- Messages
- 271
- Reaction score
- 173
- Points
- 43
42:
பிளைட்டில் இருந்து இறங்கிய வேலனிடம் ஓடி வந்தான் ஜான்.
வேலனை சுற்றி நாலு பேர் பாடிகார்ட்ஸ் போல நடக்க ஒன்றும் புரியாமல், "வ்ஹாட்ஸ் ஆல் திஸ் ஜான்? ஹூ ஆர் தே? வை தே ஆர் பாலோவிங் மீ?" என்றான் சிறிது கோபத்துடன்.
"சார். தே ஆர் யுவர் பாடிகார்ட்ஸ் பார் செகியூரிட்டி பார்ப்ஸ்" என்றான் லேசான பதற்றத்துடன்.
'என்ன ஆச்சு இவனுக்கு ஏன் இவ்ளோ பயந்தா மாதிரி இருக்கான்?' என்று தனக்குள்ளே யோசித்தவன்.
"இஸ் எவரிதிங் கோயிங் வெல் ஜான். இப் ஐ ஆஸ்க்ட் இட் டு டூ இட்?" என்றான் மீண்டும்.
"சார் இட்ஸ் நாட் யுவர் ஆர்டர். பட் மேம் ஆஸ்க் மீ டு டூ திஸ். இப் எனிதிங்க் ஹாபென்ஸ் டூ யு, டேபநெட்லி ஷி கில்ஸ் மீ" என்று சிரித்தான்.
'அடடா! நம்ம ஆளு இங்கயும் அவள் வேலைய காட்டிட்டா போல இருக்கே? இப்படி பயப்பட்றான்' என்று சிரித்தபடி நடந்தான்.
நேராக வீட்டிற்கு செல்லாமல் அலுவலகத்துக்கு சென்றவன் அனைவரையும் அழைத்து மீட்டிங் வைத்து, எல்லோரையும் சமாதானபடுத்தி எல்லாம் சரி செய்து மணியை பார்க்க இரவு ஒன்பது மணி.
"ஒன்பது மணி ஆகிடுச்சா? இப்பயே ப்ளைட்ல கிளம்பலாம். ஆனா, என் பொண்டாட்டி இந்நேரத்துக்கு சேப் இல்லாம உன்னை யாரு வர சொன்னதுன்னு உயிரை எடுத்துருவாளே?" என்று தனக்கு தானே பேசிக்கொண்டவன் அங்கே இருந்த தனது வீட்டிற்கு சென்றான்.
விளக்குகள் எதுவும் போடாமல் இருட்டாக இருக்க ஒரு நொடி நிலா தான் வந்து போனாள் வேலனின் மனதில்.
"ஹ்ம்ம்... என் பொண்டாட்டி என் கூட இருந்திருந்ததா இந்த வீடு இப்படி இருக்குமா?" என்று பெருமூச்சி விட்டவன்.
"ஐ மிஸ் யு டி பொண்டாட்டி" என்று தனக்கு தானே சொல்லி கொண்டு அங்கே இருந்த விளக்கை போட்டு விட்டு நிலாவிற்கு போன் செய்தான்.
நிலா போன் எடுக்காததால் அவளை திட்டியபடியே ஹரிக்கு போன் செய்தான்.
"ஹலோ!" என்றான் ஹரி.
"ஹலோ! நிலாக்கு இன்னைக்கு நிறைய தடவை போன் பண்ணிட்டேன். போன் எடுக்கலை ஹரி. போய் கொஞ்சம் பார்த்துட்டு போன் பண்றியா?" என்றான் சிறிது கவலையுடன்.
"சார்! நான் ஈவனிங் செவன் ஒ கிளாக் வீட்டுக்கு போயிருந்தேன். மேடம் நல்லா இருக்காங்க சார். ரொம்ப டையர்டா இருக்கு டேப்லெட் போட்டு தூங்க போறேன்னு சொன்னாங்க சார்." என்றான்.
"உடம்புக்கு ஒன்னும் இல்லையே?" என்றான் பதட்டமாக.
"இல்ல சார். பயபடாதிங்க. ஹாஸ்பிடல் வேணா போயிட்டு வரலாம்னு சொன்னேன். மேடம் வேணாம்னு சொல்லிடாங்க சார்" என்றான் ஹரி.
"அப்போ ஓகே. நான் நாளைக்கு காலைல கிளம்பிருவேன். நான் பார்த்துகிறேன்" என்று போனை வைத்தவன்.
கதவை திறக்க. அவன தலையில் சில்லென ஒரு வாளி நிறைய நீர் வந்து பொத்தென்று விழுந்தது.
ஒரு நொடி என்ன நடந்தது என்று யோசிப்பதற்க்குள் இப்படி நடந்துவிட்டது.
'என்னதிது? ' என்று நீரை முகர்ந்து பார்க்க பன்னீர் வாசம் வந்தது.
அதோடு தரையிலும் தன் தலையிலும் பார்த்தவன் முழுவதும் மல்லிகை பூ சிதறிக்கிடக்க.
'நம்ம ஊரு மல்லி. இங்க கிடைக்காதே? யாரு செஞ்சிருப்பா?' என்று யோசித்தபடி தன் மாடியறை நோக்கி நடக்க சட்டென நின்றான். அவன் பாதத்தின் கீழ் மலர் இதயம் வரைந்து அதில் ஒரு காகிதம் சொருக பட்டிருந்தது.
ஒன்றும் புரியாமல் மெல்லிய புன்னைகையோடு அதை எடுத்து பிரித்தான்
"உன்
வாய்மொழி தேவையில்லை...!
உன்
விழியின் மொழி போதும்...!!!
அது உணர்த்தும்
உன் காதல் முழுவதையும்...!!!
மலர் இதயத்தை கண்ட நீ
உன்
இதயத்தை காண ஓடி வா...!!!"
-உன்... விழித்தென்றல்...!!!
அதை படித்தவனின் இதயம் அதிகமாய் துடிக்க மெல்ல ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தான் தன் அறை நோக்கி.
அறையின் முன் நின்றவன் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டபின் கதவை திறக்க, அங்கே அவன் கண்ட காட்சி அவன் விழிகளே விழிகளையும் தாண்டி வந்து விழுந்து விடும் போல் இருந்தது.
அங்கே,
அறையின் தரையில் ஒவ்வொரு அடியும் ரோஜா மலரால் நிரப்ப பட்டு ஆங்காங்கே மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருக்க, மஞ்சம் முழுவதும் மல்லிகை மலர் நிரப்ப பட்டிருந்தது. அறையின் வாசம் அவன் நாசியை தாண்டி அவனுள் எதையோ உரைக்க விழிகள் நிலாவை தேடியது.
தன் காலில் இருந்த ஷூவை கழட்டி வைத்து விட்டு மென்மையான மலரில் நடக்க அவனுக்குள் ஒரு நிம்மதி பரவியது.
விழிகள் மெத்தையில் வைக்கபட்டிருந்த பரிசு பொருளின் மேல் நிலைக்க வேகமாய் அதை எடுத்து பிரித்தவன் முகத்தில் மகிழ்ச்சி மின்னியது.
அதில் நம் பாரம்பர்யத்தின் பட்டு வேஷ்ட்டி சட்டை இருந்ததோடு அதனோடு இருந்த குறிப்பு சீட்டை எடுத்து படித்தவன்.
"எத்தனை காலம் காத்திருந்தேன் உனக்காக...
உன் விழிகளே எனக்கான காதலை
முழுவதுமாய் சொல்ல...
நம் வாழ்வின் முதலடியை எடுத்துவைக்க
உனக்காக
நான் கொடுக்கும் சிறுபரிட்சை
இவ்வுடை வுடுத்தி
என் பெண்மையை உனக்குள் உணர
விழிமூடி என் வாசம் அறிந்து வா...!!!"
உன்... விழித்தென்றல்...!!!
"ஓஹ காட்!! இவ தான் என் மரணத்துக்கு காரணமாக போறா" என்று சிரித்தவன் ஆயிரம் எண்ணங்கள் மூளையில் உதிக்க குளித்து புது உடை உடுத்தினான்.
தயாரான பின் தன் காதல் மனைவியை காண ஆவல் எழ அவளை தேடி சென்றான்.