Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed பண்ணையார் தோட்டம் மர்மம்

⬇️அத்தியாயம் ...30 👇


சங்கருக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி அவன் எதிர்பார்த்ததைவிட நல்ல தகவல் .... காணாமல் போனவர்களை பற்றி நல்ல தகவல் கிடைத்ததை நினைத்து சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான் கையில் மல்லிகைப்பூவும் சிறிது அல்வாவும் வாங்கிக்கொண்டு..

முதலில் இந்த சந்தோஷமான செய்தியை பண்ணையாரிடம் சொல்லிவிட்டு பிறகு ரேகாவிடம் சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டே வந்தான் சங்கர்..


நம்முடைய சந்திரன் திருமணத்தை நமது அம்மன் கோவிலிலே நடத்தலாம் என்று என் நண்பன் முத்தையாவும் ஊர் மக்களும் ஆசைப்படுகிறார்கள் . அவர்களின் விருப்பப்படியே நம் சந்திரனின் திருமணத்தை அம்மன் கோவிலிலே நடத்தலாம் நீ என்ன சொல்ற பரந்தாமா ..என்று பண்ணையார் கேட்டார்..

ஊர் மக்கள் ஆசைப்படியே அம்மன் கோவிலில் நடத்தலாம் அப்பா... ஆனால் கொஞ்ச நாள் போகட்டும் பிறகு திருமண வேலையை ஆரம்பித்துவிடலாம் என்று பரந்தாமன் சொன்னான்...

என்னங்க ..இன்னும் நாளெல்லாம் தள்ளிப்போட வேண்டாம் சீக்கிரமாகவே சந்திரன் திருமணத்தை முடிக்க வேண்டும் ஏனென்றால் ஏற்கனவே நிறைய நாள் தள்ளிப் போய்விட்டது இன்னும் நாட்களை தள்ளிப்போட வேண்டாம் அதனால் இன்னும் சில வாரங்களில் சந்திரன் திருமணத்தை முடிக்க வேண்டும் என்று சாந்தி சொன்னாள்...

பரந்தாமன் யோசித்துப் பார்த்தான்

காணாமல் போனவர்களை சங்கர் கண்டுபிடித்துவிட்டால் அப்போது தெரியும் உங்களுக்கு எங்களைப் பற்றி ... இது தெரியாமல் எப்ப பார்த்தாலும் கல்யாண பேச்சு பேசிக்கொண்டு இருக்கிறார்கள் இன்னும் கொஞ்ச நாள்ல எங்களுடைய சுயரூபத்தை தெரிஞ்சுக்கோவிங்க அந்த நாள் நெருங்கிக்கொண்டு வருது இந்த நிலைமையில எப்படி சந்திரன் திருமண வேலையை பார்க்க முடியும் என்று பரந்தாமன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான்..


சந்திரனுக்கும் தீனாவுக்கும் புரிந்தது.. அண்ணன் திருமணத்தை தள்ளிப்படுவது எதனால் என்பது...

சாந்தி சொல்வதைப்போல சந்திரன் திருமணத்தை இன்னும் தள்ளிப்போட வேண்டாம் பரந்தாமா என்று பண்ணையார் சொன்னார்..

கோவிலில் சில அலங்கார வேலைகள் செய்துவிட்டு பிறகு திருமணத்தை கோவிலில் நடத்தலாம் என்று நினைத்துதான் நான் அப்படி சொன்னேன் அப்பா...

எனக்குத் தெரியும் ....நீ ஏதாவது ஒரு முடிவு செய்தாள் அதற்கு சரியான காரணம் இருக்கும் என்பது எனக்கு தெரியும் பரந்தாமா ....கோவிலில் உள்ள வேலைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் முதலில் சந்திரன் திருமணத்தை நடத்தி விடலாம் என்று பண்ணையார் உறுதியாக சொன்னார்...

இப்படி குடும்பத்தோடு பண்ணையார்... சந்திரன் திருமணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது வெளியில் ...ஐயா.. ஐயா என்ற குரல் கேட்டது..

இது சங்கர் குரல் மாதிரி இருக்கே என்று சொல்லிக்கொண்டே சாந்தி எழுந்து வந்து வெளியில் பார்த்தாள்... சங்கர் நின்றுகொண்டிருந்தான்..

வாப்பா உள்ளே... என்று சிரித்துக்கொண்டே சங்கரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றால் சாந்தி..

சங்கரை பார்த்ததும்... பரந்தாமனுக்கும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் சற்று லேசான பயம் தோன்றியது..

வாப்பா சங்கர் ...என்ன இன்னைக்கு ரொம்ப சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துட்ட. கையில பூவோடு ஏதாவது விசேஷமா என்று சிரித்துக்கொண்டே புன்னகையோடு கேட்டார் பண்ணையார்..

விசேஷமான செய்தி தான் ஐயா எனக்கு மட்டும் இல்ல நம்ம எல்லோருக்கும் தான் என்று சங்கர் சந்தோஷத்துடன் சொன்னாள்..

அப்படியா என்ன விஷயம்...

நம்ம கனகா குடும்பமும் .ஏற்கனவே காணாமல் போன பெரியவரின் மகனும் மருமகளும் உயிரோடுதான் இருக்கிறார்கள் ஐயா..


பண்ணையாரும் சாந்தியும் ஒரு கணம் ..சந்தோசத்தில் அப்படியே சங்கரை பார்த்தபடி நின்று விட்டார்கள்...

நீங்க சொல்றது உண்மையா என்று ஆச்சரியத்தோடு கேட்டால் சாந்தி..

ஆமாம் ...நான் அவர்களை பற்றின முழு தகவலும் இன்று எனக்கு கிடைத்துவிட்டது . கனகா குடும்பமும் அந்த பெரியவரின் மகன் குடும்பமும் ஒரே ஊரில் சந்தோஷமாக தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று சங்கர் சொன்னான்..

பரந்தாமன் சந்திரன் தீனா மூவருக்கும் பயத்தில் தலையே சுற்றியது . இனிமேல் நம்முடைய வாழ்க்கை முடிந்துவிட்டது என்று மூவரும் நினைத்து . என்ன செய்வது என்று தெரியாமல் வாயடைத்துப்போய் இருந்தார்கள்..

பண்ணையார் உடனே எழுந்து சங்கரின் அருகில் வந்து ..கட்டி அணைத்துக் கொண்டார் அப்போது அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் கண்களில் முட்டிக்கொண்டு இருந்தது..

ஆரம்ப காலத்தில் முத்தையா என்னுடைய எத்தனையோ தீர்க்கமுடியாத பிரச்சனைகளை தீர்த்து வைத்து என்னை கௌரவமாக பார்த்துக்கொண்டான் அதேபோல நீயும் உன் அப்பனைப் போலவே என்னுடைய தீர்க்க முடியாமல் இருந்த இந்த காணாமல் போன குடும்பத்தை நீ கண்டுபிடித்து விட்டாய்.. உன் குடும்பத்திற்கு நான் ஏழேழு ஜென்மமும் சேவை செய்ய கடமைப்பட்டிருக்கிறேன் சங்கர் என்று உருக்கமாக சொன்னார் பண்ணையார்...

பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லாதீங்க ஐயா..

என் மூன்று மகன்களும் இவ்வளவு நாளா தேடியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை . ஆனால் நீ கொஞ்ச நாளிலே அவர்களை எப்படிப்பா கண்டுபிடித்தாய் என்று பண்ணையா சங்கரிடம் கேட்டார்..

எல்லாம் உங்களுடைய யோசனைப்படிதான் அவர்களை திட்டம்போட்டு தேடினேன் அவர்களும் கிடைத்து விட்டார்கள் ஐயா..

அவங்க எந்த ஊரில் இருக்கிறாங்க சங்கர் ..அவர்களை என்னைக்கு அழைத்துக் கொண்டு வர போறீங்க என்று சாந்தி கேட்டாள்..

அவர்களை பற்றின எந்த தகவலையும் கேட்க வேண்டாம்... ஏனென்றால்... ஐயா சொன்னது போல நம்முடைய எதிரி பக்கத்தில் தான் இருக்கிறான் இந்த தகவல் அவனுக்கு தெரிந்தால் ஆபத்து அந்த இரண்டு குடும்பங்களுக்கும் தான் ஏற்படும் அதனால் அவர்களைப் பற்றின தகவல் ரகசியமாகவே இருக்கட்டும் அவர்களை இன்னும் மூன்று நாட்களில் அவர்களை நம் ஊருக்கு அழைத்துக்கொண்டு வந்துவிடுவேன் என்று சங்கர் சொன்னான்..

நீ சொல்வதும் சரிதான் ... அவர்களை பாதுகாப்பாக நீதான் இந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் அதனால் நீ அவர்களை பற்றிய தகவலை ரகசியமாகவே வைத்துக் கொள் ... அதேசமயம் இந்த இனிப்பான செய்தியை நம் ஊர் மக்களுக்கு.. நீயும் உன் மனைவியும் சொல்லுங்கள் அப்போதுதான் ஊர் மக்கள் எல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கும் ...அந்த பெரியவரிடமும் கனகாவின் சொந்தங்களிடம் இந்தத் தகவலை சொல்லுங்கள் அப்போதுதான் அவர்களுக்கு நிம்மதி பிறக்கும் என்று ஆனந்தத்தோடு சொன்னார் பண்ணையார்...

அப்போது பரந்தாமனுக்கு தன்னுடைய எதிர்காலம் முடிந்துவிட்டது என்று நினைத்து அவன் கண்களில் கண்ணீர் வழிய தொடங்கியது..

பரந்தாமா.. நம்முடைய குடும்ப கௌரவத்தை சங்கர் காப்பாற்றி விட்டான் அதே போல அவனுடைய குடும்பத்தையும் கௌரவமாக பார்த்துக்கொள்வது நம்முடைய பொறுப்பு. நான் இறந்து விட்டாலும் . நீங்கள் சங்கரை எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் அவனை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பண்ணையார் பரந்தாமனை பார்த்து சொன்னார்...

தன்னுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து கண்கலங்கி கொண்டிருந்த பரந்தாமன் . பண்ணையார் சொன்ன வார்த்தையை கேட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை அசைத்தபடி நின்றான்..

சந்தோசத்தில் அழுகிறார் என்று நினைத்து ..சாந்தி பரந்தாமனை பார்த்து சொன்னாள்... என்னங்க இனிமேல் உங்கள் ஆசைப்படி உங்கள் தம்பியின் திருமணத்தை சிறப்பாக நடத்துங்கள் இனி உங்களுக்கு எந்த குறையும் வராது என்று சொல்லிக்கொண்டே பரந்தாமனின் கண்ணில் வடியும் நீரை துடைத்தால் சாந்தி...

நம்மீது உள்ள பாசத்தினால் இப்படிப்பட்ட தவறை செய்துவிட்டு நமக்காக இப்போது அண்ணன் கவலையில்
அழுது கொண்டிருக்கிறார் என்று நினைத்து சந்திரனும் தீனாவும் பெரும் சோகத்தில் தலை குனிந்து கொண்டார்கள்..

காணாமல் போன குடும்பத்தின் மீது இவ்வளவு பாசமாக இருக்கிறார்களே பண்ணையார் குடும்பம் . எல்லோரும் ஆனந்தத்தில் அழுகிறார்களே என்று நினைத்து பெருமைப் பட்டான் சங்கர்...

ஐயா ...நான் கிளம்புகிறேன்
இந்த செய்தியை நான் உடனே ஊருக்குள்ளே சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சங்கர் அங்கிருந்து கிளம்பி விட்டான்..

சங்கர் கையில் பூவோடு வேகமாக நடந்து வருவதை பார்த்து ரேகாவுக்கு ஆச்சரியமாக இருந்தது என்ன இன்னைக்கு மாமா சீக்கிரமாகவே வந்துவிட்டார் .. அப்படி என்றால் ஏதாவது நல்ல செய்தியாக இருக்குமா என்ற எதிர்பார்ப்போடு சங்கரை பார்த்தபடி நின்றிருந்தாள் ரேகா..

சங்கர் வந்ததும் கையிலிருந்த பூவையும் அல்வாவையும் ரேகாவிடம் கொடுத்துவிட்டு உடனே ரேகாவை தூக்கிக்கொண்டு சிரித்தான் சங்கர்..

ஐயோ கீழே இறக்குங்கள் விழுந்திட போறேன் என்று சிரித்துக்கொண்டே ரேகா சங்கரின் தோளை பிடித்தபடி இறங்கினாள்..

ஏ புள்ள ..காணாமல் போன கனகா குடும்பத்தையும் ஏற்கனவே காணாமல் போன அந்த பெரியவரின் மகன் குடும்பத்தையும் கண்டுபிடித்துவிட்டேன் என்று சந்தோசமாக சொன்னான் சங்கர்..

எனக்கு தெரியும் இன்னைக்கு ஏதாவது ஒரு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருந்தது மாமா..

இன்னும் கொஞ்ச நாள்ல அவங்கள இந்த ஊருக்கு கூட்டிட்டு வரேன்..

இந்த செய்தியை பண்ணையாரிடம் சொன்னீங்களா மாமா..

அங்கு சொல்லிவிட்டு தான் நேரா இங்கே வரேன் .. உடனே இந்த செய்தியை நம்ம ஊர் மக்களிடம் சொல்லணும் புள்ள..

கண்டிப்பா சொல்லலாம் மாமா வாங்க ஊருக்குள்ள போகலாம் என்று சொல்லிவிட்டு இருவரும் சென்றார்கள்...

🏚️🛖⛺🏘️ சங்கர் ரேகாவும் ஊருக்குள்ளே சென்று இந்த செய்தியை எல்லோரிடமும் சொன்னார்கள் ... அப்போது முத்தையாவுக்கு எல்லை இல்லா சந்தோஷம் ஏற்பட்டது ...
நம் மகனால் இந்த ஊர் மக்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை உருவாகி விட்டது என்று நினைத்து சந்தோசத்தில் பூரித்துப் போனார் முத்தையா...

காணாமல்போன குடும்பமும் கிடைத்துவிட்டது.. பண்ணையாரின் மகன் சந்திரன் திருமணமும் நடக்கப்போகிறது . இனிமேல் நம்ம ஊருக்கு நல்ல காலம்தான் என்று நினைத்து . ஊர் மக்கள் அனைவரும் பாட்டுப் பாடியும் ஆட்டம் ஆடியும் மகிழ்ந்தார்கள்..


ஊர் மக்கள் சந்தோஷமாக பாட்டுப் பாடிக்கொண்டு ஆட்டம் ஆடுவதை பார்த்த சாட்டையடி சாமியாருக்கும் அவனது சிஷ்யர்களுக்கு எரிச்சலாக இருந்தது..

குருவே நாம இன்னும் பொறுமையாக இருந்தால் இந்த ஊர் மக்கள் நம் வார்த்தைக்கு பயப்பட மாட்டார்கள் ...
உடனே நம்ம ஏற்கனவே திட்டம் போட்டபடி பண்ணையாரின் தோட்டத்தில் உள்ள கரும்பு தோட்டத்தை தீ வச்சி கொளுத்த வேண்டும் . அப்போதுதான் இந்த ஊர் மக்கள் கவலையோடு இருப்பாங்க இல்லன்னா எல்லோரும் இப்படி சந்தோஷமாக தான் இருப்பானுங்க ...
அதுக்கு அப்புறம் நம்ம சொன்ன வார்த்தைக்கு மதிப்பு இருக்காது என்று சிஷ்யர்கள் சொன்னார்கள்..

ஆமாம் சிஷ்யா ...நீ சொல்வது சரிதான் இனியும் பொறுமையாக இருக்கக்கூடாது உடனே கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்து எரித்துவிட வேண்டும் அப்போதுதான் இந்த ஊர் மக்கள் வேலையில்லாமல் மறுபடியும் சோகத்தில் இருப்பார்கள் ..
நான் சொன்ன வார்த்தைக்கும் மதிப்பு இருக்கும் என்று சாட்டையடி சாமியார் சொன்னார்...


தொடரும்.....
 
⬇️அத்யாயம்-...31👇


இன்று நம் வாழ்வில் ஒரு முக்கியமான நாள் என்ற எண்ணத்தில் அதிகாலையில் எழுந்து கொண்டான் சங்கர்..

மாமா ..இன்னைக்கு காணாமல்போன இரண்டு குடும்பங்களையும் பத்திரமா அழைத்து வந்து .. முதலில் பண்ணையாரிடம் ஒப்படைத்து விடுங்கள் பிறகு அவர் அவர்களை விசாரித்து விட்டு
என்ன முடிவு செய்கிறாரோ செய்யட்டும் . என்று ரேகா சங்கரிடம் தெளிவாக சொன்னாள்..

முதலில் தேன் வியாபாரி அந்தப் பெரியவரின் ஊருக்கு சென்று கனகாவிடம்...ஏற்கனவே காணாமல் போன அந்தப் பெரியவரின் மகனிடமும் பேச வேண்டும் ..
என்ன நடந்தது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் பிறகுதான் அவர்களை இங்கு அழைத்து வர வேண்டும்..
இல்லை என்றால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என்று சங்கர் சொன்னான்..

ஆமா மாமா ..இப்போ அந்த எதிரி நம்மை கவனிச்சுக்கிட்டுத்தான் இருப்பான் .. இவர்களை என்ன செய்யலாம் என்று
அதேபோல காணாமல் போனவர்களையும் இங்கு வர விடாமல் ஏதாவது சதியும் செய்திருப்பான் . அதனால் நீங்க கொஞ்சம் கவனமாகவே போயிட்டு வாங்க மாமா..

நீ சொல்றது ரொம்ப சரியான வார்த்தை ..அதேபோல நீயும் இங்கு பத்திரமா இரு புள்ள
நான் இங்கிருந்து கிளம்பியதும் நீயும் ஊருக்குள்ள போய்டு அதுதான் உனக்கு நல்லது யாரையுமே நம்ப முடியாது நம்முடைய எதிரி இதுவரைக்கும் யாருன்னு தெரியல ..அதனால நாம தான் உஷாரா இருக்கணும் புள்ள...


சரி மாமா நீங்க குளிச்சிட்டு கிளம்புங்க என்று ரேகா சொல்லிவிட்டு வேலையை ஆரம்பித்தாள்..

பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் அவரவர் அறையில் படுக்கையிலே படுத்துக்கொண்டு கவலையோடு இருந்தார்கள்..

காணாமல் போனவர்களை சங்கர் இன்று ..அல்லது நாளை .. அவர்களை அழைத்துக் கொண்டு அப்பாவிடம் நிறுத்திவிடுவான் கனகாவும் ஏற்கனவே காணாமல் போன குடும்பமும் சேர்ந்து அப்பாவிடம் நடந்ததை எல்லாம் சொல்லி நம்முடைய அசிங்கத்தை இந்த ஊருக்கு சொல்லிவிடுவார்கள் ...அதன்பிறகு ஊர் மக்கள் கேவலமாக பேசுவார்கள் .. நம்முடைய வருங்கால மனைவியும் நம்மை விரும்புவாளா. இல்லை திருமணத்தை நிறுத்தி விடுவாளா என்று தெரியவில்லையே ...
நாம் குடிபோதையில் தெரியாமல் தவறு செய்து விட்டோம் ஆனால் இப்போது திரிந்தி விட்டோம் இது ஊர் மக்களுக்கு புரியாது ...
இந்த ஒரு முறை நம்மை கடவுள் மன்னித்து விட்டால் இனிமேல் எந்த தவறையும் செய்யாமல் இருக்கலாம் .. ஆனால் இது நடக்காது... நிச்சயம் காணாமல் போனவர்கள் சங்கர் கண்டுபிடித்து எல்லா உண்மைகளையும் வெளியில் கொண்டு வந்துவிடுவான் இனிமேல் நம் வாழ்வில் எதிர் காலமே கிடையாது என்று கவலையோடு சந்திரன் யோசித்தபடியே படுத்திருந்தான்..

இதுவரைக்கும் கௌரவமாக மூவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம் ..ஆனால் இனிமேல் நம்முடைய வாழ்க்கையில் சந்தோஷம் என்பது கேள்விக்குறிதான் ... நம்மைவிட பெரிய அண்ணனும் சின்ன அண்ணனுக்கும்தான் அதிகமான பாதிப்பு ஏற்படும் .. ஊர் மக்கள் அண்ணன்களை அசிங்கமாக பேசினால் அவர்களால் தாங்கவே முடியாது ...அவர்களுக்கு ஏதாவது ஒரு குறை என்றால் என்னால் தாங்க முடியாது ...இனிமேல் மூன்று பேரும் இந்த ஊரில் எப்படி வாழப்போகிறோம் என்று தீனா கவலையோடு யோசித்தபடி அவனும் படுத்தபடியே இருந்தான்..


எப்படியும் காணாமல் போனவர்களை சங்கர் இன்று அல்லது நாளை கண்டுபிடித்துவிடுவான் .. நம்முடைய மானமும் போய்விடும் அதனால் நம் பம்புசெட்டில் சேர்த்து வைத்திருக்கும் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு எங்கேயாவது போய்விடலாம் ... நம்முடைய குணத்தைப் பற்றி தெரிந்ததும் நம்முடன் மனைவியும் வரமாட்டாள் அதனால் நாம் மட்டும் இந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு எங்கேயாவது ஓடி விட வேண்டும் என்று யோசித்து இருந்தான் பரந்தாமன்...


இப்படி மூவரும் படுத்தபடியே யோசித்து இருந்தார்கள்..

என்னம்மா இவனுங்க இன்னுமா எழுந்திரிக்கவில்லை ஊரே சந்தோசத்துல 4:00 மணிக்கு எந்திரிச்சு எல்லோரும் பரபரப்பா பேசிகிட்டு இருக்காங்க இன்னைக்கு நிச்சயம் சங்கர் காணாமல் போனவர்களை கூட்டிக்கிட்டு வருவான் என்று..... ஆனால் எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் உன் கணவனும் அவன் தம்பிகளும் இன்னும் படுத்து தூங்குறாங்களா என்று பண்ணையார் சாந்தியிடம் சொன்னார்..


என்னனு தெரியல மாமா உங்க மூன்று பிள்ளைகளும் நேற்றிலிருந்து ஒரு மாதிரியாகவே இருக்காங்க..


என்னம்மா சொல்ற அவனுஙகளுக்கு இனிமேல் என்ன குறை..

எனக்கும் அதுதான் ஒன்னும் புரியல மாமா..


அவனுங்களை உடனே எழுப்பி கல்யாண வேலைகளை பார்க்க சொல்லுமா..

சரி மாமா என்று சொல்லிவிட்டு சாந்தி பரந்தாமனிடம் சென்றள்...

என்னங்க உங்க அப்பா சத்தம் போடுகிறார் ..இன்னுமா தூங்குறாங்க என்று
கல்யாண வேலை அப்படியே இருக்குது சீக்கிரம் எழுப்பி வேலையை பார்க்கச் சொல்லு என்று கத்திக்கிட்டு இருக்காரு.. நீங்க முதல்ல எழுந்திரிங்க என்று சாந்தி பரந்தாமனிடம் சொன்னாள்..

இன்று எப்படியாவது பம்புசெட்டில் இருக்கும் பணத்தை யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்கு கொண்டுவந்து மறைத்து வைக்க வேண்டும் என்ற முடிவில் பரந்தாமன் இருந்தான்..


என்னங்க நான் கத்திககிட்டு இருக்கேன் . நீங்க எதையோ யோசித்துக்கொண்டு இருக்கீங்க என்று மறுபடியும் சாந்தி சொன்னாள்..

இன்னைக்கு தோட்டத்துல முக்கியமான வேலை இருக்குது அந்த வேலையை முடிச்சுட்டு தான் மற்ற வேலைகளை பார்க்கவேண்டும் தேவையில்லாமல் என்னை கோபப்படுத்தாதே என்று எரிச்சலோடு சாந்தியிடம் சொன்னான் பரந்தாமன்..

எந்த வேலையாவது செய்யுங்க இப்படி மூணு பேருமே படுத்துக்கொண்டு இருந்தா ஒரு வேலையும் நடக்காது.. என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் சாந்தி.


என்னப்பா ..இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துட்ட என்று தேன் வியாபாரி பெரியவர் சங்கரிடம் கேட்டார்..

ஆமாம் அப்பா ..இன்று என்னுடைய பெரிய பொறுப்பை நல்லபடியாக முடிக்க போகிறேன் என்ற சந்தோஷத்தில் கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துட்டேன் அப்பா என்று தேன் வியாபாரி இடம் சங்கர் சொன்னான்..

நாங்கள் மொத்தம் 16 பேர் இருக்கிறோம் நாங்கள் கொண்டுவந்துள்ள தேன் எல்லாவற்றையும் விற்ற பிறகுதான் எல்லோரும் ஒன்றாக ஊருக்கு செல்வோம் இதுதான் வழக்கம் இதில் வியாபாரம் இன்று சரியாக நடக்காமல் தேன் மிச்சம் இருந்தால் அதை நாளைக்கு வியாபாரம் செய்து முடித்துவிட்டு தன் இங்கிருந்து கிளம்புவோம் .. அதனால் நீ எங்களோடு என்று காத்திருக்க வேண்டும் என்று அந்தப் பெரியவர் சங்கரிடம் சொன்னார்..

நான் உங்களோடு காத்திருப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை அப்பா.. என்று சொல்லிவிட்டு சங்கர் தேன் வியாபாரிகளுக்கு உதவியாக குரல் கொடுத்தான்.. அம்மா தேன் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் காலியாகிவிடும் ...ஐயா தேன்வந்து வாங்கிக்குங்க இது உடலுக்கு ரொம்ப நல்லது என்று குரல் கொடுத்தபடியே சங்கர் தேன் வியாபாரிகளுக்கு உதவியாக வேலையை செய்தான்...


மாமாவுக்கு நண்டு குழம்பு என்றால் ரொம்ப பிடிக்கும் . அதனால் இன்று நண்டுபிடித்து குழம்பு வச்சு மாமாவை சந்தோஷப்படுத்தலாம் என்று நினைத்து .. ரேகா வயல் பகுதியில் சுற்றி சுற்றி🦀🦀 நண்டுபிடிக்க ஆரம்பித்தாள்..


பிறகு ருசியான நண்டு குழம்பை வைத்து முடித்தாள் ரேகா..

நேரம் கடந்தது...

பண்ணையார் தோட்டத்தில் விவசாய வேலைகளை முடித்துவிட்டு ரேகா பம்புசெட்டில் குளிக்க ஆரம்பித்தாள்..

அப்போது ரேகாவுக்கு சங்கர் மீது மேலும் பாசமும் ஆசையும் அதிகமானது நம்முடைய கணவரை ஊரே பெருமையாக பேசுகிறார்கள் அவருடைய சுறுசுறுப்பையும் தைரியத்தையும் நினைத்து ரேகா பெருமைப்பட்டாள் இப்படி சங்கரை நினைத்துக்கொண்டு பம்புசெட்டில் குளித்துக் கொண்டிருந்தாள் ரேகா..


பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் களத்துமேட்டில் பைக்கை நிறுத்திவிட்டு பம்பு செட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள்..

மூவரும் வருவதை ரேகா கவனித்தாள்...

ஐயோ பண்ணையார் மகன்கள் வராங்களே இப்ப என்ன செய்வது என்று ..உடனே குளித்து விட்டு பாவாடையை மாற்றிக்கொண்டு உடனே பம்புசெட்டில் சென்று கதவை சாத்திக் கொண்டு தாபால் போட்டுக்கொண்டால் ரேகா..

பரந்தாமனும் சந்திரனும் தீனாவும் மூவரும் பம்புசெட்டின் அருகில் வந்து நின்றார்கள் ..அப்போது பம்பு செட்டின் கதவு சாத்தி இருப்பதை மூவரும் கவனித்தார்கள் ...
ரேகா ஊருக்குள்ளே சென்று இருப்பாள் என்று நினைத்து மூவரும் அருகில் உள்ள கிணற்றின் தடுப்பு சுவர் மீது அமர்ந்தார்கள்..


பண்ணையார் மகன்கள் தோட்டத்தை சுற்றிப் பார்க்க கிளம்பி இருப்பார்கள் என்று நினைத்து பம்புசெட் உள்ளே ரேகா உடையை மாற்றுவதற்கு தயாரானாள்..


பரந்தாமனுக்கு கவலை அதிகமானதால் அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது அவனால் தனது லட்சிய கனவு வீணாகிப் போய் விட்டது என்பதை தாங்க முடியவில்லை ..
இந்த எல்லாம் நிலங்களையும் நாம் இழக்கப் போகிறோம் .. நாம் யாருக்கும் தெரியாமல் சேர்த்து வைத்திருக்கும் பணத்தையும் இழக்க போகிறோம் என்ற எண்ணத்தில் அவன் மனம் தாங்க முடியாமல் அழுக ஆரம்பித்தான் பரந்தாமன்...

பம்புசெட்டில் ஜாக்கெட்டை அணிந்துகொண்டு இருந்த ரேகாவுக்கு பரந்தாமனின் அழுகை குரல் கேட்டது..

எதுக்காக பண்ணையார் மகள் அழுகிறார் என்ற சந்தேகத்தில் அமைதியாக கவனித்தாள் ரேகா பம்புசெட்டு குள்ளே..


அண்ணே அழுவாத என்னால நீங்க அழுவதை தாங்க முடியல என்று தீனா சொன்னான்..

அப்போதும் பரந்தாமனுக்கு மேலும் அழுகை அதிகமானது..

அண்ணே அழுவாதிங்க அண்ணே நிச்சயம் நமக்கு எந்த பிரச்சனையும் வராது ... நம்ம அம்மா நமக்கு துணையா இருப்பாங்க என்று சந்திரன் சொன்னான்..

அப்போதும் பரந்தாமனாள் அழுகையை நிறுத்த முடியவில்லை தேம்பித் தேம்பி அழுதுகொண்டே இருந்தான்.


என்ன பிரச்சனைக்காக இப்படி அழுகிறார் என்று ரேகா யோசித்தாள் .. ஏற்கனவே இதே போலதான் மூவரும் இதே இடத்தில் அழுதார்கள் அப்போது நாம் கேட்டதற்கு யாருமே இங்கே அழ வில்லையே என்று சொல்லிவிட்டு ஓடிட்டாங்க இன்னைக்கும் அதேபோல அழுகிறாரே என்ன பிரச்சினையாக இருக்கும் என்று உன்னி போடு கவனித்திருந்தால் ரேகா.. பம்புசெட்டு குள்ளே...

அண்ணே இந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி சொல்லுங்க..
இப்படி அழுதுகொண்டிருந்தாள் நம்ம தப்பிக்க முடியாது அண்ணே என்று தீனா சொன்னான்..

அப்போது பரந்தாமன் கண்களை துடைத்துக்கொண்டு சிறிது நேரம் அமைதியாக தரையைப் பார்த்தபடி இருந்தான்..

அண்ணே நல்லா யோசித்து முடிவு சொல்லுங்க யாருக்கும் எந்த பிரச்சனை இல்லாமல் நம்ம தப்பிக்க வேண்டும் என்று சந்திரனும் சொன்னான்..

அப்போது பரந்தாமன் மெதுவாக தலை நிமிர்ந்து தம்பிகளிடம் சொன்னான்.

நிலைமை நம் கையை மீறி போய் விட்டது தம்பி இனிமேல் நாம இந்த ஊரில் கௌரவமாக வாழ முடியாது என்று உருக்கமாக சொன்னான் பரந்தாமன்..

அப்படின்னா நம்ம தப்பிக்கிறது க்கு வழியே இல்லையா அண்ணா.. என்று தீனா கேட்டான்..

ஒரே வழி தன் இருக்கிறது அது நம்மால் அதை செய்ய முடியாது..

என்ன வழி அண்ணா சொல்லுங்கள் அதை எப்படியாவது என் உயிரைக் கொடுத்து அந்த வேலையை செய்கிறேன் என்று தீனா சொன்னான்..

நம்முடைய பிரச்சனை காணாமல் போனவர்கள் கிடைக்கக்கூடாது அவர்கள் கிடைக்கக்கூடாது என்றால் முதலில் சங்கரை தீர்த்துக்கட்ட வேண்டும் அப்போதுதான் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியாது ..ஆனால் நம் மூன்று பேர் சேர்ந்தாலும் சங்கரை தீர்த்துக் கட்ட முடியாது அவன் பலசாலி தைரியமானவன் . அதனால் தான் சொன்னேன் நம்மால் இந்த வேலையை செய்யமுடியாது என்று..

இவர்கள் மூவரும் பேசுவதை பம்புசெட்டு குள்ளே கேட்டுக்கொண்டிருக்கும் ரேகாவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது..

அப்படியானால் இங்கு நடந்திருக்கும் எல்லாம் தவறுகளையும் இவர்கள்தான் செய்தார்களா என்று நினைத்து அதிர்ச்சியில் அப்படியே சிலை போல நின்றாள் ரேகா ..
பம்புசெட்டு குள்ளே...


உப்புத் தின்னவன் தண்ணி குடிப்பான் ... தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான்
என்ற பழமொழி பண்ணையார் மகன்களுக்கு பொருந்துமா ...
என்று பொறுத்திருந்து பார்க்கலாம்..



தொடரும்.....
 
semma ya poguthu anna ippa tha start panna ..........pannayaar veetu la thirudana vachu kittu avagalaye theda soldrathu tha thiruda kaila saavi ga maari 😂🤩🤩🤩 😍😍
 
paranthaman periya villan polayee😵........thambigalaye ippadi pandra 😖😖
saattaiyadi saamiyaar semma comedy poli saamiyaar easy ya yellaathaium yemathuraaga..🤣............
 

New Threads

Top Bottom