dharshini chimba
Saha Writer
- Messages
- 308
- Reaction score
- 228
- Points
- 43
5. பட்டாசு தான்
அப்பொழுது தான் உறக்கத்தில் இருந்து எழுவது போல் எழுந்த தாமரைச்செல்வி சில நிமிடம் கடந்த பின் தான், அவள் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்து, இரவு நடந்ததை நினைவுக்கு கொண்டு வர முயன்று கொண்டிருந்தாள்."செல்வி! முழிச்சிட்டியாடி. என்னடி எங்கள எல்லாரையும் இப்படி பயமுறுத்திட்ட?" என்று அவள் சிநேகிதி மாலா கேட்டாள்.
"ஹேய்! நான் எப்படி டி இங்க வந்தேன்?" என்று குழப்பமாய் செல்வி கேட்டாள்.
"உனக்கு தெரிஞ்சவர்னு சொன்னார். அவர் தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்து அட்மிட் பண்ணிட்டு எங்களுக்கு போன் பண்ணார்" என்று மாலா சொன்னாள்.
"யார் டி அது?" என்றாள் செல்வி.
"அவர் வெளில தான் இருக்கார். இங்க உன்னை கூட்டிட்டு வந்து சேர்த்ததுல இருந்து அவர் உன்னை விட்டுட்டு எங்கயுமே போகல. இரு கூப்பிட்றேன்”என்று மாலா வெளியே சென்றாள்.
வெளியே கண்களை மூடியபடி அமர்ந்திருந்த சரவனத்தமிழனின் அருகில் சென்று, ”சார்! செல்வி கண் விழிச்சிட்டா” என்று மாலா கூறியதும் வேகமாக எழுந்து உள்ளே வந்தான்.
சரவணத்தமிழனை பார்த்ததும் செல்வியின் முகம் மலர்ந்தது.
”சரவணன்! நீங்களா? நீங்க எப்படி இங்க?" என்று கேட்டாள் ஆச்சர்யமாக.
செல்வியுடன் அவளின் இரண்டு தோழிகள் இருந்ததால் செல்வியை பார்த்தபடி, ”நான் அவங்ககிட்ட தனியா பேசணும். நீங்க எல்லாரும் கொஞ்சம் வெளிய இருங்க" என்றான்.
செல்வியின் தோழிகள் செல்வியை தயக்கமாய் பார்க்க, அவள் வெளியே போகும்படி சைகை செய்தவுடன் அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.
"சொல்லுங்க சரவணன்" என்றவளின் அருகில் வந்தவன் அவளை முறைத்துவிட்டு, ”பளார்!" என்று ஒரு அரை விழுந்தது அவள் கன்னத்தில்.
வலியின் தாக்கம் அதிகமாக இருக்க கன்னத்தை தடவியபடி கண்கள் கலங்க சரவணனை பார்த்தாள்.
”அறிவு இருக்காடி உனக்கு? யாராவது நைட் பன்னிரெண்டு மணிக்கு தான் ரேஸ் வச்சு விளையாடுவாங்களா? அதுவும் டூர் வந்த இடத்துல? டோன்ட் யூ ஹாவ் எனி காமன் சென்ஸ்? யாரோ ஒருத்தன் பின்னாடி வர்றத பார்த்தவுடனே டென்ஷன் ஆகி கிழே மயக்கம் போட்டு விழுந்துட்ட? அந்த நேரம் நான் அங்க வரலன்னா என்ன ஆகியிருக்கும்? அவன் ஏதோ உன் பர்ஸ் கிழ விழுந்துச்சு அத கொடுக்க தான் பின்னாடி வந்தேன்றான். என்ன இதெல்லாம்? அங்க உங்க அப்பா அம்மா உன்னை அனுப்பி வச்சிட்டு உன்னை எப்ப பார்ப்போம்னு தவிச்சிட்டு இருக்காங்க. நீ என்னடான்னா இங்க ரேஸ் வச்சு விளையாடி காலை உடைச்சிட்டு இருக்க. சப்போஸ் உயிருக்கு ஏதாவது இல்ல உனக்கு எதாவது ஆகியிருந்தா என்ன பண்ணுவ? உங்க அப்பா அம்மாவை பத்தி நினைச்சு பார்த்தியா? உனக்கு பெண்மையோட மதிப்பும் உயிரோட மதிப்பும் தெரியல இல்ல?" என்று வேப்பமர உச்சியில் இருந்து இறங்கும் பேய் போல் படபடவென இறங்கினான்.
சிறுவயதில் இருந்து இதுவரை தன் தாய் தந்தை கூட அதட்டி அடித்திராத தன்னை இவன் எந்த உரிமையில் அடித்து பேசிகொண்டிருகிறான் என்று புரியவில்லை என்றாலும் அவனின் இந்த கோபம் கலந்த உரிமை அவளுக்கு பிடித்திருந்தது.
சிறிது நேரம் வேறு எங்கோ பார்த்து கொண்டிருந்த சரவணன் அவளிடம் திரும்பி, ”சாரி இருந்த டென்ஷன்ல உன்னை அடிச்சிடேன். நீங்க இங்க இருந்து எப்போ கிளம்பறிங்க?" என்று கேட்டான்.
"நாளைக்கு ஈவனிங்” என்றாள் அவனை பார்க்காமல்.
"சரி. ஹெல்த் பார்த்துக்க. நான் வரேன்” என்று அவளை பார்க்காமல் விடுவிடுவென்று வேகமாய் வெளியே சென்றுவிட்டான்.
சரவணன் சென்றவுடன் உள்ளே வந்த மாலா ”ஹேய்! யாருடி அவர்?" என்று கேட்டாள்.
"ஏன்? அவர் எங்க அப்பாகிட்ட ட்ரைனிங் எடுத்துகிட்டு இருக்காரு. எங்க வீட்ல தான் ஆபிஸ். அதனால அடிக்கடி பார்த்துப்போம். எதுக்குடி கேட்கற?" என்று சரவணன் அடித்ததையும் மறந்து ஆர்வமாய் கேட்டாள்.
"எப்பா! நீ மயக்கமாய்ட்ட. நம்ம மேடம போட்டு லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாரு டி" என்று மாலா கூறினாள்.
"என்னடி சொல்ற? புரியற மாதிரி தெளிவா சொல்லு" என்று ஆர்வமாய் விழிகள் மின்ன கேட்டாள்.
"அதுவா நீ மயக்கமாகிட்ட! நடந்தது எதுவும் தெரியாம உன் போன்கு நான் ட்ரை பண்ணா இவர் தான் எடுத்தார்.
”நீ உங்க மேடம் எல்லாரும் இன்னும் பத்து நிமிஷத்துல இங்க இருக்கனும்... இல்லனா? என்ன நடுக்கும் எனக்கே தெரியாது”ன்னு சொல்லிட்டு போன கட் பண்ணிட்டாரு. அப்புறம் நானும் மத்த பிரெண்ட்ஸ் மேடம் எல்லாரும் பதறி அடிச்சிட்டு இங்க வந்தோம். வந்தா மேடம்கிட்ட,
“நீங்க தான் இன்சார்ஜா?” என்று கேட்டார்.
மேடம் “ஆமா சார். செல்விக்கு என்ன ஆச்சு?” என்று பதட்டமா கேட்டாங்க.
"நீங்க எல்லாம் என்ன வேலைல செய்றிங்க? உங்கள நம்பி இவ்ளோ பொண்ணுங்கள பெத்தவங்க அனுப்பி வச்சா பொறுப்பே இல்லாம இருக்கீங்க? இவங்க எல்லாரும் நைட் வெளில இருக்கறது கூட தெரியாம நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்திங்க? நீங்க முதல்ல உங்க பிரின்சிபால் நம்பர் கொடுங்க நான் உங்கள பத்தியும் இவங்க எல்லார பத்தியும் கம்ப்ளைன்ட் பண்ண போறேன்." என்று கடு கடுவென கத்தினார்.
மேடம் வேர்த்து விறுவிறுத்துபோய் நடுங்கிட்டாங்க.
"சார்! சார்! அப்படி எல்லாம் எதுவும் செஞ்சிராதிங்க. நேத்து எனக்கு கொஞ்சம் பிவர். உடம்பு சரி இல்லன்னு சீக்கரம் டேப்லெட் போட்டு படுத்திட்டேன். சாரி சார்! நாளைக்கு வீட்டுக்கு எல்லாரையும் சேர்க்கற வரைக்கும் இனி ஜாக்கரதையா இருக்கேன்" என்று கெஞ்சினார்.
"மேடம்! இப்ப செல்விக்கு கால்ல சதை பிரண்டுருக்கு. ரெண்டு நாள் நடக்க முடியாதுன்னு சொல்லிருக்காங்க. இது பரவால்ல. ரெண்டு நாள்ல சரியாகிடும். பட், அவ உயிருக்கோ அவளின் மானத்துக்கோ ஏதாவது பிரச்சனைனா நீங்க என்ன பண்ணியிருப்பிங்க? உங்களால் அவ இழந்தத திரும்பி தரமுடியுமா? அதனால் தான் அப்படி பேசிட்டேன் அவளை கூட இருந்து பார்த்துக்கோங்க" என்றவன்.
மறுபடியும் அவரிடம் திரும்பி, ”செல்வி எனக்கு வேண்டியவங்க தான். நாளைக்கு ஈவனிங் நீங்க கிளம்பும் போதே நானும் இங்க இருந்து கிளம்பறேன். உங்க பின்னாடியே தான் கார்ல வர்றேன். செல்வியால ப்ரியா பஸ்ல உக்கார முடியாது. அதனால அவ என்கூட கார்ல வரட்டும். அவ வீட்டுகிட்ட நெருங்கனவுடனே நீங்க அவளை பஸ்ல கூப்பிட்டுகோங்க. பத்திரமா அவங்க வீட்ல இறக்கிடுங்க. அவ பாரன்ட்ஸ்கு ஆக்ஸிடென்ட் பத்தி தெரிய வேண்டாம். தெரிஞ்சா உங்க வேலை இருக்காது. அவ அப்பா அவள் மேல் உயிரையே வச்சிருக்கார். வேற ஏதாவது சொல்லி சமாளிட்சிடுங்க” என்றான் சரவணத்தமிழன்.
“நம்ம மேடமும் உடனே சரின்னு சொல்லிட்டாங்க" என்று முழுவதையும் சொல்லி முடித்தாள்.
"இவ்ளோ நடந்துருக்கா நம்ம மயக்கமானதால?" என்று தன்னையே கேட்டுக்கொண்டு இருக்க.
"யம்மா தாயே! அதோட விட்டாரா அவரு? எங்களையும் விடல." என்று கூறினாள்.
"என்ன?" என்று ஆச்சர்யமாய் பார்த்தாள் செல்வி.
"அட ஆமாடி! எங்ககிட்ட ‘நீங்க எல்லாம் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? ஒருத்தர் கெட்றது இல்லாம மத்தவங்களையும் சேர்த்து கெடுக்குறிங்க? உங்களால தான் இப்ப செல்வி இப்படி இருக்கா. அவ உயிருக்கு ஏதாவது ஆகியிருந்தா ரெண்டு நாள் அழுதுட்டு போயிருவீங்க. நீங்க செய்ற தப்பால காலம் முழுக்க அவள பெத்தவங்க அழுதுகிட்டே இருக்கணுமா? நீங்க எல்லாரும் ஒன்னும் சின்ன குழந்தைங்க இல்ல? எல்லாருக்குமே எல்லாம் தெரியும் அப்படி இருக்க, மேடம் உடம்பு சரி இல்லன்னா சான்ஸ் கிடைச்சுச்சுடுன்னு இப்படி தான் பண்ணுவிங்களா? உங்கள பெத்தவங்களுக்கு இது தெரிஞ்சா மறுபடியும் நீங்க எங்கயாவது போகணும்னு கேட்டா தனியா விடுவாங்களா? ஏதாவது செய்யறதுக்கு முன்னாடி ஒன்னுக்கு ரெண்டு தடவை யோசிச்சு செய்ங்க" என்று சொல்லிவிட்டு போய்ட்டார்” என்று முடித்தாள்.
ஏற்கனவே அவன் அடித்தும் கோபம் வராத நிலையில் இவை எல்லாம் கேட்ட செல்விக்கு அவளையும் அறியாமல் அவளின் மனம் அவனிடம் சாய்ந்தது.
அங்கிருந்து செல்வியை டிச்சார்ஜ் செய்து கூட்டி சென்றுவிட்டனர்.
காலில் சதை பிரண்டதால் அவளால் சரியாக நடக்க முடியவில்லை மாலாவின் உதவியோடு எல்லாம் செய்து கொண்டிருந்தாள். இரவு சாப்பிட்டு விட்டு மாத்திரை சாப்பிடாமல் நேரம் கடத்தி கொண்டிருந்தாள்.
இவளின் குணம் அறிந்த நமது நாயகன் அவளுக்கு கரெக்டாக கால் செய்தான்.
தன் மொபைலில் அவனின் பெயர் மின்ன நொடி நேரத்தில் பிரகாசமானது அவளின் முகம் ‘இது எப்படி என்கிட்டே அவன் நம்பர் இல்லையே?’ என்று யோசித்து கொண்டே எடுத்து அமைதியாய் இருக்க, ”ஹலோ!" என்றான் அவனே முதலில்.
"ஹலோ!" என்று இவள் மெலிதாய் கூற.
"சாப்பிட்டியா? கால் வலி இப்ப எப்படி இருக்கு?" என்று கேள்விகளை அடுக்கி கொண்டே போனான்.
"ஹம்! சாப்டேன். நீங்க சாப்டிங்களா?” என்றாள் மனதில் சிரித்துகொண்டு.
"இன்னும் இல்ல. இங்க மேரேஜ் ரிசப்ஷன் இப்ப தான் நடந்துட்டு இருக்கு. இனி தான் சாப்பிடனும்" என்று அமைதியாகிட.
"ஒஹ்!" என்றாள்.
"நான் கேட்டதுக்கு இன்னும் பதிலே சொல்லல கால் வலி எப்படி இருக்கு?" என்றான் மென்மையாய்.
"கால் வலி இல்லன்னுலாம் பொய் சொல்லமுடியாது ரொம்ப வலிக்குதுப்பா. எதுவுமே செய்ய முடியவில்லை" என்று சிறுகுழந்தை போல் சிணுங்க, சரவணன் சிரித்தபடி ”அப்புறம் கண்டிப்பா மாத்திரை போட்ருக்க மாட்டாயே?" என்று கேட்டான்.
‘ஐயோ! இவனுக்கு என்னை பத்தி தெரியும்ல’ என்று நாக்கை கடித்தாள்.
செல்வி அமைதியாகவே இருக்க,
"என்ன சவுண்டே காணோம். நான் சொன்னது கரெக்ட் தான?.. நீ இன்னும் மாத்திரை போட்ருக்க மாட்டியே" என்று கலகலவென சிரித்தான்.
அவனின் சிரிப்பு அவன் முகம் எதிரில் இல்லை என்றாலும் அவள் மனதில் நிழலாய் ஓடியது.
"இல்லை. இன்னும் போடல... ஒரு மாத்திரையே போட மாட்டேன்... இப்போ மூணு மாத்திரை கொடுத்துருக்காங்க. எப்படி சாபிட்றது?" என்று மீண்டும் சிணுங்கினாள்.
"அத ரேஸ் போறதுக்கு முன்னாடியே யோசிச்சிருக்கணும். சரி விடு. ஒரு கிளாஸ் தண்ணிய கைல எடு” என்றான்.
அவளும் அவன் வார்த்தைக்கு கட்டுபட்டவளாய் தண்ணீரை எடுத்துக்கொண்டு ”எடுத்துட்டேன்" என்றாள்.
"குட்! இப்போ மூணு மாத்திரையும் பிரிச்சு கைல வச்சிக்க. அப்புறம் அன்னார்ந்து கண்ண மூடி வாயில தண்ணி ஊத்திகிட்டு உனக்கு பிடிச்ச ஸ்வீட் ஏதாவது நினைச்சிட்டு மாத்திரைய அப்படியே போட்டு முழுங்கிடு” என்றான்.
அவளும் அவன் சொன்னபடியே செய்தும் முடித்தாள்.
"போட்டியா?" என்று அவன் குரல் கேட்ட பின் தான், தான் மாத்திரை போட்டதையே அவள் உணர்ந்தாள்.
"ஹையா! நான் மாத்திரை போடுட்டேனேன்" என்று சிறுபிள்ளை போல் அவள் மகிழ்வதை கேட்டு அவனும் புன்முறுவல் பூத்தான்.