Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மர்மங்கள்

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
தீராத தாகம்
தாகம் 1

இரவு சுமார் 12 மணி அளவில் அந்த தார் சாலையில் வழுக்கிக் கொண்டு போனது அந்த சிவப்பு நிறக் கார்.
காரின் உள்ளே 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், அவன் அருகில் 25 வயதுடைய ஒரு பெண்ணும் அமர்ந்து இருக்க அந்த கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
காரை ஓட்டிக் கொண்டிருந்தான் கார்த்திக். அவன் அருகில் அமர்ந்து இருந்த பெண் தூங்கிக் கொண்டு வர, கார்த்திக் தன் போனில் ஹெட் செட்டை மாட்டியபடி பாட்டு கேட்டுக் கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்க சட்டென்று ஒரு உருவம் வண்டியில் மோதி முன் கண்ணாடியில் தெரித்தது ரத்தம். அதனை அடுத்து ஆ... வென்ற அலறல் சத்தம் அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது.
*******
காலை மணி 9 அந்த போலீஸ் நிலையத்தின் முன்பக்கம் இருக்கும் கார் பார்க்கிங்கில் தன் 'டிவிஎஸ் ஸ்டார் சிட்டி' ஐ நிறுத்தி விட்டு அதில் இருந்து இறங்கினாள் அத்வேதா. நடந்து வந்து கொண்டிருக்கும்போது அவள் எதிரில் ஒரு கார் பெரும் சத்தத்துடன் அவளை விட்டு 2 ‘’ இன்ச் இடைவெளி விட்டு தள்ளி நின்றது.
அந்த காரை பார்த்த அத்வேதா, அதனை கண்டு கொள்ளாமல் தாண்டிச் செல்ல முற்பட , அவள் காரின் அருகில் வரவும் கார் கதவை திறந்து கொண்டு அவளை போகவிடாமல் வழிமறித்தபடி அதிலிருந்து இறங்கினான் சிருஷ்டன்.
அவனைப் பார்த்ததும் அவள் நகர முற்பட வேதாவை போகவிடாமல் வழி மறித்தான் சிருஷ்டன்.
"ஓய்! என்ன சிமூ கண்டுக்காமப் போற சீனியர்க்கு வணக்கம் சொல்லிட்டு போகனும்னு தெரியுமா? தெரியாதா?" – சிருஷ்டன்
அவன் சொன்னதை கேட்டு தன் பல்லை கடித்த வேதா முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு, வரவழைத்த மரியாதை தன்மையோடு
"வணக்கம் ஆபிஸர்!" என்று அவனுக்கு வணக்கம் சொன்னாள் அத்வேதா.
அவள் அப்படி சொன்னதும் அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்தவன்
"வாயில் இருக்கும் பணிவு கண்களில் தெரியவில்லையே சிமூ?" – சிருஷ்டன்
சிருஷ்டன் சிமூ என்றதும் கடுப்பான வேதா
" சிமூ ன்னு கூப்பிடாதீங்க சார்?"- என்று கூறி தன் அதிருப்தியை காட்டினாள் அத்வேதா. அதை கண்ட சிரு குதூகலமானான்.
"அப்படி கூப்பிட்டா உனக்கு கோபம் வருதா? அப்ப ரொம்ப நல்லதா போச்சு இனி அப்படிதான் கூப்பிடுவேன் சிமூ" – சிருஷ்டன்
வேதா 'இவன்கிட்ட வாய குடுத்தா உனக்கு தான் டென்சன் ஏறும். வேகமாக இந்த இடத்தை காலி பண்ணு' என்று அவள் மனசாட்சி கூற வேகமாக அந்த கட்டிடத்தின் உள்ளே விரைந்தாள் வேதா.
"ஓய்! பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்க போற! நில்லுடி!" என்று கத்தியபடியே அவளை பின்பற்றி சிருஷ்டனும் அந்த கட்டிடத்தின் உள்ளே சென்றான்.
அவள் லிப்டில் நுழைய வேதாவை இடித்துக் கொண்டு சிருவும் நின்றான். அவன் இடித்ததும் தள்ளி நின்று கொண்டு அவனை வேதா முறைக்க அதை கண்ட சிருஷ்டன் சிரித்தபடியே தன் செல்போனில் அந்த பாட்டை ஓட விட்டான்.
“மாமன் ஒரு நாள் மல்லிகைபூ கொடுத்தான்...
என் மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு நான்
யோசனை பண்ணி பாத்தேனம்மா
அவன் வாங்கிக்க சொல்லி தந்தானம்மா
......
அடி அம்மாடி என்னோரமா
என் மாமன் காரன் வந்தான்
புது சேலை தானே தந்தான்"
என்று அதில் SPB மற்றும் S.P.ஷைலஜா, இளையராஜா இசையில் பாடிக் கொண்டிருக்க , அதனுடன் சேர்ந்து சிருஷ்டனும் பாடினான்.
அதை கேட்ட அத்வேதா 'கருமம்! கருமம்! பாட்டு கூட அவன் மாதிரி இருக்கு. பிடிக்கிறான் பாரு பழசா!' என்று தனக்குள் அவள் முணுமுணுக்க ,
அதைத் தொடர்ந்து அந்த பாட்டை நிறுத்திய சிரு அந்த பாட்டை தானே பாடத் தொடங்கினான்.
‘’சிருஷ்டன் ஒரு நாள் மல்லிகை பூ கொடுப்பான்?
சிமூ அதை வாங்கி தலையில வைப்பா!
மல்லிகை பூ வாசம்!
அதில் தெரியும் எந்தன் நேசம்!"
என்று அவன் பாட அத்வேதா தலையில் அடித்துக் கொண்டு லிப்ட் திறப்பதற்காக காத்துக் கொண்டு நின்றாள். லிப்ட் திறந்தது தான் தாமதம் வேகமாக சென்று தன் கேபின் உள்ளே சென்று மறைந்தாள் அத்வேதா.
சன்னச் சிரிப்புடன் தன் கேபினை நோக்கிச் சென்றான் சிருஷ்டன்.
******
ஒரு 55 வயது மதிக்கத்தக்க மனிதர் முன் நின்று இருந்தனர் அத்வேதாவும், சிருஷ்டனும். அவர் முன் மரியாதையாக நின்று கொண்டு அவர் பேச்சினை வேதா கேட்டுக் கொண்டிருக்க , அந்த மனிதர் எதோ ஒன்றை எடுக்கத் திரும்பவும் வேதாவை வேண்டுமென்றே இடித்தான் சிருஷ்டன். அவள் முறைத்ததும் சிருஷ்டன் கண் அடிக்க ,
அதை கண்ட அத்வேதா 'திருந்தாத ஜென்மம்' என்று முணுமுணுத்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.
இவர்கள் செய்யும் சேட்டைகளை கண்டும் காணாமல் பார்த்தவர் செறுமி தன் இருப்பை காண்பித்தார்.
அவர் செறுமியதும் "தண்ணி குடிங்க கை!" என்று கூறிய சிருஷ்டன் அத்வேதாவை பார்த்துக் கொண்டிருப்பதை மட்டும் மாற்றிக் கொள்ளவில்லை.
சிருஷ்டன் சொல்லியதை அடுத்து தன் மேஜையை தட்டி அவனிடம் கத்த தொடங்கினார் 'கை' என்று அவனால் அழைக்கப்பட்ட கைலாஷ்வரன்.
"மிஸ்டர் சிருஷ்டன்! பி சீரியஸ்" என்று அவர் கத்த
"எஸ்! மிஸ்டர் கைலாஷ்வரன்..." என்று அவரை போலவே சொல்லிக் காண்பித்தவன் "நீங்க சொல்ல வேண்டியதை சீக்கிரம் சொல்லுங்க கைலாஷ்வரன். எனக்கு நிறைய வேலை இருக்கு பாருங்க!" என்று அத்வேதாவை சைட் அடித்தபடியே சிருஷ்டன் கூற,
கைலாஷ் தன் சொட்ட தலையை கர்ச்சிப் கொண்டு தடவியபடியே ஒரு பைலை எடுத்து அவர்கள் முன் வீசினார்.
"இந்த கேஸ் சால்வ் பண்ணனும்... அதுக்குத்தான் உங்களை இங்க வரச் சொன்னேன்" – கைலாஷ்வரன்
அவர் கூறியதை தொடர்ந்து சிருஷ்டன் மேஜையில் ஏறி அமர்ந்து தன் ஒரு காலை ஆட்டியபடியே தன் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு சூயிங்கம்மை எடுத்து வாயில் மென்றபடியே அந்த பைலை புரட்டினான்.
"பூட்ட கேஸா? ஓடி போன கேஸா கை?" – சிருஷ்டன்
அதை கேட்ட இருவரும் தன் அதிருப்தியை காட்டினர்.
"இப்ப நான் என்ன சொல்லிட்டேனு உங்க இரண்டு பேர் முகமும் இப்படி போகுது. நான் சொன்ன இரண்டு ல தான கேஸ் வர போகுது?" - சிருஷ்டன்
"நீ ஒரு அசிஸ்டண்ட் கமிஷ்னர். ஆனா AC மாதிரியா நடந்துக்குற? ஏன்டா இப்படி இன்டீசண்டா நடந்துக்குற சிரு?" – கைலாஷ்
"படிச்ச படிப்பு அறிவை வளர்க்க கை. நடை, உடை மாத்துறதுக்கில்லை? ஆமா எந்த சுண்டெலியாவது வந்து என்னை பத்தி சொல்லுச்சா என்ன?"- என்று சிருஷ்டன் வேதாவை பார்த்துக் கொண்டே கேட்க வேதா முகம் பதட்டம் அடைந்தது.
அதை கவனித்த சிருஷ்டன் "சொல்லிட்டீங்கள சார்! இனி பாருங்க என் டீசன்ஸிய..." என்று வேதாவை பார்த்துக் கொண்டே சிருஷ்டன் சொல்ல வேதாவிற்கு பயம் பிடித்துக் கொண்டது.
இதை கவனித்த கைலாஷ் வேகமாக இடையில் பேசினார்.
"உன்னை பத்தி இன்னோருத்தவங்க சொல்லித்தான் தெரியனுமாடா? ம்ம்ம்.. அதைவிடு தேவையில்லாத பேச்சு எதற்கு? கேஸ் பத்தி பேசலாம்.." என்று கூறிய கைலாஷ் ஒரு புகைபடத்தை எடுத்து அத்வேதாவிற்கும், சிருஷ்டனுக்கும் காண்பித்தார்.
"இவன் பெயர் கார்த்திக்! நேற்று பைப்பாஸ் ரோட்ல செத்து கிடந்தான். உடம்புல எந்த நகக் கீறலும் கிடையாது. ஹார்ட் அட்டாக் ஆ இருக்கலாம்னு கெஸ் பண்றேன். ஆனா இன்னும் அடாப்ஸி ரிப்போர்ட் வரவில்லை. அதுமட்டுமில்ல அவன் கூட ஒரு பெண்ணும் இருந்திருக்கா. அந்த பெண் அவன் மனைவியா? இல்லை காதலியா னு இனி தான் விசாரிக்கணும்? ஆனா அவ இப்ப எதையும் சொல்ற நிலைமையில் இல்லை.." – கைலாஷ்
"ஏன்? என்னாச்சு சார்?" - அத்வேதா
"அவ மெண்டலி டிஸ்டர்ப் ஆகி அவளுக்கு இப்ப டீரிட்மெண்ட் போயிட்டு இருக்கு.. அவ கிட்ட இருந்து இப்ப நாம எதையும் தெரிஞ்சுக்க முடியாது.." – கைலாஷ்
"அந்த பொண்ணு ஒரு வேலை நடிக்கலாம் இல்லையா சார்? அந்த பெண் கூட அவனை கொன்னிருக்கலாம் சார்!" – அத்வேதா
"அப்படியும் இருக்கலாம்? ஆனா அவ மெண்டலி டிஸ்டர்ப்னு அவளை செக் பண்ண டாக்டர்ஸ் சொல்றாங்க! அவ யாரையோ பார்த்து பயந்து போன தால தான் இப்படி இருக்கிறதா டாக்டர்ஸ் ரிப்போர்ட் கொடுத்து இருக்காங்க" – கைலாஷ்
அத்வேதாவும் , கைலாஷ்வரனும் இங்கு பேசிக் கொண்டிருக்க அடுத்து சிருஷ்டன் கேட்ட கேள்வியில் இருவரும் அவனை முறைத்தனர்
*********
இரவு மணி 12 அதே பைப்பாஸ் சாலையில் வேறு கார் சென்று கொண்டிருக்க காரின் உள்ளே 60 வயது மதிக்கத்தக்க மனிதர் டிரைவர் சீட்டில் அமர்ந்து கார் ஓட்டிக் கொண்டிருந்தார். ஓட்டிக் கொண்டிருந்த அவர் கண்களில் தூரத்தில் ஒரு பெண் சாலையில் அமர்ந்து அழுது கொண்டிருப்பது தெரிய வேகமாக காரை நிறுத்திவிட்டு இறங்கினார். அவர் ஞானப்பிரகாஷ்.
இறங்கியவர் அந்த பெண்ணின் அருகில் செல்ல அங்கு அந்த பெண்ணின் மடியில் முகத்தில் இரத்தம் வழிய வேறு ஒரு பெண் துடித்துக் கொண்டிருந்தாள்.
"சார்! காப்பாத்துங்க! காப்பாத்துங்க! என் தங்கையை காப்பாத்துங்க!" என்று அந்த பெண் கதறித் துடிக்க
"சீக்கிரம் வாமா! உன் தங்கையை ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போகலாம்" என்று கூறியபடியே அடிபட்ட பெண்ணை தூக்கிக் கொண்டு ஞானபிரகாஷ் முன்னே செல்ல, மற்றொரு பெண் அழுது கொண்டே அவரை பின்பற்றி சென்றாள்.
அடிபட்ட பெண்ணை பின் சீட்டில் அவர் படுக்க வைக்க அவள் அருகில் அமர்ந்தாள் மற்றொரு பெண். அவர்களை அமர வைத்துவிட்டு காரை ஓட்ட ஆரம்பித்தார் ஞானப்பிரகாஷ்.
சற்று தூரம் சென்றதும் "தாகம்! தாகம்" என்று சத்தம் கேட்க , அதை கேட்ட அவர் வேகமாக தன் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து காரை ஓட்டியபடியே சீட்டின் பின்புறம் நீட்டினார். சற்று நேரத்தில் அந்த பாட்டில் திரும்பிக் கொடுக்கப்பட்டது.
அதை வாங்கிய ஞானப்பிரகாஷ் அதிர்ந்தார்.
அந்த பாட்டிலில் இருந்த தண்ணீர் முழுவதும் ரத்த நிறமாக மாறி இருக்க சற்று நேரத்தில் யாரோ முணுமுணுக்கும் சத்தம் கேட்டது. அதை கேட்டு பயத்தோடு பின்னால் திரும்பிப் பார்த்த ஞானப்பிரகாஷ் பயத்தில் அலறியபடி காரை நிறுத்திவிட்டு ஓடினார்.
ஓடியவர் சற்று நேரத்தில் நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்தார்.
தாகம் தீருமா?
அடுத்த பதிவில்
 
தாகம் 2
சிருஷ்டன் சொன்னதை கேட்டு அத்வேதாவும் , கைலாஷும் சிருஷ்டனை முறைத்தனர்.
"நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு ரெண்டு பேரும். என்னை முறைக்குறீங்க? – சிருஷ்டன்
"பி சீரியஸ் சிரு!" – கைலாஷ்
"யூ சீ கை...! நான் சீரியஸாதான் சொல்றேன்! பொண்ணு தான பையன பைத்தியமாக்குவா! இங்க வித்தியாசமா இருக்குன்னு... நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு? என்ன வேதா மேடம் நான் கேட்ட கேள்வி சரியா? தப்பா?" – சிருஷ்டன் வேதாவை வம்புக்கிழுத்தான்.
"ஒரு வேளை இப்படி இருக்குமோ கைலாஷ்?" - அத்வேதா
அவளை முழுதாய்சொல்ல விடாமல் சிருஷ்டன், "அந்த பொண்ணை உசார் பண்றேன்னு... அவன் எதாவது செய்யப் போய் அந்த பொண்ணு கோபத்தில் போட்டு தள்ளி இருக்குமோ? அழகுனா ஆபத்து தான என்ன நான் சொல்றது சரிதான சிமூ?"
அதற்கு அவனை முறைத்த வேதா " சார்! கொலை நடந்த இடத்தை பார்த்தா எதாவது க்ளூ கிடைக்கும்னு நினைக்கிறேன்?" – அத்வேதா
"எஸ் வேதா? யூ ஆர் ரைட்.." என்று கூறிய கைலாஷ் எதோ சொல்ல வர
அவர்க்கு போன் வந்தது , அதை எடுத்து பேசியவர் "ஓ! அப்படியா? எங்க? எப்ப?" என்று கேட்டுவிட்டு போனை வைத்தவர் இவர்களிடம் திரும்பினார்.
"சிரு , வேதா... கார்த்திக் கேஸ் மாதிரி இன்னோரு கேஸ் நடந்து இருக்கு. அதுவும் அதே இடத்தில் நடந்து இருக்கு, அதே டைமில். நீங்க அங்க போனா உங்களுக்கு எதாவது க்ளூ கிடைக்கும்னு நினைக்கிறேன்" என்று கைலாஷ் சொல்ல அதன்படி இருவரும் அங்கு விரைந்தனர்.
*******
இறந்துகிடந்த அந்த மனிதரை சுற்றி வரைபடம் வரையப்பட்டிருக்க அவரை சுற்றி சில பேர் அவரின் கார் மற்றும் அவரை ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.
அங்கு நடந்து கொண்டிருப்பதை தன் ஜீப்பில் சாய்ந்தபடி நின்று பார்த்துக் கொண்டே சுற்றியும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான் சிருஷ்டன் .
அவன் அருகில் வந்தாள் அத்வேதா "சார்! இவர் பெயர் ஞானபிரகாஷ். ரிடையர்டு ப்ரோஃபசர் காலேஜில... 2 பசங்க ஃபாரின்ல இருக்காங்க... தகவல் சொல்லியாச்சு. பாடியில் எந்த மார்க்ஸும் இல்லை. கிட்டத்தட்ட கார்த்திக் இறந்த மாதிரிதான் இவரும் இறந்து போயிருக்கார்." – அத்வேதா
"கார்த்திக்கின் போஸ்ட் மாட்டம் ரிப்போர்ட் வந்துருச்சா?" – சிருஷ்டன்
"எஸ் சார்! ஹாட் அட்டாக்ன்னு தான் அதில் எழுதப்பட்டிருக்கு! அதுமட்டுமில்லை சார்! இரண்டு பேரும் ஒரே நேரத்தில் தான் இறந்து போயிருக்காங்க" – அத்வேதா
வேதா சொன்னதை சிரு யோசித்துக் கொண்டிருக்கும் போதே எதிரில் இருந்த புதரில் அசைவு தெரிந்தது. அதை கவனித்த சிரு வேகமாக அங்கு ஓட அந்த புதரில் மறைந்திருந்த உருவமும் ஓடியது.
அந்த உருவத்தை துரத்தி சிரு பிடிக்க அங்கு ஒரு 60 வயது மதிக்கத்தக்க மனிதர் நின்று இருந்தார். அவரை பிடித்த சிருஷ்டன் அவரை கேள்வியால் துளைக்க ஆரம்பித்தான்.
"யார் நீங்க? எதற்கு என்னை பார்த்து ஓடுறீங்க?" – சிருஷ்டன்
அதற்கு அவர் பயந்தபடியே நின்றார்.
"உங்களுக்கு இங்க நடந்த கொலைகள் பத்தி ஏதாவது தெரியுமா?" – சிருஷ்டன்
சிரு கொலை என்றதும் அந்த மனிதர் பேசத் தொடங்கினார்.
"சார்! தயவு செய்து இங்க நிக்காதீங்க போயிடுங்க? அவ வரப்போறா! அவ வந்தா யாரையும் விடமாட்ட? அப்புறம் அவ உங்களயும் கொன்றுவா! சார்! அவ தாகம் லாம் அவ்வளவு சீக்கிரம் அடங்காது!" – அந்த மனிதர்
"யாரை பற்றி நீங்க சொல்லிட்டு இருக்கீங்க பெரியவரே? அவங்கனா? யார் அவங்க? அப்ப இந்த கொலைகளுக்கு எல்லாம் அவங்க தான் காரணமா? அவங்க இப்ப எங்க இருக்காங்க?" என்று சிருஷ்டன் கேள்வி கேட்க
அதற்கு அந்த மனிதர் சுற்றி பயப்பார்வை பார்த்துக் கொண்டே பேச ஆரம்பித்தார்.
"சார்! நா இங்க தா ஒரு வருஷத்துக்கு முன்னாடி வரை காலேஜில நைட் வாட்ச்மேனா வேலை பார்த்தேன்.. ஒரு நாள் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லன்னு வேலைக்கு வரல... மறுநாள் ல இருந்து வேலைக்கு வேண்டாம் ன்னு சொல்லிட்டாங்க... நா 2 நாள் கழிச்சி இங்க வந்தேன்... அப்போ ஒரு பொண்ணு அழுதுகிட்டே போச்சி... அவ பேர் மோகனா! அவளும் அவ தங்கை பாரதியும் 3 வருஷத்திற்கு முன்னாடி இங்க தான் இறந்து போனாங்க? அதிலிருந்து இந்த பக்கம் வண்டில போறவங்க எல்லாரும் எதையோ பார்த்து அலறி ஓடுவாங்க... அக்கா தங்கச்சி தான் எல்லாரையும் பயமுறுத்து வாங்க... யாரயும் அவங்க விடுறது இல்லை சார்" - அந்த மனிதர்
"ஓ! ஏன் அப்படி? ஆமா அவங்க இரண்டு பேரும் எப்படி இறந்து போனாங்க? கொஞ்சம் சொல்ல முடியுமா பெரியவரே!" – சிருஷ்டன்
"சார் அவங்க எப்படி இறந்து போனாங்கனா?" என்று அவர் ஏதோ சொல்ல வர.... எதிரில் பார்த்தவர் திடீரென பயந்து கத்த ஆரம்பித்தார்.
"சார் அவ வந்துட்டா! என்னைவிட மாட்டா?" என்று அலறியபடியே அவர் ஓட, திரும்பிப் பார்த்த சிருவிற்கும், வேதாவிற்கும் வெற்றிடமாக காட்சி அளித்தது.
சிருவும் மற்றவர்களும் அவரை நோக்கி ஓட வேதா ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்தாள். அங்கு ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் கைகளை வேதாவை நோக்கி நீட்டி 'வா...' என்று அழைக்க, அவள் அருகில் செல்ல முயன்ற அத்வேதா “வேதா” என்ற சிருவின் அழைப்பு சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள்.
அங்கு சிரு இவளை பார்த்தபடி "ஓய் சுண்டலி! அங்க என்ன பார்த்துட்டு இருக்க? எவ்வளவு நேரம் தான் உன்னை நான் கூப்பிட்டுட்டு இருக்கிறது. வா போகலாம்" – சிருஷ்டன்
அதற்கு தலையசைத்துவிட்டு திரும்பிப் திரும்பிப் பார்த்தபடியே வேதா சென்றாள்.
இவர்கள் செல்வதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தது இரு உருவங்கள்.
****
வேதா சிருவின் முன்னால் நியூஸ் பேப்பர்களை கடைபரப்பினாள்.
"சார்! இது மூணு வருசம் முன்னாடி நடந்த ஆக்சிடென்ட் கேஸ்கள். இப்ப நடந்த கார்த்திக், மற்றும் ஞானபிரகாஷ் இறந்து கிடந்த அதே இடத்தில் தான் நடந்து இருக்கு" – அத்வேதா
"ஓ... அப்படியா?" என்று சிரு வாங்கிப்பார்க்க , வேதா அதை விவரிக்க ஆரம்பித்தாள்.
"சார்! மோகனா, அவங்க தங்கை பாரதியும் அந்த இடத்தில் இறந்து போயிருக்காங்க!" – அத்வேதா
"அவங்க எப்படி இறந்து போனாங்க? அவங்களுக்கும் இப்ப இறந்து போனவங்களுக்கும் எதாவது தொடர்பு?" – சிருஷ்ட்ன்
"அதை தான் சார் கண்டுபிடிச்சிட்டு இருக்கோம். ஆனா ஒரு விசயம் தெளிவா தெரியுது சார்! மோகனா அவங்க தங்கை இறந்து போன அடுத்த மூணாவது நாள் இறந்து போயிருக்காங்க. அதுவும் வண்டி மோதி பாரதி இறந்து போன மாதிரி இறந்து போயிருக்காங்க!" – வேதா
"மோகனா அவங்களா காரின் முன்னாடி விழுந்து இறந்து போனாங்களா? இல்லை யாராவது பிளான் பண்ணி அவங்கள கொலை செய்ய முயற்சி செய்திருக்காங்களா? அவங்கள பத்திய வேற தகவல்கள்?" – சிரு
"சார்! மோகனா தனியாளா சம்பாதிச்சு அவங்க தங்கைய வளர்த்திருக்காங்க? ஆனா அவங்க தங்கையோட திடீர் மரணம் அவங்கள பாதிச்சு அவங்களாகவே கார் முன்னாடி விழுந்து இறந்து போயிருக்காங்க" – வேதா
"பாரதி படிச்ச காலேஜ் ல விசாரிச்சீங்களா?" – சிரு
"இல்ல சார்!" அவ காலேஜில தான் படிச்சிருக்கா... கார்த்திக்கும்.... ஒரு பிரபலமான கல்லூரி பேரை வேதா சொல்ல
"ஓகே... இவங்க எல்லாருக்கும் இருக்குற லிங்க் *** காலேஜ் தான்.. அப்ப அங்க போய் விசாரிச்சா பாரதிய பத்தி எதாவது தெரிய வரும்." என்று சிரு கூற வேதாவும் அதற்கு ஒத்துக் கொண்டு கிளம்ப முற்பட அவளை தடுத்து நிறுத்தினான் சிருஷ்டன்.
"அப்புறம் சிமூ? போட்டு கொடுக்கிற வேலையெல்லாம் செய்ற போல!" – சிருஷ்டன் வழக்கம் போல் வம்பிழுக்க
"அது... அது வந்து... அப்படிலா இல்லை சார்?" – அத்வேதா
"உன் கண் உண்மைய காட்டிக் கொடுக்குதுடி. யார் தடுத்தாலும் சரி! யார் என்ன சொன்னாலும் சரி! உன்னை என்கிட்ட இருந்து யாராலும் காப்பாற்ற முடியாது! புரியுதா! போ.." என்று சிருஷ்டன் மிரட்ட
அவனை பார்த்தபடியே சென்றாள் அத்வேதா.
தாகம் தீருமா?
நம்ம சிரு... சிமூ... கொலையாளியைக் கண்டுபிடிப்பார்களா ?
அடுத்த பதிவில்
 
தாகம் 3
மாதேஸ் அன்று மாலை ஆபிஸ் முடிந்து வெளியே கார் பார்க்கிங் நோக்கி வந்து கொண்டிருக்க அவன் எதிரில் வந்து நின்றார்கள் சிருஷ்டனும், அத்வேதாவும்.
வந்தவர்களை யோசனையோடு மாதேஸ் பார்க்க,
"நான் சிருஷ்டன் - ACP , இவங்க அத்வேதா என் அசிஷ்டண்ட், உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்" – சிருஷ்டன்
"என்கிட்ட பேச என்ன இருக்கு சார்?" – மாதேஸ்
"ஒரு கொலை கேஸ் பற்றி விசாரிக்க வந்தோம்! உள்ள போய் பேசலாமா?" – சிருஷ்டன்.
உள்ளே வந்ததும் மாதேஸ் வந்தவர்களை அமருமாறு கூறி தானும் அமர்ந்து " சொல்லுங்க" என்றான்.
"உங்களுக்கு பாரதிய பத்தி தெரியுமா?" – சிருஷ்டன்
அந்த பெயரைக் கேட்டதும் அவன் முகத்தில் வேர்வை துளிர்த்தது. அதை கண்ட சிருஷ்டன் வேதாவிடம் சைகை காட்ட அவள் மாதேஸிடம் திரும்பினாள்.
"இதோ பாருங்க மாதேஸ்!" என்று கார்த்திக் புகைப்படத்தை அவனிடம் காண்பித்து "இவர் உங்க பிரண்ட் தான?" – அத்வேதா
"ஆமா! மேடம்! இப்போ ஏன் இவனை பற்றி கேட்குறீங்க? இவனுக்கு என்னாச்சு?" – மாதேஸ்
"இவர் இப்ப உயிரோடு இல்லை" – அத்வேதா
"வாட்? என்ன சொல்றீங்க?" – மாதேஸ்
"ஆமா மாதேஸ்! உங்களுக்கு தெரிந்த விசயங்களை சொன்னால் நாங்க கொலையாளிய கண்டுபிடிக்க வசதியா இருக்கும்?" – அத்வேதா
"பாரதிக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?" – சிருஷ்டன் .
"பாரதி எங்க கூட படிச்சா அவ்வளவு தான் சார்! வேற எதுவும் அவள பத்தி தெரியாது?" – மாதேஸ்
"மிஸ்டர் மாதேஸ் உண்மையை சொல்லிட்டா உங்களுக்கு நல்லது? இல்லைனா?" என்று சிருஷ்டன் கூறியபடியே தன் சேரில் இருந்து எந்திரிக்க மாதேஸ் பயத்தில் பேசத் தொடங்கினான்.
"சார்! பாரதி எங்க கூடத்தான் படிச்சிட்டு இருந்தா! நல்ல அமைதியான பொண்ணு!" – என்று நிறுத்தியவன் இருவரையும் பார்க்க
"சொல்லுங்க மிஸ்டர் மாதேஸ்? ஏன் நிறுத்திட்டீங்க? அப்படியே அவள எதுக்கு கொலை செஞ்சீங்கன்னு சொல்லிடுங்க?" – சிருஷ்டன்
"அய்யோ சார்! கொலை எல்லாம் செய்யல.." – மாதேஸ்
"அப்படியா அப்படின்னா இது என்ன?" என்று வேதா போனை காண்பிக்க அதில் பாரதியை காலேஜில் நால்வரும் துரத்திய காட்சிகள் பதிவாகி இருந்தது. அதை கண்ட மாதேஸ் பயத்தில் எச்சில் விழுங்கினான்.
"இப்ப நடந்ததை நீயா சொல்றியா? நான் சொல்ல வைக்கவா?" –சிருஷ்டன்
"சொல்லிடுறேன் சார்!" என்று மாதேஸ் அன்று நடந்ததைச் சொல்லத் தொடங்கினான்.
"பாரதி ஹாஸ்டல்லில் தங்கி படிச்சிட்டு இருந்தா சார்! பாய்ஸ் ஹாஸ்டல்லும் அந்த கேம்பஸ்ஸில் தான் இருந்தது.
அன்றைக்கு கார்த்திக் கஞ்சா வாங்கிட்டு வந்திருந்தான் சார். அவனோட சேர்ந்து பரதன், சேகர், நான் மூவரும் குடிச்சிட்டு இருக்கும் போது சேகர் கஞ்சா அதிகமாகி மூச்சி திணறி அந்த இடத்திலேயே இறந்து போயிட்டான். அவன் இறந்ததும் என்ன பண்றதுன்னு தெரியாமா நாங்க பயந்து அவன் குடிபோதையில் மாடியில் இருந்து குதிச்ச மாதிரி நாங்க செட் பண்ணோம். கார்த்திக் தான் அந்த ஐடியா கொடுத்தது. அவன தூக்கி போடும் போது பாரதி பார்த்துட்டா.. அவ பார்த்ததை வெளிய யார்கிட்டயாவது சொல்லிருவாளோன்னு பயந்து அவளை பிடிக்க நாங்க துரத்துனோம்... ரொம்ப நேரம் ஒடிட்டே இருந்தா... அப்போ கார்த்திக் கீழ கிடக்கிற கம்பை எடுத்து அவ கால்ல வீசினான்... விழுந்து எழுந்து ரோட க்ராஸ் பண்ணும் போது காரில் மோதி இறந்து போயிட்டா! காரும் நிக்காம போயிருச்சி…. நாங்களும் திரும்ப வந்துட்டோம்... அப்பறம் எல்லாம் கார்த்திக், அவன் அப்பாவ வச்சி பாத்துக்கிட்டான்… மத்தபடி நாங்க வேறு எதுவும் பண்ணல சார்?" என்று மாதேஸ் கூறி அழ ஆரம்பித்தான்.
"இந்த வீடியோ உங்களுக்கு எப்பிடி கிடைச்சது... கார்த்திக் அந்த ஃபூட்டேஜ் எல்லாம் அழிச்சிட்டதா சொன்னனே..." - மாதேஸ்
"அது உங்க கிட்ட சொல்ல தேவையில்லன்னு நினைக்கிறேன். சரி சொல்லுங்க... மோகனா எப்படி இறந்து போனாங்க மாதேஸ்? அவங்கள என்ன பண்ணீங்க?" – அத்வேதா
"ஐயோ! சார்! நாங்க எதும் செய்யல சார்... நம்புங்க சார்..." பின் தயங்கியவாறே "அவங்களே அப்பறம் ஒரு ரெண்டு நாள் கழிச்சி எங்க காலேஜுக்கு ப்ரின்சிபால பாக்க வந்தாங்க சார்... வந்து அவங்க தங்கச்சி இறந்து போனதுக்கு நாங்க 4 பேர் தான் காரணம்ன்னு அவங்க தங்கச்சியே வந்து சொன்னதாகவும்? எங்களை அவங்க கொல்லாம விடப் போறதில்லைன்னும் சொல்லிட்டு போனாங்க சார்! மத்தபடி அவங்க இறந்து போனதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சார்… அவங்க இறந்ததே இப்போ நீங்க சொல்லி தான் எனக்கு தெரியும்" என்று மாதேஸ் கூற,
சிருஷ்டன், அத்வேதா இருவரும் அவனை ரூமில் தனியே விட்டுவிட்டு வெளியில் வந்தனர்.
"மாதேஸ் சொல்லியது எந்தளவு நிஜமா இருக்கும் சார்?" – வேதா
அவன் சொன்னது அனைத்தும் நிஜம் தான் வேதா. அவன் சொல்லிய விசயங்கள் அனைத்தும் ஆல்ரெடி நான் கார்த்திக் டைரியில் படிச்சேன்" – சிருஷ்டன்
வேதா கேள்வியாக பார்க்க "அன்றைக்கு காலேஜ் போய் விசாரிக்கும் போது சேகர் தற்கொலை செஞ்சுகிட்டது தெரிந்தது. அதை அடுத்து கார்த்திக் அவன் பிரண்ட்னு தெரிஞ்சதும் அவன் வீட்டில் விசாரிக்க போகும் போது அவன் ரூமில் டைரி கிடந்தது. அதில் அவன் தெளிவா எழுதியிருந்தான்." என்றான் சிருஷ்டன்.
"சார்! அப்போ இந்த விடீயோ ஃபூட்டேஜ்.." – அத்வேதா.
"இது ஞானசேகரன் பர்சனல் லேப்டாப் ல இருந்து கிடைச்சது" - சிருஷ்டன்
"சார்! அப்போ இதுல இருந்து பாரதி, மோகனா தான் இந்த கொலையெல்லாம் செய்றாங்கன்னு தெளிவா தெரியுது?" – அத்வேதா
"யூ மீன்... பாரதி ஆவியா வந்து செய்றான்னு சொல்றீயா? ஆர் யூ கிரேஸி? இதை என்ன வேற நம்பச் சொல்றீயா? நீயெல்லாம் போலீஸ்ன்னு வெளிய தயவுசெய்து சொல்லாத" – சிருஷ்டன்
"சார்! இதை நம்புறத தவிற வேறு ஆப்சன் நம்மகிட்ட இல்லையே!” அவளை நோக்கி கை நீட்டிய பாரதி அவள் நினைவில் ஆட, “அவ அடுத்த டார்கெட் பரதனா தான் இருக்கும்!" – அத்வேதா
" வேற ஆப்சன் இருக்கலாம் சிமூ! பாரதிக்கு தெரிஞ்சவங்க யாராவது கூட இதை பண்ணி இருக்கலாம் ல?" – சிருஷ்டன்
"பாரதிக்கு அக்கா மட்டும் தான். அவங்களும் அவ தங்கச்சி இறந்ததை தாங்க முடியாம… தானே காரின் முன்னாடி விழுந்து இறந்து போயிட்டாங்க. அதனால அவ அக்காவும் இப்ப உயிரோடு இல்ல? அப்ப வேற யார் பண்ணி இருக்க முடியும்?" – அத்வேதா
"அது தான் நமக்கு குடுத்துருக்கற வேல... அத நாம தான் கண்டுபிடிக்கனும். அதுக்கு முன்னாடி... உன்னோட பாயின்ட் ஆஃப் வியு ல பாத்தா பரதனையும் மாதேஸயும் நாம காப்பாத்த ஏற்பாடு பண்ணனும்" என்று சிருஷ்டன் சொல்ல அதை கேட்டு அத்வேதாவும் தலையசைத்தாள்.
**********
அங்கே அந்த ரூமில் தனியாக அமர்ந்து இருந்த மாதேஸ் முன் தோன்றினாள் அவள்.
அவளை பார்த்ததும் "என்னைக் காப்பாத்துங்க" என்று அலறினான் மாதேஸ்.

அவள் தாகம் தீருமா? அடுத்த பதிவில்....
 
தாகம் 4
மாதேஸ் முன்னால் ஒரு அருவம் நின்றது. அதை பார்த்ததும் "என்னைக் காப்பாத்துங்க" என்று அலறி ஓட ஆரம்பித்தான் மாதேஸ்.
மாதேஸ் ஓட ஆரம்பித்ததும் பாதைகள் நீண்டு அது அந்த சாலையில் வந்து நின்றது.
பயந்து ஓடிய மாதேஸ் மூச்சு வாங்க ஒரு இடத்தில் நிற்க தூரத்தில் யாரோ நிற்பதை அறிந்து வேகமாக "காப்பாத்துங்க?" என்று அலறியவாறு மாதேஸ் அந்த நபரின் அருகில் சென்றான்.
அந்த நபர் அருகில் சென்ற மாதேஸ் அதிர்ந்தான். அங்கு பாரதி முகத்தில் ரத்தம் வழிய நின்று இருந்தாள். அவளை பார்த்ததும் மாதேஸ் அலறியபடியே பின் வாங்கியவன்…. பின்னால் யார் மீதோ இடித்துக் கொண்டு நின்றான். நடுங்கிய படி கழுத்தை மட்டும் திருப்ப அங்கு மோகனா நின்று இருந்தாள்.
மாதேஸ் பயந்து கண்களை இருக மூடிக் கொண்டு, "அ.. ஆ... ஆ... ஐயோ.... நா... நா.... நா... இல்ல.... ப்ளீஸ் என்னை விட்டுங்க.... நான் எதும் செய்யல... நானா எதும் செய்யல... அந்த கார்த்திக் தா..." என்று மாதேஸ் உளறி கிளறி கெஞ்ச இருவரும் உரக்க சிரித்தனர்.
"என் தங்கச்சியும் அன்றைக்கு இப்படி தானடா கெஞ்சினா… காப்பாத்த சொல்லி…" என்று முகத்தில் ரத்தம் வழிய மோகனா அவன் அருகில் வர மாதேஸ் பயந்து பின்னால் சென்றான். மாதேஸ் பின்நோக்கி நகர எதிரில் வந்த கார் அவன் மேல் மோதி கீழே விழுந்தான் மாதேஸ்..
மாதேஸின் அலறல் சத்தம் கேட்டு அவனை தேடி அவன் அறைக்குள் வந்த சிரு.. வேதா அதிர்ந்தனர்.
முகமெல்லாம் ரத்ததுடன் கார்த்திக் இறந்த மாதிரியே அவர்களின் முன் இறந்து கிடந்தான் மாதேஸ்.
*******
மாதேஸ் உடலை அடோப்ஸிக்கு அனுப்பிய சிருஷ்டன் முன் வந்து நின்றாள் அத்வேதா.
"சார்! இப்ப மிஞ்சம் இருக்குறது பரதன் மட்டும் தான். அவரை காப்பாத்தனும்." என்று வேதா சொல்ல
அதற்கு சிருவும் சம்மதமாக தலையசைத்தான்.
பின் வேகமாக கிளம்பி சிருஷ்டனும் அத்வேதாவும் பரதன் வீட்டிற்கு விரைய அங்கு அவன் மனைவி தான் இவர்களை எதிர் கொண்டார்
"பரதன் சார் எங்கன்னு சொல்ல முடியுமா?" – வேதா
"நீங்க யாரு எவருன்னு தெரியலயே?" - பரதன் மனைவி.
"மேடம்... ப்ளீஸ்... அதுக்கெல்லாம் இப்போ டைம் இல்ல... கொஞ்சம் எமெர்ஜென்ஸி... சார் எங்கன்னு சொல்லுங்க" - வேதா
அவர்கள் பதட்டத்தை பார்த்து குழம்பி, பின் மெதுவாக "கொஞ்ச நேரம் முன்னாடி தா அவர் ஆபிஸ்ல இருந்து போன் கால் வந்துச்சுன்னு இப்ப தான் அவசரமாக கிளம்பி போயிருக்கார்" – பரதன் மனைவி
"அவர் ஆபிஸ் எங்க இருக்கு?" என்று அவரிடம் இடம் விசாரித்துவிட்டு இருவரும் அங்கு விரைந்தனர்.
****
பரதன் தன் ஆபிஸ் நோக்கி சென்று கொண்டிருக்க வழியில் இருந்த தெரு விளக்குகள் தானாக அணைந்தது.
"ச்சே... இந்த கரண்ட் வேற" என்று அலுத்த படி காரின் லைட் ஐ ஹை பீமில் மாற்றி, வாயில் ஒரு பாட்டை முணுமுணுத்த படிகாரை செலுத்த
சற்று நேரத்தில் சாலை விளக்குகள் திரும்பவும் ஒளி பெற சாலையை கண்டவன் குழம்பினான்.
"இது என் ஆபிஸ் போகும் வழியில்லையே" என்று பரதன் குழம்பியபடி காரை திருப்ப முயல, கார் தானாக வேகமாக நகரத் தொடங்கியது. வேகமாக ஒரு உருவம் வந்து அவன் காரில் மோதியது.. மோதியவுடன் காரின் முன் கண்ணாடியில் ரத்தம் தெறித்தது.
பரதன் பதறி, வேகமாக "ஷிட்...." என்று கண்களை மூடி ப்ரேக்கை மிதித்து காரை நிறுத்தினான். நிறுத்திவிட்டு மெதுவாக கண்களைத் திறந்து முன் கண்ணாடியை பரதன் பார்க்க அந்த இடம் வெறுமையாக இருந்தது.
'தான் கண்டது கனவா? நிஜம்மா?' என்று குழம்பி பின் பெருமூச்சு விட்டு, "காரை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க கார் ஸ்டார்ட் ஆகவில்லை. காரைவிட்டு இறங்கிய பரதன் சுற்றி முற்றி பார்க்க தூரத்தில் ஒரு பெண் மடியில் எதையோ வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
அவள் அருகில் பரதன் செல்ல அங்கு முகமெல்லாம் ரத்தகாயங்களுடன் ஒரு உருவம் படுத்துக் கிடந்ததை பார்த்த பரதன் எச்சில் விழுங்கியபடி "நீயா?" என்று முணுமுணுத்தவாறு பின்நோக்கி நகர
ஒரு உருவம் மறைந்து, ஒன்று அவனை நோக்கி வந்தது..
****
இங்கு வேதாவும் , சிருவும் பரதன் ஆபிசில் காத்துக் கொண்டிருந்தனர். அவன் வரவில்லை என்றதும். அத்வேதா சிருவின் பக்கம் திரும்பினாள் .
"சார்! ஒரு வேளை பரதனையும் பாரதி எதாவது?" என்று அத்வேதா முடிப்பதற்குள்..
"ஓ! நோ!" என்று கத்தியபடி சிருஷ்டன் வேகமாக வண்டியை எடுத்துக் கொண்டு அந்த சாலையை நோக்கி விரைந்தான்.
அங்கு பாரதி பரதனை நோக்கி செல்ல அத்வேதா வேகமாக இருவருக்கும் நடுவில் சென்று நின்றாள் .
"நோ! பாரதி! ஸ்டாப் இட்" - அத்வேதா
அப்போது அத்வேதா பின்னால் தோன்றினாள் மோகனா.
"பாரதி! அவ சொல்றத கேட்காத... சீக்கிரம்... ம்... அவன் நீ துடிச்ச மாதிரி துடிக்கணும்! வேகமா அவனைக் கொன்னு உன் பழிவாங்கும் தாகத்தை தீர்த்துக் கோ!" – மோகனா
"நோ பாரதி! வேண்டாம்.. அவனை விட்டுடு.... அவனுக்கான தண்டனையை நான் வாங்கித் தரேன்! அவன விட்டுடு" என்று வேதா கத்த
பாரதி அமைதியாகி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். நெற்றியில் ரத்தம் வழிந்தோட அத்வேதாவின் புறம் திரும்பி, அவளை பார்த்து கைகளை நீட்டினாள் பாரதி.
அத்வேதா மெல்ல நடந்து சென்று தன் கையை பாரதி கையில் வைக்கவும், ஒரு விதமான உணர்வுக்கு ஆளானாள்.
அத்வேதா பாரதியிடம் கவனத்தை செலுத்த, சிரு 'என்ன இவ காத்த பிடிக்க ட்ரை பண்ணறாளா?' என்று அவளை பார்த்து கொண்டிருக்கும் சமயம், பரதன் வேகமாக காரில் ஏறி அமர்ந்து காரை செலுத்த முயற்சித்தான்.
கார் உறுமும் சத்தம் கேட்டு சிரு அந்த திசையில் திரும்ப அங்கே பரதன் காரை ஸ்டார்ட் பண்ணியிருந்தான்
"பரதன் வேண்டாம்... போகாதீங்க" - சிரு சொல்லிக் கொண்டே பரதனை நெருங்க, அதற்குள் அவன் காரை எடுக்க "எங்க போறீங்க பரதன்?" என்று குரல் கேட்க திரும்பிப் பார்த்தான் பரதன்.
அங்கு பாரதி, மோகனாவோடு பின் சீட்டில் அமர்ந்தபடி தன் கையை பரதனை நோக்கி நீட்ட, அவன் பயத்தில் கதவை திறக்க முயல அவனால் முடியவில்லை. பதட்டத்தில் ப்ரேக்கை அழுத்துவதற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்த அவன் கைகளில் கார் தடுமாறி, கார் நேராக சென்று மரத்தில் மோதி நின்றது.
கார் மோதியதை தொடர்ந்து பரதனை நோக்கி வேதாவும் செல்ல, அங்கு முகத்தில் ரத்தம் வழிய பரதன் இறந்து கிடந்தான்.
அப்போது ஏதோ தோன்ற அத்வேதா திரும்பிப் பார்த்தாள். அங்கு பாரதியும் , மோகனாவும் நின்று இருந்தனர்.
வேதா அவர்களையே பார்க்க சற்று நேரத்தில் அவர்கள் மறைந்து விட்டனர்
*******
வேதாவும், சிருவும் காரில் சென்று கொண்டிருக்க வேதா யோசித்தபடியே வந்தாள்.
"ஒரு வழியா கேஸ் சால்வ் ஆகிடுச்சு போல? எனக்கு ஒண்ணு தான் புரியல இதில் ஞானபிரகாஷ் எதுக்கு இறந்து போனார்?" – சிருஷ்டன்
"மோகனா இறந்து போனதுக்கு அவர் தான் காரணம்?" – அத்வேதா
"என்ன சொல்ற நீ?" – சிருஷ்டன்
"ஞானபிரகாஷ் வேறு யாருமில்ல பாரதி படிச்ச காலேஜ் லப்ரோஃபசர்... அவ இறந்த சமயம் காலேஜ்ல ஆக்டிங்க் டீன் ஆ 2 மாசம் இருந்துருக்கார். பாரதி இறந்து போனத பற்றி மோகனா அவர்கிட்ட போய் கம்ளைண்ட் பண்ணி இருக்கா! அவர் காலேஜ் நேம் இதனால கெட்டுப் போயிடும்... பசங்களும் பெரிய இடத்து பசங்க... சோ.. அவங்க கிட்ட ஒரு பெரிய அமௌன்ட் வாங்கிட்டு... அந்த ஃபூட்டேஜ் எல்லாம் க்ளியர் பண்ணி, தனக்கு பின்னாடி பிரச்சனை வந்தா எஸ்கேப் ஆக ஒரு காப்பி மட்டும் வச்சிகிட்டு... மோகனாவ கார் ஏற்றி கொல்ல ஏற்பாடு பண்ணிட்டு .. அவ தங்கச்சி இறந்த சோகத்துல தானா அவ கார்ல விழுந்து ஆக்சிடென்ட் ல இறந்து போன மாதிரி செட் செஞ்சிட்டார்" என்று அத்வேதா சொல்ல
"இது என்ன புது கதை சிமூ... யார் சொன்னா இது? கேட்க நல்லா இருக்கு… ஆனா இதுக்கு ஆதாரம் எதுவும் இல்லையே?" – சிருஷ்டன்
"சில விசயங்களுக்கு ஆதாரம் இருக்காது சார்! மனதில் உணரத்தான் முடியும்" என்று அத்வேதா சொல்ல, அவள் மனதில் மின்னலாய் பாரதி தன் கையை தொட்டு காட்டிய காட்சி வந்து போனது.
சிருஷ்டன் அவளை கேள்வியாக பார்த்தான்.
"சிரு சார்! நான் அவ கண்ணில் தீராத வெறிய பார்த்தேன். அவ பழி தாகம் இனியாவது அடங்கட்டும்... அவங்க ஆத்மா சாந்தி அடையட்டும்." - அத்வேதா
"யாரை பத்தி இப்ப சொல்லிட்டு இருக்க நீ? ஆனா பாரு சிமூ நீ வர வர சரியில்லை? ஆவிகள் கூட லா பேச ஆரம்பிச்சிட்ட போல பில்டப் பண்ற? நீ கொஞ்சம் மனிதர்கள் கூடவும் பேசுனா நல்லா இருக்கும்... முதல்ல போய் ஒரு சைக்யாட்ரிஸ்ட் அ பாரு... எல்லாருக்கும் நல்லது. முக்கியமா எனக்கு..” என்று கண்ணடித்தான் சிருஷ்டன்.
அத்வேதா அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.
இவர்கள் செல்லும் காரை பார்த்துக் கொண்டு நின்ற அந்த இரு உருவங்களும். சற்று நேரத்தில் கைகள் கோர்த்துக் கொண்டு வானை நோக்கிப் பயணப்பட்டது.
தீராத தாகம் தீர்ந்தது …
விரைவில் அடுத்த மர்மத்தோடு சந்திக்க வருகிறேன்
 
கணையாழி
பாகம் 1:

ஆள் அரவமற்ற அந்த இடத்தில் நில ஒளியின் வெளிச்சத்தில் அவள் முகம் அழகாக தெரிந்தது. முகத்தில் பூரிப்போடு நின்று இருந்த அவள். எதிரில் நின்று ரசனையோடு அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான் அவளவன்.
கண்களில் எதிர்பார்ப்போடும் நாணம் பூசிய முகத்தோடும் தன் அன்பு காதலனை நோக்கி தன் வலக்கரத்தை நீட்டினாள் மரியா.
தன் இனியவளின் முகத்தை ரசித்தபடியே அவள் கரத்தினை பற்றி மோதிரத்தை அணிவித்தான் மேகன்.
அவன் அணிவித்த மோதிரத்தை ஏற்றுக் கொண்ட மரியா அவன் அணிவித்தது போல் மோதிரத்தை அவள் கைகளில் அணிவிக்க அவன் கைகளை பற்ற, பறந்து வந்த வாள் ஒன்று மேகனின் கையை துண்டித்து விட்டு கீழே விழுந்தது. ஒரு கையின்றி மேகன் கீழே விழுந்து துடித்துக் கொண்டிருக்க அவன் துடிப்பதை கண்டு அவன் அருகில் வேகமாக மரியா செல்ல முயன்றாள். அப்போது அவளை பிடித்து நிறுத்தினர் சிலர். அதனை அடுத்து சாரட் வண்டியில் இருந்து இறங்கினார் அவர்.
அவரை பார்த்த மரியா "வே.. வேண்டாம்.. சாப்... எங்களை விட்டுங்க.. எங்களை ஒன்னும் செய்யாதீங்க !’’ என்று கண்ணீரோடு கெஞ்ச ஆரம்பித்தாள். அதனை சிறிதும் கண்டுகொள்ளாமல் மேகனின் அருகில் சென்ற அந்த சாப் என்று அழைக்கப்பட்ட நவாப் சாகிப் மேகனின் தலையை தன் வாள் கொண்டு துண்டித்தார்.
தலையற்ற உடம்போடு துடித்தபடி இறந்தான் மேகன்.
பின் மரியாவின் புறம் திரும்பிய நவாப், அவள் வயிற்றில் தன் வாளை சொறுக, அவள் தள்ளாடியபடி கீழே சரிய அவள் கையில் இருந்த மோதிரம் உருண்டு ஓட, அதை எடுக்க முயற்சித்து முடியாமல் அதை வெறித்தவாறே உயிர் துறந்தாள்.
***
நிறைந்த பெளர்ணமி இரவில் குடித்துவிட்டு தன் நண்பனோடு வந்து கொண்டிருந்தான் சிவா.
தன் வீட்டிற்கு திரும்பும் சாலையை பார்த்ததும் சிவா தன் நண்பனிடம் திரும்பி "ஓகே! மச்சான்! நாளை பார்க்கலாம்" ன்று சிவா சொல்ல அதனை ஏற்று சிவாவின் நண்பன் சென்று விட்டான்.
அவன் சென்றதும் தன் வீட்டை நோக்கி குடி போதையில் தள்ளாடியபடியே தனியாக வந்து கொண்டிருந்த சிவாவின் கால்களில் ஏதோ நெருட குனிந்து பார்த்தான்.
அங்கு மோதிரம் ஒன்று கீழே கிடந்தது. அதை எடுத்துப் பார்த்த சிவாவின் விழிகள் மின்னியது.
'ஹை! தங்க மோதிரம்! ரொம்ப விலையுயர்ந்த மோதிரம் மாதிரி இருக்கே! அப்படியே ஆட்டைய போட வேண்டியது தான்' என்று தனக்குள் கூறியபடி அதை எடுத்து தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்தபடி நடந்தான் சிவா.
'ஆகா சிவா! உனக்கு யோகம் தான்டா! யார் கண்ணிலும் படாம இந்த மோதிரம் உன் கண்களில் பட்டிருக்கு! ஜமாய்டா ராஜா!' என்று நினைத்துக்
கொண்டே சென்றவன் எதிரில் ஒரு பெண் நின்றாள்.
அவளை பார்த்ததும் "ஆஹா! சிவா பொண்ணு நிக்குது! இன்னைக்கு உனக்கு யோகம் கொட்டோ... கொட்டுனு கொட்டுதுடா!" என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டே ஆசையில் அவள் அருகில் சென்றான் சிவா.
அவள் அருகில் இவன் சென்றதும் அந்த பெண் சிரித்தபடி அவனை நோக்கி தன் கைகளை நீட்டி அவனை 'வா' என்று அழைக்க சிவாவும் ஆசையோடு அவள் கைகளில் தன் கையை வைத்தான். சிவாவின் கையை பிடித்த அந்த பெண் சட்டென்று அவனுக்கு மோதிரம் அணிவிக்க, சிவாவும் அவளை ரசித்தபடியே தன்னிடம் இருந்த அந்த மோதிரத்தை தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்தான். அதை அந்த பெண்ணிற்கு சிவா போட்டு விட அவள் கைகளை பற்ற, ஒரு வாள் ஒன்று பறந்து வந்து அவன் கையை வெட்டியது.
கையின்றி சிவா அலறியபடியே திரும்பிப் பார்க்க அங்கு தலையில்லாத முண்டம் நடந்து வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் பயத்தில் சிவா ஓடத் தொடங்கினான். ஓடிய சிவா சற்று நேரத்தில் தலையின்றி தரையில் விழுந்தான்.
**
மதிய வேளையில் சாப்பிட தன் டிபன் பாக்ஸ்யை எடுத்து மேஜையில் வைத்துக் கொண்டிருந்தாள் அத்வேதா. தன் பாட்டிலில் தண்ணீர் இல்லாமல் இருப்பதைக் கவனித்த வேதா அருகில் இருந்த தண்ணீர் குழாயில் தண்ணீரை பாட்டிலில் பிடித்து நிரப்பிவிட்டு திரும்ப எதிரில் இருந்த உணவு மேஜையில் வேதா வைத்துவிட்டு சென்ற உணவை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சிருஷ்டன்..
சிருஷ்டனை கண்டவள் 'இன்னைக்கு நீ சாப்பிட்ட மாதிரிதான் வேதா!' என்று தனக்குள் முணங்கியபடியே சிரு எதிரில் வந்து அமர்ந்தாள் வேதா. அவன் எதிரில் அமர்ந்த வேதா அவன் உண்பதையே கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் உணவு உண்ணும் விதத்தை கண்டவளுக்கு எரிச்சலாக இருந்தது.
அங்கு சிருஷ்டன் ஒவ்வொரு வாய் கவளத்திற்கும் 'ம்... ஆஹா... ம்.. சூப்பர்' என்றும் தன் ஒவ்வொரு விரல்களை சப்பியபடியும் சாப்பிடுவதை கண்ட வேதாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது..
பாதி சாப்பாட்டை காலி செய்த சிருஷ்டன் வேதாவை பார்த்ததும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவள் அருகில் அந்த பாக்ஸை நகர்த்தினான்.
" சிமூ இந்தா! நீயும் சாப்பிடு! உன்னை பாக்க வச்சி சாப்பிட்டா எனக்கு தான் வயிறு வலிக்கும்! அதுவுமில்லாம உனக்கும் பசிக்கும் பாரு?“ – சிருஷ்டன்
"ஓ! அப்படியா! சார்! என் மேல தான் உங்களுக்கு எவ்வளவு கரிசனம் பாருங்க? ஆனா சார்! சாப்பாடு முக்கால் பாகம் காலியானதும் உங்களுக்கு இந்த அக்கறை வரக்கூடாது? இருந்தாலும் நீங்க இவ்வளவு பிரியமா கேட்கும் போது சாப்பிடனும் போல தான் இருக்கு. ஆனா பாருங்க! இன்னைக்கு நான் விரதம் அதனால் நீங்களே மீதியையும் சாப்பிடுங்க சார்!“ – அத்வேதா
"என்ன சொல்ற விரதமா? அப்ப இந்த சாப்பாட மாமாக்காகவா கொண்டு வந்த? இவ்வளவு ஆசைய மாமன் மேல் வச்சுகிட்டு விலகி விலகியா போற? “ என்று சிருஷ்டன் கூறியபடியே கண்ணடிக்க வேதா பொங்கிவிட்டாள்.
"சார்! ஸ்டாப் இட்! என் பொறுமைக்கும் ஒரு லிமிட் இருக்கு! ஒழுங்கா பேசுங்க! சாப்பாட சாப்பிட்டதும் இல்லாம இதுல இந்த மாதிரி பேச்சு வேறயா!" – அத்வேதா
"பாருடா! சுண்டெலிக்கு கோபம் கூட வருது! என்று அதிகமாக வியந்தவன் எழுந்து வேதா அருகில் வர , அவன் அருகில் வரவும் பின்வாங்கினாள் வேதா.
அவள் அருகில் நடந்தபடியே "என்ன ஓவரா சவுண்ட் விடுற! உன் சாப்பாட்ட சாப்பிட்டதுக்கு உனக்கு இவ்வளவு கோபம் வருதா? உன் சாப்பாட்ட தான சாப்பிட்டேன். என்னவோ உன்னையவே சாப்பிட்ட மாதிரி கத்துற! நீ சீன் போடுற அளவுக்கு உன் சாப்பாடு ஒன்னும் ஒர்த் இல்லை. உப்பும் இல்லை உரப்பும் இல்லை. சப்புனு இருக்கு! "என்றவாறு சாப்பாட்டு டப்பாவை காலி செய்தான்.
"இப்படி ஒரு சாப்பாட சாப்பிட்டா நீ எங்க கொலையாளிய பிடிக்கப் போற? சரிதான் போடி!" என்று கூறியபடி டப்பாவை வைத்துவிட்டு தன் கைகளை நக்கியபடியே அந்த இடத்தை விட்டுச் சென்றான் சிருஷ்டன்.
போகிற போக்கில் "நாளைக்காவது நல்ல சாப்பாடு கொண்டு வா! மாமா வரட்டுமா? " என்று சிருஷ்டன் சொல்லிவிட்டு செல்ல இங்கு வேதா கடுப்புடன் அமர்ந்தாள். பசி வேறு வயிற்றை கிள்ளியது.
மேஜை அருகே வந்து தன் காலியான டிபன் பாக்சை பார்த்து பெருமூச்சு விட்டபடி அதை எடுத்து வைக்க முயன்ற வேதா, அதன் அருகில் ஒரு பிரிக்கப்படாத பார்சல் இருப்பதை, அப்போது தான் கவனித்தாள். அதை அவள் பிரித்து பார்க்க அதில் பிரியாணி இருந்தது. வேகமாக சுற்றி முற்றி பார்த்த வேதா அங்கு சிரு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அந்த பார்சலை பிரித்தாள்.
வேதா பார்சலை பிரிக்க அவள் பின்புறம் இருந்து பேசினான் சிருஷ்டன் "தேங்க்ஸ் லாம் சொல்ல வேண்டாம்" என்று சிருஷ்டன் சொல்ல திடுக்கிட்டு திரும்பினாள் வேதா.
அவனை சற்றும் எதிர்பார்க்காத வேதா விழிக்க "தேங்க்ஸ் லாம் தேவையில்லைனு சொன்னேன்" என்று சிருஷ்டன் மறுபடியும் சின்ன சிரிப்புடன் சொன்னதும் சட்டென்று சுதாரித்தவள் "தேங்க்ஸ் சார்!" என்று கூறினாள்.
அவள் அப்படி கூறியதும் சிரிப்போடு அந்த இடத்தை விட்டுச் சென்றான் சிருஷ்டன்.
*****
இறந்து போன உடலை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தான் சிருஷ்டன்.
வேதா அருகில் இருந்த அண்டை வீட்டாரிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு பெண் அழுது கொண்டே ஓடி வந்தாள்.
"சிவா! சிவா! எழுந்திரிடா! ராத்திரியில் வெளியில் போகாதேன்னு படிச்சி படிச்சி சொன்னேன் கேட்டியாடா? இப்ப பாரு அந்நியாமா செத்து போய்டியேடா. அவங்க கையால சாகுறதுக்காடா உன்னை நேற்று வெளியில் அனுப்பினேன்?" என்று சிவாவின் அம்மா அவன் சடலத்தின் முன் அழுது கொண்டே புலம்ப அவரது புலம்பலை கேட்ட சிருஷ்டனும், அத்வேதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
வருவாள்....
 

New Threads

Top Bottom