HoneyGeethan
Active member
- Messages
- 175
- Reaction score
- 169
- Points
- 43
பாகம் 2:
சிவாவின் தாய் அழுததை தொடர்ந்து சிரு கண்ஜாடை செய்ய அதை கவனித்த வேதா அவர் அருகில் சென்றாள்.
“அம்மா! அழாதீங்கம்மா! அழுவதால் உங்க பையன் ஒன்றும் திரும்பி வரப்போறதில்லை! அதனால் கொஞ்சம் உங்களை தேத்திக்கோங்கமா! “ என்று கூறியபடியே வேதா அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க
இங்கு சிருஷ்டன் தடவியல் நிபுணர்களை விசாரித்துக் கொண்டிருந்தான்.
"எதாவது ஆயுதம் கிடைச்சதா?" – சிருஷ்டன்
"இல்லை சார்! சுற்றி சுமார் ஒரு கிலோமீட்டர் வரை தேடி பார்த்தாச்சு சார்! ஏதும் ஆயுதம் கிடைக்கவில்லை!" – நிபுணர்
"எதனால் தலை வெட்டப்பட்டிருக்கும்னு உங்களால் ஏதும் கெஸ் பண்ண முடியுதா?" – சிருஷ்டன்
"வெட்டப்பட்ட விதம், ஆழம் எல்லாம் பார்த்தா கூர்மையான வாளால் வெட்டப்பட்டிருக்கலாம்னு தோணுது சார்" – நிபுணர்
"வாட்! வாளா? என்ன சொல்றீங்க? அது எப்படி முடியும்? எந்த யுகத்தில் இருக்கீங்க? வாள் உபயோகம் எல்லாம் மன்னர், ஜமீன் பரம்பரையோட முடிஞ்சிருச்சே?" – சிருஷ்டன்.
"இல்லை சார்! வாளாலால் தான் வெட்டப்பட்டிருக்கு. வெட்டப்பட்ட விதத்தைப் பார்த்தா அந்த வாள் பல வருடம் பழைமையானது மாதிரி தான் சார் இருக்கு" என்று அந்த நிபுணர் சொன்னதை அடுத்து சிருஷ்டன் யோசனையில் ஆழ்ந்தான்.
இங்கு வேதா சிவாவின் அம்மாவை சாந்தப்படுத்திவிட்டு மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
“அம்மா! சிவாவ யார் கொன்றிருப்பாங்க? உங்களுக்கு யார் மேலாயாவது சந்தேகம் இருக்கா?“ – அத்வேதா
வேதா அப்படி கேட்டதும் அவர் அழுகை நின்று முகத்தில் கலவரம் தெரிந்தது.
அதை கவனித்த வேதா "அம்மா! எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லுங்க! அப்பத்தான் நாங்க கொலையாளிய கண்டுபிடிக்க முடியும்" என்று கூறவும் அந்த பெண்மணி ஒரு முடிவோடு பேசத் தொடங்கினார்.
“அம்மா! இந்த இடத்தில் குடியிருக்குறவங்க இரவு வேளையில் வெளியில் வரவே மாட்டோம் மா!“ – சிவாவின் தாய்.
"ஏன்?" – அத்வேதா.
"பயம் தான் மா! அந்த நேரத்தில் தான் அவங்க இங்க உலாத்திகிட்டு இருப்பாங்க!" - சிவாவின் தாய்.
"அவங்கனா? யாரு? யாரைப் பத்தி சொல்லிக்கிட்டு இருக்கீங்கமா?" – அத்வேதா.
"நான் மரியாவை பத்தி சொல்லிட்டு இருக்கேன்மா?" – சிவாவின் தாய்.
"மரியாவா? யார் அவங்க? கொஞ்சம் அவங்களை பத்தி விரிவா சொல்ல முடியுமா?" – அத்வேதா.
"சொல்றேன் மா! மரியா இந்த இடத்தில் தான் வாழ்ந்து இறந்ததா எல்லாரும் சொல்லிக்கிறாங்க? அவ கல்யாணம் ஆகுறதுக்குள்ள அவளை யாரோ கொன்னதாகவும், அதனால் அவ ஆத்மா சாந்தி அடையாம நைட் இங்க சுத்திட்டு இருக்கிறதாகவும் சொல்றாங்கமா. அவ கல்யாண ஆசை நிறைவேறாம இறந்து போனதால, இந்த இடத்திற்கு வர கல்யாணம் ஆகாத ஆண்களை கொன்னு தன் வன்மத்தை அவ நிறைவேற்றிக்கிறதா எல்லாரும் பேசிக்கிறாங்க... அதுவுமில்லாம இதுவரை அவளாள செத்து போன ஆண்கள் எல்லாம் இரவு நேரத்தில் தலையில்லாத முண்டங்களா அலையுறாங்கனு சொல்லிக்கிறாங்க... பார்த்தவங்க இருக்காங்க" - சிவா தாய்.
"ஓ! அப்படியா? ஆனால் இவ்வளவு சொல்ற நீங்க சிவாவ ஏன் இந்நேரம் வெளியில் அனுப்பினீங்க?" – அத்வேதா
"என் மக பக்கத்து ஊரில் இருக்காமா அவளுக்கு உடம்பு சரியில்லைனு இவனை போய் பார்த்துட்டு வரச் சொல்லி கையில் காசு குடுத்து காலையிலேயே அனுப்பி விட்டேன்... இருட்டுறதுக்குள்ள வர சொல்லி! இந்த பாவிபய போய் அந்த காசுல தண்ணியடிச்சு இப்படி அவன் சாவ அவனே தேடிக்கிட்டான்மா!.." என்று கூறி அவர் அழுக வேதா அவரை தேற்றிவிட்டு சிருஷ்டனை நோக்கிச் சென்றாள்.
சிருஷ்டன் வேதா சொன்னதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான். அவன் சிரிப்பதை எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அத்வேதா
"இட்ஸ் நாட் ஜோக் சார்! அது உண்மையாகூட இருக்கலாம்!" – அத்வேதா
வேதா அப்படி சொன்னதும் தன் சிரிப்பை நிறுத்திய சிரு "ஒகே ஜோக்ஸ் அபார்ட்! இந்த காலத்தில் போய் இத போய் நம்பிக்கிட்டு இருக்க ஆவியாம்? பூதமாம்? சில்லி".
அவன் சொல்லியதை அடுத்து அத்வேதா அவன் அருகில் தன் லாப்டாப்பை திறந்து அதை காட்டினாள்.
"சார்! இங்க பாருங்க மரியான்ற பெயரில் ஒருத்தவங்க இருந்துருக்காங்க!" என்று கூறிய வேதா ஒரு புகைபடத்தை காட்டினாள்.
"சார்! இவங்க தான் மரியா. இவங்க ஜமீன்தார் குடும்பத்தை சேர்ந்த மேகன் என்பவரை காதலிச்சிருக்காங்க. வீட்டில் வேலை பார்த்த மரியா மேல ஆசை கொண்ட மேகன் யாருக்கும் தெரியாமல் அவங்களை திருமணம் செய்ய நினைச்சிருக்கார். அதை கேள்விபட்ட நவாப் மேகனின் தந்தை, மேகனை மரியா முன்னாடியே கொன்னுட்டு மரியாவையும் கொன்னு இருவரது உடலயும் ஊர் ஆட்கள் முன்னாடி எரிச்சிருக்கார். சில வருஷத்திற்கு முன்னாடி இப்ப கொலை நடந்துகிட்டு இருக்கிற அந்த இடத்தில் தான் இது எல்லாம் நடந்து இருக்கு. தன் காதல் மடிந்த இடத்தில் அவ அரூபமா ,ஆத்மா சாந்தியடையாமல் இன்னும் வாழ்றதா சொல்லுறாங்க சார் அதுக்கான ஆதாரம் தான் இந்த கொலைகள். அதுமட்டுமில்லை சார் அவ திருமணம் நிறைவேறாததால் அந்த இடத்தில் குடிவரும் திருமணமாகாத ஆண்களை மட்டும் தான் அவ தன் வெறிக்கு பலியாக்கிட்டு இருக்கா! திருமணம் ஆனவர்களுக்கு எதுவும் ஆகுறதில்லை. இன்னோர் முக்கியமான விசயம் இங்க இறந்து போனவங்க இந்த வாளால் தான் வெட்டப்படுறாங்க சார்! இதோ இந்த புகைபடத்தை பாருங்க"! என்று ஒரு வாளை காட்டினாள் அத்வேதா.
சற்று நேரம் அவள் சொன்னதை யோசித்து பார்த்தான் சிருஷ்டன்.
"ம்ம்ம்ம் நாட் பேட்! கதை நல்லா இருக்கு அத்வேதா மேம்! இப்ப நீங்க சொன்ன மாதிரி நான் ஒரு கதை சொல்லவா ! அந்த இடத்தில் ஏதோ தப்பு பண்றாங்க! அதை மறைக்க இப்படி ஆவிகள் இருக்கிறதா கதைகட்டி விட்ருக்கானுங்க! மரியாவாம்! அவ வந்து கொலை பண்றாலாம். இதை எல்லாம் நம்புற மாதிரியா இருக்கு" – சிருஷ்டன்
"சார்! நான் சொல்றத நம்புங்க! அப்படி இந்த கதை உண்மையா இருக்கும் பட்சத்தில் அடுத்த உயிர் போகாமல் காப்பாத்த நாம் எதாவது செய்யனும் சார்? மரியாவை கன்ட்ரோல் பண்ண நம்ம வழி யோசிக்கனும் சார்!" - அத்வேதா
"ஆமா! வழி யோசிக்கனும் தான். மரியாவை கட்டுப்படுத்த இல்லை. அந்த இடத்தில் என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்க வழி கண்டுபிடிக்கணும். அதற்கு கண்டிப்பா அந்த இடத்திற்கு போயாகணும்" என்று சிருஷ்டன் சொல்ல வேதாவும் அதற்கு சம்மதித்தாள்.
**********
சிருஷ்டனும் அத்வேதாவும் சிவா இறந்த இடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்க யாரும் தென்படவில்லை .
பொறுமையிழந்த சிரு ஒரு கட்டத்தில் ஜீப்பின் மேல் ஏறி அமர்ந்து கொண்டான்'
"யாரும் வர மாதிரி இல்லை? இனி மேல் வரப்போறாதாகவும் தெரியல. பேசாமல் வீட்டில் நிம்மதியா ஒரு தூக்கத்தை போட்டிருக்கலாம்! உன் பேச்சை கேட்டு வந்தேன் பாரு! என்னைச் சொல்லனும்" என்று சிருஷ்டன் கடுப்புடன் சொல்ல அத்வேதா திரும்பிப் பார்த்து அவனை முறைத்துவிட்டு சற்று தூரம் நடந்து சென்றாள்.
அப்போது மோதிரம் அவள் கண்களுக்குத் தெரிந்தது, அதை பார்த்தவள் அதை எடுத்து பார்த்தபடியே திரும்ப எதிரில் நின்றாள் அவள். அவளை பார்த்ததும் "மரியா!" என்று வேதா சொன்னது தான் தாமதம் வேதா அருகில் வந்த அந்த உருவம் மோதிரத்தை அவள் கைகளில் இருந்து பறித்தது .
"இது என் மேகனுக்கு மட்டும் சொந்தம்! உன்கிட்ட தரமாட்டேன்! போ இங்க இருந்து!" என்று அவள் கூற வேதா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்தில் அந்த உருவம் மாறி கண்களில் சிவப்போடு கொடூரமான முக அமைப்பை பெற்று எரிந்த நிலையில் நின்றாள் மரியா.
"போ!னு சொல்றேன்ல" என்று அந்த உருவம் கத்த 'சிரு' என்று கத்தியபடியே வேகமாக ஓடிவந்தாள் அத்வேதா.
அவள் பயத்தில் அலறியதை அடுத்து அவள் இருக்கும் இடம் நோக்கி வந்தான் சிருஷ்டன்.
"என்னாச்சு! சுண்டெலி! ஏன் இப்படி அலற?" – சிருஷ்டன்.
"அங்க மரியா நிக்கிறா சிரு" என்று அத்வேதா பயத்தோடு தன் எதிர்திசையை காட்ட அதை தொடர்ந்து சிருஷ்டனும் பார்த்தான். அந்த இடம் யாருமின்றி வெறுமையாக காட்சி அளித்தது.