"சமுதாயத்தில் புரையோடி கிடக்கும் கௌரவ சிக்கல்களில் பலியான பல உயிர்களில் அவரது உயிரும் சேர்ந்துக் கொண்டது" என்ற இந்த வார்த்தைகள் மூலம் ஆசிரியர் சமூக சிக்கல்களை பிரதிபலிப்பது, சமூகம் பற்றிய ஒரு கால கண்ணாடியாக எதிர்காலத்தில் இலக்கிய தகுதிப் பெற்று நிலைத்து நிற்கும்!
அடுத்து, தன் மரணத்தின் போது தன் மகளை பார்த்ததும், "ஆவலாய் கண்களுக்குள் அவளின் பிம்பத்தை நிரப்பிக் கொண்டவர்.." என்று அவரது மன உணர்ச்சிகளை இலக்கிய நயமாக எத்துனை ஆழமாக ஆசிரியர் நமக்கு சொல்கிறார்!!
அடுத்து இன்னொரு இடத்தில், "காயங்களுக்கு மருந்தை காலம்தான் கையில் வைத்திருக்கிறது" என்று அற்புதமான கருத்தை சரியான இடத்தில் கூறியிருப்பது நன்கு ரசிக்கும்படியாக இருக்கிறது!
மொத்தத்தில் கதை நன்றாக வந்திருக்கிறது! பாராட்டுகளும் வாழ்த்துகளும் -அன்புடன் கரம்பயம் இரா.சந்திரசேகர்