Aara dilfar
Member
- Messages
- 46
- Reaction score
- 85
- Points
- 18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.
நிலவு - 25
ஆதி, நயனி திருமணம் நடந்து இரண்டு மாதங்களாகின. அவர்கள் உறவில் எந்த மாற்றங்களும் இல்லாது போனாலும் ஆதித்யன் மாறியிருந்தான் தண்டவாளம் போல் என்றும் சேராது என்று கூறியவனே அவளிடம் அவ்வப்போது நின்று பேசினான். முதலில் மற்றையவர்களுக்கு முன்னால் அதுவும் நடிப்பிற்காக மட்டுமே பேசிக் கொண்டருந்தவன் இப்போதெல்லாம் அவர்களின் அறையிலும் அதுவும் தேவைகளே இல்லாத போதும் அவளுடன் பேசினான். அவனின. இந்த மாற்றம் அவளுக்கு எல்லைநில்லா மகிழ்ச்சியைக் கொடுத்தது. தங்கள் உறவு இன்றில்லாவிடினும் ஒரு நாள் நிச்சயம் மலரும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனுமே தன் நாளை ஆரம்பிப்பாள் நயனதாரா.
அன்று காயத்ரி வேலையாக இருந்ததால் நயனிதான் சில முக்கியமான பொருட்கள் வாங்க கடைக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆடையை மாற்றிக் கொண்டு வந்தவள் மாமியாரிடம் சொல்லிக் கொண்டு வெளியேற அலுவலகத்திலிருந்து வந்திறங்கிய ஆதித்யன் அவளை அழைத்தான்
"தாரா எங்க போற?"
"கொஞ்சம் சாமான் வாங்க வேண்டியதா இருக்கு அதுக்குத்தான் சுப்பர் மார்கெட் போறேன்."
"அப்படியா சரி காருல ஏறு நானே கூட்டிட்டுப் போறேன்" தன் காதுகள் சரியாகத்தான் கேட்டதா என காதைத் தேய்த்துவிட அவள் செயலில் சிரித்தவன் அவள் அமர்ந்ததும் காரை ஸ்டார் செய்தான்.
வாங்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வாங்கிவிட்டு அதற்கு பில்போட ஆதித்யன் செல்ல நயனதாராவோ ஒரு ஓரமாய் நின்று அவன் வருகைக்காக காத்திருந்தாள். அந்த நேரத்தில் தான் அவள் கண்களில் பட்டாள் அவளுடைய நித்திக்கா. மற்றையது மறந்து அக்காவிடம் சென்றவள்
"நித்திக்கா" அந்தக் குரலில் ஆவலே வடிவாகத் திரும்பிய அந்த நித்திக்கா அவளைக் கண்டதும் கண் கலங்க அவளை சமாதானப்படுத்தியவள்,
"எப்படி இருக்கீங்கக்கா உங்களப் பார்த்து கதைச்சு எவ்வளவு நாளாச்சு. நீங்க தாருகிட்டக் கூட கதைக்குறல்ல என்று ரொம்ப கவலைப்பட்டா ஏங்க்கா இப்படியிருக்கீங்க. தனிமையான இந்த வாழ்க்கை உங்களுக்குத் தேவையா?" கேள்விகளை அடுக்க
"நான் நல்லா இருக்கேன் பப்பு எனக்கு துணையா என்னோட மகனிருக்கான் கல்விய சொல்லிக் கொடுக்குற ஆசிரியர் தொழில் இருக்கு எனக்கு யாருமே வேணாமென்றுதான் இப்படித் தனியா வந்திருக்கேன் சந்தோசமா இல்லாட்டியும் நிம்மதியா இருக்கேன் பப்பு."
"அக்கா நீங்க இந்த பப்புவ மறக்கல்லையா? இப்பவும் கூப்பிடுறீங்க என்னோட அச்சு மாமாதான் இப்படிக் கூப்பிடுவாங்க"
"வாழ் நாளுக்கும் சில விஷயங்கள மறக்க முடியாது பப்பு, சிலதை இழந்த பிறகுதான் நமக்கு அது முக்கியமென்று தோனும் சில நினைவுகளை மறக்கனும் என்ற காரணத்துக்காகத்தான் உன்னை அப்படிக் கூப்பிடுறதை நான் நிறுத்திக்கிட்டேன் ஆனால் இப்போ அதுதான் என்னை வாழ வச்சுட்டிருக்கு அதைவிடு நீ எப்படி இருக்க பப்பு"
"நல்லாயிருக்கேன் அக்கா" அப்போதுதான் அவள் கழுத்தில் கிடந்த கணமான சங்கிலியையும் உச்சிவகிட்டுக் குங்குமத்தையும் கண்டவள்
"ஏய் பப்பு உனக்கு கல்யாணமாயிடுச்சா?"
"ஓம் அக்கா இப்பதான் இரண்டு மாசமாகுது"
"ஹேய் அப்போ உன் வீட்டுக்காரரோட தான் இங்க வந்திருக்காயா எங்க அவரு?"
"ஓம் அக்கா அவர் பில் கவுண்டர்ல நிக்குறார். நானும் அங்க தான் நின்னேன் உங்களைப் பார்த்ததும் ஒன்னும் விளங்கல்ல அவர்ட்ட கூட சொல்லாம ஓடி வந்துட்டேன். அவர் வரட்டும் உங்களுக்கு அவரை அறிமுகப்படுத்துறேன். எங்க வீடு வெள்ளவத்தையில இருக்கு கட்டாயம் வீட்டுக்கு வாங்க அக்கா நீங்களும் இங்கதான் இருக்கீங்களா உங்க வீடு எங்க?
"நான் கல்கிஸ்ஸயில இருக்கேன் அதோ நிக்குறாங்களே அவங்க என் ப்ரெண்ட் அவ வீட்டுக்கு வந்தேன் அவ கொஞ்சம் பொருள் வாங்கனுமென்றா அதான் அவளோட இங்க வந்தேன்" என்றவளிடம் அவள் வீட்டு முகவரியையும் தொலைபேசி இலக்கங்களையும் வாங்கியவள் தன்னுடையதையும் அந்த நித்தியிடம் கொடுத்தாள்
"அதுசரி உங்க மகன் எங்க?
"இதோ ஆதுக் கண்ணா ஆன்ட்டிக்கு ஹாய் சொல்லுங்கோ" அவள் குழந்தையை அழைத்த பெயரில் நயனி சட்டென நிமிர்ந்து பார்க்க அந்தப் பார்வையை தவிர்த்தவள் குழந்தையிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க தன்னை சுதாகரித்துக் கொண்டு நயனதாராவும் குழந்தையிடம் தன் கவனத்தைச் செலுத்தினாள்
"அட இங்க இருக்கீங்களா செல்லம் உங்க பெயரென்ன? அக்கா இவனோட முழுப் பெயரென்ன?" சிறு தயக்கத்துக்குப் பின்
"ஆதித்யன்"
"என்னக்கா இதெல்லாம், எது வேணாமென்று அச்சு மாமாவைக் கஷ்டப்படுத்தினீங்களோ அதையே இப்போ நீங்க செஞ்சுட்டிருக்கீங்க இதுக்குப் பேசாம அவரையே கட்டியிருக்கலாமில்ல இந்த கஷ்டமே இருக்காதே. வாழ் நாள் முழுக்க ரெண்டு பேரும் சந்தோசமா இருந்திருப்பீங்களே பாவம் என் மாமா உங்களால கடும் கஷ்டப்பட்டுட்டாங்க. இப்போ எங்க இருக்காங்க என்றே தெரியல்ல. ஏன் அக்கா உங்க மகனுக்கு இந்த பெயர வச்சீங்க வாழ் நாள் முழுக்க என் மாமாவ மறக்காம இருக்கத்தானா?"
"என் வாழ்க்கையிலயும் சரி என் மனசுலயும் சரி இப்போ உன்னோட மாமா இல்லை ஏன்னா அவருக்கு கல்யாணமாகியிருக்கலாம் குழந்தைங்க கூட இருக்கலாம் ஆனால் என்னோட ஆது என்னைக் காதலிச்ச என் ஆது என் மனசுல இருக்கிறார் என்றைக்கும் இருப்பார். அதனாலதான் என் மகனுக்கு அந்தப் பெயர வச்சேன் என் ஆதுகிட்ட சொன்ன மாதிரி கடைசி மூச்சு வர அதைக் கூப்பிட்டுக்கிட்டே இருப்பேன் முன்ன மாதிரி அதை யாராலும் தடுக்க முடியாதில்ல. இப்போ அந்தப் பெயர் எனக்கு மட்டும்தான் சொந்தம்"
"ஏன் அக்கா அவர் பொண்டாட்டி அந்த பெயர வச்சு கூப்பிட்டா என்ன பண்ணுவீங்க" வீம்புக்கு கேட்ட நயனதாராவின் தலையில் ஒரு குட்டு வைத்தவள்
"கூப்பிடமாட்டா ஏன் தெரியுமா ஆது அதுக்கு அனுமதிக்க மாட்டார். என்னோட நினைவுகளக் கொடுக்குற எதையும் அவர் வாழ்க்கையில அனுமதிக்க மாட்டார். உன்கிட்ட ஒன்னு கேட்கவா? என் ஆதுவ கிட்டத்துல பார்த்திருக்காயா?"
"அக்கா நான் என் அச்சு மாமாவை கடைசியா அந்த நாள்லதான் பார்த்தேன் ஆனால் அதுக்குப் பிறகும் உங்களைப் பார்க்க வந்திருக்காங்க அப்படிப் பார்த்தா நீங்கதான் அக்கா மாமாவ கடைசியாப் பார்த்திருக்கீங்க" என்றவளின் கைகளை ஒரு வலிய கரம் இறுக்கிப் பிடிக்க சட்டென்று திரும்பிப் பார்த்தவள் ஆதித்யனைக் கண்டதும்
"நித்திக்கா இவர்தான் என் ஹஸ்பென்ட்..." என்று சொல்லி முடிப்பதற்குள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க
"உனக்கு அறிவில்லையா யாரோட பழகனும் கதைக்கனும் என்றது தெரியாதா போயும் போயும் இவளோட கதச்சிட்டிருக்க" என்றவன் அவளை இழுத்துச் செல்ல அவ்வளவு நேரமும் அதிர்ந்து நின்ற நித்தியின் உதடுகள்
"ஆது...." என்று உச்சரிக்க அவளையே பார்த்துச் சென்ற நயனியின் செவிகளில் அந்தப் பெயர் தெளிவாகவே விழுந்தது. ஆதித்யனைத் திரும்பிப் பார்த்தவளுக்கு வருந்துவதா மகிழ்வதா என்று தெரியாத நிலை. அவளை இழுத்து வந்தவன் காரினுள் தள்ளி ஓங்கி கதவைச் சாத்த அதிலே அவன் கோபம் பெண்ணவளுக்கு புரிந்தது. ஆனாலும் எதுவும் கேட்காது அமைதியாகவே இருந்தாள் அதற்கு இன்னுமொரு காரணம் கற்சிலையாக இறுகி இருந்த அவன் தோற்றமும்தான். இருவரிடையேயும் எந்தவித பேச்சுமின்றியே வீடு போய் சேர்ந்தனர். வீட்டிற்கு சென்றவன் பொருட்களுடன் அவளை இறக்கிவிட்டு அசுர வேகத்தில் காரைக் கிளப்பிக் கொண்டு சென்றான். தன் அறைக்குள் நுழைந்தவள் கதவைத் தாழிட்டு விட்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். அதன் பிறகு அவள் மனது லேசாக தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.
"அப்போ என் அச்சு மாமாதான் என் வர்த்தனா ஐயோ என்னால நம்பவே முடியல்லையே அதனாலதான் முதல் நாள் பார்த்தப்போ எங்கோ பார்த்த மாதிரி இருந்துச்சா. ஆனால் இவர் இப்போ கடும் கோபமா போயிருக்காரே அது என் மேல இருக்குற கோபமா இல்லை நித்திக்கா மேலயா? இவ்வளவு நேரமாச்சு அவர் இன்னும் வரல்லையே" அவள் தவித்துக் கொண்டிருக்க காயத்ரி அவளைத் தேடி வந்தார்.
"நயனிம்மா ஆதி உனக்கு போன் பண்ணினான் போல ஆனால் நீ எடுக்கல்லயாம் அதனால எனக்கு போன் பண்ணிருக்கான். இன்றைக்கு நைட் வீட்டுக்கு வரமாட்டானாம் ஏன்னா முக்கியமான டீலர்ஸ் கொஞ்சம் வந்திருக்காங்க போல அதனால அவங்க கூடவே நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிட்டானாம்."
"அத்தை வழமையா இப்படி நடக்குமா? சங்கரும் கூடத் தங்குறாரா?"
"ஓம் நயனி இது நடக்கும்தான் வழமையா சங்கரும் கூடத் தங்குவான் ஆனால் இன்றைக்கு என்னமோ அவன் வந்துட்டான் ஆதி மட்டும்தான் அவங்க கூட தங்குறான்."
"சரி அத்தை இப்போ சங்கர் எங்க?"
"ரூம்ல தான் இருக்கான்" என்றவர் அவளை சாப்பிட அழைக்க தனக்கு வயிறு சரியில்லை அதனால ஒருநாள் சாப்பிடாம இருந்தால் சரியாயிடும் என்று அவர் சமாதானமாகும் வகையில் கூறியவள் காயத்ரி அறையை விட்டு வெளியேறியதும் சங்கருக்கு அழைப்பை ஏற்படுத்தியவள்
"சங்கர் அண்ணா உங்க கூட கொஞ்சம் கதைக்கனும் மொட்ட மாடிக்கு வாரீங்களா?" அவன் சரி என்றதும் அழைப்பைத் துண்டித்தவள் மொட்டை மாடிக்குச் சென்றாள். சங்கர் வந்துவிட ஒரு சில கணங்கள் அமைதியாக இருந்தவள் அவனை நேராக நோக்கி
"அண்ணா அவர் எங்க?"
"கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கான்ம்மா முக்கியமான டீலர்ஸ் வந்திருக்காங்க"
"இது அத்தைக்கு சொன்ன கதை உண்மைய எங்கிட்ட சொல்லுங்கோ"
"என்ன நயனி சொல்லுறீங்க?"
"அத்தைகிட்ட நான் கேட்டன் வழமையா நீங்களும் தானாமே கூடப் போவீங்க இன்னைக்கு ஏன் அண்ணா போகல்ல"
"அது அது எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான்"
"நல்லா நடிக்குறீங்க ஆனால் அண்ணா ப்ளீஸ் என்கிட்ட இப்படி நடிக்க வேணாம்
அவர் ஏன் அங்க போய் ஒளிஞ்சுகிட்டாரென்று எனக்குத் தெரியும். நீங்க ஏன் தங்கல்ல என்றும் தெரியும்"
"......"
"உங்களுக்கிட்ட ஒன்னு கேட்கவா இல்ல சொல்லவா?"
"என்னம்மா புதிர் போடுறீங்க சரி என்ன கேட்கனுமோ கேளுங்க நயனி"
"சங்கரண்ணா வர்த்தன்தான் என்னோட அச்சு மாமாவா?"
"அச்சு மாமாவா அப்போ அப்போ நீ... நீ..."
"பப்பு" அவன் ஆச்சரியமாக கண்களை விரிக்க அவளோ சிரித்தாள்.
"பப்புவா ஐயோ என்னால நம்பவே முடியல்லையே."
"என்னாலேயும்தான் நம்ப முடியல்ல. ஆனால் எனக்கு ஒரு டவுட் இருந்துச்சு பட் அப்படியிருக்காதுன்னு விட்டுட்டேன்."
"ஆனாலும் நீ அப்போ சொன்ன மாதிரி உன் வர்த்தன இல்லயில்ல உன்னோட அச்சு மாமாவ கல்யாணம் கட்டிகிட்டயில்ல"
"அதத்தான் என்னாலயும் நம்ப முடியல்ல அங்கிள்"
"ஏய் நயனி ப்ளீஸ் இப்படிக் கூப்பிடாத பெரிய பொண்ணானதும் உங்களேயே கட்டிக்கிறேன் மாமா நீங்க கவலப்படாதீங்க என்று சொன்ன. அது உனக்கு ஞாபகமிருக்கா?" அவன் கேட்டதும் அவள் வெட்கப்பட்டவாறே தலையாட்ட
"சொன்ன மாதிரியே கட்டிக்கிட்டு வந்துட்ட ஆனால் இரண்டு பேருக்கும் யாருன்னு தெரியாமலே, ஆச்சரியமா இருக்குள்ள ஆனால் எனக்கும் உன்னை கொஞ்சமும் அடையாளம் தெரியல்ல நயனி"
"ஓம் அண்ணா அப்போ நான் சின்னப்புள்ளதானே அதனால நீங்க மதிக்கல்ல ஆனால எனக்கும் உங்களை அறவே ஞாபகமில்ல."
"இத இப்பவே ஆதிக்கிட்ட சொல்லனும்"
"ஐயோ அண்ணா ப்ளீஸ் நீங்க ஆதிகிட்ட சொல்ல வேணாம் நானே சொல்லிக்கிறேனே ப்ளீஸ் அப்போ அவர் முகத்துல வார சந்தோசத்தை நான் பார்க்கனும். அண்ணா இப்போ இது எல்லாத்தையும் விட முக்கியம் வர்த்தனோட மனநில இன்னைக்கு நித்திக்காவ கடையில பார்த்தோம் அண்ணா" நடந்ததைக் கூற
"தெரியும் அதனாலதான் அவன் தனியா தங்கியிருக்கான் அதோட வீட்டுலயும் சொல்ல வேணாம் என்று சொல்லிட்டான் அதனாலதான் மறச்சேன். ஆனால் சத்தியமா நீ பப்புவா இருப்ப என்று நினைக்கவே இல்லை. அதுசரி நீ பப்பு என்றால் உன் கூட சுத்திட்டு இருந்தாளே அந்த ரவுடி பேபி அவ எங்க?"
"ரவுடி பேபி தானே இருக்கா இருக்கா" லேசான சிரிப்புடன் சொல்ல
"என்ன பண்ணுறா கல்யாணம் ஆயிடுச்சா எத்தனை புள்ளைங்க இப்போ எப்படியிருப்பா" அவள் அடக்க முடியாமல் சிரிக்க சங்கர் புரியாமல் விழிக்க சிரித்து முடித்தவள்
"ரவுடி பேபி யாருன்னு தெரிஞ்சா நீங்க சாக்காகிடுவீங்க"
"அப்படியா எனக்குத் தெரியுமா அப்போ நான் அந்த ரவுடி பேபியப் பார்த்திருக்கேனா யாரவ?" ஆவலே உருவாக கேட்டான் சங்கரன்
"அதுவா அதுவா ரவுடி பேபி யார் தெரியுமா அது வேற யாருமில்ல உங்க தாரணி தான்"
"என்ன?" இன்பமாய் அதிர்ந்தவன் தன்னை சுதாகரித்துக் கொண்டு
"என்னோட தாரணியா என்ன சொல்லுற?"
"அண்ணா எனக்கு எல்லாம் தெரியும்."
"ஏன் அவ இந்த மாதிரி நடந்துக்குறா"
"அவளுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு ஆனால் அவ அதைச் சொல்லாம இருக்குறதுக்கு இவங்க காதல்தான் காரணம்."
"என்ன குழப்புற நயனி எனக்கு ஒன்றும் விளங்கல்ல."
"நித்திக்கா தாருவோட பெரியம்மா மகள் நித்திக்காவோட லவ் மெட்டர் அவங்க வீட்டுல தெரிஞ்சப்போ நித்திக்காவ உண்டில்லை என்று ஆக்கிட்டாங்க அதையெல்லாத்தையும் கூடயிருந்து பார்த்தவ அதனாலதான் உங்க காதல அவளால ஏத்துக்க முடியல்ல அவங்க வீட்ட நினைச்சுத்தான் ரொம்ப பயப்படுறா முக்கியமா அவங்க பெரியம்மாவ அதுதான் நித்தக்காவோட அம்மாவ ஆனால் ஒன்னு அவளுக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு அது மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்"
"உண்மையா என் தாருக்கு என்னப் புடிச்சிருக்கா?"
"ஓம் அங்கிள் உங்க ரவுடி பேபிக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு அங்கிள்" அவள் குழந்தை போல் பேசிக்காட்ட அவன் சிரித்தான்
"அண்ணா உடனே நான் தாருக்கு கோள் பண்ணனும் இந்த விசயத்தை சொல்லியாகனும்" என்றவாறே அழைத்தவள் மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும்
"தாரு தாரு உனகிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லனும்" தோழியின் குரலிலிருந்த உற்சாகம் அவளையும் தொற்றிக் கொள்ள என்ன விசயம் எனக் கேட்க
"தாரு என் வர்த்தன் யாரு தெரியுமா நம்ம சந்தேகப்பட்ட மாதிரி நம்ம அச்சு மாமா தான்டி"
"என்னடி சொல்லுற உண்மையாவா உனக்கெப்படித் தெரியும் அப்போ அவருக்கிட்ட கேட்டுட்டயா உங்களுக்குள்ள எல்லாம் ஓகே ஆயிடுச்சா"
"அதெல்லாம் ஒன்றுமில்ல தாரு நான் இன்னைக்கு நித்திக்காவ பார்த்தேன்" மறுமுனையில் சிறு அமைதி
"என்னடி சொல்லுற அக்கா எப்படியிருக்காங்க"
"நல்லா இருக்காங்க." என்றவள் அன்றைய விபரங்களைக் கொடுத்து விட்டு
"உனக்கு இன்னொரு செப்ரைஸ் இருக்கு கொஞ்சமிரு உன் கூட ஒருத்தர் கதைக்கனுமாம்" அவள் அலைப்பேசியை சங்கரிடம் கொடுக்க
"ஹாய் ரவுடி பேபி"
"நீங்களா எதுக்காக நயனி போன்ல இருந்து கதைக்குறீங்க உங்களுக்கு வேற வேலையே இல்லையா அவளுகிட்ட போனைக் கொடுங்க அதுசரி இப்போ நீங்க என்ன சொன்னீங்க ரவுடி பேபியா உங்களுக்கெப்படி....?" சத்தமிட்டவள் சிந்தனையில் ஆழ
"ஏய் ரவுடி நல்லா யோசிச்சு சொல்லு என்னைத் தெரியல்லையா?"
"ஹேய் அங்கிள் நீங்களா?"
"ஓம் ரவுடி பேபி நானேதான் ஆனால் தயவு செஞ்சு அங்கிள் என்று மட்டும் கூப்பிடாத"
"அப்போ என்ன என்று கூப்பிடனும்"
"உனக்குப் புடிச்ச மாதிரி எப்படி வேணுமென்றாலும்"
"அப்படியா என்ன வேணுமென்றாலுமா?" அவளின் குறும்பு புரிந்தவன்.
"ஐயோ அதுக்காக ஐஞ்சறிவுல கூப்பிட்டுறாதம்மா"
"சரிங்க அ... இல்லல்ல கரன்"
"கரனா?"
"நீங்கதானே எனக்குப் புடிச்ச மாதிரி கூப்பிட சொன்னீங்க" அதில் அவள் மனது புரிந்தவன் நயனியின் கைப்பேசியை அவளிடம் கொடுத்துவிட்டு தன் பேசியிலிருந்து அழைத்தவன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான். அவனிடமிருந்து கைப்பேசியை வாங்கிக் கொண்டு தன் அறைக்கு வந்த நயனிக்கு பழைய நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கின. அதே நேரம் கெஸ்ட்ஹவுஸில் தன் மனதுடனே போராடிக் கொண்டிருந்தவனின் நினைவுகளும் அந்த நாட்களுக்கே திரும்பியது.
வளரும்.....
Please share your comments here👇
www.sahaptham.com

ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Comments
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...