dharshini chimba
Saha Writer
- Messages
- 308
- Reaction score
- 228
- Points
- 43
47:
தன்னை முறைத்து கொண்டிருக்கும் நிலாவை ஒற்றை புருவம் உயர்த்தி 'என்ன?' என்று கேட்டான் வேலன்.
எதுவும் பேசாமல் அவனிடம் வந்த நிலா, "இப்படி நெடுநெடுன்னு தென்னைமரம் மாதிரி வளர்ந்துருந்தா நான் எப்படி பேசறது?" என்றாள்.
சிரித்து கொண்டே அவளுக்கு இணையாக குனிந்தவனின் காதுகளில், "உனக்கு என்னை ரொம்ப பிடிக்கும் தான மாமா?" என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
"இதுல என்னடி சந்தேகம் உனக்கு?" என்றான் வேலன்.
"அப்போ இன்னும் ரெண்டு நாளைக்கு நீ கெஸ்ட் ரூம்ல தூங்கு" என்றாள் கண்ணடித்து.
"என்னது?" என்றான் உடனே விழிகள் விரித்து.
"எதுக்கு?" என்றான் விடாமல்.
"ஹ்ம்ம் ... ஆமா எப்போ பாரு அர்ஜுனை மட்டும் கிண்டல் பண்றல்ல? அதுவுமில்லாம என்னையும் சேர்ந்து கிண்டல் பண்றல்ல? ஒருவேளை உனக்கு என்னை பிடிக்கலையோ என்னவோ? அதனால உனக்கு கொஞ்சம் தனிமை தரலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்" என்றவள் முகத்தில் எந்தவித எக்ஸ்பரஷனும் காட்டாமல்.
"இல்ல... இல்ல... இது ரொம்ப அநியாயம்." என்று திரும்பியவன்.
"டேய்! அர்ஜுன் கோவிச்சிக்கிட்டியா? நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா" என்றான் அவனை நோக்கி.
"ம்ப்ச்ச்... விட்றா... நீ சொன்னால்லாம் நான் பெருசா எடுத்துப்பேனா?" என்று சிரித்தான் அர்ஜுன்.
நிலாவை பார்த்து இதழ் சுழித்தவன், "இப்போ பார்த்தியா? சோ நோ ரூம் ச்சேஞ்சிங்... ஓகே..." என்று சிரித்தான்.
"பார்க்கலாம் பார்க்கலாம்..." என்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.
"பார்க்கலாம்டி பொண்டாட்டி..." என்று அவளின் நெற்றியில் விழுந்த முடிக்கற்றையை காதோரத்திற்கு பின்நெடுத்து விட்டவன். மென்மையாய் அவளின் முகத்தை தன் இடக்கையால் வருடினான்.
அதில் கிறங்கியவள் அவனை முறைக்க, வர்மதேவன் அவர்களை நோக்கி வருவதை கண்டவன் சற்று விலகி நின்றான்.
"என் மச்சான் வரான். அப்புறம் பேசிக்கிறேன் உன்கிட்ட" என்று வர்மதேவனை பார்த்து சிரித்தான்.
எல்லோரும் அவனிடம் பேசிவிட, நிலா மட்டும் பேசாமல் இருப்பதை வர்மதேவன் கவனித்து கொண்டுதானிருந்தான்.
அவளின் மௌனம் அவனை வதைத்தெடுக்க, அவளிடம் தானே பேச ஓடிவந்தான்.
"அக்கா" என்றான் வர்மதேவன்.
எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாள் நிலா.
"அக்கா ப்ளீஸ்! ஏதாவது பேசுக்கா... கோபம்னா ரெண்டு அடிக்கூட அடிச்சிடுக்கா... ஆனா பேசாம மட்டும் இருந்திடாதே... உங்க கூடலாம் ஒண்ணா இருக்கனும் எவ்ளோ நாள் எங்கிட்டு இருந்தேன். அக்கா என்கூட பேசுக்கா" என்று கண்கள் கலங்கிட கூறினான்.
அவனிடம் திரும்பியவள் ஓங்கி பளாரென்று கன்னத்தில் அறைந்தாள்.
எல்லோரும் அவளை அதிர்ச்சியாய் பார்க்க, வேலன் மட்டும் அவளின் நிலை புரிந்து அவளூக்கு அருகில் செல்ல, தன் வலது கையை உயர்த்தி அங்கேயே நிற்குமாறு சைகை செய்தாள்.
"யாருடா உனக்கு அக்கா? நான் உனக்கு அக்கா கிடையாது. உங்கப்பன் எங்கப்பாவை சாகடிக்கும் போது தெரியலையா நான் அக்கான்னு?" என்றாள் கோபமாய்.
"அக்கா" என்று வர்மதேவன் அதிர்ச்சியாய் கேட்க.
"எதுவும் பேசாத. நான் பேசி முடிக்கிற வரைக்கும் எதுவும் பேசக்கூடாது." என்றவள் மேலும் தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.
"சொல்லு?? உங்கப்பன் எங்கப்பாவை சாகடிக்கும் போது நீங்க எல்லாம் எங்க போனிங்க? உனக்கு நான் அக்கான்னு எண்ணம் இருந்திருந்தா இந்நேரம் உங்கப்பனை கண்டிச்சிருப்ப, இல்ல போலீஸ்ல புடிச்சி கொடுத்திருப்ப, இல்ல உங்கப்பனை கொலை பண்ணிருப்ப. எதுவும் பண்ணவே இல்லையே??" என்றாள் கோபமாக.
"அது மட்டுமா? அக்கான்னு கூப்பிட்றியே என் பூவையும் பொட்டையும் அழிக்க பார்த்தானே உங்கப்பன். அப்போ எங்க போன நீ? என் புருஷனை காப்பாத்த என் உயிரையும் கொடுப்பேன்... உயிர் பொழைச்சு மீண்டு வந்தேன் இல்லன்னா இப்போ நீ கூப்பிட்றதுக்கு நான் இருந்திருக்க மாட்டேன்" என்று தன்னையும் மறந்து கத்தினாள்.
ஒரு நொடியும் தாமதிக்காமல் அவளை அணைத்து கொண்ட வேலன் முதுகில் வருடி கொடுத்தான்.
"நிலா! ப்ளீஸ் காம் டவ்ன் டா" என்று மெதுவாய் இதமாக கூறினான்.
"மறக்க முடியலை வேலா... இந்நேரம் உனக்கோ எனக்கோ ஏதாவது ஆகிருந்தா நம்மளை புதைச்ச இடத்துல புல்லு முளைத்திருக்கும்" என்றாள் அவன் மார்பில் புதைந்து அழுதபடி.
"சரி! லெட் ஹிம் ஸ்பீக்... உன் மேல இவ்ளோ அன்பு வெச்சிருக்கான் அவனோட நிலைமை என்னவோ? நமக்காக எவ்ளோ ரிஸ்க் எடுத்துருக்கான். அவனை மன்னிக்கலாம் கொஞ்சம் மனசு வைடா" என்றான் மெதுவாய்.
சிறிது நேரம் அமைதியாய் இருந்தவள்.
"வேலன் சொன்னதுக்காக உன்னை மன்னிக்கிறேன்" என்று கூறியபடி அவனை கை நீட்டி அழைக்க சிறுபிள்ளை தாயை காண்பது போல் ஓடி வந்து கட்டிகொண்டாள்.
"அக்கா... மன்னிச்சிடுங்க... உங்க எல்லோருக்கும் ஒரு முக்கியமான நபரை அறிமுகப்படுத்த போறேன்" என்று எல்லோரையும் அழைத்து கொண்டு உள்ளே செல்ல, அனைவரும் அவனை பின் தொடர்ந்தனர்.
ஒரு அறையின் முன் நின்றவன் சற்று யோசித்து தன்னிடம் இருந்த சாவியை வைத்து கதவை திறந்தான்.
கதவை தட்ட திறக்கப்படாமல் இருக்கவே, மீண்டும் கதவை தட்டி, "அம்மா! நான் தான் கதவை கதவை திறங்க" என்றான் மெதுவாய்.
உடனே கதவு திறக்கப்படும் சத்தம் கேட்கப்பட அனைவரின் கவனமும் அங்கே திரும்பியது.
உள்ளே சென்ற அனைவரும் வர்மதேவனுடய அன்னையை காண ஆர்வமாய் இருந்தனர்.