Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காற்றில் உன் வாசம்

Punitha Karthikeyan

Saha Writer
Messages
12
Reaction score
0
Points
1
அத்தியாயம்-1

காற்றில் உன் வாசம்

அழகான காலை வேலை குயில் கூவும் சத்தம் இளந்தென்றல் வீச தன் அறையின் திரைச்சீலையை திறந்து பார்த்தால் நம் கதையின் நாயகி சாய்பிரியா...

வழக்கத்தை விட சூரியன் பிரகாஷமாய் இருப்பதாய் தோன்றியது ப்ரியாவுக்கு அதற்கான காரணம் தான் புரியவில்லை ஒரு வேலை 'அதுவும் ஒரு காரணமோ ' என்று மனதில் நினைத்து கொண்டால் (என்னவா இருக்கும் 🙄🙄🤔🤔) .
ஒரு பெருமூச்சை விட்டு விட்டு தன் அறையில் உள்ள கட்டிலை பார்த்தால் அதில் தன் கணவனும் 5 வயது குழந்தையும் தூங்கி கொண்டிருந்தனர்.


'அழகான குழந்தை அன்பான கணவன் ஆனால் எல்லாம் விதி ' என்று தன் மனதில் நினைத்து கொண்டு காலை கடன்களை தொடங்குவதற்கு அறையை விட்டு வெளியேறினால் பிரியா .

மணி காலை 5.30 பிரியா தன் அறையிலிருந்து ஹாலை தாண்டி வாசலுக்கு வந்தால்.


இன்னும் சரியாக விடியாத காலை பொழுது மார்கழி மாதம் என்பதால் குளிரும் கூடியிருக்க அந்த காற்றை இழுத்து வெளியிட்டள்.


அதன் பின் வாசலை பெருக்கி தண்ணீர் தெளித்து கோலமிட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் ஒரு பூசணி பூவை சொருகினாள்.


பின் அதை கோலத்தின் நடுவில் வைப்பதற்கும் அந்த தெருவில் இருக்கும் கோவிலில் பஜனை சத்தம் கேட்பதற்கும் சரியாக இருந்தது.

தொடரும்.....
 
காற்றில் உன் வாசம்

அத்தியாயம் -2



நேரம் காலை 6 மணி .....

கடிகாரத்தின் அலார சத்தத்தில் வீட்டில் உள்ள அனைவரும் அடித்து பிடித்து கொண்டு எழுந்தனர்.


கடந்த ஒரு மாத காலமாக பழகிய ஒன்று தான் என்றாலும் காலை 6 மணிக்கு எழுவது சற்று கடினமாகதான் இருந்தது.(என்ன கொடுமை sir இது ???🙄🙄🙄😳😳)...

எல்லாரும் தங்கள் காலை கடன்களை முடித்து கொண்டு ஹாலுக்கு வரவும் சாய்ப்ரியா குளித்துவிட்டு தன் ஈரக்கூந்தலை நுனியில் முடிச்சிட்டு மல்லிகை சரத்தை சூடி நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு கையில் பூக்கூடையுடன் வெளியில் வந்தால்.


அனைவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தது. அனைவரின் பார்வையையும் உணர்ந்த சாய்ப்ரியாவின் பார்வை ஹாலில் உள்ள டீப்பாய் மீது சென்றது.

அங்கு ஒரு ட்ரேயில் 6 கப்புகளில் அவரவருக்கு தேவையானா காபி,பால்,டீ இருந்தது.அதனுடன் ஒரு நோட்புக் பேனாவும் இருந்தது.பின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் சாய்ப்ரியா.


(என்னடா நடக்கு இங்க அலாரம் கேட்டு எழுந்து வந்தா காபி குடிங்கனு கூட சொல்லாம இந்த பிரியா பிள்ள பாட்டுக்கு வெளில போயிட்டு ஒரு மரியாதை இல்ல இவளை என்ன பண்ற பாரு...கொஞ்ச பொறுங்க ஏதோ சத்தம் கேக்கு..............அடப்பாவிகளா இதுங்களுக்காக நான் சப்போர்ட் பண்ணா இதுங்க பாட்டுக்கு காபிய உரிஜிட்டு இருக்குதுங்க ....அடபோங்கடா😏😏.....ஆமா நானும் எல்லாரும் எல்லாரும்னு சொல்ற யாருனு தான கேக்குறீங்க வாங்கப்பா ஒரு intro பாத்திருவோம்).


அந்த நீண்ட ஹாலில் இருந்த சோபாவில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார் வீட்டின் தலைவர் வேதநாயகம் ,"Vedha group of companies" இவருக்கு சொந்தமானதுதா ஆனால் அத சத்தமாக்கூட சொல்லமுடியாது அது அவரோட இடதுபுறம் இருக்கும் அவரின் மனைவி சகுந்தலா தேவி கு தெரிந்தால் சாமி ஆடிவிடுவார்...இவரின் உழைப்பால் no.1 company ஆக இருக்கிறது இதுவரை எந்த கம்பெனியும் இவர்களின் இடத்தை பிடிக்க முடியவில்லை என்பதே உண்மை சுருக்கமா சொன்ன வெளில புலி வீட்டில் எலி ...

சகுந்தலா தேவி குடும்பத்தை பற்றிய கவலையே இல்லாத குடும்ப தலைவி(இவரைப் பற்றி கதையில தெரிந்துகொள்ளலாம்..)

வேதநாயகத்தின் வலதுப்புறம் அவரின் செல்லமகள் அவ்வீட்டின் கடைக்குட்டி மித்ரா தேவி பனிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் சின்னக்குட்டி வீட்டின் கடைக்குட்டி. அதிக குறும்பும் அதிக பிடிவாதமும் இவளின் சிறப்பு..இது எங்க போய் முடியுதுனு பாக்கலாம்..

தனி சோபாவில் கம்பிரமாக அமர்ந்து காபி அருந்ததுகிறாரே Mr.மித்ரேந்திரன்IPS அவர்களே நம் கதையின் நாயகன் வேதநாயகத்தின் மூத்த மகன். நேர்மையான காவல் அதிகாரி இவருடைய சட்டம் 'குற்றத்தை ஒப்பு கொள் அல்லது உன்னை சுட்டுகொள்'. (இப்போ புரியுதா நம்ம ஹீரோவோட கேரக்டர்🙀🙀 ).

ஹீரோவின் எதிர் சோபாவில் தன் அண்ணனுக்கு நிகராக கம்பிரமாக அமர்ந்திருப்பவர் Mr. அரவிந்த்மித்ரன் IPS வேதநாயகத்தின் இரண்டாவது மகன். அண்ணனை பின் பற்றி காவல்துறையில் சேர்ந்தான்.இவனுக்கு சட்டத்திட்டம் எல்லாம் கிடையாதுங்க தப்பு செஞ்சா உலகத்துல வாழ தகுதி இல்லனு நினைக்கிற ஆளு(நல்ல அண்ண நல்ல தம்பி 🙄🙄😅😅).

இந்த வீட்டுக்கு தனக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி ஹாலின் ஒரு ஓரத்தில் கூடை ஊஞ்சலில் ஆடிக்கொண்டே டீ குடிக்குறாரே இவர்தாங்க வேதநாயகத்தின் மூன்றாவது பையன் Mr.பிரகாஷ்மித்ரன் M.E final year படிக்கிறான்.அம்மாக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை.

தொடரும்.....

( அப்பாடி ஒரு வழியா intro முடிந்தது....இனி டைரக்டா கதைக்குள்ள போய்டலாம்.... ஹீரோயின் intro இப்போ இல்லைங்க So wait and see....).....😊😊😊😊
 
அத்தியாயம் -3

காற்றில் உன் வாசம்

நேரம் காலை 6.10 மக்களே

சாய்ப்ரியா கோவிலின் உள்ளே சென்று தான் கொண்டு வந்த பூக்கூடையை ஐயரிடம் கொடுத்துவிட்டு பஜனை நடக்கும் இடத்தில் சென்று அமர்ந்துக்கொண்டால்.

அப்போது சரியாக அனைவரும் ஆண்டாளின் திருப்பாவை முடித்து வாரணம் ஆயிரம் பாட ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு மாமி " ஏய் பொண்ணுகளா நன்னா பகவானை சேவிஜிண்டு பாடுங்கோ டி அப்போதா நல்ல மாப்ள கிடைப்பான் புரியறதா???.... அம்மாடி பிரியா நீந்தான் நன்னா படுவியே நீயே ஆரமிச்சி வைமா " என்று கூறிட அவரது வார்த்தையை தட்ட முடியாமல் தன் இனிய குரலில் பாட தொடங்கினாள்,



மாப்பிள்ளை அழைப்பு

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து,
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்,
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

நிச்சயதார்தம்

நாளை வதுவை மணம் என்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசடைப் பந்தற் கீழ்,
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான், ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்!

பெரியோர்களின் அனுமதி

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்,
வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியுடுத்தி மண மாலை,
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!


காப்பு கட்டுதல்

நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனி நல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை,
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

பிடி சுற்றுதல்

கதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி,
சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள,
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்!

பாணி க்ரஹணம்

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத,
முத்துடைத் தாம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்,
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்!

ஸப்தபதி

வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து,
காய்சின மாகளி றன்னான் என் கைப்பற்றி,
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்!

அம்மி மிதித்தல்

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மை உடையவன் நாராயணன் நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்!

பொறி இடுதல்
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம் வந்திட்டு எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி அரிமுகன் அச்சுதன் கைம்மேலென் கைவைத்து,பொரிமுகந் தட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

மஞ்சள் நீர் தெளித்தல்

குங்குமம் அப்பிக் குளிர்ச் சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம் செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங்கானைமேல்,
மஞ்சன மாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!

பாராயண பலன்

ஆயனுக் காகத்தான் கண்டகனாவினை,
வேயர் புகழ் வில்லி புத்தூர்க்கோன் கோதை சொல்,தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே!!

என்று முடித்ததும் அனைவரும் அவளின் தேன் குரலில் இவ்வுலகை சற்று மறந்துதான் போயினர்.

கோவில் மணி ஓசையில் முதலில் சுயநினைவுக்கு வந்த மாமி " டி கொழந்த என்னமா பாடுற சாச்சாத் அந்த ஆண்டாளே நேருல வந்து பாடுனாப்ல இருந்தது நன்னா இருடி குழந்தை நன்னா இரு " என்று கூறி கண்கலங்கினார்.

பிரியா தன் மனதில் 'உங்க வாக்கு பழிக்கட்டும் மாமி'' நினைத்து கொண்டு வெளியில் "தேங்க்ஸ் மாமி " என்றாள்.

அதற்கு அந்த மாமி சிரித்துவிட்டு " சரி டி பொண்ணுங்கள வந்து மஞ்சள் குங்குமம் எடுத்துகோங்கோ என்றார்.

எல்லாரும் எடுத்து சென்ற பின் ப்ரியாவும் எடுத்துக்கொண்டு தனது பூக்கூடையை வாங்கிவிட்டு அந்த பெருமாளை நோக்கி கைக்கூப்பி "பெருமாளே எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து நிற்கும் தைரியத்தை கொடுப்பா " என்று மனம் உருக வேண்டி நின்றாள்.

கோவிலில் இருந்து வீடு வந்ததும் பிரசாத கூடையை பூஜை அறையில் வைத்து விட்டு அங்கு இருந்த சிவன் விக்ரகத்தை பார்த்தபடி உறைந்து நின்றாள். எத்தனை முறை அந்த விக்ரகத்தை பார்த்த போதும் கைக்கூப்பி நிற்பாலே தவிர எதையும் வேண்டிக்கொண்டதே இல்லை. அதற்கான காரணம் அந்த சிவனின் முகத்தை பார்த்தாலே மனதில் நிம்மதி மட்டுமே இருப்பதாய் தோன்றும் பிறகு என்ன வேண்டி கொள்வது. இப்போதும் அப்படியே தோன்றிட ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு வெளியேறினால்.

அங்கு ஹாலில், டீபாய்மீது இருந்த நோட்புக்கை எடுத்து பார்த்தால் அதில் இன்றைக்கான உணவு பட்டியல் இருந்தது.

ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு சமையலறைக்குள் சென்றால்.அங்கு கோவிலுக்கு செல்லும் முன் வைத்துவிட்டு சென்ற ட்ரேயும் கப்புகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதுவே ஒரு மாதத்திற்கு முன்னர் ஒவ்வொரு அறையாக சென்று கதவைதட்டி அவர்களுக்கு விருப்பமான பானத்தை தரவேண்டும் அதுவும் 8 மணிக்கு முன்னர் செல்லக்கூடாது.அதையும் மீறி 8 மணிக்கு ஒரு வினாடி குறைவாக சென்று நின்றாள் கூட அந்த நாள் ஏன் தன் வாழ்வில் வந்தது என தோன்றும் அளவுக்கு நிகழ்வுகள் நடைதெறியிருக்கும். ஆனால் இன்று!!!!

'எல்லாம் அவள் செயல்' என்று நினைத்து கொண்டு காலை சமையலை தொடர்ந்தால் பிரியா. கை பாட்டுக்கு அதன் வேலையை செய்ய மனம் தன் ஓரகத்தியின் நினைவில் லயித்தது. சின்ன பட்டாம்பூச்சி போல் அங்கும் இங்கும் ஓடி ஓடி வேலையை செய்து கொண்டிருப்பாள் அவளின் ஒவ்வொரு செயலிலும் ஒரு நேர்த்தி இருக்கும் ,ஆனால் பயந்த சுபாவம் கொண்டவள் அதனாலே இந்த வீட்டில் சிலர் அவளை மதிக்கமாட்டார்கள்.

தனக்கு ஓரகத்தி என்றாலும் ஒரு குட்டி தங்கை போல் எப்போவும் தன்னை அக்கா அக்கா என்று சுற்றி கொண்டே இருப்பாள்.அவள் தான் இந்த 8 மணி செய்தியை கூறியவள்.இன்று அவளாலே எல்லாம் மாறியிருக்கிறது.

ஆனால் மாறி என்ன புண்ணியம் இந்த மாற்றத்துக்கு காரணமானவள் 'ஐயோ அதை நினைத்தாலே மனம் பதைக்கிறதே.. கடவுளே ஏன் அந்த குழந்தைக்கு இவ்ளோ கஷ்டத்தை கொடுக்கிறாய்' என்று அவள் நினைக்கவும் ரெண்டு சொட்டு கண்ணீர்
அவள் கலந்து வைத்த காபியில் விழவும் அரவிந்த் கிட்சேனுக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

அரவிந்த் , அண்ணி

பிரியா , ம்ம்

அரவிந்த் ,ஆபீஸ் சீக்கிரம் போகணும் அண்ணி சோ சாப்பாடு வேண்டாம். வெளியில சாப்பிட்டு கொள்கிறேன் என்றான் தயங்கி தயங்கி.

பிரியா எதுவும் பேசவில்லை அவள் கண்கள் மட்டும் இன்று வெள்ளிக்கிழமை என்ற செய்தியை தொக்கி நின்றது.(சமயலறையில காலெண்டர் இருந்ததுப்பா ஹி ஹி ஹி😜😜😝😝)....

அரவிந்த் , சரி அண்ணி நான் வீட்டுலையே சாப்பிட்டுட்டு கிளம்புறேன் என்று கூறி வெளியேறினான்.

பின்னர் அந்த வீட்டின் வேலையாட்கள் வரவே மீதி வேலைகளை அவர்களிடம் கொடுத்து விட்டு தன் மகளுக்கு சத்துமாவு கஞ்சி எடுத்து கொண்டு அவளின் அறைக்கு சென்றாள்.

அங்கு அயர்ந்து தூங்கும் குழந்தையை பார்த்து ' நீ மட்டும் தான் செல்லம் இந்த வீட்டுல அதிர்ஷ்டக்காரி ' எந்த சலனமும் இல்லாமல் தூங்கும் தன் மகளை திஷ்டி கழித்தால் பிரியா.பின் அவளை எழுப்பி முகம் கழுவி பல் துலக்கி விட்டு கஞ்சியை குடிக்கசெய்தால்

பின் குழந்தையுடன் சேர்ந்து கிளாஸ் time table படி புக்ஸ் எல்லாம் எடுத்து வைத்து ஹோம்ஒர்க் சரி பார்த்து diary யில் கையெழுத்திட்டு நிமிரும் போது மணி 7.30 ஆகியிரசென்றாள்.

இங்கு இவர்கள் இவ்வளவும் செய்திருக்க அதே அறையில் இவர்களை ஏக்கத்துடன் பார்த்திருந்தான் மித்ரேந்திரன். அவனது பார்வையை உணர்ந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் தன் மகளை குளிக்க அழைத்து சென்றால் பிரியா.

மித்ரேந்திரனோ ' எவ்ளோ இனிமையாக சென்றது எங்கள் வாழ்க்கை அந்த ஒரு நாள் எங்கள் வாழ்வில் வராமலே இருந்திருக்கலாம் ' என்று நினைத்துக்கொண்டு 'எல்லாம் விதி' என்று மனத்தை தேற்றி கொண்டு கிளம்பி பூஜை அறைக்கு சென்றான்.

அங்கு அவனுக்கு முன்பாக வீட்டில் உள்ள அனைவரும் இருந்தனர். ப்ரியாவும் குழந்தையும் மட்டுமே இல்லை.அதை கவனித்த சகுந்தலா தேவி மித்ரனிடம்( இனி மித்ரன் கூப்பிடலாம்ப்ப்பா மித்ரேந்திரன் ரொம்ப length ஆஹ் இருக்கு ஹி ஹி ஹி 😜😜😜 .....சரி வாங்க ரெண்டுபேரும் என்ன பேசுறாங்கனு கேப்போம் )..

சகுந்தலா , மித்ரா

மித்ரன் , சொல்லுங்க

சகுந்தலா , இன்றைக்கு என்ன கிழமைனு நியாபகம் இருக்கா ??

மித்ரன் , இருக்கு என்றான் ஒருவித வெறுப்புடன்.

சகுந்தலா , ம்ம் அப்போ உன் மனைவி எங்க??என்றாள் உள்ளடக்கிய கோபத்துடன்.

மித்ரன் , பாப்பாவை ரெடி பண்ணிட்டு இருக்கா வந்திருவாங்க என்றான் அவருக்கும் சற்று சளைக்காத கோபத்துடன்.

சகுந்தலா , ஓஹோ என்றாள் அவன் கோவத்தை உணர்ந்து.

அப்போது ப்ரியாவும் குழந்தையும் பூஜை அறைக்குள் நுழைந்தனர்.எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு குழந்தையை மித்ரனிடம் நிற்க வைத்து விட்டு அங்கு சிவன் விக்ரகம் முன் இருந்த விளக்கை ஏற்றினாள் பின் கற்பூர ஆரத்தி எடுத்தபின் எல்லாரிடமும் நீட்டினாள்.அனைவரும் கும்பிட்டதும் கற்பூர தட்டை கீழே வைத்துவிட்டு இரு கை கூப்பி கண்மூடி நின்றாள்.

ஒவ்வொருவரும் ஒரு வேண்டுதலை முன்னிறுத்தி வேண்டி கொண்டிருந்தனர்.

சகுந்தலா , கடவுளே நான் செய்யவேண்டிய பூஜையை, நான் ஆழ வேண்டிய சொத்தை இன்னொருத்தி கைல கொடுக்குற மாதிரி ஆகிடுச்சே ஆனால் நான் சும்மா இருக்கமாட்ட எப்படியாவது திரும்ப எல்லாத்தையும் அவகிட்ட இருந்து பறிப்ப அதுக்கு நீ தான் துணையா இருக்கனும்...

வேதநாயகம் , ஐயா எம்பெருமானே இப்போது தான் வீடு வீடா இருக்கு இதே நிலை தொடர நீதாய்யா துணையா இருக்கனும்....

மித்ரன் , ஈஸ்வரா எனக்கு உன்ன பாத்திடே இருக்கணும்னு மட்டும் தான் தோணுது அதுலையே என் மனசு நிம்மதி ஆகிடுது ......( இத எங்கையோ கேட்ட மாதிரி இருக்கே....🤔🤔🤔🤔🤔🤔).

அரவிந்த் , பரமேஸ்வரா என் மனைவியை நல்ல படிய என்கிட்ட சேர்த்திருப்பா......

மித்ரா தேவி , யாரு எப்டியோ போகட்டும் எனக்கு என்னோட விதுன் வேணும் அதுக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும்.

குழந்தை , எனக்கு சாக்லேட் வேணும் மம்மி கிட்ட சொல்லுங்க சிவா god (so ஸ்வீட்.....🌹🌹🌹💗💗..... குழந்தை குழந்தைதான் எந்த கள்ளம் கபடமும் இல்லாத தூய உள்ளம் அவங்களுக்கு தான் இருக்கு....இவங்கள பார்க்கும் போது தான் நாமளும் குழந்தையாவே இருந்திருக்கலாம்னு தோணுது...).

பிரகாஷ் , எனக்கு உன் மேல நம்பிக்கை கிடையாது சோ டாட்டா என்று அவன் நினைத்து முடிக்கவில்லை பிரியா தன் உடம்பை முறுக்கி கொண்டு 'ஹேய்' என்று சத்தமிட்டாள்.

அனைவரும் அவளை நிமிர்ந்து பார்த்தனர். ப்ரியாவின் கண்கள் சிவந்து கைகளை முறுக்கி குலவை விட்டுக்கொண்டிருந்தால். அவளுக்கு அருள் வந்திருப்பது புரிந்தது.

பிரியா , ஹேய் வேதநாயகம் இங்க வா

வேதநாயகம் , அம்மா தாயே என்று பணிந்துநின்றார்.

பிரியா , வேதநாயகம் நான் யாருனு தெரியுதா?? என்றாள் ஆவேசத்துடன்.

வேதநாயகம் , தெரியுது தாயி என் குலதெய்வம் 'பெரியாச்சி அம்மன்' என்றான்..

'பெரியாச்சியா' என்று சற்று நடுக்கத்துடன் ப்ரியாவை பார்த்தால் சகுந்தலா தேவி.

தொடரும்......
 
அத்தியாயம் - 4

காற்றில் உன் வாசம்



'பெரியாச்சியா' என்று சற்று நடுக்கத்துடன் ப்ரியாவை பார்த்தால் சகுந்தலா தேவி.

பிரியா , என்னை உனக்கு நியாபகம் இருக்கா ?? வேதநாயகம் என்றாள் கோபம் குறையாத குரலில்.

வேதநாயகம் , ஆத்தா உன்னை எப்படிம்மா மறப்பேன் எனக்கு புள்ள இல்லாம பத்து வருஷமா தவிச்சிட்டு இருக்கும் போது என் அம்மா உடம்புல நீ இறங்கி அருள் வாக்கு சொன்னியம்மா அதுபடி நாங்க உன் சன்னதிக்கு வந்து உன்னை கும்பிட்டோம் அதுக்கு அப்பறம் தான எனக்கு முத்து முத்தா நாளு பிள்ளைங்க பொறந்தது நானும் வாழ்க்கையில முன்னுக்கு வந்த உனக்கு சேரவேண்டியதை மாசம் மாசம் கோவிலுக்கு கொண்டு வந்து என் கையாலையே கொடுத்துட்டிருக்க என்றார் கண்ணில் நீர் வழிய.

பிரியா , அந்த நினைப்பு உன் பொண்டாட்டிக்கு இல்லையே என்றாள் சகுந்தலாவை பார்த்து. ந்

அவ்வளவுதான் சகுந்தலா தேவிக்கு சர்வமும் அடங்கி போனது.அதன்பின் ப்ரியாவை ஒரு பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

எல்லாருக்கும் ஓரளவு விஷயம் தெரியும் என்பதால் அனைவரும் அமைதியாக ப்ரியாவை பார்த்த வண்ணமே இருந்தனர்.

வேதநாயகம் , ஆமா தாயீ அவள் ஏதோ பேரப்பிள்ளைங்க ஆசையில கொஞ்சம் தப்பா என்று அவர் முடிக்கவில்லை பிரியா ஆக்ரோஷத்துடன் கத்தினாள்

ஹேய் , ம்ம்ம் இனி ஒரு தடவை நான் கொடுத்த உயிரை அழிக்கணும்னு நினைச்சீங்க உன் குடும்பமே திசை தெரியாம போயிடுவீங்க ஹேஹேய்ய்ய்ய்ய்...... என்றவள் மயங்கி சரிந்தாள்.

எல்லாருக்குமே அதிர்ச்சிதான் என்ன நடக்கு இங்க யாரு உயிரு யாரு அழிக்க நினைச்சாங்க இத்தனை வருஷமா வராத பெரியாச்சிம்மா இப்போ வந்தது எதுக்கு அதுவும் ப்ரியாவுக்கு எப்படி வந்தது.

ஆனால் அதை யோசிக்க இது நேரம் அல்ல ப்ரியாவை பார்க்கலாம் என்று எண்ணி அவளை நெருங்கினர்.

குழந்தையோ பிரியாவை தட்டி எழுப்ப முயன்று கொண்டிருந்தாள்.

குழந்தை , அம்மா அம்மா எழுந்திரும்மா என்று ப்ரியாவின் கன்னத்தை தட்டி கொண்டிருந்தாள்.

அதை பார்த்த மித்ரன் தன் மனதில் ' இவள் இவ்வளவு ஆக்ரோஷமா ஆடியிருக்கா நானே கொஞ்சம் பயந்திட்ட ஆனால் குழந்தை தைரியமா அவளை எழுப்பிட்டிருக்காளே !!!!....

அதன்பின் ப்ரியாவை எழுப்பி சாமி கும்பிட்டுவிட்டு அனைவரும் வெளியில் வந்தனர்.

யாரும் யாரிடமும் பேசவில்லை. சாப்பிட்டுவிட்டு அனைவரும் அவரவர் வேலைகளை பார்க்க சென்று விட்டனர். வேதநாயகம் தான் என்ன நடத்தியிருக்கும் என்று யோசனையில் ஆழ்ந்தார்.சகுந்தலா வேறு எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று கதவை சாற்றி கொண்டது இன்னும் கலக்கத்தை தந்தது.

தற்செயலாக மாடியில் உள்ள அந்த அறையை பார்த்தார் அவர் மனதில் ' ஒரு வேலை இதற்கும் பெரியாச்சியம்மா சொன்னதுக்கு ஏதாவது தொடர்பு இருக்குமோ??? அப்படி இருக்க வாய்ப்பு இருக்கா ??? ஆத்தா என்னம்மா இது தெளீவா இருந்த மாதிரி இருந்தது ஆனால் ஏதோ குழப்பம் இருக்குற மாதிரியும் தெரியுதே அது என்ன என்று சிந்திக்கலானார்.

அவரின் சிந்தனையை கலைக்கும் விதமாய் பிரியா தொண்டையை செருமிக்கொண்டு வந்தாள்.அவளது கையில் சுகர் மாத்திரையும் தண்ணீரும் இருந்தது.அதனை டேபிள் மேல் வைத்துவிட்டு எதுவும் பேசாமல் திரும்பி சென்றாள்.அதனை பார்த்த

வேதநாயகம் , அம்மாடி பிரியா என்ற குரலில் திரும்பிப்பார்த்தால் பிரியா.

வேதநாயகம் , இன்னும் எத்தனை நாளைக்கும்மா இப்படி யாருக்கூடையும் பேசாம இருப்ப ?? என்றார் சிறு வேதனையுடன்.

பிரியா , உண்மை தெரியிர வரைக்கும் என்றாள் கோவத்துடன்.

இதற்குமேல் அவர் என்ன பேசுவார் இந்த நிலைமைக்கு அவரும் ஒரு காரணம் அல்லவா அதனால மௌனமாக நின்றார்.

ப்ரியாவும் அவரின் பதிலை எதிர் பாராமல் தன் அறைக்கு சென்று கார் சாவியையும் கைப்பையையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றாள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

நேரம் காலை 10 மணி
கமிஷனர் ஆபீஸ்

கமிஷனர் Mr. விஜய ராகவன் முன் மித்ரனும் அரவிந்தும் அமர்ந்திருந்தனர். ஏதோ சீரியஸான விஷயம் போலும் மூவர் முகமும் தீவிர சிந்தனையில் இருந்தது. கமிஷனரே முதலில் பேசினார்.

கமிஷனர் , இதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க ரெண்டு பேரும்.

மித்ரன் , ஒருவேளை நம்மளை divert பண்ணக்கூட இப்படி செஞ்சிருக்கலாமே sir.

அரவிந்த் , maybe இருக்கலாம் sir but கொஞ்சம் carefulla இருக்குறது better sir.

மித்ரன் , I think he is right sir.....

கமிஷனர் , ஓகே கைஸ் ஒன்னு பண்ணலாம் இதுல வர டைம் அன்ட் லொகேஷன் வித் கிரைம் செக் பண்ணுங்க எதுவுமே நடக்கலான ஜஸ்ட் லீவ் இட் பட் வெரி careful கைஸ் ....... என்று எச்சரித்தார்.

( என்னடா நடக்கு தலையும் புரியல வாலும் புரியல....வாங்க கொஞ்சம் நம்ம காலச்சக்கரத்தை பின்னோக்கி சுழற்றி பாப்போம் என்ன நடந்ததுன்னு..... டொய்...... டொய்...... டொடொய்.....)

நேரம் காலை 9.15
கமிஷனர் ஆபீஸ்

ஏதோ தீவிர ஆலோசனையில் இருந்தனர் மித்ரன் மற்றும் அரவிந்த். அப்போது

மித்ரன் , என்ன அரவிந்த் சாந்தி நகர் கேஸ்ல ஒரு சின்ன தடையும் கூட கிடைக்கல.

அரவிந்த் , அதைதான் நானும் யோசிச்சிட்டிருக்க போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட் வந்ததும் ஏதாவது கிடைக்குதான்னு பார்ப்போம்.

மித்ரன் , எனக்கு அவனோட மனைவி மேல தான் டவுட்...பார்க்கலாம்..

அப்போது ஒரு கான்ஸ்டபிள் அனுமதி கேட்டு உள்ளே வந்தார்.அவர்கள் இருவரையும் கமிஷனர் அழைப்பதாக கூறினார்.பின் இருவரும் கமிஷனர் அறைக்கு சென்றனர்.இருவரும் சலூட் அடித்து அமர்ந்தனர்.

அவர்கள் முன் இருந்த டேபிள் மீது ஒரு வட்டமான கருவி இருந்தது.அதனை சுட்டி காட்டிய கமிஷனர் , இது என்ன கருவினு கெஸ் பண்ணமுடியுதா கைஸ்.

மித்ரன் , நோ ஐடியா சார்.

அரவிந்த் , ஏதோ அறை எண் 305 ல் கடவுள் படத்தில வர device மாதிரி இருக்கு sir.

கமிஷனர் , அரவிந்த் be சீரியஸ்.

அரவிந்த் , Ok sir.....

மித்ரன் , சார் அரவிந்த் சொல்றதும் கரெக்ட் தான அதே மாதிரிதா இருக்கு.

கமிஷனர் , என்ன மித்ரன் தம்பிக்கு சப்போர்ட்டா ??......

மித்ரன் , அப்படி இல்ல சார்.

அரவிந்த் , அப்போ நீங்களே சொல்லுங்க

கமிஷனர் , ஹ்ம்ம் கொஞ்சம் கொழுப்பு அதிகமான மாதிரிதான் தெரியுது.

அரவிந்த் , ஆமா சார் டெய்லி வாக்கிங் போங்க குறைச்சிரும் சார்..

கமிஷனர் & மித்ரன் , அரவிந்த் ....

அரவிந்த் , சாரி சார் (minds voice : ரெண்டு பேரும் சேர்ந்து முறைக்குறாங்களே நான் என்ன பண்ணுவ .....ஐயோ ஐயோ....😱😱😱😥😥).

கமிஷனர் , நீ எல்லா எப்படிய்யா IPS பாஸ் பண்ண ??

அரவிந்த் , எல்லா படிச்சி தான் என்று கூற மித்ரன் அவனை நன்றாக முறைப்பது தெரிந்தது.

( Aravinth mind voice : ஆத்தி இவன் வேற முறைக்கானே தெரியாமல வாய விட்டுட்டோம் தனியா ரூம் போட்டு அட்வைஸ் பண்ணுவானே ..... சாமீ என்ன காப்பாத்துப்பா உனக்கு 100 தேங்காய் உடைக்கிறேன்...)

மித்ரன் , நீங்க சொல்லுங்க சார்.

கமிஷனர் , மொத்தத்துல தம்பிய விட்டு தரமாட்ட.....anyway விசயத்துக்கு வருவோம் இது என்ன device னு எனக்குமே தெரியல

(aravinth mind voice : adapaaviiiiiii)

கமிஷனர் , காலையில என்னோட சன் யாரோ ஒரு தாத்தா கொடுத்ததா சொல்லி என்கிட்ட தந்தான்.அத வாங்கி பார்த்த எனக்கு பெரிய ஷாக்.

(Aravinth mind voice : அச்சோ electricity பாஸ் ஆச்சா ??? எவ்ளோ வோல்ட்?????ஹாஸ்பிடல் போகலையா ????....🤔🤔)

கமிஷனர் , அந்த device டைம்னு display ஆகுது அதுல நான் சும்மா ஒரு நேரம் type பண்ண எனக்கு மூணு விஷயம் display ஆச்சு.

மித்ரன் , வாட் display ????

அரவிந்த் , என்ன படம் சார்.

கமிஷனர் அவனை முறைத்துவிட்டு தொடர்ந்தார் , First , time கேட்டுச்சு அப்பறம் லொகேஷன் கேட்டுச்சு odaney andha area la நடந்த incidents display ஆகுது. I was really scared guys என்று முடித்தார்.

மித்ரன் , This is unbelievable sir

அரவிந்த் , என்ன incident sir..

கமிஷனர் , என் பையன் என்கிட்ட இந்த device கொடுத்த time , லொகேஷன் என்னோட வீடு கொடுத்தேன் அப்படியே டிஸ்பிலே ஆச்சு எனக்கு ஒன்னும் புரியல....இதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க ????

( இதுதாங்க நடந்துச்சு......இது என்ன device,priya ஏன் யார்கிட்டயும் பேசமாட்டேன்றாங்க , பெரியாச்சி சொன்ன உயிர் யாரு , அந்த அறை யாரோடது , அரவிந்த் மனைவி யாரு , சகுந்தலா தேவி ஏன் பெரியாச்சி சொன்னதை கேட்டு பயந்தாங்க இன்னும் இன்னும் நெறைய மர்மங்களை பத்தி அடுத்தடுத்த அப்டேட்ல சொல்ற அதுவரைக்கும் பை பை......😊😊😊😊🌹🌹🌹🌹🌹........)

தொடரும்.......
 
அத்தியாயம் -5

காற்றில் உன் வாசம்

நேரம் காலை 9 மணி
S.M. Hr. Sec. School ,

பள்ளி வளாகத்தினுள் ப்ரியாவின் கார் நுழைவதை பார்த்த வாட்ச்மேன் அவளுக்கு புன்னகை தவழும் முகத்துடன் சல்யூட் அடித்தார் .

அவரின் அருகில் வண்டியை நிறுத்திய பிரியா அவரின் வணக்கத்தை ஏற்று கொண்டதை போல் புன்னகையுடன் தலையசைத்தாள்.

பின் அவரிடம் , குழந்தை வந்திட்டாளா ரமேஷண்ணா.

ரமேஷ் , ஓஹ் அப்போவே வந்திருச்சு கார்டன்ல விளையாடிட்டு இருக்கும்மா.

பிரியா , சரிண்ணா அப்பறம் இந்தாங்க என்னோட ரூம் சாவி ரூமை ஓபன் பண்ணி என்னோட டேபிள்ல மீட்டிங் சர்குலர் இருக்கு அதை நோட்டீஸ் போர்டுல போட்டுருங்க நான் பாப்பாவை பார்த்திட்டு வந்திரேன் என்றவள் காரை கிளப்பி சென்று பார்க்கிங்கில் விட்டுவிட்டு கார்டெனுக்கு சென்றாள் .

அங்கு குழந்தை கார்த்திகேயனுடன் விளையாடி கொண்டிருந்தாள்.

கார்த்திகேயன் M.P.Ed முடித்துவிட்டு S.M. பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக பணிபுரிகிறான். ப்ரியாவும் கார்த்திகேயனும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் பின் வேறு கல்லூரியில் பயின்றதால் இருவரும் வேறு வேறு வழியில் சென்றனர்.

அதன்பின் இருவரும் சந்தித்தது S.M. பள்ளியின் இன்டெர்வியூவில் தான். இன்டெர்வியூக்காக தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைத்தவனுக்கு அதிர்ச்சியாக தன் பள்ளி தோழி தலைமை ஆசிரியர் இருக்கையில் இருப்பதை கண்டு வியந்தான்.

ஆனால் ப்ரியாவோ எதையும் கண்டுகொள்ளாமல் இன்டெர்வியூவை தொடர்ந்தாள்.கார்த்திகேயனும் நல்லவிதமாக இன்டெர்வியூவை முடித்துக்கொண்டு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டெரை பெற்றுக்கொண்டான்.

அதன்பின்னே பிரியா அவனிடம் இயல்பாகபேசினால்.ஏற்கனவே அவளின் குணத்தை பற்றி அறிந்திருந்ததாள் கார்த்திக்கும் சகஜமாக பேசினான். பின் இருவரின் நட்பும் மேலும் வளர்ந்தது.

( சரி சரி வாங்க வாங்க கதைக்குள்ள போகலாம்......😊😊😊😊)

பிரியா , பாரதி என்றழைத்தால் தன் மகளை.

அம்மாவின் குரலை கேட்டு வேகமாக ஓடிவந்தாள் பாரதி.

பிரியா , மெதுவா வாங்க குட்டி

பாரதி , அம்மா அம்மா கார்த்திக் அங்கிள் எனக்கு பாயசம் கொடுத்தாங்க சூப்பரா இருந்துச்சு இந்தாங்க நீங்களும் சாப்பிடுங்க என்று கையில் இருந்த பாயாசத்தை ஊட்டி விட்டால் அன்பு மகள். அதை சாப்பிட்ட பிரியா , என்ன விசேஷம் கார்த்திக் பாயாசம் எல்லாம் தூள் பறக்குது.

கார்த்திக் , ஒரு விசேஷமும் இல்ல இனிப்பா சாப்பிடணும் போல இருக்குனு நைட் புனிதாகிட்ட சொன்னேன் காலையில பாயாசம் செய்து கொடுத்திட்டாள் என்றான் லேசாக சிரித்தவாறு.

பிரியா , சரி சரி வழியாத கேட்டதை செய்து தர பொண்டாட்டி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் என்றவள் , ஆமா நிஷா குட்டி எங்க ?? என்று வினவினாள்.

கார்த்திக் , அதை ஏன் கேக்குற ?????

பிரியா , சரி கேக்கல விடு என்றாள் நமட்டு சிரிப்புடன்.

கார்த்திக் , மொக்க போடாத சொல்றத கேளு

பிரியா , சரிங்க ஆஃபீஸ்ர் என்றவள் தன் உதட்டின்மீது விரல் வைத்து நின்றாள்.

கார்த்திக் , அது அந்த பயம் இருக்கனும்....அவங்க அம்மா பாயசம் செய்து கொடுத்ததும் அவங்க அம்மா முந்தானைய பிடிச்சிட்டு சுத்திட்டே இருந்தா நான் கூப்பிட்டு பார்த்தேன் வரலை சரின்னு அம்மாக்கூடவே வரட்டும்னு வந்திட்டேன் என்றான்.

பிரியா , சரி சரி அவங்க வரட்டும்.....இப்போ மெயின் கேட் போகலாம் ஸ்டூடெண்ட்ஸ் வர ஆரம்பிச்சிட்டாங்க போகலாம் என்றாள்.

கார்த்திக் , ஓகே ஓகே.....

பின் பாரதி குட்டியை பியானோ வகுப்பில் விட்டுவிட்டு மெயின் வாசலுக்கு சென்றனர்.அங்கு அவர்கள் செல்லவும் புனிதாவும் நிஷாக்குட்டியும் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

புனிதா , குட் மார்னிங் மேம்.....

நிஷாகுட்டி , குட் மார்னிங் மேம்....

பிரியா , குட் மார்னிங் என்று இருவருக்கும் பொதுவாக சொன்னவள் பின் நிஷாகுட்டியை பார்த்து , பியானோ கிளாஸ்க்கு டைம் ஆச்சுல்ல சீக்கிரம் போங்க என்றாள்.

நிஷாகுட்டி , ஓகே மேம் என்றவள் அங்கு இருந்து வேகமாக ஓடினாள்.

அவள் போவதை பார்த்த
புனிதா , ஓகே மேம் நானும் கிளாஸ்க்கு போறேன் 10th கு மேக்ஸ் கிளாஸ் இருக்கு.

பிரியா , ஓகே யூ கேர்ரி ஆன் என்றாள் .

அதன்பின் ப்ரியாவும் கார்த்திக்கும் மாணவர்களின் ID card,uniform,shoe check செய்து அனுப்பினர்.

கூட்டுப்பிராத்தனைகாண மணி அடிக்கவும் மாணவர்கள் அனைவரும் தங்கள் வகுப்புகளில் இருந்து வரிசையாக வெளியில் வர ஆரம்பித்தனர்.

அனைவரும் ஒன்றாக கூடியதும் தமிழ் தாய் வாழ்த்து ஆரம்பமானது . அது முடிந்த பின் அன்று பிறந்தநாள் கொண்டாடும் மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் அவர்களுக்கான பரிசு பொருள் வழங்கப்பட்டது.

பின்னர் ஒரு மாணவன் முன் வந்து திருக்குறளும் அதற்கான பொருளையும் கூறினான். அதன்பின் ஒரு மாணவி முன் வந்து ஆங்கில பழமொழியும் அதற்கான பொருளையும் கூறினாள்.

அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் அந்த வாரம் முழுவதும் நடந்த போட்டிகள் பற்றிய அறிவிப்பும் பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

கடைசியாக தலைமை ஆசிரியருக்கான உரையை தருவதற்காக பிரியா மைக் முன் நின்றாள்.

பிரியா , ஹாய் பிரெண்ட்ஸ் ( என்னது பிரெண்டா ????? ஐயோ ஐயோ இந்தமாதிரி எனக்கு ஒரு HM கிடைக்காம போயிட்டாங்களே.........கிடைச்சிருந்தா ???🤔🤔....ஒன்னும் பண்ணிருக்கமாட்ட.....(என்னோட mind voice ).....🙄🙄போடி.....)

குட் மார்னிங் இந்த வாரம் எல்லாருக்கும் நல்லா போயிருக்கும்னு நினைக்கிற சோ நெஸ்ட் வீக் இதைவிட பெட்டெரா போகணும்னு எல்லாரும் முயற்சி பண்ணுவோம்.அப்புறம் இந்த வீக் Prize winners,participants எல்லாருக்கும் வாழ்த்துக்கள்...ஹ்ம்ம் one Important announcement students half yearly exam start ஆக போகுது so prepare panna start பண்ணுங்க அதுலயும் Best கொடுப்பீங்கனு நம்புற.....Apart from studies, half yearly holidays முடிந்ததும் pongal celebrations இருக்கு அதுக்கான student's circular இன்றைக்கு unga class ku வந்திரும் class teachers அதை class notice boardla பின் பண்ணிருங்க மற்ற details staff meetingla discuss பண்ணலாம் then staff cirucular already notice boardla இருக்கு check பண்ணிக்கோங்க ..... ஓகே நௌ திருக்குறள் அண்ட் ப்ரொவெர்ப் சொன்ன மாணவர்களுக்கு ஒரு சின்ன பரிசு கொடுத்திரலாம் நன்றி என்று அத்துடன் தன் உரையை முடித்து கொண்டாள்.

பின் பரிசு வழங்கப்பட்டதும் தேசிய கீதம் முடிந்து மாணவர்கள் அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர். அவர்களை ஒழுங்கு படுத்தி அனுப்பிய கார்த்திகேயன் kinderguarden Gate நோக்கி சென்றான்.

அப்பள்ளியில் kinderguarden மாணவர்களுக்கு 10.30 மணிக்கு தான் வகுப்புகள் ஆரம்பமாகும் என்பதால் அவர்களை பார்ப்பதற்குத்தான் கார்த்திக் அங்கு செல்கிறான்.

தன் அறைக்கு சென்ற ப்ரியாவை அவளுக்கான பணிகள் அவளை உள் வாங்கிக்கொண்டது.

(S.M.Hr Sec.School kindergarten to 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பயிலும் கல்விக்கூடமாகும். 6 gate கொண்ட கட்டிடம் அது.

மெயின் கேட் - for Staffs and parents
Kindergarten gate - for kinterguarten students
Primary gate - for primary students
senior gate - for 6 to 8 std students
Super senior gate - for 9 to 12 std students
Vehicle gate - for staff and students vehicle

காலை நேரம் அனைவரும் மெயின் கேட் வழியாக மட்டுமே உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க படுகிறது. மாலை நேரம் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேட் வழியாக செல்லலாம் அதுவும் பெற்றோர்களுடன் செல்லும் மாணவர்களுக்கு தனியாக பாஸ் காண்பிக்க வேண்டும் இல்லையேல் செல்ல அனுமதி இல்லை.
Vehicle வைத்திருக்கும் மாணவர்கள் தங்களின் டோக்கனை கொடுத்துவிட்டு செல்லவேண்டும்..இது ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.

ஆனால் kinderGuarten மாணவர்களுக்கு காலை 10.30 மணி முதல் மதியம் 1மணி வரை தான் பள்ளி வேலை நேரம் என்பதால் அவர்களுக்கு இந்த நிபந்தனைகள் கிடையாது.அதுமட்டும் இல்லாமல் அவர்களின் குடும்ப உறுப்பினர் மட்டுமே அழைத்து செல்ல முடியும் அதுக்கும் பாஸ் வேண்டும்.Van,auto எதற்கும் அனுமதி கிடையாது.இதற்கு ஒப்பு கொண்டால் மட்டுமே இப்பள்ளியில் பயில Seat கிடைக்கும்.

கொஞ்சம் கண்டிப்பு என்றாலும் பள்ளியின் பெயரும் , புகழும் , மாணவர்களின் நன்னடத்தையும் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் அதற்கு ஒப்பு கொள்கின்றனர் .)

பிரியா இங்கு வேளையில் மூழ்கி இருக்க அவளை கொள்வதற்கான வேலைகளும் அதிவேகமாக நடந்துகொண்டிருந்தது.

அவர் போனில் கொடுத்த அறிவுரைகளை பெற்றுக்கொண்ட அந்த கும்பல் அவளுக்காக அந்த ஆளில்லாத சாலையில் காத்திருந்தது.

ப்ரியாவுக்கு என்ன ஆகும் அடுத்த update ல சொல்ற.......

தொடரும் .......
 

New Threads

Top Bottom