Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 21

திகழொளிக்கு மிகன் முனுமுனுத்தது நன்றாகவே கேட்டது. ஆனாலும் ,பதில் எதுவும் சொல்லாமல் சில நொடிகள் நின்றிருந்தாள்.


மிகனோ, மறுபடியும் தன் கணினியில் பார்வையை பதிந்திருந்த வேளை அவனின் அலைபேசி அழைத்தது.


அழைப்பை யோசனையுடன் எடுத்தவனின் குரலில் பதற்றம் தென்பட்டது. அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ? குரலில் தவிப்புடன் "இதோ இப்பவே வரேன்.." என்றான்.


அதுவரை அமைதியாக நின்றிருந்த திகழொளி அவன் அருகில் சென்று.."மிகன் என்னாச்சு ? ஏன் இவ்வளவு டென்ஷன்..?" என்று அவளுமே தவிப்புடன் கேட்டாள்..


"திகழி பாப்பா கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு விட்டதாம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போய் இருக்காங்க.." என்றான் குரல் தழுதழுக்க..


"அச்சோ..அடி பலமா? மகிழினி எப்படி இருக்கிறா..? பெரிய காயம் இல்லை தானே..? என்று கணவனின் பதட்டத்திற்கு சற்றும் குறையாமல் அவளும் பதறினாள்.


"தெரியலே அப்பா தான் போன் செய்தார். அடி பட்டு இருப்பதை மட்டும் தான் சொன்னார் . வேறு எதுவும் சொல்லலே.."

"சரி வாங்க நானும் வரேன் சீக்கிரம் போலாம்.."


"ம்.. ஒரு நிமிஷம் நம்ம இரண்டு பேருக்கும் ஆஃப் டே லீவ்க்கு நான் மெயில் போட்டுட்டு வரேன்.."


"சரி நான் போய் என் ஹேண்ட்பேக்
எடுத்துட்டு வரேன்.." என்று அவளும் தன் இருக்கைக்கு அவசரமாக ஓடினாள்.


இருவரும் ஒரு வழியாக கிளம்பி நேராக உலக மாறன் சொன்ன மருத்துவமனைக்கு சென்றார்கள்.


அவசரமாக உள்ளே ஓடியவர்களை உலக மாறன் தான் எதிர்கொண்டு மகிழினி இருந்து அறைக்கு அழைத்துச் சென்றார்.


குழந்தைக்கு தலையில் பெரிய காயம் ! இரத்தமும் அதிகமாக வீணாகி இருந்தது. காயத்திற்கு ஏழு ,எட்டு தையல் போட்டு இருந்தார்கள்.


குழந்தை வலியிலும்,அழுத களைப்பிலும் தூங்கி இருந்தாள் .


காஞ்சிதுரை அழுது கொண்டிருந்த தன் மனைவி மணியரிசியை சமாதனாப்படுத்திக் கொண்டிருந்தார்.


திகழொளி மணியரசியிடம் சென்று "மணியம்மா பாப்பாக்கு எப்படி அடிபட்டுச்சு.." என்று கண்களில் கண்ணீர் தேங்க கேட்டாள். அவளுக்கு குழந்தை இருந்த நிலமையை பார்க்க சகிக்கலே..


"வீட்டிற்குள் விளையாடிட்டு இருந்தவ வெளியில் ஏதோ கார்‌ சத்தும் கேட்டதும், நீங்க வந்துட்டீங்கன்னு நினைச்சு நான் கூப்பிட கூப்பிட ஓடியவள் கால் தட்டி கீழே விழுந்துட்டா..படியின் முனை மண்டையில் பட்டு அடிபட்டுருச்சு திகழி.. இரத்தம் நிறைய வந்துருச்சு..குழந்தை பயந்துட்டா.."என்றார் அழுதுகொண்டே..


"அச்சோ.. காயம் பெரிசா இருக்கே ? அத்தை டாக்டர் என்ன சொன்னாங்க.."என்று கவலையுடன் கேட்ட மிகனிடம்..


"எதுக்கும் ஸ்கேன் எடுத்து பார்த்துக்கலாம்ன்னு சொல்றார்..ஒரு நாள் இருந்துட்டு போகச் சொன்னார்.." என்றார் குரல் கம்ம..


"ஓ..!"என்றவன் சொல்ல முடியாத வருத்தத்துடன் குழந்தையின் அருகில் சென்று மகிழினியின் பிஞ்சு விரல்களை மென்மையாக பற்றினான்.


திகழொளியோ, குழந்தையின் தலையை மென்மையாக வருடியபடி அவள் அருகிலே அமர்ந்து கொண்டாள்.



ஒரு வழியாக குழந்தைக்கு எடுக்க வேண்டிய அனைத்து பரிசோதனையும் எடுத்துப் பார்த்துவிட்டு, " பயப்படும் படி எதுவும் இல்லை..இன்று மட்டும் இருந்துவிட்டு போங்க.." என்று மருத்தவர் கூறிய பின் தான் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.


அன்று இரவு திகழொளியும், மிகனும் மருத்துவமனையில் மகிழினியுடன் தங்கிக் கொண்டார்கள்.பெரியவர்களைக் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.


மகிழினியோ, திகழொளியை பார்த்தவுடன் அவளை தூக்கி வைக்கச் சொல்லி அழுதாள்..


குழந்தைக்கு வலி ஒரு புறமும் பயம், ஒரு புறமும்‌ இருந்ததால் தாய்யின் அரவணைப்புக்கு ஏங்கியது.


அமுதனும் , பொன்னியும் விஷயம் கேள்விப்பட்டதும் குழந்தையை வந்து பார்த்துச் சென்றார்கள்.

இரவு வரை பொழுது வேகமாக ஓடியது.

அதன் பிறகு திகழொளி குழந்தைக்கு விளையாட்டு காட்டி இரவு உணவை ஊட்டிவிட்டாள்.

குழந்தையோ, அவளை விட்டு நகராமல் அவளோடே ஓட்டிக் கொண்டது.


சினுங்கிக் கொண்டே இருந்த குழந்தையை படுக்கையில் அமர்ந்து தன் நெஞ்சில் சாய்த்து தட்டிக் கொடுத்து உறங்க வைத்தாள்.

மிகனோ ,மனைவி தூங்காமல் இருப்பதைக் கண்டு "திகழி எத்தனை நேரம் இப்படியே வைச்சுட்டு இருப்பே..பாப்பா தூங்கிட்டானா பெட்லே படுக்க வச்சுட்டு நீயும் படுத்து தூங்கு.."

" பாப்பா கொஞ்சம் அசைத்தாளே எழுந்துக்கிறா.. பராவாயில்லை நான் இப்படியே தூங்கிக்கிறேன் நீங்க போய் படுங்க.." என்றாள்.

"விடிய விடிய இப்படியே எப்படி தூங்குவே? இரு நான் மெல்ல அவளை எடுத்து கீழே படுக்கவைக்கிறேன் .."என்று குழந்தையை மெல்ல தூக்கியதும் மகிழினி சினுங்கத் தொடங்கினாள்.

மிகனோ ,சட்டென்று படுக்கையில் அப்படியே அமர்ந்து குழந்தையை தன் நெஞ்சோடு சாய்த்து தட்டிக் கொடுத்தான்.

ஆனால், மகிழினி நன்றாக விழித்துக் கொண்டு அழுது கொண்டு திகழொளியிடம் தாவியது.

மிகனோ, ஒரு பெருமூச்சுடன் மனைவியிடம் குழந்தையை கொடுத்து விட்டு அவன் படுக்கையில் இருந்து எழுந்தான்.

ஆனால், மகிழினி அவனையும் விடாது அருகில் அமரச் சொல்லி அழுதது.


காயம் பட்டதில் குழந்தை மிகவும் பயந்து இருந்தாள். அதுமட்டுமின்றி பரிசோதனைகள் எல்லாம் அவளை மேலும் கலவரப் படுத்தி இருந்தது.


அதனால் அம்மா, அப்பா அருகில் வேண்டும் என்று அடம் பிடித்தாள்.

மிகனும் குழந்தைக்காக படுக்கையில் கால் நீட்டி அமர்ந்தான்.

திகழொளியிடமும், மிகனிடமும் மாறி மாறி குழந்தை தாவிக் கொண்டே இருந்தவள் ஒரு வழியாக திகழொளியின் நெஞ்சில் சாய்ந்து படி தூங்கியது.

ஒரு வழியாக குழந்தை உறங்கியதும் திகழொளியும், மிகனும் அப்படியே அமர்ந்தபடியே தூங்கினார்கள்.

பாதி இரவில் விழிப்பு வர விழித்த மிகன்! திகழொளி குழந்தையை இறுக்கிப் பிடித்தபடி குழந்தையின் தலை மீது தன் தலையை சாய்த்து வைத்து, தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்தான்.

அவள் இப்படியே காலை வரை தூங்கினால் கண்டிப்பாக கழுத்து சுளுக்கு பிடித்துக் கொள்ளும் என்று நினைத்தவன், அவள் அருகே நகர்ந்து அமர்ந்து மனைவியின் தலையை தன் தோளில் சாய்த்த படி அணைத்துக் கொண்டான்.

அதன் பிறகு கணவன் மனைவி இருவருமே நன்றாக தூங்கினார்கள்.

பொழுது விடிந்த பின்னரே திகழொளிக்கு விழிப்பு வந்தது .தூக்க கலக்கத்தில் விழித்தவளுக்கு ஏதோ வித்தியாசமாக பட நன்றாக கண்களை திறந்து பார்த்தாள்.


அப்பொழுது தான் கணவன் தன்னை அணைத்துக் கொண்டு அமர்ந்து இருப்பது தெரிந்தது.

ஏனோ, அது மனசுக்கு இதமாக இருந்தது. அவனின் அணைப்பில் இருந்து விலக தோன்றவில்லை.. மீண்டும் கண்களை மூடி அந்த நிகழ்வை அனுபவித்தாள்.


அவள் மனம் தன் பழைய மிகன் திரும்ப கிடைத்து விட்டான் என்று மகிழ்ந்தது. எத்தனை அன்பானவன்! வாய் திறந்து தன் நேசத்தை சொல்லாவிட்டாலும் , ஒவ்வொரு நொடியும்,ஒவ்வொரு செயலிலும் உணரவைப்பான். ஆனால், இந்த காலமும் , சில மனிதர்களும் செய்த சூழ்ச்சியால் எப்படி மாறி விட்டான்.



இன்று வரை என்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்று அப்போதும் அவள் மனம் அழுதது.


சில நிமிடங்கள் கண்மூடி அப்படியே இருந்தவள், அப்புறம் மெல்ல அவனிடமிருந்து விலகினாள்.

ஆனால், இவளின் விலகலில் அவனுமே விழித்துக் கொண்டான்.விழித்ததும் மனைவியைத் தான் திரும்பி பார்த்தான்.

திகழொளி மடியில் தூங்கிய குழந்தையை வாகாக தன் நெஞ்சோடு படுக்க வைத்துக் கொண்டு இருப்பதை பார்த்தவன் "நைட் நல்லா தூங்குனீயா ?" என்று கேட்டான்.


கணவனின் கேள்வியில் அவனை நிமிர்ந்து பார்த்தவள் தலையை மட்டும் ஆட்டினாள்.

"சரி பாப்பாவே கீழே படுக்க வச்சுட்டு, நீ கொஞ்ச நேரம் அப்படியே அவள் பக்கத்தில் படுத்து தூங்கு.." என்றான்.

"இல்லை நீங்க தான் அன்கம்பர்டப்பிளா தூங்குனீங்க.. நான் நல்லாத் தான் தூங்கினேன். நீங்க வேணா கொஞ்ச நேரம் கால் நீட்டி படுங்க.." என்றவளிடம்..

"நானும் ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் நல்லாத் தூங்கினேன்..எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை..முதலில் பாப்பாவே கீழே படுக்க வை..!" என்றான்.

திகழொளி அதற்கு மேல் மறுப்பு சொல்லாமல் குழந்தையின் தூக்கம் கலையாமல் படுக்கையில் அவன் அருகில் படுக்க வைத்து விட்டு ரெஸ்ட் ரூம் சென்றாள்.

மிகன் அவள் வரும் வரை குழந்தையின் தலையை மெல்ல வருடிக் கொண்டு அமர்ந்து இருந்தான்.

அவன் மனதிற்குள் பல யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தது. அது அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

திகழொளி ப்ரஸ் ஆகி ரெஸ்ட் ரூமிலிருந்து வெளியே வந்தததும் கணவன் முகத்தில் தெரிந்த யோசனையைக் கண்டு "என்னாச்சு ஏன் ஒரு மாதிரியாக இருக்கீங்க..?கொஞ்ச நேரம் நல்ல படுத்து தூங்கறீங்களா.." என்று அக்கறையாக கேட்டவளிடம்..

"திகழி உனக்கு மகிழினியை பார்த்துக் கொள்வதில் சிரமம் இல்ல தானே? எப்போதும் இதே போல் பார்த்துக்குவீயா ?..யார் மீது உனக்கு என்ன கோவம் இருந்தாலும் அதை குழந்தை மீது காட்டிட மாட்டீயே.?"

"ஏன் மிகன் இப்படி கேட்கிறீங்க..? யார் மீது எனக்கு என்ன கோவம் இருந்தாலும் அதற்கு குழந்தை என்ன செய்யும். அவள் நான் பெறாத குழந்தை ! என்றுமே எனக்கு அவள் தான் முதல் குழந்தை ..!"என்றவளிடம்.

ம்ம்! என்று மட்டும் யோசனையாக சொன்னவனிடம்..

"ஏன் உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம்! என்னை அவள் எப்போது அம்மா என்று சொன்னாளே ! அப்போதே அவள் நான் பெறாத என் முதல் குழந்தை.." என்றபடி குழந்தையின் தலையை மெல்ல வருடினாள்.


அவனோ, "சந்தேகம் எல்லாம் இல்ல..ஆனாலும், கேட்கனும்ன்னு தோணுச்சு அவ்வளவு தான். நமக்கே ஒரு குழந்தை வந்தாலும் நீ அப்போதும் இப்படியே இருப்பீயா!" என்றான் அவனையும் அறியாமல்..


திகழொளியோ, அவன் சொன்னதைக் கேட்டு ஒரு நொடி அதிர்ந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் " எப்போதும் எனக்கு மகிழினி தான் முதல் குழந்தை போதுமா ..
உங்கள் சந்தேகம் தீரந்தா.." என்றாள் சற்று கோவமாக..


அவனோ, அதற்கு பதில் சொல்லாமல் "நான் கேண்டீன் போய் காஃபி வாங்கிட்டு வரேன். நீ பாப்பவே பார்த்துக்கோ..!" என்று கூறிக்கொண்டு காஃபி வாங்க ஃப்ளாஷ்க்கை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றான்.

திகழொளியோ, மிகன் சென்றதும் கணவன் சொன்னதையே மனதிற்குள் அசைபோட்டாள்.. 'நமக்கு குழந்தை வந்தாலும்..' என்று அவன் சொன்னது அவளுக்கு திரும்பத் திரும்ப அவள் காதுகளில் இனிமையாக ஒலித்துக் கொண்டே இருந்தது.


அப்படி தங்களுக்கு என்றாவது குழந்தை வந்தால், அது மிகன் மாதிரி இருக்குமோ ?என்றெல்லாம் அவள் கற்பனைக் குதிரைப் பறந்தது.

ஆனால் , அவளை அதிக நேரம் கற்பனையில் மிதக்க விடாமல் மகிழினி விழித்துக் கொண்டாள்.

அதன் பிறகு அவளுக்கு எதைப்பற்றியும் சிந்திக்க முடியவில்லை..

திகழொளி குழந்தையின் தேவையை கவனித்துக் கொண்டு இருக்கும் போதே மிகனும் வந்துவிட்டான்.

மிகன் சென்று தன்னை சுத்தப்படுத்தி தயாராகி வரும் வரை குழந்தையிடம் விளையாடிக் கொண்டு இருந்தாள்.

அவன் வந்ததும் குழந்தை அவனிடம் தாவிக் கொண்டது.

மிகன் வாங்கி வந்த காஃபியை இருவருக்கும் ஊற்றி ஒன்றை அவனிடம் கொடுத்து விட்டு தானும் குடித்தாள்.


அதன் பிறகு நேரம் ரெக்கை கட்டிக் கொண்டுப் பறந்தது. மருத்தவர் வந்து பார்த்துவிட்டு வீட்டிற்கு போகச் சொல்லி விட்டார்.
இரண்டு நாளுக்கு ஒரு முறை வந்து காயத்திற்கு டிரஸ்சிங் மட்டும் செய்து கொள்ளச் சொன்னார். ஒன்பது நாள் கழித்து வந்து தையல் பிரித்துக் கொள்ளாம் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

திகழொளி வீடு வந்ததும் மகிழினியை கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொண்டாள்.ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு மகிழினி கூடவே இருந்தாள்.

அதன் பின் வந்த நாட்களில் மிகனுக்கும் அவளுக்கும் அழகான நெருக்கம் உருவானது.மிகனும் அவளைக் காயப்படுத்தாமல் அன்பாகவே இருந்தான்.

அன்றும் அப்படித் தான் மகிழினி கூட விளையாடிக் கொண்டிருந்தான் மிகன்.

திகழொளியோ துவைத்த துணிகளை மடித்து அலமாரியில் வைத்துக் கொண்டு இருந்தாள் .

அப்போது "அம்மா இங்கே வா..! என்று குழந்தை அழைத்தாள். திகழொளி அவள் அருகில் சென்றதும் மிகனிடமிருந்து அவளை தூக்கச் சொன்னாள்.

குழந்தையை அவளும் ஆசையாக தூக்கியதும் , திகழொளி கன்னத்தில் அழகாக தன் பட்டு இதழ்களால் முத்தம் பதித்தது.

திகழொளியும் சிரித்தபடி "என் பட்டுக்குட்டி.." என்றபடி குழந்தையின் இரு கன்னங்களிலும் தன் இதழ் பதித்தாள்.

மிகன் அவர்களையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அதுவரை நன்றாகத் தான் எல்லாம் இருந்தது. சட்டென்று மகிழினி அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த மிகனைக் காட்டி "அம்மா அப்பாக்கு முத்தா..?" என்று கூறியதும் கணவன் மனைவி இருவரும் திகைத்து விழித்தனர்.

குழந்தையோ, விடாமல் "அப்பாவுக்கு முத்தா தா..!" என்று தன் மழலை மொழியில் அடம்பிடிக்க ஆரம்பித்தது.

திகழொளியோ, என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிய படி நின்றாள்.

மிகனோ, சூழ்நிலையை உணர்ந்து எழுந்து அவரகள் அருகில் சென்று நின்று பேச்சை மாற்றும் பொருட்டு "பாப்பா முதல்லே அப்பாக்கு முத்தா கொடு! அப்புறம் நாம அம்மாவுக்கு கொடுக்கலாம்.." என்றவன் தன் கன்னங்களை குழந்தை புறம் காட்டினான்

குழந்தையும் "ஐ ! என்றபடி தந்தையின் கன்னத்தில் தன் இதழ்களை பதித்தது.


மிகன் என்ன தான் பேச்சை மாற்றினாலும் குழந்தை அவன் சொன்னதையே பிடித்துக் கொண்டது.

"அப்பா .. ! அம்மாக்கு முத்தா..அம்மாக்கு முத்தா..
" என்று குழந்தை அடம் பிடித்தது.


வேறு வழி இல்லாமல் பித்து பிடித்தது போல் நின்றிருந்த மனைவியின் கன்னத்தில் பட்டும் படாமல் தன் முதல் முத்திரையை பதித்தான் அவளின் ஆரூயிர் நாயகன்.


தொடரும்..
 
Last edited:

New Threads

Top Bottom