Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கருப்பொருள்

பிரபல youtube தமிழ் சேனலில் என்னுடைய நாவலின் விளம்பரம் வந்திருக்கிறது... பார்த்துவிட்டு தங்களது கருத்தை பதிவிடுங்கள்...

 
'இதுக்கு முன்னாடி நான் இதையெல்லாம் சரியா கவனிக்கல போலருக்கு... என்ன இது? உங்க உடம்பு தலைல எல்லாம் இவ்வளோ தழும்பு.' என்று கேட்டாள்.

'அதெல்லாம் சின்ன வயசுல கீழ விழுந்து அடிப்பட்டது.' என்று கூறிக் கொண்டே உள்சட்டையை அணிந்தான்.

'முதுகுல அவளோ பெரிசா தழும்பு இருக்கு... எப்படி?' என்று வினவினாள்.

'ஒரு ஆக்சிடண்ட்... உயிர் பொழைச்சதே பெரிய விஷயம்.' என்றான் ரவி.

'என்ன ஆக்சிடென்ட்...' என்ற கேள்வி அவள் சிந்தையில் தோன்றும் பொழுது 'சரி மொதல்ல காலேஜ் போய் பீஸ் கட்டற வழியை பாப்போம்... அப்புறம் இதை பத்தி விசாரிப்போம்' என்று மாற்று எண்ணம் தோன்றியது. அவள் அந்த மாற்று எண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ரவியிடம்

'சரி... வாங்க காலேஜுக்கு போய் பீஸ் கட்டிட்டு வருவோம்.' என்று சொன்னாள்.

நந்தினியும் ரவியும் சிற்றுண்டி முடித்துவிட்டு கல்லூரிக்கு கட்டணம் செலுத்துவதற்கு புறப்பட ஆயத்தமானார்கள். அப்போது ரவியின் தாய் வாசுகி குறுக்கிட்டு

'ரவி... ரெண்டு பேரும் எங்க கிளம்பிட்டீங்க... இன்னிக்கு உனக்கு ஓவர் டைம் இருக்குமே... நீ ரெஸ்ட் எடுக்கலையா?' என்று கேட்டாள்.

வாசுகி கேட்கும் கேள்வியை ரவியே பேசி சமாளித்து விடுவான் என்று நினைத்தாள் நந்தினி. ஆனால் ரவி மெளனமாக நந்தினியை திரும்பி பார்த்தான். நந்தினி சில நொடிகள் அவனை முறைத்து பார்த்துவிட்டு வாசுகியிடம் பார்வையை திருப்பி

'அம்மா... ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு அப்பறம் எஸ்.ஆர்.ஸீ இஞ்சினீரிங் காலேஜ்ல வீக் எண்ட் கிளாசுக்கு பீஸ் கட்ட போறோம்.' என்றாள். வாசுகியும் நந்தினியிடம் பார்வையை திருப்பி

'யார் படிக்க போறா?... இதெல்லாம் எப்போ முடிவு பண்ணீங்க?... பெரியவங்க கிட்ட ஒரு வார்த்தை கூட கேக்கவே இல்லையே... ஏன்?' என்று கேட்டாள்.

'இரண்டு நாள் முன்னாடி தான் முடிவு பண்ணினோம்... உங்க கிட்ட சொல்லணும்னு தான் நினைச்சோம்... ஆனா டைம் கிடைக்கலை... இன்னிக்கு நல்ல நாள் அதான் சீக்கிரமா கிளம்பி கோயிலுக்கு போயிட்டு, காலேஜுக்கு போய் பீஸ் கட்டிட்டு வந்து சொலிக்கலாம்னு நெனச்சோம்.' - நந்தினி.

'சரி... யார் படிக்க போறா?' - வாசுகி.

'எல்லாம் உங்க பையன் தான்… பி.ஈ வீக் எண்ட் க்ளாஸ் படிக்கப்போறாரு.' என்று நந்தினி கூறும் போது தற்செயலாக அவர்கள் பக்கம் வந்த ரவியின் தம்பி அருண், நந்தினி கூறுவதை கேட்டு கேலியாய் நகைத்தவாறு அவர்களை கடந்து சென்றான். அருணின் செய்கையை கவனித்த நந்தினிக்கு சுர்ரென்று கோபம் உச்சந்தலையை எட்டியது. தன்னை கட்டுப் படுத்திக் கொண்டாள்.

'சரி காலேஜ் பீஸ் எவ்வளவு?... அதுவுமில்லாம சனிக்கிழமை ஓவர் டைம் இருக்குமே... அப்போ எப்படி அவனால வார கடைசீல போய் க்ளாஸ் அட்டென்ட் பண்ண முடியும்?.' - வாசுகி.

'செமெஸ்டருக்கு இருபத்தி அஞ்சாயிரம் கட்டணும்... அத தவிர்த்து எக்ஸாம் பீஸ் எல்லாம் சேத்து வருஷத்துக்கு அறுபது ஆயிரம் ருபாய் கிட்ட செலவாகும்... க்ளாஸ் ஜாயின் பண்ண பிறகு அவர் ஓவர் டைம் பண்ண மாட்டாருமா.' - நந்தினி.

இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு தன் அறையிலிருந்து வெளியே வந்த ரவியின் தங்கை சுமதி

'இங்கேருந்து காலேஜ் போயிட்டு வரத்துக்கு, மத்தியானம் சாப்பாடுக்கு எல்லாம் செலவாகுமே... எப்படியிருந்தாலும் அறுபதாயிரத்துக்கு மேலையே போகும்.' என்றாள்.

லேசாக எரிச்சல் அடைந்த நந்தினி சுமதியிடம் திரும்பி

'காலேஜ் ப்ரீ பஸ் விடறாங்க... அங்கேயே கேன்டீன்ல ப்ரீ சாப்பாடு.' என்று கூறிவிட்டு வாசுகியிடம் பார்வையை திருப்பினாள்.

'படிப்பெல்லாம் இனிமேல் அவன் மண்டைல ஏறாது... அனாவசியமா ஓவர் டைம் பண்ணி வர பணம் கூட வராம போயிடும்... இவன் மெஷின்ல வேலை செய்யறதுனால ரொம்ப களைப்பா இருக்கும்... ஒழுங்கா படிக்க முடியாது... இவன் இப்படியே இருக்கறது தான் உங்க ரெண்டு பேரோட வாழ்க்கைக்கு நல்லது... ஏற்கனவே சுமதி படிக்கற எம்.பி.ஏ வுக்கு லட்ச கணக்குல செலவழிச்சிகிட்டு இருக்கோம்... அனாவசியமா பணத்தை செலவழிக்காம… இருக்கறத வெச்சிக்கிட்டு சந்தோஷமா வாழ்க்கையை நடத்த பாருங்க.' - வாசுகி.

வாசுகி கூறியதை கேட்டு சில நொடிகள் மெளனமாக இருந்த நந்தினி, தலையை மறுப்பதை போல் அசைத்தவாறு

'இல்லமா... எங்களுக்குனு குழந்தைங்க பொறந்துச்சுனா அதுங்கள நல்லபடியா வளக்கறதுக்கு இப்போ இவர் சம்பாதிக்கறது சுத்தமா பத்தவே பத்தாது... இப்போ இவர் வாழ்க்கைல எடுக்கற கடுமையான முயற்சி தான் வருங்காலத்துல எங்களோட சந்தோஷத்தை நிர்ணயிக்கும்... அதனால அவர் பி.ஈ படிக்க போறது உறுதி.' என்று அழுத்தமாக கூறினாள்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு ரவியின் தந்தை தேசிகனும் அங்கே வந்தார்.

'என்ன பிரச்சனை?' என்று வாசுகியிடம் வினவினார்.

வாசுகி நடந்ததை அவரிடம் விளக்கினாள். தேசிகன் நந்தினியிடம் பார்வையை திருப்பி

'இதோ பாருமா... முப்பது வருஷமா ரவி எங்களோட வாழ்ந்திருக்கான்... எங்களை விட உனக்கு அவனை பத்தி என்ன தெரிஞ்சிட போகுது... அதனால குருவி தலைல பனங்காய் வெக்காதே... பெரியவங்க சொல்றத கேட்டு நட.' என்றார்.

'இப்போ என்ன பண்ணிட்டோம்னு ஆளாளுக்கு வந்து புத்திமதி சொல்லிக்கிட்டு இருக்காங்க... இப்படியே விட்டோம்னா நம்மளை இளக்காரமா நினைச்சிடுவாங்க... என்ன ஆனாலும் பரவாயில்லை... என்னோட முடிவுல உறுதியா இருக்கேன்.' என்று தனக்குள் பேசி விட்டு, தேசிகனிடம்

'சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க மாமா... மொதல்ல பனங்காயை தலை மேல தூக்கி வெச்சா தான் அது குருவியா பருந்தானு தெரியும்... உங்க ரெண்டாவது பையனையும் மகளையும் நல்லா படிக்க வெச்ச நீங்க ஏன் உங்க மொத பையனை ஒழுங்கா படிக்க வெக்கலை... ஏன் அவர்க்குனு வரும் போது மட்டும் பாரபட்சம் பாக்கறீங்க.' என்று கேட்டாள் நந்தினி.

'அவன் ஒழுங்கா படிக்கலை...' - தேசிகன்.

'அதுக்காக அப்படியே விட்டிடுவீங்களா... ஏன் படிக்க மாட்டேங்கறான் என்ன காரணம் அதெல்லாம் ஆராய்ச்சி பண்ணி அதை நிவர்த்தி பண்றது ஒரு நல்ல அப்பா அம்மாவோட கடமை இல்லையா... நீங்க ஏன் அதை பண்ணலை?' - நந்தினி.

‘இவனுக்கு கொடுத்த அதே ஊக்கமும் உற்சாகத்தையும் தான் இவன் தம்பிக்கும் தங்கச்சிக்கும் கொடுத்தோம்... அவங்க நல்லா படிச்சு முன்னுக்கு வந்துட்டாங்க... நாங்க எவ்வளோவோ முயற்சி பண்ணினோம்... ஒரு பலனுமில்லை... எப்படியோ தெய்வாதீனமா அவனுக்குனு தோதா ஒரு இடத்துல வேலை செஞ்சிகிட்டு இருக்கான்... இந்த பத்து வருஷமா ஒழுங்கா போயிட்டிருக்கு... அதனால அவனை அப்படியே விட்டுட்டோம், நீயும் அவனை அப்படியே விட்டுடு... இந்த படிப்பெல்லாம் சரிப்பட்டு வராது… இப்போ இருக்கறபடி வாழ்க்கை இருந்தா தான் அவனுக்கும் உனக்கும் நல்லது... உனக்கு சொன்னா புரியாது... நீ சின்ன பொண்ணு... அதனால ஆராய்ச்சி பண்ணாம பெரியவங்க சொல்றதை கேளு.' என்றார்.

‘முயற்சி செய்யாம குண்டு சட்டிக்குள்ள குதிரை ஒட்டிக்கிட்டு இருந்தா வாழ்க்கைல எப்படி முன்னேற முடியும்?... அவர் பி.ஈ படிக்கணும்ன்றதுல நான் உறுதியா இருக்கேன்.' என்று அவரிடம் கூறிவிட்டு, பக்கத்தில் அமைதியாக அவர்களின் விவாதத்தை கவனித்துக் கொண்டிருந்த ரவியை பார்த்து

'இப்போ நீங்க வறீங்களா? இல்லையா?' என்று கடிந்து கேட்டாள். வாசுகியும் அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அவனையே பார்த்தாள்.

ரவி குழப்பமாக என்ன சொல்வது என்று தெரியாமல் வழக்கம் போல் மௌனமாகவே நிற்பதை பார்த்த நந்தினி, எங்கே அவன் தன் தாய் சொல்வதை கேட்டு விடுவானோ என்று பயந்தாள். சட்டென்று

'சீக்கிரமா... வாங்க டைம் ஆகுது.' என்று அவனின் கையை பற்றி, பொதுவாக அனைவரிடமும்

'நாங்க போயிட்டு வரோம்.' என்று கூறிவிட்டு, ரவியை இழுத்துச் சென்றாள்.

ஒரு வழியாக ரவியை பகுதி நேர பொறியியல் கல்லூரியில் சேர்த்து விட்டாள். அதே போல் அவளது தோழி சங்கீதாவின் நண்பனிடம் ரவி பணிபுரிந்து கொண்டிருக்கும் தொழிலில் முன்னேற என்னென்ன மென்பொருள் கலைகளை அறிந்திருக்க வேண்டும் என்பதை விசாரித்து அதற்கான பயிற்சி நிறுவனத்திலும் சேர்த்து விட்டாள். இப்பொழுது ரவி வார நாட்களில் அவனுடைய பணி நேரத்தை பொருத்து அந்த மென்பொருள் பயிற்சி நிறுவனத்திற்கு சென்றான். வார கடைசியில் பகுதி நேர பொறியியல் கல்லூரியிற்கு சென்றான். இப்படியே ரவியின் வாழ்க்கை மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. தினமும் நந்தினி ரவியிடம்

'இன்னிக்கு சாஃப்ட் வேர் க்ளாஸ்ல என்ன நடத்துனாங்க சொல்லு' என்றும் வார கடைசியில் பொறியில் கல்லூரியிற்கு சென்று வரும் பொழுது 'இன்னிக்கு காலேஜ்ல என்ன சப்ஜெக்ட் நடத்துனாங்க?... சொல்லு?' என்று நுணுக்கமாக கண்காணித்தாள். இப்படியே நாட்கள் நகர்ந்தன.

இரண்டு மாதங்களுக்கு பிறகு

நந்தினி தன் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் பொழுது அவளின் அலைபேசி ஒலித்தது. அலைபேசியின் தொடர்பை ஏற்றுக் கொண்டு

'ஹலோ' என்றாள். மறுமுனையில்

'கேன் ஐ டாக் டு ரவி?' என்று ஆங்கிலத்தில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

தான் ரவியின் மனைவி என்றும் 'நீங்கள் யார்?' என்றும் கேட்டாள். மறுமுனையில் இருந்த பெண், தான் ஒரு மனித வள மேலாண்மை அதிகாரி என்றும் கென்ட் மில்லர் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்திலிருந்து கூப்பிடுவதாகவும், ரவியின் சுயவிவர ஆவணத்தை வலை தளத்தில் பார்த்ததாகவும், அவருடைய திறமை தொகுப்பிற்கு தன் நிறுவனத்தில் வேலை இருப்பதாகவும் தெரிவித்தாள்.

அதை கேட்டவுடன் அடுப்பில் இருக்கும் அமைதியான பால் திடீரென்று பொங்குவது போல சந்தோஷத்தின் அளவு நந்தினியின் மனதில் பொங்கி வழிந்தது. ரவியின் தொழிற்சாலையில் அலைபேசி அனுமதி இல்லை என்பதால் தன் அலைபேசி எண்னை அவரின் சுயவிவர ஆவணத்தில் குறிப்பிட்டதாக கூறிவிட்டு அவர் இரவு நேர பணி என்பதால் இப்போது வீட்டில் தான் இருக்கிறார் என்று ரவியின் அலைபேசி எண்னை கொடுத்து அதற்கு தொடர்பு கொள்ளுமாறு கூறினாள். அந்த தொடர்பை துண்டித்த பிறகு சங்கீதாவின் நண்பனை தொடர்பு கொண்டு அந்த நிறுவனத்தைப் பற்றி விசாரித்தாள். அவன் 'கென்ட் மில்லரா ... செம கம்பெனீங்க... அவன் இன்டர்வ்யூவுக்கு கூப்பிட்டதே பெரிய விஷயம்... அங்க மட்டும் வேலை கிடைச்சதுனா ராஜ வாழ்க்கை தான்..' மற்றும் 'ஆஹா ஓஹோ' என்று அந்த நிறுவனத்தைப் பற்றி போற்றி புகழ்ந்து பேசியது அவளிற்கு ஒரு மிகையான உற்சாகத்தை கொடுத்தது. சில நொடிகள் அவளினுடைய கற்பனை திரையில் தானும் தன் கணவர் மற்றும் அவர்களின் பிள்ளைகள் ஒரு ஆடம்பரமான வீட்டில் இருப்பதை போல பார்த்தாள். சில நொடிகள் கற்பனைக்கு பிறகு தன்னை சுதாரித்துக் கொண்டு ரவியிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதற்காக ரவியின் அலைபேசியிற்கு தொடர்பு கொண்டாள். மறுமுனையில் அலைபேசி ஒலித்துக் கொண்டிருந்தது. சில நொடிகள் கழித்து

'தங்களின் தொடர்பு ஏற்கப்படவில்லை சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்.' என்று தானியியங்கி குரல் கேட்டது. இரண்டாவது முறையும் முயற்சி செய்தாள். மறுமுனையில் தொடர்பு ஏற்க படவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள்.

வேறு வழியில்லாமல் வாசுகியின் (ரவியின் தாய்) அலைபேசியை தொடர்பு கொண்டாள். மறுமுனையில் அவளின் தொடர்பு ஏற்கப்பட்டது.

நந்தினி பதட்டமாக

'அம்மா... ரவி இருக்காரா?' என்று கேட்டாள்.

'அவன் இப்போ தான் கிளாசுக்கு போயிட்டு வந்து தூங்கறான்.' - வாசுகி.

'அவருக்கு ஒரு கம்பனிலேருந்து இன்டர்வ்யூ கால் வரும்... அவர் கிட்ட அத சொல்றதுக்கு கால் பண்ணினா எடுக்க மாட்டேங்கறாரு... நீங்க போய் அவர்கிட்ட இத சொல்லி கொஞ்சம் அந்த காலை அட்டண்ட் பண்ண சொல்லுங்க மா.' என்று வேண்டினாள்.

'ம்ம்ம். பாக்கலாம்.' என்று தொடர்பை துண்டித்தாள் வாசுகி.

அவளின் பதிலில் திருப்தி அடையாத நந்தினி பல முறை ரவியிற்கு முயற்சித்தாள். அவன் எடுக்க வில்லை. இந்த வேலை வாய்ப்பு அழைப்பு தான் அவளின் கனவு வாழ்க்கைக்கு திறவுகோல் என்று அவளின் ஆழ்மனது நம்பத் தொடங்கியது. ரவியின் அலைபேசிக்கு பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்து அவன் எடுக்காததால் அவளின் மனம் கொந்தளிக்கத் தொடங்கியது. பதட்டமாக மறுபடி வாசுகியை தொடர்பு கொண்டாள்.

'அம்மா அவர்கிட்ட சொன்னீங்களா?' என்று கேட்டாள்.

'ம்ம்ம்... சொன்னேன்... அவன் நல்லா தூங்கறான்.' - வாசுகி.

'அம்மா... மறுபடி போய் ஒழுங்கா சொல்லுங்கம்மா' என்று அவசரப் படுத்தினாள்.

'நான் கோயிலுக்கு வந்திருக்கேன்... இப்போ என்னால முடியாது' என்று தொடர்பை துண்டித்தாள் வாசுகி. இந்த செய்கை ஏற்கனவே கொந்தளிக்கும் நந்தினியின் மனதிற்கு ஒரு வித வேதனையை கொடுத்தது. மறுபடி ரவியை தொடர்பு கொண்டாள். அவன் எடுக்கவில்லை. மனமுடைந்து அவளின் கண்களிலிருந்து கண்ணீர் சுரந்தது. அதை கவனித்த சங்கீதா அவளிடம் வந்து அவளை ஆசுவாச படுத்தினாள்.

'ரிலாக்ஸ் பா... என்னாச்சு?... பொறுமையா சொல்லு' - சங்கீதா.

நந்தினியும் நடந்ததை விளக்கினாள்.

'நானும் எங்க அப்பா அம்மா முன்னாடி இவரை உசத்தி காட்டி, நான் சரியான வாழ்க்கையை தான் தேர்ந்தெடுத்திருக்கேன் னு நிரூபிக்கணும்னு நினைக்கறேன்... அதுக்கு மத்தவங்க முட்டுக்கட்டையா இருந்தா பரவாயில்லை ஆனா ரவியே ஒத்துழைக்காம இருக்கறது தான் மனசுக்கு வலிக்குது.' என்று அழுதாள்.

‘நான் மறுபடி சொல்றேன்னு தப்பா நினைக்காத... உன்னோட அறிவுக்கும், திறமைக்கும் நீ வாழவேண்டிய இடமே வேற... எனக்கு மாப்பிள்ளை பாத்துகிட்டு இருக்கும் போது என் மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒரு பையன் போஃட்டோவை பாத்தேன்... அவன் கூட பேசுனேன்... எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது... ஆனா நான் அப்படியே கண் மூடி தனமா மனசு சொல்றதை கேக்கலை... அவன் எவ்வளோ சம்பாதிக்கறான்... அவனோட எண்ணம் என்ன?... குடும்பத்துல அவனுக்கு என்ன மரியாதை?... அவனோட பிஃயூசர் பிளான் என்ன?ன்ற விஷயத்தை ஆராய்ச்சி பண்ணினேன், அவனோட வாழறது என்னோட கனவு வாழ்க்கைக்கு செட் ஆகுமா இல்லையான்னு யோசிச்சேன்... சுத்தமா செட் ஆகலை... அவனை நிராகரிச்சிட்டேன்... ஆனா இப்போ பாத்த ஆளை மொதல்ல எனக்கு பிடிக்கலை... ஆனா அவரோட சம்பாத்தியம், அவரோட பிஃயூசர் பிளான், அவரோட குடும்பத்தோட அந்தஸ்து, எனக்கு அவங்க வீட்ல கொடுக்கற மரியாதை நிச்சயமா நான் எதிர் பாக்கற என் கனவு வாழக்கையை உருவாக்கி குடுக்கும்னு நம்பிக்கை வந்துச்சு... அவருக்கு ஓகே சொல்லிட்டேன் ... அப்புறம் அவரோட பேச பேச எனக்கு அவரை பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு... நீ இதுவரைக்கும் உன் மனச நம்பி எடுத்திருக்கற எல்லா முடிவும் சரியா தான் வந்திருக்கு... ஏன்னா இதுவரைக்கும் உன் மனசுல தோன்ற விஷயங்களை செயல் படுத்தறதுக்கு நீ உன்னை நம்பினா போதும்... ஆனா கல்யாண வாழ்க்கைனு வரும் போது வெறும் மனசை மட்டும் நம்பக் கூடாது... கொஞ்சமாவுது மூளையை பயன் படுத்தணும்... ரோட்ல தண்டமா ஊர் சுத்தற பசங்கள கூட தான் நம்ம மனசுக்கு பிடிக்கும்... அதுக்காக அவன் கிட்ட நம்ம வாழ்க்கையை கொடுத்துட முடியுமா?... நான் சொல்றத சொல்லிட்டேன்... அப்புறம் உன் இஷ்டம்.' என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் சங்கீதா.

சங்கீதாவின் பேச்சு அவளின் மனதை குழப்பியது. தனக்கு உடம்பு சரியில்லை என்று தன் அலுவலக மேலாளரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு சீக்கிரமாக அலுவலகத்திலிருந்து கிளம்பினாள் நந்தினி.

நந்தினி வீட்டின் அழைப்பு மணியை இயக்குவதற்கு தாளிட்டிருந்த வீட்டு கதவின் பக்கத்தில் நிற்கும் பொழுது வாசுகியும் தேசிகனும் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

'ரவிக்கு ஏன் தான் கல்யாணம் பண்ணி வெச்சோம்னு தோணுது...' - வாசுகி.

'ஏன் என்ன ஆச்சு ?' - தேசிகன்.

'இந்த நந்தினி பொண்ணு அவனை முன்னேத்தி காட்டேறேன்னு பண்ற அட்டூழியம் கொஞ்சம் நெஞ்சம் இல்ல... அவனோட ஓவர் டைம் பணமும் போச்சு... தேவையில்லாம பணத்தை விரயம் பண்றா... இன்னிக்கு கூட அவனுக்கு வேற கம்பனிலேருந்து கால் வருதுன்னு எனக்கு போஃன் பண்ணி சொன்னா... நான் தான் ரவியோட செல் போஃனை எடுத்து அவன் காதுல விழாத மாதிரி வேற ரூம்ல எடுத்து வெச்சேன்.' என்று வாசுகி கூறியதை கேட்டுக் கொண்டிருந்த நந்தினி அதிர்ச்சியடைந்தாள்.

தேசிகனும்

'ப்ப்ச்... இவ நிறைய படிச்சிருக்கா... இவ ரவிக்கு ஒத்து வர மாட்டா... படிக்காத நல்லா வீட்டு வேலை செய்யற கிராமத்து பொண்ணா பாருன்னு நான் இந்த பொண்ண பாக்கும் போதே சொன்னேன் ... நீ தான் கேக்கலை.' என்றார்.

'அவனுக்கு பொண்ணு பாக்கும் போது வழக்கம் போல படிச்ச பொண்ணுங்க அவனை நிராகரிக்கற மாதிரி இவளும் நிராகரிச்சிருவான்னு நெனச்சேன்... இவளுக்கு ரவியை பிடிக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல... சரி அவ மாசமானா நாப்பதாயிரம் சம்பாதிக்கராளேன்னு தான் நான் அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்... இப்படியெல்லாம் நம்ம பேச்சை கேக்காம ஆடுவானு கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நிச்சயமா இந்த கல்யாணத்தை நடக்க விட்டிருந்திருக்க மாட்டேன்.' என்று வாசுகி சொல்லிக் கொண்டிருக்கும் போது ஒரு அலைபேசியின் அழைப்பு வந்தது.

'உன் ப்ரண்டு வசந்தி பேசறா... இந்தா' - தேசிகன்.

'ஓ... அவளா... கொடுங்க' என்று கூறிவிட்டு, சில நொடிகள் கழித்து

'ம்ம்ம்... வசந்தி சொல்லு...' - வாசுகி.

'.....'

'ரவி ஒரு தண்டம்... அவனை பத்தி பேசாத...' - வாசுகி.

'.....'

'ஆமாம்... அருண் அவனோட வேலை செய்யற பொண்ணை தான் லவ் பண்றான்.' - வாசுகி.

'.....'

'பொண்ணு எங்களை விட தாழ்ந்த ஜாதி தான்... என்ன பண்றது தம்பி லவ் பண்ணிட்டானே... அதான் அவங்க அப்பாவும் சம்மதிச்சிட்டாரு.' - வாசுகி.

'...'

'இப்போ தான் ரவிக்கு கல்யாணம் ஆச்சு... இன்னும் ஒரு வருஷம் ஆகும்... பொண்ணோட வீட்ல இப்போ நிச்சயம் மட்டும் பண்ணிக்கலாம்னு சொல்றாங்க... அது சம்மந்தமா பேச்சு வார்த்தை நடந்துகிட்டு இருக்கு.' - வாசுகி.

'....'

வாசுகி புன்னகைத்தவாறு

'கரெக்ட்.... முன்னாடியே தெரிஞ்சிருந்தா ரவிக்கு பண்ணிருக்க மாட்டேன்... தம்பிக்கு தான் பண்ணிருப்பேன்... சரிப்பா நான் அப்புறம் பேசறேன்.' என்று தொடர்பை துண்டித்தாள்.

இந்த உரையாடலை கேட்ட நந்தினி, ரவியின் மீது எந்த தவறும் இல்லை என்று புரிந்தது. தனக்காக அவன் பகுதி நேர பொறியியல் படிப்பதையும், மென் பொருள் வகுப்பிற்கு செல்வதையும் நினைத்துப் பார்த்து அவனை விவாகரத்து செய்ய வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை கை விட்டாள்.

ஆனாலும் அவர்களின் உரையாடல் கேட்ட நந்தினியின் சிந்தை மரத்துப் போனது. செய்வதறியாமல் மெளனமாக வீட்டினுள் நுழைந்தாள். அவளின் அறையை அடைந்தவுடன் அங்கிருக்கும் சிறிய மேசையில் ரவியினுடைய அலைபேசி இருந்தது.

இரவு மணி மூன்று

ரவி அறை கதவை திறந்து கொண்டு உள்ளெ நுழைந்தான். விழித்துக் கொண்டிருக்கும் நந்தினியை பார்த்து

'இன்னும் தூங்கலையா?' என்று கேட்டான்.

நந்தினி ஒரு முறைப்புடன்

'வாங்க உங்க கிட்ட பேசணும்.' என்று கூறியவுடன்,

ரவி உடைகளை மாற்றிக் கொண்டு அவள் பக்கம் அமர்ந்தான்.

'நேத்து உங்க போஃனை பாத்தீங்களா?' - நந்தினி.

'இல்ல... எங்க வெச்சேனு தெரியலை... நேத்து தூங்கி எழுந்துட்டு நம்ம ரூம் முழுக்க தேடி பாத்தேன்... கிடைக்கலை... கம்பெனிக்கு டைம் ஆச்சுன்னு கிளம்பிட்டேன்.' என்று ரவி கூறியவுடன் நந்தினி அவனுடைய அலைபேசியை அவனிடம் நீட்டினாள். அதை பார்த்த ரவி வியப்பாக

'எங்க இருந்தது?' என்று வினவினான்.

'நம்ம ரூம் டீபாய் மேல.' - நந்தினி.

அவள் கூறியதை கேட்ட ரவி யோசனையாய்

'இல்லையே... நான் தேடும் போது டீபாய் மேல இல்லாத மாதிரி தான் இருந்துச்சு... ஒரு வேளை கம்பெனிக்கு கிளம்பற அவசரத்துல ஒழுங்கா பாத்திருக்க மாட்டேன்.' என்று அவனின் அலைபேசியை வாங்கி அதனின் கடவுச்சொல்லை தட்டெழுதி திரையை பார்த்தான். அதில் இருபத்தி மூன்று தவறிய அழைப்புகள் இருந்தன.

'ஹப்பா... இருபத்தி மூணு மிஸ்ட் காலா?' என்று கூறிவிட்டு அந்த எண்களை பார்த்தான். அதில் இருபது தவறிய அழைப்பு நந்தினியின் எண்னை காட்டியது, மற்ற மூன்று அழைப்பு பதிவு செய்யப் படாத எண்.

'நந்து ஏன் இருபது வாட்டி கால் பண்ணிருக்கே... என்ன ஆச்சு?' - ரவி.

'என்னோட மிஸ்ட் காலை விடு... மத்த மூணு கால் யார்கிட்டேருந்து வந்திருக்குனு தெரியுமா.?' என்று நந்தினி சொல்லும் பொழுது துக்கத்தால் அவள் குரல் தழுதழுத்தது.

அவளின் குரல் மூலமாக அவளின் துக்கத்தை புரிந்து கொண்ட ரவி சிறிய பதட்டத்துடன்

'ஹே... என்ன ஆச்சு? ... யார் கிட்டேருந்து அந்த கால் வந்துச்சு?' என்று யோசனையாய் கேட்டான்.

நந்தினி தன் விசனத்தை கட்டுப் படுத்திக்க கொண்டு

'ஒன்னுமில்லை... அத விடுங்க... சரி உங்க தம்பிக்கு எப்போ நிச்சயம் பண்ண போறாங்க?' என்று கேட்டாள்.

ரவியும் யோசித்தவாறே

'யாரு அருணுக்கா?... அவனுக்கு பொண்ணு பாத்திருக்கங்களா என்ன?' என்று வினவினான். ரவியின் கேள்வி மூலமாக அவனுக்கு இந்த விஷயம் தெரியாது என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்ட நந்தினி

'அவன் ஆபிஸ்ல வேலை பாக்கற பொண்ணை லவ் பண்ணிருக்கான்... உங்க அப்பா அம்மாவும் அந்த பொண்ணோட அப்பா அம்மாவும் பேசிருக்காங்க போலிருக்கு... அநேகமா கூடிய சீக்கரம் அவங்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்கும்னு நினைக்கறேன்.' என்று கூறினாள்.

'என்கிட்ட எதுவுமே சொல்லலியே? ஆனா பரவாயில்லை உன்கிட்ட சொல்லிருக்காங்களே.' - ரவி.

'என்கிட்டேயும் சொல்லலை.' - நந்தினி.

'அப்புறம் எப்படி உனக்கு தெரியும்.' - ரவி.

'ஆபிஸ்லேருந்து நேத்து சீக்கிரமா வந்துட்டேன்... அப்படி வரும் போது எதேர்ச்சியா காதுல விழுந்த விஷயம் தான் இது.' - நந்தினி.

'ஓ... சரி விடு....' என்று ரவி உறங்குவதற்கு ஆயத்தமானான்.

இந்த விஷயத்தை கேட்டு தன்னிடம் இருக்கும் ஆக்ரோஷத்தை வெளிப் படுத்துவான் என்று எதிர் பார்த்த நந்தினியிற்கு அவனின் பதில் ஒரு வித ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் எரிச்சலடைந்த நந்தினி ரவியிடம்

'எப்போ பாத்தாலும் தூக்கம் தூக்கம் தூங்கணும் தூங்கிட்டே இருக்கணும் ... எழுந்திருங்க' என்று அவனை உலுக்கி எழுப்பினாள். அவனும்

‘ப்ப்ச்.' என்ற சப்தத்துடன்

'ஏன்டி… நடு ராத்திரில தூங்காம பஜனையா பாடுவாங்க... வேலையை முடிச்சிட்டு இப்போ தான் வந்திருக்கேன்... எனக்கு தூக்கம் வருது.' என்று அவளிடம் கடிந்து கொண்டான்.

'எனக்கு வரலையே.' - நந்தினி.

'ஏன் ?' - ரவி.

'ஏன்னா நம்ம வாழ்க்கையை பத்தி நினைக்கும் போது பயமா இருக்கு... உங்க அம்மா உங்களை தண்டம்னு யார்கிட்டையோ பேசும் போது சொல்றாங்க ரவி... உங்க அப்பா உங்களுக்கும் எனக்கும் கல்யாணமே பண்ணிருக்க கூடாதுனு சொல்றாரு... உங்களுக்கு கென்ட் மில்லர் ன்ற ஒரு கம்பனிலேருந்து கால் வந்துச்சு... அந்த காலை நீங்க அட்டண்ட் பண்ண கூடாதுன்றதுக்காக உங்க அம்மா உங்க செல் போஃனை மறச்சு வெக்கறாங்க.' என்று உக்கிரமாக கூறிவிட்டு, சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு தழுதழுக்கும் குரலில் தொடர்ந்தாள்.

‘ஒரு பொண்ணுக்கு ரொம்ப வேதனையை கொடுக்கற விஷயம் எது தெரியுமா?... அவளோட கணவன் யாராலையும் மதிக்க படாம இருக்கறது தான்... இதையெல்லாம் நினைச்சு பாக்கும் போது எனக்கு உள்ளுக்குள்ள பத்திகிட்டு எரியுது... என் மண்டைக்குள்ள ஏன் ஏன்னு கேள்வி வந்துகிட்டே இருக்கு ரவி... இப்படி இருக்கும் போது என்னால எப்படி நிம்மதியா தூங்க முடியும்... உங்கள கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் முடிவெடுக்கும் போது ஒருத்தர் கூட எனக்கு சாதகமா பேசலை... நான் எடுத்த முடிவு சரினு ஒரு நம்பிக்கைல உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... இப்போ எனக்கு பயமா இருக்கு ரவி... ஏன் இப்படி உங்க குடும்பத்துல இருக்கற எல்லாரும் உங்களை மதிக்க மாட்டேங்கறாங்க ?... ஏன் உங்களோட முன்னேற்றத்துல அக்கறை காட்ட மாட்டேங்கறாங்க... நீங்களும் அவங்களோட பையன் தானே... ஏன் உங்களுக்குனு வரும் போது இந்த பாரபட்சம்? ... சொல்லுங்க?' என்று அழுது கொண்டே வினவினாள்.

அவள் அழுவதை பார்த்த ரவி

'ஏன் அவங்க இப்படி நடந்துக்கறாங்கனு தெரியலையே?... நான் சிக்ஸ்த் வரைக்கும் நல்லா தான் படிச்சுக்கிட்டு இருந்தேன்... ஆனா அப்போ எனக்கு நிறைய விபத்துகள் ஏற்படும்... நிறைய தடவ ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்கேன்... நான் செவென்த் வேற ஸ்கூல் ஜாயின் பண்ணதுலேருந்து தான் எனக்கு கெட்ட காலமே ஆரம்பிச்சுது... அப்போலேருந்து தான் என் அப்பா அம்மா என்னை வெறுக்க ஆரம்பிச்சாங்க...' என்று ரவி கூறியவுடன் சில நொடிகள் தன் வாழ்க்கையில் ஆறாவது வகுப்பிற்கு பிறகு தான் நல்ல விஷயங்கள் நடந்ததை ஒப்பிட்டு பார்த்தாள் நந்தினி. பிறகு தேவையில்லாமல் எதற்கு யோசிக்கிறேன் என்று

'எனக்கு தெரிஞ்சு இதுக்கு காரணம் நீங்க கோவப் படாம இருக்கறது தான் ரவி... அதே மாதிரி நீங்க கிடைச்சதே போதும் எனக்கு ஒண்ணுமே வேணாம்னு ஆசையை துறந்த முனிவர் மாதிரி ஒரே மாதிரி வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்கீங்களே அதுவும் ஒரு காரணம் தான்... இப்போ இருக்கற நிலைலேருந்து அடுத்த நிலைக்கு நீங்க உயரணும்... துணிஞ்சு அடுத்த நிலையை அடைய முயற்சி பண்ணிகிட்டே இருக்கணும்... எப்போ பாத்தாலும் அமைதியா பொறுமையா இருந்தா உங்களோட எண்ணத்துக்கு யாரும் மரியாதை தரமாட்டாங்க... அப்படி தரணும்னா நீங்க கோவ படணும்.' என்று கூறினாள் நந்தினி.

ரவி விரக்தியான புன்னகையோடு

'கோப படாம இருக்கறது தான் நல்ல குணம்னு எல்லாரும் சொல்வாங்க... நீ சொல்ற கருத்தெல்லாம் அதுக்கு முரணா இருக்கு...' என்றான்.

'அப்படி வாழறது தான் சரின்னா இப்போ உங்க அப்பா அம்மா உங்களை தலை மேல தூக்கிவெச்சு கொண்டாடிருக்கணும்... ஏன் பண்ணலை? அட்லீஸ்ட் அவங்க உங்க தம்பி தங்கச்சிக்காவுது உங்களுக்கு மரியாதை தர சொல்லிக் கொடுத்திருக்கணும்... அதுவும் இல்ல ... உங்க தம்பிக்கு ஏன் உங்க வீட்ல மரியாதை கொடுக்கறாங்க தெரியுமா?' என்று கேட்டாள் நந்தினி.

ரவி தலையை அசைத்து தனக்கு தெரியவில்லை என்பதை உணர்த்தினான்.

'ஏன்னா அவன் சுயநலமா இருக்கான்... தனக்கு வேண்டியது கிடைக்கலனா கோவ படறான்... அது தான் அவனை நல்ல நிலமைல வெச்சுகிட்டு இருக்கு... அது தான் அவனுக்கு மரியாதையை வாங்கித் தருது....' - நந்தினி.

'இதோ பார்... நானும் முன்னாடி கோவப்பட்டுக்கிட்டு இருந்த ஆள் தான்... ஆனா நான் என்னதான் கோவப் பட்டாலும் அவங்க என்னை ட்ரீட் பண்றதுல எந்த மாற்றமும் வந்ததில்லை... இன்னொரு விஷயம்... அந்த கோவத்துனால நான் நிம்மதியாவே இருந்தது கிடையாது... யார் வேணும்னாலும் என்ன வேணாலும் சொல்லிட்டு போகட்டும்... நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கறதுனால தான் என் வாழ்க்கை நிம்மதியா போய்கிட்டு இருக்கு...' – ரவி.

அவன் கூறியதை கேட்ட நந்தினி ஒரு பெரு மூச்சை விட்டு, சில நொடிகள் யோசித்தவாறே

'அப்போ இதுக்கு ஒரே வழி தான் இருக்கு.' என்றாள்.

'என்ன வழி?' என்று கேட்டான் ரவி.

‘எப்போ உங்களோட கோவத்துக்கு இங்க மரியாதை இல்லையோ அப்போ நாம இங்க இருக்க கூடாது... தனி குடுத்தனம் போயிடுவோம்... இதுக்கு நீங்க ஒத்துக்கலைனா நாம டைவர்ஸ் பண்ணிக்கலாம்' - நந்தினி.

அவள் கூறியதை கேட்டு திகைத்த ரவி

'ஹேய்... அவசர படாதே.' என்றான்.

'இதோ பாருங்க ரவி... என்னோட வாழ்க்கை துணை இப்படியெல்லாம் இருக்கணும்னு எனக்கு ஒரு கற்பனை இருக்கு... அதாவது ஒரு பெரிய கம்பெனில முக்கியமான பொறுப்புல இருக்கணும்... எப்பவுமே சுறுசுறுப்பா இயங்கிக்கிட்டே இருக்கணும்... சூழ்நிலைக்கு ஏத்தமாதிரி நல்ல முடிவு எடுக்கக் கூடியவரா இருக்கணும்... சமுதாயத்திலேயும் சரி வீட்லேயும் சரி அவருக்கு மரியாதை இருக்கணும்... ஆள் பாக்கறதுக்கு ஸ்மார்ட்டா இருக்கணும்... நான் சொன்ன இந்த லிஸ்ட்ல உன் கிட்ட இருக்கறது லாஸ்ட் பாய்ண்ட் மட்டும் தான்... அதனால தான் கண் மூடித்தனமா உன்கிட்ட மாட்டிகிட்டேன்... இப்போ நான் சொன்ன மீதி விஷயங்களுக்கு நீ முயற்சி பண்ணலைனா நான் எதுக்கு உங்களோட மனச வருத்திகிட்டு வாழணும்....' - நந்தினி.

ரவி என்ன கூறுவது என்று தெரியாமல் அவளை மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

'இதுக்கு நீங்க ஒத்துக்கலைனா நாம ரெண்டு பேரும் டைவர்ஸ் பண்ணிக்கலாம்.' - நந்தினி.

இதை கேட்டு மேலும் திகைத்து போய்

'நந்தினி... கொஞ்சம் பொறுமையா இருமா... அவசர படாதே.' என்றான்.

'ரவி நான் ஒரு முடிவு எடுத்துட்டேன்னா அதுல நான் ரொம்ப உறுதியா இருப்பேன்... என்னால இங்க சகிச்சுக்கிட்டு பொறுத்துகிட்டு வாழமுடியாது... சொல்லுங்க டைவெர்ஸா இல்ல தனி குடுத்தனமா?. ‘ - நந்தினி.

சில நொடிகள் யோசித்த ரவி, அவளிடம்

'தனி குடுத்தனமே போலாம்... இப்போ தூங்கு.' என்று சொன்னான்,

'சரி.' என்று அவள் கூறியவுடன் இருவரும் தூங்கினர்.

மறுநாள்

உறங்கி கொண்டிருக்கும் ரவியை உலுக்கினாள்.

'ரவி எழுந்திருங்க?' - நந்தினி.

ரவியும் சோம்பல் முறித்தவாறே

'என்னடி வேணும் உனக்கு?' என்று கேட்டான்.

'வாங்க வந்து உங்க அப்பா அம்மா கிட்ட நம்ம தனி குடுத்தனம் போறத பத்தி பேசுங்க...' - நந்தினி.

ரவி கலவரத்தோடு எழுந்து

'கொஞ்சம் பொறுமையா இரு நந்தினி.' என்றான்.

'இல்ல ரவி... என்னால பொறுமையா இருக்க முடியாது?... இப்போ நீங்க வந்து பேசலைனா நான் எங்க வீட்டுக்கு போயிடுவேன்.' - நந்தினி.

ரவியும் வேறு வழியின்றி எழுந்து முகத்தை கழுவி விட்டு

நடு கூடத்தில் அமர்ந்து செய்தி தாளை படித்துக் கொண்டிருக்கும் தேசிகனிடம் சென்றான்.

உடன் நந்தினியும் சென்றாள்.

தேசிகன் பக்கத்தில் சுமதியும் அமர்ந்திருந்தாள்

அவர்கள் இருவரும் தன் பக்கத்தில் வந்து நின்றதை பார்த்த தேசிகன், ரவியிடம்

'என்ன வேணும்?' என்று கேட்டார்.​
 
தேசிகன் பக்கத்தில் சுமதியும் அமர்ந்திருந்தாள்
அவர்கள் இருவரும் தன் பக்கத்தில் வந்து நின்றதை பார்த்த தேசிகன், ரவியிடம்
'என்ன வேணும்?' என்று கேட்டார்.
'தம்பிக்கு கல்யாணம் பண்ண போறீங்களா?' - ரவி.
'ஆமாம்... ஆனா இப்போ இல்ல அதுக்கு நிறைய டைம் இருக்கு ' - தேசிகன்
'ஏன் என் கிட்ட சொல்லலை?' - ரவி.
பக்கத்தில் இருந்த சுமதி குறுக்கிட்டு, ரவியிடம்
'நீ மட்டும் காலேஜ் ஜாயின் பண்ண போறதை அப்பா அம்மா கிட்ட சொன்னியா?' என்று கேட்டாள்.
அவள் பேசியதை கேட்ட நந்தினி, சுமதியிடம்
'போகும் போது சொல்லிட்டு தானே போனோம்.'என்றாள்.
'எப்போ சொன்னீங்க?... எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம நீங்களே முடிவு பண்ணிட்ட பிறகு தானே சொன்னீங்க... அதுவும் நீங்க போகும் போது நாங்களே கேட்டு தெரிஞ்சுக்கிட்டோம்.' – சுமதி.
சுமதி பேசியதை கேட்டவுடன் ரவி
'ஒருவேளை சுமதி பேசறது கரெக்ட்டோ... தப்பு எங்க பக்கம் தானோ.' என்று எண்ணுவது, அவனை கவனித்த நந்தினியிற்கு புரிந்தது.
அவன் எண்ண அலைகளை கிரகித்து உணர்ந்த நந்தினி, ரவியிடம் பார்வையை திருப்பி
'உடனே நம்ம பக்கம் தப்புனு நினைக்க வேணாம். இனிமே நான் பேசிக்கறேன்... நீங்க அமைதியா பாருங்க.' என்று கூறிவிட்டு, சுமதியிடம்
'அது வேற... படிப்புன்றது தனி பட்ட ஒருத்தரோட விருப்பம்... ஆனா இது வேற... கல்யாணமின்றது ஒரு குடும்பம் சம்மந்தப்பட்ட விஷயம்... அதை மூத்தவரான இவர் கிட்ட சொல்லிருக்கணுமே.' என்று கேட்டாள்.
இவர்கள் வாக்குவாதம் பண்ணும் சத்தத்தை கேட்டு அருணும், வாசுகியும் அங்கு வந்தனர்.
வாசுகி நந்தினியிடம்
'நந்தினி… உனக்கு என்ன பிரச்சனை?... இப்போ என்ன வேணும் உனக்கு?' என்று கேட்டாள்.
'அம்மா... மூத்தவரான இவரை ஏன் யாரும் மதிக்க மாட்டேங்கறீங்க?... ஏன் அவர்கிட்ட அருணோட கல்யாணத்தை பத்தி சொல்லலை?' என்று கேட்டாள்.
'அது இன்னும் முடிவாகலை... எல்லாம் முடிவாயிட்ட பிறகு சொல்லிக்கலாம்னு இருந்தோம்.' என்று கூறிய வாசுகி, சில நொடிகள் யோசித்துவிட்டு
'ஆமாம்... இந்த விஷயத்தை நான் உங்க கிட்ட சொல்லாத போது உனக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்?' என்று கேட்டாள்.
நந்தினியிற்கு என்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை. சில நொடிகள் அமைதியாக இருந்தாள். வாசுகி மேலும் தொடர்ந்தாள்.
'ஒன்னு... நாங்க யாராவது உன் கிட்ட சொல்லிருக்கணும்... ரெண்டாவது நீ ஒட்டு கேட்டிருக்கணும்...' என்று நந்தினியிடம் கூறிவிட்டு, ரவி, நந்தினியை தவிர மற்ற அனைவரிடமும் பார்வையை திருப்பி
'நீங்க யாராவது சொன்னீங்களா?' என்று கேட்டாள்.
வாசுகியின் நடத்தை நந்தினியிற்கு ஒரு வித குற்ற உணர்வை ஏற்படுத்தியது. தன் கட்டுப்பாடின்றி பார்வையை வேறு புறம் திருப்பினாள் நந்தினி. அவளின் செய்கையை பார்த்து அவளின் குற்ற உணர்வை புரிந்து கொண்ட சுமதி, கேலியாக நகைத்தவாறே வாசுகியிடம்
'அம்மா... எலி சிக்கிக்கிச்சு.' என்றாள்.
உடனே அருண் வாசுகியிடம்
'அம்மா... இதோ பாரு மா... எனக்கு தல வலிக்குது... எப்போ பாத்தாலும் கத்தி கூப்பாடு போட்டுக்கிட்டு இருந்தா எப்படி வீட்ல இருக்க முடியும்?... நான் என் ப்ரண்டு வீட்டுக்கு போறேன்... உங்க சண்டையெல்லாம் முடிஞ்ச பிறகு கூப்பிடுங்க... வரேன்' என்று கூறிவிட்டு, நந்தினியை முறைப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான்.
இவர்களின் செய்கைகள் நந்தினியின் குற்ற உணர்வை அதிகப் படுத்தி அவளின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்தது.
'நந்தினி... நீ அமைதியா இருந்தா... எல்லாரும் உன் மேல ஏறி அமுக்கிடுவாங்க... நீ ஒன்னும் தப்பு பண்ணலை ... தைரியமா பேசு' என்று தனக்கு தானே ஊக்கமூட்டிக் கொண்டு வாசுகியிடம்
'நான் ஒன்னும் ஒட்டு கேக்கலை... நீங்க உங்க ப்ரண்டு வசந்தி கிட்ட போன்ல பேசிகிட்டு இருக்கும் போது எதேர்ச்சியா அந்த பக்கம் வந்த என் காதுல விழுந்த விஷயம் தான் அது... நீங்க அதை நான் ஒட்டு கேட்டதா நெனைச்சுக்கிட்டீங்கனா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது... அதை பத்தி நான் கவலையும் படலை... எனக்கு என்ன ஒரே ஒரு சந்தேகம்னா இன்னும் முடிவாகாத கல்யாணத்தை பத்தி யாரோ உங்க ப்ரண்டு வசந்தி கிட்ட சொல்ற நீங்க ஏன் உங்க மொத பையன் கிட்ட சொல்லலை... அப்போ உங்க பையனை விட உங்க ப்ரண்டு தான் உங்களுக்கு உசத்தினு நான் எடுத்துக்கட்டுமா ?... சரி அத விடுங்க... உங்க பையனை "ரவி ஒரு தண்டம்"னு உங்க ப்ரண்டு கிட்ட ஏன் சொன்னீங்க?... அத கூட விட்டுரலாம்... ஆனா நேத்து "அவருக்கு ஒரு கம்பனிலேருந்து கால் வரும் அவரை எழுப்புங்க"ன்னு நான் உங்களுக்கு போஃன் பண்ணி சொல்லும் போது நீங்க அவரோட செல் போஃனை எடுத்து ஒளிச்சு வெச்சது தான் எனக்கு ரொம்ப நெருடலா இருக்கற விஷயம்... ஏன்?... உங்க பையன் முன்னேற்றது உங்களுக்கு பிடிக்கலையா?' என்று கூறிவிட்டு அனைவரையும் பார்த்தாள். அனைவரும் அவளை மெளனமாக முறைத்துக் கொண்டிருந்தனர்.
சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு நந்தினி சுமதியை பார்த்து 'இப்போ யாரு எலின்னு உனக்கே புரிஞ்சிருக்கும்.' என்றாள்.
உடனே தேசிகன் எழுந்து நந்தினியிடம்
'இதோ பாரு மா... சும்மா காலங்கார்த்தால வம்பு பண்ணிக்கிட்டு இருக்காத... எங்க பையன திட்றதுக்கு எங்களுக்கு உரிமை இல்லையா?... எதோ கோவத்துல அவ (வாசுகி) ரவியை "தண்டம்"னு திட்டிட்டா... நீ வந்து மூணு மாசம் இருக்குமா?... அதுக்கு முன்னாடி அவனை முப்பது வருஷமா நாங்க பாத்துகிட்டு இருக்கோம்... இந்த வேலையை தவிர வேற எந்த வேலையும் அவனுக்கு சரிப்பட்டு வராதுன்னுட்டு தான் வாசுகி அப்படி பண்ணினா... அதுக்கு காரணம் அவன் முன்னேறக் கூடாதுன்றது இல்ல... அவன் படு குழில விழுந்துட கூடாதுன்றது தான்... குடும்பம் னா அப்படி இப்படினு இருக்க தான் செய்யும்... நாம தான் அதுக்கு தகுந்த மாதிரி அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு போகணும்.' என்று கூறினார்.
''எது படுகுழி?... இப்போ இந்த கம்பெனில இருக்கறது தான் அவர் படு குழில இருக்கறதுக்கு சமானம்... அதே மாதிரி அட்ஜர்ஸ்ட் பண்ணிக்கறது எல்லாருக்கும் பொதுவான விஷயமா இருந்தா பரவாயில்லையே... எப்போ பாத்தாலும் நாங்க இல்ல அட்ஜர்ஸ்ட் பண்ணிக்கற மாதிரி இருக்கு...' - நந்தினி.
'சரி... இப்போ என்ன தான் சொல்ல வர?' - தேசிகன்.
'நாங்க தனி குடுத்தனம் போகலாம்னு இருக்கோம்.' - நந்தினி.
சில நொடிகள் மெளனமாக நந்தினியை பார்த்த தேசிகன் மெதுவாக பார்வையை ரவியிடம் திருப்பி
'இதுக்கு நீ சம்மதிக்கறியா?' என்று வினவினார்.
இப்பொழுது அவன் என்ன சொல்ல போகிறான் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரது பார்வையும் ரவியின் மீது இருந்தது.
ரவிக்கு யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்று குழப்பமாக இருப்பது நந்தினியிற்கு புரிந்தது.
'அவர் மட்டும் அவங்க பக்கம் சாயட்டும்... டைவர்ஸ் தான்.' என்று தனக்குள் பேசிக் கொண்டாள்.
ரவி மெதுவாக வாசுகியையும், நந்தினியையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தேசிகனிடம் பார்வையை திருப்பி
'ஆமாம் பா... நானும் நந்தினியும் தனி குடுத்தனம் போகலாம்னு முடிவு பண்ணிருக்கோம்.' என்று அழுத்தமாக கூறினான்.
'அப்போ இனிமேல் பேசறதுக்கு ஒண்ணுமில்லை... உங்க இஷ்டம் நீங்க தாராளமா வாடகை வீட்டை தேடி புடிக்கற வரைக்கும் இங்க இருக்கலாம்... இனிமேல் நந்தினி சமைக்க கூட வேண்டாம்... எங்களுக்கு நாங்க சமைச்சுக்கறோம்... உங்களுக்கு நீங்களே பாத்துக்கோங்க...' என்று பொதுவாக நந்தினியிடமும் ரவியிடமும் கூறிவிட்டு, வாசுகியை பார்த்து
'எனக்கு தலை வலிக்குது... வா கொஞ்சம் தைலம் தேச்சு விடு.' என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். உடன் சுமதியும் ரவியை முறைத்துக் கொண்டே நடந்தாள். வாசுகி கண் கலங்கியவாறே
'அவ பக்கம் சாஞ்சுட்டே இல்ல... உன் அப்பா அம்மாவையே தூக்கி போடற அளவுக்கு உன்ன மாத்திட்டாளா இவ?... நீயெல்லாம் பட்டு திருந்துவ டா...' என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
ரவிக்கு, தான் தவறு இழைத்து விட்டோமோ என்ற ஒரு குற்றவுணர்வு இருப்பதை உணர்ந்த நந்தினி
'நீங்க ஒன்னும் கில்டியா பீல் பண்ண வேணாம்... நீங்க கரெக்ட்டான முடிவை தான் எடுத்திருக்கீங்க... இப்போ போய் தூங்குங்க... நான் ஆபிஸ்க்கு கிளம்பணும்...' என்று அவளும் அங்கிருந்து நகர்ந்தாள்.
அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது இணையாக வலை தளத்தில் தான் எதிர்பார்க்கும் வாடகை வீட்டின் விவரங்களையும், தன்னுடைய அலைபேசியின் எண்ணையும் பதிவேற்றினாள். பிறகு வாடகை வீட்டின் விவரங்களை பற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளின் அலைபேசி ஒலித்தது. அதை எடுத்து யார் தொடர்புகொள்ள முயற்சிக்கிறார்கள் என்று பார்த்தாள். அது அவளின் தாய் பத்மாவதியின் எண். அந்த தொடர்பை ஏற்றுக் கொண்டு
'ம்ம்ம்... சொல்லுமா' என்றாள்.
'என்னடி பிரச்சனை உங்க வீட்ல?... உன் மாமியார் உங்கப்பாவுக்கு போஃன் கண்ணா பின்னான்னு பேசறாங்க... ரொம்ப கோவ படுற உங்க அப்பாவே "சரி பொண்ணோட வாழ்க்கை"ன்றதுனால பொறுமையா பேசிட்டு வெச்சுட்டாரு... அங்க என்ன நடக்குது?' – பத்மாவதி. (நந்தினியின் தாய்).
நந்தினியும் நடந்ததை விளக்கினாள்.
'இந்த ரெண்டு மாசத்துல இவ்வளோ நடந்திருக்கு... "என்னை வேலைக்காரி மாதிரி நடத்துறாங்க மா" ன்னு ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல... உன் புருஷன் என்ன பண்றான்?... அவங்க மேல அவ்வளோ தப்பு வெச்சுகிட்டு "உங்க பொண்ணு வந்த ரெண்டாவது மாசத்திலியே என் பையனை பிரிச்சு தனி குடுத்தனம் கூட்டிகிட்டு போறா"ன்னு உன் மேல பழி போடறாங்க' - பத்மாவதி.
'அவர் எனக்கு தான் சப்போர்ட் பண்றாரு... அங்க இருந்தா அவரை முன்னேற விடமாட்டாங்க அதான் தனி குடுத்தனம் போலாம்னு முடிவு பண்ணினேன்.' - நந்தினி.
'ஏன் டி?... உனக்கு இதெல்லாம் தேவையா?... ஒழுங்கா ஏற்கனவே முன்னேறின பசங்களையெல்லாம் காட்டினோம்... அவங்கள்ல யாரையாவது ஒருத்தரை செலெக்ட் பண்றத விட்டுட்டு செலெக்ட் பண்ணிருக்க பாரு ஒரு ஆளை எங்களுக்கு மாப்பிள்ளையா?... உன்னை சொல்லணும்... வர சனிக்கிழமை நீ மட்டும் வீட்டுக்கு வா' - பத்மாவதி.
'என்ன விஷயம்?' என்று நந்தினி கேட்கும் பொழுது அவளின் அலைபேசியிற்கு மற்றொரு எண்ணிலிருந்து அழைப்பு வருவதற்கான அறிகுறி வந்தது. உடனே நந்தினி
'அம்மா... இன்னொரு கால் வருது... நான் அப்புறம் பேசறேன்' என்று பத்மாவதியின் தொடர்பை துண்டித்துவிட்டு மற்றொரு அழைப்பை ஏற்றுக் கொண்டாள்.
அந்த அழைப்பு ரவியிடம் தொடர்புகொள்ள முயற்சித்த அதே நிறுவனத்திலிருந்து வந்த அழைப்பு. மறு முனையில் அதே பெண் மனிதவள அதிகாரி "ஏன் உங்கள் கணவர் அலைபேசியை எடுக்கவில்லை" என்று ஆங்கிலத்தில் கேட்டாள். நந்தினியும் அவருக்கு அதிகமான வேலை பளு காரணமாக எடுக்கவில்லை" என்று கூறி சமாளித்தாள். உடனே அந்த அதிகாரி "அவருடைய மின்னஞ்சலிற்கு நேர்முக காணலுக்கான விவரங்களை தான் அனுப்பியிருக்கறதாகவும் அதனுடைய நகலையும் அவருடைய சுய விவர ஆவணத்தையும் எடுத்துக் கொண்டு வருமாறு கூறிவிட்டு தொடர்பை துண்டித்தாள்.
இந்த தடவை கடவுளை வேண்டிக் கொண்டே ரவியினுடைய அலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள். மறுமுனையில் அவளின் அழைப்பு ஏற்கப்பட்டு
'ம்ம்... ஹலோ... சொல்லுடி?' என்று ரவியின் குரல் கேட்டது. நந்தினி அந்த நிறுவனத்தின் மனித வள அதிகாரியிடம் வந்த அழைப்பையும் அவனுக்கு மறுநாள் நடக்கவிருக்கும் நேர்முக காணல் பற்றியும் தெரிவித்தாள்.
'இன்னிக்கே இன்டர்வ்யூவுக்கு ப்ரிப்பேர் பண்ணி வெச்சிடுங்க... சாஃப்ட் வேர் க்ளாஸுக்கு இன்னிக்கு மட்டும் லீவ் எடுத்துக்கோங்க... நைட் வந்து உடனே நல்லா தூங்குங்க... காலைல 9 .00 மணிக்கு இன்டர்வ்யூ.' - நந்தினி.
ரவியும் 'சரி' என்று ஒப்புக் கொண்டான். சில நிமிடங்கள் பேசிவிட்டு அலைபேசியின் தொடர்பை துண்டித்தாள் நந்தினி.
மறுநாள் காலை 4 மணிக்கே எழுந்து தனக்கும் ரவியிற்கும் சமைத்து முடித்துவிட்டு நந்தினியும் உடன் ரவியும் ஏழு மணிக்கே புறப்பட தயாரானார்கள். இருவரும் ஒன்றாக கிளம்புவதை பார்த்த ரவியின் தாய் வாசுகி அவர்களிடம்
'ரெண்டு பேரும் காலைல இவ்வளோ சீக்கிரமா எங்கே...' என்று கேட்க முற்படும் போது தேசிகன் குறுக்கிட்டு
'வாசுகி... உன் வேலைய பாருமா?' என்று கூற, அவர்கள் இருவரையும் பெருமூச்சுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவள் வேலையை கவனிக்கத் தொடங்கினாள். இருவரும் ஒரு கோயிலுக்குள் சென்றனர். நந்தினி தன் கணவனுக்கு இந்த வேலை எப்படியாவது கிடைத்து விட வேண்டும் என்று வேண்டினாள். கோயிலிலிருந்து இருவரும் வெளியே வந்த பிறகு ஒரு வாடகை வாகனத்தை பிடித்தனர். வண்டி அந்த நிறுவனத்தை ஒட்டி நின்றது. அந்த நிறுவனத்தின் பிரமாண்டமான கட்டிடங்களையும் அதன் வளாகத்தினுள் செயற்கையாக அமைக்கப் பட்டிருந்த தோட்டங்களும் அவளின் கண்ணை பறித்தன. நந்தினி அவனை வாயில் வரை சென்று வழி அனுப்பி வைத்துவிட்டு தன் அலுவலகத்தை நோக்கி பயணித்தாள்.
அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் பொழுது சங்கீதாவின் நண்பன் அந்த நிறுவனத்தை பற்றி போற்றி புகழ்ந்ததை நந்தினியின் மனம் நினைவூட்டி, அவளின் கனவு வாழ்க்கையை மெருகேற்றிக் கொண்டிருந்தது. மிகுந்த எதிர்பார்ப்பு ஒரு வித ஏமாற்றத்தை கொடுக்கும் என்பதால் தன் மனதை முடிந்த அளவிற்கு கட்டுப்படுத்திக் கொண்டாள். ஆனாலும் அவளின் மனம் ரவியின் நேர்காணல் முடிந்து அவனிடமிருந்து அலைபேசியின் அழைப்பையே எதிர் பார்த்துக் கொண்டிருந்தது. இப்படியே மாலை நேரம் வந்தது. அவளின் அலைபேசி ஒலித்தது. அலைபேசியை அவசரமாக எடுத்து அதன் திரையை பார்த்தாள். அது அவள் தாய் பத்மாவதியின் எண்.
'ப்ப்ச்' என்ற சப்தத்தோடு கடுப்புடன் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டாள்.
'ம்ம்ம்... சொல்லுமா?' - நந்தினி.
'நாளைக்கு சனிக்கிழமை... மறக்காம அவசியம் வந்துடு.' - பத்மாவதி.
'அம்மா... தெரியும்... இப்போ ஒரு முக்கியமான காலுக்கு வைட் பண்ணிக்கிட்டு இருக்கேன்... அப்புறமா பேசறேன்.' என்று அந்த தொடர்பை துண்டித்தாள். அவனின் அலைபேசி அழைப்புக்கு ஆவலாக காத்துக் கொண்டிருந்தாள். சிலமணிநேரம் கழித்து
'என்னடி... கிளம்பலையா?... வேல இருக்கா?' என்று சங்கீதாவின் குரலை கேட்டு திரும்பிய நந்தினி சட்டென்று தன் கை கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 6. பிறகு சங்கீதாவிடம் பார்வையை திருப்பி
'இல்ல ஒரு முக்கியமான காலுக்கு வைட் பண்றேன்.' என்றாள்.
'யார் கிட்டேருந்து?... ரவி கிட்டேருந்தா?... ரிசல்ட் என்ன ஆச்சுன்னு எனக்கும் மறக்காம சொல்லு?... ' என்று கூறிவிட்டு நகர்ந்தாள்.
'என்னை விட என் புருஷனோட இன்டர்வ்யூ ரிசல்ட்டை தெரிஞ்சிக்கறத்துக்கு இவ ஏன் ரொம்ப ஆர்வமா இருக்கா?' என்று தனக்குள் முனகியவாறே காத்திருந்தாள்.
காத்திருந்து பொறுமை இழந்த நந்தினி, அவளே ரவியின் அலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள். மறுமுனையில் அழைப்பொலி கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் எடுக்கபடவில்லை. சில நொடிகள் யோசனைக்கு பிறகு புரிந்தது அவன் இரவு நேர பணிக்காக தொழிற்சாலைக்கு சென்றிருப்பான் என்று. நேர்காணலின் முடிவு என்னவாயிற்று? என்ற சிந்தனையுடன் வீட்டிற்கு புறப்பட தொடங்கினாள்.
மறுநாள் இரவு
நந்தினி உறங்காமல் அவன் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள். ரவி கதவை திறந்து உள்ளெ நுழைந்தான்.
அப்பொழுது நந்தினி ரவியை பார்த்து
'ரவி இன்டர்வ்யூ என்ன ஆச்சு?.. ஏன் கால் பண்ணலை?' என்று யோசனையாய் வினவினாள்.
ரவி உடைகளை மாற்றிக் கொண்டே
'இரு... சொல்றேன்' என்றான்.
சில நிமிடங்களில் உடை மாற்றிவிட்டு அவள் அருகில் படுத்தவாறு
'அட்டென்ட் பண்ணி முடிச்ச பிறகு "உங்ககிட்ட நான் அப்புறம் இன்பார்ம் பண்றோம் "னு சொல்லி அனுப்பிட்டாங்க' என்றான்.
அவளுள் இருந்த நம்பிக்கையால்
'நல்லா தானே பண்ணீங்க?... நிச்சயமா மறுபடி கூப்பிடுவாங்க... கவலை படாதீங்க.' என்றாள்.
ரவி ஒரு பெரு மூச்சுடன்
'எனக்கு மனசே சரியில்லை ...' என்றான்.
'ஏன்?' என்று யோசனையாய் வினவினாள்.
'ஒரு மணி நேரம் அந்த இன்டர்வ்யூ நடந்துச்சு... ரெண்டு பேர் எடுத்தாங்க... நீ வேற டிசைன் பீல்டுக்கு தகுந்த மாதிரி ரெஸ்யூமை ரெடி பண்ணி வெச்சிருக்க... நானும் முடிஞ்ச அளவுக்கு அதுக்கு தகுந்த மாதிரி ப்ரிப்பேர் பண்ணிக்கிட்டு போனேன்... பத்து வருஷத்துக்கு அப்புறமா இன்டர்வ்யூ அட்டண்ட் பண்றேனா ஒரு பயம் வந்துடுச்சு... அந்த பயத்துனால எனக்கு எல்லாமே மறந்து போச்சு... என்னால சரியா இங்கிலீஷ் பேச முடியல... அவனுங்க வேற ரொம்ப நோண்டி நோண்டி கேள்வி கேட்டானுங்க... நானும் முடிஞ்சா அளவுக்கு அவனுங்க கேள்விக்கு மேட்சிங்கா பதிலை சொல்ல ட்ரை பண்ணினா வேற ஏதாவது கொக்கி போட்டு மடக்கிடறானுங்க... கடைசீல விட்டா போதும் சாமின்னு வந்துட்டேன்... வெளிய வந்தவொடனே தான் என்னை பத்தி நானே நினைக்கும் போது ரொம்ப அவமானமா இருந்துச்சு... அதை எப்படி உனக்கு போஃன் பண்ணி சொல்றதுன்னு எனக்கு தெரியலை... அதான் உனக்கு கால் பண்ணலை... நாளைக்கு சனிக்கிழமை, காலேஜ்ல வேற டெஸ்ட் இருக்கு... அதுக்கு வேற படிக்கணும்...' என்று கூறி முடித்து விட்டு சில நொடிகள் மௌனத்தில் ஆழ்ந்தான்.
அவன் பெரிய அளவில் சாதிப்பான் என்று கற்பனை செய்துவைத்திருந்த அவளின் மனதிற்கு அவன் பேசியது மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது. தன் பார்வையை அவனிடமிருந்து வேறு புறம் திருப்பினாள்.
'ஏன் டி?... உனக்கு இதெல்லாம் தேவையா?... ஒழுங்கா ஏற்கனவே முன்னேறின பசங்களையெல்லாம் காட்டினோம்... அவங்கள்ல யாரையாவது ஒருத்தரை செலெக்ட் பண்றத விட்டுட்டு செலெக்ட் பண்ணிருக்க பாரு ஒரு ஆளை எங்களுக்கு மாப்பிள்ளையா?' என்று அவள் தாயார் பத்மாவதி கூறியதை யோசித்துப் பார்த்தாள்.
'நான் ரொம்ப அவசர படுறேனோ? இதானே முதல் இன்டர்வ்யூ' என்று நந்தினியிற்கு தோன்றினாலும் அவனின் பேச்சு அவனின் மீது ஒரு அவநம்பிக்கையை அவளிற்கு உருவாக்கி குழப்பத்தை கொடுத்தது.
இதனால் அமைதியாக இருந்த நந்தினியிடம் ரவி
'ஹே..., என்ன ஆச்சு?' என்று கேட்டான்.
சட்டென்று சுயநினைவுக்கு வந்த அவள் ரவியை பார்த்து
'ப்ப்ச்... ஒன்னும் இல்ல... படுத்து தூங்கு' என்று போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டாள்.
மறுநாள் ரவி கல்லூரியிற்கு சென்ற பிறகு நந்தினி தன்னுடைய பிறந்த வீட்டிற்கு புறப்பட்டாள்.
பேருந்தில் தான் ரவியை திருமணம் செய்தது தவறா சரியா என்ற குழப்பத்துடன் பயணித்துக் கொண்டிருக்கும் போது அவளின் அலைபேசி ஒலித்தது. அழைப்பு விடுத்தது சங்கீதா. அவளின் அலைபேசி திரையில் சங்கீதாவின் எண்னை பார்த்த பிறகு
'ப்ப்ச்... இவ ஏன் கால் பண்றா?... ஒரு வேளை ரவியோட இன்டர்வ்யூ ரிசல்ட்டை பத்தி கேக்கறதுக்கா?... ஆண்டவா அவ என்ன தான் என் புருஷனை மட்டம் தட்டினாலும் என் மனசு பாதிக்கப் படக் கூடாது' என்று கடவுளை வேண்டியவாறே தன் மனதை தயார் படுத்திக் கொண்டு அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டாள்.
'ஹலோ...' - நந்தினி.
'நந்து ஒரு விஷயம் தெரியுமா?' - சங்கீதா.
'என்ன சொல்லு?' - நந்தினி.
'நம்ம ஆபிஸ்ல கிரண் னு நம்ம ஜுனியர் பையன் இருக்கான்ல, அவனுக்கு வீ. எம் வேர் னு ஒரு சாஃப்ட் வேர் கம்பெனில வேல கிடைச்சிருக்காம்... 15 லட்சம் வருஷத்துக்கு தராங்களாம்... யு.கே ல ரெண்டு வருஷம் ட்ரைனிங்... பையனோட வேல்யூ எங்கேயோ போய்டுச்சு.' என்று சங்கீதா கூறிய வார்த்தைகள் "தான் அவளின் வார்த்தைகளால் பாதிக்கப் படக் கூடாது" என்று நினைத்த நந்தினியின் திடமான எண்ணத்தை தளர்த்தியது. தன் கணவன் அப்படி சாதிக்க வில்லையே என்ற சிந்தனை வளர தொடங்கியது. சங்கீதா மேற்கொண்டு பேசினாள்.
'பையன் செம ஸ்மார்ட் ல... சும்மாவா... அந்த கம்பெனில அஞ்சு ரவுண்ட் இன்டர்வ்யூவை க்ளியர் பண்ணனும்... ரொம்ப இன்டெலிஜென்ட்டா இருந்தா தான் இந்த மாதிரி கம்பெனில வேலை கிடைக்கும்... அப்புறம் இன்னொரு ஹாட்டான மேட்டர் ' என்று பேசிக் கொண்டிருக்கும் போது நந்தினி
'நல்ல வேளை ரவியோட இன்டர்வ்யூவுவை பத்தி கேக்கலை... அது வரைக்கும் சந்தோஷம்.' என்று தனக்குள் பேசியவாறே சங்கீதாவிடம்
'என்ன மேட்டர்?' என்று கேட்டாள்.
'நம்ம பேட்ச் ஸ்ரேயா இருக்காள்ல?' - சங்கீதா.
'ஆமாம்... அவளுக்கு என்ன?' - நந்தினி.
'அவளும் நம்ம ஜுனியர் பையன் கிரணும் கல்யாணம் பணிக்க போறாங்களாம்.' என்று சங்கீதா கூறியவுடன் நந்தினி ஆச்சர்யமாய்
'என்னடி சொல்ற?... அந்த பையன் கிரண் ஸ்ரேயாவோட ரெண்டு வயசு சின்ன பையன் ஆச்சே... எப்படி?' என்று கேட்டாள்.
'இந்த காலத்துல சின்ன பையன் பெரிய பையனெல்லாம் யார் பாக்கறா?... ஸ்ரேயா மாதிரி பொண்ணுங்களோட ஐடியா என்னென்னா?... எல்லா பசங்களோடையும் ப்ரண்ட்ஷிப்புன்ற பேர்ல பேசி அவனுங்க மனசுல ஒரு இடத்தை பிடிச்சிற வேண்டியது... அவனுங்களை "இது காதலா?... இல்ல ப்ரண்ட்ஷிப்ப்பா"ன்ற குழப்பத்துலியே வெச்சிருப்பாளுங்க... கிரண் மாதிரி எவனாவது வாழ்க்கைல முன்னேறிட்டாங்கன்னா அவன் கிட்ட காதல் மழையை பொழிய வேண்டியது... அவனுங்களும் வெள்ளை தோல், ஜிகு ஜிகுன்னு மேக் அப் போடற பொண்ணுங்க தான் கடவுள் நமக்காக அனுப்பின தேவதைனு கல்யாணம் பண்ணிப்பானுங்க... பாரு இந்த காலத்துல பொண்ணுங்க எல்லாம் அவங்க வாழ்க்கையை எப்படி திட்டம் போட்டு பாதுகாப்பா அமைச்சுக்கிறாங்க னு.' என்று சங்கீதா சொல்லிக் கொண்டிருக்கும் நந்தினி
'அடிப்பாவி... இவ பேசற ரூட்டு வேற எங்கேயோ போகுதுன்னு பாத்தா... மெதுவா டைவர்ட் பண்ணி என் புருஷன் கிட்டேயே கொண்டு வராளே...' என்று யோசித்தாள்.
'சரி... நேத்து உன் புருஷனோட இன்டர்வ்யூ ரிசல்ட் என்ன ஆச்சு?' என்று கேட்டாள் சங்கீதா.
நந்தினி சில நொடிகள் யோசித்தவாறு
'நல்லா தான் பண்ணிருக்காரு... "வீ வில் இன்பாஃர்ம் யூ லேட்டர்"னு சொல்லிருக்காங்க.' என்றவுடன் சங்கீதா
'அப்படி சொன்னாலே ரிஜெக்ட் பண்ணிட்டாங்கனு அர்த்தம்.' என்றாள்.
'பர்ஸ்ட் இன்டர்வ்யூ தானே... அடுத்த வாட்டி நிச்சயமா கிடைக்கும்.' என்று கூறி சமாளித்தாள்.
'உனக்கு அந்த நம்பிக்கை இருந்தா ஓகே தான்... ஆனா பாத்துக்கோ சில விளக்கு எரியணும்னா எண்ணையை ஊத்தணும்... இல்ல திரியை கசக்கி விடணும்... ஆனா அது வாழைமரமா இருந்துச்சுன்னா பெட்ரோலே ஊத்தினாலும் எரியாது... சரிப்பா... அத விடு... எனக்கு அடுத்த மாசம் அஞ்சாம் தேதி நிச்சயதார்தம்... ஆபிஸ்க்கு வா பத்திரிக்கை தரேன்... மறக்காம உன் புருஷனையும் கூட்டிகிட்டு வந்திடு... நான் அப்புறம் பேசறேன்.' என்று தொடர்பை துண்டித்தாள் சங்கீதா.
அவளுடைய பேச்சால் மேலும் குழப்பமடைந்த நந்தினி ' ஏற்கனவே உள்ள எரிஞ்சிக்கிட்டு தான் இருக்கு... இதுல இவ வேற எண்ணையை ஊத்திட்டு போறா....' என்று புலம்பிக் கொண்டே பயணித்தாள்.
யோசனையாய் வீட்டினுள் நுழைந்த பிறகு, வீட்டின் முகப்பு கூடத்தில் அவளின் தந்தை வெங்கடேசனும், தாய் பத்மாவதியும் மற்றும் அவளின் தங்கை யாழினியும் அமர்ந்திருந்தனர். உள்ளெ நுழைந்தவுடன் அனைவரது மீதும் தன் பார்வையை படரவிட்டு தன் தாய் பத்மாவதியிடம் நிறுத்தி
'எதுக்கு மா வர சொன்னே?' என்று கேட்டாள் நந்தினி.
'நான் தான் வர சொன்னேன்.' என்று தன் தந்தையின் குரல் கேட்டு, குரல் வந்த திசையில் திரும்பினாள்.
'இதோ பார் நந்தினி... எனக்கு பிடிக்காத இந்த கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கிட்டதுக்கு ரெண்டே காரணம் தான்... ஒன்னு உன் ஜாதகமும் ரவி ஜாதகமும் நல்லா பொருந்திருக்குனு ஜோசியர் சொன்னது... இன்னொன்னு நீ பிடிவாதம் பிடிச்சது... இதுவரைக்கும் உன் ஸ்கூல் காலேஜ் டேஸ்ல எங்க பேச்சையும் மீறி நீ பிடிவாதம் பிடிச்சு செஞ்ச விஷயங்கள் எல்லாமே உனக்கு நல்லதை தான் பண்ணிருக்கு... அந்த நம்பிக்கைல தான் வேற வழி இல்லாம உன்னை ரவிக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தேன்... உன் மாமியார் என்கிட்ட பேசின விதமும், உங்கம்மா உன்னை அங்க வேலைக்காரி மாதிரி நடத்தறாங்கனு சொன்னதை கேக்கும் போதும் இப்போ நான் பெரிய தப்பு பண்ணிட்டேனோன்னு தோணுது... நீ போய் பொட்டி படுக்கையெல்லாம் எடுத்துக்கிட்டு வந்திடு... ரவியை டைவர்ஸ் பண்ணிடு... அப்பா நான் உனக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு தரேன்...' - வெங்கடேசன் (நந்தினியின் தந்தை).
'அப்பா இப்போ தான் ரெண்டு மாசம் ஆயிருக்கு... அதுக்குள்ளே ஏன் இப்படி முடிவு பண்றீங்க... நீங்க சொல்ற மாதிரி அங்க என்னை ரொம்ப வேலை வாங்கினாங்க... முந்தாநாள் நடந்த பிரச்சனையிலேருந்து நான் எங்களுக்கு மட்டும் தான் சமைச்சுக்கறேன்... அதேமாதிரி ரவி என்கிட்ட கோஆப்ரேடிவா தான் நடந்துக்கறாரு... அவரும் எனக்கு சப்போர்ட்டிவா இல்லனா நீங்க சொல்ற மாதிரி அவரை டைவர்ஸ் பண்றதுல ஒரு நியாயம் இருக்கு.' - நந்தினி.
'சரி... வெறும் கோ ஆப்ரேடிவா நடந்து என்ன பிரயோஜனம்... சமுதாயத்துல அந்தஸ்து, மரியாதை தரக்கூடிய உத்தியோகத்துல ரவி இல்லையே.' - வெங்கடேசன்.
'அதுக்கு தான் பா அவரு பி. ஈ படிக்கறாரு... வேற வேலை தேடிகிட்டு இருக்காரு... நிச்சயமா ஒரு நாள் நீங்க எதிர் பாக்கறமாதிரி சமுதாயத்துல அந்தஸ்தும் மரியாதையும் எங்களுக்கு கிடைக்கும்...' - நந்தினி.
உடனே அவளின் தாய் பத்மாவதி குறுக்கிட்டு
'சினிமால ஒரே பாட்ல பெரிய ஆள் ஆகற கதை கிடையாது... இது வாழ்க்கை... இப்போ தான் கரைக்ட் டைம்... சுதாரிச்சுக்கோ... வயசாயிடுச்சுனா ரொம்ப கஷ்டம்...' என்றாள். அவள் தங்கை யாழினியும் குறுக்கிட்டு
'எங்க காலேஜ்ல கூட ஒரு லேடி லெக்ச்சரர்... ரொம்ப அழகா இருப்பாங்க... கல்யாணம் ஆன மூணாவது மாசத்துலியே டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டாங்க... ஒரு வருஷம் கழிச்சு வேற கல்யாணம் பண்ணிகிட்டாங்க... இப்போ குழந்தை குட்டின்னு டென்மார்க் ல செட்டில் ஆயிட்டாங்க... அக்கா இப்போ பொண்ணுங்களுக்கு தான் டிமாண்ட் அதிகம்... நீ அழகா இருக்க... நல்லா படிச்சிருக்கே... நல்ல வேலைல இருக்க... அதனால கல்யாணம் பண்ணிக்கிட்டா அவரோட தான் கடைசி வரைக்கும் வாழணும்ன்ற கான்செப்ட்லெருந்து வெளிய வா...' என்றாள்.
நந்தினி சிறிய கோபத்துடன் யாழினியை பார்த்து
'எனக்கே அட்வைஸ் பண்ணறியா?' என்று கேட்டுவிட்டு பொதுவாக அனைவரிடமும்
'இதோ பாருங்க... இன்னொரு வாட்டி டைவர்ஸ் அது இதுன்னு என்னை குழப்ப நெனச்சா இந்த வீட்டுக்கு நான் வர்றது இது தான் கடைசியா இருக்கும்.' என்று கடிந்துரைத்து விட்டு அங்கிருந்து சென்றாள்.
சில நாட்களுக்கு பிறகு சங்கீதாவின் நிச்சயதார்த்த நிகழ்வு நடக்கும் நாள் வந்தது. அன்றைய கிழமை சனிக்கிழமை. ரவியிற்கும் அந்த தினத்தில் கல்லூரி விடுமுறை. சங்கீதாவின் நிச்சய தார்த்த நிகழ்ச்சிக்கு தன்னை அலங்கார படுத்திக் கொண்டிருந்தாள் நந்தினி. அப்போது ரவியும் அந்த நிகழ்வுக்கு செல்ல தன்னை தயார் படுத்திக் கொண்டு அவள் முன் நின்றான். அவனைப் பார்த்தவுடன் "மறக்காம உன் புருஷனையும் கூட்டிகிட்டு வந்திடு... " என்று சங்கீதா கூறியது ஞாபகத்திற்கு வந்தது. உடனே அவள் 'என்னோட கல்யாண வாழ்க்கையை பாத்து "ஹப்பா, இவளை கம்பேர் பண்ணும் போது எனக்கு அமையற கல்யாண வாழ்க்கை எவ்வளவோ தேவலாம்"னு மனசுல சந்தோஷ பட்டுக்கிட்டு இருக்கா... இப்போ இவரை வேற கூட்டிகிட்டு போனோம்... அவ்வளவு தான்... எங்களை பாத்து பாத்தே மனசுக்குள்ள நம்பிக்கையை வளர்த்துப்பா... நிச்சயமா ஸ்கூல் காலேஜ் ப்ரண்ட்ஸ் யாராவது வருவாங்க... அவங்களுக்கும் என் கல்யாண விஷயம் தெரிஞ்சிருக்கும்... அதனால ரவியை கழட்டி விட்டுடுவோம்...' என்று தனக்குள் பேசியவாறே ரவியை பார்த்து
'சார்... எங்க கிளம்பிட்டீங்க?' என்று கேட்டாள்.
'நம்ம சங்கீதா நிச்சயதார்த்தத்துக்கு...' - ரவி.
'நம்ம சங்கீதாவா?... அவளை முன்ன பின்ன பாத்திருக்கியா?' - நந்தினி.
ரவியும் லேசான புன்னகையோடு
'இல்ல... ஒரு மார்க்கமா இப்படி தான் இருப்பானு கற்பனை பண்ணி வெச்சிருக்கேன்... அதான் நேர்ல பாக்கலாமேன்னு வரேன்.' என்றான்.
'சார் ஒரு ஆணியும் அங்க வந்து புடுங்க வேணாம்... உக்காந்து மெக்கானிக்ஸ் ஆப் மெஷின் சப்ஜெக்ட்ல நியுட்டன்ஸ் லா ஆஃப் மோக்ஷன்ஸை பத்தி படீங்க.' - நந்தினி.
ரவி லேசான எரிச்சலோடு
'எனக்கு அந்த நியுட்டன்ஸ் லா ஆஃப் மோஷன்ஸ் பத்தி படிச்சாலே தலை வலிக்குது... புரிய மாட்டேங்குது...' - ரவி.
'இப்படி தான் நியூட்டன் தலைல ஆப்பிள் விழுந்து அவருக்கு தலை வலிச்சுது... அந்த வலி தான் அவரை லா ஆஃப் மோஷன்ஸ் பத்தின தியரியை எழுத வெச்சிது... அதே மாதிரி இப்போ உனக்கு இருக்கற தலைவலி அவரோட லா ஆஃப் மோஷன்ஸை பத்தி புரிய வைக்கும்... உக்காந்து படி...' - நந்தினி.
'தலை மேல ஆப்பிள் விழுந்ததுனா அதை எடுத்து சாப்டுட்டு போறத விட்டுட்டு யார் அந்தாளை உக்காந்து ஆராய்ச்சி பண்ண சொன்னாங்க... இப்போ தான் புரியுது... அந்த நியூட்டன் வேலை இல்லாம வெட்டியா இருந்திருக்கான்... நான் அவனை மாதிரி கிடையாது எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு...' - ரவி.
'அந்தாள் வெட்டியா இருந்து கண்டு பிடிச்சது தான் இப்போ நிறைய பேருக்கு வேலை கொடுத்துக்கிட்டு இருக்கு...' - நந்தினி.
'அப்போ நானும் வேலைய விட்டு நின்னுட்டு வெட்டியா உக்காந்து எனக்கு தெரிஞ்ச லா ஆஃப் மோஷன்ஸ் பத்தி தியரி எழுதறேன்...' - ரவி.
நந்தினியும் சிறிய கோவத்தோடு
'எப்போ பாத்தாலும் படுத்துகிட்டு தூங்கற உன் லா ஆஃப் மோஷன்ஸ் தியரி பத்தி உலகத்துக்கே தெரியும்... இத தானே டிப்ளமாலயும் படிச்சிருப்ப... இப்போ ஏன் உன் மண்டைல ஏற மாட்டேங்குது?' என்றாள்.
ரவி தனது குரலை சற்றே உசத்தி
'நான் நல்லா படிக்காத பையன் தான்... அதெல்லாம் காபி அடிச்சு பிட் அடிச்சு அரியர் வெச்சு தான் பாஸ் பண்ணினேன்... போதுமா... எனக்கு படிப்பெல்லாம் மண்டைல ஏறாது... பர்ஸ்ட் செமஸ்டர் வரைக்கும் பாப்பேன்... எதுவும் சரியா நடக்கலைனா... எல்லாத்துக்கும் ஒரு முழுக்க போட்டுட்டு... முன்னாடி இருந்த வாழ்க்கையை வாழ வேண்டியது தான்... நான் இப்படித்தான்... உன்னால இந்த வாழ்க்கையை ஏத்துக்க முடிஞ்சதுனா என்னோட வாழு... இல்லனா டைவர்ஸ் பண்ணிட்டு உங்க அப்பா அம்மவோடயே இரு.' என்று கத்தினான்.
அவன் வார்த்தைகள் அவளின் மனதை ஈட்டி போல குத்தியது. அவளின் கட்டுப்பாட்டையும் மீறி கண்கள் கண்ணீரை சுரந்தது. துக்கம் தொண்டையடைக்க, அதையும் மீறி அவளும் கோவமாக கத்தினாள்.
'என்கிட்ட மட்டும் உன் கோவத்தை காட்டு... உன் அம்மா அப்பா கிட்ட காட்டாதே... ஒரு விசேஷத்துக்கு சந்தோஷமா போக விடறியா?... எப்போ பாத்தாலும் அழவெச்சுக்கிட்டே இருக்க... உனக்கு எப்படியோ எனக்கும் அப்படி தான்... நானும் முடிஞ்ச அளவுக்கு உன் கூட பொறுமையா வாழ முயற்சி பண்ணுவேன்... இல்லையா... நானும் டைவர்ஸ் பண்ணிட்டு நிம்மதியா எங்க வீட்லியே இருந்துக்கறேன்... நான் கிளம்பறேன்.' என்று கத்திவிட்டு
'உன்னையெல்லாம் கல்யாணம் பண்ணேன் பாரு... என்னை சொல்லணும்...' என்று தனக்குள் முனகியவாறே, நடந்து சென்று அவர்களின் அறை கதவை திறந்தாள். அங்கு நடு கூடத்தில் ரவியின் தம்பி அருணை தவிர அனைவரும் அமர்ந்திருந்தனர். இவர்கள் இருவரும் உள்ளே சண்டை போட்டுக் கொண்டது அங்கு கூடத்தில் அமர்ந்திருக்கும் அனைவரது காதிலும் விழுந்திருக்கும் என்பது நந்தினிக்கு புரிந்தது. அனைவரது பார்வையும் அவளின் மீது இருந்தது. நந்தினியும் அனைவரின் மீது தனது பார்வையை படரவிட்டு கடைசியாக சுமதியிடம் நிறுத்தினாள். சுமதியும் சில நொடிகள் நந்தினியை பார்த்துவிட்டு கேலியான நகைப்பை வெளிப்படுத்தியாவரே வாசுகியை பார்த்தாள். சுமதியின் இந்த செய்கை நந்தினியை மேலும் எரிச்சலூட்டியது.
'ப்ப்ச்...' என்ற சப்தத்துடன் வேகமாக அங்கிருந்து நடந்து சென்றாள். வீட்டில் நடந்த களேபரத்தால் தனது கை பேசியை எடுக்க மறந்தாள் நந்தினி.
சங்கீதாவின் நிச்சயதார்த்தம் மிகவும் பிரமாண்டமாக நடந்து கொண்டிருந்தது. அங்கு நந்தினியுடன் பள்ளியில் மற்றும் கல்லூரியில் படித்த தோழிகள் நிறைய பேர் வந்திருந்தனர்.
'என் கல்யாணத்துக்கு ஒருத்தி கூட வரல... இவளோட நிச்சயதார்த்தத்துக்கே இவளுங்க எல்லாரும் வந்திருக்காளுங்க...' என்று சிந்தனையில் மூழ்கினாள். அந்த சிந்தனை அவளிற்கு ஒருவித வேதனையை கொடுத்தது.
அவர்களுடன் சம்பிரதாயமாக சிரித்து பேசிவிட்டு கிளம்பும் பொழுது சங்கீதாவிடம் ஒரு வார்த்தை கூறிவிட்டு கிளம்பலாம் என்று முடிவெடுத்து அவளிடம் சென்றாள். அவளை பார்த்து
'சங்கீ... நான் கிளம்பறேன்.' என்று கூறும் பொழுது சங்கீதா தன் வருங்கால கணவனிடம் 'ஒரு நிமிஷம்... என் ப்ரண்ட் கூட பேசிட்டு வந்துடறேன்.' என்று கூறிவிட்டு நந்தினியை தனியாக ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்று
'சாப்ட்டியா? ‘என்று விசாரித்தாள்.
நந்தினியும் யோசனையாய் 'ம்ம்ம்.' என்று தலையசைத்தாள்.
'கொஞ்ச நேரம் வைட் பண்ணு.' - சங்கீதா.
'என்ன விஷயம்?' - நந்தினி.
'உன்னோட பெஸ்ட் ப்ரண்ட் ஆஸ்திரேலியா நித்யா...' - சங்கீதா.
'ஆமாம்... அவ "ஹஸ்பண்டோட வெகேஷனுக்கு இந்தியா வந்திருக்கேன் நாம ஒரு நாள் மீட் பண்ணுவோம்"னு ஒரு டூ வீக்ஸ் பிஃபோர் கால் பண்ணிருந்தா... அவளுக்கு என்ன இப்போ ? - நந்தினி.
'அஞ்சு நிமிஷம் முன்னாடி தான் என் மொபைலுக்கு கால் பண்ணி "வந்துகிட்டு இருக்கேன்"னு சொன்னா... நம்ம வாட்ஸ் அப் க்ரூப்ல இன்விடேஷனை போஸ்ட் பண்ணிருந்தேன்... என்னோட கல்யாணத்துக்கு வர முடியாதுன்றதுனால இன்னிக்கு வரேன்னு சொன்னா... உன் மொபைல் நம்பருக்கு கூட ட்ரை பண்ணிருக்கா... ஆனா நீ எடுக்கலையாம்... உன்னை பத்தி ரொம்ப விசாரிச்சா... உன்னை வெயிட் பண்ண சொன்னா...' - சங்கீதா.
நந்தினியும் சங்கீதா கூறியதை கேட்டு
'ம்ம்ம்... சரி வெயிட் பண்றேன்.' என்றாள்.
'தப்பா எடுத்துக்காதே... அவரோட ப்ரண்ட்ஸ் கிட்ட என்னை இன்ட்ரொட்யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கும் போது பாதியிலேயே வந்துட்டேன்... நீ இங்கேயே வெயிட் பண்ணு... நான் அவர் கிட்ட போறேன்.' என்று நந்தினியிடம் விடைப் பெற்று கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் சங்கீதா.
அங்கு சில நிமிடங்கள் தனியாக அமர்ந்திருந்த நேரத்தில்
'என் ஹஸ்பண்ட் பெரிய அளவுல படிக்கலையே தவிர அவருக்கு சிடி ல நாலு பெட்ரோல் பங்க் இருக்கு... என்னை என் மாமியார் வேலைக்கு போகவேண்டாம்னு சொல்லிட்டாங்க... உண்மையை சொல்லனும்னா வீட்ல என் அம்மாவை விட என் மாமியார் தான் அவ்வளவு அன்னோன்யமா நடந்துக்கறாங்க...'
'நான் வொர்க் பண்ற ஆபிஸ்ல என்னோட மேனேஜரையே லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... இல்லனா என் குடும்பம் இருக்கற நிலைமைக்கு எவனையாவது லோக்கல் பையனை என் தலைல கட்டிருப்பாங்க... அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு எவன் கஷ்டப் படறது... இப்போ அவருக்கு எச் 1 .பி விசா கிடைச்சிருக்கு... இன்னும் ரெண்டு மாசத்துல யு.எஸ் க்கு போயிடுவோம்...'
'என் புருஷன் பி.எச்.ஈ.எல் கவர்ன்மென்ட் கம்பெனில சீனியர் இன்ஜினியரா இருக்காரு.'
'என் ஹஸ்பண்ட் எம்.ஆர்.எஃப் ல ஒரு ப்ராஞ்சுக்கு டிரேக்டரா இருக்காரு... 'என்று சற்று முன்பு அவளுடைய பள்ளி மற்றும் கல்லூரி தோழிகள் உரையாடிய சம்பவங்களை அந்த சூழல் வலுக்கட்டாயமாக அவளிற்கு நினைவூட்டிக் கொண்டிருந்தது.
தன்னுடைய கணவனை பற்றியும் அந்த வீட்டில் அவளிற்கு இருக்கும் நிலைமையை பற்றியும், இவர்கள் பேசியதோடு ஒப்பிட்டு பார்த்தாள். அவளை அறியாமல் கண் கலங்கியது. அப்போது அவளின் தோளின் மீது பின்னிருந்து யாரோ கை வைப்பதை உணர்ந்து திரும்பி பார்த்தாள். அங்கு நந்தினியின் நெருங்கிய தோழி நித்யா நின்று கொண்டிருந்தாள். அவளை பார்த்தவுடன் கண்களில் இருந்த நீரை வேகமாக துடைத்துக் கொண்டே ஒரு செயற்கையான சிரிப்பை வெளிப் படுத்தினாள் நந்தினி.
அவளை பார்த்து அவளின் துக்கத்தை புரிந்து கொண்ட நித்யா யோசனையாய்
'ஹே நந்து... என்ன ஆச்சு?... ஏன் டல்லா இருக்க?' என்று வினவினாள்.
நந்தினியும்
'ஒன்னுமில்ல... நான் நார்மலா தான் இருக்கேன்.' என்று கூறி சமாளித்தாள்.
'ரொம்ப நாள் கழிச்சு பாக்கறோம்...' என்று அவளை கட்டி அணைத்தாள் நித்யா. 'ஆமாம்' என்று நந்தினியும் அவளை கட்டி அணைத்துக் கொண்டாள்.
'சந்தோஷமா இருக்கியா?' என்று அணைத்தவாறே கேட்டாள் நித்யா.
'சந்தோஷமா இருக்கேன்.' என்று சொல்ல நினைத்த நந்தினியை அவளின் மனதில் ஒளிந்திருக்கும் துக்கம் முந்தி கொண்டு அவளை அழ செய்தது. தன் கட்டுப்பாட்டையும் மீறி தேம்பி தேம்பி அழுதாள். அவளின் அழுகையை உணர்ந்த நித்யா, அவளின் முதுகை தட்டி ஆசுவாச படுத்தியவாறு
'ஒன்னும் இல்ல... எல்லாம் சரியாய் போய்டும்... நான் இருக்கேன்... என்ன ஆச்சுன்னு என் கிட்ட சொல்லு... நான் ஹெல்ப் பண்றேன்.' என்று கூறினாள். நித்யாவின் வார்த்தைகள் நந்தினியின் மனதிற்கு ஒரு ஆறுதலை கொடுத்தது. சில நிமிடங்கள் கழித்து நந்தினி இயல்பு நிலையை அடைந்த பிறகு இருவரும் சங்கீதாவை காண சென்றனர்.​
 
'ஒன்னும் இல்ல... எல்லாம் சரியாய் போய்டும்... நான் இருக்கேன்... என்ன ஆச்சுன்னு என் கிட்ட சொல்லு... நான் ஹெல்ப் பண்றேன்.' என்று கூறினாள். நித்யாவின் வார்த்தைகள் நந்தினியின் மனதிற்கு ஒரு ஆறுதலை கொடுத்தது. சில நிமிடங்கள் கழித்து நந்தினி இயல்பு நிலையை அடைந்த பிறகு இருவரும் சங்கீதாவை காண சென்றனர்.

சங்கீதாவினுடைய வருங்கால கணவரிடம் சம்பிரதாயமாக பேசிவிட்டு

சங்கீதாவிடம் ' நானும் நந்துவும் தனியா பேசணும்... ரூம் ஏதாவது காலியா இருக்குமா?' என்று விசாரித்தாள் நித்யா. சங்கீதாவும் அந்த மண்டபத்தின் பணியாளை கூப்பிட்டு தனது அறையை காண்பிக்க சொன்னாள். அந்த பணியாளும் அவர்கள் இருவரையும் அந்த அறைக்குச் கூட்டிச் சென்றான்.

இருவரும் சங்கீதாவின் அறையிற்கு சென்று அங்கிருக்கும் இருக்கையில் அமர்ந்தனர். சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு நித்யா பேசத் தொடங்கினாள்.

'நான் ஏன் உன்னை அவசரமா பாக்கணும்னு சொன்னேன் தெரியுமா?' - நித்யா.

நந்தினியும் யோசனையாய்

'தெரியலை.' என்றாள்.

'நேத்து என் புருஷன் கிட்ட என்னோட பேஃஸ் புக் அக்கவுண்ட்ல இருக்கற நம்ம ப்ரண்ட்ஸை காமிச்சுக்கிட்டு இருந்தேன்... அப்போ உன்னோட பேஃஸ் புக் அக்கவுண்ட ஓபன் பண்ணும் போது உன் புருஷனோட போஃட்டோவ பாத்து "இவன் உன் ப்ரண்டா?னு" கொஞ்சம் அதிர்ச்சியா கேட்டாரு... நானும் "இல்ல... என்னோட பெஸ்ட் ப்ரண்டோட புருஷன்"னு சொன்னேன்... "பாவம்... உன் ப்ரண்ட்"னு நக்கலா சொன்னாரு... நான் அவர் கிட்ட "ஏன் இப்படி சொல்லறீங்க"னு விவரமா கேட்ட பிறகு தான் எல்லா விஷயத்தையும் சொன்னாரு... என் புருஷன் படிச்ச அதே ஸ்கூல்ல தான் உன் புருஷனும் படிச்சிருக்காரு... "ரொம்ப மோசமான பையன்... ஒழுங்கா படிக்க மாட்டான்... அடிதடி ல தான் அவன் பர்ஸ்ட்... டென்த் படிக்கிறப்போ அந்த ஸ்கூல்ல படிக்கற ஒரு பொண்ணு பின்னாடி சுத்தி அவளை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணி அந்த விஷயம் போலீஸ் வரைக்கும் போச்சு... அதுக்கப்புறம் அவங்க அப்பா அம்மா ஸ்கூல் ப்ரின்ஸி கிட்ட கெஞ்சி கேட்டு மன்னிப்பு லெட்டர் எழுதி கொடுத்த பிறகு தான் அவனை ஸ்கூல்ல சேத்துக்கிட்டாங்க... அதுவும் அவனை டிரெக்ட்டா பப்லிக் எக்ஸாமுக்கு வந்தா போதும், ஸ்கூலுக்கு வர கூடாதுன்ற கண்டீஷனோட தான் சேத்துக்கிட்டாங்க... அதுக்கப்புறம் அவன் என்ன ஆனான்னு எனக்கு தெரியலை... என்னை பத்தி அவன் கிட்ட கேட்டா அவன் தெரியாதுன்னு தான் சொல்லுவான்... ஆனா அவனை பத்தி அந்த ஸ்கூல்ல படிச்சவங்க எல்லார் கிட்டேயும் கேட்டா தெரியாதுன்னு சொல்லவே மாட்டாங்க... அவ்வளவு பிரபலமான ஆளு... பின்லேடன் மாதிரி" னு அவரு உன் புருஷனை பத்தி சொல்லிகிட்டே போறாரு... நானும் "அப்போ அந்த வயசுல அப்படி இருந்திருப்பாரு... இப்போ மாறிருப்பாரு... என் ப்ரண்ட் எல்லாத்தையும் தீவிரமா யோசிச்சு தான் முடிவெடுப்பா" னு சொல்லி சமாளிச்சேன்... அதுக்கு தான் உன்னை நேர்ல பாத்து சந்தோஷமா இருக்கியான்னு கேட்டேன்.' என்று நித்யா பேசிக் கொண்டிருக்கும் போதே சங்கீதாவும் உள்ளெ நுழைந்தாள். தன் கணவனை பற்றி நித்யா கூறிய விஷயங்கள் அவளை அதிர்ச்சிக்குள்ளாகியது. மிகவும் அவமானமாக நினைக்கத் தொடங்கினாள்.

'நான் சொன்ன இந்த விஷயம் உன் மனசை பாதிச்சிருக்கும்னு எனக்கு தெரியுது... நம்ம காலேஜ் டேஸ்ல நீ எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்க... உனக்கு உதவி செய்யறது என்னோட கடமைனு நினைக்கறேன்... சொல்லு... ஆர் யூ ரியலி ஹாப்பி வித் ஹிம்.' என்று கேட்டாள்.

சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு ஒரு நீண்ட உள் மூச்சை இழுத்து விட்டு நந்தினி தனக்கு ரவியின் குடும்பத்துடன் ஏற்பட்ட மன கசப்புகளை பகிர்ந்து கொண்டாள்.

'அந்த குடும்பத்தை விடு... ரவி உன்னை எப்படி ட்ரீட் பண்றாரு...' - நித்யா.

'ஸ்கூல் டேஸ்ல மே பி ரொம்ப மோசமான பையனா இருந்திருக்கலாம்... ஆனா இப்போ ரொம்ப சாந்தமா அமைதியா தான் இருக்காரு... இன் பாஃக்ட் அவங்க வீட்ல அவரை ரொம்ப மோசமா நடத்துனா கூட அமைதியா தான் இருக்காரு... எனக்கு தெரிஞ்சு இன்னிக்கு தான் என்கிட்டே ரொம்ப கோவமா நடந்துக்கிட்டாரு...' - நந்தினி.

'அவரோட வேலை எப்படி? அப்புறம் எவ்வளவு சம்பாதிக்கறாரு...' - நித்யா.

இந்த கேள்விக்கு நந்தினி தயக்கமாக

'மெஷின் ஆபரேட்டரா தான் வொர்க் பண்றாரு... மாசம் இருபதாயிரம் தான் சம்பாதிக்கறாரு.' என்றாள்.

'ப்ப்ச்...' என்ற சப்தத்தோடு தலையை மறுப்பது போல் அசைத்தவாறு

'தப்பு பண்ணிட்டியே... நீ 12 த்ல ஸ்கூல் பர்ஸ்ட் வந்திருக்க... அண்ணா யூனிவர்சிட்டி ல டாப் 10 ரேங்க்ஸ்குள்ள வந்திருக்க... நம்ம காலேஜ்லேருந்து ஆயிரம் பேர் அட்டண்ட் பண்ண இப்போ நீ வொர்க் பண்ற கம்பெனியோட கேம்பஸ் இன்டர்வ்யூல நீயும் சங்கீதாவும் மட்டும் தான் செலக்ட் ஆனிங்க... இன்னும் நிறைய சொல்லிகிட்டே போகலாம்... உன்னோட அறிவுக்கும் ஆற்றலுக்கும் தகுந்த மாதிரி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிருக்கலாம்ல... உன்னோட கல்யாண பத்திரிக்கைல அவரோட குவாலிபிகேஷன் டிப்ளமானு பாக்கும் போதே யோசிச்சேன்... உனக்கு எந்த விதத்துலேயும் இணையாகாத ஒரு ஆளை எப்படி கல்யாணம் பண்ணிகிட்டே?' என்று வினவினாள்.

'மனசுக்கு பிடிச்சவங்களோட வாழ்ந்தா நல்லது தான் நடக்கும், நாம நினைச்சதெல்லாம் நிறைவேறும்னு ஒரு நம்பிக்கை... இந்த மாதிரி நம்பிக்கைகள் தான் என்னை படிப்புல சாதிக்க வெச்சுது... அதே நம்பிக்கைல தான் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...' - நந்தினி.

'இந்த நம்பிக்கையை வெச்சு புதை மணல்ல பெரிய கோட்டை கட்ட முடியுமானு சொல்லு... நீ பண்ண காரியம் அப்படி தான் இருக்கு... அந்த குடும்பத்தை பத்தியும் ரவியை பத்தியும் நீ சொல்றத வெச்சு பாக்கும் போது எனக்கு புதை மணல் தான் ஞாபகத்துக்கு வருது... இந்த புதை மணல் உன்னோட கனவை மட்டும் மூழ்கடிக்கறது மட்டுமில்லாம உன்னையே மூழ்கடிச்சிடும்... நல்லா யோசி... ஒரு லூசரா தான் உன் வாழ்க்கையை முடிச்சிக்க போறியா...' - நித்யா

'சீக்கிரமா டைவர்ஸ் பண்ணிட்டு புது வாழ்க்கையை ஆரம்பினு சொன்னா கேக்க மாட்டேங்கறா நித்யா.' என்று சங்கீதா நித்யாவிடம் கூறினாள்.

நித்யாவும் சங்கீதாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடி நந்தினியை பார்த்து

'இதோ பார்... உடம்புல வந்த நோய்க்கு எப்படி கசப்பு மாத்திரை போட்டு சரி பண்ணிக்கறோமோ அதே மாதிரி டைவர்ஸ் பண்றது கசப்பா தான் இருக்கும்... பட் இட் ஸ் அன் இம்மீடியட் ரெமெடி பார் யூ நவ்...' என்றாள்.

இருவரும் சேர்ந்து கூறிய விஷயங்கள் மேலும் நந்தினியின் மனதை குழப்பியது.

நந்தினி வீட்டினுள் தனது அறைக்குள் நுழையும் பொழுது ரவி படுக்கையில் அமர்ந்திருந்தான். அவனை பார்த்தவுடன் நந்தினிக்கு காலையில் அவனோடு சண்டை போட்ட சம்பவம் ஞாபகத்திற்கு வந்து அவளின் கோபத்தை தூண்டியது. அவனை பார்த்தவுடன் முகத்தை திருப்பிக் கொண்டாள். நந்தினி அவன் மீது இருந்த கோவத்தால் அவனை பார்க்காமல் தனது உடைகளை மாற்றிக் கொண்டு படுக்கையில் படுத்தாள்.

சில நொடிகள் கழித்து ரவி தன் தோளின் மீது கை வைப்பதை உணர்ந்தாள்.

'என் மேல கோவமா?... சாரி டி... என்னனே தெரியல... இப்போ எல்லாம் ஸ்கூல் டேஸ்ல காலேஜ் டேஸ் ல படிக்கும் போது இருந்த அதே கோவம் மறுபடி வருது... ' என்று ரவி கூறும் போது நந்தினியிற்கு ரவி தனது பள்ளி பருவத்தில் எப்படி இருந்தான் என்று நித்யா தனது கணவர் கூறியதாக சொன்ன விஷயங்கள் சிந்தையில் தோன்றி, அவளிற்கு ரவியின் மீது ஒரு அருவெறுப்பை உண்டாக்கியது.

'உனக்கு கூட கால் பண்ணினேன்... அப்புறம் தான் நீ உன் மொபைலை எடுத்துக்கிட்டு போகலைன்னு தெரிஞ்சிது... ப்ப்ச்... நான் டைவர்ஸ் அது இதுன்னு பேசியிருக்க கூடாது... என் தப்பு தான்...' என்று ரவி பேசிக் கொண்டிருக்கும் போது நந்தினி அவனிடம் பேச பார்வையை அவன் பக்கம் திருப்பினாள். அவள் பேசுவதற்குள்

'எனக்கு உன்னை விட்டா யாரு இருக்கா?' என்று ரவி கூறிய வார்த்தைகள் அவளின் காதுகளில் நுழைந்து அவனின் மீது ஒரு அனுதாப உணர்வை ஏற்படுத்தியது. அந்த உணர்வை கட்டுப் படுத்திக் கொள்ள இரு காதுகளையும் கைகளால் மூடியவாறு கண்களையும் மூடிக் கொண்டு

'நாம டைவர்ஸ் பண்ணிக்கலாம் ரவி.' என்று சட்டென்று கூறினாள். அவள் கூறியதை கேட்ட ரவி திகைத்தவாறு

'ஹே... ஏன் இப்படி பேசற?... நம்ம வேற வீடு தேடிகிட்டு தானே இருக்கோம்...' என்றான்.

சில நொடிகள் நந்தினி அவனை மெளனமாக பார்த்து விட்டு

'நீங்க ஸ்கூல் டேஸ்ல எப்படி இருந்தீங்க?... நீங்க யாரோ ஒரு பொண்ணு பின்னாடி சுத்தி போலீஸ் வரைக்கும் விஷயம் போச்சாமே... இதெல்லாம் சங்கீதாவோட நிச்சயதார்தத்துக்கு வந்த என் ப்ரண்ட் நித்யா சொன்னா... அவளோட புருஷன் உங்களோட ஸ்கூல்ல படிச்சாராம்... இந்த விஷயத்தை கேட்ட பிறகு என்னால நார்மலாவே இருக்க முடியலை... ' என்றாள்.

ரவி மெளனமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

'என்ன பாக்கறீங்க?... அப்போ எனக்கு முன்னாடி உங்க மனசுல ஏற்கனவே ஒரு பொண்ணு இருந்திருக்கா ?' - நந்தினி.

ரவி அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அமைதியாக இருப்பதை பார்த்து

'ஏதாவது பேசித் தொலை... அப்படியே பேயறைஞ்ச மாதிரி பாக்காத...' என்று கோபமாக கத்தினாள்.

மறுபடியும் ரவி எதுவும் பேசாமல் அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

நந்தினியிற்கு கோபம் உச்சத்தை எட்டியது. ஒரு நீண்ட உள் மூச்சை இழுத்து விட்டு மறுபடி ரவியை பார்த்தாள். இப்பொழுது ரவி இழுத்து போர்த்திக் கொண்டு படுத்திருந்தான்.

அதை பார்த்த நந்தினி கட்டுப்பாடற்ற கோபத்தோடு ரவியின் போர்வையை விலக்கி அவனை உலுக்கி

'என் நிம்மதியை கொலைச்சிட்டு நீ மட்டும் நிம்மதியா தூங்குவியா? மரியாதையா எழுந்திரு...' என்றாள்.

'நாம டைவர்ஸ் பண்ணிக்கலாம்...' என்று கூறிவிட்டு மறுபடி போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டான் ரவி.

'ஒரு கம்பெனில பெரிய பொறுப்புல இருக்கற ஆளையோ இல்ல பிஸினெஸ்மேனையோ கல்யாணம் பண்ணிக்கணும்ன்றது தான் என்னோட ஆசை... உன்னை ரொம்ப பிடிச்சு போனதுனால உன்னை எப்படியாவது அந்த லெவெலுக்கு மாத்திடலாம்னு ஒரு குருட்டு நம்பிக்கைல கல்யாணம் பண்ணேன் பாரு... என்னை செருப்பால அடிக்கணும்... கல்யாணத்துக்கு முன்னாடியே நீ சின்ன வயசுல ஒரு பொருக்கியா இருந்தவன்னு தெரிஞ்சிருந்தா நான் உன்னை கல்யாணம் பண்ணிருக்கவே மாட்டேன்.' என்று தூங்கி கொண்டிருக்கும் ரவியை அடித்தாள்.

ரவி கோபமாக எழுந்து அவளை அடிக்க கையை ஓங்கி பாதியிலியே நிறுத்தினான். நந்தினி அதிர்ச்சியாய் அவனை பார்த்தவாறு அமைதியானாள்.

'அதான் டைவர்ஸ் பண்ணிக்கோன்னு சொல்லிட்டேனே... அப்புறம் ஏன் கத்திக்கிட்டு இருக்க... உனக்கு முன்னாடி எனக்கு மூணு பொண்ணுங்களை பாத்தாங்க... அவங்க எல்லாரும் என்னை ரிஜெக்ட் பண்ணாங்க... காரணம் என்னோட வேலையும் சம்பளமும் தான்... இதெல்லாம் தெரிஞ்ச நீ அவங்கள மாதிரி என்னை ரிஜெக்ட் பண்ணிட்டு வேற நல்ல பாஃரின் மாப்பிளையை கல்யாணம் பண்ணி யு.எஸ் லண்டன்னு செட்டில் ஆயிருக்க வேண்டியது தானே... ஏன் என்னை கல்யாணம் பண்ணின?... தப்பெல்லாம் நீ பண்ணிட்டு என்னை குறை சொன்னா எப்படி?... வீட்ல அம்மா அப்பா அப்புறம் கூட பொறந்ததுங்க இதுங்க யாரும் என்கிட்ட அன்பா பாசமா நடந்துக்கமாட்டாங்க... ஸ்கூல்ல என்னோட அறியாமையை பயன்படுத்தி தன்னோட தேவைக்கு என்னை தப்பா தூண்டி விட்டு நம்பிக்கை துரோகம் பண்ற ப்ரண்ட்ஸ் சர்கீல்... ஒழுங்கா படிக்க முயற்சிப்பண்ணும் போது ஊக்கம் குடுக்காம சும்மா குறை சொல்லி மட்டப்படுத்தற வாத்தியாருங்க... இந்த மாதிரி சூழல்ல ஒருத்தன் வாழ்ந்தான்னா அவன் அப்துல் கலாம் மாதிரியா இருப்பான்... பொருக்கியா தான் இருப்பான்... என்னமோ கோபமே படமாட்டேங்கறேன்னு சொன்னியே... சின்ன வயசுல வெறும் கோபம் மட்டும் தான் படுவேன்... அந்த கோபம் தான் என்னை மட்டப்படுத்தற வாத்தியாருங்கல அடிக்க வெச்சிது... அந்த கோபம் தான் கூடவே ப்ரண்ட்ஸுன்னு சொல்லிக்கிட்டு நம்பிக்கை துரோகம் பண்ற பசங்களை அடிக்க வெச்சிது... அப்போ உன்னை மாதிரி தான் அந்த பொண்ணே என்னை தேடி வந்து பேசி பேசி பேசி பேசி அவ மேல லவ் வர வெச்சிட்டா... அவ என்ன லவ் பண்றதா வாயில சொல்லலியே தவிர அவளோட செய்கைகள் அதை ஊர்ஜித படுத்துச்சு... அவ வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு நல்லா படிக்கற பசங்களோட நட்பு ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமா நல்லா படிக்க ஆரம்பிச்சேன்... அவளோட வரவு என்வாழ்க்கைல சந்தோஷத்தை குடுக்க போகுதுன்னு நெனச்சேன்... அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அந்த பொண்ணு என் கூட முன்ன மாதிரி பேசி பழகல... என்னை அவாய்ட் பண்ணினா... அப்புறம் தான் அவ வேற ஒரு பையன் கூட பேசி பழக ஆரம்பிச்சுட்டா னு தெரிய வந்தது... அவளோட பேசி பழகுன பையன் வேற யாரும் கிடையாது... எனக்கு படிப்புல ஹெல்ப் பண்றேன்னு என்கூட ஓட்டிகிட்ட அந்த நல்லா படிக்கற பொறம்போக்கு நாய் தான்... அந்த பொண்ணை கரெக்ட் பண்றதுக்கு என் கூட ப்ரண்ட்ஷிப் வெச்சிகிட்டான்னு அப்புறம் தான் தெரிய வந்தது... "ரவியை நம்புனா வேஸ்ட்... அவன் ஒழுங்கா படிக்க மாட்டான்... அவன் ஒரு பொருக்கி... நீ இந்த நல்லா படிக்கிற பையனை லவ் பண்ணு" னு அந்த பொண்ணோட ப்ரண்ட் சொல்லி சொல்லியே அவ மனச மாத்திட்டான்னு தெரிய வந்தது... அந்த பையனும் என்னை பத்தி நெகட்டிவ்வா சொல்லி தான் அந்த பொண்ணை கரெக்ட் பண்ணிருப்பான்... அந்த பொண்ணும் அவன் கூட சகஜமா பழக ஆரம்பிச்சுட்டா... இத பாத்து என்னால எப்படி சும்மா இருக்க முடியும்... அதான் போய் அவன், நான் லவ் பண்ண பொண்ணு, அப்புறம் இந்த பொண்ணோட மனச மாத்துன அவளோட ப்ரண்ட் மூணு பேரையும் அடிச்சு மூஞ்சி மொகரையெல்லாம் பேத்துட்டேன்... அந்த பொண்ணோட அப்பன் ஒரு அரசியல்வாதி... இதனால தான் போலீஸ் கேஸ் ஆச்சு... அப்புறம் என் அப்பாவும் அம்மாவும் அவன் கைல கால்ல விழுந்து போலீஸ் கேஸை வாபஸ் வாங்க வெச்சாங்க... ஏற்கனவே வீட்ல மதிக்கமாட்டாங்க... இதுக்கப்புறம் சுத்தமா போச்சு... என் நிலைமையை நெனச்சு நிறைய தடவ தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணிருக்கேன்...' என்று ரவி கூறும்போது

நந்தினி பதறி போய்

'ஐயோ... அப்புறம் யார் உங்களை காப்பாத்துனாங்க...' என்று கேட்டாள்.

'யாரும் காப்பாத்தல... தற்கொலை பண்ணிக்கறதுக்கு மலை உச்சி வரைக்கும் போவேன்... அப்புறம் பயமாயிடும் திரும்பி வந்துடுவேன்...' - ரவி.

இப்போது நந்தினியிற்கு ரவியின் மீதுள்ள கோபம் கரைந்து அவன் மீது காதல் அதிகமாகியது.

'அவரோட கடந்த காலத்தை பத்தி பேசியிருக்க கூடாதோ' என்று யோசித்தாள். இந்த யோசனை ரவியின் மீதுள்ள அனுதாப உணர்வை உசுப்பியது. ரவி சில நொடிகள் நந்தினியை மௌனமாக பார்த்து விட்டு பார்வையை

'அந்த பொண்ணு மாதிரி தான் நீ... நீயும் போ… எனக்கு இது ஒன்னும் புதுசில்ல... எல்லாரும் என்னை பாதியிலியே விட்டுட்டு போறது எனக்கு பழக்க பட்ட விஷயம் தான்... இப்படி தான் ரமேஷ்னு ஒருத்தன் இப்போ வொர்க் பண்ற கம்பெனில இன்டர்வ்யூ க்ளியர் பண்றதுக்கு உதவி செஞ்சான்... போரிங் மெஷினை எப்படி ஓட்றதுன்னு சொல்லி குடுத்தான்... நான் ஏதாவது மனக்கஷ்டத்தோட வரும் போது குட்டி குட்டி கதைகள் சொல்லி என் மனச தேத்துவான்... அப்புறம் பாதியிலியே என்னை தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டான்... எனக்குன்னு நிரந்தரமா எந்த நட்புறவும் இருந்தது கிடையாது... சுட்டெரிக்கிற வெயில் மாதிரி இருக்கற என் வாழ்க்கைல குளிர்ந்த மேகம் மாறி அந்த பொண்ணு வந்தா... இனிமேல் என் வாழ்க்கை மாறிடும்னு நம்பினேன்... ஏமாத்திட்டு போயிட்டா... இப்போ உன்னை நம்புறேன்... நீயும் போ... என்னோட நட்புறவா இருக்கறது அந்த உயிரில்லா போரிங் மெஷின் தான்... ஏதாவது நான் தப்பு பண்ணும் போது அந்த மெஷின் தானாவே நின்னுடும்... அப்புறமா தான் தெரியும் அந்த மெஷின் ஓடியிருந்ததுனா எவ்வளவு பெரிய தப்பு நடந்திருக்கும்னு... எவ்வளவோ வேதனைகளை சுமந்துக்கிட்டு கம்பனிக்குள்ள போவேன்... அந்த மெஷின்ல வொர்க் பண்ண ஆரம்பிச்சேன்னா எல்லாமே கரைஞ்சு போயிடும்... பேசாம நாமளும்னு அந்த மெஷின் மாதிரி இருந்தா என்னனு நெனச்சது தான் என்னோட கோபத்தை கட்டுப்படுத்தி வெச்சிருக்கு... இல்லனா என் கம்பெனிக்காரங்க பண்ற அயோக்யத்தனத்துக்கு அவனுங்களோட சண்டை போட்டு இந்நேரத்துக்கு இந்த வேலையும் இல்லாம தான் இருந்திருப்பேன்... அதனால நீ போனா நான் ஒன்னும் கஷ்ட படமாட்டேன்... என்னை என் மெஷின் காப்பாத்தும் ...’ என்று தழு தழுத்த குரலில் பேசிவிட்டு போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு படுத்தான்.

அவனுடைய இந்த குழந்தை தனமான செய்கையை பார்த்து நந்தினியால் இயல்பாக இருக்க முடியவில்லை. அவன் காதருகில்

'சாரி... ரவி... தெரியாம சொல்லிட்டேன்...' என்று அவனை உலுக்கிக் கொண்டிருந்தாள்.

அவளுடைய கெஞ்சலுக்கு ரவியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. உடனே நந்தினி போர்வையை விலக்கி அவன் கண்களில் கண்ணீர் துளிகளை பார்த்தாள்.

ரவி அவளை பார்த்து விட்டு

'அதெல்லாம் என்னோட அசிங்கமான பாஸ்ட் லைஃப்... அதெல்லாம் மறந்து இப்போ நான் நார்மலா இருக்கேன்... அதை ஞாபகப்படுத்தி ஏன் என்னை வருத்த பட வெக்கற... உனக்காக தான பி.ஈ படிக்கறேன், அப்புறம் வேற வேலை தேடிகிட்டு இருக்கேன்... கம்பனிலேருந்து வந்த வொடனே சாஃப்ட் வேர் க்ளாஸ் போகணும்... வார கடைசில பி.ஈ க்ளாஸ்... அப்புறம் க்ளாஸ் டெஸ்ட், செமஸ்டர் எக்ஸாம்க்கு படிக்கணும்னு வாழ்க்கை ரெஸ்ட் லெஸ்ஸா போய்கிட்டு இருக்கு... அதனால தான் எனக்கு கோவம் வருது... அதை ஏன் நீ புரிஞ்சிக்க மாட்டேங்கற?' என்றான்.

'சாரி... அவ அப்படி சொல்லும் போது எனக்கு ஷாக்கிங்கா இருந்துச்சு... அதான் யோசிக்காம கேட்டுட்டேன்... நாளைக்கு காலேஜ்ல க்லாஸ் டெஸ்ட் இருக்குல்ல... அதுல கவனத்தை செலுத்துங்க... இப்போ நடந்ததை மறந்திடுங்க.' என்று அவனை ஆசுவாச படுத்தினாள். அவனும் சமாதானம் ஆனான். "மனசுக்கு பிடிச்சவங்களோட வாழ்ந்தா நல்லதே நடக்கும், நாம நினைச்சதெல்லாம் நிறைவேறும்" என்ற நம்பிக்கை மறுபடி அவளிடம் வலுத்தது.

திங்கள் கிழமை நந்தினி அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் பொழுது அவளினுடைய அலைபேசியிற்கு அழைப்பு வந்தது. அது பதிவு செய்ய படாத எண். யோசனையாக அந்த பதிவை ஏற்றாள் நந்தினி. மறுமுனையில்

'ஹலோ... நான் நித்யா பேசறேன்... என்னாச்சு?... உன் முடிவை அவர் கிட்ட சொல்லிட்டியா?... எல்லாரும் சேர்ந்து உன் மனச மாத்த முயற்சி பண்ணுவாங்க... டைவர்ஸ் பண்றதுல விடா பிடியா இரு...' என்றாள்.

அப்படி நித்யா கூறும் பொழுது 'ஏன் என் அம்மா அப்பாலேருந்து நித்யா வரைக்கும் நான் ரவியை டைவர்ஸ் பண்றதுலியே குறியா இருக்காங்க?' என்று யோசித்தவாறே

நந்தினியும் அன்று என்ன நடந்தது என்பதை விளக்கினாள்.

'ப்ப்ச்... நந்து... இயற்கையாவே பொண்ணுங்களுக்கு இரக்க குணம் ரொம்ப அதிகம்... அந்த குணத்துனால தான் நாம சறுக்கி கீழே விழறோம்... மறந்துட்டியா... நானும் நம்ம சீனியர் வருணும் லவ் பண்ண கதை உனக்கு ஞாபகம் இருக்கா?... அவன் நல்லா படிக்க மாட்டான்... குடிக்கற பழக்கம் வேற இருந்துச்சு... அவன் என் பின்னால சுத்தி சுத்தி வந்தான்... நானும் அவனை அவாய்ட் பண்ணேன்... "எனக்குன்னு யாரும் இல்லை... என்கூட அன்பானவங்க யாரவது இருந்தாங்கன்னா நான் இப்படி இருந்திருக்க மாட்டேன்"னு அவன் சொன்னதுனால தான் அவன் மேல அனுதாபம் உண்டாகி அவனோட பேச ஆரம்பிச்சேன்... அது போக போக லவ்வா மாறிச்சு... அவனும் குடி பழக்கத்தை விட்டுட்டு என் பேச்சை கேட்டு படிக்க முயற்சி பண்ணினான்... கொஞ்ச நாள் நல்லா தான் போச்சு... ஆனா அவனால ஒழுங்கா படிக்க முடியலை... மெதுவா குடிக்கற பழக்கம் ஆரம்பிச்சது... நாளாக நாளாக அவன் என்னை இளக்காரமா ட்ரீட் பண்ண ஆரம்பிச்சான்... படிப்புலேயும் எந்த வித முன்னேற்றமும் இல்லை... குடிக்கற பழக்கத்தையும் விடலை... சரி பிரேக் அப் பண்ணிக்கலாம்னு பாத்தா, அழுது புலம்பி இமோஷனல் பிளாக் மெயில் பண்ணுவான்... அவனால மெண்டலி ஸிக் ஆகி நானும் படிப்புல கம்மியா மார்க் வாங்க ஆரம்பிச்சேன்... அப்போ நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணி மறுபடி நல்ல மார்க் எடுக்க வெச்ச... அது என்னோட தன்னம்பிக்கையை வளர்த்துச்சு... அந்த தன்னம்பிக்கையை வெச்சு தான் அவன் கிட்டேருந்து விலகி வந்தேன்... இப்போ இதே மாதிரி சூழ்நிலை தான் உன்னோடதும்... தயவு செஞ்சு இமோஷனலா லாக் ஆகாதே... கொஞ்சம் ப்ராக்டிகலா நல்லா யோசிச்சு பார்... மூணு வருஷம் பி.ஈ யை நல்ல படியா படிச்சு முடிக்கணும்... வேற நல்ல வேலை கிடைக்கணும்... இவரு வேற வெறும் மெஷின் ஆபரேட்டரா தான் பத்து வருஷமா வேல செஞ்சிருக்காரு... நீ எதிர் பாக்கற சேலரி வாங்கணும்னா மேனேஜ்மன்ட் சைட்ல வேல செய்யணும்... அதுக்கு நல்ல கம்யூனிகேஷன் ஸ்கில் இருக்கணும்... எதையும் சமாளிக்க கூடிய சமயோஜித புத்தி இருக்கணும்... அதுவுமில்லாம இது பார்ட் டைம் டிகிரி வேற... நல்ல பெரிய கம்பெனீஸ் எல்லாம் இந்த ப்ரோஃபைலை கன்சிடர் பண்ண மாட்டாங்க... இத விடு... நம்ம காலேஜ் டேஸ் ல யூ ஆர் மோர் ஸ்டூடியஸ் கேர்ள்... எல்லா பசங்களுக்கும் உன் மேல ஒரு ஸ்பெஷல் அட்ராக்ஷன்... என்கிட்ட நிறைய பசங்க வந்து உன்கிட்ட இன்ட்ரோ கொடுக்க சொல்லி கேட்ருக்காங்க... நான் பட்ட கஷ்டம் நீ படக் கூடாதுனு அவங்களையெல்லாம் உன் பக்கம் நெருங்க விடலை... நீ உன்னோட வாழ்க்கையை எப்படி அமைச்சுக்க போறேன்னு நம்ம பேட்ச் மேட்ஸ் எல்லாருக்கும் மறைமுகமான ஆர்வமும் இருந்துச்சு... நீ பெரிய புதையலை தேடி போற மாதிரி போய் ஒரு பாழுங்கிணத்துல விழுந்த மாதிரி இருக்கு... இப்போ எல்லாரும் ரிச்னெஸ் கிராண்ட்னெஸ் க்கு தான் முக்கியத்துவம் தருவாங்க... உன் கல்யாணத்துக்கு ஏன் யாரும் வரலைன்றத்துக்கு காரணமும் சங்கீதாவோட நிச்சய தார்த்தத்துக்கே நிறைய பேர் வந்ததுக்கு காரணமும் உனக்கு இப்போ புரிஞ்சிருக்கும்... நம்ம மனசுன்றது குழந்தை மாதிரி... அதுக்கு எது சரி எது தப்புன்னே தெரியாது... எப்படி ஒரு குழந்தை எனக்கு சாக்லேட் வேணும்னு அதோட பாதிப்பு தெரியாம அடம்பிடிக்குமோ அது மாதிரி நம்ம மனசு கண்ட விஷயங்களுக்கு அட்ராக்ட் ஆகும்... நம்ம புத்தின்றது நம்மளோட அப்பா அம்மா மாதிரி... எது சரி எது தப்புனு தீர்கமா யோசிச்சு முடிவெடுக்க கூடிய பொறுப்பை நம்ம புத்தி கிட்ட விட்டுடணும்... எப்படி ஒரு பக்குவமான அம்மா அப்பா அடம்பிடிக்கற அந்த குழந்தையை நேக்கா சமாதான படுத்தி அந்த சாக்லெட்டை மறக்க வெக்கறாங்களோ நீயும் உன் மனசை லாவகமா எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம ரவி கிட்டேருந்து பிரிச்செடுக்கணும்... இப்போ நிச்சயமா ரவி உனக்கு நல்லவரா தெரிவாரு... அவரை டைவர்ஸ் பண்ணினோம்னா அவருக்கு பண்ற பெரிய துரோகம்னெல்லாம் உன் மனசு உன்னை குழப்பும்... அதுக்கு முக்கியத்துவம் தராதே... அதுக்கு நீ கட்டுப்பட்டேன்னா நான் வருண் கிட்ட பட்ட கஷ்டத்தை வாழ்க்கை முழுக்க நீ பட வேண்டியது தான்... விட்டு பிரியணும்னு நீ நெனைச்சா உன் மனசு குற்ற உணர்வை ஏற்படுத்தும்... கூட இருந்தா இவரை டைவர்ஸ் பண்ணிட்டு வேற நல்ல வாழ்க்கையை அமைச்சு இருந்திருக்கலாமேன்னு தோணும்... இது ஒரு ட்ராப்... இதுலேருந்து நீ வெளிய வரணும்னா எப்படி இயற்கையா அமைஞ்ச பாதைல பாயற நதியை அணைகட்டி திசை திருப்பி மனுஷன் பயன் அடையறானோ அதே மாதிரி உன் மனசை டைவர்ட் பண்ணு' - நித்யா.

'எப்படி?' - நந்தினி.

'நான் சொல்றது உனக்கு தப்பா தெரியும்... ஆனா இது தான் கரெக்ட்... உன்னோட அறிவுக்கும் ஆற்றலுக்கும் தகுதியான ஆளை தேடு... அவனோட ப்ரண்ட்லியா பேச ஆரம்பி... உன் மனசு தானா ரவி கிட்டேருந்து டைவர்ட் ஆயிடும்... அப்புறம் டைவர்ஸ் பண்ணிடு.' – நித்யா.

அலுவலக பணி முடிந்து

நித்யா கூறுவது சரியா தவறா என்று யோசித்தவாறே தன் வீட்டினுள் நுழைந்தாள்.

தன் அறையினுள் நுழையும் பொழுது காலில் ஏதோ ஒரு பொருள் இடறியது. அது என்னவென்று பார்த்தாள். அது ரவி கல்லூரியிற்கு எடுத்து செல்லும் பை. அந்த பை திறந்திருந்ததால் அது அவளின் காலில் இடறி உள்ளிருந்து ரவி தேர்வு எழுதிய விடை தாள்கள் வெளியே விழுந்தன. அதை எடுத்து பார்த்தாள். அனைத்து தேர்வு தாள்களிலும் ஐம்பதிற்கு ஐந்து மதிப்பெண்ணை தாண்டவில்லை.

"விட்டு பிரியணும்னு நீ நெனைச்சா உன் மனசு குற்ற உணர்வை ஏற்படுத்தும்... கூட இருந்தா இவரை டைவர்ஸ் பண்ணிட்டு வேற நல்ல வாழ்க்கையை அமைச்சு இருந்திருக்கலாமேன்னு தோணும்... இது ஒரு ட்ராப்...” என்று நித்யா கூறிய வார்த்தைகளை யோசித்து பார்த்தாள். நந்தினியின் மனது ரவியை விவாகரத்து செய்வதற்கு இடம் கொடுக்கவில்லை என்றாலும் அவள் வலுக்கட்டாயமாக எப்படியாவது அவனை விட்டு விலகி வேறு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தனக்குள் விதைத்தாள்.

அன்று பகல் நேர பணி என்பதால் ரவி மாலை வேளை மென் பொருள் வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்பினான். இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்தான்.

அவனைப் பார்த்தவுடன் எப்படி இவனை விட்டு விலகி செல்வது, நித்யா கூறுவதை மனப் பூர்வமாக நம்பி செயல் படுவதா இல்லை நமக்கு இந்த ஜென்மத்தில் இது தான் வாழ்க்கை என்று வாழப் பழக்கி கொள்வதா என்று குழம்பிக் கொண்டிருந்தாள். இந்த குழப்பத்தால் அவனிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். ரவி அவளை பார்த்துவிட்டு

'ஏன் டல் லா இருக்க?’ என்று கேட்டுவிட்டு அவள் பக்கத்தில் அவனினுடைய விடை தாள்களை பார்த்தான்.

'ப்ப்ச்...' என்ற சப்தத்துடன் அந்த தாள்களை வேகமாக எடுத்து தன் கல்லூரி பையினுள் வைத்தான். தன் உடைகளை மாற்றிக் கொண்டு அமைதியாக படுத்து உறங்க தொடங்கினான். அவனுடைய இந்த செய்கையை பார்த்து அவளிற்கு லேசாக கோவம் எட்டிப் பார்த்தது. தான் அவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து பேசுவான் என்று சில நொடிகள் நம்பி பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அப்படியே படுத்தாள். தூக்கம் வரவில்லை என்பதால் தன் வாழ்க்கையை பற்றிய தீவிர யோசனையில் மூழ்கினாள். இப்படியே சிந்தித்தவாறு சில மணி நேரங்கள் கழிந்தன. திடீரென்று எழுந்து அவனை உலுக்கினாள்.

அவனும் பதட்டமாக எழுந்து குமிழை அழுத்தி, மின் விளக்கை ஒளிர்த்தி, அவளிடம்

'என்னாச்சு?' என்று பதட்டமாக கேட்டான்.

'ஏன் தூங்கறீங்க?' என்று கேட்டாள் நந்தினி. அவள் கேள்வியை கேட்டவுடன் மெதுவாக கடிகாரத்தை பார்த்தான். மணி 3 .௦௦. பிறகு அவளை பார்த்து

'நல்லா தூங்கிட்டு இருக்கறவனை எழுப்பி கேக்கற கேள்வியா இது?... அது என்ன எப்போ பாத்தாலும் நைட் மூணு மணிக்கே எழுப்பற?' என்று கேட்டான்.

'எனக்கு தூக்கம் வர மாட்டேங்குதே...' என்றாள் நந்தினி.

'ஏன்?' என்று கேட்டுவிட்டு சில நொடிகள் மெளனமாக பார்த்த ரவி

'புரிஞ்சிடுச்சு... நான் என்ன பண்ணட்டும்... நல்லா தான் படிச்சிட்டு போனேன்... என்னால முடிஞ்ச அளவுக்கு எழுதினேன்... ஆனா கம்மியா தான் மார்க் வருது... இதுக்கு தான் சொன்னேன்... இதெல்லாம் எனக்கு செட் ஆகாதுன்னு' என்று கூறியவுடன், பதிலுக்கு பேச நினைத்த நந்தினியை கையமர்த்தி ரவி

'தெரியும்... நமக்குள்ள ஒத்து வராது... நாம டைவர்ஸ் பண்ணிக்கலாம்... இதான சொல்ல போற... இதோ பார் நாம ஒன்னும்...' என்று சொல்லி முடிப்பதற்குள் நந்தினி அவனை கையமர்த்தி

'தெரியும்... நாம ஒன்னும் பி.ஈ படிக்கறதுக்காக பொறக்கலை... அப்படியே இந்த உலகத்தை ரசிச்சுகிட்டே வாழறதுக்கு தான் பொறந்திருக்கோம்... இத தான சொல்ல போற...' என்று அவள் கூறியவுடன் அவன்

'அப்போ ஏன் என்னை கல்யாணம் பண்ணிகிட்டே?... வேற எவனாவது நுனி நாக்கு இங்கிலீஸ் பேசிகிட்டு லட்சம் லட்சமா சம்பாதிக்கறவனை பண்ணிருக்க வேண்டியது தானே.' என்று கத்தினான்.

'சும்மா கத்தாதே... என் தப்பு தான்... உன்னோட சம்பாத்யத்தையும் வேலையையும் பத்தி யோசிக்காம, மனசுக்கு பிடிச்சிருந்தா போதும்னு நெனச்சு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் பாரு... என் தப்பு தான்... நீ என்னோட கனவை எல்லாம் நிறைவேத்தி என்னை ஆச்சர்ய படுத்திக்கிட்டே இருப்பேன்னு உன்னை ஒரு ஹீரோ மாதிரி நெனச்சேன் பாரு அது என் தப்பு தான்...' என்று சொல்லும் போது அவள் கண்களில் நீர் சுரந்தது. ரவி அவளை தொட்டு ஆசுவாச படுத்த முயற்சி பண்ணும் பொழுது நந்தினி அருவெறுப்புடன்

'என்னை தொடாத... பொண்டாட்டிக்கு பாதுகாப்பு உணர்வை கொடுக்கறவன் தான் உண்மையான ஆம்பளை... ஐயோ இவனை போய் கல்யாணம் பண்ணி கிட்டோமேன்னு நினைக்க வெக்கறவன் உண்மையான ஆம்பளையே கிடையாது... இதையெல்லாம் நினைச்சு பாக்கும் போது என்னை இவளோ தூரம் உசத்திவிட்ட என்னோட நம்பிக்கையெல்லாம் குறைஞ்சிடுது...' என்று கூறும் போது

'நான் என்ன பண்ணினா உனக்கு என் மேல நம்பிக்கை வரும்.' என்று கேட்டான் ரவி.

'உன்னால முடிஞ்சா வேற கம்பெனில இன்டர்வ்யூ அட்டண்ட் பண்ணி ஒரு வேலையை வாங்கிட்டு வா... அப்போ எனக்கு உன் மேல நம்பிக்கை வரும்.' என்றாள்.

'அவ்வளோ தானே... பாரு... ஏதாவது கம்பெனில ஆஃபர் லெட்டர் வாங்கிட்டு வந்து தான் உன்னோட பேசுவேன்... அதுவரைக்கும் உன்னோட பேச மாட்டேன்... நீயும் பேசக் கூடாது... இது சத்தியம்... இப்போ தயவு செஞ்சு தூங்க விடு...' என்று போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு 'அப்பா சாமி... ஆள விடு.' என்று முனகிக் கொண்டே படுத்தான்.

அழுத்தமே இல்லாத அவனின் பேச்சை கேட்டு இன்னும் விரக்தி தான் அவளிடம் அதிகரித்தது.

மறுநாள்

அவளுடைய அலுவலகத்தில் அதே குழப்ப மன நிலையில் பணி புரிந்து கொண்டிருக்கும் போது சங்கீதா அவளருகில் வந்து

'நந்து ... ஒரு ப்ரெசென்ட்டேஷன் இருக்கு... செமினார் ஹாலுக்கு வா...' என்று கூட்டிச் சென்றாள். கருத்தரங்கிற்கு போகிற வழியில் சங்கீதா நந்தினியிடம்

'நாளையிலிருந்து அஞ்சு நாள் நான் லீவுடி... என்னோட வொர்க் டீடைல்ஸ் எல்லாம் உனக்கு மெயில் பண்ணிருக்கேன்... சப்போர்ட் டீம்லேருந்து கால் வந்துச்சுனா... கொஞ்சம் ஹெல்ப் பண்ணு.' என்று உதவி கோரினாள்.

நந்தினி தலையசைத்து ஆமோதித்தவாறே

'என்னடி ஃபியான்ஸி கூட டேட்டிங்கா' என்று கேட்டவுடன் சங்கீதா புன்னகைத்தாள். இருவரும் சிரித்துக் கொண்டே கருத்தரங்கினுள் நுழைந்தனர்.

கருத்தரங்கு கூடத்தில் ஒளிகாட்டியை பயன் படுத்தி ஒருவன் தன்னுடைய கருத்துகளை பார்வையாளர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது

'ரவியோட சண்டை போடும் போது மட்டும் கோவத்துல இவரை டைவர்ஸ் பண்ணிடணும்ன்ற எண்ணம் வருது, அப்புறம் கோவம் கரஞ்சிட்ட பிறகு டைவர்ஸ் பத்தி யோசிக்கறதை என் மனசு விரும்ப மாட்டேங்குது... இதுவரைக்கும் நான் எடுத்த முடிவெல்லாம் கரெக்ட்டா தான் அமைஞ்சிருக்கு... ஏன் என் கல்யாண விஷயத்துல மட்டும் இந்த குழப்பம்?...' என்று தன்னை தானே வினவிக் கொண்டே நந்தினி தன் வாழ்க்கை பற்றிய யோசனையில் மூழ்கியிருந்ததால் அந்த கருத்தரங்கில் கவனம் செலுத்தாமல் இருந்தாள். சில நிமிடங்களுக்கு பிறகு

'ஹே... நந்து... அவரு உன்ன தான் கேக்கறாரு ' என்று சங்கீதா தன்னை தொட்டு கூப்பிடுவதை உணர்ந்தாள்.

'மேம்... ஐ யாம் ஆஸ்கிங் யு மேம்..' என்று குரல் ஒலி பெருக்கியில் ஒலித்துக் கொண்டிருக்க,

நந்தினி சங்கீதாவை பார்த்து விட்டு, லேசான பதட்டத்துடன் எழுந்து நின்று அந்த கருத்தரங்கு மேடையில் இருக்கும் நபரை பார்த்தாள்.

அந்த நபர் சிரித்தவாறு

'தாங்கள் எனக்கு இவ்வளவு மரியாதை தர வேண்டாம்... நீங்கள் அமர்ந்தவாறே பதில் அளிக்கலாம்.' என்று ஆங்கிலத்தில் நகைத்துக் கொண்டே அவளிடம் தொழில் நுட்பம் சம்மந்தமான கேள்வியை கேட்டார்.

அவளும் அமர்ந்தவாறே அந்த நபர் கேட்ட கேள்விக்கு பதில் என்ன சொல்வது என்று யோசித்தவாறே அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளிடம் பதில் வராததால்

'நான் இந்த உடையில் நன்றாகா இருக்கிறேன் என்று நினைக்கிறேன்... என்னை பார்த்துக் கொண்டிருப்பதால் தான் அவர்களால் விடையளிக்க முடியவில்லையோ?' என்று அவர் நகைச்சுவையாக ஆங்கிலத்தில் கூற, அந்த கருத்தரங்கு கூடத்தில் அமர்ந்திருந்த கூட்டத்தில் லேசான சிரிப்பு சத்தம். பிறகு

'இட்ஸ் ஓகே... லெட் மீ கன்டின்யூ.' என்று அவர் கூட்டத்தை பார்த்து பேசத் துவங்கினார்.

உடனே நந்தினி மெல்லிய குரலில் சங்கீதாவிடம்

'யாரு டி இந்தாளு?' என்று கேட்டாள்.

'இந்தாள் பேரு பிரகாஷ்... அசிஸ்டென்ட் ஜெனெரல் மானேஜர்... வெறும் முப்பது வயசு தான் ஆகுது... செம மண்டை... நம்ம கம்பெனில வர ப்ராஃபிட்ல இவரோட பங்கு ரொம்ப அதிகம்... வந்த அஞ்சு வருஷத்துக்குள்ள ஒரு பெரிய க்லைண்ட பிடிச்சு அவங்களோட மேஜர் ப்ராஜெக்ட்ஸ் எல்லாத்துக்கும் நம்ம கம்பெனியே சப்போர்ட் பண்ற மாதிரி பண்ணிட்டார்... இன்னும் பத்து வருஷத்துல இந்த கம்பெனியோட சி.யீ.ஓ வா ஆகறத்துக்கு இவருக்கு நிறைய சான்ஸ் இருக்குனு எல்லாரும் பேசிக்கறாங்க...’ என்று கூறிவிட்டு கருத்தரங்கில் கவனத்தை செலுத்த தொடங்கினாள் சங்கீதா.

'ப்ப்ச்... இவ ஒருத்தி... என் புருஷனை தவிர எல்லாரையும் போற்றி புகழ்ந்துகிட்டே இருப்பா.' என்று கூறிவிட்டு கருத்தரங்கில் கவனத்தை செலுத்தினாள்.

அப்போது அவளின் கைபேசி ஒலித்தது. சட்டென்று அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு அந்த கருத்தரங்கு கூடத்தை விட்டு வெளியே வந்தாள்.

'ஹலோ.' - நந்தினி.

மறுமுனையில்

'நான் நித்யா பேசறேன்... இன்னிக்கு ஹோட்டல் விஜய் பார்க் இன்னுக்கு வந்துடு... சங்கீதாவையும் கூட்டிகிட்டு வா.' என்றாள் நித்யா.

'என்ன விஷயம்?' - நந்தினி.

'நெக்ஸ்ட் வீக் நான் ஆஸ்திரேலியா போறேன்... அதான் சும்மா என் க்ளோஸ் ப்ரன்ஸோட ஒரு கெட் டுகெதர் ப்ளான் பண்ணிருக்கேன்... சரி... அப்புறம் உனக்கு பிடிச்ச மாதிரி யாராவது மாட்னாங்களா?' -நித்யா.

'ப்ப்ச்... இப்போ செமினார் ஒன்னு அட்டண்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்... இன்னிக்கு ஈவ்னிங் ஹோட்டல்ல பேசிக்கலாம்.' என்று தொடர்பை துண்டித்தாள் நந்தினி.

விஜய் பார்க் இன் விடுதியில் நந்தினி நித்யா சங்கீதா மற்றும் அவர்களுடைய தோழிகளும் உணவருந்திக் கொண்டிருந்தார்கள்.

வழக்கம் போல் நந்தினி சிந்தனையில் மூழ்கி இருக்க,

'செம பஃபட் மீள் (Buffet meal)... தேங்க்ஸ் பாஃர் தி ட்ரீட் டீ.' என்று பக்கத்தில் அமர்ந்திருந்த சங்கீதா நித்யாவிடம் தன் நன்றியை தெரிவிக்கும் சத்தம் கேட்டு தன் சிந்தனையிலிருந்து வெளியே வந்தாள் நந்தினி.

நித்யா சங்கீதாவிடம் சம்பிரதாயமான புன்னகையை வெளிப்படுத்திவிட்டு நந்தினியை பார்த்து

'ஹே... பீ ஹியர் டி... சும்மா கண்டதை யோசிச்சுகிட்டு இருக்காதே... ஜஸ்ட் என்ஜாய் தி பூஃட்... சிக்கன் மங்கோலியன்னு ஒரு ஸ்பெஷல் டிஷ்... போய் அதை டேஸ்ட் பண்ணு.' என்று கூறியவுடன் நந்தினி நித்யா கூறிய உணவு வகை பக்கம் சென்று அதை பரிமாறிக் கொள்ள கரண்டியை எடுக்க முற்படும் பொழுது சட்டென்று இன்னொருவர் அந்த கரண்டியை எடுத்தார். அவர் யாரென்று பார்த்தாள் நந்தினி. அவர் கருத்தரங்கை நடத்திய பிரகாஷ். அவரும் அவளைப் பார்த்து 'மன்னிக்கவும் நீங்கள் போட்டுக் கொள்ளுங்கள்' என்று ஆங்கிலத்தில் கூறினார். அவளும் சம்பிரதாயமாக

'இட்ஸ் ஓகே.' என்றாள்.

அவர் அந்த உணவை தனக்கு பரிமாறிவிட்டு யோசனையாய் நந்தினியை பார்த்து 'நான் கருத்தரங்கில் கேள்வி கேட்ட பெண் நீங்கள் தானே' என்று ஆங்கிலத்தில் கேட்டார். அவளும் சம்பிரதாயமான புன்னகையுடன் 'ஆமாம்' என்றாள்.

'ஓ...' என்று புன்னகைத்தவாறே பிரகாஷ் அந்த உணவை அவளுக்கு பரிமாற முற்படும் பொழுது

'இட்ஸ் ஓகே... நானே போட்டுக்கறேன்.' என்றாள்.

'நாட் ய ப்ராப்லம்.' என்று அவர் அவளுக்கு பரிமாறிவிட்டு

'போதுமா...' என்று கேட்டார்.

அவளும் புன்னகைத்த வாறே 'ம்ம்ம்... போதும்.' என்றாள்.

இருவரும் உணவு தட்டை ஏந்தி நடந்தவாறே பேசத் தொடங்கினர்.

அவர் தான் இந்த விடுதியில் தங்கி இருப்பதாக கூறிவிட்டு, பிறகு தான் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தால் அலுவலக வேலைகளை சுத்தமாக மறந்துவிட்டு தனக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துவார் என்றும் தனக்கு பிடித்த விஷயங்களில் உணவு அருந்துவதும் ஒன்று என்றும் சகஜமாக பேசத் தொடங்கினார்.

நந்தினியும் தன் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி என்பதால் சம்பிரதாயமாக அவர் சொல்லும் விஷயங்களை செயற்கை சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள். உலக அரசியல் உள்ளூர் அரசியல் சினிமா என்று அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்த பிறகு தன் குடும்பத்தை பற்றி பேசத் தொடங்கினார். தன் தாயார் தான் தனக்கு ஒற்றை பெற்றோர் என்றும் தனக்கு தீவிரமாக பெண் தேடிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். தன் வருங்கால மனைவி உங்களை போல் இருக்க வேண்டும் என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் பொழுது

'தன் மீது விருப்பம் கொள்கிறாரோ?' என்று அவரின் எண்ணத்தை யூகித்தாள் நந்தினி. சட்டென்று

'சாரி சார்... இட் வாஸ் நைஸ் டாக்கிங் டு யூ... எனக்கு டைம் ஆயிடிச்சு... என் ஹஸ்பண்ட் எனக்காக வைட் பண்ணிக்கிட்டு இருப்பார்.' என்று கூறினாள். அவரும் செயற்கையாக புன்னகைத்து விட்டு

'இட்ஸ் ஓகே... பை.' என்று விடை பெற்றுக் கொண்டார்.

அவருடன் விடை பெற்றுக் கொண்டு நித்யாவின் பக்கத்தில் அமர்ந்தாள்.

நித்யா அவளிடம்

'என்ன ரொம்ப நேரமா ஆளையே காணோம்?' என்று லேசான நகைப்புடன் கேட்டாள்.

'அவர் எங்க கம்பெனில...' என்று சொல்ல முற்பட்ட நந்தினியை நித்யா கையமர்த்தி

'தெரியும்... அவரை பத்தி சங்கீதா எல்லாத்தையும் சொல்லிட்டு இப்போ தான் கிளம்பி போறா... ம்ம்ம்... என்ன அவரை பிடிச்சிருக்கா?' என்று நகைப்புடன் கேட்டாள்.
​
 

நந்தினி தனது தீவிரத்தை முகத்தில் வெளிப்படுத்தி கண்களை மூடி ஒரு பெரு மூச்சை விட்டு, நித்யாவை பார்த்து

'இதோ பார் அவர் மொதல்ல பாஃர்மலா பேசறதா தான் நெனச்சேன்... அப்புறம் அவர் தனக்கு வர போற மனைவி உங்கள மாதிரி இருக்கணும்னு சொல்லும் போது எனக்கு கல்யாணம் ஆனது தெரியாம பேசறார்னு புரிஞ்சுது, அதான் "எனக்கு டைம் ஆயிடிச்சு... என் ஹஸ்பண்ட் எனக்காக வைட் பண்ணிக்கிட்டு இருப்பார்"னு எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சு நீங்க வேற ஆளை பாருங்கன்றதை மறைமுகமா சொல்லி அந்த கான்வெர்சேஷனை கட் பண்ணிட்டு வந்தேன்.' என்றாள்.

நித்யாவும் 'ப்ப்ச்..' என்ற சப்தத்துடன் விரக்தியாக வேறு புறம் திரும்பி பிறகு அவளை பார்த்து

'அப்படியே அந்த கான்வெர்சேஷனை வளர விட்டிருக்க வேண்டியது தானே... நல்ல சான்ஸை வேஸ்ட் பண்ணிட்டியே.' என்றாள்.

நந்தினி அவளை விரக்தியாக பார்த்து

'என்ன நல்ல சான்ஸ்?... இது நல்லாவா இருக்கு?... இப்படி பண்றதுக்கு என் மனசு இடம் கொடுக்காது... என்னோட தன்னம்பிக்கையோட கருவே "நான் நியாயமானவள்... நான் ஒழுக்கமானவள்... எந்த சூழ்நிலையிலும் நான் நம்ம கலாச்சாரத்தை மீறி நடக்க மாட்டேன்"னு என்னை பத்தி நான் கற்பனை பண்ணி வெச்சிருக்கறது தான்... இத உடைக்க சொல்றியா?' என்று கேட்டாள்.

'ஸம் டைம்ஸ் யூ ஹாவ் டு பிரேக் யுவர் ஓல்ட் ஐடியாலஜி அண்ட் மாடிஃபை இட் நந்து... நான் ஒன்னும் உன் புருஷனுக்கு தெரியாம கள்ள தொடர்பு வெச்சிக்க சொல்லலை... நாம இந்த உலகத்துல பொறந்ததே சந்தோஷமா வாழ்ந்துட்டு மனதிருப்தியோட இந்த வாழ்க்கையை விட்டு போகறதுக்கு தான்... நான் வருணை லவ் பண்ணினேன்... அவன் கேரக்டர் சரியில்லை... அவனுக்கு என்னோட ட்ரூ லவ்வை வேல்யூ பண்ண தெரியலை... அதனால அந்த ரிலேஷன்ஷிப்பை கட் பண்ணிட்டு எனக்கு பொருத்தமான ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... இது தப்பா... நான் நம்ம கலாச்சாரத்தை மீறிட்டேனா?...சரி இத விடு..' என்று கூறிவிட்டு சுற்றும் முற்றும் தனது பார்வையை படரவிட்டு, பிறகு நந்தினியை பார்த்து பேசத் தொடங்கினாள்.

'நம்ம ப்ரண்ட் சங்கீதாவையே எடுத்துக்கோ... அவ எவ்வளோ பசங்களோட ஊர் சுத்தியிருக்கானு உனக்கே தெரியும்... இப்போ பாரு நல்ல ஸேஃப்பான வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருக்கா... அப்போ இவ என்ன ஒழுக்கம் கெட்டவளா?... "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்" அப்புறம் "புருஷன் எப்படி பட்டவனா இருந்தாலும் சகிச்சிக்கிட்டு வாழறது தான் ஒரு பொண்ணுக்கு அழகு" னு சொல்றதெல்லாம் ஆண் ஆதிக்கத்தோட வெளிப்பாடு... ஏன்... நம்ம நாட்ல ராஜஸ்தான் பக்கம் இருக்கற ஒரு கிராமத்துல ஒரு பொண்ணு ரெண்டு புருஷனை கல்யாணம் பண்ணிக்கறது அவங்களோட கலாச்சாரம்னு ஒரு பத்திரிகைல படிச்சேன்...... இந்த கலாச்சாரம் ன்றது ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு மாறற ஒரு விஷயம்... நம்மளோட சந்தோஷத்தை கெடுத்துகிட்டு அப்படி ஒன்னும் கலாச்சாரத்தை பாலோவ் பண்ணனும்னு கட்டாயம் கிடையாது.' என்றாள்.

நந்தினி பேச ஆரம்பித்தாள்.

'நான் சிக்ஸ்த் வரைக்கும் நல்லா படிக்காத பொண்ணு... க்ளாஸ்லியே நான் தான் லாஸ்ட் வருவேன்... யாரும் என்னோட சரியா பேசமாட்டாங்க... ஒரு நாள் எங்கப்பா அவரு ப்ரண்டோட பேசிகிட்டு இருக்கும் போது "நியாயமா நேர்மையா மத்தவனுக்கு துரோகம் செய்யாம இருந்தாலே போதும் கடவுள் நமக்கு நல்லது தான் செய்வார்... யார் உதவியையும் எதிர் பாத்து வாழ வேண்டாம் "னு சொல்லிக்கிட்டு இருந்தாரு... அவர் எதுக்காக அப்படி சொன்னாருன்றது எல்லாம் எனக்கு தெரியாது... என்னை மாத்துன ஸ்பார்க் அதுதான்... அன்னிலேருந்து அந்த வார்த்தைகளை கருவா வெச்சு நான் செயல் பட ஆரம்பிச்சேன்... எனக்கு நல்லது தான் நடந்துகிட்டு இருக்கு... அந்த ஐடியாலஜி மேல எனக்கு சின்ன வயசுலேருந்து நம்பிக்கை இருக்கறதுனால நானே என்னோட ஐடியாலஜியை மாத்திக்கணும்னு நெனச்சாலும் அது என்னை விடாது...' - நந்தினி.

'உன்னோட அந்த ஐடியாலஜி உன்னோட தனி பட்ட வாழ்க்கைக்கு வேணும்னா நல்லது பண்ணிருக்கலாம்... ஆனா கல்யாண வாழ்க்கைக்கு நல்லது பண்ணுதா?... உன்னோட நல்லதுக்காக உன் வாழ்க்கை தத்துவத்தை கொஞ்சம் மாத்திக்கறது ஒன்னும் தப்பில்ல... ஒரு பாத்திரத்துக்குள்ள தண்ணியை நிரப்பி அதுல ஒரு தவளையை போட்டு கொதிக்க வெச்சா அந்த தவளை "இந்த சூடை என்னால தாங்க முடியும்"னு அந்த பாத்திரத்துக்குள்ளேயே இருக்கும்... அது நெனச்சிருந்தா அப்போ இருக்கற உடல் வலிமையை வெச்சு வெளியே எகிறி குதிச்சிருக்கலாம்... ஆனா அது அப்படி பண்ணாம... தன்னால முடிஞ்ச அளவு பொறுத்துகிட்டு அந்த பத்திரத்துக்குள்ளேயே தான் இருக்கும்... ஒரு கட்டத்துல அதோட உடல் வலிமை குறைஞ்சு போய் அதனால சூடு தாங்க முடியாம வெளியே குதிச்சிரலாம்னு முயற்சி பண்ணும் போது அதனால முடியாது... அதுக்கு காரணம் "பொறுமையா இருந்தா நல்லதே நடக்கும்"ன்ற அது நம்பின வாழ்க்கை தத்துவம் தான்... இப்படியே நீ "நியாயமா நடந்தா நல்லதே நடக்கும்"னு சகிச்சிக்கிட்டு பொறுத்து கிட்டு இருந்தியான்னா இன்னும் பத்து வருஷம் கழிச்சு உன்னோட மன வலிமை குறைஞ்சிருக்கும்... நான் என் குடும்பம் குழந்தைங்கன்னு பிஸியா இருப்பேன்... அப்போ இந்தளவுக்கு உன்னோட அன்னோன்யமா நான் பேச முடியுமான்னு தெரியாது... அப்போ யாராலையும் உன்னை காப்பாத்தவும் முடியாது... உன்னோட வீழ்ச்சிக்கு உன்னோட நம்பிக்கையே காரணாமாயிடும்... அப்புறம் உன் இஷ்டம்.' - நித்யா.

சில நொடிகள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி சிந்தித்து பார்த்தாள் நந்தினி. தயக்கமாக நித்யாவிடம்

'சரி இப்போ நான் என்ன பண்ணட்டும்... சரியான முடிவை எடுக்கற நிலையில என் மனசு இல்ல.' என்றாள்.

'அதான் அந்த கசப்பு மாத்திரை டெக்னீக் சொன்னேனே... ரவியை டைவர்ஸ் பண்ணிட்டு பிரகாஷை கல்யாணம் பண்ணிக்கோ. ... இது கேக்கறதுக்கு கசப்பா தான் இருக்கும்... ஆனா இது தான் உன்னை தீராத மன நோயிலேருந்து காப்பாத்த போற கசப்பு மாத்திரை.' - நித்யா.

'அதான் அவரை அப்ரப்டா கட் பண்ணிட்டு வந்துட்டேனே... அப்புறம் எப்படி அதெல்லாம் நடக்கும்?' - நந்தினி.

'அவர் இந்த ஹோட்டல்ல தானே தங்கிருக்காரு... ரிசெப்ஷன்ல அவர் ரூமுக்கு கால் பண்ண சொல்லி கீழே வர சொல்லுவோம்... நான் பேசறேன்.' - நித்யா.

'ஹே... என்ன விளையாடுறியா?... அவரை கீழ கூப்பிட்டு "இவ என் ப்ரண்டு ... கல்யாணம் ஆயிடுச்சு... ஆனா அவளுக்கு கல்யாண வாழ்க்கை சரியா அமையலை... அதனால நீங்க அவளை கல்யாணம் பண்ணிக்கோங்க"னு சொன்னா நல்லாவா இருக்கும்... ப்ளீஸ் நித்யா... நீ என் மேல இவ்வளவு அக்கறை காட்டுனதுக்கு ரொம்ப தேங்க்ஸ்... நான் வேற கல்யாணம் பண்ணிக்கனும்னு என் வாழ்க்கைல எழுதியிருந்தா அது நிச்சயமா நடக்கும்... சாரி நான் கிளம்பறேன்.' என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானாள் நந்தினி.

'ஹே... சொல்றத கேளு...' என்று கிளம்ப நினைத்தவளை கையமர்த்தி

'நீ ஏன் ஆபிஸ்ல பாத்த பிரகாஷை இங்க பாக்கணும்?... நான் ஏன் இன்னிக்கு அதுவும் பர்டிகுலரா அவர் தங்கி இருக்கற ஹோட்டல்ல ட்ரீட் வெக்கணும்... அவர் ஏன் உன்னை பாத்த கொஞ்ச நேரத்துலியே ப்ரபோஸ் பண்ண ட்ரை பண்ணனும்... ஸம் போஃர்ஸ் ஐஸ் ட்ரையிங் டு லெட் யூ அவுட் ஆஃப் யுவர் ப்ராப்லம்ஸ் நந்து... ஒய் டோன்ட் யூ ரியலைஸ் தட்...' என்று கூறிக் கொண்டிருக்கும் போது நித்யா தன் பார்வையை நந்தினியின் பின்னே சில நொடிகள் பார்த்துவிட்டு, பிறகு நந்தினியிடம் புன்னகைத்தவாறு

'நீ என்ன தான் விலகி போனாலும் உனக்கு நல்லது பண்ற அந்த போஃர்ஸ் உன்னை விடாது போலிருக்கே.' என்றாள்.

நந்தினி புரியாமல்

'என்ன சொல்ற?' என்று கேட்டாள்.

'கொஞ்சம் பின்னாடி திரும்பி பாரு.' என்றாள் நித்யா.

நந்தினியும் திரும்பி பார்த்தாள். அவளை நோக்கி பிரகாஷ் நடந்து வந்து கொண்டிருப்பதை பார்த்தாள்.

'ஏன் அவர் வருகிறார்?' என்ற யோசனையோடு பார்த்துக் கொண்டிருக்கும் போது அவளின் கைபேசி ஒலித்தது. அந்த தொடர்பலை யாரிடமிருந்து என்று தனது கைபேசி திரையில் பார்த்தாள். அது அவளினுடைய தாயார் பத்மாவதியின் அலைபேசி எண். அதை ஏற்றுக்கொள்ள முனைவதற்குள் பிரகாஷ் நந்தினியின் அருகில் வந்து நித்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் பார்வையை நந்தினியிடம் திருப்பி

'உங்ககிட்ட ஒரு பைஃவ் மினிட்ஸ் தனியா பேசணும்.' என்றார்.

உடனே நந்தினி

'எனக்கு கால் வருது... நான் அதை அட்டண்ட் பண்ணிட்டு உங்களோட பேசறேன்.' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது நித்யா

'நான் அதை அட்டண்ட் பண்ணிக்கறேன்... நீ போய் பேசு.' என்று கூறிவிட்டு அவளிடமிருந்து கைபேசியை பற்றிக் கொண்டு நகர்ந்தாள்.

நித்யா அங்கிருந்து விலகி சென்றவுடன் பிரகாஷ் சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு நந்தினியிடம்

'சாரி... உங்களுக்கு கல்யாணம் ஆனது தெரியாம அப்படி பேசிட்டேன்...' என்று கூறிவிட்டு சிறு புன்னகையை உதிர்த்து

'எனக்கு வேற ரொம்ப நாளா பொண்ணு பாத்துகிட்டு இருக்காங்களா... அதுவுமில்லாம இதுவரைக்கும் எந்த பொண்ணும் என் மனசுக்கு பிடிச்ச மாதிரி இல்ல... ஐ பிலிவ் இன் கோயின்ஸிடென்ஸ்... அதான் உங்கள ரெண்டாவது முறை பாத்தவுடனே ஒருவேளை நீங்க தான் எனக்கான துணைனு யோசிக்காம நெனச்சிட்டேன்... ஐ ஆம் சாரி... நீங்க "எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு"னு சொல்லிட்டு போகும் போது ஐ பெஃல்ட் வெரி கில்டி யு நோ... அட்லீஸ்ட் உங்க கிட்ட அபோலொஜெய்ஸ் கேட்டா கொஞ்சமாவது அந்த கில்ட் பீலிங்க்லேருந்து வெளியே வருவேன்னு தோணுச்சு... அதான் மறுபடி வந்தேன்... ஒன்ஸ் அகைன் சாரி...' –பிரகாஷ்.

'இட்ஸ் ஓகே... நீங்க மறுபடி என்னை பாக்கும் போது கில்டியா பீஃல் பண்ணாம நார்மலாவே பேசலாம்... நான் உங்களை தப்பா நினைக்கலை.' என்றாள் நந்தினி.

பிரகாஷும் புன்னகைத்தவாறே

'கில்ட் பீலிங் தானாவே வந்துரும்... அது நம்ம கண்ட்ரோல்ல கிடையாது... எனி ஹவ் டில் ஐ கெட் மேரீட் ஐ வில் நெவெர் ப்ரிபெஃர் இந்தியா பாஃர் தி செமினார்ஸ்... ஓகே... பை.' என்று அவர் விலகி செல்ல முற்படும் பொழுது

'எக்ஸ் க்யூஸ் மீ..' என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

பிரகாஷ் திரும்பி யோசனையாய் நந்தினியை பார்த்தார். நந்தினி தான் கூப்பிடவில்லை என்பதை தலையை பக்கவாட்டில் அசைத்து அவருக்கு உணர்த்தினாள். உடனே

'நான் தான் சார்... கூப்பிட்டேன்.' என்றாள் நித்யா.

நந்தினி, எதற்காக அவள் கூப்பிடுகிறாள் என்ற குழப்பத்துடன் நித்யாவை பார்த்தாள்.

நித்யாவிடம் யோசனையாய் பார்வையை திருப்பிய பிரகாஷ்

'என்ன விஷயம்?' என்று கேட்டார்.

'இவளை பத்தி நான் உங்க கிட்ட பேசணும்.' என்று நித்யா பேசி முடிக்கும் பொழுது நந்தினி குறுக்கிட்டு

'ப்ப்ச்... நித்யா... வேணாம்.' என்று ஒரு முறைப்பாடு கூறி அவளை கையமர்த்தினாள்.

உடனே நித்யா நந்தினியை பார்த்து

'நான் அம்மா கிட்ட எல்லாத்தையும் சுருக்கமா சொல்லிட்டேன்... அம்மாவும் சரினு சொல்லிட்டாங்க... இப்போ பிரகாஷ் கிட்ட கேக்கறது மட்டும் தான் பாக்கி... இந்தா அம்மா லைன்ல தான் இருக்காங்க... நீ அவங்களோட பேசிகிட்டு இரு.' என்று அவளிடம் கைபேசியை கொடுத்தாள்.

நந்தினியின் மனது அந்த சூழ்நிலையை ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறியது.

'வேண்டாம்...' என்று நந்தினி கூறும் பொழுது நித்யா மீண்டும்

'ப்ப்ச்... மொதல்ல அம்மா கிட்ட பேசு.' என்று வலியுறுத்தினாள்.

பிரகாஷ் இவர்கள் உரையாடலை புரிந்துகொள்ள முடியாமல் குழப்பமாக இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்.

'அதான் அந்த கசப்பு மாத்திரை டெக்னீக் சொன்னேனே... ரவியை டைவர்ஸ் பண்ணிட்டு பிரகாஷை கல்யாணம் பண்ணிக்கோ. ... இது கேக்கறதுக்கு கசப்பா தான் இருக்கும்... ஆனா இது தான் உன்னை தீராத மன நோயிலேருந்து காப்பாத்த போற கசப்பு மாத்திரை.' என்று நித்யாவின் வார்த்தைகளை யோசித்து பார்த்தாள் நந்தினி. பிரகாஷையும் நித்யாவையும் தயக்கமாக பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு மெதுவாக நகர்ந்தவாறே கைபேசியை காதில் வைத்தாள்.

'ஹலோ அம்மா...' - நந்தினி.

'நித்யா எல்லா விஷயத்தையும் சுருக்கமா சொன்னா... எனக்கு ஓகே தான்... இது தப்பு ஒன்னும் கிடையாது... இது அந்த காலத்துலேருந்தே நடந்துகிட்டு இருக்கற ஒரு விஷயம் தான்... பிரகாஷ் ஒத்துக்கிட்டாருன்னா ரவியை விவாகரத்து பண்ணிட்டு அவரை கல்யாணம் பண்ணி செட்டில் ஆகற வழிய பாரு.' - பத்மாவதி.

'அவர் எப்படி பட்டவரு?... அவரோட பேமிலி எப்படி? ன்னு ஒண்ணுமே அலசி ஆராயாம எப்படி நீ பிரகாஷை கல்யாணம் பண்ணிக்க சொல்ற?.' - நந்தினி.

'ரவி யை நீ கல்யாணம் பண்ணிக்கறது சரின்னு எனக்கு மொதல்லேருந்தே தோணலை... ஆனா நித்யா என்கிட்டே பிரகாஷ் பத்தி சொல்லும் போது இவர் தான் என் பொண்ணுக்கு ஏத்தவர்னு என் மனசு சொல்லிச்சு...' - பத்மாவதி.

'அம்மா இப்படி பண்ணினா ஊரு உலகம் நம்மள பாத்து கேலி பண்ணும்... ' - நந்தினி.

'ஊரு உலகத்தை பத்தி எனக்கு கவலை இல்ல... எனக்கு என் பொண்ணோட வாழ்க்கை தான் முக்கியம்... அடுத்து உன் தங்கச்சி பைனல் இயர் படிச்சுக்கிட்டு இருக்கா... இன்னும் ரெண்டு வருஷத்துல அவளுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுடுவோம்... அவ எந்த மாதிரி மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கணும்ன்றதுல தெளிவா இருக்கா... ரவியோடையே உன் வாழ்க்கையை தொடர்ந்தியான்னா பிற்காலத்துல உன் தங்கச்சியோட வாழ்க்கையை பாத்து பொறாமை பட்டுக்கிட்டு இருப்ப... நீ வாழ்க்கைல பண்ணின தப்பை திருத்திக்கறதுக்கு இது தான் நல்ல சான்ஸ்... இதை விட்டுட்டா அப்புறம் கிடைக்குமான்னு தெரியாது... உங்க அப்பாவுக்கும் ரவியையும் ரவியோட பாஃமிலியையும் பிடிக்கலை... நிச்சயமா உங்க அப்பாவும் இந்த விஷயத்துக்கு சம்மதிப்பாரு... நித்யா சொல்ற படி செய்... எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம பிரகாஷோட பேசு... நான் அப்புறமா உனக்கு கால் பண்றேன்' என்று அலைபேசியின் தொடர்பை துண்டித்தாள் பத்மாவதி.

நந்தினி அவர்கள் இருவரையும் நெருங்கும் போது

'எனக்கு ஒன்னும் இல்ல... பட்... என் அம்மாவுக்கு நான் ஒரே பையன்... அவங்கள மட்டும் கன்வின்ஸ் பண்ணினா போதும்...' என்று பிரகாஷ் பேசிக் கொண்டிருப்பது அவளின் காதில் விழுந்தது. நந்தினி அவர்கள் பக்கத்தில் சென்று நின்றவுடன், இருவரும் உரையாடுவதை நிறுத்தி நந்தினியிடம் பார்வையை திருப்பினார்.

நித்யா நந்தினியிடம்

'பிரகாஷ் கிட்ட நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்... இப்போ நீங்க ரெண்டு பேரும் கலந்து பேசி முடிவெடுக்கறதுல தான் இருக்கு...' என்றாள்.

நந்தினியிற்கு தன் எண்ணங்களை ஆட்டுவிக்கும் கருவையே கண்மூடி தனமாக நம்புவதா இல்லை நித்யா கூறுவது போல கசப்பான எண்ணத்தை விதைத்து அந்த கருவின் தன்மையையே மாற்றுவதா? என்று குழப்பமான மன நிலையிலேயே இருந்தாள்.

நித்யா சில நொடிகள் அவளை பார்த்துவிட்டு பிரகாஷிடம் பார்வையை திருப்பி

'நீங்க ரெண்டு பேரும் தனியா பேசுங்க... நான் ஒரு 15 மினிட்ஸ் கழிச்சு வரேன்' என்று அங்கிருந்து நகர்ந்தாள்.

நந்தினி பிரகாஷை பார்க்காமல் தலையை கீழே குனித்தவாறு யோசித்துக் கொண்டிருந்தாள்.

சில நிமிடங்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல் மௌனமாகவே நின்றுக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லலாம் என்று முடிவெடுத்து நந்தினி நகர முற்படும் பொழுது பிரகாஷின் அலை பேசி ஒலித்தது. அவர் அந்த அலைபேசியின் அழைப்பை ஏற்றுக் கொண்டு

'ஹலோ... அம்மா.' என்றார்.

.....

'ம்ம்ம்....' - பிரகாஷ்.

....

'போஃட்டோ வ அப்புறமா அனுப்பறேன்... அவங்க பக்கத்துல தான் நிக்கறாங்க.' - பிரகாஷ்.

அப்படி பிரகாஷ் கூறியதை காதில் வாங்கி கொண்ட நந்தினி யோசனையாய் அவரை பார்த்தாள்.

பிரகாஷும் அலைபேசியின் ஒலிகடத்தியை தன் கையால் மூடியவாறு நந்தினியை நெருங்கி

'அம்மா லைன்ல இருக்காங்க... அவங்க "என்னடா இந்தியால உனக்கு பிடிச்ச மாதிரி பொண்ணை பாத்தியா?... அப்படியிருந்தா சொல்லு உடனே கல்யாணம் பண்ணி வெச்சிடறேன் "னு சொன்னாங்க... நானும் ஆமாம் ஒரு பொண்ண பிடிச்சிருக்கு பக்கத்துல தான் நின்னுகிட்டு இருக்காங்கனு சொல்லிட்டேன்... அவங்க உங்க கிட்ட பேசணும்னு சொல்றாங்க... இந்தாங்க' என்று தன் அலை பேசியை நந்தினியிடம் நீட்டினார்.

இவ்வளவு நாள் தன்னை உயர்த்திய கருவை திருத்தி எழுத அவள் மனது இசையவில்லை. எனினும் நித்யா கூறிய கசப்பு மாத்திரை உத்தியும் அவ்வப்போது நினைத்துப் பார்த்தாள். முதலில் செயல் வடிவில் மாற்றத்தை வலு கட்டாயமாக திணிப்போம். போக போக தானாக கரு என்னுடைய செயலுக்கேற்ப அது தன்னை மாற்றி கொள்ளும் என்று அந்த நொடிப் பொழுதில் முடிவெடுத்து பிரகாஷிடமிருந்து அந்த அலைபேசியை வாங்கி

'ஹலோ...' என்றாள்.

மறுமுனையில் "வாவ்" என்று ஆண்கள் பெண்கள் என கும்பலாக கத்தும் சத்தம் கேட்டது. நந்தினி, ஒன்றும் புரியாமல் மறுமுறை 'ஹலோ' என்று அழுத்தமாக சொன்னாள்.

மறுமுனையில்

'வாவ்... யுவர் ஏஞ்சல்ஸ் வாய்ஸ் ஐஸ் ஸோ சுவீட்.' என்று ஒரு ஆங்கில பெண்ணின் குரல் கேட்டது.

'கங்ராட்ஸ்... அட்லாஸ்ட் யூ டிட் இட் அவந்திகா.' என்று ஒரு ஆங்கிலேயரின் குரல் கேட்டது.

'நவ்... ஐ திங்க் ஷீ மஸ்ட் ஹாவ் மிஸ்டிபைஃட்... ஆல் ஆஃப் யூ ப்ளீஸ் கீப் க்வைட்... ஐ வில் டாக் டு மை ஏஞ்சல்.' என்று ஒரு பெண்மணியின் குரல் கேட்டது.

நந்தினி பிரகாஷை பார்த்து தனது கையில் இருந்த அவருடைய அலைபேசியை யோசனையாய் கொடுத்தாள். சந்தேகமாய் வாங்கி கொண்ட பிரகாஷ், அலைபேசியை காதில் வைத்துக் கொண்டு

'ஹலோ... வாட் ஹாப்பென்ட்...' என்று கேட்டார்.

‘….’

'ஓஹ்...ஓகே... ஐ வில் கிவ் இட் டு ஹெர் அகைன்.' என்று நந்தினியிடம்

'அம்மா... அவங்க ப்ரண்ட்ஸோட ஒரு கெட் டுகெதர் ல இருக்காங்க... எனக்கு ரொம்ப காலமா பொண்ணு பாத்துகிட்டு இருக்கறது அவங்க ப்ரண்ட்ஸுக்கும் தெரியும்... எனக்கு பொண்ணு கிடைச்சிடுச்சு னு தெரிஞ்ச உடனே எல்லாரும் எக்ஸைட் ஆயிட்டாங்க... இந்தாங்க பேசுங்க.' என்று அலைபேசியை அவளிடம் கொடுத்தார்.

'ஹலோ... அம்மா' - நந்தினி.

'ஹை... காட் ப்லெஸ் யூ மை சைல்டு... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... அதுக்கு காரணம் நீ தான்... இதுவரைக்கும் நிறைய பொண்ணுங்கள அவனுக்கு பாத்தேன்... ஆனா யாரையும் அவனுக்கு பிடிக்கலை... அவன் ரொம்ப சூஸி… அப்புறமா தான் அவன்கிட்ட "ஸ்டேட்டஸ் எல்லாம் பத்தி கவலை படாதே... உனக்கு பிடிச்ச பொண்ணு யாரா இருந்தாலும் நான் உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிடறேன்"னு சொன்னேன்... நல்லவேளை அவனுக்கு உன்னை பிடிச்சிருக்கு... ஐ யாம் வெரி ஹாப்பி நவ்... எப்படி உனக்கும் என் பையனுக்கும் பழக்கம் ஆச்சு... என் பையன் கிட்ட பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?' என்று பிரகாஷின் தாய் அவந்திகா பேசிக் கொண்டிருக்கும் போது

'மொதல்ல உன் மருமகளின் பெயரை கேள் அவந்திகா...' என்று ஆங்கிலத்தில் பக்கத்திலிருந்து ஒரு குரல் கேட்டவுடன் பிரகாஷின் தாய் அவந்திகா

'ஆமாம்... சந்தோஷத்துல உன் பேர கேக்கவே இல்ல... என் பேரு அவந்திகா... உன் பேரு என்னமா?' என்று கேட்டாள்.

நந்தினி தயக்கத்தோடு தன் பெயரை கூறினாள். மறுபக்கத்தில் அவளின் குரல் கைபேசியின் ஒலி பெருக்கியில் கேட்பதால், பிரகாஷின் தாய் அவந்திகா பக்கத்தில் இருக்கும் ஆங்கில நண்பர்கள் அனைவரும் 'வாவ்' என்று கத்தினர்.

தன் வருங்கால மருமகளின் வருகையை பிரகாஷின் தாயும் குடும்ப நண்பர்களும் கோலாகலமாக கொண்டாடுவதையும், ரவியின் வீட்டில் தன்னை அவமதிப்பையும் ஒப்பிட்டு பார்த்தாள். இப்பொழுது அவளின் மனது அந்த சூழ்நிலையை ஏற்க தொடங்கியது. கை பேசியின் ஒலி கடத்தியை தன் கைகளால் மூடியவாறு பிரகாஷிடம் பார்வையை திருப்பி

'பிரகாஷ்... நான் உங்கம்மா கிட்ட நாளைக்கு பேசறேன்... மொதல்ல நாம ரெண்டும் பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி புரிஞ்சுப்போம்... உங்கம்மா உங்கள பத்தி நெறைய கேள்வி கேக்கறாங்க... இந்தாங்க ஏதாவது சொல்லி சமாளிங்க.' என்று கூறிவிட்டு கைபேசியை பிரகாஷிடம் கொடுத்தாள்.

பிரகாஷும் ஒரு புன் முறுவலோடு அவளை பார்த்தவாறே தன் தாயிடம்

'அம்மா... இதான் பர்ஸ்ட் டைம் உன் கூட பேசறாங்க... நாளைக்கு இதைவிட நிறையாவே பேச சொல்றேன்... இன்னிக்கு எங்க ரெண்டு போரையும் கொஞ்சம் ப்ரீயா விடு.' என்று கூறினார்.

'.....'

'போஃட்டோ வ நான் அப்புறம் அனுப்பறேன்... பேஃஸ் புக்ல இன்னும் ப்ரெண்ட் ஆகல...' - பிரகாஷ்

'....'

பிரகாஷ் கைபேசியின் தொடர்பை துண்டித்துவிட்டு நந்தினியிடம்

'அம்மா இன்னும் ஒரு வாரத்துல சென்னை வந்து உங்களையும் உங்க வீட்டு ஆளுங்களையும் பாக்க வராங்கலாம்... அதுக்கு முன்னாடி ஸ்கைப்ல உங்க பேமிலியோட பேசணும்னு சொன்னாங்க...’ என்றார்.

'ஓ... எல்லாமே ரொம்ப சீக்கிரமா நடக்குது... அம்மா கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு அப்பாவோட ஸ்கைப் ஐடியை தரேன்.' என்று நந்தினி சொல்லிக் கொண்டிருக்கும் போது நித்யா அங்கே வந்தாள்.

நித்யாவிடம் நடந்ததை இருவரும் கூறினர்.

'நாளைக்கு ரெண்டு பேரும் ஆபிஸ்க்கு லீவ் போட்டுருங்க... நான் என் புருஷனையும் கூட்டிகிட்டு வரேன்... நம்ம நாலு பேரும் வெளிய அவுட்டிங் போகலாம்... நீங்க ரெண்டு பேரும் தனியா பேசிக்கறதுக்கு இத விட்டா வேற வழி இல்ல...’ என்று பொதுவாக கூறிவிட்டு

‘உன் அம்மா பிரகாஷோட டீடைல்ஸை கேட்டிருந்தாங்க...' என்று நந்தினியிடம் கூறிவிட்டு, பிரகாஷை பார்த்து

'உங்க டீடைல்ஸை என் மெயில் ஐடிக்கு அனுப்பிடுங்க... அநேகமா நந்தினியோட அம்மா இவளோட அப்பா கிட்ட இன்னிக்கு நைட் பேசிடுவாங்கனு நினைக்கறேன்... நாளைக்கு காலைல உங்க அம்மாவை ஸ்கைப்ல பேச சொல்லுங்க.... இட்ஸ் ஆல்ரெடி டைம் நவ்... லெட்ஸ் மூவ். ' என்று நித்யா கூறியவுடன் மூவரும் விடைபெற்றுக் கொண்டு பிரிந்தனர்.​
 

New Threads

Top Bottom