Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

மந்திரம் : 5

ஆபிசில் தீரனை முறைத்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் லிங் . அவன் முறைப்பதை பார்த்த தீரன்

“ என்னடா லிங் ? இவ்வளவு பாசத்தோடு என்னை பார்த்துட்டு இருக்க , என்ன விசயம்? “ – தீரன்

“ டேய் உன்னை முறைச்சுட்டு இருக்கேன்டா ! கொலைவெறில பார்த்துட்டு இருக்கேன்டா ! “ – லிங்

“ ஓ ! அப்டியா ! பாரேன் ! நீ சொல்லித்தான் தெரியுது முறைக்கிறேன்னு ! ஆமா எதுக்கு உனக்கு வராத விசயம்லாம் செய்ற ? “ – தீரன்

“ மச்சி, இந்த இடத்துல எதுக்குடா கோபமா இருக்கேன்னு ? நீ என்கிட்ட கேட்கனும்டா ! அதவிட்டுட்டு தேவையில்லாத விசயமெல்லாம் பேசிட்டு இருக்க ! உன்னால ரைட்டர் ஜி எவ்வளவு டைப் பண்ண வேண்டியிருக்கு பாருடா “ – லிங்

“ஓ அது வேறயா ! சரி சொல்லித் தொலை , எதுக்குடா கோபமா இருக்கனு சொல்லு கேட்போம் எனக்கும் கொஞ்சம் டைம் பாஸ் ஆகும்ல “ – தீரன்.

“ டேய் என் புலம்பல் உனக்கு டைம் பாஸ்ஆ மச்சான் “ – லிங்

“ இப்ப நீ சொல்றியா! நான் இடத்த காலி பண்ணவ “ – தீரன்

“ மச்சி இருடா சொல்றேன் ! நேத்து உன் கிட்டயிருந்த கோபத்தை எல்லாம் அவ என் மேல காட்டிட்டா மச்சான் . இன்னைக்கு டீ குடிக்கக் கூட என்னை வெளில விடல மச்சான். வேலைய குடுத்து புழிஞ்சிட்டா! இதுல இங்கிலிஷ் ல வேற திட்டி என் காத பஞ்சர் ஆக்கிட்டாடா . இப்டியே போனா சூடு , சுரணை இல்லாம போயிருவேன் போல மச்சான் .பொண்ணா அவ!“ என்று லிங் இங்கு புலம்பிக் கொண்டிருக்க

தீரன் வேகமாக எங்கோ சென்றான். அவன் செல்வதை பார்த்த லிங் குழம்பியபடியே “ தீரா எங்கடா போற ? “ என்று கேட்க

“ நீ அவள பொண்ணா அவ? னு கேட்டியா “ – தீரன்

“ அதுக்கு ! – லிங்

“ எனக்கும் அந்த சந்தேகம் இருக்குடா மாப்பி அதனால வா நாம போய்

அவகிட்டயே கேட்டு நம்ம சந்தேகத்தை தீர்த்துக்கலாம் “ – தீரன்

“ டேய் நீ நல்லா வருவடா ! என்னை அவகிட்ட கோர்த்து விடுறதயே வேலையா வச்சுருக்கடா ! ஏற்கனவே அவ கத்தி ஒரு காது வலிக்குது .இன்னோரு காதையும் பஞ்சர் பண்ணிடாதடா ! “ – லிங்

“ அவ எப்டி உனக்கு டீ குடிக்கக் கூட டைம் குடுக்காம வேலை வாங்கலாம் . இப்ப உனக்கு டீ டைம் மச்சான் ! வா என்கூட என்று தீரன் இழுக்க லிங் முடியாது என்க இருவரும் இங்கு வாக்குவாதம் செய்து கொண்டிருக்கவும் கனிஷ்கா இவர்கள் அருகில் வரவும் சரியாக இருந்தது.

“ வேலை நேரத்தில வேலை செய்யாம இரண்டு பேரும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ? – கனி

“ பார்த்தா தெரியல டீ குடிக்கப் போறோம் “ – தீரன்

“ இது ஒண்ணும் டீ டைம் யில்லையே “ – கனி

“ என் நண்பனை டீ குடிக்கக்கூட விடாம வேலை வாங்கி கொடுமைபடுத்தியிருக்க ! அதனால அவனுக்கு இப்ப தான் டீ டைம்! .நீ வாடா நண்பா ! என்று தீரன் கூற கனி லிங்கை முறைத்துப் பார்த்தாள்.

அவள் பார்வையை சந்தித்த லிங் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான். பின்பு தீரனை பார்த்து கத்தினாள் கனி.

“ இது என்ன உன் அப்பன் கட்டி வச்ச ஆபிஸா ! நீ நினைச்ச நேரம் வர, போக,டீ குடிக்க. !

“ Go and do your work “ மேன் என்று கத்திவிட்டு அவள் சென்றுவிட,

“ இவள ! எப்டி பேசிட்டு போறா பாரேன் ! இரு மச்சான் ! இவள ஒரு கை பார்த்துட்டு வரேன் ! – தீரன்

“ நீ ஒரு கையும் பார்க்க வேண்டாம் , இரண்டு கையும் பார்க்க வேண்டாம் மூடிட்டு இரு மாப்பி ! நீ எதாவது ஏடாகூடமா செஞ்சு என் வேலைக்கு ஆப்பு வச்சிட்டு போயிறாத ! இத நம்பி தான் என் பொழப்பே இருக்கு ! “ – லிங்

“ இல்லை மச்சான் ரொம்ப சவுண்டு விட்டு போறா ! அவள என்னனு கேட்டுட்டு வரேன்டா “. இந்த வேலையில்லேனா என்ன ! வேற வேலை பார்த்திட்டா போச்சு ! விடு மச்சான் பார்த்துக்கலாம் “ – தீரன்

“ இல்லை டா எனக்குனு ஒரு லட்சியம் இருக்கு அத இங்க வச்சி தான் நிறைவேத்த முடியும் அதுக்கு மூடு விழா பண்ணிடாதடா “ – லிங்

என்னடா சொல்ற ? –தீரன்

“ அதான் மச்சான் பொண்ணுங்கள கரெக்ட் பண்றது “ – லிங்

“ புரியுற மாதிரி சொல்லித் தொலைடா “ - தீரன்

“ இந்த ஆபிசில் கேரளா, ஆந்திரா , கர்நாடகம்னு ரகம் ரகமா பொண்ணுக இருக்குக . அதுல யாரையாவது கரெக்ட் பண்ணனும்றத என் லட்சியமாகவே வச்சிருக்கேன்டா மச்சான்“ – லிங்

“ அட நாயே ! இதலாம் ஒரு லட்சியமா ? உன் கிட்ட போய் கேட்டேன் பாரு ! என்ன சொல்லனும் ! நீ எங்க உருப்படப் போற ! “என்று அவனை கத்திவிட்டு தீரன் கேன்டீனை நோக்கிச் செல்ல

“ டேய் இருடா நானும் வரேன் “ என்று அவனை பின் தொடர்ந்தான் லிங்.


************************************************************************



“ காந்தர்வன் சிவ ஆலயத்திற்குள் சென்று அடியாரை தேட அவர் அங்கிருந்த ஒரு தூணில் அமர்ந்தபடி தியானம் செய்து கொண்டிருந்தார் . அவரை பார்த்ததும் காந்தர்வன் அவர் அருகில் செல்ல அவர் கண்களை மூடியபடியே பேசத் தொடங்கினார் .

“ மானிடா பயம் கொள்ளாதே !
“ உரியவள் அருகில் இருக்கிறாள்
உடையவனை பார்த்துக் கொள்வாள். ! கவலை வேண்டாம் “ என்று
அவர் தன் கண்களை மூடியபடி கூறினார் .

இதை கேட்ட காந்தர்வன் தயங்கியபடியே பேசினார் .

“ அதில்லை சுவாமி நடு சாமத்துல வீட்டுல ஏதோ சத்தம்லாம் கேட்குது .கனவில் கருப்பா ஒரு உருவம் வந்து என்னை தினமும் துரத்துது . ஏதோ விபரிதம் நடக்க போற மாதிரி மனசு ரொம்ப அடிச்சுக்குது . அதான் உங்ககிட்ட இதுக்கு ஏதும் பரிகாரம் செய்யலாமானு கேட்க வந்தேன் சாமி என்று அவர் பயத்தோடு கூற

இதை கேட்ட அடியார் சற்று நேரம் மொனமாக யோசித்தார்

பின்பு கண்களை திறந்து அவரிடம் பேசத் தொடங்கினார் .


“ விதியின் வழியே நம் பயணம்
ஈசனை நம்பு அவன் பார்த்துக் கொள்வான் அனைத்தையும் “ என்று
சொல்லிவிட்டு அவர் கண்மூடிக் கொள்ள, காந்தர்வன் வருத்தத்தோடு அந்த இடத்தை விட்டு அகன்றார்.

அவர் சென்றவுடன் அடியார் கண்மூடியபடியே வார்த்தைகளை உச்சரித்தார்.


“ வஞ்சகன் சூழ்ச்சியினை முறியடிக்கும் வியூகம்தனை
மன்னவன் அவன் படைத்திடுவானோ ?
மந்திர வியூகம்தனை மதியினால் கண்டெடுத்து உரியவன் அவனிடம் சேர்த்திடுவானோ ?
கொண்டவள் துணையிருக்க , வேங்கையவன் பலம் இருக்க !
ஈசனவன் ஆட்டம்தனில் பகையை அழித்துவிட்டு மன்னவன்
அவன் இங்கு வெற்றி வாகை சூடிடுவானோ ?


வியூகம் தொடரும்
 
மந்திரம் : 6

அன்று ஆபிசில் இருந்து சீக்கிரமாக கிளம்பிவிட்டான் தீரன். லிங்கையும் தன்னுடன் சேர்த்து அழைத்துச் செல்ல அவன் கேபினுக்குச் சென்றான்.அவன் வந்ததும் லிங் அவனை கேள்வியாக பார்க்க

“ வாடா மச்சான் வீட்டுக்கு போகலாம்! “ – தீரன்

“ டேய் அதுக்குள்ளேயா ! வேலை இருக்குடா !. கொஞ்சம் பொறு மச்சான்

வேலைய முடிச்சிட்டு வரேன் “ என்று லிங் கூற

“ அதெல்லாம் முடியாது ! இப்ப வரதா இருந்தா வா ! இல்லை நான் முன்னாடி போறேன் நீ பின்னாடி மெதுவா வா “ - தீரன்

“ அப்படி என்ன மச்சான் அவசரம் இப்படி பறக்குற ! ஆமா ! நீ உன் வேலைய முடிச்சிட்டியா! நீ பாட்டுக்க கிளம்பிட்ட”- லிங்

“ போறேனா விடுடா சும்மா தொண தொணனு . அப்புறம் மச்சான்! என் வேலை பெண்டிங் அத கொஞ்சம் முடிச்சிடு செல்லம் ! வரட்டா “ என்று சொல்லிவிட்டு திரும்பியவன் திரும்பி வந்து அவனிடம்

‘ நான் போறேன்னு ராங்கிட்ட சொல்லிடு மச்சான்” –தீரன்

“ டேய் ! டேய் ! அவகிட்ட சொல்லாம போறியா , அவளுக்கு தெரிஞ்சா கொன்றுவாடா ! “ லிங்

“ நீ இருக்க எனக்கு என்ன பயம் மச்சான் சமாளிடா “என்று அவனிடம் கூறிவிட்டு தீரன் லிப்டின் உள்ளே புகுந்து கொண்டான் .

“ ஹம்ம் ! லிங்கேஷா என்ன வாழ்க்கைடா இது ! இங்க இவன் இடிக்கிறான் அங்க அவ இடிக்கிறா ! சே ! முடியலடா சாமி ! என்று புலம்பிவிட்டு தன் வேலையை தொடர்ந்தான் லிங்.

லிப்டின் உள்ளே சென்ற தீரன் கீழ் தளத்திற்கு செல்லும் பட்டனை அழுத்திவிட்டு காத்திருக்க லிப்ட் சற்று தூரம் சென்றதும் நின்றது.

“ போச்சுடா இது வேறயா ? இன்னைக்கு வீட்டிற்கு போனமாதிரி தான் ! “ என்று தீரன் சலிப்படைய லிப்ட் தன் இயக்கத்தை மறுபடியும் தொடங்கியது . லிப்ட் ஒரு தளத்தில் சென்று நிற்க உள்ளே நுழைந்தாள் கனி

அவளை பார்த்ததும் தீரன் கடுப்பானான். “ ஹம்ம் நினைச்சேன் என்னடா இது நல்லா போயிட்டு இருக்கேனு , ஒண்ணும் நடக்கலயேனு !வந்துட்டா ராங்கி இனி நான் வீட்டுக்கு போன மாதிரி தான் என்று தீரன் முணுமுணுக்க அது சரியாக அவள் காதில் விழுந்தது .

ஏய் மேன் ! யார பார்த்து ராங்கினு சொன்ன ? – கனி

“ இங்க நீயும் நானும் மட்டும் தான இருக்கோம் வேற யார நான் சொல்லிருப்பேன் “ – தீரன்

“ ஹேய் ! வார்த்தைய அளந்து பேசு மேன்” - கனி

“ அப்டீங்களா மேடம் அளக்குறதுக்கு ஏதும் கொண்டு வரல நீங்க கொஞ்சம் குடுத்தீங்கனா வசதியா இருக்கும் அளந்து பார்த்து சொல்லிடுவேன் “ – தீரன்

“ ஹேய் ! என்ன திமிரா மேன் ? என்று ஆரம்பித்தவள் ஏதோ தோன்ற ஆமா ஆபிஸ் டைம்ல இங்க என்ன பண்ற நீ ! வேலை எல்லாம் முடிச்சிட்டீயா ஜெர்மன் கம்பேனிக்கு கொட்டேஷன் ரெடி பண்ண சொன்னேன்னே பண்ணிட்டீயா ? இதலாம் செய்யாம சார்ர்ர் எங்க கிளம்பிட்டீங்க ? – கனி

“ ஹம்ம்ம் பெர்சனல் வேலை! எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு போக முடியுமா நீ என் பொண்டாட்டி பாரு “ – தீரன்

“ ஹேய் ! என்ன பொண்டாட்டி அது இதுனு சொல்ற ! ஒழுங்கா பேசு மேன்” – கனி

“ ச்ச்சு ! ஏன்டி கொல்ற இப்ப என்னதான்டி வேணும் உனக்கு ? தீரன்

“ ஹேய் ! என்ன டி போட்டு பேசுற ! அப்புறம் நான் டா சொல்லி கூப்ட வேண்டியிருக்கும்” – கனி

“ ஓ ! அந்தளவு தைரியம் வந்துருச்சா எங்க என்ன அப்டி கூப்டுடி பார்க்கலாம் வாய உடைச்சுடுறேன் “ – தீரன்

“ அப்டி தான்டா கூப்பிடுவேன் எங்க வாய உடைடா பார்க்கலாம் “ – கனி

இவர்கள் இங்கு சண்டையிட்டுக் கொண்டிருக்க லிப்ட் பாதியில் நின்றது .

“ பாருடி நீ வந்த பிறகு தான் லிப்ட நின்னுடுச்சு . எல்லாம் உன்னால் தான்டி “ – தீரன்

“ லிப்ட் நீ இருக்குறதுனால தான்டா வேலை செய்யல” - கனி

“ இப்ப நாம இரண்டு பேரும் நல்லா மாட்டிக்கிட்டோம். நான் இப்ப இருக்குற நிலைமையில உன் கூட சண்டை போட நான் தயாரா இல்லை நாம இப்ப எப்படி வெளியே போகப் போறோம்னு தெரியலயே ! கத்தாம கதவை திறக்குற வழியை பாருடி” என்று தீரன் கத்த

“ என்னை அதிகாரம் பண்ணாம கதவை திறக்குற வழியை பாருடா ! ராஸ்கல் என்று அவள் கூற

“ ஹேய் ராஸ்கல்னு சொன்ன அவ்வளவுதான் “ மறுபடியும் சீறினான் அவன்.

“ என்னடா பண்ணுவ ? – கனி

‘ அவனே சும்மா இருந்தாலும் இவ விட மாட்டா போலயே இன்னைக்கு அவன்கிட்ட நீ செமத்தியா வாங்கப் போறமா ‘

இவர்கள் இங்கு சண்டை போட்டுக் கொண்டிருக்க கனி அப்போது தான் கவனித்தாள் லிப்டின் மேற்பரப்பில் இருந்த பாகம் ஒன்று உடைந்து தீரனை நோக்கி வர, சட்டென்று தீரனை கீழே தள்ளிவிட்டு கனி விலகுவதற்குள் அது அவள் மேல் விழுந்தது . அப்போது அதில் இருந்த கம்பி ஒன்று அவள் கைகளை கிழிக்க அதிலிருந்து இரத்தம் வரத் தொடங்கியது .அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள் கனி

அவள் தள்ளியவுடன் அருகில் இருந்த சுவரில் இடித்துக் கொண்டு நின்ற தீரன் திரும்பி பார்க்கும் போது கனி மயக்க நிலையில் இருந்தாள். அவளை அந்த நிலையில் பார்த்ததும் தீரனுக்கு சர்வமும் அடங்கியது. வேகமாக அவள் அருகில் சென்று அவளை எழுப்பினான்.

“ ஹேய் ! தேவி ! எழுந்துருடி ! என்னை கண்ணை திறந்து பாருடி !

யாராவது இருக்கீங்களா நாங்க லிப்டுக்குள்ள மாட்டிட்டு இருக்கோம் யாராவது எங்கள காப்பாத்துங்க “ என்று அவன் கத்துவதற்கும் லிப்டின் கதவுகள் திறப்பதற்கும் சரியாக இருந்தது .

கதவு திறந்ததும் அவளை கைகளில் ஏந்திக் கொண்டு தீரன் வெளியெ வர ஆபிஸ் பரபரப்பானது . சூழ்நிலையை புரிந்து கொண்ட லிங் வேகமாக சென்று காரை எடுத்து வந்து தீரன் அருகில் நிப்பாட்ட தீரன் அவளை தூக்கிச் சென்று பின்பக்கம் படுக்க வைத்து இரத்தம் கசியும் இடத்தில் பஞ்சை வைத்து அழுத்தி பிடித்தபடி பதற்றமாக அமர்ந்திருக்க கார் ஆஸ்பிட்டலை நோக்கி வேகம் பிடித்தது .

சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமணையில் கனி அனுமதிக்கப்பட தீரனும்,லிங்கும் வெளியில் பதட்டமாக அமர்ந்திருந்தனர்.


**********************************************************************

லிப்டின் உள்ளே மேற்பரப்பில் நின்று கொண்டிருந்தது இரு உருவம்.

அதிலிருந்த ஒரு உருவம் அருகில் நின்று இருந்த பருந்திடம்

“ தப்பிச்சுட்டான் குரு ! அவள் உள்ளே புகுந்து அவனை காப்பாத்திட்டா “ என்று அந்த உருவம் பருந்திடம் கூற ,

“ அடியாரே ! நீ அவனை காப்பாற்ற முயலாதே ! நீ என்ன செய்தாலும் அவனை நான் அழித்தே தீர்வேன்! என்று அந்த பருந்து கத்திவிட்டு அருகில் இருந்த உருவத்திடம் திரும்பி பேசியது.

“ தேவி அருகில் இருக்கும் வரை அவனை நாம் தீண்ட முடியாது கலிங்கா .பொறுமையாக இரு நமக்கு சந்தர்ப்பம் அமையும் “ என்று அருகில் இருந்த

உருவத்திடம் சொல்லிவிட்டு அது பறந்து செல்ல அந்த உருவமும் மறைந்தது .

இதனை தன் ஞான சிஷ்டி மூலம் பார்த்துக் கொண்டிருந்தார் அடியார் . அவர் தன் தாடையை தடவியபடியே பேசினார்.

எல்லாம் அவன் செயல் .ஓம் நமச்சிவாய!


“ தேவியின் இரத்தம்தனில் வேந்தன் அவன் சித்தம் தெளிந்ததோ !!
ஈசனவன் சூழ்ச்சிதனில் அசுரன் அவன் அழிந்திடுவானோ !”
வியூகம் தொடரும்
 
மந்திரம் : 7

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கனிக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது . மருந்தின் உபயத்தால் அவள் நன்கு தூங்கிக் கொண்டிருக்க இங்கு தீரனோ ஒரு நிலையில் இல்லை .

“ தேவி வந்துருமா !’’ என்று மனதுக்குள் பலமுறை சொல்லிக் கொண்டான்.

கனியை பரிசோதித்துவிட்டு வெளியில் வந்த டாக்டரை கண்டதும் தீரன் வேகமாக அவரிடம் விரைந்தான். அவனை பின்பற்றி லிங்கும் அவரிடம் செல்ல,

தீரன் அவரிடம் “ சார் அவளுக்கு எப்டியிருக்கு ஒண்ணும் பிரச்சனையில்லையே’’ என்று பதற்றமாக கேட்க

“ பயப்பட ஒண்ணும் இல்லை சார், சாதாரண மயக்கம் அவ்வளவுதான். ரத்தம் அதிகமா போயிருக்கனால ரத்தம் ஏறிட்டு இருக்கு கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிடுவாங்க அப்புறம் போய் நீங்க பார்க்கலாம்’’ என்று கூறிவிட்டு அவர் செல்ல அப்போது தான் தீரன் சற்று அமைதியடைந்தான்.

தீரன் அமைதியாக அங்கிருந்த இருக்கையில் அமர லிங் அவனிடம் வந்தான் .

“ மச்சான் ட்ரெஸ் எல்லாம் ஒரே இரத்தமா இருக்கு, இந்தா போய் இத மாத்திட்டு வாடா ‘’ என்று ஒரு பார்சலை அவனிடம் நீட்ட அதை வாங்க மறுத்தான் தீரன் .

“ மச்சான் பயப்பட ஒண்ணும் இல்லைனு டாக்டரே சொல்லிட்டாருலடா, பின்ன என்ன ? நீ போய் மாத்திட்டு வா , அது வரை நான் அவங்கள பாத்துக்குறேன்.

குணசேகரன் சார்க்கு போன் பண்ணியிருக்கேன் அவரும் வந்திட்டு இருக்காரு, அதனால நீ பயப்பட வேண்டாம் மச்சான்’’ என்று அவனை பேசி அனுப்பி வைத்தான் லிங்

இப்படி அனைவரும் அவளுக்காக காத்திருக்க அரைமணி நேரம் சென்று கண் விழித்தாள் கனி.

அவள் விழித்ததை நர்ஸ் வந்து கூற வேகமாக உள்ளே விரைந்தான் தீரன்.அவன் உள்ளே சென்று பார்க்க அவள் படுக்கையில் அமர்ந்து பழச்சாறு பருகிக் கொண்டு இருந்தாள் . இவன் வரவைப் பார்த்ததும் அவளிடம் ஒர் அலட்சியம் தோன்ற அது தீரனுக்கு கோபமூட்டியது .அவள் நலனை கேட்க விழைந்த மனம் வார்த்தையை மாற்றியது.

“ அப்புறம் மகாராணி ஒரு வழியா கண் முழிச்சிட்டீங்க போல !உன் அப்பாவுக்கு கால் பண்ணிருக்கேன் இப்ப வந்துருவாரு .நானும் எவ்வளவு நேரம் தான் உன் மூஞ்சியையும் மொகரையும் பார்க்குறது. அதனால நான் கிளம்பறேன்’’ என்று தீரன் சொல்ல

கனிஷ்காவிற்கு கோபம் ஏறியது .

“ உன்னை யாரும் இங்க இருனு ஒண்ணும் கெஞ்சல மேன் ! போயேன் உன் வேலைய பார்த்துட்டு " என்று அவள் கோபத்தோடு கூற

“ ஓ ! அப்ப ரொம்ப நல்லதா போச்சு! நான் கிளம்புறேன் . அப்புறம் போகாம உனக்கு சேவகம் செய்வேன்னு நினைச்சியோ ? என்று சொல்லிவிட்டு திரும்பியவன் ஏதோ நினைவு வந்தவனாக திரும்ப , கனியும் ஆவலாக அவன் முகத்தை பார்த்தாள்.

“ சொல்ல மறந்துட்டேன் பாரேன் ! மருந்து , மாத்திரை னு உனக்கு தண்டமா பில் கட்டி இருக்கேன் அத என் அக்கவுண்ட்ல மறக்காம போட்டு விடுமா ! வரட்டா ! "என்று சொல்லிவிட்டு அவன் செல்ல

இவள் இங்கு கொதிநிலையில் இருந்தாள். எப்படியிருக்கேன்னு ஒரு வார்த்தை கேட்டா கொறஞ்சா போயிடுவான் .திமிர்! உடம்பு பூரா திமிர் ! இவன காப்பாத்த போய் தான் எனக்கு இந்த நிலைமை எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

“ ராட்சஸா ! உன்னை! “ என்று தனக்குள் அவனை அர்ச்சனை செய்தாள் கனிஷ்கா

இவள் இங்கு அவனை அர்ச்சனை செய்து கொண்டிருக்க வெளியே வந்த தீரன் லிங்கை அவசரப்படுத்தினான்.

“ வாடா ! வீட்டுக்கு போகலாம் அதான் ராங்கி எழுந்துருச்சுட்டால அப்புறம் நமக்கு இங்க என்ன வேலை " என்று தீரன் கூற அவனையே ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் லிங்.

லிங் பார்ப்பதை உணர்ந்த தீரன் ‘’ என்னடா நான் பாட்டுக்க பேசிட்டு இருக்கேன் என்னை அப்டி பார்த்திட்டு நிக்கிற’’ – தீரன்

இல்ல இவ்வளவு நேரம் தேவி ! தேவி ! னு பொலம்பிட்டு , பதட்டமா ஒருத்தன் சுத்திட்டு திரிந்தான் . அவ்வளவு உருகியவன் இப்ப அவகிட்ட நலம் விசாரிக்காம திமிரா பேசிட்டு வந்து நிக்கிறான். இதுல எவன் உண்மைனு பார்த்துட்டு இருக்கேன்டா. – லிங்

“ என்னது தேவியா ? யாருடா அது ? எனக்கு தெரியாம ஆள் ஏதும் பிடிச்சுட்டியா மச்சான்’’ – தீரன்

“ என்னது ஆள் பிடிச்சுட்டேனா ! ஏன்டா சொல்லமாட்ட? இவ்வளவு நேரம் நீ பிணாத்திட்டு இப்ப என்னை சொல்ற ! பேச்ச மாத்தாதடா ! எதுக்கு அப்டி உள்ளே பேசிட்டு வந்த – லிங்

‘’நான் பிணாத்துனேனா ! அப்டி எனக்கு எந்த ஞாபகமும் இல்லையேடா !

போய் எப்டி இருக்கனு கேட்கலாம்னு போனா அவ என்னை பார்த்து திமிரா ஒரு லுக் விட்றா மச்சான்.

கொஞ்சம் கூட நன்றி உணர்ச்சியே இல்லை. அதான் இப்டி பேசிட்டு வந்தேன்’’ என்று தீரன் சொல்ல அவனை ஒரு பார்வை பார்த்தான் லிங்.

நம்பு மச்சான் என்று அவனிடம் தீரன் பேசிக் கொண்டிருக்க குணசேகரன் வேகமாக அவர்களை நோக்கி வந்தார் .

“ அப்பா தீரா! என் பொண்ணுக்கு என்னாச்சுப்பா ? எங்கப்பா அவ ?’’ என்று அவர் பதட்டமாக கேட்க , தீரன் அவரிடம் நடந்ததை எடுத்துச் சொன்னான். அதை கேட்டவர் பதட்டமாக கனியிடம் விரைந்தார்.

அம்மா கனி ! என்று கூறியபடி பதட்டமாக உள்ளே நுழைந்தார் குணசேகரன்.

அவரைப் பார்த்ததும் அப்பா ! என்று கூறிக் கொண்டே அவர் தோளில் சாய்ந்து கொண்டாள் கனி

“ இப்ப எப்படிமா இருக்கு ? கொஞ்சம் சூதானமா இருந்திருக்கக் கூடாதாமா? பாரு எவ்வளவு பெரிய காயம் "என்று கூறி அவள் கைகளை வருடிக் கொடுத்தார்.

“ அப்பா எனக்கு ஒண்ணும் இல்லை ! நான் நல்லாத்தான் இருக்கேன் . லேசான அடிதான் பயப்படும்படி ஏதும் இல்லைபா!’’ என்று கூறி அவரை சமாதானப்படுத்தினாள் கனி.

“ என்னவோ மா ! நல்ல வேளை தீரன் பக்கத்தில் இருக்க போய் கரெக்டா ஆஸ்பிட்டல் சேர்த்தான் "என்று அவர் அவனை பாராட்ட

“ எல்லாம் அவனால தான் இது தெரியாம அவனை பாராட்டுறீங்களே பா "என்று தனக்குள் புலம்பிக் கொண்டாள் கனி

‘இவனை யார் அந்நேரத்துல லிப்டுக்கு போகச் சொன்னது ஒழுங்கா வேலை பார்த்துட்டு இருந்திருந்தா இந்த சம்பவமே நடந்திருக்காது என்று தனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தவள் திடீரென்று ஞாபகம் வந்தவளாக

நான் ஏன் இப்ப அவனை பற்றி நினைச்சுட்டு இருக்கேன் ?

அவனுக்கு எதாவது ஆச்சுன்னா நான் ஏன் துடிக்கிறேன் ? என்று பல கேள்விகள் அவளுள் தோன்றி மறைந்தது.’

குணசேகரன் டாக்டரிடம் சென்று பேசிவிட்டு வர கனி மாலையே வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

மறுநாளே ஆபிஸ்க்கு செல்ல இருந்தவளை அடக்கினார் குணசேகரன்.


"என்னம்மா கை இன்னும் சரியா தூக்கக் கூட முடியல அதுக்குள்ள வேலைக்கு போறேனு சொல்ற , அதெல்லாம் முடியாது! 1 வாரம் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் போ ஆபிஸ்க்கு, அது வரைக்கும் தீரன் ஆபிஸை பார்த்துக்குவான் ‘’ என்று அவர் சொல்ல

‘’ யாரு அவன் பார்த்துக்குவானா ! போங்கப்பா நல்லா காமெடி பண்ணிகிட்டு , அவன் வேலைய செய்றதுக்கே ஒரு ஆள் வேணும் , இதுல துறை என் வேலையையும் செஞ்சுடப் போறாராமா !அதெல்லாம் முடியாது ! நீங்க சொன்னதால வேணா 2 நாள் வீட்டில் ரெஸ்ட் எடுக்கிறேன் . அப்புறம் ஆபிஸ்ற்கு கிளம்பிடுவேன்’’ என்று அவள் பிடிவாதமாக சொல்ல குணசேகரனும் வேறு வழியின்றி சம்மதித்தார்.

ஒரு மாலை வேளையில் குணசேகரன் பேப்பர் படித்துக் கொண்டிருக்க அவர் நினைவு முந்தய நாள் நினைவுகளை அசைபோட்டது. கனிக்கு கைகளில் காயம் பட்டதும் அவர் மனதில் ஏதோ நெருடலாக இருக்க அவர் சென்று ஜோசியரை சந்தித்தார்.

கனியின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோசியர்

“ குணசேகரா! உன் பொண்ணுக்கு தோசம் இருக்கு அவளுக்கு மாங்கல்யம் பலம் இருந்தாலும் தன்னவனை அவள் அருகில் இருந்து காக்க வேண்டிய தருணம் இது. அதோடு அவளுக்கு 3 கண்டம் வேற இருக்கு கொஞ்சம் கவனம் சிதறினாலும் உயிர் இலக்க நேரிடும் . பரிகாரம் செஞ்சா நலம் பயக்கும் ! "என்று அவர் கூற

அதை கேட்ட குணசேகரனுக்கு பயம் பிடித்துக் கொண்டது .

‘’பரிகாரம் என்னனு சொன்னிங்கனா அதை செய்றேன் ஜோசியரே ! ‘’ என்று அவர் வேகமாக கூற

"குலதெய்வம் அருள் இல்லாம இருக்கு உன் குல தெய்வம் தாய் பரமேஸ்வரி அம்பாள் தான . அவள்கிட்ட கூட்டிட்டு போய் அம்பாளுக்கு மஞ்சள் ,குங்குமத்தால அபிசேகம் பண்ணி அங்க இருக்குற குளத்துல 3 தடவை முங்கி எழுந்தா தோசம் நீங்கப் பெற்று அம்பாள் அருள் கிடைக்கப் பெறுவாள் . அதன்பின் எல்லாம் அவள் பார்த்துக்குவாள். அது மட்டும் இல்லை இதை நீ செஞ்சு முடித்தவுடன் அவளுக்கு திருமணம் கூடி வரும் வாய்ப்பு இருக்கு "என்று ஜோசியர் சொல்ல , அதை கேட்ட குணசேகரன்

‘’அப்படியே செய்றேன் ஜோசியரே ‘’ என்று கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் விடைபெற்றார் குணசேகரன் .

இதை நினைத்துப் பார்த்த குணசேகரன் கனியை குலதெய்வ கோவிலுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார் .


***************************************************************

“ தோசக் கணக்கை நிவர்த்தி செய்ய துடிக்கும் மானிடா
ஆண்டவன் போட்ட கணக்கை நிவர்த்தி செய்ய முடியுமாடா !!
மூக்கண் கொண்டு மூவுலகையும் ஆட்டிப் படைக்கும் எம்மானின் சூச்சமத்தை விரைவில் புரிந்து கொள்வாய டா குணசேகரா!
ஓம் நமச்சிவாய என்று கண் மூடியபடியே பேசினார் அடியார்.

வியூகம் தொடரும்
 
மந்திரம் :8

வடுகப்பட்டி காவல் நிலையத்தின் உள்ளே கம்பீரமாக நுழைந்தான் தேவ இனியன் . அவன் உள்ளே நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்ததும் சுமார் 50 வயது மதிக்கத்தக்க மனிதர் அருகில் வந்தார் .

வந்தவர் அவனை வணங்கிவிட்டு “ சார் நான் ஆறுமுகம் உங்களுக்கு அசிஸ்டண்ட் “ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“ ஓ! ஓகே ! mr. ஆறுமுகம் கொஞ்சம் பெண்டிங் பைல்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வரீங்களா என்று அவன் கட்டளையிட அவர் பணிந்து அவன் சொன்னதை செய்ய விரைந்தார்.அவர் சற்று நேரத்தில் பைலை கொண்டு வந்து டேபிளில் வைக்க

இனியன் அந்த பைலை பார்வையிட்டுக் கொண்டே அவரிடம் பேசினான் .

அப்புறம் ஆறுமுகம் இந்த வடுகப்பட்டி கிராமம் எப்படி ? – இனியன்

“அந்த கிராமம் கொஞ்சம் பழைமை வாய்ந்தது சார் . மக்கள் சில பேர் பழைமை கருத்துக்களோடு பழைமைவாதிகளா இன்னும் வாழ்ந்துட்டு இருக்காங்க சார் “ என்று அவர் சொல்ல

“ஓ ! ஐ.சி! என்று நெற்றியை தடவி யோசித்தவன் , நீங்க போகலாம் “என்று அவரை அனுப்பிவிட்டு பைலில் ஆழ்ந்தான் இனியன்

சுமார் 1 மணி நேரம் சென்று ஆறுமுகத்தை மறுபடியும் அழைத்தான் .

“ என்ன ஆறுமுகம் வடுகப்பட்டி கிராமத்தில் தொடர்ந்து மக்கள் பலர் இறந்து போயிருக்காங்க ஆனால் ஏன் அந்த கேஸ் இன்னும் சரியா விசாரிக்கப்படாம இருக்கு ? என்று இனியன் கேட்க

அது வந்து சார் என்று தயங்கினார் ஆறுமுகம்.

அவன் அவரை கூர்மையாகப் பார்த்துக் கொண்டே

“அந்த கிராமத்துல இருக்குற கிணற்றில் தொடர்ந்து பல பேர் விழுந்து இறந்து போயிருக்காங்க .கணக்குபடி பார்த்தா 25 பேர்கிட்ட செத்துப் போயிருக்காங்க அது கொலையா ? தற்கொலையானு கூட விசாரிக்காம பைலை மூடி இருக்கீங்க என்று அவரை பார்த்து இனியன் கேட்க அவர் ஏதும் சொல்லாமல் வார்த்தைகளை மென்று முழுங்கினார்.

இப்ப சொல்லப் போறீங்களா இல்லையா ஆறுமுகம் ? என்று அவன் கத்தவும்

“ சார் ! சொல்றேன் ! அங்க கிணத்துல ஏதோ ஆவி, பூதம் உலாத்துறதாகவும் அது அடிச்சுடுச்சுனும் சொல்றாங்க சார் “ என்று அவர் பயத்தோடு கூற

இந்த காலத்துல போய் ஆவியாவது , பூதமாவது அந்த பைலை எடுங்க . இப்பவே நாம் வடுகப்பட்டிக்கு போயி அந்த கேஸ் பற்றிய விவரங்களை சேகரிக்கனும் போய் ஜீப்ப ரெடி பண்ணுங்க என்று அவன் சொல்ல

அவர்க்கு பயத்தில் வேர்க்க ஆரம்பித்தது.

***************************************************************************************************************

சென்னையில் தன் ரூமில் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்த தீரன் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான் .அவன் அருகில் லிங் நல்ல தூக்கத்தில் இருந்தான் . அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு படிக்க ஆரம்பித்த தீரன் திடீரென்று புத்தகத்தின் எழுத்துக்கள் எழுந்து ஒன்றுடன் ஒன்று சேர்ந்து சுவரில்

“ தீரா ! உன் கடமையை செய்யும் காலம் நெருங்கிவிட்டது ! விரைந்து வா!” என்று ஒரு வாக்கியத்தை அமைத்துவிட்டு சற்று நேரத்தில் அது மறைந்தும்விட்டது .

இதை பார்த்த தீரன் கனவா ? நனவா ? என்று புரியாமல் குழம்பினான்.

********************************************************************

இனியன் ! ஆறுமுகம் மற்றும் தடவியல் நிபுணர்கள் இருவரை அழைத்துக் கொண்டு வடுக்கப்பட்டி கிராமத்திற்கு விரைந்தான். கிராமத்தில் இறங்கியவர்கள் அதன் அருகில் இருக்கும் கிணற்றை தேடி சென்றார்கள் . கிணற்றையும் அதன் சுற்றி உள்ள இடங்களையும் ஆராயந்த இனியன் ஆறுமுகத்தை அழைத்தான்.

‘இறந்து போனவங்க பெயர் பட்டியல் எடுக்கச் சொன்னேன் எடுத்தீங்களா ? கேஸ் பற்றி ஏதும் விசாரிச்சிங்களா ஆறுமுகம் ?” என்று அவரை கேள்வி கேட்டுக் கொண்டே கிணற்றை சுற்றி பார்த்தான் இனியன்.

“ஆமா சார் ! விசாரிச்சேன் . நான் விசாரிச்ச வரை அந்த கிணத்துல 25 பேர் விழுந்து இறந்து போயிருக்காங்க .அதில் எல்லாரும் பொண்ணுங்க சார் . அவங்க வயசு சுமார் 15-25 வயசுக்குள் இருக்கும்னு சொல்லப்படுது” என்று அவர் கூற இனியன் சற்று நேரம் யோசித்தான்.

“அது மட்டுமில்லை சார் இறந்து போனவங்க முந்தின நாள் இரவு வந்து கிணற்றை சுற்றி எதையோ தேடிட்டு இருந்ததா சொல்றாங்க “என்று அவர் கூறி முடிக்க அதனை கேட்டுக் கொண்டே நடந்து வந்த இனியன் பார்வை வட்டத்தில் விழுந்தது கிணற்றின் பக்கவாட்டில் இருந்த காய்ந்து கிடந்த இரத்தத் துளிகள்.

அதை பார்த்த இனியன் தடவியல் நிபுணர்களை அழைத்து இரத்தத் துளிகளை ஆய்வு கூடத்திற்கு பரிசோதனை செய்ய அனுப்புமாறு சொன்னான்.

அவன் கட்டளையை ஏற்று அவர்கள் அங்கு விரைய இனியன் நடந்து

கொண்டே சென்று எதிரில் உள்ள ஒரு மரத்தின் அருகில் சென்று நின்றான்.அங்கு ஒரு ஆலமரம் தன் கிளைகளை பரப்பி விரிந்து காணப்பட்டது. பார்வையை சூழலவிட்டபடி அதன் அருகில் சென்றவன் கிளைகளினால் மூடப்பட்ட மரத்தின் ஒரு பகுதியை ஒதுக்கிப் பார்க்க அவன் கண்களில் பட்டது அது . அங்கு மரத்தில் பல பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்க, பெயர்களை பார்த்தவன் ஆறுமுகத்தை அருகில் அழைத்தான்.

“ஆறுமுகம் இந்த மரத்தில் உள்ள பெயர்களும் இறந்து போனவங்க பெயர்களும் ஒத்துப் போதானு பாருங்க” என்று கூறிவிட்டு திரும்பியவன் தன் ஜீப்பை நோக்கி நடந்து செல்ல அப்போது ஒரு பருந்து வந்து அவன் தலை மேலே வட்டமடித்து பின் சென்றது.


“ தோள் கொடுப்பவன் இங்கே இருக்க வேங்கையவன் வருகைதனை தந்திடுவானோ !
கொண்டவள் கண்டம்தனை உற்றவன் அவன் வந்து நீக்கிடுவானோ !"
வியூகம் தொடரும்
 
மந்திரம் :9

இரண்டு நாள் முடிந்து இன்று தான் ஆபிசிற்குள் நுழைந்தாள் கனி.அவள் தன் ரூமிற்கு சென்று தன் இருக்கையில் அமர அவள் முன் வீற்றிருந்தது ஒரு அழகிய பூங்கொத்து. அதை பார்த்ததும் வியந்தவள் அனுப்பியது யார்? என்று அதை எடுத்துப் பார்க்க அதில் கார்டு ஒன்று இருந்தது . அதை அவள் திறந்து பார்க்க அதில் “ மயக்கும் மைவிழியாளுக்கு மனம் கவரும் பூங்கொத்து “ என்று ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது . அதை பார்த்தவள் அனுப்பியது யாரா இருக்கும் ? என்ற யோசனையுடன் பார்வையை சூழல விட அங்கு அருகில் யாரும் இல்லை . அப்போது திடீரென்று அவள் யோசனை வட்டத்தில் வந்து நின்றான் தீரன்.

“ அவனா இருக்குமோ ? சே ! சே ! அவனா இருக்காது நீ ரொம்ப யோசிக்கிற கனி” என்று தன்னையே திட்டிக் கொண்டவள் தன் வேலையை தொடர்ந்தாள் .

இங்கு தீரன் முன் லிங் ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தான் . அவன் கைகளில் பூங்கொத்து வாங்கிய ரசீது இருந்தது.

என்ன மச்சான் இதெல்லாம் ? – லிங் ரசீதை தீரனிடம் காண்பித்து கேட்க

“ பார்த்தா தெரியல மச்சான் பில் “ – தீரன்

“ அது தெரியுது! என்ன புதுசா ? எப்ப நீங்க இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தீங்க ?” – லிங்

“ நீ ரொம்ப யோசிக்கிற மச்சான் . அவ என்னை காப்பாத்தினா அதற்கு பூங்கொத்து வழியா ஒரு நன்றி சொன்னேன் அவ்வளவு தான்! மத்தபடி நீ நினைக்கிற மாதிரியேல்லாம் வேற ஒண்ணும் இல்லைடா “ – தீரன்

“ஓ ! அப்படியா மச்சான் ! பாரேன்! நீ இவ்வளவு சீரியஸ்சா சொல்ற ஆனால் எனக்கு எல்லாம் பொய்யாவே தோணுது .

நன்றி சொல்ல பூங்கொத்தா தருவாங்க ? எங்க ஊரில எல்லாம் லவ்வர்க்குத் தான் இதெல்லாம் தருவாங்க.

சரி அத கூட விட்டுரலாம் மச்சான் ! அது என்ன மான்விழி , மைவிழினு ஒரு கொசுறு” - லிங்

“ ஹேய் நீ என்ன ? என்னை நிக்க வச்சி கேள்வி கேட்குற?” – தீரன்

“இல்லையே மச்சான்! உக்கார வச்சிதான கேள்வி கேட்குறேன்”- லிங்

“ என்ன நக்கலா ! அவ செஞ்ச உதவிக்கு நன்றி சொன்னேன் அவ்வளவு தான் அதை பத்தி தேவையில்லாம பேசாம போய் வேலைய பாருடா” என்று தீரன் அவனை கத்திவிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விட

லிங் தனக்குள் சிரித்துக் கொண்டான் .

இவர்கள் பேச்சு எதேச்சையாக அவர்களை தாண்டி சென்ற கனி காதுகளில் விழுந்தது . அதை கேட்டவள் தனக்குள் சிரித்துக் கொண்டே சொல்லிக் கொண்டாள்.

‘ஹம்ம் பூங்கொத்த நீ தான் வச்சதா ? நேரடியா எப்படியிருக்கேனு கேட்டா கொறஞ்சா போயிருவ ? பூங்கொத்து வழியா தான் நன்றி சொல்லுவியோ கருவாயா ?

“ என்னமோ இருக்குடா நமக்குள்ள! உன்னை பார்த்தவுடன் எனக்குள் ஏதோ தோணுது ? உள்ளுக்குள் ஓர் அதிர்வு ! ஒரு உரிமை உணர்வு ஏற்படுதுடா! இதற்கு பெயர் என்ன தீரேந்திரரே ! ''என்று அவள் தனக்குள் கூறிக் கொண்டாள்.

லிங்கிடம் இருந்து தப்பித்து வெளியே வந்த தீரன் முன் வந்து நின்றார் ஒரு மனிதர்

வெள்ளை சீருடையில் அமைதியே உருவாக தீட்சணம் பொருந்திய கண்களுடன் ஞானி போல் ஒருவர் நின்றிருந்தார். அவரை பார்த்ததும் தீரனுக்கு ,அவர் தான் போகும் வழியில் அடிக்கடி பார்க்கும் மனிதர் எனவும் , அவர் இது நாள் வரை அவன் அருகில் வரவும் இல்லை , பேச முற்படவும் இல்லை எனவும் நினைவில் தோன்றி மறைந்தது .ஆனால் இன்று அவரை தன் ஆபிசில் பார்க்கவும் அவனுக்கு குழப்பம் அதிகமாகியது.

அவரை பார்த்துக் கொண்டே கடந்து செல்ல அவன் முயல அவர் வாய் திறந்தார்.

தீரா! என்று அவர் அவனை அழைக்க. அந்த குரல் அடிக்கடி கேட்கும் அசரீரியை ஒத்திருந்தது. அதை கேட்டு .அதிர்ச்சியில் நின்றான் அவன்

“ தீரா ! அவனை எழுப்பும் வேலை நடந்து கொண்டிருக்கிறது அவன் எழும்பிவிட்டால் அழிவின் தொடக்கம் ஆரம்பமாகிவிடும் . ஏன் உயிர்பலிகள் கூட நேரலாம் . ஆகையால் அதற்குள் அவனை அழிக்கும் மார்க்கத்தை நீ கண்டுபிடிக்க வேண்டும் . விரைந்து என்னுடன் வா ! என்று அவர் கூறிக் கொண்டே தீரன் அருகில் வர தீரன் இரு அடிகள் பின்னால் சென்று நின்று அவரிடம் பேசினான்.

சார் ! யார் நீங்க ? யாரையோ எழும்பிடுவான் அது இதுனு சொல்றீங்க ? நீங்க ஆள் மாற்றி வந்து பேசிட்டு இருக்கீங்கனு நினைக்கிறேன் . முதல இடத்தை காலி பண்ணுங்க .பலி, அழிவுனு பேசிகிட்டு என்று அவரை தீட்டிவிட்டு அவன் அகன்று விட

போகும் அவனையே பார்த்தபடி பேசினார் ஞானி

ஈசா ! காப்பாற்றுவாயாக என்று இறைவன் நாமத்தை ஜெபிக்கத் தொடங்கினார் அவர்

********************************************************************************************************

கரும்புகை ஒன்று வானத்தில் தோன்றி அது பருந்தின் உருவம் பெற்று சிரித்தது .

‘ தீரா ! நான் உன்னை வீழ்த்தாமல் விட மாட்டேன்னடா ! உன் அழிவு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறதடா என்று கூறிச் சிரித்தபடி அது ஒரு குகையை நோக்கிச் சென்று அதனுள் மறைந்தது


“ அழிக்க நினைக்கும் ஒருவன்
இதை அறியாத நிலையில் மற்றோருவன்
யார் வெல்வார் ? யார் தோல்வி அடைவார் ?


விடை விரைவில்

வியூகம் தொடரும்
 

New Threads

Top Bottom