Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஹாசினி சந்திரா - Comments

தீபா செண்பகத்தின் ஹாஸினி சந்திரா.
அரசியல் கதை போலிருக்குன்னு நினைச்சேன்.அரசியல்,கொலை,கடத்தல்ன்னு கதை பல கிளைகளுடன் பய்ணித்து செல்கிறது.
மறதி நோயில் அவதிப்படுபவரை வைத்து அரசியல் செய்யும் கூட்டம்.அப்பாவுக்காக தன்னை மாற்றிக்கொண்டு அரசியலில் இறங்குபவளை மணக்க துடிப்பவனையும்,அம்மா அப்பாவின் பாசத்தையும் சுமக்கும் ஹாஸினி.
இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்தாலும் மகள் மீது உயிராய் இருக்கும் சந்திரா.அவர் தங்கை அனுசூயாவின் வெறுப்பில் ஒதுங்கும் ஹாஸினியை அவர்மகன் தன் காதலால் நெருங்குகிறான்.கடத்தல்,அடையாளத்தை மறைத்தல் என அவன் செய்யும் அதிரடிகள்!
அந்த தீவும் அங்கு வரும் தங்கபாண்டியனும்,தொடரும் கண்ணாமூச்சி ஆட்டங்களும் நல்லா இருக்கு.
நன்றி சிஸ்.
 
வாழ்த்துக்கள் சகோதரி..
ஹாசினி சந்திரா ... படிக்க ஆரம்பிக்கும் போது இப்படி ஒரு கதைக்கரு எதிர் பார்க்கவில்லை.. மிகவும் அருமை...
thanks a lot
 
மேத்யூ உடனான ஹாசினியின் நட்பு,மேத்யூக்கு கிடைக்காத பாசம்,மது தன் மனதில் உள்ளவனை மேத்யூவிடம் மட்டும் பகிர்ந்தது,சி.பி.தேவ் தான் மதுவின் மனதில் இருப்பவன் என்பது தெரியாமல் தன்னிடம் ஒப்படைக்கச் சொன்ன மேத்யூ எல்லாம் அருமை சிஸ்...நட்பைத் தாண்டிய மேத்யூ மது பாசம் அழகு தான்..
 
சந்திரா மதுவின் திருமணம் அதன்பின் நடந்த கலாட்டா பேச்சுக்கள்,நிருபனின் பேபி டால்,அனுசுயா மனம் மாறினாலும் வெளியே சீரியசாக பேசியது எல்லாமே சூப்பர் சிஸ்...
 
மேத்யூவைப் பார்த்து தேவ் பொறாமை படறது வேற லெவல் யா...அது நீங்க போட்ட pic வந்துட்டானா செம சூப்பர்...அடையாளத்தை இழந்தது க்காக மதுவின் கண்ணீர்,அண்ணன் களின் கண்ணீர்,அனுசூயாவின் புலம்பல் எல்லாமே அழகா சொல்லகருக்கீங்க...
 

New Threads

Top Bottom