Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Kaadhalin Litmus paritchai - Story

மதுவின் வீட்டில் ஜான்வியின் கைபேசியில் எப்போதும் போல ஷான், பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜஸ்டின் பீபர் என அனைவரும் வருகை தந்திருந்தார்கள். ப்ளூடூத் உதவியுடன் ஸ்பீக்கர்கள் பேய் அலறலாய் அலற மதுவும் ஜான்வியும் மேற்கத்திய பாடல்களை பாடியபடியே தத்தமது வேலைகளைச் செய்தனர்.

மதுவின் பாட்டுக்கச்சேரியை இடைபுகுந்து கலைத்தது அவளது கைபேசியின் வாட்ஸ் அப் செய்தி ஒன்று. தெரியாத எண்ணில் இருந்து செய்தி வந்திருப்பதை பார்த்து சந்தேகமாய் கைபேசியைக் கையில் எடுத்தாள் மது. அந்த எண் அனுப்பிய செய்திக்குள் உள் நுழைந்தாள்.

“Hi...”- பெயர் தெரியாத வாட்ஸ்சப் எண்.

செய்தியைப் பார்த்ததும், ‘யாருன்னு பார்ப்போமே...’ என்று நினைத்த மது கைபேசியில் பதில் அனுப்பினாள்.

“Who Is This?”- மது.

“Guess...”- பெயர் தெரியாத வாட்ஸ்சப் எண்.

“Sorry... I am Blocking You...”

“
Arya...”

“
Arya??? How Did You Get My Number?”

“
I Got It From The Peacock Dance Girls...“

“
OH... OK”

“I Just Wanted To Say Hi..”

“
OH... OK”

“
We Shall Be In Touch.Save My Number”

“
Yeah.. Sure I Will Save Yours...”

* * *

முன்தினம் ஆர்யா தன்னை கலட்டிவிட்டு மாயக்கண்ணனாய் மறைந்த விஷயத்தை மறந்த மானம் கெட்ட, சொரணைக்கெட்ட விவேக்தான் தனது ஆவலை மறைக்க முடியாமல் பேச்சை முதலில் ஆரம்பித்தான்,

“டேய் மதுகூட பேசுனியா?”- விவேக்.

ஆர்யா சிரித்தான்.

“டேய், இப்ப உன்னை சிரின்னா சொன்னேன்? சிரிக்கிற?”- விவேக்.

“போடா.”- தலைகுனிந்து புத்தகத்தைப் புரட்டுவது போல சிரித்துக்கொண்டே ஆர்யா.

“என்னடா வெட்கப்பட்டுட்டே சிரிக்கிற... ரொம்ப பிடிச்சிருக்கா இந்த ஃபீல்?”

“
ம்... அடுத்த காம்ப்படிஷன் எப்ப வரும்னு இருக்கு டா. லோட்டஸ் இன்டர்ஸ்கூல் மீட் எப்ப வரும்? எப்பதான் அவளை அடுத்து நேர்ல பார்க்கப்போறேனோ...”

“
லவ்?”

“
நோ... டெஃபனிட்லி நோ... ஒரு கிரஷ் விவேக். ரொம்ப ரொம்ப சீரியஸான கிரஷ்.”

“
அப்பாடா... இன்னும் ஃப்ளஸ் ஒன்னே முடிக்கல.. அதுக்குள்ள ரெஜிஸ்டர் ஆஃபீஸ் கூப்பிட்டிருவியோன்னு பயந்துட்டேன்.”

“
எரும...” என்று கணித புத்தகத்தை எடுத்து விவேக்கின் தோளில் அடித்தான் ஆர்யா.

ஆர்யாவிடம் செல்லமாய் அடிவாங்கிய விவேக், “ஆர்யா உனக்கு ஒரு ஃப்ரண்டா ஒரு அட்வைஸ் பண்றேன், கவனமா கேட்டுக்கோ. ரொம்ப வாட்ஸ் ஆப்ல பேசாத டா, பொண்ணுங்க சீப்பா நினைச்சிடுவாங்க. ஐ ஆம் வார்னிங் யூ ஆர்யா... குட் மார்னிங். ஹாப்பி சன்டே, ஹாப்பி நியூ யியர், ஹாப்பி தீபாவளி, இப்படி மட்டும் மெசேஜ் பண்ணு... வி ஆர் பாய்ஸ் யு நோ... நமக்குப் பிடிச்சிருக்குன்னு காட்டிக்கவே கூடாது.” என்றான் அக்கறையாய்.

“ஹாப்பி மாட்டுப்பொங்கல். அதை விட்டுட்ட...”

“
என்னடா?? ஐ ஆம் டெட் சீரியஸ்.”

“
அப்புறம் என்னடா? விட்டா ஹாப்பி ரக்ஷாபந்தன் கூடச் சொல்லச் சொல்வ போலயே?”

“
சரி அதைவிடு நேத்து என்ன ஆச்சு??”

“
சும்மா ஒரு டைம் பாஸ் டா. நல்ல பொண்ணு அவ.”

“
இப்ப மதுவோட கான்டெக்ட் (conduct) சர்டிஃபிகேட் கேட்டேனா? மது வாட்ஸ் ஆப்ல என்ன டெக்ஸ்ட் பண்ணா?”

“
What’s your hobbyன்னு கேட்டா டா. FootBall, Tennis, Chessன்னு பதில் சொன்னேன்.”

“
சரி சரி...” என்று சொன்னவனின் “சரி” சரியேயில்லாமல் பல அர்த்தங்களில் ஒலித்தது. விவேக்கை சந்தேகமாய்ப் பார்த்தபடி ஆர்யா கேட்டான்,

“என்ன சரி சரி? வேற என்னமோ உன் மனசுல நினைச்ச, அதைச் சொல்லு விவேக்.”

“
இன்னொரு நாள் சொல்றேன். இப்ப ஹோம் வொர்க்கை காப்பியடிப்போமா? அடுத்த பீரியட் மேக்ஸ்.”

பத்து கணித கணக்குகளை ஈ அடித்தான் காப்பியடிப்பதில் நேரம் பறந்தோட அந்த நாள் முடியும் வரை விவேக் அந்த “சரி” க்கு விளக்கமே தரவில்லை. ஆனால் மீண்டும் ஒரு முறை இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தபோது வேறு வழியின்றி அந்த ‘சரி’ க்கு சரியான விளக்கத்தை தந்தான் ஆர்யாவிடம்.

* * *
 
9

ஒரு மாதம் கடந்திருந்தது...


மதுவும் ஆர்யாவும் வாட்ஸ் ஆப் நண்பர்களாக மாறி ஒரு மாதம் ஆகிவிட்டது. அடிக்கடி செல்பேசித் திரையைப் பார்த்தவண்ணம் இருந்தான் ஆர்யா. ஆனால் மதுவும் ஜான்வியும் ஒரே கைபேசியை பகிர்ந்து கொள்வதால் மது கைபேசியை அடிக்கடி எடுத்துப்பார்க்கும் பழக்கத்தை பழகவில்லை.

ஜான்வி என்னும் கண்காணிப்பு கேமரா இருபத்திநாலு மணி நேரமும் அவளுடன் இருப்பதால் ஆர்யாவுடன் வாட்ஸ் அப் செய்வதிலும் அளவோடு இருந்தாள்.

ஒரு நாள் பள்ளியில் ஆர்யாவும் விவேக்கும் வேதியல் ஆய்வுக்கூடத்தில் சில பரிசோதனைகள் செய்து கொண்டிருந்தனர். காப்பர் சல்ஃபைட் டெஸ்ட் செய்து கொண்டிருந்தனர். பள்ளியில் கைபேசிக்கு அனுமதி கிடையாது. ஆர்யாவின் பள்ளியிலும் அதே விதிமுறைதான். மாணவிகள் அனைவரும் அந்த விதிமுறையை சரியாகக் கடைபிடித்தனர். ஆனால் மாணவர்கள்???

ஆர்யா முன்பெல்லாம் பள்ளிக்கு கைபேசியை எடுத்துவருதில்லை. மதுவுடன் வாட்ஸ் ஆப்பில் பேச ஆரம்பித்தப் பிறகு கைபேசி இல்லாமல் எங்குமே செல்வதில்லை அவன். பள்ளி முடிந்து வேனில் வரும்போது மதுவிடமிருந்து வரும் ஒரு குட்டி மெசேஜுக்காக அவன் நாள் முழுதும் கைபேசியை கையில் வைத்திருந்தான். அதில் ஒரு கிக்... அந்த கிக் ஆர்யாவிற்கு மிகவும் பிடித்திருந்தது.

“மதுகூட அடிக்கடி சாட் பண்ற போலயே? சொல்லவே இல்ல? என்ன பேசுறா மது?” என்று ஆர்யாவின் கைபேசி காட்டிக்கொடுத்த மதுவின் வாட்ஸ் அப் மெசேஜ்களைப் பார்த்தபடியே கேட்டான்.

“வி ஆர் ஜஸ்ட் சாட்டிங். அன்ட் தட்ஸ் இட்.” என்று கடுப்பாக பதில் தந்த ஆர்யா கைபேசியை விவேக் கையில் இருந்து பிடுங்கி ஆசிரியருக்குத் தெரியாமல் இருக்க பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்துக்கொண்டான்.

“மெசேஜ் பார்க்கலாமா?” என்று சிரித்துக்கொண்டே கேட்க,

“என்னது? மது மெசேஜ் பார்க்கப்போறியா?? மெசேஜ்குள்ளப் போன செத்த... அடுத்தவன் மெசேஜ் பார்க்கிறது இன்டீசென்ட்னு தெரியுமா தெரியாதா?”

“
சரி, இனி அதைப் பத்தியே பேச மாட்டேன். எதுவும் கேட்கவும் மாட்டேன்.” - விவேக்.

“உடனே முகத்தைத் தூக்கி வச்சிக்குவியே.. குட் மார்னிங், குட் டே, ஹாப்பி மன்டேன்னு வாட்ஸ் அப் மட்டும்தான்டா பண்ணுவா. பேசலாம் மாட்டா.”

“
ஓ.. வாட்ஸ் அப் பண்ண ஆரம்பிச்சி ஒரு மாசம் ஆச்சே? இவ்வளவுதனா? நீ பொய் சொல்லமாட்டன்னு தெரியும்... ஆனாலும் நம்புற மாதிரி இல்லயே... போன மாசம் உன்னோட பொழுதுபோக்கு பற்றிக் கேட்டா, அதற்குப் பின்ன கடைசியா என்ன கேட்டா உன்கிட்ட?”

“
Give Me Your Insta Detailsன்னு சொன்னா.”

“
நீ என்ன பதில் தந்த?”

“
இன்னும் ஆரம்பிக்கல. ஆரம்பிச்சிட்டு தர்றேன்னு சொன்னேன். அவ்வளவுதான்டா டெக்ஸ்ட் பண்னோம்.”

“
ஓ.”

“
ஆமா.. அதுக்கு மேல ஒரு வார்த்தைகூட அவ பேசலைடா.”

“
நீ எப்படி டைப் பண்ண? தமிழ்லயா?

“Innum Aarambikkala.... Aarambichittu tharaen... அப்படின்னு தமிழையே இங்கிலிஷ்ல டைப் பண்ணேன். இப்பத் தெளிவா சொல்லிட்டேனா? “

“
அவ தமிழ்ல மெசேஜ் பண்ண மாட்டாளா?”

“
இல்ல. இங்கிலிஷ்லதான். நல்லா இங்கிலிஷ் தெரியிதுடா அவளுக்கு..”

“
ஓ.. நீ?”

“
நான் ரெண்டுலயும் மெசேஜ் பண்ணுவேன். தங்கிலிஷ்தான் முக்கால்வாசி.”

“
ஓ... ஓஹோ.”

“
அன்றைக்கு “சரி” என்று சொன்ன அதே விசித்திர ஒலியில் இன்றும் “ஓ.. ஓஹோ.” என விவேக் சொன்னதும் ஆர்யாவின் கோபம் எல்லையைக் கடந்துவிட்டது.

கோபத்தில், “ப்ராக்டிக்கல் பண்ணலாமா? என்னோட பிப்பட் புயூரட் எடுக்கப்போறேன்... நீ கெமிஸ்டிரி ப்ராக்டிகல் பண்ணப்போறியா இல்ல இப்படியே வெட்டி அரட்டை அடிக்கப்போறியா? உன்னோட பிப்பட் பியூரட் எடுத்துக்கொடுக்க உன் தாத்தாவா வருவாங்க?” என்றான் ஆர்யா.

“சரி... சரி வா வா செய்யலாம்.” என்ற விவேக் தனது புயூரட்டை எடுத்துக்கொண்டு ஆர்யா அருகிலேயே போய் நின்றான்.

ஆனால் சில மணி நேரங்களிலேயே ஆர்யாவிற்கு அந்த சரி, ஓஹோ பற்றி முழுதாகத் தெரியவில்லை என்றால் தலையே வெடித்துவிடும் போல இருக்க அந்த நாளின் கடைசி பாடவேளையின்போது,

“அப்ப நாம பேசும்போது ஓஹோன்னு ஏன் சொன்ன?” என்று விவேக்கிடம் தன்மானத்தை உதறிவிட்டுக் கேட்டே விட்டான்.

“சொன்னா நீ கோபப்படுவ. என்னை நம்ப மாட்ட.”- ஆர்யாவிடம் அடி வாங்குவதற்கு முன் உஷாராக விவேக்.

“இல்ல நீ சொல்லு. நான் கோபப்பட மாட்டேன்.”

“
மது உன்கூட இதுக்கு மேல பேச மாட்டா ஆர்யா. அதாவது குட் மார்னிங், குட் நைட், குட் டே... சுருக்கமா சொன்னா நீ ஒரு குட் மார்னிங் ஃப்ரண்ட் அவளுக்கு.”

“
என்னது குட் மார்னிங் ஃப்ரண்டா?”

“
ஆமா எல்லா மெசேஜ்ஜும் குட்ல தான் ஆரம்பிக்கும்.”

“
நோ நோ நோ..”

“
மிஞ்சி மிஞ்சிப் போனா... ஹாப்பி நியு யியர். சொல்லலாம். தட்ஸ் ஆல்...”

“
நோ நோ நோ..”

“
யெஸ் யெஸ் யெஸ். ப்ளஸ் ஒன் படிக்கிறேன் இதுகூடத் தெரியாம இருப்பேனா?”

“
நீ மட்டுமா ப்ளஸ் ஒன்? நானும் தான ப்ளஸ் ஒன் படிக்கிறேன்? விட்டா என்னை நீயே L.K.Gல கொண்டு போய் சேர்த்துடுவ போலயே?”

“
ஆர்யா பொண்ணுங்க விஷயத்துல நீ L.K.Gதான்னு நீயே ஒத்துக்கணும்.”

“
விவேக்க்க்..”

“
கோபப்படாத இப்ப நான் தெளிவா சொல்றேன் கேளு. அவ சுத்தமான இங்கிலிஷ்ல டைப் பண்றா, ஆனா நீ தங்லிஷ்ல டைப் பண்ற... உனக்குப் புரியலையா? இங்கிலிஷ்ல பேசும் போது பெர்சனலா அட்டாச் ஆக மாட்டோம். தமிழ்ல பேசும் போது பெர்சனலா அட்டாச் ஆவோம்ப்பா.. நீ அவகூட ஒட்டுற.. அவ உன்னை கட் பண்றாடா. ஒரு மாசம் வாட்ஸ்சப் பண்ணிருக்க... கண்டிப்பா அவ தமிழ்ல பேச ஆரம்பிச்சிருக்கணும். இது ரொம்ப நாள் நீடிக்காது ஆர்யா. ஷி வில் இக்னோர் யூ. நீ லிமிட் கிராஸ் பண்ணா உன்னை இக்னோர் பண்ண ஆரம்பிச்சிடுவா.”

விவேக் சொன்னதை சிறிது நேரம் யோசனையில் வைத்த ஆர்யா அதன்பிறகு விவேக் பக்கமாகத் திரும்பாமல் தனது புயூரட்டுடன் மட்டும் கெமிஸ்டிரியில் பேசினான். ஆனால் புத்தி, மூளை, அறிவு எல்லாம் விவேக் சொன்னதைத்தான் மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தன.

அக்கணத்திலிருந்து அவன் ஆங்கிலத்தில் வெறுத்த வார்த்தை குட் மார்னிங்...

* * *
 
இப்படியே மேலும் ஒரு மாதம் ஆர்யாவும் மதுமிதாவும் வாட்ஸ் ஆப் நண்பர்களாக இருந்தனர். ஆர்யா அந்த குட் மார்னிங் எல்லை தாண்டி ஹாப்பி நியு இயர், ஹாப்பி சன்டே தகுதி நிலைக்கு வந்திருந்தான். மது ஆர்யாவை கைபேசியில் அழைத்துப் பேசுவதில்லை, ஆர்யாவையும் பேச அனுமதித்ததில்லை.

ஆர்யாவும் மதுவின் எல்லைக் கோட்டை மீறவில்லை. அதனால் மதுவும் ஆர்யாவும் வாட்ஸ் ஆப் நண்பர்களாக நீடித்தார்கள்.

விவேக் தீர்க்கதரிசி தானே?

* * *

விவேக்கின் எச்சரிக்கைக்குப் பிறகு ஆர்யா தனது வாட்ஸ் ஆப் பேச்சுவார்த்தைகளை அளவாகவே வைத்துக்கொண்டான். அவளுடன் பேச உள்ளத்தில் ஆழம்வரை ஆவல் கொண்டிருந்தபோதும் அதனை அவளிடம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அளவான வார்த்தைகளால் தினமும் அழகாகப் பேசினான். ஒரு முறை மது அவனுக்கு ஒரு ஹாய் செய்தி அனுப்பியிருந்தாள். மது அவனுக்கு முதலில் வாட்ஸ் ஆப் செய்தி அனுப்புவது இதுவே முதல் முறை. ஆகாயக் கோட்டையில் அழகாய் அரண்மனை கட்டியது அவனது மனது. கெமிஸ்டிரியையும் கணிதத்தையும் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தவனிடம் கடவுளாகப் பார்த்து ஒரு ஜில்லென்ற கரும்புச்சாரை நீட்டுவது போல இருந்தது மதுவின் ஹாய் என்னும் வாட்ஸ் ஆப் செய்தி.

“Hi.”- மது.

“Hi..” - ஆகாய அரண்மனையில் இருந்தபடியே மதுவிற்கு பதில் அனுப்பினான் ஆர்யா.

“What are you doing?”

“
padichittu irukkaen”- ஆர்யா.

“I need cs guide. Author should be balagurusamy”

“
irrukaanu Friendskitta kaetkuraen”

“
Ok.. thanks.. bye”

“
call panava?”- ஆர்யா.

“no... no... dont call me pls”

ஆர்யா அவளது பதிலை கருத்தில் கொள்ளாமல் மதுவை தனது கைபேசியில் அழைத்தான். தான் சொன்னபிறகும் கேட்காமல் அழைத்துவிட்ட ஆர்யாவை மனதில் வைதுகொண்டே கைபேசித் திரையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மது. மதுவின் செயலைக் கண்ட ஜான்வி நடப்பதை ஓரளவுக்குப் புரிந்துகொண்டாள்.

“மது ஃபோன் அடிக்கிது பாரு.”- ஜான்வி.

“ஷ்ஷ்.. எதுக்கு கத்துற? எனக்குத் தெரியும்.. நீ பேசாம இரு. அது பாட்டுக்கு அடிக்கட்டும்.”

“
அம்மா வந்து ஃபோனை எடுக்கலையான்னு கேட்கணுமா? ஒண்ணு ஸைலன்ட்ல போடு, இல்ல அட்டென்ட் பண்ணு.”- ஜான்வி.

கைபேசி விடாமல் அடிக்கவும் அன்னைக்கு பயந்து மது வேறுவழியின்றி அழைப்பை ஏற்றாள்.

“ஆர்யா...”- கைபேசியில் ஆர்யாவிடம் மது.

“மது ஏன் ஃபோனை எடுக்கல? சாரல் காம்ப்படிஷன் பற்றிப் பேசலாம்னு கூப்பிட்டேன்.”

“
படிச்சிட்டு இருக்கேன்... அப்புறம் பேசறேன்... அம்மா வீட்டுல இருக்காங்க. இனி கால் பண்ணாத. பை.”- மது.

ஆர்யா பதிலுக்கு “ஓகே பை.” என்று சொல்லும் முன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

ஆர்யா பேசி முடிக்கும்வரை உள்ளுக்குள் இருந்த படபடப்பை வெறுக்கவும் செய்தாள் ரசிக்கவும் செய்தாள் மது. இரவு பன்னிரெண்டு மணிக்கு சாப்பிடும் திருட்டு குல்ஃபி போல சுவையாகவும் இருந்தது, சளி பிடித்து காய்ச்சல் வந்துவிடுமோ என்று பயமாகவும் இருந்தது.

ஆர்யாவுடன் பேசுவது சரியா தவறா என்று ஒத்தையா இரட்டையா போட்டுப் பார்த்தாள் மது.

* * *

இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை ஆர்யா மதுவை கைபேசியில் அழைத்தான். அவள் கைபேசி எண்ணை தனது கான்டாக்ஸ் லிஸ்டில் பார்க்கும் போதெல்லாம் கை பரபரவென்று இருந்தது அவனுக்கு. உடனே ஆர்வக்கோளாறில் அழைத்துவிட்டான். முதல் முறை தானே எந்தவொரு காரியமும் எல்லோருக்கும் கடினமாக இருக்கிறது? இரண்டாவது முறை ஒரு காரியத்தை செய்யும் போது மனம் தனக்குத் தானே தைரியம் என்னும் சோடாவை குடித்து ஏப்பம் விட்டுக்கொண்டு படுகெத்தாய் செயல்பட ஆரம்பித்து விடுகிறது.

“ஹாய் மது... சும்மாதான் கால் பண்னேன். என்ன பண்ற?” என்று படு உற்சாகமாய் ஆரம்பித்தான் ஆர்யா.

ஆர்யாவின் குரலைக் கேட்டதும் உள்ளத்தின் படபடப்பு கூடியது மதுவிற்கு. படபடப்பை மிஞ்சிய பயமும் வந்தது. அந்த பயம் தந்த பீதியில் அவளுக்கு எதுவும் புரியவில்லை. இது சரியா தவறா என்று மனம் அலைபாய ஆரம்பித்தது.

எதுக்கு கூப்பிட்ட ஆர்யா? என்றாள் மெல்ல,

“எதுக்கு கூப்பிட்டேன்... எதுக்கு கூப்பிட்டேன்னே மறந்து போச்சு... ஹா ஹா.” என்று கூறி ஆர்யா சிரித்த நிமிடம் அம்மா சில நாட்களுக்கு முன் சொன்ன ரெண்டும் கெட்டான் என்னும் வார்த்தை ஞாபகம் வந்தது அவளுக்கு. அடுத்து அவள் பேச வேண்டிய வார்த்தையை அவள் யோசிக்கவேயில்லை. பேசவேண்டிய வார்த்தைகளை மூளை கடகடவென பேச வைத்தது.

“சாரி... ஆர்யா... எனக்கு இனி கால் பண்ணாத. சாரி... திஸ் இஸ் நாட் குட்.” என்றாள் மது.

“ஏன்? எனக்குப் புரியல.”

“
காரணம் இல்லாமல் சாட் பண்றது எனக்குப் பிடிக்கல.”

மது, முகத்தில் அறையாத குறையாகப் பேசியது 1லிலி வாட்ஸ் பல்ப்பை இலவசமாக பெற்றுக்கொண்டது போல இருந்தது அவனுக்கு. அவனுக்கு உடனே கோபம் உச்சிக்கு ஏறியது.

ஆனாலும் கோபத்தை மறைத்து, “நான் இப்ப கால்லை கட் பண்ணிடுறேன்... ஆனா வைக்கிறதுக்கு முன்னே ஒண்ணு சொல்லணும்... இது தப்பா எனக்குத் தெரியல... டூ மினிட்ஸ் பேசுறது வெட்டியான சாட் இல்ல மது.” என்றான் சிறுபிள்ளையிடம் விவாதிப்பது போல.

“இது தப்புதான் ஆர்யா. உனக்கு எது தப்பு எது சரின்னுகூடத் தெரியல பாரு... ஒரு தெளிவே இல்லாம இருக்க... வெட்டியா நீ என்னோட சாட் பண்ற மாதிரி ஃபீல் பண்றேன். என்னோட அம்மா அந்த மாதிரி ஃப்ரண்ட்ஷிப்பை என்கரேஜ் பண்ணமாட்டாங்க.”

ஆர்யா அழைப்பை மறுபேச்சின்றி துண்டித்தான்.

* * *

“
என்னடா லன்ச்லயும் சரியா யார்கூடயும் பேசல.. இப்ப லைப்ரரியில என்றைக்கும் இல்லாத திருநாளா புக் வாசிக்கிற? நாம லைப்ரரியில் எப்போதும் புக் கிரிக்கெட் தான விளையாடுவோம்?”- விவேக்.

“ப்ச்...”- ஆர்யா.

“என்ன? மது உன் நம்பரை ப்ளாக் பண்ணிட்டாளா?”

“
ம்... ஆமாடா ப்ளாக் பண்ணிட்டா. கால் பண்ணிப் பேசுனேன்... அதனால ப்ளாக் பண்ணிட்டா..”

“
ஹா... ஹா... நான் அப்பவே சொன்னேன்ல??”- விவேக்.

ஆர்யா பலமாக முறைக்கவும்,

“சாரி டா. நீ மேலச் சொல்லு.” என்றான் விவேக்.

“நானும் ப்ளாக் பண்ணிட்டேன். அவ மட்டும்தான் ப்ளாக் பண்ணுவாளா? அவளுக்கு மட்டும்தான் தெரியுமா? எனக்கும் ப்ளாக் பண்ணத் தெரியும்னு அவ தெரிஞ்சிக்கட்டும். என்னைக்காவது எனக்கு கால் பண்ணிப் பார்ப்பால... அப்ப தெரிஞ்சிக்கட்டும் நானும் அவளை ப்ளாக் பண்ணிட்டேன்னு.”

“
ஹா... ஹா...”

“
ஏன்டா சிரிக்கிற?”

“
நீ ப்ளாக் பண்ணது அவளுக்கு தெரியவே தெரியாது டா. அவ தான் உன்னை கால் பண்ணப்போறதே இல்லையே. பின்ன எப்படி அவளுக்குத் தெரியும்?”

“
போடா அங்குட்டு. எப்பப் பாரு மது, மதூன்னு பேசிட்டே இருக்க...” என்ற ஆர்யா அடுத்த இருபது நிமிடங்களுக்கு மௌனவிரதம் இருந்தான்.

“என்னடா... இன்னும் உம்முன்னு இருக்க?”- விவேக்.

“First crush மச்சி. மது இஸ் மை first crush மச்சி. எல்லாம் நல்லாதான் டா போய்க்கிட்டு இருந்திச்சு.”

“
அதான் புட்டுக்கிச்சுல. விடு.” என்றான் விவேக் அசால்ட்டாய்.

“உன்கிட்டப்போய் சொன்னேன் பாரு.”

“
ஹா... ஹா... வா இரண்டுபேரும் அட்டைக்கத்தி படத்துல காதல்ல பல்ப் வாங்குனதும் ஹீரோ வடை வாங்கி சாப்பிடுவான்ல அது மாதிரி கேன்டீன்ல போய் கட்லட் வாங்கிச் சாப்பிடுவோம்.”

விவேக்கை முறைத்த ஆர்யா இரண்டே நொடியில் கோபம் மறந்து சிரித்தான்.

“பயங்கர உஷார்டா அந்த மது. நீ சொன்ன மாதிரி நான் பெர்சனலா அட்டாச் ஆகிற மாதிரி ஆனதும் கட் பண்ணிட்டா டா...”

“
நான் எத்தனை பேரைப் பார்த்திருக்கேன்... நீயாவது முப்பது நாள் குப்பை கொட்டிருக்க... முப்பது செகன்ட் தாக்குப்பிடிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத்தான் தெரியும். என்னோட சோகக்கதைய கேட்ட... அழுதுடுவ. உனக்கு இளகுன மனசுடா, அதான் நான் இதுவரை உன்கிட்டக்கூட என்னோட சோகக் கதையை சொன்னது இல்ல, இந்த மேட்டரை விடு.. வா கேன்டீனுக்குப் போவோம்.”

“
ஏன்டா விவேக்... எது சரி எது தப்புன்னு கர்ல்ஸுக்குத் தான் தெரியுமா?”

“
ஏன்டா கேட்குற?”

“
என்னைப் பார்த்து, உனக்கு எது சரி எது தப்புன்னு தெரியலன்னு சொல்றா... அப்படின்னா என்ன விவேக்? எனக்கு சரியாப் புரியல. ‘என் அம்மாவுக்கு இந்த மாதிரி வெட்டியா சாட் பண்ற ஃப்ரண்ட்ஷிப் பிடிக்காது’ ன்னு சொல்லிட்டா தெரியுமா? ரொம்ப எம்பாரஸிங்கா இருந்திச்சு தெரியுமா?”

“
அவ என்ன சொல்ல வர்றான்னு புரியலையா?”

“
சரியா தெளிவா புரியலைடா.”

“
லவ் பண்ணக்கூடாதுன்னு, பசங்ககூட எப்பவும் எதிரியாகத்தான் இருக்கணும்னு மறைமுகமா சொல்லிக் கொடுத்துருக்காங்க டா.”

“
அப்படிங்கிற?”

“
மதுவோட அம்மா செம்மையா கெமிஸ்டிரி கிளாஸ் எடுப்பாங்களாம். என்னோட டியூஷனுக்கு வரும் அந்த ஸ்கூல் பசங்க பேசிக்கிட்டாங்க. அப்படிப்பட்ட டீச்சர் எந்த டாப்பிக்கானாலும் அடிச்சி தூள் கிளப்பிட மாட்டாங்களா? பசங்ககூட எங்க எப்படிப் பழகுறதுன்னு மதுவுக்கு பத்து நாள் கிளாஸ் எடுத்திருப்பாங்க.”

“
அப்படித்தான் டா இருக்கும். அம்மாக்கு பயந்த பொண்ணு மாதிரிதான் தெரியுது...”

“
அம்மாக்கு பயந்த பொண்ணே தான். டவுட்டே இல்ல. உனக்கு கொடுத்த பல்ப் தான் அதுக்கு சாட்சி. உன் கையில எவ்வளவு பெரிய பல்ப் கொடுத்திருக்கா? அதுக்கப்புறமும் டவுட்டா இழுக்குற?” என்று கூறிய விவேக் திரும்பவும் நகைக்கவும் அவனின் தலைமுடியைப் பிடித்து ஆட்டினான் ஆர்யா.

“முடியை விடுடா ஆர்யா... அவளோட பதிலுக்கு அதுதான் டா அர்த்தம். அப்புறம் இன்னொரு விஷயம் கேட்டியே அது என்ன?”

“
என்னைப் பார்த்து எது சரி எது தப்புன்னு தெரியாத பையன்னு சொன்னா டா.”

“
ஓ...” என்று சிறிது நேரம் மனதுக்குள் ஆய்வு நடத்திய விவேக், “எது சரி எது தப்புன்னு தெரியலைன்னா இரண்டும் கெட்டான் மனநிலையில இருக்கிறதா அர்த்தம் ஆர்யா.” என்றான் உறுதியாக.

“அப்படிங்கிற? நல்லாத் தெரியுமா? அதுதான் அர்த்தமா? ரொம்ப எம்பாரஸிங்கா இருக்கு. அப்பவும் இப்பவும்.”

“
நல்லாத் தெரியும். என்னோட அம்மாதான் தினமும் இதே டயலாக்கைச் சொல்லிச் சொல்லி என்னையும் என்னோட அண்ணனையும் திட்டுறாங்கல... ரெண்டும்கெட்டான் என்னும் தமிழ் வெர்டுக்கு நல்லாவே அர்த்தம் தெரியும். ரெண்டும்கெட்டான் என்றால் எது சரி எது தப்புன்னு தெளிவா பிரிச்சிப் பார்க்கத்தெரியாத ஆளுன்னு அர்த்தம். இங்குட்டும் இருக்க முடியாம, அங்குட்டும் இருக்க முடியாம அந்தரத்தில் மிதிப்பவன்னு அர்த்தம்.”

“
சே சே... நான் அப்படியெல்லாம் இல்ல டா விவேக்.”

“
சரி நான் இப்ப வரிசையா கேள்வி கேட்பேன். டக் டக்குன்னு பதில் சொல்லணும்.”

“
கேளு.”

“
மதுவைப் பிடிச்சிருக்கா?”

“
ம். பிடிச்சிருக்கு.”

“
அடுத்து வரப்போகும் ஜனவரி மாதமும் மதுவைப் பிடிக்குமா?”

“
பிடிக்கும். நோ டவுட்.”

“
அடுத்த ஜுன்னில்??”

“
ஜுன்லயா? இன்னும் ஆறு மாசம் இருக்குடா...”

“
ஆமா/ இல்ல, ரெண்டுல ஒண்ணு பட்டுன்னு சொல்லு ஆர்யா.”

“
இல்ல.. ஆமா.. இல்ல.. ஆமா, ஆமா.. ஃபைனலா ஆமா தான் சொல்லுவேன்டா.”

“
பார்த்தியா பார்த்தியா... எத்தனை ஆமா இல்ல சொல்லிட்ட? யெஸ்ஸா நோவான்னு சட்டுன்னு சொல்லத் தெரியல.. இதுக்கு பேர்தான் இரண்டும்கெட்டான். ஆனா மதுகிட்ட உனக்கு ஆர்யா பிடிக்குமா பிடிக்காதான்னு கேட்டா பளிச்சுன்னு, “வி ஆர் ஃப்ரண்ட்ஸ்”-ன்னு சொல்வா தெரியுமா. பிடிச்சாலும் பிடிக்காட்டியும் ஃப்ரண்ட் ஃப்ரண்டு தான? கர்ல்ஸ் ஆர் வெரி பிரில்லியன்ட் டா. safe zone-ல தான் இருப்பாங்க. நாம தான் Danger Zone பக்கத்துலயே நின்னுகிட்டு ஸ்நாக்ஸ் சாப்பிடுவோம் டா. மது மட்டும் இல்ல... எந்தப் பொண்ணை அப்ரோச் பண்ணாலும் வாட்ஸ் ஆப்ல கடலை வறுக்கும் பசங்களுக்கு இதுதான் அவர்களின் பதிலாக இருக்கும். நாம எங்கேயும் எப்போதும் அவுங்களுக்கு ஃப்ரண்ட் தான். ஃப்ரண்ட் மட்டும் தான். அதை மீற நினைச்சா ப்ளாக் பண்ணிடுவாங்க.”

“
நிரந்திரமா.”

“
ஆமா நிரந்திரமா.”

“
சரிடா... இனி இந்தப் பேச்சே நாம பேசக்கூடாது. நமக்கு இருக்கு ஆயிரம் பிரச்சனை. என்னோட ஃப்ர்ஸ்ட் கிரஷ் பற்றி இனி நான் பேசவே மாட்டேன் விவேக். நீயும் என்கிட்டக் பேசக்கூடாது.”

“
ஆமா ஆமா... நமக்கு இருக்கு ஆயிரம் பிரச்சனை. பிப்பட்ல உறிஞ்சிடும் போது சொலூஷனைக் குடிக்காமல் உறிஞ்சிடணும்... மேக்ஸ்ல இருபத்திமூனு சாப்டர்ஸ் இருக்கு. ஃபிசிக்ஸ் கெமிஸ்டிரில எத்தனை சாப்டர்ஸ் இருக்குன்னுகூடத் தெரியல, எண்ணுறதுக்கே பயமா இருக்கு. இந்த தீபாவளிக்கு நாலு படம் ரிலீஸ் ஆகுது. அடுத்த வருஷம் ப்ளஸ்டூகிறதால இந்த வருஷமே நாலு படமும் பார்க்கலாம்னு பார்த்தா, பாக்கெட் மணி இருக்கிற பாக்கெட்டுல ஹல்க் (hulk) சைஸ்ல பெரிய ஓட்டையிருக்கு. இப்படி ஆயிரம் பிரச்சனை எனக்கும் உனக்கும் இருக்கும்போது மற்றக் கண்றாவியெல்லாம் நமக்கு எதுக்கு?” என்று தத்துவமழை பொழிந்தான் விவேக்.

“ஹா... ஹா... நீ 20ம் நூற்றாண்டின் ஷேக்ஸ்பியரா பொறக்க வேண்டியவன்டா.. தப்பிப்போய் விவேக்கா பொறந்திட்ட.”

“
என்னை ஷேக்ஸ்பியர்ன்னு சொல்லாத... இங்கிலிஷ் நைட்டோட நைட்டா தற்கொலை பண்ணிக்கிடும். வருங்கால C.M விவேக்ன்னு சொல்லு.”

....

“என்னடா அப்படிப் பார்க்குற? நாம் பேசுற விஷயத்திற்கு சம்பந்தமே இல்லாமல் அரசியல் பேசுறேன்னா? சம்பந்தமே இல்லாமல் பேசுறதுதான அரசியல்?? அதனால வருங்கால C.M விவேக்ன்னு சொல்லு லாஜிக் இடிக்காது.”- விவேக்.

“ஹா.. ஹா..”

* * *
 
மது - ஜான்வி இல்லத்தில் (A.B):

A.B
என்றால் after blocking என்று இங்கு அர்த்தம் கொள்ளப்படவேண்டும்.

“ஏய்.. மது..” - ஜான்வி.

“என்ன?”- மது.

“என்ன இப்பயெல்லாம் வாட்ஸ் ஆப் பண்றதே இல்ல?”

“
சும்மாதான். இட்ஸ் போரிங்.”

“
ஏய்... சும்மாதான சொல்ற? யாரோ ஒரு பையன் டிஸ்டர்ப் பண்ணதும் வாட்ஸ் ஆப் பண்றதை விட்டுட்ட.”

“
தெரியிதுல?? பின்ன எதுக்கு தெரியாத மாதிரி கேட்குற? மணி பன்னிரண்டு ஆயிடுச்சு. நீ இன்னும் படுக்கல? போய்ப் படு.”

“
மது...”

...

“மதூ...”

“
இப்ப என்ன ஜானு? ப்ளீஸ் லீவ் மீ அலோன். நான் படிக்கிறது கண்ணுக்குத் தெரியல?”

“
மது... You are really great... You have a lot of self control you know?? I am very proud of you.. எனக்கு உன்னை அப்படியே ஹக் பண்ணிக்கணும் போல இருக்கு. அந்தப் பையன் ஆர்யாதான? அவனையே நீ ப்ளாக் பண்ணிட்ட... சான்ஸ்லெஸ் தெரியுமா? அம்மா சொன்னதால தான? அன்றைக்கு அம்மா நிறைய பேசியதை வச்சித்தான இந்த மாதிரி பசங்க விஷயத்துல இருந்து நீ ஒதுங்கியே இருக்க?”

“
யெஸ் ஜானு.”

“
ஏய்ய் ஏய்ய் உன்னை அப்படியே ஒரு ஹக் பண்ணிக்கட்டுமாப்பா??”

“
ஹா... ஹா...”

“
ஏய்ய்... என்னப்பா சிரிக்கிற?”

“
தாங்க்ஸ் ஜானு... அவன் நல்ல பையன் தான்.. ஆனா Flirt பண்றானோன்னு தோணுச்சு... முதல் தடவை போன்ல அழைச்சபோது அமைதியா இருந்திட்டேன். ஆனா இரண்டாவது தடவையும் வெட்டிப்பேச்சு பேச அவன் அழைத்தபோது கண்டிப்பா Flirt தான் பண்றான்னு நான் வைத்த டெஸ்ட்ல தெரிஞ்சிடுச்சு. அதான் கட் பண்ணிட்டேன். வேற ஏதாவது பேசேன். இப்பதான் மைன்ட் லேசாகி இருக்கு.”

“
சரிப்பா... இனிமேல் ஆர்யா பற்றிப் பேசலை. அலியா பட் படம் சோனில போடுறான். ‘டூ ஸ்டேட்ஸ்.’ பழைய படம்தான்... ஆனா ரொமான்டிக் மூவி. பார்க்கலாம் வர்றியா?”

“
அம்மா??”

“
பெர்மிஷன் வாங்கிட்டேன்.”

“
எப்படி?”

“
என்னோட மூளையோட 200 ஜுல்ஸ் எனர்ஜிய மேக்ஸ்க்கு தானம் செய்திருக்கேன்ப்பா... சன்டே முழுதும் அம்மாகிட்ட மேக்ஸ்ல இருபது சாப்டர்ஸ் செய்து காண்பிச்சிருக்கேன். அலியா பட் படம் பார்த்தா மூளை செலவழிச்ச 200 ஜுல்ஸும் அதுக்குத் திரும்ப கிடைச்சிடும்னு சொன்னேன், அம்மா சிரிச்சிட்டாங்க.. அப்பாவும் எனக்காக சப்போர்ட் பண்ணிப் பேசினாரா உடனே சிரிச்சிட்டே சரின்னு சொல்லிட்டாங்க. ஒரு மணி நேரம் தான் பெர்மிஷன் கொடுத்திருக்காங்க வா.. சீக்கிரம்.”

“
இதோ வர்றேன்.” என்ற மது தனது கைபேசியை கட்டிலின் மெத்தையில் போட்டுவிட்டு வரவேற்பறைக்கு ஓடினாள். மெத்தையில் சுகமாகப் படுத்துக்கொண்டது மதுவின் கைபேசி.

இப்படித்தான் மதுவின் லிட்மஸ் பரீட்சையில் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட விடலைத்தனம் நிரம்பிய ஆர்யா தோற்றுப்போனான்.

அவள் வைத்த சோதனையில் லிட்மஸ் தாள்ளின் சாயம் வெளுத்துப்போனது.

முதல் முறை தேவையில்லாமல் கைபேசியில் அழைத்தபோது அமைதியாக இருந்த மதுமிதா, இரண்டாம் முறையும் ஆர்யா தேவையில்லாமல் வெட்டி அரட்டையடிக்க அழைத்தபோது அவனது தோழமை தேவையேயில்லை என்று நட்பை முறித்துக் கொண்டாள்.

ஆனால் இரண்டே ஆண்டுகளில் அடுத்த சத்திய சோதனை வந்தபோது இதே உறுதி மதுவிடம் இருந்ததா? தனது தந்தைக்கு செய்து கொடுத்திருந்த சத்தியத்திற்கு மீண்டும் இதே ஆர்யா ரூபத்தில் சிக்கல் வந்தபோது அதே உறுதி மதுவிடம் இருந்ததா?

பெண்களின் கண்களுக்குள் அடங்க மறுக்கும் ஆண்மையின் அழகுடன் அவன் அவள் எதிரே வந்து நிற்கும்போது அவனை மறுக்கும் உறுதி மதுவிற்கு இருந்ததா?

“எனக்கு உன்கூட நிறையப் பேசணும்.” என்று பார்க்கும் போதெல்லாம் அவன் விழிகள் அவளிடம் ரகசியமாய் பேசும்போது, “என்கூட நீ ஒண்ணும் பேச வேணாம்.” என்று சொல்லிடும் துணிவு வந்துவிடுமா?

போதை தரும் சிரிப்பை கோடி கோடியாய் அவன் இதழ்கள் கொட்டும்போது இதே துணிவு மதுவிடம் இருந்ததா?

அவனது விடலைத்தனம் பிடிக்காமல் இன்று அவனை உதறியவள் அவளது விடலைத்தனம் தலைதூக்கும் போது என்ன செய்வாள்?

மதுவின் உள்ளத்து உறுதியின் ஆழம் நீளம் என்ன?

* * *



இன்று...

மீண்டும் பெங்களூர் டோல் கேட்...

“
சார்.. நான் வந்திட்டேன் சார்.” என்று சுங்கச் சாவடிக்கு வந்துவிட்டதை காவல்துறை அதிகாரி சங்கருக்கு கைபேசியில் தெரியப்படுத்தினான் விவேக்.

உடனே விவேக் நின்ற இடத்திற்கு வந்துசேர்ந்தார் காவல் துறை அதிகாரி.

விவேக்கிடம் “ஃபைன்?” என்று கேள்வியாய் பேச்சை ஆரம்பித்தார் சங்கர்.

“கொண்டுவந்திருக்கேன் சார். இந்தாங்க சார்.” என்ற விவேக் பத்தாயிரத்தைக் கொடுத்ததும், “பைக் எங்க சார்?” என்றான்.

“பத்தடி தூரத்துல ஒரு ஹோட்டல் தெரியிதுல? அந்த ஹோட்டல் கார் பார்க்கிங்ல இருக்கு.”

“
ரொம்ப தாங்க்ஸ் சார்.”

“
ஓகே... அப்புறம் உங்க ஃப்ரண்ட் ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் பார்த்தப்போ...”

“
அன்னிக்கி அவனைப் பிடிச்சிட்டுப்போனப்ப ப்ளட் டெஸ்ட் எடுத்தீங்களா சார்?”

“
ஆமா. அதுதான் ரூல்ஸ்ப்பா. அந்த டெஸ்ட்ல...”

“
அந்த டெஸ்ட்ல?”

“
அல்கஹால் மட்டும் இல்ல தம்பி... கேதினோன்ன்னு ஒரு டிரக்கும் இருந்திச்சு.”

“
சார்... உங்ககிட்ட நான் ஒண்ணு சொல்லாம மறச்சிட்டேன் சார். நாங்க பப்புக்கு போனப்ப நாலு மெடிக்கல் காலேஜ் பசங்க எங்களுக்கு அறிமுகம் ஆனாங்க. அவுங்கதான் சார் எங்களுக்கு ஃபிரீ ஷாட்ஸ் ஸ்பான்ஸர் பண்ணாங்க. என்னமோ டிரீட்டாம்...”

“
அதனால ஓசியில கிடைச்சதும் வாங்கி வாயில ஊத்திக்கிட்டீங்க... அறிவிருக்காப்பா உனக்கு?”

“
சார்... ரொம்ப சிநேகமா பேசினாங்க சார். பிரேக்-அப் டிரீட்டாம் சார். எங்க ஆர்யா மதுவின் ஞாபகத்துல...”

“
ஓ... அவரும் மது ‘அமெரிக்காதான் வேணும். நீ வேணாம்’னு சொன்னதால மனசு உடைஞ்சி மெடிக்கல் காலேஜ் பசங்க குடிக்கச் சொன்னதைக் குடிச்சிட்டார். அப்படித்தான?”

“
மது அமெரிக்கா போறது உங்களுக்கு எப்படி சார் தெரியும்?”

“
அந்தப் பையன் தான் நேத்து ஸ்டேஷன்ல ஆயிரம் தடவை சொன்னானே...”

“
ஆமால... சரி சரி. சார், ஆர்யாவோட ஃபோன்...”

“
மறந்தே போனேனே... இந்தாப்பா. அப்புறம் மதுவோட நம்பர் எடுத்து வச்சிருக்கேன். அந்தப் பொண்ணுகூட டைம் கிடைக்கும் போது பேசுறேன்.”

“
ஃபோன் லாக் எப்படி எடுத்தீங்க சார்? மது நம்பர் எதுக்கு சார்?” என்று அலறினான் விவேக்.

“சைபர் கிரைம் ஆளுங்க லாக் எடுத்துக் கொடுத்தாங்க. நீ எதுக்கு மது பேரைச் சொன்னதும் பயப்படுற?”

“
மதுகூட நீங்க பேசவே வேணாம் சார்... அது ஒரு கெட்ட கனவு சார்... பிரச்சனையே...”

“
பிரச்சனையை நான் சரி பண்றேன். நீ வேணும்னா மதுவை கெட்ட கனவா நினைச்சு மறப்ப, ஆனா உன்னோட ஃப்ரண்ட் மறக்க மாட்டான். திரும்ப தண்ணியடிப்பான். போன வாரம் இதே மாதிரி கேஸ் ஒண்ணு வந்துச்சு. பையன் தண்ணியடிச்சி என்கிட்ட தான் மாட்டுனான். இதே மாதிரி லாவண்யா லாவண்னு புலம்புனான். பையன்கிட்ட 5000 ஃபைன் வாங்கிட்டு அனுப்பிட்டேன். ஆனா இரண்டே நாள்ல பையனை ரெயில்வே லைன்ல...”

“
சார்... சொல்லாதீங்க சார். மனசுக்கு கஷ்டமாயிருக்கு.”

“
அந்தப் பையன் வீட்டுல இன்ஃபார்ம் பண்ணிருந்தேன்னா அந்தக் கெட்ட சம்பவம் நடந்திருக்காது. கொஞ்சம் அசால்டா இருந்திட்டேன். அதான் உன் ஃப்ரண்ட் விஷயத்துல மதுகிட்டப் பேசலாம்னு நினைச்சேன். எனக்கும் ஒரு விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கணும் விவேக்.”

“
என்ன சார் நீங்க தெரிஞ்சிக்கணும்?”

“
மது ஏன் ஆர்யா மூக்கு மேல கைவச்சான்னு தெரிஞ்சிக்கணும், எதுக்கு ஆர்யா வேணாம், அமெரிக்கா தான் வேணும்னு சொன்னான்னு தெரிஞ்சிக்கணும்...”

“
ஓ...”

“
சொல்லு விவேக்... என்ன ஆச்சு? மது ஏன் ஆர்யா மூக்கு மேல...”

“
சார்... நீங்களுமா? வேணாம் சார், ஆர்யாக்கு இன்னும் போதை தெளியல சார், இப்ப பத்து நிமிஷம் முன்னாடி வரை அந்த வசனத்தைக் கேட்டுட்டு தான் சார் வர்றேன்... நான் உங்ககிட்ட எல்லாத்தையும் ஒண்ணுவிடாம சொல்லிடுறேன் சார்.”



மது - ஆர்யா கல்லூரிக்காலம்...
 
மது - ஆர்யா கல்லூரிக்காலம்...



லிட்மஸ் பரீட்சை முடிந்த அன்றைய தினத்தில், “டூ ஸ்டேட்ஸ்.” படம் படத்தை மது மனப்பாடமாய் பார்த்த அந்த தினத்தில்... மதுவின் மெத்தையில் சுகமாகப் படுத்துக்கொண்ட கைபேசி அதன்பிறகு மதுமிதாவைத் தொந்தரவே செய்யவில்லை.

அவள் கல்லூரிக்குச் செல்லும் வரையில் மதுமிதா பாடப்புத்தகங்களில் கவனம் செலுத்த, அந்த கைபேசி மந்தமாகவே எப்போதும் தூங்கிக்கொண்டே தான் இருந்தது. ஜான்வியின் பாப் பாடல்களை பாடும் நேரம் தவிர அந்த கைபேசி சோம்பேறித்தனமாய் தூங்கிக் கொண்டேதான் இருந்தது.

கல்லூரியின் இரண்டாம் நாள் வரும்வரை சமர்த்துப்பையனாக இருந்த மதுவின் கைபேசி தப்புத் தப்பாக தப்பாட்டம் ஆடத்துவங்கியது மீண்டும் ஆர்யாவின் ஏண் Hi Madhu மெசேஜ் வந்த ஷணத்தில் இருந்து...



* * *

“
மதுவைப் பார்த்தேன்டா விவேக்.”- ஆர்யா.

“யாரு??”- விவேக்.

“குட்ஷெப்பர்ட் ஸ்கூல் மது.”

“
ஓ... அந்த அட்டக்கத்தி மதுவா?”

“
ஹா... ஹா... நீ அதை விடவேமாட்டியா?”

“
மாட்டேன். அப்புறம். உன்கிட்ட வந்து பேசுனாளா?”

“
அவ என்னைப் பார்க்கல. நான்தான்டா அவளைப் பார்த்தேன். அண்ணா யுனிவர்சிட்டியில B.E கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்திருக்கா. நான் E.E.E டா.”

“
ஓ... நீயும் அவளும் ஒரே காலேஜ்ஜா? மதுவைக் கண்டுக்காத மச்சி. கெத்தா இரு.”

“
எனக்கு என்னமோ அவகூடப் பேசணும்னு தோணுச்சு டா.”

“
ஏன்டா? அவ உன்னை ப்ளாக் பண்ணது எல்லாம் மறந்து போச்சா?”

“
நானும் தான் அவளை ப்ளாக் பண்னேன். அதெல்லாம் ஸ்கூல்ல மெச்சூரிட்டியே இல்லாம சண்டை போட்டது. அதை எல்லாம் இப்ப நினைச்சிட்டு இருக்க முடியுமா?”

“
நினைக்கணும் மச்சி. கண்டிப்பா நினைக்கணும். பையனாகப் பொறந்தா பொண்ணுங்க பண்ண அட்ராசிட்டீஸ் எல்லாம் மறக்கக்கூடாது. திமிருத்தனத்தை மறக்கவே கூடாது மச்சி.”

“
அவ நம்பரை ப்ளாக் லிஸ்ட்ல இருந்து தூக்கிட்டேன் விவேக்.”

“
வாட்? Unblock பண்ணிட்டியா? யூ டிடின்ட்.” (You Didn’t)

“யெஸ் ஐ டிட் இட்.” (Yes... I did it)

“Holy Mary...”- விவேக்.

“இப்பதான் அவளுக்கு ஒரு மெசேஜ் வாட்ஸ் ஆப் பண்ணிருக்கேன்.”

“
Holy Mary mother of christ...”- விவேக்.

ஒரு பெரியார், ஒரு காமராஜர், ஒரு அண்ணா, ஒரு கலைவாணர், ஒரு “அட்டக்கத்தி” படம் கூடப் போதவில்லை இன்றைய இளைஞர்கள் திருந்தி நல் வழியில் வாழ்வதற்கு.

* * *



மது - ஜான்வி இல்லத்தில்...

“
அலியா பட்டுக்கு கல்யாணமாமே? அப்படியா? ஜஸ்டின் பீபர் புது கேர்ள்ஃப்ரண்ட் யாருப்பா? நேத்து இன்ஸ்டாவுல நிறைய ஃபோட்டோஸ் வந்தது பார்த்தியா?” - தனது வீட்டில் தனது அறையில் ஜான்வியிடம் மது.

“பார்த்தாச்சு பார்த்தாச்சு. எப்படி இருந்திச்சு ஃப்ர்ஸ்ட் டே காலேஜ்? அதைச் சொல்லு முதல்ல.”- ஜான்வி.

“சூப்பரா இருந்திச்சு ஜானு.. அப்பாகூட என்கிட்டக் கேட்டுட்டே இருந்தார். காலேஜ் பிடிச்சிருக்கா பிடிச்சிருக்கான்னு.. அண்ணா யுனிவர்சிட்டியில மெரிட்ல சீட் கிடைச்சது அவருக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தெரியுமா.. நீயும் இங்கயே வந்திடு.”

“
ம்.. நானா மாட்டேன்னு சொல்லப்போறேன்? மார்க் வந்திட்டா உன்கூடயே வந்திடப்போறேன். ஐ மிஸ் யூ பேட்லி அட் ஸ்கூல் மது. நீ இல்லாம ஸ்கூல் வேன்ல போறதுகூட பிடிக்கலை...” என்று செல்லம் கொஞ்சினாள் ஜான்வி.

“அடுத்த வருஷம் நீ ப்ளஸ் டூ ஜானு. நல்லா படி ஜானு... விளையாடிட்டே இருக்க.” என்று மது அறிவுரை கூறிய போது டி.வி முன் உட்கார்ந்திருந்த அர்ஜுன் மதூ என்று அழைத்தார்.

“வர்றேன்ப்பா.” என்று கூறியபடியே விரித்துக்கிடந்த கூந்தலை ஒன்றாய் சேர்த்து ஒரு பாண்டினால் இறுகக் கட்டிக்கொண்டே வரவேற்பறைக்கு விரைந்தாள் மதுமிதா.

“காலேஜ் பிடிச்சிருக்கா மது?” - ஆர்வமாய் அர்ஜுன்.

“யெஸ்ப்பா. இன்னிக்கு தான ஃப்ர்ஸ்ட் டே... நிறைய ஸ்கூல் மேட்ஸ் இருக்காங்க இங்க. ஹரினிகூட இங்கதான் சிவில் இன்ஜினியரிங் சேர்ந்திருக்கா.”

“
குட்... நாளைக்கு அப்பாகூட காலேஜ்க்கு வந்திடுறியா? உன்னை நானே கூட்டிட்டுப் போறேனே?”

“
இல்லப்பா. என்னோட ஸ்கூட்டியிலயே போயிடுறேன்னே. சாயங்காலம் ஃப்ரண்ட்ஸோட வெளியே போயிட்டு வருவேன். அதான்...”

இப்போதும் ஹரினியின் நட்பே அப்பாவிடம் மறுத்துப்பேச வைத்தது. பள்ளிக்காலத்தில் மல்லிச்செடியாய் இருந்த ஹரினி-மதுவின் நட்பு கல்லூரிக்காலத்தில் ஆலமர விருட்சிகமாய் வளர்ந்து நின்றது. ஹரினிக்கு அண்ணா யுனிவர்சிட்டியில் சிவில் பொறியியல் பிரிவில் இடம் கிடைத்ததும், மது சந்தோஷத்தில் வானம் தொடும் வரை உயரமாய் குதித்து குதூகலித்தாள்.

பள்ளிக் காலத்தில் சைவ விஷயங்கள் பேசியபோதே ஹரினியுடன் அரட்டையடிப்பது மதுவிற்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போது கல்லூரிக் காலத்தில் அசைவ சங்கதிகள் பேசும் உரிமையை இறைவனாய் கொடுத்தப்பிறகு... இருவரையும் ஒரே கல்லூரியில் சேர வைத்து அந்த உரிமையை இயற்கையே அவர்கள் கையில் திணித்துவிட்டப் பிறகு... ஹரினியுடன் அரட்டையடிப்பதையே பெரிதும் விரும்பினாள் மது. அதனால் தான் தந்தை கேட்டதும் உடனே மறுத்தும்விட்டாள்.

“ஓகே... மது பீ கேர்ஃபுல். சீக்கிரமா வீட்டுக்கு வந்திடணும்.” என்று அவளது மறுப்பை ஏற்று அப்பா அறிவுரை சொன்னதும் தாமதிக்காமல்,

“யெஸ்ப்பா.” என்றாள்.

“உட்காரு மது. அம்மா என்கூட சேர்ந்து உன்னையும் சாப்பிடச் சொன்னாடா..”

“
சரிப்பா.” என்று அவர் அருகே சோபாவில் உட்கார்ந்தவளின் கைபேசி சிணுங்கியது.

கையில் இருந்த கைபேசியை அப்பாவிடம் பேசிக்கொண்டே பார்த்தவள் புதியதொரு எண்ணில் இருந்து வாட்ஸ்ஆப் செய்தி வந்ததும் அப்பாவின் அருகேயே சற்று இடைவெளிவிட்டு உட்கார்ந்தபடி அந்தச் செய்திக்குள் நுழைந்தாள்.

‘டி.பியில விராட் கோலி ஃபோட்டோவா? யாராக இருக்கும்?’ என்று மனதில் நினைத்துக்கொண்டே திரையில் கண் பதித்தவளின் இதயம் ஒரு நிமிடம் ஃபூட்பால் போல விலா எலும்புகளுக்குள் எம்பிக் குதித்து அடங்கியது.

மெல்ல தலையைத் திருப்பி தந்தையைப் பார்த்தவள் அவர் தனது கைபேசியில் மூழ்கியிருப்பதைப் பார்த்து நிம்மதியடைந்து, “ஒரு நிமிஷம்ப்பா லாப்டாப்பை ஷட் டவுன் பண்ணிட்டு வந்திடுறேன்.” என்றபடியே அவசரப்படாமல் எழுந்து தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அறைக்குள் செல்லும் போதே அந்தச் செய்தியை மீண்டும் ஒரு முறை வாசித்திருந்தாள் மது,

“Hi... Madhu. This is Arya. Do you Remember me? Y.M.J school Arya... Are You placed at Anna Unniversity? Me Too.. I Saw You today... We shall meet tomorrow. Bye..”

* * *




மறுநாள் எழுந்த நொடியில் இருந்து மதுவின் கண்களுக்கு எல்லாமே Me Too... வாகத்தான் தெரிந்தது. அம்மா கையில் காபி கப்பைக் கொடுத்தபோது அதில் இருந்த நுரைகளுக்கு ஊடே “Me Too...” என்ற வாசகம் இருந்தது. முகத்தில் பவுடர் போட்டபோது தனது சுடிதாரில் தெறித்திருந்த பவுடரைத் தட்டிவிட்டுக்கொண்ட போதும் அதில் “Me Too...” வாசகம் மங்கலாகத் தெரிந்தது. இப்படி எங்கும் எதிலும் Me Too... தான்.

‘ஆர்யாவா? Y.M.J ஸ்கூல் ஆர்யாவா.. இல்ல வேற யாரும்மா? ஹரினிதான் கலாய்க்கிறாளா.. ச்ச ச்ச இவ்வளவு சீரியஸ் விஷயத்துலயெல்லாம் அவ விளையாட மாட்டாளே...’ என்று மனதிற்குள் ஆயிரம் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்க மனதை ஒரு வழியாக சமன்செய்துவிட்டு ஸ்கூட்டியில் அண்ணா பல்கலைக்கழகம் நோக்கிச் சென்றாள். அவள் உலகத்தில் சுனாமியை கட்டவிழ்த்திருந்த கைபேசியை தனது கட்டிலில் கிடத்திவிட்டு கல்லூரிக்குள் நுழைந்தாள் மதுமிதா.

* * *

கல்லூரியில் பதினோரு மணிக்கு ஆரம்பித்த முதல் இடைவேளை நேரம் வரை மதுமிதாவிற்கு ஆர்யா பற்றி யோசிக்கக்கூட நேரமில்லை. இடைவேளையிற்குப் பிறகு வகுப்பில் அனைத்து டிபார்ட்மென்ட் மாணவர்களும் ஒரே செமினார் அரங்கத்திற்குச் சென்றனர்.

ரோபோடிக்ஸ் பற்றிய செமினார் நடந்தபோது ஆர்யா அவள் அருகே வந்து அமர்ந்து ஆர்வமாய் மந்தகாசமாய் சிரித்தபடி, “ஹாய் மது.” என்று சொன்ன பிறகு மதுவிற்கு ஆர்யா தவிர வேறு எதைப் பற்றியும் யோசிக்க நேரமில்லை.

* * *

11

“இந்தப் பசங்களுக்கு ஒரு மோசமான ஞாபக மறதி நோய் இருக்கு தெரியுமா?”- விவேக்.

“நீ எதைப் பற்றி பேசுறன்னு தெரியும். ஆனா நோ கமென்ட்ஸ்.”- ஆர்யா.

“என்னது நோ கமென்ட்ஸா? அறிவிருக்காடா உனக்கு? ப்ளஸ் ஒன்ல அடிச்சி விரட்டாத குறையா பேசாம விரட்டுன பொண்ணுகிட்ட இளிச்சிகிட்டு பேசிட்டு வந்திருக்க... அதையும் பெருமையா வந்து என்கிட்டச் சொல்ற பாரு... என்னோட ஃப்ரண்ட்டுன்னு வெளியே சொல்லாத. மானம் போயிடும்.”

“
ஏய்... ஸ்கூல் படிக்கிறப்ப பண்ணதையெல்லாம் இப்பவும் ஞாபகம் வச்சிக்கிட்டு மூஞ்சத் தூக்கி வச்சிக்கச் சொல்றியாடா? போடா... போ. அப்படியெல்லாம் என்னால இருக்க முடியாது. சும்மா ஒரு “ஹாய்” “ஹலோ” சொன்னேன். அதுக்குப்போய் லபோ திபோன்னு குதிச்சிட்டு இருக்க?”

“
அவ ஃபோன் நம்பர் அன்ப்ளாக் பண்ணி வாட்ஸ் அப் பண்ணிருக்க, வழியப்போய் பல்லக்காட்டிட்டு ஹாய் சொல்லிருக்க, அரை மணி நேரம் கழிச்சு அந்தப் பொண்ணே, ‘மேக்ஸ் ப்ரொபர்சர் பார்க்குறார், அப்புறம் பேசலாம்’ ன்னு எச்சரிச்ச பிறகு கம்முன்னு இருந்திருக்க... இதையெல்லாம் நீ சொன்னபோது எனக்கு எப்படி இருக்குத் தெரியுமா? உன்னை...” என்று ஆர்யாவின் கழுத்தை நெறித்தான் விவேக்.

“யேய் கழுத்த நெறிக்காதடா...”

“
இப்படியே பண்ணிட்டு இருந்தன்னு வை அம்மாக்கு பயப்படும் அந்தப்பொண்ணு நாலு நாள்ல அண்ணான்னு கூப்பிட ஆரம்பிச்சுடும் சொல்லிட்டேன்.”

“
அண்ணாவா?”

“
ஆமா... அ-ண்-ணா. எங்க சொல்லு பார்ப்போம், அண்ணா... ‘ண்’ சொல்லும்போது நடு அண்ணத்துல நாக்கு தொடணும்.”

“
விவேக்க்க்.”

“
விவேக் இல்லப்பா... அண்ணா, அண்ணா, டிரை பண்ணு, வரும்டா.” என்று அஞ்சலிப் பாப்பாவுக்கு நாலு பசங்க சொல்லிக்கொடுத்த மாதிரி விவேக் ஆர்யாவிற்கு செல்லிக்கொடுக்க,

“உன்னை...” என்று அவனிடம் பாய்ந்திருந்தான் ஆர்யா.

* * *
 

New Threads

Top Bottom