Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


யாரோ இவள் - Tamil Novel all episodes

அத்தியாயம் 6



காலை நேர பரபரப்பு ஏதுமின்றி அமைதியாக இருந்தது அந்த அலுவலகம். தன்னுடைய கேபினில் அமர்ந்து மெயிலில் கிளையண்ட்ஸ்கு வருமான வரி சம்பந்தப்பட்ட அவர்களின் சந்தேகங்களுக்கான விடைகளை அளித்துக் கொண்டிருந்தாள் கீதா.

மற்றவர்களை போல் ரிட்டர்ன் ஃபைல் செய்ததும் வேலை முடிந்தது என்று விட்டுவிடுபவள் இல்லை அவள். அதற்கு பிறகு ஆர்டர் செக் செய்து அதற்கு ஆன்லைனில் பதிலளிப்பது, வரி கட்ட சொல்லியிருந்தால் கிளையண்ட்ஸ்கு தகவல் தெரிவித்து அவர்களை கட்ட சொல்லுவது என்று அந்த வேலையை முழுமையாக முடித்தால் மட்டுமே அவளுக்கு தூக்கம் வரும்.

அவளுடன் பணியாற்றும் புவனா அடிக்கடி சொல்லுவாள் " ஏன் இதயெல்லாம் தலைல தூக்கி போட்டுக்கிற கீத்து? அவங்களுக்கு தான் இன்ஃபர்மேஷன் மொபைலுக்கு போகுமே? அதுக்கு அப்புறமா அவங்க அத பாத்துக்க மாட்டாங்களா?"

அதை மறுத்தவள் " நோ புவி, என்னோட கிளையண்ட்ஸ்கு என்னால முடிஞ்ச பெர்ஃபெக்ட் சர்வீஸ் குடுக்கணும்கிறது என்னோட ஒபினீயன். ஒரு வேலைய ஆரம்பிச்சா அத ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணா தானே நல்லா இருக்கும்" என்பாள்.

இதனாலே ஆடிட்டர் ரங்கநாதனுக்கு அவள் மேல் தனி மரியாதை.

இன்றும் அது போல எல்லா மெயிலையும் பார்த்து விட்டு தன்னுடைய கேபினை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் கீதா. திடீரென்று " வருண் சார்" என்ற நியாஸின் குரல் கேட்டதும் வெளியே வந்து என்ன என்று பார்த்தாள்.

அது அவர்களின் கிளையண்ட் வருண் மாதவ். ரங்கநாதனை பார்க்க வந்தவர் அவர் இல்லையென்றதும் அவரின் உதவியாளர் நியாஸிடம் தகவலை சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.

அவர் சென்ற பின் கேபினுக்குள் வந்த கீதாவுக்கு வருணின் ப்ரொஃபைலை செக் பண்ணி பார்த்தால் என்ன என்று தோன்றவும் லாக் இன் செய்தாள். அவனுடைய டைம் லைன் ஓப்பன் ஆனது.

முதலில் அவனை பற்றிய விபரங்களை படிக்க ஆரம்பித்தாள். வருண் சுவாமிநாதன், நேட்டிவ் திருநெல்வேலி. அங்கேயே பள்ளி படிப்பும் முடித்திருந்தான். கல்லூரி சென்னையில் படித்ததாகவும், பின் அங்கேயே ஒரு ஐ.டி கம்பெனியில் வேலையில் சேர்ந்து ஒரு வருடத்தில் விலகியதாகவும் அதில் போட்டிருந்ததை பார்த்தவள் மனசுக்குள்ளே " ஓ! அப்போ சார் வி.ஐ.பி போல" என்று சொல்லிக் கொண்டாள். ஆனால் அடுத்த வரியை பார்த்தவள் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள்.

' studying M.E in Aachen University, Germany' இதை பார்த்ததும் அவன் குட் மார்னிங் சொன்னதற்கான காரணம் புரிந்தது. " ஐயோ இது தெரியாம அவனை ஏலியன் லெவலுக்கு கிண்டல் பண்ணிட்டியே கீத்து" என்று தலையில் செல்லமாக குட்டி கொண்டாள்.

தொடர்ந்து பார்க்கும் போது அவனின் சுற்றுலா சென்ற புகைப்படங்களாகவே வர, இவனுக்கு ஊர் சுத்த ரொம்ப பிடிக்கும் போல என்று நினைத்து கொண்டாள். வரிசையாக பதிவுகளை பார்த்துக் கொண்டே வந்தவள் ஒரு புகைப்படத்தை பார்த்ததும் சந்தோசத்தில் அவளை அறியாமல் வாவ் ரியாக்ட் செய்தாள்.

அது வருணின் முழு குடும்பமும் இருக்கும் புகைப்படம். அவனுடைய அக்காவின் திருமண நாள் என்று பதிவிட்டு இருந்தான். அதற்கு பின் எல்லாமே அவன், அவனுடைய கஸின்ஸ் செய்த லூட்டிகள் பற்றிய புகைப்படங்கள் தான்.

இது எல்லாவற்றையும் பார்த்தவளுக்கு வருண் மேல் பொறாமை கூட வந்தது. “இவ்வளவு பெரிய குடும்பம் அவனுக்கு இருக்கு, எனக்கு ?? என்று நினைத்தவள் அவனை நினைத்து வருத்தமும் அடைந்தாள். இவர்களை விட்டு பிரிந்திருப்பது அவனுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று அவனை நினைத்து பரிதாபப் பட்டாள்.

" ஹி இஸ் சோ லக்கி டு ஹேவ் அ லவ்வபிள் ஃபேமிலி" என்று சொல்லிவிட்டு ஸ்கிரீனில் தெரிந்த அவன் குடும்பத்திற்கு திருஷ்டி கழித்து, "யாரு கண்ணும் உங்க மேல படக் கூடாது. இப்பிடியே லைஃப் லாங் நீங்க எல்லாரும் ஒன்னா ஒத்துமையா இருக்கணும்" சொல்லிவிட்டு வருணுக்கு மெஸெஞ்சரில் கால் செய்தாள் கீதா.

அவன் எடுத்ததும் "ஹாய் வருண், ஏர்லி மார்னிங் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? இப்போ அங்க என்ன டைம்??" என்று அவள் கேட்கவும் அவள் தன்னுடைய ப்ரொஃபைலை பார்த்து விட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டான் வருண்.

" ஃபைனலி மேடம் என்னோட ப்ரொஃபைலை பாத்துட்டிங்க போல"

" யா, ஜஸ்ட் நௌ! யூ இடியட் ஏன்டா நீ ஜெர்மனில இருக்கேனு என் கிட்ட சொல்லலை?? போ நான் உன் கூட பேச மாட்டேன்"

" நான் உனக்கு தெரிஞ்சிருக்கும்னு நெனைச்சேன் மேடம். நீ இப்படி ப்ரொஃபைல் கூட செக் பண்ணாம என் ரெக்வஸ்டை அக்கெப்ட் பண்ணிருப்பனு நான் யோசிக்கல கீத்து. கோச்சிக்காத ப்ளீஸ்"

" இட்ஸ் ஓகே. நான் உன்னோட பெரிய அழகான குடும்பத்துக்காக உன்ன மன்னிச்சிட்டேன்"

" ரியலி?? எல்லா போட்டோஸும் பாத்தியா?? மை காட்.... ஓகே மேடம், இப்போவாச்சும் என்னை நம்பி உங்க ஃப்ரெண்ட்டா ஏத்துப்பிங்களா?

சிறிது நேரம் அமைதி காத்த கீதா " எனக்கு உன்னோட ஃபேமிலி ரொம்ப பிடிச்சிருக்கு வருண்! உன்னோட ஃப்ரெண்டா இருக்குறதுல எனக்கு எந்த அப்ஜெக்சனும் இல்ல" என்று சொல்லவும் வருணுக்கு வந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை.

" தேங்க்யூ சோ மஷ் டியர். ஐயாம் வெரி ஹாப்பி நவ்" என்று சொல்லவும் கீதா " இப்போ நீ யார பாத்து டியர்னு சொன்ன??" என்று ஆரம்பித்தாள்.

சிரித்து கொண்டே அவளை சமாதானப்படுத்தியவன் அவன் குடும்பம், கஸின்ஸ், அவர்களுடைய கேங் பற்றி விலாவரியாக கூறினான்.

இப்படியாக இரண்டு மாதங்களில் இவர்கள் இருவரும் பேசி ஒருவரை பற்றி ஒருவர் நன்றாக புரிந்து கொண்டனர். ஒரு முறை வீடியோ கால் பேசும் போது கீதாவையும் கனெக்ட் செய்து கஸின்ஸிடம் என்னுடைய தோழி என்று வருண் அறிமுகப்படுத்தவும் கீதாவுக்கு அவன் மேல் ஒரு புது மரியாதையே வந்தது.

அவனுடைய கஸின்ஸ் கீதாவிடம் உரிமையாக பேசவும் கீதாவிற்கு தன் குடும்பத்தின் நினைவில் கண் கலங்கியது. ஏற்கெனவே வருண் கீதாவின் குடும்பத்திற்கு நடந்த விபரீதத்தை கூறியிருந்ததால் அவர்கள் அவளை கலாய்த்து சிரிக்கவும் வைத்தனர்.

அந்த அழகான தருணம் முடியும் போது கீதா நேத்ராவை " அண்ணி" என்று அழைக்க நேத்ராவும் அதை புன்னகையுடன் ஏற்று கொண்டாள். பதிலுக்கு பிரியாவும் அனுவும் கீதாவை " அண்ணி " என்று கூறவும் வருணுக்கு திகிலானது.

" இப்போ இவளை என்ன சொல்லி சமாளிக்கப் போற வருண்??" என்று மனசாட்சி அவனை கலாய்த்தது. ஆனால் அவன் பயப்பட தேவையின்றி கீதாவும் அவர்கள் கூறியதை ஏற்றுக் கொள்ளவும் அவனுக்கு நிம்மதி ஆனது.

இந்த தருணங்களையெல்லாம் யோசித்து கொண்டே கீதாவின் போட்டோவை பார்த்தவன் மனதில் ஒரு சின்ன குழப்பம். கீதாவை தனக்கு ஏன் இவ்வளவு பிடிக்கிறது என்பது தான்.

அவன் குழப்பத்துடனே சுற்ற ஒரு நாள் அவள் ஸ்ரீதேவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக அவளின் வீட்டில் இருக்கும் போது வருண் வாட்ஸாப் காலில் அழைத்தான்.

" ஹலோ வருண்! என்ன மிஸ்டர் ஜெர்மன் இந்த டைம்ல கால் பண்ணிருக்க?"

" சும்மா தான் கீத்து. நீ பிஸியா இருக்கியா??"

" இன்னிக்கு ஸ்ரீதேவிக்கு பர்த் டே. நாங்க அவ வீட்டில இருக்கோம்"

" எந்த ஸ்ரீதேவி??"

" என்னோட ஃப்ரெண்ட்பா. உனக்கும் ஃபேஸ்புக்ல ஃப்ரெண்ட்டா இருக்காடா"

" ஓ! அந்த பொண்ணுக்கா?? கன்வே மை விஷ் டியர் "

" நீ டியர்னு சொன்னனு வை நான் நேரா ஜெர்மனிக்கு வந்து உன்னை கொன்னுடுவேன் வருண்" என்று அவள் சின்ன குழந்தை மாதிரி சிணுங்கவும் வருணுக்கு சிரிப்பு வந்தது. அவனுக்கு தெரியும் இப்படி சொன்னால் அவள் கோபப்படுவாள் என்று. அவளை கோபப்படுத்தி பார்ப்பதில் அவனுக்கு ஒரு சந்தோஷம்.

" அஹான்! நீ தைரியமான ஆளா இருந்தா வந்து தான் பாரேன்"

" போடா! என்ன கடுப்பாக்கணும்னே கால் பண்ணியா நீ? ஏய் கேக் கட் பண்ண போறாங்க..நான் அப்றமா பேசுறேன். பை"என்று காலை கட் பண்ண போனவளை தடுத்தவன் " நான் கேக் கட் பண்ணுறத பாக்கணும் கீத்து. வீடியோ கால் பண்ணு" என்று கூறினான்.

கீதாவும் வீடியோ கால் பண்ணி விட்டு அவனுக்கு கேக் கட் பண்ணுவது தெரியுமாறு போனை வைத்தவள் ரியாவின் பக்கத்தில் நின்று கொண்டாள். வருண் அங்கு நடப்பதை பார்த்து கொண்டிருந்தவன் முதல் முறையாக கீதாவை புடவையில் பார்த்தவன் ஸ்தம்பித்து நின்றான்.

எப்போதும் போல் எந்த வித மேக்கப்பும் இல்லாமல் காதில் சிம்பிளாக ஒரு ஸ்டட், அழகான ஆப்பிள் ரெட் புடவையில் தன் நீண்ட கூந்தலை முன் புறமாக விட்டு கேக் கட் செய்வதை பார்த்து கொண்டிருந்த கீதாவை பார்த்தவன் மனதிற்குள்ளேயே " கீத்து நீ இவ்ளோ அழகா" என்று வியந்து கொண்டிருந்ததை அவள் அறியவில்லை. அந்த தருணம் வருணின் மனதில் சத்தம் இல்லாமல் காதல் வந்து நுழைந்து கொண்டது.

அன்று தூங்குவதற்கு முன் கீதாவின் போட்டோவை பார்த்தவன், " ஒரு ஃப்ரெண்ட்டா உன் கூட பழக ஆசப்பட்டேன் கீத்து. நீ என்ன ஃப்ரெண்டா ஏத்துக்கிட்டப்போ எவ்ளோ சந்தோசப்பட்டேன் தெரியுமா?? பட் இன்னிகு நீ எனக்கு புதுசா தெரிஞ்ச. இந்த கீதா எனக்கு புதுசு. இந்த கீதாவை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. ஃப்ரெண்டா மட்டும் இல்ல. யெஸ். ஐ டிஸைடட்.. என்னோட ஃபேமிலிக்காக என்னை பிடிக்கும்னு சொன்ன நீ என்னோட வாழ்க்கை முழுக்க என் கூட இருக்கணும் கீதா. ஒரு தோழியாகவும், என்னோட மனைவியாகவும்" என்று சொன்னவன் அதே இனிய நினைவுகளில் தூங்க சென்றான்.

அவன் அறியவில்லை, அதற்காக அவன் கஷ்டப்படப் போகிறான் என்று. ஒரு வேளை தெரிந்திருந்தால் இன்று போட்டோவிடம் பேசியதை கீதாவிடமே கூறியிருப்பான். வருங்காலத்தில் நிகழவிருக்கும் குழப்பங்களையும் தடுத்திருப்பான்.......​
 
அத்தியாயம் 7



வருணுக்கு ஆச்சரியமாக இருந்தது. தானும், கீதாவும் பழக ஆரம்பித்து 2 மாதங்கள் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அவனை பொறுத்தவரை அவனுடைய கஸின்ஸிடம் எந்தளவு இயல்பாக பேசுவானோ அதே போல கீதாவிடம் எந்த வித்தியாசமும் இன்றி அவனால் பழக முடிந்தது.

ஆனால் அவனது காதலை அவனால் இன்று வரை கீதாவிடம் கூற முடியவில்லை. சொல்ல வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் அவள் தன்னை நண்பனாக நினைத்து எந்த வித ஒளிவுமறைவுமின்றி இயல்பாக பேசுவதை பார்த்து அதை கூற இயலாமல் அமைதியாகி விடுவான்.

அன்று சனிக்கிழமை.. அவனுக்கு வார விடுமுறை இரு நாட்கள் என்பதால் கேண்டி கிரஷ் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அதில் லைஃப் காலியானதும் கீதாவிற்கு REQUEST அனுப்பவும் இரு நிமிடங்களில் அவள் ACCEPT செய்திருந்தாள்.

" ஓ! மேடம் ஃப்ரீயா தான் இருக்காங்களா? அப்போ கால் பண்ணி பாப்போம்" என்று வீடியோ கால் செய்தான்.

கீதாவிற்கும் அன்று பெரிதாக எந்த வேலையும் இல்லாததால் அவள் கேபினில் ஃபைல்களை அடுக்கி கொண்டிருந்தாள். திடீரென்று கால் வரவும் அட்டெண்ட் செய்து டேபிள் மீது போனை வைத்து விட்டு பைல் அடுக்கி கொண்டே பேச ஆரம்பித்தாள்.

" ஹாய் கீத்து டியர்"

" சொல்லு மிஸ்டர்.ஜெர்மன்..."

" ஃபைல் பாக்குற மாதிரி ஆக்ட் பண்ணது போதும் மேடம்.. இங்க கொஞ்சம் பாத்து பேசுங்க"

அவன் கூறியதும் ஸ்க்ரீனில் தெரிந்த அவன் முகத்தை பார்த்து விட்டு "எத்தன தடவை பாத்தாலும் சேம் மூஞ்சி தான். சோ நான் பாக்காமலே பேசுறேன்..நீ என்ன இப்போ கால் பண்ணிருக்க?" என்று கேட்டு விட்டு வேலையை தொடர்ந்தாள் கீதா.

" கீது பிரியாக்கு ப்ரோமோஷன் கெடச்சிருக்கு தெரியுமா?? எரும என் கிட்ட சொல்லவே இல்ல. இன்னிக்கு காலையில தான் என் கிட்ட சொன்னா"

" ஷி இஸ் சோ டேலண்டட். அவளுக்கு இது ரொம்ப லேட்"

" கரெக்ட் தான்.. பட் இப்போ அவளுக்கு வந்த டி.எல் முன்னாடியே வந்திருந்தா பிள்ளைக்கு முன்னாடியே ப்ரோமோஷன் கிடச்சிருக்கும்"

" ம்ம்"

" அடியே அந்த ம்ம் ஆ விடு.. அத கேட்டாலே மனுசனுக்கு இரிடேட் ஆகுது"

" ஓகே சார்... இனிமே சொல்ல மாட்டேன்..."

" ஆமா உன் கூடவே ஆபிஸ்ல சுத்துமே அந்த ஒட்டடை குச்சி..அது எங்க?"

" அடப் பாவி! அவள கூட கவனிச்சிருக்கியா?" என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அங்கு வந்த நியாஸை கவனித்தவள் " நீ கொஞ்சம் லைன்ல இரு" என்று சொல்லி விட்டு நியாஸை பார்த்தாள்.

அவள் பார்வையிலேயே மிரண்டவன் " சாரி கீத்து... நான் பொய் சொன்னது தப்பு தான்.. பட்" அவளது முறைப்பில் பேச வந்த வார்த்தைகளை மறந்தான்.

" யூ நோ ஒன் திங்க் நியாஸ், நீ சொன்ன விஷயங்களை நம்பி நான் சார் கிட்ட பேசுனேன். பட் நீ கூட்டிட்டு வந்த கிளையண்ட்ஸ் பத்தி எந்த டீடெய்ல்ஸும் சொல்லாம பொய் சொல்லிருக்க...எனக்கும் பொய் சொல்லுறவங்களுக்கும் என்னிக்குமே ஒத்து வராது நியாஸ்..நாம இனிமே பேசிக்காம இருக்குறதே நல்லது..எனக்கு வேலை இருக்கு.. " என்று கூறிவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

நியாஸ் அவளை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே சென்றதை ஸ்க்ரனில் பார்த்த வருணுக்கு கஷ்டமாக இருந்தது.

" ஹேய்! ஆட்டிட்டியூட் அலமேலு...கொஞ்சம் கோவத்த கன்ட்ரோல் பண்ணு..பாவம் அந்த பையன்..எப்பிடி பாத்துட்டே போறான் பாரு"

" உனக்கே நல்லா தெரியும் வருண், என்னால கோவத்த கன்ட்ரோல் பண்ண முடியாதுனு...எனக்கு பொய் சொல்றவங்கள பாத்தாலே பிடிக்காது...அவன் சொல்லுற பொய்ய தலைய ஆட்டி ஆட்டி கேட்டப்போ கூடவா அவனுக்கு உறுத்தல??"

" ஓகே கூல் டியர்"

" இந்த பொய் பேசுறவங்க, சீட்டிங் பண்றவங்க இவங்கலலாம் பாத்தாலே காண்டாகுது டா"

" சரி சரி...நீ அந்த டாபிக்ல இருந்து மொதல்ல வெளியே வா!"

" ஓகே லொடலொடா...நீ உடனே அட்வைஸ் மழைய பொழிய ஆரம்பிக்காத...நான் உன் கிட்ட ஒண்னு கேக்கவா?"

" என்னோட ஸ்டைஃபண்ட் தவிர எத பத்தி வேணாலும் கேளு"

" உனக்கு கோவமே வராதா வருண்??"

" வரும்..பட் நான் அத வெளியே காமிச்சிக்கிறது இல்ல... எனக்கு என்னோட கோவத்த விட என்னோட மனசுக்கு பிடிச்சவங்க ரொம்ப முக்கியம்.. சோ நானே நெனைச்சாலும் என்னால அவங்க மேல கோவப்பட முடியாது...நீ உனக்கு குளோஸ் ஆனவங்க மேல கோவம் வந்தா என்ன செய்வ??"

" எனக்கு குளோஸ் ஆனவங்க மேல எனக்கு எப்போவுமே கோவம் வந்தது இல்ல..நான் கோவப்படுற அளவுக்கு அவங்க நடந்துக்கிட்டதும் இல்ல"

" ஓகே... இப்போ உனக்கு ஏதோ ஒரு காரணத்துக்காக என் மேல கோவம் வருதுனு வச்சுக்கோ"

" உன் மேல எனக்கு ஏன் வருண் கோவம் வரப்போகுது?? நீ என்னோட ஃப்ரெண்ட்"

" உன் கிட்ட நான் ஒரு பெரிய பொய் சொல்லிட்டேனு வை.. அது தெரிஞ்சா நீ எப்பிடி ரியாக்ட் பண்ணுவ?"

" என்னடா கேள்வி இது??"

" நீ பதில் சொல்லு மா"

" நான் ரியாக்ட் பண்ணவே மாட்டேன்" என்று சீரியஸாக கீதா கூறவும் இவ்வளவு நேரம் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்தவன் முகமும் சீரியஸாக ஆரம்பித்தது.

" ஆமா வருண்...சப்போஸ் நீ என் கிட்ட பொய் சொன்னாலோ இல்ல என்ன சீட் பண்ணாலோ நான் எந்த ரியாக்ஷனும் காமிக்க மாட்டேன்... சைலண்ட்டா உன் கிட்ட இருந்து எவ்வளவு சீக்கிரம் விலக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விலகிடுவேன்.. பிகாஸ் என்ன பொறுத்த வரைக்கும் ஃப்ரெண்ட்ஷிப் ரொம்ப புனிதமானது...அதில பொய், சீட்டிங் இருந்துச்சுனா அந்த ரெண்டு பேருக்கு நடுவுல ஃப்ரெண்ட்ஷிப்பே இல்லனு அர்த்தம்" என்று உறுதியான குரலில் கூறி முடித்தாள்.

" அம்மா தாயே! என்ன மன்னிச்சிடு! தெரியாம உன் கிட்ட சீரியஸா ஒரு கேள்வி கேட்டுட்டேன்...இனிமே கேட்டா என் பேர கெஜட்ல லொடலொடானு சேஞ்ச் பண்ணிக்கிறேன்" என்று கையெடுத்து கும்பிடவும் ஸ்க்ரீனை பார்த்து நகைத்தாள் கீதா.

" அது ஏன் டி வேற நிக்நேமே கிடைக்கலனா இப்பிடி ஒரு பேரு வச்ச?? லொடலொடா வாம்!!" என்று சொல்லிவிட்டு அவளை செல்லமாக முறைத்தான்.

" கீத்து இன்னிகு ஈவ்னிங் நீ ஃப்ரீயா?? நான் கிறிஸ்மஸ் மார்க்கெட் பாக்க போறேன்..உனக்கு வீடியோ கால் பண்றேன்"

" இல்லடா! இன்னிக்கு நாங்க எல்லாரும் காபிஷாப் போறோம். அது முடிஞ்சு வீட்டுக்கு வரவே நைட் ஆய்டும்..அப்றம் டயர்ட்ல நான் தூங்கிடுவேன்..நீ வீடியோ ரெக்கார்ட் பண்ணி எனக்கு வாட்சப் பண்ணிடு"

" ஓகே டியர்! நான் லன்ச்சுக்கு போறேன்... ஃப்ரீயான கால் பண்றேன்..பை கீத்து" என்று காலை கட் செய்தவன் கீதா கூறிய வார்த்தைகளையே யோசித்து கொண்டிருந்தான்.

----------------------------------------------------------------------------------------------------------------------------

" யோகா! நான் இப்போ உன் பார்லர் வாசல்ல தான் நிக்குறேன்..சீக்கிரம் வாடி" என்ற கீதாவின் காலுக்கு " ப்ளீஸ் டி...லாஸ்ட் மினிட்ல ஒரு ஃபேஷியல் வந்துடுச்சு...ஒரு அரை மணி நேரம் நீ உள்ள வந்து வெயிட் பண்ணுவியாம்..முடிஞ்சதும் நாம பறந்துடுவோமாம்" என்று சமாளித்தாள் யோகா.

" அடியே உன்னலாம் என்ன பண்ணுறது?" என்று புலம்பிக் கொண்டே உள்ளே சென்று அமர்ந்தாள் கீதா.

" ஹாய் கீத்து" என்றபடி வந்தாள் யோகாவின் உதவியாளரான கீர்த்தி.

" பாத்து ரொம்ப நாளாச்சு.. வொர்க் எப்படி போகுது" கீர்த்தி

" நல்லா போகுது கீர்த்தி...நீ எப்படி இருக்க?" என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவளை யோகா அழைக்கும் சத்தம் கேட்கவும் " டூ மினிட்ஸ்ல வரேன்" என்று சொல்லிவிட்டு சென்றாள்.

திடீரென்று போன் அடிக்கும் சத்தம் கேட்கவும் " கீர்த்தி! உனக்கு போன்" என்றாள் கீதா.

" கட் பண்ணு கீத்து.. நான் அப்புறமா பேசிக்கிறேன்" என்றாள் கீர்த்தி.

காலை கட் செய்ய போனவள் அப்போது தான் கவனித்தாள் அது வாட்சப் கால். அதை செய்தவன் வேறு யாருமில்லை...

ஸ்க்ரீனில் வருணின் புகைப்படம் தெரியவும் " இவன் எதுக்கு கீர்த்திக்கு கால் பண்றான்?" என்று யோசித்தப்படியே போனை அது இருந்த இடத்திலேயே வைத்தாள்.

சிறிது நேரம் கழித்து வருணின் போனுக்கு கால் செய்யவும் போனை எடுத்தது வேறு யாரோ..

" ஹலோ வருண்..."

" நீ யாருமா?? நான் வருணோட ஃப்ரெண்ட்.. உன்னோட சேத்து 25வது ஆள் அவனுக்கு கால் பண்ணிட்டாங்க "

" 25 ஆ?? என்ன 25 அண்ணா?"

" இந்த பையனுக்கு போன் பண்ண பொண்ணுங்க தான்... இப்போ தான் எதோ ஒரு கீர்த்தி கிட்ட பேசிட்டு இருந்தான்...கில்லாடி" என்று அவன் பேசிக் கொண்டு இருக்கும் போதே காலை கட் செய்தாள் கீதா.

" வாட்? 25 கேர்ல்ஸா?? அப்பிடி என்ன தான் பேசுவான் இவன்" என்று மனதிற்குள்ளேயே யோசித்தவள் " போலாமா?" என்றபடி யோகா வரவும் அவளுடன் சேர்ந்து செல்ல எழும்பினாள்.

----------------------------------------------------------------------------------------------------------------------

" இந்த ரியா எங்கடி போய் தொலைஞ்சா?? " என்ற யோகாவின் குரல் காதில் கேட்காதது போல உட்கார்ந்திருந்தாள் கீதா.

" ஹாய் அக்காஸ்" என்றபடி ஸ்கூட்டியில் இருந்து இறங்கினாள் ஸ்ரீதேவி.

" எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்?" என்றவளை கீதா கவனிக்கவே இல்லை...

" ஹலோ சீனியர்..எந்த உலகத்துல இருக்கீங்க?" என்று அவளை உலுக்கவும் சுயநினைவுக்கு வந்தவள் " ஸ்ரீ குட்டி எப்போடா வந்த?" என்று கேட்க அவள் கீதாவை முறைத்தாள்.

" இன்னிக்கு கீத்து சரி இல்லயே" என்று சிரித்த யோகாவை பார்த்து " ஏன் அக்கா அப்பிடி சொல்லுறிங்க?? சீனியருக்கு என்னாச்சு?" என்றாள்.

அவளிடம் வருண் பற்றிய எல்லா விஷயங்களையும் கூறிவிட்டு அவன் புகைப்படத்தை காண்பிக்கவும் வாங்கி பார்த்த யோகா " ஏய்..இது கீர்த்தி ஃப்ரெண்ட்டி..டெய்லி அவளுக்கு வீடியோ கால் பண்ணுவான்..நான் பாத்திருக்கேன்" என்று கூறவும் கீதாவிற்கு வருண் சொன்ன விஷயம் நியாபகம் வந்தது. " வீடியோ கால் பண்ணுறது எனக்கு குளோஸ் ஆனவங்களுக்கு மட்டும் தான் கீத்து"....பொய் நம்பர் ஒன்

அவளை சந்தேகமாக பார்த்த ஸ்ரீதேவி " உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் தானா??இல்ல.." என்று ஸ்ரீதேவி முடிப்பதற்குள் இடையிட்ட கீதா " நோ...நீ நெனக்குற மாதிரி எதுவும் இல்ல...நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ்..." என்றவள் சிறிது இடைவெளி விட்டு " அப்பிடினு நான் நெனச்சிட்டு இருந்தேன்" என்று வலி மிகுந்த குரலில் சொல்லி முடித்தாள்.

யோகா " இஸிண்ட்?? உன்னோட சேட் கொஞ்சம் காட்டு" என்று கூறிவிட்டு போனை எடுத்து பார்த்தாள். அவளுக்கு தெரியும் இது நாகரிகம் இல்லை என்று. ஆனால் தோழியின் குழப்பம் தீர வேண்டுமே!!!

அவள் வாசித்த வரையில் வருணுக்கு கீதா மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது அவனுடைய வார்த்தைகளிலேயே அவளுக்கு புரிந்தது.

கீதாவிடம் " வருண் உன் கிட்ட ப்ரபோஸ் பண்ணானா??" என்று நேரடியாக கேட்கவும் அதிர்ச்சியடைந்த கீதா " என்னடி சொல்லுற?? அவன் என்னோட ஃப்ரெண்ட்..அவன போயி எப்பிடி??" என்று பதிலளித்தாள்.

" அப்போ அவன் உனக்கு இன்னிக்கு வரைக்கும் ப்ரபோஸ் பண்ணவே இல்ல..சரி தான...நீங்க ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான் அவன பொறுத்தவரைக்கும்" என்று கேட்ட யோகாவிற்கு ஆம் என்று பதிலளித்தாள் கீதா.

" அப்போ அவன் ஃப்ரெண்ட்ஷிப் உனக்கு இனிமே தேவ இல்ல..அவன் பேசுனதிலயே தெரியுது அவன் உன்ன ஃப்ரெண்டா நினைக்கவெ இல்லனு... அவன் உன்ன டைம்பாஸ்கு யூஸ் பண்ணிருக்கான் கீத்து" என்று இறுக்கமான குரலில் சொல்லி முடித்தாள்.

கீதாவின் தலைக்குள் ஆயிரம் கேள்விகள்....

வருண் கீர்த்திக்கு கால் செய்தது, வருணின் நண்பன் 25 தோழிகள் என்று கூறியது, இப்போது யோகா கூறிய டைம்பாஸ் விஷயம் எல்லாமே அவள் மூளையை குழப்ப அந்த குழப்பத்தில் அவள் ஒரு முடிவுக்கு வந்தாள்...

வருணுடைய நட்பு இனி தனக்கு தேவை இல்லை என்பது தான் அது..."அவனுக்கு டைம்பாஸ் பண்ண தான் 25 பொண்ணுங்க இருக்காங்களே...நான் இல்லைனா அவங்க கூட பேசி டைம்பாஸ் பண்ணிப்பான்..எனக்கு இந்த மாதிரி பொய் சொல்லி ஏமாத்தி ஃப்ரெண்ட்ஷிப்ப கேலிப்பொருளா மாத்துனவோட ஃப்ரெண்ட்ஷிப் தேவை இல்ல" என்று தனக்குள்ளேயே உறுதி எடுத்து கொண்டாள்....

" என்ன டைம்பாஸ்?? யார பத்தி பேசிட்டு இருந்திங்க?" என்ற படி வந்தாள் ரியா.

" ஒண்ணும் இல்லடி...நாங்க சரண்யா பத்தி பேசிட்டு இருந்தோம்" என்று சமாளித்தாள் யோகா.

அவர்கள் வழக்கம் போல பேசி விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.

இரவில் வாட்சப்பில் கால் செய்த வருணுக்கு கீதா கால் எடுக்காதது கண்டு குழப்பம் வந்தது. மறுபடி மறுபடி முயற்சித்தும் அவள் காலை எடுக்காததால் " சரி நாளைக்கு சண்டே தான!! காலைல கால் பண்ணி பேசிக்கலாம்" என்று எண்ணி தூங்கி விட்டான்.

அவனுக்கு தெரியாது இனி எப்போதுமே அவனுடைய அழைப்பை அவள் ஏற்கப்போவதில்லை என்பது............​
 
அத்தியாயம் 8



வருணுக்கும் கீதாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நின்று போய் கிட்டத்தட்ட 2 மாதங்கள் கழிந்து விட்டது. வருண் எவ்வளவோ முயன்றும் அவனால் கீதாவை தொடர்பு கொள்ள இயலவில்லை. கீதாவோ வருண் என்ற ஒருவன் தன் வாழ்வில் வந்ததையே மறக்க விரும்பியதால் அவனது அழைப்புகளை ஏற்கவேயில்லை.

ஸ்ரீதேவியும் யோகாவும் வேறு ' நீ பேசலனா அவன் வேற ஒருத்தி கூட பேசி டைம்பாஸ் பண்ணிட்டு போய்ட்டே இருப்பான்..ரொம்ப அவன பத்தி யோசிச்சு நீ முட்டாளாகாத! " என்று சொன்னது வேறு அவள் மனதை மிகவும் பாதித்ததால் அவளும் அவ்வாறே அவனது அழைப்புகளை தவிர்க்க ஆரம்பித்துவிட்டாள். அவள் மறந்த விஷயம் இது தான். பொழுதுபோக்குக்காக பழகியவன் என்றால் வருண் அவனது குடும்பத்தினருக்கு அவளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லையென்பது தான்.

அவனது அழைப்பை தவிர்த்தவளால் அவனது வாட்சப் ஸ்டேட்டஸ்களை பார்வையிடுவதை மட்டும் தவிர்க்க இயலவில்லை. அவன் வைக்கும் பெரும்பாலான ஸ்டேட்டஸ் அவனது கஸின்ஸ் பிறந்த நாள் அல்லது குடும்பத்தினரின் பிறந்தநாள் அல்லது திருமண நாளுக்காக மட்டுமே! அவனை தவிர்க்க முடிந்தவளால் அவனது கஸின்ஸையோ அவர்களின் அன்பான அழைப்புகளையோ தவிர்க்க இயலவில்லை. வருணை தான் அவள் மறந்தாலே தவிர அவனது தங்கைகளை அல்ல.

இன்றும் அனு மற்றும் பிரியாவின் 'அண்ணி' என்ற அழைப்பும் அவர்களின் செல்ல சண்டைகளும் அவளுக்கு பிடித்தமானதே....

அவள் அவ்வாறு இருக்க , கீதா தன்னை எதற்காக தவிர்த்தாள் என்றே புரியாமல் தவித்தவன் முடியாமல் கீர்த்தியை அழைத்து கீதாவிற்கு ஏதும் பிரச்சனையா என்று கேட்க அவளோ சமீபத்தில் நியாஸால் கீதாவின் சீனியருக்கு ஏற்பட்ட பிரச்சனையை கூற வருண் பிரச்சனை முடிந்ததும் கீதாவே தன்னை அழைப்பாள் என்ற நம்பிக்கையில் அவளது வாட்சப் டிபியையும் அவளது முகநூல் போஸ்ட்களையும் பார்த்து நாட்களை கடத்தினான்.

இவ்வாறு இருக்கும் போது ஒருநாள் எதேச்சையாக கீதாவின் போனை எடுத்த ரியா அவளது வாட்சப்பில் இருந்த வருணின் ஷேட்களை பார்த்துவிட்டு ( அவர்கள் மூவரும் போனிற்கு பாஸ்வேர்ட் வைப்பது இல்லை) என்னவென்று யோகாவிடமும் ஸ்ரீதேவியிடமும் கேட்க அவர்கள் நடந்ததை கூற ரியாவிற்கு இவர்கள் ஏதோ குழப்பத்தில் இரண்டு நல்ல நண்பர்களை பிரித்துவிட்டனர் என்பதை மட்டும் தெரிந்து கொண்டாள்.

கீதாவிடம் இதை பற்றி பேச முடிவெடுத்தாள். உடனே அவினாஷிற்கு கால் செய்தாள்.

" என்ன டியர்?? ஆச்சரியமா நீயே கால் பண்ணீருக்க?? என்ன பிரச்சன?" என்று கூலாக அவன் கேட்கவும் ரியா நடந்த விஷயங்களை கூறினாள்.

" சோ உன்னோட கீத்து பேபியோட பிராப்ளம சால்வ் பண்ண உன்னால மட்டும் தான் முடியும்" என்று முடித்தாள்.

" ஓகே நான் இன்னும் ஒன் அவர்ல அங்க இருப்பேன்" என்று போனை கட் செய்தான்.

அவனிடம் பேசிவிட்டு வந்தவள் கீதாவை எங்கே என்று தேட அவளோ சீரியஸாக போனில் பேசிக்கொண்டிருந்தாள்.

" லிஸன் ஜேஸி! நீ இப்படி பேசுனா மறுபடி நான் உனக்கு கால் பண்ணவே மாட்டேன் மை டியர் சன்"

மறுமுனையில் " நான் என்ன பண்ண மாம்? எனக்கு கண்ண மூடுனாலே அவ நியாபகமாவே இருக்கு.... முடியல மாம்.." என்று கசந்த குரலில் பேசிக்கொண்டிருந்தான். ( மாம்னு சொன்னதும் சீரியஸா எடுத்துக்காதிங்க..அவன் அவள எப்போவும் இப்படி தான் கூப்பிடுவான் )

" ஏன் நீங்க பாய்ஸ் இவ்வளவு வீக்கா இருக்கிங்க?? ஒரு பொண்ணு உன்ன வேணானு சொல்லிட்டா உன்னோட லைஃப் அதோட முடிஞ்சு போச்சா?? பைத்தியம் மாதிரி பேசாம ஒழுங்கா எக்ஸாம்கு படி....செமஸ்டர் முடிஞ்சதும் சென்னைக்கு வா. அவி கூட ஷ்டே பண்ணீட்டே ஜாப் தேடு. இத மட்டும் மனசுல வச்சுக்கோ. தேவையில்லாத விஷயங்களை மைண்ட்ல போட்டு குழப்பிக்காம இரு. நான் போனை வைக்குறேன் .பை.. டேக் கேர்" என்று சொல்லிவிட்டு திரும்பியவள் பின்னே நின்று கொண்டிருந்த ரியாவை பார்த்துவிட்டு ஜேஸிக்கு நடந்த விஷயங்களை கூற அவள் பொறுமையாக கேட்டுவிட்டு அவினாஷ் வரப்போவதை கூற கீதாவை கையில் பிடிக்க முடியவில்லை. அவளது செல்ல நண்பன் வரப் போகிறான் அதுவும் இவ்வளவு நாள் கழித்து......

" ஹாய் கீத்து! உன்னோட ஆபிஸ் ப்ராப்ளம் எல்லாம் சால்வ் ஆயிடுச்சா? நியாஸ் என்ன சொல்லுறான்
☺
??" என்று கேட்டபடியே டேபிளில் இருந்த ஜக்கிலிருந்து தண்ணீர் குடித்தபடி கேட்டான் அவினாஷ்.

" அவன் இப்போதான் கொஞ்சம் தெளிவா யோசிக்க ஆரம்பிச்சிருக்கான் அவி !! ஆமா நீ எதுக்கு திடீர்னு என்ன பாக்க வந்திருக்க? " என்று அவனை கேட்டு விட்டு ரியாவை குறுகுறுவென பார்த்தாள் கீதா.

" என்ன ஏண்டி இப்பிடி பாக்குற? உன் பாசமலர் தான் உன் கிட்ட பேசனும்னு சொன்னான்" என்று அவனை மாட்டி விட்டாள் ரியா.

அவன் புறம் திரும்பிய கீதா " இங்க பாருங்க லவ் பேர்ட்ஸ்! நான் பொறுமையா கேக்குறப்போவே சொல்லிருங்க. இல்லனா விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்" என்று மிரட்டவே அவினாஷ் வருண் பற்றி கேட்க ஆரம்பித்தான். கீதாவும் நடந்த அனைத்தையும் அவனிடம் கூறி விட்டு " நான் அவன உன்ன மாதிரி ஜேஸிய மாதிரி ஒரு நல்ல ஃப்ரெண்டா நெனச்சேன் அவி! பட் அவன் என் கூட டைம் பாஸுக்கு தான் பேசிருக்கான். இதுக்கு மேல யாருக்கும் டைம்பாஸா நான் இருக்க விரும்பல. ஸோ அவனோட கால்ஸ் அண்ட் மெசேஜஸ்கு ரிப்ளை பண்ணல" என்று ஒருவித இறுக்கத்துடன் முடித்தாள்.

அவளை கூர்ந்து பார்த்த அவினாஷ் " கீத்து! அவன் உன் கூட டைம்பாஸுக்கு பழகிருக்கானு நீ தான் சொல்லுற. அப்படி பட்டவன் எதுக்கு அவனோட ஃபேமிலிய உனக்கு இன்ட்ரடியூஸ் பண்ணனும்?? " என்று கேட்க கீதாவிற்கு அவன் கேட்பதற்கு பதில் சொல்ல தெரியவில்லை.

தொடர்ந்த அவினாஷ் " உங்க பிராப்ளம் அவங்க ஃபேமிலிக்கு தெரியுமா?" என்று கேட்க கீதா இல்லையென்று மறுத்தாள்.

" அவன் நெனச்சிருந்தா அவன் கஸின்ஸ் கிட்ட சொல்லி இனிமே உன் கூட பேச தேவையில்லனு சொல்லிருக்கலாம். பட் அவன் அப்படி பண்ணல. இதுல இருந்து என்ன தெரியுது?"

அவனே தொடர்ந்தான். " உன்ன அவன் கஷ்டப்படுத்த விரும்பல தென் அவன் உங்க ரிலேஷன்ஷிப் லைஃப்லாங் இருக்கணும்னு நெனைக்கிறான்" என்று ஒரு ஃப்லோவில் சொல்லிவிட அதை கேட்டு " ரிலேஷன்ஷிப்பா?" என்று அதிர்ந்தாள் கீதா.

அவளது ரியாக்ஷனை பார்த்த ரியா பக்கத்திலிருந்த அவினாஷின் காதில் " லுக்! அந்த வருண் இன்னும் கீத்து கிட்ட பிரபோஸ் பண்ணல.பட் நீ சொல்லுற லெட்சணத்துல ப்ரபோஸ் பண்ணாமலே அவங்களுக்கு பிரேக் அப் ஆயிடும் போல" என்று அவன் காதில் கடுகடுக்கவே உஷாரான அவினாஷ் " ரிலேஷன்ஷிப்பா?? நான் ரிலேஷன்ஷிப்னா சொன்னேன்
😨
?" என்று கீதாவை திருப்பி கேட்டான்.

" ஆமா....நீ அப்பிடி தான் சொன்ன அவி"

" நோ! நான் ஃப்ரெண்ட்ஷிப்னு சொன்னேன் கீத்து. உன் காதுல அது ரிலேஷன்ஷிப்னு விழுந்திருக்கும். வேணும்னா ரியாவ கேளூ" என்று ரியாவை கை காட்ட அவளும் ஆம் என்றே தலையாட்ட ஒருவாறு கீதா வருண் விஷயத்தில் சமாதானமானாள்.

" பட் ஒன் கண்டிஷன்! நான் வருணுக்கு கால் பண்ண மாட்டேன். அவன் பண்ணூனாலும் என்னோட டவுட்ஸ் எல்லாம் கிளியர் பண்ணிட்டு தான் அவன் கூட பழயபடி பேசுவேன்" என்று அவள் இறங்கி வர ரியா அவினாஷை பார்த்து சூப்பர் என்று கை காட்ட அவன் அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.

அவர்களை பார்த்த கீதா " மை டியர் லவ் பேர்ட்ஸ்! இதே மாதிரி எப்போவும் இருங்க..உங்களுக்கு யார் கண்ணும் பட்டுட கூடாது" என்று திருஷ்டி கழித்தாள்.

இவ்வாறு நாட்கள் கடக்க கீதாவின் பிறந்தநாளும் வந்தது. இரவு பன்னிரெண்டு மணிக்கு அவளுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்தனர் யோகாவும் ரியாவும். அடுத்து வீடியோ காலில் அவினாஷ், விக்னேஷ், ஸ்ரீதேவி, ஜேஸி என்று அவர்கள் பட்டாளம் வாழ்த்து சொல்லுகிறோம் என்ற பெயரில் லூட்டி அடித்துவிட்டு உறங்குவதற்குள் மணி இரண்டை தாண்டியது. காலை எழுந்து புத்தம் புது ஆடையில் கோயிலுக்கு செல்ல தயாரானவளோடு ரியாவும் யோகாவும் இணைந்து கொண்டனர்.

கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு அமர்ந்தவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள் கீதாவிற்கு வாட்சப்பில் மெஸேஜ் வரவும் என்னவென்று பார்த்தவள் ரேவதி என்று அறிந்ததும் புன்னகையுடன் பார்த்தாள்.

" ஹேப்பி பர்த் டே அண்ணி" என்று அவள் அனுப்பிய மெஸேஜை பார்த்ததும் அவளுக்கு நன்றி தெரிவித்து பதில் அனுப்பினாள். சிறிது நேரத்தில் அந்த கேங் முழுவதும் அவளுக்கு தனித்தனியாக வாழ்த்து அனுப்பினர்.

இதையே யோசித்தபடியே வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் கீதா. ரியாவும் யோகாவும் இன்று ஷ்பெஸலாக சமைக்க போவதாக கூறிக் கொண்டு கிச்சனை அதகளம் செய்து கொண்டிருந்தனர். கீதா அமைதியாக டிவி பார்க்க ஆரம்பித்தாள்.

காலையில் கண் விழித்த வருண் மொபைலில் மெஸேஜ்களை செக் செய்து கொண்டிருக்கையில் வாட்சப்பில் அவர்களின் ஃபேமிலி குரூப்பில் வந்த தகவலை பார்த்தவன் சிரித்து கொண்டே படுக்கையை விட்டு எழும்பினான்.

வாட்சப் ஸ்டேட்டஸ் வரிசையாக பார்த்துக் கொண்டே வந்தவன் அனுவின் " ஹேப்பி பர்த் டே அண்ணி என்ற கேப்ஷனுடன் இருந்த கீதாவின் புகைப்படத்தை பார்த்தவன் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து விட்டான்.

பின் அவசர அவசரமாக பால்கனிக்கு வந்தவன் கீதாவை அழைக்கலாமா வேண்டாமா என்று யோசித்தவன் பிறந்த நாளில் அவளை வாழ்த்தாமல் இருப்பது மிகவும் அபத்தமாக தோன்றவும் அவனின் விரல்கள் தானாக அவளது எண்ணை அழுத்த ஆரம்பித்தது.

டிவி பார்த்து கொண்டிருந்த கீதா திடீரென்று கால் வரவும் போனை பார்த்தவள் வருணின் முகம் ஸ்கிரீனில் தெரியவும் உற்சாகத்துடன் எடுத்தவள் " ஹலோ!" என்று சொல்ல நீண்டநாள் கழித்து அவளது குரலை கேட்டவன் அதன் இனிமையில் தன்னை தொலைத்தான்.

பின்னர் " ஹேப்பி பர்த் டே டியர். எப்போவும் நீ சந்தோசமா சிரிச்சிட்டே இருக்கணும். உன்னோட ஆசை மாதிரியே எதிர்காலத்துல உனக்கு ஒரு பெரிய குடும்பம் கிடைக்கவும் அவங்களோட எல்லா அன்பும் உனக்கு முழுசா கிடைக்கவும் நான் என்னிக்குமே காட் கிட்ட ப்ரே பண்ணுவேன் கீத்து " என்று அடிமனதில் இருந்து காதலுடன் கூற கீதாவுக்கோ அவினாஷ் கூறியபடி வருண் தன்னை அழைத்ததில் ஆனந்தம்.

" தேங்க்யூ வருண். நான் இன்னிக்கு எவ்லோ ஹேப்பியா இருக்கேன் தெரியுமா?? இன்னிகு மார்னிங் தான் எல்லாரும் எனக்கு கால் பண்ணாங்க வருண். எஸ்பெஷலி யுவர் கேங்! ஐ லவ் யூ கைய்ஸ்" என்று சந்தோசத்தில் கூற அவனுக்கு அந்த ஐ லவ் யூ கேட்டதும் அவனுக்கு ரெக்கை மட்டும் இருந்தால் பறந்தே இந்தியா சென்றிருப்பான்.

அவனுக்கு பழையபடி கீதா பேசிய சந்தோசத்தில் தலையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அவள் வாய் ஓயாமல் பேசியதை மட்டும் சளைக்காமல் கேட்டு கொண்டிருந்தான்.

திடீரென்று அவள் " வருண் உனக்கு கீர்த்திய தெரியுமா?" என்று கேட்க வருண் சாதாரணமாக " ஆமா நல்லா தெரியுமே கீத்து. நான் அவ கூடவும் டெய்லி பேசுவேன். வெரி குட் கேர்ள்" என்று மனதிலிருப்பதை மறையாது கூறவும் கீதாவுக்கு வருண் எனக்கு அவ்வளவா ஃப்ரெண்ட்ஸ் இல்லனு சொன்னது நியாபகத்துக்கு வந்தது.

" அவ கூடவும்னா?? இன்னும் நெறைய பேரு கூட பேசுவிங்க போல" என்று வருவித்து கொண்ட சாதாரண குரலில் வினவினாள் கீதா.

" எனக்கு நெறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. மேக்ஸிமம் ஒன் டேல 15 பேராச்சும் பேசுவாங்க" என்று சொல்லிக் கொண்டே போனான். தான் என்ன சொல்லுகிறோம் என்று அவனுக்கு புரியவில்லை.

" இவ்ளோ பேர் கூட எப்பிடி பேசுவ நீ??" உனக்கு போர் அடிக்காதா?"

" போர் அடிக்குனு தானே பேசுறதே. யூ நோ ஒன் திங் எனக்கு இப்படி பேசிட்டே இருந்தா டைம் போறதே தெரியாது என்று பதிலளிக்கவும் ஏனோ யோகாவும் ஸ்ரீதேவியும் கூறிய டைம்பாஸ் நினைவுக்கு வந்தது.

விரக்தியாக சிரித்தவள் " எல்லாமே உனக்கு டைம் பாஸ் தான வருண். பட் உன்ன மாதிரி ஃப்ரெண்ட்ஷிப்ப டைம்பாஸுக்கு யூஸ் பண்ண எனக்கு தெரியாது" என்று கூறினாள்.

" கீத்து ஏன் இவ்ளோ சீரியஸ் ஆகுற நீ??"

" நான் இப்பிடி தான் வருண். என்னால என்ன மாத்திக்க முடியாது. உன்ன மாதிரி எல்லா விஷயத்தையும் என்னால ஈஸியா எடுத்துக்க முடியாது"

" கீத்து இப்போ நீ தேவையில்லாம கோவப்படுறதா உனக்கு தோணல?"

" என்னோட கோவம் என் கூடவே பொறந்தது வருண். என்ன பொறுத்தவரைக்கும் பொய் சொல்லுறவங்க, சீட்டிங் பண்றவங்கள விட கோவப்படுறவங்க ஒன்ணும் மோசமானவங்க இல்ல"

" ஓகே லிஸன். நான் சொல்லுறத கொஞ்சம் அமைதியா கேளு"

" இம்பாஸிபிள். இதுக்கு மேல எதையும் கேக்க எனக்கு டைம் இல்ல. உனக்காக நெறைய பேர் வெயிட் பண்ணுவாங்க. ஐ மீன் ஃபார் யுவர் கால். சோ நீ அவங்க கூட பேசு. பை. " என்று போனை கட் செய்து விட்டாள்.

வருணுக்கு முதல் முறையாக கீதாவின் மேல் கோபம் வந்தது. என்ன சொல்ல வருகிறென்று கூட கேட்க பொறுமையில்லா அவளது சிறுபிள்ளைதனம் அவனுக்கு எரிச்சலாக கூட இருந்தது. இனிமே தானாக அவளுக்கு கால் செய்ய கூடாது என்ற முடிவுக்கு வந்தான்.

அவனது இந்த முடிவால் அவளின் கோபமும், அவர்களின் நட்பில் வந்த விரிசலும் இன்னும் அதிகமாகும் என்பது தெரிந்திருந்தால் அவன் எப்பாடு பட்டாவது தடுத்திருப்பான்.
 
அத்தியாயம் 9



வருணிடம் அவளுடைய பிறந்த நாளன்று பேசியது தான் கீதா அவனுடன் பேசிய கடைசி முறை. அதற்கு பின் அவனும் அவளை அழைக்கவில்லை. அவளுக்கும் அவனுடன் பேசுவதற்கு விருப்பம் இல்லை. இருவரும் ஃபேஸ்புக் மூலமாகவும், வாட்சப் மூலமாகவும் ஒருவர் வாழ்வின் நிகழ்வுகளை மற்றவர் தெரிந்து கொண்டதோடு சரி..

ஜேஸியும் சென்னை வந்து விட கீதாவுக்கு தனியாக இருக்கும் உணர்வே வரவில்லை. அவளுடைய நண்பர்கள் அவளை தனியாக இருக்கவோ யோசிக்கவோ விட்டால் தானே!

வருணோ இந்தியா வருவதற்கான நாளை ஆவலோடு எதிர்நோக்கி இருந்தான். இதற்கிடையில் அவனுடைய கஸின்ஸ் கீதா பற்றி கேட்டபோதெல்லாம் அவள் வேலைப்பளு அதிகம், அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறி பேச்சை மாற்றினான். அவனுக்குமே இந்த பிரிவு கொஞ்சநாள் தேவைப்பட்டது. இவ்வாறு சென்று கொண்டிருக்கையில் ரேணுகாயின் திருமணமும் வந்தது. அதற்காக வருணும் இந்தியாவிற்கு வந்தான்.

அவனது வாட்சப் ஸ்டேட்டஸில் அவன், பிரியா அனு மற்றும் ரேவதியுடன் இருக்கும் போட்டோவை போட கீதா அதை பார்த்ததும் அவன் இந்தியாவில் இருப்பதை புரிந்து கொண்டாள். ஆனால் அவனுடன் பேச முயற்சிக்கவில்லை. அவனது குடும்பத்தினர் ரேணுகா திருமண வேலைகளில் பிஸியாக இருப்பதால் அனுவையும் அவள் பேசி தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

வருணும் அனு கீதாவை திருமணத்திற்கு அழைக்க வேண்டுமென கூறிய போது அவள் இந்தியாவில் இல்லை, அவளுடைய கார்டியனை பார்க்க யு.எஸ் சென்றிருப்பதாக கூறவும் சிறிது நேரம் வருத்தப்பட்ட ரேணுகாவும் நேத்ரா வந்து விட அவளுடன் ஷாப்பிங் செல்ல தயாரானாள்.

இப்படியாக கீதாவும், வருணும் ஒருவரை ஒருவர் பார்க்கவோ தொடர்பு கொள்ளவோ முயற்சிக்காமலே இருக்க ரேணுகாவின் திருமண நாளூம் வந்தது. கீதா ஒருநாள் தவறாமல் வருணின் வாட்சப் ஸ்டேட்டஸை பார்த்து கொண்டு தான் இருந்தாள். திருமணத்திற்கு தன்னை அழைப்பான் என்று அவளூக்கு ஒரு நப்பாசை இருந்தது என்னவோ உண்மை. ஆனால் வருணோ கீதா என்ற ஒருத்தி தன்னுடைய ஸ்டேட்டஸை பார்ப்பதையே ஒரு பொருட்டாக கருதாமல் திருமண வேலைகளில் பிஸியாக இருந்தான்.

ரேணுகாவின் திருமண நாள் அன்று காலை...

யோகாவை பார்க்க பார்லருக்கு சென்ற கீதா அங்கு புடவையுடன் ஃபுல் மேக்கப்புடன் நின்றிருந்த கீர்த்தியை பார்த்ததும் " ஹாய் கீர்த்தி! லுக்கிங் வொண்டர்ஃபுல்! ஏதாச்சும் ஃபங்ஷனா?" என்று ஆவலுடன் கேட்டாள்.

கீர்த்தி புன்னகையுடன் " ஆமா கீத்து! என்னோட குளோஸ் ஃப்ரெண்டோட சிஸ்டருக்கு இன்னிக்கு மேரேஜ்
☺
" என்று பதிலளிக்கவும் கீதாவிற்கு ரேணுகா திருமணமாக இருக்குமோ என்ற சந்தேகம் வரவும் யாருக்கு திருமணம் என்று கேட்டாள்.

" என் ஃப்ரெண்ட் ஒருத்தன் ஜெர்மனில படிச்சிட்டிருக்கான். அவனோட சிஸ்டருக்கு தான் இன்னிக்கு மேரேஜ். கண்டிப்பா வரணும் கீர்த்தினு வேற சொல்லிட்டான். அதான் ரெடி ஆகிட்டு டாக்ஸிக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" என்று சொல்லவும் கீதாவிற்கு அவன் வருண் தான் என்று உறுதியாகவே தெரிந்தது.

அதற்கு மேல் அவனை பற்றி யோசிக்க விரும்பவில்லை அவள். என்ன யோசித்தாலும் அவன் சொன்ன விஷயங்கள் யாவும் பொழுதுபோக்குக்காக அவன் சொன்ன பொய்களாக மட்டுமே அவளுக்கு தோன்றியது. தன்னை தவிர வேறு யாரும் அவ்வளவு குளோஸ் ஃப்ரெண்ட் இல்லையென கூறியவன் தன்னுடைய ஃபேஸ்புக் டைம்லைனில் சிறுவயது தோழர்கள் முதற்கொண்டு திருமணத்திற்கு அழைத்த புகைப்படத்தையும் பதிவிட கீதா அவனை பற்றிய தன்னுடைய அபிப்ராயம் மிகவும் சரி, இனி அவனுடன் தனக்கு எந்த நட்பும் தேவையில்லை என்று முடிவு செய்தாள்.

இருந்தாலும் அவளூடைய மனசாட்சி வருணை பற்றி கொஞ்சம் யோசி கீத்து என்று கத்தவும் " ஏதோ என்ன விட்டா அவனுக்கு ஃப்ரெண்ட்ஸே இல்லங்கிற மாதிரி சீன் போட்டான், எல்லாம் பொய். என்ன மட்டும் தான் ஃபேமிலி கிட்ட அறிமுகப்படுத்திருக்கேனு வேற இன்னொரு பொய். வாய தொறந்தாலே பொய். நீ இவ்வளவு யோசிக்கிறியே.. பட் அவனுக்கு இன்னேரம் என்னோட நேம் கூட மறந்திருக்கும். டைம்பாஸுக்கு பேசுனவ தான. சோ இனிமே அந்த வருண் யாருனு தெரியாத மாதிரியே நானும் நடந்துப்பேன்" என்று மனசாட்சியை அடக்கினாள்.

----------------------------------------------------------------------------------------------------------------------------

ரேணுகாவின் திருமணம் முடிந்து அவள் புகுந்த வீடு சென்று அன்றோடு ஆறு மாதம் முடிந்திருந்தது. அவளது கணவன் சிவாவுக்கு ரேணுகாவின் குடும்பம் மிகவும் பிடித்து விட்டது. அவளது கேங்கின் ஃபேனாக மாறிவிட்டான். அவர்களுடன் சேர்ந்து அவளை கலாய்ப்பது அவனது தினசரி பொழுதுபோக்காகவே ஆகிவிட்டது .

கர்ப்பமாக இருக்கும் தங்கையை சிவா கையில் வைத்து தாங்குவதை கண்ட வருணுக்கு மனநிறைவாக இருந்தது. படிப்பு முடிந்த நிலையில் ஜெர்மனியிலேயே வேலையில் சேரலாமா இல்லை இந்தியாவில் செட்டில் ஆகலாமா என்ற குழப்பத்தில் இருந்தான் அவன்.

அந்த குழப்பத்திலும் கீதாவை பற்றி யோசிக்க தவறவில்லை அவன்.

அன்று அவ்வாறு அவளை பற்றி சிந்தித்தவாறு பால்கனியில் நடந்து கொண்டிருந்தான் வருண். குட்டி போட்ட பூனை மாதிரி அவன் பால்கனியில் நடந்து கொண்டிருப்பதை பார்த்த அனு இந்த அண்ணாவுக்கு என்னாச்சு என்று யோசித்தவாறு அவனிடம் சென்றாள்.

" அண்ணா ஏன் ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கிங்க?? ஏதும் லவ் மேட்டரா?"

" அனு! இந்த ஜென்மத்துல நான் யாரையும் லவ் பண்ணுறதா இல்ல. ஒருத்திய பண்ணின பாவத்துக்கே நான் தூக்கம் இல்லாம சுத்துறேன்" என்று தெரியாமல் வாயை விட அனுவிற்கு ஆச்சரியமாய் போய்விட்டது.

" வாட்?? நீங்க லவ் பண்ணிங்களா?? யார அண்ணா?? நம்ம ஊரா இல்ல சென்னை கேர்ளா?? அவங்க என்ன பண்ணுறாங்க??" என்று அடுக்கி கொண்டே செல்ல அவளை பார்த்து தலையில் அடித்து கொண்டான் வருண்.

" நீ ஓவரா எமோஷனல் ஆகுற அனு. அது எல்லாமே முடிஞ்சு போன விஷயம். அவ ரொம அடமண்ட். நம்ம குடும்பத்துக்கு செட் ஆகாது"

" ஓ! அப்போ பிரேக் அப் ஆயிடுச்சா அண்ணா? " என்று வருத்தமான குரலில் கேட்கவும் " பிரபோஸே பண்ணல. அப்புறம் எங்க இருந்து பிரேட் அப்?" என்று வருண் கூற அவளுக்கு அவன் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு கோபம் வந்தது.

" போங்க அண்ணா நீங்களும் உங்க லவ்வும்! நோ கமெண்ட்ஸ், சிம்ப்ளி வேஸ்ட்"

" அடியே நானே குழப்பத்துல இருக்கேன். நீ வேற" என்று சலித்து கொண்டான் வருண்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் நேத்ரா ரேவதியுடனும் பிரியாவுடனும் சேர்ந்து வர அவர்களிடமும் வருணின் கதையை அவள் கூற அவர்களும் அவனை வெட்டவா குத்தவா என்று பார்த்தனர்.

" இவரு பெரிய ரோமியோ. இவரு ப்ரபோஸ் பண்ணாம அந்த பொண்ணுக்கு எப்பிடி லவ் பண்ணுறது தெரியும்?? இங்க பொலம்புறத அவ கிட்ட பொலம்புனா கூட பாவப்பட்டு அந்த பொண்ணு லவ் பண்ணிருக்கும்" என்று கடுப்பில் கூறினாள் பிரியா.

அவள் அவ்வாறு கூறவும் " பிரியா! உனக்கு அவள பத்தி தெரியாது. என்னால அவ கிட்ட லவ் பத்தி சொல்ல முடியலடி" என்று மறுபடி புலம்பினான்.

" அவ கிட்ட சொல்லாம அவங்க ஆயா கிட்டயா சொல்லுவ?? " இது ரேவதி.

" அவ ரொம்ப கோவக்காரி ரேவா. சப்போஸ் நான் லவ் பத்தி ஏதாச்சும் பேசி அவ என்ன தப்பா நெனச்சுட்டா என்ன பண்ணுறது? ( நீ பேசாமலே அவ உன்ன பத்தி அப்பிடி தாண்டா நெனச்சிட்டு இருக்கா )"

" சரி! நீ பேச வேண்டாம். அவ அட்ரஸ் சொல்லு. நாங்க போய் பேசி பாக்குரோம்"

" என்னது?? நீங்க பேச போறிங்களா?" என்று அதிர்ச்சியானான் வருண்.

" பின்ன..உன்ன மாதிரி ஒருத்தன் இந்த ஜென்மத்துல அவ கிட்ட சொல்ல போறது இல்ல. நீ கமிட் ஆகலனா எங்களால எப்பிடி கமிட் ஆக முடியும்?? நீ சும்மாவே நம்ம ஃபேமிலி குரூப்ல மொக்க போட்டு சாகடிக்கிற.. இதுல காதல் தோல்வி வேற நடந்தா எங்கள நீ கவிதை சொல்லுறனு சொல்லி மேல் லோகத்துகு பார்சல் பண்ணிடுவ. சோ வேற வழி இல்ல .. நாங்க இந்த மேட்டர டீல் பண்ண போறொம்" என்று பிரியா மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாள்.

" சரி! அந்த பொண்ணு நம்பர், அட்ரஸ் முக்கியமா அவ போட்டோ எல்லாமே கொஞ்சம் தேவைப்படும்"

" அட்ரஸ் எனக்கு தெரியாது" என்று கூறவும் நான்கு பேரும் சந்திரமுகி அவதாரம் எடுக்க வருண் வேகமாக " பட் போட்டோ போன் நம்பர் இருக்கு" என்று கூறவும் சாந்தமானார்கள்.

" சரி.. போட்டோ போன் நம்பர் வாட்சப் பண்ணு"

" அவ நம்பர் உங்க கிட்டயே இருக்கு " என்று கூறவும் இப்போது குழம்புவது அவர்கள் முறை ஆயிற்று.

தலையை பிய்த்து கொண்ட அனு " ஐயா சாமி! நீ லவ் பண்ணி முடிக்குறதுக்குள்ள நாங்க எல்லாரும் கீழ்ப்பாக்கத்துல அட்மிட் ஆயிடுவோம் போல..கொஞ்சம் தெளிவா சொல்லு தெய்வமே" என்று கேட்டாள்.

நேத்ராவோ " எங்களுக்கு தெரிஞ்ச பொண்ணுனா யாருடா அது?" என்று கேட்க அமைதியாக அவளை பார்த்தவன் வெட்கத்துடன் " கீதா" என்று கூற நான்கு பேருக்கும் ஆனந்த அதிர்ச்சி.

" என்ன ? அண்ணியா?" என்று மறுபடியும் கேட்டு உறுதி செய்து கொண்டாள் பிரியா.

" இவ்வளோ நாளா எதுக்கு மறைச்ச எருமை?" என்று ரேவதி செல்லமாக கோவித்தாள்.

" ஓகே..நம்ம அண்ணி தான. நோ பிராப்ளம். இன்னிக்கே போய் பேசி முடிச்சிடுவோம்" என்றாள் அனு.

" ஏய்! மறந்துட்டிங்களா?? ஷீ இஸ் இன் யு.எஸ்" என்று நேத்ரா நினைவூட்ட வருண் "இல்ல அவ இங்க தான் இருக்கா" என்று சொல்லவும் அவர்கள் மீண்டும் குழப்பமாயினர்.

" இங்க இருக்காங்கனா ஏன் ரேணுகா மேரேஜூக்கு அண்ணி வரல?"

" பிகாஸ் நான் அவள இன்வைட் பண்ணல"

"ஏன் இன்வைட் பண்ணல"

"எங்களுக்குள்ள ஒரு சின்ன மிஸ்அண்டர்ஷ்டாண்டிங்...நாங்க பேசியே நாலு மாசம் ஆகுது" என்று அவன் சாதாரணமாக கூற அவர்கள் நால்வருக்கும் இவனை கொலை செய்யுமளவிற்கு ஆத்திரம் வந்தது.

" முடியலடி. நான் ரொம்ப நாள் இந்த பிரஷர் , சுகர் இல்லாம வாழனும்னு ஆசப்படுறேன். பட் இந்த மிஸ்டர் ஜெர்மனால எனக்கு ஹார்ட் அட்டாகே வந்துடும் போல"

" இது கொஞ்சம் சிக்கலான லவ் ஸ்டோரி தான்" என்று பெருமூச்சு விட்டாள் ரேவதி.

" இங்க பாருங்க! எனக்கு அதுலாம் தெரியாது. எனக்கு தெரிஞ்சது ரெண்டே விஷயம் தான்"

" சொல்லும்! சொல்லித் தொலையும்" என்றனர் நால்வரும்.

" ஒண்ணு என்னால கீதா இல்லாம வாழ முடியாது. ரெண்டாவது அவ ரொம்ப கோவப்படுறது நம்ம ஃபேமிலிக்கு சுத்தமா செட் ஆகாது. சோ நீங்க ரொம்ப யோசிக்காதிங்க. கொஞ்ச நாள்ல நானே அவள மறந்துடுவேன்" என்று சொல்லியபடியே அங்கிருந்து நகர்ந்தான்.

அவனை யோசனையாக பார்த்த நேத்ரா மற்றவர்களிடம் " ஹேய்! இங்க பாருங்க, கீத்துக்கு கால் பண்ணுங்கடி! இன்னிக்கு ஈவ்னிங் ஃபீனிக்ஸ்ல மீட் பண்ணலாமானு கேளுங்க! அப்புறம் இன்னொரு இம்பார்டெண்ட் விஷயம் இது எதுவுமே வருணுக்கு தெரிய கூடாது" என்று சொல்லிவிட்டு அடுத்து செய்ய வேண்டிய விஷயத்தை யோசிக்க ஆரம்பித்தாள்.
 
அத்தியாயம் 10
ஃபீனிக்ஸ் மாலில் நுழைந்த கீதா அங்கிருந்த கஃபே காபிடேவில் அமர்ந்திருந்த அனுவை பார்த்து விட்டாள். அனுவின் எதிர்புறம் இருந்த நேத்ராவும் பிரியாவும் அவள் வருவதை கண்டு அவளை இங்கு வருமாறு சைகை காட்ட அவள் வாயில் விரலை வைத்து அமைதி காக்குமாறு சைகை காட்டியபடியே அனுவின் கண்களை பின்புறம் நின்று மூடவும் அவள் " இது யாருடா! பின்னாடி இருந்து கண்ண மூடுனது?? தேவையில்லாம சிங்கத்த சீண்டி பாக்காதிங்க! அட முன்னாடி வாங்கய்யா!" என்று சொல்லவும் கையை எடுத்தவளை பார்த்த அனு " அண்ணி" என்று ஆனந்த கூச்சலுடன் கட்டி கொண்டாள்.

இருக்கையில் அமர்ந்தவளை திறந்த வாயை மூடாமல் பார்த்த பிரியாவை பார்த்து அவள் கண் முன்னே கையை ஆட்டிய கீதா " ஹோய்! என்னாச்சு??" என்று வினவ அவளோ " அண்ணி நீ நேர்ல பாக்குறப்போ ரொம்ப அழகா இருக்க. என் கண்ணே உனக்கு பட்டுடும் போல" என்று சொல்ல கீதா அழகாக சிரித்து அவள் கூறிய விஷயத்தை ஏற்று கொண்டாள்.

பின்னர் நேத்ராவை பார்த்து " நான் உங்க எல்லார் மேலேயும் செம காண்டுல இருக்கேன் அண்ணி" என்று சொல்லவும் அனைவரும் அவளை ஏன் என்பது போல் பார்க்க " நான் சென்னைல தான இருக்கேன். பவானி மேரேஜுக்கு என்ன இன்வைட் பண்ணனும்னு உங்க யாருக்குமே தோணல.. நீங்க எல்லாரும் என்ன மறந்துட்டிங்க அண்ணி" என்று குறைபட்டாள்.

" ஐயோ அப்படிலாம் இல்ல அண்ணி. இந்த வருண் அண்ணா நீ உன்னோட கார்டியன பாக்க யூ.எஸ் போய்ட்ட, சோ உன்ன டிஸ்டர்ப் பண்ண வேண்டானு சொன்னான். அதான் உன்ன இன்வைட் பண்ணல" என்று சொல்லவும் கீதா வருண் என்ற பெயரை கேட்டதும் மெல்ல மெல்ல கொதிநிலைக்கு செல்ல ஆரம்பித்தாள்.

" ஓ! இன்னும் என்ன சொன்னான் உங்க நொண்ணா?" என்று பல்லை கடித்தபடியே கேட்கவும் அனு சொல்ல வாயெடுத்தாள். அதற்குள் நேத்ரா அவளது காலை டேபிளுக்கு கீழிருந்து மிதிக்கவும் " ஆவ்! அம்மா" என்று சத்தமிட்ட அனுவை பார்த்து சொல்லாதே என்று கண் காட்டினாள் நேத்ரா.

அதை புரிந்து கொண்ட அனு பேச்சை மாற்றினாள். அதன் பின் பவானி திருமண புகைப்படங்கள், நிகழ்வுகள் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் கீதா வாஷ்ரூம் செல்வதாக கூறி பிரியாவுடன் சென்றாள்.

அந்த நேரத்தில் அங்கே வந்து சேர்ந்தான் வருண். இதை எதிர்பார்க்காத மூவரும் விழிக்க அவன் அவர்களை கேலியாக பார்த்து சிரித்தவாறே இருக்கையில் அமர்ந்தான்.

" ஹலோ! என்னாச்சு?? நீங்க குடுக்கிற ரியாக்சன பாத்து ஏதோ பூகம்பம் வரப் போகுதுனு எல்லாரும் நெனச்சிக்க போறாங்க?? அட சீ வாய மூடுங்க" என்று அவர்களை கலாய்த்தான்.

" ஆல்ரெடி அண்ணி இவன் மேல செம கடுப்புல இருக்கு. இப்போ மட்டும் கீத்து இங்க வந்தா பூகம்பம் கன்ஃபார்ம்" என்று நேத்ராவின் காதை கடித்தாள் ரேவதி. இருவரும் அனுவை பார்த்து ஏதாச்சும் பண்ணு என்று சைகை காட்ட அவள் வருணை பார்த்து " அண்ணா வாங்க நம்ம ரெண்டு பேருமா சேர்ந்து ஷாப்பிங் பண்ணி ரொம்ப நாளாச்சு" என்று அவன் கையை பிடித்து இழுக்க அவனோ " நோ நோ! நான் இங்க வந்தது ஒரு பெர்சன மீட் பண்ண. இது அவங்க வர்ர டைம் தான். சோ நான் எங்கயும் போக மாட்டேன்" என்று சொல்லிவிட்டு இருகைகளையும் தலைக்கு முட்டு கொடுத்து சேரில் சாய்ந்து கொண்டான்.

மூவரும் விழித்து கொண்டிருக்கையில் கீதாவும் பிரியாவும் சிரித்து பேசிக் கொண்டே வந்து சேர்ந்தனர்.

கீதாவிற்கு தன்னுடைய சேரில் யாரோ உட்கார்ந்து அவர்களுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்து பிரியாவிடம் கேட்க அவளோ அவன் அணிந்திருந்த டிஷர்ட்டை வைத்து அது அஜய் என்று கூறினாள்.

" ஹலோ அஜய்! ஹவ் ஆர் யூ?" என்று தன் முன் சிரித்த முகத்துடன் வந்து நின்ற அந்த தேவதையை பார்த்ததும் வருண் தன்னை மறந்து எழுந்தான்.

வருணை அங்கு எதிர்பார்க்காத கீதாவோ அவன் வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை கண்டு கடுப்பானாள். முகமும் கடுகடுவென்று ஆனது.

" ஹாய் கீதா! " என்று சொல்லி கையை நீட்டியவனை ஒரூ முறை முறைத்தாள் கீதா. ஆனால் வருணோ அதை கண்டு கொள்ளூம் மனநிலையில் இல்லை.

வேண்டாவெறுப்பாக ஹாய் சொன்னவள் சேரில் அமர்ந்தவள் அருகிலேயே அவனும் அமரவே எழுந்து நின்றாள். அவள் எழுந்ததும் அவள் அமர்ந்திருந்த சேரை அவளை நோக்கி தள்ளவும் காலில் சேர் இடித்ததால் சேருக்கும் டேபிளுக்கும் இடையிலிருந்த இடைவெளியில் நிற்க இயலாத கீதா அந்த சேரிலேயே அமர்ந்தாள்.

அமர்ந்தவள் வருணை எரிப்பது போல் பார்க்க அவனுக்கு அவளது முட்டை கண் ரியாக்சனை பார்ப்பது தான் முக்கியம் என்பது போல கன்னத்தில் கை வைத்து சினிமா பார்ப்பது போல் அமர்ந்திருக்க கீதா மனதிற்குள்ளேயே பாக்குற பார்வைய பாரு எரும என்று அவனை வறுத்தெடுத்து கொண்டிருந்தாள்.

" யூ நோ ஒன் திங் கீத்து??நாம ரெண்டு பேரும் சென்னைல தான் இருக்கோம். பட் மீட் பண்ணவே சான்ஸ் கெடைக்கல. இன்னிக்கு தான் நாம மீட் பண்ணனும்னு அந்த கடவுளே டிஸைட் பண்ணிட்டாரு போல"

" ஆஹான்! யூ ஆர் ரைட் வருண். நான் தான் கடந்த ஆறு மாத காலமா இந்தியாவிலேயே இல்லயே. நான் கண்ணன் அங்கிள பாக்க யூ.எஸ் போயிருந்தேன்ல" என்று சொல்லி முடிக்கவும் காபி குடித்து கொண்டு இருந்தவனுக்கு புரை ஏறியது.

தலையை தட்டி தன்னை சமனப்படுத்தியவன் அவர்கள் நால்வரையும் எல்லாத்தையும் சொல்லிட்டிங்க போல என்று கண்ணாலே குற்றம் சாட்ட கடுப்பான கீதா " அவங்கள ஏண்டா முறைக்கிற?? என்ன பாத்து பேசு" என்று திட்டவும் முகத்தை பாவம் போல் வைத்து கொண்டான் வருண்.

" நீ எப்படி பேசுவ? என் கிட்ட பேசனும்னா உனக்கு வாய்ல பொய் மட்டும் தான வரும்? எப்படி எப்படி சார்க்கு ஃப்ரெண்டே கிடயாது. என் கூட மட்டும் தான் ஃப்ரெண்டா குளோசா பழகினிங்க. அப்படி தான சார்?" என்று சொல்லிவிட்டு அவனை முறைத்தாள்.

" இன்னும் என்னென்ன பொய் சொல்லிருக்க வருண்?? இந்த உலகத்துல எனக்கு தெரிஞ்சு பொய் சொல்லி ஆரம்பிச்ச ஃப்ரெண்ட்ஷிப் நம்மளோடது தான்" என்று சொல்லவும் வருணுக்கு இல்லை நான் உன்ன காதலிக்கிறேன்டி என்று கத்த வேண்டுமென்று தோன்றியது. ஆனால் முடியாது அமைதியாக இருந்தான்.

" சரி அத விடு. ஒரு நல்ல ஃப்ரெண்டா இருந்தா இந்த விஷயத்தலாம் மறந்துட்டு நீ என்ன பவானி மேரேஜுக்கு இன்வைட் பண்ணிருக்கனுமா இல்லயா?? ஆனா நீ என்ன பண்ண?? நான் இந்தியாவிலேயே இல்லனு பொய் சொல்லிருக்க. யூ நோ வாட். ஐ ஹேட் லையர்ஸ்" என்று மனதில் வலியுடன் சொன்னவளை பார்த்தவனுக்கு எங்கிருந்து தான் தைரியம் வந்ததோ அவன் சொல்லி விட்டான்.

ஃபைனலி அவன் சொல்லியே விட்டான்.

" நான் இதுலாம் பண்ணது தப்பு தான் கீதா. பட் நான் உன்ன இழக்க கூடாதுனு நெனச்சேன்"

" எனக்கு புரியல வருண்"

" யூ ஆர் வெரி ஷ்பெஷல் டு மீ"

" வொய்?? வொய் ஆம் ஐ ஷ்பெஷல் டு யூ?? இந்த வார்த்தைய நீ நெறய டைம் யூஸ் பண்ணிருக்க. பட் ஏன்னு எனக்கு தான் புரியல.

" பிகாஸ் ஐ லவ் யூ கீதா" என்று வருண் கூறி முடிக்கவும் கீதா அமைதியில் உறைந்து விட்டாள். அவளை பொறுத்தவரை அவள் வருணை என்றுமே ஒரு நல்ல நண்பனாக தான் பார்த்தாள். அவன் அவ்வாறு தன்னை நினைக்கவில்லை என்பது தான் அவளது நீண்ட நாள் ஆதங்கமே.

இப்படி திடீர்ரென்று காதல் என்று சொல்லவும் அவளுக்கு அது புரிபடவே சிறிது நேரம் பிடித்தது. பின்னர் சுதாரித்தவள் " சோ சார் என்ன லவ் பண்ணிறிங்க அப்படி தான?? பட் இத்தன நாள் இந்த லவ் எந்த காட்டுக்குள்ள போய் ஒழிஞ்சு இருந்தது மிஸ்டர் வருண் சுவாமிநாதன்?? நேர்ல பாத்ததும் காதல் பொங்கி வழியுதோ? சப்போஸ் என்ன பாக்கவே இல்லனா நீ என்ன பண்ணீருப்ப தெரியுமா?" என்று அவள் கேட்க அனைவரும் வருணுடன் சேர்ந்து என்னவென்று புரியாமல் விழித்தனர்.

" நானே சொல்லுறேன். சப்போஸ் நீ என்ன இன்னிக்கு பாக்கலனா, என்ன விட்டுட்டு நீ பேசுன அந்த 25 பேருல யாராவது ஒருத்தர் கிட்ட ப்ரபோஸ் பண்ணிருப்ப" என்று சொன்னதும் வருணுக்கு சுர்ரென்று கோபம் வந்துவிட்டது.

" இனாஃப் கீத்து. என் கூட பேசுற எல்லாரையும் என்னால லவ் பண்ண முடியாது. லவ் ஒரு மாதிரி அழகான ஃபீலிங். அது எல்லார் மேலயும் வராது கீத்து" என்று உணர்ச்சி பிளம்புடன் பேசிக் கொண்டிருக்கையில் " ஹாய் வருண்!" என்ற குரல் கேட்கவே அனைவரும் திரும்பி பார்த்தனர்.

அங்கே நின்று கொண்டிருந்த ஒரு அல்ட்ரா மாடர்ன் கேர்ள் வருணை நோக்கி தான் வந்து கொண்டிருந்தாள். நேரே வருண் அருகில் ஒரு சேரை இழுத்து போட்டு அமர்ந்தவள் " சாரி டியர்! நான் கொஞ்சம் லேட் பண்ணிட்டேன் இல்ல. டிராஃபிக் கொஞ்சம் ஹெவி" என்று 36 பற்களையும் காட்டி சிரித்தாள்.

இங்கு அனு பிரியாவின் காதில் " இன்னிக்கு அண்ணாக்கு செம தீபாவளி. இவள தான் மீட் பண்ணணும்னு சார் வந்தாரா?? அண்ணி கடுப்பானதுல தப்பு ஏதாவது இருக்கு?" என்று கேட்க பிரியா " இல்லவே இல்ல அனு. உங்க நொண்ணாவுக்கு கண்டிப்பா இந்த ஜென்மத்துல லவ் செட் ஆகாது " என்று கூறிவிட்டு நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

" வருண் யூ லுக் சோ ஹேண்ட்சம். வீடியோ கால்ல பாத்தத விட நேர்ல செம" என்று கூற வருண் சிரித்தே சமாளித்தான். கீதாவின் முகத்திலோ கடுகை போட்டாலும் பொரிந்து விடுமளவிற்கு கடுப்பு.

அவளை பேசி அனுப்பிவிட்டு கீதாவை பார்த்தவன் அவள் முகத்தை திருப்பி கொள்ளவும் அவள் கையை பிடித்து கொண்டு " கீத்து! ப்ளீஸ் டியர். ஒரு சான்ஸ் ஒரே ஒரு சான்ஸ் எனக்கு குடு. நான் ஒரு நல்ல ஃப்ரெண்ட்னு கண்டிப்பா ப்ருவ் பன்ணுவேன். அது மட்டுமில்லாம நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு நல்ல பீஸ்ஃபுல் லைஃப் வாழ முடியும்னு நான் உனக்கு ப்ரூவ் பண்ணுறேன். ப்ளீஸ் " என்றவனை கண் இமைக்காமல் பார்த்தவள் " சரி" என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டாள்.

அவள் சென்றதும் சந்தோசத்தில் மிதந்த வருணை பார்த்த நேத்ரா " இனியாச்சும் புத்திசாலியா நடந்துக்கோ வருண். கீத்துவ பாத்தல்ல. ஷீ இஸ் சிம்பிள் கேர்ள். அவ லைஃப்ல உன்னால எந்த குழப்பமும் இனிமே வந்துடாம பாத்துக்கோ" என்று கூற இந்த சந்தோசத்தை கொண்டாட ஸ்வீட் ஆர்டர் செய்தான் வருண். கிடைத்த டைமில் ஒரு கனவு காணவும் தவறவில்லை அவன் .

வாழ்க்கையில் அவனுக்கு கிடைத்த இன்னொரு வாய்ப்பை அவன் சரியாக பயன்படுத்தி கீதாவை கை பிடிப்பானா????

தொடரும்...​
 

New Threads

Top Bottom