Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

யாரோ இவள் - Tamil Novel all episodes

NITHYA MARIAPPAN

Saha Writer
Messages
15
Reaction score
13
Points
1
1

" பூ பூக்கும் ஓசை அதை கேட்க தான் ஆசை!

புல்வெளியின் ஓசை அதை கேட்க தான் ஆசை!"

காலையிலேயே அலறிக் கொண்டிருந்தது அந்த மொபைல்.

அதற்கு சொந்தக்காரியோ வெளிர் பச்சை நிற லாங்க் சுடிதாரில் தயாராகிக் கொண்டு இருந்தாள்.

" பசி கொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோச சங்கீதம்!" இந்த வரி வந்ததும் அவள் ரூமை விட்டு வெளியே வந்து அங்கு சமைத்து கொண்டிருந்த அந்த 5.5 தேவதையை பார்த்து " யோகா!! இன்னிக்கு என்ன சமையல்?" என்று ராகமாக கேட்டாள்.

" இன்னிக்கு உப்புமா தான் மை டியர் கீத்து" என்று பதிலளித்தவள் " இந்த ரியா இன்னும் எழுந்திருக்கலையா? நைட் ஃபுல்லா ஃபோன்ல அவினாஷ் கூட சண்டை. இது இப்படியே போனா சரி வராது கீத்து" கவலையாக கூறினாள்.

இது அனைத்தையும் பொறுமையாக கேட்ட அவள் தான் கீதா. நம் ஹீரோயின். வயது 23 . அவளுக்கு என்று இருப்பவர்கள் 4 அழகான நண்பர்கள். ஒன்று யோகா., இரண்டாவது ஆள் தான் இப்போது தூங்கி கொண்டு இருக்கும் ரியா.

மூன்றாவது ஆள் மதுரையில ஒரு இன்ஜினியரிங்க் காலேஜ் இறுதியாண்டு வகுப்பில் உட்கார்ந்து பாடம் கவனித்து கொண்டிருந்தான். அவன் தான் ஜெயசந்திரன். சுருக்கமாக ஜேஸி.

முக்கியமான விஷயம் இவங்க எல்லாரும் முகப்புத்தகம் (facebook) மூலமாக நண்பர்கள் ஆனவர்கள். கீதா சென்னையிலே வளர்ந்திருந்தாலும், யோகாவும் ரியாவும் தவிர அவளுக்கென்று இங்கிருக்கும் ஒரே தோழி ஸ்ரீதேவி. அவளும் இப்போது தான் கல்லூரி இறுதியாண்டு படித்து கொண்டிருந்தாள். வார இறுதியில் 4 பேரும் ஏதாவது ரெஸ்டாரண்டில் சந்தித்து அந்த வாரம் முழுவதும் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது வழக்கம்....

சி.ஏ இண்டர்மீடியட் முடித்த கையுடன் ஒரு பெரிய ஆடிட்டரிடம் ஆடிட் அஸிஸ்டெண்டாக சேர்ந்தாள் கீதா. அந்த நேரத்தில் யோகாவுக்கும் சென்னையிலுள்ள ஒரு பிரபல அழகு நிலையத்தில் வேலை கிடைக்கவும், அவள் கீதாவிடம் தனக்கு ஹாஸ்டல் பார்த்து தருமாறு கேட்கவும் அவள் தன்னுடைய வீட்டில் தன்னுடனே தங்கி கொள்ளுமாறு கூற அவளுக்கும் சந்தோசமே. இனிமே 24 மணி நேரமும் கீதா கூடவே இருக்கலாம்....

ரியாவுக்கும் பிரபல ஐ.டி கம்பெனியில் வேலை கிடைக்கவும் அவளும் இவர்களுடனே வந்து விட்டாள்.

ஸ்ரீதேவி இளம்வயதில் தாயை இழந்தவள். அவளுக்கு கீதா மேல் தனி பாசம். அவளுடைய சீனியர் வாழ்க்கையில் தனியாளாக நின்று ஜெயிப்பது பார்த்து ஆச்சரியப்பட்டு அவளிடம் தோழியாக இணைந்தவள்...

இந்த 4 நண்பர்களை பொறுத்த வரை கீதா ரொம்ப திறமையான அன்பான பெண். ஆனால் உலகத்தை அவள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது அவர்கள் நால்வரின் கருத்து. அதனால் எந்த ஒரு சின்ன விஷயத்திற்குமே கீதா அவர்களின் ஒப்புதலை கேட்பது வழக்கமாகி விட்டது.

நேரே ரூமுக்குள் நுழைந்தவள் ரியாவை பார்த்து புன்னகைத்து விட்டு நேராக தன்னுடைய குடும்பத்தினரின் புகைப்படத்திற்கு அருகில் நின்றாள்.

ஆம்! அவளுடைய 12வது வயதில் ஒரு மோசமான விபத்தில் அவளுடைய முழு குடும்பமும் பலியானது. சாலையோரம் ஐஸ் க்ரீம் சாப்பிடுவதற்காக நிறுத்திவைத்திருந்த காரில் லாரி வந்து மோதியதால் அனைவரும் அந்த இடத்திலேயே அவள் கண் முன்னே இறந்தது இன்று நடந்த மாதிரியே அவளுக்கு தோன்றியது.

ஐஸ் க்ரீம் வாங்க அவளுடன் வந்ததால் அவளுடைய அப்பாவின் தோழர் கண்ணனும், அவருடைய மனைவி அபிராமியும் தப்பித்தனர்.

குடும்பத்தை இழந்த அதிர்ச்சியில் இருந்த அவளை அப்படியே விட்டு செல்ல அபிராமிக்கு மனமில்லை. அவளை தங்களுடனே சென்னை அழைத்து வந்து சொந்த மகளாக வளர்த்தனர்,

அவள் சி.ஏ சேரும் நேரம் கண்ணனுக்கு அமெரிக்காவில் ஒரு பெரிய நிறுவனத்தில் சேர அழைப்பு வரவும், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள் கீதா. தினமும் ஸ்கைப்பில் கீதாவுடன் பேசாவிட்டால் அபிராமிக்கு தலையே வெடித்து விடும்.

அவர்களை பற்றி யோசித்து கொண்டு கண்ணில் எப்போதும் போல நிரம்பி கன்னத்தில் வழிய தொடங்கிய கண்ணீரை துடைக்கும் போதே அவளுக்கு போனில் கால் வந்தது.

" ஹலோ! பாக்கியநாதன் அங்கிள், நீங்க ஸ்டேஷன் ரீச் ஆயிட்டிங்களா?? நான் இதோ கிளம்பிட்டேன்" என்று அவசரமாக ஹேண்ட்பேக்கை மாட்டி கொண்டு கிளம்பினாள்.

பாக்கியநாதனும் அவளுடைய முகப்புத்தக நண்பர் தான். சமீபத்தில் அவருடைய மனைவியை இழந்தவர் சொந்த ஊரான திருநெல்வேலியில் தனித்திருப்பது சரியல்ல என்று தோன்றவும் சென்னையிலுள்ள மகன் தன்னுடனே வந்து விடுமாறு கூற அவர் சென்னை வந்து சேர்ந்தார்.

அவருடைய மகன் அலுவலக வேலையாக சென்றதால் அவரை வீட்டில் சென்று விடும் பொறுப்பை கீதா ஏற்றுக்கொண்டாள்.

இதோ அவரை அழைத்து வர கிளம்பி விட்டாள்.....​
 
அத்தியாயம் 2

Haaren, Germany

அதிகாலை குளிர் காற்றில் பால்கனியில் வந்து நின்றான் அவன். ஆறடி உயரத்தில் கலைந்திருந்த சிகையை காற்று இன்னும் சற்று அதிகமாக கலைக்க அந்த காலை நேர அமைதியுடன் தூரத்தில் தெரிந்த சிட்டி சென்டரை பார்த்து கொண்டிருந்தான் அவன். பின்னர் போர் அடிக்கவே போனில் நேரம் பார்த்தான்.

" ப்ச், இந்தியால இப்போ 9 ஓ கிளாக் இருக்கும். இப்போ கால் பண்ணா இந்த லூசுங்க ஃபோன் எடுக்காதுங்க. பட் போர் அடிக்குதே! என்ன பண்ணலாம்" என்று புலம்பியவனின் சத்தம் கேட்டு விழித்தான் அவன் நண்பன் .

" வருண் நேத்து தானடா வெகேசன் போய்ட்டு வந்தோம். உனக்குலாம் டயர்டே ஆகாதா தெய்வமே?"

" பிரியாக்கு கால் பண்ணி வெகேசன் எப்படி இருந்துச்சுனு சொல்லி காண்டாக்கலாம்னு நெனைச்சேண்டா! பட் இப்போ அவ காலேஜ் போயிருப்பா. அதான் என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன்" என்று பதிலளித்தான் வருண்.

" டேய்! நீயும் உன்னோட கஸின்சும் எப்படியோ போங்கடா. அதுக்கு ஏன்டா பொலம்பியே என்னோட தூக்கத்த கெடுத்த?" என்று சொல்லி கொண்டே போர்வையை கொண்டு தலையை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்தான் அரவிந்த்.

பால்கனியில் இருந்த சோபாவில் அமர்ந்து முகப்புத்ததகத்தினுள் நுழைந்தான்.

" ஓ வாவ்! நேத்து குடுத்த ரெக்வஸ்ட அந்த பொண்ணு அக்செப்ட் பண்ணிட்டா. அவளுக்கு மெசஞ்சர்ல ஒரு வேவ் பண்ணி தான் பாப்போமே" என்று வேவ் செய்தான் வருண்.

பதில் வராததால் அவளுடைய ஆன்லைன் ஸ்டேட்டஸ் என்ன என்று பார்க்கையில் அது பச்சை புள்ளி காண்பித்தது.

" அது சரி! எந்த பொண்ணு தான் உடனே ரிப்ளை பண்ணுச்சு... அப்படிலாம் நடந்தா டிரம்பும், கிம்மும் ஃப்ரெண்டா ஆயிட மாட்டாங்க!!! இந்த பொண்ணுங்களும், அவங்க ஆட்டியூடும் ஒட்டி பொறந்ததாச்சே" என்று புலம்பிய படியே அவளுடைய புரஃபைலை பார்க்க ஆரம்பித்தான்.

அவன் வருண். பிறந்து வளர்ந்தது எல்லாமே திருநெல்வேலியில். பி.இ முடித்துவிட்டு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்தவனின் கனவு வெளிநாட்டில் எம்.இ முடிப்பது என்று தெரிந்து கொண்ட அவன் தந்தை அனுமதியுடன் ஜெர்மனியில் படித்து கொண்டிருப்பவன்...

முதலில் குடும்பத்தை பிரிந்து செல்வது வருத்தமாக இருந்தாலும் அவனுடைய கஸின்ஸ் கொடுத்த தைரியத்தில் அவனும் ஜெர்மனியின் வாழ்க்கை ஓட்டத்தில் கலக்க ஆரம்பித்தான் அவன்.

பொங்கல், தீபாவளி எல்லாமே சேர்ந்து கொண்டாடியது , சென்னையில் இருந்த போது வார இறுதியில் சுற்றியது, ஊர் திருவிழாவில் லூட்டி அடித்தது எல்லாமே நினைவில் வரவும் அவனுக்கு எப்போது இந்தியா செல்வோம் என்று இருந்தது.

திடீரென்று தோன்றவும் ஸ்கைப்பில் கால் செய்தான் வருண்.

முதலில் அனு, அவனுடைய சித்தி மகள் " அண்ணா! என்னாச்சு, காலங்காத்தால வீடியோ கால்?" என்று ஆச்சரியமாக கேட்டாள்.

ஸ்கிரீனில் தெரிந்த அவள் முகத்தை பார்த்து புன்னகைத்து கொண்டே "எங்க போச்சு அந்த பிரியா வாலு? கூப்டு அவளை" என்றான் வருண்.

அவன் சொன்னது தான் தாமதம் பிரியாவும் அவள் அக்கா ரேவதியும் அங்கு பிரசன்னமாயினர். கான்ஃப்ரென்ஸில் மற்ற அனைவரையும் இணைக்கவும் “இவன் ஏதோ பஞ்சாயத்து பண்ண போறான்” மனசுக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள் பிரியா.

" ஓகே, பதினெட்டு பட்டியும் வந்தாச்சா?" வருண் கேக்கவும் அனு " அண்ணா மேட்டருக்கு வாங்க " என்று அவனை காலை வாரினாள்.

நேத்ரா " என்னாச்சு வருண், உனக்கு ஏதும் உடம்பு சரியில்லையாடா" என்று அக்கறையுடன் வினவவும் அதை மறுத்தான் வருண்.

" பவா, மீருகுட்டி, ஜானு எல்லாரும் வந்தாச்சா? லோகேஷ் எங்க போனான்?" என்று வருண் கேக்கவும் " எல்லாரும் பிரசண்ட் அண்ணா. விஷயத்தை சொல்லுங்க" இது லோகேஷ்.

" நான் வெகேசனுக்கு அம்ஸ்டர்டாம் போய்ட்டு வந்தேன்" என்று அவன் கூலாக கூறவும் அனைவரும் அவனை வெட்டவா, குத்தவா என்று பார்த்தனர்.

" நீங்க, அந்த குரங்கு அரவிந்த் எல்லாரும் ஊர் சுத்துனது ஃபுல்லா ஃபேஸ்புநாங்க பாத்துட்டோம். இந்த அரிய தகவலை சொல்லவா எங்க எல்லாரையும் கூப்டிங்க அண்ணா?" என்று பல்லை கடித்தாள் அனு.

" நோ டியர்! ஆக்சுவலி நான் எல்லாரையும் கான்ஃபெரன்ஸ்ல கூப்டதுக்கான காரணம் நான் டிசம்பர்ல இந்தியா வர முடியாதுனு சொல்ல தான்" என்று வருண் சொல்லி முடிப்பதற்குள் அங்கே ரேணுகா அழ தயாரானாள்.

" நீ விளையாடிறியா வருண்?? அப்போ ரேணு எங்கேஜ்மெண்டுக்கு நீ வர மாட்டியா?" என்று அதிர்ச்சியுடன் வினவினாள் நேத்ரா.

" நான் ஜூன்ல ரேணு மேரேஜ்கு வரணும்னா டிசம்பர்ல என்னோட எல்லா வொர்க்கையும் கம்ப்ளீட் பண்ணியாகணும். அதுக்காக தான் உங்க கிட்ட முதல்ல சொன்னது. எப்படியாச்சும் அம்மா, சித்தி, பெரியம்மா, ஆச்சி, அத்தை எல்லாரையும் சமாளிங்க ப்ளீஸ்" என்று ஸ்கிரீன் முன்னாடி தோப்புக்கரணம் போடவும் ரேணுகா சிரிக்க ஆரம்பித்தாள்.

" ரேணு சிரிச்சதால உன்ன விட்டுடறோம். கல்யாணத்துக்காச்சும் ஸார் வருவிங்களா இல்ல அதுக்கும் ஏதாச்சும் சாக்கு போக்கு சொல்லுவீங்களா?" என்று பிரியா கேட்டாள்.

" மதர் பிராமிஸ். நான் மேரேஜூக்கு ஒன் மன்த் முன்னாடியே இந்தியா வந்துடுவேன்"

" உன்னை நாங்க எவ்ளோ மிஸ் பண்ணுறோம் தெரியுமா? நம்ப கேங் நீ இல்லாம ரொம்ப போர் அடிக்குது வருண். எல்லாரும் சொல்லுவாங்க, வருணுக்கு கல்யாணம் ஆகி பொண்டாட்டினு ஒருத்தி வந்துட்டா உங்க சேட்டையெல்லாம் அவ கிட்ட செல்லுபடி ஆகாதுனு. அப்படி ஒருத்தி வர்ரதுக்கு முன்னாடி கொஞ்ச நாளாச்சும் நம்ம ஃப்ரெண்ட்ஷிப்ப என்ஜாய் பண்ணும்கிறது என்னோட ஆசை வருண்" என்று வருத்தத்துடன் சொன்னாள் ரேவதி.

அவள் வருத்தப்படுவதற்கும் காரணம் உள்ளது. உறவுமுறையை கடந்த நட்பு அவர்களுடையது. அதை யாருக்காகவும் விட்டுத் தந்தது இல்லை அவர்கள். படிப்பு காரணமாக வருண் வெளிநாடு செல்லும் வரை ஒன்றாய் திரிந்தவர்களுக்கு திடீரென்று அவன் பிரியவும் வருத்தம் தான். இருந்தாலும் அவ்வபோது பேசும் வீடியோ கால்கள் அவர்களின் நட்பை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

" டோண்ட் வொரி! நம்ம கேங் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்கு கட்டுப்படுற பொண்ண தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன் போதுமா??? நம்மள பிரிக்க யாரும் வர மாட்டாங்க. அடியே சொல்லிட்டே இருக்கேன், நீ இன்னும் உன்னோட வாட்டர் டேமை குளோஸ் பண்ணலையா" என்று காமெடியாக பேசி ரேவதியை சமாதானப்படுத்தினான்.

இப்படியே அவர்கள் சண்டை கலாட்டாக்கள் பண்ணி முடித்து 2 மணி நேரம் பேசி சிரித்துவிட்டு அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.

இவர்கள் தான் வருணின் சொந்தங்கள். சிறுவயதிலிருந்தே பசை போட்டு ஒட்டியதை போல திரிவார்கள் இவர்கள் அனைவரும். அதிலும் நேத்ரா அனைவரிலும் மூத்தவள் என்பதால் அவள் மட்டும் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்வாள். மற்ற அனைவரும் வாலில்லா வானரங்கள். வருணுடைய இந்த அழகிய குடும்பம் மிக பெரியதும் கூட..

வருணின் தாத்தா சுந்தரமூர்த்தி பாட்டி மீனாட்சியம்மாளுக்கு பிறந்தவர்கள் ஐந்து வாரிசுகள். அதில் மூத்தவர் சுவாமிநாதன். அவருக்கு பின் பிறந்தவர் தான் சுகன்யா. வானதியும் சங்கரநாராயணனும் இரட்டை குழந்தைகள். இறுதியாக பிறந்த பிரேமா அனைவருக்கும் செல்லம். சிறுவயதிலிருந்தே இந்த சகோதர சகோதரிகளுக்கு இடையே பிரிக்க முடியாத பிணைப்பு.

இதில் சுவாமிநாதன், மாலதிக்கு பிறந்தவர்கள் தான் வருணும், ரேணுகாவும். சுவாமிநாதனின் மூத்த தங்கை சுகன்யா, சிவராமன் தம்பதிக்கு பிறந்தவள் நேத்ரா. வீட்டின் மூத்த பேரக்குழந்தை என்பதால் அவள் எல்லாருக்கும் செல்லம். அவளது திருமணம் தான் வருண் தன் குடும்பத்தினருடன் இருந்த கடைசி இனிமையான தருணம். அதற்கு பிறகு அவன் ஜெர்மனி வந்து விட்டான்.

சுவாமிநாதனின் இரண்டாவது தங்கை வானதியின் மகள்கள் ரேவதியும், பிரியாவும். ரேவதி ஒரு பிரபல நிறுவனத்தில் சீனியர் அக்கவுண்டெண்ட். பிரியா ஃபேஷன் டெக்னாலஜி இறுதியாண்டு மாணவி.

கடைசி தங்கை பிரேமாவுக்கு பிறந்தவர்கள் மீரா மற்றும் ஜானவி. சுவாமிநாதனின் தம்பி சங்கரநாராயணனின் வாரிசுகள் அனுராதா மற்றும் லோகேஷ். அனு என்றால் வருணுக்கு கொள்ளை பிரியம். அவளுக்கும் லோகேஷை விட வருணை தான் மிகவும் பிடிக்கும்.

இந்த பெரிய குடும்பத்தை கணவரின் காலத்துக்குப் பிறகும் பிரிந்து போகாமல் காப்பாற்றி வருபவர் தான் வருணின் ஆச்சி (பாட்டி) மீனாட்சி அம்மாள்.

இப்போது வருணின் நிலையை பார்ப்போம்.....

" 2 ஹவர்ஸ் முன்னாடி நான் வேவ் பண்ணேன். இன்னும் இந்த பொண்ணு ரிப்ளை பண்ணல. சரியான ஆடிட்டியூட் அலமேலு. பட் ஆளை பாத்தா அப்படி தெரியலயே. சிரிக்குறத பாரு ஈஈனு" என்று அவளுடைய புரஃபைல் பிக்சரை பார்த்து அவளை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தான் அவன்.

" ஒண்ணு சொல்லியே ஆகணும். யூ லுக் வெரி க்யூட் லைக் அ சைல்ட்" என்று சொல்லிக்கொண்டே அவள் பெயரை உச்சரித்தான் " கீதா கிருஷ்ணமூர்த்தி".....​
 
அத்தியாயம் 3

தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்.....

வழக்கம் போல மக்கள் வெள்ளம் அலைமோத அதில் நீந்தியபடியே நடை மேம்பாலத்தின் படிகளின் இறங்கினாள் கீதா. அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவளின் அலையான கேசம் துள்ளி விழ வேகமாக பிளாட்பாரத்தை நோக்கி சென்றாள் அவள்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருக்க ஜன திரளுக்கு நடுவே பாக்கியநாதனை தேடினாள் கீதா. அவரை பிளாட்ஃபார்ம் பெஞ்சில் பார்த்ததும் வேகமாக அவரிடம் சென்றாள்.

" அங்கிள் ட்ரெயின் ஜர்னி எப்படி இருந்துச்சு "

" கீதா! கீதா தானே ... அடையாளமே தெரியலைம்மா.. பிரயாணம் ரொம்ப நல்லா இருந்துச்சு.. ஃபர்ஸ்ட் ஏ.சி..நிம்மதியா தூங்குனேன்டா " என்றார் பாக்கியநாதன்.

“ அப்புறம் எப்பிடி இருக்கிங்க எக்ஸ் மிலிட்டரிமேன்?? அண்ணா இத்தனை தடவை கெஞ்சுசனதுக்கு அப்புறமா தான் உங்களுக்கு சென்னை வர மனசு வந்துச்சு இல்ல” என்று கேட்டவளை சாந்தமான முகத்துடன் பார்த்து புன்னகைத்தார் பாக்கியநாதன்.

“ எனக்கு லெட்சுமி இருந்த இடத்தை விட்டு வர்ரதுக்கு இஷ்டம் இல்லடாம்மா. எதோ உன் அண்ணன் சொன்னான்னு இந்த ஊரை பாக்க வந்திருக்கேன்” என்றார் அவர் களைப்பான குரலில்.

" அஹான்! இவ்ளோ டல்லாவா பேசுறிங்க? இருங்க உங்க பேரன் கிட்ட சொல்லி உங்களை அவன் பின்னாடி ஓட வைக்கிறேன்” என்று கலாய்க்கவும் அவர் சிரித்தார். அவரை வாஞ்சையுடன் பார்த்தவள் “ ஓ.கே அங்கிள்! அண்ணி உங்களுக்காக வெயிட்டிங்...இதோட 10 தடவை கால் பண்ணீட்டாங்க.. நம்ம கிளம்புவோமா" என்று கேட்டுவிட்டு அவர் வைத்திருந்த பேக்கை தூக்கிக் கொண்டாள்.

" ஆட்டோலயாடா???" என்றவரை இடுப்பில் கை வைத்து பொய்யாக முறைத்தவள் " என்னோட பிங்க்கி உங்களுக்காக வெளியே நிக்குது அங்கிள் ...அது மட்டுமில்லாம இங்க நீங்க ஆட்டோலயே எல்லா இடத்துக்கும் டிராவல் பண்ணா திருநெல்வேலில இருக்கற உங்க சொத்து ஒரே மாசத்துல ஷ்வாகா ஆய்டும் " என்று சொல்லி அவரை வெளியே அழைத்து வந்தாள்.

அவரும் பேச்சுத்துணைக்கு ஒரு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் பிரயாணத்தில் நடந்த நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே வர அதை தலையாட்டி கேட்டுக் கொண்டே கீதா ஸ்கூட்டியை ஓட்டினாள். சிறிது நேரத்தில் இருவரும் கீதாவின் ஸ்கூட்டியில் வீட்டில் வந்து இறங்கினர்.

பாக்கியநாதன் காம்பவுண்டுக்குள் நுழையவும் அவரின் பேரன் அஸ்வத் வந்து கட்டிக் கொண்டான். அவனை தூக்கியபடியே வீட்டிற்குள் நுழைந்தவரை மருமகள் மீனா வரவேற்றாள்.

" வாங்க மாமா...ட்ரெயின் வசதியா இருந்துச்சா ?? அஸ்வத் தாத்தா இப்போ தானே வந்திருக்காங்க...அவங்கள தொல்லை பண்ணாம அம்மா கிட்ட வா"

" அவன் இருக்கட்டும்மா" என்றார் பாக்கியநாதன்.

" மாமா உங்களுக்கு ஹீட்டர் போட்டருக்கிறேன். குளிச்சிட்டு வாங்க" என்று கீதாவின் புறம் திரும்பி " நீ இன்னிக்கு எஸ்கேப் ஆக முடியாது . எங்க கூட பிரேக்பாஸ்ட் முடிச்சிட்டு தான் போகணும்" என்று கட்டளையிட கீதாவோ " ஐயோ அண்ணி...அங்க யோகா டிபன் எனக்கும் சேத்து ரெடி பண்ணீட்டா...இப்போ வேண்டாம்னு சொன்னா ஐ யாம் காலி " என்று சொன்னவளை செல்லமாக கோவித்தாள் மீனா.

" இன்னொரு நாள் கண்டிப்பா வந்து நீங்க செய்யுற எல்லா டிஷ்சையும் கதம் பண்ணுறேன் .இப்போ கிளம்புறேன். பை அங்கிள் ....போய்ட்டு வரேன் அண்ணி ...லவ் யூ அத்து பை டியர் " என்று அஸ்வத்தின் கன்னத்தில் முத்தமிட்டவள் வேக வேகமாக ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

அவள் அவசரமாக செல்வதை பார்த்த பாக்கியநாதன் இவளுக்கு என்னாச்சு என்பதை போல் மருமகளை பார்க்க " கீத்து ப்யூர் வெஜிடேரியன் மாமா...இன்னிக்கு சன் டே... நீங்க வரீங்கனு நான் நான்-வெஜ் சமைச்சிருக்கேன். எங்க இருந்தா சாப்ட சொல்லிடுவோம்னு பயபுள்ள பயந்து ஓடுது! நீங்க வந்து ரெஸ்ட் எடுங்க மாமா" என்று சொல்லி விட்டு உள்ளே செல்லவும் அஸ்வத்தும் பாக்கியநாதனும் சிரித்துக் கொண்டே மீனாவை தொடர்ந்து உள்ளே சென்றனர்.

மீனாவிடம் பேசிவிட்டு கிளம்பிய கீதா அன்று ஞாயிறு என்பதால் வேறு எந்த வேலையும் இல்லாமல் போக , நேரே ஸ்கூட்டியை வீட்டை நோக்கி விரட்ட ஆரம்பித்தாள். கேட்டை திறந்து ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டு உள்ளே நுழைந்த கீதாவின் காதில் ரியா யாருடனோ சண்டை போடும் சத்தம் கேட்டது...

பதற்றத்துடன் உள்ளே சென்றவள் ரியா போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தவள் அங்கு நின்ற யோகாவிடம் என்னாச்சு என்று கண்ணால் கேட்டதும் அவள் பொறுக்குமாறு சைகை காண்பிக்கவும் கீதாவும் கையைக் கட்டிக் கொண்டு நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்...

" லுக் அவினாஷ்..இனியும் நீ சொல்ற கதைய நம்ப நான் ஒன்னும் இனா வானா இல்ல..ஷட் அப்..இட்ஸ் ஓவர் " என்று சொல்லி காலை கட் செய்து விட்டு அவர்கள் இருவரையும் பார்த்தாள்.

அவளை ஒரு நிமிடம் பார்த்து விட்டு இருவரும் கிச்சனுக்குள் செல்லவும் ரியாவும் அவர்களை தொடர்ந்தாள்.

" வாட் ஹேப்பன்ட் யோகா??? அவிக்கும் ரியாக்கும் அகெய்ன் என்ன ப்ராப்ளம் ??"

அங்கே வேகமாக வந்த ரியா "உன்னோட செல்ல ஃப்ரெண்ட் அவிக்கு ஊர் ஃபுல்லா கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்… அதான் என்னோட ப்ராப்ளம்" என்று சொல்லிவிட்டு மூச்சு வாங்கினாள்.

"என்னடி நடந்துச்சு?? " என்று யோகா கேட்டுக் கொண்டிருக்கும் போதே கீதாவின் நோட்டிஃபிகேஷன் சவுண்ட் கேக்கவும் நிதானித்த ரியா " என்ன நோட்டிஃபிகேஷன் அது ??" என்று கேட்கவும் கீதா " டேட்டா ஆன் பண்ணதும் மெசெஞ்சர்ல நோட்டிஃபிகேஷன் வருது...வேற எதுவும் இல்ல..." என்று பதிலளித்தாள்.

" மெசெஞ்சர் அதால தான் என்னோட லைஃப் நாசமா போச்சு..ஃபர்ஸ்ட் அத அன்இன்ஸ்டால் பண்ணு " என்று ரியா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்து விட்டான் அவினாஷ்....

அவினாஷை கண்டதும் ரியா அமைதியாகி விட்டாள்..

" வா அவி... நா உனக்கு காபி போடவா???" என்று அவனை திசை திருப்பும் முயற்சியாக கேட்டாள் யோகா...

அவினாஷ் பதிலளிக்கும் முன் ரியா "அதுலாம் அவரு ஆல்ரெடி கேர்ள் ஃப்ரெண்ட் கூட காபிஷாப்ல சாப்டிருப்பாரு...யூ டோன்ட் வொர்ரி " என்று கோபமாக அவளை முறைத்தாள்...

" உனக்கு என் மேல தான கோவம் ??? ஏன் யோகாவ திட்டுற ??" என்ற அவினாஷை கோபமாக முறைத்தாள் ரியா.

பின்னர் முகத்தை சாதாரணமாக்கி கொண்டவள் " கோவமா??? அதுவும் உன் மேலயா?? யூ நோ வாட்?? என்னோட கோவத்த கூட நான் தேர்ட் பர்ஸன் மேல காட்டுறது இல்ல " என்றாள் அலட்சியமான பாவனையுடன். அவள் பேசுவதை கேட்ட அவினாஷுக்கு மனதை ரம்பம் கொண்டு அறுப்பது போல வலித்தது.

" நான் உனக்கு தேர்ட் பர்ஸனா??" என்று அவளை கூரியவிழிக

" ஆமா!! தேர்ட் பர்ஸன் தான்...ஐ ஸெட் எவ்ரி திங் இஸ் ஓவர்..தென் ஒய் டிட் யூ கம் ஹியர்??? "

" எதுவா இருந்தாலும் பொறுமையா பேசிக்கலாம் ..நீ இப்ப நிதானத்துல இல்ல"

" நான் நிதானமா தான் இருக்கேன் டாக்டர் சார் ... நான் தெளிவா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தேன்... இட்ஸ் ஓவர் "

அவள் கூறியதை கேட்ட அவினாஷ் அங்கு நிற்கும் சக்தியின்றி கிளம்பி விட்டான்.

" அவி நில்லு! போகாதடா" என்று அவனை தொடர்ந்த கீதாவை பார்த்தவன் " நா அப்றமா உனக்கு கால் பண்றேன் கீத்து " என்று கூறி பன்னகைத்து விட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அவன் செல்வதையே பார்த்து கொண்டிருந்தாள் கீதா. அவினாஷ் அவளின் நண்பன். இருவரும் சந்தித்தது ஒரு சுவாரசியமான சம்பவம். அப்போது கீதா எழுதிய இண்டர்மீடியட் தேர்வு முடிவுகள் வந்த நேரம். அவள் பாஸ் செய்தால் அவளுக்கு ஸ்கூட்டி வாங்கி தருவதாக கண்ணன் வாக்களித்திருந்தார். சொன்னபடி மகள் தேர்வில் பாஸ் ஆனதால் ஸ்கூட்டியை வாங்கி தந்தவர் கவனமாக ஓட்டுமாறு எச்சரிக்கவும் தவறவில்லை.

கீதா முதலில் அந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவு சிறிய குறுக்கு சாலையில் ஸ்கூட்டியோடு விழுந்து கையில் காயத்துடன் மருத்துவமனையில் அமர்ந்திருந்தாள். நர்ஸ் அவளை உள்ளே செல்லுமாறு சொல்லவும் பயத்துடன் சென்று மருத்துவருக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள் அவள்.

அங்கே யாரும் இல்லாததால் மருத்துவர் இன்னும் வரவில்லை போல என்று எண்ணியவள் “ இந்த நர்ஸ் எனக்கு டிரஸ்ஸிங் பண்ணி விட்டா என்ன?? இதுக்கு கூட டாக்டரே வரணுமா?” என்று வாய்விட்டு புலம்பவும் ஸ்கிரீனில் மறைவிலிருந்து வெளியே வந்தான் அவினாஷ். ஆம், அவன் அங்கே தான் மருத்துவராக பணிபுரிந்து வந்தான். அவளின் காயத்தை பரிசோதித்தவன் அதை சுத்தம் செய்து மருந்து வைத்து கட்டு போட்டு விட்டான்.

சிறிது நேரத்துக்கு முன் கேட்ட கீதாவின் புலம்பலை நினைத்து சிரித்தவன் “ காயம் சின்னது தான். நீங்க பயப்பட வேண்டாம்” என்று சொல்லவும் கீதா ஒரு புன்னகையை உதிர்த்தபடி எழுந்தாள்.

அவன் ஆச்சரியமாக “ ஹலோ எங்க கெளம்புறிங்க மேடம்??” என்று கேட்க கீதா சாதாரணமாக “ வீட்டுக்கு தான் டாக்டர். ஏன் கேக்குறிங்க?? நான் தான் உங்க ஃபீசை பே பண்ணிட்டேனே” என்று கூறினாள்.

அவன் “ உங்களுக்கு டிடி இன்ஜெக்சன் போடனும். மறந்துட்டிங்களா??” என்று கேட்க கீதாவுக்கு ஊசியை நினைத்து அந்த ஏ.ஸி குளிரிலும் வியர்த்தது. அந்த பயத்தை விழுங்கியபடி “ ஊசிலாம் எதுக்கு டாக்டர்?? சின்ன காயம் தானே” என்று சமாளிக்கவும் அவன் அதை கண்டு கொள்ளாமல் சிரிஞ்சில் மருத்தை நிரப்பவும் அவளுக்கு நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது.

“ சரிங்க சின்ன பாப்பா! சுடிதார் கைய கொஞ்சம் உயர்த்துங்க” என்று சொல்லவும் அவள் வேறு வழியின்றி சுடிதாரின் கைகளை மடித்துவிட்டு புஜத்தை காட்ட அவன் ஊசியை இறக்கினான். ஆனால் கீதாவோ ஊசி போட்டு அவன் சிரிஞ்சை எடுத்து நீண்ட நேரம் ஆகியும் கண்ணை திறக்காமல் இறுக்கமாக மூடிக் கொண்டிருக்க அவன் “ ஹலோ” என்று சொல்லவும் விழித்தாள். பின்னர் “ ஊசி போட்டாச்சா டாக்டர்??” என்று சிறுகுழந்தை போல் கேட்டவளுக்கு மேஜை டிராயரிலிருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து நீட்டினான் அவன்.

அவள் அதை மறுக்காமல் பெற்று கொண்டு “ தேங்க்யூ டாக்டர் அண்ணா, வலிக்காம ஊசி போட்டதுக்கு” என்று சொல்லிவிட்டு சென்றாள்;

சரியாக ஒரு வாரம் கழித்து அவன் அவளது அலுவலகத்துக்கு வருமானவரி தாக்கல் செய்ய வரவும், ஆடிட்டர் அவளிடம் அவனது விவரங்களை கொடுத்து கீதாவுடன் அனுப்பி வைத்தார்.

அவனிடம் சில விவரங்களை கேட்டு வாங்கியவள் சொன்ன தேதிக்குள் ரிட்டர்னை ஃபைல் செய்து அவனுக்கும் விவரங்களை மெயில் அனுப்பி விட அதற்கு பிறகு இருவரும் நல்ல நண்பர்களாயினர். அவன் மூலமாக அவனுடைய நண்பன் விக்னேஷும் கீதாவுக்கு தோழனாக அவளது நட்புவட்டத்தில் முகப்புத்தகத்தை தாண்டியும் நண்பர்கள் கிடைத்தனர்.

இவ்வாறு இருக்கும் போது தான் ரியாவும் யோகாவும் வேலைக்காக சென்னை வந்தது. இருவரும் கீதாவுடனே தங்கிவிட கீதாவுக்கு அவ்வளவு நாள் அந்த வீட்டில் இருந்த தனிமை தூரச் சென்றதில் அவளும் நிம்மதியானாள்.

ஒரு நாள் ரியாவுக்கு உடல்நலம் இல்லாமல் போக அவினாஷிடமே அழைத்து சென்றனர் கீதாவும் யோகாவும். கீதாவை கண்டதும் புன்னகைத்த அவினாஷ் “ என்ன பேபிம்மா இன்னைக்கு இன்னொரு பேபிம்மாவ கூட்டிட்டு வந்திருக்கு??” என்று சொன்னபடி ரியாவை பரிசோதித்து முடித்தவன் ரியாவிடம் “ நீங்களாச்சும் தைரியமா இன்ஜெக்சன் போட்டுப்பிங்களா இல்ல இந்த கொழந்தை பொண்ணை மாதிரியே அழிச்சாட்டியம் பண்ண போறிங்களா??” என்றான் கிண்டலாக.

ரியா சாதாரணமாகவே சண்டைகோழி. அவன் இவ்வாறு கேலி செய்யவும் சிலிர்த்தவள் “ ஹலோ டாக்டர் சார், நான் ஒன்னும் பயந்தாங்கொள்ளி இல்ல” என்று சொல்லி தலையை சிலுப்பிக் கொண்டாள்.

அவினாஷ் அவளின் செய்கையில் சிரித்தபடியே ஊசியை அவள் புஜத்தில் இறக்கி எடுத்தான். மருந்துச்சீட்டை எழுதி கொடுத்தவன் ரியாவிடம் “ ஒரு டூ டேய்ஸுக்கு ஹாட் வாட்டர் மட்டும் குடிங்க” என்று சொல்லிவிட்டு சீட்டை கீதாவிடம் நீட்டிவிட்டு புன்னகைத்தான்.

ரியா கீதாவுடன் வெளியே வந்தவள் “இந்த டாக்டருக்கு இவ்ளோ லொல்லு ஆகாதுடி கீத்து!” என்று சொல்லி உதட்டை சுழித்தபடி அவளுடன் சென்றாள். அன்று இரவே அவினாஷிடம் இருந்து முகப்புத்தகத்தில் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வரவும் கீதாவிடம் காண்பித்தவள் அவள் அவனுக்கு கேரக்டர் சர்டிபிகேட் கொடுத்த பின் தான் அதை அக்செப்ட் செய்தாள்.

இவ்வாறு நண்பர்களானவர்கள் சிறிது காலத்திலேயே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டனர். ரியாவின் கோபத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கும் தன்மை அவினாஷிடமே உள்ளது என்பதை கீதா விளையாட்டாக ஒரு முறை இருவரிடமும் சொல்ல, அந்த கணம் அவர்களை அறியாமல் காதல் விதை போடப்பட்டது அவர்களின் மனதில்.

இருவரின் காதலும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக வளர இடையிடையே சிறுசிறு சண்டைகளும் செல்ல சமாதானங்களுமாக அவர்களின் காதல் செடி செழித்து வளரத் தொடங்கியது.

அதில் இந்த முறை வந்த சண்டை கொஞ்சம் பெரியது தான் என்பதை கண்கூடாக பார்த்து தெரிந்து கொண்ட கீதா அவினாஷ் செல்வதை வேடிக்கை பார்த்தாள் ஒரு பெருமூச்சுடன்.

அவன் சென்றதும் உள்ளே வந்தவள் ரியாவை என்ன பிரச்சனை என்று கேட்பதற்கு முன் முந்தி கொண்ட ரியா "உங்க ரெண்டு பேருக்கும் நா சொல்ல போறது ஒண்ணே ஒண்ணு தான். இந்த பேஸ்புக் லவ் , லாங்க் டிஸ்டென்ஸ் ரிலேசன்ஷிப் இதுலாம் சுத்த ஹம்பக். நேருல பாக்கறப்போ நல்லா இருக்கும். ஒரு பத்து நாள் நம்மல பாக்கலனா அந்த லவ் அப்பிடியே மறந்துடும். சோ இதுல மாட்டிக்காம கவனமா இருங்கடி" என்று சொல்லிவிட்டு டைனிங் டேபிளில் உடகார்ந்து உப்புமாவை வெட்ட ஆரம்பித்தாள்...

“ இங்க இவ்வளவு அமளி துமளி நடந்துருக்கு ...இவ என்னடானா இப்டி அசால்ட்டா இருக்கா” என்று தலையில் அடித்துக் கொண்டனர் யோகாவும் கீதாவும்!அட்

“ இங்க இவ்வளவு அமளி துமளி நடந்துருக்கு ...இவ என்னடானா இப்பிடி அசால்ட்டா இருக்கா” என்று தலையில் அடித்துக் கொண்டனர் யோகாவும் கீதாவும்!
 
அத்தியாயம் 4

" டேய் அரவிந்த் எருமை! எழுந்திரி டா... இப்போ டைம் என்னனு தெரியுமா?? 11 ஓ கிளாக்...இன்னும் என்னடா தூக்கம்??" என்று இழுத்து போர்த்து மூடித் தூங்கிய அரவிந்தை எழுப்பினான் வருண்.

" அடேய்! 11 மணிலாம் என்ன பொறுத்த வரைக்கும் ஏர்லி மார்னிங் டா..." என்று தூக்கத்தை கண்டினியூ பண்ண ஆரம்பிச்சான் அரவிந்த்.

" இந்த டைம்ல வாக்கிங் போனா செமையா இருக்கும் மச்சான்! வாடா!" என்று மறுபடியும் எழுப்பினான்.

" உனக்கு தூக்கம் வரலனா யூ கோ மேன்..ஒய் மீ??" என்று சொல்லி விட்டு தலையை மூடி தூங்க ஆரம்பித்தான் அரவிந்த்.

இவன எழுப்பி நோ யூஸ் என்று யோசித்தவன் ஃபோனை கையில் எடுத்து கொண்டு வெளியே நடக்க ஆரம்பித்தான். இலையுதிர்காலம் என்பதால் மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்திருக்க காலை இளம்வெயில் இதமாக Haaran city ஐ ஜொலிக்க வைத்தது.

இந்த காட்சிகள் அனைத்தும் ஏதோ மாயாஜாலம் நிகழ்த்த ஃபோனில் நோட்டிஃபிகேசன் வரவும் " வாவ் ஃபைனலி அந்த பியூட்டி எனக்கு மெஸேஜ் பண்ணிட்டா.. தேங்க் யூ கடவுளே!" என்று வானை நோக்கி கை கூப்பியவன் முகம் முழுவதும் சந்தோசத்துடன் ஃபோனை பார்த்தவனின் முகம் கூம்பியது.

" இந்த அனு இருக்காளே! இவள என்ன தான் பண்ணுறது?? அகெய்ன் என்ன பிளேபாய் போஸ்ட்ல டேக் பண்ணிட்டா! நீ இப்பிடியே பண்ணுடி! இந்த ஜென்மத்துல நான் யார் கூடவும் கமிட்டாக போறது இல்ல.." என்று தலையில் அடித்துக் கொண்டான்.

இப்படி டேக் செய்து விளையாடுவது அவர்களுக்குள் வழக்கமாக நடப்பது தான். இதை நினைத்து சிரித்து கொண்டே நடந்தவன் திடீரென்று மெசெஞ்சரில் சென்றவன் கீதா ரிப்ளை செய்திருக்கிறாளா என்று பார்த்தவன் இன்னும் பதிலில்லை என்றதும் " எப்பா முடியலடா சாமி! இந்த பொண்ணு ரொம்ப பண்ணுறா! காட்! டூ சம்திங். ப்ளீஸ்" என்று மனதிற்குள் வேண்டியவன் பேசாம இந்த பியூட்டிக்கு நம்ம மெசேஜ் பண்ணா என்ன என்று நினைத்தவன் "ஹாய்! குட் மார்னிங்!" என்று அனுப்பினான்.

சாப்பிட்டு விட்டு டைனிங் டேபிளில் இருந்து எழுந்த கீதா நோட்டிஃபிகேஷன் சத்தம் கேட்டு ஃபோனை எடுத்து பார்த்தவள் வருண் சுவாமிநாதன் என்ற பெயரை கண்டதும் " அட இது ஸ்ரீதேவியோட ஃப்ரெண்ட் தானே! நேத்து தானே ரெக்வெஸ்ட் அக்செப்ட் பண்ணேன்... என்னதானு பாப்போமே" என்று மனதிற்குள்ளே சொல்லிவிட்டு ஃபோனை எடுத்து கொண்டு ரூம் உள்ளே சென்றவள் ஜன்னல் சுவரில் அமர்ந்து மெஸெஜை வாசிக்க ஆரம்பித்தாள்.

இன்று காலை மட்டுமே 2 முறை வேவ் செய்திருந்ததை பார்த்தவள் அவனுடைய குட் மார்னிங்கை பார்த்ததும் சிரித்து விட்டாள். பின்னே மதியம் 2 மணிக்கு யாராவது குட் மார்னிங் சொன்னால் சிரிக்காமல் என்ன செய்ய முடியும்????

அதற்கு ரிப்ளை செய்ய தொடங்கினாள்.

( போல்டாக குறிப்பிட்ட எழுத்துக்கள் அனைத்தும் கீதாவின் பதில்கள்)

G: " குட் நூன்!

V: " ஹாய்! வாட் ஆர் யூ டூயிங் ??

G : " வெட்டியா இருக்கேன்...

V: " ஹா ஹா! கூல்... வெல், உங்கள பத்தி சொன்னிங்கன்னா கொஞ்சம் தெரிஞ்சிப்பேன் ...

G: " ஐ யாம் கீதா, வொர்க்கிங் அஸ் ஆடிட் அஸிஸ்டெண்ட்

V: " ஐ யாம் வருண்.. நைஸ் டு மீட் யூ கீதா

G: " ம்ம்...

V: " ஐ யாம் டூயிங் மை மாஸ்டர்ஸ் இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்

G: " ம்ம்..

V: "உங்க நேட்டிவ் திருநெல்வேலி தானா??

G: "ம்ம்..

V: " எல்லாத்துக்கும் ம்ம்ம் தானா??? நான் பொறந்தது, வளந்தது எல்லாமே திருநெல்வேலி தான்... காலேஜ் மட்டும் சென்னைல பண்ணேன்...உங்களுக்கு இன்னிக்கு ஆபிஸ் லீவ் தானே??

G: " ஆமா.. சண்டே லீவ்...

V: " வெல்,.. உங்கள பத்தி ஏதாச்சும் சொல்லலாமே...

G: " ஐ யாம் கீதா, எனக்குனு இருக்குறவங்க என்னோட ஃப்ரெண்ட்ஸ் 4 பேரு மட்டும் தான்... ஐ லாஸ்ட் மை ஃபேமிலி இன் அன் ஆக்ஸிடெண்ட்.... என்னோட கார்டியன் இப்போ யூ.எஸ் ல இருக்காங்க...டீடெய்ல்ஸ் போதுமா?

அவள் குடும்பத்தை இழந்ததை சொல்லவும் வருணுக்கு சங்கடமாக இருந்தது..... ஒரு நிமிடம் கழித்து....

V: " சாரி டு ஹியர்... ஓ.கே...நீங்க எப்போ ஃப்ரீ???

G: " எதுக்கு கேக்கிறிங்க??

V: " ஹே டோண்ட் டேக் மீ ராங். எனக்கு நம்ம ஊர்ல பெருசா ஃப்ரெண்ட்ஸ் இல்ல. அதான் உங்க கூட ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்கலாம்னு கேட்டேன் பா. ஏன் நீங்க ரொம்ப ஷை டைப்பா??

G: " இல்ல..எதுக்கு கேக்கிறிங்க??

V: " நான் ஏதோ குயிஸ் ப்ரோகிராம் நடத்துற மாதிரி இருக்கு மா. நான் கேட்ட கேள்விக்கு மட்டும் ஆன்சர் பண்றீங்களே. அதான் கேட்டேன்.

G: " நான் ஷை டைப்லாம் இல்ல. பட் ஃப்ரெண்ட்ஸ் தவிர வேற யாருகிட்டவும் குளோஸா பேசி பழக்கம் இல்ல. அதான் நீங்க கேக்குற கேள்விக்கு மட்டும் ஆன்சர் பண்ணேன்.

V: " இட்ஸ் ஓகே மா... நீங்க இன்னும் என்ன ஃப்ரெண்டா ஏத்துக்கவே இல்லையா??

G: " இல்ல. ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கறதால மட்டும் எல்லாரும் ஃப்ரெண்டா ஆக முடியாது. அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும்..

அவள் இப்படி கூறவும் வித்தியாசமான பொண்ணு தான் என்று மனதில் நினைத்து கொண்டான் வருண்.

இருவரும் இப்படி பேசிக் கொண்டே இருந்ததில் இருந்து வருண் தெரிந்து கொண்ட விஷயங்கள் அவனுக்கு கீதா மேல் ஒரு மரியாதை வர காரணமாக இருந்தது. பின்னாளில் இதுவே அவன் கீதாவை நினைத்து உருக காரணமாக இருக்க போகிறது என்பதை அவன் அன்று உணரவில்லை.

பேசி முடிக்கும் போது கீதா, " ஆமா, நீங்க ஏன் குட் மார்னிங்னு சொன்னீங்க?? யாராச்சும் மதிய நேரம் போய் குட் மார்னிங் சொல்லுவாங்கலா??" என்று கேக்கவும் வருண், " பிகாஸ் இங்க இப்போ மார்னிங் தான்" என்று பதிலளித்தான்.

" இங்க மீன்ஸ்... நீங்க என்ன செவ்வாய் கிரகத்துலயா இருக்கிங்க??" என்று நக்கலாக கேட்டாள்.

" ரியலி..நீ ஃபர்ஸ்ட் என்னோட புரஃபைல செக் பண்ணியா?" என்று கேட்டான் வருண்.

" இல்லையே"

" தென் ஹவ் குட் யூ அக்செப்ட் மை ரெக்வெஸ்ட்??"

" யூ ஹவ் சம் மியூச்சுவல் ஃப்ரெண்ட்ஸ் வித் மீ..அதான் அக்செப்ட் பண்ணேன்"

" ரியலி?? அன்பிலீவபில்.... சோ இப்போ வரைக்கும் என்னோட புரஃபைல பாக்கவே இல்ல அப்டி தானே??"

" யா...பாக்க எனக்கு டைம் இல்ல பா"

" உன்ன என்ன பண்ணுறது??" என்று தலையில் அடித்து யோசித்தவன் "ஓகே உன்னோட டேட் ஆஃப் பெர்த் என்ன ?" என்று கேக்கவும் கீதா கூறினாள்.

உடனே " உன்னோட டேட் ஆஃப் பெர்த் சொல்லு வருண்.." என்று கேக்கவும் மாட்டினியா என்று மனதிற்குள் சந்தோஷித்தவன் "யூ கேன் ஸீ தட் இன் மை புரஃபைல் ..ஓகே" என்று பதிலளித்தான்.

" ஓகே... நானே பாத்துக்கிறேன்..இப்போ ஆஃப்லைன் போறேன்..பை" என்று சொல்லி விட்டு யோகாவை தேடிச் சென்றாள்.

சிரித்த படியே நடக்க தொடங்கிய வருணுக்கு தோன்றிய விஷயம் இது தான். அனு, பிரியாவிடம் பேசும் போது உள்ள அதே உணர்வு கீதாவிடம் தோன்றுவதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?? என்பதே..

எந்த வித அலட்டலுமின்றி அவள் பேசிய விதம், ஃப்ரெண்ட்ஷிப் மீது அவளது அளவுக்கடந்த நம்பிக்கை, தனியாளாக இருந்து வாழ்க்கையை எதிர் கொள்ளும் தைரியம் இதில் ஏதோ ஒன்று வருணுக்கு கீதாவிடம் பிடித்தது...

அந்த பிடித்தம் காதலாக மாற போவதை அவனும் அறியவில்லை...நண்பன் என்றவன் காதலனாக மாற கூடும் என்பதை அவளும் உணரவில்லை....​
 
அத்தியாயம் 5

" அந்த சரண்யாவாலயா நீ அவி கூட சண்ட போட்ட?" ஒரே குரலில் கேட்டனர் யோகாவும், கீதாவும்.

" ஆமா. அவளுக்கு அவி பத்தி எல்லாமே தெரிஞ்சிருக்கு. நான் கூட அவன் அம்மா கூட பேசுனது கிடயாது. பட் அவ பேசிருக்கா. அன்னிக்கு ஈவ்னிங் நான் கிளினிக்ல அவியை பாக்குறதுக்கு போனேன். அப்போ அவ என் கிட்ட சொல்லுறா ' உங்கள விட அவினாஷ் பத்தி எனக்கு நல்லா தெரியும். அவன் டெய்லி நான் கொண்டு வர பிரேக்ஃபாஸ்ட் தான் சாப்டுவான், அவிக்கு அது பிடிக்கும், அவிக்கு இது பிடிக்கும்னு'. எனக்கு வர ஆத்திரத்துக்கு அவ கழுத்த நெரிச்சு கொன்னுடலாமானு கூட யோசிச்சேன்"

" நான் சொல்றேன் அந்த சரண்யா ஆன்ட்டி உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஏதோ கேம் ஆடுறா" இது கீதா.

" ஏய்! அவ நல்ல பொண்ணுனு அஜி ரொம்ப உருகிறான்டி" என்று யோகா சொல்லவும் கீதாவும், ரியாவும் அவளை அதிர்ச்சியாக பார்த்தனர்.

" என்ன?? அஜிக்கு மூளை கெட்டு போச்சா? என்றாள் ரியா.

" நாம் ஏதாச்சும் பண்ணனும்டி. இல்லனா இந்த ஆன்ட்டி நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் ஒரு வழி பண்ணிடுவா" என்று யோசனையுடன் கூறினாள் கீதா.

அவளுக்கு கால் வரவும் ரியா கீதாவின் போனை எடுத்து பார்த்து விட்டு "உன்னோட ஃப்ரெண்ட் அவி தான் கால் பண்றான். என்னனு கேளு" என்றாள்.

அவினாஷ் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் சரண்யா தான் என்று கூறினான். ரியாவுக்கு இதை புரியவைக்க முயன்றும் அவள் தான் கூறுவதை காதில் கேட்காமல் கோவப்படுவதையும் கூறி வருத்தப்பட்டான்.

சரண்யா அவினாஷ் மற்றும் விக்னேஷ் இருவரும் மருத்துவராக இருக்கும் அதே மருத்துவமனையில் தான் நர்சாக பணியாற்றி வந்தாள். அவளின் கலகலப்பான பேச்சால் எளிதாக மற்றவர்களின் மனதில் நுழைந்து விடும் திறமை படைத்தவள். ஆனால் அந்த திறமையை அவள் பயன்படுத்தி கொண்ட விதம் அவளுடன் பழகிய சில நாட்களிலேயே அவினாஷுக்கு தெரிந்துவிட அவளிடம் இருந்து ஒதுங்கிவிட்டான் அவன்.

அந்நிலையில் தான் விக்னேஷின் சித்தப்பா மகன் அஜித் விக்னேஷை சந்திக்க மருத்துவமனைக்கு வந்தவன் சரண்யாவின் வலையில் நன்றாக மாட்டிக் கொண்டான். அவளுக்கும் மருத்துவரை விட கோடிகளில் புரளும் பிஸினஸ்மேன் பெரிதாக தோன்ற அதற்கு மேல் அவள் அவினாஷை தொந்தரவு செய்யவில்லை.

ஆனால் ஒரு நாள் அவினாஷை சந்திக்க வந்த ரியாவிடம் தனக்கு அவனை பற்றிய அனைத்து விவரமும் தெரியும் என்ற ரீதியில் அவள் பேசி வைக்க காதலர்களுக்குள் போர் மூண்டது. ரியாவை பொறுத்தவரை அவளின் நண்பனான அஜித் சரண்யாவுடன் பழகுவதையே விரும்பாதவளுக்கு அவளுடைய காதலன் சரண்யாவிடம் பழகிய விவரம் தெரிந்த்தும் அவள் மனமுடைந்து போனாள். அவினாஷ் தானும் சரண்யாவும் நண்பர்கள் மட்டும் தான், அதுவும் அவளது குணம் தெரிந்து தான் ஒதுங்கிய பிறகு தான் அவளுடன் பேசுவது கூட இல்லை என்று எவ்வளோ முயன்று விளக்கியும் ரியாவை அவனால் சமாதானப்படுத்த இயலவில்லை.

கீதா அவனை சமாதனப்படுத்திவிட்டு சரண்யா விஷயத்தை தானும் யோகாவும் பார்த்து கொள்வதாக கூறவும் அவன் நிம்மதியுற்று போனை வைத்தான்.

கீதாவும் அவியுடன் பேசி விட்டு ரியாவை சமாதானப்படுத்தி தூங்குவதற்குள் இரவு நேரம் கடந்திருந்தது.

----------------------------------------------------------------------------------------------------------------------------

Haaren city....

இரவு 8.30... அப்போது தான் போன் பேசிக் கொண்டிருந்தான் வருண்.

" கம் ஆன் கீர்த்தி! லைஃப்ல பிராப்ளம்ஸ் இல்லாம இருக்கணும்னா நம்ம மூவில தான் ஆக்ட் பண்ணனும். வீ ஹேவ் டு ஃபேஸ் தெம். அது தான் கெத்து. அத விட்டுட்டு இப்பிடி பொலம்ப கூடாது. ஓகே வா?? குட் நைட்... இல்ல.. நான் தூங்க டைம் ஆகும்...பை" என்று சொல்லி காலை கட் செய்தான்.

அங்கு வந்த அரவிந்த் " அது எப்பிடிடா எல்லா ப்ராப்ளம்ஸயும் பேசியே இல்லாம பண்ணுற?? நீ பேசாம சைக்யாடிரிஸ்ட்டா போயிருக்கலாம்டா மச்சான்" என்றான்.

" உன் கூட பேசுனா எவ்ளோ பெரிய பிரச்சனையும் கடுகு மாதிரி தோண ஆரம்பிச்சுரும்னு நம்ம சூசன் சொல்லும். கரெக்ட் தான் மச்சி! " என்று வருணை புகழ

"அப்போ நம்ம ரெண்டு பேரும் சேந்து ஒரு கிளினிக் ஆரம்பிச்சிருவோம்...வருமானம் பிச்சுக்கும் டா" என்று அரவிந்தை கிண்டல் செய்த படியே கிச்சனில் தோசை ஊற்ற ஆரம்பித்தான்.

ஜெர்மனி வந்ததிலிருந்து அரவிந்தும் வருணும் வீட்டிலேயே தான் சமைத்து சாப்பிடுவார்கள். வருண் நன்றாக சமையல் செய்வதால் அவர்களுக்கு வெளியே சென்று சாப்பிடும் அவசியம் வரவும் இல்லை.

" நாளைக்கு சிக்கன் பிரியாணி செய்யலாமாடா மச்சி?"என்று வருண் கேட்கவும் அதற்கு தான் காத்திருந்தாற் போல " உன் இஷ்டம்டா! பை தி வே உனக்கு என்ன ஹெல்ப் வேணுனாலும் தயங்காம என் கிட்ட கேளுடா" என்று பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டான் அரவிந்த்.

" உனக்கு வரப் போற வைஃப் குடுத்து வச்சவங்கடா! நீ சமையல்லயே அவங்கள இம்ப்ரஸ் பண்ணிடுவ" என்று பாத்திரங்களை கழுவி அடுக்கினான் அரவிந்த்.

அப்போது வருணுக்கு கீதா நியாபகம் வந்தது. " எனக்கு சமையல்ல அனா, ஆவன்னா கூட தெரியாது வருண். குக்கிங் எல்லாமே யோகாவும், ரியாவும் பாத்துப்பாங்க" என்றவளை " அப்போ நீ கல்யாணம் பண்ணிட்டு போறப்ப அவங்க ரெண்டு பேரையும் பொறந்த வீட்டு சீரா கொண்டு போய்டு மா" என்று கிண்டல் செய்ததை நினைத்து சிரித்தான்.

" மை டியர் ஆடிட்டியூட் அலமேலு! உனக்கு ஈக்குவலா நீ மட்டும் தான் இருக்க முடியும்! குக்கிங் தெரியாது, சாரி கட்ட தெரியாது. பட் சோ வாட்?? இதுலாம் தெரிஞ்சா தான் பொண்ணா?? இது எல்லா பொண்ணுங்களுக்கும் தெரியுமே!! பட் உன்னை மாதிரி தைரியமா, மனசுல நெனைச்சத பேசுற, எந்த வெளி வேஷமும் இல்லாம நடந்துக்குற பொண்ணு இனிமே தான் பொறக்கும். கூ நோஸ் அது உன்னோட பொண்ணா கூட இருக்கலாம்" என்று நினைத்து சிரித்துக் கொண்டான்.​
 
New Threads

Top Bottom