தலையை பிடித்துக்கொண்டே எழுந்த ரிஷிக்கு நேற்று நடந்ததனைத்தும் மங்கலாக தெரிந்தது. அவன் பேசிய வார்த்தைகள் அவன் காதில் ஒலிக்க தான் உளறி விட்டதை நினைத்து கண்களை இறுக மூடித் திறந்தான்.
பெருமூச்சு ஒன்றினை வெளியிட்டுவன் எழுந்து பாத்ரூமிற்குள் சென்று விட்டு வெளியே வர அஷ்வினி காபியுடன் உள்ளே நுழைந்தாள்.
தன் முன் வந்து எதுவும் பேசாமல் காபியை நீட்டியவளை ஆச்சர்யமாக பார்த்தான் ரிஷி. எப்போதுமே படபடவென பேசிக் கொண்டிருப்பவள் இன்று அமைதியாக இருப்பது அவனுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. மீண்டும் அவள் நீட்டவும் அவளை கண்டுகொள்ளாமல் நகர்ந்து தன் வாட்ச் ஐ தேடிக்கொண்டிருக்க மறுபடி அவன்முன் வந்து
" எடுத்துக்கோங்க..." என்று நீட்ட வாங்கி மேசையில் படக்கென வைத்து விட்டு நகர
"ஆரவ் ஹாஸ்பிடல்ல"
"வாட்...கம் அகைன்" தனக்குத்தான் காதில் தவறாக விழுந்துவிட்டதோ என நினைத்துக் கேட்க
"சஞ்சனா ஹாஸ்பிடல்......நேத்து ராத்திரி நீங்க அப்படி பேசினதும் அது தாங்க முடியாம கோழ மாதிரி தன் கையை கத்தியால் கிழிச்சிகிட்டான்..... சத்தம் கேட்டு போறதுக்குள்ள ப்லட் அதிகமா போயிருச்சு.... மயங்கிட்டான்.." என்றவள் அவனை நிமிர்ந்து பார்க்க அங்கே அவன் இல்லை அவன் தான் ஹாஸ்பிடல் பேரை கேட்டதுமே சென்று விட்டானே......
ஹாஸ்பிடல்...
கையில் டிரிப்ஸ் ஏறியிருக்க கண்களை மூடி படுத்திருந்தான் ஆரவ்.அவனுக்கு பக்கத்தில் அழுதுகொண்டே அமர்ந்திருந்தாள் அவனது மனைவி கயல். அவன் கையை இறுக்க பிடித்தவாறு
"ஆரு... எந்திரிடா ப்ளீஸ்... நீ இல்லாம என்னால வாழ முடியாது.....என்னை மட்டும் என்கிட்ட இருந்து நீ பிரிஞ்சிராதன்னுட்டு இப்போ நீ என்ன பன்னிட்டிருக்க?"
அவன் கைகளில் தலைவைத்து கதர.....கதவை திறந்து கொண்டு புயலென உள்ளே நுழைந்தான் ரிஷி.அவன் வந்ததுமே கயல் எழுந்து பயத்தில் வெளியே செல்ல அவன் அருகில் வந்தமர்ந்தவனின் கண்கள் அதிசயத்திலும் அதிசயமாக கலங்கி இருந்தது. அவனுடைய கைகள் தானாக தன் தம்பியின் கைகளை இறுகப் பற்றி
"லூசாடா நீ?.....இப்படி பண்ணி வச்சிருக்க? வாழ்க்கையில் தோத்துப் போனவன் கூட தற்கொலை பன்னிக்க ரெண்டு மூணு தடவ யோசிப்பான்..... நீ என்னடான்னா ச்சேஹ்....."என சலித்துக் கொண்டவனின் குரலிளோ அத்தனை வலி
" டேய் ப்ளீஸ் பண்ணி எந்திரி.... இந்த நிலமைல என்னால உன்ன பாக்க முடிலடா...... என்னால எதுவுமே சொல்ல முடியல கஷ்டமா இருக்குடா.... நீ ஒன் ஒய்புக்கு சப்போர்ட் பண்ணது சரிதான்........
பட் இவ்வளவு நாள் என்னை எதிர்த்து பேசாத நீ ஒரு பொண்ணுக்காக என்னை எதிர்த்தத தாங்க முடியாம தான் உன்கிட்ட அப்படி நடந்துகிட்டேன்.....அதனாலதான் தண்ணி அடிச்சேனே தவிர உன்னை காயப்படுத்தனும்னு ராத்திரி பேசலடா......" என்று பேசிக் கொண்டிருந்தவனின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் துளி பட்டு தெறிக்கவும் கதவை திறந்து கொண்டு அஷ்வி உள்ளே நுழையவும் சரியாக இருக்க.... கதவு திறக்கப்பட்டதில் கண்ணை துடைத்துவிட்டு திரும்பி அவளை முறைத்தான்.
"கமாண்டர் சிரிப்புன்னா கிலோ என்ன விலன்னு கேப்பான் போல" என அவனை மனதிற்குள் அர்ச்சனை செய்து விட்டு அவன் முறைப்பை கண்டுகொல்லாமல் ஆரவ்வின் அசைவை உணர்ந்து அருகில் ஓடி வரவும் அவனும் என்னவோ என்று திரும்பிப் பார்க்க மெதுவாக கண்களை திறந்தான் ஆரவ்.
அதற்குள் கயலும் உள்ளே நுழைய ரிஷி எழுந்து ஓரமாக கைகளிரண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவனை பார்த்து நின்றான். கண் விழித்தவன் கண்களை சுற்றிவர அலச ரிஷியை கண்டவனின் கண்கள் பிரகாசம் அடைந்தது ஒரு நொடிதான்.......அவன் முகம் பாறை போல் இறுகி இருக்கவும் நேற்று நடந்த சம்பவம் கண் முன் வர சிறு பிள்ளை போல் முகத்தை திருப்பிக் கொள்ள அவனுடைய கோபத்தில் சின்ன வயது ஆரவ் நியாபகம் வர ரிஷியின் முகத்தில் கீற்றாக புன்னகை அரும்பியது.
குற்ற உணர்ச்சியில் அவன் எதுவும் பேசாமல் அவர்களுக்கு தனிமை கொடுக்க நினைத்து அவன் வெளியே வந்துவிட ஆரவ்தான் நொந்து போனான்... கயல் அறையில் இருப்பதை உணர்ந்து தன் உயிர் தோழியை மரியாதையாக விழித்தான்
" அண்ணி.... அண்ணா மாறவே மாட்டாங்களா😔? எனக்கு மன்னிப்பே கிடையாதாண்ணி... அண்ணான்னா எனக்கு உசுரு தெரியுமா? எனக்குன்னு இருக்கிறது அவர் மட்டும்ங்குறப்போ என்கிட்ட அவரால எப்படி பேசாம இருக்க முடிது....... ப்ளீஸ் என்கிட்ட பேச சொல்லுங்கண்ணி... நேத்து அவர் அப்படி சொன்னதற்காக கைய கிழிச்சிகிட்டது உண்மைதான்.... பட் அது போய்னு எனக்கும் தெரியும் அதனால நான் நம்பலண்ணி"
என்றவனின் கண்களிலிருந்து கண்ணீர் வடிய திறந்திருந்த கதவின் வழியே இதனை கேட்ட ரிஷியின் மனம் பாரமாக முன்னால் இருந்த சேரில் தொப்பென அமர்ந்துவிட்டான்.
தான் இங்கு இருப்பது அவர்கள் தனிமையை பாதிக்கும் என நினைத்த அஷ்வா அங்கிருந்து எழுந்து வெளியே வர அவன் அமர்ந்திருந்த அமைப்பில் அவளுக்குத்தான் மனம் கஷ்டமாகிப் போனது. கை இரண்டையும் தலைக்கு குத்தி அமர்ந்து இருந்தவனின் தோற்றம் மனதை பிசைய அவன் முன் வந்து நிற்கவும் தலையை உயர்த்தி பார்த்துவிட்டு அவளாக இருக்கவும் கோபத்தில் எழுந்து செல்ல எத்தனித்தவனின் கையை இறுகப்பற்றி தன் புறம் திருப்பி
" நீங்களா ஒரு வட்டத்தை போட்டு அதுக்குள்ள வாழ்ந்துட்டு நீங்களே உங்களை கஷ்ட படுத்திட்டிருக்கீங்க தேவ்..... என் மேல கோவம் எதுக்கு காட்றீங்கன்னு தெரியான்னாலும் அது நிச்சயம் வெறுப்பால வந்த கோபம் இல்லன்னு எனக்கு தெரியும்....... அதனாலதான் உங்க கிட்ட மறுபடி மறுபடி வந்து பேசுறேன்.. நீங்க ஏன் தேவ் இப்படி இருக்கீங்க? உங்க மேல எத்தனை பேர் உயிரா இருக்காங்க தெரியுமா? அத ஏன் நீங்க புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க?" என்றவள் அவனை ஏறிட
ஏற்கனவே ஆரவ் விடயத்தில் தன் கட்டுப்பாட்டை மீறியிருந்தவன் அவளின் நீண்ட தன்னை குறித்த பேச்சில் இன்னும் பலவீனம் அடைந்து அவனை அறியாமல் அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்.
ஆச்சரியத்தில் அவனை திருப்பி அனைக்க கூட தோன்றாமல் நின்றவளை தன்னிலை உணர்ந்து அவசரமாக தன்னிலிருந்து பிரித்தவன் அவளை பார்க்காமல் வெளியேறிவிட அவள் தான் அவனை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பி போனாள்.
இரவு 8 மணி..
"கதீர்....."என உரத்துக் கத்திய ரிஷியின் காட்டுக் கத்தலில் அவன் முன் வந்து நடுங்கி நின்றான் கதிரவன்.
இன்று யாரோ என நினைத்துக் கொண்டிருந்தவனின் நினைப்பை பொய்யாக்காமல் ஒரு இளைஞனின் போட்டோவை தூக்கிப் போட்டு
"ராஜ்வீர்.... ஆர்.வீ குரூப் ஆப் கம்பெனிஸ் எம்.டி இன்னிக்கி ஹோட்டல் சமுத்ரா ல முக்கியமான கிளைன்ட் மீட்டிங் அட்டென்ட் பண்ண போறான்... மீட்டிங் 9 மணிக்கு முடியுது..... ஒன்பது முப்பது தாண்டும் போது அவன் இந்த உலகத்தை விட்டுப் போயிருக்கனும்.........கெட் அவுட்..."
என கர்ஜிக்க அதில் இன்னும் நடுங்கியவன் அந்த போட்டோவை எடுத்துக்கொண்டு வெளியேறி விட "உன்னை விடமாட்டேன்டா" என முணுமுணுத்துக் கொண்டவன் கதிரின் காலுக்காக காத்திருக்கத் தொடங்கினான்.
மீட்டிங் நல்லபடியாக முடிந்த சந்தோஷத்தில் நாளை பார்ட்டி என அறிவித்து விட்டு தன் ஹோட்டல் ரூமிற்குள் நுழைந்தான் ராஜ்வீர்.
கதவை சாற்றி விட்டு லைட்டை போட்டவன் தன் ரூமில் வேறு யாரோ இருப்பதை கண்டு தன் ரூம் தானா என்று கூட சந்தேகித்துக்கொண்டிருக்க
"ஹாய் ராஜ்" என்றபடியே உள் அறையிலிருந்து வெளியே வந்த
சிவப்புத் துணியால் மூடி இருந்தவனை பார்த்து பயம் பிடிக்க சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆர்.கே கத்தியை எடுத்து குத்தி விட்டு தன் துணியை அவிழ்க்க ஷாக் அடித்தவன் போல் கண்கள் தெறிக்க "ஆர்.கே" என முணுமுணுக்க அதனைப் பார்த்தவன் முகத்தில் இகழ்ச்சி சிரிப்புடன் இன்னும் இரண்டு குத்து குத்த அவன் மடிந்து இரத்த வெள்ளத்தில் சரிந்ததை பார்த்து வெற்றிக் களிப்புடன் வில்லன் சிரிப்பு சிரித்து விட்டு வெளியேறினான்.
***
அவன் இன்று நடந்து கொண்ட முறை பற்றி யோசித்தவாறே கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தாள் அஷ்வினி. எவ்வளவு யோசித்தாலும் அவனை பற்றி மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லை. தன் மனம் போகும் போக்கையும் புரிய முடியவில்லை..."ஹம்"
என்று பெருமூச்சு விட்டு விட்டு திரும்ப ரிஷி ப்ரஷப் ஆகிவிட்டு வந்து லாப்புடன் சோபாவில் அமர்ந்திருந்தான்.
அவனையே கொஞ்ச நேரம் பார்த்து இருந்தவள் மெதுவாக நடந்து வந்து அவன் பக்கத்தில் அமரவும் வழமைபோல் அவளை முறைத்து விட்டு தள்ளி அமர்ந்தான். அவள் சிரித்து விட்டு மறுபடி நெருங்கி அமர லாப்பை படக்கென மேசை மேல் வைத்துவிட்டு எழ அவள் வேண்டும் என்று அவன் கையை பிடித்து இழுக்க திடீரென இழுக்கப்பட்டதில் நிலை தடுமாறி அவளோடே சோபாவின் மேல் விழ இருவரும் எதிர்பாரா விதத்தில் இருவருடைய உதடுகளும் லாக்காகிக்கொண்டது.
அவள் அதில் மூழ்கிய சமயம் திடீரென இழுபட்டு அதை ஜீரணிக்கும் முன் அவன் கன்னத்தில் அறைந்திருந்தான். ஸ்தம்பித்த நின்ற அவளின் கண்களில் இருந்து அவமானத்தில் கண்ணீர் வடிய அதனை பார்த்தவன்
"அலச்சல் கேஸ்" என்று விட்டு நகர.... அவன் பேசிய வார்த்தைகளின் பாரதூரத்தில் தொப்பென சோபாவில் அமர்ந்து விட்டாள் அஷ்வினி ரிக்ஷிதா.
காலை......
அவன் காலையில் எழுந்து பார்க்க வழமையாக பெட்டில் தூங்கிக் கொண்டிருப்பவள் இன்று அவனுக்கு முன்னேயே எழுந்திருக்க அவனுக்குள் ஏதோ ஒன்று உறுத்தியது. "நேத்து கொஞ்சம் பாரதூரமாத்தான் பேசிட்டோமோ" என ஒரு நொடி நினைத்தவன் பின் தலையை உழுக்கி விட்டு பாத்ரூம் சென்று பிரஷப்பாகி வந்தவன் ஆபீஸுக்கு தயார் ஆகிக் கீழே வந்தான்.கயல்
சாப்பிட்டுவிட்டு ரூமிற்குள் நுழைய.... அப்பொழுதுதான் சாப்பிட்டுவிட்டு எழுந்த ஆரவ் இவனைக் கண்டதும் அப்படியே நின்றான். சுற்றுமுற்றும் கண்களால் அஷ்வினியை தேடிய அவன் பார்வை ஆரவ்வை கண்டதும் காணாதது போல் நகர போக
"அண்ணா ப்ளீஸ்.....ணா பேசு.... கஷ்டமா இருக்குண்ணா...." என்றவனைத் திரும்பிப் பார்க்க அவன் கண்களில் தெரிந்த வலியில் அவன் தான் உள்ளுக்குள் துடித்துப் போனான். அவன் எதுவுமே பேசாமல் இருக்கவும்
"ணா...... எனக்கு அவளை ரொம்ப புடிக்கும்ணா...அவளை ஏழு வருஷமா லவ் பண்றேன். அவளுக்கு என் லவ் புரியவே ரெண்டு வருஷம் ஆச்சு.... அவள விட்டுக் கொடுத்துட்டு ரெண்டு வருஷமா தவிச்சிருக்கேன்ணா...அதுவும் உனக்காக" என்றவனை அதிர்ச்சியாகப் பார்த்தான் ரிஷி.
"ஆமாண்ணா...நீ "அவள" லவ் பண்ணிட்டு இருக்கும்போதுதான் நான் கயல காதலிக்க ஆரம்பிச்சேன். பட் அவ உன்ன ஏமாத்தினதுக்கப்பறம் நீ இருந்த நிலமயப் பார்த்து கயல் கூட பேச பிடிக்கல..... என்ன வளத்து எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு கொடுத்த உனக்காக என் லவ்வ விட்டுக்கொடுக்குறது அப்போ எனக்கு பெருசா தோணல.... அதனால தான் விட்டேண்ணா... பட் அவளோட நிலமய யோசிக்க மறந்த எனக்கான தண்டனை தான் இப்போ கிடைச்சிருக்கு... அத விடுண்ணா...."என பெருமூச்சு விட்டவன் மீண்டும் தொடர்ந்தான்
" அன்னைக்கு என்ன மீறி அவள நீ அடிக்கிறத தடுத்துட்டேன். தப்புதான்ணா.....என் தப்புதான்.... என்ன மன்னிச்சிருண்ணா பிலிஸ்....." என்று கரம் கூப்பப்போனவனை "டேய்...."என்றவாறே தழுவிக்கொண்டான் ரிஷிகுமார்.
காலையில் வீட்டுக்கு வந்து அவள் அறையில் புகுந்து கொண்ட தன் மகள் சாப்பாடு கூட உண்ணாமல் இருக்கவும் ஏனோ விஜயலக்ஷ்மிக்கு மனது பதறியது. அஜய்யும் ஈஸ்வரியும் தட்டிப் பார்த்தும் கூட எந்தப் பயனுமில்லை..... கடைசியாக விஜயா கதவில் கை வைக்கும்போது சிரித்த முகத்துடன் கதவைத் திறந்தாள் அஷ்வினி. உதடு மட்டுமே சிரித்ததே தவிர கண்கள் அழுது இருப்பதைக் காட்டிக் கொடுக்க
"மா... கண்ணுக்குள்ள தூசி விழுந்திருச்சு.... கண்ண ஓவரா கசக்கிட்டு தூங்கிட்டேன். அதான் போல..."
எனவும் இவள் பொய் சொல்கிறாள் என தெரிந்தும் சிரித்தவர்
" சரி வா வந்து சாப்புடு..."என்று விட்டு கீழே செல்ல அவர் பின்னே அவளும் சென்றாள். வழமையாக அடுத்தவரை வம்பிழுத்துக்கொண்டு சாப்பிடுபவள் இன்று அமைதியாக உண்ணவும் அப்பொழுது வந்த ராமநாதன் கூட சற்று அதிசயித்துதான் போனார்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த அஜய்
" என்னங்க மேடம்.....இப்போதான் இந்தப்பக்கம் காத்தடிச்சு இருக்கு போல...." என்று அவளை வேண்டுமென்றே சீண்ட அவனை பார்த்து சிரித்து விட்டு மீண்டும் கண்களை சாப்பாட்டில் செலுத்த ஈஷ்வரி
"என்ன அத்தை இது? என்ன நடக்குது இங்க.....நம்ம அஷ்வியோட வாய்க்கு அமைதியா இருக்க கூட தெரியுமா? மழை வருதா பாருங்க......" என கேலி பேசி சிரிக்கவும் அனைவரும் அதைக் கேட்டு சிரித்து விட அவளோ அமைதியாக எழுந்து சென்று விட்டாள் அப்போது அஜய்
"மா...... என்னாச்சும்மா இவளுக்கு? இதுக்கு முன்னாடி இவளை இப்படி பார்த்ததே இல்ல மா....."
" அவ ரொம்ப அழுத்தக்காரின்னுதான் உனக்கே தெரியுமே.... எது நடந்தாலும் வாயே தொறக்க மாட்டா.... சிரிச்சே மழிப்பிட்டு போய்டுவா.." எனவும் ஈஷ்வரி
"அத்தை...... அவ அழுத்தக்காரி தான்.. ஆனா எதுக்கும் அழுது நான் பாத்ததில்ல..... இப்ப இவ அழுதிருக்காளே...அதான் மனசு பதறுது" எனவும் ராமநாதன்
" சரி... சரி... விடும்மா சரியாயிடுவா" என்று கூறி விட்டு எழுந்து சென்றார் மகளை அறிந்த தந்தையாய்.....
***
"டேட்.......நீங்க சொல்லித்தான் அவன விட்டு கொஞ்ச நாள் விலகி இருந்தேன்.இப்போ என்ன ஆச்சுன்னு பாருங்க... அவன் எவ்வளவு ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டான்....முழு சொத்தும் நாசமா போச்சு..." என தன் தந்தையை பார்த்து கத்தி கொண்டிருந்தாள் ஆத்மிகா.
ராஜனோ எதுவுமே சொல்லாமல் அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தார்.அவர் செய்கையில் இன்னும் கடுப்பானவள்
"ஆத்மி....கொஞ்சம் அமைதியா இருமா..... எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ற காரியம் இல்ல இது.... திட்டம் போட்டு தான் பண்ணனும்"
" இதுக்கு மேல எங்கப்பா அமைதியா இருக்கிறது... அவன்" "அவ" மேல இருக்குற வெறுப்புல வேற எந்த பெண்ணையும் திரும்பிக்கூட பார்க்கமாட்டான்னு நீங்க சொன்ன தைரியத்துலதான் கொஞ்ச நாள் விட்டு வெச்சேன்.... அவன் என்னடான்னா எவளோ ஒருத்திக்கு தாலிக் கட்டி பொண்டாட்டி ஆக்கியிருக்கான்.. இது எப்படி டேட் நடந்தது??"
"அதான் எனக்கும் புரியலமா.... ஒருவேளை இந்த ஆரவ் பயதான் டிராமா பண்ணி இருப்பானோ"
"தெரியலயே டேட்"
"அவன் எப்படியும் விருப்பத்துல கட்டி இருக்க மாட்டான்.... கட்டாயத்துல தான் கட்டி இருப்பான். அவ மேல துளி கூட அவனுக்கு அக்கறையே இருக்காது... இருந்தாலும்.... அவனை கொஞ்சநாள் ஃபோலோ பண்ணிட்டு அதுக்கப்புறம் அவளை முடிக்கலாம்" என அவர் அவனை சரியாக கணித்து ஆலோசனை கூறவும் அதற்கு ஒப்புக்கொண்டாள் ஆத்மிகா.
***
ஆபீஸ் வந்தவனுக்கு ஏனோ மனம் வேலையில் ஒப்பவே இல்லை.... "தான் கொஞ்சம் ஓவராத்தான் பேசி விட்டோமோ" என ஒரு மனம் அடித்துச் சொன்னாலும்...." அவள் மட்டும்...." என இன்னொரு மனம் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது அவளைப் பார்த்து.... கயல் மூலம் அவள் வீட்டில்தான் அவள் இருக்கிறாள் என அறிந்து கொண்டாலும் இவனுக்குத்தான் தான் பேசியதை நினைத்து குற்ற உணர்வாக இருந்தது. எப்படி இருந்தாலும் அந்த வார்த்தையை அவளுக்கு உபயோகித்திருக்க கூடாதுதானோ...அவளும் வேண்டுமென்று செய்யவில்லையே....
தன்னுடைய இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருக்க..... கடைசியில் அவனுடைய இளகிய மனமே வெல்ல...அவளை தேடி அவள் வீட்டுக்குச் சென்றான் ரிஷி.
நேரே இராமநாதபுரம் சென்றவன் அவர்கள் வீட்டுக்கு முன் காரை நிறுத்திவிட்டு இறங்கி வர அவனை அங்கு எதிர் பார்க்காதவர்கள் திணறிப் போக ரஷியே மௌனத்தை கலைக்க விரும்பியவனாய்
"நான் அஷ்வினி கிட்ட கொஞ்சம் பேசணும்...." எனவும் அவனுக்கு அஷ்வினியின் அறையை காட்டிவிட்டு அவர்கள் ஒதுங்கிக்கொள்ள அவன் மாடியேறி சென்று கதவை தட்டினான்.
அப்பா என நினைத்து திறந்தவள் அவனை எதிர் பார்க்காது விழிக்க அதற்கிடையில் கதவையும் அவளையும் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்ததும் கதவை தாளிட்டு விட்டு திரும்பினான்.
அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவனைப் பார்த்து முறைக்க அவளுடைய முறைப்பு அவனுக்கு புன்னகையைத் தோற்றுவித்ததோ என்னவோ அவன் உதடுகள் புன்னகை சிந்த அவனைப் பார்க்காது மறுபக்கம் திரும்பிக்கொண்டாள் வீம்பு பிடித்த குழந்தையாய்.....
" சாரி......ஐ....ஐ..... ஐ அம் சோ சாரி அஷ்வினி..." என தடுமாறும் போதே தெரிந்து போனது இதற்கு முன் யாரிடமும் மன்னிப்பு கேட்டு பழக்கம் இல்லாதவன் என்பது...... அப்போதும் அவள் அவனை பார்க்கவே இல்லை.....
"அஷ்வினி.... ஏதோ கோபத்துல பேசிட்டேன் ப்ளீஸ் மன்னிச்சிரு...." எனவும் அவளுக்கு அவன் சொன்னது மறுபடி காதில் ஒலிக்க கண்கள் கலங்க அவள் நகரப் போக அவள் கைகளை பிடித்து திருப்பி அவளை இழுத்து அணைத்துக் கொள்ள அவனை கட்டிப்பிடித்தே கதறி விட்டாள். அவள் அழுகை நிற்காமல் போகவும் அவள் தலையை தடவியவாறே
"அஷு..... அழாதடி....நான் வேணும்னே அப்படி சொல்லல.... தெரியாம சொல்லிட்டேன் சாரி..."
இதில் உண்மையில்.... அவள் பெயரை அவ்வாறு அவன் உணர்ந்து அழைத்தானா?இல்லை உணராமல் அழைத்தானா? என்பது அவனுக்குத் தான் வெளிச்சம். கொஞ்ச நேரம் கழித்து தன் நிலையை அடைந்தவள் அவசரமாக விலகி
"இல்....இல்ல தேவ் என் மேல தான் தப்பு.... நான் தான் வேணும்னு அப்படி பண்ணிட்டேன்... நீ.... நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கிறீங்க? நா... நான்... அப்படிபட்ட பொண்ணு இல்ல தேவ்.... நான் அப்படி யார் கூடவும் பேசினதே இல்ல தேவ்... என்ன நம்புங்க ப்ளீஸ்... நான்... நான்... ஆம்பளைங்க கூட கூத்தடிச்சிட்டு திரியிற பொண்ணு இல்ல தேவ்... நான் உங்களுக்கு மட்டும்தான் தேவ் பொண்டாட்டி... மத்தவங்களுக்கு இல்ல.. உங்களைத் தவிர வேறு யாரையும் பாக்குறது கூட இல்ல ப்ளீஸ்.. தயவு செஞ்சு அப்பிடி சொல்லாதீங்க ப்ளீஸ்..."
என ஏங்கி ஏங்கி ஏதோ மனநோய் பிடித்தவள் போல் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சவும் அவன் சற்று ஆடித்தான் போனான்.அந்த சிறிய வார்த்தை இவளை இந்த அளவுக்கு பாதிக்கும் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை... இரண்டு நாள் யாரிடமும் பேசாமல் அதனை நினைத்து நினைத்து யோசித்திருக்க வேண்டும் என சரியாக யூகித்தவன் அவசரமாக தண்ணீர் எடுத்து அவளிடம் நீட்டி
"குடி...." என கூற
"இல்ல...தேவ் நா அப்படிப்பட்ட.." என ஏதோ கூற வாயெடுக்க இவளுக்கு கடினமாகப் பேசினாள்தான் சரிப்பட்டு வருவாள் என நினைத்தவன்
"ஏய்....நீ அப்படிப்பட்ட பொண்ணு இல்லன்னு எனக்கும் தெரியும்.... முதல்ல இத குடி" என கத்தவும் அவசரமாக அதை வாங்கி கொடுத்துவிட்டு கண்களில் மிரட்சியுடன் அவனை ஏரிட
" உனக்கு ரெண்டு நிமிஷம் தான் டைம் கீழ வந்து சேரு...."
" இல்ல..இல்ல... வர்ல...."
"நான் ஒன்னும் உன் கிட்ட பர்மிஷன் கேக்கல....கட்டலதான் போட்றேன் அண்டர்ஸ்ட்டாண்ட்?" என்று கத்திவிட்டு அவள் பதிலை எதிர்பாராமல் கீழே சென்றுவிட அவனுக்குப் பயந்து அவசரமாக உடை மாற்றியவள் பெற்றோரிடம் கூட சொல்லத் தோன்றாமல் அவன் பின்னே சென்று காரில் ஏறினாள்.
காரில் போகும் போது கூட எதுவும் பேசவில்லை என்றாலும்.... அழுது ஓய்ந்து பயந்து அவனைப் பார்த்தபடியே அவள் வர.... அவனோ அவள் எந்தளவு தன் வார்த்தையில் வருந்தியிருக்கிறாள் என குற்ற உணர்வுடன் யோசித்தவாறே காரை ஓட்டிக் கொண்டிருந்தான். திடிரென வண்டி நிற்கவும் அவனை ஏறிட
"இறங்கு...." என அவன் சத்தமாக கத்தவும் அவசரமாக இறங்கி உள்ளே சென்றாள். அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தவன் காரைக் கிளப்பிக்கொண்டு கடற்கரைக்கு சென்றான் தனிமையை தேடி..........
வீட்டிற்குள் வந்து சோபாவில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடியவளுக்கு உடம்பு சோர்வாக இருந்தது. நினைத்துப் பார்க்க முடியாத எத்தனையோ விடயங்கள் நடந்து முடிந்துவிட்டதை நினைத்து பெருமூச்சு விட்டவாறே இன்று நடந்ததை மீண்டும் ஒருமுறை மீட்டிப் பார்த்தாள்.....அமைதியாக இருப்பது அவளுக்கே எரிச்சலாக இருக்கவும் தன் அறைக்கு சென்று குளித்து முடித்து சிகப்பு சுடிதாரொன்றை அணிந்து கொண்டு வெளியே வந்தாள். கொஞ்சம் உட்சாகமாக உணர... இன்று வீட்டில் சொல்லாமலே வந்துவிட்டதை நினைத்து தலையில் தட்டிக் கொண்டவள் அவர்களை பார்த்துவிட்டு நன்பர்களையும் சந்தித்தால் மனதை இலகுவாக்கி இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம் என நினைத்து வீட்டை விட்டு கிளம்பினாள். போனை எடுத்து "அவனுக்கு சொல்லி விடலாமா?" என ஒரு நிமிடம் யோசித்த மறுநிமிடமே அவன் கோபத்தை நினைத்து பயந்து அதை கைவிட்டு விட்டாள்.
இன்றைய தினம் சொல்லாமல் கிளம்பியதற்காகவே அவன் கோபத்துக்கு ஆளாகப் போவது தெரிந்திருந்தால் சொல்லிவிட்டு சென்றிருப்பாளொ என்னவோ
கை இரண்டையும் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு கால்கள் இரண்டையும் கொஞ்சம் அகற்றியவாறு கடலை வெறித்து கொண்டிருந்தான் ரிஷி.
கடல் அலைகளை போலவே அவன் மனமும் அமைதியின்றி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. தன் காதலை தூக்கி எறிந்த ஒருத்தி துரோகத்தால் வாழ்க்கையை வெறுக்க வைத்து விரக்தி நிலைமையில் வாழ வைத்திருக்க..... இன்னொருத்தி அவனுடைய குற்ற உணர்வை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறாள்.
அடிப்படையில் அவனும் நல்லவன்தான்..... காலம்தான் மாறி அவனையும் மாற்றி விட்டது.....
அஷ்வினியை முதலாவதாக பார்த்த தினத்தை மனம் அசை போட்டது.
((அவன் அப்போதுதான் "அவள்" செய்த துரோகத்தை மறந்திருந்த சமயம்....
வெளிநாட்டில் இருந்தாலும் தன் தம்பிக்கு மறவாது கால் பேசிவிடுவான்.அன்றும் அப்படித்தான்....சுவாரஷ்யமாக பேசிக் கொண்டிருந்தவனை கலைத்தது ஒரு பெண் குரல்.....வீடியோ கால் பேசுவதால் வீட்டில் நடப்பது அனைத்தும் தெளிவாகவே தெரியும்.பேசிக்கொண்டிருந்த ஆரவ்
"அண்ணா....அஷ்வி வந்திருக்கான்னு நெனக்கிறேன்.நீ லைன்லயே இரு...இதோ வந்துட்றேன்" என்றவன் ஃபோனை அப்படியே வைத்துவிட்டு அவளை காணச் சென்றான்.
அவள் ஆரவ்வின் உயிர்த் தோழி என்று ரிஷிக்கு தெரியுமாதலால் எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட ஆரவ்வின் சிரிப்போசையை தொடர்ந்து அவளது திட்டுக்கள் அவன் காதில் விழுந்தது.
"டேய் எரும...செய்யிறதயும் செஞ்சிட்டு என்ன சிரிப்பு வேண்டி இருக்கு?பாரு...என் ட்ரெஸ்,தல எல்லாம் மாவு கொட்டிருச்சி....... இடியட் சிரிக்காதடா" என அடிக்க துரத்த இவன் தன் அண்ணன் லைனில் இருப்பதை மறந்து ருமிற்குள் வந்து கட்டிலை சுற்றி ஓட அவனை துரத்தி களைத்துப் போனவள் வாசலில் நின்று இடுப்பில் கை வைத்து அவனை முறைத்துக் கொண்டே
"டேய்...மரியாதயா நில்லு... இல்ல..நடக்குறதே வேற.." என்று மிரட்டிக்கொண்டிருந்தவளின் தோற்றத்தை பார்த்து சிரிப்பையே மறந்திருந்த ரிஷி கூட வாய் விட்டு சிரித்து விட்டான்.
அவள் மாவால் குளித்திருந்தாள் என்றே சொல்ல வேண்டும்.முகம்,முடி முழுக்க மாவு கொட்டியிருந்தது.
சிரிப்பு வந்த திசையை இவள் பார்பதற்குள் கால் கட்டாகியிருக்க அப்போதுதான் நினைவு வந்தவனாக ஆரவ் அவசரமாக அதை மீண்டும் எடுக்க அவன் ஃபோன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. சார்ஜ் இல்லை என உணர்தவன் அண்ணனிடம் பிறகு பேசிக்கொள்ளலாமென நினைத்தவன் அதை வைத்து விட்டு திரும்பியவன் அஷ்வினியிடம் வசமாக மாட்டி உதை வாங்கியது வேறு கதை...))
அந்தக் கோலத்தை நினைத்தவனுக்கு இன்றும் சிரிப்பு வந்தது. அவள் குறும்புத்தனம், சீண்டல், வம்பிலுத்தல் என எல்லாமே பிடித்திருந்தாலும் அவள் பேசும் போது மட்டும் ஏனோ எரிச்சலாக இருந்தது. அதே சமயம் அவள் பேசாமல் அமைதியாக இருப்பதைப் பார்க்கவும் எரிச்சலாய் இருந்தது....... தலையை அழுத்திக் கொண்டவன் நீண்ட தூரம் நடந்தான். இவன் வந்ததிலிருந்து அவனையே நோட்டமிட்டுக் கொண்டிருந்த ஆத்மிகா அவசரமாக வேறு பக்கம் சென்று மறைந்து விட்டு அவன் எதிர் புறத்திலிருந்து வருவது போல் தூரத்திலிருந்து நடந்து வந்தாள். வேண்டுமென்றே அவனை எதிரில் வந்து அப்பொழுதுதான் காண்பது போல
"ஹாய் தேவா.....வட்ட சர்ப்ரைஸ்" ஏதோ எனும் போதே அவன் எரிச்சலில் நகர போக
"நீங்க எங்க இங்க...?"
" ஏன் இது உன் பீச்சா... இல்லல்ல...... அப்போ வாய மூடிட்டு கிளம்பு" என்றான் எரிச்சலாக......
" நீங்க வேற.....தேவா.... உங்களை நினைச்சா தான் எனக்கு கவலையா இருக்கு..... நீங்க இங்க இருக்கீங்க ஆனா உங்க பொண்டாட்டி அங்க எவனோ ஒருத்தங்கூட கூத்தடிச்சிட்" என்பது சொன்னது மட்டும் தான் அவளுக்கு ஞாபகம் அடுத்த நிமிடம் கீழே இருந்தாள்.
அவன் விட்ட அறையில்...............
காலை குத்திக் கீழே அமர்ந்து கையை முழங்காலில் வைத்து அவளை சொடக்கி அழைத்தவன்
"தோ பார்....அங்க உள்ளத இங்கே சொல்றது... இங்கே நடக்காதத அங்க சொல்றதுன்ன எச்ச***** வேலை எல்லாம் என்கிட்ட காட்டணும்னு நினைச்ச ஒன்ன கொன்னு போட்டுட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன் ஜாக்கிரதை....
என் பொண்டாட்டி ஒன்னும் உன் வீட்டு நாய்க்குட்டி கிடையாது வர்றவன் போறவன் எல்லாம் கல்லெறிஞ்சிட்டு போறதுக்கு...அவ என் பொண்டாட்டி....... என்னை மீறி கையை வைக்கனும்னு நெனச்சீங்க..... அப்புறம் நானும் கை வைக்க வேண்டிவரும்..." என்றவன் அம்பானா யோகிமுத்திரையை காட்டி எச்சரித்துவிட்டு அவ்விடத்திலிருந்து அகல..... கன்னத்தை தேய்த்தபடி அவன் சென்ற திசையையே பார்த்திருந்தாள் ஆத்மிகா.
மாலை 5 மணியளவில் வீடு திரும்பியவன் கயலுடன் இருப்பதனால் சகஜ நிலைக்கு திரும்பி இருப்பாள் என நினைத்து வீட்டுக்கு வர கயல் மட்டும் ஆரவ்விற்காக காத்திருப்பதை கண்டு குழம்பியவன் மேலே ரூமுக்கு சென்று பார்த்து விட்டு கீழே வந்து
"கயல்...." எனவும் அவசரமாக திரும்பியவள்
" என்ன மாமா...." என கேட்க
"அஷ்வினி எங்க?"
"என்னது...அக்கா வந்திருந்தாங்களா?" என்ற கேள்வியில் அவன்
"வாட்...."என அதிர
"ஏன் மாமா.... என்ன ஆச்சு?" இவளும் பதற்றமானாள்.
" அப்போ நீ அவளைக் காணவே இல்லையா?"
" இல்ல மாமா..... நான் வரும் போது வீடு பூட்டி தான் இருந்துது.... என்கிட்ட இருக்க சாவினால தான் திறந்தேன். ஆரு என்னமோ வேலைன்னுட்டு வெளிய பொயிட்டாரு..." என்றுவிட்டு அவனை பார்க்க அவன் முகத்தில் குழப்ப ரேகைகள் படர்வதை கண்டவள்
"மாமா......ஏதாவது பிரச்சனையா?"
"இல்ல கயல்....எதுவும் பிரச்சனை இல்ல... நீ அவளுக்கு கால் பண்ணி பாரு.." என கூற அவளும் சரி என உள்ளே செல்ல அவன் மனசாட்சியோ
"அடப்பாவி நீயே கால் பண்ணி கேக்குறது..... அவ நம்பர் ஒங்கிட்டயும் தானேடா இருக்கு.... இதுல கூட ஒனக்கு ஈகோ பிரச்சனையாடா..... நீ எல்லாம் ஒரு புருஷன்...ஹாக் தூ...." என அது வேறு கால நேரம் தெரியாமல் கலாய்த்து காரி துப்பி கடுப்பேத்த...கோபமானவன்
"ஹேய்.... அடங்குறியா?" என கத்த ஃபோன் பேசிவிட்டு வந்த கயல் அவனை வேற்று கிரகவாசி போல் பார்க்க அதற்குள் தன்னை சுதாகரித்து சட்டென அவன் காதில் எப்போதும் மாட்டியிருக்கும் புளூடூத்தை காட்டவும் தான் அவள் பார்வை மாறியது.
" மாமா.....அக்கா போன் சுவிட்ச் ஆப்னு வருது" என்ற அவருடைய பதிலில் அவன் டென்ஷனாகி
" ஒரு ப்ராப்ளமும் இல்ல கயல்... ரிலாக்ஸ்... பத்திரமா இரு!" என்றவன் காரை புயல் வேகத்தில் கிளப்பினான். போகும்போது அஷ்வினியின் வீட்டிற்கு போன் பண்ணி கேட்க அவர்களின் "அவ எப்போதோ கிளம்பிட்டா மாப்பிள்ளை" எனும் பதிலில் அவன் தான் இன்னும் பதறிப் போனான்.
அவனுக்கு இன்னும் இன்னும் குற்ற உணர்வு அதிகமாகிக் கொண்டே இருந்தது....அப்போது பேசியதை நினைத்தது....அதை சாக்காக வைத்து ஏதாவது செய்து கொண்டால்... என்னும் நினைப்பே அவனை பதற வைத்தது.
சம்யுக்தா ஹோட்டல்.....
"அஷ்வி... இங்க பாருடி.... அவன் உன்னத்தான் வந்ததிலிருந்து சைட் அடிச்சிட்டு இருக்கான். நீ என்னடான்னா.... அந்த ஃபோனயே பாத்துட்டு இருக்க?" என ஒருத்தி கேட்க கன்னத்தில் கைவைத்து ஃபோனையே கவலையுடன் பார்த்திருந்த அஷ்வினி அவளைப் பார்த்து விட்டு கீழே குனிய திவ்யா
"கவி....என்னடி இவ புருஷன் செத்த மாதிரி இதையே பார்த்திட்டிருக்கா"
" மேடத்துக்கு பயத்துல உடம்பெல்லாம் வேர்த்து வேற இருக்கு.... " என்றாள் அபிநயா... அதற்கு கவிதா
"நம்ம அஷ்வி கண்டு பயப்பட்ற ஆள பார்த்தே ஆகணும்டி" எனவும் அபி
"ஆர்.கே.... தெரியுமா உனக்கு? தி கிரேட் பிசினஸ்மேன்.... அவரைப் பார்த்து இருக்கல்ல.......அவருதான் மேடம் புருஷன்.." எனவும் எல்லோரும் அவன் செல்வநிலை எட்டமுடியாத உயரம் நினைத்து வாயைப் பிளக்க... அஷ்வினியோ "ஆர்.கேயா? " என குழம்பிப் போக அதற்குள் திவ்யா எண்ணத்தை மாற்றி விட்டாள்.
" அது இருக்கட்டும்டி...... அதுக்கு இவ யே இப்படி உட்கார்ந்திருக்கா?" என கேட்க தலையிலடித்துக் கொண்ட பிரியா
" நீ வேற.... போன் சுவிட்ச் ஆப்.. மேடம் யாருக்கும் போன் பண்ணாம இங்க வந்து இருக்காங்கல்ல அதுக்கு தான்..." எனவும் புரியாமல்
"புரியாம பேசாத கவி... இப்பவே மணி அஞ்சர ஆகுது.... அம்மா வீட்டுக்கு போய் சேரவே எட்டு மணி ஆகிடும் அங்க இருந்து அந்த கமாண்டர் வீட்டுக்கு போய் சேர ஒன் அவர் ஆகிரும்" என்று கூறவும் தான் அவள் சோகத்திற்கான காரணமே புரிந்தது.
இரவு நேரம் 7 மணியை தாண்டியும் அஷ்வினியை காணாமல் கோபத்தின் எல்லையை கடந்து கொண்டிருந்தான் ரிஷி.
"அவளுக்கு ஒரு கால் பண்ணி சொல்றதுக்கென்ன... திமிரு.... திமிரு....நானே மன்னிப்பு கேட்டும் அவ்வளவு திமிரு அவளுக்கு..." என்றவன்
ஸ்டிரிங் கியரில் கையை அடித்தான். எங்கு போய் தேடுவது என்றே புரியாமல் எதேர்ச்சையாக ஹோட்டல் சம்யுக்தாவுக்கு முன் காரை நிறுத்தினான்.
அவன் உள்ளுணர்வு எச்சரிக்கை மணி அடிக்க ஒருவேளை இங்கே இருப்பாளோ என நினைத்தவன் காரைவிட்டு இறங்கி ஹோட்டலுக்குள் நுழைய....
(அவள் சோகமாக இருக்கவும் அவளை சிரிக்க வைப்பதற்காக எவ்வளவு பாடுபட்டும் பயன் இல்லாமல் போக... அவர்கள் கல்லூரி காலத்தில் செய்த குரும்புக் கதைகளை சொல்லத் தொடங்க அவளும் அந்த நாள் நினைவில் வயிற்றில் கைவைத்துக்கொண்டு சிரிக்க ஆரம்பிக்கவும் தான் இவன் உள்ளே நுழைந்தான்.)
உள்ளே நுழைந்த உடனே அவள் சிரிப்பு குரல் அவன் கவனத்தை கலைக்க அவள் புறம் திரும்பியவன் அவள் சிரித்துக் கொண்டிருப்பதை கண்டு கண்கள் சிவக்க அவளிடம் சென்று நடுவில் நின்றிருந்த அவளை திருப்பி விட்டான் ஒரு அறை......
கோபத்தில் அடித்துவிட்டாலும் அவனுடல் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது எல்லை கடந்த கோபத்தில்........
அவன் விட்ட அறையில் அவளுடைய நண்பர்கள் எல்லோருமே வாயைப் பிளந்து அதிர்ந்து நிற்க இவளோ
"தேவ்....வந்து... நா... இ.."
"ஹம்...போதும்.... நீ எதுவும் விளக்கம் தர தேவையில்ல... என் கூட வா" என்றவன் அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போக அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஹோட்டல் அப்பொழுதுதான் சகஜ நிலைக்கு திரும்பியது.
" ப்ப்பாஹ்....என்ன ஒரு அடி.....😲" என்ற அபியை அனைவரும் சேர்ந்து முறைக்க
"அய்யோ...நா இல்லப்பா...🙏🏻" என் ஓட்டம் எடுத்தவளை எல்லோரும் சேர்ந்து பிடித்து மொத்தி எடுத்தனர்.
.....
வந்ததும் வராததுமாக கதவை தாளிட்டு அவன் அவளை அடிக்க கை ஓங்கியவன் " ஷிட்..." என கீழே விட....அவளோ அவன் கை ஓங்கும் போது இரு கண்களையும் இறுக்க மூடி இருந்தவள் " என்னடாது...... இன்னுமே அடி விழல.... கமாண்டர் என்ன பண்றான்" என வெட்கமே இல்லாமல் நினைத்துக் கொண்டே ஒரு கண்ணை மட்டும் திறந்து அவனை பார்த்தாள். அவளின் செயலில் மானசீகமாக தலையிலடித்தவன் இவளை என்னதான் செய்வது என்பது போல் பார்த்துவிட்டு நகரப்பொக
"தேவ்....சாரி....தேவ்" என அவனை பார்க்க அவன் வேண்டும் என்று அவளை கண்டுகொள்ளாமல் பால்கனியில் போய் நின்று கொள்ள அவன் பின்னாலேயே சென்றாள் பெண்.
"ப்ளீஸ் தேவ்....என்கிட்ட பேசுங்க"
" நான் பேசினாலும் பேசலனாலும் உனக்குத்தான் எதுவுமே இல்லையே.... அப்புறம் என்ன?"
"கஷ்டமா இருக்குன்றவ எதுக்குடி... சொல்லாம போன"
அவனுடைய உரிமையான " டி " என்ற பேச்சில் உள்ளுக்குள் மகிழ்ந்தாலும்
" பயம் " என்று மெதுவாக சொல்ல மறுபடி முறைத்தான் அவளை...
"நீங்க கோவப்பட்டா... ஏன்னே தெரியாம பயம் வருது தேவ்... உங்க கோபத்த என்னால தாங்கிக்கவே முடியல" என்று அவள் பேச பேச தன்னுடைய கோபம் இவளை பாதிக்கிறது என்பதில் ஒரு நொடி மனது சந்தோஷப்பட்டாலும் அதை அவன் மூளை ஏற்கத் தயாராகவே இல்லை...
அங்கு நடந்த அனைத்தையும் கூறிவிட்டு அவனை ஏறிட
"யேன்.....உன் பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் மொபைல் இல்லையா?"என்றான் ஆராய்ச்சியாய்....
"இருக்கு... ஏன்?"
"அவங்ககிட்ட கூடவா சார்ஜ் இல்ல...."
" அட ஆமா....நான் இதை யோசிக்கவே இல்ல பாருங்களேன்" என அவள் கூற அவன் உதட்டில் சிறு புன்னகை அரும்பியது.
" மண்டைல களிமண் இல்லாம மூளை இருந்தாதான் யோசிக்கலாம்...." என அவன் சகஜமாக அவளுக்கு பதில் கூறிவிட்டு நகர போக அவள் இடுப்பில் இரு கைகளையும் வைத்து முறைத்துவிட்டு "தேவ்..." என்றாள் சினுங்களாக.....
அவளைப் பார்த்து வாய்விட்டு சிரிக்க அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தவள்
"தேவ்..." என்றழைக்க என்ன என்பது போல் பார்த்தவனிடம்
"என்கூட எப்பவும் இதே போல பேசுவீங்களா" என்ற அவளுடைய பரிதவிப்பான கேள்வியில் அவனுடைய உடல் விறைத்தது. அவள் தன்னையே ஆவலாக பார்த்து இருக்கவும்
" ஏன் " என்றான் மொட்டையாக...
"இல்ல.....நீங்க இப்படியே இருங்க பிளீஸ் தேவ்...டெர்ரர் மூஞ்சி வேனாமே.... இதுதான் எனக்கு புடிச்சிருக்கு.... நீங்க சிரிச்சா எவ்ளோ அழகா இருக்கீங்க தெரியுமா?" என்றவளது பேச்சில் அவனது முகம் இறுகிப் போனது..... எதுவுமே பேசாமல் உள்ளே சென்றவனை ஒரு பெருமூச்சுடன் பார்த்திருந்தாள்.
***
அறை சோபாவில் அமைதியாக உட்கார்ந்திருந்த கயலிடம் வந்தமர்ந்த ஆரவ்
"கவி.... என்னாச்சு? ஏன் இப்படி சோகமா உக்காந்திருக்க?"
"ஆரு... அக்கா ஃப்ரெண்ட் கால் பண்ணாங்க..." என தொடங்கி ஹோட்டலில் நடந்தது அனைத்தையும் கூறியவள்
"அக்காக்கு ஒன்னும் இல்லையேன்னு கேட்டாங்க" என்று கூறி முடிக்க கொஞ்ச நேரம் அமைதியாக யோசித்து இருந்தவன்
" அண்ணா வீட்டுக்கு வந்ததும் கோபம் குறைஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்... அந்த கேப்ல அஷ்... ஐ மீன்..அண்ணி...கெஞ்சி கூத்தாடி சமாளிச்சிருப்பாங்க... ஒரு காரியம் நடக்கணும்னா சாதிச்சிட்டுத்தான் மறுவேலை பாப்பா...." என்றான் அவளை புரிந்துகொண்ட உயிர் தோழனாக....அதைக் கேட்டு சிரித்தவள்
"அக்கா ஒரு விஷயத்துக்காக எப்படியெல்லாம் அப்பாவியா நடிப்பாங்க தெரியுமா...? அவங்க மூஞ்ச பார்த்தாலே எல்லாரும் அவ சொலறதுக்கு தலயாட்டிடுவாங்க..... பொய்யெல்லாம் மூட்ட மூட்டயா அவிழ்த்து விட்டே தப்பிச்சிருவாங்க... இதனாலேயே அப்பாகிட்ட என்ன விட நிறைய நேரங்கள்ல தப்பிச்சி இருக்கா......"
"பட்... அண்ணாக்கு போய் சொல்றதே பிடிக்காது..."
"ரெண்டு பேருமே நேர் எதிர் குணம்....எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ....அக்காக்கு கோவம் வராதுன்னு இல்ல... அவங்க கோபப்பட்டு நான் பார்த்தது கொஞ்சம் ஆரு...எல்லார் கூடவும் சகஜமா பேசி பழகிருவா....பட் மாமா அக்காவுக்கு சேர்த்து அவங்க தான் கோவப்பட்றாங்க.... யார்கிட்டயும் அனாவஷ்யமா பேசவே மாட்டாங்க..."என கயல் கூறவும் அதற்கு ஆமோதிப்பாக தலை அசைத்தவனின் மனதிற்குள் ஏதேதோ பழைய ஞாபகங்கள் வர... பெருமூச்சு விட்டவன்
"அண்ணா பழையபடி மாறிருவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு அம்மு...."
"பழையபடினா..." அவள் புரியாமல் கேட்கவும்
"அத விடு... இப்போ என்ன கவனி" என்றவன் அவளை இழுத்து அவள் உதட்டை சிறை செய்ய அவளும் அதில் சுகமாக மூழ்கிப் போனாள்.
காலை....
நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியாக தூங்கியதாளோ என்னவோ சற்று தாமதமாக எழுந்த ரிஷி கட்டிலை பார்க்கவும் அஷ்வினி லேப்டாப்பில் ஏதோ சீரியஸாக வேலை செய்து கொண்டிருக்க எழுந்து குளித்து முடித்து வந்து ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் சென்று ரெடியாகி வந்தவன் ஃபோனை தேட நிமிர்ந்து பார்த்தவள்
" இதுவா..." என கேட்க முறைத்தவன் அதை எடுக்க கையை கொண்டு போக உள்ளுக்குள் இழுத்து அவள் கண்களால் டீயை காட்ட.... அதை பார்த்துவிட்டு
" எனக்கு ஏற்கனவே லேட்டாயிடுச்சு.... மொபைல கொடு அஷ்வினி...." என்று தன்மையாக சொல்லவும்
"நீங்க முதல்ல இத குடிங்க... அப்புறம் தரேன்..."
"விளயாடாத அஷ்.... அஷ்வினி...மொபைல கொடு.." அவன் குரலில் சற்று கோபம் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல்
"லேட் ஆவிரிச்சேன்னு உங்களுக்கு யாரும் எதுவும் சொல்லப் போறதில்ல... குடிங்க அப்புறம் கொடுக்குறேன்..."
என்றவள் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு எழ கோபத்தில் பல்லை கடித்தவன் அவள் கையில் இருந்து போனை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே தூக்கி அடித்து விட்டு அவளுடைய கழுத்தை பிடித்து சுவற்றில் சாய்த்து
"என்னடி நெனச்சிட்ருக்க.... இவன் நான் என்ன சொன்னாலும் எனக்கு அடங்கிருவான்னு நெனச்சியா..? உன் நெனப்புக்கு வேற எவனாவது வேணும்னா வருவான் அவன் கிட்ட போ.....போயி உன்...."
என்று சொல்லி முடிக்க முன்னே ஆக்ரோஷமாக அவனை தள்ளியவள் அவன் எதிர்பாரா நேரத்தில் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.அவன் சட்டை காலரை கெத்தாக பிடித்தவள்
"என்னடா சொன்ன... ஓன் நெனப்புக்கு வேற எவனாவது வருவான்... அவன் கிட்ட போய்... அவன்கிட்ட போய்... என்ன பண்ணனும் சொல்லுடா..... சொல்லு?" என்று உழுக்கிவிட்டு
" கோபம் வந்தா என்ன வேணா பேசுவியா நீ.... உன் பொண்டாட்டிய அடுத்தவன் கூட சேர்த்து வெச்சி பேச வெட்கமா இல்ல உனக்கு.... நீ எல்லாம் என்ன மனுஷன்...சேஹ்..."
என்றவள் அவனைத் தள்ளிவிட்டு கதவை படார் என அடித்து விட்டு வெளியேற அவள் மேல் காட்டப்பட வேண்டிய கோபம் வீட்டுப் பொருட்களில் காட்டப்பட்டு அவை நொறுங்கி சிதறின.
கோர்ட்டுக்கு அருகில் உள்ள பார்க்.....
"உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்..." என்று வந்து நின்ற பெண்ணை பார்த்து குழம்பிய அஷ்வினி ஏதாவது உதவியாயிருக்கும் என நினைத்து விட்டு அவளை கூட்டிக்கொண்டு அந்த பார்க்கிற்குள் வந்தமர்ந்தாள். தனக்கு முன் இருந்த பெண்ணிடம்
" உங்க நேம் என்ன?"
"ஐ அம் ஆத்மிகா"
"என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க என்னால முடிஞ்சத நான் பண்றேன்..."
"நான் ஒருத்தர லவ் பண்ணேன்... என்ன யூஸ் பண்ணிட்டு ஏமாத்திட்டான்... நான் இப்போ கர்ப்பமா இருக்கேன்...."எனவும் அதிர்ந்து
"இத நீங்க போலீஸ் ஸ்டேஷன்ல தானே கம்ப்ளைன்ட் கொடுக்கணும்"
"இல்லங்க... அங்க கம்ப்ளைன்ட் கொடுத்தும் அவங்க எந்த ஆக்ஷ்னும் எனும் எடுக்கல... " என்றவள் அப்பாவி போல அஷ்வியை பார்க்க
"சரி...அவர் போட்டோ இருந்தா காட்டுங்க" என கேட்டதும் இதுதான் வாய்ப்பு என்று போட்டோவை காட்டப் போன நேரம் அவள் கையிலிருந்த மொபைல் தூரப் போய் விழ இரண்டு பெண்களும் திடுக்கிட்டு திரும்ப அங்கே அஷ்வியை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் ரிஷிகுமார்.
(ஏதோ வேலையாக அந்தப் பக்கம் வந்தவன் ஆத்மிகாவுடன் அஷ்வினி உள்ளே நுழையவும் இவனும் சந்தேகத்துடனேயே நுழைந்து இருந்தான். அவன் சந்தேகம் உறுதியானது போல் இருந்தது ஆத்மியின் பேச்சுக்கள்...)
அவனைக் கண்டு ஆத்மி பயப்பட.... அஷ்வினி அவனை முறைத்துக் கொண்டே
"இப்போ எதுக்கு தட்டி விட்டீங்க" என கேட்டவளை முறைத்து கோபமாக
"நீ முதல்ல இங்கிருந்து கெளம்பு..."
"முடியாது.... நீங்க சொல்றத என்னால கேட்க முடியாது... இப்போ எதுக்கு தட்டி விட்டீங்க?" என்றாள் அழுத்தமாக...... அவள் அப்படிக் கூறியதும் காலையில் உள்ள கோபம் எல்லாம் சேர்ந்து கொள்ள "அஷூ...." என கத்தி விட அவனுடைய பிரத்தியேக அழைப்பில் மனம் மகிழ்ந்தாலும் விடாமல்
"சும்மா கத்தாதீங்க... தப்பு பண்ணது நீங்கதான்..." கை நீட்டி பேசவும் அவள் தைரியத்தை பார்த்து உண்மையில் மனதில் சபாஷ் போட்டுக்கொண்டாள் ஆத்மிகா. ஆத்மி புறம் திரும்பியவள் அவள் வாடிய முகத்தை காணவும் அந்த போனை எடுத்து கொடுத்து
"நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க மேடம்.... அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். நீங்க காட்டுங்க.." எனவும் மாய கண்ணீர் வடித்தவள்
"போட்டோ எதுக்கு மேடம்... அதான் கண்ணு முன்னாடியே நிற்கிறானே..." என தேவ்வை கைநீட்டி மரியாதை இல்லாமல் பேசி பழி போடவும்
ரிஷி கோபத்தில் கை ஓங்க போக அதற்கிடையில் அவன் மனையாளே அறைந்திருந்தாள் அத்மிகாவுக்கு....அதில் ரிஷி புன்னகைக்க...
"மரியாதயா போயிடு இங்க இருந்து.... இல்ல உன்ன கொன்னுட்டு ஜெயிலுக்கு போக கூட தயங்க மாட்டேன்.... எனக்கு தெரியும் என் புருஷன பத்தி பெருசா வந்துட்டா என் புருஷன பத்தி என் கிட்ட பேசுறதுக்கு...." என்றவள் தேவ்வை உறுத்து விழித்து
"வாங்க என் கூட... உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா..." என்றுவிட்டு அவன் கையை இழுத்துக் கொண்டு செல்ல மறுப்பேதும் காட்டாமல் புன் சிரிப்புடன் அவள் பின்னால் சென்றான் ரிஷி.
வெகு நேரமாகியும் தங்கள் அறைகளுக்கு செல்லாமல் கீழே சோபாவில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர் அஷ்வியும் கயலும்....
அஷ்வினி வேண்டுமென்றே அவனை தவிர்க்க கயல்தான் நேரம் செல்வதில் தவித்துப்போனாள்.இங்கே ஆரவ் உச்ச கட்ட கடுப்பில் "கயல்விழீ....." என கத்த
"அஷ்வி...சாரிடி...கோச்சிக்காத....நா வர்றேன்..." என்றவள் சிட்டாய் பறப்பதை பார்த்தவளின் முகம் சிரித்த மறு நொடி வலியை தத்தெடுத்தது." ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் பேசிவிட்டான்.....கோபத்தில் எல்லை மீறி பேசுவான்தானென்றாலும் அதற்கென்று இப்படியா...." என்றவளின் முகம் வேதனையில் கசங்கியது.
இன்று அவன் அழைத்த அழைப்பு பனிச்சாரலாய் மனதை குளிரூட்ட பூவாக மலர்ந்தது அவள் முகம்.... அடுத்த நிமிடம் எல்லாம் மறந்து ரூமிற்கு செல்ல மாடியேறினாள் பெண்...
அறைக்குள் அவன் இருப்பானென்று கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல வெற்று அறையே அவளை வரவேற்க " எங்க போனான் இந்த கமாண்டர்?" சுற்று முற்றும் பார்த்தவள் ட்ரெஸ்ஸிங் ரூம் அருகிலிருந்த அறையிலிருந்து வெளிச்சம் வரவும் அவனை தொந்தரவு செய்யாது பெல்கனியில் போய் நின்று கொண்டாள்.
எவ்வளவு தான் மனதை சமாதானப்படுத்தினாலும் அவன் வார்த்தைகளின் தாக்கம் மனதில் இருக்கவே செய்தது. தான் அன்று தாலியை கொடுத்திராவிட்டாள் இப்படி எல்லாம் நடந்திருக்காதே என மனம் கூக்குரலிட மலுக்கென கண்ணீர் கன்னத்தை தொட்டது...
பின்னால் ஆள் அரவம் நிற்கும் சத்தம் கேட்க அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டே திரும்பினாள் முயன்று வரவழைத்த புன்னகையுடன்......
தேவ் தான் நின்றிருந்தான்.அவனை பார்த்து விட்டு தலையை குனிந்து கொள்ள..." தேங்க்ஸ் " எனும் அவனது வார்த்தையில் குனிந்திருந்த தலை சட்டென நிமிர அவளது அழுத வழிகளைக் கண்டு கொண்டான்.
"ஐ ஆம்..." என பேசப்போனவனை தடுத்து
"பரவால்ல விடுங்க தே..." என கூறப் போனவள் தொண்டையை சரி செய்தவாறு அதை தவிர்த்து விட்டாள்.அவன் பார்வை கூர்மையடைவதை உணர்ந்து வேறு புறம் திரும்பி மீண்டும் தொடர்ந்தாள்.
"பரவால்ல விடுங்க...ஒங்களுக்கு புடிச்ச பொண்ணா இருந்தா இப்பிடி பேசியிருக்க மாட்டீங்கல்ல...நானுங்" அவள் மேலும் பேசும் முன்னரே அவளுதடை சிறை செய்திருந்தான் முரட்டுத்தனமாக.....
ஆணவனின் முதல் இதழ் முத்தத்தில் சந்தோஷப்படவேண்டியவளோ அதிர்ச்சியாக.... அவனோ கோபத்திலிருந்தான். ஆக... இருவருமே தங்கள் இணையை உணரத் தவறிவிட்டனர்.
அவனிடமிருந்து விடுபடத்திமிர அவன் மூர்க்கம் இன்னும் கூடியது.கொஞ்ச நேரம் சென்று அவள் கண்ணீரின் சுவையை உணர்ந்து அவளை உதறித்தள்ளிவிட்டு சென்று விட அப்படியே மடங்கி கதறத்துவங்கினாள் அவள்........
வெற்றிவேல் யுனிவர்சிட்டி....
மரத்தடியில் அமைதியாக இருந்த சித்தார்த்திடம் (அதாங்க லவ் சீனியர்😉) வந்து தொண்டையை செருமினாள் ரித்திகா.தலையுயர்த்தி பார்த்தவன்
தன் நண்பனின் மனைவியின் தோழி என அறிந்து தன்மையாகவே
" என்ன ரித்திகா...என்னாச்சு?ஏதாவது ஹெல்ப் வேணுமா?"
"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..."
"ம்ம்ம்....சரி சொல்லு"
"நா ஒருத்தர லவ் பன்றேன் பட்.. அவருகிட்ட சொல்ல பயமா இருக்கு..." எனும் பதிலில் எரிச்சலடைந்தவன்
"அதை ஏன் என்கிட்ட சொல்ற?" என்றான் பல்லை கடித்துக்கொண்டே
என்றுவிட்டு சென்று விட அவன் தான் சிலயாகி போனான். சத்தியமா இதை அவளிடம் அவன் எதிர்பார்க்கவே இல்லை.....சட்டென தன்னை சுதாகரித்து " இவளுக்கு மண்டை குழம்பி போச்சா... லூசு மாதிரி உளறிட்டு போறா..." என நினைத்து பல்லை கடித்தவன் " ஏய்...நில்லு..." என கத்த அதை அவள் கண்டு கொள்ளாமல் போகவும் அவனுக்குத்தான் அவள் மீது மேலும் கோபம் பெருகிற்று......
அவள் சென்று விடவும் " ஷிட்....." என தலையை அழுத்த கோதிக்கொண்டு வகுப்பில் வந்தமர அருகில் வந்தமர்ந்த ஆரவ் அவன் தோளில் கை வைத்து
" டேய் சித்து... என்னடா நடக்குது இங்க... நீ இங்கே இருக்க..உன்ன கிழி கிழின்னு கிழிக்கிறானுங்களாம்.... வா என்னன்னு போய் பார்க்கலாம்" என்றவனை புரியாது பார்க்க
"என்னடா....அப்போ எதுவுமே தெரியாதா உனக்கு? அங்க ரித்துவையும் உன்னையும் சேர்த்து வெச்சி...."
என்று முழுதாக கூறி முடிக்கும் முன் அங்கே விரைந்தான் சித்தார்த். கல்லூரி நோட்டீஸ் போர்டில்
சித்தார்த்தையும் ரித்திகாவையும் இணைத்து எடிட் பண்ணி விதவிதமான போட்டோக்கள் எல்லாம் ஒட்டப்பட்டிருக்க.... ரித்திக்காவை எல்லோருமாக சேர்ந்து கேவலமாக பார்த்துக் கொண்டும்; சிரித்துக் கொண்டும்; கேலி பேசிக் கொண்டும் இருக்க எதுவுமே அறியாமல் முகத்தை மூடி அழுதவாறே நின்று கொண்டிருந்தாள் அவள். அவர்கள் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்த சித்தார்த்தை கண்டதும் அனைவரது வாயும் மூடிக்கொள்ள ரித்து ஓடிவந்து அவனை அணைத்துக்கொள்ள.... நிலைமை கருதி அணத்தவன் எல்லோரையும் பார்த்து
"யார்ரா இப்படி பண்ணது....." என்றான் அடக்கப்பட்ட கோபத்தில்..... இவன் கேட்டுக்கொண்டிருக்கும் போதே அந்த ரேகின் சீனியர் நைசாக பின்பக்கமாக நழுவுவதை கண்ட ஆரவ் அவன் பின்னாடி சென்றான்.
கேட்ட கேள்விக்கு பதில் இல்லாததை பார்த்து
"உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க.... நானும் இவளும் லவ் பண்றோம்... இதைத்தானே கேட்க ஆசப்பட்டீங்க... சொல்லியாச்சில்ல கெளம்புங்க..."
என கத்த யாரு பயந்தார்களோ இல்லையோ அவனை கட்டிப் பிடித்து இருந்தவள் உண்மையில் பயந்து நடுங்கி அவன் உள்ளே இன்னும் ஒன்ற......அவள் பயத்தை புரிந்தவன் போல ஆறுதல் கொடுக்கும் விதமாக அவளை இன்னும் இறுக்கி அணைத்துக்கொண்டு
" போங்கன்னு சொன்னேன்" என்றான் சத்தம் காட்டாமல் பல்லை கடித்துக்கொண்டு...
அவனை அறிந்தவர்களாதலால் அனைவரும் சென்றுவிட...அவளை மெதுவாக விலக்கி தலைகுனிந்து நின்றவளிடம்
"லுக் ரித்திகா....இது ஒன் தப்புமில்ல...என் தப்புமில்ல... அதனால இத நெனச்சி வருத்தப்பட்டுட்டு இருக்காத சரியா....." என கேட்க அவன் ஆறுதல் அந்த சந்தோஷத்தில் கண்களை துடைத்துக் கொண்டு சிரித்தவாறே
"சரி சித்....அண்ட் சாரி....."எனவும் என்று இன்று சொன்னது ஞாபகம் வந்தவனாக
" அது சரி.....இன்னைக்கு ஏன் அப்படி சொன்ன?"
"எப்பிடி சொன்னேன்" என அப்பாவியாய் கேட்டவளை முறைத்து விட்டு
"ரித்திகா.... குழப்பத்துல எடுக்கிற எந்த முடிவும் நமக்கு சரியான தீர்வ கொடுக்காது....அதனால உன் முடிவை மாத்திகிட்டு என்ன சாய்ஸ் பண்றதுக்கு பதிலா நீ வேற யாராவது சாய்ஸ் பண்னா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்.."
"ஹப்பா.... ஒரு வழியா முடிஞ்சுதா உங்க அட்வைஸ்... ஏன் சித்....உங்களுக்கு என்ன குறைன்னு வேற ஒருத்தனை சாய்ஸ் பண்ண சொல்றீங்க?"
" ரித்தி...."என்று ஏதோ கூற வந்தவனை தடுத்து
" இதோ.... இப்ப கூட என் மேல நம்பிக்கை வெச்சி அடுத்தவங்க மேல கோபப்பட்ட உங்க மேல லவ் கூடி போச்சே தவிற அடுத்தவன சாய்ஸ் பண்ணனும்னு நினைக்கவே இல்ல.... எல்லாத்தையும் நிதானமா சொல்லிக் கொடுக்கிற இந்த எட்டிடியூட் கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..... இப்படி இன்னும் நிறைய இருக்கு...என்னோட சாய்ஸ் தப்பாகாதுங்குற நம்பிக்கை எனக்கிருக்கு.....அதனால தான் சொல்றேன் ஐ லவ் யூ......ஐ லவ் யூ..... ஐ லவ் யூ....." என்றவள் அவ்விடம் விட்டகல அவன் தான் அவளுடைய அவன் மீதான காதலில் வாயடைத்துப் போனான்.
ஆரவ் நண்பர்களுடன் அவனைப் பிடித்துக் வெளுத்து வாங்கிவிட்டு எதுவும் நடக்காதது போலவந்தமர.... ஏதோ யோசனையில் அமர்ந்திருந்த சித்தார்த் அதில் கலைந்து ஆரவ்வை பார்க்க அவனுடைய டீ-ஷர்ட்டின் தோல் பக்கத்தில் கிழிந்து இருக்க பதறியவன்
"ஏய்...மச்சான் என்ன ஆச்சுடா...."
"அது ஒன்னும் இல்ல... ரிலாக்ஸ் சித்து... ரித்துக்கு என்ன ஆச்சு?"
"அவளுக்கென்ன... வாய் கிழிய பேசுறா..." என ஏதேதோ நினைவுகளில் கூற புரியாது பார்த்தவன்
" என்னடா சொல்ற?"
"அது ஒன்னும் இல்ல மச்சி... என்ன கேட்ட?"
"உனக்கு என்னமோ நடந்திருக்கு இன்னக்கி...... அது மட்டும் தெளிவா தெரியுது.. சரி விடு...ரித்துவுக்கு என்னாச்சின்னு கேட்டேன்.... அழுதிட்ருந்தால்ல..."
"இப்போ சரியாயிடுச்சு..."என்றவன்
"யார் அப்படி பண்ணதுன்னு புடிச்சு ஒதக்கணும் மச்சான்..." என்றவனை பார்த்து ஆரவ் மர்மமாய் சிரிக்க... அதன் பொருளை உணர்ந்து கொண்டவனாக
" என்ன மறுபடி சண்டையா?" என்று கேட்டு விட்டு அவனை பார்க்க அதற்கும் சிரிக்கவும்
"எனக்காக சண்டை போட்றதுனால ஓன் அண்ணன் ஒன்ன கிழிப்பான்னு தெரிஞ்சுதான் எந்த வம்புக்கும் போக வேண்டாம்னு சொல்றேன்... கேட்டா தானே"
"டேய் நீ எனக்கு வேறு யாரோ இல்ல... என் குடும்பத்துக்கு அடித்தபடி எனக்கு எல்லாமே நீதான் மச்சான்... அண்ணன் ஏசுறது நல்லதுக்கு தானே விடு..." என்றவனின் அன்பில் நெகிழ்ந்து
"அந்த சொட்டை தல பியூன் வந்து இப்போ நம்மல கூப்பிடுவான் பாரு..."என்று சொல்லி முடிக்கவில்லை வாசலில் வந்து நின்ற பியூன்
"ஆரவ் தம்பி.... உங்கள சார் கூப்புட்றாரு..."
என்றுவிட்டு செல்ல அதை பார்த்து வாய்விட்டு சிரித்தான் ஆரவ்.
ஆபிஸ் ரூம்....
இருவருடைய கேங்கும் எதிரெதிரே முறைத்துக்கொண்டு நிற்க அவர்களுக்கு நடுவில் வந்து நின்ற ரிஷி ஆரவ்வை ஒரு பார்வை பார்த்துவிட்டு
" என்ன நடந்தது?" என்றான் அமைதியாக... அவனுடைய அமைதியில் உள்ளுக்குள் குளிரெடுத்து ஆரவ்விற்கு..." அமைதியா வேற கேட்குறாரே..." என நினைத்து விட்டு சொல்ல எத்தனிக்க... அதற்கிடையில் ரேகிங் சீனியர் பொய் பொய்யாய் அவர்களுக்கு எதிராக அனைத்தையும் சொல்லி முடிக்கும் முன் அவன் மீது பாய்ந்தான் ஆரவ்
" டேய்....மரியாதயா உண்மைய சொல்லு... இல்ல..."
" இல்லன்னா....என்னடா பண்ணுவ..." என்று அவனும் எகிற சித்தார்த் ஆரவ்வை சமாதானப்படுத்தி பின்னாலிருந்து இழுக்க....ஆரவ்வை அடிக்க ஓங்கிய ரேகிங் சீனியரின் கை இடையில் வந்த ரிஷியை கண்டு அந்தரத்தில் நிற்க.... பொங்கி விட்டான் ஆரவ்.
"டேய்....." என மறுபடி சித்தார்த்திடமிருந்து திமிரி அவனை கீழே தள்ளிவிட்டு அவன் மேல் ஏறி
" நானே என் அண்ணா மேல கையை ஓங்கினது கிடையாது நீ ஓங்குறியா.... கொன்னுடுவேன்டா நாயே...." வெறிபிடித்தவன் போல் அடித்துக்கொண்டிருக்க.... ரிஷி அண்ணன் என்பதில் அனைவரும் அதிர அவனை தூக்கி எடுத்து கன்னத்தில் அறையப்போக இடைப் பாய்ந்து அதனை வாங்கிக் கொண்டான் சித்தார்த். இதற்கிடையில் ரேகின் சீனியர் எழுந்திருக்க அனைவரையும் முறைத்தவன்
"உங்க இருப்பது பெயரையும் இன்னும் ஒன் வீக்குக்கு சஸ்பெண்ட் பண்றேன்... காலேஜ் பக்கம் வர்ரத பார்த்தேன்....கெட்டவ்ட்"என கூறியவன் எல்லோரும் வெளியேருவதை பார்த்து " ஆரவ்.. " என்று விட்டு அமைதியாகி விட அவன் மட்டும் திரும்பி வந்து தலை குனிந்து நின்றான்.
***
அஷ்வினி இப்பொழுதுதான் வேலையில் இணைந்து இருப்பதால் அவளை இன்னொருவனின் அஸிஸ்டனாகத்தான் வேலை கற்றுக் கொள்ள சொல்லி இருந்தது.அவள் சீனியர் லாயர் பெயர் விஷ்வா; ரொம்ப நல்லவன்; நியாயம் பக்கம் சார்ந்திருப்பவன்; உயரமான கோதுமை நிறம் கொண்ட ஸ்மார்ட்டான ஆணழகன்; ரொம்ப கலகலப்பானவனும் கூட....
கோட்டுக்கு அருகில் தன் டூவீலரை நிறுத்திய அஷ்வினியை " ஹாய் அஷ்வி " என்று கையசைத்தவாறே நெருங்கினாள் அவள் லாயர் நண்பி அபிநயா.
"ஹாய் அபி..." என்றவள் சிரித்துக்கொண்டே நெருங்கி வந்தாள். அதற்குள் அவளை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்த அபி
"என்னடி கன்னமெல்லாம் சிவந்திருக்கு...." என கலாய்க்க அவள் சொல்ல வருவதை உடனே புரிந்து கொண்டவள் அவளை முறைத்துவிட்டு
"அவர் ஒன்னும் காரணமில்லாம அடிக்கல அபி... சோ... நோ ப்ராப்ளம்.. இட்ஸ் ஓகே..." பெருமிதமாக கூறிய தோழியை பெருமையாக பார்த்தாள் அபி.
"ஓஹ்.....மேடத்துக்கு சார் மேல அப்பிடி ஒரு லவ்ஸோ..." எனவும் யோசிக்காமல் பட்டென
" அப்பிடியெல்லாம் எதுவுமில்ல அபி... ஏதோ சொல்லணும்னு தோனிச்சு...."
என்றவளை பார்த்து சிரிப்புத்தான் வந்தது அபிக்கு.....
"இவ அவன் மேல் உள்ள காதல இன்னும் உணரல்ல...அதை சொல்லி புரியவைப்பது காதலுக்கு அழகில்லை என்பது அபியின் கருத்து. சரி அவளே புரிந்து கொள்ளட்டும்!!" என்று விட்டு விட்டாள்.
தன்னையே கண்வெட்டாமல் பார்த்திருக்கும் அபியை
"என்னடி அப்பிடி பாக்குற" எனவும் சிரித்தவள்
"நத்திங்டி" என கூறி முடிக்கும் முன் அவர்கள் முன்வந்து நின்றது வைட் கலர் ஹைபிரிட் கார் ஒன்று.... அதிலிருந்து கையில் கோட் சகிதம் இறங்கிய விஷ்வா அஷ்வினியை பார்த்து
புன்னகைக்க பதிலுக்கு புன்னகைத்து உற்சாகமாக
" ஹாய் சார்...." என்றவளின் பேச்சில் அபிக்குத்தான் மனதில் திக்கென்றது.
அஷ்வினியிடம் ஏதோ பேச திரும்ப அவள் ஏற்கனவே அவனுடன் கதைத்து சிரித்தவாரே நடந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துவிட்டு நாளை பேசிக்கொள்ளலாம் என நினைத்து அவள் தன் கேஸை பார்க்க சென்றுவிட்டாள்.
அவள் விஷ்வாவுடன் நெருங்குவதற்கான காரணமே வேறு..... அஜய்யின் ஜெராக்ஸ் போலவே இருந்தவனை முதன்முறையாக பார்த்தவளிற்கு சற்று அதிக பட்ச அதிர்ச்சி தான்..... என்றாலும் சமாளித்துக் கொண்டாள்.அவனிடம் அஜய்யின் குறும்பு இல்லாவிடினும்.... அவன் காட்டுவது போன்ற அக்கறை அவளை இவனிடம் இன்னும் நெருங்கத்தூண்டியது. அவனிடம் கூட "அண்ணாவ போலவே இருக்கீங்க சார்..." என்றும் சொல்லி விட்டாள். அதற்கு அவன் பதில் புன்னகை மட்டுமே....வீட்டில் உள்ளவர்களுக்கு அவள் அதை தெரியப்படுத்த மறந்து போனதுதான் விதி செய்த சதியோ....
கேபின்.....
தன் கோட்டை வைத்துவிட்டு அவளை அமருமாறு சைகை காட்டியவன்
"சோ..... அண்மைக் காலமா நடக்குற கொலைகள பத்தி இதத்தான் நினைக்கிறீங்களா?"
என விட்டதை தொடர அவளும்
"ஆமா சார்.... அந்த கொலைகள பண்ணவன் சாதாரணமான ஆளா இருக்க முடியாது....ஏன்னா இதுவரைக்கும் அவன் பன்ன கொலைக்கான எந்த ஒரு சின்ன ஆதாரம் கூட இல்லை.... இருந்த ஒரே ஒரு ஆதாரத்தையும் அவன் அழிச்சிட்டான் சார்.."
"அப்படின்னா அவர் தனக்கு எதிரான ஆதாரங்கள் வெளிய வரக்கூடாதுன்னு தெரிஞ்சுதான் பண்ணியிருக்காரு அப்படித்தானே ரிக்ஷி?"
அவன் அப்படி அழைத்ததும் அஜய் தான் ஞாபகம் வந்தான். தனக்கு கஷ்டமான நேரங்களில்... அல்லது மன உளைச்சல் நேரங்களில் தான் அஜய் அக்கறையாக பேசும் போது மட்டுமே வெளிப்படும் வார்த்தை அது....
அவனை கொஞ்ச நேரம் நெற்றி சுருக்கி பார்த்தவள் மீண்டும் தொடர்ந்தாள்.
"எஸ்....சார் அன்னைக்கு நைட் அக்ஷ்யா எனக்கு அந்த வீடியோவை அனுப்பி இருக்கா....அது எனக்கு வந்து சேர்ரதுக்குள்ள அவன் அவளைக் கொன்னு அவளையும் ஆதாரத்தையும் சேத்து அழிச்சிட்டான்"
என அவள் கூறவும் விஷ்வாவிற்கு அந்த முகமறியா மர்மக் கொலையாளி மீது கொலைவெறி வந்த அதே சமயம் பிரமிப்பாகவும் இருந்தது.
"சரி இப்போ நீங்க போங்க.... வேறு ஏதாவது இன்பர்மேஷன் கிடைச்சா வந்து மீட் பன்னுங்க ஓகே..?" எனவும் அவளும் " ஓகே " என்று விட்டு வெளியே வந்து அப்பாடா என்று பெருமூச்சு விட்டபடி திரும்ப எத்தனிக்க மூர்ச்சையாகி மயங்கினாள் யாரோ ஒருவனின் கைகளில்....
அவள் மீண்டும் கண் விழிக்கும் போது ஏதோ ஒரு பெரிய அரிசி குடோனில் சேரில் கட்டப்பட்டிருந்தாள். முதலில் கண் விழித்தவளுக்கு எதுவுமே புரியவில்லையாயினும்.... தான் கடத்தப்பட்டிருப்பது தெளிவாக புரிந்தது. ஆனால் எதற்கு? என யோசித்த கேள்விக்கான பதிலாக தடாலென கதவு திறக்கப்பட்டு மெலிந்த உடல்வாகுடைய ஆளை அசரடித்து வீழ்த்தும் அளவு அழகுக்கு சொந்தமான ஒரு பெண் முன்னே வர அவளுக்குப் பின்னே கருப்பு பேண்டும் டீ ஷர்ட்டும் அணிந்து கிட்டத்தட்ட ஒரு ஐந்தாறு பேர் சுற்றி துப்பாக்கிகள் சகிதம் வந்து கொண்டிருந்தனர்.
அப்பெண் முகத்தில் ஒரு ஏளன சிரிப்பு.... மற்றவர்களோ இவளை பாதுகாப்பதை தவிர வேறு வேலையே எங்களுக்குத் தெரியாது என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு வந்து கொண்டிருக்க... அவர்களின் சுட்டெரிக்கும் பார்வையில் உண்மையில் அவளுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.நேரே அவள் முன் வந்து கால் மேல் கால் போட்டு அமர அவள் அமர்ந்ததும் அவள் மாடர்ன் டிரஸ் சற்று விலக அதில் முகத்தை சுளித்த அஷ்வினியை சொடக்கு போட்டு அழைத்த அப்பெண்
"ஹாய் அஷ்...வினி.... ரிக்ஷி...தா...! என்ன அப்பிடி ஷாக்கா பாக்குற...ஓஹ்...நா யாருன்னு கேக்குறியா..?" என்பவளை புரியாது பார்க்க
"சரி... சரி...நானே சொல்லிட்றேன்... நான்தான் தேவ்வொட ஒரிஜினல் பொண்டாட்டி.... தாலி கட்டினதுது உனக்குத்தான்....பட்...லவ் பண்ணது என்னல்ல... அதனாலதான் அப்பிடி...என்று பேர சொல்ல மறந்துட்டேன் பாரேன் நான் "அனன்யா" தெரியும்னு நினைக்கிறேன்..."
"தேவ்" என்பதில் சற்று அழுத்தம் கொடுத்தாதாகவே தோன்றியது அஷ்வினிக்கு....அவளை அதிர்ச்சியாக பார்த்தவளிடம்
"ச்சு...ச்சு.....பாவம் நீ.... பொண்டாட்டின்னு பேரு மட்டும்தான் போல... உனக்கு ஒன்னுமே தெரில... அப்போ வேலை இன்னும் ஈசியா முடிஞ்சிடும் போலவே...." என்றுவிட்டு வில்லி சிரிப்பு சிரித்தவள்
"ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.... மரியாதையா என் தேவ்வோட வாழ்க்கைல இருந்து விலகிறு.... இல்ல.... சாவு உன்னை தேடி வராது அவனுக்குத்தான் வரும்....என் வாழ்க்கைய நாசமாக்கி... எனக்கு புள்ளைய கொடுத்துட்டு.... நல்லவன் மாரி ஒன்ன கட்டிக்கிட்டான்...." என எழப்போனவளின் வார்த்தையில் கோபம் கொப்பளிக்க
" ஏய்...உக்காருடி...." எனவும் அவள் குரலில் சற்று ஆடித்தான் போனாள் அனன்யா.
"ஏய் உட்காருன்னு சொல்றேன்ல.... உனக்கு என்ன காது செவிடா...." என கேட்டு முடிக்கும் முன் இடியாய் வந்திறங்கியது அனன்யாவின் அரை... அதை கண்டு கொள்ளாது
" எனக்கு என் தேவ் வ பத்தி தெரியும் நீ சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை....இந்த அதிகாரம் பண்ற வேலையெல்லாம் ஒன் அடியாளுங்ககிட்ட மட்டும் வெச்சிக்கோ....ஹம்ம்...
என்ன சொன்ன...என்ன சொன்ன.... சாவு அவனைத் தேடி வருமா? குட் ஜோக்....சாவு அவனைத் தேடி வராது.... அவனைப் பார்த்து பயந்து அவன் கிட்ட என்னால போக முடியாதுன்னு உன்கிட்ட தான் வரும்..." என ஏளனமாக கூற அவளைப் பார்த்து கத்தி கத்தி சிரித்துவிட்டு கைதட்டியவள்
"எனக்கு ஏற்கனவே தெரியும்டி... ஓன் அபார நம்பிக்கைய பத்தி.... அதுக்குத்தான் இந்த சின்ன கிப்ட்...." என்றவள் ஒரு போட்டோவை அவள் முன் இருந்த மேஜை மேல் போட அவள் தேவின் மேல் வைத்த நம்பிக்கை சுக்கு நூறாய் உடைந்து போக கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
அந்த போட்டோவில் இருந்தது இதுதான்...
அது ஒரு பார்க்கில் எடுக்கப்பட்டிருக்க... ஆரவ்விற்கு அருகில் ரிஷியும் அவனுக்கு அருகில் அனன்யா... என தோளில் கைபோட்டு சந்தோசமாக நின்று கொண்டிருந்தனர். அதிலும் ரிஷியின் கண்களில் தெரிந்த காதல் பொய்யாக இருக்க வாய்ப்பே இல்லை...... அதில் தெரிந்த நெருக்கம்........
அவளுக்கு அவளை நினைத்தே கூசிப்போன நேரம் அனன்யா மேலும் பேசினாள்.
"அதோட என்ன சொன்ன...? தேவ் ஆ? தேவ்னு நான் தான் கூப்பிடுவேன்.... நீ கூப்பிடும் போது பேர் சொல்ற வேலயெல்லாம் வெச்சிக்காத சொல்லிட்டேன்னு சொல்லியிருப்பானே.....?"
என்று கேட்க உண்மையில் அவன் கோபத்தில் அன்று கேட்டது இன்று உடல் கூசி குறுகிப் போகும் அளவு வலித்தது.
அவள் எண்ணம் போகும் போக்கை நினைத்து திருப்தி அடைந்து முதலை கண்ணீருடன்
"ப்ளீஸ் அஷ்வினி....நீயும் ஒரு பொண்ணு தானே... என் வயித்துல வளர்ற குழந்தைக்கு அப்பா பேரு தெரியாமல் இருக்கணுமா? அப்பா பெயர் தெரியாம வளர்ர குழந்தைகள் இந்த சமூகத்துல எவ்வளவு கேவலமா பார்க்கடுதுன்னு பார்த்திருக்க தானே?ப்ளீஸ் எங்களை விட்டுடு...எங்க வாழ்க்கைல இருந்து போயிடு....ப்ளீஸ்...."
என கண்ணீர் வடித்து கையெடுத்து கும்பிட்டவள் எழுந்து சென்று விட அவள் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டவர்களும் அவள் பின்னே செல்ல..... அஷ்வினி தான் தேற்றுவாரின்றி ஓய்ந்து போனாள்.
***
தன் முன் தலைகுனிந்து நின்றிருந்தவனை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு அவன் முன் வந்து நின்ற ரிஷி
"என்ன நடந்துது..?" என்று கேட்க நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்துவிட்டு மீண்டும் தலையை குனிக்க அதில் சிரித்தவன்
"இப்போ எதுக்கு தலய குனிஞ்சு நிக்கிற...?" என்ற கேள்வியில் விலுக்கென தலையை உயர்த்திப் பார்த்த ஆரவ் ரிஷியின் கண்கள் சிரிக்கவும் "அண்ணா...." என கூறிக்கொண்டே இருக்க அணைக்க தானும் அணைத்தான் ரிஷி.....
சற்று நேரத்தின் பின் அவனை விடுவித்து
"உனக்கு எதுக்குடா இவ்வளவு கோபம் வருது...?"
"பின்ன எண்ணன்னா..... என் அண்ணாக்கு நானே கை ஓங்க மாட்டேன்... அவன்...?"
"அவன் தான் எனக்கு ஓங்கவே இல்லையேடா...."
"அதுக்காக....?"
என்றுவிட்டு மூஞ்சியை திருப்ப அவனை தன் புறம் திருப்பி
"இப்போல்லாம் நீ ஓவரா கோவப்பட்ற...ஆரவ்"
(அத நீ சொல்றத தான் எங்களால தாங்க முடிலடா சாமி...)
"அண்ணா.... எனக்கு என்ன வேணா சொல்லிக்கோ... பட் உனக்கு நீ கூட ஒண்ணுமே சொல்லாத... அதை என்னால தாங்க முடியாது... என்ன அடிச்சு ஒதச்சாலும் உனக்கு ஒன்னுனா நான் சும்மா இருக்க மாட்டேன்....நீயும் சும்மா சும்மா என்ன தடுக்காத"
என்ன கோபித்துக் கொண்டு சென்றுவிட ரிஷியின் முகத்தில் அவனை நினைத்து பெருமிதத்துடன் கூடிய புன்னகை அரும்பியது.... தனக்கு ஆபீஸிலிருந்து கால் வரவும் அங்கு விரைந்தான் ரிஷி.
கயலின் வரவுக்காக பைக்கில் காத்திருந்தான் ஆரவ்.அப்போது தனியாக வந்த ரித்துவிடம்
"ரித்து...கயல் எங்கமா?" என கேட்க
"என் கூடத்தான் வந்தாண்ணா எங்க போனா..." என சுற்றி முற்றி பார்க்க சித்தார்த் ஏதோ அவளிடம் பேசுவது கண்டு கடுப்பானாள்.
அதற்குள் கயல் வந்து பைக்கில் ஏறி சென்று விட நேரே சித்தார்த்திடம் சென்று
"பேசி முடிச்சிட்டீங்களா..." என முறைப்போடு கேட்கவும் அவள் எதை கேட்கிறாள் என புரிந்து மனதிற்குள் சிரிப்பு வந்தாலும் வெளியில்
"ஆமா முடிஞ்சிட்டேன்.......அதுல உனக்கு என்ன வந்தது?"
"ப்ச்....அப்போ உங்களுக்கு என் மேல லவ்வே வராதா சித்....?" என சிணுங்கி அப்பாவியாய் கேட்டவள் முதன்முறை சித்தார்த்தின் மனதில் தன் தடத்தை ஆழமாகப் பதிக்க அவளை பார்த்து புன்னகைத்தவாறே
" அதுக்கான பதிலத்தான் நான் தெளிவா சொல்லிட்டேனே அப்பறமென்ன...?"
"ஒருவேல...லவ் வந்தால்...."
உற்சாகமாக அவள் கேட்க வேண்டும் என்றே அவளை சீண்ட எண்ணியவன்
"வராது" என்ற ஒற்றைச் சொல்லில் அவள் கண்கள் கலங்கிவிட்டது. அதனைப் பார்த்து
"ஹேய் ரித்திக்கா... அழாத... நா எதோ விளையாட்டுக்கு...."என்று ஏதோ சொல்லப் போனவனை தடுத்தவள்
" சாரி சித்...என் மேல உங்களுக்கு லவ் வரும்குற நம்பிக்கைல தான் உங்கள டிஸ்டர்ப் பண்ணேன்.
இனிமேல் பண்ண மாட்டேன்...சாரி..." என்றவள் அவன் பதிலை எதிர்பாராமல் சென்றுவிட
அவன் தலையில் அடித்துக் கொண்டான்.
இரவு 10 மணியை தாண்டியும் வீட்டிற்கு போக மனமில்லாமல் கடற்கரை மணலில் யாருமற்ற தனிமையில் அமர்ந்திருந்தாள் அஷ்வினி ரக்ஷிதா.
தன் வாழ்க்கையை யாரோ திருடி விட்டு போய் விட்டதாகவே தோன்றியது அவளுக்கு...... முதலிலிருந்து அனைத்தையும் யோசித்தவள் தான் மட்டும் தான் அவனிடம் வழிய போய் பேசி இருக்கிறோமே தவிர அவனாக வந்து எப்போதும் பேசியதேயில்லை என்றது அப்போதுதான் உறைத்தது.
கையில் இருந்த அந்த போட்டோ வேறு அவள் கண்ணீரில் நனைந்து நொறுங்கிப் போய் இருந்தது. தேவின் கண்களில் தெரியும் காதல் தனக்கு சொந்தமானதல்ல என எண்ணும் போதே யாரோ இதயத்தைக் கசக்கிப் பிழிவது போல் இருந்தது.
அவள் பையிலிருந்த செல்போன் தன் இருப்பை உணர்த்த அதில் ஒளிர்ந்த "கமான்டர்" என்ற எண்ணில் அனன்யாவின் வார்த்தைகளும் சேர்ந்துகொள்ள காலை கட்டி பண்ணி விட்டாள்.
மறுபடி மறுபடி கால் வரவும் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி மூடி வைத்துவிட்டாள்
ஒரு மணித்தியாலம் கழித்து.... போவோம் என எழுந்தவளின் முன் நிழல் ஆடவும் அங்கு இவளை கொலைவெறியுடன் பார்த்தவாறு நின்றிருந்தான் ரிஷிகுமார். அவனை பார்க்காதது போல் எழுந்து நிற்க எத்தனிக்க அவன் விட்ட அறையில் நிற்க முடியாமல் தள்ளாடியவளுக்கு ஏனோ அழுகை அழுகையாக வந்தது.
அவன் அறைந்ததில் கையிலிருந்த போட்டோ கீழே விழ அதை அவள் எடுக்கும் முன் அவன் எடுத்திருந்தான்.எடுத்தவனுக்கு கடல் அலைகள் ஓய்ந்து அடங்கி போனது போல் இருக்கவும் அவன் உதடுகள் தானாக
"அனு"என முணுமுணுக்க அதை பார்த்தவுடன்
ஏற்கனவே இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் மொத்தமாக வடிந்து போக அவளும் உடைந்துபோய் மண்ணில் மயங்கி சரிய அவளை தாங்கிப் பிடித்தான் அவளது கணவன்....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.