனையே நம்பமுடியாமல் பார்த்தாலும் உள்ளுக்குள் உதறல் எடுத்துவிட்டது அர்ஜுனுக்கு.



'ஐயையோ! மாட்டிக்கிட்டோமா? இந்த நிலா பேச்சை கேட்டு இங்க வந்தது எவ்ளோ பெரிய தப்பா போச்சு. நானே எனக்கு சங்கு ஊதிக்க இங்க வந்துருகேனே?? கடவுளே காப்பாத்துங்க' என்று மனதினுள் எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டான்.



"என்ன மாமா பேச்சே காணோம்? நீங்க என் சின்ன அத்தையோட பையன் கரெக்டா?" என்று கன்னத்தில் குழிவிழ சிரித்தான்.



"உன...க்...கு எப்...ப..டி தெ..ரி..யும்?" என்றான் உள்ளுக்குள் பயத்தை வெளியே காட்டாமல்.



"எனக்கு எல்லாமே தெரியும். உங்களை பத்தி எங்க அப்பா இன்னும் கண்டுபிடிக்கலைன்னும் தெரியும்." என்று சிரித்தான்.



"எப்பா எனக்கு தலை சுத்துது. மொதல்ல நீ நல்லவனா இல்லை கெட்டவனா அதை சொல்லு? நல்லவனா இருந்தா இங்க இருப்பேன் இல்லனா இந்த ஊரை விட்டே போய்டுவேன்" என்றான் என்ன பேசுகின்றோம் என்ற நினைப்பே இல்லாமல்.



அவனின் இந்த பேச்சை கேட்ட வர்மதேவன் சிரித்தான்.



"என்ன மாமா இவ்ளோ பெருசா வளர்ந்துருக்கிங்க? ஆனா, பேச்சு மட்டும் சின்ன குழந்தை மாதிரி இருக்கு." என்று அர்ஜுனை கிண்டல் செய்தான்.



'இரு... இரு... இப்போ இவன் உண்மையாவே குழந்தை மாதிரி பேசுறேன்னு சொல்றானா இல்லை கிண்டல் செய்றானா? என்னடா கடவுளே இது என் நிலைமை இப்படி ஆகிபோச்சே... வந்த இடத்துல கூட மொக்கை வாங்காம விடமாட்டியாடா அர்ஜுன் நீ? எல்லா க்ரெடிட்டும் நிலாவுக்கே!' என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டான்.



"பயப்படாதிங்க. நான் நல்லவன் தான். எனக்கு சொத்தை விட சொந்தங்கள் தான் முக்கியம். எனக்கு நீங்க, பெரிய மாமா, நிலா அக்கா, அப்புறம் பெரிய அத்தை எல்லார்கூடயும் இருக்கனும்னு ஆசை. என்ன பண்றது எனக்கு வந்த அப்பா தான் சரி இல்லையே?" என்றான் வேதனை சிரிப்புடன்.



'டே அர்ஜுன்! எதுக்கும் இவனை முழுசா நம்பிடாத... ஏன்னா இவன் அப்பன் ரொம்ப மோசமானவன். சோ, இவனும் அவனுக்கு தப்பாம தான் இருப்பான். ஒருவேளை நம்மகிட்ட இருந்து எல்லா விசயமும் கறந்துக்கிட்டு அப்புறம் நம்மளை போட்டு தள்ளலாம்னு நினைச்சிருப்பானோ?' என்று அவனை ஓரவிழியால் சந்தேகத்தோடு பார்த்தான்.



"எனக்கு புரியுது மாமா. இவங்கப்பா ரொம்ப மோசமானவரு, அப்புறம் இவன் மட்டும் எப்படி நல்லவனா இருக்க முடியும்னு நினைக்கிறிங்க?? கரெக்டா?? என்ன பண்றது எங்க அம்மா ரொம்ப நல்லவங்க. அவங்களோட வளர்ப்பு நான். என்னைக்கும் வழி தவற மாட்டேன்." என்றான் விழிகளில் ஒளி மின்ன.



"அட என்னப்பா நீ? மனசுல கூட எதையும் நினைக்க விடமாட்டேங்குறியே?" என்றான் அர்ஜுன் அப்பாவியாய்.



அவன் அருகில் வந்தவன் அர்ஜுனை அணைத்துக்கொண்டு "யு ஆர் சோ கியூட் மாமா. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. நான் மட்டும் பொண்ணா இருந்தா உங்களை தான் கல்யாணம் பண்ணிப்பேன்." என்று கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்தான்.



'ஹ்ம்ம் என்ன இவன் இப்படி பேசுறான்? ஒருவேளை ..' என்று அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு முறை பார்த்தான் அர்ஜுன்.



"ஹலோ! நீங்க நினைக்கிற மாதிரில்லாம் நான் இல்லை. எனக்கும் ஆள் இருக்கு. உங்களுக்கு தெரிஞ்சவங்க தான். சீக்கிரமே கல்யாணம் பண்ணிப்பேன். அப்புறம் பாருங்க எத்தனை புள்ளைங்க பெத்துக்கொடுக்கிறேன்னு" என்று கண் அடித்தான்.



'எப்பா இவன் ரொம்ப டேஞ்சரான ஆளா இருக்கான். மனசுல என்ன நினைச்சாலும் கண்டுபிடிசிட்றான்.' என்று நினைக்க.



"அதான் நீங்க என்ன நினைக்கிறிங்கன்னு உங்க நெத்திலையே தெரியுதே" என்று சத்தமாக சிரித்தான்.



'ஹ்ம்ம் இனி நோ மைன்ட் வாய்ஸ்' என்று அமைதியான அர்ஜுன்.



"ஆமா நான் வண்டில வரும்போது உன்கிட்ட பேசணும்னு சொன்னேன் அப்போ எதுவும் பேச வேணாம்னு சொன்ன? இங்க வந்தப்புறம் ரெஸ்ட்ரூம் போறேன்னு சொல்லிட்டு என்னையும் உன்கூட வரசொல்லி சைகை பண்ண? எதுக்கு அப்படி பண்ண?" என்றான்.



"அதுவா மாமா! நீங்க அப்போ பேசிருந்தீங்கன்னா அப்பயே எங்கப்பா ஆளுங்க உங்களை கொன்னுருப்பாங்க" என்றான் மெதுவாய்.



"என்ன சொல்ற?" என்றான் அர்ஜுன் விழிகளில் கோபம் எட்டி பார்க்க.



"ஹ்ம்ம்.. என் கழுத்து செயன்ல ஸ்பைகேமரா இருக்கு" என்றான் அடுத்த குண்டாய்.



"உண்மையாவா? எதுக்கு அதை போட்ருக்க?" என்றான் நம்பாத பார்வையில்.



"நான் எங்க போட்ருக்கேன்? எங்கப்பா என்னை நம்பாம போட்ருக்கார்." என்றான் வர்மதேவன் வேதனையாய்.



"உங்கப்பாவா? அவர் இறந்துட்டார்ல?" என்றான் ஒன்றும் தெரியாதது போல்.



"எங்கப்பாவா? அவரை பத்தி தீக்க்ஷிலா எல்லாம் சொல்லிருப்பாளே?" என்றான் அடுத்த இடியாய்.



"தீக்க்ஷிலாவா? அவ எதுக்கு சொல்லணும்?" என்றான் அர்ஜுன் சற்று தடுமாற்றமாய்.



"ஏன்னா அவதானே எங்க அக்காவோட பிரெண்ட். இங்க நடக்கறதை எல்லாம் ஒன்னுவிடாம அக்கா கிட்ட சொல்றது அவதான்னு எனக்கு மட்டும் தெரியும்" என்று சிரித்தான்.



"என்னடா இவன் நிலாவோட தம்பின்றதை கொஞ்சம் கொஞ்சமா நிருபிச்சிட்டே இருக்கானே?" என்று அர்ஜுன் நினைக்க.



"இல்ல மாமா! அக்கா அளவுக்குல்லாம் இல்லை. அவங்க ரொம்ப ப்ரில்லியன்ட்" என்றான் வர்மதேவன்.



"உண்மையை சொல்லு. நான் மனசுல நினைக்கிறது உனக்கு எப்படி தெரியும்?" என்றான் அர்ஜுன் சீரியசாக.



"ஐயோ மாமா! இந்த தடவை நீங்க வாய் விட்டு தான் சொன்னிங்க" என்று விழுந்து விழுந்து சிரித்தான்.



"என்னடா இது காலக்கொடுமை? இவன் கூட என்னை கிண்டல் செய்றானே??" என்று வாய்விட்டு சிறு குழந்தை போல் காலை தரையில் குத்திபடி புலம்பினான்.



"மாமா.! உங்களுக்கு ஒன்னு தெரியுமா? எனக்கு நிலாக்காவை பார்க்கணும்னு ரொம்ப ஆசை. அவங்க கூட நிறைய பேசணும் சிரிக்கணும் அவங்க கையால சமைச்சு சாப்பிடனும்னு... எனக்கு அந்த கொடுப்பினை இல்ல போல.. கூட பிறந்தவங்களும் இல்லை. அக்கான்னு சொல்றவங்களும் கூட இல்லை. எல்லாம் போன ஜென்மத்துல நான் செஞ்ச பாவம் போல?" என்றான் மிகுந்த சோகத்தோடு.



"விட்ரா மச்சான். உனக்கு என்ன நிலா கையால சமைச்சதை சாப்பிடனும் அவ்ளோ தானே? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். உங்கப்பா பண்ண அட்டகாசத்துல இருந்து நிலா இப்போ தான் உயிர் பொழைச்சு வந்துருக்கா? இப்போ தான் கொஞ்சம் நடக்க ஆரம்பிச்சிருக்கா... சீக்கிரம் ஏற்பாடு பண்றேன். ஆமா, உங்கப்பா இவ்ளோ மோசமா இருக்காரே, நீ ஏதும் கேக்கமாட்டியா?" என்றான் அர்ஜுன்.



"ஏன் கேக்கலை? தினமும் வீட்ல சண்டைதான். நான் ஏதாவது கேட்டா அம்மாக்கு தான் தினமும் அடிவிழும். நீ தான் பிள்ளைய கெடுத்து வச்சிருக்கன்னு... எங்கயாவது போய்டலாம்ன்னா அம்மா வரமாட்டாங்க இன்னொன்னு எங்கப்பாக்கு ஏகப்பட்ட இன்ப்லூயென்ஸ் இருக்கு. எங்க அம்மா உயிருக்கு ஏதாவது ஆகிடுமோன்னு தான் பல்லை கடிச்சிட்டு இந்த நரகத்துல இருக்கேன்." என்றான் வர்மதேவன்.



"சரி. எங்களை பத்தியும் தீக்க்ஷிலா பத்தியும் உனக்கு எப்படி தெரியும்?" என்றான் அர்ஜுன்.



"சொல்ல மாட்டேன்.. அது சீக்ரெட்" என்றான் வர்மதேவன்.



"ப்ளீஸ்.. ப்ளீஸ்... சொல்லிடு இல்லை என் மண்டை இதை பத்தி யோசிச்சே பதில் கிடைக்காம வெடிச்சிரும்" என்றான் அர்ஜுன் குழந்தையாய் கெஞ்சியபடி.



அவனின் செயலில் சிரித்தவன் தன் மொபைல் அடிக்கவே எடுத்து பார்த்தவுடன் முகம் இருண்டு போனது.



"யார்?" என்றான் அர்ஜுன்.



அமைதியாய் இருக்கும்படி சைகை செய்துவிட்டு போனை அட்டென் செய்தான்.



"ஹலோ!" என்றான் குரலில் பதட்டம் காட்டாமல்.



"ஹ்ம்ம் மில்ல பார்த்துட்டேன். வண்டில வந்துட்டு இருக்கேன்." என்றான் குரலில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல்.



'என்கிட்ட பேசும்போது இந்த பையன் எவ்ளோ ஜாலியா பேசிட்டு இருந்தான். இப்போ அப்டியே ஆப்போசிட்டா இருக்கானே? யாரா இருக்கும்?' என்று அர்ஜுன் யோசித்து கொண்டிருக்க.



"ஹ்ம்ம் ரெஸ்ட் ரூம் போனப்ப மறந்துட்டேன். இப்போ போட்டுக்கிறேன்" என்றான்.



"சரி. இன்னும் அரைமணி நேரத்துல இருப்பேன்" என்றான் வர்மதேவன் அர்ஜுனை பார்த்தபடி.



"என்கூட புதுசா வந்த மேனேஜர் அர்ஜுன் இருக்கான்" என்றான் எங்கோ பார்த்தபடி.



"அது.. அவனுக்கு மில்லு தெரியாதுன்னு போகும்போது நான் ஓட்டிட்டு போனேன். இப்போ அவன் தான் ஓட்டிட்டு வரான்." என்றான் வர்மதேவன்.



'அடப்பாவி இவ்ளோ நேரம் என்னை மாமா மாமான்னு வாய் நிறைய கூப்பிட்டிட்டு இப்போ நொடிக்கொரு தடவை அவன் அவன்றானே??' என்று மனதினுள் அர்ஜுன் புலம்ப.



"ஹ்ம்ம் வரேன்.. சும்மா தொன தொணன்னு வைங்க போனை.." என்று கட் செய்தவன்.



"சாரி மாமா! அப்பா தான். நான் செயினை கழட்டி இவ்ளோ நேரமாச்சுல்ல அதான் என்னன்னு விசாரிக்கிறாரு?" என்றான் பாவமாய்.



"அவருக்கு எப்படி தெரியும்?" என்றான் அர்ஜுன்.



"அவர் இருந்த இடத்துல இருந்தே இந்த கேமரா மூலம் என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு பார்த்துகிட்டே இருக்காரே" என்றான் வேதனையாய்.



"என்ன?' என்றான் அர்ஜுன் நம்பாமல்.



"ஆமா மாமா! நான் யார்கூட பேசுறேன் என்ன பண்றேன்னு எல்லாத்தையும் வாட்ச் பண்றது தான் எனக்கு பிடிக்கில்லை. நானும் உணர்வுள்ள ஒரு மனுஷன் அது புரியமட்டேங்குது எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்குன்னு புரிஞ்சிக்காம என்னை போட்டு டார்ச்சர் பண்றார்" என்றான்.



"ஐயையோ?" என்றான் அர்ஜுன்.



"ஹ்ம்ம் குளிக்கும் போது, ரெஸ்ட்ரூம் போகும்போது, தூங்கும் போது தான் இதை கழட்டி வைக்கணும். இல்லைனா எங்கம்மாக்கு தான் அங்க தண்டனை" என்றான் வேதனையாய்.



"இதுக்கு அந்த நரகமே மேல் போல இருக்கே?" என்றான் அர்ஜுன்.



"அதுக்காக? நான் இன்னும் என் வாழ்க்கையே ஆரம்பிக்கலை அதுக்குள்ள சாவ சொல்றிங்களா? அதான் நீங்க வந்துட்டிங்கல்ல சீக்கிரம் எங்க அக்காகிட்ட சொல்லி எனக்கு இங்க இருந்து விடுதலை வாங்கி கொடுக்க சொல்லுங்க" என்றான் வர்மதேவன்.



"அது சரி. எங்களுக்கே நீ தான் உதவி செய்யணும்.. நீ வந்து எங்களை ஹெல்ப் பண்ண சொல்ற?" என்றான் அர்ஜுன்.



"அதெல்லாம் ஹெல்ப் பண்றேன். இப்போ நான் செய்னை போடலை எங்கப்பா ஆளுங்களை இங்க அனுப்பிருவாரு. வீட்டுக்கு போனா நாம் பேச முடியாது. நான் யாருக்கும் தெரியாம என் பர்சனல் நம்பர் தரேன். நைட் தூங்கறதுக்கு முன்னாடி நீங்க அதுல என்கிட்ட மெசேஜ்ல பேசலாம்." என்று தன் நம்பரை கொடுத்தான்.



"சரி. நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லவே இல்லை" என்றான் அர்ஜுன்.



"இப்போ டைம் இல்ல. நாம் உடனே கிளம்பனும். நைட் பேசலாம். அப்புறம் இப்போ நான் செய்ன் போட்டப்புறம் முதல்ல நாம எப்படி இருந்தோமோ அப்படி தான் பேசனும்" என்று தன் பாக்கெட்டில் இருந்த செயினில் கேமேராவை ஆன் செய்து மாட்டிகொண்டான்.



அங்கிருந்து இருவரும் கிளம்பினர்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
34:

வேலன் ஒரு முக்கிய வேலை இருப்பதாகவும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாவும் கூறி சென்றான்.

அத்தையும் அலுவலகம் போக மறுத்ததால் நிலா வற்புறுத்தி அனுப்பி வைத்திருந்தாள்.

அவள் மட்டும் தனியே இருப்பதால் எண்ணங்கள் பலவும் உருண்டோட.

தனி ஆளாய் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்யும் தான் இன்று தன் வேலைகளுக்கே அடுத்தவர்கள் உதவியை எதிர்பார்ப்பது மிகவும் வலித்தது.

'ஏன் தன்னால் செய்ய முடியாதா என்ன?என்னால் கண்டிப்பா முடியும்.' என்று கட்டிலில் இருந்து இறங்கி மெதுவாய் இரண்டடி எடுத்து வைத்தவள் முடியாமல் விழ போக அப்பொழுது தான் அவளை காண்பதற்காக வந்த வேலன் லாவகமாக தாங்கி பிடித்தான்.

"என்னடா?யாரையாவது கூப்பிட்டிருக்கலாம்ல? நான் தான் வந்துட்றேன்னு சொன்னேன்ல?" என்றான் அவளை மறுபடியும் அமர வைத்தபடி.

“ஏன் என்னால நடக்க முடியாதா என்ன?இன்னும் எத்தனை நாளைக்கு தான் அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்கிறது?" என்றாள் வெடுக்கென்று.

அவளை நிமிர்ந்து ஒருமுறை பார்த்தவன் அவளின் மனவோட்டங்களை சரியாய் கணித்தான்.

"அப்படி இல்லடா. உன்னால நிச்சயமா முடியும் முடியாதுன்னு யார் சொன்னது? ஆனா, அதுக்கு இன்னும் கொஞ்சநாள் ஆகும். அதுவரைக்கும் உன் புருஷனுக்கும் உனக்கு ஹெல்ப் பண்றதுக்கு கொஞ்சம் அனுமதிக்கலாம்ல?" என்றான் பாவமாய்.

நிலா எதுவும் பேசாமல் இருக்கவே.

"என்னம்மா ஒன்னும் சொல்ல மாட்டேங்கற?இந்த மாமா மேல கொஞ்சம் கருணை காட்டக்கூடாதா?" என்றான் உதட்டை சுழித்து சிரித்தபடி.

'ப்பா! எவ்ளோ அழகா இருக்கார்ல? அப்படியே அந்த கிழுத்தட்டை இழுத்து வச்சு ஒரு கடி கடிச்ச எப்படி இருக்கும்?' என்றது மனம்.

'ச்சே! என்ன நீ இப்படிலாம் பேசிட்டு இருக்க?' என்றது மூளை.

'ஹ்ம்ம் உனக்கு என்ன?என் புருஷன் நான் என்ன வேணாலும் பேசுவேன்.' என்றது மனம்.

'ஹ்ம்ம்... இங்க யாரு பொண்டாட்டின்னே தெரியலை?நீ தானே சிரிக்கணும் இங்க எல்லாமே தலை கீழா நடக்குது. கடவுளே' என்றது மூளை.

'அடச்சே வாய மூடு. நீ வேற இருக்கிற நிலைமை தெரியாம என் உயிரை வாங்கிட்டு.' என்றது மனம்.

"என்னை சைட் அடிச்சது போதும். சத்தியமா நீ தான் பொண்டாட்டி நான் தான் புருஷன். உதட்டை சுழிச்சி பொண்ணுங்க தான் சிரிக்கணும்னு ஏதாவது சட்டம் எழுதி வச்சிருக்காங்களா என்ன?" என்று மீண்டும் சிரித்தான்.

'ஹ்ம்ம்... என்னை ரொம்ப சோதிக்கிறான்.' என்று நினைத்தபடி.

"என்னால முடியும் நானே நடப்பேன்" என்று கூறியபடி நான்கடி வேகமாக எடுத்துவைக்க மீண்டும் தவறி விழப்போனவளின் பின்னிருந்து வெற்றிடையில் இடக்கரம் கொண்டு தாங்கி பிடித்தான்.

தன் மேனியில் ஏற்பட்ட மின்சார தாக்குதலில் ஒரு நிமிடம் நிலா நிலைகுலைய வேகமாக விழிகளை மூடி கொண்டாள்.

அவளின் நிலை புரிந்து 'எப்பா! ஏற்கனவே பட்டது போதும். வேலா கொஞ்சம் அடக்கி வாசி. போன முறை செய்தமாதிரி அழுது ஒப்பாரி வச்சிர போறா அப்புறம் நானும் சோகமா சுத்திகிட்டு இருக்கனும். எதுக்கு வம்பு? நாம கொஞ்சம் அமைதியாயவே இருப்போம்' என்று எண்ணியவன் அவளை மெல்ல கட்டிலில் அமரவைத்துவிட்டு.

"நிலா! எனக்கு உன்னோட மனநிலை நல்லா புரியுது. இன்னும் கொஞ்ச நாள்ல சரி ஆகிடும். நாளைலர்ந்து பிசியோதெரபிஸ்ட் வருவாங்க உனக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க." என்றான் வேலன்.

தன் கை கடிகாரத்தை பார்க்க அது மணி ஐந்து என்று காட்டிட, "சரி வா. எவ்ளோ நேரம் தான் இங்கேயே இருப்ப. வெளிய கார்டன்க்கு போலாம்." என்றான்.

"சரி" என்று எழுந்து அவனின் கரம் பிடித்தபடி சிறிது தூரம் நடந்த பின் முடியாமல் வலியில் முகம் சுனங்க, அதை கண்டவன் தன் இரு கரங்களால் அவளை அள்ளி கொண்டு போனான்.

"ஐயோ மாமா! என்னை இறக்கி விடுங்க. நானே நடப்பேன்." என்றாள் வீராப்பாய்.

"நீ நடப்ப. நான் இல்லன்னு சொல்லலைடி பொண்டாட்டி. ஆனா, இப்போ நடக்க முடியாது நடந்தது போதும். கொஞ்சம் அமைதியா வா." என்று வெளியே தோட்டத்திற்கு தூக்கி வந்து அங்கிருந்த பெஞ்சில் அமரவைத்தான்.

அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து அவனுடன் பேசிக்கொண்டிருந்தவள் அவனின் தோளிலே சாய்ந்தபடி உறங்கியும் போனாள்.

அவளின் இந்த நெருக்கம் வேலனுக்கு பிடித்ததால் வெகு நேரம் அசையாமல் இருந்தான்.

தன் முகத்திற்கு கிழே பஞ்சு போல் தெரிய கண்விழித்த நிலா 'நாம எப்படி இங்க வந்தோம்? வெளிய தோட்டத்துல இல்ல தூங்கிட்டேன். அப்போ மாமா என்னை தூக்கிட்டு வந்து கிடத்தினாறா?' என்று எண்ணம் அவளை ஆட்கொண்டது.

"எழுந்துட்டியா நிலா? "என்று சிரித்தபடி வந்தான் வேலன்.

"நான் இங்க எப்படி வந்தேன்?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி முறைத்தபடி கேட்டாள் நிலா.

'இப்படில்லாம் செஞ்சா மாமா பாவம்டி நிலா' என்று நினைத்தபடி.

"நீ அசந்து தூங்கிட்ட. வெளிய பனி நல்லா பெய்யுது. அதான் உன்னை எழுப்பாம நானே தூக்கிட்டு வந்து படுக்க வச்சேன்" என்றான் பொறுமையாய் அவளை பார்த்தபடி.

"சரி" என்ற ஒற்றை சொல்லோடு முடித்து கொண்டவள் மணியை பார்க்க அது ஒன்பது என்று காட்டியது.

"என்னது மணி ஒன்பதா?நான் இவ்ளோ நேரமாவா தூங்கிட்டு இருந்திருக்கேன்?" என்றாள் அதிர்ச்சியாக.

"ஒய்! ஷாக்க குறை.தூங்கி ரெஸ்ட் எடுத்தா உன் உடம்புக்கு நல்லது." என்று சிரித்துவிட்டு.

"சரி. எழுந்து உட்கார் நிலா. சாப்பிடலாம்" என்று தான் எடுத்து வந்த சாப்பாடு ட்ரேயை அவள்புறம் தள்ளினான்.

எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தவள் பின் ஒரு முறை அவனை பார்த்துவிட்டு "மாமா நீங்க சாப்பிட்டிங்களா?' என்றாள்.

"இன்னும் இல்லடா. நீ முதல்ல சாப்பிடு மாத்திரை போடணும் இல்ல.?" என்றான் மெதுவாய் இதமான பார்வையில்.

"இல்ல. வாங்க ரெண்டு பெரும் சேர்ந்தே சாப்பிடுவோம்." என்றாள்.

"இல்ல நிலா. நீ சாப்பிடு" வேலன்.

"யோவ்! ரொம்ப தான் பிக்கு பண்ணிக்காத. வா வந்து சாப்பிடு" நிலா அதட்ட'சரியான வாயாடி' என்று நினைத்தபடி அவளுடன் சேர்ந்து ஒரே தட்டில் சாப்பிட ஆரம்பித்தான்.

சாப்பிட்டு முடித்து சிறிதுநேரம் பேசி முடித்தபின்னர் இருவரும் உறங்க சென்றனர்.

தூரத்தில் தள்ளி படுத்திருந்தவளை இழுத்து தன்னோடு அணைத்துகொண்டான் வேலன்.

மேனியில் சில நடுக்கங்கள் இருந்தாலும் அவனின் அருகாமை அவளுக்கும் பிடித்திருந்ததால் எதுவும் கூறாமல் ஒளிந்து கொண்டாள் அவனின் கைச்சிறையினில்.

ஒருவரை பற்றி மற்றொருவர் நினைத்தபடி உறக்கத்திற்கு சென்றனர்.

கையில் காப்பி கப்புடன் வந்தவன், நிலா உறங்கி கொண்டிருப்படதை கண்டு அவளை எழுப்ப மனம் இல்லாமல் அவளின் அருகேயே அமர்ந்து சிறுகுழந்தை போல் உறங்குபவளை விழிமூடாது ரசித்து கொண்டிருந்தான் வேலன்.

விழிகளை சுருக்கி சுருக்கி துடித்த விழிகளை திறந்தவள் பதறி அடித்து கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

"என்ன மாமா இங்க இருக்கீங்க. ஆபிஸ் போகலையா?"என்று கேட்டாள்.

"குட் மோர்னிங். இந்தா டி குடி" என்று நீட்டினான்.

"நீங்க எதுக்கு மாமா இதெல்லாம் எடுத்துட்டு வரிங்க?சசி அம்மாகிட்ட கொடுத்தனுப்பி இருக்கலாம்ல?" என்றாள் லேசான வருத்ததோடு.

"என் பொண்டாட்டிக்கு நான் எடுத்துட்டு வரேன். யாரு என்னை என்ன சொல்றது? அதுவுமில்லாம வீட்ல யாரும் இல்லை." என்றான் வேலன்.

"என்ன யாரும் இல்லையா?ஏன்? எல்லாரும் எங்க போனாங்க?" என்றாள் பதட்டமாய்.

"இரு இரு... இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுற?அம்மா அப்பா சொந்தத்துல ஒரு கல்யாணம் கண்டிப்பா போயே ஆகணும்னு போயிருக்காங்க நாளைக்கு சாயந்திரம் தான் வருவாங்க. அதுவரைக்கும் உன்னை விட்டு ஒரு இஞ்ச்கூட நகரகூடாதுன்னு உங்க அத்தையோட உத்தரவு" என்றான் கண்களில் குறும்பு மின்ன.

"சசிம்மா எங்க?அவங்க எங்க போனாங்க?” என்றாள்.

"அவங்க பொண்ணுக்கு ஏதோ உடல் நிலை சரி இல்லைன்னு போன் வந்துச்சு. அதான் அவங்க பொண்ணு வீட்டுக்கு போயிருக்காங்க. இன்னும் ரெண்டு நாள் கழிச்சி தான் வருவேன்னு சொல்லிட்டு போயிருக்காங்க." என்றான்.

"ஓஹ..”என்றாள் சுரத்தே இல்லாத குரலில்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
35:

‘யாருமே இல்லையா? அப்போ எனக்கு யார் கூட இருந்து என்னுடைய வேலைகளை கவனித்து கொள்வது?’ என்று யோசித்து கொண்டிருந்தாள்.



“ரொம்ப யோசிக்காதிடி பொண்டாட்டி. இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையும் கரைஞ்சு போய்ற போகுது.” என்று சிரித்தான் வேலன்.



அவன் சிரிப்பதை ரசித்தவள். “இவன் வேற... காலைலேயே என்னை பாடா படுத்த ஆரம்பிச்சிட்டான். இன்னைக்கும் நாளைக்கும் நீ இவன்கிட்ட மாட்டிகிட்டு என்ன பாடு படப்போறியோ நிலா. பாவம்டி நீ.’ என்று தனக்கு தானே சொல்லிக்கொள்ள.



“டி குடிச்சிட்டு எழுந்துரு நிலா. நீ குளிக்க வெந்நீர் ரெடியா இருக்கு. கூட்டிட்டு போறேன்” என்றான் மெத்தைமேல் இருந்த தலையணையை சரி செய்தபடி.



“என்னது இரு.. நீங்க... கூட்டிட்டு... போறிங்களா .. எங்க?” என்றாள் மெதுவாக மூச்சை உள்ளிழுத்த படி.



“இது என்ன கேள்வி சின்ன புள்ள மாதிரி? குளிக்க தான்.” என்றான் அவளின் அதிர்வலைகளின் அழகை ரசித்தபடி.



‘ஷாக்காகும் போது கூட என் பொண்டாட்டி ரொம்ப அழகா தான் இருக்கா’ என்று சிரித்து கொண்டவன்.



“வீட்ல லேடிஸ் யாரும் இல்லை. பின்ன நான் தானே உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்” என்றான் வேலைகளை தொடர்ந்தபடி.



“இல்ல.. இல்ல.... நீங்க பிரதியை கூப்பிடுங்க.“ என்றாள்.



“ஹலோ! நீ என் பொண்டாட்டி. நான் தான் உனக்கு எல்லாம் செய்யனும். மத்தவங்க இல்லை. மீன்வைல் பிரதி இங்க இல்ல.. ஒரு முக்கியமான வேலை இருக்குன்னு அவ பிரெண்டை பார்க்க போயிருக்கா. அங்க தங்கிடுவேன்னு சொல்லிருக்கா போதுமா. பக்கத்துக்கு வீட்ல இருக்க யாரையாவது கூப்பிடனுமா.? கம் ஆன் கெட் அப்.” என்று அவள் அருகில் வர.



“இல்ல... நீங்க என்னை வாஷ் ரூம் கொண்டு போய் விடுங்க. நான் குளிச்சிட்டு வந்துடறேன்” என்றாள் விட்டால் வெளியே வந்து விழுந்துவிடும் இதய துடிப்போடு.



சத்தமாக சிரித்தவன். “நோ வே! நான் வெளிய இருக்கேன். டூ மினிட்ஸ் டைம் எடுத்துக்கோ. கம்பர்டப்லா ஒரு இந்நர் போட்டுக்கோ. ஐ ஆம் கோயங் டு ஹெல்ப் யு” என்று கதவை சாத்திவிட்டு வெளியே சென்றான்.



“ஹ்ம்ம்..” என்று சிணுங்கி கொண்டு தன் வலக்காலை ஓங்கி தரையில் மிதிக்க “ஆஹா ..” என்று வலியில் அவளே துடித்தாள்.



‘ச்சே அடிபட்ட காலுன்றதை மறந்துட்டேன். ஹ்ம்ம் இவன் கூட இருந்தா நான் எல்லாத்தையும் மறந்துடறேன். இது ஒரு விஷயமா. ஹ்ம்ம்... முடியவே முடியாது. நான் எப்படி .. இவன் எப்படி என்னை... கடவுளே ஏன் என்னை இப்படி சிக்கல்ல மாட்டிவிட்டுட்ட?’ என்று கடவுளை திட்டி கொண்டு அவன் கூறியதை செய்து கொண்டிருந்தாள்.



“முடிஞ்சிதா நிலா. ரெண்டு நிமிஷம் முடிஞ்சி போச்சு. நான் உள்ள வர போறேன்” என்றான்.



நிலாவிடம் இருந்து பதில் ஏதும் வராததால் உள்ளே வந்தவன் ஒரு நொடி கால் முன்னே எடுத்துவைக்க தடுமாறி அங்கேயே நின்றான்.



அவளை கண்டவனிடம் பெரும் மூச்சி வந்தது விழிகளை இறுக மூடி கொண்டு ‘வேலா! அவளுக்கு இப்போ உடம்பு முடியாததுனால நீ ஹெல்ப் பண்ண போற. அவள் பீல் பண்ற மாதிரி எதையும் செஞ்சு தொலைச்சிடாத’ என்று தனக்குள் சொல்லி கொண்டாலும்.



அவளை கண்டவன் மீண்டும் ‘நான் எப்படி அவளை இப்படி பார்த்துட்டு சும்மா இருக்க முடியும். இன்னைக்கு என்னவோ நடக்க போகுது நான் நல்லா அவள்கிட்ட வாங்கி கட்டிக்க போறேன்’ என்று எதிரில் இருந்தவளை மேலிருந்து கீழ்வரை ஒரு முறை கண்டான்.



தலை முழுவதும் விரித்துவிட்டு தன் நெஞ்சு வரை பாவாடையை இறுக்கி கட்டி இருந்தாள் மேலே ஒரு டவலும் போர்த்தி இருந்தாள்.



‘பேசாம இப்படியே போயிருவோமா? டேய் வேலா உனக்கு எதுக்கு டா இந்த விஷப்பரிச்சை எல்லாம்?? உனக்கு பார்க்கிறதுக்கு எவ்ளோ கம்பனி வேலை இருக்கு?? அதை விட்டுட்டு ஏன்டா இப்படி வந்து தானா மாட்டிகிட்ட?’ என்று உள்ளுக்குள் புலம்பியபடி அவளை நெருங்கினான்.



இறுதியாக ஒரு மூச்சை இழுத்து விட்டவன் ‘இவள் என் மனைவி. என்னுடைய உதவி இவளுக்கு தேவை. என்னை தவிர அவளை அவளோட அம்மா இடத்துலர்ந்து யாரும் பார்த்துக்க முடியாது. உன்னால முடியும் வேலா..’ என்று சொல்லிக்கொண்டு அவளை இருக்கரங்களால் ஏந்தி குளியலறைக்கு கொண்டு சென்று அங்கிருந்த சின்ன மனையில் அமர வைத்தான்.



வெந்நீர், சீக்காய், சோப் என்று எல்லாவற்றையும் அவளருகில் வைத்துவிட்டு அவளின் தலையை அலச தொடங்கினான்.



முதலில் அவனின் அருகாமையில் நிலா நெளிந்தாலும் பின் அவனின் செயலில் தன் தாயின் பார்வை தெரிய அமைதியாக ஏற்றுகொண்டாள்.



தலைக்கு தேய்த்து விட்டவன். “நிலா நீ குளிச்சிட்டு கூப்பிடு. நான் நம்ம ரூம்ல தான் இருக்கேன். உனக்கு எதாவது எடுத்து தரணுமா?” என்றான்.



“இல்ல... ஒன்னும் வேண்டாம். நீங்க போங்க” என்று கூறினாள் நிலா.

வெளியே வந்தவனின் மூச்சு இப்பொழுது தான் சீராக வந்தது.



தன் அலுவலக வேலைகளை மடிகணினியில் பார்த்து கொண்டிருக்க.

நிலா குளித்துமுடித்திருந்தாள்.



“மாமா!” என்று குரல் வர “இதோ வரேன் நிலா” என்று திரும்பினான் மூச்சும் நின்று விடும் என்ற அளவிற்கு துடிக்க ஆரம்பித்தது வேலனுக்கு.



தலையில் ஈரம் சொட்ட சொட்ட மீண்டும் அதே நிலையில் நின்றாள்.



அருகே சென்று மெதுவாக தூக்கி வர, இதயம் பலமடங்கு எகிற தொடங்கியது.

அவள் கூந்தலின் வாசமும் அவளின் குளித்திருந்த மேனியில் இருந்து வரும் நறுமணம் ஏதோ செய்ய, மெத்தையில் அவளை அமர வைத்துவிட்டு “நிலா அங்க இருக்கு டிரஸ். அதை போட்டுக்கோ. நான் அதுவரைக்கும் வெளிய வெயிட் பண்றேன்.” என்று செல்ல எத்தனிதவனின் கரம் பிடித்து நிறுத்தினாள்.



“மாமா” என்றாள் .



“என்ன நிலா? எதாவது வேணுமா?” என்றான் அவளை பார்க்காமல்.



“இங்க என்னை பாருங்க.” என்றாள்.



திரும்பியவன் அவள் விழிகளை மட்டும் பார்க்க “என்ன ?” என்றது அதற்கான அர்த்தம்.



“என்னால உங்களுக்கு ரொம்ப தொந்தரவு இல்ல. ஒரு மனைவியா என்னோட வேலையை செய்யமுடியலை” என்று கண்ணீர் பெருக கூற பதறி அவளருகில் அமர்ந்தவன்.



‘என்ன நிலா? இப்படில்லாம் பேசிகிட்டு சின்ன குழந்தை மாதிரி அழுதிட்டு இருக்க? முதல்ல அழறதை நிறுத்து” என்று அவளின் கண்ணீரை துடைத்தான்.



அவனின் கரங்களை தன் கரங்களுக்குள் பிடித்து கொண்டு முத்தம் தர இப்பொழுது அவனுக்கு உணர்வுகளை கட்டுபடுத்த மிகவும் சிரமமானது.



“நிலா கையை விடு. முதல்ல ட்ரெஸ் மாத்து. நான் வெளிய இருக்கேன்” என்றான் கையை விடுவிக்க முயன்றான்.



“மாமா. நானும் உங்களை ரொம்ப விரும்பறேன். இப்பயே என்னை உங்களோட மனைவியா ஏத்துகோங்க” என்றாள் அவன் விழிகளை பார்த்து.



அவளின் தடுமாற்றங்களையும் எண்ணங்களையும் கண்டு மெல்ல சிரித்தவன், “இல்ல.. நிலா.. இப்போ எதுவும் வேண்டாம். முதல்ல நீ முழுசா குணமாகனும். அதுவரைக்கும் அமைதியா இரு. ஒத்துகிறேன் உன் அருகாமைல இருக்கும்போது நான் சில நேரங்கள்ல தடுமாற்றேன். ஆப்ட்றால் நானும் மனுஷன் தானே?. அதுக்காக உடலாள இணைந்தா தான் நாம கணவன் மனைவின்னு இல்லடா நிலா. எல்லாத்துக்கும் நேரம் கூடி வரணும். நீ எதையும் நினைச்சி குழப்பிட்டு இருக்காத. என் வாழ்நாள் முழுக்க இனி உனக்கு மட்டும் தான் நான் சொந்தமானவன். சரியா?” என்று அவளின் மூக்கை பிடித்து செல்லமாய் ஆட்டினான்.



“இல்ல மாமா..” என்று நிலா இழுக்க.



“இப்போ என்ன உனக்கான என் உணர்வுகளை உனக்கு நீ புரிஞ்சிகிடனுமா?” என்றான் அவளை பார்த்து. எதுவும் பேசாமல் இருக்க.



“அப்போ! ப்ளீஸ்.. எனக்காக உங்க காதலை முழுசா சொல்ற மாதிரி ஒரே ஒரு முத்தம் தாங்க” என்றாள் விழிகளை மூடி.



அவளின் சொற்களில் ஆச்சர்யமாய் பார்த்தவன், தான் அவள் மேல் கொண்ட காதலை ஒரே ஒரு முத்தத்தில் விளக்க முடியுமா என்று முயல ஆரம்பித்தான்.



நீண்ட இடைவெளி விட்டு அவளின் நெற்றியோடு மோதியவன் இரு நொடிகளுக்கு பிறகு ”இன்னும் என் காதலை முழுசா சொல்லலை. உனக்கு மூச்சு விட நேரம் கொடுத்தேன் “ என்று மீண்டும் தொடங்க தடுமாறித்தான் போனாள் மங்கை.

பிரியமனம் இல்லாமல் விடுவித்தவன் “நிலா இதுக்கு மேல நான் இங்க இருந்தேன்னா... உனக்கு தான் பிரச்சனை. நான் வெளிய இருக்கேன் சீக்கிரம் டிரஸ் சேஞ் பண்ணிட்டு கூப்பிடு.” என்று வேகமாக வெளியேறினான்.



உடைகளை மாற்றியபின் “மாமா! உள்ள வரலாம்” என்று குரல் கொடுத்தாள்.

அவளின் குரலுக்காக காத்திருந்தவன் உள்ளே வந்தான்.



“தலையை இப்படி வச்சிருந்தா என்ன ஆகறது?’ என்று துவாலையில் துவட்டி விட்டு அவளை அமரவைத்து லேசான பின்னல் போட்டு. இருக்கரங்களால் அள்ளி கொண்டு போனான்.



“இந்த ஸ்கர்ட் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு” என்று கூறினான்.



“மாமா எனக்கு ரொம்ப பசிக்குது.” என்றாள் நிலா.



“நானும் எதுவும் சாப்பிடலை பசிக்குது. வா கிச்சனுக்கு போகலாம்” என்று அழைத்து சென்றான்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
36:

“மாமா! இப்படி தூக்கிட்டே தான் போகனுமா? என்னை கிழ விடுங்க நானே நடக்குறேன்.“ என்றாள் நிலா.



“எப்பவும் நீ தானே நடக்குற? இப்போ நடக்க முடியலை அதான் நான் ஹெல்ப் பண்றேன்.” என்றான் வேலன்.



பக்கவாட்டில் இருந்த மேடை மேல் நிலாவை அமரவைத்துவிட்டு.



“நான் சமைக்க கொஞ்ச நேரம் ஆகும். அதுவரைக்கும் இந்த கேரட்டை சாப்பிடு” என்று தோல் சீவி கொடுத்தான்.



அதை வாங்கி கொண்டவள் அவனின் செயல்களை விழிகளால் பருகியபடி ரசித்து கொண்டிருந்தாள்.



“உனக்கு என்ன வேணும்? சப்பாத்தி ஆர் தோசை?” என்றான் ஒற்றை புருவம் உயர்த்தி.



“எனக்கு தோசை தான் வேணும்” என்றாள் நிலா உடனே.



“ஓகே. எனக்கும் தோசை பிடிக்கும் பட் எனக்கு இப்போ சப்பாத்தி தான் வேணும். தொட்டுக்க என்ன வேணும்?” என்றான் ப்ரிட்ஜில் இருந்த தோசை மாவை எடுத்தபடி.



‘ உன்னையும் தொட்டுப்பேன்... ஆனா நீ தான் ஏதேதோ பேசி என் வாய அடைச்சிட்ற விழியா’ என்று மனதிற்குள் அவனுடன் செல்ல சண்டை போட்டவளின் முன் சொடுக்கிட்டு “நான் இங்க தானே இருக்கேன்? அப்புறம் ஏன் என்னோட கனவுலையும் சண்டை போட்ற?” என்றான் குறும்புடன்.



‘நான் சண்டை போடறது இவனுக்கு எப்படி தெரியும்?’ என்று நினைத்தவள்.



“தக்காளி சட்னி செய்துடுங்க. தோசை சப்பாத்தி ரெண்டுக்குமே நல்லா இருக்கும்.” என்றாள்.



“நோ நோ... எனக்கு முட்டை தான் செய்ய போறேன்.” என்றான் காய்கறிகளை எடுத்துக்கொண்டு.



“முட்டையா சப்பாதிக்கா? நல்லாவே இருக்காது மாமா” என்றாள்.



“யாரு சொன்னா? நான் செய்து தரேன் நீ சாப்பிட்டு பாரு. அப்புறம் எப்பவும் சப்பாத்திக்கு அதை தான் தொட்டுக்குவ” என்றான் மெல்ல சிரித்து.



“அப்போ எனக்கு தோசைக்கு ஏதாவது பொடி இருந்தா போதும் மாமா” என்றாள். நிலா.



ஆராய்ந்து பார்த்தவன், “பொடி எதுவும் செய்து வச்சிருக்க மாதிரி தெரியலை நிலா. உனக்கு கருவேப்பிலை பொடி ஒக்கேவா?” என்றான்.



“ஓகே” என்றாள்.



மூன்று அடுப்புகள் கொண்ட காஸ் ஸ்டவ் அது. வேகமாக ஒரு வாணலியை எடுத்து இரண்டு ஸ்பூன் உளுந்து, இரண்டு ஸ்பூன் கடலை பருப்பு ஒரு காய்ந்த மிளகாய் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்து தானாக தட்டில் ஆற வைத்துவிட்டு பின்னர் மீண்டும் வாணலியில் கருவேப்பிலை போட்டு மொரு மொரு என்று வறுத்து கொட்டிய பின்னர் வாணலியில் கொஞ்சம் சீரகம், மிளகு, கடைசியில் பெருங்காயத்தூளும் வறுத்து எல்லாவற்றையும் மிக்சியில் அரைத்து பொடித்தான்.



“உனக்கு பொடி ரெடி. தோசை பைவ் மினுட்ஸ் ஊத்திட்றேன்” என்று இரண்டு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி கருவேப்பிலை எல்லாவற்றையும் ம பொடியாக நறுக்கிகொண்டு இரண்டு கேரட்டை துருவி எல்லாவற்றையும் ஒரு பவுலில் கலந்து வைத்துகொண்டு தோசைகல்லில் மாவை ஊற்றி தோசையாக வார்த்து அதில் நறுக்கிவைத்த காய்கறிகளை தூவி நல்லெண்ணெய் விட்டு மூடினான்.



“ஹை மாமா! எவ்ளோ சூப்பரா செய்றிங்க. ஆனா, இந்த வெங்காயம் காயெல்லாம் ஏன் போட்டிங்க எனக்கு பிடிக்காது.” என்றாள்.



திரும்பி இடுப்பில் கை வைத்து முறைத்தவன்.



“எனக்கு பிடிக்காதுன்னு சொல்றதால தான் இப்படி நோஞ்சானா இருக்க. வெங்காயம் நிறைய சாப்பிடனும் நிறைய கால்சியம் இருக்கு. மத்த எல்லா காய்கறிகளும் சாப்பிடனும். ஆவில வேக வைக்கிறதால ரொம்ப நல்லது. உனக்கு பிடிக்கும் நீ சாப்பிட்டு பாரு” என்று தோசையை தட்டில் போட்டு அவளிடம் நீட்டினான்.



சிறிய தட்டில் பொடியை போட்டு உப்பு, நாலு பூண்டை தோல் உரிக்காமல் தட்டி போட்டு நல்லெண்ணை ஊற்றி கலந்து கொடுத்தான்.



“இந்தா சாப்பிட்டு பாரு” என்றான்.



முகத்தை சிறுகுழந்தை அடம் போல பிடிக்காமல் எடுத்து சாப்பிட்டவள்.



“மாமா நல்லா இருக்கு” என்று அவனை இழுத்து கன்னத்தில் ஒரு முத்தத்தை தர, லேசாக தலையை ஆட்டி அவளின் குழந்தைதனத்தை எண்ணி சிரித்தபடி தனக்கு ஏற்கனவே பிசைந்து வைத்திருந்த சப்பாத்தி மாவில் நான்கு சப்பாத்திகளை உருட்டி போட்டான்.



அவன் லாவகமாக மாவை உருட்டுவதை கண் கொட்டாமல் பார்த்துகொண்டிருந்த நிலாவை, “சாப்பிடாம என்னையே எவ்ளோ நேரம் பார்த்துகிட்டு இருப்ப. சாப்பிடு அப்புறம் பார்க்கலாம்” என்றான் திரும்பாமல்.



‘இவனுக்கு முதுகெல்லாம் கண்ணு இருக்கு’ என்று நினைத்தபடி சாப்பிட்டு முடித்தாள்.



வாணலியில் கடுகு தாளித்து பச்சை மிளகாய், இரண்டு வெங்காயம், தக்காளியை சிறியதாக நறுக்கி போட்டு நன்கு வதக்கியபின் மஞ்சள்தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு வெந்தபின் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறினான். நன்கு எண்ணெய் பிரிந்து சுருண்டு வந்த பிறகு இறக்கி சப்பாத்தியோடு அவனும் சாப்பிட நிலாவும் சாப்பிட்டு பார்த்தாள்.



“மாமா! சூப்பரா சமைக்கிறிங்க. ரொம்ப நல்லா இருக்கு” என்று சாப்பிட்டாள்.



சாப்பிட்டு முடித்தபின் மீண்டும் அவளை தூக்கி கொண்டு மெத்தையில் கிடத்தினான். மாத்திரை கொடுத்த பின்னர்.



“கொஞ்ச நேரம் தூங்கு நிலா” என்றான் வேலன்.



“ஹ ஹு ம் நீங்களும் வந்து என் பக்கத்துல படுத்துக்கோங்க” என்று அடம்பிடிக்க.



“இல்ல நிலா வேண்டாம்” என்றான்.



“ஓகே நானும் அப்போ தூங்கலை” என்றாள்.



“வர வர சின்ன குழந்தை போல அடம் பிடிக்கிற நிலா” என்று அவளருகில் வந்து அமர்ந்தான்.



அவனின் மடி மீது தலைவைத்து படுத்தவள். அவனும் மெல்ல முதுகில் தட்டி கொடுக்க உறங்கியது தெரியாமல் உறங்கிவிட்டாள்.



அந்த நேரம் பார்த்து அர்ஜுனிடம் இருந்து நிலாவிற்கு போன் வந்தது.



“என்ன இந்த நேரத்துல போன் பண்றான்?” என்று யோசித்தபடி எடுத்து “ஹலோ! அர்ஜுன் நல்ல இருக்கியாடா?” என்றான் வேலன்.



“ஹ்ம்ம் நான் நல்லா இருக்கேன் டா” என்று அங்கு நடந்த ஏல்லாவற்றையும் கூறி நிலாவிடம் கூறிவிடுமாறு கூறிவிட்டு வைத்துவிட்டான் அர்ஜுன்.



“ஹ்ம்ம் வர்மதேவன் காதலிக்கிற பொண்ணு யாரா இருக்கும்?” என்று யோசிக்க ஆரம்பித்தான்.



அங்கே தீக்க்ஷிலா, “என்ன சார்! நான் தான் சொன்னேனே? அய்யா ரொம்ப நல்லவங்கன்னு இப்பவாவது புரிஞ்சிகிட்டிங்களா?” என்றாள் அர்ஜுனிடம்.



“எல்லாத்தையும் நல்லா புரிஞ்சிகிட்டேன். உன்னை ரொம்ப நல்ல பொண்ணு நினைச்சேன். ஆனா, நீ இப்படி உன் பிரெண்டுக்கு இப்படி துரோகம் பண்ணுவன்னு நினைக்கில?” என்றான் கோபமாய் அர்ஜுன்.



“சார் என்ன சொல்றிங்க? நான் என் பிரெண்டுக்கு என்ன துரோகம் செஞ்சேன்?” என்றாள் கண்ணீரோடு.



“ஆமா! உன் பிரெண்ட்கிட்ட நல்லா பேசிக்கிட்டே அங்க இருக்கிறதை இங்க உன் லவர் வர்மதேவனுக்கு எல்லாத்தையும் சொல்றியா? உன்னை போய் நல்ல பொண்ணுன்னு நம்பிட்டு இருக்கா அந்த நிலா” என்று கத்தினான் கோபத்தில்.

பளார் என்று அரை கன்னத்தில் விழ, அதிர்ச்சியில் மீண்டும் அவளை முறைக்க, “யார் நீங்க? உங்களுக்கு என்னை பத்தி என்ன தெரியும்? என் பிரெண்டோட தம்பி எனக்கும் தம்பி மாதிரி தான். என்னை விட வயசுல சின்னவர் அய்யா, அதுக்காக அவரை பேர் சொல்லி கூப்பிட்ற நிலைமைல நாங்க இல்ல” என்று கோபமாய் கூறியவள்.



“சாரி!” என்றான் அர்ஜுன்.



“போதும். உங்களை எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்றாள் தீக்க்ஷிலா.



“என்னது என்னை கல்யாணமா? என்னம்மா என்னன்னவோ சொல்ற? நான் எப்போ உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்?” என்றான் அதிர்ச்சியாய்.



“இனி அதையும் சொல்விங்களா? சொல்லி பாருங்க உங்க பல்லு எல்லாத்தையும் தட்டி கைல கொடுத்துடுவேன் “ என்றாள் முறைத்தபடி.



‘இதென்னடா வம்பா போச்சு. இந்த பொண்ணும் அவனை லவ் பண்ணலைன்னா அப்போ வேற யாரைதான் லவ் பண்றான் வர்மதேவன். இதுல... இந்த பொண்ணு வேற கல்யாணம் அது இதுங்குது.. ஒண்ணுமே புரியலையே?’ என்று தன்னையே நொந்து கொண்டவன்.



மெதுவாய் “கோவிச்சிகாதம்மா வர்மதேவன் உங்களுக்கு தெரிந்த பெண்ணை தான் காதலிக்கிறேன்னு சொன்னானா? அதான் அது நீன்னு நினைச்சிட்டேன் சாரி.” என்றான் குற்ற உணர்ச்சியில்.



அவன் உண்மையிலேயே வருந்துகிறான் என்று அறிந்தவள். “சரி விடுங்க சார். உங்க பிரெண்டும் என் ப்ரெண்டும் சேர்ந்து இங்க உங்களை அனுப்பறதுக்கு முன்னாடியே அம்மாகிட்ட பேசி உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் செய்றதா முடிவு பண்ணிட்டாங்க” என்றாள் மெதுவாய்.



“என்னாது? இதெல்லாம் எப்போ நடந்தது எனக்கு தெரியாம? எனக்கே தெரியாம என் லைப்ல நீங்க முடிவெடுக்கிறிங்களேடா??” என்று அர்ஜுன் புலம்ப.



“சாரி சார். உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னா இப்பயே நிலாகிட்ட சொல்லிடுங்க” என்றாள் லேசான வருத்ததோடு.



“இல்லையே நான் எப்போ அப்படி சொன்னேன். எனக்கு உன்னையும் ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான் அர்ஜுன் சிரித்தபடி.



“நீங்க ரொம்ப பெரிய இடம் எங்களுக்கும் உங்களுக்கும் எட்டாது. அம்மா எவ்ளோ சொல்லியும் நிலா கேக்கலை. காசு இன்னைக்கு வரும் நாளைக்கு போகும். ஆனா என் பிரென்ட்டு மாதிரி ஒரு நல்ல பொண்ணு கிடைக்க எங்க அர்ஜுன் கொடுத்து வைச்சிருக்கனும்னு என்னவோ பேசி சம்மதம் வாங்கிட்டாங்க” என்றாள் அவனை பார்க்காமல்.



“நிலா கரெக்டா தான் சொல்லிருக்கு” என்று அவளை பார்த்து சிரித்தான் அர்ஜுன்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
37:

“என்னை பார்த்தே ஒரு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ள என்னை பிடிச்சிருக்குன்னு சொல்றிங்க?” என்றாள் தீக்க்ஷீலா.



“என்னங்க இது? உங்களை பிடிச்சிருக்குன்னு தானே சொன்னேன். உங்களை லவ் பண்றேன்னு சொல்லலையே?” என்றான் அர்ஜுன் ஒற்றை புருவம் உயர்த்தி.

“புரியலை?” என்றாள் தீக்க்ஷிலா.



“சொல்றேன்! நான் இங்க வேலைக்கு சேர்ந்த நாள்லர்ந்து இந்த கொஞ்ச நாளா உங்களை அப்சர்வ் பண்ணிட்டு தான் இருக்கேன். அங்க ஜமீன் வீட்ல ஒரு சில பெண்கள் மட்டும் தான் வேலைக்கு வராங்க. மீதி எல்லோருமே ஆண்கள் தான். அதிலும் மற்ற பெண்கள் வீட்டு வேலை செய்யும் போது நீங்க மட்டும் தான் படித்துவிட்டு அங்கே வேலை செய்யும் பெண்.” என்றான்.



“அதுக்கு?” என்றாள் கேள்வியாய்.



“நீங்க எல்லார்கிட்டயும் கலகலன்னு பேசுகின்ற பெண். எல்லோருக்குமே உங்களை ரொம்ப பிடிக்கும். ஆனா, எல்லாருமே உங்களை தன் வீட்டு பெண்ணா தான் பார்க்கிறாங்க. ஒருத்தர் பார்வை கூட உங்கமேல தப்பா பட்டதில்ல. அது நிச்சயமா நாம நடந்துக்கிற முறைல தான் மத்தவங்க நம்ம மேல வைக்கிற மரியாதையும் இருக்குன்னு நான் நம்பறேன். அந்த வகைல உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.” என்று சிநேகமாய் சிரித்தான்.



“என்னை யாரும் இந்த அளவுக்கு புரிஞ்சிகிட்டது இல்லைன்னு நினைக்கிறேன். தாங்க்ஸ்” என்றாள் மலராய் மலர்ந்து.



“இருக்கட்டும்ங்க” என்றான் எங்கோ பார்த்தபடி.



“எனக்கு பாமிலி பேக்ரௌண்ட் எல்லாம் கிடையாது. அப்புறம் எப்படி நிலா சொன்னதுக்காக உடனே சம்மதம் சொல்லிட்டிங்க?” என்றாள்.



“நான் நிலாவை திட்டுவேன் என்னை அனுப்பி வைச்சிடுச்சுன்னு. ஆனா, எல்லாமே சும்மா தான். எங்க அம்மா இறந்தப்புறம் என்ன பண்றதுன்னு தெரியாம பித்து பிடிச்சவன் மாதிரி இருந்தேன். அந்த நேரம் நிலா என்னை கூப்பிட்டு வேலனுக்கு தெரியாம அவனுக்கு பாதுகாப்பா இருக்கணும்னு நீங்களும் கூட போங்கண்ணான்னு சொல்லி அனுப்பி வெச்சது. அதுக்கப்புறம் தான் என் வாழ்க்கைல நிறைய திருப்பங்கள். நிறைய ஏற்ற இறக்கங்கள்.



அங்க போய் சும்மா எந்த ரீசனும் இல்லாம எப்படி இருக்கிறதுன்னு கேட்டேன். அப்போ தான் உங்களை யாரு சும்மா இருக்க சொன்னது. இங்க இருக்கிற பிசினசை அங்க எலாப்ரெட் பண்ணுங்கன்னு சொல்லி ஐடியா கொடுத்துச்சு. அங்க போய் இடமாற்றத்தால, வேலனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் புது கம்பனி ஆரம்பிச்ச பிசிலையும் என் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமா திசை திரும்பிச்சி. அதுக்காக என்னைக்கும் நான் நிலாக்கு நன்றி சொல்லுவேன்.” என்று சிரித்தான் கண்களில் கண்ணீரோடு.



“என்னங்க நீங்க? உங்களை ரொம்ப ஜாலியான ஆளுன்னு தான நிலா சொன்னா?” என்றாள் தீக்க்ஷிலா.



“ஆமா. அதுக்கப்புறம் நானே என்னை மாத்திகிட்டேன்.“ என்றவன் சிறிது நேர மௌனதிற்கு பின்,



“என்னை பத்தி சொல்லனும்னா நான் நிலாவோட அத்தை பையன், வேலனோட தம்பி எனக்குன்னு யாருமே இல்லைன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, எனக்குன்னு எல்லா சொந்தமும் இருக்குனு நிலா புரிய வச்சிட்டா. இப்போ தான் எனக்கு நிலா அத்தை பொண்ணுன்னு தெரியும். எப்படி இருந்தாலும் நிலாவை நான் தங்கச்சியா பார்க்க ஆரம்பிச்சிட்டேன். அந்த உறவை என்னிக்கும் என்னால மாத்திக்க முடியாது. அவங்களுக்காக தான் நான் என் உயிரையும் பொருட்படுத்தாது இங்க வந்துருக்கேன். ஆனா, எனக்கு ஒரு படி மேல போய் அவங்க எனக்கு கல்யாணம் பண்ற வரைக்கும் போயிருக்காங்க.“ என்றான் அர்ஜுன்.



“ஹ்ம்ம் இவ்ளோ தான்... என்னை பத்தி சொல்லிட்டேன். இந்த நிமிஷம் வரைக்கும் நான் உங்களை காதலிக்கலை. ஆனா, இனி அதுக்கு சான்ஸ் இருக்கு. நமக்கு கல்யாணம் ஆகிற வரைக்கும் என்னை உங்க வுடுப்பியா ஏத்துகிறிங்களா?” என்று அருகில் சாமந்தி செடியில் இருந்த பூவை பிடுங்கி அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து மலரை நீட்ட, அவனை பார்த்து கொண்டிருந்தவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.



“ஏங்க என்னங்க நீங்க? எவ்ளோ கஷ்டப்பட்டு இவ்ளோ பெரிய டைலக் சொல்லிருக்கேன். நீங்க என்னடான்னா இப்படி சிரிச்சிட்டு இருக்கீங்க?” என்றான் பாவமாய் முகத்தை வைத்து கொண்டு.



“பின்ன என்னங்க? ரெமோ ரேஞ்சுக்கு பேசுவிங்கன்னு பார்த்தா இப்படி அந்நியன் அம்பி ரேஞ்சுக்கு பேப்பர் இல்லாம வாசிச்சு காட்டினா எனக்கு சிரிப்பு வராம என்ன செய்யும்?” என்று மீண்டும் சிரித்தாள்.



“போங்க.. நான் உங்ககூட பேசமாட்டேன் “ என்று எழுந்து திரும்பியவனை, “நில்லுங்க. அந்த பூவை எனக்கு கொடுத்திட்டு போனா தலைல வச்சிப்பேன்ல?” என்று மெலிதாய் சிரித்தாள்.



“அதை நாங்களே வைப்போம்” என்றவுடன் சிரித்தபடி திரும்பி நின்றாள். அவளின் தலையில் அந்த ஒற்றை மலரை சூடியவன்.



“நான் வரேங்க. வந்து ரொம்ப நேரமாச்சுன்னு அந்த பிசாசு குட்டிங்க தேட ஆரம்பிச்சுடுவாங்க.” என்று கிளம்பினான்.



நடந்து கொண்டே இருந்தவன் தன் பின்னே வண்டியின் ஹாரன் சத்தம் வரவே திரும்பி பார்த்தான்.



வர்மதேவன் சிரித்தபடி வண்டியில் வந்து கொண்டிருந்தான்.



‘இப்போ தான் சொல்லிட்டு வந்தேன். அதுக்குள்ள ஒன்னு இங்க வந்துருச்சு.’ என்று நினைத்தபடி.



“எங்க இந்த பக்கம்.?” என்றான் வர்மதேவனை பார்த்து.



“அது இருக்கட்டும் மாமா. ஒழுங்கா ப்ரொபோஸ் பண்ணிங்களா இல்லை ஊத்தி மூடிட்டு வந்துட்டிங்களா?” என்று குறும்பாய் சிரித்தான் வர்மதேவன்.



‘இப்பதானேடா நானே சொல்லிட்டு வரேன். அதுக்குள்ள வந்து கேக்குறானே? ஒரு வேலை இவன் மனுசனா இல்லை பேய் பிசாசா?’ என்று நினைத்தபடி மேலும் கிழும் பார்த்தான்.



சத்தமாய் கலகலவென சிரித்தவன். “மாமா! காமெடி பண்ணாதிங்க. காத்து கருப்புல்லாம் இல்ல. நான் பாருங்க எனக்கு கால் இருக்கு “ என்று தன் காலை எடுத்து ஆட்டி காண்பித்தான்.



‘ஆமா, கால் இருக்கு அப்போ மனுஷன் தான். ஆனா, நான் இப்போ தானே பேசிட்டு வரேன். இவனுக்கு எப்படி அதுக்குள்ள தெரியும்?’ என்று யோசித்து கொண்டிருக்க.



“நானும் வீட்டுக்கு தான் போறேன். வண்டில ஏறுங்க. உங்க கேள்விக்கு பதில் சொல்றேன்” என்று வண்டியை நிறுத்தினான்.



அவனை சந்தேக பார்வை பார்த்தபடி வண்டியில் ஏறிக்கொண்டான்.



“மாமா! இன்னைக்கு உங்களுக்கு லீவா?” என்றான் வர்மதேவன்.



“ஆமா” என்றான் அர்ஜுன் அமைதியாய்.



“அதனால தான் உங்ககிட்ட பேசலாம்னு உங்களுக்கு போன் பண்ணேனா??” என்றான் ராகமாய் இழுத்தபடி.



“என்னது நீ போன் பண்ணியா? எப்போ?’ என்றான் அர்ஜுன்.



“இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி. நீங்க எடுக்கலைன்னு வச்சிட்டேன். ஆனா, நீங்க திரும்பி என்னை கூப்பிடிங்க. வண்டி ஓட்டிட்டு இருந்ததால உடனே எடுக்க முடியலையா?” என்றான் மீண்டும் இழுவையாய்.



‘அட மூதேவி. ஒரே மூச்சாய் தான் சொல்லி தொலையேன்டா’ என்று மனதினுள் திட்ட.



“அதான் சொல்றேன்ல அப்புறம் எதுக்கு திட்றிங்க?” என்று கேட்டபடி தொடர்ந்தான்.



“ஷீலா வந்துட்டான்னு அவசரமா நான் எடுக்கலைன்னு போனை அப்படியே பாக்கெட்டுல போட்டுட்டிங்க. ஹீ ஹீ ஆனா, நான் அட்டென்ட் பண்ணிட்டேன். சரி. போனை அட்டென்ட் பண்ணிட்டோம் மாமா பேசலை அதனால கட் பண்ணிடுவோம்னு தான் நினைச்சேன். ஆனா, என் பேர் அடிபட்ர மாதிரி இருந்ததால அப்படியே ப்லூடூத்ல போட்டுட்டு சைலண்டா கேட்டேனா?” என்று சில்மிஷமாய் சிரித்தான்.



“அப்போ எல்லாத்தையும் கேட்டுட்டியா?” என்றான் அர்ஜுன் முறைத்தபடி.

“யா! அப்சலூட்லி” என்று சிரிக்க.



“எனக்கு ஒரு அரை விழுந்ததே “ என்று இழுக்க.



“நான் கேட்கலை அதுவா தானா வந்து விழுந்தது என் காதுல. நான் என்ன செய்யட்டும் மாமா.” என்று சிரிக்க.



“ஏன்டா வெக்கமா இல்லையா உனக்கு? ஏதோ புது நம்பரா இருக்குன்னு திரும்பி நான் போன் பண்ணேன். அதான் பேசுறாங்கன்னு தெரியுதில்ல வைக்க வேண்டியது தானே?” என்றான் காண்டாய்.



“எனகென்ன தெரியும் நீங்க அடி வாங்குவிங்கன்னு?“ என்றான் பாவமாய்.



“போடா“ என்று திட்டிவிட்டு தன்னையே நொந்துகொண்டான்.



“சரி விடுங்க மாமா. இதெல்லாம் வாழ்க்கைல சகஜம்.” என்றான் வர்மதேவன்.



“பெஸ்ட் ஆப லக். தீக்க்ஷிலா ரொம்ப நல்ல பொண்ணு. எனக்கு ரொம்ப பிடிக்கும் . என்னை விட பெரியவங்க. உங்களுக்கு நல்ல பொருத்தம்.” என்று வாழ்த்தினான்.



“அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல நம்ப மேட்டருக்கு வா.” என்றான் அர்ஜுன்.



“என்ன?” என்றான் வர்ம்தேவன்.



“என்னது என்ன? நான் அந்த பேபர்சை எடுக்கணும் அதுக்கு ஒரு ஐடியா கொடுடான்னு கேட்டா?” என்றான் அர்ஜுன்.



“மாமா. அது நீங்க நினைக்கிற மாதிரி ரொம்ப ஈசியான விஷயம் கிடையாது.” என்றான் வர்மதேவன்.



வீடு புல்லா ரூம்சை தவிர மத்த எல்லா இடத்துலையும் கேமெரா வச்சிருக்கார் எங்கப்பா.“ என்றான் வர்மதேவன்.



“டேய்! உன் கழுத்துல அந்த கேமரா தொங்கிட்டு இருந்துச்சே அதை வச்சிகிட்டே பேசிறியா நீ? நல்லா மாட்டி விட்டுடியா?” என்றான் அர்ஜுன்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
38:

"ஐயையோ மாமா! உங்ககிட்ட பேசனும்ன்ற ஆர்வத்துல நான் அதை மறந்துட்டேனே? இப்போ எங்கப்பா நாம பேசின எல்லாத்கையும் கேட்டுருப்பாரே? என்ன பண்றது? உங்களை தேடி ஆள் கூட அனுப்பி இருப்பாருன்னு நினைக்கிறேன்"என்றான் சற்று பதற்றமான முகத்தோடு.



"உன் ஆர்வத்துல கொள்ளியை வைக்க. ஏன்டா என் உயிரோட விளையாடறதுல தான் உன் ஆர்வம் அப்படியே கொப்பளிக்குமாடா?" என்று அர்ஜுன் அவனை முறைக்க.



"ஹீ ஹீ... மாமா ஓவரா டென்ஷன் ஆகாதிங்க உடம்புக்கு நல்லதில்ல."என்றவனை மேலும் முறைத்தான்.



"போச்சு. உன்னால இன்னைக்கு எனக்கு சங்கு தான். உன்னை நம்பிருக்கவே கூடாது. நீ வேணும்னே கூட இந்த மாதிரி பண்ணிருப்ப?"என்றான் குற்றம் சாட்டும் குரலில்.



"அச்சோ மாமா. இந்த மச்சானை அப்படி எல்லாம் பேச கூடாது. தப்பு. என்னைக்கும் நம்பினவங்களை துரோகம் செய்யமாட்டேன். சும்மா உங்ககிட்ட கொஞ்சம் விளையாடி பார்த்தேன். உங்களுக்கு போன் பண்றதுக்கு முன்னாடியே கழட்டி வச்சிட்டேன்"என்று கன்னத்தில் விழ சிரித்தான்.



"உன்னைய..."என்று முதுகில் ரெண்டு அடி செல்லமாக போட்டவன்.



"உன்னால ஒரு நிமிஷத்துல என் இதயத்துடிப்பை நிறுத்திட்டடா குரங்கு, எருமை மாடு"என்று வாயில் வந்த வார்த்தைகளில் அபிஷேகம் செய்ய வர்மதேவன்புன்னகையோடு வாங்கிக்கொண்டிருந்தான்.



"சரி. இப்போ சொல்லு. ஏதோ சிக்கல் இருக்குன்னியே என்னது? அப்போ அந்த பேப்பெர்சை எடுக்க முடியாதா?"என்று அர்ஜுன் கேட்டான்.



"மாமா நிச்சயம் வழி இருக்கும். யோசிக்கலாம். அவசரப்பட வேண்டாம். அது உங்க எல்லார் உயிருக்கும் ஆபத்து."என்றான் வரமதேவன்.



"இல்லைனாலும் இப்போ நல்லாவா இருக்கோம்? எங்க உயிருக்கு மேல பாசகயிறை வீச எமதர்மராஜா மாதிரி உட்கார்ந்துருக்கார் உங்கப்பா. இன்னும் பத்து நாளைக்குள்ள எதுவும் செய்யலைன்னா பிரதியோட அப்பா உயிருக்கு ஆபத்து."என்றான் அர்ஜுன்.



பிரதியின் பெயரை கேட்டதும் தன் உடலில் உயிர் தெரிக்க மின்சாரம் பாய்வதை போல உணர்ந்து கரத்தை இருக்க மூடினான் உணர்ச்சிகளை கட்டு படுத்திய வர்மதேவன்.



"அதெல்லாம் ஒன்னும் ஆகாது. யாருக்கும் ஒன்னும் ஆக விடமாட்டேன் நான். இன்னும் ரெண்டு நாள் டைம் கொடுங்க. நான் நல்ல யோசனையாய் சொல்றேன்"என்றான் வர்மதேவன்.



"நீயும் யோசி. நான் நிலாகிட்ட பேசிட்டு அவ என்ன சொல்றான்னு பார்ப்போம்"என்றான் அர்ஜுன்.



"சரி"என்று கூறவும் அவர்களின் அரண்மனைக்குள் நுழையவும் சரியாய் இருந்தது.



"இவன் எப்ப யோசிச்சி நாம எப்போ எடுக்கிறது? நாமளே ஒரு யோசனை பண்ணுவோம். நாசமா போன இவங்கப்பன் வேற ரொம்ப புத்திசாலியா இருக்கான். அந்த புத்திய வச்சு நல்ல வழில போயிருந்தன்னா இன்னைக்கு எவ்ளோ சம்பாரிச்சு இன்னும். நிறைய சொத்து சேர்த்திருக்கலாம். அதை விட்டுட்டு இவங்க அம்மா பேச்சை கேட்டு புதையலை காக்கற பூதம் மாதிரி கெட்ட வழிலையே யோசிச்சு இப்போ அவனுக்கு மூளையே கெட்டு போச்சு போல? பாரு வீடு பூரா கேமரா வச்சிருக்கான் நாதாரி பைய. நான் எப்படி அந்த ரூமுக்குள்ள போறது? இவ்வளவும் செஞ்சுட்டு ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி எங்க இருந்தோ எல்லாத்தையும் கவனிச்சிட்டு இருக்கு பிசாசு."என்று மனதில் திட்டியபடி தன் அறைக்கு சென்றான்.



******

காலை உணவை முடித்து சிறிது நேரம் பேசி கொண்டிருந்த்வள் வேலனின் மடியில் தலைவைத்து சோபாவிலேயே உறங்கிவிட அவனும் அவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.



தனது போன் அடிக்க நிலாவின் உறக்கம் கலையாது இருக்க ஒரே ரிங்கில் எடுத்து பேசினான்.



"எஸ் ஜான். வாட் ஹப்பென்ட்?"என்றான் நெற்றியை சுருக்கியபடி.



"வாட்? ஹொவ் கேன் இட் வில் பி பாசிபில். ஓகே சென்ட் மீ த பைல்ஸ். ஐ வில் செக் இட் அண்ட் டெல் யு?"என்று போனை வைத்தவன்.



தன் பி.ஏ ஹரிக்கு போன் செய்து ஒரு சிலவற்றை கூறி உடனே கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.



நிலாவின் தலை கோதிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான். 'எப்படி பட்டாம் பூச்சி மாதிரி சுத்திகிட்டு இருந்த பொண்ணுக்கு இப்படி ஆகிடுச்சு, அதுவும் என்னால. என் வாழ்நாள் முழுக்க வெறுக்க போறேன்னு நினைச்சவளை என் மரணம் வரை உயிரோட கலந்திருக்க வேணும்னு இன்னைக்கு கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். இதுவும் நம்மால் மீறி ஒரு நல்ல ஷக்தி இருக்கு போல.'என்று சிரித்தவன்.



'உனக்கு உடம்பு மட்டும் குணமாகட்டும் உன்னை என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கிறேன் தென்றல்'என்று மெல்ல அவளின் காதருகில் கூறியவன் அவளின் முன் நெற்றியில் மெல்லிய முத்தத்தை பதிக்க குழந்தையென அவளும் சினுங்கினாள்.

'முழிச்சிட்டு இருக்கும் போது செய்யற வேலை எல்லாம் பெரிய வேலை. இப்போ பாரு தூங்கும் போது குழந்தை மாதிரி தூங்கிறதை?'என்று கூறியபடி நெற்றியோடு நெற்றி மோதி சிரித்தான்.



"ஹ்ம்ம்... இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே ப்ளீஸ்..."என்றாள் உறக்கத்திலேயே சிணுங்கும்குழந்தையாய்.



இவளின் இந்த பக்கத்தை புதியதாய் பார்ப்பதினால் இடைவிடாது சிரித்து கொண்டிருந்தான் அவளை எண்ணி.



மெல்ல அவளின் தலையை சோபாவில் கிடத்தியவன் வாசலில் சென்று கதவை திறந்து ஹரியை வரவழைத்தான்.



"ஹலோ! சார்"என்று ஹரி சந்தோஷத்தில் கத்த.



நிலாவினை எழுப்பி விடுவானோ என்று பதறி ஹரியை "ஷட் அப்"என்று முறைத்தான்.



"சாரி சார். நீங்க ஆர்டர் செஞ்சதை வாங்கிட்டு வந்துட்டேன். இந்தாங்க சார."என்று வேலனிடம் நீட்டினான்.



"ஹ்ம்ம்... ஹரி இன்னும் டூ டேஸ்க்கு ஆபிஸ் பக்கம் வரது டவுட் தான். சோ, பார்த்துகோங்க ஏதாவது இம்பார்டன்ட் இருந்தா காண்டாக்ட் மீ"என்று அவனை அனுப்பிவிட்டு வந்தான்.



அதற்குள் நிலா எழுந்து கண்ணை கசக்கி கொண்டு சிறுபிள்ளை போல் அமர்ந்திருப்பவளை கண்டவன் சிரித்தபடி அவளருகில் வந்து அமர்ந்தான்.



"என்னடா தூக்கம் கெட்டுடுச்சா? உள்ள தூங்கறியா?"என்றான் அவளின் தலையை கோதியபடி.



"இல்ல மாமா. போதும் ரொம்ப நேரம் தூங்கிட்டேன்"என்று சிரித்தாள்.



"என்னதது?” என்றாள் அவனின் கரத்தில் இருந்த பெட்டியை பார்த்து.



"இதுவா? என் நிலாவுக்காக இதுவரைக்கும் எதுவும் நான் வாங்கி கொடுத்ததில்ல... சோ, இது என்னோட சிம்பள் கிப்ட்."என்று அவளிடம் கொடுத்தான்.

விழிகளில் ஆச்சர்யம் மின்ன சிறுகுழந்தையென வாங்கி பிரித்தாள்.

அதில் அவளுக்கென ஒற்றை பெரிய வைரக்கல் வைத்த ஸ்டட் இருந்தது.



"ஐ!!! சூப்பரா இருக்கு மாமா!"என்றாள் தன் காதருகில் வைத்தபடி.



"உனக்கு உண்மைலேயே பிடிச்சிருக்கா?"என்றான் அவனும் ஆவலாய்.



"ஹ்ம்ம் நிஜமா பிடிச்சிருக்கு மாமா"என்றாள்.



"அப்போ போட்டுக்கோ"என்றான் ஆசையாய்.



"சரி"என்று தன் காதில் இருந்த தோடினை கழட்ட சென்றவள் கரம் பற்றி தடுத்தான்.

'என்ன'என்றது அவளின் பார்வை.



குறும்பு மின்னியது அவனின் பார்வையில்...
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
39:

(அன்புள்ள வாசகர்களே! எல்லாத்தையும் நீங்களே கண்டுபிடிச்சிட்டா நான் எப்படி கதை எழுதுறது போங்கப்பா....”)



அவளின் கரத்தினை காதிலிருந்து எடுத்து விட்டவன் தோடினை கழட்ற ஆரம்பித்தான்.



அவனின் கைதீண்டலில் மெய் உணர்ந்து மௌனமாய் சமைந்திருந்தாள் மையலோடு.

தன் கணவனின் ஒவ்வொரு தீண்டலிலும் மொத்த உயிர் நாடிகளும் உருண்டெழுந்து தீஜூவளையாய் ஓடி வர, கட்டுபடுத்துவதில் கனத்து போயிருந்தாள் நிலா.



கண்ணாடியில் கண்டவளின் முகம் வைரத்தைவிட ஆயிரம் மடங்கு மின்னியது.



மகிழ்ச்சி வைரத்தில் இல்லை, அதை வாங்கித் தந்தவனின் மனதை வென்று விட்டதில்.

வேலனோ??... தன் வலக்கரத்தின் ஒற்றை விரலால் அவளின் இமை தொடங்கி முகம் முழுவதும் தீண்டல் ஊர்வலம் நடத்திட, அவனின் இந்த வேலை எதற்கென்று அறிந்தவள். “மா...மா...” என்று தந்தி அடித்தபடி மெல்ல ஒரு அடி எடுத்து பின் வைக்க.



“என்ன நிலா?” என்று மர்மமாய் சிரித்தவன் “ஹு...ஹு..ம்ம் நிலாதென்றல்” என்று முன்னேற.



“நீங்க எதுக்கு இதை வாங்கி கொடுத்திங்கன்னு புரிஞ்சிடுச்சு. ஆனா வேண்டாம்... ப்ளீஸ்.” என்று மேலும் இரண்டடிகள் பின் வைக்க.



“ஹு... ஹும்ம்” என்று கள்ள சிரிப்பு கொண்டு அவளை மேலும் நெருங்கினான்.

“விழி...யா... நான் எல்லாத்தையும் சொல்லிடறேன்... ப்ளீஸ்... நீ... குட் .. பாய் தானே” என்று மென்று விழுங்கிய வார்த்தைகளோடு தன் நடையை ஓட்டமாய் மாற்றி நாலெட்டில் தன் அறை அடைந்தாலும் அவளையும் முந்திக்கொண்டு கதவை சாத்தும் முன் அவளோடு அறையினுள் சென்று தாழிட்டான்.



“நானா? நல்ல பையனா? நான் சொல்லவே இல்லையே பொண்டாட்டி? நீயா நினைச்சிகிட்டா நான் எப்படி பொறுப்பாக முடியும்?” என்று அவளை ஈரெட்டில் நெருங்கியவனின் நெஞ்சில் இருக்கரங்கள் கொண்டு தள்ளிவிட்டு அறையினுள் அங்கும் இங்கும் போக்கு காட்டி ஓடிட, அவளை பிடிக்க முடியும் என்றாலும் அவளின் இந்த ஓட்டத்தை காண மேலும் ஓடினான்.



கடைசியில் இருவரும் கட்டிலில் விழ, இது தான் சமயம் என அவளின் இரு கரங்களையும் தலைக்கு மேல் கொண்டு சென்று இடக்கரத்தால் பிடித்தவன்.



கண்ணடித்தவாறு “நீயா சொல்றியா? நானா வாங்கிக்கவா?” என்று தன் இதழினை வருட, இதயதுடிப்பு பல மடங்கு எகிறி “இல்லை! நானே சொல்றேன்” என்று தன் விழிகளை இறுக மூடியவள்.



“என்னால நல்லா நடக்க முடியும். ஒரு காரணத்துக்காக தான் இப்படி உட்கார்ந்துருக்கேன்“ என்றாள்.



“என்ன காரணம்?” என்று புருவம் உயர்த்தி வாய் கேட்டாலும் அவனின் கை அதன் வேலையாய் அவளின் இடையில் கோலமிட்டு கொண்டே இருந்தது.

அதில் கிறங்கினாலும் “ஹ்ம்ம் அது அது..?” என்று அவள் இழுக்க.



“சீக்கிரம் சொல்லு. என் பொறுமை இப்போ கொஞ்சம் கொஞ்சமா காத்துல பறந்துட்டே இருக்கு. அது உனக்கு தான் டேன்ஜர்” என்றான்.



“அது என்னை பார்த்துக்க வந்த நர்ஸ் மேல எனக்கு கொஞ்சம் டவுட். அதை கண்டுபிடிக்க தான் இப்படி இருந்தேன்” என்றாள்.



“ஏன் அந்த நர்சுகென்ன? நல்லா தானே பார்த்துகிட்டா?” என்றான் வேலன் விடுவிக்காமல்.



“அதனால தான் சந்தேகமே? அதாவது முதல்ல ஒரு மூணு நாள் அவள் பார்த்துகிட்டதுக்கும் அதுக்கப்புறம் அவ காட்டின அக்கறையும் தான் எனக்கு சந்தேகம் வரவச்சது.” என்றாள்.



“புரியலையே? உன்னை மாதிரி ஜீனியஸ் இல்லை நான் நேரடியா சொல்றியா? அப்பயே டவுட்ன்னு சொல்லிருந்தா அவளை போலீஸ்ல புடிச்சி கொடுத்திருப்பேன்ல?” என்றான் வேலன்.



“அதனால தான் சொல்லலை. அவள் நமக்கு மட்டும் வேண்டியவ இல்ல வேற ஒருத்தருக்கும் ரொம்ப வேண்டியவளா இருக்கா” என்று சிரித்தாள்.



நொடியும் தாமதிக்காது அவளின் இதழினை சிறைபிடித்தவன் மூச்சு முட்ட விட்டு, பின் “இப்பயாவது சிரிச்சி என்னை சாவடிக்காம முழுசா சொல்றியா?” என்று சிரித்தான்.



“நிமிர்திகாவும் வர்மதேவனும் லவ் பண்றாங்க. இதை கண்டுபிடிக்க தான் நடக்கமுடியாத மாதிரி துணைக்கு அவளை இங்க வரவழைத்தேன். அன்னைக்கு அர்ஜுன் வர்மதேவன் லவ் பண்ற பொண்ணு நம்மளுக்கு தெரிஞ்சவங்க தான் அது யாரா இருக்கும்னு கேட்டப்போ? பிரதியா இருக்குமோனு டவுட் வந்துச்சு. ஆனா, அவளால என் உயிர்கு ஆபத்து வந்திருக்கு. நிச்சியமா அவளா இருக்காதுன்னு யோசிச்சேன். வேற யாரா இருக்கும்னு யோசிக்கும் போது தான் இவளா இருக்குமோன்னு டவுட் வந்திச்சி. நிமிர்திகாவை கண்கானிச்சதில் அவள் தான்னு தெரிஞ்சிடுச்சு.” என்றாள் புன்னகையோடு.



“அப்போ அந்த வர்மதேவன் தான் நம்மளை கண்காணிக்க அனுப்பி இருக்கானோ?” என்று கோபமாய் கேட்க.



“என்னோட கெஸ் கரெக்ட்னா?? அவள் இங்க வந்தப்புறம் தான் அவனுக்கு தெரிஞ்சிருக்கு. ஏன்னா முதல் அவள் பேச்சில வெறும் கடமை மட்டும் தான் இருந்தது. ஆனா, அதுக்கப்புறம் அதுல பாசமும் தெரிஞ்சுது. அவன் தான் எல்லாத்தையும் சொல்லி என்னை பார்த்துக்க சொல்லிருக்கான். அதனால தான் டாக்டர் சொல்லாத ஒரு சில நல்ல சீக்கிரமா கியூர் ஆக கூடிய டேப்லட்சை எனக்கு கொடுத்திருக்கா. நான் சீக்கிரமா குணமானதுக்கு அவளும் ஒரு காரணம் தான்.” என்றாள் முகம் மலர.



குறும்பு பார்வையுடன், “அப்போ உனக்கு ஏற்கனவே உடம்பு சரி ஆகிடுச்சு. அதாவது அம்மா ஊருக்கு போறதுக்கு முன்னாடியே???... கரெக்டா??? எல்லாரும் இருக்கும் போது சொல்லலை சரி, இப்போ நாம தனியா தானே இருக்கோம் அப்புறமும் ஏன் என்கிட்டே சொல்லலை?” என்றான்.



“ஆ... ங்... அது ... என் புருஷன் எனக்கு உடம்பு முடியலைன்னா என்னை எப்படி பார்த்துகிறார்ன்னு பார்க்கணும்னு ஆசையா இருந்தது. அதான் சொல்லலை.” என்று மாட்டிகொண்ட படபடப்பில் சிரித்தாள்.



“ஆனா, நான் தான் நேத்தே கண்டுபிடிச்சிட்டேனே” என்றான் விஷம சிரிப்புடன்.



“என்ன?? நேத்தே கண்டுபிடிச்சிட்டிங்களா? எப்படி?? எப்போ???” என்றாள் இருப்பு கொள்ளாமல்.



“ஹ்ம்ம்... நேத்து நீ குளிச்சிட்டு டவல் சுத்திட்டு வந்து கதவு திறந்ததையும் பார்த்தேன்.... என்னை பார்த்தவுடன் வேகமா ஓடி போய் ஸ்கர்ட் போட்டுட்டு டவல் போர்த்திட்டு வந்ததையும் பார்த்தேன்” என்று கண்ணடித்தான்.



அவளின் மூக்கை செல்லமாய் பிடித்து ஆட்டியவன், “ஏன்டி எல்லா டைமும் நீயே ஜெயக்கனுமா?? அதான் நானும் எனக்கு எதுவும் தெரியாத மாதிரி அமைதியா இருந்தேன். என் செல்ல பொண்டாட்டி என்கிட்டே எவ்ளோ கியூட்டா நடிக்கிறா?? அதுக்காக தான் இந்த கிப்ட்” என்று சிரித்தான்.



“ஐயோ!! போங்க மாமா!!” என்று மாட்டிகிட்டோமே என்ற வெட்கத்தில் இருகரங்களால் முகத்தை மூடிக்கொண்டவளை கண்டு இன்னும் சத்தமாய் சிரித்தான் வேலன்.



அவளின் கரங்களை எடுத்துவிட்டவன். “சரி இப்போ சொல்லு நிலா. இந்த கிப்ட் உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கா?” என்றான்.



“ஆமா. எனக்கு தங்கம் வைரம் மேல்லெல்லாம் ஆசை இல்லை. முதல் முதல்லா நீங்க வாங்கி கொடுத்ததுன்னு தான் எனக்கு சந்தோஷம். நான் தூங்கும் போது எனக்கு தெரியாம நீங்க போய் வாங்கிட்டு வந்திங்களா?” என்றாள் நிலா.



“எனக்கு நேர்ல போய் தேடி வாங்கனும்னு ஆசை தான். ஆனா, உன்னை தனியா விட்டுட்டு போக எனக்கு சரியா படலை. அதான் என் கிட்டயே இந்த உலகமே இருக்கே? அதுல உனக்காக அரை மணி நேரம் ஸ்பென்ட் பண்ணி பார்த்து வாங்கினது” என்று தன் மொபைலை காட்டினான்.



வழக்கம் போல் அவனின் போன் அடிக்க, “ஹ்ம்ம் வந்துருச்சு பாரு கரடி. என் சந்தோசத்தை கெடுக்கிறதும் இதுல தான் இருக்கு” என்று திட்டியபடி காதில் வைத்து “சொல்லுடா நல்லவனே! எப்பவும் கரெக்டான நேரத்துல தானே போன் பண்ணுவ?” என்றான் நக்கலாய்.



அவனின் பேச்சை புரிந்துகொண்டவன், “ஏன்டா சொல்லமாட்ட? உங்களுக்காக என் உயிரை பணயம் வச்சிட்டு இங்க இருந்து உங்களை கூப்பிட்டா? நீ ரொமான்ஸ் பண்ண முடியலைன்னு என்னை திட்ற?” என்றான் அர்ஜுன்.



“ரொம்ப பேசாத.. அதான் அங்க உனக்காக ஒரு பொண்ணு பார்த்து கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டோம்ல? அப்புறம் என்ன உனக்கு? அதெல்லாம் விடு. இப்போ எதுக்கு போன் பண்ண அதை சொல்லு முதல்ல?” என்றான் வேலன்.



“நீ நிலாகிட்ட போனை கொடு. உனக்கு போய் போன் பண்ணேன் பாரு. என் புத்தியை எதால அடிச்சிகறதுன்னே தெரியலை?” என்றான் அர்ஜுன்.



“இதுக்கு போய் ஏண்டா பீல் பண்ற? உன் நண்பன் நான் இருக்கேன். உன் கால்ல இருக்கிறதை கழட்டி அடிச்சிக்கோ, அதுக்கு முன்னாடி அதை நல்லா கழுவிக்கோ” என்று சிரித்தான்.



“டேய் நீ மட்டும் என்கிட்ட மாட்டின... அவ்ளோ தான்” என்று கத்தினான் அர்ஜுன்.



“நான் என்ன உன் பொண்டாட்டியா? மாட்டினா கீட்டினான்னுகிட்டு போடா போ... போய் கொடுத்த வேலையை பாரு” என்றான் வேலன் மேலும் அவனை சீண்ட.



“ஐயோ போதும் நிறுத்துங்க உங்க ரெண்டு பேர் சண்டையை. அவர் சொல்ல வந்ததையே மறந்திருப்பார். கொடுங்க என்கிட்டே” என்று வேலனை முறைத்தபடி போனை பிடுங்கிய நிலா. “சொல்லுங்க அர்ஜுன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றாள்.



“என்னை தான் இங்க நல்லா சிக்க வைச்சிட்டிங்களே? அப்புறம் என்ன நல்லா இருக்கீங்களான்னு ஒரு கேள்வி?” என்றான் பொய் கோபத்துடன்.



“சரி கோபிச்சிகாதிங்கண்ணா. என்ன விஷயம் சொல்லுங்க?” என்றாள் கரிசனமாய்.

இங்கே, அவள் கோபப்பட்டதையும் பொருட்படுத்தாது அவளுக்கு முத்தங்களை வாரி வழங்கி கொண்டிருந்தான் வேலன்.



அவனின் செயலில் பேச்சில் கவனம் செல்லுத்த முடியாமல் போனை ஸ்பீக்கரில் போட்டுவிட, வர்மதேவன் கூறியதை கூறி, “நீ ஏதாவது யோசிச்சிருந்தா சொல்லு நிலா. நாம இங்க தாமதிக்கின்ற ஒவ்வொரு நிமிஷமும் ஆபத்துத்தான்” என்றான் சற்று கவலையுடன்.



விளையாட்டுகளுக்கு ஓய்வு கொடுத்து அவன் பேச்சை கவனித்த வேலன்.

“பேசாம இன்னொரு ஆளை அங்க அனுப்பறோம்டா அர்ஜுன். உனக்கு வேலை சீக்கிரமா முடியும்” என்றான் வேலன்.



“ஏன்டா! என் உயிரை பணயம் வச்சது போதாதா? வேற யாரும் இங்க வராதிங்க?” என்றான் லேசான கோபத்தோடு.



“அட மக்கு மங்குனி... நான் சொல்ல வரதை முதல்ல கேளு. அவன் உன்னை மாதிரி ரொம்ப..” என்று வேலன் இழுக்க.



“அறிவாளி இல்லையா?” என்றான் அர்ஜுன்.



“இல்லடா.. உன்னை மாதிரி ரொம்ப தத்தி இல்லை. கேடி பய. எல்லா திருட்டும் தெரிஞ்சவன். காசு கொடுத்தா எங்க வேணா திருடுவான். திருட்டு மட்டும் தான் அவன் தொழில். ஆனா அதிலையும் ஒரு நாணயம் உண்டு அவன்கிட்ட எந்த வேலையா இருந்தாலும் தில்லா இறங்குவான். படிச்சிட்டு திருட தெரிந்த சாமர்த்தியசாலி திருடன்” என்றான் வேலன்.



“யாரடா அது? இவ்ளோ இன்ட்ரோ கொடுக்கிற?” என்றான் அர்ஜுன் ஒன்றும் புரியாமல்.



“சொல்றேன். அவன் அங்க வந்தா மாக்சிமம் ஒன் வீக்ல வேலையை முடிச்சிடுவான். அவன் பேரு திருமாறன். ஊரு ஆந்திரா. தெலுங்கும் தமிழும் கலந்த கலவை அவன்” என்றான்.



“ஒஹ்.. அப்போ நீயும் நிலாவும் பேசிட்டு எனக்கு நைட் மெச்செஜ் அனுப்புங்க. அதுகேத்த மாதிரி நானும் வர்மாவும் இங்க ஏற்பாடு பண்றோம்” என்று போனை வைத்துவிட்டான்.


திருமாறன் உங்க எல்லருக்கும் தெரியும்னு நினைக்கிறன். நம்ம எல்லாரையும் வயிறு குலுங்க சிரிக்க வச்ச ப்ரியாமோகன் “திரு திருடா”ல வர திருமாறன் தான்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
40:

போனை வைக்க சென்ற அர்ஜுன், “டேய் இரு இரு... அவனை வெச்சே இந்த வேலையை முடிக்க முடியும்னா... ஏன்டா! என்னை இந்த பாடு படுத்துனிங்க? அதுக்கு முதல்லயே அவனை அனுப்பி வச்சிருக்கலாம்ல?” என்றான் அர்ஜுன் எரிச்சலாய்.

“ஹ்ம்ம் ஒரு வேண்டுதல் அதான் உன்னை முதல்ல அனுப்பிவச்சோம்” என்றான் வேலன் நக்கலாய்.



“என்ன வேண்டுதல்டா?” என்றான் ஆர்வமாய் அர்ஜுன்.



“ஹ்ம்ம்... இந்த பேப்பெர்ஸ் நம்ம கைக்கு வரணும்ன்னா முதல்ல ஒரு நரபலி கொடுக்கணுமா...ம் நம்பிக்கையான ஒரு சாமியார் சொன்னார். அதுக்கு தான் உன்னை முன்னாடி அனுப்பி வெச்சிட்டு அதுக்கப்புறம் அவனை அனுப்பலாம்னு நானும் நிலாவும் முதல்லயே திட்டம் போட்டோம்” என்று உள்ளுக்குள் சிரித்தான்.



“அய்யய்யோ! இது உண்மையாடா?? இது தெரியாமா நானே வந்து மாட்டிகிட்டேனே?? அடப்பாவிங்களா நீயும் உன் பொண்டாட்டியும் சேர்ந்து எனக்கு கல்யாணம் பண்றேன்னு கருமாதி பண்ண அனுப்பி வச்சிங்களா?” என்று வசை பாடினான்.



“டேய்! சும்மா நிறுத்து... உன் உயிரு அந்த அளவுக்கெல்லாம் வொர்த் இல்லையாம். எங்களுக்கு நியுஸ் வந்துடுச்சு. சோ, உன் திருவாயை கொஞ்சம் மூடினன்னா நல்லா இருக்கும்” என்றான்.



“டேய்! தெளிவா சொல்லுடா. இப்ப என்னதான்டா சொல்லவர??” என்றான் அர்ஜுன் பாவமாய்..



‘வாடி வா! எப்போ பாரு நான் என் பொண்டாட்டிகிட்ட கொஞ்சும் போது தான் உனக்கு மூக்கு வேற்குமோ? இப்போ உன்னை போட்டு ஆட்டுகல்லுல ஆட்டிடோம்ல?’ என்று இல்லாத காலரை மனதினுள் எடுத்து விட்டபடி.

“டேய்! எரும.. எரும...! நானா இந்த பிளான் போட்டேன். உன் அருமை மாமா பொண்ணுனு... சாரி சாரி உன் அருமை தொங்கச்சி போட்ட ப்ளான். சரி என்ன தான் நடக்குதுன்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். செம ஜாலியா இருந்துதுடா அர்ஜுன்” என்று மேலும் வெறுப்பேற்றினான்.



“ம்ப்ச்... சும்மா இருக்க மாட்டிங்களா?? எப்ப பாரு அவரை வம்புக்கு இழுத்துகிட்டு?” என்று முறைத்தபடி மீண்டும் போனை வாங்கிய நிலாவை வேலன் இழுக்க அவன் நெஞ்சோடு மோதி நின்றாள்.



“அண்ணா! அவர் தான் ஏதோ வெறுபேத்த சொல்றார்ன்னா?? நீங்களும் அதை கேட்டுகிட்டு இருக்கீங்க. நீங்க அங்க போனதால தான் இவ்ளோ விஷயம் தெரிஞ்சிது. அதுவும் இல்லாம் தீக்க்ஷிலாவை நீங்க பார்க்க தான் முதல்ல அனுப்பினேன். உங்களுக்கு அவளை பிடிச்சிருக்காண்ணா?? எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க?? எனக்காக நீங்க சம்மதம் சொல்லவேணாம்.” என்றாள் நிலா.



“எனக்கு அவங்களை பிடிச்சிருக்கு நிலா” என்று டென்ஷன் குறைந்து சிரித்தான் அர்ஜுன்.



“ஹ்ம்ம் .. ஓக்கேன்னா மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். முதல்ல இந்த பிரச்சனை சரி ஆகட்டும். திருமாறன் பத்தி அவர்கிட்ட கேட்டுட்டு நான் உங்களுக்கு சொல்றேன். பை” என்று போனை வைத்துவிட்டு திரும்பி தன்னை பேசவிடாமல் தன் கொஞ்சல்களால் தொல்லை செய்து கொண்டிருக்கும் வேலனை இடுப்பில் கரம் வைத்து முறைத்து, “அடங்கமாட்டியாடா நீ??” என்று கேட்டாள்.



“ஒஹ்! நான் ரொம்ப சமத்து பையன் நிலா. உங்க எல்லாருக்கும் தான் என்னை எப்படி ஹாண்டல் பண்றதுன்னு தெரியலை” என்று நெருங்கினான்.



அவனிடம் சிக்காமல் ஓட தொடங்கியவளை இரண்டெட்டில் வளைத்து இருகரங்களால் அள்ளிக்கொண்டு போனான்.



தங்களின் அறைக்கு சென்று மெத்தையில் அவளை கிடத்தியபின் அவளை நோக்க,

“நான் ஆறு மாசம் டைம் சொல்லிருக்கேன். அதுவரைக்கும் என் பக்கத்துலையே வரக்கூடாது” என்றாள் உள்ளத்தில் படபடப்புடன்.



“ஹ்...ஹு... ம்...ம்” என்று உதட்டை சுழித்து ராகம் இழுத்து சிரித்தவனை ‘இவன் ஏதோ ப்ளான் பண்ணிட்டான் போல இருக்கே?’ என்று யோசித்து கொண்டிருக்க.அவள் மேனியில் படாமல் அவளின் மேல் தாவியவன்.



“அங்க பாரு?...” என்று எதிரே இருந்த சுவற்றில் மாட்டியிருந்த காலன்டறை காட்ட.

“என்ன?” என்றாள் ஒன்றும் புரியாமல்.



“ஹ்ம்ம்... இன்னையோட நமக்கு கல்யாணம் ஆகி ஆறு மாசம் முடிஞ்சுடுச்சு... அதோட நீ சொன்ன நாளும் முடிஞ்சிடுச்சு...” என்று அவள் நெற்றியில் உதடுகள் குவித்து தன் மூச்சு காற்றை ஊத, கிறங்கி தான் போனாள் அவனின் தென்றல்.



“இனி என்னை உன்னால தடுக்க முடியாது...“ என்று கண்ணடித்தான்.



இறுக விழிகளை மூடியவள் அவன் அமைதியாய் இருப்பதை உணர்ந்து விழிதிறந்து பார்க்க, அங்கே அவளையே காதலோடு வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான் வேலன்.



திடிரென்று கிழே இறங்கியவன் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு அழகிய நீலக்கல் பதித்த மோதிரத்தை எடுத்து அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து “எனக்கு ப்ரொபோஸ் பண்ணல்லாம் தெரியாது... எனக்கு எல்லோர்கிட்டயும் கடினமா நடந்தே பழக்கம் ஆகிடுச்சு... உனக்காக மட்டும்... உன்கிட்ட மட்டும் மாறியிருக்கேன்... இன்னைக்கு இல்ல இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த காதலிக்க தெரியாத புருஷனுக்கு மனைவியா வருவியா...!!!” என்று கன்னத்தில் இரு பக்கமும் குழிவிழ சிரித்தபடி மோதிரத்தை நீட்டி கேட்டான்.



அவனின் இந்த புதுமுகத்தை தன் இருகரங்களால் வாய் மூடி பார்த்து பிரமித்து ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டி கண்களில் நீர் வழிய புன்னகைத்தாள்.



“எனக்கு உன் உதட்டில் இருந்து வரும் வார்த்தையா வேணும் நிலா” என்றான் எழாமல்.



“இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்... நீங்களே என்னை வேணாம்னு சொன்னாலும்... நான் தான் உங்களுக்கு மனைவியா வருவேன். அப்பவும் இதே மாதிரி உங்களை காதலிச்சிட்டே இருப்பேன்.” என்றாள் அவன் முன் நெற்றியில் மெல்லிய முத்தத்தை பதித்து.



அவளின் கையில் அந்த மோதிரத்தை போட்டுவிட்டவன்.



“உனக்கு பிடிச்சிருக்கா?” என்றான்.



“ரொம்ப நல்லா இருக்கு.. இது எப்போ வாங்கனிங்க? இதையும் உங்க பி.ஏ கிட்ட வாங்கிட்டு வரசொன்னிங்களா?” என்றாள் லேசான ஏமாற்றமாய்.



“இல்லை... உனக்காக நான் ஆசையாய் தேடி வாங்கினது” என்றான் வேலன் கண்கள் சிமிட்டி.



“நீங்களா?? எப்போ??” என்றாள் விழிகள் விரித்து.



“உனக்கு ஆக்சிடென்ட் ஆச்சுல்ல அன்னைக்கு என்னோட காதலை உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணி நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்கனும்னு ரொம்ப ஆசையோட பெரிய சர்ப்ரைஸ் ஏற்பாடு பண்ணியிருந்தேன். ஆனா, அதுக்குள்ள என்னன்னவோ நடந்துருச்சு” என்று லேசாக கண் கலங்கினான்.



“சரி விடுங்க. முடிஞ்ச கதைய எதுக்கு பேசனும்?” என்று அவனை எழுப்பினாள்.



“நான் கேட்டதுக்கு இன்னும் ஒன்னும் சொல்லலையே நீ?” என்றான் குறும்பாக.



“என்ன கேட்டிங்க ஒன்னும் கேக்கலையே?” என்றாள் நிலா.



“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்டேனே?” என்று கண்ணடித்தான்.


 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
173
Points
43
41:

சிறிது நேரம் யோசித்தவள், "எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் வேணும்" என்றாள் அவனை பார்க்காமல் தலை கவிழ்ந்து.



மலர்ந்த முகத்தில் ஒரு ஏமாற்றம் பரவ, உடனே அதை மறைத்தவன், "சரிடா. நோ ப்ரோப்ளம். டேக் யுவர் ஓன் டைம். ஐ வில் பி தேர் பார் யு ஆல்வேஸ்." என்று அங்கிருந்து நகர, "என் மேல கோபமா?" என்றாள் தவிப்பாய்.



"ச்சே! ச்சே! இல்லடா. என் காதலுக்காக இத்தனை வருஷமா காத்திட்டு இருந்த. உனக்காக நான் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கேன்." என்று வெளியேறினான்.



அவனின் மனதை நோகடித்து விட்டோம் என்று மிகவும் வருந்தியவள். பின் மனதை தேற்றி கொண்டு வெளியே கிளம்பினாள்.



"எங்க போற?" என்றான் பின்னால் இருந்து.



"இல்ல... வீட்ல இருந்து ரொம்ப போர் அடிக்குது. அதான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாம்னு..." என்ற அவன் முகம் காண தயக்கமாய்.



"இங்க என் முகத்தை பார்த்து பேசு" என்றான் வேலன்.



எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தவளிடம் நெருங்கி. "இங்க பாரு. நான் உன் புருஷன். உன் மனசுல தோன்றதை தைரியமாய் சொல்லலாம். உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு. அதே போல எனக்கு மட்டும் தான் உன் மேல உரிமை இருக்கு. சோ, எதையும் நினைச்சு குழப்பிக்காம வா வெளிய போயிட்டு வரலாம்" என்று அவளின் இடையில் கரம் கொடுத்து அழைத்து சென்றான்.



அவனின் தீண்டலில் தன் உயிரே போக, கடினப்பட்டு அமைதியாய் உடன் சென்றாள்.



காரில் இருவரும் ஏறி சிறிது தூரம் சென்று இருக்க, "காரை நிப்பாட்டுங்க" என்றாள் சற்று சத்தமாய்.



"எதுக்கு?" என்று கேட்டபடி காரை நிறுத்தினான் வேலன்.



"எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்" என்று அங்கே இருந்த தள்ளுவண்டி கடையை காட்டி சிறு குழந்தை போல் கேட்க சிறய புன்னகை ஒன்றை உதிர்த்து.



"நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன். ஐஸ்க்ரீம் தானே நான் வாங்கி தரேன். ஆனா, இது வேண்டாம். இப்போ தான் உனக்கு உடம்பு கொஞ்சம் நல்லா இருக்கு. இதெல்லாம் என்ன தண்ணீர்ல செஞ்சுருப்பாங்களோ? உனக்கு நான் ஆவின்ல வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி நிறைய வாங்கி தரேன்." என்று புன்னகைதான்.



"ஹ்ம்ம் " என்று தலை அசைத்தாலும் முகம் சற்று வாடி விட.



"நிலா குட்டி. நீ என் செல்ல பொண்டாட்டி தான? நான் சொன்னா கேட்ப தான? நான் கண்டிப்பா நிறைய வாங்கித்தரேன்" என்று சமாதனம் கூறி அழைத்து சென்றான்.



ஒரு ரெஸ்ட்டாரன்டின் முன் வண்டியை நிறுத்த, "எதுக்கு இங்க நிறுத்திருக்கோம்?" என்றாள் நிலா.



"எனக்கு பசிக்குது. சாப்பிடலாமா?" என்றான் குழந்தை முகம் கொண்டு.



"சரி" என்று இறங்கி உள்ளே சென்றனர்.



ஒரு அறையினுள் சென்று அமர்ந்த பின், "என்ன இங்க யாருமே இல்ல?" என்றாள் விழிகளை சூழல விட்டு.



"ஆமா. இது நமக்காக புக் செய்யப்பட்ட ப்ரைவசி ரூம்." என்று சிரித்தான்.



"என்னது நமக்கு மட்டுமா?" என்றாள் கண்ணை அகலமாய் விரித்து.



'ஹும்ம் இந்த கோலி குண்டு கண்ணை வச்சி என்னை சாகடிக்ரதுக்குன்னே பிறந்துருக்கா? இப்படில்லாம் நான் சும்மா இருக்க என்ன சாமியாரா? ங்..க்..கு..ம் அவனுங்க கூட இப்பல்லாம் அமைதியாய இருக்கறதில்ல? ஒரு சிலர் செய்ற தப்பால பழைய காலத்துல இருந்த தவ முனிவர்களுக்கு கூட கெட்ட பேரு' என்று தனக்குள் பேசிக்கொண்டவன்.



"ஆமா பின்ன, என் பொண்டாட்டி எவ்ளோ அழகா சாப்பிட்றானு நான் மட்டும் தான் ரசிக்கனும். அதுக்கு தான்" என்று சிரித்தான்.



அவர்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து உண்ண, வேலன் நிலாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.



அவள் கடைசியாக சாப்பிட்டு முடிக்கும் முன் பில்லை செட்டுல் செய்த பின், "இருங்க ரெஸ்ட் ரும் போயிட்டு வந்துறேன்." என்று நகர்ந்தாள்.



அவள் ரெஸ்ட் ரூமை அடைந்து சில நொடிகள் கடந்திருக்கும்.



ஜானிடம் இருந்து போன் வந்தது.



அங்கே பெரிய பிரச்சனை நடப்பதாகவும் இன்வெஸ்டர்ஸ் சிலர் தங்கள் பணத்தை திருப்பி கேட்பதாகவும், உடனே அவன் அங்கு வரும் சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும் கூறினான்.



'இது எப்படி சாத்தியமாகும்? என்ன பிரச்சனை? எதுக்கு திடிர்னு போட்ட பணத்தை எடுக்க சொல்லுவாங்க?' என்று குழம்பி கொண்டிருக்க, நிலா அவனை நெருங்கினாள்.



"என்ன ஆச்சு மாமா? ஏன் டென்ஷனா இருக்கீங்க?" என்றாள்.



"ஒன்னுமில்லடா. வீட்டுக்கு போய் பேசிக்கலாம்" என்று அங்கிருந்து கிளம்பினர்.



வீட்டிற்கு வந்தவுடன் நிலாவின் முகம் வாடி இருப்பதை கவனித்தவன். "என்ன ஆச்சு என் நிலா குட்டிக்கு? ஏன் முகம் இப்படி வாடி இருக்கு? உடம்புக்கு ஏதும் முடியலையோ?" என்றான் அவளின் தலை முடியை வருடியபடி.



அவனின் கரத்தை தட்டிவிட்டவள். "எனக்கு ஐஸ்க்ரீம் கேட்டேன்ல வாங்கி தரவே இல்லை?" என்றாள் குற்றம் சாட்டும் குரலில் குழந்தை போல்.



அவளை கண்டு சிரித்தவன். "இவ்ளோ தானா? இதுக்கு போய் யாராவது முகத்தை இப்படி தூக்கி வச்சிட்டு இருப்பாங்களா?" என்று தன் கைகளில் முதுகிற்கு பின்னால் மறைத்து வைத்திருந்த ஐஸ்க்ரீமை எடுத்து கொடுத்தான்.



"ஐ!!" என்று துள்ளி குதித்து எழுந்து நின்றவள். சட்டென அவனை கட்டி பிடித்து கன்னத்தில் ஒரு முத்தத்தை கொடுத்து அவனிடம் இருந்து ஐஸ்க்ரீமை வாங்கி சாப்பிட ஆரம்பித்தாள்.



மூன்று பெரிய டப்பாக்கள் நிறைய வாங்கி வந்திருந்தான்.



அவளின் இந்த செயலை கண்டு ஒரு நொடி அசந்தாலும் அவளின் குழந்தைத்தனம் அவனை வெகுவாய் கவர்ந்தது.



அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை எதிரில் அமர்ந்து விழி மூடாது அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.



ஒவ்வொரு முறை அவள் தொண்டை குழியில் விழுங்கும் பொழுதும் ஐஸ்க்ரிமின் சுவையில் நாக்கை சுழற்றி, உதட்டை சுழித்து சாப்பிடும் அவளை கண்டு அவனுக்கு தான் பெரும்பாடாகி கொண்டிருந்தது.



முழுவதையும் சாப்பிட்டு முடித்தவள். "ரொம்ப சூப்பர். இன்னொரு பாக்சும் இப்பயே சாப்பிடவா?" என்றாள் விழிகளை சுருக்கி சிறுகுழந்தை போல்.



எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், தன் ஆட்காட்டிவிரலை காட்டி அவளை தன்னிடம் வருமாறு அழைத்தான்.



"என்ன?" என்று அவனின் அருகில் செல்ல, அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தவன்.



"ஒன்னு சாப்பிட்டதுக்கே... இங்க எனக்கு நாக்கு தள்ளுது." என்றான் விஷமமாய் புன்னகையோடு.



ஒன்றும் புரியாமல் முழிக்க, " நீ சரியாவே சாப்பிடலை" என்று அவள் இதழோடு தன் இதழை சேர்த்து அதை உண்ண ஆரம்பித்தான்.



மூச்சு வாங்க அவள் நெற்றியோடு மோதி நின்றவன். "இதுபோல விஷப்பரிட்சைல்லாம் எனக்கு இன்னொரு தடவை வைக்காத?? அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது." என்று விழி மூடிக்கொண்டான்.



அவளும் எதுவும் பேசாமல் விழிமூடி இருக்க.



"நிலா" என்றான் மெதுவாய்.



"ம்" என்றாள் நிலா.



"ஜான் அங்க கம்பெனில ஏதோ பிரச்சனை உடனே வர சொல்லுறான். எனக்கு உன்னை விட்டுட்டு போக முடியலை. அதுவும் தனியா விட்டுட்டு போறதில சுத்தமா உடன் பாடில்லை. என்ன செய்றது?" என்றான் வேலன்.



"ஹ்ம்ம்.. பரவால்ல மாமா பயப்படாதிங்க. அத்தை வந்துருவாங்க. பயப்படாம போயிட்டு வாங்க. நான் பார்த்துகிறேன்" என்று சமாதானப்படுத்தினாள்.



"ஹ்ம்ம்... சரி. முதல்ல அந்த திருமாறன் கிட்ட பேசிடுவோம்" என்று போனை எடுத்து டயல் செய்தான்.



"ஹலோ! யாருங்க?" என்ற சுத்தமான் தமிழ் குரல் கேட்கவே, 'நம்பரை மாத்தி போட்டுடோமோ?' என்ற சந்தேகத்தில், தன் போனை காதிலிருந்து எடுத்து நம்பரை ஒரு முறை செக் செய்தான்.



'கரெக்ட் நம்பர் தான்' என்று உறுதி செய்தவன்.



"கேன் ஐ ஸ்பீக் டு திருமாறன்?" என்று கேட்டான்.



"திருமாறன் ஐயா ஸ்பிக்கர் விக்கிறதில்லைங்க. எதுக்கும் நீங்க கொஞ்ச நேரம் கழிச்சி போன் பண்ணி கேளுங்க. அவரு ஆட்டுக்கறி குழம்பு வயிறு நிறைய சாப்பிட்டு நல்லா தூங்குறாரு." என்றான்.



"வ்ஹாட்?" என்றான் வேலன் கோபமாய்.



"என்னங்க நீங்க? முதல்ல ஸ்பீக்கர் கேட்டிங்க? இப்போ வாத்து கேக்குறிங்க? இதுக்கு போய் எதுக்கு அவரை தொந்தரவு பண்ணிக்கிட்டு, எங்க ஊருக்கு வாங்க இங்கன நிறைய சுத்திகிட்டு இருக்கு நாலு புடிச்சு தரேன்" என்றான் இடிச்சபுளி.



"யு ஸ்டுபிட். வ்ஹூ ஆர் யு மென்? வ்ஹெர் இஸ் திருமாறன்?" என்றான் கடுப்பாய்.



"ஐயோ! யாரு பெத்த புள்ளையோ? தமிழ் தெரியாது போல இருக்கே? போன்லயே சாமி வந்துடுச்சே? என்ன பண்றது இப்போ?" என்று தனக்கு தானே பேசிக்கொண்டவன்.



'இரு வரேன்' என்று வேகமாக ஓடி சென்று திருநீற்று டப்பாவை எடுத்து வந்தவன். போனில் கொஞ்சம் தூவி, "ஆத்தா... மாரியாத்தா... அந்த புள்ள மேலர்ந்து இறங்கிடு தாயே" என்றான் இடிச்சபுளி.



மீண்டும் போனை காதில் வைத்து, "இங்கன எங்க ஊர்லைய நிறைய படிச்ச புள்ள தான் எங்க இளமாறனை கட்டிக்க போகுது. இங்க வந்தா உனக்கு தமிழ் சொல்லி தர சொல்றேன்" என்றான் இடிச்சபுளி.



"யோவ்! யாரு யா நீ? எனக்கு தமிழ் நல்லா தெரியும். எங்கய்யா அந்த திருமாறன்?" என்று கத்த.



"இதை முதல்லயே தமிழ்ல கேட்டுருந்தா சொல்லிருப்பேன்ல? இரு.." என்று திருமாறனை எழுப்பி போனை கொடுத்தான்.



"ஹலோ!" என்றான் திரு.



"ஹலோ திருமாறன். நான் வேலன் பேசறேன்" என்றான்.



"செப்பு சார்?" என்றான் பவ்யமாய்.



"உன்னால ஒரு வேலை ஆக வேண்டி இருக்கு. ரெண்டு நாள்ல கிளம்பி வா" என்றான்.



"சார். நேனு தமிழ்நாட்டில தான் உந்தி சார்.. நுவ்வு எப்புடு வொச்சேசினோன்னு செப்பு. நேனு அப்புடே வொச்செசானு?" என்றான் திருமாறன்.



"சரி. ஒரு வேலையாய் நான் வெளிய போறேன். சரியா நாளைக்கு மறுநாள் இங்க வந்துரு" என்றான்.



"ஓகே சார்" என்று போனை வைத்தான் திருமாறன்.



"உன்னை யாரு என் போனை எடுக்க சொன்னது?" என்றான் முறைப்பாய் இடிச்ச புளியை பார்த்து.



"உன் போன் ரொம்ப நேரமா அடிச்சிக்கிட்டு இருந்துச்சு. அதான் எடுத்தேன்" என்றான்.



"இனி எடுக்காத" என்று சென்றான் திரு.



இங்கே, ஏர்போர்ட் வரை வரேன் என்று கூறியவளை வேண்டாம் என்று தடுத்துவிட்டான் வேலன்.



அவன் வீட்டில் இருந்து கிளம்பியவுடன் ஜானிற்க்கு போன் செய்தாள்.



"இஸ் எவ்ரிதிங் கோயங் குட் மிஸ்டர் ஜான்?" என்றாள் அதிகார தோரணையில்.



"எஸ் மாம். ஐ ப்ரிபர்ட் ஆல் யு செட்." என்றான் ஜான்.



"ஹ்ம்ம்.. குட் அண்ட் யு ஹாவ் டு இன்க்ரீஸ் தி ப்ரோடக்க்ஷன் ஆப் ஹிம். இட் வூட் பி த்ரீ டைம்ஸ் டைட் செக்யூரிட்டி பரம் தி லாஸ்ட் டைம். டிட் யு காட் மீ?" என்றாள் மிரட்டும் குரலில்.



"யா மேம். ஐ ஆம் சுயூர். வீ ப்ரோடக்ட்." என்றான் ஜான்.



"இப் எனிதிங் ஹாப்பென்ஸ் டு ஹிம். ஐ வில் ஷோ யு ஆல் இன்ச் பை இன்ச் டெத்த்... காட் இட்" என்றாள்.



"எஸ் மேம்" என்று போனை வைத்தவன்.



'திஸ் விமன்'ஸ் லவ் வில் டூ எனிதிங் டு சேவ் ஹிம்... டேன்ஜரஸ். ஐ ஹாவ் டு பி அலெர்ட் நொவ்.' என்று தனக்குள் பேசிக்கொண்டு நகர்ந்தான்.



அரைமனதுடன் கிளம்பியவன் தன் ப்ரைவசி ஜெட்டில் கிளம்பினான்.



அங்கு காத்திருக்கும் அதிர்ச்சிகள் என்னவாக இருக்கும்....??
 
Top Bottom