Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காற்றில் உன் வாசம்

அத்தியாயம்-6

காற்றில் உன் வாசம்



கமிஷனர் ஆபீஸ் ,

மித்ரனும் அரவிந்தும் அந்த device -ஐ வைத்து கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தனர்.

மித்ரன் , என்ன பண்ணலாம் அரவிந்த்.

அரவிந்த் , ஹ்ம்ம் டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்...

மித்ரன் , ஹ்ம்ம் ஓகே என்று கூறி அந்த device-ஐ கையில் எடுத்தான்.

அதை அவன் கைகளில் எடுத்ததும் அறையை ப்ரகாஷமாக மாற்றியது அதில் இருந்து வந்த வெளிச்சம்.

நேரம் என்ற வார்த்தை தோன்றியது இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

மித்ரன் அதன் கீழே காலையில் பிரியாவிற்கு அருள் வந்த அந்த நேரத்தை பதித்தான்.

பின், இடம் என்ற வார்த்தை தோன்றியது அதற்கு மித்ரன் தன் வீட்டு முகவரியை பதித்தான்.

அப்போது அவர்கள் முன் ஒரு திரை தோன்றியது.அதில் இன்று காலை நடந்த அத்தனையும் கண்முன் விரிந்தது.ஆனால்.......

அரவிந்த் , என்ன அண்ணா இது எல்லாமே இருக்கு பட் யாரோட முகமும் கிலேயரா இல்ல அண்ணி முகம் கூட சுத்தமா தெரியலையே என்றான் அதிர்ச்சியுடன்.

மித்ரன் , ஆமா அரவிந்த் குரல் மட்டும் தா தெளீவா கேக்குது....ஓகே எதிர்காலத்தை பற்றி கொடுத்து பார்க்கலாம்.

அரவிந்த் , ஓகே அண்ணா

மித்ரன் மறுபடியும் அதை இயக்கினான்.
இப்போது பிரியா பள்ளியில் இருந்து வரும் நேரமும் ,முதல் முதலில் தாங்கள் இருவரும் சந்தித்த இடத்தின் பெயரையும் கொடுத்தான். அதனை பார்த்த
அரவிந்த் , அண்ணா அண்ணி எப்படி அங்க வருவாங்க ஸ்கூல் முடிந்ததும் கோவிலுக்குத்தான போவாங்க ஆனா நீங்க ??? என்று கேள்வியாக முடித்தான்.

மித்ரன் , எனக்கே தெரியலடா நான் சும்மாதான் கையை வைச்சேன் எதுவோ ஒன்னு என்னை இயக்குன மாதிரி இருந்தது முடிச்சதும்தான் நானே கவனிச்சேன் அது எனக்கே ஷாக்காத்தான் இருக்கு என்று இவன் முடிக்கவும் காட்சிகள் திரையில் விரியவும் சரியாக இருந்தது.

அதில் ஏதோ ஒரு கும்பல் ஒரு பெண்ணை தாக்குவது போலவும் பின் அப்பெண்ணை ஒரு ஆண் கொலை செய்ய வருவது போலவும் அதை இன்னொரு பெண் தடுப்பது போலவும் காட்சிகள் தோன்றி மறைந்தது.

அங்கிருந்த இருவருமே உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்தனர்.

அரவிந்த் , என்னண்ணா இது யாரு இந்த பொண்ணு என்ன நடக்குது ஒன்னும்புரியல.....

மித்ரன் , அரவிந்த் எனக்கு பயமா இருக்கு ப்ரியாவுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு....என்றான் சிறு நடுக்கத்துடன்...

அரவிந்த் , ஐயோ அண்ணா அதெல்லாம் ஒன்னும் ஆகாது அண்ணி எதுக்கு அங்க வரப்போறாங்க இந்த device ஏதோ தப்பா காட்டுது...

மித்ரன் , இல்லடா இதுல ஏதோ இருக்கு என்னமோ நடக்க போகுதுனு என்னோட உள் மனசு சொல்லுது... இப்போ டைம் என்ன ????

அரவிந்த் , டைம் ஒன்னு தான் ஆகுது நாலு மணிக்கு தான் ஸ்கூல் விடும் எல்லாம் முடிச்சிட்டு அண்ணி கிளம்ப எப்படியும் 6 மணி ஆகிடும். ஆனால் நீங்க கொடுத்த டைம் 5 மணி எப்படி அண்ணா..... நான்தான் சொல்றன்ல இதையெல்லாம் நம்பாதீங்க pls....

மித்ரன் , இல்ல அரவிந்த் என்னால அவ்ளோ ஈஸியா எடுத்திக்க முடியாது....இப்போவே அவளுக்கு கால் பண்ணி carefull - ஆ இருக்க சொல்லு என்றான்.

அவனின் தவிப்பை புரிந்து கொண்ட அரவிந்த் தனது போனை எடுத்து ப்ரியாவுக்கு கால் செய்தான்.ஒன்று அல்ல ஐந்து முறை கால் செய்து விட்டான் ஆனால் ப்ரியாவின் மொபைல் சுவிட்ச் ஆப் என்றே வந்தது.

அரவிந்த் , அண்ணா சுவிட்ச் ஆஃப் ன்னு வருது

மித்ரன் , கார்த்திக்கு கால் பண்ணு

அரவிந்த் , கார்த்திக்கு கால் பண்ண அதுவும் சுவிட்ச் ஆஃப் என்று வர அதையும் தன் அண்ணனிடம் கூறினான்.

மித்ரன் , ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் புனிதாவுக்கு கால் பண்ணிப்பாரு

அரவிந்த் , அண்ணா.......அது....

மித்ரன் , என்ன அதுவும் சுவிட்ச் ஆஃப்- ஆ ??????

அரவிந்த , இல்லை என்கிட்ட அவங்க நம்பர் இல்ல என்றான் தலையை குனிந்தவாறு...

மித்ரன் புனிதாவிற்கு கால் செய்தான் அரவிந்தை யோசனையாக பார்த்தவாறு.
கடைசி ரிங்கில் காலை எடுத்தாள் புனிதா.

புனிதா , ஹலோ

மித்ரன் , ஹலோ நான் மித்ரன் பேசுறேன்

புனிதா , தெரியுதுண்ணா சொல்லுங்க

மித்ரன் , அது ப்ரியாக்கு கால் பண்ண சுவிட்ச் ஆப் னு வருதா அதா அவகிட்ட கொஞ்சம் பேசணும் என்றான் தயங்கியவாறு....

புனிதா , அண்ணா இது லஞ்ச் ஹவர் kindergarten students கு leaving time so gate ல இருப்பாங்க அதா சுவிட்ச் ஆஃப் பண்ணிருப்பாங்கண்ணா என்றாள்.

மித்ரன் , ஓகே மா thanks நான் வச்சிரேன்....

புனிதா , சரிண்ணா

போனை கட் செய்துவிட்டு யோசனையாக அமர்ந்திருந்தான் மித்ரன். அவனை பார்த்த அரவிந்த் , என்ன ஆச்சுண்ணா???

மித்ரன் , லஞ்ச் டைம் அதான் சுவிட்ச் ஆஃப் பண்ணிருக்கா வேற ஒன்னும் இல்ல.....ஆமா உங்கிட்ட எப்படி புனிதாவோட நம்பர் இல்லாம போச்சு என்றான் கேள்வியுடன்.

அரவிந்த் , அது அண்ணிதான் delete பண்ண சொன்னாங்க....அப்பறம் அவங்ககூட பேசக்கூடாதுனு சத்தியம் வாங்கிட்டாங்க என்றான் வருத்தத்துடன்.

மித்ரன் , ஹ்ம்ம்......அப்போ பிரியா என்கிட்ட சண்டை போட்ட மாதிரிதான் எல்லாமே நடந்து இருக்கு...... வீட்டுல நடக்குற எதுவுமே எனக்கு தெரியறது இல்லை எனக்கும் தெரிஜிக்கணும்னு தோன்றவும் இல்லை ஹ்ம்ம் என்றான் பெருமூச்சியுடன்..

அரவிந்த் , அண்ணா......

மித்ரன் , உண்மைதான் அரவிந்த்..... கொஞ்சம் நான் குடும்பத்தையும் கவனிச்சிருந்தால் இன்னைக்கு உன் வாழ்க்கை கேள்விக்குறியா இருந்திருக்காது. இப்போதுதான் ப்ரியாவோட கோவம் எனக்கு புரியுது....

அரவிந்த் புரியாமல் பார்க்க மித்ரன் தொடர்ந்தான் , இன்றைக்கு காலையில ப்ரியா அருள் வந்து பேசிட்டிருக்கும் போது அம்மாவை கவனிச்சியா??? அவங்க முகமே சரியில்ல அவங்களுக்கும் இதுல சம்பந்தம் இருக்கு......அதுமட்டும் இல்ல என்று நிறுத்த

அரவிந்த் , இன்னும் என்னண்ணா????

பிரியா , மித்ராவுக்கும் ப்ரகாஷுக்கும் கூட ஏதோ சம்பந்தம் இருக்கு அவங்க முகம் கூட ஏதோ வித்தியாசமா இருந்தது என்றான்.

அரவிந்த் , உங்களுக்கு இன்னைக்கு தான் அவங்கமேல doubt வந்திருக்கு ஆனால் அண்ணி என்கிட்ட முதலையே சொல்லிட்டாங்க என்றான் .

மித்ரன் , என்ன சொன்னா ??? என்று வினவினான் ஆச்சரியத்துடன்.

அரவிந்த் , ஹ்ம்ம் பிரச்சனை முடிஞ்ச மறுநாள் சொன்னாங்க 'கூட பிறந்திட்டா அவங்கள முழுசா நம்பிரணுமா??'அப்படினு சொன்னாங்க... எனக்கும் குழப்பம்தான் ஆனால் மித்ரா, பிரகாஷோட நடவடிக்கைய பார்க்கும் போதும் எனக்கு doubt வந்திட்டு என்றான்....

மித்ரன் , ஹ்ம்ம் பிரியா எல்லாரையும் correct - ஆ கணிச்சி வச்சிருக்கா ஆனால் நாந்தான் எதையும் புரிந்துகொள்ளாமல் அன்னைக்கு உனக்கு என்ன தெரியும் கல்யாணத்திற்கு அப்பறம் ரொம்ப மாறிட்டேன்னு சண்டை போட்டுட்டேன் ஹ்ம்ம் இப்போ பார்த்த நாந்தான் ரொம்ப மாறியிருக்க....ஏன் பாரதிக்குட்டிக்கூட என்ன வெறுக்குற அளவுக்கு நடந்திருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமாயிருக்கு என்றான் வருத்தத்துடன்.

அரவிந்த் , என்னண்ணா சொல்றீங்க ??

மித்ரன் , ஹ்ம்ம் ஆமாடா ..... அதைப்பற்றி இன்னொரு நாள் சொல்றேன் இப்போ டைம் ஆகிட்டு ப்ரியாவுக்கு கால் பண்ணி அலெர்ட்டா இருக்க சொல்லு என்றான் .

அரவிந்த் ப்ரியாவுக்கு கால் செய்ய முதல் ரிங்ளையே எடுத்துவிட்டால்.

அரவிந்த் , ஹலோ அண்ணி

பிரியா , ஹ்ம்ம் எனக்கு meeting இருக்கு என்ன விஷயன்னு சீக்கிரம் சொன்னா நல்லா இருக்கும் என்றாள் வேண்டா வெறுப்பாக.

அரவிந்த் , sorry அண்ணி but விஷயம் கொஞ்சம் important என்றவன் கமிஷனர் ஆஃபீசில் நடந்ததை ஒன்று விடாமல் கூறினான் பின் அண்ணி please கொஞ்சம் carefull - ஆ இருங்க என்று முடிக்கவும் பிரியா காலை கட் செய்தாள். அரவிந்த் போனை கையில் வைத்துக்கொண்டு முழித்து கொண்டிருந்தான்.

மித்ரன் , என்ன கட் பண்ணிட்டாளா ??? அரவிந்த் ஆமாம் என்று தலையசைக்கவும் ஒரு பெருமூச்சை வெளியிட்டவன் ஒரு முடிவோடு பைக் சாவியை கையில் எடுத்தான் பின் அரவிந்தை பார்த்து
நீ gh ல போய் postmartem ரிப்போர்ட் வாங்கிட்டு வந்திரு நான் கிளம்புறேன் என்று கூறி வெளியில் சென்றுவிட்டான்.
அரவிந்தும் அவனது பணியை செய்ய கிளம்பினான்.

மித்ரன் தனது 'royal enfield' பைக்கை செலுத்தி கொண்டிருந்தான். ஆனால் அவனது மனமோ 8 வருடங்களுக்கு முன் ப்ரியாவை முதல் முதலில் சந்தித்த நாளுக்கு சென்றது.

8 வருடங்களுக்கு முன்........

தொடரும்.........​
 
அத்தியாயம் -7

காற்றில் உன் வாசம்



8 வருடங்களுக்கு முன்......

bungalow nagar

காலை 6 மணி மார்கழி மாதம் அந்த தெருவில் இருக்கும் பெருமாள் கோவிலில் சுப்ரபாதம் ஒலித்து கொண்டிருந்தது. தெருவில் உள்ள பெண்கள் அனைவரும் அவர்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு கொண்டிருந்தனர்.

அந்த பெரிய வீட்டு வாசலில் 45 வயது மிக்க ஒரு பெண் கோலமிட்டு கொண்டிருந்தார் அவள் பெயர் வள்ளி. அந்த வீட்டுக்கு அவள் வரும்போது அவருக்கு வயது 10. தாய் தந்தை இல்லாமல் அனாதையாக ஒரு வேலை உணவுக்காக வீட்டு வாசலில் கையேந்தி நின்றவரை வீட்டுகுள் அழைத்து சென்று பசித்த வயிறுக்கு உணவளித்து உடுக்க உடை கொடுத்து தங்குவதற்கு வீடும் வேலையும் கொடுத்துவர் காமாட்சியம்மாள்.
அங்கே வள்ளியை வேலை வாங்கிக் கொண்டிருக்கிறாரே அவர் தான் காமாட்சியம்மாள் வயது 60 . பட்டு சேலையை கிராமத்து பாணியில் கட்டி கழுத்தில் தங்க தாலியுடன் வைர அட்டிகை அணிந்து கையில் கல் பதித்த தங்க வளையல் காலில் தண்டை நெற்றியில் ஒரு ரூபாய் அளவில் பொட்டு நெற்றிவகுட்டில் குங்குமம் வைத்து , பார்த்தால் கையெடுத்து கும்பிடும் அம்மன் போல் தோற்றம் கொண்ட அவருக்கு மனமும் அப்படியே.

( இனி நாம காமாட்சியம்மாளை பாட்டி என்றே அழைப்போம்..... 😃😃😃)

வள்ளி , ஏன்ம்மா நான் ஒன்னு சொன்னா கோபப்படமாட்டீகளே?? என்றாள் பீடிக்கையுடன் .

பாட்டி , என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கு என்னனு சொல்லு முதலா என்றார்.

வள்ளி , அதுவந்தும்மா..... உங்களுக்கு 60 வயசு ஆச்சு இன்னும் வீட்டு வேலையெல்லாம் பார்க்குறீங்க ஆனால் உங்க மருமக 8 மணிக்கு முன்னாடி எழுந்திக்கிறதே இல்ல நீங்களும் என்னனு கேக்கமாட்டேங்குறீங்க அவங்களும் இதுதான் சாக்குன்னு இருக்காங்க அப்பறம் எப்படி பொறுப்பு வரும் என்றாள் ஆதங்கத்துடன்.

பாட்டி , அடியே!! நான் எதையும் கவனிக்காம இல்ல அவள் செய்யுறதுக்குத்தான் இன்னும் இந்த வீட்டோட பொறுப்பை அவள்கிட்ட கொடுக்காம இருக்க அவளோட பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணி மருமகள் வந்ததும் என் பேத்தி கிட்ட தான் இந்த வீட்டோட பொறுப்பையும் இந்தா இருக்கு பாரு கொத்துச்சாவி இதையும் ஒப்படைப்பேன் அதுக்கு அப்பறம் தான் இந்த உயிர் என்னோட உடம்பை விட்டு போகும் என்றார் கலங்கிய குரலில்.

வள்ளி , ஐயோ ஆத்தா என்ன நீ நல்ல நாள் அதுவுமா இப்படி பேசுற....நான் ஒரு லூசு உனக்கு தெரியாத விஷயமா ஏதோ ஒரு ஆதங்கத்தில கேட்டுட்டேன் என்ன மன்னிச்சிரு நீ கலங்காத ஆத்தா எனக்கு கஷ்டமா இருக்கு என்றாள் விழிநீருடன் .

பாட்டி , அடி கூறுகெட்டவளே நான் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன் அதுக்கு நீ ஏன் அழுற ??? போ போய் எல்லாருக்கும் காபி போடு என்று அனுப்பி வைத்தாள்.

ஆனால் பாட்டியின் மனதில் வேறு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. ( வாங்க என்ன ஓடுதுனு கேப்போம் .... ஒட்டு கேக்கபோறணு சொல்லு ( என்னோட மைண்ட் வாய்ஸ் ).... ஹி ஹி ஹி...😜😜😜)

பாட்டி மனதில் , வள்ளி சொல்றதும் உண்மைதான் தன் மருமகள் சகுந்தலா தேவி இந்த வீட்டிற்கு ஏற்றவள் இல்லை என்பதை அவள் இந்த வீட்டில் காலடி வைத்த அன்றே தெரிந்து கொண்டார்.

பொதுவாக பாட்டி சகுனம் பார்ப்பவர் அல்ல.. ஆனால் சகுந்தலா தேவிக்கும் தன் மகனுக்கும் கல்யாணம் ஆன நாளில் நடந்த அனைத்தும் நினைவில் வந்தது.

காமாட்சி அம்மாளின் கணவர் மித்ரேந்திர ராஜா ( இனி நாம் இவரை தாத்தா என்றே அழைப்போம் ) பெரிய ஜமின் குடும்பம் அவரோடது. ஏகப்பட்ட சொத்துக்கள் கொண்டவர். தயாளு குணமும் எதிர்பவரை தன் பார்வையால் பொசுக்கும் சிவனையும் போன்றவர் . அவர்தான் அந்த வீட்டின் கடைக்குட்டி அவருக்கு இரு அண்ணன்மார்கள். இருவரும் இப்போது உயிரோடு இல்லை. அவர்களின் குடும்பமும் தாத்தாவை நம்பியே இருந்தது.

தாத்தா தன் 25 வயதில் காமாட்சி பாட்டியை கரம் பிடித்தார். வந்த ஒரு வருடத்திலே மாமியாரின் மனதில் இடம்பிடித்தார் காமாட்சி பாட்டி. வீட்டின் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு ஒய்வு எடுத்து கொண்டார் காமாட்சி பாட்டியின் மாமியார் .அதன்பின் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது தாத்தா அந்த முடிவை எடுத்தார்.

தாத்தா , காமாட்சி நமக்கு இந்த ஒரு குழந்தை போதும்மா....ஏன் என்று விழிகளிலால் கேட்டவரிடம்....உன்னோட பிரசவ வலியை பார்க்கும் போது எனக்கு உயிர் போயி திரும்ப வந்த மாதிரி இருந்ததும்மா போதும் இனி உனக்கு அந்த வலி வேண்டாம் என்று முடித்து விட்டார்.அதை கேட்ட காமாட்சி பாட்டி பெருமையாக உணர்ந்தார்.

( தாத்தா நீங்க ரொம்ப கிரேட் தாத்தா.....💗💗💗💗🌹🌹🌹🌹🌹🌹😭😭)

அதன்பின் குழந்தைக்கு வேதநாயகம் என்று பெயரிட்டு நல்லமுறையில் வளர்த்தனர். வேதநாயகத்திற்கு 20 வயது நடக்கும் பொழுது அனைத்து சொத்தையும் தாத்தா மீது எழுதி வைத்துவிட்டு அவரின் அம்மாவும் அப்பாவும் இயற்கை எய்தினர் . அதில் பொறாமை கொண்ட அவரின் அண்ணன்மார்கள் அவரையும் காமாட்சி பாட்டியையும் கொல்ல முயன்றனர். ஆனால் அந்த முயற்சி அவர்களையே காவு வாங்கியது.

வேதநாயகத்திற்கு 23 வயது இருக்கும்பொழுது சில பொறுப்புகளை ஒப்படைத்தார் தாத்தா. தனக்கு கிடைத்த சிறு பொறுப்பையும் பெரியதாக கருதி அதில் சாதித்தும் காட்டினார் வேதநாயகம்.

தன் மகனின் வெற்றியை கண்ட தாத்தா இன்னும் சில பொறுப்புகளை கூடுதலாக கொடுத்தார். அதிலும் தன் திறமையை காட்டினார் வேதநாயகம்.
தன் மகனை நினைத்து பெருமை கொண்ட பெரியவர் தன் குடும்பம் இத்தனை காலம் பாதுகாத்து வந்த மூன்று பொக்கிஷங்களை தன் மகனிடம் ஒப்படைக்க நினைத்தார்.

ஆனால் காமாட்சியம்மாளோ அதற்கு சம்மதிக்கவில்லை . பெரியவர் காரணம் கேட்டதற்கு , நமக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் தானே எல்லா பொறுப்பையும் நம்மகிட்ட கொடுத்தாங்க நீங்க ஏன் அவசர படுறீங்க ??? பெரியவங்க அப்படி செஞ்சதுல ஏதாவது காரணம் இருக்கும் நீங்க எதுவா இருந்தாலும் யோசிச்சு செய்ங்க என்று கூறிவிட்டார் .

ஆனால் பெரியவர் வேறு மாதிரி யோசித்தார்.

வெயிட் வெயிட்....... அந்த 3 பொக்கிஷம் என்ன என்னன்னு சொல்லுறேன்.

1. நவரத்தினங்கள் பதித்த தங்க திரிசூலம்
2. நவரத்தினங்கள் பதித்த வெள்ளி வீச்சரிவாள்
3. மரகத லிங்கம்

இந்த 3 பொக்கிஷமும் அவர்களின் பூஜை அறையில் தனி தனி பெட்டகத்தில் இருக்கிறது.

இப்போ வாங்க தாத்தா என்ன முடிவு எடுக்குறாங்கனு பார்க்கலாம்.

ஒரு நல்ல நாளில் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்து பூஜைகள் செய்து வீச்சரிவாள் அடங்கிய பெட்டகத்தின் சாவியை வேதநாயகத்திடம் ஒப்படைத்தார் மித்ரேந்திர ராஜா .

பாட்டிக்கு இதில் சிறு வருத்தம் இருக்கத்தான் செய்தது. அவரின் வருத்தத்தை பார்த்த தாத்தா , என்னவென்று கேட்க அதற்கு பாட்டியோ , இப்போவும் சொல்ற நீங்க அவசர பட்டுடிங்கனு தோணுது..

தாத்தா , சாவி மட்டும் தான் கொடுத்திருக்க அதுல என்ன இருக்கு ??????

பாட்டி , எல்லாம் தெரிஞ்ச உங்களுக்கே நான் ஏன் பயப்படுறேனு புரியலை இதுக்குமேல நான் என்ன சொல்றது.

தாத்தா , எனக்கு புரியுதும்மா கருப்பனோட அருள் இல்லாத வேதநாயகத்து கிட்ட பொறுப்பை கொடுக்குறது சாமீ குத்தம்ன்னு
நீ நினைக்கிற சரிதானா ????

பாட்டி , ஆமா என்றார் இன்னும் தெளியாத பயத்துடன் .

தாத்தா , எனக்கு அடுத்து அவனுக்குதான அருள் வரும் என்றார் .

பாட்டி , இது நம்ம பரம்பரையில யாராவது ஒருத்தருக்கு தான் வரும் அதுல சந்தேகம் இல்லை ஆனால் அது நம்ம குடும்பத்தில யாருக்குனாலும் வரலாம் என்றார் கோபத்துடன்.

தாத்தா , நீ என்ன சொல்லவரா காமாட்சி

பாட்டி , உங்க அப்பாவுக்கு வந்த அருள் உங்க அண்ணன்களுக்கு வராம ஏன் உங்களுக்கு வந்தது ?????

தாத்தா , அது அது அவங்க குடி அது இதுன்னு சுத்தம் இல்லாம இருந்தாங்க ஆனால் நான் அப்படி இல்லை.

பாட்டி , ஹ்ம்ம் சுத்தமா இருக்கனும் அப்போதுதான் அருள் வரும் என்றார் கவலையுடன்

தாத்தா , அப்போ நம்ம பையன் சுத்தம் இல்லனு சொல்றியா?? என்றார் காட்டமாக

பாட்டி , என்னோட புள்ளைய நானே அப்படி சொல்லுவேனா ??? உங்களுக்கு அருள் எந்த வயசுல வந்துச்சு?? சொல்லுங்க

தாத்தா , 20 வயசுல வந்துச்சு என்றார் யோசனையாக

பாட்டி , ஹ்ம்ம் நம்ம பையனுக்கு 23 வயசு ஆச்சு இன்னும் எந்த அறிகுறியும் இல்லை அதுதான் எனக்கு பயமா இருக்கு

தாத்தா , இல்லம்மா நீ தேவை இல்லமா பயப்படுற விடும்மா என்றார்

பாட்டி , இல்லைங்க நீக்க பொறுப்பை கொடுத்திட்டீங்க அதனால உங்களுக்கு அருள் நிக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு.... 5 வருஷத்துக்கு அப்பறம் இந்த வருஷம் தான் திருவிழா நடக்க போகுது சாமீ உக்கிரமா வரும் எனக்கு அதை நினைச்சாதான் பயமா இருக்கு..

தாத்தா , ஹ்ம்ம் எனக்கும் ஏதோ தப்பு பண்ண மாதிரி தோணுது பார்ப்போம் என்ன நடக்குனு என்றார் கலக்கத்துடன்

பாட்டி , ஹ்ம்ம் அந்த பெரியாச்சியும் கருப்பனும் தான் நமக்கு துணையா இருந்து காக்கணும் என்று வேண்டிக்கொண்டார் .

காமாட்சியம்மாள் நினைத்தது போலவே தான் நடந்திருந்தது. வேதநாயகத்திற்கு சில தீய பழக்கங்கள் இருந்தது. கல்லூரியில் படிக்கும் போது சில கூடா நட்பாள் புகை பிடிக்க கற்று கொண்டார். அதன் பின் தொழிலை கையில் எடுத்ததும் சில business பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அங்கு அவர் கற்றுக்கொண்டது குடிப்பழக்கம்.

இப்படியிருக்க திருவிழாவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்க அனைவரும் கிளம்பி அவர்களின் சொந்த ஊர் திருநெல்வேலிக்கு சென்றனர்.

கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.
வெள்ளி வீச்சரிவாளையும் , தங்க திரிசூலத்தையும் அம்மனின் பாதத்தில் வைத்துவிட்டு பெரியாச்சி அம்மனை வணங்கி நின்றார் மித்ரேந்திர ராஜா.

ஒரு கையில் ஆயுதத்தையும் இன்னொரு கையில் குழந்தையும் மடியில் ஒரு பெண்ணின் உடலை கிழிப்பதுபோலவும் காலில் ஒரு ஆணினை ஆக்ரோஷமாக மிதித்திருப்பது போலவும் இருந்த அந்த அன்னையின் கண்ணில் கருணை மட்டுமே இருந்தது .

அதனை கண்டா தாத்தாவின் கண்ணில் கண்ணீர் கொட்டியது.

திருவிழா நாளும் வந்தது.......

அம்மனுக்கு அலங்காரம் முடிந்து அன்னை ஜொலித்தால்.......

மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு ஆரத்தி எடுக்க காமாட்சியம்மாளுக்கு அருள் உக்கிரமாக ஆடிக்கொண்டிருந்தார்.
அவரை பார்த்த மக்கள் கன்னத்தில் போட்டுகொண்டு ஆத்தா மகமாயி பெரியாச்சியம்மா என்று பக்தி மிகுதியில் ஆர்ப்பரித்து கொண்டிருந்தனர்.

அப்போது பூசாரி திரிசூலத்தை கொண்டுவந்து காமாட்சியம்மாளிடம் கொடுத்தார். அவரோ இன்னும் அதிகமாக அருள் வந்து ஆடினார். அதே ஆக்ரோஷத்துடன் கருப்பசாமி சிலை இருந்த இடம் நோக்கி ஆடிகொண்டே சென்றார்.அவரின் பின் பூசாரி வெள்ளி வீச்சரிவாளோடு சென்றார்.
அங்கு கருப்பசாமிக்கு பூஜை நடக்க தாத்தாவுக்கு அருள் வரும் என்று ஊர் மக்கள் எதிர் பார்க்க, தாத்தாவோ தன் மகன் வேதநாயகத்துக்கு அருள் வரும் என்று எதிர் பார்க்க ஆனால் நடந்தது..........

தொடரும்..........
 
அத்தியாயம்-8

காற்றில் உன் வாசம்

கருப்பசாமிக்கு பூஜை நடக்க தாத்தாவுக்கு அருள் வரும் என்று ஊர் மக்கள் எதிர் பார்க்க, தாத்தாவோ தன் மகன் வேதநாயகத்துக்கு அருள் வரும் என்று எதிர் பார்க்க ஆனால் நடந்தது..........
உறுமி முழங்க மணி சத்தங்கள் ஒலிக்க மேளதாளங்களின் ஓசைகளுக்கு நடுவில் ஹெய்யய்யய்யய் என்ற சத்தத்துடன் முன்னாடி ஆடிக்கொண்டிருந்த காமாட்சியம்மாளின் காலில் வந்து விழுந்தான் வீரசிம்மன்.
வீரசிம்மன்மீது அருள் ரொம்ப உக்கிரமாக வந்து ஆடிக்கொண்டிருந்தார். முதன் முதலில் அருள் வருவதாலோ 5 வருடத்திற்கு பின் கொடுக்கின்ற திருவிழா என்பதாலோ அருள் நிக்கவே இல்லை. உடம்பை குலுக்கி கையை நெட்டி முறித்து ஆடுவதுலே ஊர் மக்களுக்கு புரிந்து விட்டது வந்திருப்பது கருப்பசாமி என்று . ஆனால் அதனை அவரே கூறவேண்டும் அப்போதுதான் சாமியின் வீச்சரிவாளை அவரிடம் கொடுத்து சாமக்கொடையின் போது வேட்டைக்கு அனுப்ப முடியும். இல்லையேல் ஏதாவது அசம்பாவிதம் நேரக்கூடும் என்று அவ்வூர் மக்களால் நம்பப்படுகிறது.
ஆனால் அவருக்கு அருள் நிற்பதுக்குண்டான அறிகுறி எதுவும் தென்படவில்லை . நேரம் ஆக ஆக அதிகரித்ததே தவிர நிற்கவில்லை. ஒருவரும் வீரசிம்மனிடம் நெருங்க முடியவில்லை அவரும் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை .தாத்தாவிற்கு தான் ஏதோ தவறு செய்த உணர்வு ஏற்பட்டது.
யாரும் எதிர்பார்க்கா நேரம் தாத்தா வீரசிம்மனின் காலில் விழுந்தார்.
ஐயா கருப்பு என்னை மன்னிச்சிருய்யா பெரிய பாவத்தை பண்ணிட்டேன் உன் அருள் இல்லாத ஒருத்தன்கிட்ட உன்னோட பொக்கிஷத்தை ஒப்படைச்சிட்ட அதுக்காக என்னை மன்னிச்சிருய்யா என்னோட அண்ணன் மகனாயிருந்தாலும் வீரசிம்மன் எனக்கும் மகன்தான் அவனுக்கு எதுவும் வராமல் நீந்தாய்யா பாத்துக்கணும் என்றார் கண்ணில் நீருடன்.
அந்த வார்த்தைகளை கேட்ட கருப்பசாமியின் ஆக்ரோஷம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்தது. ஆனால் தாத்தா பேசிய வார்த்தைகள் மேளச்சத்தத்தில் யாருக்கும் கேட்காமல் போனது.
அதன் பின் பூசாரி வந்து வந்திருப்பது யாரு என்று கேட்க 'கருப்புசாமி டா இந்த ஊரை காக்குறவன் டா' என்று வீரசிம்மன் கூற அப்போதுதான் தாத்தாவிற்கு மனம் தெளீந்தது மக்களுக்கும் அந்த வார்த்தையில் திர்ப்தி ஏற்பட்டது. பின்னர் சாமக்கொடைக்காக பூஜைகள் நடந்தது.
வீரசிம்மன் கையில் தீப்பந்தமும் வீச்சரிவாலும் கொடுக்கப்பட்டது கழுத்து நிறைய மலைகளோடு பெரியாச்சி விபூதி பூசி ஆசி வழங்க சாமி வேட்டைக்கு கிளம்பியது.மேளதாளங்களும் உறுமியும் விண்ணை பிளக்கும் அளவுக்கு சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது. சாமி வேட்டைக்கு சென்று வரும் வரை மேளச்சத்தங்கள் கேட்டு கொண்டே இருக்கவேண்டும்.
( அது ஏன்னா சாமிக்கு முழுசா அருள் இருக்கனும் இல்லனா உயிருக்கு ஆபத்தாகிடும். அருள் குறையும் போது மேளச்சத்தத்தை கேட்டாள் அருள் அதிகம் ஆகும்னு சொல்லுவாங்க .....வேட்டைக்கு போற சாமீ நல்லபடியா திரும்பி வந்தாதான் ஊருக்கு நல்லது. அதுமட்டுமில்லை கருப்பசாமி ஒரு நாள் வேட்டைக்கு சென்று வருவது தினந்தோறும் ஊரை சுற்றிவந்து அந்த ஊரையே காக்கும் என்றுகூறுவர்.)
வேட்டைக்கு சென்ற சாமீ பெரும் குரலோடு கத்திகொண்டே கோவிலுக்குள் இருக்கும் கருப்பசாமி சிலையின் முன் நின்று ஆடியது . பின் பூசாரி பூ கட்டி போட்டு எடுக்க சொல்ல நல்ல பூவையே கருப்பசாமி கொடுத்தார். இப்பொழுது தான் ஊர் மக்கள் சந்தோசமாக உணர்ந்தனர்.
திருவிழா முடிந்த சந்தோஷத்தில் ஊர் மக்கள் பெரியாச்சியாக இருக்கும் காமாட்சியம்மாளிடம் குறி கேட்க வரிசையில் நின்றனர்.
அப்போது ஒரு பெண் தன் சேலையின் முந்தானையை முன்ன நீட்டி , ஆத்தா எனக்கு 5 வருஷமா பிள்ளை இல்லம்மா நீந்தான் தஞ்சம்னு வந்திருக்க தாயீ என் வயித்தில ஒரு முத்த குடும்மா என்று கண்ணீர் மல்க கையேந்தி நின்றாள்.
அதற்கு பெரியாச்சியோ , உன் புருஷனுக்கு பெண் குழந்தை பிறந்தாள் கள்ளிப்பால் கொடுத்து கொன்றுவான். அதுக்கு ஏன் நான் உன் வயித்தில ஒரு உயிரை கொடுக்கணும்.
அப்பெண்ணோ பக்கத்தில் இருக்கும் தன் கணவனை பார்க்க அவனோ தலை குனிந்தான்.பின் அப்பெண் பெரியாச்சியிடம் , ஆத்தா எனக்கு நீ பிள்ளையை கொடு அதை நான் உன் பொறுப்புள விடுற நீயே பாத்துக்கோ என்றாள் தீர்மானத்துடன்.
பெரியாச்சியோ , ஹா ஹா ஹா என்று சிரித்துவிட்டு இந்த வார்த்தைக்காக தான் காத்திருந்த உன் வாயால சொல்லிட்ட அடுத்த வருஷம் உன் வீட்டுல தொட்டில் ஆடும் தைரியமா போ என்று கூறி விபூதி பூசிவிட்டால்.
அதன்பின் , மித்ரேந்திர ராஜா வர அவரை பார்த்த பெரியாச்சி , என்னய்யா நீ செஞ்ச தப்ப கருப்பு காலுல விழுந்து மன்னிப்பு கேட்டு உன் பாவத்தை போக்கிட்ட ஆனால் உன் மகன் பண்ணப்போற தப்பு 25 வருஷம் உன் குடும்பத்தை மட்டும் இல்லாம இந்த உயிரையே நாசமாக்க போகுதே என்ன செய்யப்போற என்றார் கோவமாக .
தாத்தா , ஆத்தா என்னம்மா சொல்ற நீதாம்மா எல்லாரையும் காப்பாத்தணும் என்று அவளின் காலில் விழுந்தார் .
பெரியாச்சி , உன் மகனுக்கு சீக்கிரம் கல்யாணத்தை முடி இதுக்கு ஒரே தீர்வு அதுமட்டும் தான் .
அவரும் சரி என்றார் .
பின்னர் திருவிழா முடிந்து வீடு திரும்பியதும் வீச்சரிவாள் இருந்த பெட்டகத்தை வீரசிம்மனிடம் ஒப்படைத்துவிட்டார் தாத்தா. அதனை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதினார் வேதநாயகம்.அதிலிருந்து அவர் தந்தையிடம் சரியாக பேசுவது இல்லை..
வேதநாயகத்தின் கல்யாண பேச்சு தொடங்கியது. தாத்தா அவருக்கு பெண் பார்க்க ஆனால் வேதநாயகமோ தன் தோழனின் தங்கையான சகுந்தலா தேவியை தான் கல்யாண செய்வேன் என்று பிடிவாதம் பிடிக்க பெரியவரும் வேண்டாவெறுப்பாக சம்மதம் தெரிவிக்க கல்யாண வேலைகள் தொடங்கியது .
கல்யாணத்தை பெரியாச்சியம்மன் கோயிலில் நடத்த முடிவு செய்ய அதற்கு வேதநாயகம் ஒப்புக்கொள்ளவில்லை. தந்தைக்கும் மகனுக்கும் நடந்த போராட்டத்தில் மகனே ஜெயிக்க கல்யாணம் மண்டபத்தில் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. சரி கோவிலுக்கு சென்று பத்திரிக்கை வைத்து கும்பிடலாம் என்று நினைத்து ஏற்பாடுகள் நடக்க கடையிலிருந்து பத்திரிக்கை வாங்க சென்ற தாத்தா காலில் காயத்தோடு வந்து நின்றார். தாத்தா எல்லாரையும் சமாதான படுத்த பாட்டி மட்டும் ஏனோ எதையும் ஏற்க மறுத்தார் .
கல்யாண நாள் மணமேடையில் வேதநாயகமும் சகுந்தலா தேவியும் அமர்ந்திருக்க ஐயர் மந்திரம் ஓதிக்கொண்டிருந்தார். அப்போது அவர்கள் பக்கத்தில் வீரசிம்மனின் மகன் ஆருத்ரமித்ரன்( வயது 4) அவனது தாய் அவனை சமாதானப்படுத்த கையில் கொடுத்திருந்த ஜூஸ் அக்னியில் கொட்டிவிட அக்னி அணைந்தது. அதனை பார்த்தவர்கள் அபசகுனம் என்று கூற தாத்தா அனைவரையும் சமாளித்தார். ஆனால் பாட்டி மட்டும் தன் மனதில் 'இன்னும் என்னலாம் நடக்க போகுதோ' என்று கலக்கம் அடைந்தார்.
அதன்பின் ஐயர் தாலியை கேட்க காமாட்சியம்மாளின் தங்கை விசாலாட்சி மஞ்சள் வைக்க எடுத்து சென்றதால் அதை கொண்டு வர காமாட்சியம்மாள் சென்றாள். ஆனால் அங்கோ விசாலாட்சி தாலிக்கு மஞ்சள் வைக்க வந்தவர் மின்விசிறியை போட்டுவிட்டு பின் வைக்கலாம் என்று நினைத்து தாலியை தாம்பாளத்தில் வைத்து விட்டு அந்த அறையில் இருந்த மின்விசிறியை போட ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்டார். நல்லவேளையாக அவருக்கு எதுவும் ஆகவில்லை ஆனால் கையை அசைக்க முடியவில்லை. கையை தூக்க முயல அந்த சமயம் தான் காமாட்சி உள்ளே வந்தார் நடந்ததை கேட்டதும் பெரியதாக அதிர்ந்தார்.
விசாலாட்சி , அக்கா ஏதோ தப்பா தெரியுதுக்கா கல்யாணத்தை பேசாமல் நிறுத்திரலாம் நம்ம புள்ள வாழ்க்கை யோசிக்காத அக்கா என்றார் கலக்கத்துடன்.
காமாட்சி , இல்லை விசாலாட்சி ஒரு பொண்ணுக்கு மணமேடை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னு போச்சுன்னா ஊரு தப்பா பேசும் அவளோட வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிடும் அதுமட்டும் இல்ல நம்ம பரம்பரைக்கே அந்த பொண்ணோட பாவம் வந்து சேரும் நீ கவலைப்படாத எல்லாத்தையும் அந்த பெரியாச்சியும் கருப்பனுக்கு பாத்துப்பாங்க வா இப்போ மணமேடைக்கு போவோம் என்று சமாதானப்படுத்தி கூட்டிச்சென்றார்.
கல்யாணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது பெரியவர்களின் மனம் மட்டும் கலக்கத்துடனே இருந்தது.
இவர்களின் திருமணம் நடந்து முடிந்து ஒரு வருடம் கடந்த நிலையில் சகுந்தலா தேவியின் மொத்த சுயரூபமும் வெளியில் வந்தது.
வீட்டு வேளைகளில் எதிலும் கலந்துகொள்ளமாட்டாள் ஆனால் மத்தவர்களை வேலை வாங்குவாள். காலையில் நேரம்கழித்து எழுபவளுக்கு bed காபி வேண்டும் இல்லையேல் வீடு ரெண்டாகும். வீட்டிற்குள் நுழைந்த சிறிது நாளில் தன் அண்ணன் குடும்பத்தையும் வீட்டிற்குள் கொண்டுவந்துவிட்டால். ஆனால் வீட்டிலுள்ள யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதுவே அவர்களுக்கு வசதியாகி போனது தன் கணவனின் கையிலிருந்த சில பொறுப்புகளை தன் அண்ணனுக்கு வாங்கித்தந்தால் சகுந்தலா தேவி.
வீட்டில் யாராவது குறை கூறினாலோ அல்லது திட்டினாலோ வேதநாயகத்திடம் திரித்து கூறி வீட்டில் ஒரு ப்ரெளயத்தையே உண்டு பண்ணிவிடுவாள் சகுந்தலா. அதனால் அனைவரும் அவளிடம் பேசவே யோசிப்பார்கள்.
ஆனால் இவர்களால் என்ன முயன்றும் வீட்டு நிர்வாகத்தில் மட்டும் எதுவும் செய்யமுடியவில்லை அதற்கு காரணம் காமாட்சியம்மாள். அவர்களின் ஜம்பம் காமாட்சியம்மாளிடம் பலிக்காமல் போனது. வேதநாயகத்திடம் மாமியார் கொடுமை என்று கூற நினைத்து அம்மா என்று பேச்சு ஆரம்பித்தாலே அவர்களை அனுசரித்து போ என்று விலகிடுவான். அது அண்ணன் தங்கை இருவருக்கும் பெரும் அடியாகவே இருந்தது . சரி கொஞ்ச நாள் போகட்டும் என்று விட்டு விடுவர். ஆனால் வேதநாயகமோ மற்ற விஷயத்தில் எப்படியோ அன்னை விஷயத்தில் அவர்கள் என்ன முயன்றும் மாறவேயில்லை.
சகுந்தலா தேவிக்கும் காமாட்சியம்மாளை கண்டால் சிறிது பயம்தான். இவள் காலையில் நேரம் கழித்து எழுவதை பார்த்துகொண்டே இருந்த காமாட்சியம்மாள் முதலில் சொல்லி பார்த்தார் பலன் இல்லை. சரி வெள்ளி கிழமை மட்டும் எழுந்துகொள்ள சொன்னார் புண்ணியம் இல்லை. பிறகு ஒரு நாள் தன் மகனின் கையாலே ஒரு வாலி தண்ணீரை ஊற்ற வைத்தார். அதிலிருந்து அவளுக்கு அவரின் மேல் சிறிது பயம் தான் . அவள் கணவன் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தால் இவரோ மகன் என்ற ஆயுதத்தை கையில் எடுத்தார். அதிலும் ஒரு வருடம் ஆகியும் பிள்ளை இல்லை தன்னை ஒதுக்கி வைத்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துவிட்டால் பின்னர் தன் திட்டம் எப்படி பழிக்கும் என்ற பயம் வேறு அதனால அவரிடம் சற்று அடங்கியே இருந்தார்.
கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இந்த 10 வருடத்திற்குள் வீரசிம்மனின் மனைவி ராதிகாவிற்கு இரண்டு முறை கர்ப்பம் தரித்து பின் கலைந்துவிட்டது.
அப்படி இருக்க ஒரு நாள் வெள்ளிக்கிழமை பூஜை நடக்கும் பொழுது காமட்சியம்மாளுக்கு அருள் வந்து தன் சன்னதிக்கு வந்து பொங்கல் வைக்க சொன்னார் பெரியாச்சியம்மா.
மறுவாரமே சென்று பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.எல்லாம் நல்லபடியாக முடிந்து வீடு திரும்பி ஒரு மாதத்தில் சகுந்தலா தேவி கற்பமுற்றாள். அதிலிருந்து சில நாட்கள் கழித்து ராதிகாவும் கறகற்பமுற்றாள்.
ஒரு மாத இடைவெளியில் வேதநாயகம்- சகுந்தலா தேவிக்கு ஒரு ஆண் குழந்தையும் , வீரசிம்மன்-ராதிகாவுக்கு பெண் குழந்தையும் பிறந்தது.
ஆண் குழந்தைக்கு மித்ரேந்திரன் என்றும் பெண் குழந்தைக்கு புனிதமித்ரா என்றும் பெயரிட்டனர்.
அதன்பின் இரண்டு இரண்டு வருட இடைவெளியில் அரவிந்தமித்ரன் மற்றும் பிரகாஷ் மித்ரன் பிறந்தனர்.
ஐந்து வருடங்கள் முடிந்த நிலையில் பெரியாச்சியம்மனை வழிபட சென்ற ராதிகா விபத்தில் இறந்துவிட மனைவி இல்லாத வீட்டில் வாழ விரும்பாத வீரசிம்மன் அதே ஊரில் உள்ள தங்களுக்கு சொந்தமான வேறு வீட்டிற்க்கு சென்றுவிட்டார் .
பெரியவர்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும் அவரை தடுக்கவும் இல்லை .
அடுத்த 5 வருட இடைவெளியில் மித்ரா தேவி பிறந்தாள்.
20 வருடங்கள் முடிந்த நிலையில் கோவில் திருவிழா நடத்த ஊர் பெரியவர்கள் முடிவு எடுத்து பெரியாச்சியிடம் குறி கேட்க அம்மன் இந்த வருடமும் உத்தரவு தரவில்லை. பெரியவர்களுக்கு அதில் பெரும் வருத்தமே 20 வருடங்களாக பெரியாச்சியம்மன் உத்தரவு தரவில்லை இந்த வருடமாவது தரும் என்ற நம்பிக்கையில் வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அடுத்துவந்த 10 வருடமும் உத்தரவு தரவில்லை கோவிலை புதுப்பிக்க கேட்டதுக்கும் அனுமதி தரவில்லை.
இந்த 30 வருடங்களில் நடந்ததை வீட்டு வாசலிலே நின்று நினைத்து பார்த்துக்கொண்டிருந்த பாட்டியை யாரோ தொட்டு அழைக்க திரும்பி பார்த்தார் பாட்டி. வேற யாருங்க நம்ம ஹீரோ தான்.
மித்ரன் , என்ன பாட்டி வாசல்ல நின்னு கனவு கண்டுட்டு இருக்கியா ???
பாட்டி , வாய்யா என்ன ஓடிட்டு வந்திட்டியா ?????
மித்ரன் , அட பாட்டி அது ஓடுறது இல்ல jogging சரி அதை விடு இங்க ஏன் நிக்கற ???
பாட்டி , அது என்னவொய்யா என் வாயில நுழைய மாட்டேங்குது... சும்மாதாய்யா நிக்குறேன் ஏதோ பழைய நியாபகம் வாய்யா உள்ள போவோம்.
மித்ரன் , என்ன தாத்தா கூட duet பாடுநீயா??? என்றான் கிண்டலாக.இருவரும் பேசிக்கொண்டே ஹாலுக்கு வந்திருந்தனர்.
பாட்டி , இந்த வயசுல நான் எங்கய்யா பாடப்போறேன் நீந்தான் ஒரு நல்ல பொண்ண காதலிச்சு duetu பாடணும் என்றார் சிரிப்புடன் .
இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டே மாடியிலிருந்து இறங்கி வந்தார் சகுந்தலா தேவி வந்தவர் , அவன் எதுக்கு யாரையோ காதலிக்கனும் அவனுக்காக சின்ன வயசுல இருந்தே என் அண்ணன் பொண்ணு நீலவேணி காத்திருக்கும் போது என்றார். அதற்கு
பாட்டியோ சற்றும் யோசிக்காமல் எதுக்கும்மா உன்னை மாதிரியே 8 மணிக்கு எழுந்திருக்கவா????? என்றார்.
அவ்வளவுதான் சகுந்தலாவின் வாய் தானாக மூடிக்கொண்டது.அதனை பார்த்து சிரித்த மித்ரன் தன் அம்மாவிடம் , அம்மா நான் எப்போவும் அப்பா பண்ண தப்ப பண்ணமாட்டேன் பாட்டி பார்க்கிற பொண்ண மட்டும் தான் கல்யாணம் பண்ணுவேன் ஒருவேளை காதல் கீதல்னு வந்தாகூட பாட்டிகிட்ட தான் first சொல்லுவேன் என்றான்.
சகுந்தலா , அப்போ சின்ன வயசில இருந்து நீந்தான் வேணும்னு ஒருத்தி சுத்திட்டு இருக்காளே அவளுக்கு என்ன பதில் சொல்றது??
மித்ரன் , நீங்க என்ன பதில் வேணுனாலும் சொல்லிக்கோங்க ஆனால் அந்த fraud ஓட மகளை ஒரு நாளும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன் என்றான் கோவமாக
பாட்டி , அய்யா வார்த்தை தப்பா இருக்கு பெரியவங்கள மரியாதை இல்லாமல் பேசக்கூடாது என்றார் கண்டிப்புடன்.
மித்ரன் , மன்னிச்சிருங்க பாட்டி அவரு கம்பெனியில பண்ண குளறுபடியை பார்த்ததும் tension ஆகிட்டு அதுக்கு இவங்களும் கூட்டு அதான் இனி அப்படி பேசமாட்டேன் என்று கூறியவன் மாடி ஏறி தனது அறைக்கு சென்றுவிட்டான்.
ஹாலில் இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் சகுந்தலா தேவி முகத்தை தொங்கப்போட்டு கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். காமாட்சியம்மாள் ஒரு சிரிப்புடன் பூஜை அறைக்கு சென்றார் .
தன் அறைக்கு சென்ற மித்ரனோ மிகுந்த கோவத்தில் இருந்தான். விஸ்வநாதன் ( சகுந்தலாவின் அண்ணன் ) கம்பெனியில் செய்த குளறுபடியை நினைத்து எரிச்சலாக வந்தது. விஸ்வநாதன் கோடிக்கணக்கில் திருட்டும் செய்திருந்தார். அவரை போலீஸில் ஒப்படைக்க மித்ரன் வீட்டில் உள்ளவர்களிடம் கூற சகுந்தலா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை பெரியவர்களும் குடும்பம் மனம் போகும் என்று கூறிவிட வீட்டை விட்டு மட்டும் அனுப்பினர்.
இதையெல்லாம் நினைத்து கொண்டிருந்த மித்ரனுக்கு கோபம் அதிகமானதே தவிர குறையவில்லை. அவன் மனதில் , இந்த ஆளு செஞ்சது மன்னிக்கவே முடியாதது மன்னிக்கவும் கூடாது இதுல இந்த ஆளு பொண்ண நான் கல்யாணம் பண்ணனுமா no never என்று நினைத்துக் கொண்டிருந்தவனின் கைபேசியின் மணியோசை கேட்க அதனை எடுத்து பார்த்தவனின் முகம் புன்னகையை வெளியிட்டது உடனே காலை atten செய்து காதில் வைத்தான்.
மித்ரன் , ஹலோ சோடாபுட்டி என்றான் சிரிப்புடன்
சோடாபுட்டி , என்னை அப்படி கூப்பிடக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன் கேட்கமாட்டியா?? என்றது எதிர்முனை கோவமாக.
மித்ரன் , அப்படித்தான் கூப்பிடுவ என்ன பண்ணுவ???
சோடாபுட்டி , எங்க அம்மா , அப்பா எனக்கு புனிதமித்ரான்னு பெயர் வச்சிருக்காங்க நீ என்னடான்னா சோடாபுட்டினு கூப்பிடுற பக்கி என்றாள் புனிதமித்ரா.
அட ஆமாங்க வீரசிம்மனின் மகள் புனிதமித்ராவே தான். மித்ரன் , புனிதா இருவருக்கும் ஒரே வயது என்றாலும் அண்ணன் தங்கை போலவே பழகினர். மித்ரா தேவியை விட புனிதாவின் மிதே அதிக பாசம் இருப்பதாக தோன்றும் மித்ரனுக்கு அதனாலே புனிதாவிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வான். அவளும் அண்ணன்,தங்கை என்ற பந்தத்தை தாண்டி இன்னும் ஏதோ சம்மந்தம் இருப்பதாகவே தோன்றும்.
சரி வாங்க என்ன பேசுறாங்கனு கேட்போம்...
மித்ரன் , சரிங்க புனிதா மேடம் இனி புனிதானே கூப்பிடுறேன்... என்ன காலையிலே கால் பண்ணிருக்க என்ன விஷயம் ????

புனிதா , அது அந்த பயம் இருக்கட்டும்.... இன்னைக்கு காலேஜ் last day ல என்ன pickup drop pickup பண்ணிறிய plsss அண்ணா.

மித்ரன் , ஓஹ் ஹோ இதுக்குத்தான் எனக்கு கால் பண்ணியா??? உங்க அண்ணன் ஒருத்தன் இருக்கானே அவனை கூட்டிட்டு போகவேண்டியதான??

புனிதா , அது இல்லடா அண்ணனுக்கு ஏதோ important operation இருக்குதாம் அதாண்டா pls என்று கெஞ்சினாள் .

மித்ரன் , ஹ்ம்ம் ஹ்ம்ம் சரி அதுயென்ன pickup drop pickup ??? என்றான் கேள்வியாக

புனிதா , தேங்க்ஸ் டா.....வீட்டுலேருந்து pickup பண்ணிக்கோ அப்பறம் காலேஜ்ல drop பன்னிரு அப்பறம் theatre ல இருந்து pickup பண்ணிக்கோ அவ்ளோதான் என்றாள் கூலாக .

மித்ரன் , ஓஹ் ஹோ அப்படியா மேடம்..... சரிங்க மேடம் வரேன் மேடம்.... நீங்க படத்துக்கு போறது அப்பாக்கு தெரியுமா மேடம் ??? இல்ல என்று இழுத்தான்.

புனிதா , சொல்லிட்டேன் சொல்லிட்டேன் போதுமா ????

மித்ரன் , சரி கோபப்படாத செல்லக்குட்டி போன தடவை மாதிரி வெளில யாராவது பார்த்து அப்பாகிட்ட சொல்லிட்டா நமக்குத்தான் கஷ்டம் அதுக்குத்தான்டா கேட்ட என்றான் வாஞ்சையாக.

புனிதா , சரி சரி நான் சொல்லிட்டேன் நீ கவலைப்படாத சீக்கிரம் வந்திரு என்றாள்

மித்ரன் , ஓகே டா நீ கிளம்பி இரு வந்திறேன் நீ லேட் பண்ணிராத சரியா ??? என்று கேள்வி கேட்டவன் அதற்கான பதில் சுப்ரபாதமாக ஒலித்ததும் காலை வைத்துவிட்டான் .

பின் மித்ரன் குளித்து கிளம்பி கிழே செல்ல தாத்தா அவனுக்காக dining table லில் காத்திருந்தார். அவனை பார்த்ததும் ,

ஐயா வாய்யா சாப்பிடலாம் என்றழைத்தார் .
அவரை பார்த்து சிரித்தவன் அவர் அருகில் அமர்ந்தான்.

வள்ளி வந்து காலை உணவை பரிமாற இருவரும் சாப்பிட ஆரமித்தனர்.

தாத்தா , ஐயா மித்ரா படிப்பு முடிய போகுது அடுத்து என்னய்யா பண்ணபோற என்றார் கேள்வியாக .

மித்ரன் , தாத்தா நான் IPS பரீட்சை எழுதப்போறேன் அதுதான் என்னோட கனவு என்றான் கண்ணில் கனவு மின்ன .

தாத்தா , நல்லதுய்யா நீயாவது சொத்து சுகம்னு யோசிக்காம உன் கனவு பற்றி யோஷிக்குறியே சந்தோசம் ராசா என்றார் கண்ணீருடன்.அதனை பார்த்த மித்ரன் பதற அப்போது அங்கு வந்த

பாட்டி , என்னங்க புள்ளை சாப்பிடும்போது என்ன பேசுறீங்க என்று அதட்டவும் தன் கண்ணீரை துடைத்து கொண்டார்.

பாட்டி , ராசா நீ வருத்தப்படாதய்யா அந்த மனுஷன் ஏதோ நினைப்புல சொல்லிட்டாரு நீ போலீஸ்காரனா ஆகப்போறேன்னு சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோசம்... எங்க ஐயா கூட போலீஸா ஆகணும்னு ஆசைபட்டாரு ஆனால் அவரு ஐயா அதுக்கு சம்மதிகளை சொத்து பத்து இருக்கும்போது நீ மத்தவங்களுக்கு சம்பளம் கொடுக்காம ஐஞ்சுக்கும் பத்துக்கும் வேற ஒருத்தன் கையை எதிர்பார்க்க போரியான்னு சொல்லி அனுமதிகளை.... நீ சந்தோசமா பரீட்சை எழுதுய்யா அந்த பெரியாச்சி துணை இருப்பா என்றார்.

இதை அனைத்தையும் கேட்டு கொண்டே வந்த சகுந்தலாவும் வேதநாயகமும் dining டேபிள் லில் அமர்ந்தனர்.

சகுந்தலா , ஏன் அத்தை என் பையனுக்கு மட்டும் என்ன தலை எழுத்தா சொத்து இருக்கும் போது எதுக்கு வேலைக்கு போகணும் என்றார் கோவமாக .

பாட்டி , சொத்து இருந்து என்ன புண்ணியம் சுலபமா ஏமாத்திறாங்க அதுவே கூட பதவி இருந்தாள் கிட்ட நெருங்க முடியுமா??? அதுவும் இல்லாமல் புள்ளைங்க ஆசையை பெத்தவங்க நிறைவேத்தனும் அதைவிடுத்து தடையா இருக்க கூடாது புரியும்னு நினைக்கிறேன் என்று பதில் கொடுத்தவர் மித்ரன் தட்டு காலியாவதை பார்த்து 'ஐயா இட்லி வச்சிக்க என்றார்' .

இனி சகுந்தலா அங்கே வாய் திறப்பாரா ??வாய்ப்பே இல்லை என்றுதான் நமக்கு தெரியுமே.

மித்ரன் , எனக்கு போதும் பாட்டி நீங்க சாப்பிடுங்க புனிதா கால் பண்ணிருந்தாள் அவளை காலேஜ்கு கூட்டிட்டு போகணுமாம் so நான் கிளம்புறேன் என்று கூறியவன் கை கழுவி விட்டு பாட்டியின் கன்னத்தில் முத்தமிட்டு தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

வெளியில் வந்ததும் தன் bike ஐ எடுக்க எதிரில் அரவிந்தும் பிரகாஷும் வந்தனர்.

மித்ரன் , என்னடா exam முடிஞ்சிட்டு அதனால கிரிக்கெட் விளையாட ஆரமிச்சிட்டீங்களா ???

அரவிந்த் & பிரகாஷ் , ஹி ஹி ஹி......

மித்ரன் , சரி சிரிச்சது போதும் உள்ள போங்க ஈவினிங் வந்து உங்கள கவனிக்கிறேன் என்று கூறியவன் பைக்கின் ஹாண்ட்பேரை முறுக்க அந்த 'royal enfield' வண்டி பறந்தது .

தன் IPS கனவை பற்றி சிந்தித்து கொண்டு இருந்தவனின் வாழ்க்கையை மாற்றப்போகிற தேவதையை இன்று சந்திக்க போகிறான் என்பதை தெரியாமலே அவன் மனது வானில் சிறகின்றி பறந்து கொண்டிருந்தது என்ன காரணம் என்று அறியாமலே......

காற்றில் வாசமாக மித்ரனின் தேவதை வருவாள் அடுத்த அத்தியாயத்தில்......

தொடரும்.......




மக்களே , பெரியாச்சியம்மன் கருப்பசாமி கோவில் திருவிழாவில் நடக்கும் அத்தனையும் உண்மை கலந்த எனது கற்பனையே பிழை இருந்தால் மன்னிக்கவும்.

கூடிய விரைவில் பெரியாச்சியம்மனின் வரலாறை பதிப்பிக்கிறேன்... அது முழுக்க முழுக்க உண்மை சம்பவமாக இருக்கும்.

உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி மக்களே...
 
அத்தியாயம்-9

காற்றில் உன் வாசம்

மித்ரன் புனிதாவின் வீடு நோக்கி தன் 'royal enfield' பைக்கில் சென்று கொண்டிருந்தான்.அவன் மனதில் ஏதோ இனம் புரியாத சந்தோசம் , ஏதோ ஒரு பரபரப்பு இருந்தது. அதை இன்னதென்று வரையறுக்க அவனால் முடியவில்லை. ஆனால் மனதிற்கு பிடித்தமானதாக இருந்தது. தனக்கு சந்தோசம் தரக்கூடிய ஏதோ ஒன்று நடக்கபோகிறது என்று அவனது மனது அடித்து சொன்னது.

( என்ன இந்த பையன் இப்போவே இப்படி உருகுறான் இது சரியில்லையே.... எல்லாம் காதல் படுத்துற பாடு.... 😃😃😃🙀🙀)

புனிதா வீட்டின்முன் தனது பைக்கை நிறுத்திய மித்ரன் காதில் 'என்ன ஆச்சு உங்களுக்கு, இங்க எதுக்குவந்தீங்கயாரு உங்களை இப்படிபண்ணாங்க' என்ற இனிய குரல் விழ சட்டென திரும்பி பார்த்தான்.

அங்கே ஒரு பெண் முதுகு காட்டி நின்றுகொண்டிருந்தாள். மித்ரன் எட்டி எட்டி பார்த்தும் அவள் முகம் தெரியவில்லை. சரி அங்கு போய் பார்ப்போம் என்று நினைத்து பைக்கில் இருந்து கீழே இறங்கினான்.

( அப்போ நீ இன்னும் பைக்ல இருந்து கிழ இறங்களையா ????😡😡 இறங்காம தான் குதிச்சியா பக்கி ??..... இப்போவே இப்படியா ?? கடவுளே இந்த பாவியை ரட்சியும் ......🙀🙀🙀)..

பைக்கில் இருந்து மித்ரன் இறங்கும் பொழுது அவனின் புத்தகம் ஒன்று கீழே விழுந்தது அதனை அவன் கவனிக்கவில்லை . இறங்கிய மித்ரன் அந்த பெண்ணை நோக்கி இரண்டு அடி நடந்திருப்பான் திடிரென்று அவனது மூளை ,'டேய் மித்ரா என்னடா பண்ற நில்லுடா... இதுக்கு முன்னாடி பெண்ணையே பார்த்தது இல்லையா ??' என்று மண்டையில் நங்கென்று தட்ட சடன் பிரேக்குடன் நின்றது அவனது கால்கள்.

ச்சை , என்ன இது பட்டிக்காட்டான் மிட்டாய்கடையை பார்த்தமாதிரி நான் அந்த பொண்ணை பார்த்ததும் பின்னாடியே போறேன் (பட்டிகாட்டனாச்சும் மிட்டாய் கடையை பார்த்தான் ஆனால் நீ இன்னும் அவளை பார்க்கலைப் பக்கி....😂😂😂😂) நல்ல வேளை நம்ம மூளை நம்மளை ஸ்டாப் பண்ணிட்டு இல்லனா அசிங்கமா போயிருக்கும் என்று நினைத்தவன் திரும்பி போக நினைக்க அவனின் மனமோ,' இப்போ ஏன் திரும்பி போற நீ என்ன அந்த பொண்ணுகிட்ட ஐ லவ் யூ என்றா சொல்லப்போற சும்மா முகத்தை தான பார்க்கப்போற அதெல்லாம் ஒன்னும் தப்பு இல்லை' என்றது.

அய்யய்யோ இப்போ யாரு பேச்சை கேக்குறது என்று குழம்பியவனை யாரோ அழைக்கும் குரல் கேட்டு நிமிர்ந்தான். பார்த்தவனின் விழி பார்த்தபடியே இருக்க அவனின் மனமோ ,

இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வரம்பையமோகினியோ



இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வரம்பைய மோகினியோ



மனம் முந்தியதோ
விழி முந்தியதோ
கரம் முந்தியதோ எனவே



உயர் சந்திரசூடர்குறும்பல
ஈசர்சங்கணி வீதியிலேமணி



பைந்தொட



நாரிவசந்த ஒய்யாரிபொன் பந்து
கொன்டாடினளே

மனம் முந்தியதோ
விழி முந்தியதோ
கரம் முந்தியதோ எனவே

என்ற பாடலை பாடிக்கொண்டிருந்தது.

தன் முன் ஒரு தளிர் கரம் அசைவதை உணர்ந்து சுயநினைவுக்கு வந்தான் மித்ரன் .

அவன்முன் அந்த முதுகு காட்டி நின்றிருந்த பெண் அதாங்க மித்ரனின் தேவதை கையை அவனின் முகத்திற்கு நேராக அசைத்துக்கொண்டிருந்தால் அவளது கையில் ஒரு நாய்க்குட்டி இருந்தது. அதன் காலில் அடிபட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதனை பார்த்த

மித்ரன் , என்னங்க என்னாச்சு என்றான் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு. அப்பெண்ணோ தன் முகத்தில் விழுந்த முடியை தன் உதட்டால் ஊதிவிட்டால் அதிலிருந்து வந்த காற்று அவளின் முடியை மட்டும் அல்ல மித்ரனையும் சேர்த்தே அசைத்தது. பின் அந்த பெண் மித்ரனை பார்த்து , எவ்ளோ நேரம் கூப்பிடுறேன் உங்களுக்கு காது கேக்காத என்றாள்.

மித்ரன் , ஹி ஹி என்று அசடு வழிந்துவிட்டு , பாப்பா பப்பிக்கு என்ன ஆச்சு ??? என்றவன் பாப்பாவில் சற்று அழுத்தத்தை கூட்டினான். அப்போதுதானே அவள் பெயர் கிடைக்கும். பாப்பா என்று கூப்பிட்டாள் கோவப்பட்டு பெயரை சொல்லிவிடுவாள் என்ற எண்ணம் தான்.

ஆனால் அவளோ விடாக்கண்டி போல , அதுவாடா பப்பிய கார்ல போன ஒரு idiot அடிச்சிட்டு போய்ட்டா பாவம்டா பப்பி கத்திட்டே இருக்கு... பப்பிய கொஞ்ச பிடிடா இதோ வரேன்டா என்று மூச்சுக்கு நூறு டா போட்டவள் அவனது கையில் பப்பியை கொடுத்துவிட்டு பக்கத்தில் நின்றிருந்த அவளது vesba urban club 125 நோக்கி நடந்தாள்.

(நம்மாளு என்ன பண்றான்....பாவம் பிளான் எல்லாம் நல்லாத்தான் போட்டப்படி ஆனால் எல்லாம் விதி.....ஹா ஹா ஹா ஹா 😂😂)

அடிங்க நாம இவளை வெறுப்பேத்துனா இவ நம்மள டா சொல்லி காண்டு ஏத்துறாளே.... சரியான வில்லியா இருப்பா போலையே .... இப்போ எப்படி இவளோட பெயரை கண்டுபிடிக்கிறது என்ற யோசித்து கொண்டிருக்க அப்பெண் கையில் ஒரு first aid box உடன் திரும்பி வந்தாள்.

வந்தவள் பப்பியின் காயத்திற்கு மருந்திட்டு கொண்டிருந்தாள்.அவள் கை மருந்திட்டு கொண்டிருக்க மித்ரன் அவளின் அழகை வர்ணித்து கொண்டிருந்தான் . (மனசுல தாங்க ....)

பிறை போன்ற நெற்றி, வில் போன்ற வளைந்த புருவங்கள் த்ரெட்டிங் செஞ்சிருப்பாளோ அழகா வளைஞ்சிருக்கு ( இப்போ இந்த research ரொம்ப முக்கியம் தான்....😱😱) புருவத்தின் மத்தியில் வெள்ளை நிற கல் பொட்டு அதற்கு மேல் சிறியதாக குங்கும கீற்று , செதுக்கி வைத்தது போல் நாசி, தேன் போன்ற உதடு , இடைவரை நீண்ட கூந்தல் இரண்டு பக்கமும் முடி எடுத்து கிளிப் மாட்டி மல்லிகை சரத்தை தொங்கவிட்டிருந்தாள், வெள்ளை நிற long skirt அதே வெள்ளை நிறத்தில் சிகப்பு பூக்களை அங்கு அங்கே தெளித்தார் போன்ற மேல் சட்டை கழுத்தை சுத்திய துப்பட்டா ஆனால்.....
( என்னடா ஆனால் இவ்வளவு நேரம் வர்ணிச்ச இப்போ என்ன .....நீ வர்ணிச்சது மட்டும் அவளுக்கு தெரிஞ்சது அவ்ளோதான் மகனே....😳😳🤔🤔)

ஆனால் இந்த கண்ணு மட்டும் ஏன் இப்படி முட்டை மாதிரி இருக்கு ஒரு வேளை சின்னப்பிள்ளையா இருக்கும் போது ரெண்டு முட்டையை முழிங்கிட்டாலோ ??( ரொம்ப முக்கியமான doubt தான் அவளுக்கு தெரிஞ்சது நீ காலி தம்பி...😃😃😳😳) ...... கண்ணை உருட்டி உருட்டியே நம்மள உள்ளே இலுக்குறாளே 'முட்டைக்கன்னி' என்று அவன் நினைத்து முடிக்கவும் அவள் நிமிரவும் சரியாக இருந்தது.

அப்போது ஒரு கார் அவர்கள் அருகில் வந்து நின்றது . அதிலிருந்து இறங்கியவனை பார்த்த அப்பெண் அவன் அருகில் சென்று அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

அதனை பார்த்த மித்ரன் அதிர்ச்சியில் தனது கன்னத்தை பிடித்து கொண்டு நின்றான்.

தொடரும்......

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

எதுக்கு அந்த பொண்ணு அறைஞ்சது?? வந்த அந்த ஆள் யாரு??...... மித்ரன் அந்த பொண்ணோட பெயரை கண்டு பிடிப்பானா ?? அடுத்த u.d ல soldra.....

அதுவரைக்கும் டாட்டா.....😀😀😀🙏🙏🙏
 
அத்தியாயம் -10

காற்றில் உன் வாசம்

காரிலிருந்து இறங்கிய புதியவனை அந்த vesba பெண் அறைந்ததில் அந்த புதியவன் மட்டும் இல்லை மித்ரனும் அதிர்ந்தான்.

அந்த புதியவனோ , ஏய் அறிவிருக்கா?? எதுக்கு இப்போ அடிச்ச ???? என்றான்.

vesba பெண் , உனக்கு முதல்ல அறிவு இருக்கா ?? எதுக்கு குட்டி நாயை அடிச்ச?? என்றாள் அவனுக்கும் சற்று சளைக்காத கோவத்தில்.

புதியவன் , கேவலம் ஒரு தெரு நாய்க்காக என்னையே அடிச்சிட்டல உன்னை என்ன பண்றனு பாரு என்றான்.

vesba பெண் , என்னது கேவலம் தெருநாயா ???? இந்த வார்த்தை சொன்னதுக்கே உன்ன கொன்னுருக்கணும் பெரியப்பா முகத்துக்காக உன்ன சும்மா விடுறேன் இல்லைனா இப்போ நீ ஜெயிலில் கம்பிதான் எண்ணிட்டு இருந்திருக்கணும் என்றாள் ஏளனமாக.

புதியவன் , ஏய் என்ன டி ரொம்ப பேசுற போனாப்போகுது சித்தி பொண்ணாச்சேன்னு அமைதியா இருந்தா அதிகாரம் பண்ணிட்டு இருக்க ??? பொண்ணா லக்ஷணமா வீட்டுல அடக்கஒடுக்கமா இல்லாமல் இப்படி ரோட்டுல திரிஞ்சிட்டு கண்டதுக்காக என்னை அடிக்கிற idiot என்றான் எரிச்சலுடன்.

Vesba பெண் , விதுன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் என்று கத்தினாள்.

அதுவரை காருக்குள் ஓட்டுனர் இருக்கையில் ஓட்டுனர் உடையில் இருந்த பெரியவர் நிலைமை கை மீறுவதை உணர்ந்து வேகமாக இறங்கி வந்தார் .

வந்தவர் , பாப்பா கோவப்படாதீங்க ஏதோ சின்ன பையன் தெரியாம பண்ணிட்டான் எதுவாயிருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் பாப்பா என்றார் பணிவுடன்.
அதுவரை கோபத்துடன் கத்திக்கொண்டிருந்தவள் அவர் வந்து சொன்னதும்

vesba பெண் , சாரி சந்தானம் தாத்தா நீங்க முன்னாடி போங்க நான் என்னோட வண்டியில வரேன் என்றாள் சற்று கோபம் தணிந்தவளாக.

சந்தானம் , சரி பாப்பா என்றவர் கையோடு விதுனையும் அழைத்து சென்றார்.தணியாத கோபத்துடன் விதுனும் அவருடன் சென்றான்.

இதுவரை நடந்ததை பார்வையாளராக பார்த்துக்கொண்டிருந்த மித்ரன் அந்த vesba பெண் தனது அருகில் வருவதை பார்த்து , என்ன என்றான் கேள்வியாக.

vesba பெண் , ஹ்ம்ம் பப்பி என்றாள்.

மித்ரன் , என்னது ??? என்றான் கேள்வியாக .

vesba பெண் , உங்க கையில பப்பி இருக்கு அதை என்கிட்ட தாங்க என்றாள் .

மித்ரன் , ஓ சாரி இந்தாங்க என்றவன் அவளது கைகளில் பப்பியை கொடுத்தான்.

அதை வாங்கியவள் , என்னோட பெயர் பாப்பா இல்லை என்றவள் நிறுத்த "சாய்ப்ரியா" என்று முடித்தான் மித்ரன் .

பக்கத்தில் கேட்ட ஹாரன் சத்தத்தில் சுயநினைவுக்கு வந்த மித்ரன் தன் மனதிற்குள் , எவ்ளோ அழகான நாட்கள் ஆனால் அவளுடைய குணம் அறிந்தும் தப்பாக பேசிவிட்டோமே என்னை மன்னிப்பாளா என்னோட சபி என்று வருந்தி கொண்டிருந்தான்.

அதே நேரம் அங்கு பள்ளியில் ப்ரியாவுக்கு
CEO ஆபீஸில் இருந்து மெயில் வந்திருந்தது . மாலை 3.30 மணிக்கு meeting என்று.

கணக்கு பிரிவின் சம்மந்தமான meeting என்பதால் புனிதாவும் உடன் சென்றாள். மீட்டிங் முடிவதற்கு 4.30 மணி ஆனதால் புனிதாவை அவளது வீட்டில் விடுவதற்காக புனிதாவின் தந்தை வீட்டிற்கு முன் காரை நிறுத்தினாள் பிரியா.

புனிதாவின் அண்ணன் வெளிநாட்டில் செட்டில் ஆனதால் தந்தையை தனியாக விட மனமில்லாமல் தந்தை வீட்டிலே தங்கிவிட்டால் புனிதா. கார்த்திகேயனுக்கு யாருமில்லா காரணத்தால் அவனும் சம்மதித்துவிட்டான்.

கார் வீட்டின் வாசலில் நிற்கவும் இறங்கிய புனிதா , உள்ள வாங்க mam என்றாள் .

அவளை முறைத்த பிரியா , இது ஸ்கூல் இல்ல வீடு இங்க madam தேவையில்லை என்றாள் ..

அதற்கு புனிதா சிரித்துவிட்டு , சரி டி நிறைய பேசாத உள்ள வா என்றாள்.

சற்று தயங்கிய பிரியா , இல்லை டி இன்னொரு நாள் வரேன் என்று தயங்கி தயங்கியே கூறினாள் .

புனிதா , எதுக்கு தயங்குற என்னாச்சு? நான் கூப்பிடலனாலும் நீயே உள்ள போயிருப்ப இப்போ என்ன?? என்றாள் .

பிரியா, சற்று யோசித்தவள் மதியம் அரவிந்த் கால் செய்து கூறிய விஷயத்தை கூறினாள் .

பின்னர் , எனக்கு நம்பிக்கை இல்லை இருந்தாலும் இப்போ இருக்குற நிலைமையில எது வேணுனாலும் நடக்கலாம் புனி என்றாள்.

புனிதா , ஹ்ம்ம் எனக்கும் மித்து அண்ணா கால் பண்ணாங்க அவங்களோட குரலே சரியில்லை ஹ்ம்ம் நீ முதல்லயே சொல்லிருந்தாள் நான் கார்த்திக் கூட வந்திருப்பேன்ல சரி நீ கிளம்பு என்றாள்.

பிரியா , மா ....... மித்ரன் உனக்கு கால் பண்ணாறா??? என்றாள்

பிரியா எதையோ கூறவந்து மறைத்தது போல் இருந்தது புனிதாவுக்கு பின்னர் நம்மகிட்ட எதை மறைக்கப்போறா நம்மளோட கற்பனையா இருக்கும் என்று அதை விடுத்து ப்ரியாவிடம் ,'ஆமா கால் பண்ணாரு first உனக்கு தான் பண்ணிருக்காரு நீ எடுக்கலைனு எனக்கு பண்ணாங்க' என்றாள்.

பிரியா , ஓஹ் ஹோ சரி டி நான் கிளம்புறேன் என்று காரை start செய்தால். புனிதாவும் சரி என்று கூற வண்டி கிளம்பியது.

வண்டி மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது அப்போது மணி 5 .அந்த தெருவின் வளைவில் திரும்பும் போது ஒரு பெண்ணை ஒரு கும்பல் வேனுக்குள் ஏற்ற முயல்வது தெரிந்தது.வண்டியை அவர்களின் அருகில் சென்று நிறுத்தினாள். அப்போது தான் தெரிந்தது அது மித்ரா தேவி என்று.காரின் டாஷ்போர்டில் இருந்த தனது துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கிழே இறங்கினாள்.

ப்ரியாவின் வண்டி அவர்களின் அருகில் வரும்போதே கவனித்துவிட்ட கும்பல் மித்ராவை வேகமாக வேனில் ஏற்றிவிட்டு இவளிடம் திரும்பியது.
பிரியா அவர்கள் முன் துப்பாக்கியை நீட்டி 'ஒழுங்கா அந்த பெண்ணை என்கிட்ட ஒப்படைச்சிருங்க இல்லை ஒருத்தனும் உயிரோட இருக்கமாட்டீங்க' என்றாள் ஆவேசத்துடன்.

முதலில் அவளை பார்த்து பயந்தாலும் அவளால் என்ன செய்துவிடமுடியும் என்று தோன்ற அந்த கும்பலில் ஒருவன் , இந்தாம்மா என்ன பூச்சாண்டி காட்டுறியா ?? பேசாம போயிடு அதுதான் உனக்கு நல்லது என்று மிரட்டினான்.

அப்போது பிரியா மேல் நோக்கி சுட்டாள் , என்ன டா சுட மாட்டேன்னு நினைச்சீங்களா??? கொன்றுவேன் மரியாதையா அவளை இறக்கிவிடுங்க என்றாள். அதே சமயம் இன்னொரு கும்பல் அவர்களை சுற்றி வளைத்தது..

பிரியா சுதாரிக்கும் முன்பே அவளை பிடித்து அவளது கையிலிருந்த துப்பாக்கியை பிடிங்கினான் அந்த கும்பலின் தலைவன்.

தலைவன் , ஏய் ! நீ என்ன எத்தனை தடவை அடிச்சாலும் சாகாமல் திரும்ப திரும்ப பொழச்சி வந்திட்டே இருக்க ஹான் .... என்றான்.

ப்ரியா , உன்னால என்னை ஒன்னும் பண்ணமுடியாது டா என்றாள் கோவமாக .

தலைவன் , என்னடி திமிரா?? உன்னோட ரெண்டு கையையும் நாலு பேரு பிடிச்சிருக்காங்க நான் இப்போ இந்த கத்தியால குத்த போறேன் இனி எப்படி பேசுறேன்னு பார்க்கிறேன் என்று கூறியவன் கத்தியை கொண்டு அவளை குத்த போக அப்போது எங்கிருந்தோ ஒரு கட்டை பறந்து வந்து அவன் கையை தட்டிவிட கத்தியை கீழே போட்டான்.

எல்லாரும் கட்டை வந்த திசை நோக்கி பார்க்க அங்கே கார்த்திகேயன் பைக்கில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான்.

கார்த்திக் , ஏன்டா எத்தனை தடவை அடிவாங்கினாலும் திருந்தமாட்டியா ??விடுங்கடா அவளை என்றவன் வேக எட்டுக்கள் வைத்து அவர்கள் அருகில் வந்தான்.

கார்த்திக்கை பார்த்த அந்த கூட்டத்தின் தலைவன் சற்று நடுங்கித்தான் போனான். பின்னர் தையிரியத்தை வரவழைத்து கொண்டு தன் சகாக்களிடம் ,'அவனையும் பிடிங்க டா இன்னைக்கு ரெண்டு பேரையும் போட்டு தள்ளிருவோம்' என்று கட்டளையிட அவனை அடிக்க சென்றவர்கள் அடிவாங்கி தரையில் உருண்டனர்.

அப்போது வேனில் இருந்த மித்ரா கீழே இறங்க அவளை கடத்த வந்த கும்பல் அவளை அடிக்க வர அதை பார்த்த பிரியா அவர்களை தடுக்க அப்போது அந்த கூட்டத்தின் தலைவன் கீழே கிடந்த கத்தியை எடுத்து கொண்டு ப்ரியாவை குத்த வேகமாக ஓடி வந்தான்.

அப்போது எங்கிருந்தோ வந்த புனிதா அவனை தடுக்க அவளை தள்ளிவிட்டு விட்டு ப்ரியாவின் வயிற்றில் கத்தியால் குத்தினான்.

புனிதா , ஐயோ ப்ரியாயாயாயா ...........

கார்த்திக் , ப்ரியாயாயாயா...........

மித்ரா , அண்ணிணிணிணி...........

இந்த காட்சியை தான் ப்ரியாவை தேடி பள்ளிக்கு சென்று அதன்பின் CEO ஆபீஸ் சென்று கடைசியாக இங்கு வந்த மித்ரன் கண்ணில் விழுந்தது மித்ரனை பார்த்த அந்த கும்பல் ஆளுக்கு ஒரு திசையில் ஓட ,

பிரியா , மாமாமாமாமமாமா........என்று கத்தினாள்.

மித்ரனுக்கு ஒரே ஒரு நொடி அதிர்ச்சி பின்னர் வேகமாக அவள் அருகில் சென்றவன் அவளை தன் கைகளில் அள்ளி எடுத்தான்.
பின்னர் அவளை ப்ரியாவின் காரில் படுக்க வைத்து கார்த்திக்கை வண்டியை எடுக்க சொன்னான்.

வண்டியில் ஏறும் முன் புனிதாவை ஒரு பார்வை பார்த்தான். அதில் மித்ராவை அழைத்து செல் என்ற கட்டளை பொதிந்திருந்தது.

வண்டியில் ஏறிய மித்ரன் ப்ரியா மயக்கத்திற்கு செல்வதை உணர்ந்து அவளை மடியில் கிடைத்தி அவளது கன்னத்தை தட்டினான் அவனது கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது .
மிகவும் சிரம பட்டு கண்களை திறந்தாள்
பிரியா , மா.....மா மா....மா நா....ன்.....என்.....னை..........

மித்ரன் , என்னடா என்று பதிலளித்தவன் கார்த்திக்கை பார்த்து , வேகமா போடா இரத்தம் ரொம்ப வருது என்றான். கார்த்திக்கின் நிலையோ இன்னும் மோசமாக இருப்பதை உணர்ந்தான்.
அப்போது பிரியா மித்ரனின் சட்டையை பற்றி இழுக்க என்ன என்று கேட்டான்.

பிரியா , மா.......மா.....மா......மா...நா....ன்....... என்று அவள் ஏதோ சொல்ல தவிக்க அதை புரிந்துகொண்ட

மித்ரன் , எனக்கு தெரியும் டா நீ...நீ....... "சாய்பிரியா இல்லை சாய்லக்ஷ்மி" என்று அவன் கூறவும் ஹாஸ்பிடல் வாசலில் கார் நிற்கவும் சரியாக இருந்தது.

ஸ்ட்ரெச்சரில் அவளை படுக்கவைத்து அவளுடன் மித்ரனும் கார்த்திக்கும் சென்றனர்.

மனநிம்மதியுடன் கண்களை மூடினாள் "சாய்லஷ்மி".

தொடரும்......
 

New Threads

Top Bottom