Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வியூகம் - கதை

Messages
113
Reaction score
54
Points
28
வணக்கம் தோழிகளே/ தோழர்களே ரொம்ப நாள் இடைவேளைக்குப் பிறகு ஒரு கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கேன். முகங்களுக்கு உங்களது ஆதரவில் திக்குமுக்காடிப் போனவள் நான் .... இதோ ஓர் புது களத்தில் நடை பெரும் கதையுடன் வந்திருக்கிறேன். இந்தக்களமும் எனக்கு பரிட்சயம் இல்லாத ஒன்று தான் ஆனால் எழுத முயற்சி செய்கிறேன். உங்களின் குறை நிறைக்களுக்காய் காத்திருப்பேன்
அன்புடன்
இந்திரா செல்வம்
 
வியூகம் - 1
டிங் .....டாங்.... டிங் ...... டாங் .....தேனுபுரீஸ்வரர் கோயில் மணியின் சத்தம் கேட்டு தான் மூழ்கியிருந்த புத்தகத்திலிருந்து கவனத்தை பிரித்தெடுத்து மணி கட்டை பார்த்தான் அனாமதேயன் - அவனது அடையாள அட்டையில் இருக்கும் பெயர் இதுதான் ... ஆனால் இவன் அடையாளப் படுத்திக்கொண்ட பெயர் மகாவிஷ்ணு.....விஷ்ணு என்று தான் மற்றவர்களால் அழைக்கப்படுபவன் .

"பர்பெக்ட் டைமிங்" என்று நினைத்தபடி எழுந்தவன் "அர்ஜுன் ,பிரேக்பாஸ்ட் டைம்" என்று உள்நோக்கி குரல் கொடுத்தான்.

தலை துவட்டியபடியேஅவசரஅவசரமாக டைனிங் ரூமினுள் நுழைந்த அர்ஜுன் தூவாலையை அருகிலிருந்த சேரில் விசிறி எரிந்து விட்டு "குட் மார்னிங் கண்ணா" என்றபடி விஷ்ணுவை நிமிர்ந்து பார்க்க அவனோ தூக்கி எரியப்பட்டிருந்த ஈரத் தூவாலையை பார்த்துக் கொண்டிருந்தான். முறைத்தான் என்று கூட சொல்லி விட முடியாது ஆனால் அதுவே அர்ஜுனை சேரில் உட்கார விடாமல் தடுத்தது. அவன் பார்வைக்கு விளக்கம் வேண்டியிருக்கவில்லை நிமிடத்தில் அந்த தூவாலை அங்கிருந்து அகற்றப்பட்டு பால்கனியில் இருந்த கொடியில்.தஞ்சம் புகுந்தது

காலை உணவை முடித்துக் கொண்டு அர்ஜுன் தனது பைக்கில் மெடிக்கல் காலேஜ் சென்று விட்டான் .விஷ்ணு மீண்டும் பத்திரிக்கையில் மூழ்கினான்.அவனது கையினில் மூன்று நிற மார்க்கர்கள் இருந்தன சிகப்பு, பச்சை , மற்றும் ஃபிளோரசன்ட். அன்று வந்த செய்தித்தாள் வார இதழ் என்று எல்லாவற்றிலும் செய்திகளை ரகம் பிரித்து அதற்கேற்ற வண்ணத்தை தீட்டினான் .

மதிய உணவிற்கு பின் காரை எடுத்தவன் நேரே மாயாஜால் மல்டிப்ளெக்ஸ்சில் நிறுத்தினான். அது ஒரு தமிழ் படம் தான் ஆனால் கூட்டமில்லை ,ஒருவேளை வார நாள் என்பதால் கூட இருக்கலாம். கூட்டமில்லாத இடத்தில் சென்று அமர்ந்தவன் அந்த தியேட்டர் முழுவதும் பார்வையால் ஒரு முறை அலசினான் .

ஆங்காங்கே ஜோடி ஜோடியாய் சிலர் ,சில கல்லூரி படிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் .... பாவம் கல்லூரியில் படிக்கச் சொல்லி கொடுமை படுத்துகிறார்கள் போலும். கல்லூரியின் அருமை பிற்காலத்தில் இவர்களுக்கு நிச்சயம் புரியும் ..ஆனால் அப்போது எதையும் மாற்ற முடியாதே |

கடைசி ரோவில் ஓர் வயதான தம்பதி. அவர்களும் இவனை போலவே சுற்றுச்சூழலை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.விஷ்ணுவின் கண்கள் அவர்களை சந்திக்கவும் அவர்கள் இவனை பார்க்கவும் சரியாக இருந்தது.. அவர்களது இதழ்களில் நட்பாய் புன்னகை மலர,இவனும் புன்னகைத்தான். அதன் பின் தேசிய கீதம் போடப்பட எல்லோரும் ஒற்றுமையாய் எழுந்து நின்று நாட்டுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

படத்தின் சென்சார் சர்டிபிக்கேட்டிலிருந்து உன்னிப்பாய் பார்க்கலானான். அதற்குப்பின் அவனது கவனம் சிறிதும் சிதறவில்லை . அந்த இருட்டிலும் கையிலிருந்த நோட் புக்கில் ஏதோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். இடைவேளையில் மீண்டும் அந்த திரையரங்கை அவனது கண்கள் வட்டமடித்தன.இப்போது ஓரிருவர் கூடியிருந்தனர். ஆனால் அவனது கண்கள் வலதுப்புற கடைசி ரோவில் அமர்ந்திருந்த பச்சை சட்டைக்காரனிடம் ஓர் வினாடி நின்று மீண்டது.

மீண்டும் படத்தில் சென்றது அவனது கவனம் ... படம் முடிந்து வெளியே வரும் பொழுது பக்கத்திலேயே நடந்து வந்த பச்சை சட்டை. "நாளை மாலை கோழிப்பண்ணை பஸ் ஸ்டாப்" போகிற போக்கில் சொல்லி விட்டு விஷ்ணுவை கடந்து வேகமாக சென்றும் விட்டான்.

காருக்கருகில் சென்றவனது கால்கள் நின்றன காரணம் அந்த வயதான தம்பதியினர் மிகவும் வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள்

"படத்துல ஒரே சண்டை, பாக்க முடியல, அடிபடரது கெட்டவன் தான் இல்லைங்கல ஆனா அவனுக்கும் வலிக்கும் தானே?ஹீரோ கத்தி எடுத்து சதக் சதக் னு குத்துவதை பாக்க முடியல." என்றாள் அந்த வயதான அம்மா.

"இந்த கருமத்தை எல்லாம் பாத்துட்டு தான் சின்ன சின்ன பிள்ளைகள் எல்லாம் வெட்டி கிட்டும், குத்தி கிட்டும் வாழ்க்கையை ஜெயில்ல கழிக்குதுங்க" என்றார் பெரியவர்.

“எவன் இந்த படத்துக்கு " U " சர்டிபிக்கேட் கொடுத்தது?" என்ற கேள்வி எழுப்பினாள் அந்த அம்மாள்

"காசு ,காசு கொடுத்தா நம் ஊர்ல எது வேணும்னாலும் கொடுப்பாங்க "

"என்னவோ போங்க இந்த நாடே கெட்டு போச்சு" என்ற பெருமூச்சுடன் அவர்களது இரு சக்கர வாகனத்தை நெருங்கினார்கள்.

அவர்களது வண்டிக்கு முன் இன்னொரு வண்டி நின்றிருந்தது. அதனை பார்த்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொன்டனர். இவர்களை கவனித்துக் கொண்டிருந்த விஷ்ணு அந்த வண்டியை தள்ளி வைத்து விட்டு இவர்களது வண்டியை எடுக்க உதவி செய்தான்

"ரொம்ப நன்றி தம்பி " என்று வாழ்த்தி விட்டு சென்றனர். விஷ்ணுவின் கார் வீட்டை நோக்கி சென்றது.

வியூகம் தொடரும்.......
 
வியூகம் - 2

ரேடியோவிலிருந்து பழங்காலத்து பாடல்கள் தவழ்ந்து வர , தலையசைத்து அதனை கேட்டபடியே செடிகளுக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தான் விஷ்ணு

"ப்ரோ .நேத்து என்னோட அனாடமி கிளாஸ் பிரபசர் கொடுக்கச் சொன்னார். மறந்தே போயிட்டேன்" என்றபடி அர்ஜுன் ஒரு காகிதத்தை நீட்டியது தான் தாமதம்

"பளார் ..." அவனது கன்னம் சிவந்து விட்டது

ஒரு வார்த்தை கூட பேசாமல் அவசரமாக அந்த காகிதத்தை பிரித்து படித்தவனின் முகத்தில் அரைநொடிக்கும் குறைவாக ஓர் ரெளத்திரம் தோன்றி மறைந்தது ..

"இது தான் கடைசி இனி எதிலாவது காலதாமதம் இருந்தால் .....'!!" என்று அர்ஜூனின் கண்களை ஊடுருவிய விஷ்ணுவின் பார்வையில் வெளிரியது அவனது முகம் ...

சார்ஜில் போடப்பட்டிருந்தது செல்போன் ஓயாமல் அடித்துக் கொண்டிருந்தது. குளியலறையிலிருந்து வெளியே வந்த விஷ்ணு செல்போனை கையிலெடுக்க அதில் தன்ஷிகா என்ற பெயர் மிளிர்ந்தது....

‘ இவள் ஏன் இப்போது அழைக்கிறாள்? இவளது அழைப்பு நேரம் இரவு தானே' என்ற சிந்தனை மனதில் ஓட தன்னிச்சையாய் விரல்கள் அழைப்பை ஏற்று போனை காதுக்கு கொடுத்தன ....

“ ஹலோ ... - " என்றவனது குரலுக்கு

"ஹாய் ஹனி என்ன பண்ற? என்னோட ஃபோன் எடுக்க ஏன் இவ்ளோ நேரம் ?" உரிமையாய் கேட்டவள் தன்ஷிகாதான்

"ஹேட் எ பாத் " என்றான் சுருக்கமாக

" ஓ ... அப்போ சார் ஃபிரெஷ்ஷா இருக்கீங்களா? அப்படியே கிளம்பி பீச் ஹவுஸ் வந்துடு"

"ஃபார் வாட்? நான் ஈவினிங் வரேன்"

"யூ நாட்டி... " என்று குழைந்தவள் " ஒரு பார்ட்டி மா .. .. நீ கண்டிப்பா வரணும்" என்றாள் ஏக்கமாய்

"நோ ஹனி... ஐஹேவ் அன் இம்பார்டன்ட் வொர்க்... ஐ வில் மீட்யூ இன் த ஈவினிங் அட் பாம்பே கிளப்" (எனக்கு முக்கிய வேலை இருக்கிறது அதனால் மாலை பாம்பே கிளப்பில் சந்திக்கலாம்)

அவனது மறுப்பால் உஷ்ணமானாள் தன்ஷிகா

"வாட் ! ! யூ ஆர் சேயிங் நோ டு தன்ஷிகா?" அவள் கத்திய கத்தலில் எரிச்சலடைந்து போனை காதைவிட்டு தூரமாக பிடித்தான் விஷ்ணு அப்போதும் சத்தமாகவே கேட்டது.

"கோ .... டூ ஹெல் " என்ற அலரலோடு ஃபோன் துண்டிக்கப்பட்டது.

அந்த குரலுக்கோ பேசியவளுக்காகவோ எந்தவித உணர்வும் அவனது முகத்தில் தோன்றவில்லை போனை மறுபடியும் சார்ஜில் போட்டு விட்டு சமையலறையை நோக்கி நடந்தான்.

கம்பங்கூழ் ஓர் டம்ளரிலும் சின்னவெங்காயம் பச்சமிளகாய் - ஓர் தட்டிலும் டைனிங் டேபிள் மீதிருக்க முகம் சுளித்தான் அர்ஜுன் "ப்ரோ! மீ பாவம் ப்ரோ ! தினமும் சிறுதானியம் தான் பிரேக்பாஸ்ட்டா ?" அவனது குமுறலை விஷ்ணு காதில் வாங்கியது போல் கூட தெரியவில்லை அவனது உணவில் கவனமாக இருந்தான் - 'சாப்பிடும் பொழுது பேச கூடாது' இதுவும் இந்த வீட்டில் ஓர் எழுதப்படாத விதி ... .. ஓர் பெருமூச்சுடன் சேரை இழுத்து போட்டு அமர்ந்தவன் வேண்டா வெறுப்பாக டம்ளரை வாயில் வைத்தான்.

அதற்குள் தன் உணவை முடித்துவிட்ட விஷ்ணு "சாப்பாட்டை இஷ்டப்பட்டு சாப்பிடு இது கூட கிடைக்காதவர்கள் நாளுக்கு நாள் இங்கே அதிகமாகிக் கொண்டே போகிறார்கள், அது மட்டுமில்லாமல் வயிறு நிரம்ப சாப்பிடு காலை உணவு ராஜா மாதிரி சாப்பிடனும்" என்று தன்னுடைய உரையை முடித்துக் கொண்டு அங்கிருந்து அகன்றான் விஷ்ணு

'ம்க்கும்........ராஜாக்கள் கம்பங்கூழ்தான் குடிச்சாங்களாக்கும் 'உள்ளுக்குள் குமைந்தான் அர்ஜுன் ஆனால் எதுவும் பேசி விட முடியாது ஏனெனில் அவன் இன்னமும் சாப்பிட்டு முடிக்கவில்லையே!

மாலை நான்கு மணி - கோழிப் பண்ணை பஸ் ஸ்டாப் - பச்சை சட்டையை பார்த்து விட்டான் விஷ்ணு ,தியேட்டரில் பார்த்த ஆள் இல்லை ஆனால் சட்டை பச்சை தான்.

அருகில் சென்றவன் "பஸ் ஏன் லேட்?" என்று கேட்டான்

"தெரியலையே சார்" என்றான் பச்சை சட்டை

"ஓ.கே சார் தாங்க் யூ" என்றவன் மீண்டும் அந்த பஸ் ஸ்டாப்பை அலசினான் அங்கே வேறு பச்சை சட்டையே இல்லை

பஸ் ஸ்டாப்பில் இருந்த சிமெண்ட் திட்டில் அமர்ந்து, ஓர் பழைய பாடலை முணுமுணுத்தபடி காத்திருந்தான். விட்டேர்த்தியாய் பார்ப்பது போல் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் தூரத்தில் பஸ் ஸ்டாப்பை நோக்கி வந்து கொண்டிருந்த இன்னொறு பச்சை சட்டை பட்டுவிட்டது. அவனது கண்கள் பஸ் ஸ்டாப்பை அலசுவது தெரிந்தது. பஸ் ஸ்டாப்பிற்குள் வரட்டும் என்று காத்திருந்தான்.

நல்ல வேளையாக வந்தவன் பஸ் ஸ்டாப் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தான். விஷ்ணு பேசினால் கேட்கும் தூரத்தில் அமர்ந்திருந்தான். சரியாக உட்காருவது போல் பச்சை சட்டை அருகில் நகர்ந்தவன்,” பஸ் ஏன் லேட்" என்று கேட்டான்

"பஸ்ல ஸ்டாட்டிங் டிரபுள் சார், அதை எடுத்துட்டு போய் மார்டன் ஹாஸ்பிடல்ல தான் சேக்கனும் " என்று பதிலளித்தான் அந்த பச்சை சட்டை

“குட் ஜோக் “என்று முடித்துக் கொண்டவன் தன் கையில் மடித்து வைத்திருந்த நாளிதழை பிரித்துப் படிக்கலானான்.

சரியாக ஓர் நிமிடம் கடந்திருக்கும் "சார் விளையாட்டு செய்தி பேப்பர் தரீங்களா?" என்று கேட்டான் அந்த பச்சை சட்டை மறுக்காமல் இரண்டு பேப்பரை தன் பேப்பரிலிருந்து பிரித்துக் கொடுத்தான் விஷ்ணு. இருவரும் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே பஸ் வந்து விட்டது. இருவரும் பஸ்சில் ஏறினார்கள், மூன்று ஸ்டாப்பிங் கழிந்து ராஜகீழ்பாக்கம் பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டான் விஷ்ணு பச்சை சட்டைகாரனிடமிருந்து பேப்பரை வாங்காமலே .

பைக் ஸ்டாண்டில் விட்டிருந்து தனது பைக்கை எடுத்துக் கொண்டு மும்பை பார் நோக்கி விரைந்தான்.

வியூகம் தொடரும்.....
 
வியூகம் - 3

மும்பை பார் - பார்க்கிங்லாட்டில்வண்டியைநிருத்தி விட்டு சாவியை சுழற்றியபடியேஉள்ளே சென்றான் விஷ்ணு. அவன்அங்கு பரிட்சயமானவன் என்பது அங்கிருந்தசிலரின் முகமலர்ச்சியில் தெளிவாக தெரிந்தது. போனில் சில எண்களை தட்டி காதுக்குகொடுத்தான். மறுமுனையில் எடுக்கப்படாமலேரிங் நின்றுவிட்டது .

அந்த இருட்டு அரையில் எப்போதும்தன்ஷிகாவுடன் அமரும் டே பிளில் சென்றுஅமர்ந்தான் .... ஆங்காங்கே ஆணும்பெண்ணும் குடித்து விட்டு ஆடிக்கொண்டிருந்தார்கள். கை முஷ்ட்டி இருகமீண்டும் நம்பரைஅழுத்தி காதுக்குகொடுத்தான்.எதிர் முனைஎடுக்கும் வரைஓயாமல் மீண்டும் மீண்டும் முயற்ச்சித்துக்கொண்டிருந்தான். ஒரு வழியாகபதிமூன்றாவது முறைஅழைப்பு ஏற்கப்பட்டது

"ஹலோ. ஹூ ஆர் யூ?" கோபம் கொப்பளித்ததுஅவளது கேள்வியில் .

"ஹனி டிரை டு அன்டர்ஸ்டான்ட் மீ" என்னைபுரிந்து கொள்ள முயற்சி செய் "எனக்கு ஒருமுக்கிய வேலை இருந்த தும்மா , இப்போ நான்பார்ல தான் இருக்கேன் உனக்காக வெயிட்பன்றேன் நீ வர்ரவரைக்கும் இங்க தான்இருப்பேன்," திடமான குரலில் பேசியவன்மறுமுனையிலிருந்து பதில் வரும் முன்தொடர்பை துண்டித்தான். அவனுக்கு நிச்சயம்தெரியும் அவளால் அவனை நிராகரிக்கமுடியாது என்று.


தன்ஷிகாவும் வந்தாள் ஆனால் இரவு 11.00 மணிக்கு மேல். அவன் அவளைநிராகரித்ததற்காய் அவனை காக்க வைத்துபழிவாங்கினாள் .இந்தியாவின் பணக்காரர்பட்டியலில் எப்போதும் பத்துக்குள் இருப்பவரின்பெண்ணாயிற்றே இந்த திமிர் கூடஇல்லையென்றால் எப்படி?


விஷ்ணுவிற்கோ அவனதுகண்களைஅவனாலேயே நம்ப முடியவில்லைஇத்தனை சீக்கிறம் வருவாள்என்று அவன்எதிர்பாரிக்கவில்லை நிச்சயம் நடுஇரவைதாண்டித்தான் வருவாள் என்றுநினைத்திருந்தான். பரவாயில்லை காதல் போதை நன்றாகத்தான் ஏறியிருக்கிறது.

"ஹாய் ஹனி " என்றுஇருகைகளை விரித்துஅவளைஅனைக்க விழைந்தவனைபுரக்கனித்து எதிரிலிருந்த இருக்கையில்அமர்ந்தாள்.

"மேடம்க்கு செம கோபம் போல ?" அவளதுசிவந்திருந்த கண்ணத்தை ரசனையுடன் உற்றுபார்த்து அவன் கேட்க

"யூ ஜஸ்ட் ஷட் அப் " என்றவள் அவன் யாரோஇவள் யாரோ என்பது போல் மொபைல்போனை பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குமேல் அவன் எதுவும் பேசவில்லை அவளையேஉற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

பார் டென்டரை (மதுபானத்தை வினியோகம்செய்பவர்.)கூப்பிட்ட விஷ்ணு , அவனதுமெம்பர்ஷிப் கார்டைநீட்டி " ரெண்டு வோட்கா" என்றான் . ஓரக்கண்ணால் தன்ஷிகா அவனை முறைப்பதை அவனால் உணர முடிந்தது. இதழோரம் ஓர் இளநகையுடன் மீண்டும்அவளையே பார்த்தபடி குஷனில் சாவதானமாகசாய்ந்தமர்ந்து கொண்டான்.

அவனது பார்வையின் வீரியம் அவளைஎன்னவோ செய்தது.

படிப்படியாக அவளது கோபமும் குறைந்தது.

வோட்காவை அவள் புறம் நகர்த்தி வைத்தவன்" யுவர் ஃபேவரைட் " என்றான்

"நோ ...ஐ ஆம் நாட் இன் எ மூட் டு டிரிங்க " 'வேண்டாம் குடிக்கும் மனநிலையில் நான்இல்லை 'என்றாள் வீம்புடன்.

“நோ திஸ் இஸ் இன்ஜஸ்டிஸ் ( இதுநியாயமில்லை) போன வாரம் நான் கோபமாஇருந்த போது நீ எனக்கு பிடிச்ச பிராண்ட்ஆஃபர்பன்னியே , அப்போ நான் ஒரு ஜென்டில்மேனா அதைஅக்சப்ட் பன்னி கிட்டேன்.பட் யூ ஆர்நாட்டூயிங் தட்" என்றான் செல்லக் கோபத்துடன்


இப்போது அவளது இதழில் புன்னகைமலர்ந்தது அதனை மறைக்க அவள் பெரும்பாடுபடுவதுதெரிந்து உதவிக்கு வந்தான்விஷ்ணு. " ஓ.கே... நமக்குள்ளஎன்னகோவமானாலும் அதை இந்தஓட்கா மேலகாமிக்க கூடாதுமா .... சீ... இட் இஸ் வெயிட்டிங்ஃபார் அஸ்" என்றான் அந்த வோட்காகோப்பையை பரிதாபமாக பார்த்தபடி

இப்போது சத்தமாகவே சிரித்து விட்டாள்தன்ஷிகா.

"யூ ஆர்வெரி நாட்டி" என்றவள்கோப்பையைகையிலெடுத்தாள்

"தேங்க் காட்" என்று மேலே பார்த்து தனக்குள்சத்தமாக பேசிக் கொண்டவன்.அவசரமாகதனது கோப்பையை எடுத்து அவளது கோப்பையோடு இடித்து 'சியர்ஸ்' சொன்னான்


அவள் ஒன்று ரெண்டு மூன்று என்று உள்ளேஇரக்கிக் கொண்டேயிருந்தாள்..விஷ்ணுவோஅந்த ஒற்றை கோப்பையை மட்டுமேகையில்வைத்திருந்தான். போதை ஏற ஏறஎதிரிலிருந்தவள் அவரைகில் வந்தமர்ந்தாள்.அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்அவனும் மறுக்கவில்லை . அவளதுஉளரல்ஆரம்பமானது "ஐ லைக்யூ டார்லிங் " லவ்யூசோ..... மச்சு.."

அவளை அனைத்தவாறு தன்னுடன் சேர்த்துப்பிடித்தவன் " ஐ நோ தட் ஹனி " என்றான்அவளது காது மடலில் இதழ் பதித்து.

" உன்கிட்டகேபப்பட கூட முடியலடா" என்றவள்அவனது இதழ்களை நோக்கி முன்னேர

"ஒன் மினிட் ஹனி " என்று எழுந்தவன்கோப்பையில் இருந்த வோட்காவை ஒரே மிடரில் வாயில் ஊற்றிக் கொண்டு வாஷ்ரூமைநோக்கி நடந்தான்.

வாஷ் பேசினில் வாயிலிருந்த வோட்காவை துப்பியவன் தண்ணீர் கொண்டு வாயை நன்குகொப்பளித்தான் . 'பீ எ ரோம் வென் யூ ஆர் இன்ரோம்'. ரோம் நாட்டில் இருக்கும்போதுரோமானியர்களைபோல் இரு’. இதுபழமொழி . விஷ்ணு அதற்கு இன்னொருஅர்த்தம் கொடுத்தான் "அப்படி முடியவில்லைஎன்றால் ரோமானியர்களைபோல்நடிக்கவாவது தெரிய வேண்டும்" என்பதுதான்.
 
வியூகம் - 4
விஷ்ணுவின் தோளில் சாய்ந்தபடி தன்ஷிகா மதி மயங்கி கிடக்க அவளது கன்னங்களை வருடியபடியே "ஒரு விஷயம் கேட்க மறந்துட்டேன் ஹனி " என்றான்

"என்ன டா?" என்றாள் குளரலாக
“இன்னைக்கு எதுக்குமா டிரீட் ?"
" ஓ.. அதுவா... ஐ காட் எ நியூ பென்ஸ்" என்றாள் சர்வ சாதாரணமாக ஒரு தனி மனிதனுக்கு ஒரு கார் போதுமானது ஆனால் இவர்கள் ஆளுக்கு பத்து கார் வைத்திருக்கிறார்கள். எதற்கு வாங்கினோம் என்று அவர்களுக்கும் தெரியாது. எதற்காக இப்படி கார் ஷெட்டில் அடைந்து கிடக்கிறோம் என்று பாவம் அந்த கார்களுக்கும் தெரியாது.
தனது சிந்தனை ஓட்டத்தை தடுத்து "எனிதிங் ஸ்பெஷல் " என்று கேட்டான்

"ம்...எஸ்... மை டேடி ஹேஸ் காட் எ பிக் மல்ட்டி நேஷனல் பிராஜக்ட்.. யூ..... யூ..... நோ......”. குளரலாய் உளரியவளை உற்று நோக்கினான்.

" வாவ் ....கிரேட் நியூஸ், கங்கிராட்ஸ் " வாழ்த்தியவன்

"என்ன கான்ட்ராக்ட் ஹனி ?" பேச்சை நீடித்தான்.
“ ஏதோ மெடிக்கல் மெஷினரி கான்ட்ராக்ட் ,ஐ ஆம் நாட் ஷீயர் ." முடித்தவள் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை காரணம் பேசும் நிலையில் அவள் இல்லை முழுதாக மட்டை.
அங்கே இருந்த பார் மேனேஜரை பார்த்து அவளது கார் டிரைவர் நம்பர் கொடுத்து தொடர்பு கொண்டு அவளை ஒப்படைக்குமாறு கூறியவன் பார்க்கிங்கை நோக்கி நடக்கலானான். போகிற போக்கில் அங்கிருந்த ஓரு பார்மேனை பார்த்து கண்களால் சைகை காட்டி விட்டு சென்றான்.
இரவு இரண்டு மணி ,அரையில் மிக மிக மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தான் விஷ்ணு "சகா... நான் கேட்ட ஆள் ரெடியா? "

"ஓகே... டூ வீக்ஸ் தான் நமக்கு டைம் அதுக்குள்ள நம்ம ஆளை உள்ள இறக்கியாகனும் , புரிஞ்சிதா?"

"அர்ஜுன் இன்னும் விளையாட்டு பிள்ளையாத்தான் இருக்கான்."

"இல்லை அவனுக்கு தெரியாது "
"சொல்லனும்... சரியான டைம்காக வெயிட்டிங்."
"எஸ் அடுத்த வாரம் தான் ஆக்ஷன் ,எல்லா குறிப்புகளும் அதைத்தான் சொல்லுது. “
“ ஜஸ்ட் வாட்ச் ,நாட் மோர் தேன் தட்"
“எஸ் ஹெவி லாஸ் ஆப் லைப் இருக்கும் “
“அதற்கான பிளான் தான் உன் கைல இருக்கு. ஃபீல்ட் ஆபீசர்கிட்ட எக்ஸ்பிளெயின் பண்ணிடு .
ஏதாவது டவுட் இருந்தா என்னை கான்டாக்ட் பண்ண சொல்லு என்னோடசெல்போன் சிக்னல் ரெக்கார்ட் பிளாக்கிங் டைம் தான் உனக்கு தெரியுமே ?
"நானா? நோ நோ .... வேற யாரையாவது அனுப்புங்க” |

" எனக்கு இங்க கிரவுண்ட் வொர்க்கொஞ்சம் இருக்கு, நெக்ஸ் டைம் ஐ வில்கோஃபார் ஷுயர் "
“ஓ கே சகா ,எனி அதர் இன்பர்மேஷன் ?”
“ஓ கே....”. தொடர்பை துண்டித்தான்
விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்த இடம் அவனது வீடு தான். இரண்டு கிரவுண்ட்டில் இடம் இருந்தது, அதில் ஒரு கிரவுண்ட் மட்டும் தான் வீடுஇன்னொறு கிரவுண்ட் முழுவதும் தோட்டம் .தென்னை, மா, பலா, வாழை, முருங்கை, கருவேப்பில்லை , வேம்பு, சப்போட்டா,கொய்யா, வெண்டை, மணத்தக்காளி கீரை, பூசணிக்காய், புடலங்காய் என்று ஒவ்வொரு செடியும் மரமும் சரியான இடைவேளையிட்டு அழகாய் பாத்திகட்டி வளர்க்கப்பட்டன.

வீட்டிற்குள் நுழைந்ததுமே கேட் அருகில் விஷ்ணுவின் நாய் பிளாக்கி அமர்ந்திருக்கும் அல்லது படுத்துக் கொண்டிருக்கும். உள்ளேபோர்டிகோவில் நிறைய லவ் பேர்ட்ஸ் கீச் கீச் என்று கத்திக் கொண்டிருக்கும் வீட்டிற்குள் இரண்டு கிளி கூண்டில் அடைக்கப்படாமல் மூன்று படுக்கையறை ,ஓர் சமையலறை ,கூடம் என்று சுதந்திரமாய் சுற்றிக் கொண்டிருக்கும். குறைந்தது ஐந்து பூனைவீட்டை சுற்றிவரும் . இரண்டு கோழியும் சில குஞ்சிகளும் கூட தோட்டத்தில் ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருக்கும். இதில் மிகப் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் பூனையும் நாயும் கோழிக்குஞ்சுகளுடன் விளையாடுமே தவிர உணவாக எண்ணியது போல் தெரியவில்லை .
மாடியில் அமைத்திருந்த ஆர்கானிக் தோட்டத்தில் நாட்டு தக்காளியை அறுவடை செய்து கொண்டிருந்தான் விஷ்ணு மொத்தம் இரண்டே செடி தான் ஆனால் இரண்டு கிலோ தக்காளி உற்பத்தியாகி விட்டது. இனி இரண்டு வாரத்திற்கு கவலையில்லை . அதற்குள் அடுத்த தக்காளி செடியில் காய் பழுத்து விடும்.ஓரத்தில் அவரைக் கொடியும் பாகற்கொடியும் படர்ந்திருந்தது. கத்தரிக்காய் ,மிளகாய் ,சிறுகீரை, புதினா இப்படி சிறுவேர் விடும் செடிகள் அந்த மாடியை அலங்கரித்திருந்தது. மாட்டு சானம் மற்றும் அழுகிய காய்கறிகளின் வாசத்தோடு ஈர மண்வாசனையும் சேர்ந்து வீசி ஒரு வித நெகிழ்ச்சியை உண்டு பண்ணியது. அந்த மண்ணில் மண்புழுக்கள் விளையாடுவதை பார்க்கையில்இயற்கை சார்ந்த விவசாயத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாதுடா என்று மார்தட்டிக் கொள்ள தோன்றும்.

அதிக மழைபொழிந்தால் செடிகளை காக்க ஓர் பெரும் ஷீட் ஒன்று தயார் நிலையில் இருந்தது. மாடி முழுவதும் ஆங்காங்கே இருக்கும் கம்புகளில் ஷூட்டை விரித்து விட்டால் போதும் அதில் பட்டு விழும் தண்ணீர் மாடியில் இருக்கும் ஓட்டை வழியாக மழைநீர் சேகரிப்புத் தொட்டியை சென்றடையும்.
எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் விஷ்ணுவையும் அர்ஜுனையும் ராஜகீழ்பாக்கம் ஏரியிலும் மாடம்பாக்கம் ஏரியிலும் பார்க்கலாம். மாட்டுசாணத்தை சேகரித்து எடுத்து வருவதில் ஞாயிறு முழுவதையும் செலவிடுவார்கள். முதலில் முகம் சுளித்த அர்ஜுன் இப்போது வழக்கமாக்கிக் கொண்டான். தினமும் வீட்டு வாசலில் மீதமான கஞ்சி, கூழ், பழம் என்று கலவையாய் இவன் வைக்கும் உணவிற்கு மாடுகள் சில அடிமையாகி விட்டன.வாசலில் வந்து "மா..மா..." என்று கூப்பிட்டு தங்களுக்கானதை உரிமையோடு பெற்றுக் கொள்ளும் அளவிற்கு விஷ்ணுவுடன் ஒன்றி விட்டன.இப்படி விஷ்ணுவின் வீடே ஒரு இயற்கை களஞ்சியமாக இருந்தது.
இப்படி ஒரு வீட்டில் யாருக்கு தான் வாழப் பிடிக்காது.?
இப்படித்தான் ஒரு காலத்தில் நம்.தமிழ்நாடும் இருந்தது, ஆனால் இப்போது?
 

New Threads

Top Bottom