- Messages
- 75
- Reaction score
- 71
- Points
- 33
மதுர துளசி edited
அத்தியாயம் 5
நினைவுகள் தான் எத்தனை சுகமானது அதன் உள்ளே முற்றிலுமாய் மூழ்கி இன்பம் தேடுவதும் அதனுள்ளே தன்னைத் தொலைத்து துன்பத்தில் உழல்வதும் ஒவ்வொரு மனிதனின் மனப்போக்கை பொறுத்ததே. மகிழ்ந்திருக்கும் வேலைகளில் இன்பமான நினைவுகளை அசை போடுவதும், விரக்தியாய் இருக்கும் வேலைகளில் துயரமான நினைவுகளை எண்ணி துன்பப்படுவதும் தான் மனித மனங்களின் இயல்பு.
துளசியின் நினைவுகளில் மூழ்கிப் போய் இருந்தான் மதுரன். அவளது கள்ளம் இல்லா மனமும், குழந்தையாய் அவளுடன் துள்ளித் திரிந்த நாட்களும், தோழமையாய் விளையாடிய நினைவுகளும், முதல் காதலை அவன் உணர்ந்த இனிய தருணங்களையும் எண்ணி அவன் மனம் லேசாகியிருக்க மேசை மேலிருந்த அவன் அலைபேசி அந்த நினைவுகளை அந்தரத்தில் நிறுத்தி அவனை நடப்புக்கு கொண்டு வந்தது.
மருத்துவமனை மேனேஜ்மென்டில் இருந்து அவனுக்கு அழைப்பு வர அதை கண்ட இரு நண்பர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் . எடு என்பது போல ரகு சைகை செய்ய, அலைபேசியை எடுத்தான் மதுரன். மறுமுனையில் உடனடியாக தலைமை மருத்துவரை பார்க்க அவன் அறிவுறுத்தப்பட மதுரனால் அந்த செய்தியை நம்ப முடியவில்லை.
சரி என்று அவர்களுக்கு பதில் அளித்துவிட்டு அலைபேசியை வைத்தவன் "டீன மீட் பண்ண சொல்றாங்க." என்றான் ரகுவிடம்.
அப்போ ஏஞ்சலின் சாரி சாரி துளசி கம்ப்ளைன்ட் கொடுத்துட்டா அதானே. இப்போ உன்னால என் வேலையும் போகப்போகுது. ரைட் நடக்கிறது நடக்கட்டும் வா போவோம் என்று நண்பனின் தோள்தொட்டு எழுப்பினான் ரகு.
துளசி என்னை பற்றி புகார் கொடுத்திருப்பாளா ? அவனால் நம்பவே முடியவில்லை , இருக்காது நிச்சயமா இருக்காது பள்ளியிலும் வீட்டிலும் அவன் செய்த எத்தனையோ தவறுகளையும்
குறும்புகளையும் மறைப்பவள் ஆயிற்றே, அவள் எப்படி அவன் மீது புகார் அளித்திருக்க முடியும் குழம்பியபடியே தலைமை மருத்துவரின் அறையை நெருங்கினார்கள்.
நீ இங்கே இரு. என்னை மட்டும் தான் கூப்பிட்டு இருக்காங்க ,நான் போய் மீட் பண்ணிட்டு வரேன் என்றபடி தலைமை மருத்துவரின் அறை கதவை தட்டி அனுமதி வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான்
வெல்கம் மிஸ்டர் தமிழ் மதுரன். இன்னைக்கே ப்ராக்டீஸ ஸ்டார்ட் பண்ணிட்டீங்க போலிருக்கு. வெல்டன்... டாக்டர் கார்த்திகோட ஆர்த்தோ பிடிக் வார்டுக்கு ரவுண்ட்ஸ் போனதை சொன்னார். வி லைக் யுவர் டெடிகேஷன் .
"தேங்க்யூ டாக்டர். மை ப்ளசர்..." என்று வாய் கூறினாலும் துளசி புகார் கொடுக்கவில்லை என மனம் துள்ளியது.
டாக்டர், உங்களை ஆர்த்தோபீடிக் வார்ட்க்கு டூட்டி டாக்டரா அப்பாய்ண்ட் பண்ணிருக்கேன். இன்னைக்கே நீங்க சார்ஜ் எடுத்துக்கோங்க... எதாவது சீரியஸ் காம்பிளிகேஷன்ஸ் என்றால் சீனியர் டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணிக்கோங்க , பெஸ்ட் ஆப் லக் Dr. மதுரன் என்று கூற அவனுக்கு கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா என பின்னணி குரல் கேட்டது.
டெஃபனெட்லி சார் என்றான். மேலும் துறை சார்ந்து சில விசயங்களை அவரிடம் ஆலோசித்து விட்டு விடைபெற்றான்.
மனதுக்குள் மகிழ்ச்சி பூக்கள் பூக்க , அவள் என் துளசி என்னை ஒரு சங்கடத்தில் ஆழ்த்துவது என்பது அவளுக்கு எப்பொழுதுமே இயலாத காரியம் தான். புன்முறுவலுடன் வெளியே வந்தவனை பதட்டத்தோடு காத்திருந்த ரகு "என்னடா சீட்ட கிழிச்சசுட்டாங்ளா, வருத்ததோடு வருவேன்னு பார்த்தா சிரிச்சுக்கிட்டே வர்ற." என்றான் நடந்ததை தெரிந்து கொள்ளும் ஆவலோடு.
"ஆர்த்தோபிடிக் வார்ட் ல இனி நானும் ஒரு டூட்டி டாக்டர் மச்சி.." என்றான் குரலில் குதூகலத்தோடு
"அப்போ ஏஞ்சலின் உன் மேல கம்ப்ளைன்ட் செய்யலையா...? நான் கூட அவ கம்ப்ளைன்ட் செஞ்சு உன்னைய வேலைய விட்டு தூக்க தான் வர சொன்னாங்கன்னு நெனச்சேன், என்னடா இது? என்னடா நடக்குது இங்க.." என்று வடிவேலு பாணியில் கூற
மெல்லிதாக சிரித்தவன், அவனை தோளோடு தோளாக இறுக்கி
அணைத்துக் கொண்டே " அவ என் துளசி டா, நான் தான் சொன்னேன்ல அவ என்ன காட்டிக் கொடுக்க மாட்டான்னு. சின்ன வயசுல இருந்தே அவ அப்படி தாண்டா.. நான் ஏதாவது குறும்பு செஞ்சு மாட்டிக்கிட்டா கூட அது நான்தான் என்று யார்கிட்டயும் சொல்ல மாட்டா. அதனால தான் சொன்னேன் அவ என்னை நிச்சயம் காட்டிக் கொடுக்க மாட்டான்னு... இப்போ நம்பறியா அது என்னோட துளசி தானே.." என்று பெருமிதமாய் கேட்டான் மதுரன்.
நடந்து கொண்டே அவனை ஏறிட்டு பார்த்தவன் "சும்மாவே நீ ஆடுவ.. உனக்கு சலங்கை வேற கட்டி விட்டுட்டாங்க
. கேட்கவா வேணும். ஆனா அவ ஏன்டா துளசிங்கறதை மறைக்கணும்..." என கேள்வி எழுப்பினான்.
மகிழ்ச்சியில் சிறு புன்னகையோடு நடந்து கொண்டிருந்தவன் முகம் மாறி கடினமாகியது. "தன்னை யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாதுன்னு நினைக்கிறாள் போல.." என்றவன் வருத்தத்துடன்.
"நான்தான் சொன்னேனே எங்க ஊர்ல நடந்த எல்லா விஷயத்தையும். அது அவ்வளவு சீக்கிரம் மறக்க கூடியதா... ஒரு குடும்பம் தன்னோட சொந்த மண்ணை விட்டு புலம்பெயர்வது எவ்வளவு பெரிய கொடுமை. அதுவும் ஒரே ராத்திரில மொத்தமா எல்லாமே தலைகீழா மாறி போய் எதுவுமே இல்லாம அவங்க ஊர விட்டு போனாங்க. எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க. நிச்சயமா அவளோட செய்கையிலேயும், கோபத்திலும் நியாயம் இருக்கும்...ஆனால் அதை என்மேல் ஏன் காட்டனும் ?" என்று கூறினான்.
நண்பனின் தோளைத் தட்டிக் கொடுத்தவன் "எப்படியோ துளசியை காணோம்னு நீ தேடியது போய், இப்போ துளசி உன் கண்முன்னே இருக்கா. இனிமேல் என்ன பாத்துக்கலாம் டா.." என்று தைரியமூட்டினான் ரகு.
அதன் பின் அடுத்தடுத்து இருவரும் தங்கள் வேலைகளில் பரபரப்பாய் மூழ்கினர்.
அங்கே ஏஞ்சலின் நிலை கொள்ளாது தவித்துக் கொண்டிருந்தாள்.
அவளால் தன் வேலைகளில் முழுமையாய் கவனம் செலுத்த முடியவில்லை. நடந்த நிகழ்வுகளையே மனம் திரும்பத் திரும்ப கண் முன்னே கொண்டு வந்தது. 'அவசரப்பட்டு விட்டோமோ.. தான் அவ்வாறு நடந்து கொண்டது தவறோ..' என வருந்தினாள்
'அது எப்படி தவறாகும், அன்னிய ஆண் ஒருவன் கையைப் பிடித்தால் பேசாமல் சும்மா இருக்க முடியுமா..? அவனை அடித்தது தவறு இல்லை..' என்றவள் மனம் வாதிட்டுக் கொண்டிருந்தது. அவளது கோபம் அடங்கவேயில்லை.
கண்ணை மூடி தன்னை சமன்படுத்திக் கொள்ள முயன்று தோற்றுப் போனாள். 'எதற்கு அவன் அப்படி செய்யனும். ச்சே ... ஒழுங்கா நிம்மதியா வேலையை பார்க்கலாம் என்றால் இப்போ இது என்ன புது பிரச்சனை. இதற்கு மேல் இங்கே தொடர்ந்து வேலை செய்ய முடியுமா..?'
'வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்வது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை இங்கே இன்னும் ஆறு மாத கான்ட்ராக்ட் இருக்கிறது. அது முடியும் முன் வெளியே சென்று வேலை தேடுவது என்பது இயலாத காரியம். இந்த மருத்துவமனையின் ஒப்பந்தத்தை மீறி வேலையை இடையில் விட்டால் எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் கிடைக்காது அதுவும் போக மொத்த சான்றிதழ்களும் மருத்துவமனையின் மேனேஜ்மெண்ட் இடம் இருக்கிறது. குறைந்தது மூன்று மாத நோட்டீஸ் கொடுக்க வேண்டும்..' யோசிக்க யோசிக்க அயர்ந்து போனாள் ஏஞ்சலின்.
சட்டென்று அவளுக்கே உரிய இயல்பாய் 'நான் ஏன் வேலை விட்டு போகணும். இனி அவன் வரட்டும்... இன்னைக்கு ஒரு அரையோடு விட்டுட்டேன். இனி என் வம்புக்கு வந்தா இருக்கு அவனுக்கு..' என கறுவிக்கொண்டாள்.
'கஷ்டப்பட்டு படிச்சு ஒரு வேலையை வாங்கி அப்பாடா இனி நிம்மதியா உட்காரலாம்னு உட்கார்ந்தா... இவனுக்காக நான் ஏன் வேலையை விட்டு போகணும்..? முடியாது... நான் இங்கேயே இருப்பேன். அவனால என்ன செய்ய முடியுமோ செய்யட்டும் பாத்துக்கலாம்..' என்று வீம்பு செய்தது அவள் மனம். துணிந்து எழுந்தாள். அதன்பின் அவளுக்கு நிற்க நேரமில்லாமல் அவள் பணி அவளை இழுத்துக் கொண்டது.
மதுரன் தன் பணியை முடித்துவிட்டு கிளம்பும் போது மீண்டும் துளசியின் நினைவு வந்தது. தன் கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவன் 'அவளுக்கும் டூட்டி முடிந்திருக்கும்ல்ல... எப்படி அவளை பார்ப்பது..' என்று எண்ணியபடியே தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு ரகுவைத் தேடிச் சென்றான்.
ரகுவை பார்ப்பதற்காக தன் குழந்தைகளோடு இன்னும் இரு பெற்றோர்கள் காத்திருக்க எப்படியும் இன்னும் அரை மணி நேரம் ஆகிவிடும் என்பதை உணர்ந்தவன் வெளியே இருந்தபடியே ரகுவிற்கு அலைபேசியில் அழைத்தான்.
சில நொடிகளுக்கு பின் அலைபேசியை எடுத்த ரகு "சொல்லு தமிழ்.." என்றான்.
"மச்சி எனக்கு டூட்டி முடிஞ்சது. நான் கேண்டின்ல வெயிட் பண்றேன் நீ வா.." என்று கூற மறுமுனையில் "சரி" என்ற பதில் வந்தவுடன் அலைபேசியை வைத்தான்.
துளசியை பார்க்க வேண்டும் என்று அவன் மனம் பேராவல் கொண்டது. எப்படி பார்ப்பது என யோசித்தவன் எப்படியும் நாளை முதல் அந்த வார்டில் டியூட்டி டாக்டராக பணியில் இருக்கப் போகிறான் அதற்கு முன்னர் போய் பார்த்தால் என்ன என்று தோன்றவும் அவனது வார்டு நோக்கி சென்றான்.
இரவு நேர செவிலியர்களிடம் நோயாளிகளின் மருத்துவ குறிப்புகளையும், பணிகளையும் ஒப்படைத்துக் கொண்டிருந்தாள் ஏஞ்சலின்.
ஏற்கனவே டாக்டர் தமிழ் மதுரன் பொறுப்பேற்கும் தகவல் ஏஞ்சலினிற்கு வந்துவிட சம்பிரதாயமாக "எஸ் டாக்டர்.." என முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் எதிர் கொண்டவள் சக செவிலியர்களிடம் அவனை அறிமுகம் செய்து வைத்தாள்.
தன்னை அறிமுகம் செய்து கொண்டவன்.
"ஓகே மிஸ். ஏஞ்சலின் எனி காம்பிளிகேஷன்ஸ் டுடே.." என்று வினவ பணி ரீதீயாக சில தகவல்களை அவனிடம் தெரிவித்து விட்டு தன் பணியை முடித்துக் கொண்டு கிளம்பினாள்.
அவனும் மற்ற செவிலியர்களிடம் "ஓகே கேரி ஆன்.." என்று கூறிவிட்டு கிளம்பினான்.
ஏஞ்சலின் முன்னே செல்ல இவன் அவளை ரசித்தபடி பின்னே சென்றான். லிஃப்ட் அருகே வந்து அவள் பட்டனை அழுத்துவிட்டு காத்திருக்க அவனும் லிஃப்ட்ற்காக வந்து நின்றான்.
அதுவரை சமாளித்தவளுக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது என்னதான் மனதுக்குள் வீராப்பாக பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டாலும் அவன் அவளை தொடர்வதாய் அவளுக்கு தோன்றியது.
லிப்டின் கதவு திறக்க இருவரும் உள்ளே நுழைந்தனர். மதுரன் அவளை விட்டு தன் விழிகளை நகர்த்தவே இல்லை. காலை முதல் இரவு வரை நோயாளிகளை கவனித்து தன் பணிகளை செய்து அவள் சோர்ந்து போய் இருப்பது தெரிந்தது.
என்னதான் அவள் இயல்பாய் இருப்பதாய் காட்டிக் கொண்டாலும் பதட்டம் அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.
'என்னை தெரியாத மாதிரியா நடிக்கிற இருடி உன்னை என்ன செய்யறேன் பாரு..' என அவளை ரசித்தவாறே மனதிற்குள் சிரித்துக் கொண்டவன்.
மெதுவாக "மிஸ் ஏஞ்சலின் நீங்க இதே ஊரா, எந்த ஏரியால இருக்கீங்க..." என அவன் சகஜமாய் விசாரிக்க பதில் கூற முடியாமல் அதிர்ச்சியில் சிலையாய் நின்றாள் அவள்.
தொடர்வார்கள்...