நமது திட்டப்படி தீனா கனகாவை கெடுத்து இருப்பானா என்ற சந்தேகம் பரந்தாமனுக்கு லேசாக தோன்றியது .
இந்த திட்டத்தை சந்திரனுக்காகவே போட்டோம். ஆனால் சந்திரன் நம்முடைய சூழ்ச்சியில் சிக்காமல் தப்பித்து விட்டான் இவனை எப்படியாவது கனகாவிடம் ஒன்றுசேர வைக்க வேண்டும் என்று மனதில் நினைத்தான் பரந்தாமன்.
அளவுக்கு மீறி குடித்திருந்ததால் சந்திரன் சுயநினைவின்றி படுத்து தூங்கிக்கொண்டிருந்தான் அப்போது பரந்தாமன் அவனை மெதுவாக எழுப்பினான்.
தம்பி... தம்பி ...எழுந்திருடா தீனா இன்னும் வரவில்லை என்னாச்சு என்றும் தெரியவில்லை
கொஞ்சம் நீ பம்பு செட்டுக்கு போயிட்டு அங்கு தம்பி எப்படி இருக்கான் என்று பார்த்துவிட்டு வா சந்திரா என்று பரந்தாமன் மெதுவாக சந்திரனிடம் சொன்னான்.
சந்திரன்... பரந்தாமன் சொன்னதை புரிந்துகொண்டான்.
அண்ணே ..நீங்க இங்கேயே இருங்க நான் பம்பு செட்டுக்கு போயிட்டு தம்பியை கூட்டிக்கொண்டு வருகிறேன் . நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீங்க என்று உளறிக்கொண்டே சந்திரன் பம்புசெட்டை நோக்கி தள்ளாடியபடி சென்றான்.
என்னோட கவலை எல்லாம்
இந்த திட்டத்தில் நீ ஒதுங்கி இருப்பது தான் டா என்று மனதில் நினைத்துக்கொண்டான் பரந்தாமன்.
பரந்தாமனுக்கு ஒரே பதட்டமாக இருந்தது ...கனகா இன்னேரம் தம்பியை அடித்து இருப்பாளா இல்லை அவனிடம் கெஞ்சி கொண்டு அழுது இருப்பாளா இல்லையென்றால் ஊருக்குள்ளே ஓடி யாரையாச்சும் கூட்டிக்கொண்டு வந்து இருப்பாளா .
அப்படி இல்லை என்றால் தம்பியின் ஆசைக்கு இணங்கி இருப்பாளா என்று பல கோணங்களில் கற்பனை செய்து கொண்டு பரந்தாமன் ஒரே பதட்டமாக இருந்தான் .
சந்திரன் சென்றிருக்கிறான் அவனும் நாம் நினைத்தபடி கனகாவிடம் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் .
ஆனால் அதற்கு வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான் . இருந்தாலும் சந்திரன் மதுபோதையில் சென்றிருக்கிறான் . கனகாவை பார்த்ததும் அவன் மனம் மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கு என்று பரந்தாமன் யோசித்துக்கொண்டு மது அருந்தினா இடத்திலே.
இங்கும் அங்குமாக நடந்துகொண்டு பதட்டமாக காணப்பட்டான் பரந்தாமன்.
சந்திரனுக்கு மதுபோதையில் பார்க்கும் இடமெல்லாம் அவன் வருங்கால மனைவியின் முகங்கள் தெரிந்தது .
இப்படி சுயநினைவின்றி பாம்பு செட்டை நோக்கிச் சென்றான் சந்திரன்.
குடிபோதையில் கனகாவை கற்பழித்துவிட்டு . பம்பு செட்டின் அறையில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான் தீனா...
குடிபோதையில் காட்டுமிராண்டி போல் தீனா.
கனகாவை கற்பழித்தது அவளின் ஊடலில் சில இடங்களில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டிருந்தது .
முகங்கள் எல்லாம் வீங்கியிருந்தது உதடுகள் ரத்த காயத்தில் வீங்கியிருந்தது இப்படி அலங்கோலமான நிலையில் கிணற்றின் தடுப்பு சுவரின் அருகில் அமர்ந்துகொண்டு கனகா தனது வாழ்க்கை இப்படி கொஞ்ச நேரத்தில் தலைகீழாக மாறிவிட்டதே என்று நினைத்து அழுதாள்.
இந்த நிலைமையில் நம் கணவன் நம்மை பார்த்தால் .
அவர் மனம் சுக்குநூறாக வெடித்து விடுமே இந்த கோலத்தை அவரால் தாங்க முடியாது .
நடந்த உண்மையை தெரிந்து கொண்டாலும் அவரால் பண்ணையார் மகன்களை எதிர்த்து போராட முடியாது .
அவருக்கு எல்லாமே நாம்தான் நமக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுருப்பதை பார்த்துவிட்டு அவரால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும் . இப்படி இக்கட்டான நிலைமையில் நம் குடும்பம் சீரழிந்து விட்டதே என்று நினைத்து அழுதாள். அப்போது சந்திரன் தள்ளாடியபடி வருவதை பார்த்தாள் கனகா. மறுபடியும் அவளுக்கு பயம் அதிகரித்தது.
சந்திரன் தள்ளாடியபடியே பம்பு செட்டின் அருகில் வந்து நின்றான் அப்போது கனகா கிணற்றின் தடுப்பு சுவர் அருகில் உட்கார்ந்துகொண்டு அழுது இருப்பதை பார்த்தான் சந்திரன் அப்போது அவன் கண்களுக்கு சந்திரனின் வருங்கால மனைவியின் முகம் போல தெரிந்தாள் கனகா.
ஐயையோ ...எதுக்கு செல்லம் இப்படி அழுகுற .
உனக்கு என்ன ஆச்சு செல்லம் என்று ஆசையோடு சந்திரன் கேட்டான் அவன் கண்களுக்கு அவனின் வருங்கால மனைவி போல் தெரிந்ததால்.
ஐயா ...உங்கள் காலில் விழுந்து கெஞ்சி கேட்கிறேன் என்னை ஒன்றும் செய்யாதீங்க ஏற்கனவே நான் அவமானத்தில் .
என் உயிர் பாதி பிரிந்துவிட்டது மேலும் என்னை தொட்டு என்னை அசிங்கபடுத்தி விடாதீங்க என்று சொல்லிக்கொண்டே இரு கைகளால் கும்பிட்டபடி அழுதால் கனகா.
சந்திரன் குடிபோதையில்...
நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் . நீ அழுவாதே செல்லம்
நீ அழுதால் என் மனம் தாங்காதம்மா உன்னை நான் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று பாசமாக தனது வருங்கால மனைவி என்று நினைத்து சந்திரன் கனகாவிடம் சொன்னான்.
உங்களை எதிர்த்து போராடும் துணிவு எனக்கு கிடையாது ஐயா என்னை விட்டு விடுங்கள் என்று தரையில் விழுந்து கும்பிட்டபடி அழுதாள் கனகா.
இன்னும் கொஞ்ச நாள்ல .
உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கப் போகிறது . நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம்
உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் என்னிடம் சொல்லுடா செல்லம் . நீ எதுக்காக அழுகுற என்று எனக்கு தெரியவில்லை கல்யாணம் நடக்கப்போகும் இந்த நேரத்தில் இப்படி அழுதாள் என் மனம் தாங்காதுடா செல்லம்
நீ அழுவாதே என்று பாசமாக தனது வருங்கால மனைவி என்று நினைத்துக் கொண்டு கனகாவிடம் சொன்னான் சந்திரன் குடிபோதையில்.
சந்திரனின் பேச்சைக் கேட்டதும் கனகாவுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது ...நமக்கு திருமணமா என்று நினைத்து.
நமக்கு திருமணம்மாகி குடும்பம் நடத்தி வருகிறோம் .
இது தெரிந்தும் இந்தச் சந்திரன் நம்மை திருமண செய்துகொள்ள போகிறேன் என்று சொல்கிறானே எப்படிப்பட்ட கேவலமானவர்கள் பண்ணையாரின் மகன்கள் என்று நினைத்து கனகாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது .
அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் பதறிப் போனாள்.
நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் வா நம்ம போகலாம் என்று பாசமாக சந்திரன் கனகாவை அழைத்தான்.
ஐயா ...என்னை விட்டுடுங்க நீங்கள் பேசும் பேச்சு எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது . தயவுசெய்து என்னை விட்டு விடுங்கள் என்று மறுபடியும் கையெடுத்து கும்பிட்டாள் சந்திரனைப் பார்த்து கனகா.
அப்போது தள்ளாடியபடி இருந்த சந்திரன்.. கீழே ஒரு கல் .
காலில் பட்டு தடுக்கி கீழே விழுந்து அவனும் போதையில் மயங்கி விட்டான்.
பம்புசெட்டில் தீனா போதையில் மயங்கி உறங்கிக் கொண்டிருந்தான் .
அதேபோல இப்போது சந்திரனும் வெளியே போதையில் மயங்கி விழுந்து அவனும் உறங்கினான்.
ஏற்கனவே கசங்கி போயிருந்த கனகாவுக்கு சந்திரனின் பேச்சு மேலும் அவள் மனதை பாதித்தது அப்போது இந்த பிரச்சனையை எப்படி செய்யலாம் என்று அழுதுகொண்டே யோசித்தாள் கனகா.
இனிமேல் நம்மை பண்ணையார் மகன்கள் சும்மா விட மாட்டாங்க நாமளும் இனிமேல் சந்தோஷமாக குடும்பம் நடத்த முடியாது. அதேசமயம் இவர்களை ஊர் மக்களிடமும் பண்ணை யாரிடமும் காட்டிக் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இவர்கள் மூவரும் ஒவ்வொரு குடும்பமாக கெடுத்து கொண்டே இருப்பார்கள் என்று நினைத்து ஒரு முடிவுக்கு வந்தாள் கனகா.
அப்போது பரந்தாமன் வருவதை கவனித்தால் கனகா ...
உடனே எழுந்து நின்று .
அவள் தலைமுடியை சரி செய்துகொண்டு சற்று கோபத்தோடு பரந்தாமனை பார்த்தபடி நின்றாள் கனகா.
என்ன நடந்திருக்குமோ எந்த அளவுக்கு நம்முடைய திட்டம் கைகூடி வந்திருக்கிறது என்ற படபடப்போடு பரந்தாமன் பம்புசெட்டின் அருகே வந்து நின்று பார்த்தான் .அப்போது பம்புசெட்டு குள்ளே தீனா படுத்து இருப்பதையும் வெளியே சந்திரன் படுத்து இருப்பதையும் கவனித்தான் பரந்தாமன் . பிறகு கனகா முறைத்தபடி கோபத்தோடு பார்ப்பதை கவனித்தான் பரந்தாமன்.
அம்மாடி ...கனகா ...இனிமேல் உனக்கு நல்ல காலம்தான்
நீ நினைச்ச படியே உன் மகனை நன்றாக படிக்க வைக்கலாம்
இதோ நீ கேட்ட பணத்தை விட நிறையவே எடுத்துக்கொண்டு வந்து இருக்கேன் என்று சொல்லிக்கொண்டே இடுப்பிலிருந்த இரண்டு கட்டு பணத்தை எடுத்து கனகாவிடம் நீட்டினான் சிரித்த முகத்தோடு பரந்தாமன்.
வாயா பெரிய மனுஷா ....
உன் தம்பிங்ககிட்ட என்னப்பத்தி என்ன சொல்லி அனுப்பினே
உன் கடைசி தம்பி வந்து உன்னைப் பத்தி எல்லாமே என் அண்ணன் சொல்லிட்டாரு என்று சொல்லி கேவலமான வேலையை செஞ்சுட்டான் . அதுக்கப்புறம் உன் இரண்டாவது தம்பி வந்து உனக்கும் எனக்கும் இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் நடக்கப் போகிறது என்று வாய் கூசாம சொல்றான் .
இப்படி கேவலமான வேலையை உன் தம்பிங்க செய்யறாங்க .உன்னை இந்த ஊரே பண்ணையாருக்கு அடுத்தபடியாக உன்னைத்தான் தெய்வமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனா நீ இப்படிப்பட்ட கேவலமான செயலை செஞ்சுகிட்டு இருக்க
நாங்க என்ன பாவம் செஞ்சும் .. எங்க வழுத்துப் பொழப்புக்காக இந்த பம்புசெட்டுல தங்கி வேலை செஞ்சு குடும்பம் நடத்தி வருகிறோம் . இது உங்களுக்கு கேவலமாக தெரியுதா இங்கு வந்து தங்கி வேலை செய்யுற பொம்பளைங்கள இப்படி கேவலப்படுத்துவிங்களா இதனால்தான் ஏற்கனவே இருந்த குடும்பம் இங்கிருந்து ஓடி விட்டார்களா . இது தெரியாம உங்க அப்பா . திருடன் கிட்டயே சாவி கொடுத்து காவலுக்கு வச்சதை போல .
உங்களை காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கு அனுப்பி வச்சிருக்காரு .
பாவம் அந்த பெரிய மனுஷன் அவருக்கு இப்படிப்பட்ட பிள்ளைகளா . இதையெல்லாம் செய்யறதுக்கு உங்களுக்கு வெக்கமா இல்லை என்று துணிச்சலோடு கேட்டாள் கனகா.
கனகாவின் பேச்சைக் கேட்டதும் பரந்தாமனுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது ...இருந்தாலும் அவன் எதிர்பார்த்ததுதான் கனகா துணிச்சலான பெண் இது பொன்ற விஷயத்திற்கு அவள் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டாள் என்று ஏற்கனவே கணித்தது தானே .
என்று மனதில் நினைத்துக்கொண்டு பரந்தாமன் மறுபடியும் கனகாவிடம் பேச்சு கொடுத்தான்.
ஏற்கனவே ஓடிப்போன அந்த பெண்ணைப் போல நீயும் முட்டாள்தனமான முடிவை எடுக்காதே .அவளுக்கு பிழைக்கத் தெரியவில்லை ஆனால் நீ புத்திசாலித்தனமாக நடந்து கொண்டாள் . உனக்கு நிறைய பணம் கிடைக்கும் .
நான் சொல்வதைப்போல கேள். எப்படியாவது சந்திரனை மயக்கி உன் கைவசத்தில் வச்சிக்க அவனிடம் நீ திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சொல்லி எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி விடு . இதை மட்டும் நீ செய்து விட்டாள் உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் . நீ இந்த இடத்தில் உள்ளசமாக உன் கணவனோடு குழந்தைகளோடு சந்தோஷமாக வாழலாம் என்று பரந்தாமன் பொறுமையாக கனகாவிடம் எடுத்துச் சொன்னான்.
ஏதோ பெண்ணாசையால் தான் நீங்கள் மூன்று பேரும் இப்படிப்பட்ட கேவலமான வேலையை செய்து கொண்டிருக்கிறிர்கள் என்று நினைத்தேன் .
ஆனால் இப்போதுதான் புரிகிறது
நீ ஏதோ ஒரு பெரிய திட்டத்தோடு தான் . இதுபோன்ற வேலைகளை செய்கிற என்பது எனக்கு இப்போதுதான் புரிகிறது.
ஆனால் நானும் உன்னோட எண்ணப்படி இணங்கி போவேன் என்று கனவு கூட காணாதே.
இன்று உன்னை எதிர்ப்பதற்கு ஆளில்லாமல் இருக்கலாம்
ஆனால் எல்லாம் கெட்ட செயலுக்கும் ஒரு முடிவு இருக்கு அது உனக்கு வெகுதரத்தில் இல்லை . நிச்சயம் உன்னோட எண்ணம் பலிக்காது ஏனென்றால் ஒரு குடும்பத்தை கெடுத்து நீண்டநாள் சந்தோஷமக யாராலும் வாழ முடியாது . இதை தெய்வமும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது .
இப்போது இரண்டாவது குடும்பத்தை நீங்கள் எடுத்து விட்டீர்கள் . உங்களின் இந்த கேவலமான செயலுக்கு இன்னும் கொஞ்ச நாள்ல தண்டனையை அனுபவைப்பீங்க என்று ஆவேசத்துடன் சொன்னாள் கனகா.
பொறுமையாக பேசினாள் நம் எண்ணப்படி நடந்து கொள்ள மாட்டாள் கனகா .
இவளை இனிமேல் மிரட்டுவதை தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்துகொண்டு பரந்தாமன் சற்று குரலை உசத்தி...
அடியே கனகா ...
என்று ஆவேசத்துடன் குரல் கொடுத்தான் பரந்தாமன்.
என்னடி ...விட்டா பேசிக்கொண்டே போற ...மரியாதையா நான் சொல்றபடி கேட்டால் உனக்கு நல்லது . இல்லையென்றால் உன்னோட வாழ்க்கை வீணாகிப் போய்விடும் நீ எங்களைப் பற்றி இந்த ஊருக்குள்ள எதை சொன்னாலும் நம்ப மாட்டார்கள் ஏனென்றால் நாங்கள் மூவரும் இந்த ஊருக்குள் அப்படி நல்ல பெயரை எடுத்து இருக்கிறோம் அதனால் நீ சொல்வதை எல்லாம் யாரும் நம்ப மாட்டார்கள் .அதேபோல நீ தான் இதுபோன்ற கேவலமான செயலுக்கு என் தம்பிகளை அழைத்தாய் என்று நான் எல்லோரிடமும் சொல்லுவேன் அப்போது எல்லோரும் என் பேச்சை தான் கேட்பார்கள் தேவையில்லாமல் பிரச்சனை செய்யாமல் ஒரு நல்ல முடிவை நாளைக்கு சொல் நான் கிளம்புகிறேன் . இதையும் மீறி முட்டாள்தனமான முடிவை எடுத்தாள் . அது உனக்குத்தான் அசிங்கத்தை ஏற்படுத்தி விடும் அதனால் நான் சொல்வதை போல கேட்டு குடும்பம் நடத்துற வழியைப் பார் .. இல்லையென்றால் என்னுடைய உண்மையான முகத்தை நீ பார்க்க வேண்டியதிருக்கும் என்று ஆவேசத்துடன் சொல்லிவிட்டு சந்திரனையும் தீனாவையும் எழுப்பினான் பரந்தாமன்.
தீனாவும் சந்திரனும் எழுந்து பாதி போதையில் பரந்தாமனின் பின்னாடியே சென்றார்கள் .பிறகு மூவரும் களத்துமேட்டில் இருக்கும் பைக்கில் வீட்டுக்கு சென்றுவிட்டார்கள்.
பரந்தாமனின் மிரட்டலான பேச்சு கனகாவின் ஆவேசத்தை அடக்கியது.
இவர்களை பற்றி ஊர் மக்களிடம் சொன்னால் . யாரும் நம்ப மாட்டார்கள்
அவர்கள் சொல்வதைத்தான் நம்புவார்கள் .இவர்களை எதிர்த்துக் கொண்டு இந்த ஊரில் நம்மால் குடும்பம் நடத்த முடியாது .
இனிமேல் நம்மால் சந்தோஷமாக இன்னும் கணவரிடம் இருக்க முடியாது . இதைப்பற்றி அவரிடம் சொல்வதற்கும் தைரியம் இல்லை பாவம் வாய்பேச முடியாதவர் நம்முடைய கணவர் .
அவர் இவர்களை எதிர்த்தும் போராட முடியாது. என்று நினைத்துப் பார்த்து கனகா மறுபடியும் அழுதாள்.
அப்போது தீனா காட்டு மிராண்டித்தனமாக கற்பழித்ததை நினைத்துப்பர்த்து மேலும் கதரி கதரி அழுதால் . இப்படிப்பட்ட கொடுமையான அனுபவத்தை நம்மால் எப்படி மறக்க முடியும் இனிமேல் நம்மை இதுபோன்ற கேவலமான காரியத்திற்கு பண்ணையார் மகன்கள் வற்புறுத்துவார்கள் .
என்று நினைத்து அழுதால் அப்போது அவள் ஒரு முடிவுக்கு வந்தாள் . இவர்களை காட்டியும் கொடுக்க முடியாது .
நம் சந்தோஷமாகவும் குடும்பம் நடத்த முடியாது . அதனால் நாம் உயிரை விட்டுவிடலாம் .
இன்னும் சிறிது நேரத்தில் நம் மகனும் . பண்ணையார் வீட்டுக்கு வேலைக்கு சென்றிருக்கும் நம்முடைய கணவனும் சிறிது நேரத்தில் வந்து விடுவார்கள் அதற்குள் நம் உயிரை விட்டுவிட வேண்டும் என்று முடிவுக்கு வந்தாள் கனகா.
எப்படி நம் உயிரை விடுவது என்று யோசித்துக்கொண்டே பம்புசெட்டின் உள்ளே சென்று பூச்சி மருந்து பாட்டிலை தேடினாள் அவள் கண்களுக்கு எதுவும் தென்படவில்லை .
பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளலாம் என்று நினைத்து . தனது புடவையை அவிழ்த்தாள் கனகா .
நம் தூக்கில் தோங்கியிருப்பதை நம்முடைய கணவனும் நம் மகனும் பார்த்தாள் அவர்களால் அந்த காட்சியை கடைசி வரைக்கும் அவர்களால் மறக்க முடியாமல் வேதனையில் துடிப்பார்கள் .
என்று நினைத்து மனம் மாறினால் கனகா .
வேறு ஏதாவது வழி இருக்கிறதா நம் தற்கொலை செய்துகொள்ள
என்று யோசித்தாள் .
அப்போது அவள் கண்களுக்கு எதிரே பம்பு செட்டின் பெரிய கிணறு தெரிந்தது . உடனே சிறிதும் தயங்காமல் கிணற்றின் அருகில் வந்து தடுப்புச்சுவர் மீது கை வைத்துக் கொண்டு கிணற்றை பார்த்தாள்.
பாதி கிணறுவரை தண்ணீர் நிரம்பியிருந்தது .
இதுதான் சரியாக இருக்கும் நம் உயிரை விட்டுவிடலாம் இந்த கிணற்றில் குதித்து என்று முடிவு செய்தாள் கனகா.
உடனே சிறிதும் தயங்காமல் கிணற்றில் தடுப்பு சுவர் மீது ஏறி நின்றாள் . அப்போது அவள் தனது இரண்டு கைகளால் கும்பிட்டு கடவுளிடம் வேண்டினாள்.
என் கணவரையும் என் மகனையும் இனி நீதான் காப்பாற்ற வேண்டும் கடவுளே என்று வேண்டினாள்
பிறகு தனது கணவனை நினைத்துப் பார்த்தால் அவன் சந்தோஷமாக அவளை பார்த்துக்கொண்டது அதேசமயம் தனது மகனின் இனிப்பான பேச்சை நினைத்துப்பார்த்தால் ஒரு நிமிடம் பிறகு என்னை மன்னித்து விடுங்கள் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு கிணற்றில் குதிப்பதற்கு முயற்சித்தால் அப்போது அம்மா என்ற குரல் கேட்டது கனகாவிற்க்கு.
உடனே கனகா திரும்பிப் பார்த்தாள் தனது மகன் பள்ளிக்கூடத்திலிருந்து வந்துவிட்டான்.
கிணற்றுமேல ஏறிக்கிட்டு என்னம்மா பாக்குறீங்க என்றான் அந்த சிறுவன்.
அவன் பேச்சைக் கேட்டதும் கனகாவுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் உடனே கீழே இறங்கி வந்து அவனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள்.
என்னம்மா ஆச்சு ...முகத்துல எல்லாம் ஒரே சத்தமா இருக்கு அப்பா அடித்தாரா.. எதுக்குமா அழுவுற என்று சோகத்தோடு கேட்டான் அந்த சிறுவன்.
கனகாவால் அழுகையை நிறுத்த முடியவில்லை . கடவுளே என்னை வாழவும் விடவில்லை. இப்போது சாகலாம் என்று நினைத்தாலும் அதற்கும் வழி கிடைக்கவில்லையே என்று நினைத்து தன் மகனை கட்டி அணைத்தபடியே குலுங்கி குலுங்கி அழுதாள் கனகா.
உன்னை பத்தியும் அப்பாவைப் பற்றியும் என்னுடைய டீச்சர் எல்லோர்கிட்டயும் பெருமையா சொன்னாங்க . அதேபோல நான் நன்றாக படித்து உங்களை நல்லபடியா பாத்துக்குவேன் அப்படின்னு எங்க டீச்சர் என்னிடம் சொன்னாங்க . ஆனா நீங்க இப்படி அழுதுகிட்டே இருக்கிங்க மா என்று வெகுளித்தனமாக சொன்னான் அந்த சிறுவன்.
தன் மகனின் புத்திசாலி தனத்தை நினைத்து ஒரு முடிவுக்கு வந்தாள் கனகா . இனிமேல் நம்ம
நம் மகனுக்காக வாழவேண்டும் இவனை நல்லபடியாக படிக்க வைத்து பெரிய ஆளாக்கி இந்த பண்ணையாரின் மகன்களின் முகத்தில் கரியை பூச வேண்டும் என்று நினைத்து கொண்டு கண்களை துடைத்துக்கொண்டு தன் மகனிடம் கேட்டாள்.
ஐயா உன்னை ..இதைவிட பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்கிறேன் நீ நன்றாக படிப்பாய என்றாள் கனகா.
ஓ நல்லாவே படிப்பேன் ஆம்மா..
சரி உங்க அப்பா வந்ததும் நம்ம ஒரு நல்ல பெரிய பள்ளிக்கூடமா இருக்கிற ஊருக்கு போயிட்டு உன்னை அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுகிறேன் . நீ நன்றாக படிக்க வேண்டும் உன்னை நம்பி தான் . நானும் அப்பாவும் இருக்கிறோம் என்று பாசமாக சொல்லிவிட்டு ஒரு புதிய முயற்சியோடு கனகா மீண்டும் துணிச்சலான பெண்ணாக மாறினாள் கனகா.
வழக்கம்போல பரந்தாமன் தனது தம்பிகளுடன் பைக்கில் வீட்டுக்குச் சென்றான். தம்பிகள் இருவரும் குடிபோதையில் நிதானத்தில் இல்லாமல் இருப்பதை
தனது மனைவி . அப்பா கவனித்துவிட்டாள் பிரச்சனை பெரிதாகி விடும் என்று நினைத்துக்கொண்டு .
உடனே வாசலில் பைக்கை ஓரங்கட்டிவிட்டு தனது தம்பிகளை யாரும் கவனிக்காத படி அழைத்துச் சென்று அவரவர் அறையில் களத்தி விட்டான் பரந்தாமன்.
காலையில போனீங்க... ஊர்மக்களுக்கு துணி எடுத்துக்கிட்டு வரத்துக்கு .
நீங்க ஆர்டர் பண்ண துணிகள் எல்லாம் வீட்டுக்கே வந்துடுச்சு ஆனால் நீங்கள் மூன்று பேரும் இப்போது தான் வரீங்க ..
சரி சரி வாங்க சாப்பிடலாம் உங்க தம்பிகளையும் கூப்பிடுங்க என்று சிரித்த முகத்தோடு சொன்னாள் சாந்தி
நீ ஒன்னும் இப்போதைக்கு எங்களை தொல்லை பண்ண வேண்டாம் .நாங்கள் மூன்று பேரும் வெளியில் சாப்பிட்டு விட்டோம் தம்பிங்க வெயிலில் சுற்றித் திரிந்ததால் ரொம்ப சோர்வாக இருக்காங்க அவங்கள நீ தொந்தரவு பண்ணாத . அதே போல எனக்கும் ரொம்ப களைப்பா இருக்கு கொஞ்சம் தண்ணி மட்டும் கொடு எனக்கும் சாப்பாடு வேண்டாம் என்று சற்று பதட்டமாய் சொன்னான் பரந்தாமன்.
இதுக்கு எங்க முகமெல்லாம் இப்படி வேர்க்குது ..ஏதோ போலீசுக்கு பயந்துகிட்டு ஓடி வந்தவர் போல படபடவென பேசுறீங்க என்றாள் சாந்தி.
அதெல்லாம் ஒன்றுமில்லை நான் எப்பவும் போல தான் பேசுறேன் அப்பா எங்களைப் பத்தி கேட்டாள் மூன்று பேரும் களைப்பாக இருக்காங்க . அதனால தூங்க போயிட்டாங்க என்று சொல்லிவிடு என்று சாந்தியிடம் பரந்தாமன் சொல்லிவிட்டு முகத்தை சற்று சந்தோசமாக மாற்றிக்கொண்டு சாந்தியின் கன்னத்தை செல்லமாக தட்டி விட்டு ...உடனே தனது அறைக்கு சென்றுவிட்டான் பரந்தாமன்.
எப்படியோ பிரச்சினையை உருவாக்கி விட்டோம் . கண்டிப்பா நாளைக்கு கனகா ஏதோ ஒரு பிரச்சினையை செய்வாள்
அவள் செய்யப்போகும் பிரச்சனை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்ற குழப்பத்தில் பரந்தாமன் தனது அறையில் கட்டில் மெத்தை மேல் படுத்துக்கொண்டு யோசித்தான்.
நம் மிரட்டியதில் கனகா பயந்து இருப்பாளா . இல்லை நம்மை பழி வாங்குவதற்கு ஏதாவது திட்டம் போட்டு இருப்பாளா என்று தெரியவில்லையே .
இந்த பிரச்சனையில் கனகா ஊர் மக்களிடம் நடந்த உண்மையை சொல்லி மூன்று பேரையும் காட்டிக் கொடுத்து விட்டால் என்ன செய்வது என்று குழப்பத்தில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு தவித்தான் பரந்தாமன்.
கனகா எடுத்திருக்கும் முடிவில் எப்படிப்பட்ட பிரச்சனை வெடிக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
இயற்கை வழக்கம்போல தனது அழகான விடியலை 🌄தொடங்கியது .
அழகான காலைப் பொழுதில் பறவைகளின் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டாள் ரேகா உடனே எழுந்து வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்🛖🏠⛺🏘️
பொழுது விடிந்து இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் தூங்கிக் கொண்டுருக்கிறார் மாமா என்று மனதில் நினைத்துக்கொண்டு வாசலை சுத்தம் செய்துவிட்டு உடனே எதிரே இருக்கும் சங்கரின் வீட்டு வாசலை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் ரேகா.
சங்கரை பார்ப்பதற்காக அவள் மனம் துடியாய் துடித்தது
ஆனால் சங்கர் எழுந்து வரவே இல்லை . ரேகாவும் வாசலை சுத்தம் செய்து முடித்துவிட்டால் அவனால் சங்கரை பார்க்காமல் வீட்டுக்கு போக முடியவில்லை அவளால் உடனே ரேகா வீட்டுக்குள் நுழைந்தாள் அப்போது சங்கர் நன்றாக இழுத்து போத்தி கொண்டு தூங்கி கொண்டு இருந்தான் அப்போது ரேகாவுக்கு மேலும் கடுப்பாக இருந்தது வீட்டுக்குள்ளே வந்தும் முகத்தை பார்க்க முடியவில்லை என்று .
பிறகு வீட்டில் உள்ள பாத்திரங்களை சுத்தம் செய்வதற்காக எடுத்தாள் அப்போது பாத்திரங்களை வேண்டும் என்றே சத்தம் போடும் படி எடுத்தாள் . அப்போதும் சங்கர் எழுந்திரிக்கவில்லை
அவளால் பொறுக்க முடியவில்லை.
கல்யாணம் இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கிறது .ஆனால் எந்த கவலையும் இல்லாமல் இப்படி பொழுது விடிந்தது கூட தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்தாள் கல்யாண வேலை எல்லாம் யார் பாப்பாங்க என்று சத்தமாக பேசிக்கொண்டு பாத்திரங்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
ரேகாவின் குரல் கேட்டதும் முத்தையா விழித்துக்கொண்டார்.
என்னம்மா காலையிலே யாருக்கு நிறைய வேலை இருக்கிறது என்று முத்தையா ரேகாவிடம் கேட்டார்.
தாத்தா பொழுது விடிந்து எவ்வளவு நேரம் ஆச்சு ..இன்னும் ஏன் எழுந்திரிக்கல மாமா ..
கல்யாண வேலை எல்லாம் யார் பாப்பாங்க. இப்படி இவ்வளவு நேரம் தூங்கினாள் மற்ற வேலைகளை எல்லாம் யார் பாப்பாங்க என்று உரிமையோடு சங்கரின் காதில் விழும் படி சொன்னாள் ரேகா.
ரேகாவின் குரல் கேட்டதும் சங்கர் எழுந்து உட்கார்ந்து கொண்டான் போர்வையை தலைமீது போட்டபடி ரேகாவை உற்றுப்பார்த்தான் ரேகாவும் சங்கரை வச்ச கண் வாங்காமல் உற்றுப் பார்த்தாள் அப்போதுதான் ரேகாவுக்கு சற்று மனம் சந்தோசமாக மாறியது உடனே புன்னகையோடு சங்கரை பார்த்து லேசாக வேக்கத்தோடு சிரித்தாள்.
காலங்காத்தாலேயே வந்து யாருக்கு நிறைய வேலை இருக்குதுன்னு சொல்லிக்கிட்டு இருக்க புள்ள என்றான் சங்கர்.
உங்களுக்குத்தான் ...இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கிறது கல்யாணத்துக்கு நீங்க இப்படி இவ்வளவு நேரம் தூங்கலாமா என்றாள் ரேகா.
முதல்ல பண்ணையார் ஓட மகன் சந்திரனின் திருமணம் முடிந்ததும் அதற்கு அடுத்த வாரம் தான் நம்முடைய திருமணம் அதுக்குள்ள திருமண வேலை அப்படியே இருக்குதுன்னா . இப்போ என்ன பண்ண சொல்ற
சமையல்காரருக்கும் அட்வான்ஸ் கொடுத்தாச்சு கோவிலிலும் சொல்லியாச்சு
பந்தலும் போட்டாச்சு இனிமேல் கல்யாணத்துக்கு இரண்டு நாட்கள் முன்னாடி தான் வேலையை ஆரம்பிக்கணும்
அதுக்கு முன்னாடியே இப்படி குதித்தாள் என்ன வேலை செய்ய முடியும் என்றான் சங்கர்.
அதெல்லாம் எனக்குத் தெரியாது.. இனிமேல் இவ்வளவு நேரம் தூங்கக் கூடாது . இதுக்கு முன்னாடி ஒன்பது மணி வரைக்கும் தூங்குவீங்க இனிமேல் 6 மணிக்கெல்லாம் எந்திரிக்கணும் வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்று அதிகாரமாக சொல்லிக்கொண்டு பத்திரத்தை வீட்டு வாசலில் சுத்தம் செய்து கொண்டே சொன்னாள் ரேகா.
இதுக்கு முன்னாடி நானும் எத்தனையோ முறை சொல்லி பார்த்துட்டேன் அவன் விருப்பம் போல தூங்கிக் கொண்டுதான் இருக்கிறான் இனிமேல் நீதான் அவனை சீக்கிரமாக எழுப்பி பயக்கம் பண்ணனும் என்றார் முத்தையா.
தாத்தா ....இனிமேல் நான் பார்த்துக்கிறேன் நீங்க கவலைப்படாதீங்க என்று ரேகா சொல்லிக்கொண்டு இருக்கும்போது வீட்டு வாசலில் சங்கரின் நண்பன் 🚲சைக்கிளில் வந்து பெல் அடித்தபடி சங்கர் என்று குரல் கொடுத்தான்.
என்னடா விஷயம் காலையிலேயே வந்துட்ட என்றான் சங்கர்.
ஆமாண்டா மாப்பிள்ளை.... இன்னைக்கு கபடி மேட்ச் இருக்குது இன்னும் கொஞ்ச நேரத்துல பக்கத்து தெரு பசங்க வரப்போறாங்க அதனாலதான் காலையிலே வந்து தகவல் சொல்லலாம் என்று வந்தேன்டா.
அப்படியா விஷயம் ...அவனுங்க எத்தனை முறை தோற்றாலும் நம்மள வம்புக்கு இழுத்து கிட்டே தான் இருக்கானுங்க .
இன்னைக்கு அவனுங்கள தோற்கடித்து இனிமேல் கபடி மேட்ச் ஆடக்கூடாதபடி ஆவணங்களை மாத்திடணும்
நீ போ நான் அஞ்சு நிமிஷத்துல துணியை மாத்திகிட்டு வருகிறேன் என்றான் சங்கர்.
அதெல்லாம் முடியாது நீ இப்பவே வா அவனுங்க கிளம்பிட்டாங்க என்று சங்கரின் நண்பன் சொன்னான்.
சரி சரி இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன் என்று சங்கர் எழுந்து சுறுசுறுப்பாக கபடி உடையை தேடினான்.
காலையிலேயே கபடி விளையாடுவதற்கு கிளம்புவதை பார்த்த முத்தையாவுக்கு இவனை எப்படி மாற்றுவது என்று யோசித்தார்.
வாசலில் பாத்திரம் சுத்தம் செய்து இருக்கும் ரேகா விடம் பொறுமையாக சொன்னார் .அம்மாடி காலையில் ஆறு மணிக்கெல்லாம் ஏழுப்புவது முக்கியமில்லை இன்னும் நிறைய விஷயத்தில் அவனை மாத்தணும் என்று முத்தையா மறைமுகமாக சொன்னார்.
முத்தையாவின் பேச்சு ரேகா புரிந்து கொண்டாள் . காலையிலே கபடி விளையாட போகணுமா இவரை எப்படி தடுத்து நிறுத்துவது என்று யோசித்தாள் ரேகா.
அண்ணே.... அவரு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு நீங்க போங்க என்று சங்கரின் நண்பரிடம் சொன்னாள் ரேகா.
பரவாயில்லை தங்கச்சி...
நான் கொஞ்ச நேரம் இருந்தே மாப்பிள்ளையை கூட்டிகிட்டு போறேன். ஏன்னா அவன்தான் கேப்டன் அதனால கொஞ்ச நேரம் இருந்தே அவனை கூட்டிட்டு போறேன் தங்கச்சி என்றான் சங்கரின் நண்பர்.
உடனே ரேகா பாத்திரத்தை சுத்தம் செய்வதை விட்டுவிட்டு வீட்டுக்குள்ளே நுழைந்தாள் அப்போது சங்கர் கபடி உடையை தேடிக்கொண்டே இருந்தான்.
இங்கதானே வச்சேன் ..அதுக்குள்ள எங்க போச்சு இந்த துணி அவசரத்துக்கு கிடைக்கதே என்று முனகிக்கொண்டே சங்கர் துணியை தேடினான்.
சங்கர் துணையைத் தேடுவதை பார்த்ததும் ரேகாவுக்கு எப்படி இவரை விளையாட போகாமல் தடுப்பது என்று யோசித்தாள் அப்போது அவள் மெதுவாக சங்கரின் அருகில் சென்றாள் . சங்கர் திரும்பிக்கொண்டு துணியை தேடிக்கொண்டிருந்தான் அப்போது திடீரென்று ரேகா சங்கரை கட்டி அணைத்துக் கொண்டாள் பின்பக்கமாக.
சங்கருக்கு இனம்புரியாத உணர்வு அவன் உடம்பில் பாய்ந்தது
ஒரு கணம் அப்படியே நின்று விட்டான்.
முதல் முதலில் ஒரு பெண்
கட்டியணைத்ததும் அந்த முதல் அனுபவம் அவன் உடம்பில் ஏதோ ஒரு மாற்றத்தை செய்தது அவனால் அப்போது எதுவும் பேசவும் முடியவில்லை அப்படியே சிலைபோல நின்றான் சங்கர்.
சங்கரை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி இருந்த ரேகா மெதுவாக அவன் காதில் அருகில் மெதுவாக சொன்னாள்.
மாமா எனக்கு கூட கபடி விளையாடனும் போல ஆசையா இருக்கு மாமா
எப்படி விளையாடனும் சொல்லித் தறியா மாமா என்று பாசமாக சொன்னாள் ரேகா.
சரி புள்ள நான் உனக்கு இப்பவே சொல்லி கொடுக்கிறேன் கபடி எப்படி விளையாடனும் என்று பித்துப் பிடித்தவன் போல் ரேகாவின் இறுக்கமான அணைப்பில் மெய்மறந்து சொன்னான்.
டேய் மாப்பிள்ளை சீக்கிரம் வாடா எவ்வளவு நேரம் ஆச்சு இன்னுமா துணி தேடிக்கிட்டு இருக்கே என்றான் வாசலில் சங்கரின் நண்பன்.
மெதுவாக சங்கரை தனது இரக்கமான அணைப்பிலிருந்து விடுவித்தால் ரேகா
அப்போது சங்கர் உடனே திரும்பி ரேகவின் முகத்தை முதல் முதலில் ஒரு ஏக்கத்தோடு பார்த்தான் ரேகாவும் சங்கரை வெட்கத்தோடு பார்த்தபடி சட்டென்று தலை குனிந்து கொண்டாள்.
மாப்பிள்ளை சீக்கிரம் வாடா என்று மறுபடியும் குரல் கொடுத்தான் சங்கரின் நண்பன்.
உடனே சங்கர் வெளியே வந்து இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துட்டேன்டா இரு என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான் சங்கர்.
மாமா ..நம்ம ரெண்டு பேரும் இங்கேயே கொஞ்ச நேரம் கபடி விளையாடலாமா என்று ஒரு ஏக்கத்தோடு கேட்டாள் ரேகா.
ஓ ...விளையாடலாமே என்று ரேகாவின் கண்களை உற்றுப் பார்த்தபடியே சொன்னான் சங்கர்.
என்னை நீங்க படிக்கிறீங்களா இல்ல உங்கள நான் படிக்கட்டும்மா மாமா என்றாள் ரேகா.
நீயே என்னைப் பிடி புள்ள என்றான் சங்கர்.
கபடி ..கபடி ..கபடி என்று மெதுவாக சொல்லிக்கொண்டேன் ரேகாவின் கண்களை பார்த்தபடியே சங்கர் ரேகாவின் அருகில் சென்றான்.
உடனே ரேகா சங்கரை கட்டிப்பிடித்துக் கொண்டாள் அப்போது அவனை கீழே தள்ளி மேலே படுத்துக்கொண்டாள்.
அடேய் மாப்பிள்ளை எவ்வளவு நேரமாச்சுடா நான் வந்து
அரை மணி நேரம் ஆயிடுச்சு இவ்வளவு நேரமா உனக்கு துணி கிடைக்கல என்று வாசலில் நின்றுகொண்டு குரல் கொடுத்தான் சங்கரின் நண்பன்.
உடனே சங்கர் வெளியே வந்து இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன் கோவிச்சுக்காதடா என்று சொல்லிவிட்டு மறுபடியும் உள்ளே சென்றான் சங்கர்.
மாமா ...எப்போ நீங்க என்னை பிடிக்கணும் என்று சொல்லிவிட்டு ரேகா கபடி ...கபடி என்று சொல்லிக்கொண்டு சங்கரின் அருகே சென்றாள் .
அப்போது சங்கர் ரேகாவை இழுத்து அணைத்துக் கொண்டான் அப்போது சங்கரின் அணைப்பில் ரேகாவுக்கு வெட்கமும் கூச்சமும் மெல்ல மெல்ல விலகிப் போவதை உணர்ந்தாள் ரேகா.
மாப்பிள்ளை நீ ரொம்ப என்னை கடுப்பேத்துறா உனக்காக எவ்வளவு நேரம் நான் காத்துகிட்டு இருக்கிறேன் . என்னதான் கேப்டன்னாக இருந்தாலும் எனக்கும் கொஞ்சம் மரியாதை கொடுடா சீக்கிரம் வாடா நேரம் ஆச்சு என்று மறுபடியும் குரல் கொடுத்தான் சங்கரின் நண்பன்.
உடனே சங்கர் வெளியே வந்து அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன் இருடா என்று சொல்லிவிட்டு மறுபடியும் உள்ளே சென்றான் சங்கர்.
மருமகள் அவளுடைய வேலையை தொடங்கி விட்டாள்
இன்னைக்கு கபடி விளையாட போகமாட்டான் நம்முடைய மகன் இனிமேல் ரேகாவின் பேச்சை தான் கேட்பான் என்று மனதில் நினைத்துக்கொண்டார் முத்தையா .
திண்ணையில் அமர்ந்த படியே...
நீ போப்பா அவனை நான் அனுப்பி வைக்கிறேன் என்று முத்தையா சங்கரின் நண்பரிடம் சொன்னார்.
சரி சரி நான் கிளம்புகிறேன் அவனை சீக்கிரமாக அனுப்புங்க என்று சொல்லிவிட்டு சங்கரின் நண்பன் கபடி விளையாட சென்று விட்டான்.
வழக்கம்போல் செத்துக் கபடி இரண்டு அணியினரும் மோதிக் கொண்டார்கள் இதுவரைக்கும் தோல்வியே காணாத சங்கர் அணியினர் முதல் முறை தோல்வி அடைந்தார்கள் . காரணம் சங்கர் கபடி விளையாட வரவில்லை அதனால் சங்கரின் அணி முதல் முறையாக தோற்றுப்போனது சங்கரின் நண்பர்கள் சோகத்தோடு குளிக்காமல்கூட உடம்பெல்லாம்
சேரோடு தெருவில் நடந்து வந்தார்கள் .அப்போது சங்கர் வீடு வந்ததும் அவர்கள் சற்று கோபத்தோடு . அடேய் சங்கர் ... வாடா வெளியில இன்று குரல் கொடுத்தார்கள்.
சங்கரும் ரேகாவும் கட்டியணைத்தபடி முத்தங்களை பரிமாறிக் கொண்டிருக்கும்போது நண்பர்களின் குரல் கேட்டதும் சங்கர் உடனே வெளியே ஓடி வந்து அஞ்சு நிமிஷத்துல வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு மறுபடியும் உள்ளே ஓடி விட்டான்.
சங்கரின் நண்பர்களுக்கு ஒரே எரிச்சல் என்ன இவன் காலையிலிருந்து அஞ்சு நிமிஷத்துல வருகிறேன் என்று மூன்று மணி நேரமாக சொல்லிக் கொண்டுதான் இருக்கிறான்
கபடி விளையாடியே முடித்துவிட்டு வந்துவிட்டோம் இதைக் கூட கவனிக்காமல் மறுபடியும் அஞ்சு நிமிஷத்தில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஓடி விட்டானே இனிமேல் இவன் நம்முடன் கபடி விளையாட மாட்டான்
அவன் மனைவியுடன் தான் இனிமேல் கபடி விளையாடுவான் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள் சங்கரின் நண்பர்கள்.
சங்கரின் நண்பர்களைப் பார்த்து முத்தையாவுக்கு ஒரே சிரிப்பு
பாவம் காலையிலிருந்து அவனை கூப்பிட்டு விட்டு கோபத்தோடு போறானுங்க என்று நினைத்து சிரித்தார் முத்தையா.
தாத்தா ..இனிமேல் அவர் கபடி விளையாட போனால் என் கிட்ட சொல்லுங்க என்று சிரித்தபடி சொன்னாள் ரேகா.
இனிமேல் இவனும் கபடி விளையாட மாட்டான்
அவனுடைய நண்பர்களும் கபடி விளையாட மாட்டார்கள் இன்னைக்கு இவனோட நண்பர்கள் அப்படிப்பட்ட வேதனையை அனுபவித்து விட்டார்கள் என்று சொல்லி முத்தையாவும் ரேகாவும் சிரித்தார்கள்.
அப்போது ஊர் மக்கள் ஒடி வருவதை கவனித்தால் ரேகா..
தாத்தா ...எல்லோரும் வேகமா ஓடி வராங்க என்ன ஆச்சுன்னு தெரியலையே என்று பதட்டமாய் சொன்னாள் ரேகா.
ரேகாவின் பேச்சைக் கேட்டதும் சங்கர் உடனே வெளியே வந்து பார்த்தான் . ஊர்மக்கள் பதட்டமாக ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.
சந்தோசமாக இருந்த முத்தையாவுக்கு சற்று மனம் குழப்பமானது . எதுக்காக ஊர்மக்கள் ஓடி வருகிறார்கள் என்று நினைத்து.
ஐயா நம்ம ஊருக்கு சோதனைக்காலம் வரப்போகுதுன்னு சாட்டையடி சாமியார் சொன்னதைப் போலவே நடந்துடுச்சு ஐயா ...என்று ஊர் மக்கள் முத்தையா விடம் அழுதபடி சொன்னார்கள்.
முத்தையாவுக்கு மேலும் கவலை அதிகமானது . என்ன நடந்தது பொறுமையா சொல்லுங்கப்பா இப்படி எல்லோரும் அழுதாள் எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது யாராவது ஒருத்தர் என்ன ஆச்சி என்று சொல்லுங்கள் என்று முத்தையா சொன்னார்.
ஐயா.. பண்ணையார் தோட்டத்தில் பம்புசெட்டில் தங்கி வேலை செய்த நம்ம கனகா குடும்பம் காணாம போயிட்டாங்க ஐயா ..அவங்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை நம்ம ஊர் முழுக்க தேடிப் பார்த்து விட்டோம்
பண்ணையார் தோட்டத்தில் எல்லா இடத்திலும் தேடி பார்த்து விட்டோம் கனகா குடும்பம் காணவில்லை ஐயா . பம்புசெட்டில் கனகாவின் துணி. பாத்திரங்கள் .எதுவுமே இல்லை எங்களுக்கு ரொம்ப பயமாக இருக்கிறது ஐயா என்று ஒருவர் அழுதுகொண்டே சொன்னார்.
முத்தையாவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது .ஏற்கனவே ஒரு குடும்பம் காணாமல் போய்விட்டார்கள் அவர்கள் இதுவரைக்கும் கிடைக்கவில்லை இந்த நிலைமையில் மறுபடியும் இன்னொரு குடும்பம் காணாமல் போயிருக்கிறார்களே. இதில் கண்டிப்பாக ஏதோ ஒரு பெரிய சதித்திட்டம் நடந்திருக்கிறது என்று நினைத்து கவலையில் தலைகுனிந்தார் முத்தையா.
சங்கருக்கும் ரேகாவுக்கும் கவலையில் மனம் நொந்து போனார்கள்.
ஐயா ..கனகா குடும்பம் காணாமல் போனதில் ஏதோ மர்மம் இருக்கிறது இதை நம்ம சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது
உடனே இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் இல்லை என்றால் இதேபோல ஒவ்வொரு குடும்பமாக காணாமல் போய்க்கொண்டே இருபார்கள் . அதனால் இதற்கு ஒரு முடிவு தெரியும் வரை பண்ணையார் தோட்டத்தில் இருக்கும் பம்புசெட்டில் தங்கி யாரும் வேலை செய்ய கூடாது காணாமல் போனவர்கள் கிடைக்கும்வரை யாரும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்ய கூடாது இதுதான் எங்களுக்கு சரியாக படுகிறது என்று ஒரு கூலித்தொழிலாளி முத்தையா விடம் சொன்னார்.
நீங்கள் சொல்வது நியாயம்தான் பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்கு இனிமேல் எல்லோருக்குமே பயம் ஏற்படும் அதனால் நீங்கள் சொன்னபடி காணாமல் போனவர்களை கண்டுபிடித்து . என்ன நடந்தது என்ற உண்மை தெரியும் வரை யாரும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்ய வேண்டாம் அதேசமயம் இந்த முடிவை பண்ணையாரிடம் தெரிவிக்க வேண்டும் அதுதான் முறை என்றார் முத்தையா.
நீங்க சொன்னபடியே எல்லோரும் பண்ணையார் வீட்டுக்கு சென்று நம்முடைய முடிவை சொல்லிவிடலாம் பிறகு அவர் என்ன சொல்கிறார் என்று கேட்போம் என்று ஒரு கூலித்தொழிலாளி முத்தையா விடம் சொன்னார்.
உடனே அங்கு கூடியிருந்த பெரியவர்கள் அனைவரும் முத்தையாவை அழைத்துக்கொண்டு பண்ணையார் வீட்டுக்கு சென்றார்கள்.
💒பொழுது விடிந்ததும் தோட்டத்துக்கு கிளம்புங்க ஆனால் இன்னைக்கு எவனுமே இதுவரைக்கும் எழுந்திரிக்கல சாப்பிடவும் வரல என்ன ஆச்சும்மா இவனுங்களுக்கு என்று பண்ணையார் சாந்தியிடம் கேட்டார்.
என்னன்னு தெரியல மாமா ..நேத்து நைட்டு மூணு பேரும் வெளியல சாப்பிட்டு விட்டோம் சாப்பாடு எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு . எங்களுக்கு ஒரே களைப்பா இருக்கு நாங்கள் தூங்க போறோம் என்று சொல்லிட்டாங்க. ஆனால் இதுவரைக்கும் சந்திரனும் தீனாவும் எழுந்திரிக்கல
உங்க பெரிய பிள்ளை மட்டும் எழுந்திருச்சு உடனே 💒மொட்டை மாடிக்கு போயிட்டாரு என்றாள் சாந்தி.
நேத்து வேலை கொஞ்சம்
அதிகம்தான் . அதனால கலைப்பில் தூங்கி இருப்பானுங்க தூங்கட்டும் என்று சொல்லிவிட்டு பண்ணையார் சாப்பிடுவதற்கு தயாரானார்.
பரந்தாமனுக்கு ஒரே குழப்பம் தோட்டத்திற்கு செல்லலாமா வேண்டாமா . கனகா ஏதாவது பிரச்சனையை உருவாக்கி இருப்பாளா என்ற குழப்பத்தோடு மொட்டை மாடியில் இங்கும் மங்கும்மாக நடந்து கொண்டிருந்தான் பரந்தாமன் அப்போது ஊர் மக்கள் அனைவரும் திரளாக நடந்து வருவதை மொட்டை மாடியில் இருந்து கவனித்தான் பரந்தாமன் .
அப்போது அவனுடைய இதயம் வேகமாக துடித்தது பயத்தில்
ஊர் மக்கள் அனைவரும் நம் வீட்டை நோக்கி வருகிறார்கள் கண்டிப்பாக கனகா நடந்ததையெல்லாம் ஊர் மக்களிடம் சொல்லிவிட்டாள் போல் தெரிகிறது என்று நினைத்து பயத்தில் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மாடியிலிருந்து கிளே இறங்கி வந்தான்.
பண்ணையார் வீட்டு வாசல் நிரம்பி இருந்தார்கள் ஊர்மக்கள் அவர்களை பரந்தாமன் இருகைகளால் கும்பிட்டு வாங்க வாங்க என்று சொன்னான்.
சரி மாமா ..என்று சொல்லிவிட்டு சாந்தி வெளியே வந்து பார்த்தால் ஊர் மக்கள் அனைவரும் சாந்தியைப் பார்த்து கும்பிட்டார்கள் பதிலுக்கு சாந்தியும் ஆச்சரியத்தோடு கும்பிட்டாள்.
அப்பாவிடம் ஒரு முக்கியமான தகவலை சொல்லிவிட்டுப் போகலாம் என்று நாங்கள் அனைவரும் வந்திருக்கிறோம் என்று முத்தையா சற்று சோகத்தோடு சொன்னார்.
உடனே சாந்தி உள்ளே சென்று.. மாமா உங்களை பார்ப்பதற்கு
ஊர் மக்கள் எல்லோரும் வந்திருக்காங்க . உங்க நண்பர் முத்தையாவும் வந்திருக்காரு ஆனால் எல்லோரும் சோகமாக இருக்கிறார்கள் சென்று சாந்தி பண்ணையாரிடம் சொன்னாள்.
சாப்பிடுவதற்கு உட்கார்ந்த பண்ணையார் உடனே எழுந்து கொண்டு வெளியே வந்தார்.
ஊர்மக்களின் சத்தத்தை கேட்டு சந்திரனும் தீனாவும் கண்விழித்து உடனே எழுந்து அவர்களும் வெளியே வந்து பார்த்தார்கள்.
என்ன முத்தையா ...எல்லோரும் ஒன்றுகூடி வந்து இருக்கீங்க
வாங்க உள்ளேன் என்று அழைத்தார் பண்ணையார்.
இருக்கட்டும் டா ...நாங்கள் நிறைய பேர் வந்து இருக்கும் அதனால வாசலிலே இருக்கிறோம் என்று சற்று சோகத்தோடு தலை இறங்கிக்கொண்டே சொன்னார் முத்தையா.
ஏன் எல்லோரும் சோகமாக இருக்கீங்க. என்ன ஆச்சு சொல்லு முத்தையா என்று ...முத்தையாவின் அருகில் சென்று கேட்டார் பண்ணையார்.
சொல்றதுக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு . இருந்தாலும் சொல்லித்தானே ஆக வேண்டும் நம்ம பம்புசெட்டில் தங்கி வேலை செய்த கனகா என்று சொல்லும்போது முத்தையாவுக்கு கவலையில் வார்த்தை சிக்கியது.
பரந்தாமனுக்கும் சந்திரனுக்கும் தீணாவுக்கும் பயம் அதிகரித்தது வசமாக மாட்டிக்கொண்டோம் கனகா நம்மை காட்டிக்கொடுத்து விட்டாள் என்று நினைத்து மூவரும் பயத்தில் நடுங்கினார்கள். ஆனால் ஒன்றுமே தெரியாதவர்கள் போல நின்றிருந்தார்கள்.
கனகாவுக்கு என்ன ஆச்சு சொல்லு முத்தையா ...என்ன ஆச்சு என்று பதட்டமாய் கேட்டார் பண்ணையார்.
அப்போது ஒரு கூலித் தொழிலாளி அழுதபடி சொன்னார் ...
ஐயா கனகா குடும்பம் காணவில்லை ஐயா
எல்லா இடத்திலும் தேடிப் பார்த்து விட்டோம் . கனகாவும் அவள் கணவன் ஊமையனும் அவர்களின் மகன் யாருமே தென்படவில்லை எல்லா இடத்திலும் தேடி விட்டோம் பம்புசெட்டில் . துணி பாத்திரங்கள் எதுவுமே இல்லை ஐயா
என்று சொல்லிக்கொண்டே குலுங்கி குலுங்கி அழுதார் அந்த தொழிலாளி.
பண்ணையாருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது
அவரால் எதுவுமே பேச முடியவில்லை அதிர்ச்சியில்
ஒரு நிமிடம் வானத்தைப் பார்த்தபடியே நின்றார்.
ஊர் மக்கள் எல்லோரும் பயந்து விட்டார்கள் இனிமேல் என்ன செய்யலாம் என்று அவர்களை அழைத்து வந்தேன் என்று சோகத்தோடு சொன்னார் முத்தையா.
நீங்கள் பயந்தது போலவே இந்த விஷயம் சாதாரணமான விஷயம் இல்லை . கனகா குடும்பம் காணாமல் போனதில் ஏதோ ஒரு பெரிய சதி திட்டம் நடந்திருக்கிறது என்று பண்ணையார் யோசித்தபடியே கண்களை இமைக்காமல் சொன்னார்.
பரந்தாமனுக்கும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் .மேலும் பயம் அதிகரித்தது அப்பா ஏதோ பெரிய சதி திட்டம் நடந்து இருக்கிறது என்று கண்டு பிடித்து விட்டார் மெல்ல மெல்ல எல்லாம் உண்மையே கண்டுபிடித்து விடுவாரா என்று நினைத்து நடுங்கினார்கள் உள்ளுக்குள்ளே.
நிச்சயம் இதில் ஏதோ சதி திட்டம் இருக்கிறது. நமக்கு ஒரு பெரிய எதிரி இருக்கிறான் என்பது இதன் மூலமாக தெரிகிறது .
ஏற்கனவே ஒரு குடும்பம் காணாமல் போனபோது .
ஏதோ அவர்களுக்குள் பிரச்சனை இருந்திருக்கும் அதனால் தான் இங்கிருந்து சொல்லாமல் ஓடி விட்டார்கள் என்று நினைத்து சாதாரணமாக இருந்துவிட்டேன் ஆனால் இப்போது கனகா குடும்பம் அதேபோல காணாமல் போயிருப்பது . நிச்சயம் இது சதி திட்டம் தான் . இதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது நம்முடைய எதிரி நம் பக்கத்திலேயே தான் இருக்கிறான் .
அவனுடைய திட்டம் ஏதோ ஒரு பெரிய திட்டமாக தான் இருக்கும் அவனுடைய திட்டத்தினால் நிச்சயம் இந்த ஊருக்கும் என் குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்படும் இதை சாதாரணமாக நான் விட போவதில்லை .
என்று பண்ணையார் ஒரு முடிவோடு உறுதியோடு ஊர் மக்களிடம் சொன்னார்.
நம்முடைய திட்டத்தை சரியாக புரிந்து கொண்டார் அப்பா இனிமேல் ரொம்ப கவனமாக நம்முடைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் . என்று மனதில் நினைத்துக் கொண்டான் பரந்தாமன்
இனிமேல் நாம் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் எதிரி நம்முடைய நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டுதான் இருப்பான் . அதனால் நாம் எல்லோரும் இனிமேல் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதில் புதிய முயற்சியை எடுக்க வேண்டும் அப்போதுதான் எல்லாம் விஷயங்களுக்கும் தீர்வு கிடைக்கும் என்று பண்ணையார் ஊர் மக்களிடம் சொன்னார்.
ஊர் மக்கள் எல்லோரும் ரொம்ப பயப்படுகிறார்கள் . அவர்களுக்கு வேலைக்கு போவதில் நிறையவே பயம் இருக்கிறது இருந்தாலும் இதைப்பற்றி உங்களிடம் சொன்னாள் நீங்கள் தவறாக புரிந்து கொள்ள போகிறீர்கள் என்று ஊர் மக்கள் வருத்தப்படுகிறார்கள் என்று முத்தையா பண்ணையாரிடம் சொன்னார்.
நிச்சயம் இனிமேல் எல்லோருக்குமே பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்கு சற்று
பயமாகதான் இருக்கும் .அதேசமயம் உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் என்னிடம் நீங்கள் சொல்லலாம் . உங்களுடைய சந்தேகம் என் மகன்கள் மீது இருந்தாலும் அதை நீங்கள் தைரியமாக சொல்லலாம் ஏனென்றால் ஊர் மக்கள் நீங்கள் அனைவரும் அதிக நேரம் தோட்டத்தில்தான் இருக்கிறீர்கள் அதனால் உங்கள் பார்வையில் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னிடம் நீங்கள் பயப்படாமல் சொல்லலாம் . அப்போதுதான் இந்த விஷயத்திற்கு சீக்கிரமாகவே முடிவு ஏற்படும் என்று பண்ணையார் தனது மகன்களை பார்த்தபடியே ஊர் மக்களிடம் சொன்னார்.
பரந்தாமனுக்கும் .சந்திரனுக்கும் தீனாவுக்கும் .பண்ணையாரின் பேச்சு மேலும் அவர்களுக்கு பயத்தை உண்டாக்கியது கடைசியில் அப்பா நம் மீதும் சந்தேகப்படுகிறார் என்று பயந்தார்கள்.
ஐயா... உங்கள் குடும்பத்தின் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது . உங்களைப்போலவே உங்கள் மகன்களும் எல்லோரிடமும் பாசமாக தான் பழகுகிறார்கள் அதேபோல கனகாவும் ஊமையனும் சந்தோஷமாகத்தான் வேலை செய்து வந்தார்கள் . அவர்களுக்குள் இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இருந்ததாக இதுவரைக்கும் யாரும் பார்த்ததில்லை . இருந்தாலும் அவர்கள் காணாமல் போனது நீங்கள் சொன்னது போல சதி திட்டத்தால்தான் அவர்கள் காணாமல் போயிருக்கவேண்டும் அதனால் அவர்களை தேடி கண்டுபிடிக்கும் வரை நாங்கள் யாரும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்யப்போவதில்லை .
இதை சொல்வதற்காகத்தான் நாங்கள் அனைவரும் முத்தையா அண்ணனை அழைத்துக்கொண்டு வந்திருக்கும் .
ஆனால் முத்தையா அண்ணாள் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்வதற்கு மனம் வரவில்லை அதனால் சுற்றிவளைத்து பேசிக் கொண்டிருக்கிறார் . எங்களுடைய இந்த முடிவை நீங்களும் முத்தையா அண்ணனும் தவறாக எடுத்துக்கொள்ளாமல் எங்களுடைய நிலைமையை புரிந்துகொண்டு எங்களை மன்னித்து விடுங்கள் ஐயா ...என்று ஒரு கூலித் தொழிலாளி பண்ணையாரிடம் வருத்தத்தோடு சொன்னார்.
ஊர்மக்களின் முடிவு பண்ணையாருக்கும் சாந்திக்கும் பரந்தாமனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை இதை நான் எதிர்பார்த்ததுதான் . நானாக இருந்தாலும் இந்த முடிவை தான் எடுத்திருப்பேன் மர்மமான முறையில் இரண்டு குடும்பங்கள் காணாமல் போன இடத்தில் யாருமே வேலை செய்வதற்கு பயப்படுவது இயல்பானதுதான் அதனால் உங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை .
நான் விவசாயம் செய்வது நீங்கள் வயிறார சாப்பிடுவதற்கு தான்
நான் விவசாயத்தை செய்து வருகிறேன் . மற்றபடி வேற நோக்கம் எதுவுமே கிடையாது ஆனால் உங்களுக்கு அந்த இடத்தில் வேலை செய்வதற்கு உங்கள் மனம் சங்கடம் படுகிறது என்றால் நிச்சயம் நான் உங்களை வற்புறுத்தப் போவதில்லை அதேபோல என் தோட்டத்தில் வேலை செய்த இரண்டு குடும்பங்கள் காணாமல் போயிருப்பது . அந்த பொறுப்பு என்னைத்தான் சேரும் அவர்களுக்கு நான்தான் பதில் சொல்ல வேண்டும் .
அதனால் அவர்களை கண்டுபிடித்து உண்மையை கண்டறிவது என்னோட பொறுப்பு .
நீங்கள் எடுத்து இருக்கும் இந்த முடிவு சரியானதுதான் என்று பண்ணையார் சற்று சோகத்தோடு சொன்னார்.
எல்லாம் நிலங்களும் நாமே ஆள வேண்டும் . அதில் கிடைக்கும் வருமானத்தை நாம் மட்டும்
அனுபவைக்க வேண்டும் என்பதற்காகத்தான். தம்பியின் திருமணத்தை ஏதாவது சூழ்ச்சி செய்து நிறுத்திவிட வேண்டும் என்று . இந்த கனகாவை கற்பழிக்க சொன்னோம் தம்பிகளிடம் ஆனால் இப்போது இந்த பிரச்சனையால் ஊர் மக்கள் தோட்டத்திற்கு வேலை செய்வதற்கு பயப்படுகிறார்களே. இனிமேல் யாரும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்ய மாட்டோம் என்று முடிவுசெய்து இருக்கிறார்களே இனிமேல் எப்படி விவசாயம் நன்றாக நடக்கும் .
இந்த பிரச்சனை இப்படி மாறிவிடும் என்று தெரிந்திருந்தால் வேறு ஏதாவது வழியில் தம்பியின் திருமணத்தை நிறுத்தி இருக்கலாம் ஆனால் நம்முடைய திட்டம் நமக்கே ஆபத்தாக முடிந்துவிட்டதே என்று நினைத்து பரந்தாமன் சோகத்தில் இருந்தான்.
கனகா விருப்பத்தோடு தானே அவளை நம் அனுபவித்தோம் ஆனால் அவள் இப்படி யாருக்கும் தெரியாமல் ஓடி விட்டாளே இதனால் குடும்பத்திற்கும் இந்த ஊர் மக்களுக்கும் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தால் இந்த விஷயத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்க மாட்டோம் என்று நினைத்துக்கொண்டு தீனா சோகத்தோடு நின்றான்.
அண்ணன் நம்மீது உள்ள பாசத்தினால் கனகாவை அனுபவிப்பதற்கு கட்டாயப்படுத்தினார்
கனகாவும் சம்மதித்து விட்டாள் ஆனால் எதற்காக கனகா இந்த முடிவை எடுத்தாள் என்று தெரியவில்லையே என்ற குழப்பத்தோடு சந்திரன் சோகத்தோடு நின்றிருந்தான்.
பரந்தாமன் .சந்திரன் .தீனா .மூவரும் சோகத்தில் இருப்பதை சாந்தி கவனித்தாள். இவர்களின் சோகம் உண்மையானதா . இதற்கு முன்னாடி தோட்டத்தை மாமா கவனித்து இருக்கும்போது எந்த ஒரு பிரச்சனையும் நடக்கவில்லை மாமாவிற்கு பிறகு இவர்கள் மூவரும் தோட்டத்தை கவனிப்பதற்கு பொறுப்பேற்ற சில மாதங்களில் அந்த பெரியவரின் மருமகளும் .மகனும் .பம்புசட்டில் இருந்து காணாமல் போய்விட்டார்கள் இப்போது கனகாவும் ஊமையன் கானாமல் போய்விட்டார்கள் இந்த மர்மத்திற்கு இவர்கள் மூவருக்கும் தொடர்பு இருக்குமா . என்ற சந்தேகத்தோடு சாந்தி மூவரையும் பார்த்தாள் அப்போது அவள் உள்மனசு சொன்னது ...ஒருவேளை இவர்கள் தவறு செய்திருந்தால் இந்த ஊர்மக்களின் கண்களில் எப்படியாவது மாட்டி இருப்பார்கள் ஆனால் இவர்கள் மீது யாருக்குமே சந்தேகம் இல்லையே என்று சாந்தியின் உள் மனது சொன்னது.
ஐயா.. நம்ம ஊரில் இருக்கும் சாட்டையடி சாமியார் சொன்னதைப் போலவே நம்ம ஊருக்கு சோதனைக்காலம் வந்துவிட்டது அதனால் நீங்கள் அவரிடம் சென்று காணாமல் போனவர்களை எப்படி தேடினாள் கிடைப்பார்கள் என்ற யோசனையை நீங்கள் அவரிடம் கேட்கலாம் என்று கூட்டத்தில் ஒருவர் பணிவாக சொன்னார் பண்ணையாரிடம்.
அவர் எதைக் கணித்து இந்த ஊருக்கு சோதனைக்காலம் வரப்போகிறது என்று சொன்னார் எனக்கு தெரியவில்லை
ஆனால் அவர் சொன்னபடியே நமக்கு சோதனைகள் வந்துவிட்டது ஆனால் எனக்கு கடவுள் மேல்தான் எனக்கு நம்பிக்கை. மற்றபடி யார் மீதும் நம்பிக்கை கிடையாது நிச்சயம் கடவுள் எனக்கு கை கொடுப்பார் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு .அதே போல நான் ஒரு முக்கியமான முடிவை எடுத்திருக்கிறேன் . இந்த முடிவு கோபத்தில் எடுத்த முடிவு இல்லை நான் இப்போது நன்றாக யோசித்துப் பார்த்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்று பண்ணையார் உருக்கமாக சொன்னார்.
ஊர் மக்களும் ..முத்தையாவும் சாந்தியும் ..பரந்தாமன் சந்திரன் தீனா இப்படி அனைவரும் அதிர்ச்சியோடு பண்ணையாரை பார்த்தார்கள் . என்ன முடிவு எடுத்து இருப்பார் என்று நினைத்து.
ஏற்கனவே காணாமல் போனவர்களை என் மகன்கள் தேடிக் கொண்டு இருப்பது உங்கள் அனைவருக்குமே தெரியும் இப்போது இரண்டாவது குடும்பம் காணாமல் போய்விட்டார்கள் அதனால் இந்த விஷயத்தை நான் சாதாரணமாக எடுத்துக்கொள்ள போவதில்லை .
நீங்கள் அனைவரும் காணாமல் போனவர்கள் கிடைக்கும்வரை பம்புசெட்டில் தங்கி யாரும் வேலை செய்ய மாட்டோம் என்ற முடிவை எடுத்ததை போலவே .
நானும் காணாமல் போனவர்கள் இரண்டு குடும்பமும் கிடைக்கும்வரை என் இரண்டாவது மகன் சந்திரன் திருமணத்தை நடத்தப் போவதில்லை
இதுதான் என்னோட முடிவு
நான் கோபத்தில் இந்த முடிவை எடுக்கவில்லை . என் தோட்டத்தில் இரண்டு குடும்பங்கள் தொலைந்து போயிருக்கும் இந்த நிலைமையில் நான் மட்டும் என் குடும்பத்தோடு சந்தோஷமாக திருமண வேலையை எப்படி செய்ய முடியும் .
அதனால் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது என் குடும்பப் பிரச்சனையாக தன்
நான் எப்போதுமே பார்ப்பேன் என்று சோகத்தோடு பண்ணையார் ஊர் மக்களிடம் சொன்னார்.
பண்ணையாரின் பேச்சு அங்கு கூடியிருந்த அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
நீ அவசரப்பட்டு முடிவு பண்ணிட்ட இந்த முடிவில் எங்களுக்கு துளியும் விருப்பமில்லை தயவுசெய்து உன்னோட முடிவை மாற்றிக் கொள் என்று கண் கலங்கியபடி முத்தையா பண்ணையாரிடம் சொன்னார்.
என்னுடைய முடிவு உங்கள் எல்லோருடைய மனதை ரொம்பவே பாதித்திருக்கும் . இருந்தாலும் என்னுடைய இந்த முடிவுக்கு நீங்கள் எல்லோரும் நிச்சயம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்
என் சந்திரனின் திருமணத்தை காணாமல் போனவர்கள் வந்து ஆசீர்வாதம் செய்ய வேண்டும் அதுதான் என்னோட முடிவு இதனால் எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை அதுவரைக்கும் திருமணத்தை தள்ளிப் போடுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை .
என் மகனோட திருமணத்தன்று யாருக்குமே சிறிதளவுகூட கவலை இருக்கக்கூடாது அதனால் தான் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு பண்ணையார் சோகத்தோடு நின்றார்.
பண்ணையாரின் முடிவு அனைவருக்கும் கவலையாக இருந்தது அப்போது முத்தையா எதுவுமே பேசாமல் தலைகுனிந்தபடி வீட்டுக்கு திரும்பினார் ஊர்மக்களும் சோகத்தோடு வீட்டுக்கு திரும்பினார்கள்.
பண்ணையார் ...சாந்தியின் முகத்தை பார்த்தார்
பிறகு பரந்தாமனையும் பார்த்தார் அப்போது சந்திரன் கவலையோடு இருப்பதை பார்த்த பண்ணையார் உடனே அவன் அருகில் சென்று கட்டி அணைத்துக் கொண்டார் .
அப்போது அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
என்னை மன்னித்துவிடு சந்திரா எனக்கு வேறு வழி தெரியவில்லை நிச்சயம் கடவுள் என்னை கைவிட மட்டார் . உன் திருமணத்தையும் தீனாவின் திருமணத்தையும் பார்த்துவிட்டுதான் நான் கண் மூடுவேன் நீ ஒன்றும் கவலைப்படாதே சந்திரா என்று அழுதபடி சொன்னார் பண்ணையார்.
சந்திரனால் என்ன சொல்வது என்று தெரியாமல் வாயடைத்துப் போனான். இனிமேல் நம்முடைய திருமணம் நடப்பது கஷ்டம்தான் என்று நினைத்து சந்திரனின் கண்களில் கண்ணீர் வடியத் தொடங்கியது.
நேற்றுவரை சந்தோசமாக இருந்த குடும்பம் . இன்று இப்படி தலைகீழாக மாறிவிடும் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லையே கடவுளே இனிமேல் எங்களை நீதான் நிம்மதியாக மாற்ற வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு வாசலிலே அமர்ந்து அழுதாள் சாந்தி.
தம்பியின் திருமணம் நின்று விட்டதை நினைத்து சந்தோசப் படுவதா . விவசாய வேலையும் நின்றுவிட்டது என்று நினைத்து கவலைப்படுவதா என்ற மன நிலைமையில் பரந்தாமன் இருந்தான்.
.........நாட்கள் நகர்ந்தது....
குருவே நான் சொன்னபடியே நடந்திருச்சு பார்த்தீங்களா என்று சாட்டையடி சாமியாரின் சிஷ்யன் உற்சாகமாக சொன்னான்.
ஆமாண்டா சிஷ்யா ...நமக்கு இனிமேல் நல்ல நேரம் வரப்போகுதுன்னு இந்த விஷயத்திலேயே நான் புரிந்து கொண்டேன் நம்ம சொன்னபடியே இந்த ஊருக்கு சோதனை காலம் வந்துடுச்சு ஊர் மக்கள் எல்லோரும் நம்மைப் பற்றி தான் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் இப்படியே நம்முடைய கவுரவத்தை இந்த ஊரில் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் கூடிய சீக்கிரத்தில் இந்த உரை நம் கைக்குள்ள போட்டுக்க முடியும் என்று உற்சாகமாக சாட்டையடி சாமியார் தனது சிஷ்யர்களிடம் சொன்னார்.
குருவே பண்ணையார் தோட்டத்தில் காணாமல் போனவர்களை பற்றி நமக்கு தகவல் தெரிந்தால் இன்னும் நமக்கு பெருமையாக இருக்கும் ஏனென்றால் எல்லோரும் நம் மீது ஒரு அளவுக்கு நம்பிக்கை வச்சிருக்காங்க
ஆனால் இந்தப் பண்ணையார் இந்த முத்தையா கியவன் நம்மை கண்டு கொள்வதே இல்லை குருவே அதனால காணாமல்போனவர்களை பற்றி நமக்கு ஏதாவது தகவல் கிடைத்தால் பண்ணையாரையும் நம் கைவசத்தில் போட்டுக் கொள்ளலாம் என்றான் மற்றொரு சிஷ்யன்.
அது தெரிந்தால் நமக்கு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்மே.
காணாமல் போனவர்களை நாம் கண்டுபிடித்து விட்டால் இந்த ஊர் மக்கள் நமக்கு கோவிலை கட்டி கொடுப்பார்கள் . ஆனால் நம்மால் காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பது முடியாத காரியம் நம்ம ஏதோ பண்ணையார் தோட்டத்தில் இருக்கும் கரும்பு தோட்டத்தை கொளுத்தி விடலாம் என்று திட்டம் போட்டு தான்
இந்த ஊருக்கே சோதனைக்காலம் வரப்போகுது என்று சொல்லியிருந்தோம்
ஆனால் நிஜமாகவே இந்த ஊருக்கு சோதனைக் காலம் வந்து என்னுடைய வாக்கை நிறைவேற்றி விட்டது . பரவாயில்லை எப்படியோ நம்முடைய திட்டம் மெல்லமெல்ல கைகூடி வருகிறது என்று சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யர்களும் சந்தோஷமாக பேசிக் கொண்டு இருந்தார்கள்.
..... நாட்கள் நகர்ந்தது....
எந்த ஒரு பிரச்சனையும் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் சந்திரனின் திருமணம் நன்றாக நடந்திருக்கும் . என்ன செய்வது யார் யாருக்கு எப்போது வாழ்க்கை அமையும் என்று கடவுள் கணக்கு போட்டு வைத்திருக்கிறார் .
நம்ம கையில் எதுவுமே இல்லை என்று வருத்தத்தோடு பண்ணையாருக்கு காப்பியை கொடுத்துவிட்டு சாந்தி சொன்னாள்.
நம்ம வீட்டு திருமணம் தான் நடப்பதற்கு கடவுள் சம்மதம் தரவில்லை . என்னுடைய நண்பன் முத்தையாவின் மகன் சங்கரின் திருமணம்மாவது நல்லபடியாக நடக்க வேண்டும் . இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது திருமணத்திற்கு நாம் குடும்பத்தோடு சென்று வரவேண்டும் என்று பண்ணையார் காபி குடித்துக்கொண்டே சாந்தியிடம் சொன்னார்.
நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க மாமா ..கடவுள் முதல்ல கஷ்டத்தை கொடுத்துட்டாரு இனிமேல் நமக்கு ஒரு நல்ல வழி பிறக்கும் நிச்சயம் நம்ம சந்திரன் திருமணமும் நம்ம திட்டம் போட்டது போலவே நடத்தலாம் மாமா என்று சாந்தி பண்ணையாரிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் அப்போது பரந்தாமனும் சந்திரனும் தீனாவும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
என்னங்க ...மூணு பேரும் எங்க கிளம்பிட்டீங்க என்று பரந்தாமனை பார்த்து சாந்தி கேட்டாள்.
தோட்டத்துக்கு போயிட்டு வந்து ரொம்ப நாளாச்சு அதனாலதான் தோட்டத்துக்கு போயிட்டு எப்படி இருக்குன்னு பாத்துட்டு வரலாம் முன்னு கிளம்புகிறோம் என்றான் பரந்தாமன்.
அங்க எப்படி இருக்கப் போகுது... தண்ணி இல்லாம எல்லாமே வீணாக போயிருக்கும் இதைப் பார்த்து என்ன பண்ண போறீங்க என்று சொன்னாள் சாந்தி.
பரவாயில்லை மா அவனுங்க போயிட்டு தோட்டத்தை சுத்தி பார்த்துட்டு வரட்டும் .
வீட்டுக்குள்ளே இருந்தால் எதையாவது மனசுல நினைச்சுகிட்டு கவலையோடு இருப்பானுங்க என்று பண்ணையார் சொன்னார்.
நாங்க தோட்டத்துக்கு போயிட்டு வரும் அப்பா என்று சொல்லிவிட்டு பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் பைக்கில் சென்றார்கள்.
வழக்கம்போல மூவரும் பம்புசெட்டின் அருகில் இருக்கும் மரத்து நிழல்களில் மூவரும் நின்றார்கள் .
அப்போது பரந்தாமன் எரிச்சலோடு சந்திரனையும் தீனாவையும் முறைத்தபடி பார்த்தான்.
உங்களால எவ்வளவு பெரிய பிரச்சனை பார்த்தீங்களா... தேவையில்லாமல் நீங்கள் இந்த கனகா மீது ஆசைப்பட்டதால் இப்படிப்பட்ட நிலைமைக்கு நம் குடும்பம் வந்துவிட்டது என்று கோபத்தோடு திட்டினான் பரந்தாமன்.
அண்ணே.... நீங்கதானே சொன்னீங்க ..கனகா இதற்கு சம்மதம் சொன்னால் என்று அதனால் தான் நான் அவளிடம் இப்படி நடந்து கொண்டேன் என்றான் தீனா.
வாயை மூடு ...உன்னால தான் இவ்வளவு பெரிய பிரச்சனை
நான் என்ன சொன்னேன் .அவளை அனுபவைத்துவிட்டு வாடா என்று சொன்னேன் ..ஆனால் நீ அவளை குடிபோதையில் கடித்து குதரி இருக்க . அவள் உடம்பு முழுக்க ஒரே ரத்தம் இப்படியா காட்டுமிராண்டி போலவ நடந்து கொள்வே. அதனால் அவள் பயந்து போய் விட்டாள்
இப்படி தேவையில்லாமல் உங்களுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற என்னுடைய எண்ணத்தால் இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டுவிட்டது . இனிமேல் இந்த விவசாயத்தை பழைய நிலைமைக்கு எப்படி கொண்டு வருவது . இதோ பாருங்கள் எல்லாமே பராமரிப்பு இல்லாமல் தண்ணீர் இல்லாமல் வீணாக போய்க்கொண்டு இருக்கிறது என்று கோபத்தோடு திட்டினான் பரந்தாமன்.
கனகாவின் அழகை ரசித்தோம்
அதை தவிர அவளை அனுபவிப்பதற்கு எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை இருந்தாலும் நீங்கள் சொன்னதால்தான் நான் சம்மதித்தேன் ஆனால் அது இந்த அளவுக்கு பெரிய பிரச்சனை ஆகும் என்று எனக்கு தெரியாது என்னுடைய திருமணமும் நின்று போய்விட்டது நம்முடைய விவசாயமும் நின்று போய்விட்டது இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால்
தம்பி கனகாவை கெடுத்து இருக்க மாட்டான் என்று சந்திரன் சொன்னான்.
வாயை மூடு .. நீ மட்டும் ஒழுக்கமா.. நீயும் தான் கனகாவிடம் சென்று உனக்கும் எனக்கும் இன்னும் கொஞ்ச நாள்ல திருமணம் நடக்கப் போகுது என்று சொல்லி அவளை மேலும் பயமுறுத்தி இருக்க .
அவள் நீ சொன்ன வார்த்தையைக் கேட்டு அங்கிருந்து குடும்பத்தோடு ஓடிவிட்டாள். திருமணம் ஆன பெண்ணை இப்படி சொன்னாள் பயப்படாமல் என்ன செய்வாள் அவள் . இப்படி இரண்டு பேருமே எல்லையை மீறி தப்பு செஞ்சுட்டிங்க என்று ஆவேசத்துடன் சந்திரனை திட்டினான் பரந்தாமன்.
நான் அப்படியா சொன்னேன் எனக்கு நினைவில்லை அண்ணா என்றால சந்திரன்.
நீ நிறைய குடித்து இருந்ததால் உனக்கு எல்லாமே மறந்து போயிருக்கும் . நான் பம்பு செட்டுக்கு வந்தபோது நீங்கள் இருவரும் போதையில் மயங்கி தூங்கிக் கொண்டு இருந்தீர்கள் பாவம் கனகா அழுதுகொண்டே இருந்தாள் . நான் அவளுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லிவிட்டு வந்தேன் அப்படியும் அவள் இந்த முடிவை எடுத்து விட்டால் இனிமேல் பிரச்சனை மேலும் பெரியதாகி வீடும் அப்பா காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் வரை உனக்கு திருமணம் நடத்தப் போவதில்லை என்று சொல்லிவிட்டார் .
காணாமல் போனவர்கள் கிடைத்தாலும் உனக்கு திருமணம் நடக்காது ஏனென்றால் அவர்கள் நடந்த உண்மையை சொன்னாள் அப்பா நம்ம மூன்று பேரையும் கொன்றுவிடுவார் என்று பரந்தாமன் சொன்னான்.
நான் ஏன் வருங்கால மனைவி என்று நினைத்து அப்படி சொல்லி இருப்பேன் அண்ணா ..
அதை தவறாக புரிந்துகொண்டு கனகா இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டாள் . என்னோட குடிப்பழக்கத்தினால் இவ்வளவு பெரிய பிரச்சனை உருவாகி விட்டது என்னை மன்னித்துவிடு அண்ணா இனிமேல் நாங்கள் குடிக்க மாட்டோம் என்று சந்திரன் சொன்னான்.
சரி சரி இனிமேல் நம்ம மூன்று பேரும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் சிறிதளவுகூட நம் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது இனிமேல் கவனமாக இருங்கள் தோட்டத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வாங்க நான் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கிறேன் எனக்கு மனசு சரியில்லை என்று சொல்லிவிட்டு கிணற்றின் தடுப்பு சுவர் மீது அமர்ந்தான் பரந்தாமன்
சந்திரனும் தீனாவும் சோகத்தோடு ஆளுக்கொரு திசையில் சென்றார்கள் தோட்டத்தை சுற்றிப் பார்க்க.
நடந்த இப்பிரச்சனைக்கு நீங்கள் இருவரும்தான் காரணம் என்பது போல தம்பிகளை நம்பவைத்து விட்டான் பரந்தாமன்.
சிறிது நேரம் கழித்து பரந்தாமன் பம்புசெட்டில் மற்றொரு அறையில் இருக்கும் தனது தாய் படத்தின் முன்னால் நின்று வேண்டினான்..
அம்மா... நான் நினைத்தபடியே என்னுடைய சூழ்ச்சியால் தம்பியின் திருமணத்தை நிறுத்தி விட்டேன் அதேசமயம் நான் செய்த சூழ்ச்சியால் என்னுடைய விவசாயமும் நின்று போய்விட்டது நான் இந்த விவசாயத்துக்காக தான் இதுபோன்ற தவறுகளை செய்து வருகிறேன் என்பது உனக்கு மட்டும்தான் தெரியும்
இப்போது இந்த விவசாய நிலங்களை மறுபடியும் சிறப்பாக மாறுமா என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது . காரணம் இரண்டு குடும்பங்கள் காணாமல் போனதால் ஊர் மக்கள் பயந்து யாருமே இதுவரைக்கும் வேலைக்கும் வரவல்லை . இனிமேல் இந்த விவசாயத்தை என்னால் பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியுமா என்ற நம்பிக்கை எனக்கு குறைந்துகொண்டே வருகிறது எனக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை நான் உன்னிடம் மட்டும் தான் சொல்லி வேண்டிக் கொள்வேன் நீயும் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைப்பாய் அதேபோல இந்த விவசாய நிலங்களை பழையபடி செழிப்பாக மாற்ற வேண்டும் தாயே இதற்கு நீதான் எனக்கு உதவி செய்ய வேண்டும் அம்மா
எனக்கு உன்னை விட்டால் வேறு யாரும் இல்லை
நீ உதவி செய்வே என்ற நம்பிக்கையில்தன் துணிந்து பல திட்டங்களை போட்டு அதில் பெற்றியும் அடைந்திருக்கிறேன் அதேபோல இந்த நிலங்களையும் நீதான் சிறப்பாக மாற்றி என்னுடைய லட்சியத்திற்கு துணையாக இருக்க வேண்டும் தாயே . என்று இருக்கைகளால் கும்பிட்டு மனமுருக வேண்டிக் கொண்டு . பிறகு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தனது படத்தின் பின்னால் சேர்த்து வைத்திருக்கும் பணப்பெட்டி சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொண்டு வெளியே வந்தான் பரந்தாமன்.
கனகா குடும்பம் காணாமல் போனா நாள் முதல் பண்ணையார் தோட்டம் வெறிச்சோடி காணப்பட்டது
ஊர் மக்கள் யாரும் வேலைக்கு போகாததால் எல்லாம் பயிர்களும் காய்ந்து வீணாகி போனது
ஊர் மக்களும் வேலை இல்லாததால் குடும்பம் நடத்துவதற்கு கஷ்டப்பட்டார்கள் செலவுக்கு பணம் இல்லாமல் என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்தார்கள்.
வழக்கம்போல வாரத்தில் இரண்டு நாள் காணாமல் போனவர்களை தேடுவதற்காக பரந்தாமனும் சந்திரனும் தீனாவும் கிளம்பினார்கள்.
தோட்டத்துக்கு இல்லை அப்பா இன்னைக்கு காணாமல் போனவர்களை தேடுவதற்காக கிளம்புகிறோம் என்று பரந்தாமன் மெதுவாக சொன்னான்.
காணாமல் போனவர்களை நீங்கள் தேடப் போவதில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை எதற்கு தேவையில்லாமல் நேரத்தை வீணாக்க வேண்டும் . என்று சற்று வருத்தத்தோடு பண்ணையார் சொன்னார்.
பண்ணையாரின் பேச்சு கேட்டதும் சமையல் அறையிலிருந்து
சாந்தி சற்று வியப்போடு வந்து பார்த்தாள்.
மாமா ..அவங்க முடிந்தவரை தேடிக் கொண்டே இருக்கட்டும் எதுக்காக தேடுவதை நிறுத்த வேண்டும் மாமா என்று சாந்தி கேட்டாள்.
அம்மாடி ...உன் கணவன் மீது நான் எந்தக் குறையும் சொல்லவில்லை இதுவரைக்கும் காணாமல் போனவர்களை தேடுவதற்கு இவர்கள் சென்று வந்தார்கள் ஆனால் இதுநாள் வரைக்கும் ஒரு தகவல் கூட அவர்களைப் பற்றி தெரியவில்லை .
ஒருவேளை அவர்கள் வெகுதூரத்தில் இருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்கு வந்திருக்கிறது . அதனால் இவர்கள் தேவை இல்லாமல் எதற்கு நேரத்தை வீணடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அப்படி சொன்னேன் . மற்றபடி இவர்களை குறை சொல்லவில்லை என்று பண்ணையார் சொன்னார்.
அப்படி என்றால் இனிமேல் அவர்களை தேட வேண்டாமா என்று பரந்தாமன் கேட்டான்.
நீங்கள் தேட போக வேண்டாம் அதற்கு நான் வேறொரு யோசனை செய்திருக்கிறேன் . அதனால் நீங்கள் மூவரும் இனிமேல் காணாமல் போனவர்களை தேடுவதற்கு போக வேண்டாம் என்று பண்ணையார் சொன்னார்.
பரந்தாமனுக்கும் சந்திரன் தீனாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது . அப்பா காணாமல் போனவர்களை தேடுவதற்கு வேறு ஒரு திட்டம் வச்சிருக்கார் என்று நினைத்து பயந்து போனார்கள்.
அப்படியென்றால் காணாமல் போனவர்களை தேடுவதற்கு வேறொரு நல்ல திட்டத்தை வச்சிருக்கீங்களா மாமா ...
என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் சாந்தி.
ஆமாம்... நேரம் வரும்போது அதைப்பற்றி நானே சொல்கிறேன் அதற்கு முன்னாடி நான் இவர்களிடம் ஒரு கேள்வி கேட்கணும் போல தோணுது என்று சாந்தியிடம் பண்ணையார் சொன்னார்.
எதுவாக இருந்தாலும் மறைக்காம கேளுங்க மாமா.. அவங்க யாரு உங்களோட பிள்ளைங்க அவங்க கிட்ட உங்களுக்கு எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது அப்படியிருந்தால் அது அப்பாவுக்கும் பிள்ளைகளுக்கும் விரிசலை ஏற்படுத்தும் . உங்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் தாராளமாக கேளுங்கள் மாமா என்று சாந்தி சொன்னாள்.
பரந்தாமனுக்கும் சந்திரன் தீனாவுக்கும் மேலும் பயம் அதிகரித்தது . அப்பா நம்மீது சந்தேகப்படுவதற்கு ஆரம்பித்துவிட்டார் என்று நினைத்து முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு மூவரும் சொல்லுங்கப்பா . என்ன கேட்கப் போறீங்க என்றான் பரந்தாமன்.
நீங்க மூணு பேரும் என்னைக்கி தோட்டத்தை கவனித்துக் கொள்வதற்கு பொறுப்பேற்றுக் கொண்டீர்களோ அன்னையிலிருந்து பிரச்சனைகள் உருவாக தொடங்கிவிட்டது
இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பண்ணையார் தனது மூன்று மகன்களையும் பார்த்து கேட்டார்.
நம்ம நினைச்ச படியே ..
அப்பா நம்மிது சந்தேகப்பட்டு விட்டார் என்று மனதில் நினைத்துக்கொண்டு . நிங்கள் எங்கள் மீது சந்தேக படுகிறீர்களா அப்பா.. என்றான் பரந்தாமன்.
நான் உங்கள் மீது சந்தேகப்பட்டு இந்த கேள்வியை கேட்கவில்லை நீங்கள் இவ்வளவு நாளாக தோட்டத்தை கவனித்துக்கொண்டு வருகிறீர்கள் . ஆனால் நமது பம்புசெட்டில் தங்கி வேலை பார்த்து வந்தா இரண்டு குடும்பங்கள் காணாமல் போய்விட்டார்கள் இதைப்பற்றி உங்களுக்கு ஒரு சின்னத் தகவல் கூட கிடைக்கவில்லை என்றால் .
நீங்கள் மூவரும் எப்படிப்பட்ட முறையில் மக்களிடம் பழகுகிறீர்கள் நீங்கள் மூவரும் நேராக தோட்டத்துக்குச் சென்று தோட்டத்தை மட்டும் கவனித்துவிட்டு வருகிறீர்களா
நம்ம தோட்டத்தில் தங்கி வேலை செய்யும் குடும்பத்தை பற்றி விசாரிப்பது கிடையாது அவர்களிடம் மனம் விட்டு பேசியதும் கிடையாது . அப்படித்தானே என்றார் பண்ணையார்.
அவர்களும் எங்களிடத்தில் எதையும் சொல்வது கிடையாது நாங்களும் அவர்களை எதையும் கேட்டது கிடையாது
நாங்கள் தோட்டத்தை கவனிப்பதோடு வந்துவிடுவோம் என்று பரந்தாமன் சொன்னான்.
இதுதான் நீங்கள் செய்த தவறு எல்லோரிடமும் மனம் விட்டு பேசினால் அவர்களின் மன நிலைமையை புரிந்துகொண்டு என்ன நடந்திருக்கும் என்று இப்போது கணித்து இருக்கலாம் ஆனால் நீங்கள் யாரிடமும் எதுவுமே பேசியதில்லை
அதனால் உங்களுக்கு நடந்த சம்பவத்தை பற்றி சின்னத் தகவல் கூட உங்களுக்கு தெரியவில்லை நமது தோட்டத்தில் வேலை செய்து இருக்கும் போதே அவர்களைப் பற்றின தகவல் உங்களுக்கு தெரியாத போது .
இப்போது அவர்கள் எங்கேயோ வெகுதூரத்தில் ஓடிவிட்டார்கள் இப்போது மட்டும் அவர்களை உங்களால் எப்படி கண்டுபிடிக்க முடியும் . அருகில் இருக்கும்போதே அவர்களைப்பற்றி புரிந்துகொள்ள முடியவில்லை உங்களால்
இப்போது எப்படி அவர்களை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் .
அதனால் தான் உங்களை நான் காணாமல் போனவர்களை இனிமேல் தேடுவதற்கு போக வேண்டாம் என்று சொன்னேன் இதில் தவறு இருந்தால் நீங்களே சொல்லுங்கள் என்றார் பண்ணையார்.
பரந்தாமனும் சந்திரன் தீனா மூவரும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மௌனமாக தலைகுனிந்து நின்றார்கள்.
மாமா ...சொல்றதும் நியாயம்தான் ஊர் மக்கள் நம்மைப் பற்றி பெருமையாக நினைத்தாலும் யாராவது ஒருவருக்கு
இந்த கேள்வி மனதில் இருக்கும் தினமும் பண்ணையார் மகன்கள் தோட்டத்திற்கு வந்து போகிறார்கள் அவர்களுக்கும்மா எந்தத் தகவலும் கிடைக்கவில்லை . என்ற சந்தேகம் யாராவது ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் . இதை நம்மிடம் கேட்பதற்கு தயங்குவார்கள் அதேபோல தான்
இப்போது மாமா உங்களிடம் இந்த கேள்வியை கேட்டிருப்பது நியாயம்தன் என்று சாந்தியும் மூவரை பார்த்து கேட்டாள்.
நாங்கள் என்ன செய்வது அப்பா.. எங்களுக்கு இது போல நடக்கும் என்று தெரியாது அதனால் நாங்கள் தோட்டத்தை மட்டும் கவனித்தோம் ஆனால் இப்படிப்பட்ட பிரச்சனை உருவாகும் என்பது எங்களுக்கு தெரியாது அப்பா
என்று சந்திரன் சொன்னான்.
சரி சரி... நான் மேலும் பேசி உங்கள் மனதை புண்படுத்தவில்லை இனிமேலாவது கவனமாக நடந்து கொள்ளுங்கள் . நம் குடும்பத்திற்கு ஒரு பெரிய எதிரி இருக்கிறான் அவனை நீங்கள் கண்டுபிடிப்பதில் இனிமேல் கவனமாக இருங்கள் காணாமல் போனவர்களை கண்டுபடிக்கும் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் உஷாராக இனிமேல் இருக்க வேண்டும் . நம்முடைய எதிரி நிச்சயம் நம்மை தினமும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது அதற்காகத்தான் உங்களை நான் கோபமாக பேசினேன்
இதை நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளாமல் இனிமேல் கவனமாக இருங்கள் என்று பண்ணையார் சொன்னார்.
மாமா... சொல்வதைப்போல இனிமேல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள்
இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனையாள் நம்ம வீட்டு திருமணம் தள்ளிப் போயிருச்சு அதனால இனிமேல் இதுபோன்ற பிரச்சனைகளை ஏற்படாமல் நீங்கள்தன் பார்த்துக் கொள்ள வேண்டும் . இன்னொரு முறை இது போன்ற பிரச்சனை ஏற்பட்டால் நம் குடும்பம் தாங்காது . என்று பொறுப்போடு சொன்னால் சாந்தி.
நீங்க சொன்னபடியே இனிமேல் நாங்கள் கவனமாக நடந்து கொள்கிறோம் அப்பா நடந்த தவறுக்கு எங்களை மன்னித்து விடுங்கள் என்று பரந்தாமன் சொன்னான்.
இதுக்கெல்லாம் எதுக்குப்பா மன்னிப்பு கேட்கிற நீங்கள் கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அப்படி பேசிவிட்டேன். இப்போது நீங்கள் மூவரும் ஒரு முக்கியமான வேலையை செய்யனும் என்றார் பண்ணையார்.
என்ன வேலை சொல்லுங்க அப்பா..
நம்ம சந்திரன் திருமணத்திற்காக ஊர் மக்களுக்கு புது துணியை வாங்கி வந்து விட்டோம்
ஆனால் திருமணம் தள்ளிப் போய்விட்டது . அதனால் இந்த புது துணியை நம்ம ஊர் மக்களுக்கு நீங்கள் மூவரும் கொடுத்துவிட்டு வாங்க ஏனென்றால் இன்னும் கொஞ்ச நாளில் முத்தையாவின் மகன் சங்கர் திருமணம் நடக்கப்போகிறது .
அப்போது ஊர் மக்கள் எல்லோரும் இந்த புது துணியை உடித்துக் கொள்வார்கள்
நம்ம வீட்டு திருமணம்தான் தள்ளிப் போய்விட்டது என் நண்பன் வீட்டு திருமணத்தையாவது சிறப்பாக செய்யலாம் என்று பண்ணையார் சொன்னார்.
தனது நண்பனின் மகன் திருமணம் நின்று போய்விட்டது என்று நினைத்து முத்தையா சோகத்தோடு காணப்பட்டார் . அதேசமயம் பண்ணையார் தோட்டமும் இப்படி வீணாகி போய்க்கொண்டிருக்கிறதே இதுவரைக்கும் இதுபோல நிலைமை வந்தது கிடையாது
ஊர் மக்களும் வேலைக்குப் போவதில் பயப்படுகிறார்கள் இந்த நிலைமை எப்போதுதான் மாறப்போகிறதோ என்று நினைத்து சோகத்தில் இருந்தார் முத்தையா.
தாத்தா வருத்தத்தோடு இருக்கிறார் என்னன்னு தெரியல
பண்ணையார் மகன் திருமணம் நின்று விட்டதை நினைத்து தாத்தா வருத்தப்படுகிறார் என்று ரேகா சங்கரிடம் சொன்னாள்.
அவருக்கு மட்டுமில்லை வருத்தமில்லை புள்ள . ஊர் மக்கள் அனைவருக்கும் தான் வருத்தமாக இருக்கிறது . ஏற்கனவே ஒருமுறை இப்படி தான் திருமணம் நின்றுபோனது இப்போது இரண்டாவது முறையும் திருமணம் நின்றுவிட்டது இதனால் ஊர் மக்களுக்கும் கவலையாகத்தான் இருக்கிறது இந்த ஊரே அவரால் நிம்மதியாக குடும்பம் நடத்தி வருகிறோம் ஆனால் பாவம் அந்த குடும்பத்தில் திருமணம் நடைபெறுவதில் தடங்கல் வந்து கொண்டே இருக்கிறது.
யார் செய்த பாவமோ தெரியவில்லை அதனால் தான் எல்லோரும் வருத்தமாக இருக்கிறார்கள் என்று சங்கர் ரேகாவிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது பண்ணையார் மகன்கள் ஊர் மக்களுக்கு புது துணியை எடுத்துக் கொண்டு வந்தார்கள்.
அப்பா அனைவருக்கும் புது துணியை கொடுத்துவிட்டு வரச் சொன்னார் என்று பரந்தாமன் நல்லவனைப் போல சிரித்தபடி சந்தோஷமாக முத்தையா விடம் சொன்னான்.
முத்தையாவுக்கு புரிந்தது... திருமணத்துக்காக வாங்கிய புதுத்துணி என்று நினைத்துக் கொண்டார். பிறகு உங்கள் விருப்பப்படியே கொடுங்கள் என்று முத்தையா அனைவரையும் அழைத்து புது துணியை கொடுத்தார்.
ஊர் மக்களும் எந்த ஒரு உற்சாகமின்றி துணிகளை வாங்கிச் சென்றார்கள்
இந்த திருமணத்தை திருவிழா போல கொண்டாட வேண்டும் என்று நினைத்தோம் ஆனால் இப்படி நிலைமை மாறிவிட்டதே என்ற வருத்தத்தோடு ஊர் மக்கள் சோகத்தோடு துணிகளை வாங்கிச் சென்றார்கள்.
பரந்தாமன் உற்சாகத்தோடு அனைவருக்கும் புது துணியை கொடுத்தான். ஏனென்றால் அவன் திட்டம் ஜெயித்து விட்டது எப்படியாவது தம்பியின் திருமணத்தை நிறுத்தவேண்டும் என்ற அவனுடைய திட்டம் ஜெயித்ததால் அந்த உற்சாகத்தில் அனைவருக்கும் புது துணியை கொடுத்தான் பரந்தாமன்.
சந்திரனுக்கும் . தீனாவுக்கும் மனம் வருத்தமாக இருந்தது .
அப்பா நம் திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று திட்டம்போட்டு பல நல்ல நல்ல காரியங்களை செய்திருந்தார். ஆனால் நம்முடைய திருமணத்தை நாமே கெடுத்துக்கொண்டோம் என்று நினைத்து வருத்தமாக இருந்தார்கள்.
........நாட்கள் நகர்ந்தது....
இப்படியே எல்லோரும் சோகத்தில் இருந்தாள் நிளமை மாறவா போகிறது நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு நம்ம முத்தையாவின் மகன் திருமணத்தை சிறப்பாக நடத்தலாம் என்று ஊர் மக்கள் ஆர்வத்தோடு கல்யாண வேலைகளை ஆரம்பித்தார்கள்.
சங்கரின் நண்பர்களும் உற்சாகத்தோடு திருமண வேலைகளை பார்த்தார்கள் ரேகாவின் அம்மாவுக்கு ஒரே சந்தோஷம் நம்முடைய மகள் திருமணத்தை இந்த ஊரே சந்தோஷமாக ஒன்றுகூடி நடத்தப் போகிறார்கள் என்று நினைத்து ஆனந்தமாக இருந்தால் லட்சுமி அம்மாள்.
முத்தையாவும் திட்டமிட்டபடி
ஊர் மக்களுக்கு கல்யாணத்திற்கு முன் கூட்டியே விருந்து அளிப்பதற்கு ஏற்பாடு செய்தார். ஊர்மக்களும் சந்தோஷமாக உணவருந்தினார்கள் இப்படி அந்த ஊரில் சங்கர் ரேகாவின் திருமணம் களைகட்ட தொடங்கியது.
என் நண்பன் வீட்டு திருமணத்திற்கு நாளைக்கு நாம் குடும்பத்தோடு போக வேண்டும் அதனால் காலையில் எல்லோரையும் அதிகாலையில் எழுப்பி விட வேண்டும் என்று பண்ணையார் சாந்தியிடம் சொன்னார்.
ஆமாம் மாமா ...இப்போதுதான் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது நம்ம வீட்டு திருமணம் நின்று போனாலும் உங்கள் நண்பர் முத்தையாவின் வீட்டு திருமணம் மாவது நல்லபடியாக நடக்கிறது இதை நினைத்தால் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது மாமா என்றாள் சாந்தி.
என் நண்பன் முத்தையாவும் நானும் ஆரம்பத்தில் எத்தனையோ பிரச்சினைகளை சமாளித்து வந்தோம் அப்போது எங்களுக்கு இருவருக்குமே திருமணம் ஆகவில்லை இந்த நிலங்களை எல்லாம் பக்கத்து ஊரில் இருப்பவர்கள் என்னிடம் ஏமாற்றி எடுப்பதற்கு எத்தனையோ முயற்சிகள் செய்தார்கள்
ஆனால் அதையெல்லாம் நானும் என் நண்பன் முத்தையாவும் முறியடித்து அவர்களை இந்த ஊரை விட்டு விரட்டினோம் அப்படியெல்லாம் பிரச்சனைகளையும் சமாளித்து வந்தோம் ஆனால் இப்போது உருவாகியிருக்கும் இந்த சின்ன பிரச்சனை கூட எங்களால் சரி செய்ய முடியவில்லை .
எங்கள் மனம் பிரச்சனையை நினைத்து துடிக்கிறது
ஆனால் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது வயதாகிவிட்டதால் எங்களால் சின்ன பிரச்சினையைக் கூட இப்போது தீர்க்க முடியவில்லை என்று சொல்லி வருத்தப்பட்டார் பண்ணையார்.
நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீங்க மாமா ...நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் மெல்ல மெல்ல சரியாகிவிடும் . ஒரு பிரச்சனை எப்போது உச்சத்தை அடைந்து விட்டதோ . அப்போது அந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் . இதுதான் காலத்தின் கட்டாயம் அப்படிதான் நமக்கும் இப்போது இரண்டு குடும்பங்கள் காணாமல் போனதால் எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள் இனிமேல் இதுபோன்ற பிரச்சனைகளை வராமல் இருப்பதற்கு எல்லோரும் தயாராகி விட்டார்கள் . உங்களுடைய பிள்ளைகளும் இப்போதுதான் சரியாக புரிந்துகொண்டு ஊர் மக்களிடம் பாசமாக பழகுகிறார்கள் இனிமேல் நமக்கு நல்ல காலம் பிறக்கும் என்றாள் சாந்தி.
நீ சொன்னபடி நடந்தால் அதுவே எனக்கு போதும் . காணாமல்போன இரண்டு குடும்பங்களும் கிடைக்க வேண்டும். ஏன் இரண்டு மகன்களுக்கும் திருமணம் நடக்க வேண்டும் அதுவரைக்கும் கடவுள் என்னை கூப்பிடாமல் இருந்தால் போதும் என்றார் பண்ணையார்.
அப்படியெல்லாம் பேசாதீங்க மாமா உங்கள் நல்ல மனசுக்கு நிச்சயம் எல்லாமே நல்லபடியாக தான் முடியும். நீங்க வேணா பாருங்க உங்க நண்பர் வீட்டு திருமணம் முடிந்ததும் நம்ம குடும்பத்திலும் இந்த ஊருக்கும் ஒரு திருப்பம் ஏற்படப்போகிறது என்று சாந்தி சொன்னாள்.
எனக்கும் அப்படிதான் தெரிகிறது ஏதோ ஒரு மாற்றம் நடக்கப்போகிறது என்று என் உள் மனசு சொல்லிக் கொண்டே இருக்கிறது அதே போல தான் நீயும் சொல்கிறாய் உன் வாக்கு நிச்சயம் பலிக்கட்டும் சென்று பண்ணையார் சாந்தியிடம் மனமுருகி சொன்னார்.
பரந்தாமனுக்கு தோட்டத்திற்கு போகாமல் இருக்க முடியவில்லை ஏனென்றால் பம்புசெட்டில் பக்கத்து அறையில் தனது தாய் படத்தின் பின்னால் நிறைய பணத்தை மறைத்து வைத்திருப்பதால்
அவனால் தோட்டத்திற்கு போகாமல் இருக்க முடியவில்லை.
எல்லாமே காஞ்சி வீணா போச்சு... ஊர்மக்கள் என்னைக்கி காணாமல் போனவர்கள் கிடைக்கிறார்களோ அன்னைக்குத்தன் வேலைக்கு வருவோம் என்று சொல்லிவிட்டார்கள் நீங்கள் தோட்டத்திற்கு சென்று என்ன பண்ணப் போகிறீர்கள் என்றார் பண்ணையார்.
உங்கள் எல்லோருக்கும் நம்முடைய தோட்டம் ஒரு விவசாய
நிலமாகதான் தெரிகிறது
ஆனால் அந்த இடத்தில் என் அம்மா ஒரு தெய்வமாக பம்புசெட்டில் இருப்பது எனக்கு மட்டும்தான் தெரியும் அப்பா . அதனால்தான் நான் தோட்டத்திற்கு சென்று சிறிது நேரம் அம்மா படத்தை பார்த்துவிட்டு வாரனும் போல தோன்றுகிறது என்று உருக்கமாக சொன்னான் பரந்தாமன்.
பண்ணையாருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பரந்தாமனை கட்டி அணைத்துக் கொண்டார்.
ஐயா ...உன்னுடைய தாய்ப் பாசத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாங்கள் எல்லோரும் நீ சொன்னது போல நம்முடைய தோட்டத்தை ஒரு விவசாய நிலமாக தான் பார்த்து வருகிறோம் இந்த ஊர் மக்களுக்காகத்தான் விவசாயத்தையும் செய்து வருகிறோம் என்று நினைப்பதோடு நான் இருந்துவிட்டேன்
ஆனால் நீ உன்னுடைய தாயை தெய்வமாக பார்க்கிறாய்
நம்முடைய பம்பு செட்டை நீ கோவிலாக பார்க்கிறாய் உன்னுடைய நல்ல மனசுக்கு நிச்சயம் உன்னுடைய அம்மா இனிமேல் உனக்கு துணையாக இருப்பாள் என்று பண்ணையார் பரந்தாமனை கட்டியணைத்தபடி உருக்கமாக சொன்னார்.
அண்ணன் ..அம்மாவை தெய்வமாக பார்க்கிறாரே என்று நினைத்து பெருமை பட்டார்கள். சந்திரன் தீனா
மாமா.. இனிமேல் அவர் விருப்பப்படி தோட்டத்திற்கு எப்போது வேண்டுமானாலும் மூவரையும் அனுப்பிவையுங்கள் மாமா அவருடைய நம்பிக்கை நிச்சயம் கைகூடிவரும் என்று சாந்தி பண்ணையாரிடம் சொன்னாள்.
பரந்தாமா ..இனிமேல் நீ உன் விருப்பப்படி தம்பிகளை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்று வா .
விவசாயம் நடந்தாலும் நடக்கவில்லை என்றாலும் உன்னுடைய தாய்ப் பாசத்தின் நம்பிக்கை உனக்கு கைகொடுக்கும் என்று சொல்லி மூவரையும் தோட்டத்திற்கு அனுப்பி வைத்தார் பண்ணையார்.
வழக்கம்போல பரந்தாமன் தம்பிகளை தோட்டத்தை சுற்றிவர சொல்லிவிட்டு பம்புசெட்டில் இருக்கும் தனது தாய் படத்தின் பின்னால் மறைத்து வைத்திருக்கும் பணப்பெட்டியை சரி பார்த்தான் அப்போது பணப்பெட்டியின் இரண்டு போட்டும் சரியாக இருந்தது . அப்போது அவனுக்கு சற்று மனம் நிம்மதியாக இருந்தது இது நாள் வரைக்கும் விவசாயத்தில் கிடைத்த லாபத்தை யாருக்கும் தெரியாமல் இந்த பெட்டியில் சேர்த்து வைத்திருக்கிறோம் இன்னும் சில லட்சங்களை இந்தப் பெட்டியில் போட்டால் . பெட்டி நிரம்பி விடும் இதை நிரப்புவதற்குல் .
விவசாயம் நின்று போய்விட்டது என்று நினைத்து பரந்தாமன் சற்று வருத்தப்பட்டான்.
அப்போது அவன் தாயிடம் நம்பிக்கையோடு வேண்ட ஆரம்பித்தான்...
அம்மா .. தம்பியின் திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று நான் உன்னிடம் வேண்டினேன் . அதேபோல நீயும் என் வேண்டுதலை எப்படியோ நிறைவேற்றி விட்டாய்
ஆனால் நம்முடைய விவசாயம்மும் சேர்ந்து நின்றுவிட்டது
என்னுடைய லட்சியமே எல்லாம் நிலங்களும் நானே ஆளவேண்டும் அதில் கிடைக்கும் வருமானத்தை நானே அனுபவிக்க வேண்டும் இதுதான் என்னுடைய லட்சியம் இது உனக்கே தெரியும் ஆனால் இப்போது விவசாயம் நின்றுபோய்விட்டது ஊர் மக்கள் பயந்து கொண்டு யாரும் வேலைக்கு வருவதில்லை இந்த நிலைமையை நீதான் சரி செய்ய வேண்டும் தாயே
நான் இதுவரைக்கும் வேண்டியதை எல்லாவற்றையும் நீ நிறைவேற்றி விட்டாய் . அதே போல இந்த ஒரு வேண்டுதலையும் நீ நிறைவேற்றி வைக்கவேண்டும்
அதன் பிறகு நான் எல்லோரிடமும் பாசமாக இருப்பேன்
தம்பிகளை நல்லபடியாக பார்த்துக்கொள்வேன் திருமணம் மட்டும் தம்பிகளுக்கு வேண்டாம் தாயே அது என்னுடைய லட்சியத்திற்கு எதிராக அமைந்துவிடும் மற்றபடி தம்பிகளை நான் சந்தோசமாக பார்த்துக் கொள்கிறேன் தாயே அதேபோல இந்த ஊர் மக்களையும் இனிமேல் சந்தோசமாக பார்த்துக் கொள்கிறேன் ஏனென்றால் என்னுடைய லட்சியத்திற்கு இனிமேல் எந்த தடையும் இருக்காது அதனால் நான் எல்லோரிடமும் பாசமாக நடந்து கொள்கிறேன் தாயே . எப்படியாவது நம்முடைய விவசாயத்தை மறுபடியும் செழிப்பாக மாற்றுவதற்கு நீ தான் உதவி செய்ய வேண்டும் தாயே என்று வழக்கம் போல தனது ஆசையை வேண்டுதலாக தனது தாயிடம் உருக்கமாக சொன்னான் பரந்தாமன்.
பரந்தாமனின் வேண்டுதல் .
கை கூடி வரும்மா என்று.
பொறுத்திருந்து பார்க்கலாம்.
அதிகாலை 4 மணி அளவில் அந்த அழகிய கிராமத்தில்
அம்மன் கோவிலில் மங்களகரமான மேளச்சத்தம் ஒலித்தது
ஊர் மக்கள் அனைவரும் விழித்துக் கொண்டார்கள் . உடனே எல்லோரும் சந்தோஷமாக சங்கரின் திருமணத்திற்கு கிளம்பினார்கள்.
அம்மன் கோவிலில் மாவிலை தோரணம்கட்டி வாழைமரம் வளைத்துக் கட்டி கொத்துக்கொத்தாக தென்னன கொலை .பனங்காய் கொலை. ஈச்சம்பழம் கொலை. போன்றவைகளால் தோரணமாக கட்டி அம்மன் கோவிலில் சிறப்பாக அலங்கரித்து சங்கரின் திருமணம் அதிகாலையில் அழகாக ஆரம்பித்தார்கள்.
பண்ணையார் திட்டமிட்டபடி சங்கரின் திருமணத்திற்கு தாலி செய்து கொண்டு குடும்பத்தோடு வந்திருந்தார்.
ஊர் மக்களும் அனைவரும் பண்ணையார் கொடுத்த புது துணியை உடித்துக்கொண்டு பளிச்சென்று அனைவரும் சந்தோஷமாக அம்மன்கோவிலில் நிரம்பி இருந்தார்கள்
இப்படி சிறப்பான முறையில் சங்கர் ரேகாவின் திருமணம் நடைபெற்றது.
மணமகன் சங்கர் பட்டு வேட்டி
பட்டு சட்டை அணிந்து கொண்டு மாப்பிள்ளை கோலத்தில் ஜொலித்தான் சங்கர் .
மணமகள் ரேகா கூரை புடவையில் அற்புதமாக புன்னகை சிரிப்போடு மணமகள் கோலத்தில் அமர்ந்து இருந்தாள்.
சங்கர் ரேகாவின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து 🤵👰சந்தோசத்தில் பூரித்துப் போனாள் பண்ணையாரின் மருமகள் சாந்தி.
நமது மகள் திருமணம் இந்த அளவுக்கு சிறப்பாக நடக்கும் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை .
இப்படிப்பட்ட வாழ்க்கையை நம் மகளுக்கு கொடுத்த முத்தையா அப்பாவிற்கு நாம் என்ன செய்தாலும் அவருக்கு நன்றி கடன் தீராது . என்று நினைத்தபடி லட்சுமி அம்மாள் லேசாக கண் கலங்கினாள்.
எல்லோரின் முகத்திலும் சந்தோஷம் பொங்கியது... பண்ணையாருக்கு அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று கூடி சந்தோஷமாக திருமணத்தை நடத்துவதை நினைத்து பெருமைப் பட்டார்.
ஏதோ கடமைக்கு வந்தது போல பரந்தாமன் திருமணத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
சந்திரனுக்கு சங்கரின் திருமணத்தை பார்த்ததும் அவனுக்கு தன்னுடைய திருமணமும் நடந்திருந்தால் இதேபோல ஊர் மக்கள் ஒன்று கூடி சந்தோஷமாக நடந்திருக்கும் ஆனால் நமக்கு அந்த கொடுப்பினை கைகூடவில்லை என்று நினைத்து சற்று வருத்தமாக இருந்தான் சந்திரன்
அப்போது அவன் தனது வருங்கால மனைவியை நினைத்து கவலைப்பட்டான் நமக்கே இந்த அளவுக்கு வருத்தமாக இருக்கிறதே பாவம் அவள் தன்னுடைய திருமணத்தை பற்றி எப்படியெல்லாம் கற்பனை செய்திருப்பாள் என்று நினைத்து வருத்தத்தோடு இருந்தான் சந்திரன்.
கோவிலில் மங்கல இசை ஒளித்திருக்கும் வேளையில் பண்ணையார் அம்மனை வேண்டிக் கொண்டு தாலியை எடுத்து சங்கரிடம் கொடுக்க ...
சங்கர் ..தாலியை பண்ணையாரிடம் இருந்து வாங்கி ..
ரேகாவின் கழுத்தில் கட்டிவிட்டான் அனைவரும் உற்சாகத்தோடு சங்கரையும் ரேகாவயம் ஆசீர்வதித்தார்கள் . மலர் தூவியும் கைத்தடியும் அவர்களை வாழ்த்தினார்கள் .
இப்படி சந்தோஷமாக சங்கரின் ரேகாவின் திருமணம் நல்லபடியாக முடிந்தது .
பிறகு சங்கரும் ரேகாவும் முத்தையாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்
பிறகு லட்சுமி அம்மாளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள் .
அப்போது சங்கரும் ரேகாவும் பண்ணையாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள் .
இப்படி எல்லோருடைய ஆசீர்வாதத்தை சங்கரும் ரேகாவும் பெற்றார்கள்.
பிறகு அனைவரும் கோவிலில் அமர்ந்து கல்யாண விருந்து சாப்பிடுவதற்கு தயாரானார்கள் சாந்தியும் அவளது கணவன் பரந்தாமனும் மற்றும் மகன் சுரேஷ் சந்திரன் தீனா அனைவரும் அமர்ந்து உணவு அருந்தினார்கள்.
பண்ணையார் முத்தையாவின் தோள் மீது கை போட்டபடி இருவரும் கோவிலில் தனியாக மனம் விட்டு பேசினார்கள்.
நம்ம ரெண்டு பேரும் வாலிப வயசில் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறோம் .
நம்ம இருவரும் யாருக்கும் பயந்தது கிடையாது . எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை சமாளித்து ஜெயித்து விடுவோம்
ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை
நமக்கும் வயசாகிவிட்டது சின்ன பிரச்சனை என்றாலும் மனசு ரொம்பவே சங்கடம் படுகிறது என்றார் பண்ணையார்.
ஆமாண்டா ...காலம் செல்ல செல்ல நம்ம எதிர்பார்க்காத விஷயங்கள் எல்லாம் நடக்கிறது .
என் அனுபவத்தில் இதுவரைக்கும் நம்முடைய தோட்டம் இப்படி பராமரிப்பு இல்லாமல் வீணாக போனதே கிடையாது
நம்முடைய தோட்டத்தைப் பற்றி சுற்றியிருக்கும் கிராம மக்கள் பெருமையாக பேசுவார்கள் அப்படியிருந்த நம்முடைய தோட்டம் இப்போது வீணாக இருப்பதை பார்த்தால் மனசுக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது
நமக்கும் வயதாகிவிட்டதால் இதையெல்லாம் பார்த்து கவலைப்பட தான் முடியும்
வேறு எதுவும் நம்மால் செய்ய முடியாது என்று முத்தையா வருத்தத்தோடு சொன்னார்.
விவசாயம் நடக்கவில்லை என்ற கவலையை விட
ஊர்மக்கள் வேலை இல்லாமல் இருப்பதுதான் எனக்கு மனம் கஷ்டமாக இருக்கிறது
இந்த ஊர் மக்களுக்கு இது வரைக்கும் நான் வேலை இல்லை என்ற சூழலை ஏற்படுத்தியதே கிடையாது . அவர்கள் விருப்பப்படி வேலையை கொடுத்துக் கொண்டேதான் இருந்தேன்
ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை .
நமக்கு தெரியாமலே ஏதேதோ நடக்கிறது நம்முடைய ஊரில்
என்ன காரணத்தால் இந்த இரண்டு குடும்பங்களும் காணாமல் போனார்கள் என்ற கவலை எனக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது இதனால் என் மகன் திருமணத்தை நான் தள்ளிப் போட்டுவிட்டேன் இதற்கெல்லாம் எப்போது தான் விடிவு காலம் வருமோ என்று பண்ணையார் சற்று வருத்தத்தோடு மனம் விட்டு தனது நண்பன் முத்தையா விடம் சொன்னார்.
நீ ஒன்றும் கவலைப்படாதே உன்னுடைய குறைகளை எல்லாம் இந்த அம்மன் சன்னதியில் சொல்லியிருக்க .
நிச்சயம் இந்த அம்மன் உன்னுடைய கஷ்டத்தை தீர்த்து வைப்பாள் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் உனக்கு எந்த குறையும் இல்லை .
உன் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை
ஊர் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்சினையை
உன்னோட குடும்ப பிரச்சனையாக நினைத்து வருத்தப்படுகிறாய் உண்மையிலேயே உன் குடும்பத்தில் பிரச்சனை எதுவும் இல்லை .உன்னை கடவுள் நல்ல படியாகத்தான் வச்சிருக்காரு ஆனால் நீதான் ஊர் மக்கள் மீது உள்ள பாசத்தினால் இப்படி உன் மகன் திருமணத்தை நீயே தள்ளிப்போட்டு உன் குடும்பத்தில் உள்ளவர்களையும் கஷ்டப் படுகிறாய் உன்னுடைய எண்ணம் எல்லோரும் சந்தோஷமாக இருக்கும் போது . நம்முடைய மகன் திருமணம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறாய் .
உன்னுடைய நல்ல மனசுக்கு நிச்சயம் கடவுள் கை கொடுப்பார் என்று பண்ணையாருக்கு ஆறுதல் சொன்னார் முத்தையா.
பண்ணையாரும் முத்தையாவும் மனம் விட்டு பேசியதில் நேரம் கடந்தது. பிறகு அனைவரும் கலைந்து செல்ல ஆரம்பித்தார்கள் அப்போது பண்ணையாரும் குடும்பத்தோடு வீட்டுக்கு கிளம்பி விட்டார்.
வழக்கம்போல பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் பம்புசெட்டுஅருகில் இருக்கும் கிணற்று தடுப்பு சுவர் மீது அமர்ந்தபடி கவலையோடு இருந்தார்கள்.
அண்ணே ....என்னை மன்னித்துவிடுங்கள் என்னால் தான் உங்கள் திருமணம் நின்று போய்விட்டது .நான் குடிபோதையில் கனகாவிடம் தவறாக நடந்து கொண்டதால் இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட்டுவிட்டது .
என்னை மன்னித்துவிடு அண்ணா என்று சந்திரனிடம் வருத்தத்துடன் சொன்னான் தீனா.
என்னையும் மன்னித்துவிடு சந்திரா நானும் உங்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்ததால் .
உங்களுடைய சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி வைக்கவேண்டும் என்ற எண்ணத்தால் நானும் தவறான விஷயத்திற்கு உங்களை வற்புறுத்தி விட்டேன் .
எனக்கு உங்களுடைய சந்தோஷம்தன் முக்கியமாக தெரிந்ததே தவிர . அதில் இருக்கும் பிரச்சனை அப்போது எனக்கு தெரியவில்லை உங்களுடைய சந்தோசம் தான் முக்கியம் என்று நினைத்து இப்படிப்பட்ட தவறினை நான் செய்துவிட்டேன்
என்னை மன்னித்துவிடு சந்திரா என்று பரந்தாமனும் சந்திரனிடம் மன்னிப்பு கேட்டான்.
அண்ணே ...நீங்க போய் என்னிடம் மன்னிப்பு கேட்கலாமா
எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் என்னை முதுகிலும் மார்பிலும் சுமந்து சிறுவயதில் என்னையும் தம்பியையும் சந்தோஷமாக பார்த்துக் கொண்டீர்கள் .இப்போது எங்களை மனதில் சுமந்துகொண்டு எங்களை சந்தோசமாக பார்த்துக் கொள்கிறீர்கள். எங்களை பொறுத்தவரை அப்பா அம்மா எல்லாமே நீங்கள் தான் அண்ணா நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கலாமா என்று பாசத்தோடு சொன்னான் சந்திரன்.
அண்ணா ...நாங்கள் இனிமேல் குடிப்பதை நிறுத்தி விடுகிறோம் அதேபோல எந்த பெண் மீதும் இனிமேல் தேவையில்லாமல் ஆசை பட மாட்டோம் இனிமேல் உங்கள் விருப்பப்படி நாங்கள் நடந்து கொள்கிறோம் அண்ணா
நாங்கள் செய்த தவறினால் உங்களுக்கும் மன வருத்தம் ஏற்பட்டுவிட்டது எங்களால் இந்த ஊர் மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது இதை நினைத்துப் பார்க்கும்போது என் மனம் ரொம்ப வருத்தப்படுகிறது அண்ணா என்று தீனா வருத்தத்தோடு பரந்தாமனிடம் சொன்னான்.
சாதாரண சின்ன பிரச்சனை தான் இந்த கனகா தான் தேவையில்லாமல் இங்கிருந்து ஓடி விட்டாள் இதனால் உன் திருமணமும் நின்று விட்டது நம்முடைய விவசாயமும் நின்று விட்டது இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்படும் என்று தெரிந்திருந்தால் நாம் ஏன் இந்த தவறு செய்யப் போறோம் ஏதோ தெரியாமல் தவறை மூன்றுபேரும் செய்துவிட்டோம் இனிமேல் எந்தத் தவறையும் செய்யக்கூடாது அப்போதுதான்
நம்ம அப்பா நம்மிது நம்பிக்கை ஏற்படும் என்று பரந்தாமன் தம்பிகளிடம் நல்லவன் போல சொன்னான்.
அண்ணனின். திருமணத்தை மறுபடியும் எப்படியாவது நடத்த வேண்டும் அண்ணா என்று தீனா பரந்தாமனிடம் சொன்னான்.
நான் சந்திரன் திருமணத்தை ரொம்ப சிறப்பா நடத்தலாம் என்று ஆசையாக இருந்தேன்
அதற்காக நிறைய திட்டத்தை எல்லாம் போட்டு வைத்திருந்தேன் வரவு செலவுக் கணக்கையும் தயாராக எழுதி வைத்திருந்தேன் இது உங்கள் எல்லோருக்குமே தெரியும்
ஆனால் இப்படி நிலைமை மாறும் என்று எனக்கு தெரியாதே
இனிமேல் நம்ம தோட்டத்தை செழிப்பாக மாற்றுவதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பிறகு மெல்ல மெல்ல அப்பாவின் மனதை மாற்றி சந்திரன் திருமணத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யலாம் அதனால் இனிமேல் நம்ம எந்த தேவையில்லாத வேலையும் செய்யக்கூடாது என்று பொறுப்போடு தம்பிகளிடம் சொன்னான் பரந்தாமன்.
காணாமல் போனவர்கள் கிடைக்கும்வரை திருமணத்தை தள்ளி போடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அப்பா உறுதியாக இருக்கிறாரே அண்ணா அவர் சொன்னபடி காணாமல் போனவர்களை கண்டு பிடித்து விட்டாலும் பிரச்சனை நமக்குத்தானே அண்ணா அப்போதும் என் திருமணம் தான் நின்று போகுமே என்று வருத்தத்தோடு சந்திரன் சொன்னான்.
நிச்சயம் காணாமல் போனவர்கள் கிடைக்க மாட்டார்கள்..
அதனால் நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம்
நான் சொன்னதுபோலவே அப்பாவின் மனதை மெல்ல மெல்ல மாற்றி உன்னுடைய திருமணத்தை எப்படியாவது நான் நடத்தி வைக்கிறேன் நீ ஒன்றும் கவலைப்படாதே தம்பி என்று பாசத்தோடு நடித்துக் கொண்டு சொன்னான் பரந்தாமன்.
பரந்தாமனின் பேச்சைக் கேட்டதும் சந்திரனுக்கும் தீணாவுக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டது .
நம்முடைய வாழ்க்கையை அண்ணன் இனிமேல் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டது
அதே சமயம் நமக்கு எல்லாமே அண்ணன் தான் அவர் இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையும் இல்லை என்ற அளவிற்கு பரந்தாமன் மீது பாசமும் நம்பிக்கையும் சந்திரன் மனதில் தீனாவின் மனதில் நிரம்பியது.
சங்கர் ரேகா ஜோடி பொருத்தம் நல்லாவே இருக்குது .
ரேகா ரொம்ப அழகா இருக்கா என்று சாந்தி தனது மாமனாரிடம் சொன்னாள்.
ஆமாம் ...சங்கர் திருமணத்திற்கு சென்று வந்தது எனக்கு மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது ஊர் மக்களையும் என் நண்பனையும் பார்த்து மனம்விட்டு பேசியதில் என்னுடைய பாரம் கொஞ்சம் குறைந்தது போல இருக்குது என்று பண்ணையார் சாந்தியிடம் சொன்னார்.
எனக்கும் அப்படித்தான் இருக்குது மாமா ...கூடிய சீக்கிரத்தில் சந்திரனின் திருமணத்தையும் இதேபோல ஊர் மக்களும் ஒன்றுகூடி சந்தோஷமாக நடத்த வேண்டும் என்றாள் சாந்தி.
கண்டிப்பா... சந்திரன் தீனா இவர்களின் திருமணத்தை... முடிந்தால் ஒரே மேடையில் கூட நடத்தலாம் ஏனென்றால் தீனாவுக்கும் வயது கூடிக்கொண்டே போகிறது அதனால் அவனுக்கும் சந்திரனுக்கும் ஒரே மேடையில் திருமணத்தை நடத்தி விடலாம்
என் ஆசைப்படி காணாமல் போன இரண்டு குடும்பங்கள் கிடைத்த உடனே இவர்கள் இருவருக்கும் திருமணத்தை நடத்த வேண்டும் என்று நம்பிக்கையோடு சொன்னார் பண்ணையார்.
நீங்கள் காணாமல் போனவர்களை உங்கள் மகன்களையும் தேட வேண்டாம் என்று சொல்லிட்டீங்க ஏதோ புது திட்டம் வச்சிருக்கிறதா சொன்னீங்களே மாமா ..அது என்ன திட்டம் அந்த திட்டத்தினால் காணாமல்போனவர்களை சீக்கிரமாக கண்டுபிடிக்க முடியுமா மாமா என்றாள் சாந்தி.
நிச்சயம் கிடைப்பாங்க..
அந்த திட்டத்தை பற்றி நான் உனக்கு நேரம் வரும்போது சொல்கிறேன் என்று பண்ணையார் சொன்னார்.
சரி மாமா அவங்க சீக்கிரமாகவே கிடைக்கட்டும் .. ஆனால் இந்த இரண்டு குடும்பமும் எதனால் காணாமல் போனார்கள் என்ற விவரம் சிறிதளவுகூட தெரியவில்லையே அப்படியென்றால் இதை யாரோ நீண்ட நாட்களாக திட்டம் போட்டு இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார்கள் என்று சொன்னால் சாந்தி.
எனக்கும் இதைப்பற்றி மர்மமாகவே இருக்கிறது எப்படி யோசித்துப் பார்த்தாலும் சின்ன சந்தேகம் கூட யார்மிதும் ஏற்படவில்லை
என்னா பிரச்சனைக்காக ஓடினார்கள் இல்லை அவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்ற பயம் எனக்கு ஒரு பக்கமும் இருக்கிறது
அவர்கள் காணாமல் போய் இருந்தாலே நன்றாக இருக்கும் என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பாக அவர்களை நாம் கண்டுபிடித்து விடுவோம்
ஆனால் வேறு ஏதாவது அசம்பாவிதம் நடந்து இருந்தால் நம்மால் என்ன செய்ய முடியும் என்ற எண்ணம் என் மனதில் இப்போது ஏற்பட்டிருக்கிறது இந்த மர்மம் என்னைக்கு தான் தெளிவாக மாறப்போகிறதோ.
என்று ஏக்கத்தோடு சொன்னார் பண்ணையார்.
நம்ம குடும்பத்தோடு உங்கள் நண்பர் வீட்டு திருமணத்திற்கு சென்றோம் . அதே சமயம் நம்ம குடும்பத்தோடு கோவிலுக்கும் சென்று இருக்கிறோம் திருமணத்திற்கும் கோவிலுக்கும் ஒரே சமயத்தில் குடும்பத்தோடு சென்று இருக்கிறோம்
நிச்சயம் அந்த அம்மன் இந்த மர்மத்திற்கு ஒரு தெளிவான முடிவை கொடுப்பாள் அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்குது மாமா ..நான் சொன்னபடி உங்கள் நண்பரின் திருமணம் முடிந்து விட்டது இனிமேல் ஒரு திருப்பம் ஏற்பட போகிறது பாருங்கள் என்று ஒரு புது உற்சாகத்துடன் சொன்னாள் சாந்தி.
சாந்தியின் நம்பிக்கையும் பண்ணையாரின் நம்பிக்கையும் எந்த அளவுக்கு கைக்கூடி வரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.