Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed உனக்கென நான் எனக்கென நீ - கதை

💕 06💕

டேய்! சித்து என்று அம்மா பூர்ணிமா அழைக்க என்ன ம்மா என்று சமையல் அறைக்குள் நுழைந்தான் சித்தார்த். இதுல சாதிக் பிடித்த ரவா கிச்சடி யும் அஜ்மல் பிடித்த மங்கா பச்சடியும் இருக்கு கொண்டு போய் கொடு என்று பூர்ணிமா நீட்ட அவன் அதை வாங்கி கொண்டு அது எப்படி மா எல்லா அம்மாவும் இப்படி தானா என்றவுடன் எப்படி? என்று அவனை பார்க்க அவன் அவங்க பிள்ளைக்கு செய்றத விட பிரிஎண்ட்ஸ் க்கு நல்லா கவனிக்கிறீங்க என்று கூற அம்மா அதெல்லாம் அப்படி தான் நீ வா சாப்பிடலாம் என்று விட்டு டைனிங் டேபிள் எல்லாம் எடுத்து வைத்தார்.

அவன் அப்பா குமாரும் அங்கு வந்தவுடன் இரண்டு பேருக்கும் பரிமாறினார் பூர்ணிமா. சித்து அடுத்து என்ன பண்ணலாம் இருக்க என்று அப்பா கேட்டவுடன் ம்ம் கல்யாணம் பண்ணிக்கலாம் னு இருக்க ப்பா என்றவுடன் டேய் என்று முறைக்க பின்ன என்ன ப்பா வேலைக்கு தான் போவேன். அதே காலேஜ்ல ப்ரோபஸ்ஸோர் சேரலாம் இருக்கோம் நாங்க மூணு பெரும் என்றவுடன் குட் செலக்ஷன் என்று அப்பா குமார் பாராட்டி விட்டு சாப்பிடு என்று இருவரும் சாப்பிட்டு விட்டு சித்தார்த் கல்லூரி கிளம்பினான் .

மூவரும் கல்லூரிக்கு வந்து சேர்ந்தனர். டேய் இந்தாங்க டா என் அம்மா உங்களுக்கு பிடிக்கும் சொல்லி ரவா கிச்சடி சாதிக் உனக்காகவும் மாங்காய் பச்சடி அஜ்மல் உனக்காகவும் செய்து கொடுத்தாங்க என்று அவன் நீட்ட அவர்கள் இருவரும் இன்முகத்துடன் வாங்கி கொண்டு அம்மாவை கேட்டதா சொல்லுடா என்று இருவரும் சொல்ல ம்ம்ம் ஆமா பார்த்து பல நாளாகுது பாரு நேத்து தானே வந்து பார்த்திட்டு போனிங்க அப்பறம் என்னடா ? என்று சித்தார்த் கேட்க இல்லடா சும்மா என்று சாதிக் பதில் அளித்தான்.



ம்ம்ம் சரிசரி நீ எப்ப சிஸ்டர் கிட்ட லவ்வை சொல்ல போற என்று சித்தார்த் கேட்க ம்ம்ம் சொல்றேன் டா அதுக்கு முன்ன நம்பர் வாங்கனும் என்றான் சாதிக் ம்ம்ம் சரி மச்சி all the best allah உன் கூட எப்பவும் இருப்பான் கவலை படாமல் இரு புரிதா என்று அஜ்மல் கூற சரி என்றான்.

ஷாயின் abstract algebra படிச்சியா டி என்று நவீனா கேட்க இல்லை நவீ ஒன்னும் புரியல என்று ஷாயின்😔😔😔 வருத்தத்துடன் சொல்ல ஏய் அடுத்த வாரம் internal exam start ஆகுது டி என்று மதி கூற அச்சோ ஆமாடி அந்த மென்ட்டல் மண்டையன் எப்படி திருத்துவானோ தெரியலையே மதி என்று நவீ கூற அல்லாஹ் நீதான் எங்களை காப்பாத்தனும் என்று அல்லாஹ்விடம் துஆ கேட்டாள் ஷாயின்.

ஹே டைம் ஆயிடுச்சு காலேஜ் போகலாம் என்று மூவரும் வீட்டில் சொல்லி விட்டு கல்லூரிக்கு சென்றனர்.

அன்று நாள் கொஞ்சம் நன்றாகவே கழிந்தது மூவருக்கும். மூவரும் வீட்டிற்கு வந்தனர்.

அம்மி அப்பா எங்கே என்று கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தாள் ஷாயின். அப்பாவை பார்க்காமல் இருக்க முடியாதா உன்னால என்று நஜீதா கடிந்து கொள்ள ஏன்டி என் பொண்ணை திட்டுற என்று கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தார் சுலைமான்.

ம்ம்ம் வந்திடுவிங்களே அப்படியே என்கிட்ட? என்று கடிந்து கொண்டு கிச்சனிற்கு சென்றார். அப்பா என்று தன் அப்பாவை கட்டி கொண்டாள். என்ன மா என்று வாஞ்சையுடன் கேட்க எனக்கு மதிக்கு நவீக்கு மூனு பேருக்கும் ஒரே மாதிரி டிரஸ் வேண்டும் இந்த பக்ரீத் குப்தாக்கு (பண்டிக்கை) என்றவுடன் அவ்வளவு தானே அல்ஹம்துலில்லாஹ் வாங்கிட்டா போது என்று அப்பா சொல்ல ஒகே ப்பா என்று மகிழ்ச்சியுடன் உடை மாற்றி கொண்டு சாப்பிட்டு முடிக்கவும் மதி நவீ இருவரும் வர சரியாக இருந்தது.

அடடா வாங்க கண்ணுங்களா என்று சுலைமான் இருவரையும் இன்முகத்துடன் வரவேற்க அப்பா ஷாயின் எங்கே ? என்று மதி கேட்க அவள் சாப்பிட்டு கொண்டு இருக்கா இப்போ வந்துடுவா என்று கூறி மேலும் காலேஜ் எப்படி போது என்று கேட்க இருவரும் அது ஒரு வே ல போது நாங்க ஒரு வே ல போறோம் என்று இருவரும் நக்கலாக பதிலளித்தனர். அவரும் சிரித்து விட்டு நல்லா படிங்க சரியா என்று கூற ஆங் ஒகே டன் என மதி சொல்ல அவர் புன்னகை பூத்தார்.

ஏய் வாங்கடி என்று ஷாயின் கூற சரிம்மா நீங்கள் மூனு பேரும் போங்க என்றவுடன் மூவரும் தங்கள் அறையில் நுழைந்தனர். ஷாயின் போனை எடுத்தாள் அதில் சாதிக் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.

Sathik : hii

Shayin : (சிரித்த முகத்துடன்) hii

Sathik : enna panriga ?

Shayin : ipa ta clg laruthu vanthu saptu frds kooda pesitu iruka. Neega??

Sathik: nan vetti ta pa . Aprm ********** ithu en num ungaluku virupam irutha whatsapp la msg pannuga illana viduga

இதை தன் தோழிகளிடம் காண்பிக்க அவர்கள் இருவரும் பார்த்து தங்களுக்குள் சிரித்து கொண்டு நீ whatsapp la இருந்து மெசேஜ் பண்ணு என்றவுடன் ஏய் என்னடி என்று ஷாயின் அதிர்ச்சியுடன் கேட்க அந்த பையன் நல்லவன் தான் நீ தாராளமாக பண்ணு என்றவுடன் சரி என்று அவன் நம்பரை சேவ் செய்து கொண்டு அனுப்பினாள்.

சாதிக் பயந்து போய் இருந்தான் என்னடா நாம தப்பு பண்ணிடோமா? என்று நினைத்த போது அவனுக்கு whatsapp யில்லிருந்து மெசேஜ் வந்தவுடன் அவன் முகம் மலர்ந்தது.

Shayin : hii this is shayin

அவன் நம்பரை சேவ் செய்து கொண்டான்.

Sathik : Jazakkallah pa anupunathuku enna nambi

Shayin : aameen. paravala pa ithula enna iruku...

Sathik : mm sari pa. Thozhuthigala magrib

Shayin : (அவள் புன்னகையுடன்) mmm thozhuthuta pa neega??

Sathik : haan thozhuthuta... Mmm sari pa isha ku time aaidichi nan pallivasaluku poganum aprm pesura

Shayin: mm seri pa. Pathu poga

Sathik 🙁 அவன் தனக்குள் சிரித்து கொண்டு) mmm seri pa. Tata

Shayin : mm tata...

இவள் பேசி கொண்டு இருப்பதை மதியும் நவீயும் கவனித்ததை இவள் கவனிக்க வில்லை. பிறகு இருவரும் இஷா முடித்துவிட்டு மூவரும் தூங்கினர்.

இஷா முடிந்து சாப்பிட்டு விட்டு தூங்க சென்றான்.

இப்படியே நாட்கள் நகர்ந்தது. ஷாயின் அடிக்கடி சாதிக் பற்றி அதிகமாக பேச தொடங்கினாள். ஷாயின் மனதில் சாதிக் இருக்கிறான் என்பதை நவீனாவும் மதினாவும் நன்கு உணர்ந்தனர். அவள் சாதிக் பற்றி கூறும் போது அவள் கண்களில் தெரியும் மகிழ்ச்சியை அவர்கள் கவனிக்க தவறவில்லை. நவீ ஷாயின் மனசுல சாதிக் இருக்கிறார் டி என்று மதி கூற ம்ம்ம் ஆமாம் டி. அவ இன்னும் உணரல அவ்வளவு தான். உணர வரைக்கும் வைய்ட் பண்ணுவோம்.

டேய் சாதிக் நீ எப்ப தான்டா சிஸ்டர் கிட்ட போய் லவ்வை சொல்ல போற என்று சித்து கேட்க இன்னிக்கு சொல்லிடுவேன் என்றவுடன் ம்ம்ம் சரி டா என்றனர் இருவரும்.

இரவு

Sathik : unga kita onnu sollama

Shayin: mmm solluga pa

Sathik: a.. Athu nan ungala love panra pa

அதிர்ந்து தோழிகளிடம் காட்ட ரைட் அப்ப மேடம் தான் லேட் பிக்அப் என்று மதி நவீ யிடம் பொறுமையாக சொல்ல ம்ம்ம் ஆமா டி என்றவடன் ஏய் என்ன என்று ஷாயின் கேட்க இது உன் வாழ்க்கை நீதான் முடிவு பண்ணணும் என்றாள் மதி

Shayin : 🤤🤤🤤 what?? Love

Sathik : mmm aama pa love panra ungala.. ennaku vara pora wife epdi irukanum aasapatano apdiya neega irukiga. Enga v2la en viruppam ta athanala unga v2la nan pesura. Neega kavala padathiga...

இதை தன் தோழிகளிடம் காட்ட அப்பறம் என்னடி என்று நவீ கேட்க வேண்டாம் டி இது தப்பு என்று ஷாயின் கூற ஏய் நீயும் அண்ணா வை லவ் பண்ற என்றவுடன் அவள் எதுவும் சொல்லாமல்

Shayin : ennaku yosikanum konjam time kooduga pa. Nalliki exam start aaguthu so exam moodira varikum intha topic naama pesa venam vera pesuvom thappa eduthukathiga nan yosichi solra

Sathik : seri pa exam nalla pannuga .. athuvarikum itha pathila yosikathiga. Studies ta mokiyam so you concentrate in your studies

Shayin : 😊😊💖💖 jazakkallahu khair

Sathik : 😍 aameen all the best nalla pannu ma

Shayin : mm seri



பிறகு மூவரும் படிக்க தொடங்கினர். எக்ஸாம் முடிந்தது. இன்று ஷாயின் தன் முடிவைசொல்ல காத்திருந்தாள்.....​
 
மன்னிக்கவும் நட்புக்களே படிப்பின் காரணமாக பதிவு சற்று தாமதமாகி விட்டது ... இந்த சின்ன பிள்ளையை பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடுங்க பா😔😔



💕07💕

ஷாயின் கொஞ்சம் கொஞ்சமாக யோசிக்க தொடங்கினாள். இருவரும் உரையாடலை மறுபடியும் நினைத்து பார்த்தாள். அவளால் என்ன என்பதை உணர முடியவில்லை. அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது, அவன் தன்னுடன் இருந்தால் லைப் நன்றாக இருக்கும் என்று. அவளால் தன் பெற்றோர்களை எதிர்க்க முடியாது எனக்கு என் அம்மா அப்பா மட்டும் முக்கியம். யா அல்லாஹ் நான் என் அம்மா அப்பா வை மீறி எந்த ஒரு செயலையும் செய்யும் அளவுக்கு என்னை தள்ளிவிடாதே என்று துஆ கேட்டாள்.

அவள் தனியாக யோசிக்கட்டும் என்று அவளை தொல்லை செய்யாமல் இருந்தனர் மதினாவும் நவீனாவும். ஆனாலும் தன் படிப்பில் கவனமாக இருந்தாள். Internal exam யை நன்றாக முடித்தனர் மூவரும். இன்று அவனிடம் தன் முடிவை சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

சாதிக், ஷாயின் என்ன சொல்லுவாள் என்று யோசித்து கொண்டு இருந்தான். யா அல்லாஹ்! நாங்கள் இருவரும் சேர வேண்டும் என்று அல்லாஹ்விடம் துஆ கேட்டான்.

ஆனால் அவனால் ஒன்று மட்டும் உணர முடிந்தது தன்னால் அவள் இல்லாமல் வாழ முடியாது என்று.

இரவு

Shayin : hii

Sathik : hii

Shayin : ennaku en amma appa romba mookiyam. But unga kooda irutha life nalla irukum thonuthu. But allah enna ninaikra nu therla...naama entha moodivum eduka moodiyathu.... Enga v2la allience pakra apa nan unga kita solra neega vanthu pesuga but enga v2la vennanu solta enna la ethum panna moodiathu sorry.....

இதை படித்த சாதிக் ஏன்மா உன்கூட நான் இருந்தா லைப் நல்லா இருக்கும் சொல்றே அதுலே உனக்கு புரியலயா உனக்கும் என் மேலே லவ் இருக்குன்னு என்று தனக்குள் கூறி கொண்டு டைப் செய்தான்.

Sathik : in sha allah seri ma un moodivu nalla moodivu ta ma naama seruvom nu allah kita dua keppom seriya

Shayin : mmm kk in sha allah.

Sathik : mm kk ma tholuthiya isha

Shayin : mm thozhututa neega thozhuthigala

Sathik : mmm thozhututa ma.

Shayin : saptigala

Sathik : அல்ஹம்துலில்லாஹ் sapta neega saptigala

Shayin : அல்ஹம்துலில்லாஹ் sapta.

Sathik : exam epdi panniga

Shayin : அல்ஹம்துலில்லாஹ் etho panni irukom

Sathik : mm seri ma.

Shayin : mmm

Sathik : seri neega poi thooguga naliki pesuvom

Shayin : mmm seri. Allah un kaaval asslamu alaikum (var)

Sathik : ( புன்சிரிப்புடன்) mm kk waalaikumussalam (var)

ஷாயின் தன் தோழிகளிடம் கூற நவீயும் மதியும் அவளின் நெற்றியில் முத்தமிட்டு நல்ல முடிவை தான் டி எடுத்து இருக்க என இருவரும் கூற தன் தோழிகளை அணைத்து கொண்டு அழுதாள் ஏய் என்னாச்சு என்று மதி கேட்க நான் ரொம்ப கொடுத்து வச்சவடி உங்களை மாதிரி தோழிகள் கிடைச்சதுக்கு.. நாங்களும் தான் டி என்று அவளை அணைத்து கொண்டனர்.

ஏய் நாளைக்கு பேப்பர் கொடுப்பாங்க என்ன மார்க் வருமோ என்று பயந்தனர் மூவரும். சரி வாங்க டி தூங்குவோம் என்று மூவரும் தூங்கினர்.

ஷாயின் மனதில் சாதிக் கொஞ்சம் கொஞ்சமாக வாழ ஆரம்பித்தான். ஆனால் அதை அவளால் உணர மட்டும் முடியவில்லை. அவள் தோழிகளும் புரிந்து கொண்டனர் அவள் இன்னும் உணரவில்லை என்று.

ஏய் மதி என்டி ஷாயின் இப்படி இருக்கா? தெரியல டி நவீ. சாதிக் அண்ணா ரொம்ப பாவம். ம்ம்ம் ஆமாம் டி என்று இருவரும் பேசிக்கொண்டு இருந்தினர்.

சாதிக் புரிந்து கொண்டான் அவள் இன்னும் அவளுக்குள் இருக்கும் காதலை உணரவில்லை என்று. ஆனால் ஒரு நாள் நிச்சயமாக உணருவாள் என்று நம்பினான். சாதிக் எல்லாம் தன் நண்பர்களிடம் கூற உண்மையாலுமே நல்ல பொண்ணு தான் மச்சி என்றான் அஜ்மல். ம்ம்ம் ஆமாம்.

என்ன தான் இருவரும் நேசித்தாலும் தங்கள் எல்லையை மீளவில்லை இருவரும்.

நாட்கள் அழகாக நகர்ந்தது இருவருக்கும். இருவரும் ஒருவரை ஒருவர் இதுவரை பார்த்து கொள்ளவில்லை. இவர்கள் பழகி மூன்று மாதம் முடிவடைந்தது.

கல்லூரியில்....

இப்ப என்ன ஹவர் டி என்று மதி கேட்க Complex analysis டி என்று நவீ கூற ஒ கொரில்லா பீரியடா என்றவுடன் மூவரும் சிரித்தனர்.

ஆசிரியர் உள்ளே வந்தவுடன் இன்னிக்கு நான் கிளாஸ் எடுக்க போவதில்லை என்றவுடன் மாணவிகள் கத்த சரிசரி போதும் இப்போ நாம ஒரு debut வைக்க போறோம் என்றவுடன் என்ன தலைப்பு என்று மாணவிகள் கேட்க அவர் பார்த்ததும் காதல் மட்டும் தான் வருமா? இல்லை நட்பும் வருமா என்றவுடன் அனைத்து மாணவிகளும் சார் பார்த்தவுடன் லவ் தாற் சார் வரும் என்றனர்.

ஒருசில பேர் அதற்கான விளக்கமும் தந்தனர். சார் ஒரு நிமிஷம் பார்த்தவுடன் நட்பும் வரும் என்று குரல் கேட்ட இடத்தை பார்த்தனர் அனைவரும். அதானே பார்த்த என்னடா இன்னும் எதிர்ப்பு வரவில்லை என்று என சார் கூற மாணவிகள் அனைவரும் அவர்கள் மூன்று பேரையும் முறைத்தனர்.

அவர்கள் மூன்று பேரும் ஒன்றாக இருப்பது அனைவருக்கும் பொறாமை அவர்களின் நட்பு யாருக்கும் பிடிக்காது. மூன்று பேரையும் பிரிக்க எண்ணி தீட்டிய திட்டம் எல்லாம் வீணாகி தான் போனது .

என்ன தான் ஆசிரியர்களிடம் இவர்களை பற்றி குறை கூறினாலும் செல்லாது. ஏன்னா அவங்களுக்கு தெரியும் மொத்த வகுப்பும் அவர்களின் உறவை பிரிக்க போடும் திட்டம். இவர்கள் மூவரும் எதிர்த்தவுடன் அனைவருமே எரிச்சல் அடைந்தனர்.

எப்படி என்று ஆசிரியர் கேட்க சொல்றேன் சார் என்று ஷாயின் கூற தொடங்கினாள்.

எங்க அம்மா கல்யாணம் ஆன புதுசுல அப்பாவோட அம்மா ரொம்ப கொடுமை பண்ணாங்க எங்கப்பா அம்மா கிட்ட சொல்லுவாங்கலா வா நாம தனியா போய்டலாம் ஆனா அம்மா வர மாட்டாங்கல அப்புறம் என் அண்ணா பொறந்தா ஆனா அவன் பிறந்த ஆறு மாசத்துல இறந்துட்டார்.

அந்த குழந்தை இறந்ததற்கு என் அம்மா தான் காரணம் சொல்லி ரொம்ப கேவலாமா பேசி இருக்காங்க அப்பாக்கு கோபம் வந்து அவங்ககிட்ட சண்டை போட்டு எங்கம்மா அழைச்சிட்டு வீட்டை விட்டு இந்த ஊருக்கு வந்திட்டாரு.

அப்ப எங்கம்மா pregnant aa இருந்தாங்க இந்த ஊரில் எங்க போறது தெரியாம bus standla இருக்க ஒரு டீக்கடையில் உட்கார்ந்து இருந்தாங்க. அப்ப எங்கம்மா அழுறத பார்த்து ஒருத்தர் வந்து என்னாச்சு கேட்டார்? போல எங்கப்பா கிட்ட எங்கப்பா கொஞ்சம் தயங்கினாரா அவர் கூட வந்த இன்னொருத்தர் அட உங்களை பார்த்தவுடன் எங்கள் நண்பன் போல் தோனுச்சு அதான் கேட்டோம் என்றவுடன் எங்கப்பா எல்லாமே சொல்லி இருக்காரு.

அவங்க ரெண்டு பேரும் எங்கள் வீட்டுக்கு வாங்க அழைச்சிட்டு போனாங்க. அவங்க வேற யாரும் இல்லை நவீனா அப்பாவும் மதினா அப்பாவும் தான்.

அவங்க வீட்டில் இருந்தவங்க கூட எங்களுக்கு உதவுனாங்க எங்கள் மூனு பேரோட அப்பாவும் சேர்ந்து பிஸ்ளஸ் தொடங்கினாங்க ஒன்னா . அவங்களும் வாடகை வீட்டில் தான் இருந்தாங்க. அப்பறம் நாங்க மூனு பேரும் பிறந்தோம். அப்புறம் இரண்டு வருஷத்தில் கொஞ்சம் பணம் வந்தவுடன் மூனு பேரும் சேர்ந்து ஒரே area la பக்கத்து பக்கத்துல இடம் வாங்கி ஒரே மாதிரி வீடு கட்டி அப்போது இருந்து இப்போது வரைக்கும் ஒன்னா இருக்காங்க.

அதே நட்போட. அந்த நட்பு இன்னிக்கு எங்க மூனு பேருக்கிட்டயும் வந்துடிச்சு. நாங்க மட்டும் இல்லை. எங்க அம்மாக்களும் நல்ல தோழிகள் தான். நாங்க மூனு பேரும் இதுவரை எதுக்காக பிரிந்து இருந்தது இல்லை. எங்களை பிரிக்க எத்தனையோ பேர் பல முயற்சிகள் எடுத்து இருக்காங்க பட் எதுமே வொர்க் ஆகல.

நாங்க மூனு பேரும் எல்லாத்தையும் ஒரே மாதிரி. மார்க் கூட ஒன்னா தான் வாங்குவோம். அது எல்லாருக்குமே தெரிஞ்சது தான். அது எப்படி தெரியாது. மூனு பேரும் ஒரே மிஸ்டேக் பண்ணி வச்சி இருப்போம் எக்ஸாம்ல.

எல்லா டீச்சர்சும் மண்டைய போட்டே கொழப்பிக்குவாங்க . இப்த நட்பு எங்களோட மட்டும் நிறுத்தாம எங்க குழந்தைகளும் இதே மாதிரி இருக்க ஆசை.

இப்போ பாய்ட் வரேன். நல்லது கெட்டது எடுத்து சொல்ல ஒரேயொரு உறவால மட்டுமே முடியும் அந்த உறவு தான் நட்பு. அந்த ஒரு உறவால் மட்டுமே நமக்கு புரிகிற விதத்துல எடுத்து சொல்ல முடியும் . அந்த அழகு நட்பு கிட்ட மட்டும் தான் இருக்கும் என்றவுடன் ஆசிரியர் சூப்பர் என்று கை தட்டினார்.

மேலும் அவர்கள் மேல் பொறாமை தான் அதிகம் ஆனது மாணவிகளுக்கு. பெல் அடித்தவுடன் ஒகே காய்ஸ் சீ யூ டூமாரோ என்று விடைபெற்று கொண்டார்.

அந்த நாள் நன்றாகவே நகர்ந்தது மூவருக்கும். பிறகு வீட்டிற்கு வந்தனர். அம்மி நான் இன்னிக்கு நவீ வீட்டுல தான் தங்க போறேன் என்றவுடன் ம்ம்ம் வேணா சொன்னா மட்டும் கேட்கவா போ ஆனா அவங்களுக்கு தொல்லை பண்ணாம இருந்தா போதும் என்று அம்மா கூற ஹான் நீ கொடுக்குறத விடவா நான் கொடுக்கிறேன் என்றவுடன் அடி கழுதை வாய் மட்டும் இல்லனா உன்னலா நாய் தூக்கிட்டு போய்டும். அம்மா அந்த நாய் பாவம் மா உன் வைய்ட் லா அது தாங்காது என்றவுடன் கரண்டி அவளை பதம் பார்க்க அவள் அங்கிருந்து நவீனா வீட்டிற்கு ஒடி விட்டாள்.

ஏய் வாயாடி வா என்று சுசீலா அழைக்க அம்மா உங்கள் frd என்னை ஓவரா திட்டுறாங்க என்னன்னு கேளுங்க என்றவுடன் நான் கேக்குற வாலு என்று சரத் சொல்ல ம்ம்ம் சரி ப்பா நவீ எங்கே உள்ள தான் மதி கூட பேசிட்டு இருக்கா ம்ம்ம் சரி ப்பா நான் உள்ளே போற என்று அவள் அறைக்கு சென்றாள்.

ஏய் எருமை உன் ஆள்ட்ட பேசலையா என்றவுடன் ஏய் என்னா ஒன்னுமில்லை சாதிக் அண்ணா கிட்ட பேசலையா கேட்ட என்று மதி சொல்ல ம்ம்ம் இப்ப தான் போனே கையில் எடுத்தேன் என்று அவனிடம் பேச தொடங்கினாள்.

Sathik : assalamu alaikum (var)

Shayin : waalaikumussalam (var)

Sathik : saptiya ma

Shayin : illa pa inimel ta sapdanum . Inniki Navee v2la ta dinner inimel ta .

Sathik : en anga unga v2la illaya

Shayin : illapa naaga ipdi naaga moonu perum eppa entha v2la irupom theriyathu . Moonuma enga v2ta

Sathik : mmm seri ma

Shayin : mm seri pa . Neega saptigala??

Sathik : nanum inimel ta sapdanum

Shayin : seri neega thozhuthigala mani 9 aaidichi

Sathik : thozhuthuta nee thozhuthiya ma

Shayin : mmm thozhuthuta.. kk assalamu alaikum (var) allah un kaaval nan saptu thooga porra

Sathik: seri ma nanum saptu thooga pora waalaikumussalam (var)

மூவரும் சாப்பிட்டு தூங்கினர்.

தொடரும்​
 
💕08💕

ஷாயின் எழுந்திடு டி தொழுகனும் என்று மதி எழுப்ப அவளும் எழுந்து உளு செய்து விட்டு தொழுதனர். பிறகு நவீயை இருவரும் எழுப்பினர்.

ஏய் ஏன்டி நடு ராத்திரியில் எழுப்பிறிங்க என்று சிணுங்க அடியே நாயே மணி 6 ஆகுது நடு ராத்தியா உனக்கு பிசாசு எழுந்திடு டி கழுதை என்று மதினா திட்ட ஏய் இன்னிக்கு லீவு தானே நாம இன்னிக்கு செமயா என்ஜாய் பண்ணணும் ஒகே வா என்று ஷாயின் கூற ம்ம்ம் ஒகே டி என்றனர் இருவரும்.

பிறகு மூவரும் குளித்து விட்டு ஹய் பூரி சாம்பார் எனக்கு பிடிச்சது என்று ஷாயின் கூறி கொண்டு உட்கார்ந்தாள். மூவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க என்ன வாலு சாம்பார் எப்படி என்று சரத் கேட்க நல்லா இருக்கு நீங்க தான் செஞ்சிங்கல என்று ஷாயின் கேட்க ம்ம்ம் ஆமாம் நான் தான் செய்த என்றார் சரத்.

அதான் நல்லாவே இல்லையா என்று நவீ கலாய்க்க ஏய் என்ன அப்பா எவ்வளவு சூப்பரா செஞ்சியிருக்காரு நீ கூட சாம்பார் என்ற பெயரில் போன வாரம் ஒன்னு மஞ்ச தண்ணியை வச்சியே அதை விட இது நூறு மடங்கு சூப்பரா இருக்கு என சரத் ஆதரவாகவும் நக்கலாகவும் கூற உன்னை என்று நவீ ஷாயினை அடிக்க துரத்த அவள் அங்கிருந்து எழுந்து ஒடினாள். மதி ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ண என்றவுடன் அவளும் வந்து ஷாயினை பிடிக்க விரட்ட அவர்களிடம் மாட்டாமல் அவளும் ஒடினாள்.

ஏங்க இந்த வேலை உங்களுக்கு? இப்ப பாருங்க சாப்பிடாமல் விளையாடிட்டு இருக்காங்க உங்களை என்று சரத் தலையில் லேசாக கொட்டினார் சுசீலா. ஏய் தெரியாம பண்ணிட்டமா என்று பாவமாக😔😔 சரத் சொல்ல ம்ம்ம் ரொம்ப நடிக்காதிங்க கேவலாமா இருக்கு என்று நக்கலாக கூறிவிட்டு அவர்கள் மூவரும் எவ்வளவு அழகாக இருக்காங்கல என்று அவர்களை ரசித்த சுசீலா பார்த்து உன் கண்ணே பட்டுவிடும் போல முதல்ல என் பொண்ணுங்களுக்கு சுற்றி போடனும் என்று கூற நான் ஒன்னும் கண்ணு வக்கில என்று அவர் சலித்து கொள்ள சரிசரி எனக்கு பசிக்குது டிபன் எடுத்து வை என்றவுடன் அவருக்கு பரிமாறினார் சுசீலா.

ஒருவழியாக ஷாயினை தன் ஆசை தீர அடித்து விட்டு வந்து சாப்பிட்டார்கள் இருவரும். பிறகு ஷாயினும் வந்து சாப்பிட்டு விட்டு என்ன பண்ணலாம் என்று மூவரும் யோசிக்க ஏய் வாங்க நாம நொண்டி விளையாடுவோம் என்று மதி கூற ம்ம்ம் சரி வாங்க டி போலாம் என்று மூவரும் விளையாடிக்கொண்டு இருந்தனர். இந்த விளையாட்டில் சாதிக்கிடம் பேசவே மறந்துவிட்டாள் ஷாயின்..
.
.
.
.
.
.

சாதிக் அவளிடம் இருந்து எந்த மெசேஜ் வரவில்லை ஏன் என்று யோசித்தவாறு டேய்! அஜ்மல் இன்னும் ஷாயின் மெசேஜ் பண்ணாமல் இருக்கா என்னாச்சு தெரியல என்று அவன் வருத்தமாக கூற அவன் டேய் எதாது வேலையாக இருப்பாங்க டா சிஸ்டர் அவங்களே பண்ணுவாங்க என்றவுடன் சரி மச்சி என்றான்.

டேய் மச்சி நம்ம சுசீந்திரன் சார் பாத்தியா ரொம்ப நாளா டல்லாவே இருக்காரு என்னாச்சு தெரியலை டா என்று சித்தார்த் கவலைப்பட ம்ம்ம் ஆமாடா நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன் என்று அஜ்மல் கூற ஏய் வா நாம சார் வீட்டுக்கு போய் பார்ப்போம் என்று சாதிக் கூறியவுடன் மூவரும் அவர் வீட்டுக்கு சென்றனர்.

அவர்களை பார்த்த ஆசிரியர் வாங்க டா என்ன இந்த பக்கம் என்று அவர் கேட்க உங்களை பார்க்க தான் சார் நாங்கள் வந்தோம் என்று சித்தார்த் கூற என்ன ஏதாவது டவுட் கிளியர் பண்ணணுமா? என்று அவர் கேட்க ம்ம்ம் ஆமா சார் என்றார் அஜ்மல் என்ன டவுட்? என்றவுடன்.

ஏன் சார் நீங்கள் டல்லா இருக்கிங்க என்று சாதிக் கேட்டவுடன் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று அவர் ஏதோ மறைக்க முயல சார் நாங்க உங்களை 7th std லருந்து பார்த்திட்டு இருக்கோம் சார். 10th வரைக்கும் எங்களுக்கு நீங்க தான் சார் history வாத்தியார். அதுக்கப்புறம் நீங்கள் காலேஜ்ல ஜாயின் பண்ணிட்டிங்க. உங்களை பார்த்து தான் சார் நாங்கள் மூனு பேரு hostory எடுத்து நீங்கள் வொர்க் பண்ற அதே காலேஜ்ல சேர்ந்தோம் அதே மாதிரி யூஜி லருந்து இப்ப வரைக்கு எங்களுக்காக வரிங்க தெரியும் சார் நீங்கள் இப்படி இருக்கது எங்களுக்கு பிடிக்கலை என்ன பிரச்சினை சொல்லுங்க சார் என்று மூவரும் கெஞ்சினர்.

அவர் கண்ணீரோடு என் மகள் எங்கிட்ட பேசியே ஒரு வாரம் ஆகுது. எது கேட்டாலும் கத்துறா கோவப்படுறா. காலேஜ் போய் ஒரு வாரமாகுது என்று அவர் கண்கலங்க மூவரும் சிறிது நேரம் யோசித்து விட்டு சார் மேம் நீங்கள் ரெண்டு பேர் பர்மிஷன் கொடுத்தா நாங்கள் மூனு பேரும் தங்கச்சிகிட்ட பேசி என்ன விசாரிக்கிறோம் சார் என்று அஜ்மல் கூற அவரும் அவர் மனைவிக்கு சுதாவும் யோசித்து சரிப்பா நீங்க போய் பேசுங்கள் உள்ளே தான் இருக்காள் என்று கூறினார் அவர்.

மூவரும் உள்ளே சென்று மித்ரா என்று அழைத்தான் சித்தார்த். அவள் இவர்களை அறிந்ததால் வாங்க என்று அழைத்தாள்.

என்ன மித்ரா நீ ரொம்ப டல்லா இருக்கே? என்று சாதிக் கேட்க அப்டிலாம் இல்லையே என்று மறைத்தாள் மித்ரா. உன் அண்ணனா கேட்கிறோம் என்ன பிரச்சனை என்று சொல்லுமா என்று மூவரும் வாஞ்சையுடன் கேட்க அண்ணா என்று சுவற்றில் உரசிய படி கீழே உட்கார்ந்து கொண்டு கையை முகத்தால் மறைத்து அழுதாள்.

அவள் அழுகட்டும் என்று மூவரும் அமைதியாக இருந்தனர். பிறகு, அஜ்மல் அவள் தலையை வருடி என்னமா ஏன் அழுகுற ஏதுவா இருந்தாலும் சொல்லு உனக்கு மூனு அண்ணன்கள் இருக்கோம் என்று பொறுமையாக கூற அவள் கண்ணை துடைத்து விட்டு அண்ணா என் whatsapp numku யாரோ தப்பான வீடியோ அனுப்புறாங்கண்ணா. நான் யாருன்னு கேட்டதுக்கு சொல்லவே வாய் கூசுது அவ்வளவு தப்பா பேசுறா. ஒரு வாரத்திக்கு முன்னாடி எனக்கு கால் பண்ணி தப்பான உறவுக்கு அழைக்கிறா.

உனக்கு ஒரு வாரம் டைம் நீ நான் சொல்ற இடத்திக்கு வரனும் இல்லைனா உன் குடும்பத்தை போட்டு தள்ளிட்டு நான் மாட்டுன்னு போய்கிட்டே இருப்பேன் சொல்றா செத்துடலாம் போல இருக்கு அண்ணா சொல்லவும் அனைவரும் அதிர்ந்தனர்.

சாதிக், மித்ரா இங்க பாரு இப்ப அவன் போன்னா நான் வரேன்னு சொல்லு என்றவுடன் டேய் நீ லூசா டா நீ என்று அஜ்மல் சித்தார்த் கோபமாக கேட்க இல்லைடா இவனுங்க மாதிரி ஆளுங்க சும்மா விடக்கூடாது அவளை மீறி அவன் இவள் மேலே கை வைக்க மாட்டான் வைக்கவும் முடியாது என்று கோபமாகவும் அழுத்தமாகவும் அவன் கூற எப்படி? என்று இருவரும் புரியாமல் கேட்க இரு சொல்றேன். நீ முதல்ல சாரையும் மேம்மையும் கூப்பிடு என்றவுடன் அவர்களை அழைக்க அவர்களும் வந்தார்கள்.

இருவரிடமும் இதை சொல்ல அவர்கள் அதிர்ந்தனர். ஆமா மித்ரா உன் நம்பர் எப்படி அவனுக்கு கிடைச்சது? என்று சந்தேகமாக அஜ்மல் கேட்க எனக்கும் தெரியலை ண்ணா என்று யோசிக்க தொடங்கினாள்.

சற்று நேரம் ம்ம்ம் ஆமாம் ண்ணா ஒரு நாள் அப்பாவை பார்க்க நான் காலேஜ் வந்த அப்ப ஒரு பையன் என்கிட்ட வந்து என் போன் எங்கேயோ காணோம் கொஞ்சம் உங்கள் போன்லருந்து பண்ணி ஹெல்ப் பண்ண முடியுமா? கேட்டான் நானும் சரி அவன் நம்பர் பண்ண ஒரு மரத்திட்ட இருந்து கிடைச்சது நானும் அப்பாவை பார்க்க வந்துட்ட என்றாள்.

அவனை இதுக்கு முன்ன எங்கேயாது பார்த்து இருக்கியா என்று சித்து கேட்க அவள் யோசித்து விட்டு அவனை ஒரு டைம் அப்பா கிளாஸில் பார்த்து இருக்கேன். உங்கள் ஜுனியர் தான் என்றவுடன் சாதிக் அவன் போனில் இருந்த ஜுனியர் கிளாஸ் போட்டாவை எடுத்து காண்பிக்க அதில் அவன் இருந்தான். அண்ணா இவன் தான் என்று அடையாளம் காட்ட நினைத்தேன் அப்பவே இந்த நாதாரியா தான் இருக்கும் என்று சாதிக் சொல்ல.

யாருப்பா என்று ஆசிரியர் கேட்க வேறு யாரு அந்த பிரகாஷ் தான் சார் என்றான் சாதிக். அவன் எப்பவுமே அப்படி தான். பொண்ணுட்ட அடிவாங்கி அசிங்க பட்டவன் தான். பொண்ணுங்களை பார்க்கிற பார்வை சரியாவே இருக்காது. நம்ம கிளாஸ் பொண்ணுங்க கிட்ட தப்பா நடக்க பார்த்தா அதை நான் பார்தது ஒரு தடவை பலமா அடிச்சும் அனுப்பிட்ட அப்ப கூட அந்த பொறுக்கி திருந்தல என்று கண்கள் சிவக்க கொந்தளித்தான் சாதிக்.

டேய் கோபத்தை அடக்கு நீ சொல்ற மாதிரி செய்வோம் என்று அஜ்மல் சித்து சொல்ல சாதிக் ஆசிரியரிடம் சென்று சார் மித்ராக்கு எங்களை மாதிரி ஒரு அண்ணா இருந்து அவங்க அந்த முடிவை சொன்னா நீங்கள் அதை அக்சப்ட் பண்ணுவிங்களா என்று கேட்க கண்டிப்பா பா பண்ணுவேன் அப்ப இப்போ மித்ராவோட அண்ணன்கள் நாங்க ஒரு முடிவு எடுத்திருக்கோம் என்றவுடன் சொல்லுங்கப்பா என்றார்.

அவன் அழைத்த இடத்திற்கு மித்ராவை அனுப்புங்க என்று சித்தார்த் கூற எனன்ப்பா சொல்ற என்று சுதா அதிர்ச்சியில் கேட்க இல்லைமா அவனை சும்மா விடக்கூடாது. இப்ப நாம சும்மா இருந்தோம் என்றால் இதே நிலைமை தான் வேறு பொண்ணுக்கும். பொண்ணுங்கன்னா என்ன சும்மாவா.

ச்சே கேடுகெட்ட நாய். தைரியமா அனுப்புங்க மா உங்கள் பொண்ணை அவனால ஒன்றும் பண்ண முடியாது என்று சாதிக் கண்களில் வெறியுடன் சொல்ல போகட்டும் பா என்று இருவரும் சம்மதம் சொன்னார்கள்.

சாதிக் மித்ரா அருகில் சென்று மித்ரா அவன் எப்ப கால் பண்ணுவா என்றவுடன் 5 மணிக்கு என்று கூற மணி இப்ப 2 ஆகுது. இன்னும் மூனு மணிநேரம் இருக்கு என்று அஜ்மல் கூறினான்.

அஜ்மல் நீ போய் pepper spray வாங்கிட்டு வா என்று சாதிக் அஜ்மலை அனுப்ப அவனும் கடைக்கு சென்றான். மித்ரா உன் கையில் நகம் இருக்கா? இருக்குன்ணா அவன் உன்கிட்ட நெருங்கும் போது உன் நகத்தை வச்சி கீறி விடு புரியுதா என்று சித்து சொல்ல ம்ம்ம் புரியுது.

அதுக்கு முன்ன உன் மனசுல ஒன்னு பதிய வச்சிங்கோ உன்னை மீறி உன் மேல் அவனால கைவைக்க முடியாதுன்னு என்று சாதிக் அழுத்தமாக சொல்ல அவளும் கண்டிப்பா என்னை மீறி யாரும் என் மேலே கை வைக்க மாட்டாங்க என்று நம்பிக்கை பட கூற ம்ம்ம் குட் என்றான் சித்து.

உன்னால நகத்தை வச்சி கீற முடியலையா உன் ஷால்லை எடுத்து அவன் கழுத்தை சுற்றி இறுக்கு. அப்பவும் அவன் தப்பிச்சிட்டா மணியே மணியின் ஒளியே ன்னு விவேக் ஒரு படத்தில் பண்ணுவான் பாத்தியா அந்த மாதிரி அவனை தாக்கு என்று இருவரும் மாறி மாறி அவளுக்கு நம்பிக்கை தந்து மேலும் தற்காப்பு கலை அடிப்படை என்று வீடியோவை காண்பித்தார்கள். அவளும் அதை கவனமாக பார்த்து கொண்டு இருந்தாள்.

பெற்றோர்கள் இருவரும் எப்படியாவது இந்த பிரச்சனை தீர வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தனர்.
.
.
.
.
.
ஷாயின் போனை எடுத்து பார்த்தாள். அவனிடம் assalamu alaikum saptiya ma enna romba busy ya என்ற மெசேஜை தவிர்த்து மற்ற ஏதும் இல்லாததால் என்ன ஆயிற்று என்று யோசித்தாள் 🤔🤔 பிறகு ஏதாது வேலையில் இருப்பார் என்று நினைத்து விட்டு பதில் மெசேஜ் அனுப்பி விட்டு திரும்ப தன் வேலையை தொடங்கினாள் ( அதான் ப்பா தூங்குற வேலை) ஆனால் சாதிக்கு எதுவும் ஆக கூடாது என்று அல்லாஹ்விடம் துஆ கேட்டாள்.
.
.
.
.
.
.

சாதிக் இந்தா என்று அஜ்மல் நீட்ட சரிடா நாமளும் மித்ரா கூட போறோம் சரியா என்றவுடன் கண்டிப்பா மச்சி போலாம் என்று சித்து சொல்ல ம்ம்ம் ஒகே மச்சி என்றான்.

சார் நாங்களும் போறோம் நீங்கள் வீட்டில் இருங்கள் யார்கிட்டயும் எதுவும் சொல்லாதிங்க ஒகேவா என்றவுடன் சரிப்பா என்றார் அவரும்.

அவனிடம் இருந்து மித்ராக்கு அழைப்பு வர அவள் எங்கே வரனும் என்று கேட்டவுடன் அவன் ஒரு இடத்தை சொன்னவுடன் சரி வரேன் என்று கூறிய உடன் போன் கட்டானது.

முதலில் மித்ரா மட்டும் செல்ல அவளை பின்தொடர்ந்து இவர்கள் மூவரும் சென்றனர். அவன் சொன்ன இடத்திற்கு அவள் சென்று நின்றாள்.

அது யாரும் இல்லாத இடம் ஆங்காங்கே சிறு மரம் மட்டும் இருந்தது. அப்போது ஒரு கார் அங்கு நிறுத்தி அவள் முன் பிரகாஷ் இறங்கினான்.



தொடரும்

​
 
💕09💕

அந்த இடத்தில் யாரும் இல்லை. மரங்கள் ஆங்காங்கே இருந்தது. சிறிது தூரத்தில் ஒரு சிறை அறை இருந்தது. அப்போது அவள் முன் வந்து இறங்கினான் பிரகாஷ்.

ஹாய் செல்லம் இந்த மாமனை பாக்காம ரொம்ப ஏங்கிட்ட போல என்றவுடன் அட ச்சி வாய மூடு உனக்கெல்லாம் அறிவில்லை என்று அவள் பேசும் முன் ஏய் ரொம்ப பேசுன நடக்கிறதே வேற என்று கொந்தளித்தான்.

ஹே என்னடா பண்ணுவ? உன்னால் என்ன பண்ண முடியும் என்று திமிராக கேட்க ஏய் என்னடி திமிரா பேசுற என்று மிரட்ட அவள் அப்படி தான் பேசுவேன் என்ன பண்ணுவ? மித்ரா சீறினாள்.

அவன் கோபத்தோடு அவளை நெருங்க அவள் சிறிதும் யோசிக்காமல் pepper spray அவன் முகத்தில் அடிக்க அவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான். அவளுக்கு கோபம் அதிகமாக அவனை அங்கிருந்த கட்டையால் அவனை தாறுமாறாக அடித்து கொண்டே ஏன்டா உனக்கு பொண்ணுங்கன்னா கேவலாமா போய்ட்டாங்கலா?

உன் அம்மாவும் பொண்ணு தானே? நீலாம் என்ன ஜென்மம் டா பரதேசி நாயே இனி பொண்ணுங்க கிட்ட தப்பா நடப்பே என்று கேட்டு மேலும் பலமாக அடிக்க துவங்கினாள்.

மித்ரா போதும் விடு இவனால் எங்கேயும் தப்பிக்க முடியாது இப்ப காவல் அதிகாரிங்க வந்துடுவாங்க என்ற சாதிக் குரல் கேட்டு அவள் விட்டாள்.

ஆனால் அவனோ தன்னை அடித்தவன் இவன், இவனை சும்மா விடக்கூடாது என்று பிரகாஷ் மயக்கத்தில் இருந்து தன்னை திடப்படுத்தி கொண்டு தன் pocket il வைத்திருந்த கத்தியை எடுத்து அவன் முன் சென்று நின்றான்.

அனைவரும் சுதாரிக்கும் முன் சாதிக் வயிற்றில் குத்தினான். அவன் கத்தி கொண்டே கீழே விழ பிரகாஷ் தலையில் பலமாக கட்டையால் மித்ரா அடிக்கவும் சரியாக இருந்தது.

இதை பார்த்த அஜ்மலும் சித்துவும் சாதிக் என்று கத்தினர். சித்து ஆம்புலன்ஸ் போன் செய்தான். உடனே போலீஸ் வர பிரகாஷ் கைது செய்தனர்.

இரண்டே நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. சாதிக் தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். போகும் வழியில் அனைவரின் வீட்டிற்கும் தகவல் மட்டும் அனுப்பினர்.

அனைவரும் பதறி அடித்து கொண்டு மருத்துவமனைக்கு வந்தடைந்தனர். அங்கு சாதிக் சிகிச்சை அளித்து கொண்டு இருந்தனர்.

ஹாபிஸ் ரிஹானா இருவரும் என்ன பிரச்சனை என்று கேட்க இருவரும் என கூறுவதென்று தெரியாமல் விழித்தனர். அப்போது மித்ரா உண்மையை சொல்ல அந்த பெற்றோர்கள் இருவரும் கேடுகெட்ட நாய் நீ இன்னும் அடிச்சு இருக்க வேண்டிதானே மா அவனால சும்மா விடக்கூடாது என்று ரிஹானா கோபத்தோடு கேட்க அவளை ஆச்சரியமாக பார்க்க என்னம்மா அப்படி பார்கிற என்று மித்ராவின் தலையை வருடி கேட்க ஏன்மா அண்ணா என்று கேட்பதற்குள் அவனுக்கு ஒன்னும் ஆகாது அல்லாஹ் காப்பாத்துவான் என்று ஹாபிஸ் கூறினார்.

அப்போது மித்ராவின் பெற்றோர்கள் அங்கு வந்து சேர்த்தனர். சுசீந்திரன் சாதிக் பெற்றோரிடம் என்னை மன்னித்து விடுங்கள் என்று அவர் கூற sir என்ன இது விடுக பாப்பா நல்ல படியா இருக்கிறதே போதும் என்று ஹாபிஸ் சொல்ல ம்ம்ம் என்று தலையசைத்தனர்.

பிறகு அஜமல் சித்தார்த் பெற்றோர்களும் வந்து சேர்ந்தனர். அவர்களிடமும் கூறினர்.

டாக்டர் வெளிய வந்தார் now he is alright . ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடுவோம் அதுக்கப்றம் நீங்க போய் பார்க்கலாம். இப்போதைக்கு மயக்கம் மருந்து கொடுத்து இருக்கோம் மோர்னிங் கண்ணு முழிச்சிடுவரு you don't worry என்று கூறிவிட்டு செல்ல அவர்கள் சற்று மகிழ்ந்தனர்.

அஜ்மலும் சித்தார்த்தும் உடைந்து போயிருத்தனர். மணி ஒன்பதை எட்ட காதர் சென்று டிபன் வாங்கி கொண்டு வந்து அனைவரையும் சாப்பிட வைத்தார். பிறகு அஜ்மலும் சித்தார்த்தும் அவர்களிடம் நாங்கள் பார்த்து கொள்கிறோம் நீங்கள் அனைவரும் வீட்டிற்கு செல்லுங்கள் என்று அனைவரையும் அனுப்பி வைத்தனர்.

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அனைத்து கொண்டு அழுதனர் பிறகு தங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டு சாதிக் இருக்கும் அறைக்கு சென்றனர். அவன் அப்படி இருப்பதை இவர்களால் பார்க்க முடியவில்லை.

பிறகு அவர்கள் இருவரும் அவன் அருகில் அமர்ந்து அவன் தலையை வருடி விட்டனர் .
.
.
.
.
.

இங்கு ஷாயின் அம்மா என்று கத்தி கொண்டே தூக்கத்தில் இருந்து எழுந்தாள். அவள் கத்திய உடன் சுலைமான் நஜீதா பதறி அடித்து அங்கே வரே மதினாவும் நவீனாவும் அவளை ஷாயின் என்ன ஆச்சி என்று அவளை கேட்க அதற்குள் அம்மா வந்தவுடன் என்ன ஆச்சு டி அதெல்லாம் இல்லை என்று சொல்லிவிட சரி ஒழுங்கா தூங்கு என்று விட்டு சென்றார்.

ஹே என்ன ஆச்சு என்று மதி கேட்க சாதிக் யாரோ கத்தியால், குத்தின மாதிரி கனவு டி பயமா இருக்கு என்று நவீ மடியில் படுத்து அழுதாள் ஷாயின். இருவரும் புரிந்து கொண்டனர் அவள் சாதிக்கை எவ்வளவு நேசிக்கிறாள் என்று.

ஷாயின் சற்றும் யோசிக்காமல் தன் phoneai எடுத்து சாதிக் அழைத்தாள். சதிக்கின் போனெய் யார் என்று எடுத்து பார்த்த அஜ்மல் டேய் சித்து சிஸ்டர் ட என்றவுடன் என்னடா மணி 3 30 ஆகுது இந்த நேரத்தில் அதும் இப்படி என்று கட் செய்தான்.

சாதிக் உங்களுக்கு ஒன்னும் ஆகல தானே என்று பதட்டத்துடன் கேட்க அவன் கொஞ்சம் புரிந்து கொண்டு சிஸ்டர் நான் சொல்றதை பதட்டம் படமா கேளுங்க நான் அவன் நண்பன் அஜ்மல் என்று சொல்வதற்கு முன் சாதிக் கண் விழிப்பதை பார்த்த சித்தார்த் டேய் அஜ்மல் சாதிக் கண்ணு மூழிச்சிடா டா என்றவுடன் அஜ்மலும் அழைப்பை துண்டிக்காமல் சாதிக்கை கவனிக்க சென்றான்.

அவன் எழும்ப முயல அவனுக்கு உதவி செய்தனர். அவனை சாய்வாக உட்கார வைத்து டேய் உன்னை குத்தின உடன் நாங்க பயத்துட்டோம் என்றவுடன் டேய் நீங்க இருக்க வரைக்கும் என்னக்கு ஒன்னும் ஆகாது என்று கூற அப்போது நியாபகம் வந்தவன் சாதிக்கிடம் ஷாயின் call செய்ததை கூற அவனிடம் போனெய் கொடுத்தான்.


அவள் எல்லாம் கேட்டு விட்டாள். அவன் டேய் கட் பண்ணலயா என்று காதில் வைத்தான். ஷாயின் என்று அவன் அழைக்க சாதிக் என்று அவன் அழ தொடங்கினாள். ஹே ஷாயுமா என்னக்கு ஒன்னும் இல்லை அழுக்காத என்று அவளை சமாதானம் செய்து கொண்டு இருந்தான். அவளை சமாதானம் செய்வதற்கு திணறி போய்ட்டான்.

பிறகு அவளே கண்களை துடைத்து கொண்டு எப்படி ஆச்சி என்று கேட்க அவன் எல்லாம் நடந்ததை சொல்ல அறிவு கேட்ட நாய் பரதேசி பய என்று அவன் பங்கிற்கு அவனை திட்டி திர்த்தாள் . அப்றம் வலி இருக்கா? என்று ஷாயின் கேட்க லைட்டாக இருக்கு என்று கூற பார்த்து கவனமாக இருங்கள் என்று கூறும் போது கண்கள் கலங்குவதை இருவரும் உணர்ந்தனர் .

ஹே அம்மு இப்ப ஏன் அழுகுற? ஏற்கனவே இந்த புண்ணு வேற வலிக்குது நீ வேற ஏன்? என்று வருத்தமாக சொல்ல சரி நான் அழுகல என்று அமைதி அடைத்தாள். சரி மா நீ தூங்கு நாம அப்றம் பேசலாம் என்று சாதிக் கூற அவளும் ஒழுங்கா டேப்லெட் போடுங்க டாக்டர் சொல்றத கவனமா கேட்டு அது படி நடத்துகொங்க என்று அவள் கூற சரி மா நான் பத்துகிற என்று சொல்லிவிட்டு இருவரும் கட் செய்தனர்.

டேய் நீங்க ரெண்டு பேரும் தூங்குக டா என்று அதட்டி தூக்க வைத்தான். அவன் மனம் எல்லாம் ஷாயினை சுற்றி தான் இருந்தது.

உன்னை எப்பவும் கண்கலங்க விடமாட்டேன் மா என்று மனதில் நினைத்து கொண்டான். அவனுக்கு தெரியவில்லை இனி தன்னால் தான் அவள் அழ போகிறாள் என்று. விதியை யாரால் தான் மாற்ற முடியும் படைத்த இறைவனை தவிர.

மதினவிடமும் நவீனாவிடமும் சொல்லி அவர்கள் இருவரும் தங்கள் பங்கிற்கு திட்டி திர்த்தனர் . பிறகு மதியும் ஷாயினும் தொழுது விட்டு மதி உன் மடியில் கொஞ்ச நேரம் படுத்துகிற என்று அவள் மடியில் சற்று நேரம் தூங்கினாள். அவளை ஒழுங்காக படுக்க வைத்து விட்டு இருவரும் குளித்து விட்டு ஹாலில் அமர்ந்தார்கள்.

ஏன் மதி ஷாயின் நயிட் எதுக்கு கத்தினா என்று சுலைமான் கேட்க அதுவா ப்பா ஏதோ கெட்ட கனவு கண்டு இருக்கா ப்பா அதான் என்று சொல்ல huuhhh வேற ஒன்னும் இல்லை தானே என்று நஜீதா கேட்க வேற ஏதும் இல்லை ம்மா . ம்ம் சரி செல்லம் வாங்க சாப்பிடலாம்.

மூவரும் சாப்பிட்டனர். பிறகு ஷாயினும் குளித்து விட்டு வர சுலைமான் ஷாயினை தன் அருகில் அமரவைத்து ஊட்டி விட்டார். அவளும் பயத்துடனே சாப்பிட்டால். அதை சுலைமான் கவனிக்க மறுக்கவில்லை .

ஷாயின் மா அந்த கனவை நினைத்து பார்க்காத விடு . எல்லாம் நல்லதே நடக்கும் சரியா என்றவுடன் அவள் ஏதும் சொல்லாமல் தலை மட்டும் ஆட்டி கொண்டு இருந்தாள். அவள் மனம் எல்லாம் சாதிக்கை சுற்றி சுற்றி தான் வந்தது .
.
.
.
.
.
.
நர்ஸ் உள்ள வந்தார். சாதிக்கிடம் சார் நீங்க ரொம்ப லக்கி இவங்கள மாதிரி நண்பர்கள் கிடைச்சதுக்கு. நைட் பூரா தூங்காம உங்களை கவனிச்சிடங்க என்றவுடன். தெரியும் சிஸ்டர் அதான் தூகட்டும் விட்ட. நான் 3.30 மணிக்கு மூழிச்சிட என்றவுடன். சரி சார் இன்னும் கொஞ்ச நேரத்தில் டாக்டர் வந்துடுவாங்க என்று விட்டு அவர் சென்றார் .

தன் நண்பர்கள் தூங்கி கொண்டு இருப்பதை ரசித்து கொண்டு இருந்தான் சாதிக். அப்போது அனைவரும் வந்தனர்.

அஜமல் சித்தார்த் இருவரும் தூங்கிட்டு இருந்தவர்களை எழுப்ப காதர் சாதிக் அப்பா வேணாம் அவங்களே இப்ப தான் தூங்கினாக தூகட்டும் விடுங்க என்றவுடன் சரி என்று விட்டனர். சிறிது நேரத்தில் டாக்டர் வந்து செக் செய்து விட்டு ரெண்டு நாள் இங்க இருக்கட்டும் அப்றம் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் என்று விட்டு சென்றார்.

அஜ்மல் சித்தார்த் இருவரும் மூழித்தனர். பிறகு நீங்கள் எப்போ வந்திங்க என்று கேட்க எப்பவோ வந்துட்டோம் நீ வீட்டுக்கு போய் குளிச்சிட்டு வா என்றவுடன் சரி என்று இருவரும் சென்றனர்.

மித்ரா அண்ணா எப்படி இருக்கீங்க என்று கேட்க நல்லா இருக்கேன் என்றான். நீ காலேஜ் போகல இல்லை லீவு போட்ட ம்ம் ஜாலி தான் என்று இருவரும் பேசி கொண்டு இருந்தனர்.

தொடரும்​
 
💕10💕

டேய் மச்சி! வலி இருக்கா டா என்று அக்கறையுடன் கேட்ட தன் நண்பர்களிடம் பரவாயில்லை மச்சி என்றான் சிரிப்போடு.

சிஸ்டர் கிட்ட பேசுனியா? என்று சித்தார்த் கேட்க யார் எந்த சிஸ்டர் என்று மித்ரா கேட்க அதான் மா நம்ம சாதிக் லவ் பண்ற பொண்ணு என்றவுடன் டேய் அண்ணா நீயுமா? என்று ஆச்சரியமாக மித்ரா கேட்க அவன் ஆமா மா என்றான் பாவமாக.

அப்பா சொல்வாறு நீ நல்லவன் வல்லவன் ஆனா இப்ப தான் தெரியுது என்று நக்கலாக கூற சரி அது இருக்கட்டும் அவள் ரொம்ப பயந்துட்டா டா. ரொம்ப அழுதுட்டா டா சமாதானம் செய்றதுக்குள்ள நான் ரொம்ப படாத பாடு பட்டுட்டேன் என்றான்.

அண்ணா அவங்க போட்டோ இருக்கா? என்று கேட்க இல்லை அவங்களே இன்னும் முகத்தை பார்க்கல என்று விளக்கமாக சித்தார்த் கூற ம்ம்ம் கலக்கு அண்ணா. அப்றம் அவங்க நம்பர் இருக்கா? என்று கேட்க அவள் வாங்கி இரு அவங்க பெயர் ஷாயின் தானே? என்று மித்ரா கேட்க உனக்கு எப்படி தெரியும்? என்று மூவரும் கேட்க அவள் என் கிளாஸ் தான் என்றவுடன் மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஷாயின், ரொம்ப நல்ல பொண்ணு. அவள் முகத்துல சிரிப்பை தவிர நான் வேற எதுவும் பார்த்தது இல்லை தெரியுமா இதுவரைக்கும். எனக்கு அவளை அவ்வளவு பிடிக்கும். அவளுக்கு உலகமே அவங்க குடும்பம் தான். அதே மாதிரி அவள் தோழிகளும்.

எங்க department la எல்லா staffkum ஷாயினை பிடிக்கும். சொல்லப்போனா அவளை தான் department secretary ஆக்கனும் டிசைட் பண்ணி என் கிட்ட கேட்டாங்க நான் வேண்டாம் மேம் சொல்லிட்ட. ரிசைன் கேட்டாங்க? எங்க கிளாஸில் அவங்க மூனு பேரையும் யாருக்கும் பிடிக்காது. அவங்கள பிரிக்கனும் எவ்வளவோ திட்டம் போட்டு இருக்காங்க பட் அவங்களால முடியல.

இப்ப அவங்களை இதுல போட்டோம் என்றால் அவளை என்ன வேண்டும் ஆனாலும் செய்து விடுவார்கள் அதனால் வேண்டாம் சொல்லிட்ட.

11th லருந்து ஒன்னா தான் படிக்கிறோம். இதுவரைக்கும் கஷ்டத்தையே பார்க்காதவ. ஏன் சோகமா இருந்து கூட நான் பார்த்ததில்லை என்று மித்ரா கூறி முடித்து அவர்களை பார்க்க என்ன எல்லாரும் அப்படி பார்க்கிறிங்க? என்று கேட்டவுடன். ஒன்னுமில்லை சும்மா என்றார்கள்.

மித்ரா, ஷாயின் கிட்ட போய் ஏதுவும் கேட்காத என்று சாதிக் கூற கண்டிப்பா கேட்க மாட்டேன் ண்ணா. அண்ணா அவள் பர்ஸ்ட் டைம் அழுது இருக்காள் என்றால் அவள் உங்களை அவ்வளவு நேசிக்கிறாள் தான் அர்த்தம் என்றவுடன் ம்ஹூம் உனக்கே புரிது அந்த மேடம் தான் அதை இன்னும் உணரலை என்று கவலைப்பட்டான் சாதிக்.

எல்லாத்துலயும் குழந்தை தனம் தான். ஆனா ஒன்னு அண்ணா அவளை சமாளிக்கிறது பெரிய கஷ்டம். ஒரு நிமிஷம் கூட பேசாமல் இருக்க முடியாது அவளால. எங்க கிளாஸில் அவள் தான் அதிகமாக பேசி பேசி மேம் கிட்ட வாங்கி கட்டிக்குவா.

இவளும் அமைதியாக இருக்க மாட்ட மேம் பேசுறதுக்கு சின்ன பிள்ளை தனமா பதில் சொல்லிட்டே இருப்பா தெரியுமா. இதுவரை தலையில் துணி இல்லாமல் பார்த்ததில்லை அவளை. கேட்டோம் வீட்டில் கூட போட்டு கொண்டு தான் இருப்பாளா?. அவளும் மதினாவும் இதுவரை எனக்கு தெரிஞ்சு தொழுகையை விட்டதில்லை ரொம்ப நல்ல பொண்ணு மிஸ் பண்ணிடாத ண்ணா சரியா என்றவுடன் ம்ம்ம் சரி என்று தலையசைத்தான்.

சரிண்ணா நானும் காலேஜ்க்கு கிளம்பிற என்றவுடன் சரிம்மா பார்த்து போ என்று கூறினார்கள். அவளும் வீட்டில் சொல்லிவிட்டு தன் பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு ஹாஸ்டலுக்கு கிளம்பினாள்.
.
.
.
.
.
.

ஷாயின், காலேஜ் கிளம்பல என்று மதினா கேட்டவுடன் நான் ரெடி தான் டி போலாமா என்று கேட்டவுடன் ம்ம்ம் சரிடி. பிறகு மூவரும் கிளம்பி கல்லூரிக்கு சென்றனர்.

மித்ரா என்ன ஆச்சு உனக்கு ஏன் ஒரு வாரமாக காலேஜ்க்கு வரலை என்று ஷாயின் கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று மறைத்தாள் மித்ரா. நம்பிட்டோ டி நம்பிட்டோ உன்னை நாலு வருஷமா பார்த்துட்டு இருக்கோம் எங்களுக்கு தெரியாதா? என்று மதி கேட்க அவள் அழுது கொண்டே எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்.

அவர்கள் அதிர்ந்து அவனை ஏன்டி சும்மா விட்ட சாகடிச்சியிருக்கலாம் என்று நவீனா கூற அதெல்லாம் அடிச்சாசு டி விடு. பட் ஷாயின் அமைதியாகிட்டாள். அவள் மனம் சாதிக்கை நினைத்தது. கண்கள் கலங்கியது. அருகில் இருந்த மித்ராவை அணைத்து கொண்டு அழ தொடங்கினாள்.


ஷாயின் என்னாச்சு ஏன் அழுகுற? என்று மித்ரா கேட்க மதி எல்லாவற்றையும் சொல்ல மித்ரா யோசித்தாள், ஷாயின் உன் சாதிக்கு ஒன்னும் ஆகலை அவர் நல்லா இருக்காரு டி என்றதும் ஹே உனக்கு எப்படி தெரியும் என்று அவர்கள் கேட்க அவள் மருத்துவமனையில் நடந்ததை கூறினாள்.

எனக்கு அவரை பற்றி கவலை இல்லை டி அவரை அவங்க frds நல்லா பார்த்துக்கொள்வார்கள். நாம எப்படியோ அப்படி தான் அவர்களும்.

கனவுல அவ்வளவு ரத்தம் டி. அதை பார்த்ததில் இருந்து எனக்கு ஒரு மாதிரியாக இருக்குடி பயமா இருக்கு. அந்த ரத்தம் மட்டும் தான் என் கண்ணுக்கு தெரியுது பயமா இருக்கு என்ன விட்டு எங்கேயும் போகாதிங்க டி என்று புலம்பியவாறு மதி மடியில் படுத்து கொண்டாள்.

பிரெக் முடிந்தவுடன் ஆசிரியர் உள்ளே நுழைந்தார். அவர் எப்போதும் போல் நடத்த துவங்கினார். Mechanics paper போன வருஷம் கொஞ்சம் கஷ்டமாக இருந்துச்சு இந்த வருஷம் எப்படி இருக்கும் தெரியலை and coming saturday you will have parents teachers meeting so all of you bring your parents . I will show your sem mark என்று முடிக்க அனைவரும் ஒகே மேம் என்றனர்.

அவர் ஷாயின் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு வந்தார். அவர் ஷாயின் படுத்து இருப்பதை பார்த்து என்ன ஆயிற்று ஷாயின்க்கு என்று கேட்க உடம்பு சரியில்லை என்று சொன்னாள் மித்ரா. இல்லையே அவளை பார்த்தா எதையோ பார்த்து பயந்து இருக்க மாதிரி இருக்கு. அவள் முகத்தில் இருக்கும் அந்த சிரிப்பு இல்லையே மா என்னாச்சு உண்மையை சொல்லுங்க என்று அவர் அதட்ட நவீனா சொல்ல என்ன பொண்ணு மா இவள்.

சின்ன விஷயத்திற்கு என்று விட்டு ஷாயின் என்று எழுப்ப அவள் எழுந்து மேம் நீங்க எப்ப வந்திங்க என்று தயக்கத்துடன் கேட்க நான் உள்ளே வந்து பதினைந்து நிமிடம் ஆகிறது நீ போய் தொழுதுட்டு வா போ என்று கூற இருவரும் சரியென்று தலையசைத்து விட்டு சென்றனர்.

இதுக்கே இப்படி பயந்தா இன்னும் வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கு உன்னை கட்டிக்க போறவன் ரொம்ப பாவம் என்று அவர் சலித்து கொண்டு பாடம் நடத்த துவங்கினார்.

இவர்கள் இருவரும் தொழுது விட்டு வந்தமர்ந்தனர். அவள் முகம் தெளிவாக இருப்பதை உணர்ந்த ஆசிரியர் சற்று நிம்மதி அடைந்தார்.

நாட்கள் மெல்ல நகர்ந்தன. சாதிக் ஷாயின் காதலும் அழகாய் நகர்ந்தது.

Sathik : shayu un photo ennaku send panriya?? Ennaku pakkanaum thonuthu

Shayin : photo edukra pazhakam illa pa . Irukanu pathu send panra pa

Sathik : seri ma ithu ta en photo

அவனிடமும் ஒரே போட்டோ அதுவும் தன் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்தது அதையே அனுப்பினான்.

ஷாயின் அந்த போட்டோவை பார்த்து அழகான சிரிப்பை சிந்தி அதை தன் தோழிகளிடம் காண்பித்தாள் ஹே செம கியூட்டா இருக்காரு டி அண்ணா ம்ம்ம் என்றாள்.

ஒரே ஒரு போட்டோ மட்டும் இருக்க அதுவும் தன் தோழிகளுடன் எடுத்து இருப்பதால் அவர்களிடம் கேட்டு கொண்டு அனுப்பினாள்.

அவனும் ஷாயினை பார்த்து புன்னகை சிந்தினான்.

இருவருக்கும் odd semester தொடங்கியதால் படிப்பில் கவனம் செலுத்தினர்.

Sathik : all the best da ma nalla pannu exam

Shayin : mmm seri dua seiga

Sathik : in sha allah seira da.

Shayin : mmm kk . Ungaluku eppa sem

Sathik : vara tuesday laruthu

Shayin : neegalum nalla pannuga all the best....

Sathik : thanks da ma 😍

Shayin : 💕 kk pa nan padika pora aprm pesala assalamu alaikum (var)

Sathik : mm kk nee waalaikumussalam ( var)

பிறகு இருவரும் படிக்க சென்றுவிட்டனர்.

அம்மி நான் போய்ட்டு வரேன் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) என்றவுடன் ம்ம்ம் சரிமா பார்த்து போ நல்லா பண்ணு சரியா ம்ம்ம் சரி மா என்று விட்டு மூவரும் சென்றனர்.

மூவரும் வேறு வேறு அறை . வினாத்தாள் வழங்கியவுடன் அதை வாங்கி படித்து பார்த்தாள். எல்லாம் தெரிந்த வினா வந்ததால் சீக்கிரமே எழுதி முடித்துவிட்டாள். இரண்டு மணி நேரத்தில் முடித்தவள் ஒரு மணி நேரத்தை சற்று சிரமப்பட்டு கடத்தினாள். பிறகு வினாத்தாள் கொடுத்து வெளியே வர மூவரும் நான் நல்லா எழுதி இருக்கேன்டி என்று மகிழ்ச்சி பகிர்ந்து கொண்டனர்.

இதே போல் அனைத்து பாடமும் எளிதாக வந்தது. நன்றாக முடித்தனர். ஏய் அடுத்த monday காலேஜ் டி என்றவடன் ம்ம்ம் சரி டி என்று விட்டு வீட்டிற்கு விரைந்தனர்.

சாதிக்கும் தன் தேர்வை நன்றாக எழுதி முடித்தான். அவனுக்கு இரண்டு வாரம் விடுமுறை விடப்பட்டிருந்தது....

அடுத்த நாள்....

Sathik : assalamu alaikum (var) nee ippa free ya da

Shayin : waalamussalam(var) mmm free ta pa

Sathik : ithu ta enaku last year so athuku aprm athe clg la professor a join panniduva aprm 2 years ku aprm namma nikkah pannikalam unnaku kk va

Shayin: alhamthulilah pa ennaku sammathan ta pa

Sathik : kk da ma 😍

Shayin : 😛

Sathik : 😣

Shayin : 😝

Sathik : oie enna ?

Shayin : onnu illa chuma😝

Sathik : unnna

Shayin : amma kupduraga aprm pesura assalamu alaikum(var)

Sathik : po😡😡 waalaikumusalam(var)

அவள் தன் மனதில் இருப்பதை சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் . ம்ம்ம் விதியை வெல்ல முடியுமா??????

தொடரும்...
 

New Threads

Top Bottom