Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed மழையோடு நம் காதல் - கதை

1

ஈருயிராய் இருந்த தன் மனைவி ப்ரசவ வார்டினுள் சென்று ஒரு மணி நேரம் ஆகியும் நல்ல செய்தி வரவில்லையே என்று தனக்கு தெரிந்த தெரியாத எல்லா கடவுளையும் வேண்டி கொண்டிருந்தான் இந்த கதையின் நாயகன்.

தன் இதயத்துடிப்பு தனக்கே கேட்பது போல் உணர்வு தோன்ற உள்ளுக்குள் தனக்கே பிரசவம் நடப்பது போல் ஒரு சொல்லமுடியாத பயம் வலி எல்லாம் சேர்ந்து உடல் நடுங்க சுவரில் கைகளை கட்டியபடி கண்களை மூடி சாய்ந்து நின்றிருந்தவனை கலைத்தது ஒரு அந்நிய குரலோடு இன்னொரு மெல்லிய அழுகை "சார்! உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு. இந்தாங்க" என்று தன்னிடம் பிறந்து சில நொடிகளே ஆன தன் குழந்தையை செவிலியர் தர...

தன் உயிர்குருதியில் முளைத்த சின்ன ரோஜா மொட்டு இதழ் விரித்து தன் பட்டு போன்ற சின்னஞ்சிறு கை கால்களை உதைத்து தன் மெல்லிய அழுகையால் இந்த உலகிற்கு வந்துவிட்டதை உணர்த்துவது போல் இருக்க கண்களில் பொங்கும் ஆனந்த கண்ணீர் ஆறாய் வழிந்தோட தன் நடுங்கும் கரத்தினால் வாங்கி கொண்டு உச்சி முகர்ந்தவன்.

"என்

உயிர்குருதியில் ஜனித்து

என்னவளின்

உயிர்கருவில் குடிகொண்டு

ஈரைந்து மாதங்கள் வளர்ந்து

வெளிவந்த எம் செல்வி நீயே?

என்னை ஈன்றெடுக்காத

தாய் நீயே!"


சடாரென தலை நிமிர்த்தி "சிஸ்டர் என் மனைவி எப்டி இருக்காங்க? நல்லா இருக்காங்கல்ல?"என்றான் நடுங்கும் குரலில்...

பின்னோடு வந்த டாக்டர் "சாரி டு செ திஸ் சார்! எவ்ளோ முயற்ச்சி பண்ணியும் நாம பயந்த மாதிரியே நடந்துருச்சி அவங்கள எங்களால காப்பாத்த முடியல. வெரி சாரி! மனச தேத்திகொங்க" என்றார்.

தன் தலையில் இடி விழுந்ததை போல் உணர்ந்தவன் இந்த உலகமே தன் காலடியில் இருண்டு கிடப்பதை போல் தோன்ற சற்று முன் நடந்ததை நினைத்தான்....

சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் "என்னங்க எனக்கு இடுப்பு ரொம்ப வலிக்குது சீக்கிரம் வாங்க " என்று தன் மனைவி அலறியதில் உள்ளே இருந்து வேகமாக ஓடி வந்தவன் அவளை தாங்கி பிடித்து "என்னம்மா! எ்ன பண்ணுது?" என்றான் பதட்டமாக...

பதட்டம் கலந்த பயத்துடன் "எனக்கு பிரசவ வலி ஸ்டார்ட்ஆகிடுச்சுன்னு நினைக்கிறன்" என்றவளிடம்

"சரி டா! எதுக்கும் டென்ஷன் ஆகாதே ரிலாக்ஸாக இரு நாம இதோ ஹாஸ்பிடல் போய்டலாம்" என்று தனக்குள் எழும் பயத்தை வெளிக்காட்டாமல் தன்னவளுக்கு தைரியம் கூற அவ்வளவு மரண பயத்திலும் அவனின் வார்த்தைகள் அவளுக்கு தெம்பூட்ட மெல்லிய சாரலாய் அரும்பியது அவளின் புன்னகை...

"இதோ வந்துடறேன்" என்று உள்ளே பொறுமையாக சென்றவள். குளியறை சென்று வலியோடு அணிந்திருந்த நைட்டியை கழட்டி சிறு குளியலை குளித்து முடித்து வந்து தன் கணவன் தனக்காக முதன் முதலில் வாங்கி குடுத்த அடர் கருநீலநிற புடவையை எடுத்து கட்டிக்கொண்டு பூஜை அறை முன் சென்று நின்றவள் "என்னங்க இங்க வாங்க"என்று குரல் குடுக்க

"இதோ வந்துட்டேன்" என்று உள்ளே வந்தவன் "ஏம்மா இப்ப இது ரொம்ப முக்கியமா? அப்படியே கிளம்புவியா ?"என்றவன் அப்பொழுது தான் கவனித்தான் அவள் அணிந்திருந்த புடவையை, அவன் உதட்டில் மெல்ல புன்னகை அரும்ப அவள் முறைப்பதை பார்த்து "சரி சரி நான் எதுவும் சொல்லவில்லை"என்று சிரித்தான்.

கற்ப்பூரத்தை ஏற்றி கையெடுத்து கும்பிட்டவள் குங்குமச்சிமிழை அவனிடம் நீட்ட அதில் இருந்து எடுத்த குங்குமத்தை அவளின் நெற்றியில் கீற்றாய் இட்டவன் நெற்றிவகிட்டிலும் வைத்து அவளின் உச்சியில் ஒரு முத்தத்தை தந்த பின் " போலாம் டா லேட்டா ஆகுது "

"ஹ்ம்..." என்று பெருமூச்சு வெளிப்பட கண்களில் கண்ணீரோடு அவனை தழுவிக்கொண்டாள்.

"டாக்டர் சொல்றதையும் மீறி எல்லாம் நல்லபடியா நடக்கும் கவலை படாதே போலாம்" என்றான்

சரி என்று தலை ஆட்டியவள் "ஆ...ஆ ..... ரொம்ப வலிக்குதுங்க சீக்கிரம் போகலாம் என்னால வலி தாங்க முடியலை " என்று வலியில் துடிக்க

"இதோ உடனே ஹாஸ்பிடல் போகலாம் " என்று அவளை வெளியே மெதுவாக அழைத்து வந்து தன் காரில் உட்கார வைத்தான்.

"ஒரு ரெண்டு நிமிஷம் இதோ வந்துடறேன" உள்ளே ஓடியவன் சட்டையை எடுத்து வேகமாக போட்டு கொண்டு வீட்டை பூட்டிகொண்டு ஓடி வந்து காரை ஸ்டார்ட் செய்தான்.

"செல்வி! பத்து நிமிஷம் இதோ ஹாஸ்பிடல் போய்ட் ரொம்ப வலிக்குதாடா கொஞ்சம் பொறுத்துகோடா " என்று அவள் துடிப்பதை பார்த்து தன்னால் அந்த வலியை வாங்கி கொள்ளமுடியவில்லையே என்று வேதனை பட்டு கூற

அவ்வளவு வலியிலும் "என்னங்க! இந்த பிரசவத்துல நான் நல்லபடியா பிழைச்சி வந்துட்டா சரி அப்டி ஒரு வேளை எனக்கு ஏதாவது ..." எனும் போதே அவளின் வாயை தன் கைகள் கொண்டு மூடி "அப்டிலாம் ஒன்னும் நடக்காது நீயும் நம்ம பாப்பாவும் நல்லபடியா வந்துருவிங்க" என்று தன் கணவன் சொல்ல

அவன் கையை தன் வாயில் இருந்து விலக்கி "டாக்டரே இப்பவரைக்கும் அதுக்கு உத்திரவாதம் தரலையே! அப்டி எனக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா நம்ம பாப்பாவ என்னை காரணம் காட்டி வெறுத்து ஒதுக்க கூடாது ஏன்னா நான் தான் உ ங்களுக்கு பொண்ணா பிறந்து உங்க கூட இருக்க வருவேன்" என்று கூற அவள் கூறுவது நடக்க கூடாது என்று வேண்டினாலும் அவளின் திருப்திக்காக சரி என்று தலை ஆட்டினான்.

"சார்! சார்!" என்ற குரல் கேட்க நினைவுகளில் இருந்து மீண்டவன் ஒரு மணி நேரத்திற்கு முன் உயிரோடு இருந்தவள், யாருமற்ற அனாதையாக இருந்தவனை நான் இருக்கிறேன் உனக்கு என்று சொல்லி தன் உயிராய் என்னை நேசித்தவள் இப்பொழுது இல்லை தன்னை மறுபடியும் தனிமரமாக தவிக்கவிட்டு சென்றுவிட்டாள் என்பதை நினைக்கும் பொழுதே துக்கம் தொண்டையை அடைக்க குழந்தையை அணைத்தபடி சுவரோடு சாய்ந்து தரையில் அமர்ந்து கதறி அழுதான்.

"சார்! உங்ககூட யாரும் வரலையா?" சிஸ்டர் கேட்கவும் "இல்லை" என்று தலை ஆட்டியவன். தன் போனை எடுத்து வேகமாக அழுதுகொண்டே டயல் செய்தான்.

எதிர் முனையில் "ஹலோ!" என்று குரல் கேட்கவும் "டேய் பிரபு! உன் தங்கச்சி நம்ம எல்லாரையும் தவிக்க விட்டுட்டு போய்ட்டாடா" என்று கதற

"டேய் என்னடா உளர்ற? செல்வி எங்க?"என்று பதட்டதோட கேட்க

"அவ நம்ம எல்லாரையும் விட்டுட்டு போய்டாடா! நான் தலபாடா அடிட்சிகிட்டேன் இந்த குழந்தை வேணாம்னு என் பேச்சை கேக்கலையே? இப்ப பாரு ..."என்று கேவ

"டேய் இப்ப நீ எங்க இருக்க ?" என்று பிரபு கேட்க

"நான் இங்க செல்விக்கு பிரசவ வலி வந்துச்சுனு ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தேண்டா இங்க என் கைல ஒரு பட்ச குழந்தைய குடுத்துட்டு எங்க ரெண்டு போரையும் ஆனாதையா விட்டு போய்டா " என்று புலம்பினான்

"டேய் தமிழ் நீ அங்கேயே இரு இன்னும் பத்து நிமிஷத்துல நான் அங்க இருப்பேன் " என்று போனை கட் செய்தவன் அடுத்த பத்து நிமிஷத்தில் அங்கு இருந்தான்.

பிரபுவை கண்டதும் சிறு குழந்தையென ஓடி சென்று அவனை கட்டிக்கொண்டு கதற தொடங்கினான் நம் நாயகன் சரவணத்தமிழன்.

எல்லா பார்மாலிட்டிசையும் தான் ஒருவனே முன் நின்று முடித்து செல்வியின் உடலை வீட்டிற்கும் கொண்டு வந்துவிட்டான் பிரபு.

தனகென்று யாருமில்லாத நேரத்தில், தனக்காக, வீட்டிற்கு ஒரே பெண்ணாய் செல்லமாக வளம் வந்த பெற்றவீட்டை துறந்து வந்த செல்வியை தலைமுழுகிய அவளின் பெற்றோருக்கு சரவணத்தமிழன் பிரபுவின் மூலம் தகவல் சொல்ல "எங்கள் பெண் செல்வி என்று அவனை கூட்டி கொண்டு இந்த வீட்டு வாசலை தாண்டினாளோ அன்றே இறந்து விட்டாள். இது யாரோ? முன் பின் தெரியாதவர்ன்களின் சாவுகேல்லாம் எங்களால் வரமுடியாது" என்று கூறி அனுப்பி விட்டனர்.

தன் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தன் தொழில் முறை தெரிந்தவர்கள் அக்கம் பக்கத்தினர் என எல்லோரும் துக்கவீட்டில் சூழ்ந்திருக்க எல்லா காரியங்களையும் தான் ஒருவனே நண்பனின் துணைகொண்டு செய்து முடித்தான் தமிழ்.

தன் மனையாள் கூறியது சரியாக இருக்கிறது "உனக்கு நான் எனக்கு நீ! அவ்வளவு தான் சிறிய கூட்டில் சந்தோசமாக இருக்கலாம் அவர்களை பற்றி பேச்சு எதற்கு உங்களை மதிகாதவர்களின் உறவு நமக்கு தேவை இல்லை. " என்று கூறினாள்.

இரண்டு வருடம் பின்னோக்கி சிந்தனையில் மூழ்கியவனை மீட்க தேவதையாய்

"அப் ...ப் ...பா!" என்று மழலை குரலில் தன் அப்பாவை கொஞ்சும் தமிழில் கூப்பிட்டது இரண்டு வயதான குழந்தை...

தன் காலை கட்டிக்கொண்டு சிரித்தபடி நிற்கும் குழந்தையிடம் "சர்வதா குட்டி! என்னடா குட்டி ?" என்று கொஞ்சியபடி தூக்கி கொண்டான்.

"ஆம்! தங்கள் இருவரின் ஆசை மகளுக்கு தன் பெயரின் முதல் எழுத்தான "சரவ" வும் தன் காதல் மனைவி பெயர் தாமரைச்செல்வியின் முதல் எழுத்தான "தா"வும் சேர்த்து "சர்வதா" என்று வைத்திருந்தான்.
 

2. சரவணனின் அறிமுகம்!​

திருமணம் என்னும் பந்தத்தில் ஆசையாய் அன்போடு இணையாமல் கடமைக்காக கல்யாணம் செய்து கொண்டு இல்லறம் நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் அவர்களுக்கு மட்டும் இல்லை அவர்களால் உருவாகும் பிள்ளைகளுக்கும் தான் என்பதை நாம் இங்கு நம் நாயகனின் மூலம் கண்கூடாக காணபோகிறோம்.

ஆம்! நம் நாயகனின் பெற்றோர் இருவரும் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளாது சண்டையிட்டு பிரிந்ததால் சரவணத்தமிழன் சிறு வயதிலேயே காப்பகத்தில் விட்டுவிட்டு இருவரும் பிரிந்து அவரவர் வாழ்க்கையை வேறு ஒரு துணையோடு சென்று வாழ ஆரம்பித்து, பாதிப்பை நம் நாயகனுக்கு மட்டும் உண்டாக்கி விட்டார்கள்.

சிறுகுழந்தை என்றும் பாராமல் அவர்கள் செய்த செயலால் முழுவதும் பாதிக்கப்பட்டது சரவணத்தமிழன் தான்.

மற்றவரின் ஏளன பார்வையோ, பரிதாப பார்வையோ, அவன் மேல் விழுவதை விரும்பாமல் எல்லோரும் அவனை பாராட்டி மட்டுமே பேச வேண்டும் என்று முடிவெடுத்து, படிப்பு, விளையாட்டு என அவன் கால் பதியும் எல்லா இடத்திலும் அவனது அயராத உழைப்பால் அவனுக்கே முதலிடம் கிடைத்தது.

அதோடு மட்டும் நில்லாமல் தன் ஒய்வு நேரத்தில் அந்த காப்பகத்தில் இருந்த அனைத்து பிள்ளைகளுக்கும் அவனே படிப்பும் சொல்லிக்கொடுத்தான்.

படிப்பின் உச்சத்தில் இருந்தாலும் அவனுக்கு ஆடிட்டராக வேண்டும் என்று ஆசை. அதனால் அக்கௌண்ட்ஸ் குரூப் எடுத்து படித்தான்.

தன் நண்பன் பிரபுவின் உதவியால் சென்னையிலேயே பெரிய ஆடிட்டரான அவனது பெரியப்பாவிடம் பேசி வேலைக்கு சேர்ந்துவிட்டான்.

முதல் நாள் படபடக்கும் இதயத்தோடு அவர் வீட்டின் உள்ளே அடியெடுத்து வைத்து அவரை அணுக, ”குட் மார்னிங் சரவணா! பிரபு உங்களை பற்றி சொன்னான். இன்னைக்கே வேலைல ஜாயின் பண்ணிக்கோங்க. எனக்கு வேலைல கரெக்டா இருக்கனும்” என்றார் கண்டிப்பாக.

"சரி சார்!" என்றான் சரவணத்தமிழன்.

"சரி. இந்த ரூம் தான் என்னோட ஆபீஸ் இங்கயே வெயிட் பண்ணு. நான் போய் ரெடியாகிட்டு வந்துடறேன். ஒரு பெரிய கம்பனில இன்னைக்கு ஆடிட்டிங் இருக்கு. நாம போகணும்" என்று அவனை பார்த்தார்.

"சரி சார்" என்றான் சரவணத்தமிழன்.

"இந்தா. இது தான் அந்த பைல் பார்த்துட்டு இரு" ஒரு பைலை அவனிடம் கொடுத்துவிட்டு வெளியே சென்றார்.

அந்த பைலை பார்த்துக்கொண்டிருந்த சரவணத்தமிழன் திடிரென்று சத்தம் வரவே தலை நிமிர்த்தி பார்த்தான். வேகமாக ஓடி வந்த ஒரு பெண்,

"எங்க அம்மா வந்து கேட்டா நான் இருக்கறதை சொல்லகூடாது" என்று மிரட்டும் தொனியில் கூறிவிட்டு அவன் அமர்ந்திருந்த சோபாவின் பின்னால் ஒளிவதை பார்த்து ஒன்றும் புரியாமல் முழிக்க, பின்னாடியே நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கத்தி கொண்டே கையில் மாத்திரையோடு வந்தார்.

"செல்வி! செல்வி! நீ எங்க தான் ஒளிஞ்சிட்டு இருக்க? ஒழுங்கு மரியாதையா வந்து இந்த மாத்திரைய போட்டுக்க. இல்ல.. நான் உன்னை கண்டுபிடிச்சா ஒரு ஊசி போடறதுக்கு பதில் ரெண்டு ஊசி போட்ருவேன் சொல்லிட்டேன்." என்று கத்த, அசையாமல் அந்த பெண் சிலை போல் அமர்ந்திருப்பதை பார்த்து சிரிப்பு வந்தது அவனுக்கு. ‘அடிப்பாவி ஊசி போட்டுக்கறதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றா?’ என்று தனக்கு தானே மனதில் கேட்டு கொண்டான்.

"தம்பி! இங்க என் பொண்ணு வந்தாளா? நேத்து சொல்ல சொல்ல கேக்காம அவங்க பிரெண்ட் கூட போயி மழைல நனைஞ்சுட்டு வந்து இன்னைக்கு ஜுரம் அதிகமா இருக்கு. ஊசி போட்டு மாத்திரை சாப்பிட்றதுக்கு என்னை போட்டு பாடா படுத்துறா. நான் ஒரு டாக்டர் எனக்கு இவ உடம்பு சரி இல்லனா எப்டி இருக்கும் ?" என்று கூற தமிழ் அந்த பெண்ணை பார்த்தான்.

‘சொல்லவேண்டாம்’ என்று விழிகளை உருட்டி அவள் தலையாட்ட

நம்ம ஆள் சும்மா இல்லாம, ”இங்க ஒரு பொண்ணு உக்கார்ந்துருக்கு இந்த பொண்ணா பாருங்க?" என்று கரெக்டாக மாட்டிவிட்டான்.

அவள் எழுந்து ஓடும் முன் அவளை பிடித்துகொண்ட செல்வியின் அம்மா ”ஒழுங்கா மாத்திரை சாப்பிடுடி" என்று மிரட்டி ஒரு வழியாக மாத்திரையை விழுங்க வைத்தார்கள்.

"இப்போ போய் கொஞ்ச நேரம் அங்கயும் இங்கயும் ஓடாம போய் ரெஸ்ட் எடு" என்று கூறிவிட்டு செல்ல அவருக்கு பழிப்பு காட்டி விட்டு சரவணத்தமிழனிடம் திரும்பி நின்று இரண்டு கைகளை இடுப்பில் வைத்து முறைத்தாள்.

"ஹலோ என்ன எதுக்கு முறைக்கிறிங்க? உங்க அம்மா உங்கள கேட்டாங்க அதான் பெரியவங்க கேட்கும் போது பொய் சொல்ல முடியாம உண்மைய சொல்லிட்டேன்" என்று பாவமாய் வேண்டுமென்று அவளை வெறுபேற்றும்படி கூறினான்.

"யோவ்! யாருயா நீ? எங்க வீட்ல வந்து உட்கார்ந்துகிட்டு எங்க அம்மாகிட்ட வேற என்னை மாட்டிவிட்டு தேவையில்லாம மாத்திரை சாப்பிட வச்சிட்ட" என்று எண்ணெயில் விழுந்த கடுகாய் பொரிந்து தள்ளினாள்.

"இங்க பாரு. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு. பார்த்தா படிச்ச பொண்ணு மாதிரி இருக்க. எப்படி பேசணும்னு தெரில?" என்று அவளை சீண்டினான் சரவணத்தமிழன்.

"இவர் பெரிய கலெக்டர். உனக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டி கிடக்கு? என் வாழ்நாள்ல இதுவரைக்கும் மாத்திரை போடாம எங்க அம்மாகிட்ட தப்பிச்சிட்டு வந்தேன். உன்னால இன்னைக்கு மாட்டிகிட்டேன்" என்று புலம்பினாள்.

"செல்வி! வாட் இஸ் திஸ்? வாட் ஆர் யூ டூயிங் ஹியர்? முன்ன பின்ன தெரியாத ஒருத்தர்கிட்ட இப்படி தான் பீகேவ் பண்றதா? சே சாரி டு ஹிம்" என்று கடுமையான அதட்டல் வாசலில் இருந்து வரவே திரும்பி பார்த்தாள் செல்வி.

அங்கு அவளின் அப்பா கோவமாய் நின்று கொண்டிருந்தார்.

"சாரி!" என்று வேண்டா வெறுப்பாய் சொல்லிவிட்டு வெளியே செல்ல.

அப்பாவின் குரல் தடுத்தது செல்வியை.

”ஒரு நிமிஷம் டா! இவர் மிஸ்டர்.சரவணத்தமிழன். நம்ம பிரபு தான் இங்க எனக்கு அச்சிஸ்டென்ட்டா அனுப்பி இருக்கான். சோ, இன்னைலர்ந்து இவர் இங்க என் கூட தான் வொர்க் பண்ண போறார். அம்மாகிட்ட சொல்லி டீ கொடுத்தனுப்ப சொல்லு" என்று கூறினார்.

"சரிப்பா” என்று அங்கிருந்து வேகமாக சமையலறைக்கு சென்றவள் தாட் பூட் தஞ்சாவூர் என வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்தாள்.

"மாம்! எனக்கு அப்பாகிட்ட வேலை செய்ய வந்திருக்கவர சுத்தமா பிடிக்கல. அப்பாகிட்ட சொல்லி இங்க வேலைக்கு வெக்க கூடாதுன்னு சொல்லுங்க" என்று கத்தினாள்.

"என்னடி? அப்பாவோட வொர்க் விஷயத்தில எல்லாம் நான் தலையிட மாட்டேன். உனக்கு வேணும்னா நீயே சொல்லிக்கோ" என்று அவள் அம்மா வேலையை கவனித்தார்.

செய்வதறியாது செல்வி கோவத்தில் காலை தரையில் ஓங்கி மிதித்து, ”அப்பா அவருக்கு டீ கேட்டார் கொடுத்தனுப்ப சொன்னாங்க” என்று போக திரும்பியவளை ”இந்தா டீ போட்டாச்சு இதை கொண்டு போய் கொடு” என்று டீ கப்பை கொடுத்தார்.

"என்னால முடியாது, வள்ளி இருந்தா கொடுக்க சொல்லுங்க” என்று முறைத்தாள்.

"செல்வி! எனக்கு ஹாஸ்பிட்டல்க்கு டைம் ஆகுது. இன்னைக்கு வள்ளி வரல வம்பு பண்ணாம போய் கொடு" என்று கத்தினார்

"சரி. போய் தொலைக்கிறேன் கத்தாதிங்க” என்று டீ கப்பை வாங்கிகொண்டு வேகமாக கோவத்தில் முனகி கொண்டு சென்றாள்.

செல்வியின் அப்பா போன் பேசிக்கொண்டே வெளியே சென்ற நேரத்தில் உள்ளே வந்து டீ கப்பை அவன் முன் நீட்டினாள் நம் நாயகி தாமரைச்செல்வி .

அவள் குழந்தை போன்ற முகத்தை கண்டு சிறு புன்முறுவல் பூத்து, ”தேங்க்ஸ்" என்று வாங்கி கொண்டான்.

"ஹம்.." என்று ஒரு சின்ன முனகலுடன் வெளியே போக திரும்பினாள்.

"ஒரு நிமிஷம்!" என்றான் தமிழ்.

"என்ன?" என்பது போல் அவள் திரும்பி அவனை பார்க்க.

"சாரி. நான் உங்க அம்மாகிட்ட சொன்னதுக்கு... உங்களுக்கு அக்கறை காட்ட உங்க அம்மா இருக்கறதுனால அவங்களோட அருமைய பத்தி தெரியல. எங்களுக்கு எல்லாம் அக்கறை காட்ட யாருமே இல்லன்னு ஏங்கறோம். உங்களுக்கு எங்க வலி சொன்னா புரியாது விடுங்க, சாரி! இனி உங்க விஷயத்துல தலையிடமாட்டேன்" என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட அவனின் வார்த்தைகள் அவள் செவிகளில் ரீங்காரமிட்டு கொண்டே இருந்தது.
 

3. பணம்!​

பணம்! பண்டைய காலத்தில் நம் முன்னோர் பொருட்களை பண்ட மாற்று முறையில் மாற்றி பெற்றுகொண்டனர். அப்பொழுது எல்லாம் பணம் பற்றிய பைத்தியம் இல்லாமல் இருந்தது. மனிதனுக்கு மனிதன் உதவுவது தான் முதல் கடமையாக இருந்தது.

பின் பொருள் பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக நாணயங்களை கொடுத்து வர்த்தக முறையை விரிவு படுத்தினர். ஆயிரம் இருந்தாலும் ஏதோ ஒரு நல்ல திட்டத்தோடு தான் இதை நடைமுறைக்கு கொண்டு வந்திருப்பர். ஆனால், அதன்பின் வந்த சில சுயநலவாதிகளின் தீய திட்டமிடலால் இன்று பணம் என்பது தேவைக்கு ஏற்ப சம்பாதித்தும் கூட அடுத்தவரின் உயிரை பறித்தாவது இன்னும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு மாறப்பட்டுள்ளனர் பல மக்கள்.

நம் கதைக்கும் இதில் சிறு சம்பந்தம் உண்டு அதனால் கதைக்கு வருவோம்.

அமுதா- பாஸ்கர் பிறப்பிலேயே இருவரும் நல்ல வசதியான கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்து வசதியாய் வளர்ந்தவர்கள். அமுதா டாக்டர்க்கு படிக்க, பாஸ்கர் சி.ஏ படித்து ஆடிட்டரானார், பின் இருவரும் நெருங்கிய சொந்தமென்பதால் இருவருக்கும் பெற்றோர்கள் பேசி திருமணம் செய்துவைக்க தங்களின் வாழ்க்கையை அன்போடு வாழ ஆரம்பித்தனர். அவர்களுக்கு ஒரே செல்ல மகளாய் பிறந்தாள் நம் நாயகனின் நாயகி தாமரைச்செல்வி.

குழந்தையிலேயே குறும்பு செய்வதில் மிகவும் தேர்ந்தவள் தாமரைச்செல்வி.

மூன்று வயதில் தான் அவளுக்கு காது குத்தினார்கள். ”உனக்கு காது குத்த போறாங்க அழகூடாது" என்று எல்லோரும் பயமுறுத்த.

எல்லோரும் வேலை செய்து கொண்டிருந்த வேளையில் அமைதியாக யாரும் கவனிக்காத படி கோவிலின் கருவறை உள்ளே சென்று மூலையில் யார் கண்ணிலும் படாதபடி உட்கார்ந்து கொண்டாள்.

குழந்தையை காணாமல் எல்லோரும் அலறியடித்து எல்லா இடத்திலும் தேடி கிடைக்காததால் அழுது கொண்டிருக்க, பூஜை செய்ய உள்ளே சென்ற பூசாரி குழந்தையை பார்த்து ”இங்க பாருங்கோ குழந்தை இங்க உக்கார்ந்துண்டு இருக்கா" என்று தூக்கி கொண்டு போக அவர் கன்னத்தை தன் பால் பற்களால் பதம் பார்த்துவிட்டாள். அதன் பிறகு அவளை சமாதானம் செய்து காது குத்த வெகுநேரமானது. அது வேறு கதை...

இருவரும் தொழிலில் சுத்தமானவர்கள், நேர்மையானர்வர்கள், அன்புள்ளவர்கள் தங்கள் பெண்ணிற்காக என்ன வேண்டுமானாலும் செய்பவர்கள் என்றாலும் பிறப்பிலேயே வசதிபடைத்தவர்கள் என்பதால் அவர்களின் குருதியிலேயே பணத்திமிர் இருக்கத்தான் செய்தது. அதிலும் அமுதா சற்று பாசம் அதிகமுடையவள் என்றாலும் பாஸ்கர் அதில் இருந்து மாறுபட்டவர் பாசம் இருந்தாலும் அந்தஸ்து எனும் வரும்பொழுது தங்களுக்கு நிகரானவர்களிடையே நட்பு பாராட்ட தான் விரும்புவார்.

சிறுவயதில் இருந்தே செல்வி ஆசைபடுவதை வாய் திறந்து கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல் அவளின் கண் பார்வையிலேயே எல்லாம் வந்து சேர்ந்தது. செல்விக்கு பிடிவாத குணம் மிகவும் ஜாஸ்தி. தனக்கு ஒரு பொருள் வேண்டும் என்று நினைத்து விட்டாள் யார் தடுத்தாலும் அவர்களை தூர வைப்பாளே தவிர, அவள் நினைத்ததை முடிக்காமல் விடமாட்டாள்.

படிப்பில் படுசுட்டி மிகவும் புத்தி கூர்மையுடையவள். அழகிற்கும் குறைவில்லை. பெண்மைக்கே உரிய உடற்த்தோற்றம் முதற்கொண்டு எல்லாம் கனகட்சிதமாய் இருக்க தேவையற்ற அலங்காரத்தில் துளி இஷ்டம் இல்லாதவள்.

இவர்கள் இருவரின் குணமும் நம் நாயகியிடம் கலந்து இருந்தது. ஆதலால் சரவணத்தமிழனிடம் கோபப்பட்டாலும் அவன் கடைசியாய் சொல்லி விட்டு சென்ற வார்த்தைகள் அவளின் மனதை குடைய செய்தது.

அவளின் பார்வையில் யாரோ ஒரு புதியவன் தங்களின் வீட்டில் இருந்து கொண்டு தான் கூறிய பின்னும் தன்னை அம்மாவிடம் மாட்டி விட்டுவிட்டானே என்று கோபத்தில் பட்டாசாய் அவனிடம் வெடித்தவள். அவன் கடைசியாய் கூறியதில் சற்று குழப்பமடைந்தாள்.

"எனக்கு என் அம்மாவின் அருமை புரியவில்லையா? இவன் யார் என்னை பற்றி பேசுவதற்கு? என்னை பற்றி என்ன தெரியும்? ஆனாலும் அவன் கூறியதில் ஒன்று மட்டும் புரிந்தது தனகென்று அம்மா அப்பா இருப்பது போல் பாசம் காட்ட அவருக்கு யாரும் இல்லை போல். ச்சே பாவம் தேவை இல்லாமல் நான் அவனை திட்டி இருக்க கூடாது, ஆனாலும், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? என் கோபத்தை தேவையில்லாமல் சீண்டினால்...” என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டு வெளியே சென்றுவிட்டாள்.

அதன்பிறகு அவனை சற்று வித்யாசமாக காண ஆரம்பித்தாள்.

மறுநாள் காலை சரவணன் தங்களின் அலுவலக அறையில் அன்றைய வேலைகளின் குறிப்பெடுத்து கொண்டிருக்க, பூனை நடைப்போட்டு அவனின் பின்னால் அமைதியாக வந்து நின்றாள். கடமையே கண்ணாயிருந்த சரவணனுக்கு இது தெரியவில்லை.

"உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே!

இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்....

.....................

மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்!

விழுந்தாய் ஓர் விதையென நான் எழுந்தேன் .....

.............................................................................................

விரலுக்கும் விரலுக்கும் பிறந்ததும் இசையென இருப்போம்..."


கண்களை கையில் இருந்த கோப்புகளில் மேயவிட்டபடி அவனது இனிமையான குரலில் வசீகரமாய் பாடி கொண்டிருந்தான்.

தன் கண்களை மூடியபடி அந்த பாடலின் சுகத்தில் பெருமூச்சு விட, அவனின் இனிமையான பாடலை கேட்டு அங்கேயே மெய்மறந்த படி நின்றாள் செல்வி. பின் சுயநினைவு வந்தவளாய்.

"ஹ்க்கும்.." என்று செல்வி செரும திடுக்கிட்டு திரும்பினான்.

செல்வி நிற்பதை பார்த்து ” ஹேய்! நீங்க எப்போ வந்திங்க? நான் உங்களை கவனிக்கவே இல்லை சாரி" என்றான் லேசாக சிரித்து.

"நீங்க முதல் வரி பாடறதுக்கு முன்னாடியே வந்துட்டேன். உங்களோட வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு." என்று அவனை பார்த்து சிரித்தாள்.

"ஒஹ்! நீங்க வேற கிண்டல் பண்ணாதிங்க. நான் சும்மா ஏதோ பாடனும் போல இருந்தது சும்மா முனுமுனுதேன். அதுக்கு போய்..." என்றான் லேசான வெட்கம் கலந்த குரலில்.

"இல்ல உண்மையாகவே நல்லா இருந்தது. பை தி வே உங்க நேம் என்ன?" என்றாள் செல்வி.

"என் பெயர் சரவணத்தமிழன். உங்களுக்கு இப்ப பிவர் சரி ஆகிடுச்சா?" என்று அவளை நேருக்கு நேர் பார்த்து கேட்டான்.

" ஹம் இப்ப பரவால்ல” என்று மென்மையாய் சிரித்தாள்.

"மாத்திரை போடறிங்களா இல்ல இன்னைக்கும் எங்கயாவது போய் ஒளிஞ்சிட்டிங்களா?"என்று கிண்டலாய் கேட்டான்.

"இல்ல மாத்திரை சாப்பிட்டேன்" என்றாள் அமைதியாக.

"நீங்க என்ன படிச்சிருக்கீங்க?” என்று கேட்டாள்.

"நான் இப்ப சி.ஏ பண்ணிட்டு இருக்கேன். நீங்க என்ன பண்றிங்க?" என்றான் சரவணத்தமிழன்.

"நான் பி.பி.ஏ பைனல் இயர் படிக்கிறேன்" என்றவள் அறையை நோட்டமிட.

"என்ன பார்க்கறிங்க?" என்று கேட்டான்.

"இல்ல டேடி இங்க தான் இருக்கறதா மாம் சொன்னாங்க. அதான் பார்க்கலாம்னு வந்தேன்" என்றாள்.

"இப்போ தான் பிரெண்ட் யாரோ வந்துருக்காங்க பார்த்துட்டு வந்துடறேன்னு போயிருக்கார்" என்று கூறினான்.

"அப்படியா சரி. நான் அங்க போய் பார்த்துக்குறேன்" என்று திரும்பி போக எத்தனிதவளை தன் குரலால் தடுத்து நிறுத்தினான்.

"ஹலோ! ஒரு நிமிஷம்" என்றவனிடம் திரும்பி, "சொல்லுங்க” என்றாள்.

"உங்க பேர் என்னன்னு சொல்லவே இல்லையே?" என்று கேட்டான்.

"உங்களுக்கு என் பேர் தெரிஞ்சிக்க விருப்பமில்லைன்னு தான் கேக்கலையோன்னு நினைச்சு சொல்லலை" என்றாள்.

"சரி. உங்க பேர் என்ன சொல்லுங்க?" என்றான் மெல்லிதாய் புன்னகைத்தபடி.

"தாமரைச்செல்வி” என்றவுடன்.

"அழகான பெயர் உங்களை போலவே" என்று மீண்டும் தன் வேளையில் கவனம் செலுத்தியவனிடம்.

"தேங்க்ஸ் அப்புறம் பார்க்கலாம்" என்று வெளியே தன் தந்தை இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.

"என்னடா என்னை தேடினதா சொன்னாங்க அம்மா! என்ன வேணும்?" என்று கேட்டபடி உள்ளே இருந்து வந்தார் அவளின் அப்பா.

"அப்பா எங்களுக்கு பைனல் இயர்ல? அதனால காலேஜ் டூர் கூட்டிட்டு போறாங்க" என்று அவரிடம் வந்து ஆசையாய் கட்டிகொண்டாள்.

"எங்க கூட்டிட்டு போறாங்க?" என்று கேட்டவரிடம்.

"கொடைக்கானல்" என்று விழிவிரிய கூறிய மகளின் நெற்றியோடு நெற்றி மோதி ”எத்தனை நாள் டூர் டா?" என்று செல்வியின் தலையை கோதிய படி கேட்டார்.

"ஓன் வீக் டேட்” என்று தந்தையின் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் தலையை தூக்கி பார்த்து சொன்னார்.

"என்னது ஒரு வாரமா? நோ வே. நான் அனுப்பமாட்டேன். உன்னை விட்டுட்டு எங்களால இருக்க முடியாது" என்று மறுப்பாய் தலையசைத்தார்.

"ப்ளீஸ் டேட்! இந்த ஒரு வாரம் மட்டும் எனக்காக. இதுவரைக்கும் என்னை எங்கயுமே அனுப்புனதில்ல. இது பைனல் இயர். இப்ப விட்டா அவ்ளோ தான் ப்ளீஸ்” என்று தன்னிடம் கெஞ்சும் மகளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தன் மனைவியை பார்க்க அவரும் ”போகட்டும்" என்று கண்ணசைவிலேயே கூற பெருமூச்சி விட்டவர்

"சரி டா இந்த ஒரே ஒரு வாட்டி மட்டும் தான் அனுப்புவேன். ஓக்கேவா பத்திரமா போய்ட்டு வரணும்" என்றார்.

"ஹை! ரொம்ப தேங்க்ஸ் டேட்'"என்று அவரை கட்டி பிடித்து கன்னத்தில் ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு துள்ளி குடித்து ஓடினாள்.

"என்ன அம்மு? ஒரு வாரம் எப்பிடி அனுப்பறது நீ பாட்டுக்கு அனுப்ப சொல்லிட்ட?" என்றார் முக சுனக்கமாய்

"சரி விடுங்க! சின்ன பொண்ணு ஆசை படறா பிரெண்ட்ஸ் கூட போகணும்னு போயிட்டு வரட்டும்" என்று சமாதானம் சொல்லிவிட்டு சென்றார்.

அவளும் அதுக்கப்புறம் தன் படிப்பில் கவனம் செலுத்தியதால் நம்ம ஹீரோ பக்கம் வரவே இல்ல.

சரவணனும் தன் வேலையின் நுணுக்கங்களை கற்று கொள்ள ஆர்வமாய் இருந்ததால் வேலையை கற்று கொள்வதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினான்.

எதிரிலே எப்பொழுதாவது பார்க்கும் பொழுது புன்னகை செய்து ஒரு ஹலோ சொல்வதோடு சரி.
 

4. எதிர் பாராத விபத்து!​

இப்படியே சரவணத்தமிழன் வேலையில் சேர்ந்த முதல் மாதம் முழுவதும் முடிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டால் சின்ன சிரிப்பு ஒரு ஹலோ அதையும் மீறி ”சாப்டிங்களா?" இப்படியே போய் கொண்டிருக்க ஒரு நாள்.

தாமரைச்செல்வி கல்லூரியில் அழைத்து செல்லும் டூர் செல்ல தந்தையிடம் ஏற்கனவே அனுமதி வாங்கியதால் நாளை போவதற்கு தயாராகி கொண்டிருந்தாள்.

அவளுக்கு பிடித்த உடையில் இருந்து மற்ற தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.

அன்று காலை அப்பாவை பார்க்க வரும் சாக்கில் சரவணத்தமிழனை பார்க்க சென்ற பொழுது சிறிது ஏமாற்றம் குடிகொள்ள, அவன் இல்லாமல் அவனிடம் சொல்லாமல் திரும்பி வந்தாள்.

மறுநாள் காலை தன் தந்தை தாயிடம் சொல்லிக்கொண்டு கொடைக்கானல் கிளம்பி சென்றாள் செல்வி.

"அப்பா நான் கிளம்புறேன். இன்னும் என்ன பண்றிங்க? நீங்க மொதல்ல வாங்க வெளியிலே" என்று தன் தந்தையின் அறை நோக்கி குரல் கொடுத்தாள்.

"தோ வந்துட்டேன்டா! இந்தா இது என்னோட சார்பா உனக்கு. எனக்கு மறக்காம போன் செய்" என்று போனை அவளிடம் நீட்டினாள்.

எல்லா மாணவிகளையும் ஆன் த வேயில் பிக் அப் செய்வது போல் திட்டம் தீட்டியதால் அவளின் தந்தை செல்வியின் மேடமை பார்க்க நேர்ந்தது.

செல்வியின் மேடமிடம் அவளின் தந்தை, ”மேம்! இதுவரை என் பெண்ணை எங்குமே அனுப்பியதில்லை. இது தான் முதல்முறை. கொஞ்சம் பார்த்துகோங்க" என்றார்.

"சரி சார்! நான் பத்திரமாய் பார்த்துகிறேன். நீங்க கவலைப்படாதிங்க" என்று அவர்களுக்கு தைரியம் கூறினார்.

"சரி. பார்த்து பத்திரமாய் போயிட்டு வரணும் டா" என்று மகளுக்கு பிரிய மனம் இல்லாமல் விடை கொடுத்தனர் செல்வியின் பெற்றோர்.

"சரி அப்பா. நான் ரொம்ப பத்திரமாய் இருப்பேன். நீங்க கவலை படாதிங்க. நான் போய் உடனே உங்களுக்கு போன் செய்கிறேன்" என்று பெற்றவர்களுக்கு சொல்லிவிட்டு செல்வி அங்கிருந்து கிளம்பினாள்.

கொடைக்கானல் டுர்க்கு செல்வியின் கிளாசில் எல்லோருமே வந்திருந்தனர்.

கொடைக்கானலில் ஒவ்வொரு நாளும் ஒரு இடத்திற்கு சென்று சுற்றி பார்த்து என்ஜாய் செய்து கொண்டிருந்தனர் .

செல்வி சக தோழிகளுடன் நன்கு விளையாடி சந்தோஷமாக பட்டாம்பூட்சியாய் துள்ளி குதித்து கொண்டு இருந்தாள்.

இதற்கிடையில் நம்ம ஹீரோ.

"சார். எனக்கு மூணு நாள் லீவ் வேணும்” என்றான் தயங்கியபடி.

"என்ன சரவணா திடிர்னு லீவ் கேக்குறிங்க?" என்றார் பாஸ்கர்.

"சார்! என் நெருங்கிய தோழனுக்கு திருமணம் அதான் நான் கண்டிப்பா போகணும் அதனால் தான்...." என்றான் மெதுவாக.

"அப்படியா எங்க கல்யாணம்?" என்றார் நெற்றியை சுருக்கியபடி.

"கொடைக்கானல் சார்" என்றவனிடம் சடாரென திரும்பி.

"அப்படியா! என் பொண்ணு செல்வி கூட அங்க தான் காலேஜ் டூர் போயிருக்கா!" என்றார் கண்கள் பிரகாசமாய் மின்ன அவனுக்கு இதை பற்றி எதுவும் தெரியாததால்.

"ஒஹ்! அப்படியா சார்?" என்றான் சரவணத்தமிழன்.

"ஆமா சரவணா. நான் இதுவரைக்கும் என் பொண்ண எங்கயுமே தனியா அனுப்பனதே கிடையாது. இப்போ தான் போயிருக்கா. பத்திரமா திரும்பி வந்துருணம்" என்றார் கவலையாக.

"வந்துருவாங்க சார். நீங்க கவலைப்படாதிங்க" என்றான் ஆறுதலாக.

"சரி சரவணா. போயிட்டு வந்துடுங்க" என்றார்.

சரவணனும் கொடைக்கானல் வந்து சேர்ந்தாயிற்று.

காரில் வெகுதூரம் அவனே ஒட்டி கொண்டு வந்ததால் வழியில் ஒரு ஹோட்டலில் இரவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு நண்பனின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வழியில்..

--------------------------------------------

அங்கே நம் வாண்டு தோழிகள் பட்டாளம் அவர்களுக்குள் ஒரு பந்தயம் வைத்து கொண்டிருந்தனர்.

"ஹேய்! நைட் பன்னிரெண்டு மணிக்கு யாரு தனியா வண்டிய ஓட்டிட்டு போறாங்க பார்க்காலாம்?" என்றாள் கூடத்தில் இருந்த ஒருத்தி.

"என்னடி சொல்ற?" என்றாள் இன்னொருவள்.

"ஹேய் ஆமா டி. யாரு தனியா போறா பார்க்கலாம்? அவங்களுக்கு நம்ம டீம்ல எல்லாரும் சேர்ந்து ஐநூறு ருபாய் தரலாம். என்ன சொல்றிங்க?" என்றாள் எல்லோர் முகத்தையும் ஆவலாய் பார்த்தபடி.

“வண்டிக்கு என்ன பண்றது?” என்றாள் ஒருத்தி.

“என்கிட்ட இருக்கு? எங்க சித்தப்பா இங்க இருக்காரு. அவர் வண்டியை வாங்கி வச்சிருக்கேன்.” என்றாள் ஒருத்தி.

"எனக்கு பயமா இருக்கு டி” என்றாள் அந்த பெண்.

"எதுக்கு பயப்படுற? அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீ சும்மா வாய மூடிட்டு இரு. சும்மா நீ பயபட்றதில்லாம எங்களையும் சேர்த்து பயமுறுத்திட்டு இருக்க" என்று கடிந்து கூறினாள்.

"ஹேய்! வேணாம்டி இந்த ரிஸ்கெல்லாம். நாமளே வெளி ஊருக்கு வந்துருக்கோம்" என்று திரும்பி எச்சரிக்க யாரும் கேட்பதாக இல்லை.

"நான் வரல. நீங்க போங்க" என்று அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

முதலில் இருவர் பாதி தூரம் வரை சென்று பயத்தில் திரும்பி வந்துவிட்டார்கள்.

"இப்போ நான்” என்று துள்ளி ஓடினாள் நம்ம செல்வி.

அவளும் பயப்படாமல் ஒட்டிக்கொண்டு தான் இருந்தாள். திடிரென்று பின்னால் இருந்து ஒரு புதியவனின் குரல் கேட்க பயந்துபோய் வண்டியை வேகமாக ஓட்டினாள்.

பயத்திலே பதட்டத்துடன் வேகமாக வண்டியை ஓட்டியதால் பேலன்ஸ் தவறி கிழே விழுந்தாள்.

நண்பனின் வீடு நோக்கி வண்டியை செலுத்தி கொண்ருடிருந்த நம் நாயகனின் கூர்மையான விழிகளில் அவளின் உருவம் பதிந்துவிட, பின்னால் ஒருவன் துரத்திக்கொண்டு வருவதையும் கவனித்து காரை அவர்களின் நெருக்கத்தில் வேகமாக கொண்டு நிறுத்தினான்.

பின்னால் துரத்தி கொண்டு வந்த புதியவன் அவளை நெருங்கி, ”என்ன சிஸ்டர்! எவ்ளோ நேரம் கூப்பிட்றேன்? நீங்க இவ்ளோ வேகமா வந்து விழுந்துட்டிங்க?" என்றான் வருத்தமாக.

"இந்தாங்க உங்க பர்ஸ். அங்க கிழ விழுந்துருச்சு. அதை கொடுக்கத்தான் கூப்பிட்டுகிட்டு வந்தேன். நீங்க என்ன நினைச்சிங்கன்னு தெரியல?" அந்த புதியவன் பேசிகொண்டிருக்கும் போதே தாமரைச்செல்வி மயக்கமானாள்.

"ஐயையோ! சிஸ்டர் என்ன ஆச்சு?” என்று அவன் அவளை தொடும் வேளையில் சரவணத்தமிழன் அவனை தடுத்து, ”என்னடா தனியா வந்துகிட்டு இருக்க பொண்ணுகிட்ட வம்பு பண்றியா?" என்று கை ஓங்கிய சரவணத்தமிழனை பார்த்து.

"சார் அதெல்லாம் இல்ல சார். நீங்க வேற என்ன தப்ப நினைக்காதிங்க" என்று நடந்தவற்றை சுருக்கமாக கூறினான்.

"ஒஹ்! அப்படியா சாரி ப்ரோ! உங்கள இந்நேரம் தப்பா நினைச்சு அடிச்சுருப்பேன். இவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான். நான் பார்த்துக்குறேன்" என்று செல்வியிடம் திரும்பினான்.

"செல்வி! செல்வி! இங்க பாருங்க” என்று அவளின் கன்னத்தை தட்ட, அவள் கண் திறக்காததால் அவளை தூக்கி தன் காரில் படுக்கவைத்து விட்டு அவளின் வண்டியை தூக்கி ஓரமாக நிறுத்தி சைடு லாக் போட்டு சாவியை எடுத்துகொண்டான்.

பின் வண்டியை வேகமாக அருகில் ஏதாவது மருத்துவமனை தென்படுகிறதா என்று பார்வையை செலுத்தியபடி வண்டி ஓட்டினான்.

சிறிது தூரம் வந்தவுடன் ஒரு கிளினிக் தெரிய அங்கு அவளை கொண்டு சென்றான். அவர்களும் விவரங்களை கேட்டு பின் சிகிச்சை தொடங்க முதல்முறையாக அவன் மனம் அவளுக்காக இறைவனிடம் வேண்டியது.

”கடவுளே! இந்த பொண்ணு இப்படி இருக்கறத பார்த்தா இவங்க அப்பா அம்மா எவ்ளோ வேதனை படுவாங்க? அவளுக்கு ஒன்னும் ஆகக்கூடாது." என்று கண் மூடி வேண்டினான்.

அவன் கைகளில் இருந்த அவளின் பர்சில் இருந்து போன் அடித்தது. அதை வெளியே எடுத்து ”ஹலோ!" என்றான்.

"ஹலோ! நீங்க யாரு?" என்று எதிர்முனையில் கேட்க.

"நீங்க தானே போன் பண்ணிங்க? நீங்க யாரு முதல்ல அதை சொல்லுங்க ?" என்றான் கோபமாக.

"ஹலோ சார்! இது என் பிரெண்ட் செல்வியோட மொபைல். உங்ககிட்ட எப்படி வந்தது? அவளுக்கு என்ன ஆச்சு?" என்று எதிர்முனையில் பதட்டமாக கேட்க.

ஏக கடுப்பில் இருந்தவன் பொரிந்து தள்ளினான்.

”அவ பிரெண்டா? நீ யாரா இருந்தாலும் எனக்கு கவலை இல்ல. இன்னும் பத்து நிமிஷத்துல உன்னோட மேடம்கூட இங்க இருக்கனும். இல்ல நடகறதே வேற”என்று செல்வி இருக்கும் கிளினிக் பெயரை கூறினான்.

"சார்! பேஷன்ட் பெயர் மத்த எல்லா டிடைல்சும் இதுல பில் பண்ணிடுங்க" என்று ஒரு பாரத்தை கொடுத்து விட்டு சென்றாள்.

அதை கையில் வாங்கி எல்லா விபரத்தையும் நிரப்பி அவர்களிடத்தில் கொடுத்து விட்டு வந்து அமைதியாக அமர்ந்தான்.
 

New Threads

Top Bottom