Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update மயிலரசி

மயிலரசி 13:

13.

அடுத்த ஆறு வருஷம் எந்த ஒரு பிரச்னையும் என்னை நெருங்காம தாத்தா பார்த்துக்கிட்டாங்க. லீவ் விட்டா தாத்தா அங்க வந்துருவாரு. அங்க நாங்க ரெண்டு பேரும் அடிக்காத லூட்டி இல்லை. இப்படி நல்லா போயிட்டு இருந்த என் வாழ்க்கைல நான் விரும்பாத திருப்பமா என் தாத்தாவோட மரணம் இருந்தது.

சரியா பத்தாவது பரீட்சை ரிசல்ட் வந்து எனக்கு பிடிச்ச க்ரூப் செலக்ட் செஞ்சு ஸ்கூல் போக ரெண்டு நாள் இருந்தப்ப நல்லா நைட்டு பேசிட்டு போன தாத்தா காலைல முழிக்கலை. மறுபடியும் என் வாழ்க்கையே சூன்யமான மாதிரி இருந்தது. எனக்கு பதினெட்டு வயசு ஆகாததால எனக்கு விருப்பமே இல்லைன்னாலும் அப்பாகூட இருக்க வேண்டிய கட்டாயத்துல போனேன். என் வாழ்க்கையோட ரொம்ப கொடுமையான நாட்கள்னா அது தான். அங்க போன பின்னும் பேச அப்பா எவ்வளவோ முயற்சி பண்ணார். ஆனா அவரை பார்க்கும் போதெல்லாம் எங்க அம்மா இறந்து போனது தான் ஞாபகம் வரும். என்னால அவரை மன்னிக்க முடியலை. தன்னை நம்பி வந்த ஒரு பொண்ணுக்கு துரோகம் செஞ்சு அவங்களை தற்கொலைக்கு தூண்டினவர் என்ன வேணாலும் செய்ய துணிய மாட்டாருன்னு என்ன நிச்சயம். அதனால அவர் என்னை நெருங்கும் போதெல்லாம் ரூமே கதின்னு கிடப்பேன். நான் அவர்கூட இருக்கணும்னு வீட்டு பக்கத்துலையே ஸ்கூல் சேர்த்து விட்டார். எனக்கு அங்க படிக்க பிடிக்கலை. வேற வழி இல்லைன்னு படிக்கணும்னு போனேன். அவர் இருக்கும் போது பாச மழை பொழியற அவங்க மனைவி அவர் இல்லாத நேரம் ரூம் கதவை உடைக்காத குறையா பிடிச்சு தரதரவென இழுத்துட்டு வந்து அடிப்பாங்க வாங்கிப்பேன். அவர்கிட்ட சொல்ல மாட்டேன்னு தெரியும். அதனால அவங்க பண்ற கொடுமைக்கு அளவே இருக்காது. ஒரு முறை அவங்க பொண்ணு என்னை அடிக்க வேண்டாம்னு சொன்னதால அவளையும் மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சாங்க. அந்த பொண்ணு என்னவோ என்கிட்டே எப்பவாவது பேச வரும் நான் தான் பேச மாட்டேன். என்னால அவ அடி வாங்குறது பிடிக்கலை. ரெண்டு வருஷம் பல்லை கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கிட்டேன். ப்ளஸ் டூ முடிச்ச உடனே அங்க இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணேன்.

அம்மாவோட பிரெண்ட்ஸ் நம்ம ஹாஸ்பிட்டல்ல வேலை செஞ்சுட்டு இருந்தாங்க. அவங்க உதவியோட பாரி்ன்ல டாக்டர்க்கு படிக்க அப்பளை பண்ணேன் அதுவரைக்கும் கஸ்தூரிக்கு எதுவும் தெரியாம பார்த்துக்கிட்டேன்.

அப்போ தான் அவங்களோட தம்பின்னு ஒருத்தன் அங்க வந்து தங்கிருந்தான். அவன் இருக்க நேரம் வெளிய கூட வர மாட்டேன். அவனோட பார்வை, பேச்சு, நடத்தை எதுவும் சரி இல்ல. ஒரு நாள் நைட் வீட்ல எல்லோரும் கல்யாணத்துக்கு போயிருந்தாங்க. என்னை கூப்பிட்டாரு நான் போகலை. நைட் நான் டோர் லாக் பண்ணிட்டு வந்து படுத்துட்டேன். திடிர்னு தூக்கத்துல என் மேல ஏதோ ஊற்ர மாதிரி இருந்தது. பதறி அடிச்சு எந்திரிச்சு பார்த்தா அவன் தான் முழு குடி போதைல இருந்தான். வெளிய சொல்ல முடியாத அளவுக்கு அசிங்கமா பேசி என்னை நெருங்கினான். எவ்வளவோ போராடி பார்த்து முடியாம மயங்கி போற வேளைல எங்க இருந்து தான் அவ்ளோ வெறி வந்துதுன்னு தெரியாது. கைல கிடைச்ச கண்ணாடி பிளாஸ்கை அவன் தலைல உடைச்சி தள்ளி விட்டுட்டு வெளிய ஓடி வந்துட்டேன். என் அம்மா ரூம்ல போய் கதவை லாக் பண்ணிட்டேன். அவனும் என் பின்னாடியே வந்து கதவை தட்டிட்டே இருந்தான். என்ன பண்றதுன்னு தெரியலை. அப்போ தான் நான் ஒரு அனாதைன்னு நெத்தி பொட்டுல அறைஞ்ச மாதிரி புரிஞ்சுது. அம்மாவோட பிரெண்ட்ஸ் பசங்க ஹரியும் விக்ரமும் என்கிட்டே பிரென்ட்சாக எவ்ளோ முயற்சி பண்ணாங்க. எனக்கு யார் மேலையும் நம்பிக்கை இல்லாம பேசாம இருப்பேன். சின்ன வயசுல அம்மா இருக்கும் போது அவங்க கூட நல்லா விளையாடிருக்கேன். நல்ல பசங்க. அவசரத்துக்கு அவங்களை கூப்பிட்டேன்.

கதவை உடைக்க டிரை பண்ணான் அந்த நாய். “அங்கயே இருடா போலிஸ் வருது”ன்னு அவனை மிரட்டினேன். குடில இருந்ததால பயந்து எங்கையோ ஓடி போய்ட்டான். அடிச்சு பிடிச்சு ரெண்டு பேரும் ஓடி வந்தானுங்க.

நடந்ததை சொன்னேன் எனக்கு ஆறுதல் சொல்லி விக்ரம் வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டான். அங்க ஆன்ட்டி தான் என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க. அப்போ இருந்து விக்ரம், ஹரி ரெண்டு என் பிரெண்ட்ஸ் ஆகிட்டாங்க.

ரெண்டு நாள் கழிச்சு எல்லோரும் ஊர்லர்ந்து வந்தாங்க. நானும் அந்த வீட்டுக்கு போயிட்டேன். அன்னைக்கு சாயந்தரம் கீழ வரும் போது கஸ்தூரி ரூம்லர்ந்து பேச்சு குரல் கேட்டுச்சு. அதுல என் பேர் அடிபடவும் என்னன்னு கேட்டேன். அதிர்ச்சியில மயங்கி விழாத குறை தான்.

அந்த பொம்பளை தான் என் சொத்தை அடைய அந்த கேடு கெட்டவன்கிட்ட என்னை நாசமாக்க சொல்லிருக்கா. என்னை கெடுத்துட்டா இதை வெச்சு என்னை அவனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு என் சொத்தை அவங்க முழுசா ஆளலாம்னு பிளான் போட்ருக்காங்க. நல்ல வாய்ப்பை கெடுத்துட்டியேன்னு அவனை போட்டு அடிச்சு திட்டிட்டு இருந்துச்சு. இதுக்கு மேல அங்க இருந்தா என் மானத்துக்கும் உயிருக்கும் உத்திரவாதம் இல்லன்னு கிளம்பினேன். அந்த ரெண்டு நாளும் விக்ரம் என் வீட்ல எனக்கு பாதுகாப்பா இருந்தான். பாரின் போற பரோசிஜர் எல்லாம் முடிஞ்சதும் அங்க இருந்து கிளம்பினா போதும்னு கிளம்பினேன்.

அப்போ, பெட்டியுடன் ஹாலுக்கு வந்து நின்றவளை கேள்வியாக பார்த்தனர் மூவரும்.

“எதுக்கு இப்போ பெட்டியெல்லாம் எடுத்துட்டு வந்துருக்க?” என்று கேட்டார் அவளின் தந்தை.

அவருக்கு பதில் கூறாமல் தன் கைக் கடிகாரத்தை பார்க்க, “ஏய் அதான் உங்க அப்பா கேட்கிறார்ல பதில் சொல்லாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” என்று அதட்டினார் அவளின் சித்தி.

“நீ இப்போ எதுக்கு புள்ளைய மிரட்டுற? அமைதியா இரு.” என்று அதட்டியவர்.

“நீ சொல்லுடாம்மா என்ன இது பெட்டியெல்லாம் எடுத்துட்டு வந்துருக்க.” என்றார். அவரை பார்க்கவே எனக்கு பிடிக்கலை. பெத்த பொண்ணுக்கு அந்த வீட்ல நடக்கிற கொடுமையை பத்தி எதுவுமே தெரியாம இருக்காறேன்னு வெறுப்பு.

அந்த நேரம் வீட்டிற்குள் நுழைந்தனர் விக்ரம், ஹரி, ஷங்கர் அபியின் அன்னையுடைய வக்கீல் அதோட விக்கியோட அப்பா.

“ஹலோ சார்!” என்று அவர் முன் நிற்க, “நீங்க என்ன சார் இங்க?” என்றார் சத்யமூர்த்தி கேள்வியாய்.

“நான் தான் வர சொன்னேன்.” என்றாள் எங்கோ பார்த்து.

“எதுக்குடா?” என்றார் மென்மையாய்.

“எனக்கு இன்னையோட பதினெட்டு வயசு ஆகுது. இப்போ நான் மேஜர். இனி நான் இங்க இருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. அதான் இங்க இருந்து போக போறேன். அதுக்காக தான் வக்கீல் வந்துருக்கார்.” என்றாள்.

“அதெல்லாம் எங்கயும் போக வேண்டாம்.” என்றார் கோபமாய்.

“அதை சொல்ல யாருக்கும் உரிமை இல்ல. எனக்கு இங்க இருக்க பிடிக்கல. லாயர் அங்கிள், நான் எங்க தாத்தா வீட்ல தான் தங்க போறேன். வீணா என்னை பத்தி பொய்யா கவலை படர மாதிரி நடிக்கிறதை விட்டுட்டு அவரை சுத்தி என்ன நடக்குதுன்னு முழிச்சி பார்க்க சொல்லுங்க. இன்னொரு பொண்ணு இருக்கு அதை பாதுகாக்க சொல்லுங்க. டேய் என்னடா பார்த்துட்டு இருக்கீங்க? படமா பார்க்க வந்திங்க.. விக்கி எருமை இந்த லக்கேஜை எடுத்து வா போகலாம்.” என்று தன் உடைமைகளை எடுத்து கொண்டு வெளியேறினாள்.

“சார் அல்ரெடி பெரிய மேடமே சொல்லிருக்காங்க பாப்பாவோட விருப்பத்தின் படி தான் நடக்கணும்னு. சோ, அவங்களை நீங்க தடுக்க முடியாது. அதோட அவங்க இன்னும் ஒரு வாரம் தான் இங்க இருக்க போறாங்க.” என்றார்.

“ஏன்?” என்றார் பதட்டமாய்.

“அவங்க டாக்டர்க்கு படிக்க லண்டன்ல அப்பளை பண்ணிருந்தாங்க. அங்க சீட் கிடைச்சுருக்கு. அதனால அங்க போறாங்க. ஒகே நான் வரேன் சார்.” என்று வெளியேறினார்.

‘என் பொண்ணு என்னை மன்னிக்கவே மாட்டாளா?’ என்று உள்ளுக்குள் வருந்தினார். வருந்தி என்ன பயன் அவர் செய்த பாவம் அப்படி அல்லவா?

ஒரு வாரம் கடந்து மருத்துவ படிப்புக்காகன்னு சொல்லிக்கிட்டு இங்க இருக்க பிடிக்காம நான் பிறந்த நாட்டை விட்டு வளர்ந்த ஊரை விட்டு வெளிநாட்டுக்கு போயிட்டேன்.

அங்க தான் எனக்கு வாழ்க்கையோட அர்த்தம் புரிஞ்சுது.” என்று வெளிநாடு சென்றது, மயில்வீராவை பார்த்தது மையல் கொண்டது என்று நான்கு வருடங்கள் நடந்தவற்றை சுருக்கமாக கூறினாள். அதோடு இங்கு வந்த பின் அவள் சித்தி செய்த சதி செயல்கள் என்று அனைத்தையும் கூறி முடித்தாள்.

“ஹரி கூட இந்த கல்யாணம் வேணாம்னு எவ்வளவோ சொன்னான். குழந்தைங்க உயிரை பணயம் வைக்க பிடிக்கலை. எல்லாத்துக்கும் மேல வாழ்க்கை மீது இருந்த வெறுப்பு ஹரியோட பேச்சை கேட்கலை அதுக்கு கோச்சுக்கிட்டு ஆஸ்திரேலியா போயிருச்சு அந்த நாய். விக்கி மட்டும் என்கூட இருக்கான். என்னை பத்தி முழுசா தெரிஞ்சவன் அவன் மட்டும் தான் அவனுக்கும் எல்லாம் தெரியும். அவ்ளோ தான் பா. எல்லாத்தையும் சொல்லிட்டேன். இப்போ என் மனசுக்கு கொஞ்சம் நல்லா இருக்கு.” என்று புன்னகைத்தாள்.

மயில்வீராவை பற்றி பேசும்போது அவள் முகத்தில் தெரியும் அளவிற்கு அதிகமான மகிழ்ச்சியை குறித்து கொண்டார்.

“அது சரி இன்னைக்கு ஏன்டா உன் முகம் ரொம்ப சோகமா இருந்தது?” என்று கூர்ந்து கவனித்தபடி கேட்டார்.

“அது அது ...” என்று திணறினாள்.

“உண்மைய சொல்லுடா.” என்றார்.

“அது இத்தனை வருஷம் கழிச்சி யாரை நான் பார்க்க கூடாதுன்னு நினைச்சிருந்தேனோ அவரை பார்க்க வேண்டியதா போய்டுச்சு. அந்த பாரம் மனசு தாங்கலை அதான்.. ஆனா இப்போ நல்லா இருக்கேன்.” என்று சிரித்தாள்.

“யாரும்மா வீரா தம்பியா?” என்றார் ஆர்வமாய்.

“ஆமாப்பா. அவர் பொண்ணோட வந்திருந்தார்.” என்றாள் முகத்தில் எதையும் காட்டாது.

“அவருக்கு கல்யாணமாகிடுச்சோ?”

“அப்பா அதான் சொன்னேனே அவர் லவ் மேரேஜ்னு. ஆனா இப்போ அவர் மனைவி கூட இல்ல என்னனு தெரியல. தெரிஞ்சிக்கவும் விரும்பலை. அப்புறம் என்ன எதுவும் தெரியாத மாதிரி கேட்கிறிங்க.” என்றாள்.

“அப்படியா சரி சரி.” என்றார்.

“அப்பா அவர் என் லைப்ல பாஸ்ட் பா. முடிஞ்சு போன அத்தியாயம். இனி அவருக்கு என் வாழ்க்கைல இடம் இல்ல. இனி இத பத்தி பேச வேண்டாம்ப்பா. இனி நம்மை பத்தி மட்டும் யோசிப்போம்.” என்றாள் கறாராக.

இப்பொழுது புரிந்தது மகள் எதற்காக கொஞ்ச நாள் வெளியூருக்கு போக வேண்டும் என்று கேட்கிறாள் என்று.

“அதுசரி உனக்கு கல்யாணம் ஆனதிலர்ந்து உங்க சித்திக்கிட்ட ஏன் இவ்ளோ அமைதியா போற... பயபட்றியா?” என்றார்.
 
14.

“ஹா ஹா நான் பயப்ட்றேனா? என்னை பத்தி இன்னும் சரியா தெரியல உங்களுக்கு. நான் அமைதியாய் இருக்கிறதுக்கு ஒரு காரணம் இருக்கு. புலி பதுங்கறது பாயறதுக்கு தானப்பா. என் பொண்ணுக்காகவும் உங்களுக்காகவும் தான் அமைதியா இருக்கேன். மிஸ்டர் சத்யமூர்த்தியால எந்த பிரச்னையும் இல்லப்பா. என்னை நம்பி வர குழந்தைகளை வச்சு மிரட்டினா அவங்களை சும்மா விடுவேன்னு நினைக்கிறிங்க. அவங்களுக்கு பெரிய தண்டனையா ரெடி பண்ணிட்டேன்.” என்று புன்னகைத்தாள்.

“அப்படி என்ன செய்ய போற?” என்று ஆர்வமாய் கேட்க, “அதெல்லாம் சொல்ல மாட்டேன்.” என்று கூறியவள் தன் அறைக்குள் சென்றாள்.

“நல்லா முடிவு பண்ணிட்டியா?” என்று கேட்டாள் அலைபேசியில் அபி.

“ஹ்ம்ம் அதெல்லாம் பண்ணிட்டேன்.”

“உன் தலை எழுத்து யாரால மாத்த முடியும்.”

“போடி எப்போ பாரு என்னை ஏதாவது சொல்லலைன்னா உனக்கு தூக்கம் வராதே. லூசு.” என்று திட்டி விட்டு எதிர்புறம் துண்டிக்க பட்டது.

“யாரு லூசு நீ லூசு உங்கம்மா லூசு உங்கப்பா லூசு உங்கண்ணன் லூசு...” தூக்கத்திலேயே உளறினாள்.

மறுநாள் வழக்கம் போல் மருத்துவமனைக்கு சென்று வேலைகளை பார்த்து கொண்டிருந்தாள்.

அப்பொழுது வெளியே பரபரப்பை ஏற்படுத்துவது போல் கூச்சலும் குழப்பமும் கேட்க வேகமாய் வெளியே வந்து பார்த்தாள்.

“நான் இதழரசிய பார்க்கணும் அவங்களை கூப்பிடுங்க.” என்று அதிகாரமாய் ஒரு குரல் கேட்டு கொண்டிருக்க அவனை நெருங்கியவள்.

“எக்ஸ்கியூஸ் மீ சார். நீங்க எதுக்கு அவங்களை பார்க்கணும்.” என்ற குரலில் திரும்பி பார்த்தவனின் விழிகளில் அவளுக்கு மட்டுமான குறும்பு தெரிய அவனை முறைத்தவள்.

“சொல்லுங்க சார்.” என்று கேட்கவும்,

“நாம தனியா பேசலாமா இல்ல எல்லாத்தையும் இங்கயே சொல்லன்னுன்னாலும் எனக்கு ஓகே தான்.” என்றதும்.

“நீங்க என் கூட வாங்க” என்றவள்,

“நீங்க எல்லாரும் உங்க வேலைய பாருங்க.” என்று மற்றவருக்கு பணித்து விட்டு தன் அறைக்கு கூட்டி சென்றாள்.

“என் டார்லிங் எங்கடி ஆளையே காணோம்.” என்றவனின் மீது அங்கிருந்த பேப்பர் வெய்ட்டை தூக்கி வீச, “அடியேய் கொலைகாரி எனக்கு இன்னும் கல்யாணம் கூட நடக்கலைடி. அதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சு வச்சுருவ போல இருக்கே.” என்றான் பாவமாய் விக்ரம்.

“ஐயோ ரொம்ப வழியுது தொடைச்சுக்கோ.” என்று டிஷ்ஷியூ பேப்பரை கொடுத்ததும் அவளை முறைத்தவன், “எனக்கு இப்போ ஹெல்ப் பண்ணுவியா மாட்டியா?” என்று கோபமாய் கேட்க, “முடியாது போடா.” என்றதும், “பேபி அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. நான் பாவமில்லை. ப்ளீஸ் பேபி.” என்றதும் அவனை மேல் இருந்து கீழ் வரை பார்த்தவள், “உன்னை பார்த்தாலும் பாவமா இருக்கு நண்பனா போயிட்ட... அவளும் என் கூட பிறக்கலைன்னாலும் தொங்கச்சின்னு ஆகிட்டா. சரி பொழச்சு போ.” என்றவள்,

“ஒகே அவளை கூப்பிட போறேன் ப்ளான் படி நடக்கணும் ஓகேவா...”

“ஒகே நீ கூப்பிடு நான் பார்த்துக்கிறேன்.” என்றான் விக்ரம் அவளின் உயிர் தோழன். அவள் அம்மாவின் தோழியின் மகன், அவரும் இங்கே தான் பணிபுரிகிறார்.

“மிஸ். இதழரசி என் ரூம்க்கு வாங்க.” என்று போனை வைத்ததும் அவளை முறைத்தபடியே வந்து நின்றாள்.

“என்ன கொழுப்பு ஓவரா இருக்கு. இவ்ளோ கொடுத்து அடங்க மாட்டேங்குற? என்னை எதுக்கு கூப்பிட்ட?” என்றாள் இதழரசி கோபமாய்.

"எதுக்கு மேடம் இப்படி கோவப்படறீங்க? சார் தான் உங்களை கேட்டு ஹாஸ்பிட்டல்ல பிரச்சனை பண்ணிட்டு இருந்தார். உங்க பேர் கெட்டு போய்டக் கூடாதேன்னு என் ரூம்க்கு கூப்பிட்டு வந்து உட்கார வச்சுருக்கேன்." என்றாள் அபி.

"யார் அது என்னை கேட்டு பிரச்சனை பண்ணது?" என்று கேட்டு கொண்டே திரும்ப அங்கு காக்கி உடையில் இருந்தவனை கண்டு உள்ளுக்குள் அரண்டு விட்டாள். அதை இருவரும் கண்டு கொண்டனர்.

"சா...ர்... நீங்க யாரு? எதுக்கு என்னை கேட்டிங்க?" என்றாள் இதழரசி திக்கி திணறி.

"தப்பு செய்யலைன்னா எதுக்கு பயப்படறீங்க மிஸ் இதழரசி?" என்றான் விக்ரம் குரலில் அழுத்தம் கூட்டி.

"அப்படி எல்லாம் எதுவும் இல்ல சார். நார்மலாவே போலீஸ்னா பயம்... அதான் அக்கா ரூம்ல போலீஸ் யூனிபாரம்ல உங்களை பார்த்ததும் பயந்துட்டேன்." என்றாள் வியர்வை வழிய.

'என்னாது அக்காவா? அடிப்பாவி ஒரே கேள்வில இப்படி விழுந்துட்டியேடி... நல்லா பொழச்சிக்குவ...' என்று நினைத்து உள்ளுக்குள் சிரித்தபடி பார்த்து கொண்டிருந்தாள் அபி.

அபியின் புறம் திரும்பியவன், "மிஸ் அபி நீங்க கொஞ்ச நேரம் வெளிய இருக்கீங்களா? நான் அவங்ககிட்ட இன்வெஸ்ட்டிகேட் பண்ணனும்." என்றதும் அபி அவனை முறைத்தவள், 'உன்னை கொல்ல போறேன்.' என்ற ரீதியில் முறைக்க, "அதெல்லாம் முடியாது சார். அவங்க என் ஹாஸ்பிடல்ல வர்க் பண்ற ஸ்டாப். அதுக்கும் மேல என்னோட சிஸ்டர். சோ, நீங்க எதுவா இருந்தாலும் என் முன்னவே விசாரிங்க." என்றாள் கராறாக.

'அடிப்பாவி நேரம் பார்த்து கால வார்றாளே... பேபி நீ பண்றது சரி இல்ல. எனக்கும் ஒரு காலம் வராமலையா போகும் அப்போ பார்த்துக்கறேன் உன்னை.' என்று முறைத்தவன், "இட்ஸ் ஓகே அப்போ நோ ப்ராப்லம் நான் இவங்கள ஸ்டேஷன் கூட்டிட்டு போய் விசாரிக்கிற விதத்துல விசாரிச்சுகிறேன்.”

'அய்யே விசாரிக்கிற மூஞ்சை பாரு...' என்று பார்த்தவள், "அதெல்லாம் வேண்டாம் அவ பயப்படுவா எதுவா இருந்தாலும் இங்கயே விசாரிங்க. நான் வெளிய இருக்கேன். இதழரசி ஏதாவதுன்னா உடனே கூப்பிடு." என்று வெளியேறினாள்.

தன் எதிரில் இருந்த இருக்கையை காட்டி அமரச் சொன்னான்.

"இல்ல பரவால்ல சொல்லுங்க சார்." என்றாள் பதட்டமாய்.

"உட்காருங்கன்னு சொன்னேன்." என்று அழுத்தமாய் அதட்டவும் பட்டென்று அமர்ந்தாள்.

'என் பேபி இப்படி பயந்த சுபாவமா இருக்கா. இவளை போய் தேவை இல்லாம மிரட்டி கெட்டது செய்ய வைக்கலாம்னு பார்க்குது அந்த சூனியக்கார கிழவி.' என்று உள்ளுக்குள் இதழரசியின் அம்மாவை வருத்தவன், "சொல்லுங்க இதழரசி?" என்றான்.

"என்ன சொல்லணும்?" என்றாள் ஏதும் புரியாமல்.

"ஹ்ம் உங்கம்மா கூட சேர்ந்து உங்க அப்பாவோட பர்ஸ்ட் வைப்ப கொலை பண்ணிருக்கீங்கன்னு எங்களுக்கு கம்பளைண்ட் வந்துருக்கு." என்றான்.

"என்னது கொலையா? அதுவும் பெரியம்மாவையா? என்ன சார் சொல்றிங்க? எனக்கு எதுவும் தெரியாது. என் அக்கா கம்பளைண்ட் பண்ணாளா?" என்றாள்.

"இல்ல இது வேற ஒருத்தங்க கொடுத்த கம்பளைண்ட். உங்க அக்காவுக்கு இது தெரிஞ்சா இந்நேரம் உங்களை அடி பின்னிருக்க மாட்டாங்க." என்றான் நக்கலாய்.

"சார் நீங்க கேட்கிற விஷயம் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு பெரியம்மாவை ரொம்ப பிடிக்கும் நான் ஏன் அவங்கள கொல்ல போறேன்." என்றாள்.

"நீங்க கொன்னீங்கன்னு சொல்லல. உங்க அம்மா கொலை பண்ண ஹெல்ப் பண்ணிருக்கீங்கன்னு எவிடென்ஸ் கிடைச்சுருக்கு." என்றான் அழுத்தம்மாய்.

"சார் எங்க அம்மா எதுக்கு கொல்ல போறாங்க. இது யாரோ வேணும்னே எங்க மேல கோவத்துல செஞ்சுருக்காங்க சார். எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல." என்றாள்.

"உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லன்னு வேணா நீங்க சொல்லலாம் பட் உங்க அம்மாக்கு சம்மந்தம் இல்லைன்னு நீங்க சொல்லாதீங்க. நாங்க விசாரிச்சுகிறோம். கண்டிப்பா உங்க அம்மாக்கு இதுல சம்மந்தம் இருக்கு. உங்களுக்கு தெரியாம இருக்கலாம்." என்று எழுந்தவன் அவளை நெருங்க அவளும் எழுந்து பின்னே நகர்ந்தாள்.

சுவற்றில் முட்டி நிற்க அவளை நெருங்கி சங்கு கழுத்தினில் லேசாக பட்டும் படாமல் முகம் புதைத்து அவள் செவிகளில், "இருந்தாலும் எனக்கு உங்க மேல இருக்க டவுட் இன்னும் கிளியர் ஆகலை. நீங்க என் வாட்சிங் லிஸ்ட்ல தான் இருக்கீங்க. அதனால உஷாரா இருங்க. நான் இங்க வந்துட்டு போனதோ உங்களை விசாரிச்சிதோ எதுவும் நம்ம ரெண்டு பேரை தவிர யாருக்கும் தெரிய கூடாது புரியுதா..." என்று நிறுத்தி அழுத்தமாய் அங்கே இதழ் பதித்தான்.

"ஹா.." என்று அதிர்ந்தவள் அவனை விலக்க பார்க்க, "ஸ்டாப் இட்." என்றான் அழுத்தமாய்.

"தெரியாதவங்க பிடிக்காதவங்க தொட்டா எப்படி இருக்கும்னு தெரியணும்ல..." என்றவன் அவள் செவியை லேசாக கடித்தான்.

"ப்ளீஸ்!" என்றாள் மிக மெதுவான குரலில்.

"ப்ளீஸ் எதுக்கு?" என்று கேட்டபடி மீண்டும் கழுத்தினில் வாசம் பிடித்தவன் வேகமாய் விலகி நின்றான்.

"இந்த கேஸ் முடியற வரைக்கும் என் பார்வையில் தான் இருப்பிங்க. நான் எப்போ விசாரிக்க கூப்பிட்டாலும் வரணும்." என்றதும் 'சரி' என மிரண்ட விழிகளில் தலையாட்ட, அப்பொழுதே அவளை அணைத்து சமாதானப் படுத்தி அவனவளாக மாற்றி கொள்ள துடிக்கும் மனதை அடக்கியவன், 'இன்னும் அவளுக்கு புரிய வைக்க வேண்டியது நிறைய இருக்கு. அதுவரைக்கும் கொஞ்சம் அழட்டும்.' என்று நினைத்தவன் அவன் ஒற்றை விரல் கொண்டு அவளின் முகம் வருடினான்.

பிடிக்காத தொடுகை ஆனாலும் நகர முடியவில்லை. தன் மேனியே தீயில் எறிவது போல் தோன்ற தன்னை நினைத்தே அழுகை பீறிட்டது. இதழை கடித்து அழுகையை முழுங்க முயற்சிக்க, "இது என்ன பாவம் பண்ணுச்சு. நான் எப்போ கூப்பிட்டாலும் வரணும். இங்க நடந்ததை பத்தி வெளிய யாருக்காவது தெரிஞ்சுது அடுத்த நிமஷம் நீங்க என் லாகப்ல இருக்கனும்." என்று இதழை விரல் கொண்டு விடுவித்தவன் இதழ் கொண்டு மூடிட விரும்பினாலும் அதற்கான நேரம் வரவில்லையே என்று விலகி,

"உங்க அம்மாவுக்கு எதுவும் தெரிய கூடாது அண்டர்ஸ்டாண்ட்." என்றான் கடுமையான குரலில்.

அதில் பதறி தள்ளி நின்றவள் தலையாட்டினாள். அவளை விழிகளில் நிரப்பி கொண்டு வெளியேறினான்.

அவன் போவதை பார்த்து உள்ளே வந்த அபியோ, 'அந்த நாய் பார்வையே சரி இல்லையே.. என்ன பண்ணிருக்கும்..' என்று யோசித்தபடி, "இதழரசி" என்று அழைத்ததும், "அக்கா" என்று கட்டி கொண்டு அழுதாள்.

இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும், "என்னடி எதுக்கு அழுகுற? என்ன கேட்டாரு அவரு?" என்று தங்கையை விலக்கி அவளை முழுவதும் அலச கண்டு கொண்டாள் தங்கையின் பதற்றத்திற்கு காரணத்தை, தங்கை கழுத்தினில் இருக்கும் லேசான பல் தடத்தை பார்த்து பற்களை கடித்தவள், 'நீ செத்தடா மகனே.' என்று விக்ரமை திட்டி கொண்டே இதழரசியை சமாதான படுத்தினாள்.
 
15.

"இப்போ எதுக்குடி அழுகுற? போய் முகம் வாஷ் பண்ணிட்டு வா முதல்ல." என்று கூற முகம் கழுவி விட்டு நிமிர்ந்தவள் கண்ணாடியில் கழுத்தை பார்த்தவள் விழிகள் விரிந்து கலங்கியது.

தங்கையின் ஒவ்வொரு செயலையும் பார்த்து கொண்டிருந்தவள் கதவை தாழிட்டு தங்கையை நெருங்கி, "வா" என்று அழைத்து வந்து சோபாவில் தன் மடி மீது தலை வைத்து படுக்க வைத்தாள்.

"எதையும் யோசிக்காத எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். நான் இருக்கேன். கொஞ்ச நேரம் தூங்கு." என்று தட்டி கொடுக்க அக்காவை பார்த்துக் கொண்டே தூங்கிப் போனாள். தங்கை தூங்கியதை உறுதி செய்தவள் மெல்ல எழுந்து வெளியேறி கதவை சாற்றிவிட்டு.

"நர்ஸ் என் ரூம்ல இதழரசி தூங்குறாங்க. அவங்களுக்கு உடம்பு சரியில்லை. யாரும் டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துக்கோங்க." என்று வெளியே சென்று தன் நண்பனுக்கு அழைத்தாள்.

"சொல்லு பேபி. இப்போ தான் வந்தேன் அதுக்குள்ள மாமனை பார்க்க ஆசையா இருக்கா?" என்று வம்பு வளர்க்க.

ஹாஸ்ப்பிட்டல் வெளியே வந்தவள் கார் நிறுத்தும் இடத்தில் நின்று, "அடி செருப்பால எடு அந்த விளக்கு மாத்த... உன் முகர கட்டைக்கு நான் கேட்குதோ... பரதேசி பயலே நான் என்ன சொன்னேன் நீ என்னடா செஞ்சி வச்சுருக்க?" என்று பொறிந்தாள்.

"இல்ல பேபி. என் டார்லிங்க பார்த்ததும் கொஞ்சம் மைண்ட் ஸ்லிப் ஆகிடுச்சு." என்றான் விக்கி விஷமமாய் சிரித்து.

"ஓஹ் அப்படியா? அடுத்த முறை இங்க வா உன் லிப்ஸ்ல ஐயன்பாக்கிசை தேச்சு அனுப்புறேன்." என்றாள் உறுதியாக.

"பேபி மீ பாவம்." என்று அலறினான்.

அவன் அலறலில் தன்னை மீறி புன்னகைத்தவள், "டேய் பிராடு! நான் யாருன்னு உனக்கு தெரியும் நீ யாருன்னு எனக்கு தெரியும்... ஓவரா நடிக்காத. இப்போ சீரியசா பேசுறேன். அவளை ஹர்ட் பண்ணாத. அது எனக்கு பிடிக்காதுன்னு உனக்கே தெரியும். அவ சின்ன பொண்ணுடா. ஹொவ் குட் யூ டூ லைக் திஸ் விக்கி." என்றாள் வருத்தமாக.

"பேபி எனக்கும் நல்லா புரியுது. பட் அவளுக்கு புரியனும் பேபி. பத்து வருஷத்துக்கு முன்னவும் சரி நாலு வருஷத்துக்கு முன்னவும் சரி நீயும் சின்ன பொண்ணு தான். பிடிக்காத வாழ்க்கை பிடிக்காதவனோட தொடுகை எப்படி இருக்கும்னு அவளும் பீல் பண்ணட்டும். என்னைக்கு இருந்தாலும் அவ தான் என் பொண்டாட்டி. தென் நீ கவலை படாத நான் அவளை பார்த்துக்கறேன்." என்றான் உறுதியாய்.

"விக்கி நான் சொல்றதை கேளு. பத்து வருஷத்துக்கு முன்னவோ நாலு வருஷத்துக்கு முன்னவோ எனக்கு நடந்ததுக்கு அவ காரணம் இல்ல. இது உனக்கு நல்லா தெரியும். அதைவிட அப்போ என்ன நடந்ததுன்னு இப்போ அவளுக்கு புரிய வைக்க ட்ரை பண்றது சரி இல்ல. இதுல உங்க ரெண்டு பேர் லைஃப்பும் அடங்கி இருக்கு. எனக்கு உங்க லைப் தான் முக்கியம். நடந்ததுலர்ந்து இப்போ தான் நானே கொஞ்ச கொஞ்சமா வெளிய வந்துக்கிட்டு இருக்கேன். அவளை மனசளவுல ஹர்ட் பண்ணிட்டு அப்புறம் நீ மருந்தா இருப்பேன்னு சொல்றது சரி இல்ல. அவ நிலமைலர்ந்து கொஞ்சம் யோசி விக்கி. நீங்க நல்லபடியா வாழனும் அவ்ளோ தான் எனக்கு வேணும். அதனால அவ பீலிங்க்சொட விளையாடாத..." என்றாள் விழிகளில் கண்ணீர் வழிய.

"பத்து வருஷத்துக்கு முன்ன நீ மறந்துருக்கலாம் பட் நான் மறக்கல பேபி. நான் அங்க வரலைன்னா நீ இந்நேரம் இல்ல பேபி. அதை என்னால ஜீரணிக்க முடியல. இதை பத்தி இனி பேசாத. நான் அவ ஹர்ட் ஆகாம பார்த்துக்கிறேன். மத்தது நம்ம பிளான் படி நடக்கும்." என்று வைத்து விட்டான்.

"விக்கி..." என்றும் போதே கட்டாக.

"இவனை... கட் பண்ணிட்டான். லூசு பய... நான் எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டான்.. யாரும் என் பேச்சை கேட்க மாட்டாங்க." என்று புலம்பியபடி திரும்ப, அங்கே கரங்களை கட்டிக் கொண்டு அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் மயில்வீரா.

'ஆத்தாடி பயந்துட்டேன். இவன் ஏன் இங்க நிக்குறான்? பார்வையே சரி இல்லையே? பேசினதெல்லாம் கேட்டிருப்பானோ... என்னவா இருக்கும்.' என்று உள்ளுக்குள் யோசித்தவள்.

"நீங்க இங்க என்ன பண்றிங்க சார்?" சார் என்பதில் அழுத்தம் கொடுத்தாள்.

'இவளுக்கு எவ்ளோ கொழுப்பு பாரு. என்னை யாருன்னே தெரியாத மாதிரி சார்னு சொல்றா?' உள்ளூக்குள் பொறுமியவன்.

"உங்களை பார்க்க தான் வந்தேன்." என்றவன் அவளை நெருங்க.

வேகமாய் துடித்த இதயத்தை அடக்கி அங்கேயே நகராமல் நின்றவள், "யெஸ் சொல்லுங்க என்ன வேணும்?" என்றாள்.

"நீங்க தான்." என்றவுடன் விழிகள் விரிய, "வாட் ஆர் யூ சேயிங்?" என்றாள்.

"ஐ மீன்.. பாப்பாக்கு நேத்து நைட்ல இருந்து உடம்பு முடியல. அவ உங்களை தான் கேட்டுட்டு மருந்து கூட சாப்பிடாம அடம் பிடிச்சுட்டு இருக்கா. ப்ளீஸ் என்கூட வர முடியுமா?" என்றவனிடம் மறுக்க முடியாமல், "ஹ்ம் வரேன். கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க." ஒரு செவிலியரை அழைத்து தன் அறையில் இருக்கும் கைப்பையை எடுத்து வர சொல்லி வாங்கி கொண்டவள், "ஹ்ம் போலாம் வீ..." என்று நிறுத்தியவள், "சார்." என்று காரிற்குள் ஏறிக் கொண்டாள்.

அவள் தன் பெயரை கூப்பிட முனைந்து கூப்பிடாமல் விட்டது கோபத்தை ஏற்படுத்தியது.

அமைதியாக இருவரும் வீடு வந்து சேருவதற்குள் ஒருத்திக்கு உயிர் போய் உயிர் வந்தது. தன் மனம் கவர்ந்தவன் இவ்வளவு அருகில் இருப்பது மூச்சைடைப்பது போல் இருந்தது.

அவனுக்கோ அவளின் சுவாசம் கலந்த காற்றை சுவாசிப்பதில் பேரின்பம் கொண்டான்.

இரு வேறு மன நிலையில் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

கிழ் இறங்கியவன், "வெல்கம் டூ அவர் ஹோம்." என்றதும் அவனை புருவம் சுருக்கி பார்க்க, "இல்ல என் பொண்ணுக்கு பிடிச்ச நீங்க முதல் முறையா வீட்டுக்கு வரீங்க இல்ல அதான்... வாங்க போகலாம்." என்று முன்னே நடக்க, 'இவனுக்கு என்ன ஆச்சு?' என்று யோசித்தபடி நடந்தாள்.

"பாப்பா எங்க?" என்று வீட்டை பார்வையால் அலச, "அவ ரூம்ல தான் இருப்பா வாங்க." என்று குழந்தையின் ரூமிற்கு செல்ல, "நீத்தும்மா" என்ற தந்தையின் குரலில், "டேடி பேபி எங்க? என்னை பார்க்க வரலையா?" என்று ஆர்வமாய் கேட்க, "ஆமா குட்டிம்மா வந்துட்டாங்க. நீங்க வெளிய வாங்க." என்றதும், "நோ டேடி, பேபிய உள்ள அனுப்புங்க." என்றது குழந்தை.

"நீத்து வெளிய வா நான் கதவை திறக்க போறேன்." என்று கதவின் மேல் கரம் வைக்க, "நோ பேபி வேணும்." என்று அழ தொடங்கியது.

"தள்ளுங்க" என்று அவன் அருகில் வந்தவள், "டார்லிங் நான் தான் உள்ள வரேன்." என்று உள்ளே செல்ல அழகாக ஸ்டூலில் அமர்ந்திருந்தது.

"பேபி நான் உன் மேல கோவமா இருக்கேன்." என்று முகத்தை திருப்பி கொண்டு சிரித்தது.

குழந்தையின் செயலில் புன்னகைத்தவள், "என் டார்லிங்கு என்ன கோபம்?" என்று பேசியபடி குழந்தையை வெளியே தூக்கி வந்தாள்.

"நீ என்ன சொன்ன பேபி டெய்லியும் என்கூட பேசுறேன்னு சொன்னிங்க தானே. ஆனா போன் பண்ணவே இல்ல." என்றது.

"சாரி தங்கம். நேத்து ஏற்கனவே பேசிட்டோம்ன்னு பேசலை. அதுவும் இல்லாமல் நேத்து வேற ஒரு குட்டி பாப்பாவுக்கு உடம்பு சரி இல்லை. அவங்க கிட்ட இருந்தேன் அதான் பேசலை. சரி பாப்பாக்கு உடம்பு என்னாச்சு?" என்று கேட்டு கொண்டே பரிசோதனை செய்தாள்.

"அப்போ நானும் மத்த கிட்ஸ் உம் ஒன்னா உனக்கு பேபி.." என்றது பாவமாய்.

"இல்ல பேபி. நீ எனக்கு எப்பவும் ஸ்பெஷல் தான்." என்று மயில்வீராவை அடிவிழிகளால் ஒருநொடி நோக்கியபடி கூறினாள்.

குழந்தை கவனிக்காமல் இருக்கலாம் ஆனால் எதிரில் இருந்தவன் கண்டு கொண்டான்.

"அப்போ அப்பப்போ என்னை பார்க்க வரியா பேபி.." என்றது ஆசையாய்.

"தங்கம் உன்னை மாதிரி நிறைய குட்டிஸ் உடம்பு முடியாம இருப்பாங்க அவங்களுக்கு நான் தானே ஹெல்ப் பண்ணனும். அதுமட்டும் இல்ல என்னோட குட்டி பாப்புவும் என்னை ரொம்ப தேடறாங்க. அவங்களையும் நான் பாரக்கணுமே. அதனால டைம் கிடைக்கும் போது கட்டாயம் வந்து பார்க்கிறேன். சரியா?" என்று குழந்தையின் நெற்றி முட்டி கூற, "ஹ்ம்.. உங்க பாப்பாவ கூட்டிட்டு வரியா பேபி. நான் பேபிகூட விளையாடணும் ஆசையா இருக்கு." என்றதும் சற்று தடுமாறியவள், "பாப்பாவை அப்டி உடனே கூட்டிட்டு வர முடியாது தங்கம்." என்றதும் சுருங்கிய முகம் நொடியில் பிரகாசித்தது.

"அப்போ ஓகே பேபி. நானும் டேடியும் பாப்புவ பார்க்க வரோம்." என்றதும் அதிர்ந்தவள் வீராவை நோக்க, அவனின் பார்வை ஆரம்பத்தில் இருந்து அவள் மீது மட்டும் படிந்திருக்க, 'எதுக்கு இன்னைக்கு இப்படி பார்த்துட்டு இருக்காரு. முதல்ல இங்க இருந்து கிளம்பனும்.' என்று நினைத்தவள்.

"டார்லிங்கு எதுவும் இல்ல. இப்போ எல்லாம் சரியாகிடுச்சு." என்று குழந்தையை கொஞ்சியவள்.

"அப்போ நான் கிளம்புறேன்." என்று எழுந்ததும் முகம் வாடி, "எனக்கு பசிக்குது பேபி. நீ செஞ்சு கொடுத்தா சாப்பிடுவேன்." என்றதும் நின்றவள், "சரி டா. உனக்கு என்ன வேணும்." என்றதும்.

"நீ எனக்கு செஞ்சு கொடுத்தியே புதினா ரசம் வேணும். ரொம்ப டேஸ்டா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும்." என்றது குழந்தை.

ஆனால் அவளின் விழிகளோ அவனை ஒரு நொடி தழுவி சென்றது.

'அப்பாவுக்கும் பொண்ணுக்கும் ஒரே டேஸ்ட்.' என்று உள்ளுக்குள் நினைத்தவள், "சரி டார்லிங் இதோ வரேன்." என்று அவனை பார்க்க எதுவும் பேசாமல் வெளியே சென்றான்.

அவன் பின்னே சென்று சமையல் அறைக்குள் நுழைந்து பொருட்களை தேடி எடுத்து சமைத்து முடித்தவள்.

ஒரு தட்டில் சூடான சாதம் போட்டு ரசம் ஊற்றி பிசைந்து தொட்டுக்கொள்ள புளி துவையல் வைத்து குழந்தையின் அறைக்குள் நுழைந்து ஊட்டி விட தொடங்கினாள்.

"டேஸ்டா இருக்கு பேபி தேங்க்ஸ்." என்று அவளின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"சரி தங்கம் அமைதியா கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியாகிடும். தூங்குங்க." என்றதும், "என் பக்கத்துல கொஞ்ச நேரம் படுத்துக்கிறியா பேபி..." ஏக்கமாய் கேட்டது.

குழந்தையின் ஏக்கம் அவளை தாக்க மெதுவாய் கட்டிலில் குழந்தையின் அருகில் படுக்க வேகமாய் தாவி அவளின் நெஞ்சத்தில் முகம் வைத்து படுத்துக் கொண்டது.

மெல்ல புன்னகைத்தவள், "வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி...
லாலி லாலி லாலி லாலி..." என்று மெதுவாய் தட்டியப்படி விழிமூடி பாடி கொண்டிருந்தாள்.

அவளின் குரல் கேட்டு வெளியில் அலைபேசியில் பேசி கொண்டிருந்தவன் வேகமாய் துண்டித்து விட்டு உள்ளே நுழைந்தான். அவனின் விழிகளில் சொல்ல முடியாத ஓர் உணர்வு கடந்த கால நிகழ்வு கண் முன் தோன்றியது.

****
கல்லூரி முடிந்து உடல்நிலை முடியாமல் வந்தவனை அதட்டி உருட்டி சாப்பிட வைத்து தூங்க வைக்க முயன்றாள்.
"தலை வலிக்குது, உடம்பு ரொம்ப பெயின்னா இருக்கு தூக்கம் வரல அரசி." என்றான் பாவமாய்.

உடனே அவன் அருகில் அமர்ந்தவள் அவன் தலையை தன் மடி மீது வைத்து அழுத்தி விட்டவள், "கண்ணை மூடுங்க வீரா." என்று இதே பாட்டை பாடவும் கேட்டுக்கொண்டே அசதியில் உறங்கி போனான்.
 

New Threads

Top Bottom