Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed வேல்விழியின் குளிர் நிலவோ - கதைப்பகுதி

42:

பிளைட்டில் இருந்து இறங்கிய வேலனிடம் ஓடி வந்தான் ஜான்.



வேலனை சுற்றி நாலு பேர் பாடிகார்ட்ஸ் போல நடக்க ஒன்றும் புரியாமல், "வ்ஹாட்ஸ் ஆல் திஸ் ஜான்? ஹூ ஆர் தே? வை தே ஆர் பாலோவிங் மீ?" என்றான் சிறிது கோபத்துடன்.



"சார். தே ஆர் யுவர் பாடிகார்ட்ஸ் பார் செகியூரிட்டி பார்ப்ஸ்" என்றான் லேசான பதற்றத்துடன்.



'என்ன ஆச்சு இவனுக்கு ஏன் இவ்ளோ பயந்தா மாதிரி இருக்கான்?' என்று தனக்குள்ளே யோசித்தவன்.



"இஸ் எவரிதிங் கோயிங் வெல் ஜான். இப் ஐ ஆஸ்க்ட் இட் டு டூ இட்?" என்றான் மீண்டும்.



"சார் இட்ஸ் நாட் யுவர் ஆர்டர். பட் மேம் ஆஸ்க் மீ டு டூ திஸ். இப் எனிதிங்க் ஹாபென்ஸ் டூ யு, டேபநெட்லி ஷி கில்ஸ் மீ" என்று சிரித்தான்.



'அடடா! நம்ம ஆளு இங்கயும் அவள் வேலைய காட்டிட்டா போல இருக்கே? இப்படி பயப்பட்றான்' என்று சிரித்தபடி நடந்தான்.



நேராக வீட்டிற்கு செல்லாமல் அலுவலகத்துக்கு சென்றவன் அனைவரையும் அழைத்து மீட்டிங் வைத்து, எல்லோரையும் சமாதானபடுத்தி எல்லாம் சரி செய்து மணியை பார்க்க இரவு ஒன்பது மணி.



"ஒன்பது மணி ஆகிடுச்சா? இப்பயே ப்ளைட்ல கிளம்பலாம். ஆனா, என் பொண்டாட்டி இந்நேரத்துக்கு சேப் இல்லாம உன்னை யாரு வர சொன்னதுன்னு உயிரை எடுத்துருவாளே?" என்று தனக்கு தானே பேசிக்கொண்டவன் அங்கே இருந்த தனது வீட்டிற்கு சென்றான்.



விளக்குகள் எதுவும் போடாமல் இருட்டாக இருக்க ஒரு நொடி நிலா தான் வந்து போனாள் வேலனின் மனதில்.



"ஹ்ம்ம்... என் பொண்டாட்டி என் கூட இருந்திருந்ததா இந்த வீடு இப்படி இருக்குமா?" என்று பெருமூச்சி விட்டவன்.



"ஐ மிஸ் யு டி பொண்டாட்டி" என்று தனக்கு தானே சொல்லி கொண்டு அங்கே இருந்த விளக்கை போட்டு விட்டு நிலாவிற்கு போன் செய்தான்.



நிலா போன் எடுக்காததால் அவளை திட்டியபடியே ஹரிக்கு போன் செய்தான்.



"ஹலோ!" என்றான் ஹரி.



"ஹலோ! நிலாக்கு இன்னைக்கு நிறைய தடவை போன் பண்ணிட்டேன். போன் எடுக்கலை ஹரி. போய் கொஞ்சம் பார்த்துட்டு போன் பண்றியா?" என்றான் சிறிது கவலையுடன்.



"சார்! நான் ஈவனிங் செவன் ஒ கிளாக் வீட்டுக்கு போயிருந்தேன். மேடம் நல்லா இருக்காங்க சார். ரொம்ப டையர்டா இருக்கு டேப்லெட் போட்டு தூங்க போறேன்னு சொன்னாங்க சார்." என்றான்.



"உடம்புக்கு ஒன்னும் இல்லையே?" என்றான் பதட்டமாக.



"இல்ல சார். பயபடாதிங்க. ஹாஸ்பிடல் வேணா போயிட்டு வரலாம்னு சொன்னேன். மேடம் வேணாம்னு சொல்லிடாங்க சார்" என்றான் ஹரி.



"அப்போ ஓகே. நான் நாளைக்கு காலைல கிளம்பிருவேன். நான் பார்த்துகிறேன்" என்று போனை வைத்தவன்.



கதவை திறக்க. அவன தலையில் சில்லென ஒரு வாளி நிறைய நீர் வந்து பொத்தென்று விழுந்தது.



ஒரு நொடி என்ன நடந்தது என்று யோசிப்பதற்க்குள் இப்படி நடந்துவிட்டது.



'என்னதிது? ' என்று நீரை முகர்ந்து பார்க்க பன்னீர் வாசம் வந்தது.



அதோடு தரையிலும் தன் தலையிலும் பார்த்தவன் முழுவதும் மல்லிகை பூ சிதறிக்கிடக்க.



'நம்ம ஊரு மல்லி. இங்க கிடைக்காதே? யாரு செஞ்சிருப்பா?' என்று யோசித்தபடி தன் மாடியறை நோக்கி நடக்க சட்டென நின்றான். அவன் பாதத்தின் கீழ் மலர் இதயம் வரைந்து அதில் ஒரு காகிதம் சொருக பட்டிருந்தது.



ஒன்றும் புரியாமல் மெல்லிய புன்னைகையோடு அதை எடுத்து பிரித்தான்



"உன்



வாய்மொழி தேவையில்லை...!



உன்



விழியின் மொழி போதும்...!!!



அது உணர்த்தும்



உன் காதல் முழுவதையும்...!!!



மலர் இதயத்தை கண்ட நீ



உன்



இதயத்தை காண ஓடி வா...!!!"



-உன்... விழித்தென்றல்...!!!



அதை படித்தவனின் இதயம் அதிகமாய் துடிக்க மெல்ல ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தான் தன் அறை நோக்கி.



அறையின் முன் நின்றவன் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டபின் கதவை திறக்க, அங்கே அவன் கண்ட காட்சி அவன் விழிகளே விழிகளையும் தாண்டி வந்து விழுந்து விடும் போல் இருந்தது.



அங்கே,



அறையின் தரையில் ஒவ்வொரு அடியும் ரோஜா மலரால் நிரப்ப பட்டு ஆங்காங்கே மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருக்க, மஞ்சம் முழுவதும் மல்லிகை மலர் நிரப்ப பட்டிருந்தது. அறையின் வாசம் அவன் நாசியை தாண்டி அவனுள் எதையோ உரைக்க விழிகள் நிலாவை தேடியது.



தன் காலில் இருந்த ஷூவை கழட்டி வைத்து விட்டு மென்மையான மலரில் நடக்க அவனுக்குள் ஒரு நிம்மதி பரவியது.



விழிகள் மெத்தையில் வைக்கபட்டிருந்த பரிசு பொருளின் மேல் நிலைக்க வேகமாய் அதை எடுத்து பிரித்தவன் முகத்தில் மகிழ்ச்சி மின்னியது.



அதில் நம் பாரம்பர்யத்தின் பட்டு வேஷ்ட்டி சட்டை இருந்ததோடு அதனோடு இருந்த குறிப்பு சீட்டை எடுத்து படித்தவன்.



"எத்தனை காலம் காத்திருந்தேன் உனக்காக...



உன் விழிகளே எனக்கான காதலை



முழுவதுமாய் சொல்ல...



நம் வாழ்வின் முதலடியை எடுத்துவைக்க



உனக்காக



நான் கொடுக்கும் சிறுபரிட்சை



இவ்வுடை வுடுத்தி



என் பெண்மையை உனக்குள் உணர



விழிமூடி என் வாசம் அறிந்து வா...!!!"



உன்... விழித்தென்றல்...!!!



"ஓஹ காட்!! இவ தான் என் மரணத்துக்கு காரணமாக போறா" என்று சிரித்தவன் ஆயிரம் எண்ணங்கள் மூளையில் உதிக்க குளித்து புது உடை உடுத்தினான்.



தயாரான பின் தன் காதல் மனைவியை காண ஆவல் எழ அவளை தேடி சென்றான்.
 
43:

தன்னவளை காண விழிகள் ஏங்கியபடி அலைந்தவனின் விழிகளில் கடைசியாக இருந்த அறையில் அவளின் வாசம் உணர படபடக்கும் இதயத்தோடு அருகே சென்று கதவை திறந்தான்.



அந்த அறை முழுவதும் இருள் சூழ்ந்திருக்க, மல்லிகை வாசம் நாசியில் உரைக்க, "நிலா! போதும்டி. என்னை ரொம்ப படுத்துற... ப்ளீஸ்.. விளையாடாத.. நான் உன்னை பார்க்கணும்" என்றதும் அவளின் கால் கொலுசுகளின் ஓசையோடு உயிரை குடிக்கும் புன்னகை ஒலியும் வேலனின் காதிற்கு சொல்ல முடியாத உணர்வினை ஏற்படுத்த, பின்னோடு இரு மென்மை கரங்கள் அவனை அணைத்திட்ட வேளையில் அவள் கரத்தினை பற்றிட முயன்ற நொடி அவனின் கரங்களை முதுகின் பின்னே சேர்த்து மெல்லிய துணியால் கட்டினாள்.



"ஏய்! என்னடி பண்ற? ஏற்கனவே ரூம் இருட்டா இருக்கு. இதுல கைய வேற கட்டிருக்க? நீ பண்ற வேலைல எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும் போலடி" என்று மூச்சு விடாமல் பேசியவனிடம்.



"ஷ்..ஷு ..." என்றாள்.



தொடர்ந்து அவனின் கண்களையும் கட்டியவள். அவன் கழுத்தினில் தன் இதழ்களை மெல்ல உரசி எடுத்து பின், "மாமா! எதுவும் பேசாம என் கை பிடிச்சிட்டு நல்ல பிள்ளையா நடந்து வருவியாம்" என்று அவனின் கட்டிய கையில் தன் கை கோர்த்து அழைத்து சென்றாள்.



'ஹ்ம்ம் இந்த மோகினி என்னை எங்க கூட்டிட்டு போறான்னு தெரியலையே?' என்று தனக்குள் யோசித்தபடி அவளோடு நடந்து சென்றான்.



படிகளில் இறங்கி சென்று சிறிது தூரம் சென்றவுடன் நின்று அவனையும் அழைத்து கொண்டு ஒரு அறையினுள் நுழைந்து அவன் காதருகில், "விழியா! இப்போ உன் கண் கட்டை அவிழ்க்க போறேன். இந்த ரூம் முழுக்க உனக்காக நான் இன்னைக்கு முழுவதும் பார்த்து பார்த்து ரெடி பண்ணேன். இது எல்லாத்தையும் பொறுமையா பார்த்து முடிச்சிட்டு வெளிய வா." என்று அவன் இதழினை ஒத்தி எடுத்து பின் கண் கட்டையும் கை கட்டையும் அவிழ்த்து விட்டு சிட்டு போல் பறந்தாள்.



அந்த அறையினை ஒரு முறை சுற்றி பார்த்தவன் அரண்டு போனான்.



அங்கே அவனின் பிறந்த பொழுது எடுத்த ஆடை இல்லாத புகைப்படம் முதல் இன்று மீட்டிங்கில் அவனின் ஸ்டைலான போஸ் வரை போட்டோ வாக ஒட்டபட்டிருந்தது. அவன் தந்தையுடன் அவன் முழு குடும்பமும் ஒன்றாக எடுத்த புகைப்படம் எல்லாமே இருந்தது. அதனை ஒவ்வொன்றாக சுற்றி பார்க்க அவனுக்கு கால் மணி நேரம் தேவைப்பட்டது.



விழிகளில் நீர் உருண்டு ஓடுவது கூட தெரியாமல் பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தான்.



தன் இதழினில் ஆச்சயரத்தில் கை வைத்து கொண்டவன். "வாவ்! இவ்ளோ ஷார்ட் பிரியட்ல எப்படி இவளால இதை எல்லாம் செய்ய முடிஞ்சுது. ஒவ்வொரு முறையும் என் உயிரை எடுக்கும் சந்தோசத்தை தரதே இவளுக்கு வேலையா போச்சு." என்று கூறி கொண்டவன்.



'இனி ஒரு நொடி கூட என்னால அவள பார்க்காம இருக்க முடியாது. ஆனா, எனக்கு போக்கு காட்டிட்டு எங்கயாவது ஓட்றதே அவளுக்கு வேலை.' என்று தனக்குள் புலம்பியவன். தனக்குள் பொங்கும் காதலினை அவளோடு பகிர்ந்து கொள்ள தேடி சென்றான்.



இவனுக்கு போக்கு காட்டிவிட்டு சமையல் அறையில் மறைந்திருப்பதை கண்டு கொண்டவன் அவள் அறியாமல் அவளுக்கு பின்னே சென்று இருகரங்களில் அவளை தூக்க, ஒரு நொடி பயந்தவள். "ஐயோ மாமா! கண்டு பிடிச்சிட்டிங்களா?" என்று குழந்தை போல சிணுங்கினாள்.



"ஏன் இன்னும் எனக்கு இந்த வீட்டை சுத்தி காட்றதுக்கு எதாவது ஏற்பாடு பண்ணிருக்கியா?" என்றான் அவளின் மூக்கோடு தன் மூக்கை உரசி.



"இல்லை! என்னை முதல்ல இறக்கி விடுங்க" என்றாள் தன் இரு கரங்களின் நகங்களை பார்த்தபடி.



"முடியாது! இறக்கி விட சொல்லிட்டு இறங்கின உடனே எங்கயாவது ஓடிட்டன்னா?" என்று சிரித்தான்.



அவளை தன் கரங்களில் அள்ளியபடி தங்களின் அறை நோக்கி நடந்தபடி, "என்னை கொஞ்ச நேரத்துல என்ன பாடுபடுத்தின? இரு உனக்கு எல்லாத்துக்கும் சேர்த்து பனிஷ்மென்ட் இருக்கு" என்று கண்சிமிட்டினான்.



தங்களின் அறைக்குள் நுழைந்து அவளை மெத்தையினில் கிடத்தியவன் அருகினில் அமர்ந்து அவளை பார்க்க நாணத்தில் இருக்கரங்களையும் கொண்டு தன் முகத்தினை மூட, சிரித்தபடி எடுத்து விட்டவன்.



"சரி! என் செல்ல பொண்டாட்டி. ஒரு வேளை நான் இங்க வராம அங்க சென்னைக்கு கிளம்பிருந்தா என்ன பண்ணிருப்ப?" என்றான் வேலன் குறும்பாய்.



"இல்ல. நீங்க கிளம்ப மாட்டிங்கன்னு எனக்கு தெரியும். அதுக்கு தான் நீங்க கிளம்பும் போது எந்த காரணத்தை கொண்டும் நைட் டிராவல் பண்ணக்கூடாதுன்னு சொன்னேன்." என்று சிரித்தாள்.



"ஹ்ம்ம்... அப்போ ஏற்கனவே ப்ளான் பண்ணிட்டு தான் நேத்து என்னை அனுப்புனியா?" என்றான் வியப்பில்.



"இல்ல. எல்லா பிளானும் போட்டு தான் ஜானை உங்களுக்கு போன் பண்ண சொன்னேன். அப்புறம் உங்களை தனியா அனுப்பலை. நான் உங்க கூட நம்ம ப்ளைட்ல தான் வந்தேன் உங்களுக்கு தெரியாம" என்று குறும்புத்தனம் மேலோங்க சிரித்தாள்.



"அடிப்பாவி. என்கூட வந்தியா? யாரும் எதுவும் சொலவே இல்லை." என்றான்.



"சொல்ல கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்" என்றாள்.



"யார் போட்டது ?' என்றான் வேலன் நெற்றியை சுருக்கி.



"நான் தான்." என்று சிரித்தாள் நிலா.



"உன்னை" என்று செல்லமாக அடிக்க கை ஓங்கியவனின் இதழினை அணைத்திட ஒருநொடி எதுவும் புரியாமல் அதிர்ச்சியில் இருந்தவன் அவளின் இத்தனை வருட காதலோடு தன் அன்பினை புரியவைக்க அவளோடு கரைய தொடங்கினான் ஒன்றாய்.



"உன் சிறு குறும்புகளை ரசிப்பதில்



என் இதழ்கள் விரிகிறதடி குறுநகையில்...



இந்நிமிடம் முதல்



நீயும் நானும்



வேறேன்பதை என்பதை மறந்து



ஒருயிராய் மாற..



இனி ஒவ்வொரு நொடியும்



உன் அன்னையாய் மாறி



உன்னை ரசிப்பதில் கரைகிறேனடி



எந்தன் வாழ்வினை ஒளிஏற்றிட



வந்த எந்தன் நிலவே...!!!"



விடிந்து படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவளை அள்ளிக்கொண்டு சென்று குளியலறையில் விட்டவன்.



"உனக்கு அஞ்சு நிமிஷம் தான் டைம். அதுவரைக்கும் தான் வெளிய இருப்பேஜி5ன். நீ அதுக்குள்ள வெளிய வரலேன்னா? நான் உள்ள வந்துருவேன். சரியா?" என்று அவளின் நெற்றியில் முத்தமொன்றை பதித்து சென்றவனை பார்த்து.



"ஐ ஹேட் யு... தூங்கிட்டு இருக்கவளை கொண்டு வந்து தண்ணீர் ல விட்டுட்டு போற" என்று கத்த.



"ஹ்ம்ம்... ஓகே டி பொண்டாட்டி. லவ் யு. லவ் யு... சீக்கிரம் வா. இப்பயே ஒரு நிமிஷம் போயடுச்சு" என்று சிரித்தான்.



"ஹ்ம்ம்..." என்று தரையில் தன் காலினை ஓங்கி குத்தினாள்.



வேகமாக குளித்து வெளியே வந்தவள் அவன் அறையில் இல்லாததை கண்டு 'எங்க போய்ட்டான் இவன். எங்கயாவது ஒளிஞ்சிருக்கானா?' என்று மெல்ல எட்டி பார்த்தவள் வேலன் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு வெளியே வந்து அவன் அவளுக்கக கட்டிலின் மேல் எடுத்து வைத்திருந்த புடவையை கட்டிகொண்டாள்.



அறையை விட்டு வெளியே வந்தவள் வேலனை தேட கிச்சனில் சத்தம் அங்கே சென்று சுவற்றில் சாய்ந்தபடி அவனின் செயல்களை ரசித்துகொண்டிருந்தாள்.



"ஹ்ம்ம்... நிலா குட்டி... நான் உன் புருசன் தானே என்னை நீ எப்ப வேணும்னாலும் பார்க்கலாம்... ஆனா சமைக்கும் போது இப்படி பார்த்துட்டு இருந்தா நான் எப்படி வேலை செய்றது?" என்றான் அவள் புறம் திரும்பாமல்.



"நான் என் விழியனை சைட் அடிக்கிறேன். ஏன்னு கேக்ற தைரியம் அவனுக்கே கிடையாது. உனக்கென்ன உன் வேலையை பாரு." என்றாள் அவனை நெருங்கி வந்து தோளோடு தோள் உரசி நின்றபடி.



"ஹ்ம்ம்.. அப்படியா சொல்ற? உன்னை போனா போகட்டும் விட்டது தப்பா போச்சு." என்று இடையினில் கரம் வைக்க அவன் நெஞ்சினில் முகம் புதைத்தாள்.



"எங்க இவ்ளோ நேரம் இங்க ஒரு வாயாடி ரொம்ப பேசிட்டு இருந்தா? இப்போ ஆளையே காணோம்" என்று அவளின் செங்கழுத்தில் முகம் புதைத்து வாசம் தேட, சமையல் வேலை பாதியோடு நின்று போனது.



இவங்களை இப்போ தனியா விட்ரலாம்..



நம்ம அர்ஜுன் என்ன பண்றார்னு பாப்போம்.



"அடேய்! ரெண்டு பேரும் எங்கடா போனிங்க? எத்தனை தடவை மெச்செஜ் அனுப்புறேன். ஒரு பதிலும் காணோம். சரின்னு போன் பண்ணா? ச்விட்டு ஆப்புனு வருது. பாவிங்களா? என்னை இங்க தனியா புலம்பவிட்டு நீங்க எங்கடா போனிங்க?" என்று வாய் விட்டு புலம்பி கொண்டிருக்க.



"யோவ் மாமா! அறிவு இருக்காய்யா உனக்கு? அக்காவும் மாமாவும் கொஞ்ச நேரம் தனியா விடமாட்டியா நீ? அவுங்க இப்போ தான் கல்யாணம் ஆனவங்க கொஞ்சம் அப்படி இப்படி தான் இருப்பாங்க. உனக்கு என்ன சொல்லணும் அதான் இங்க ஒருத்தன் குத்து கல்லாட்டம் இருக்கேன்ல என்கிட்ட சொல்லு. நான் கேக்குறேன்." என்றான் வர்மதேவன்.



"ஏன்டா பேசமாட்ட? ஏன்டா என் சொத்தோட மதிப்பு என்னனு தெரியுமாடா உனக்கு? அந்த ரெண்டு பக்கிங்க பேச்சை கேட்டு இங்க வந்து இப்படி உன்கிட்ட மாட்டிகிட்டேன்." என்று புலம்பினான் அர்ஜுன்.



"யோவ் வாய மூடுய்யா.. மாமான்னு கூட பார்க்க மாட்டேன். முகரைய பேத்துடுவேன். சொதுக்காகவா அக்கா உங்களை இங்க அனுப்பிருக்கா. இல்ல... உங்க மூணு பேருக்கும் இந்த ஜமீன் வாரிசுன்னு பேர் வரனும் அதுக்கு தான? என்னவோ அவுங்களுக்கு மட்டும் தான் இதனால பலன் உண்டு நீ சும்மா ஹெல்ப் பண்ற மாதிரி பேசுற?" என்றான் வர்மதேவன்.
 
44:

"டேய்! நான் உன் மாமன் டா கொஞ்சமாச்சும் மரியாதை கொடேன்டா?" என்றான் அர்ஜுன் பாவமாக.



"க்கும்.. மாமா பெரிய மாமா. மரியாதைன்றது தானா கிடைக்கனும் இது மாதிரி கேட்டு வாங்ககூடாது" என்றான் நக்கலாய் சிரித்தபடி.



"டேய் வர்மா! வர வர நீ ரொம்ப ஓவரா பண்றடா?" என்று முறைதான் அர்ஜுன்.



"ஜஸ்ட் சில் மாமா. நீ என் செல்ல மாமா. உன்கிட்ட விளையாடாம யார்கிட்ட போய் விளையாட முடியும்?" என்று கண்ணடித்து சிரித்தான்.



"போடா எருமை. நீ விளையாட நான் தான் கிடைச்சேனா?" என்றான் சிறு குழந்தை போல் முகத்தை தூக்கிவைத்து கொண்டு.



"மாமா! என் செல்ல மாமா!" என்று ராகம் பாடியபடி அவன் பின்னே ஓடினான் வர்மதேவன்.



"மாமா நானும் யோசிச்சி பார்த்தேன். ஒன்னு எங்கப்பனை வெளிய வரவழைச்சு போலீஸ்ல மாட்டிவிடனும். இல்லன்னா, எங்கப்பனுக்கு தெரியாம நமக்கு வேண்டியதை எடுத்துக்கணும் ரெண்டுமே ரொம்ப கஷ்டம். அக்கா ஏதாவது சொன்னாங்களா?" என்று சீரியசாய் கேட்க.



தன் இடையில் இரு கரங்களையும் வைத்து முறைத்தபடி நின்றிருந்தான் அர்ஜுன்.



"ஏன்டா இவ்ளோ நேரம் அதுங்க ரெண்டும் போனையே எடுக்கலைன்னு புலம்பிட்டு இருக்கேன். அப்புறம் அக்கா ஏதாவது சொன்னாங்களான்னு கேக்குறியே? உன்னை என்ன பண்றது?" என்றான்.



"சரி சரி. பார்ப்போம் அவுங்களே போன் பண்ணுவாங்க" என்றான் வர்மதேவன்.



இங்கே இருந்து கிளம்பிய இந்த காதல் பறவைகள் ஒருவழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டாங்க.



ஆனா, வீட்ல அவங்க அம்மா இவுங்களை இடுப்புல கை வைச்சி முறைச்சிட்டு வரவேற்கிறாங்க.



"என்னடா நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க ரெண்டு பெரும்? உங்களை கேள்வி கேக்க ஆளே இல்லைன்ற நினைப்பா?" என்றார்.



"இல்லம்மா! அது வந்து ..." என்று இழுத்தாலும்.'இப்போ எதுக்காக அம்மா இப்படி முறைக்கிறாங்கன்னு தெரியலையே' உள்ளுக்குள் புலம்பினான்.



எதுவும் பேசாமல் இவனை பார்த்து கண்களால் சிரிக்கும் நிலாவை முறைத்தான்.



"இப்போ எதுக்குடி சிரிக்கிற? உங்க அத்தை எதுக்கு திட்றாங்கன்னே தெரியலைன்னு நான் புலம்பிட்டு இருக்கேன். நீ என்னன்னா சிரிக்கிற? உள்ள வா உனக்கு இருக்கு" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினான்.



"பத்து பதினைஞ்சு கம்பனிய நடத்துற உங்களை பார்த்து எல்லாரும் மிரள்றாங்க. ஆனா, நீங்க எங்க அத்தைய பார்த்து இப்படி நடுங்கிறது எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. அடக்க முடியலை." என்றாள் குறும்பாய் கன்னடித்தபடி.



"வரவர உனக்கு ரொம்ப குசும்பு ஜாஸ்த்தியாகிடுச்சிடி. எல்லாத்துக்கும் சேர்த்து உனக்கு கொடுக்குறேன்" என்று பார்க்கலை கடிக்க.'



"அவளை எதுக்குடா முறைக்கிற? உடம்பு சரி இல்லாத பொண்னை பார்த்துப்பன்னு விட்டுட்டு போனா? போயிட்டு ரெண்டு நாள்ல வரதுக்குள்ள இன்னும் முழுசா குணமாகாத இவளை ஏன்டா உன்கூட வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போன?" என்று கோபமாய் கத்த.



'என்னது நான் கூட்டிட்டு போனேனா? இவ வந்ததே எனக்கு தெரியாதே? ஒன்னும் தெரியாத மாதிரி இருந்துகிட்டு இந்த சில்வண்டு பண்ற வேலைல நான் தான் மாட்டிக்கிறேன்.' என்று புலம்பியபடி அவளை பார்த்து.



"ஏன்டி உனக்கு உடம்பு முடியலையா? நீ போட்ற ட்ராமனால என்னை தான் வறுத்தெடுக்கிறாங்க? உன்னை வச்சிக்கிட்டு என்னால எதுவுமே பண்ண முடியாதுடி. நீ என்னை காப்பாத்த வந்தியோ இல்லையோ? என்னை நல்லா திட்டு வாங்க வைக்க வந்துருக்கடி" என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி முனுமுனுத்தான்.



"நான் ஒண்ணுமே பண்ணலையே? என்னை எதுக்கு மாமா திட்டிறிங்க?" என்றாள் அப்பாவியாய் முகத்தை வைத்துகொண்டு .



"என்னது?? தப்பு பண்றது அவன்? இப்போ உன்னை திட்றானா?" என்றார் கஸ்தூரி அவனிடம் திரும்பி முறைத்து.



"போச்சு? இன்னைக்கு என்னை ஒரு வழி பண்ணப்போறாங்க" என்றான் வேலன்.



அவனை மறுபடியும் திட்டும் முன் நிலா முந்தி கொண்டாள்.



"அத்தை அவர் என்னை கம்பெல் பண்ணலை கூப்பிடவும் இல்லை. எனக்கு தான் தனியா இருக்க பயமா இருந்தது. அதான் என்னையும் கூட கூட்டிட்டு போக சொல்லி வற்புறுத்தினேன். அவரை ஒன்னும் சொல்லாதிங்க" என்றாள்.



"ஆமா! உன் புருஷனை ஒன்னும் சொல்ல கூடாதே. உடனே வந்துருவியே வக்காலத்து வாங்கறதுக்கு." என்று முறைத்தபடி, "சரி உள்ள வாங்க. டேய்! அவளை பார்த்து கூட்டிட்டு போ. இல்லன்னா தூக்கிட்டு போய்டு" என்றார் கஸ்தூரி.



'ஏன் இவ நல்லா தானே நடக்கிறா? அப்புறம் எதுக்கு என்னை தூக்கிட்டு போக சொல்றாங்க?' என்று யோசித்துக்கொண்டு முழித்தான்.



அவன் காதிடம் நிலா "என்ன மாமா? நீ எல்லாம் எப்படியா இவ்ளோ பெரிய கம்பெனி வச்சிருக்க? அத்தைக்கு எனக்கு கால் சரி ஆகிடுச்சுன்னு தெரியாது. அதான் பார்த்து கூட்டிட்டு போக சொல்றாங்க. அப்படியே மைந்டீன் பண்ணு." என்றாள் நிலா.



"வாயாடி உனக்கு ஏற்கனவே உனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி தான் இப்போ நேத்துலர்ந்து இன்னும் வாய் ரொம்ப அதிகமாகிடுச்சு. ரொம்ப ஓவரா பேசுனன்னா அப்புறம் பேசுற வாயை எப்படி அடைக்கினம்ன்னு எனக்கு தெரியும்." என்றான் வேலன் கண்ணடித்தபடி.



உடனே அமைதியான நிலாவை அழைத்து கொண்டு சென்றான்.



அறையின் உள்ளே சென்றவுடன் கதவை தாழிட்டவன் நிலாவை நெருங்க அவனுக்கு வழக்கம் போல் ஆட்டம் காட்டி கொண்டிருந்தாள் நிலா.



நிலாவை எட்டி பிடித்தவன், "இப்போ மாட்டிகிட்டியா? என்ன ஓட்டம் ஓட்றடி நீ? வர வர உன் வாலுத்தனம் அதிகமாகிட்டே இருக்கு. நீயே இப்படி இருந்தா நம்ம குழந்தை அவ்ளோ தான்?" என்று அவளை சீண்டினான்.



"போங்க மாமா" என்று அவனின் நெஞ்சினில் சாய, அவளை அணைத்து கொண்டான்.



வேலனின் போன் அடித்தது.



"கண்டிப்பா அந்த அர்ஜுன் குரங்கா தான் இருக்கும்" எட்ன்று ஆத்திரம் பொங்க, நிலாவிடம் இருந்து விலகி போனை எடுத்தால் ஷாத்சாத் அர்ஜுனே தான்.



"ஹலோ! சொல்லுடா ரொம்ப நல்லவனே" என்றான் வேலன் எரிச்சலாய்.



"என்னடா ரொமான்ஸ்சா? நீங்க பண்றது உங்களுக்கே நல்லா இருக்காடா? ரெண்டு நாளா எங்கடா போனிங்க? இங்க என் உயிருக்கு உத்திரவாதமா இருக்கு? என்னதான்டா ப்ளான் பண்றிங்க? சொல்லி தொலைங்க" என்றான் அர்ஜுன் கடுப்பாய்.



"அப்டியே லைன்ல இருடா" என்று தன் மொபைலில் திருமாறனை கூப்பிட்டான்.



"ஹலோ! செப்பு சார்" என்றான் திருமாறன்.



"திருமாறன் இப்போ எங்க இருக்க? உன்னை இங்க வர சொன்னேனே எப்போ வர?" என்றான் அதிகார குரலில்.



"நேனு ஏற்கனவே சென்னை வொச்சிந்தி சார். இப்புடே நுவ்வு இன்டிக்கு ஒஸ்தானு. இன்னும் பத்து நிமிஷத்துல நேனு இருப்பேன் சார்" என்று போனை வைத்தான்.



"டேய் அர்ஜுன் நான் ஏற்கனவே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்டா. நீ ஒன்னும் டென்ஷன் ஆகாத. இப்போ பேசுனவன் பேரு திருமாறன்" என்று அவனின் எல்லா விபரங்களும் கூறினான் வேலன்.



கூறியபடி திரு பத்து நிமிடத்தில் வேலனின் வீட்டில் இருந்தான்.



"சார் டெல் மீ தி வொர்க். அப்பணியை சீக்கிரமே கம்ப்லிட் ச்சேசானு" என்றான் திருமாறன்.



எல்லாவற்றையும் கூறியவன் அர்ஜுனுக்கு வீடியோ காலில் போன் செய்தான்.



"ஹலோ அர்ஜுன்" என்றான் வேலன்.



"சொல்றா வேலா" என்றான் அர்ஜுன்.



"இவன் தான் திருமாறன் " என்று திருமாறனிடம் போனை காட்ட.



இருவரையும் அறிமுக படுத்தி வைத்தவன், "திரு எனக்கு நீ என்ன செயவியோ தெரியாது. உனக்கு அஞ்சு நாள் தான் டைம். அதுக்குள்ள நான் கொடுத்த வேலையை முடிச்சிடனும். காட் இட்" என்றான் வேலன்.



"எஸ் சார். நேனு இதோட வேலையை முடிச்சிட்டு தான் உங்களை கான்டாக்ட் பண்ணுவேன்" என்று அன்றே அர்ஜுனிடம் செல்ல பயணமானான்.



"சார்! நம்ம புது மில்லுக்கு ஆள் வேணும்னு கேட்டிங்கல்ல. இவரு திருமாறன். என் பிரெண்ட் வேலை தேடிகிட்டு இருந்தாரு. அதான் உங்ககிட்ட கூட்டிட்டு வந்தேன்" என்றான் அர்ஜுன்.



"ஹ்ம்ம் சரி" என்று அவனை பற்றிய தகவல்களை கொஞ்சம் விசாரித்து விட்டு, "சரி இவனையும் உன்கூட தங்க வச்சிக்க. நாளைல இருந்து மில்லுல வேலை செய்யட்டும்" என்றான் வர்மதேவன் அர்ஜுனை பார்த்து.



"சரி சார்" என்று அவனை தன்னுடன் அழைத்து சென்றான் அர்ஜுன்.



அறைக்குள் சென்றவுடன் இருவரும் தீவிரமாக திட்டம் திட்டம் ஆரம்பித்தனர்.



அதை பற்றி வர்மதேவனுக்கு மொபைலில் மெசஜூம் அனுப்பி வைத்தனர். அவனும் சரி என்று கூறி விட இரண்டு நாள் கழித்து திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தனர்.
 
45:

யாருக்கும் சொல்லாமல் நேராக வீட்டிற்கு வந்து நின்ற வேலனை பார்த்து தீக்க்ஷிலா.



"என்ன அண்ணா திடிர்ன்னு வந்துருக்கிங்க? நிலா என்கிட்டே எதுவும் சொல்லவே இல்லையே? ஏதாவது பிரச்சனையா?" என்றாள் கவலையாக.



"அதெல்லாம் ஒன்னுமில்லைடா. உன்னை பார்க்கணும்னு உன் பிரெண்ட் ரொம்ப அடம் பிடிச்சா, அதான் வந்துட்டோம்" என்று சிரித்தான் வேலன்.



"என்ன?? நிலா வந்துருக்காளா? எங்க?" என்று ஆர்வமாய் தேட. "நீ போய் கூப்பிட்டா தான் வருவாளாம்" என்றான் வாசலை பார்த்தபடி.



அவன் கூறி முடிக்கும் முன் காரின் கதவை திறந்திருந்தாள் தீக்ஷிலா



கதவை திறந்து உள்ளே யாருமில்லாததால் ஏமாற்றமாய் திரும்ப, அவளின் முன் கைகளை கட்டி கொண்டு சிரித்தபடி நின்றிருந்தாள் நிலா.



"ஹாய் நிலா! எப்படிடி இருக்க?" என்று துள்ளி குதித்து கட்டிக்கொண்டாள்.



"நான் நல்லா இருகேன்டி. நீ எப்படி இருக்க?" என்று கேட்டவள் மீண்டும், "ஆமாமா உனக்கென்ன உன்னை பார்த்துக்கத்தான் அர்ஜுன் இருக்காறே?" என்று கண்ணடித்தாள்.



"போடி" என்று சிணுங்குபவளை மீண்டும் சீண்ட, "என்னவோ நீ வேணாம்னு சொன்னன்னு சொன்னாரு அர்ஜுன்?" என்றாள் குறும்பாய்.



இவர்களின் பின்னே இருந்து நிலாவின் குறும்பு தனத்தை பார்த்துக்கொண்டிருந்த வேலன் 'வாலுத்தனம் இவளுக்கு நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுது. இவளை என்ன தான் பண்றது?' என்று நினைத்தவன். 'நீ அந்த புள்ளைய சீண்டறியா? இரு உன்னை... இதோ நான் வரேன்' என்று மனதில் ஒரு கணக்கோடு அவளை நெருங்கினான்.



"என்னம்மா?? உனக்கு எங்க அர்ஜுனை பிடிச்சிருக்கு தான? இல்லை எங்களுக்காக சொல்றியா?" என்றான் தீக்க்ஷிலாவை பார்த்து.



நிலா வேலனை திரும்பி பார்த்து முறைக்க, "இல்லண்ணா. எனக்கும் அவரை பிடிச்சிருக்கு" என்றாள் தீக்க்ஷிலா கிழே பார்த்தபடி.



இந்த நொடியில் முறைக்கும் நிலாவை ஓர விழியால் நோக்கி தன் இதழ்களை குவித்து பறக்கும் முத்தத்தை தர பட்டென்று உடல் சிலிர்த்து முகம் கவிழ்ந்தாள் நிலா.



ஏற்கனவே வெற்றிடையில் அவனின் விரல்கள் யாருக்கும் தெரியாவண்ணம் நர்தனம் ஆட, அதில் கிறங்கினாலும் அவனின் சீண்டலில் முறைத்த நிலாவை மேலும் வம்பிழுக்க ஒரு பறக்கும் முத்தத்தை பரிசாக தந்திருந்தான் வேலன்.



இதை எதுவும் அறியாத தீக்க்ஷிலா சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "சரி சரி உள்ள வாங்க! யாரும் பார்க்குறதுக்கும் முன்னாடி உள்ள போலாம்" என்று அவர்களை வீட்டினுள் அழைத்து சென்றாள்.



இன்னமும் அவனின் கரம் அவளின் இடையில் பற்றியிருக்க. "க்கு...க்கும்...." என்று இருமுவதை போல் செரும, அவளை பார்க்க திரும்பியவனிடம் அவனின் கரத்தை எடுக்குமாறு சைகை செய்தாள்.



'வாடி வா. அம்மாகிட்ட என்னை மாட்டிவிட்டல்ல? இப்போ என்ன பண்றன்னு பார்கிறேன்' என்று அவளின் இடையில் தன் இறுக்கத்தை அதிகரிக்க நிலாவின் நிலைமை தான் மோசமானது.



"என்ன நிலா? நல்லா தான இருந்த? திடிர்ன்னு இரும்பிட்டு இருக்க? கோல்டா?" என்றான் வேலன் நிலாவக்கு மட்டும் புரியும்படி கண்களில் குறும்பு மின்ன.



"அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா? நீங்க இருக்கும்போது எனக்கு சளி என்ன சனிகூட பிடிக்குமா? ரொம்ப தூரம் பயணம் செஞ்சது தான் டஸ்ட் அலர்ஜி. அதுவுமில்லாம இது கிராமம் இல்லையா? அதான் கொசு தொல்ல தாங்க முடியலை" சொல்லிக்கொண்டே நறுக்கென்று அவனின் கரத்தினில் கிள்ளினாள்.



"ஆ... அவூ...ச்ச்..." என்று தன் கரத்தினை எடுத்து தேய்த்தவன் நிலாவை சிரித்தபடி பார்க்க, அவளும் கண்சிமிட்டினாள்.



"என்ன அண்ணா?" என்றாள் பதறியபடி தீக்க்ஷிலா.



"அது ஒண்ணுமில்லைம்மா. நிலா சொன்ன அதே கொசுதான் என்னையும் நறுக்குன்னு கடிச்சிடுச்சு." என்றான் நிலாவை பார்த்தபடி.



'வர வர ரொம்ப தேறிட்டடி பொண்டாட்டி...' என்று சிரித்தான்.



"தீக்க்ஷிலா எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு, அப்புறம் பசிக்குது, மாமா வாங்க போலாம்" என்று வேலன் அடுத்து ஏதாவது செய்யும் முன் தப்பிக்க தீக்க்ஷிலாவின் கையை பிடித்து இழுத்து கொண்டு உள்ளே ஓடினாள் நிலா.



'ச்சே!! எஸ்கேப் ஆகிட்டாளே?? ஒவ்வொரு முறையும் இப்படி எஸ்கேப் ஆகமுடியாதில்ல எங்க சுத்தினாலும் திரும்பி என்கிட்டே தானே வரணும். அப்ப பார்த்துக்குறேன்டி கத்திரிக்காய் உன்னை' என்று சிரித்தபடி உள்ளே சென்றான்.



இரவு நேரத்தில் தங்களை யாரும் பார்க்க முடியாது என்பதை திட்டம் போட்டே இந்த நேரத்தில் வந்திருந்தார்கள்.



அர்ஜுன் மட்டும் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு அவர்களை சென்று பார்த்து விட்டு வந்தான்.



பொழுது விடிந்தவுடன் அவரவர்கள் தங்களின் கதாபாத்திரத்தை சரியாக செய்ய எண்ணி தூக்கத்தை தொலைத்திருந்தார்கள்.



பொழுதும் எப்பொழுதும் போல் விடிய, அன்றைய நாளும் ஓடி கொண்டிருந்தது.



வர்மதேவன் புதுமில்லின் வேலையாய் வெளியே சென்றிருக்க, அர்ஜுன் கணக்குகளை சரி பார்த்து கொண்டிருந்தான். இல்ல... இல்ல... சரி பார்க்கிற மாதிரி நடித்து கொண்டிருந்தான்.



'இந்த வர்மா போய் எவ்ளோ நேரம் ஆகுது? என்னை இங்க டென்ஷனா உக்கார வெச்சிட்டு அது அங்க சிரிச்சிட்டு இருக்கும். எல்லாம் நல்லபடியா முடியட்டும் அப்புறம் இருக்குடா உனக்கு' என்று அர்ஜுன் தனக்குள் வர்மாவின் புகழ் பாட, பக்கத்தில் இருந்த டெலிபோன் அடித்தது.



எடுத்து காதில் வைத்தவன் ஒரு நொடியில், "அய்யய்யோ! என்னது சின்னையாக்கா? என்ன சொல்றிங்க? என்னாச்சு சின்னையாக்கு?" என்ற அலறலில் எல்லா அடியாட்களும் ஓடிவந்தார்கள்.



"என்னாச்சு? ஏன் இப்படி ஊருக்கே கேக்குற மாதிரி கத்துற?" என்றனர் பதற்றமாய்.



"நம்ம சின்னையாக்கு லாரி மோதி பெரிய ஆக்சிடென்ட் ஆகிடுச்சாம். நம்ம பக்கத்து ஊருங்கள்ள ஒன்னான மங்கலத்துல ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்காங்களாம். வாங்க போலாம்" என்றான் அழுதபடி அர்ஜுன்.



"இரு.. உனக்கு இங்க புதுசு. எங்களுக்கு எல்லா இடமும் தெரியும். அதுவுமில்லாம நீயும் வந்துட்டா வீட்டை யாரு பார்த்துகிறது? நாங்க போய் பார்த்துட்டு வரோம்" என்று கிளம்பினர்.



''இது நம்ம ப்லான்லையே இல்லையே?' என்று யோசித்த அர்ஜுன், 'இதுவும் நல்லதுக்கு தான்' என்று நினைத்தபடி, "சரி போயிட்டு பார்த்துட்டு உடனே எனக்கு போன் பண்ணுங்க" என்றான்.



"சரி" என்று எல்லோரும் கிளம்பிவிட்டனர்.



ஒரு பத்து நிமிடம் கழித்து அரண்மனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஒருவரும் இல்லாததால் அங்கே மயான அமைதி நிலவ அங்கே புயலென வழக்கம் போல் காட்சி தந்தான் வேலன்.



அவனை பார்த்து புன்னகைத்து கட்டைவிரலை ஆட்டி, "நல்ல படியா முடிச்சிட்டு சீக்கிரம் வாடா" என்றான் அர்ஜுன்.



தாமதிக்காமல் நேராக நிறைய அறைகளை கடந்து ஒரு குறிப்பிட்ட அறையின் முன் நின்றவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தன் கையில் வைத்திருந்த சாவியை கொண்டு கதவை திறந்து உள்ளே சென்று மீண்டும் சாத்தினான்.



அதே நேரத்தில், திருமாறன் அந்த அறைக்கு செல்லும் கேமராக்களின் இணைப்பை துண்டித்துவிட்டு மின்சார இணைப்பை சரி செய்து கரென்ட் வர செய்தான்.



அர்ஜுனை நோக்கி பார்வையால் தன்னை பின்தொடருமாறு கூறிவிட்டு சென்றான்.
 
46:

திடீரென்று கரென்ட் வரவும் கதவிடம் தன் பார்வையை செலுத்திய வர்மதேவனுடைய தந்தை, அங்கே வேலனை பார்த்து மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார்.



"டேய்!! நீயா?? நீ எப்படி இங்கே? எங்க அந்த தடி மாடுங்கள்ளாம்?" என்று கேட்டபடி எழுந்துகொள்ள அதற்குள் கண்ணிமைக்கும் நொடியில் பாய்ந்து அவரை கட்டி போட்டான் வேலன்.



"டேய்!! வேண்டான்டா என் பசங்க வந்தால் இன்னைக்கு அவ்ளோ தான் நீ..." என்று கத்த, அதை சட்டை செய்யாமல் வேலன் அவன் வேலையை கவனித்துக்கொண்டிருந்தான்.



"மாமா!! நீ முதல்ல மனுசனா இல்ல பேய் பிசாசா?? எனக்கு அதே சந்தேகமா இருக்கு??" என்று நக்கலாய் சிரித்தபடி அவரை நெருங்கி அமர்ந்தான்.



"உனக்கு ரொம்ப வாய் தான்டா!!" என்று முறைத்தார்.



"உனக்கு என்ன கண்ணு நொள்ளையா? நான் இங்க குத்து கல்லாட்டாம் உயிரோடு தான இருக்கேன்?" என்றார் வெறுப்பாய்.



"ஆமா..! எங்க மாமா ஏதோ ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். அதுக்குள்ள நீ தான் சாவடிச்சிட்டதா சொல்லி பெருமை பீத்திக்கிறியாமே?" என்றான் மேலும் அவரை சீண்டினான்.



"டேய்! உங்க மாமா என்னவோ லேசான நெஞ்சுவலின்னு தான் ஹாஸ்பிட்டலுக்கு போனான். ஆனா, அவனுக்கு நெஞ்சுவலி வர ஊசியை போட்டது நான் தான். அப்புறம் உங்க மாமன் போய்ட்டான்." என்று கொடூரமாய் சிரித்தார்.



"ரொம்ப சிரிக்காத! உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சிகிட்ட அந்த இன்ஸ்பெக்டரை வேணா நீ கொலை பண்ணிருக்கலாம்... ஆனா, அவன் விட்டுட்டு போன எவிடென்ஸ் என்கிட்டே இருக்கு" என்றான் வேலன்.



"ஹா....ஹா....ஹா..." என்று சிரித்தார்.



"யார் அந்த இன்ஸ்பெக்டரா? அவனை கொன்ன கையோட அவனோட சேர்த்து அந்த ஆதாரங்களையும் சேர்த்து எரிச்சிட்டேன்டா முட்டாள். நீ சின்ன பையன்னு உனக்கு எதுவும் தெரியாது வேற எதையோ சொல்ற" என்று நக்கலாய் சிரிக்க.



"ஆமா! நான் தெரியாம தான் சொல்லிட்டேன். ஆனா! நீங்க தான் இப்போ எல்லாம் கரெக்டா சொல்லிட்டிங்க" என்றான் வேலன்.



ஒன்றும் புரியாமல் முழித்தவர், "என்னடா சொல்ற?" என்றார்.



"இனி நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை எல்லாம் அவங்க சொல்லுவாங்க." என்று கதவை திறந்து அங்கே பார்க்க, பத்து பதினைந்து காவலர்கள் இருந்தனர்.



"இவங்கல்லாம் எதுக்கு வந்துருக்காங்க?" என்றார் வார்த்தைகள் தந்தியடிக்க.



"ஹ...ம்ம்ம் நீங்க அவங்க வீட்டு கெஸ்ட்டா போகணும்னு கூட்டிட்டு போக வந்துருக்காங்க" என்றான் வேலன்.



உள்ளே வந்த காவலர்கள் அவரின் கைகளில் விலங்கு பூட்டினர்.



"எந்த ஆதாரமும் இல்லாமல் என்னை அர்ரெஸ்ட் செய்ய முடியாது." என்றார் திமிராய்.



"ஆமா! ஆனா என்கிட்டே இருக்கே" என்று தன் சட்டையில் இருந்த மைக்ரோஸ்பை கேமராவை எடுத்து போலிசிடம் கொடுத்து, "இதுல எல்லாம் ரெகார்ட் ஆகிருக்கு" என்றான்.



"தேங்க்ஸ் சார். நாங்க பார்த்துக்கிறோம் இனிமே" என்று அவரை கூட்டிக்கொண்டு வெளிய செல்ல.



"உன்ன... கொல்லாம விட்டது தான் பெரிய தப்பா போச்சு" என்றார் வெறியோடு.



"என்னை கொல்ல ஆள் அனுப்பினது தான் நீ பண்ண பெரிய முட்டாள் தனம்" என்று மெதுவாய் சிரித்தான் வேலன்.



அவனை முறைத்துகொண்டே காவலர்களோடு வெளியே செல்ல, வதம் செய்யும் துர்கையாய் எதிரில் நின்றிருந்தாள் நிலா.



மெதுவாய் அவரின் அருகில் சென்றவள், தன் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அவர் கன்னத்தில் அறைய அதிர்ச்சியாய் பார்த்தார்.



"எனக்கு அப்பா முறை வேணும் நீ, ஆனா எங்கப்பாவை கொன்னுட்ட இல்ல??" என்றாள் முகத்தில் வெறுப்பை தேக்கி.



அவளை அருகில் வந்து ஆறுதலாய் அணைத்து அழைத்து சென்றான் வேலன்.

**********



இங்கே திருமாறன் தனக்கு இட்ட வேலையை சரியாய் செய்து முடித்து அந்த பத்திரங்களை வேலனிடம் கொடுத்தான். எல்லோரும் வெளியே செல்ல, எல்லா அடியாட்கள் உள்ளே வந்தனர்.



அவர்களையும் போலிஸ் சுற்றி வளைத்து கைது செய்தனர்.



"எங்க போனிங்க? தண்ட பசங்களா?" என்று வோவத்தில் கர்ஜிக்க.



"அய்யா சின்னையாக்கு ஆக்சிடென்ட்ன்னு சொன்னாங்க. போய் பார்த்தா அவர் நல்லா தான் இருக்காரு. எங்களை ஏமாத்திட்டாங்க " என்றான் அவர்களுள் ஒருவன்.



"ஏன்டா முட்டா பசங்களா? அப்படி இருந்தா நான் சொல்லி இருக்க மாட்டேனா?" என்றார் கோபமாய்.



"போதும் போதும் நீங்க பேசினது நடையை கட்டுங்க" என்று காவலர் ஒருவர் எல்லோரையும் வண்டியில் ஏற்றி காவல் நிலையம் நோக்கி வேண்டியை செலுத்தினர்.



அர்ஜுனையும் திருமாறன் வர்மதேவனையும் மனதார பாராட்டினான் வேலன்.



"விடுங்க மாமா. இதெல்லாம் உங்களுக்கு கிடைக்க வேண்டியது. அதுக்கு என்னால முடிஞ்ச சிறிய உதவி." என்றான் வர்மதேவன்.



"ஆமாமா! ஆனா இதெல்லாம் செய்றதுக்குள்ள எனக்கு தான் மூச்சி நின்னு போச்சி. போதும்... இதோட என்னை விட்றுங்கடா... நான் ஊருக்கே போறேன்" என்றான் அர்ஜுன்.



"எதுக்குடா தம்பி இப்படி கோவிச்சிக்கிற?" என்றான் வேலன்.



"சரி அதைவிடு... அப்போ உன் கல்யாணம்???" என்றான் வேலன்.



பட்டென்று ஆணியடித்தார் போல் நின்று திரும்பி பார்த்து சிரித்தான் அர்ஜுன்.



"மறந்துட்டேன்டா" என்று சிரித்தான் தலையை சொரிந்தபடி.



"அதுசரி. நல்லவேளை உனக்கு கல்யாணம் ஆகி பொண்டாட்டியை மறந்துட்டேன்னு சொல்லாம போனியே" என்று சிரித்தான் வர்மதேவன்.



"போதும் உன் வாயை மூட்றியா? ஒருத்தன் கூட எனக்கு சப்போர்ட்டா வரமாட்டிங்களாடா" என்று அழாத குறையாக கேட்டான் அர்ஜுன்.



"ஐயோ எதுக்கு அவரை எல்லோரும் கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க" என்று முறைத்தாள் நிலா.



"ஹுக்கும் வந்துட்டா சப்போர்ட்டுக்கு. போடி..." என்று சிரித்தான் வேலன்.
 

New Threads

Top Bottom